Ēḻu svaraṅkaḷ-Part-6


ஏழு ஸ்வரங்கள் VI


அலுவலகத்தில் ரேகாவும் யாமினியும் தோழிகளா கிறார்கள்.. தாமோதரன் எவ்வளவுதான் கோபப் பட்டாலும் அதைக் கண்டு கொள்ளாமல் அவனிடம் மரியாதையுடன் பேசிப் பழகுகிறாள் யாமினி..
வெள்ளைக்காரர்களைப் பற்றிப் பேசினால் யாமினிக்கு வெறுப்பாக இருக்கிறது.. அதை அறிந்த தாமோதரனும் சித்தார்த்தனும் ஆச்சரியப் பட்டுப் போகிறார்கள்.. ஏனென்றால் அவர்களுக்கும் அதுபோன்ற உணர்வு உண்டு..
சித்தார்த் குருப் ஆஃப் கம்பெனிஸின் பெரும் பான்மையான வியாபாரம் வெளிநாடுகளில் நடைபெறுகிறது.. பல வெளிநாட்டுக் கம்பெனிகளுடன் வியாபார ஒப்பந்தம் செய்துள்ள சித்தார்த்தனுக்கு வெள்ளைக்காரர்களைப் பிடிக்காது.. தாமோதரனுக்கும் அப்படியே.. அது ஏனென்று அவர்களுக்குத் தெரியாது..
சித்தார்த்தன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மீது ஈடுபாடு கொண்டவன்.. தாமோதரன் காந்தியின் வழியை ஆதரித்துப் பேசுகிறான்..
தாமோதரன் தாய் தந்தையைப் பார்க்க காஞ்சிபுரத்திற்கு வருகிறான்.. நீரஜாவின் மீது அவனுக்கு ஈடுபாடு இருப்பதை ஈஸ்வரன் உணர்கிறார்.. மகனின் ஆசை நிறைவேற வேண்டும் என்று ஏழைத் தகப்பனின் மனம் பிரார்த்திக்கிறது..


Comments