Ēḻu svaraṅkaḷ-Part-2
- Get link
- X
- Other Apps
ஏழு ஸ்வரங்கள் II
தாமோதரன் நீரஜாவுக்கு விளக்கம் சொல்ல முனைகிறான்.. சித்தார்த்தன் அதைத் தடுக்கிறான்.. நீரஜா 'யார் அந்தப் பெண்..?' என்று கேட்கிறாள்.. தாமோதரன் யாமினியை 'மோகினி..' என்று சொல்கிறான்.. சித்தார்த்தன் கோபம் கொள்கிறான்.. நீரஜா இண்டர்வியூவிற்கு வந்திருந்தவர்களின் விவரங்கள் அடங்கிய ஃபைலைப் புரட்டிப் பார்க்கிறாள்.. யாமினியின் படத்தைப் பார்த்ததும் லேசாக அதிர்கிறாள்.. அவளை எங்கேயோ பார்த்த உணர்வு அவளுக்கு வருகிறது.. யாமினிக்கு வேலையைக் கொடுக்க வேண்டாம் என்று தாமோதரன் சொல்வதை நீரஜா ஆதரிக்கிறாள்.. சித்தார்த்தன் பிடிவாதமாக இருக்கிறான்.. எது நடந்தாலும் அது நன்றாகவே நடக்கட்டும் என்று சொல்லி விட்டு நீரஜா போய் விடுகிறாள்..
மகாபலிபுரத்தில் யாமினியின் வீடு இருக்கிறது.. அப்பா பிரதாப், மகாபலிபுரத்தில் சிற்பங்களையும், கைவினை பொருள்களையும் விற்கும் கடையை நடத்துகிறவர்.. அம்மா அனுராதா புத்திசாலியான இல்லத்தரசி.. அண்ணன் யதுநந்தன் கல்பாக்கம் அனல் மின்நிலையத்தில் வேலை பார்க்கிறான்..
யாமினி இரவுகளில் தூக்கமின்றி ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி வானத்தை வெறித்துக் கொண்டிருப்பதை பல இரவுகளில் அனுராதா காண நேரிடுகிறது.. அதில் அனுராதா கவலை கொள்கிறாள்..
- Get link
- X
- Other Apps