Ēḻu svaraṅkaḷ-Part-3


ஏழு ஸ்வரங்கள் III

யாமினிக்கான அப்பாயிண்மெண்ட் ஆர்டரை சித்தார்த்தன் அனுப்பி வைக்கிறான்.. கடிதம் கிடைத்ததும் அதைப் பிரித்துப் படிக்காமல் தோட்டத்து ஊஞ்சலில் மறந்து வைத்து விட்டு வந்து விடுகிறாள் யாமினி.. காலையில் கொரியரில் வந்த கடிதம் இரவு வரை தோட்டத்து ஊஞ்சலின் மீதே இருக்கிறது.. காற்று பலமாக அடித்தும் தோட்டத்தின் சருகுகளைப் போலப் பறந்து போகாமல் இருக்கிறது..
மழை வருவதைப் போன்ற அறிகுறிகள் ஆரம்பிக் கின்றன.. பலமான காற்றடிக்கிறது.. கனமாக மரக்கிளைகள் கூட அந்தக் காற்றில் எழும்பிப் பறக்கிறது.. தோட்டத்து ஊஞ்சலில் வைக்கப்பட்டிருந்த கடிதம் மட்டும் இரும்புக் குண்டைப் போல அசையாமல் நிலைத்திருக்கிறது.
இரவில் வரும் யதுநந்தனுக்காக வாசல் கேட்டைத் திறந்து விடப் போகிறாள் யாமினி.. காற்றில் பறந்து வந்த கடிதம் அவள் முன்னால் விழுகிறது.. அவள் கடிதத்தை கையில் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் காலடி வைத்த மறுநொடியில் மழை கொட்ட ஆரம்பிக்கிறது..


Comments