Tiruppērūrk kiḷḷaiviṭu tūtu


பிரபந்த வகை நூல்கள்

Back

திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது
கோயமுத்தூர் கந்தசாமி முதலியார்



திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது
கோயமுத்தூர் கந்தசாமி முதலியார் இயற்றியது
சிங்கை முத்துக் குமாரசாமி உரையுடன்



திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது

Source:
"திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது"
இஃது கோயமுத்தூர் வித்துவான்
சிவத்திரு கந்தசாமி முதலியார் அவர்களால் இயற்றப்பட்டு,
சைவசமயத்தவர்களின் பொருட்டு,
சென்னை ஸ்ரீரஞ்சநி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது
சுபாநு வருஷம் (1943)கார்த்திகை மாதம்.

இந்த மின்பதிப்பு திரு. சிங்கை முத்துக்குமாரசாமி அவர்கள் எழுதிய உரையுடன் (இதுவரை நூல் பதிப்பாக வெளிவராதது) சேர்த்து வெளியிடுகிறோம். திரு. முத்துக்குமாரசாமி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.
-------------
திருப்பேருர் கிள்ளைவிடுதூது

    காப்பு
    வெண்பா
    பிள்ளை மதிமுடியெம் பேரூர்ப் பெருமான்மேற்
    கிள்ளை விடுதூது கிளத்தவே – ஒள்ளீயபூங்
    காவிரியக் கும்பமுனி கைக்கரகநீர் கவிழ்த்துக்
    காவிரியைத் தந்தவன்றாள் காப்பு

நூல்
    கலிவெண்பா
    மாமேவு செங்கமல மாதரசும் வெண்கமலப்
    பூமேவு பாமகளாம் பூவையரும் – மாமதுர

    வாக்கியத் தாற்போற்றி மலர்க்கரங்கள் தாஞ்செய்த
    பாக்கியத் தானாய பயனெய்தப் – பூக்கொய்து

    தூவச் சிவந்துபரஞ் சோதிதிரு மேனியொடு
    மேவச் சிவந்தசத்தி மெய்யொளிபோற் – பாவலர்கள்

    மெச்சி உவமைபகர் மேனியெல்லாம் அழகாய்ப்
    பச்சைப் பசுத்தசெழும் பைங்கிளியே- இச்சையாற்

    சத்திகொடு சமைத்த தம்பிரான் மேனிநிறம்
    ஒத்திலகுஞ் செவ்வா யொளிர் குருகே – நித்தநித்தம் 5

    அத்தனவன் எவ்வுயிரும் ஆட்டுவான் அம்பலத்திற்
    றத்தெயென ஆடுமெனுந் தத்தையே - மித்தைப்ர

    பஞ்சமென்று முக்கட் பசுபதியின் பாதமொன்றே
    அஞ்சுகமென் றேமொழியும் அஞ்சுகமே - மிஞ்சுசுரர் 7

    கண்ணைப் பிசைந்து கலங்காமல் முன்னமிந்த
    மண்ணையுண்டோன் மேனி வருந்தாமல் – விண்ணவர்கள் 8

    வாடி மயங்காமல் மங்கலியப்பிச்சையென்று
    தேடிமலர்மாதர் தியங்காமல் – நீடுருவ .9

    வாசுகியும் பாற்கடலும் மந்தரமும் தங்களுக்கு
    நாசமுற்ற தென்று நடுங்காமல் – பேசரிய 10

    ஆற்றல் படைத்த அரக்கரையும் அங்கவர்பால்
    சீற்றம் மிகவுடைய தேவரையும் –வேற்றறவே 11

    சேர்த்தியிட வந்துதித்த தேவாமிர்தம்போல
    வார்த்தை சொலவல்ல மரகதமே –கூர்த்தவிழித் 12

    தோழியரை நோக்கியென்றுந் தோற்றமொடுக்கமிலா
    வூழி முதல்வனாம் ஒருத்தன்முன் – கீழாகச் 13

    செத்துப் பிறந்துழலும் தேவரையும் மூலமென்று
    சித்திரமே பேசுதலைச் சீர்தூக்கி – உய்த்துணர்ந்து 14

    தக்கதனைத் தேராது தர்க்கமிடுவோர் மதிபார்
    அக்கக்கா வென்னு மவந்திகையே - பொற்கனகப்

    பஞ்சரத்தில் வாழும் பசுங்குதலாய் -நின்றனக்குக்
    கிஞ்சுகமென்னும் பெயருங் கேட்டிலார் - நெஞ்சின் 16

    மகிழ்ந்து மலைமாது மருங்கில் நினைவைத்துப்
    புகழ்ந்துமொழி கேட்கின்ற பொற்பு – நெகிழ்ந்தமலர் 17

    ஐங்கோலான் நின்னுடைய ஆதரவு வாய்த்தமையால்
    செங்கோல் நடாத்துந் திறமுமுனம் – எங்கோனை 18

    ஆதரவால் அர்ச்சித்து அதனால் சுகவனத்து
    நாதரெனப் பூதலஞ்சொல் நன்னலமே - ஆதியவாம்

    வல்லமையும் ஓரார்நின் வார்த்தையினால் யாவர்மனக்
    கல்லுங் கரையும் கருத்தறியார் வெல்லரிய 20


    விக்கிரமா தித்தனெனும் வேந்தனையோர் தட்டான்செய்
    அக்கிரமந் தீர்த்த தறிகிலார் – துக்கந்

    தணவுதவ யோகியர்கள் தம்மைப் போல்நிற்கிங்
    குணவு கனிகாய்தளிரென் றுன்னார் – மணவணிகள் 22

    ஏயுமுனைப் பைங்கிளியே யென்றுபல கண்ணிசொன்ன
    தாயுமா னார்தந் தமிழுணரார் – நேயத் 23

    திருப்புகழ்ப்பா வாணருன்போற் சென்றடைந்து சோணப்
    பொருப்புறு தல்கேட்டும் பொருந்தார் – விருப்பில் 24

    சுகருந்தன் தொல்குலத்தில் தோன்றியதால்ஞானா
    திகரான வண்ணந் தெளியார் – பகருமறை

    வாதவூ ராளிதிரு வாசகத்தே பத்தங்கம்
    ஓதவுனைச் சொன்ன துணர்கிலார் – தூதுவிட்டோர் 26

    தங்காரிய மெல்லாந் தப்பாதுட்கொண் டதையுன்
    றன்காரியமாய்த் தலைக்கொண்டு – - முன்குறிப்பிற்

    காலமிடமறிந்து காரியத்தை முற்றுவித்துக்
    கோலமுடன் எய்துங் குறிப்பறியார் – - போலிகளாம் 28

    வெள்ளைமதி யோரறிவின் மிக்கவுனைத் தங்கள்சிறு
    பிள்ளைமதி கொண்டுகிளிப் பிள்ளையென்பர் –-கிள்ளையே

    வீரர்களின் மேலான வீரரெனத் தேவர்புகழ்
    சூரர்களை மாளத் தொலைத்தானைச் – சீரரவம் 30

    பூண்டானுக்குங் குருவைப் பொற்கொடியா ரோரிருவர்க்
    காண்டகையாய் மாலையிட்ட ஆண்பிளையை – வேண்டுகின்ற 31

    கோலமெலாங் கொள்ளுங் குறிஞ்சிக் கிழவனையோர்
    பாலனென ஓதுகின்ற பண்புகாண் – பாலின் 32

    சுவையைப் பழித்துமொழி சொல்லுதலால் நின்னைச்
    சுவையுடைய கீரமெனச் சொல்வர் – அவையகத்துத்

    தூது சுகமாகச் சொல்லுதலினாற் சுகமென்
    றோது முலகம் உனைவியந்து – தீதறியாப் 34

    பிள்ளை மழலையும் பெண்க ளின்மொழியுங்
    கிள்ளை மொழியாமென்று கேட்டிடுவர் – வள்ளுவனார் 35

    குழலினிது யாழினி தென்பர்தம் மக்கள்
    மழலைச் சொற்கேளா தவரென் – றழகுபெறச்

    சொன்னதுவும் நின்சொற் சுவையறிந்தே யல்லவோ
    உன்னைவிடத் தூதுக் குரியார்யார் – தன்னேரில்

    அன்பை யுடையாய் அறிவுடையாய் ஆய்ந்திடுஞ்சொல்
    வன்மை உடையாய் மகிதலத்தில் – இன்னபுகழ்

    எய்தி உயர்வாம் இளங்கிளியே எந்தனது
    செய்திசில எடுத்துச் செப்பக்கேள் – வையத்துள்

    வீசுபுகழ்சேர் வியன்பதியென் றிவ்வுலகம்
    பேசு கருவூரிற் பிறந்தென்யான் – மூசுதிறை 40

    வெள்ளப் புனன்மே வியசீர்க் கங்காகுலத்தில்
    பிள்ளையென வந்துபிறந் தேன்யான் – வள்ளல்பேர்

    பூணுலக நாதன் பொருந்தவரும் பார்ப்பதிபாற்
    பேணு மகவாகப் பிறந்தேன்யான். -பூணற்

    கரிய புகழ்சேர் அரங்கசாமிக்குப்
    பிரிய மருகராய்ப் பிறந்தேன்யான் – உரியபல

    சீரிட்ட நாளினலஞ் சேர்கந்த சாமியென்று
    பேரிட் டழைக்கப் பிறந்தேன்யான்- வாரிட்ட

    நற்றொட்டி லேற்றி நலம்பலபா ராட்டியெனைப்
    பெற்றவர்கள் போற்றப் பிறந்தேன்யான் – உற்ற 45

    களங்க முளவெல்லாங் காசினியிற் றோன்றி
    வளர்வதே போல வளர்ந்தேன் – இளமையிலே

    தந்தை யிறந்தொழியத் தாயர்பிறந் தகத்தில்
    வந்துவளர்க்க வளர்ந்தேன்யான் – செந்தமிழும்

    அல்லாமல் இந்நாள் அரசுபுரி ஆங்கிலியர்
    சொல்லதுவுங் கற்கத் தொடங்கினேன் – கல்லூரிக்

    கோர்பெயராம் பள்ளிக் குயர்வில் சிறுசாதிப்
    பேர்கா ரணமாய்ப் பெறும்வண்ணம்- சேருமொரு

    பள்ளியிடைப் புக்கந்தப் பள்ளிச் சிறார்களுடன்
    உள்ளிருந்து பாடங்க ள்:ஓதினேன்- எள்ளுமந்த 50

    அன்னியபா டைக்கிணங்க அன்னியமார்க் கச்சிறப்பும்
    அன்னியர்பாற் கற்றே அமர்ந்தேன்யான் – அன்னோர்

    மருட்டு வழியான் மதிமயங்கி அந்தக்
    குருட்டுவழி யென்னுளத்துட் கொண்டேன் – இருட்டின்கண்

    கண்ட கயிரரவாய்க் காணுதல் போலாங் கவர்கள்
    விண்ட பொருள்யாவும் மெய்யாயுட்- கொண்டதனாற்

    றெய்வச் சிறப்புஞ் சிவனடியார்தஞ் சிறப்பும்
    சைவச் சிறப்புந் தரிக்கிலேன் - பொய்யார்

    புலைத்திரளின் சேர்க்கையாற் புத்தி வரத்தக்க
    கலைத்திரளை யேதொன்றுங் கல்லேன் – கொலைசேர் 55

    விவிலிய நூற்கொள்கை மிகுத்தலா லான்றோர்
    நவிலிய னூலொன்றும் நவிலேன் – அவமாகக்

    காலங் கழித்தேன் கழித்தேன் குலவொழுக்கஞ்
    சீலங் கழித்தே திரிதந்தேன் – ஞாலமுடன்

    காசு பணத்திற்கும் கண்மயக்கும் வேசைகட்கும்
    ஏசுமதத்திற்கும் இச்சை வைத்தேன் – சீசீயென

    நல்லாரைக் கண்டால் நடுங்குவேன் நல்லார்க
    ளல்லாரைக் கண்டால் அகங்களிப்பேன் – பொல்லாத

    துன்மார்க்க மென்றாற் சுகித்திடுவேன் சுத்தசைவ
    சன்மார்க்க மென்றாற் சலித்திடுவேன் – என்மார்க்கங் 60

    குற்ற முளதேனும் குலத்தில் அபிமானத்தான்
    முற்றத் துறந்து முடிந்ததிலைச் – சிற்றறிவால்

    ஏசுமதம் பெரிதென் றிச்சைவைத்தேன் ஆனாலும்
    தேசுவிடுத்து அதிலே சேர்ந்ததிலைப் – பேசிடுதல்

    எல்லாமதன் முடிவே என்றாலும் தீயேனப்
    பொல்லச் சமயம் புகுதவிலைக் - கொல்லும்

    புலியானது பசுத்தோல் போர்த்த விதமென்னப்
    பொலிவார் திருநீறும் பூண்பேன் – குலவொழுக்கம்

    இல்லாத பெண்டிர் இருமனம்போல் என்னகமும்
    அல்லாப் புறமும் வேறா யிருந்தேன் – வல்லார் 65

    சிலையி லெழுத்தாய்ச் சிறுவயதிற் கல்வி
    நிலையுறுதல் பொய்யோ நிலத்தின் – மலதேகப்

    பன்றி மலமருந்தப் பார்த்திருந்த நல்லாவின்
    கன்றும் மலமருந்தக் காணாமோ – துன்றும்

    பழக்கத்தி னாலே பலிக்கும் உலக
    வழக்கத்தை யார் தடுக்க வல்லார் – சழக்கார்

    மனக்கிசைந்த வாறெல்லாம் செய்யென்னும் வார்த்தை
    எனக்கிசைந்த நூலா யிராதோ – இனக்கேடாய்ச்

    சின்னஞ் சிறுவயதிற் சிற்றினத்தைச் சேர்ந்ததனால்
    அன்னார் தமதுருவ மாயினேன் – முன்னாளில் 70

    என்னதவஞ்செய்தேனோ ஏதுநலனோ அறியேன்
    பின்னர்வரச் சென்றடுத்தேன் பேரூரைச் – என்னொடொரு

    மித்துவரும் வீணாதி வீணரொடும் பேய்மோகப்
    பித்தரொடும் சென்றடுத்தேன் பேரூரை- சித்தத்

    தரியபொருள் பேணாமே ஆயிழையார்ப் பேணும்
    பிரியமுடன் சென்றடுத்தேன் பேரூரைக் – கூறரிய

    பன்னாள் அவமாகப் பாழுக்கிறைத்தல்விட்டுப்
    பின்னாளிற் சேர்ந்தேன்யான் பேரூரை – அந்நாள் 75

    திருநாளாய் எங்கோன் தெருவிற் பவனி
    வருநாளாய் நேர்ந்த வகையால் – அருவுருவச்

    சோதியான் தோன்றாச் சுயம்புவான் செஞ்சடையிற்
    பாதிமதி சூடும் பரமனவன் – மாதினையோர்

    கூறுடையான் எட்டுக் குணமுடையான் பால்வெள்ளை
    நீறுடையான் கையில் நெருப்புடையான் - ஆறுடைய

    சென்னியான் ஆறுடைய சென்னியான் றன்னை
    முன்ன மளித்த முதல்வன் – பன்னகத்தின்

    பூணுடையா னோரிந்தப் பூமிமுழுதுஞ் சுமந்த
    நாணுடையான் முப்புரிசேர் நாணுடையான் – காணுமவர்க் 80

    கஞ்சக் கரத்தான் அருள்பெறுவோர் உச்சரிக்கும்
    அஞ்சக் கரத்தான் அரியகருப் – பஞ்சிலையால்

    ஐயம்பெய்யுங் கரத்தான் அங்கமழ லூட்டினான்
    ஐயம் பெய்யுங் கரத்த னாதியான் – பொய்பாத

    கக்கிரியை ஓர்விலாக் கண்டகர் சாகக்கன
    கக்கிரியை யோர்விலாக் கைக்கொண்டான் – மிக்கடியோ

    முக்கண்ணா நல்லமிர்தம் ஒப்பாவான் முச்சுடரும்
    முக்கண்ணாய் வாழு முகமுடையான் – தக்கார்

    மறந்தும் பிறவி வரநினையான் தானும்
    மறந்தும் பிறவியிடை வாரான் – துறந்தோர் 85

    தவந்திரண்ட தென்னத் தவளநிறம் வாய்ந்து
    நிவந்துலக மூடுருவி நின்று – நவந்தரும்பல்

    விம்மிதங்க ளோங்கி விமலமாய் வேதத்தின்
    சம்மதமாம் வெள்ளித் தடவரையும் – தம்மதருட்

    சத்தியுறையுந் தடங்கிரியும் சங்கேந்தும்
    புத்தே ளயன்வாழ் பொருப்பிரண்டு – நத்திக்

    கருத மலவில்லாமற் கந்தனருள் செய்யும்
    மருத மலையென்னும் மலையும் – ஒருபடித்தாய்ப்

    பஞ்சப் பிரமமே பஞ்சவரை யானதென
    மஞ்சடரும் பஞ்ச வரையுடையான்- எஞ்சாது 90

    நீர்த்தரங்கத் தாலே நெருங்கும் அகன்கரையைப்
    பேர்த்தெறிந்து வெள்ளப் பெருக்காகி – ஆர்த்தெழுந்தே

    அந்நாட் பகீரதற்கா ஆங்கிழிந்த கங்கையைப்போல்
    இந்நாட் பலவுலக மீடேறப் – பொன்னார்

    பொலிந்த ரசிதப் பொருப்பி லுலாவி
    மலிந்த பொருள்பற் பலவும் வாரிக் – கலந்து

    தொடும்பொருளை யெல்லாம் சுவர்ன மயமாக்கி
    விடும்பரிசாற் காரணப்பேர் மேவிக் – கடும்பவநோய்

    யாவும் அகற்றி அறம்பொருளின் பாக்கியலை
    வாவிவருங் காஞ்சி மாநதியான் – மேவுபுகழ் 95

    ஏட்டில் அடங்காமல் எவ்வுலகுந் தன்மணமே
    நாட்டுவிக்கும் கொங்குவள நாட்டினான் – போட்டிவிளைத்

    தூரூரெல் லாஞ்சின்ன வூராய்ப் புறங்கொடுக்கப்
    பேரூரெனத் திகழ்பே ரூரினான் – ஆரூரர்

    பாமாலைசூடும் பணைத்தோளில் என்றன்புன்
    பாமலை சூட்டப் பணித்ததுபோற் – பூமாலை

    நேசமாய் மாசகன்ற நின்மலமாய்ப் பொன்மயமாய்
    வாசமார் கொன்றைமலர் மாலையான் – வாசிக்

    கடும்பரியி லேறுவோ ரல்லாதார் காணப்
    படும்பரி சொன்றில்லாப் பரியான் –இடும்பச் 100

    சிலையின் பொருட்டு வெள்ளைச் சிந்துரமும் நல்குங்
    கொலைவல்ல கம்பமத குஞ்சரத்தான் – அலையாமல்

    ஈண்டும் அடியவர்கட் கெய்தும்பே ரின்பமென
    மூண்டு முழங்கும் முரசத்தான் – ஆண்டவன்றன்

    சேவேறு சேவடியை அல்லதில்லை யென்றசையும்
    கோவேறு கொற்றக் கொடியினான் – பூவேறும்

    அந்தணனும் நாரணனும் அண்டபகி ரண்டமொடு
    வந்தடங்கும் ஆணி வலியுடையன் – மைந்தர்களாம்

    பட்டிவி நாயகனும் பன்னிருகைப் பண்ணவனும்
    கிட்டி யருகே கிளர்ந்துவரத் – தொட்டரனார் 105

    உண்டபரிகலமும் ஒண்மலரும் பெற்ற எங்கள்
    சண்டிப் பெருமானும் சார்ந்துவர – மண்டியபேர்

    அன்பாற் றமிழ்பாடும் அப்பருடன் சம்பந்தர்
    வன்பால் அடிமை கொண்ட வன்றொண்டர் – தென்பார்

    விளங்கவரும் வாதவூர் வேந்த ரிவரெல்லாம்
    துளங்காது பக்கலிலே சூழ – உளந்தனிலே

    இச்சையறிந் துலக மெல்லாம் படியளக்கும்
    பச்சைவல்லித் தாயாரும் பாங்கர்வர – அச்சுதனோ

    டிந்திரனே யாதி இமையோர்குழாந் திரண்டே
    அந்தரத்தின் கண்ணே அலர்தூவத் – துந்துமியே 110

    யாதிமுழவம் அதிர முழங்கியெழ
    வீதி நிரம்ப விருதடையக் – கோதில்

    குணவடியா ரெல்லாங் குழாங்கொண்டு கூடிப்
    பணிவிடைகள் வேண்டியவா பண்ண – அணிகிளரும்

    வேதமொரு பாலும் விமலத் தமிழ்வேத
    நாதமொரு பாலும் நவின்றிலங்கச் – சீதப்

    பனிவெண் மதியங்கள் பார்க்கவந்த தென்னக்
    கனிவெண் குடைகள் கவிப்ப – நனிவிரைந்து

    கங்கைத் திரளும் வந்த காட்சியென மேலோங்கித்
    துங்கக் கவரிபுடை துள்ளவே – எங்குமாம் 115

    மூவர்பெருமான் முடியாமுதற் பெருமான்
    தேவர் பெருமான் சிவபெருமான் – காவலராஞ்

    சிட்டிப்பெருமான் திதிப்பெருமான் காண்பரிய
    பட்டிப்பெருமான் பவனி வந்தான் – சிட்டரெலாம்

    ஆடுவார் தித்தித் தமுதமெனக் கானவிசை
    பாடுவார் நின்று பரவுவார் – நாடுவார்

    கண்ணே கருத்தே கதியே வான்கற்பகமே
    எண்ணே எழுத்தே எனத்துதிப்பார் –நண்ணாப்

    பதிதரெனினும் பவனி பார்க்கக் கிடைத்தாற்
    கதிதருங் காணென்றே களிப்பார் – துதிசெய்யும் 120

    விண்ணோரும் மண்ணோரும் வேட்ட துனதுகடைக்
    கண்ணே அளித்தருளும் காண்என்பார் –விண்ணவர்க்காய்க்

    கல்லைக் குழைவித்த கண்ணுதலே யெம்மனமாங்
    கல்லைக் குழைத்தல் கடனென்பார் – அல்லைப்

    பொருவு மிடற்றிலெங்கள் புன்மலமுஞ் சேர்த்தால்
    இருமைக் கருப்பாகு மென்பார்- திருநுதலில்

    தீவைத்த தெங்கள்பெருந் தீவினையெல் லாமொருங்கே
    வேவித்தற் கேயோ விளம்பென்பார் –சேவித்தோர்

    தங்கள்மலம் போக்கவோ தண்புனலைச் சென்னிவைத்தாய்
    திங்களையும் வைத்ததென்ன சேர்த்தென்பார் – எங்கள்பொருட் 125

    டாயோர் நரவுருவு மானாய்க்கு வெங்கொடிய
    பேயோடு மாடலென்ன பெற்றி யென்பார்.- தீயபவக்

    காடெறியவோ கணிச்சியினைக் கைக்கொண்டாய்
    மாடாயொரு மானேன் வைத்த தென்பார் – பீடரு

    யோகத் திருந்தும் உமையாளைச் செம்பாதி
    பாகத்தில் வைத்ததென்ன பற்றி யென்பார் – ஆகத்தில்

    கந்தபொடி பூசக் கருதாமல் வெண்ணிறமாய்
    வெந்தபொடி பூசலென்ன விந்தை யென்பார் – இந்தவகை

    தத்தமனக் கிசைந்த சாற்றித் தொழுதுநிற்ப
    எத்தனையோ பேர்சூழ்ந் திரங்கி நிற்பப் – பித்தனேன் 130

    கொஞ்சமு முள்ளத்திலன்பு கொண்டதிலைக் கல்லான
    நெஞ்சமுருக நைந்து நின்றதிலைத் – தஞ்சமெனக்

    கண்ணருவி பாயவிலை கைதலைமேற் கொள்ளவிலை
    மண்ணதனில் வீழ்ந்து வணங்கவிலைத் – துண்ணெனவென்

    ஆகம்புளகம் அரும்பவிலை இவ்விழவின்
    மோகம் ஒருசற்றும் முயங்கவிலை – வேகப்

    பறவைவிலங் கோட்டிப் பயமுறுத்த நாட்டி
    நிறுவுமொரு புல்லுருவை நேர்ந்தேன் – வெறுமையேன்

    ஆனாலும் அந்நா ளடியரடிப் பொடியென்
    மேல்நான்செய் புண்ய விசேடத்தாற் – றானாகப் 135

    பட்டங்கிரசம் பரிசனவே திப்பரிசப்
    பட்டதனாற் பொன்னாம் பரிசேபோல் – விட்டகன்றும்

    குற்றியென நிற்குங் குறிபார்த் தெனக்கருளும்
    பெற்றி நினைந்து பெருங்கருணை – உற்ற கரு

    ணாகரனேயென் பொருட்டோ ராசிரியனாய்ச் சந்த்ர
    சேகர னென்றோர் திருப்பேர் சேர்த்தியே – சாகரஞ்சூழ்

    இவ்வுலகி லுள்ளமத மெத்ததனையோ அத்தனைக்கும்
    பௌவமெனும் வேதப் பயோததியைத் – திவ்யாக

    மத்தின்வழியே மதித்தநவ நீதசைவ
    சித்தாந்த மெய்யுணர்த்துந் தேசிகனாய்க் – கத்துகின்ற 140

    கற்பனா மார்க்கமெனுங் கட்செவிக்கு வல்லிடிபோற்
    சொற்பிர யோகஞ்செய் சுகோதயனாய்ப் –பொற்பார்

    மதமாவை மாக்கள் வசமாக்க மற்றோர்
    மதமாவைக் கொண்டே மடக்கும் – விதமவனென்

    போலோர் மனிதவுருப் பூண்டுஞ் சிவசின்னத்
    தாலே பிரானாந் தகைவிளங்க – ஆலடியில்

    அன்றமர்ந்த வாபோல் அரசமரத் தருகே
    நின்றெளியேன் காணநேர் நின்றருளி – என்றன்னை

    அன்பொட ழைத்தங் கருகிருத்திப் பற்பலவா
    முன்பழமை பேசி முடித்ததற்பின் – என்பேரில் 145

    வைத்த பெருத்ததயா வால்என்முக நோக்கி
    வித்தகனே யெங்கோன் விழவிலுன் – மத்தனென

    நின்றாய் என்னேயுன்றன் நெஞ்சமிரும்போ கல்லோ
    ஒன்றாலும் உருகா ஒருபொருளோ – சென்றோடிப்

    பார்க்குங்கண் ணோவியன்செய் பாவையின்கண் ணோவோசை
    சேர்க்குஞ்செவி யிரும்பிற் செய்செவியோ – பார்க்குங்கால்

    நல்லகுடிப் பிறந்தாய் நாடிளமை யோடழகும்
    புல்லும் வடிவம் பொருந்தினாய் – கல்லுங்

    கரையும் எம்மான் செல்பவனி கண்டுங்கரையா
    துறையும் பெருமமதை யுற்றாய் - முறையே 150

    வழிவழியாய்ச் சைவத்து வந்தமைக்குன்முன்னோர்
    மொழிபெயரே சான்றுமொழிய- வழுவிநீ

    பேயின்கோட் பட்டாயோ பேதைமையோ வேற்றவர்தம்
    வாயின் கோட்புற்ற வகைதானோ – ஆயவிதஞ்

    சொல்லென்றான் காட்டினில்வாழ் துட்டவிலங்கனையேன்
    சொல்லன்று சொல்லத் தொடங்கினேன் –கல்லாத

    மாந்தரென என்னை மதித்தனரோ இந்தப்பார்
    வேந்தரெனைக் கொண்டாடி மெச்சிடுங்காற் – போந்தெனைநீர்

    கல்லுக்கும் மண்ணுக்கும் காசடிக்கும் செம்புக்கும்
    மெல்ல வணங்க விலையென்று – சொல்லுதல்தான் 155

    அன்னத்தைப் பார்த்தொருகொக் கானதுவான் மேற்பொய்கை
    யின்னத்தை மீனாதி யில்லையெனச் – சொன்னத்தை

    யொப்பாகும் நீவிர் உயர்ச்சியெனுஞ் சைவமோ
    தப்பாகும் ஏசுச் சமயமொன்றே – இப்பாரை

    நீதி மிகவோதி நிலைநிறுத்த லாலதுவே
    ஆதி யெனலாமென் றறைந்தேன்யான் – ஓதியவை

    கேட்டும் பொறுத்துக் கிருபையாய் என்மீது
    மீட்டும் அருட்கடைக்கண் வீட்சணியம் நாட்டி

    அழகழகுன் செய்கை அழகழகுன் கல்வி
    அழகழகுன் சொற்பிறந்த ஆற்றல் – அழகாருஞ் 160

    சைவத்தைப் போலாஞ் சமயமொன்றும் சங்கரனாந்
    தெய்வத்தைப் போலான தெய்வமொன்றும் – வையத்தில்

    ஆதித்தன் போலா யனைத்திருளை யுந்துறக்கும்
    சோதித் தனியாஞ் சுடரொன்றும் – பூதலம்போல்

    ஏற்றுநாஞ் செய்கின்ற எப்பிழையையும் பொறுத்துப்
    போற்றியுண வளிக்கப் பூமியொன்றும் – பாற்றுளிபோற்
    சூற்கொண் டுலகிற்குத் தோற்றுந் துணையாக
    மேற்கொண்டு பெய்தளிக்க மேகமொன்றும் – ஏற்கெனவே

    யில்லை யில்லை யில்லை யெனவே பறையறைந்து
    தொல்லைமறை யாவுந் துணிந்துரைக்கும் – தொல்லுயிர்கட் 165

    கொன்றுந் தகைய விதிவிலக்கை யோதுவித்தே
    என்றுந் திரியாஇயல்பினதாய் – அன்றாலின்

    கீழிருந்தி யோகியர்கள் கேட்க வுணர்த்தியதாய்
    ஊழிதொறும் நிற்கும் உறவினதாய் - ஆழியின்கண்

    ஆறனைத்தும் சென்றுபுகு மாறுபல சமயப்
    பேறனைத்தும் வந்தொடுங்கும் பெற்றியதாய்க் – கூறுமுயிர்ப்

    பக்குவத்திற் கேற்பவருள் பாலிக்க வல்லதாய்
    மிக்குயர் சோபாந விதானமுடன் – ஒக்கவே

    எல்லா இலக்கணமும் எல்லா மகத்துவமும்
    எல்லா நலமும் இயைந்துளதாய்க் – கொல்லா 170

    விரத முடையதாய் வேதாந்த மோன
    சரதமெனு மோலி தரித்தே – கரதலத்தில்

    ஆமலகம் போல வருட்சத்திப் பேறளித்துக்
    காமக் குரோதங் களைவதாய் – நேம

    நிலையுள்ளதாய் முன்பின் நேர்ந்த மலைவற்ற
    கலையுள்ளதாய் ஞானக் கண்ணாய் – மலையே

    இலக்காய் அடைந்தோர்கட் கெய்தற் குரித்தாய்க்
    கலக்காத இன்பக் கலப்பாய் – மலக்கன்மம்

    வீட்டித் திரும்பவரா வீட்டில் அருளின்முழுக்
    காட்டுவிக்கத் தக்க அருமருந்தாய் – நாட்டிலே 175

    சாது சமயமொன்றாய்த் தான்சமைந்தாலும் சமையா
    தீதப்பயம் பொருளைச் சேர்த்துவதாய் – ஓதும்

    பதிநிலையும் பாசநிலையும் பசுக்க
    ளதுநிலையுந் தப்பா தறைந்தே - எதுநலமும்

    ஓங்கி உயர்வெல்லாம் உடைய சமயஞ்சைவம்
    ஆங்கதனில் நீவந் தவதரித்தும் – ஈங்கதனை

    உள்ளபடியே உணராது சான்றோரால்
    தள்ளப்படும் புன்சமயமாய் – எள்ளுங்

    கொலைசெய்யக் கற்றுக் கொடுப்பதாய் முன்பின்
    மலவாய் மொழிவிகற்ப மார்க்கம் –நிலையுளதாய் 180

    இவ்வுலகில் வாழ்வோ ரிடர்ப்பட் டமைத்ததாய்த்
    தெவ்வர்களால் வேறுபடச் செய்ததாய் – ஒவ்வாத

    சீவபர தத்துவங்கள் செப்புவதாய்ப் புண்ணியமும்
    பாவமும் அவ்வாறே பகருவதாய் – யாவரையும்

    சண்டைக் காளாக்கித் தளஞ்சேர்க்க வல்லதாய்த்
    தண்டெடுப்போர் யாவர்க்குந் தாயகமாய் – உண்டுடுத்தீண்

    டெய்துஞ் சுகமே பேரினபமெனத் தேற்றியருள்
    எய்துதற்கு முற்றும் எதிர்மறையாய் – வெய்தாக

    மாசு திரண்டோ ருருவாய் வந்ததென வந்துதித்த
    ஏசுமதமோ மனத்தில் எண்ணினாய் – காசினியில் 185

    வீட்டிற் பெரிய விளக்கிருக்க மின்மினியைக்
    காட்டிற் போய்த் தேடுங் கயவரையும் – ஈட்டியசெம்

    பொன்னை மடுவுட் புகப்பெய் தரிப்பரித்துப்
    பின்னைப் பொருளீட்டும் பித்தரையும் – பன்னுசெழுந்

    தேனிருக்க உண்ணாமற் செந்தாமரை படர்ந்த
    கானிருந் துலாவுமண் டூகத்தினையும் – மானிடர்கள்

    உண்ணத் தகும்பல் லுணவிருக்க வீதியிலே
    மண்ணுண்ணும் புத்தியற்ற மைந்தரையும் – நுண்ணுணர்வான்

    நூல்நிரம்பக் கற்றெங்கோன் றாள் பரவாமல்
    மானிடரைப் பாடும் பாவாணரையும் - மேனி 190

    கருமையாய் ஊற்றைக் கலக்கி நீருண்ணா
    எருமையையும் ஒத்தாய்நீ என்றான் – உருவமொன்றும்

    இல்லான் குணமொன்றும் இல்லான் குறியொன்றும்
    இல்லான் இறையென்றே எம்மனோர் – சொல்லிப்பின்

    மாறுபடக் கோலம் வகுப்பாரேல் மற்றதற்கு
    வேறு குறிப்பிருகவேண்டாமோ – கூறுமவர்

    சொல்லும் பொருளுணராத் தோடத்தால் மூர்த்திகளைக்
    கல்லொடு செம்பொன்றிகழக் கற்றனையால் – நல்லதுபின்

    நீயுரைத்த ஏசுமத நீணிலத்தில் உற்பத்தி
    யாயவிதஞ் சற்றே அறையக்கேள் – ஆயிரத்தை 195

    நான்மடங்கு செய்யாண்டின் நாளிலிந்தப் பூமிமிசை
    மேன்முடங்கு நாட்டு மிலேச்சர்பலர் – கூன்முடங்கும்

    வெய்ய நிருவாண விலங்கொத் துழிதருங்கால்
    தெய்வ உணர்ச்சி சிறிதுதிப்ப – நொய்தாகும்

    ஏகோவா வென்றங் கியம்பு துட்டதேவதையை
    ஏகோபித் தேத்தும் இயல்புற்றார். - ஏகோவாக்

    கோபத்துக் காயாட்டைக் கொன்று மாட்டைக் கொன்றுந்
    தீபமெடுத் துதிரத்தைத் தெளித்துந் – தூபமிட்டுங்

    கொண்டாடிச் சாதியாய்க் கூலித் தொழில்செய்து
    திண்டாடி வாடித் திரியும்நாள் – உண்டான 200

    மோசேயத் தேவின் முழுநோக் கடைந்ததாய்
    மோசஞ்செய்து சூது மொழிகிணங்கி - ஆசையினால்

    ஆங்கவன் செய்மாயம் அனைத்தினையும் தேவனே
    தீங்ககலச் செய்ததெனத் தேறியே – தாங்களும்போய்ச்

    சண்டைசெய்து நாடுசயங்கொள்ளு மோர்வுணர்வே
    கொண்டதனால் பண்டைவினை கூட்டியிடச் – சண்டையிலே

    வெற்றி யடைந்தம் மிலேச்சர்க் கதிபதியாய்
    மற்றவரைத் தங்கண் மயமாக்கி – உற்றிடுங்காற்

    பூசாரி மார்க்குப் புகழும் பெருவாழ்வும்
    காசாதி சேருதலும் காரணமாய்க் - கூசாது 205

    கோர்க்கும் விடுகதையின் கொள்கையயாய்ப் பல்பொருள்சேர்
    தீர்க்கதரி சனங்கள் செப்பியே – பார்க்குள்ளே

    ஏழைமதி யோர்கள்தமை யெத்திமத மாய்ச்சேர்த்திப்
    பீழை பெருகப் பிழைத்தார்காண் – கோழையா

    அந்தவுரைப் பௌவத்தில் ஆழாமல் தேற்றியிட
    முந்தச் சகுன மொழிவதொத்து – வந்ததிலே

    கள்ளக் குருமார் கணக்கில்லோர் தோன்றியுல
    கெள்ள வெளிப்பட் டிறந்ததற்பின் – பிள்ளையெனத்

    தச்சக் குலத்திலொரு தாய்வயிற்றின் நால்வரொடு
    முச்சப்பட வொருவன் உற்பவித்து - நச்சியே 210

    முப்பான் வயது முடியளவுஞ் சூனியங்கற்
    றப்பாற் சகப்புரட்ட னாகியே – இப்பாரில்

    ஏசுவெனப் பேர்பூண் டிருக்களவுங் கல்விமணம்
    வீசு மிடங்களிலு மேவாது – பேசும்

    வலைஞர் பரதர் மலசர் முதலான
    புலைஞருட னுறவு பூண்டு - மலையா

    திகளில்வசித் தலைந்தும் ஏழைகள் தம்மாலே
    புகழாதி மேன்மை பொருந்தி – மகிதலத்தில்

    ஊமைக்குத் திக்குவா யுற்பாத பிண்டமென்று
    நாமறியக் கூறும் நகுமொழிபோற் – சாமியமாய்க் 215

    காட்டு மனிதர்கட்குக் கண்கட்டு வித்தை செய்து
    காட்டி யவராலே கனம்படைத்து –மேட்டிமையோர்

    பொய்ய னிவன்செய்யற் புதங்களும்பொய்யென் றுவசை
    செய்ய மறைந்து திரிதந்து – வையத்திற்

    சஞ்சரிகுங் காலத்தே தந்தொழிலுக் கானியென்று
    வஞ்சவினைப் பூசாரி மார்திரண்டு –நெஞ்சில்

    விரோதத்தி னாலவன்றன் மேலே தஞ்சாமித்
    துரோகமெனுங் குற்றஞ் சுமத்த – ஏரோதென்பான்

    அற்புதங்கள் செய்தக்கா லாக்கினைசெய் யாதுயிரைத்
    தப்பு விப்பதாய் வாக்குத் தந்திடவும் –அப்படிச்செய் 220

    துய்யாமல் நெஞ்சம் உலர்ந்து பிலாத்தென் பவன்றன்
    கையாற் கொலைதீர்ப்புக் கட்டளைபெற் – றையோ

    சிலுவைதனி லேயழுது சின்னப் பட்டேறி
    வலுவிலுயிர் போக வருந்தித் - தலைவிதியாற்

    செத்தபின்னர் அன்னவன்றன் சீடர்சில ரந்தச்ச
    வத்தைத் திருடி மறைத்துவிட்டுச் – செத்தோன்

    கடவுளே யென்றுமிந்தக் காசினியோர் பாவம்
    படக்கழுவிற் பட்டிறந்தா னென்றும் –புடவிமிசை

    மாரியம்மை பேச்சியம்மை மாடன்பொம்மன் மதுரை
    வீரனு தேவென்னும் விதம்போலும் – ஊரகத்தே 225

    செத்தார்மேற் பொய்ப்புகழைச் சேர்க்கும் வகைபோலும்
    பித்தேறி வாயார் பிதற்றுங்கால் – ஒத்துப்

    பவுலென்னும் பொய்யிற் பயின்றோன் ஒருவன்
    கவுலாய்த்தன் பண்டைமதங் கைவிட் – டவலமுள்ள

    ஏசுவின்றன் சீட ரெழுதிய தென்றுமேசு
    பேசுசுவிசேட ப்ரசங்க மென்றும் - வாசகங்கள்

    கூட்டிக் குறைத்தெழுதிக் கொண்டுகுருப் பட்டமுடன்
    நாட்டினிலிவ் வேசுமதம் நாட்டினான் – கேட்டனையோ

    வந்தமதம் இன்னும் அனேகவகை யாய்ப்பிரிந்த
    விந்தையெல்லாஞ் சொன்னால் விரியுங்காண் – அந்தமத 230

    ஆசிரியருந் தெருக்க ளாதியிலே செய்யுமுப
    தேசிகரும் பட்டத்திற் றேர்ந்தவிசு – வாசிகளும்

    எம்மதத் தையும்வீண் இகழ்ச்சிசெயினும் பொய்யாந்
    தம்மதத்தை மெய்யென்று சாதிக்க – அம்மதத்தைத்

    தாபித்தோன்றா யுதரந் தங்கி மதியம் நிறைந்து
    சோபித்தி யோனித் துவாரம் வந்துங் – கோபித்துக்

    கொல்ல வருவாரென்று கூசிப்பயந் தொளித்தும்
    எல்லவருங் காணவழு தேயிறந்தும் – புல்லும்

    உடலம்நரம்பென் புதிரந் தசைசேர்ந்
    திடவிளமை யாதி பருவங்கள் – அடைவாகக் 235

    கொண்டே மனிதகுணங் கொள்கையில் பேதமதா
    யுண்டே யுறங்கி யுழன்றவெலாங் – கொண்டேயவ்

    வேசுமனிதனே யென்பார் வாய்க்குப் பயந்து
    யோசப் பெனுங் கருமானுக் குமணம் – பேசிவைத்த

    கன்னிவயிற்றிற் றெய்வீகத்திலுதித்தா னென்றுஞ்
    சென்னிமிசை யாவிவந்து சேர்ந்ததென்றும் – தொத்ததென்று

    தன்னுயிர்போய் செத்த மூன்றாநாள்தன் சீடர்கள்காணப் பிழைத்து முத்தியடைந் தானென்று முன்னுரைவந் -தொத்ததென்று

    மானிடர்தந் தத்துவமும் வானவர்தந் தத்துவமும்
    ஆனவிரு தத்துவத்தி னானென்றும் – ஞானியர்கள் 240

    விண்மீ னொன்றினாலே வெளிப்படக் கண்டாரென்றும்
    எண்மீறி யற்புதம்வந் தெய்துமென்றும் – உண்மையிலே

    இல்லாக் கருமமெல்லாம் ஏசுதலை மேற்சுமத்தி
    எல்லாரும்நம்பு மெனவிசைப்பார் –அல்லாத

    வேற்றுமதத்துட் குறிப்பாய் மேவுபொருளைத் தமக்குத்
    தோற்று விதமாய்ப் பொருள்கள் சொல்லியே – தூற்றுவார்

    மட்டடங்கா மோகி மடலூரத்தான் விரும்பப்
    பட்டவளைப் போலெழுதும் பாவனையுஞ் – சிட்டர்

    அரியவொலி வடிவா மக்கரத்தை யாருந்
    தெரிய வரிவடிவிற் றீட்டுதலும் – பொருவவே 245

    தம்மனத்துட் கொண்ட தலைவனைத்தந் தியானாதி
    செம்மைபெறவோர் வடிவஞ் செய்துளரேல் – அம்மலவர்

    நுந்தேவின்கண் நும்மை நோக்குமோ காலாலே
    வந்தேநீர் கேட்கும் வரம்தருமோ – வந்தே

    கதிதருமோ செய்தானுங் கம்மியனே யன்றொ
    மதியிலிகா ளென்றெமரை வைவார் – பதிதான்

    இணையில் ஒருவ னெனினும் அவனைச்சேர்ந்
    தணையு மடியர்பல ராமே – துணையாக

    மன்னவனைச் சேவைசெய்வோர் மந்திரிக ளாதியரை
    முன்னர்ப் பணியு முறைபோல – வுன்னிப் 250

    பலவடியார் தம்மைப் பணிந்தா லுமக்குப்
    பலதேவ ரென்றே பழிப்பார் – குலதேவன்

    ஏகன்தமக் கென்பார் ஏகோவா வொன்றுபுறாக்
    காகவுயி ரொன்றேசுக் கத்தனுமொன் – றாகவே

    தோன்றிய வெவ்வேறு சொருபகுண பேதமுள்ள
    மூன்றும் அதன்மேலும் மொழிவார்கள் – ஊன்றியவவ்

    வேசுவெகு நீதிஇசைத் தான்என்பா ரிப்பாற்
    பேசுலகு நாகரிகம் பெற்றதென்பார் – ஏசுதான்

    மாதாபோற் றோன்றி வகுத்ததெனு நீதியெலாந்
    தீதார் புன்கல்விச் சிறார்களெடுத் – தோதாத்தி 255

    சூடியெனும் புத்தகத்திற் சொல்லியுள நீதிகளிற்
    கோடியிலோர் கூறெனவுங் கூடுமோ – நாடில்

    இதுகாலமிக்க இழிதொழில் பொய்ச்சான்று
    மதுபானம் நாகரிகம் ஆமோ – பொதுமையறத்

    தேவனுலகத்தைச் சிருட்டித்த காரணமும்
    பாவம்வந் தவாறும்அந்தப் பாவந்தான் – போம்வழியும்

    எந்தவகை யென்றக்கால் எவ்வுயிருங் தோற்றத்துள்
    வந்தவகை சொல்ல அறியாமல் – புந்தியிலாத்

    தஞ்சிறர் சோறுண்ணத் தாயர்சொல்லுங் கதைபோல்
    எஞ்சியுரைவைவி லெனுந்திரட்டுட் – சஞ்சரித்துச் 260

    சாமியசை வாடச் சலம்வரும் பின்னேயொளியும்
    பூமியொடு வானும் பொருந்தவரும் – பூமியைநீ

    தானேபுல் பூண்டாதி தாவென்னச் சாற்றவரும்
    வானே ரிருசுடரும் வந்துதயம் – ஆனதன்முன்

    நாளுண்டென் றோதவரும் நாட்டைத் தனைவணங்க
    வாளுன்னிச் சிட்டித்த தாக்கவரும் – மூளுமுன்னைச்

    சென்மமிலைச் சென்மத்திற் சேர்ப்பதற்குச்செய்பழய
    கன்மமிலையென்றே களரவரு – நன்மைசெய்ய

    வாதமெலும் பாலொருபெண் ணாக்கியவ னுக்களித்துச்
    சாதகஞ்செய் திட்டதெனச் சாற்றவரும் – ஏதனெனுந் 265

    தோட்டமொன்று செய்தந்தத் தோட்டத்திற் சீவமரங்
    காட்டி யதிலான கனிபுசித்தாற் – கேட்டினாற்

    சாவாய்என் றோதவரும் சர்ப்பமொன்று சற்பனையாய்
    மேவியதை யுண்ணும் விருப்பளித்துத் – தேவியினால்

    உண்ணுவிக்க வல்லதென ஓதவரும் உண்டவுடன்
    கண்ணுடைய ராய்மானங் காணவரும் – கண்ணாலே

    நன்மைதின்மை ஓர்ந்து நரனுமொளி பெற்றுயர்ந்த
    தன்மைகண்டு பொங்கிச் சபிக்கவரும் – முன்மெலிந்தே

    ஆறு நாளுரை யமைத்தலுப்ப தாகியிளைப்
    பாறுநாளொன்றென் றறையவருங் - கூறுலகம் 270

    பீடுபெறன் முன்னமே பெய்துநனைந் துளதா
    மூடுபனி யென்றும் மொழியவரு – நாடிலுயிர்

    ஒன்றி லிருந்துமற் றொன்றுண்டாகிப் பல்கியதாம்
    என்றெ டுத்துக் கூசா தியம்பவரும் – சென்றவர்க்கு

    நித்தியமாம் சொர்க்க நிரயம் வகுக்க வரு
    நித்திரையாய்ச் செத்தவர்கள் நிற்கவரும் – மெத்தியே

    சீடர்களையூரெங்குந் தேடித் திரட்டுதலே
    பீடுடையசெய்கை யென்று பேசவரும் – மாடுமுத

    லாமுயிரின் காதி லமைத்தோன் உயிரினையூ
    தாமையினாற் சீவனற்ற தாக்கவரும் – யாமெவையும் 275

    தீனியெனக் கொண்டு தின்னவரும் வேதமெலாம்
    மானிடதங் காதையென வைக்கவரும் - மேல்நிரையே

    சாமியசை வாடச் சலமிருந்தா லச்சலந்தான்
    பூமியிருந் தல்லாற் பொருந்துமோ – பூமியது

    முன்னே யுண்டாகி முடிந்துளதேற் றேவனதைப்
    பின்னேயுண் டாக்கியதாய்ப் பேசுவதென் – முன்னமிருட்

    கண்ணுறைந்த வேகோவா காரிருளும் பேரொளியும்
    பண்ணினா னென்றல் பழுதலவோ – மண்ணதனைப்

    பல்பூண்டைச் செய்யப் பணித்தால் அஃதெல்லாப்
    புல்பூண்டுந் தேர்ந்து புரிந்திடுமோ- அல்லும் 280

    பகலுமிது வென்னப் பகலவன் இல்லாமற்
    புகல வகையுண்டோ புகலாய் – பகலவனாம்

    செஞ்சுட ரில்லாமற் றினமூன்று சென்றதாய்
    அஞ்சாது உரைப்பதுமோ ராச்சரியம் – தஞ்சாமி

    மானிடரின் சாயலது வாய்த்துளனேற் சாயலுக்குத்
    தானிடமாம் ரூபம்வந்து சாராதோ – வேனவனைத்

    தோற்ற வரூபியெனச் சொல்லுவத்தித் தோற்றமெலாந்
    தோற்றா விடத்துத் தொழிலென்னோ – ஆற்றலுடன்

    தன்சாயல்போல் நரனைத்தந்து நரன்கண்ணிலனேற்
    கொன்சாருந் தேவன் குருடனோ – முன்சேர்ந்து 285

    தன்னை வணங்கச் சமைத்தானேன் மாக்கள்பலர்
    என்னைவணங் காதிகழ்ந் துரைத்தல் – முன்னை

    வினையின்றிச் சீவர்களை மேல்கீழாய்ச் செய்த
    தெனையோ விருப்பு வெறுப்பென்னோ – மனையாளை

    நல்லதுசெய் தோம்ப நரனெலும்பி லேபடைத்தால்
    அல்லதுவுஞ் செய்தல் அழகேயோ – நல்லதென

    ஒன்றை நினைக்க அதுவொழிந்திட் டொன்றாயிற்
    றென்றல் கடவுட் கியல்பாமோ – அன்றவனோர்

    தோட்டமன்று செய்தததிற் தோற்றும் பலன்பெறவோ
    வாட்டமிலாச் சீவ மரம்வைத்த – நாட்டந்தான் 290

    என்னோ மனிதனைமுன் னேமாற்றிக் கொல்வதற்கோ
    பின்னோக்க மென்னோநீ பேசிடாய் – அந்நாளின்

    மாறாகத் தேவனையும் வஞ்சிக்கப் பாம்புளதேல்
    வேறாயோர் தேவால் விதித்துளதோ – கூறுமந்தப்

    பாம்பு நரனுக்கரிய பார்வைதந்தத் அந்தத்தேவன்
    சாம்பரிசு தந்தான் சதுரரெவர் – நாம்புசிக்கப்

    பக்கிமிருகத் தையுண்டு பண்ணினால் யாமவற்றின்
    குக்கிற் கிரையாதல் கூடுமோ - மிக்கிளைத்து

    வேலைசெய்வோ ரோர்நாள் விடாயாற்ற நின்றிடுதல்
    போலிருப்போன் தேவனெனப் போகுமோ –ஞாலத்து 295

    வானமழை பெய்யாமுன் வந்துபனி பெய்ததென்றால்
    ஏனதனைக் கேட்போ ரிகழார்கள் – தானியா

    மோர்விளக்கில் வந்தே உதிக்கும் விளக்கென்னச்
    சார்வதற்குச் சீவன் சடப்பொருளோ –நேரொவ்வாத்

    தீவினையி லற்பத்தைச் செய்தோர் பலசெய்தோர்
    தீவினையே முற்றாகச் செய்திடுவோர் –தீவினைக்கண்

    எத்தனையோ பேதமிருக்க அவையா வினுக்கும்
    நித்ய நரகத்தழுத்தல் நீதியோ – நித்திரைதீர்

    ஞாயத்தீர்ப்புக் கொடுக்கும் நாளின்றே வந்துறினும்
    மாயும் மனிதரெல்லாம் வந்தெழுந்தாற் – சாயாது 300

    நிற்குமோ பூமி நெருங்க நெருங்க மென்மேல்
    ஒக்கவடைத் தாலும் உலகங்கொள் –கிற்குமோ

    ஆற்று மணலெலாம் அளவிட்டாலும் உலகில்
    தோற்றியிறந் தோரெண் தொலையாதே – ஆற்றவே

    தாகித்தோர்நீர் தேடுந் தன்மையெனச் சற்குருவை
    மோகித்தோர் தேடன் முறையன்றி - ஊகித்துச்

    சீடர்களைத் தாம்வலுவிற் சேர்க்கத் தெருத்தெருவாய்த்
    தேடிக் குருமார் திரிவாறோ – கூடியுள

    சீவன் சரமடையச் செய்யவிலையே லவைகள்
    யாவுநமைப் போல்வாழ் வமைவானேன் – சீவன் 305

    அறிவினுயர் வென்னில் அவையைந்தா றாய்மாறப்
    பிறிதுபிறி தாதிலனே பேதாய்- அறிவன்

    விதியா யென்றென்றும்விதித்தவிதி தப்பிப்
    புதிதாய்ப் பழதாய்ப் போமோ – இதுபோற்

    பலசரக்கு குப்பையெலாம் பார்த்தால் அவற்றுள்
    சிலசரக்குங் கிட்டாது சேர்த்தே – அலகிலந்தச்

    சொற்பதரெல்லாம் புடைத்துத் தூற்றினால் ஆங்கவற்றுள்
    அற்பமணியேனும் அகப்படா – விற்பனர்கள்

    தர்க்க நிறைகோலாற் சரிதூக்கி உத்தியெனும்
    கற்கிடையே மாற்றுரைத்துக் காட்டினால் - பற்கெஞ்சிப் 310

    பையவிழித்துப் பதைப்புற்று நாக்குளறிக்
    கைவிரித்துத் தேவசித்தங் காணென்பார் – மெய்யுணர்ந்தோர்

    தட்டிப்பேசாது விட்டாற் சண்டப்ரசண்டமதா
    யெட்டிப்பார்ப் பார்கள் இவர்கள்வயப் – பட்டுநீ

    பாம்பின்வாய்த் தேரை பருந்தின்கா லாகுவெனத்
    தேம்பி மடியாமல் திரும்பென்றான் – வீம்புரைத்து

    நின்றமனம் சோர்ந்து நெடுமூச்செறிந் துதிகைத்
    தொன்றுந் தெரியா தொருமுகூர்த்தஞ்- சென்றதற்பின்

    அந்தக் கிறிஸ்தேசு அவதரிக்கப் பல்கால
    முந்தவதைக் கண்டு மொழிந்ததனால் -அந்தவுரை 315

    வேதமென்று சொல்லி வெகுபே ரனுசரிக்க
    ஏதிப்ப டிக்குரைத்தீர் என்றேன்யான் – ஓதக்கேள்

    பின்னர்நி கழ்வதனைப் பேசுவது தான்வேதம்
    என்னப் படுமோ இனிவருதல் – முன்னுணர்ந்து

    சோதிடங் கற்றோர்கள் சுலபமா யாவருக்கும்
    ஓதிடநாங் காணாத துண்டோதான் – வாதிடுமப்

    பித்துரை யிலேசு பிறப்பதுவுஞ் சாவதுவும்
    ஒத்தே யெடுத்துரைத்த துண்டுகொலோ – சத்தியமாய்

    அன்னோன் சரிதங்கள் ஆதியந்தமாய் அதனுட்
    சொன்னால் ஓர்கால்நாம் துணியலாம் – பின்னவர்கள் 320

    வேலிதனக்குக் கரட்டோணான் சாட்சியெனல்
    போலப் பலவும் பொருத்துவர்காண் –மேலதுவென்

    றன்னதொரு நூலை அனுசரிக்கும் யூதரெலாம்
    இன்னமதைப் பொய்யென்ப தென்னையோ – அன்னவருள்

    சுன்னத்தைத் தள்ளாத் துருக்கரதைப் பொய்யாமென்
    றென்னத் தினாலின் கியம்புகின்றார்- அன்னதைத்தான்

    அந்நாட்டி லுள்ளோர் அனேகர் அருவருத்தால்
    எந்நாட்டில் உள்ளோருக் கேற்குமது – முன்னோர்

    பெரிதும் வருந்திப் பிழைத்திறந்த முன்னைச்
    சரிதமெலாம் வேதமோ சாற்றாய் - சரிதங்கேள் 325

    பெட்டியொன் றினோவாதன் பெண்டுபிள்ளை யாதியுடன்
    சிட்டியொவ் வொன்றா யொருங்கே சேர்ந்தேறிப் – பெட்டியோடு

    அந்தரத்திலே மிதந்து அரராத் மலைமேலே
    வந்தடைந்தா ரென்ற மசக்கதையும் – வந்திடுங்காற்

    சாமி யெதிர்வந்து சலத்திரளி னாலினிமேற்
    பூமியழி யாதென்று போதிக்க – நேமியொன்றை

    வானத்தில் வைத்ததுவும் வன்மதுவாற் றைந்தையினைக்
    கானான் சிரித்த களிக்கதையும் – மானவர்

    பாபேலின் கோபுரத்தைப் பார்த்துப் பலபிரிவாய்
    மாபேதஞ் செய்து வகுத்ததுவும் –ஆபிரகாம் 330

    சந்ததியைப் பெற்றதுவுஞ் சக்களத்தியாற் சாராள்
    சந்ததியைப் பெற்ற தனிக்கதையும் – அந்தநாள்

    ஆண்குறியின் தோலை அறுத்தலுந் தேவார்ப்பணமாய்
    நாண்குலையுஞ் செய்கை நடத்தியதும் – வீண்குறித்துச்

    சோதேம்கொமோறா வாய்ச் சொல்லுந் தேயங்களின் மேல்
    தீதோர்ந்து தேவன் சினந்ததுவும் – தூதோர்கள்

    புக்கதுவும் அந்நாட்டோர் பும்மைதுனம்விரும்பித்
    தொக்கதுவும்தேடித் தொடர்ந்ததுவும் – மிக்கவவர்

    லோத்தின் மனையில் நுழைந்து விருந்துண் டிருந்தத்
    தேத்தவரைக் கண்கெடவே செய்ததுவும் – லோத்தை 335

    மலையேற்றி ஊரழித்த அந்நிலைமை நோக்கித்
    தலைவியப்புத் தூணாய்ச் சமைய – மலைமுழையிற்

    கண்ணுறங் கும்போது களிமதுவை யூட்டியவன்
    பெண்கள் புணர்ந்த பெருங்கதையும் – மண்மிசையே

    ஈசாக்குக் கண்கெட்டிருக்கு நாள் யாகொபு
    ஏசாபோல் வஞ்சித்தே ஏத்தியதும் – ஏசா

    கொலைசெய்யத் தீர்மானங் கொண்டதற்குத் தப்பி
    அலைவான் யாகோபும் அகன்றே – விலையாகி

    ஆடுகளின் மேய்ப்பால் அனேகமணஞ் செய்ததுவும்
    ஆடுகளை மோசத்தால் ஆர்ச்சித்து – வீடடங்க 340

    ஓட்ட மெடுத்ததுவும் ஓர்சாதி மாக்கள்வந்து
    காட்டிலவன் மகளைக் கற்பழிக்கக் – கேட்டஞ்சி

    வஞ்சித்துக் கொன்ற மதிக்கதையும் மூத்தமகன்
    மிஞ்சியவன் பெண்டுடனே மேவியதுஞ் – சஞ்சரித்தே

    யூதா மருமகளை யோரிரவி லேபுணர்ந்து
    தீதார் கருப்பமுறச் செய்ததுவும் – சூதாக

    யோசேப் மறுதேய முற்றதுவௌம் ஆங்கொருத்தி
    ஆசையாய்ச் சேரற் கழைத்ததுவும் – யோசனையாற்

    சொற்பனத்தி னுட்பொருளைச் சொல்லியபின் வாழ்வுபெற்றுப்
    பற்பலவாய் வாழ்ந்த பழங்கதையும் – அற்பவிலைக் 345

    காலத்திற் சுற்றத்தார் கண்டெடுத்து வாழ்கதையும்
    ஞாலத்தவன் என்பு நாட்படவே – கோலத்தில்

    வைத்தகதை யும்அவர்கள் வர்த்திக்க நாட்டரசன்
    கைத்தகதை யும்கொல் கடுங்கதையும் – அத்ததியின்

    மோசே பிறந்ததுவும் மூடியொரு பேழையிலே
    மாசேற்றிப் புற்புதரில்வைத்ததுவும் – நேசமுடன்

    அந்நாட்டரசன்மகள் அக்குழவியை வளர்த்த
    பின்னாளவன் பிழைத்த பெற்றிமையும் – அந்நாளில்

    தங்கள் குலப்பகைவன் தன்னைத் தனிமையிற்கண்
    டங்கவனைக் கொன்றுகர வாயொழுகித் – தயங்கியதும் 350

    சண்டைவினை யாலச் சதிக்கொலைமை தான்வெளிப்பட்
    டண்டை அயலார்க ளறிந்துகொண்டு – மிண்டதனை

    அரசற் கறிவிக்க ஆங்கவனுங் கோபம்
    விரவிக் கொலைபுரிய வேண்டித் – துருவிடுங்கால்

    ஆக்கினைக்குத் தப்பிப்போய் ஆசாரியன் ஆடு
    மேய்க்கி யெனவடைந்து விஞ்சைசெறி – மார்க்கமெலாம்

    கற்றுத்தன் துட்டதெய்வங் கைவந்திடச் சித்தி
    பெற்றுத்தன் சாதியரைப் பின்கூடி – எத்தி

    அடிமைத் தனம்நீக்கி ஆறாகப் பால்தேன்
    வடியும் நல்லதேயத்தே வைத்துக் – குடியேற்றும் 355

    ஆசைகொளுத்தி அழைத்துவந்து தந்தேவைப்
    பூசைபலி யாதிகளாற் போற்றுவித்து – மாசனங்கள்

    தப்பிவிட லாகாதுசண்டையிடற் குந்தனதெண்
    ணப்படியே கேட்டு நடத்தற்கும் – ஒப்பியதோர்

    மார்க்கமெனப் பற்பலவா மாயவித்தை செய்ததுவும்
    தீர்க்கவிதி விலக்குச்செப் பியவை – யார்க்குமினி

    யென்றுமிருக்க இயம்பியதை விட்டுப்பொன்
    கன்றுதொழத் தேவன் கனன்றதுவும் – அன்றொருவன்

    வேலைசெய்யா நாளில் விறகெடுக்கக் கொன்றதுவும்
    சீலமெல்லாம் ரத்தத்தாற் செய்ததுவும் –மேலடைய 360

    எண்ணிவந்த தேயம்போ யெய்தாமுன் மோசேயிம்
    மண்ணி லிறந்து மடிந்ததுவும் – அண்ணலா

    யோசுவா என்பான்பின் னுற்றதுவும் அன்னவனைத்
    தேசம்பெருகச் செயித்ததுவும் - ஆசையினால்

    ஈப்தா எனவொருவ னீன்றமகளைப் பலியிட்டு
    ஆப்தமுடன் ஊரையர சாண்டதுவும் – தீப்தியுடன்

    சிம்சோனொரு சிங்கத் தேன்கதைக்காய் முப்பதுபேர்
    தம்சோர்வு கண்ட தனிக்கதையும் - எம்சோர்வை

    மாற்றலரும் எய்தி மடிகவென வீடிடிக்கும்
    ஆற்றலுளோன் கண்ணறைய னாகியே - சீற்றமுடன் 365

    பட்டதுவும் லேவியன்வைப் பாட்டியைப் பல்லோர் புணர்ந்து
    விட்டதனாற் போர்புரிந்து வீந்ததுவும் – இட்டபந்துக்

    காகக் கொலைசெய்து கன்னியரைத் தேடியதும்
    ஏகும் வழியிற்பெண் ணெடுத்ததுவும் – சாகக்

    கணவன்ற னைக்கொடுத்த காரிகை ரூத்துக்கோர்
    கணவன் நிருமித்த கதையும் - மணமகனாய்ச்

    சாமுவேல் தோன்றியதுஞ் சாட்சியாம் பெட்டிகவர்
    காமுகரை நோயாற் கருக்கியதுஞ் – சாமுவேல்

    சவுலென் றொருவன் தனக்கரசு தந்து
    நவமாய் முடிசூட்டு நண்புஞ் – சவுலரசைத் 370

    தாவீதடையச் சபித்ததுவும் தாவீதை
    யோவாது கொல்ல உசாவியதும் – தாவீது

    நாபால் மதுவப்ப நல்கேனென நோக்கிக்
    கோபா வேசத்தால் கொலச்செல்லக் – கோபாலர்

    தம்மொழியால் நபாலின் தாரமெதிர் தோன்றியதும்
    இம்மெனவே நாபால் இறந்ததுவும் – செம்மி

    யவன்பெண்டைத் தாவீ தணைந்ததுவும் போரில்
    சவுலிறந்து நேர்ந்த சழக்கும் – தவமாகத்

    தாவீது பூசைசெய்து சாமிசெய்ய நோக்கியிகழ்ந்
    தாவீதென்னென்ற மனை யாட்டி பிள்ளை - மேவாது 375

    வன்மலடி யாகவருந் தியுழலும் படித்தே
    வன்மைசெய் ததுந்தா வீதரசன் – றன்மனையில்

    உப்பரிகை மேலே உலாவுகையில் மாதவிடாய்க்
    கப்பின்முழுகு பற்சோ பாளைக்கண் – டப்பொழுதே

    கொண்டுவரச் செய்தவளைக் கூயவள் கருப்பங்
    கொண்டுவிட் டாளென்ற குறிப்புணர்ந்து – தண்டுடன்போந்

    தன்சேவக னாமத் தையல்கண வற்கூவி
    உன்சேரி செல்லென் றுரைக்கஅவன் – மன்சேனை

    யுத்தமுடியா துடன்படேன் என்றிடவன்
    மத்தை மனத்தில் வைத்து மாற்றோரால் – தந்திரமாய்க் 380

    கொல்லும் படிக்குக் குறித்தெழுதிக் கொல்லுவித்துப்
    புல்லும் பற்சேபாளைப் புல்லியே – நல்லவன்போற்

    சாலோமோன் என்ற தனயனைப்பெற் றீந்ததுவும்
    நோலாவொருமகன் அம்நோனென்பான் –மாலேறித்

    தன்னோ டுடன்பிறந்த தாமாரை வஞ்சித்தம்
    மின்னோடு வன்மையாய் மேவியபின் –பென்னோ

    அவளை மிகவெறுக்க அப்சலோம் கோபித்
    தவனை வதைத்த அழகும் – புவனியது

    தன்குடையின் கீழடங்கச் சாலோமோன் ராசாங்கம்
    நன்குடைய தென்றுபுகழ் நாளையிலே – முன்குறித்த 385

    கோவிலொன்று கட்டியதும்கொண்டாட்டஞ் செய்ததுவும்
    தேவியர் பல்லோர் தோளைச் சேர்ந்ததுவும் – பாவியெனப்

    பட்டிறுதியின் மாறு பட்டிறந்தபின் கன்றுக்
    குட்டிக்குப் பூசைவந்து கூடியதும் – ஒட்டி

    மலிவா யரசர்முன் னைமார்க்கத் திற்சேர
    எலியா எலிசா இயற்றியதுஞ் – சலியாது

    நாடாண்டி றந்தொழிந்த ராசாக்கள் தங்கதையும் –
    மாடார் பிரசங்கி வன்கதையும் - பீடழியச்

    சாத்தான்செய் யோபு சரித்திரமும் சாலோமோன்
    தோத்திரமும் வேறுபலர் சொற்றிரளும் –சேர்த்தியே 390

    வேதமென்று சொன்னலிம் மேதினியில் எக்கதையை
    வேதமல வென்று விலக்குவது – வேதத்துள்

    வந்ததெல்லாங் கேட்க வழங்காக் கதியானால்
    அந்தக்கதை மறைதான் ஆகுமே – இந்தக்

    கதைபலவும் பற்பலவி கற்பமுள வேல்யாம்
    எதைமுதல்நூல் தேவன்நூல் என்பாம் – அதையன்றி

    யேசுகதை சீட ரெழுதுநிருபக் கதைவீண்
    வாசகங்களும் வேத மாயினவே – பூசைக்

    குருமார் சரிதமவர் கூட்டத்தின் கொள்கை
    ஒருசாரார் வேதத் துரைப்பார் – கருதுங்கால் 395

    ஆலையில்லா வூருக் கிலுப்பைப் பூச்சர்க்கரையைப்
    போலினிதா மென்றல் புதுமையோ – மூலையிலே

    தங்குங் கிணற்றுத் தவளையொப்பார் நாட்டுவளம்
    எங்கறிவாரையோ இதுபோல்மற் – றங்குள்ள

    கோட்டாலை சொல்லவொரு கோடிநாட் செல்லுமிதைக்
    கேட்டாரும் கொட்டுவார் கெக்கலிகாண் – நாட்டிலே

    நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
    நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத்

    தவத்தளவே யகுமாந் தான்பெற்ற செல்வங்
    குலத்தளவே யாகுங் குணங்காண் – கலப்பாய் 400

    நிலத்திற் பிறந்தவை கார்காட்டும் காட்டும்
    குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்லென் – றிலக்கியத்துட்

    சொன்னவிதிக் கேற்பவர் தொன்னூலி னாசாரஞ்
    சென்னீர் தெளித்தல் கொலைசெய்தலே- பின்னூலுள்

    ஏசுசதையும் இரத்தமும் உட்கொண்ட்டப்பங்
    கூசுமதுவுங் குடித்திடுதல் – பேசிடுங்கால்

    நல்லா றெனப்படுவ தியாதெனில் யாதொன்றுங்
    கொல்லாமை சூழு நெறியென்று – வல்லார்

    வகுத்தமைக்கு முற்றிலும்நேர் மாறாய்க் கொலையே
    மிகுத்தமையால் யாங்கூறன் மேலென் –றொகுத்தாற் 405

    பெருமைகும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்
    கருமமே கட்டளைக் கல்லாஞ் –சரிதமெலாம்

    வேதமாம் என்று வெகுபேர் மதிப்பதால்
    ஆதிமத மாமென் றறைந்தாய்நீ- பேதாய்

    உலகின் மலிந்தவெலாம் உத்தமமோ செம்பொன்
    நிலைகுறைந்துந் தாழ்வுபட்டோ நிற்கும் – அலைகடல்தான்

    பென்னம்பெரிதே யெனினுஞ் சிற்றூறலென
    நன்னீர் மனிதர்க்கு நல்குமோ – இன்னும்

    விரிவாய்ப் பலவுலகின் மேயவருள் ஞானி
    அரிய னொருவனென ஆன்றோர் – தெரிய 410

    உரைத்தா ரதனால் உயர்வு குறைந்து
    தரைப்பா லிழிவுமிகச் சாரும் – உரைப்பானேன்

    நன்றேல்லாந் தீதாயும் தீதெல்லாம் நன்றாயும்
    கன்றிவரத் தக்க கலிகாலம் – என்றென்றும்

    பொல்லாதார் நல்லாராய்ப் பொங்கி யருமறைநூல்
    கல்லாதார் வாழுங் கலிகாலம் – இல்லாளை

    அன்னியர் தோள்சேர்த்தி அரும்பொருளைத் தேடியிழி
    கன்னியர்தோள் சேருங் கலிகாலம் – மன்னரென்போர்

    பாதகங்கள் செய்து பணம்பறிக்கு மாந்தரொத்துக்
    காதகங்கள் செய்யுங் கலிகாலம் – தீததனால் 415

    எள்ளுண்போர் தள்ளுண்போ ரேசுண்போர் மாசுண்போர்
    கள்ளுண்போர்க் கான கலிகாலம் – முள்ளுள்ளே

    எக்குப்பெருத்து மதமேற் படுத்தித் தூஷணைத்தீ
    கக்குங் கொடிய கலிகாலம் –மிக்குலகில்

    ஈட்டுந் தவமாதி யின்மையாய்த் தெய்வநிலை
    காட்டா தொழிக்கும் கலிகாலம் – கூட்டுகலி

    காலமெலாம் வந்தோர் கனத்தவடி வெடுத்தாற்
    போலவந் திங்குப் புகுந்ததுகாண் – மேலும்

    அரசர்கள்தம் கோட்பாடும் ஆனமையால் ஓங்கி
    முரசமென நின்று முழங்கும் - பிரசைகள்தாம் 420

    மன்னவர்கள் செல்லும்வழியே வழிக்கொள்வார்
    என்னுமுரை யெம்மால் இயம்பியதோ – பின்னுமது

    சற்சமய நூலுணர்ச்சி சாராநாட்டுப் புறத்தி
    னிற்செறிந்த கீழ்மக்க ளென்றறையுங் –கற்செறீந்த

    புல்லறிவோ ராஞ்சிறிய புட்குலத்தை யுட்படுத்த
    மெல்லியராங் கண்ணிபல மேவுவித்தும் – வல்லகல்விச்

    சாலையென்று சொல்பஞ் சரமமைத்துங் கைக்கூலி
    வேலையென்று சொல்லும்வலை மேல்விரித்து –மூலைதொறும்

    பண்ணுமுப தேசப் பயில்குரலிற் கூவுவித்தும்
    உண்ணுபல பண்டமெனும் ஒட்டுவைத்தும் – மண்ணவரைச் 425

    சேர்த்துத் திரட்டவல்ல செய்கையெலாஞ்செய்தக்காற்
    பேர்த்தும்அந் தக்கூட்டம் பெருகாதோ – பார்த்துணரா

    தையோமதிமயங்கி அம்மதத்திற் சேர்ந்ததன்றி
    மெய்யோர்ந்து தேர்ந்ததன்கண் மேவினர் யார் –உய்யுநெறி

    காட்டுமென் றுள்ளாய்ந்து கலந்தவரார் தங்கள்பவம்
    ஓட்டுமென்று நாடி உணர்ந்தவர்யார் – மீட்டுமதில்

    வந்துபுகுந்த மனிதருள்ளும் வன்மையுடன்
    முந்தவதி லுள்ள மூப்பருள்ளுஞ் – சிந்தைப்

    புலையுங் கொலையுங் களவுந் தவிர்ந்த
    நிலையுணர்ந்து நீங்கியார் நின்றார் – தொலையா 430

    அபசார மெல்லாம் அகற்றா விடினும்
    விபசாரஞ் செய்யா தார்விட்டார் – சுபமாக

    மாதுசங்கஞ் சேர்ந்து மருவினரல்லா துயர்ந்த
    சாதுசங்கந்தேடிச் சார்ந்தார்யார் –வாதமிட்டுச்

    சந்தைக்கடைபோலச் சண்டைசெய்வா ரல்லாது
    சிந்தைமையல் சற்றேனுந் தீர்ந்தார்யார் – அந்திசந்தி

    மூக்கறையர் ஞானமென மூலைதொறும் பேசலன்றி
    யாக்கைநிலைசோதித் தறிந்தார்யார் – ஊக்கமுடன்

    செல்வத்தைத் தேடுதற்குச் சிந்தைவைத்தா ரல்லததை
    அல்லலென் றுகைவிட் டகற்றினர் யார் – புல்லும் 435

    இனக்கோட்ட மெம்முள் இலையென்ப தல்லால்
    மனக்கோட்டம் நீங்கினார் மற்றார் – கனக்கவேறு

    எந்தச் சமயத்தும் எய்தாச் சுகமதனை
    அந்தச் சமயத் தடைந்தார்யார் – அந்தச்

    சமயம் பெருகிடினும் தாழ்காலம்வந்தால்
    இமையி லழிவெய்தி இறுதல் – அமையுமந்தத்

    துப்பற்ற மார்க்கத்திற் றோயாதே
    கைப்புற்று நிஞ்சிற் கவலாதே – எய்ப்புற்றுப்

    பேய்த்தேரை நீரென்று பின்றொடர்ந்து நீர்நசையாற்
    போய்த்தே டல்போலப் புலம்பாதே – வாய்த்தவெளிப் 440

    பட்டப் பகலிற்கண் பார்வையிலாக் கூகையைப்போற்
    றட்டித் தடவித் தவியாதே – கிட்டி

    அவசமயத் துள்ளாழ்ந் தலையாதே யுன்றன்
    சுவசமயந் தேரென்று சொன்னான் – சிவசமயத்

    துண்மையெல்லாம் நெஞ்சத் துறுத்தினான் வேற்றுமதத்
    திண்மையெலாம் நில்லாமற் செய்திட்டான் – அண்மை

    பத்திநெறி யும்பழ வடியார் தாள்பணியும்
    புத்திநெறியும் எனக்குப் போதித்தான் –சித்திநெறி

    காட்டினா னென்கட் கலந்துநின்ற தீக்குழுவை
    ஓட்டினான் வேறோர் உருச்செய்தான் - வேட்டுவனோர் 445

    மென்புழுவைத் தன்படிவம் எய்துவித்த வண்ணமெனைத்
    தன்புதிய கோலஞ் சமைப்பித்தான் – முன்பு

    பதைப்பற் றிறுமாந்து பாறையொத்த நெஞ்சைப்
    பதைப்புற் றுருகப் பணித்தான் - புதைத்தவன்பால்

    எங்குமிருப்பான் இறையெனினும் மூர்த்தியிடைத்
    தங்கும் விசேடமெனச் சார்வித்தான் –அங்கெனக்குக்

    கண்ணிணைநீர் வார்க்கவுடல் கம்பிக்க மெய்புளகம்
    நண்ணவொருசாலம் நவிற்றினான் – மண்ணிலையன்

    தாள்துணையிலென் றலையைத் தாழ்த்திப் பணிந்தெழுந்து
    மீட்டும் மொழிந்தேனோர் விண்ணப்பம் – வாட்டும் 450

    மனவிருளை நில்லாமல் மாற்ற வுதயஞ்செய்
    தினகரனே ஆனந்தத் தேனே – இனிதான

    சொந்தச் சமயத்தைத் தூஷணித்துக் கைப்பான
    வந்தசமயத்தை ஆதரித்தே – எந்தை

    தனையும் அவனடியர் தங்களையும் வேடத்
    தினையும் பலஇகழ்ச்சி செய்த – எனையும்

    பொறுக்குமோ கோபித்துப் புன்னரகில் தள்ளி
    ஒறுக்குமோ வேண்டா தொதுக்கி – வெறுக்குமோ

    செய்நெறி வேறொன்றுந் தெளிகிலேன் தீவினையேற்
    குய்நெறிதா னுண்டோவென் றோதினேன் –பையவே 455

    என்முகத்தை நோக்கி இரங்கியருளி எங்கோன்
    புன்முறுவல் சற்றே புரிந்தருளி – முன்மதித்த

    ஏசு சமயத்து உணர்த்தும் எந்நாளும் மீளாத
    வாச நரகை மதித்தனையோ – ஈசன்

    நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
    சலமிலன்பேர் சங்கரன்காண் – மலையெடுத்த

    வல்லரக்க னுக்கும்மிக வன்மம்செய் தக்கனுக்கும்
    நல்ல வரம்பலவும் நல்கினான் – எல்லவரும்

    ஆரமிர்தம் உண்டிடுவான் ஆலாலம் உண்டமைந்த
    காரமரும் நீலமணிக் கந்தரத்தான் நீரகமாம் 460

    அன்பில்லார் மால்பிரம ரானாலுங் காண்பரியான்
    அன்புடையார் புன்புலைய ராயிடினும் தன்பெருமை

    எண்ணா தெழுந்தருள்வான் எவ்வுயிர்க்கும் எப்பொருட்கும்
    தண்ணா ரருளளிக்குந் தாயானான் – மண்ணகத்தே

    பெற்றெடுத்த தாயேதன் பிள்ளையைக் கைவிட்டக்கால்
    மற்றதனைக் காப்பாற்று வார்யாரே – குற்றமொன்றுங்

    கொள்ளான் குணமாகக் கொள்வான் தொழிலனைத்துந்
    தள்ளான்நின் அச்சந் தவிர்திகாண்- வள்ளல்தனைப்

    பற்றினா லுன்னையவன் பற்றுவா னெப்பற்றும்
    பற்றாமல் நின்ற பரமேட்டி – உற்று 465

    மருத்துவன்றான் மந்த்ர மணிமருந்தா னோயைத்
    திருத்துதல்போற் சற்குரவன் தேர்ந்தே – பெருத்தபவ

    மூர்த்திதலந் தீர்த்தமெனும் மூன்றா லறமாற்றித்
    தீர்த்திடுவ னென்றுமறை செப்புதலால் – ஆர்த்திகொடம்

    மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
    வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்குங்காண் – கூர்த்தறிவாற்

    றேராது முன்னிழைத்த தீவினைக்கா யச்சமுடன்
    ஆராமை நின்பா லடைந்தமையால் – சாராத

    வேற்றுச் சமயந் தனைமதித்த வெம்பாவம்
    மாற்றுங் கழுவாய் வகுக்கக்கேள் – தோற்றுகின்ற 470

    இந்தத்த லம்போல எல்லா விசிட்டமும்மற்
    றெந்தத் தலத்து மிலைகண்டாய் – முந்தையோர்

    போற்றுதலம் பாவங்கள் போக்குதலம் வேதத்திற்
    சாற்றுதலம் தானாய்ச் சமைந்ததலம் – ஏற்றற்

    குரியதல மிவ்வுலகத் துள்ள தலத்துள்ளே
    பெரியதலம் எம்மாலே பேசற் – கரியதலம்

    ஆனாலுஞ் சற்றே அறைவேன் அதன்பெருமை
    மானார் கரத்து மழுவலத்தெங் -கோனானோன்

    புற்றிற் சயம்பாகப் போந்தலந் தேவர்கடங்
    கற்றாத் தொழுது சிட்டி கற்றதலஞ் – சற்றேனும் 475

    மாலவனும் காணா மலர்த்தாள்கண் டர்ச்சித்துக்
    காலவனார் முத்தி கலந்ததலம் – மேலாந்

    தலத்தி லுயர்ந்த தலம்தேடி வானோர்
    நலத்ததெனக் கண்டடைந்து நண்ணுதலம் – வலத்தாலே

    கொம்பின் குளம்பின்வடுக் கொண்டருளி மெய்யடியார்
    தம்பிறவி மாசுவடுத் தள்ளுதலம் – அம்போரு

    கக்கண்ணான் கோமுனிவ னாகியடி யர்ச்சித்துத்
    தெக்கணகை லாயமொன்று செய்ததலம் – புக்கு

    நடையனத்தான் பட்டிமுனி நாமமொடு போந்து
    வடகைலை செய்து வசித்ததலம் – நடனமவர் 480

    பார்க்கும்படி ருத்ர பாதத்திற் றீவினைகள்
    தீர்க்கும் திருநடனம் செய்ததலம் – சேர்க்குமிகு
    சீரார் மருதமலைச் செவ்வேளால் அன்றமரர்
    சூராதி வாட்டித் துதித்ததலம் – நேராத

    பாவஞ்செயுஞ் சுமதிப் பார்ப்பான் இறந்தொழியத்
    தேவத்தலத் தவனைச் சேர்த்ததலம் – தேவர்

    சமுகத்தவ மானத் தான்முசுகுந்தன்றன்
    சுமுகம்பெற் றோங்கிச் சுகித்த தலம் – கமுகங்

    களத்தாள் பிருகுமகள் கைப்பற்று சாபம்
    உளத்தாம லிந்திரனா ருய்ந்ததலம் – பளத்தின்கண் 485

    வேதியனாம் ஏனத்தை வேந்தறியா தெய்தபழி
    காதியருள் நல்குங் கடவுள்தலம் – தூதிருளில்

    சென்றாண்ட தொண்டருக்குத் தேவியொடு நெல்வயற்கண்
    அன்றுபள்ள னாய்ப்போ யருளுதல் – நன்றுணர்ந்த

    தில்லைமுனி வோரழகு சிற்றம்பல செய்திங்
    கெல்லையறு பூசை யியற்றுதலஞ் – சொல்லைநம்பக்

    கைதூக்கிவ் யாசன்முனங் காசித்தலத் துரைத்த
    பொய்தூக்கு பாவத்தைப் போக்குதலம் – மெய்தூக்கிக்

    கோசிகனார் போற்றியருள் கொண்டுதிரி சங்கினுக்குக்
    காசினிவே றேயமைக்கக் கற்றதலம் - பேசிடுவோர் 490

    எல்லாங்கதி செலல்பார்த் தேமனிந்த நற்றலத்தில்
    நல்லார்க்கே பத்திவர நாட்டுதலம் – பொல்லாக்

    கிராதனாய் வாழங்கிர னிறந்துங் கீழாய்
    வராதுகதி மேலேற வைத்ததலம் – பராபரையாள்

    நற்றவத்தைச் செய்துபட்டி நாதரிடப் பாலமரப்
    பெற்றுமகிழ் அந்தரங்கம் பெற்றதலம் – கற்றவர்கள்

    தாங்குசிவ சின்னந் தவத்தோர் சரிதமெலாந்
    தீங்ககல எங்கோன் தெருட்டுதலம் – ஆங்குவிளை

    நீற்றா லொருத்தியின்பேய் நீக்கி யந்தப்பேயினுக்கு
    மாற்றாலே முத்தி யளித்ததலம் – சாற்றுமதன் 495

    பேர்பலவாம் பேரூர் பிறவாநெறி வளருஞ்
    சீர்பலசேர் மேலைச் சிதம்பரமிப் –பார்பரவும்

    ஆதிபுரம் தென்கயிலை யாவினுயர் தேனுபுரம்
    போதிவனம் ஞானபுரம் போகபுரம் – ஆதியவாம்

    தோய்ந்தோர்கள் பாவஞ் சுடர்முன் இருளென்னத்
    தேய்ந்தோடத் தீர்த்தளிக்கும் தீர்த்தங்கள் – ஆய்ந்தக்கால்

    காஞ்சிநதி யாதி கணிப்பிலவாம் ஒவ்வொன்றும்
    வாஞ்சை யறிந்தே யுதவ வல்லனவாம் – பூஞ்சினைசேர்

    திந்திருணி யும்பனையுஞ் சென்மமிலை யிங்கடைந்தோர்க்
    கந்தமிலை யென்பதனுக் கத்தாக்ஷி – இந்தநகர் 500

    ஆவின்மயம் கிருமியாதி யடையா தென்னிற்
    பாவ நிரயத்தின் பயமுண்டோ – பாவமெலாஞ்

    சேர்த்திவி ழுங்கவொரு தீபகம்போல் வந்தபட்டி
    மூர்த்தி விசேட மொழிவானேன் – மூர்த்திதனை

    வந்தித்தோர் வேண்டும் வரம்பெறுவர் சிந்தையுள்ளே
    சிந்தித்தோர் பாவமெல்லாந் தீய்த்திடுவர் - - சந்தித்தே

    தோத்திரித்தோர் எய்தாச் சுகமுண்டோ பாவங்கள்
    மாத்திரமோ சன்மவிடாய் மாறுமே – கோத்திரத்தில்

    எள்ளால் தருப்பணஞ்செய் திட்டோர்பெறும் பேற்றை
    வெள்ளெலும் புங்கல்லாய் விளம்புங்காண் – உள்ளவெலாம் 505

    என்னாற் சொலமுடியாது எண்ணிறந்த நாவுள்ளோன்
    சொன்னாலும் பன்னாட் தொலையுமால் – உன்னிடத்து

    நற்காலம் வந்த நலத்தா லிஃதுணர்ந்தாய்
    துற்கால மெல்லாந் தொலைந்ததுகாண் – முற்காணும்

    பட்டிப் பெருமானைப் பச்சைவல்லித் தாயுடன்கண்டு
    இட்டசித்தி யெல்லாம்நீ எய்துவாய் – துட்டசங்கஞ்

    சேர்ந்தொழுகு பாவமுன் சென்மாந்தி ரப்பவமுந்
    தீர்ந்தகல நெஞ்சந் தெளிந்துகளி – கூர்ந்தே

    அருமையாய் யாரும் அடைதற்கரிய
    பெருமையெலாம் நல்கப் பெறுவாய் – ஒருமையாய் 510

    இவ்வண்ணம் பன்னாள்நீ எம்மான்பணி புரிந்தால்
    அவ்வண்ணல் கண்ணுற்று அருளியே – செவ்வண்ணக்

    கோலமொளித்தோர் குருவடிவாய் வந்துதவ
    சீலமுடன் தீக்கையெலாஞ் செய்தருளி – மேலாகுந்

    தன்னிலையும் நின்னிலையும் சாரும் உயிரின் நிலையும்
    முன்னிலையாய்க் காட்டி முரணறுப்பான் - இந்நிலையில்

    ஐயமொன்று மில்லையென்று எனையனருள் செய்துதிருக்
    கையதனாலே நுதலிற் காப்பணிந்தான் – மெய்யை

    விரிந்த பொருளால் விளம்பிய என்னையன்
    பிரிந்தருளினான் என்னைப் பின்னர்த் – தெரிந்துணரா 515

    தங்கையுறும் பொன்னை அவமதித்து மண்ணினைத்தஞ்
    செங்கையுறக் கொள்ளும் சிறாரென்னத் – தங்கினேன்

    கல்லெறியப் பாசி கலைந்து நன்னீர்தானும் நல்லோர்
    சொல்லுணரில் ஞானம்வந்து தோன்றுமெனச் – சொல்லுகின்ற

    மூதுரையி னாலென்றன் மூடஞ் சிறிதகன்றப்
    போதுசிறு ஞானமென்றன் புந்திவர- ஓதும்

    புனிதமொழி யுரைத்த போதகனை யானோர்
    மனிதனென மதித்த மாண்பால் - இனிதாக

    மெஞ்ஞானம் முற்றும் விளங்கவிலை உள்ளத்தில்
    அஞ்ஞான முற்றும் அகலவிலை – அஞ்ஞான்று 520

    தேசிகன்தன் நோக்கஞ் சிறிதடைந்த வாற்றாலும்
    பேசியவனோடு உறைந்த பெற்றியினும் – நேசமது

    பேரூரிற் பற்றிப் பிடர்பிடித் துந்தி யென்னைத்
    தேரூர் தெருவிற் செலுத்தவே - நேரேபோய்க்

    கங்கா சலத்துயர்ந்த காஞ்சிப் புனலாடிப்
    பொங்குபல தீத்தம் புகுந்தாடித் – தங்குதிரு

    நீற்றுத் திடரில்விளை நீ றாடித் தேவர்குழாம்
    போற்று மருகிற் பொடியாடித் – தேற்றுபுகழ்

    கொண்டாடி மேருவன்ன கோபுரத்தைக் கண்ணாரக்
    கண்டாடி யுள்ளக் கசிவாடித் – தொண்டர்தொழும் 525

    பட்டிக் களிற்றின் பருத்தவிமானத் தடைந்து
    கிட்டிக்கன் மப்படலங் கீறவே – குட்டிக்கொண்

    டோரிரண்டு கையா லுபயசெவியும் பிடித்துப்
    பாரிற்படிதோப் பணம்போட்டு –நேராய்

    வலம்வந்து போற்றி வரமிரந்து நீங்கிப்
    புலம்வந்து கோவிலினுட் போகி – நலம்வந்த

    கோபுரத்தி லுட்புகுந்து கும்பிட்டுத் தெண்டெனவீழ்ந்
    தேபுரளு மங்கப்ப்ர தெக்கணமாய்த் – தீபுரத்தில்

    இட்டான்திருச்சந் நிதிகண்டு தாழ்ந்தெழுந் தங்
    கட்டாங்க பஞ்சாங்கத் தாற்பணிந்து – வெட்டுதுண்ட 530

    நந்திப்பெருமா னகைமணிப் பொற்றாள் வணங்கி
    வந்தித்துட் போக வரமேற்றுச் – சந்தித்

    திரண்டாம் பிரகாரத் தெய்திக் கல்லாற்கீழ்ச்
    சரண்தொழுவார் சன்மார்க்கஞ் சாரக் – கரங்காட்டி

    மோன வழிதேற்றுபு சின்முத்திரையோ டாங்கமர்ந்த
    ஞானகுரு தேசிகன்றாள் நான்பணிந்தேன் – வானங்

    குடியேற்றித் தேவர்கள்தங் கோமான்தலைக்கு
    முடியேற்றி மூவுலகுஞ் சேவற் –கொடியேற்றிப்

    பன்னிரண்டு கண்கள் படைத்தருளுஞ் செவ்வேளை
    என்னிரண்டு கண்களால் யான்கண்டேன் – முன்னர் 535

    வணங்கிப் புறத்தொட்டி வார்புனலை யள்ளி
    இணங்கிப் புரோகித்துள் ளேகி –மணங்கமழும்

    சிங்கதீர்த்தத்தைச் சிரத்தில் எடுத்துத் தெளித்துள்
    ளங்கையினாற் மூன்றுதர மாசமித்துப் -பொங்கிமேற்

    போந்திரண்டு துவாரம் புரப்போர் பதம்போற்றி
    ஏந்தல்திருச் சந்நிதிவந் தெய்தினேன் – தேய்ந்து

    வினையெனை விட்டேக விடைகேட் காநிற்ப
    நனையவிரு கண்ணீர் நனைப்பத் -தினையளவும்

    இல்லாத அன்பு பனையென்ன நனிபெருகச்
    சொல்லாத வானந்தந் தோன்றியெழப் – பொல்லாப் 540

    பொருட்செறிவு சேர்ந்தடர்ந்த புந்தியி லன்றேதோ
    தெருட்சி மருட்சி திகழ – அருட்செறிவொன்

    றில்லையென்று சொல்லும் எனக்கும் அஃதுண்டென்ன
    வல்லையிலே பிரத்யட்ச மாய்விளங்க – நல்லவெலாம்

    பெற்றேன்போற் பட்டிப் பெருமானையான் காணப்
    பெற்றேன்என் கண்படைத்த பேறுற்றேன் – சற்றேனுங்

    கூசாதுனை யிகழ்ந்த குற்றம் பொறுத்தியென்று
    வாசா கயிங்கரியம் ஆற்றினேன் – பூசாரி

    சாற்றுதிரு வெண்ணீறு தந்தாரிதுபோல
    வேற்று நிமித்த மிலையெனவே – யேற்றுடலில் 545

    அங்கந் திமிர்ந்தேன் அகங்கொண்டேன் உள்மாசுந்
    தங்கு புறமாசுந் தள்ளினேன் – அங்கப்

    பெருமான் றனக்கெனது பின்காட்டா தேகி
    ஒருமா நடனசபை யுற்றேன் – திருமான்

    அழகாத்திரிநா யகன்பொன்னாற் செய்தங்
    கழகார் திருக்கயிலை யாக – அழகுசெய்து

    கண்கொண்டு பார்த்தற் கடங்காத ஓவியமா
    எண்கொண்ட தேவர்க் கிருப்பிடமாய் – விண்கொண்டு

    நின்றுநிலாவு நிலைபார்த்துத் தாயினைப்போய்க்
    கன்றுதொடர்ந்த கணக்கேபோற் – சென்றழலிற் 550

    பட்ட மெழுகென்னப் பதைத்துருகிக் கோமுனிவர்
    பட்டிமுனிவர் பதம்போற்றி – நெட்டிலைவேற்

    கண்ணுடைய வெங்கள்சிவ காமியுமை கண்களிப்ப
    விண்ணுடையோர் கண்கள் விருந்தயர – எண்ணுடைய

    தோற்றம் துடியதனில் தோன்றுந் திதியமைப்பிற்
    சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமாம்

    ஊன்றுமலர்ப் பதத்தே உற்ற திரோதமுத்தி
    நான்ற மலர்ப்பதத்தே நாடுகவென் –றான்றோர் சொல்

    ஐந்தொழிற்குந் தானே அதிபனெனக் காட்டுதற்கஞ்
    சுந்தரமார் திவ்ய சொரூபமுடன் – வந்தனையோ 555

    இன்றென்ற னைப்பார்த் திளமுறுவல் காட்டியைந்தும்
    வென்றுளோர் சிந்தை விமலமென – நின்றிலகும்

    அம்பலத்தே யாடுகின்ற ஆனந்தச் செந்தேனைச்
    செம்பதும பாதங்கள் சேவித்தேன் – கம்பிதங்கொண்

    டச்சந்நிதியை அகலா தகன்று சென்று
    பச்சைக் கொடிபாற் படர்ந்துற்றேன் – நச்சியே.

    துற்கை யொருபாலும் துளவோ னொருபாலும்
    நிற்கும் நிலைகண்டு நேசித்தேன் – சொற்கத்

    திருப்போர் மனித ரெனவடைந்து போற்றி
    விருப்போடு கூட்டமாய் மேவும் – நெருக்கத்துட் 560

    புக்கேன் விரைந்துகரும் பொன்காந்தஞ் சேருதல்போல்
    மிக்கேன் நனிவிரைந்துள் மேவினேன் – அக்காலத்

    தெண்ணில் புவனங்கள் எல்லாங் கடைத்தேறக்
    கண்ணிற் பொழியருணோக் கத்தழகும் – எண்ணில்

    வளமை திகழும் வதனத் தழகும்
    களமாரும் மங்கலநாண் காப்புந் – தளதளவென்

    றெங்கும் ப்ரகாசித் திருளகற்றி மேனியெலாந்
    தங்கியொளி வீசுபணிச் சார்பழகும் – செங்கைச்சுட்டிச் 565

    சம்பந்தப் பிள்ளை தமிழ்பாடப் பால்சுரந்த
    கும்பத் துணைநேர் குயத்தழகும் – நம்பினருக்

    கொல்லைப் புறச்சமயத் துள்ளுதிக்கு மொஇன்பமென
    வில்லையுண்டென்னும் இடையழகும் – மெல்லப்

    புலம்பலம்பல் போலப் புரிநூ புரத்தின்
    சிலபலம்பு சேவடியின் சீரழகும் – நலம்பலவும்

    கண்ணாரக் கண்டு களிகூர் மரகதமாம்
    பெண்ணா ரமுதப் பெரும்பிழம்பை – அண்ணா

    அயர்ந்தே ஒருசற்ற வசமுற்று மீட்டுப்
    பெயர்ந்தே மதிகூடப் பெற்றேன் – வயந்தவறி

    நாக்குளிரப் போற்றி நவின்றதுதி செப்பியங்கு
    நீக்கமுற வொண்ணாமல் நின்றிடுங்கால் – பாக்கியத்தால் 570

    கைத்தலத்தில் உன்னிருக்கை கண்டேன் களிகூர்ந்து
    சித்தத்தை நின்பாற் செலுத்தினேன் – தத்தையே

    நேராயெனை நோக்கி நீயாரென்றாற் போலோர்
    சீரான வாக்குச் செவிபுகலும் – ஆராயாது

    என்னையோ தோற்றம்அஃ தென்றெண்ணி யாய்ந்தபசும்
    பொன்னை யொக்கும் வாக்கைப் புறக்கணித்தேன் – பின்னரிவ்வூர்

    நேயத்தால் நீங்காமல் நீங்கிக் குணதிசைக்கட்
    கோயம்பதியில்குடிபுகுந்தேன் – ஓயாமே

    அன்றுதொட்டு மார்கழியில் ஆதிரையும் மீனமதி
    யொன்றும் திருநாளாம் உத்திரத்தும் – நன்றுசெறி 575

    நாட்களிலுஞ் சென்றுசென்று நாயகனார் நாயகியார்
    தாட்களிலே நாயேன் சரண்புகுந்தேன் – வேட்கையினால்

    சின்னாளில் நாயைச் சிவிகைமிசை யேற்றலென
    என்னால் அறியா இயல்பளித்தான் – ஒன்னார்போல்

    மாறா யெதிர்த்தபல மாற்றலரை மாற்றிமகப்
    பேறாதி பேறும் பெறுவித்தான் – வீறாக

    எண்ணிய எண்ணங்கள் எல்லாம் எனக்களித்தான்
    மண்ணிலுள்ளோர் என்னை மதிக்கவே – பண்ணுந்

    திருப்பணியும் கொண்டருளிச் செந்தமிழ்ப்பாப் பாடும்
    விருப்பருளி யாண்டுகொண்டான் மேனாள் – திருக்கனைத்தும் 580

    நீக்கி வலியவந்து நேர்நின் றொருமனிதன்
    ஆக்கி அருளும்பழய ஆசிரியன் – வாக்கியத்துள்

    அண்ணல் குருவாய்த்தம் அருமைத் திருவுருவங்
    கண்ணெதிரே காட்டிக் கருணையொடு – நண்ணுமெனும்

    ஒன்றொழிய எல்லாம் உறப்பெற்றேன் அவ்வொன்றும்
    என்றெய்துங் கொல்லோவென் றெண்ணினேன் – அன்றொருநாள்

    என்கனவினூடே எழுந்தருளித் தன்கோலம்
    முன்கோலமாய் வந்து முன்னின்று – நின்சரிதம்

    எல்லாம் அமைய இயற்றமிழால் தூதொன்று
    சொல்லாய்நீ சொல்லுமந்தத் தூதேசென் – றெல்லாந் 585

    தருமென்றான் எம்பெருமான் சற்குருவாய் உன்முன்
    வருமென்றான் சொல்லி மறைந்தான் – குருவாய்

    நனவகத்து வந்தஅந்த நாளினைஇப் போலவேயென்
    கனவகத்துங் காட்டிக் கரந்தான் – நினைவெய்தி

    ஏதொன்றுங் கல்லா எனைப்பார்த்துக் கற்றவர்சொல்
    தூதொன்று சொல்லென்று சொல்லியதால் – தீதொன்று

    தன்மையேன் சொல்லத் தரமில்லே னாயினுமென்
    மென்மையே நோக்கி மெலியாமல் – வன்மையுள்ள

    போதகன் சொல்லாகும் புணைதுணையாக் கொண்டுதுணிந்
    தோத ஒருவாறு ஒருப்பட்டேன் – யாதினையாந் 590

    தூதுசெல முன்னிலையாய்ச் சொல்லுவதென் றெண்ணிமனம்
    வாதுசெய வுள்ளே மதித்துணரும் – போதுதனில்

    தாயார் கரத்திடைநீ தங்கியெனைப் பார்த்தொருநாள்
    நீயாரென் றோதல் நினைவுவர – வாயார

    என்சரிதம் நின்பால் எடுத்துரைத்தல் தக்கதென்று
    முன்சரித மெல்லாம்மொ ழிந்தனன்காண் -வன்சரிதம்

    உள்ளே னானாலும் உற்றதுரைத் தேன்அதனால்
    எள்ளேல் என்மீதில் இரங்குவாய் – தள்ளுகிலா

    அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கென்று – முன்புகன்ற 595

    பொய்யா மொழியுணர்ந்த புந்தியெற் குதவி
    செய்யா தொழிதல் திறமன்றே – மெய்யாயென்

    அம்மையுடன் அப்பன் அருளுஞ் சமயங்கள்
    தம்மை உணர்வாய்நீதான் அன்றோ – அம்மையப்பர்

    மேவுமிடஞ் சேறல் விண்ணோரின் மண்ணோரில்
    யாவருக்கும் ஒண்ணாதே ஆயிடினும் – தேவியார்

    கையூ டிருத்தலினால் காதூடு தூதோதற்
    கையமிலை நிற்கெளிதே யாகுங்காண் – பையவே

    எவ்வாறென் செய்தி இயம்பினால் ஏற்றிடுமோ
    அவ்வா றெல்லாம்நீ அறிந்தோதி- எவ்வமுறும் 600

    மாலவற்கும் இந்திரற்கும் வானவர்க்கும் தானவர்க்கும்
    மேலவர்க்கும்நீ அருளா விட்டாலும் – சால

    வெளியா ரெங்குள்ளா ரெனத்தேடியாள்தல்
    அளியாரும் நிற்கே அணியாய் – மொழிதலால்

    அன்னவனை யாள்த லழகா மஃதன்றி
    இன்னமொரு வாற்றால் இசைவாகும் – அன்னவன்றான்

    புன்மதத்தி லாழ்ந்தலைந்து புந்திவரப் பெற்றுப்பின்
    நின்மதத்தை ஆதரித்து நின்றமையால்- தொன்மை

    முருகாரும் நின்சமயம் முற்றத் துறந்து
    திருகார் சமணமதஞ் சேர்ந்தங் –கருகான 605

    சொற்கோவை யாண்ட தொடர்பானுங் காத்தாளல்
    நிற்கே கடனென்று நேர்ந்துணர்த்திச் – சற்குருவாய்

    இன்னமொருகால் எழுந்தருளி என்முன்வரச்
    சொல்நீ பசுங்கிள்ளாய் தூது. 607

    திருச்சிற்றம்பலம்
    திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது முற்றுப்பெற்றது.
    ----------------------

திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது பொழிப்புரை

காப்பு
பிள்ளை மதி- பிறைச்சந்திரன். ஒள்ளிய- பிரகாசமான . கும்பமுனி – அகத்தியன். கரகம் –குண்டிகை. கிளக்க – சொல்ல. கா விரிய – சோலகள் விரியும்பொருட்டு
- இளம்பிறையை முடிமேற் தரித்துள்ள பேரூர்ப் பெருமான்மீது கிள்ளையைத் தூது சொல்லி விடும் இந்த நூல் இனிது நிறைவேற ஒளிமிக்க பூஞ்சோலைகளை விரிக்குமாறு அகத்திய முனி கயிலையிலிருந்து கொண்டுவந்த கரக நீரைக் கவிழ்த்து காவிரியாற்றைத் தந்தவனாகிய மூதத பிள்ளையாரின் திருவடிகள் காப்பதாகுக.

இப்பாடலின்கண் உள்ள வரலாறு:
அகத்திய முனிவர் இறைவனின் ஆணையின்படிதென்னாடு நோக்கி வரும்பொழுது ஆங்கு, முனிவர்களுக்குத் துன்பம் விளைவித்து வந்த வில்வலன் வாதாபி எனும் அசுர உடன்பிறந்தார்கள்த் தம் தவவலிமையாற் கொன்றார். அவர்கள் இருவரும் துருவாச முனிவர்களின் புத்திரர்கள் ஆதலின், அவர்களைக் கொன்ற பிரம்கத்தி தோஷம் அகத்திய முனியைத் தொடர்ந்து மருட்டியது .
கொங்கு தேசத்தினை அடைந்த அகத்தியர், சிவபெருமானை அருச்சித்துப் பிர்மகத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இதுவே உகந்த இடம் என்ற உறுதியுடன் சிவலிங்கம் தாபித்து வழிபட்டு வந்தார். அதனால் அவரைப் பற்றியிருந்த பிரமகத்தி நீங்கியது. அகத்தியமுனிவரின் செயல் முழுவதையும் கண்டு வந்தார்.

அப்பொழுது சூரபன்மனுக்கு அஞ்சிய இந்திரன் சீகாழியிலே ஒரு மூங்கில் வடிவாகச் சிவபிரானை நோக்கித் தவஞ் செய்துகொண்டிருந்தான். அவனைக் கண்டு நாரதர் நலம் விசாரிக்க அவன் வறட்சியினால் பூஞ்சோலை வாடுகின்றது. சிவார்ச்சனைக்குப் பூவில்லை; இதுவே என் குறை என்றான். அதற்கு நாரதமுனிவர், அகத்தியர் கொங்கு நாட்டில் சிவபிரானைப் பூசித்துக் கொண்டுள்ளார். அவருடைய கமண்டலத்தில் இருக்கும் காவிரியாற்றை இங்குக் கொண்டுவந்தால் உன்குறை தீரும் என்றார்.
அகத்தியமுனிவரின் கமண்டலத்திலிருக்கும் காவிரியாற்றைச் சீகாழிக்குக் கொண்டுவருவதெப்படி என இந்திரன் வினவ, விநாயகக் கடவுளை மெய்யன்போடு பூசித்துவந்தால் அவன் குறை நீங்கும் என்று உபாயம் உரைத்தார்.
இந்திரன் அவ்வாறே விநாயகக் கடவுளை வழிபட்டு வந்தான். விநாயகக் கடவுள் வெளிப்படவே, அவரிடம் அகத்திய முனிவரின் கமண்டலத்தி லிருக்கும் காவேரி நீரைக் கவிழ்த்துவிட வேண்டினான். விநாயகக் கடவுள் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார்.
விநாயகப் பெருமான் கொங்கு தேசத்திற்குச் சென்று, அகத்திய முனிவ்ரின் கமண்டலத்தின் மீது ஒரு காக்கை வடிவத்தில் அமர்ந்திருந்தார். முனிவர் காகம் எனக் கருதிக் கையோச்சி விரட்டினார். காகவடிவில் இருந்த விநாகக் கடவுள் கரகத்திக் கவிழ்த்துத் தரையில் நீரோடும்படிச் செய்தார். அதுவே காவிரியாறாகப் பெருக்கெடுத்து ஓடிச் சோழ நாட்டை நீர் நாடாக ஆக்கியது. (கந்தபுராணம் காவேரி நீங்கு படலம் காண்க. மணிமெகலை எனும் பவுத்தக் காப்பியத்திலும் இச்செய்தி உள்ளது.)
-----------
நூல்

கண்ணிகள் 1 முதல் 39 முடிய கிள்ளையின் சிறப்புக்கூறுகின்றது.

    1-2 மாமேவு செங்கமல மாதரசும் வெண்கமலப்
    பூமேவு பாமகளாம் பூவையரும் – மாமதுர 1
    வாக்கியத் தாற்போற்றி மலர்க்கரங்கள் தாஞ்செய்த
    பாக்கியத் தானாய பயனெய்தப் –பூக்கொய்துதூவ"
- தேன் வண்டுகள்மொய்க்கும் செந்தாமரை மலர் மீது வீற்றிருக்கும் பெண்ணரசாம் திருமகளும்,வெண்தாமரைப்பூவின்மீது இருக்கும் வக்குத் தேவியாகிய கலைமகளாம் பூவையும், தேன் போலும்மிக இனிய வாக்குகளால் துதித்து, தாமரைமலர்கள் போன்ற தம்கரங்கள் முன் செய்த தவத்தின் பயனைஅடையுமாறு பூக்களைக் கொய்து தூவ,

    3-சிவந்துபரஞ் சோதிதிரு மேனியொடு
    மேவச் சிவந்தசத்தி மெய்யொளிபோற் –
- அம்மலர்கள் பட்டு (அனிச்ச மலரினும் மெல்லிதாகிய) திருவடிகள் சிவந்து, பரஞ்சோதியாகிய சிவபெருமானின் திருமேனியோடு பொருந்திய சிவசத்தியின் திருமேனி வண்ணம் போல;
அம்மையின் திருவடிகள் அனிச்சமலரினும் மெல்லிய தானமையினால் தேவர்கள் இட்ட மலர்களினால் சிவந்தது. இறைவன் செம்மேனி எம்மான். அவனுடைய திருமேனியில் பொருந்திய அம்மையின் மேனியும் சிவப்பாயிற்று. ஆனால் அவளுடைய திருமேனியின் உண்மை வண்ணம் மரகதப்பச்சை. மெய் ஒளி – உண்மையான நிறம். மெய்- உடம்பும் ஆம்.

    3-4 -"பாவலர்கள்
    மெச்சி உவமைபகர் மேனியெல்லாம் அழகாய்ப்
    பச்சைப் பசுத்தசெழும் பைங்கிளியே"
- கவிஞர்கள் அம்மையினுடைய வண்ணத்திற்கு உவமையாகப் பாராட்டிக் கூறுமாறு உடல் முழுதும் அழகாகப் பழுத்த பச்சை நிறமான கிளியே.
அம்மையின் நிறமும் பச்சை;கிளியின் நிறமும் பச்சை. அதனால் அம்மையின் நிறத்துக்குக் கிளியின் நிறம் உவமையாகும் சிறப்புப் பெற்றது.
பச்சைப் பசுத்த செழும்- பசிய நிறத்தின் மிகுதியைக் குறித்தது. கன்னங்கரேல், செக்கச் சிவந்த என்பன போல மிகுதியைக்குறிக்கும் குறிப்புச் சொல்.

    4-5 "இச்சையால்
    சத்திகொடு சமைத்த தம்பிரான் மேனிநிறம்
    ஒத்திலகுஞ் செவ்வாய் ஒளிர்குருகே"
- விரும்பி, தன் சத்தியைக் கொண்டு படைத்துக் கொண்ட தனக்குத் தானே பிரானாகிய சிவபெருமானின் திருமேனி நிறத்தை ஒத்து விளங்குகின்ற சிவந்த அலகு ஒளிவிடும் பறவையே.

கிளியின் நிறம், அம்மையின் நிறம் அம்மையின் நிறம்போலப் பச்சை. அதன் அலகின் நிறம் சிவனின் நிறமாகிய சிவப்பு. கிளியினிடத்து இருவர் வண்ணமும் காணப்படுவதைச் சுட்டிக் கிளியைப் புகழ்ந்தது.
இறைவனின் திருமேனி அவன் தானாக விரும்பிக் கொள்வது. எனவே,’இச்சையால்’ என்றார். கொண்டு என்றது செய்யுள் நோக்கி, இடை குறைந்து ‘கொடு’ என ஆயிற்று. சிவசத்தியாகிய அருளே அவனுடைய உருவுக்குக் காரணம். "எல்லா ஞானத் தொழில்முதல் நண்ண லாலே, காயமோ மாயையன்று;காண்பது சத்தி தன்னால்" சி.சி 61) " நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளினாலே" (சிசி.65)

    5-6. " – நித்தம் நித்தம்
    அத்தன் அவன் எவ்வுயிரும் ஆட்டுவான் அம்பலத்தில்
    தத்தே என ஆடும் தத்தையே"
- நாளும் நாளும் தந்தையாகிய அவன் அம்பலத்திலிருந்து கொண்டு எவ்வுயிரினையும் ஆட்டுவான். நீயும் த,தை என ஆடுவாய், தத்தையே.
தத்தை-கிளிக்கு மற்றொரு பெயர். தத்தையென் ஆடுவதால் ‘தத்தை’ யெனப் பெயருக்குக் காரணம் கூறிற்று. தத்தே என ஆடுதல் இறைவனுக்கும் கிளிக்கும் ஒப்புமை. அம்பலம் – ஆகாயம் இது ஆன்மாக்களின் இதயத்திலிருக்கும் தகராகாசத்தை உணர்த்திற்று. அத்தன் – கடவுள், குரு, சிவன், தகப்பன்,முத்தோன் எனப் பலபொருள்படுமொரு சொல். " ஆட்டுவித்தால் ஆறொருவர் ஆடாதாரே" என்னும் அப்பர் திருத்தாண்டகம் காண்க.அத்தன் ஆட்டுவித்தல், உயிர்களிடத்து நிகழும் அவனது கைம்மாறற்ற உதவியைச் சுட்டியது. ஆட்டுவித்தலாவது, உயிர்களை அவற்றது ,’யான் எனது’ என்னும்செருக்குக் காரணமாகப் பல்வேறு உடம்புகளாகிய பாவைகளுட் படுத்து, வினையாகிய கயிற்றினால் கீழ் மேல் நடு என்னும் உலகமாகிய அரங்கினிடத்து , வினையை ஈட்டியும், நுகர்ந்தும் சுழலச் செய்தலாகிய கூத்தினை இயற்றுவித்தல். "கோனாகி யானெது என்றவரவைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே" [திருவாசகம், திருச்சதகம் 15]

    6 -7 " மித்தைப்ர
    பஞ்சமென்று முக்கட் பசுபதியின் பாதமொன்றே
    அஞ்சுகமென் றேமொழியும் அஞ்சுகமே"
- காணும் உலகமும் உலகபோகங்களும் நிலையற்றவை, மூன்று கண்களையுடைய உயிர்த் தலைவனாகிய சிவனின் திருவடிகள் ஒன்றே இனிய சுகம் என்று மொழியும் அஞ்சுகமே.
அஞ்சுகம் – கிளிக்கு மற்றொரு பெயர். அம்+ சுகம். அம்- அழகு. சுகம்- கிளி,இன்பம். மித்தை- மித்யா எனும் வடசொல்லின் திரிபு. மித்தை என்பதற்குக் கானல் நீர் போல உள்பொருள் போன்ற இல்பொருள் என்றும் பொய்ப்பொருள் என்றும் நிலையிலாப் பொருள் என்றும் பலவாறாகப் பொருள்கூறுவர். உலக இன்பங்கள் காலம் எல்லை முதலிய வரையறைக்குட்பட்டன; நிலையானவை யல்ல; இன்பமெனப்படும் அவை பின்பு துன்பமே அளிப்பன். திருவடி இன்பமே அந்தமிலா ஆனந்தம்; நீடும் இன்பம். பசு பதி- பசுக்களின் தலைவன். பசு –ஆன்மாக்கள். "புல்லைப் புசிப்பனவும் விவேக ஈன முடையனவும் , பிறனால் கிருஷ்யாதி (உழவு) முதலிய கருமங்களில் ஏவப்படுவன்வும்,துக்கமுடையனவும் இயமானனால் கட்டப்படுவனவு மாயுள்ள பசுக்கள். அன்னணமே பாசபந்த சீவனகிய பசுக்களும் முற்றுணர்விற்கும் ஈச சத்தத்திற்கும் உரிய பசுபதியும்" (பரிபூரணானந்தபோதம், பக் 20)
திருவடியே அம் சுகம் என்பது,
"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே"
எனும் அப்பர் வாக்கானும் அறிக.

    மிஞ்சுசுரர் 7
    "கண்ணைப் பிசைந்து கலங்காமல் முன்னமிந்த
    மண்ணையுண்டோன் மேனி வருந்தாமல்"
- பாலமிர்தம் வேண்டும் என்று கண்ணைப் பிசைந்து அழுதவன் உபமன்யு முனிவன். முன்னம் இந்த மண்ணை உண்டோன் கண்ணனாகிய திருமால். இவன் தன் மேனி வருந்தாமலும்;

    "– விண்ணவர்கள் 8
    வாடி மயங்காமல் மங்கலியப்பிச்சையென்று
    தேடிமலர்மாதர் தியங்காமல் –"
- பாற்கடலைக் கடைந்தபோது எடுந்த கொடிய நஞ்சின் வெப்பத்தினால் தேவர்கள் வாடி மயக்கமுறாமல். செந்தாமரை மலரில் இருக்கும் இலக்குமியும் வெண்டாமரை மலரிலிருக்கும் கலைமகளும் நஞ்சினால் தங்கள் கணவன்மார் இறந்துபடாமல் மாங்கலியப் பிச்சை இரந்து துயருறாமல்;

    "-நீடுருவ .9
    வாசுகியும் பாற்கடலும் மந்தரமும் தங்களுக்கு
    நாசமுற்ற தென்று நடுங்காமல்"
- அமுதெடுக்கக் கடையப் பெற்ற பாற்கடலும் கடைய மத்தாக நாட்டப் பெற்ற மந்தரமலையும் கடைவதற்குக் கயிறாகப் பூட்டப் பெற்ற வாசுகிப் பாம்பும் தங்களுக்கு முடிவு காலம்வந்துவிட்ட தென்று அஞ்சி நடுக்கமுறாமல்;
    10 -12 "–பேசரிய 10
    ஆற்றல் படைத்த அரக்கரையும் அங்கவர்பால்
    சீற்றம் மிகவுடைய தேவரையும் –வேற்றறவே 11
    சேர்த்தியிட வந்துதித்த தேவாமிர்தம்போல
    வார்த்தை சொலவல்ல மரகதமே" – 12
- சொல்ல முடியாத ஆற்றல் படத்த அரக்கர்களையும் அவர்கள் மீது மிக்க கோபங் கொண்டு பகைத்தவர்க ளாகிய தேவர்களையும் ஒன்று கூட்ட வந்து பிறந்தது, பாற்கடலில் தோன்றிய தேவாமிர்தம். அத்தகைய தேவாமிர்தம் போல இனிய மொழிகளைப் பேச வல்ல மரகதமே!
மரகத வண்ணமுடைய கிளியை மரகதமே என்றழைத்தார். பண்புப் பெயர் பண்பிக்கு ஆகிவந்தது. தம்முள் கடும் பகை கொண்ட சுரர்களையும் அசுரர்களையும் வேற்றுமையை மறந்து கூட்டணி அமைக்கச் செய்தது, தேவாமிர்தம். அத்தேவாமிர்தம் போல இனிமையாகப் பேசும் திறம் வாய்க்கப் பெற்ற கிளியே! என் தலைவனிடம் என் காதலைக் கூறி என்னை அவனொடு சேர்ப்பித்தல் உனக்கு எளிய செயலே எனக் குறிப்பால் உணர்த்தியது.

    12 – 15 "கூர்த்தவிழித்
    தோழியரை நோக்கியென்றுந் தோற்றமொடுக்கமிலா
    வூழி முதல்வனாம் ஒருத்தன்முன் – கீழாகச் 13
    செத்துப் பிறந்துழலும் தேவரையும் மூலமென்று
    சித்திரமே பேசுதலைச் சீர்தூக்கி – உய்த்துணர்ந்து 14
    தக்கதனைத் தேராது தர்க்கமிடுவோர் மதிபார்
    அக்கக்கா வென்னு மவந்திகையே " 15

- அவந்திகை- கிளிக்கு மற்றுமொரு பெயர். (திவாகர நிகண்டு). ‘அக்கக்கா’ என்பதி கிளியைப் பயிற்றுவிக்கும் மொழி. இங்கு,’இந்த அதிசயத்தை பார்’ என்று உரைக்கும் குறிப்புமொழி. ‘அப்பப்பா’, ‘அம்மம்மா’ என்பனபோல்’அக்கக்கா என்பது ஒரு வியப்பிடைச்சொல். கூர்த்த விழித் தோழியர்- கிளியை வளர்த்து மொழி பயிற்றும் மகளிர். தோற்றம் ஒடுக்கம் – பிறப்பிறப்பு. சித்திரமே பேசுதல் – அலங்காரமாகப் பேசுதல். உய்த்துணர்ந்து – பகுத்துணர்ந்து. தக்கது – தகுதி உடையது; மெய்யானது. உண்மைக்குப் பொருத்தமானது. "முடித்த வாறும் என்றனக்கே, தக்கதே" (திருவாசகம். 61). தேராது – தெளியாது.

பிறப்பிறப்புச் சூழலில் படாது, ஊழி இறுதியிலும் தான் ஒருவனேஇருந்து பின் ஐந்தொழில் நடாத்தும் ஒப்பற்ற ஒருவனோடு, அவனுக்குக் கீழாகச் செத்துப் பிறந்துழலும் ஆன்மாக்களாகிய பிரமன் திருமால் ஆகிய தேவர்களையும் கருத்தாக்கள் என்று விசித்திரமாகச் சிலர் அறியாமையில் பேசுதலைச் சீர்தூக்கிப் பார்த்து, பகுத்துணர்வின்றி உண்மையைத் தெளியாது தர்க்கமிடும் அவ்வறிவிலிகளின் ‘அறியாமையைப் பார்’ என்னும் குறிப்பாக ‘அக்கக்கா’ ஏன்னும் அவந்திகையே.

    15-16 "- பொற்கனகப்
    பஞ்சரத்தில் வாழும் பசுங்குதலாய்"
- தங்கத்தால் செய்யப் பெற்ற அழகிய கூண்டிலே வாழும் குதலை மொழி பேசும் கிள்ளையே.
பொன்னென்றாலும்கனகம் என்றாலும் தங்கமே. இங்கு பொன் என்றதற்கு அழகு எனப் பொருள் கொள்க. பஞ்சரம் – கூண்டு. குதலை – எழுத்து வடிவம் பெறாத சொல்.

    16. "நின்றனக்குக்
    கிஞ்சுகமென்னும் பெயருங் கேட்டிலார்"
- கிஞ்சுகம்- கிளிக்கு மற்றுமொரு பெயர். ‘கிஞ்சுகம்’ – முள் முருங்கை மரம். அந்த மரத்தின் மலர் செந்நிறமுள்ளது. இங்கு, கிளியின் சிவந்த வாய்க்கு உவம ஆகுபெயராய் நின்றது. ‘கிஞ்சித்’ என்றால் சிறிது, கொஞ்சம் என்று பொருள். கிளி ,அஞ்சுகம். (அம் +சுகம்= அழகிய கிளி என்று பொருள்) அழகிய உன்னைக் அழகில், இன்பத்தில் குறைந்தவள் எனும் பொருளில் பெயரளவிலும் யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். " கிஞ்சுகவாய் அஞ்சுகமே" (திருவாசகம் 360)

    16- 19 "-நெஞ்சின்
    மகிழ்ந்து மலைமாது மருங்கில் நினைவைத்துப்
    புகழ்ந்துமொழி கேட்கின்ற பொற்பு – நெகிழ்ந்தமலர் 17
    ஐங்கோலான் நின்னுடைய ஆதரவு வாய்த்தமையால்
    செங்கோல் நடாத்துந் திறமுமுனம் – எங்கோனை 18
    ஆதரவால் அர்ச்சித்து அதனால் சுகவனத்து
    நாதரெனப் பூதலஞ்சொல் நன்னலமே -
- உமையம்மை , கிளியே!, உன்னைத் தன் அருகில் வைத்து, உன்னைப் புகழ்ந்து, நீ பேசுகின்ற மொழியைக் கேட்கின்ற சிறப்பு, விரிந்த மலர்களாகிய ஐந்து பாணங்களை உடைய மன்மதன், உன்னுடைய ஆதரவு பெற்றமையால் அவன் ஆட்சி செய்கின்ற வல்லபமும், எங்கள் பிரானாகிய சிவனை நீ பத்தியோடு முன்னம் வழிபட்டு அருச்சித்து , அதனால் அவர் சுகவனநாதர் என்ற பெயர் நன்மையைப் பெற்றமையாலேயே ஆம்.
அம்மை கிளியை அருகிருத்தி அதன் பேச்சினைக் கேட்கும் சிறப்புக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன
. ஒன்று, மன்மதனது தென்றலாகிய தேருக்குக் குதிரை கிளி. கிளியாகிய குதிரை பூட்டிய தேரில் சென்றுதான் மன்மதன் இணைவிழைச்சு எனும் தன்னுடைய ஆளுகையைச் செலுத்துகின்றான்.
- மலைமாது – பார்வதி. மருங்கில் – அருகில். பொற்பு- பொலிவு , அழகு. ஐங்கோலான் –மன்மதன் கோல்- அம்பு, ஐந்து மலர்களாகிய அம்புகள். நெகிழ்ந்த – விரிந்த. திறம்- ஆற்றல், வலிமை. நன்னலம் – நன்மை.

    19 - 29 - ஆதியவாம்
    வல்லமையும் ஓரார்நின் வார்த்தையினால் யாவர்மனக்
    கல்லுங் கரையும் கருத்தறியார் வெல்லரிய 20
- முதலிய உன்னுடைய வல்லமைகளை நினையாதவர்கள்; உன்னுடைய சொற்களினால் கல்மனத்தையும் கசிவிக்கும் கருத்தினை அறியாதவர்கள்.

    21 விக்கிரமா தித்தனெனும் வேந்தனையோர் தட்டான்செய்
    அக்கிரமந் தீர்த்த தறிகிலார் 21
- வெல்லுதல் முடியாத விக்கிரமாதித்தன் என்னும் அரசனுக்கு ஒருதட்டான் செய்த அக்கிரமத்தை நீ தீர்த்ததை அவர்கள் அறியவில்லை.

    22 – துக்கந் தணவுதவ யோகியர்கள் தம்மைப் போல்நிற்கிங்
    குணவு கனிகாய்தளிரென் றுன்னார் – மணவணிகள் 22
- துக்கங்கொள்ளுதலை நீங்கிய தவயோகியர்களைப் போல உனக்கும் காய்கனி தளிர்களே உணவு என்பதை நினைத்துப் பாரார்.

    23 ஏயுமுனைப் பைங்கிளியே யென்றுபல கண்ணிசொன்ன
    தாயுமா னார்தந் தமிழுணரார் – நேயத் 23
- மங்கலமான பல அழகுகள் வாய்ந்துள்ள உன்னைப் ‘பைங்கிளியே’ எனப் பல கிளிக்கண்ணிகள் பாடிய தாயுமானவருடைய தமிழ்ப்பாடல்களையும் அறியாதவர்கள்.

    24- நேயத்
    திருப்புகழ்ப்பா வாணருன்போற் சென்றடைந்து சோணப்
    பொருப்புறு தல்கேட்டும் பொருந்தார் – 24
- பத்தியினால் திருப்புகழ் பாடிய பாவாணராகிய அருணகிரியார் , கிளியே!, உன்னைப் போலக் கிளியுருவில் சென்று திருவண்ணாமலையை அடைந்ததைக் கேட்டும் அதில் அவர்கள் கருத்துப் பொருந்தவில்லை

    25 -விருப்பில்
    சுகருந்தன் தொல்குலத்தில் தோன்றியதால்ஞானா
    திகரான வண்ணந் தெளியார் –25
- பற்றற்ற சுகமுனிவர் உன்னுடைய பழமையான குடியிலே பிறந்ததால் ஞானத் தலைவரான முறையையும் அவர்கள் தெளியவில்லை.

    26 – 27 பகருமறை
    வாதவூ ராளிதிரு வாசகத்தே பத்தங்கம்
    ஓதவுனைச் சொன்ன துணர்கிலார் –26
- தமிழ்மறையாகிய திருவாசகத்தை அருளிய திருவாதவூரர் இறைவனின் முன் அவனுடைய திருத்தசாங்கங்களை ஓத உன்னை விடுத்த பெருமையையும் அவர்கள் உணரார்.

    27- தூதுவிட்டோர்
    தங்காரிய மெல்லாந் தப்பாதுட்கொண் டதையுன்
    றன்காரியமாய்த் தலைக்கொண்டு – 27
- உன்னைத் தூதுவிட்டோரின் செய்திகளையெல்லாம் நீ உன் மனத்துட்கொண்டு அவற்றை உன் காரியமாகக் கவனத்தில் கொண்டு

    28- முன்குறிப்பிற்
    காலமிடமறிந்து காரியத்தை முற்றுவித்துக்
    கோலமுடன் எய்துங் குறிப்பறியார் – 28
- காலமறிந்து, இடமறிந்து அந்தக் காரியத்தினை வெற்றியாக நிறைவேற்றிச் ‘செய்வினை முடித்த செம்மல்’ என மீளும் குறிப்பினை அறியாதவர்கள்

    29- போலிகளாம்
    வெள்ளைமதி யோரறிவின் மிக்கவுனைத் தங்கள்சிறு
    பிள்ளைமதி கொண்டுகிளிப் பிள்ளையென்பர் –29
- அறிவுடையோர் போலத் தோற்றும் அறிவிலாத ‘வெள்ளறிவினர்’, அறிவு மிக்க உன்னைத் தங்கள் ‘பிள்ளைமதியினால்’ கிளிப்பிள்ளை என்பர்.

கிளியைச் செல்லமாக வளர்ப்பவர்கள் ‘கிளிப்பிள்ளை’ என்று கூறுவதுண்டு. முதிராத புத்தியைப் ‘பிள்ளை மதி’ (childishness) என்று கூறுவதும் உலக வழக்கு . கிளியைக் ‘கிளிப்பிள்ளை’ என்று கூறுவோர் அதன் பெருமையை அறியாது தங்கள் சிறுமதியால் ‘பிள்ளைப் புத்தியால்’ அவ்வாறு கூறுகின்றனர் என ஆசிரியர் சமத்காரமாக உரைக்கின்றார்.

    29- 32
    -கிள்ளையே
    வீரர்களின் மேலான வீரரெனத் தேவர்புகழ்
    சூரர்களை மாளத் தொலைத்தானைச் – சீரரவம் 30
    பூண்டானுக்குங் குருவைப் பொற்கொடியா ரோரிருவர்க்
    காண்டகையாய் மாலையிட்ட ஆண்பிளையை – வேண்டுகின்ற 31
    கோலமெலாங் கொள்ளுங் குறிஞ்சிக் கிழவனையோர்
    பாலனென ஓதுகின்ற பண்புகாண் – 32
- கிளியே! உன்னைப் ‘பிள்ளை’ என்று கூறுவது எது போல உள்ளதெனின்,
வீரர்களில் எல்லாருக்கும் மேலான வீரனென்று ‘ தேவசேனாபதியென்று தேவர்களால் கொண்டாடப்படுவானை, ஆற்றல் மிக்கசூரர்கள் மாள அழித்தொழித்தவனை , பாம்பலங்காரனான சிவனுக்குங் குருவை, பொற்கொடி போன்றவகளாகிய தெய்வயானை, வள்ளி ஆகிய இருவர்க்கும் மணமாலை சூட்டிய ஆண்தகையை, தான் வேண்டும்போது வேண்டுங் வடிவம் கொள்ளும் திறனுடைய குறிஞ்சிக் கிழவனை ஒரு பாலகன் என்று கூறுவது போலாம்.
முருகனைக் கிழவன் எனல்,
"திருந்தப் புவனங்க ளீன்றபொற் பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டிலேறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே."
கந்தரலங்காரம் 5
‘குருந்தை’ (குழந்தை)யைப் பெரியோர் குறிஞ்சிக்கிழவன்’ என்று கூறுவது ஆச்சரியம் என்றார் அருணகிரியார். ஆற்றல் மிக்க குமரனைப் பிள்ளை என்பது ஆச்சரியம் என்றார் இவ்வாசிரியர்.

    32-33 -பாலின்
    சுவையைப் பழித்துமொழி சொல்லுதலால் நின்னைச்
    சுவையுடைய கீரமெனச் சொல்வர்" –
- பாலின் சுவையைப் பழிக்கும் இனிய மொழியைப் பேசுவதால் உன்னைக் கீரம் என்று அழைப்பர்.
கிளிக்குக் கீரம் என்பதொரு பெயர். வடமொழியில் ‘க்ஷீரம்’ என்றால் பாலென்று பெயர். அச்சொல் தமிழில் ‘கீரம்’ என்று வழங்கப் பெறும் . ‡ ணம் – கணம் என்பது போல

    33-34- "அவையகத்துத்
    தூது சுகமாகச் சொல்லுதலினாற் சுகமென்
    றோது முலகம் உனைவியந்து"
- கிளிக்குச் ‘சுகம்’ என்றும் ஒரு பெயருண்டு. அதற்குக் காரணம்கற்பிக்கப்பட்டது. பெரியோர்கள் இருக்கும் சபையினில் அவர்கள் போற்றும் வண்ணம் தன் கருத்தினைச் ‘சுகமாக’ (இன்பளிக்கும்படியாக)ச் சொல்லுதலினால் சான்றோர் உனை வியந்து ‘சுகம்’ எனக் கூறுவர்.
உலகம்- உயர்ந்தோர். ‘உலகம் என்பதுயர்ந்தோர் மாட்டே’.

    34-35 "-தீதறியாப்
    பிள்ளை மழலையும் பெண்க ளின்மொழியுங்
    கிள்ளை மொழியாமென்று கேட்டிடுவர்"
- தீயது என்பதையே அறியாத மழலையரின் குதலை மொழியினையும் மங்கையரின் மொழியையும் கிளி பேசும் இன்பந்தரும் மொழியாகவே அன்புடையோர் கேட்டு மகிழ்ச்சி கொள்வர். (கிளியாகிய நீயே பேசில் என் தலைவர் எத்துணை மகிழ்ச்சி கொள்வார்!)

    35- 37"– வள்ளுவனார்
    குழலினிது யாழினி தென்பர்தம் மக்கள்
    மழலைச் சொற்கேளா தவரென் – றழகுபெறச்
    சொன்னதுவும் நின்சொற் சுவையறிந்தே யல்லவோ "
- தெய்வப் புலவர் திருவள்ளுவர், " குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச் சொல்கேளா தவர்" என்றார். அவர் அழகுபெற அவ்வாறு சொன்னதுவும் பிள்ளையாகிய உன் வாய்ச்சொல்லின் சுவையை அறிந்தே அல்லவா. மக்களைப் பிள்ளை எனல் உலக வழக்கு. ‘உங்களுக்கு எத்துணைப் பிள்ளைகள்’ எனக் கேட்பது காண்க.

    37" உன்னைவிடத் தூதுக் குரியார்யார்"
- ஆதலால், கேட்போர் மனம் மகிழும்படியாகப் பேசும் உன்னைத் தவிர தூதாகச் செல்லும் தகுதியுடையோர் யார் பிறர் உளர்?

    37-39 – தன்னேரில்
    அன்பை யுடையாய் அறிவுடையாய் ஆய்ந்திடுஞ்சொல்
    வன்மை உடையாய் மகிதலத்தில் – இன்னபுகழ் 38
    எய்தி உயர்வாம் இளங்கிளியே"
- நிகரிலாத அன்புடையை; நிகரிலா அறிவு உடையை; ஆராய்ந்த சொல்வன்மை உடையை இத்தகைய புகழ்களைப் பெற்று தூதுக்கு உயர்ந்த நிலையில் உள்ள இளங்கிளியே!
"அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று " (682) எனத் தெய்வப்புலவர் தூதுரைப் போருக்கு இருக்க வேண்டிய இன்றியமையாக் குணங்கள் மூன்றினைக் கூறினார். கிளியிடம் இம்மூன்றும் அமைந்துள்ளன . "ஆராய்ந்த சொல் வன்மை’ என்றது யாரிடம் தூது உரைக்கப்படுகின்றதோ அவரும் உடன்படத் தக்க சொற்களை ஆராய்ந்து பயன்படுத்தல்.

    39 " எந்தனது, செய்திசில எடுத்துச் செப்பக்கேள் "
- இளங்கிளியே! எனக்கு உன்னால் ஆகவேண்டிய சில காரியங்கள் உள. அவற்றை நான் உரைக்கக் கேள்.
செப்பு என்பது வினவிய பொருளை அறிவுறுத்துவது.வினாவின்றியும் சிலசமயங்களில் செப்பு நிகழும். ‘கங்கையாடிப் போந்தேன் சோறு தம்மின்’ என்பது போல. இங்கு, கிளி உன்செய்தி யாது எனக்கேளாமலேயே கூறுதலின் செப்பக் கேள் என்றார்.

    39-40 "– வையத்துள்
    வீசுபுகழ்சேர் வியன்பதியென் றிவ்வுலகம்
    பேசு கருவூரிற் பிறந்தேன்யான்"
- தமிழ் நாட்டில் எங்கும் தன் புகழ் பரவிய வியத்தற்குரிய நகரம் என்று பெரியோர்களால் கொண்டாடப் படுகின்ற கருவூரில் யான் பிறந்தேன். வியன் – வியப்பு, பரப்பு; கருவூர் சேரர்களுக்கும் சோழர் களுக்கும் தலைநகராகச் சங்க காலத்தில் இருந்தது. கருவூர்க் கதப்பிள்ளை, கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் முதலிய சங்கப் புலவர்க ளிவ்வூரினர். கருவூர்த் தேவர் எனும்சித்தரும் எறிபத்தர் எனும் நாயனாரும் வாழ்ந்த சிறப்பினையுடையது. சைவசமய ஆச்சாரியர்களால் பாடப் பெற்றது. இச்சிறப்புக்களால் பெரியோர்களால் வியந்து பாராட்டப் பெற்றது,இப்பதி.

    40-41 – "மூசுதிறை
    வெள்ளப் புனன்மே வியசீர்க் கங்காகுலத்தில்
    பிள்ளையென வந்துபிறந் தேன்யான்"
- அலைகள் பரவிய வெள்ளம் பொருந்திய கங்கையாற்றின் வழியால் வந்த கங்கா குலமாகிய வேளாள குடியில் பிள்ளையென நான் வந்து பிறந்தேன்.

    41- 42 ‘வள்ளல்பேர்
    பூணுலக நாதன் பொருந்தவரும் பார்ப்பதிபாற்
    பேணு மகவாகப் பிறந்தேன்யான்"
- உலகநாதன் என இறைவன் பெயர் பூண்ட தந்தைக்கும் அவருக்கு ஒப்பப் புகழ்கொண்ட பார்வதி அம்மையாருக்கும் அவர்கள்விரும்பும்மகவாகப் பிறந்தேன்.
இறைவன் கைம்மாறு கருதாமல் உயிர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தலால் வள்ளல் எனப்பட்டான். தந்தைக்கு எல்லாவகையிலும் தகுந்த கிழத்தியாக இருந்தமையினால் ‘ பொருந்தவரும்’ என்றார்.

    42-43 "-பூணற்
    கரிய புகழ்சேர் அரங்கசாமிக்குப்
    பிரிய மருகராய்ப் பிறந்தேன்யான்"
- பெறுதற்கரிய பெரும் புகழ் பெற்ற அரங்கசாமிக்குப் பிரியமான மருகனாகப் பிறந்தேன். இவருடைய தாய் மாமன் திரு. அரங்கசாமி முதலியார்

    43-44 "– உரியபல
    சீரிட்ட நாளினலஞ் சேர்கந்த சாமியென்று
    பேரிட் டழைக்கப் பிறந்தேன்யான்"
- பெருமையுடய நாளில் சிறப்புடைய பெயராகிய கந்தசாமி எனப் பேரிட்டு அழைக்கப் பெற்றேன்.

    44 -45 "- வாரிட்ட
    நற்றொட்டி லேற்றி நலம்பலபா ராட்டியெனைப்
    பெற்றவர்கள் போற்றப் பிறந்தேன்யான்"
- பெற்றவர்கள் என்னுடைய அழகினைப் பாராட்டித் தொட்டிலேற்றிக் கொண்டாடப் பிறந்தேன் யான். வார் – தொட்டில் தொங்கவிடப்பட்ட கயிறு அல்லது சங்கிலி. நலம் அழகு முதலிய நற்குணங்கள்.

    45-46 "-உற்ற
    களங்க முளவெல்லாங் காசினியிற் றோன்றி
    வளர்வதே போல வளர்ந்தேன்"–
- உலகத்தில் உள்ள குற்றங் குறைகளெல்லாம் பிறந்து வளர்வதுபோல் யானும்பிறந்து வளர்ந்தேன்.

    46-47 "இளமையிலே
    தந்தை யிறந்தொழியத் தாயர்பிறந் தகத்தில்
    வந்துவளர்க்க வளர்ந்தேன்யான்"
பொருள் வெளிப்படை.

    47-48 "-செந்தமிழும்
    அல்லாமல் இந்நாள் அரசுபுரி ஆங்கிலியர்
    சொல்லதுவுங் கற்கத் தொடங்கினேன்’
- செந்தமிழோடு இந்நாளில் அரசாட்சி செய்கின்ற ஆங்கிலேயரின் மொழியாகிய ஆங்கிலமும் கற்கத் தொடங்கினேன்.

    48- 50 கல்லூரிக்
    கோர்பெயராம் பள்ளிக் குயர்வில் சிறுசாதிப்
    பேர்கா ரணமாய்ப் பெறும்வண்ணம்- சேருமொரு 49
    பள்ளியிடைப் புக்கந்தப் பள்ளிச் சிறார்களுடன்
    உள்ளிருந்து பாடங்க ள்:ஓதினேன்"-
- (ஆசிரியர் தாம் பயின்ற பள்ளியைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். பொருள் விளங்கவில்லை. கிறித்துவப்பள்ளி என்று தெரிகின்றது)

    50-51 "-எள்ளுமந்த
    அன்னியபா டைக்கிணங்க அன்னியமார்க் கச்சிறப்பும்
    அன்னியர்பாற் கற்றே அமர்ந்தேன்யான்"
- தேவையற்ற அன்னிய மொழியான ஆங்கிலமொழியுடன் கூட அன்னிய மதமான கிறித்துவத்தின் சிறப்பும் அன்னியர்களான ஆங்கிலேயர்கள் ஆசிரியர்களாகக் கற்ப்பிக்க அவற்றைக் கற்று அவர்கள் கற்பித்தவற்றின் மேல் பெருவிருப்புடையவனாக இருந்தேன், நான்.
எள்ளல்- நிந்தித்தல். அன்னியர்கள் நம் மொழிமேலும் சமயத்தின்மேலும் காழ்ப்புடையவர்களாயிருந்தமையினால் வாய்ப்பு நேரும் போதெல்லாம் நம் மொழியினையும் சமயவொழுக்கங்களையும் இகழ்ந்து இழித்துரைப்பவர்களாயிருந்தனர். எனவே ‘எள்ளுமந்த அன்னியபாடைக்கிணங்க’ என்றார்.

    51-52 "-அன்னோர்
    மருட்டு வழியான் மதிமயங்கி அந்தக்
    குருட்டுவழி யென்னுளத்துட் கொண்டேன்"
- அன்னியர்களாகிய அவர்களின் மதிமயக்கும் மொழிகளில் அறிவுமயங்கி அவர்களுடைய ‘குருட்டு’ நெறியை நன்னெறியாக மனத்துட் கொண்டேன்.
குருட்டுவழி- ஆகாவழி, தவறானவழி, தீங்கு விளைக்கும் நெறி.

    52-54 "- இருட்டின்கண்
    கண்ட கயிறரவாய்க் காணுதல் போலாங் கவர்கள்
    விண்ட பொருள்யாவும் மெய்யாயுட்- கொண்டதனாற் 53
    றெய்வச் சிறப்புஞ் சிவனடியார்தஞ் சிறப்பும்
    சைவச் சிறப்புந் தரிக்கிலேன்"
- இருளில் கயிற்றினைக் கண்டு பாம்பு என அஞ்சுதலைப் போல அன்னியர்கள் போதித்த பொய்ப்பொருள்களையெல்லாம் மெய்யறிவாக உள்ளத்தில் கொண்டதனால், சிவமாம் தெய்வத்தின் சிறப்பும் சிவனுடைய அடியார்களின் மேன்மையையும் சைவ ஒழுக்கத்தின் சிறப்பையும் அறிந்து மேற்கொள்ளாதவனாயினேன்.
கயிறரவாய்க் காணுதல் – கயிறு உண்மை; அரவு –மயக்க உணர்வு. உண்மைப் பொருளை மயங்கி அறிதல் அறியாமையும் அறிவுமயக்கமு மேயாம். உண்மையை அறிய இயலாமையே இருள். அன்னிய மதத்தினர் இருளைப் பயன்படுத்திக்கொண்டு கயிறைப் பாம்பெனக் கண்டு அஞ்சுமாறு அறிவுமயக்கம் செய்தனர். அறிவின்மையும் அறிவு மயக்கமும் இரண்டும் இருளே.

    54-55 "பொய்யார்
    புலைத்திரளின் சேர்க்கையாற் புத்தி வரத்தக்க
    கலைத்திரளை யேதொன்றுங் கல்லேன்"
- பொய்யே நிறைந்த கீழ்மை கொண்டொழுகினமையால் நல்லறிவு கொடுக்கும் அறிவு நூல்களில் ஏதொன்றையும் கற்காதவனானேன்.
அன்னியர் கற்பித்த புலைநூலை அல்லாமல் மெய்யறிவு அளிக்கும் சைவநூல்களில் ஒன்றையும் கல்லாதவனாயினேன்.

    55-56 "-கொலைசேர்
    விவிலிய நூற்கொள்கை மிகுத்தலா லான்றோர்
    நவிலிய னூலொன்றும் நவிலேன்"
- கொலைத்தன்மை மலிந்த விவிலிய நூற் கருத்துக்கள் என்மத்துள் மிகுத்து இருக்கவே, நான் நம் பெரியோர்கள் நவின்ற நூற்களில் ஒன்றிலும் பயிற்சி யில்லாதவனாயினேன்.

    56-57 "-அவமாகக்
    காலங் கழித்தேன் கழித்தேன் குலவொழுக்கஞ்
    சீலங் கழித்தே திரிதந்தேன்"–
- வீணே காலத்தைப் போக்கினேன். சைவக் குலத்தில் பிறந்தும் சைவவொழுக்கம் , சைவ ஆச்சாரம் ஒன்றுமின்றி வாழ்க்கையை வறிதே போக்கினேன்.

    57-58 "– ஞாலமுடன்
    காசு பணத்திற்கும் கண்மயக்கும் வேசைகட்கும்
    ஏசுமதத்திற்கும் இச்சை வைத்தேன்"
- உலக இன்பங்கட்கும் செல்வம் சேர்ப்பதற்கும் கண்களால் மயக்கும் வேசையருக்கும் இவற்றைக் கண்டிக்காத ஏசு மதத்திற்கும் ஆசை வைத்தேன்.

    58- 59 "-சீசீயென
    நல்லாரைக் கண்டால் நடுங்குவேன் நல்லார்க
    ளல்லாரைக் கண்டால் அகங்களிப்பேன்"
- சிவனடியார்களைக் கண்டால் அருவருத்துச் சீச்சீ என அகல்வேன். சிவனடியார் அல்லாத கிறித்துவ மதத்தினரைக் கண்டால் மனமகிழ்வேன்.
நல்லான் – சிவன். நல்லார் – சிவனடியார். நடுக்கம் அச்சத்தாலன்றி அருவருப்பால் ஏற்படுவது.

    59-60 "-பொல்லாத
    துன்மார்க்க மென்றாற் சுகித்திடுவேன் சுத்தசைவ
    சன்மார்க்க மென்றாற் சலித்திடுவேன்"
- பொருள்வெளிப்படை. சன்மார்க்கம் – நன்னெறி,அருநெறி, திருநெறி.

    60-61 "- என்மார்க்கங்
    குற்ற முளதேனும் குலத்தில் அபிமானத்தான்
    முற்றத் துறந்து முடிந்ததிலை"
- நான் மேற்கொண்ட வாழ்க்கை யொழுக்க நெறி குற்றமுடையதாக இருந்தாலும் நான் பிறந்துள்ள குலத்தின் மேல் வைத்திருந்த அபிமானத்தால் குலவொழுக்கத்தை முழுதுமாகத் துறந்துவிடவில்லை.

    61-62 "-சிற்றறிவால்
    ஏசுமதம் பெரிதென் றிச்சைவைத்தேன் ஆனாலும்
    தேசுவிடுத்து அதிலே சேர்ந்ததிலை"
- குறைஅறிவினால் ஏசுமதமே பெரிது என்று நம்பி அதன்மேல் விருப்பங் கொண்டாலும் குலகவுரவத்தை விட்டு அதிலே சேர்ந்ததில்லை.
தேசு – தேஜஸ். ஒளி. குடும்பப் பெருமை. குடும்பப் பெருமை, குலப் பெருமையை அறிதல் வழிதவறாமல் காக்கும்.

    62-63 "-பேசிடுதல்
    எல்லாமதன் முடிவே என்றாலும் தீயேனப்
    பொல்லச் சமயம் புகுதவிலை"
- நான் ஏசுசமயத்தின் கொள்கைகளையே எப்பொழுதும் புகழ்ந்து பேசினாலும் அந்தப் பொல்லாச்சமயத்துக்கு மாறவில்லை.

    63-64 "– கொல்லும்
    புலியானது பசுத்தோல் போர்த்த விதமென்னப்
    பொலிவார் திருநீறும் பூண்பேன்"
- கொலைத் தொழிலையுடைய புலி பசுத்தோல் போர்த்து சாதுவான மிருகமாகக் காட்சியளிப்பது போல அகத்தே கிறித்துவனாக இருந்தபோதும் புறத்தே கவினைத்தரும் திருநீறு பூசிச் சைவனைப் போல இருப்பேன்.

    64-65 "_ குலவொழுக்கம்
    இல்லாத பெண்டிர் இருமனம்போல் என்னகமும்
    அல்லாப் புறமும் வேறா யிருந்தேன்"
- நற்குடிப் பண்பிலாத இருமனப் பெண்டிர் போல அகமும் புறமும் வேறாக இருந்தேன்.

    65-66 "-வல்லார்
    சிலையி லெழுத்தாய்ச் சிறுவயதிற் கல்வி
    நிலையுறுதல் பொய்யோ"
- கற்பித்தலில் வல்லவர்கள் சிறார்களின் சிறுவயதிற் கற்பித்த கல்வி அவர்கள் நெஞ்சில் கல்லில் எழுத்துப் போல நிலைத்து நிற்கும் என்னும் ஆன்றோர் மொழி பொய்யோ. ‘இளமையிற் கல்வி சிலையி லெழுத்து’ என்பது பழமொழி.

    66-67 "நிலத்தின் மலதேகப்
    பன்றி மலமருந்தப் பார்த்திருந்த நல்லாவின்
    கன்றும் மலமருந்தக் காணாமோ "
- நிலவுலகில், பன்றி மலம் உண்ணப் பார்த்திருந்த, அதனோடு பழகிய கன்றும் மலம் தின்றிடப் பார்த்துளோம் அல்லவா?(கிறித்துவர் கூட்டப் பழக்கத்தினாலெ நானும் மனத்தளவில் கிறித்துவனானேன்.)

    67-68 ‘- துன்றும்
    பழக்கத்தி னாலே பலிக்கும் உலக
    வழக்கத்தை யார் தடுக்க வல்லார்’
- நெருங்கிய பழக்கத்தினாலே விளையும் தோஷத்தை யாரால் தடுக்கவியலும்?
துன்றும் – நெருங்கிய. பழக்க தோஷம் என்பது உலக வழக்கு.

    68-69 "-சழக்கார்
    மனக்கிசைந்த வாறெல்லாம் செய்யென்னும் வார்த்தை
    எனக்கிசைந்த நூலா யிராதோ"
- மனம் போனபடி வாழலாம் என்ற சழக்கு மொழி எனக்கு உவப்பான சாதிரமாக இராதா? (இருக்கும்)
சழக்கு- வஞ்சனை, குற்றம், அறியாமை. நூல்- சாத்திரம்.

    69-70 "- இனக்கேடாய்ச்
    சின்னஞ் சிறுவயதிற் சிற்றினத்தைச் சேர்ந்ததனால்
    அன்னார் தமதுருவ மாயினேன்"
- சேர்க்கையினால் உண்டாகும் தீங்கால், சிறு வயதிலேயே கிறித்துவராகிய சிற்றினத்தோடு பழகியதால் அவர்களுடைய தோற்றத்தையே நானும் உடையவனானேன். ( நெற்றியில் நீறிடாமை முதலியன)

    70-71 "- முன்னாளில்
    என்னதவஞ்செய்தேனோ ஏதுநலனோ அறியேன்
    பின்னர்வரச் சென்றடுத்தேன் பேரூரைச்"
- முன்னாளில் என்ன தவம் செய்தேனோ? என்ன புண்ணியமோ? பின்னர் நன்மை விளையப் பேருரைச் சென்று சேர்ந்தேன்.

    71-72 "- என்னொடொரு
    மித்துவரும் வீணாதி வீணரொடும் பேய்மோகப்
    பித்தரொடும் சென்றடுத்தேன் பேரூரை"
- எனக்கு நட்பாக வாழ்நாளை வீணாகக் கழிக்கும் காம மயக்கங்கொண்ட பிஹ்தர்களுடன் பேரூரைச் சென்றடைந்தேன்.

    72-73 "- சித்தத்
    தரியபொருள் பேணாமே ஆயிழையார்ப் பேணும்
    பிரியமுடன் சென்றடுத்தேன் பேரூரை"
- அறிவுக்குஅரிய பொருளாகிய சிவத்தை அறிய விரும்பாமல் பெண்களைக் காணும் பிரியத்துடன் பேரூஉரைச் சென்றடைந்தேன்.

    73-74 "- வறியவனாய்
    ஆறறியா அந்தகனுக் அங்கையிடைப் பொக்கிஷஞ்சேர்
    பேறதென அடைந்தேன் பேரூரை"
- வறியவனாக வானும் வகையறியாத குருடனுக்கு முயற்சி இன்றி உள்ளங்கையில் பெரியசெல்வம் வந்து சேர்ந்த அதிர்ஷ்டத்தைப்போலப் பேரூரைச் சேர்ந்தேன்.

    74-75 "-கூறரிய
    பன்னாள் அவமாகப் பாழுக்கிறைத்தல்விட்டுப்
    பின்னாளிற் சேர்ந்தேன்யான் பேரூரை"
- சொல்லி மாளாத பலநாட்களை வீணே கழித்துவிட்டுப் பின்னர்ப் பேரூரைச் சேர்ந்தேன்.

    75-77 "-அந்நாள்
    திருநாளாய் எங்கோன் தெருவிற் பவனி
    வருநாளாய் நேர்ந்த வகையால் – அருவுருவச்
    சோதியான் தோன்றாச் சுயம்புவான் செஞ்சடையிற்
    பாதிமதி சூடும் பரமனவன்" –
- நான் பேரூரைச் சேர்ந்த அந்தநாள் திருக்கோவிலின் உற்சவத் திருநாள். பட்டிப்பெருமான் பவனி வரும் திருநாளாக அமைந்தது. தானே தோன்றிய அருவுருவச் சுடர்மேனியானவன் (சிவலிங்கத் திருமேனி) தடத்தவடிவில் செஞ்சடையில் பிறைசூடும் பெருமானானவன்

    77- 78 "-மாதினையோர்
    கூறுடையான் எட்டுக் குணமுடையான் பால்வெள்ளை
    நீறுடையான் கையில் நெருப்புடையான்"
- பெண்பாகமானவன், எண்குணத்தான், பால்போன்ற வெண்ணீறணிந்தான், திருக்கையில் நெருப்பேந்தியவன்.

    78-79 "-ஆறுடைய
    சென்னியான் ஆறுடைய சென்னியான் றன்னை
    முன்ன மளித்த முதல்வன்"
- கங்கையாற்றினைச் சிரசில் தரித்தவன்; ஆறுமுகமுடையானை அளித்தவன்; ஆறு- மடக்கு.

    79 -80 "பன்னகத்தின்
    பூணுடையா னோரிந்தப் பூமிமுழுதுஞ் சுமந்த
    நாணுடையான் முப்புரிசேர் நாணுடையான்"
- பூணாகப் பாம்பினை உடையவன்; இப்பெரும் பூமியைச் சுமந்த வாசுகியாகிய பாம்பினைத் தன் மேருவாகிய வில்லுக்கு நாணாக உடையவன்.முப்புரியாகிய நூலினை உடையவன். நாண் – மடக்கு

    80- 81 "-காணுமவர்க்
    கஞ்சக் கரத்தான் அருள்பெறுவோர் உச்சரிக்கும்
    அஞ்சக் கரத்தான் ஆதியான்"
- தன்னைத் தரிசிப்பவர்க்கு ‘அஞ்சேல்’ என்று அபயம் அளிக்கும் கரத்தவன்; அவன் அருள் பெற்ற அடியவர்கள் உச்சரிக்கும் திருவைந்தெழுத்தாக உள்ளவன். அஞ்சக்கரத்தான் – மடக்கு.

    81 – 82 அரியகருப் – பஞ்சிலையால்
    ஐயம்பெய்யுங் கரத்தான் அங்கமழ லூட்டினான்
    ஐயம் பெய்யுங் கரத்தன் ஆதியான்"
- உயிர்களால் வெல்லுவதற்கு முடியாத இணைவிழைச்சை விளைக்கக் கரும்பு வில்லில் ஐந்து மலரம்புகளைப் பூட்டி எய்யும் காமவேளை மண்டும் அழலூட்டினான்; வேண்டுவார் வேண்டுவதை ஈயும் வரதகரத்தை உடையவன்; முன்னவர்க்கும் முன்னவன்.
ஐயம்பெய்யும்- மடக்கு.

    82-83 "- பொய்பாத
    கக்கிரியை ஓர்விலாக் கண்டகர் சாகக்கன
    கக்கிரியை யோர்விலாக் கைக்கொண்டான்"
- பொய் முதலான தீய செயல்களை சற்றும் சிந்தியாமல் செய்யும் கீழ்மக்களாகிய அசுரர்கள் இறந்து ஒழிய பொன்மலையாகிய மேருகிரியை வில்லாகக் கையில் கொண்டான். கிரியை – மடக்கு .செயல், மலையை. பாதகம் – கொடுமை. ஓர்விலா- சிந்தியாமல் எண்ணாமல். ஓர்தல் –சிந்தித்தல்.
கண்டகர் – கீழ்மக்கள்,அசுரர். கனககிரி – பொன்மலை மேரு. ஓர்விலா- மடக்கு. ஓர்வு இலா, ஓர் வில்லா. வில்லா என்பது இடைக் குறையாக விலா எனவந்தது.

    83-84 "- மிக்கடியோ
    முக்கண்ணா நல்லமிர்தம் ஒப்பாவான் முச்சுடரும்
    முக்கண்ணாய் வாழு முகமுடையான்"
- அடியவர்களாய எமக்கு அடைய முடியாத மிகுந்த அமுதத்திற்கு ஒப்பாவான்; ஞாயிறு திங்கள் நெருப்பு ஆகிய மூன்று சுடர்களும் மூன்றுகண்க ளாகத் திகழும் முகத்தை உடையவன்
முக்கண்ணா-மடக்கு. இறைவன் அமுதம் எனப்படுவது, அவன் அழிவற்றவன்; அவன் தரும் ஆனந்தமு மழிவற்றது என்பதைக் குறிக்கும்.

    84-85 "-தக்கார்
    மறந்தும் பிறவி வரநினையான் தானும்
    மறந்தும் பிறவியிடை வாரான்"
- சிவபுண்ணியம் வாய்க்கப் பெற்றோர் எக்காரணத்தாலும் பிறப்பு அடையும்படிக்கைவிடான். தானும் பிறவிக்கு வாரான்.
மறந்தும்- தன் நினைவின்றியும்.நான்மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே’ (சுந்தரமூர்த்தி நாயனார்.)

    85-86 "-துறந்தோர்
    தவந்திரண்ட தென்னத் தவளநிறம் வாய்ந்து
    நிவந்துலக மூடுருவி நின்று"
- இனிப் பெருமான் வீறிருக்கின்ற வெள்ளிமலையைக் லூறுகின்றார்.
உலகப் பற்றினை முற்றத் துறந்த ஞானியர்களின் புண்ணியமெல்லாம் ஹிரண்டதென்று கூறும்படியாக வெண்மை நிறம்கொண்டு, நிலத்தை ஊடுருவி நிமிர்ந்து.
தவளம்- வெண்மை. புண்ணியம் வெண்மை நிறம்.
‘வந்தெய்திய, புண்ணியம் திரண்டுள்ளது போல்வது’ திருமலை. (பெரியபுராணம் 12)

    86-87 "– நவந்தரும்பல்
    விம்மிதங்க ளோங்கி விமலமாய் வேதத்தின்
    சம்மதமாம் வெள்ளித் தடவரையும்"
- புதுமையான பலவித ஆச்சரியங்களைத் தன்னுட்கொண்டு, தூயதாய், விண்ணை ஊடுருவி உயர்ந்தோங்கி, என்றுமுள வேதஙத்திற்கு நிகராக விளங்கும் வெள்ளிங்கிரிஎன்னும் பெரியமலையும்.
நவம் – புதுமை. விம்மிதம் – ஆச்சரியம். விமலம்- மலமற்ற தூய்மை. சம்மதம் cammatam
, n. < sam-mata. 1. Approval, acquiescence, consent; உடன்பாடு. ஈடுபயவாதிகள் சம்மதம் (தாயு. எங்கு. 3). 2. Friendship; நட்பு. தானஞ் சம்மத மின்சொல் (காசிக. தீர்த். 7). 3. Opinion, tenet; கொள்கை. (யாழ். அக.)

    87-88 "- தம்மதருட்
    சத்தியுறையுந் தடங்கிரியும் சங்கேந்தும்
    புத்தே ளயன்வாழ் பொருப்பிரண்டும்"
- தம்முடைய அருட்சத்தியாகிய அம்மை உறையும் பெரிய மலையும், கையில் பாஞ்சசன்னியம் என்னும் சங்கினை ஏந்திய பெருமாளும் பிரமாவும் வாழ்கின்ற குன்றுகள் இரண்டும்.
இவை வெள்ளிங்கிரியை அடுத்துள்லவர். அயன் வாஉம் மலை ஐயர் மலை அல்லது ஐயாசாமிமலை என்றும் சங்கேந்தும் ஐயன் வாழும் மலை பெருமாள் முடி என்றும் அம்மை வாழும் மலை நீலிமலை அல்லது குருவிருடிமலை என்றும் வழங்கப்படுகின்றது.

    88-89 ‘- நத்திக்
    கருத மலைவில்லாமற் கந்தனருள் செய்யும்
    மருத மலையென்னும் மலையும்"
- விரும்பித் தொழ ஐயமில்லாமல் அருள்செய்யும் கந்தன் முருகனின் மருதமலையும்.
நத்தி – விரும்பி. மலைவு – சந்தேகம்.

    89-90 "- ஒருபடித்தாய்ப்
    பஞ்சப் பிரமமே பஞ்சவரை யானதென
    மஞ்சடரும் பஞ்ச வரையுடையான்"
- ஒருங்கு கூடிப் பஞ்சப் பிரமமந்திரங்களே ஐந்து மலிகள் ஆயதெனும்படியான மேகம் மொய்க்கும் ஐந்து மலைகளை உடையான்.

    90- 95 "எஞ்சாது
    நீர்த்தரங்கத் தாலே நெருங்கும் அகன்கரையைப்
    பேர்த்தெறிந்து வெள்ளப் பெருக்காகி – ஆர்த்தெழுந்தே 91
    அந்நாட் பகீரதற்கா ஆங்கிழிந்த கங்கையைப்போல்
    இந்நாட் பலவுலக மீடேறப் – பொன்னார் 92
    பொலிந்த ரசிதப் பொருப்பி லுலாவி
    மலிந்த பொருள்பற் பலவும் வாரிக் – கலந்து 93
    தொடும்பொருளை யெல்லாம் சுவர்ண மயமாக்கி
    விடும்பரிசாற் காரணப்பேர் மேவிக் – கடும்பவநோய் 94
    யாவும் அகற்றி அறம்பொருளின் பாக்கியலை
    வாவிவருங் காஞ்சி மாநதியான்" –
- குறைவின்றி நீரலைகளினாலே நெருங்கிய அகன்ற கரைகளை பெயர்து எறிந்து, வெள்ளப் பெருக்காக்கி, ஆரவாரித்துப் பொங்கி, முன்னொரு நாளிலே பகீரதனுக்காக விண்ணிலிருந்து இறங்கிய கங்கைநதியைப் போல, இந்நாளில் நாடெல்லாம் ஈடேறப் பொன் பொதிந்து விளங்கிய வெள்ளிங்கிரியில் தவழ்ந்து, அங்கு நிறைந்திருக்கும் மலைபடு பொருள்கள் பலவற்றையும் மயங்க வாரிக் கொண்டு, தான் தொடும் பொருள்களை யெல்லாம் பொன்மயமாக்கிவிடும் தன்மையால் காரணப் பெயர் பொருந்தி, கொடிய பிறவிநோய் முதலியவற்றைப் போக்கி அறம்பொருள் இன்பமாக்கி அலை தாவிவரும் காஞ்சிமாநதியான்.
இது தசாங்கத்தின் உறுப்பாகிய நதியைக் கூறிற்று.
தரங்கம் – அலை. இரசிதம் – வெள்ளி. இரசிதப்பொருப்பு- வெள்ளியங்கிரி. உலாவி- பரந்து. சுவர்னம்- தங்கம். தங்கத்துக்கு மற்றொருபெயர் காஞ்சனம். தாந்தொடும் பொருள்களைக் காஞ்சனமாக்குதலால் இந்நதிக்குக் காஞ்சிமாநதி என்பது காரணப்பெயராயிற்று.

    95-96 – மேவுபுகழ்
    "-ஏட்டில் அடங்காமல் எவ்வுலகுந் தன்மணமே
    நாட்டுவிக்கும் கொங்குவள நாட்டினான்"
- தன் புகழால் நூல்களில் அடங்காமல் எல்லா நாட்டிலும் தன்னுடைய புகழை
நிலைநாட்டும் கொங்குவள நாட்டினை உடையவன். கொங்கு- மணம், தேன் பலபொருள் ஒருசொல் தன் மணம் – தன்புகழ். ‘கொங்கு மலியின் எங்கும் மலியும் ‘ என்னும்புகழ்

    96-97 "-போட்டிவிளைத்
    தூரூரெல்லாம் சின்ன ஊராய்ப் புறங்கொடுக்கப்
    பேரூரெனத் திகழ்பேரூரினான்"
-போட்டியிட்டுப் பிற ஊர்களெல்லம் சிற்றூர்கள் எனப் புறங்கொடுத்துத் தோற்றுப் போம்படியான பேரூர் எனவிளங்குகின்ற பேரூரினுக்குத் தலைவன்.
பேரூர் –பெயர்க்காரணம்
" உரைத்தநாற் பயனுள் பெரும்பய னாயது ஒள்ளிய வீடஃது உறலால்
தரைத்தலைப் பேரூ ரென்மர்கள் சிலரெத் தலத்தினும் சாற்றுநாற் பயனும்
நிரத்தலின் பேரூ ரென்மர்கள் பலரே நீடிய ஆதிம நகரை
இரைத்தெழு கடல்போல் வளத்தினும்பேரூ ரென்மர்கள் பற்பலா யிரரே"
(பேரூர்ப் புராணம் நகரப்படலம் 1)

    97-99 ஆரூரர்
    பாமாலைசூடும் பணைத்தோளில் என்றன்புன்
    பாமலை சூட்டப் பணித்ததுபோற் – பூமாலை
    நேசமாய் மாசகன்ற நின்மலமாய்ப் பொன்மயமாய்
    வாசமார் கொன்றைமலர் மாலையான் –
- நம்பி ஆரூரர்சூட்டும் திருமுறைகளாகிய பாமாலைகளை அணியும் தன் பெருத்த தோளில் என்னுடைய புல்லிய சொற்களினால் தொடுக்கப்பட்ட பொலிவில்லாத பாமாலை சூட்ட என்னைப் பணித்தது போல பூக்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலைகளுடன் குற்றம் அற்ற, தூய, பொன்னிறமான, வாசம் நிறைந்த கொன்றைமலர் மாலையான்.
ஆரூரர் பாமாலை போல கொன்றைமாலை
என்னுடைய மாலைபோல பிறமலர் மாலை
இது மாலை என்னும் தசாங்க உறுப்பு

    99-100 "-வாசிக்
    கடும்பரியி லேறுவோ ரல்லாதார் காணப்
    படும்பரி சொன்றில்லாப் பரியான்" –
- மூச்சுக் காற்று எனும் வேகமாகச்செல்லும் குதிரைமீது ஊர்வோராகிய யோகியர் அல்லாத பிற இயல்பாளர் யாரும் காணமுடியாத பெரியான்.
கடும்பரி- வேகமாக ஓடும் குதிரை. வாசி- குதிரை. யோகநெறியில் மூச்சுப் பயிற்சியை வாசியோகம் என்பர். வாசிக் கடும்பரியில் ஏறுவோர்- வாசியோகம் வல்ல சிவயோகியர். பரிசு-இயல்பு. பரியான் –பருமை உடையவன். பருமைx நேர்மை. "நுண்ணியான் மிகப்பெரியான்" (முத்ல் திருமுறை)
இது குதிரை என்னும் தசாங்க உறுப்பைக் கூறிற்று.

    100- 101 "–இடும்பச்
    சிலையின் பொருட்டு வெள்ளைச் சிந்துரமும் நல்குங்
    கொலைவல்ல கம்பமத குஞ்சரத்தான்"
- குடங்கை நீரும் பச்சிலையும் இட்டு வழிபடுவாருக்கு வெள்ளையானை யாகிய ஐராவதத்தின்மேல் ஊரும் இந்திரபதவியை நல்குவான். சிவன் துங்கமணிக்கோடு இரண்டாயிரம் படைத்த அயிராவனம் என்னும் பெயருடைய வலிய யானையை உடையவன்.
சிந்துரம் – யானை. வெள்ளைச் சிந்துரம் – வெள்ளையானை. கம்பம்- அசைதல். யானை ஒரு நிலையில் நில்லாமல் அசைந்து கொண்டே இருக்கும் இயல்புடையது. எனவே, கம்பமத யானை என்றார். சிவன் எளிய பூசைக்கே இரங்குவன் என்பது,
"குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க்கு இமையாக் குஞ்சரமும்
படங்கொள் பாயும் பூவணையும் தருவாய் மதுரைப் பரமேட்டி"
(திருவிளையாடற் புராணம், இசைவாது வென்ற படலம் 34)
எனப் பரஞ்சோதி முனிவர் வாக்காலும் வெளிப்படும்

    101-102 "-அலையாமல்
    ஈண்டும் அடியவர்கட் கெய்தும்பே ரின்பமென
    மூண்டு முழங்கும் முரசத்தான்"
- இன்பம் தேடி எங்கும் அலையாதீர். இங்கு வாருங்கள் உங்க்ளுக்கு எங்கும் இலாத பேரினம் கிட்டும் என்று முழங்கும் முரசுடையன்.
இது தசாங்கத்தில் ஒன்றான முரசு என்னும் உறுப்பு.

    102-103 "– ஆண்டவன்றன்
    சேவேறு சேவடியை அல்லதில்லை யென்றசையும்
    கோவேறு கொற்றக் கொடியினான்"
- விடை ஏறும் சிவபெருமானின் சிவந்த திருவடிகளை அல்லாமல்வேறு புகல் இல்லை என்று அசையும் மேன்மையுடைய வெற்றிக் கொடியினை உடையவன். இது தசாங்கத்தில் ஒன்றான கொடி என்னும் உறுப்பு.
சே – காளை. கோ- மேன்மை . கொற்றம் – வெற்றி.

    103-104 "– பூவேறும்
    அந்தணனும் நாரணனும் அண்டபகி ரண்டமொடு
    வந்தடங்கும் ஆணை வலியுடையன்"
- வெண்தாமரையில் இருக்குமந்தணனாகிய பிரமனும் திருமாலும் அண்டபகிரண்டங்களுடன்வந்து ஒடுங்குகின்ற ஆணையாகிய சத்தியை உடையவன்.

    104-105 "-மைந்தர்களாம்
    பட்டிவி நாயகனும் பன்னிருகைப் பண்ணவனும்
    கிட்டி யருகே கிளர்ந்துவர"
- தன்னுடைய புதல்வர்களான பட்டி விநாயகப் பெருமானும் முருகப் பெருமானாகிய கடவுளும் மகிழ்ச்சியுடன் நெருங்கி அருகே வர.
பட்டிவிநாயகர்- தலவிநாயகர். பண்ணவன் – கடவுள், குரு.

    105-106 "-தொட்டரனார்
    உண்டபரிகலமும் ஒண்மலரும் பெற்ற எங்கள்
    சண்டிப் பெருமானும் சார்ந்துவர"
- சிவபெருமானார் தொட்டு உண்ட உண்கலமும் அவருக்குச் சாத்திய மலர்களும் தனக்கே உரிமையாகப் பெற்ற சண்டிகேசுரப் பெருமானும் அடுத்து வர.
பரிகலம்- நைவேத்தியம் உள்ள கலம்.

    106-108 "– மண்டியபேர்
    அன்பாற் றமிழ்பாடும் அப்பருடன் சம்பந்தர்
    வன்பால் அடிமை கொண்ட வன்றொண்டர் – தென்பார் 107
    விளங்கவரும் வாதவூர் வேந்த ரிவரெல்லாம்
    துளங்காது பக்கலிலே சூழ"
- நிறைந்த அன்பினால் தமிழினில் பாடும் அப்பர், திருஞானசம்பந்தருடன், வலிந்தாட்கொண்ட வன்த்ஹொண்டர் சுந்தரரும் புகழ் விளங்கவரும் திருவாதவூரர் மாணிக்க வாசகரும் ஆகிய குரவர்கள் இவரெல்லாம் அருகில் நெருங்கி இருக்க.
‘நாளும் இன்னிசையால் தமிழ்பாடும் ஞானசம்பந்தன் நாவுக்கரையன்’ (சுந்தரர்) தென்பார் விளங்க வரும்- தென்பாண்டி நாடு புகழால் விளங்கத் தோன்றிய.

    108-109 "– உளந்தனிலே
    இச்சையறிந் துலக மெல்லாம் படியளக்கும்
    பச்சைவல்லித் தாயாரும் பாங்கர்வர"
- உயிர்களின் இச்சையை அவை உரைக்காமலேயே அறிந்து அவற்றிற்கு உரிய போகம் அளிக்கும் மரகதவல்லித் தாயார் உடன் அருகில் வர.

    109-110 "-அச்சுதனோ
    டிந்திரனே யாதி இமையோர்குழாந் திரண்டே
    அந்தரத்தின் கண்ணே அலர்தூவ"
- திருமாலொடு இந்திரன் முதலாய தேவர் குழாம் திரண்டு வானிலிருந்து மலர் மாரி தூவ.
விஷ்ணு சகஸ்ரநாம நூலின் விளக்க உரையில், ஆதிசங்கரர், அச்சுதன் என்பதற்கு, உள்ளார்ந்த இயல்பு மற்றும் சக்திகளை என்றும் இழக்காதவன் என்றும், மேலும் மாறாத்தன்மை கொண்டவன் என்றும், நிலையானவன் என்றும் குறிப்பிடுகிறார்.

    110-111 "-துந்துமியே
    யாதிமுழவம் அதிர முழங்கியெழ
    வீதி நிரம்ப விருதடையக்"–
- துந்துமி முதலிய தேவ வாத்தியங்கள் பேரொலியுடம் முழங்கி எழ, முதல்வனின் புகழ்ச்சியாகிய விருதுகள் தெருவெல்லாம் ஒலிக்க.

    111-112 "– கோதில்
    குணவடியா ரெல்லாங் குழாங்கொண்டு கூடிப்
    பணிவிடைகள் வேண்டியவா பண்ண’
- குற்றமே இல்லாத குணங்கொண்ட அடியவர்கள் எல்லாம் குழாம் குழாமாகப் பணிவிடைகள் செய்துவர்.

    112-113 "-அணிகிளரும்
    வேதமொரு பாலும் விமலத் தமிழ்வேத
    நாதமொரு பாலும் நவின்றிலங்கச் –
- அணியணியாக ஒலிக்கும் நால்வேதம் ஒருபாலும் தெய்வீகத் தமிழ் நாதம் ஒருபாலும் ஒலிக்க.

    113-114 _ சீதப்
    பனிவெண் மதியங்கள் பார்க்கவந்த தென்னக்
    கனிவெண் குடைகள் கவிப்ப –
- குளிர்ந்தவெண்ணிற நிலவுகள் பல இறைவனின் ஊர்வலத்தைப் பார்க்க வந்தது போல் வெண்குடைகள் பல கவிந்து நிற்க்.

    114-115 "-நனிவிரைந்து
    கங்கைத் திரளும் வந்த காட்சியென மேலோங்கித்
    துங்கக் கவரிபுடை துள்ளவே"
- மிக வேகமாகக் கங்கையும் பிற ஆறுகளும் அலைவீசி வந்ததைப் போல ஆங்காங்கு உயர்ந்து கவரி பக்கங்களில் துள்ளவும்.

    115- 117 "- எங்குமாம்
    மூவர்பெருமான் முடியாமுதற் பெருமான்
    தேவர் பெருமான் சிவபெருமான் – காவலராஞ்116
    சிட்டிப்பெருமான் திதிப்பெருமான் காண்பரிய
    பட்டிப்பெருமான் பவனி வந்தான்"
- எங்கணும் நீக்கமற வியாபித்திருப்பவன், மும்மூர்த்திகளுக்கும் முதல்வன்; அந்தமிலாதவன்; முன்னைப் ப்ழம்பொருளுக்கும் முன்னைப் பழம்பொருளாகிய முத்ல்வன்; தேவர்களுக் கெல்லாம் தேவன்; ஆகிய சிவபெருமான், தெய்வங்களாம் சிட்டிப்பெருமான் பிரானுக்கும் காக்கும் பெருமான் திருமாலுக்கும் காண்பரியவன் அகிய பட்டிப் பெருமான்பவனி வந்தான்.

    117-119 "– சிட்டரெலாம்
    ஆடுவார் தித்தித் தமுதமெனக் கானவிசை
    பாடுவார் நின்று பரவுவார் – நாடுவார் 118
    கண்ணே கருத்தே கதியே வான்கற்பகமே
    எண்ணே எழுத்தே எனத்துதிப்பார்"
- பெரியோராகிய அடியவரெல்லாம் இன்பத்தில் திளைத்து ஆடுவார்; அமுதமென இனிய பாடல்கலைப் பாடி நின்று போற்றுவார்; விரும்புவார்;கண்ணே கருத்தே கதியே வானகத்துக் கற்பகமே எண்ணே எழுத்தே எனப் பலவிதமாகத் துதிப்பார்.

    119-120 "-நண்ணாப்
    பதிதரெனினும் பவனி பார்க்கக் கிடைத்தாற்
    கதிதருங் காணென்றே களிப்பார்"–
- ஒருக்காலும் திருக்கோயிலை அடையாத குலவொழுக்கம் கெட்டோன் எனினும் பெருமான்வரும் பவனியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டால் பெருமான் நற்கதி தருவான் என்று கூறி மகிழ்வார்.
பதிதன் – குலவொழுக்கம் சமய ஆசாரம் கெட்டவன்

    120-121 "– துதிசெய்யும்
    விண்ணோரும் மண்ணோரும் வேட்ட துனதுகடைக்
    கண்ணே அளித்தருளும் காண்என்பார்"
- விண்ணவர்களாயினும் மண்ணுலத்தவராயினும் அவர்கள் விரும்பியதைப் பெருமானின் கடைக்கண்ணே தந்தருளும் என்பார்.

    121 – 122 "–விண்ணவர்க்காய்க்
    கல்லைக் குழைவித்த கண்ணுதலே யெம்மனமாங்
    கல்லைக் குழைத்தல் கடனென்பார்"
- தேவர்களுக்காகக் கல்லைக் குழைவித்தது, திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாக வளைத்த நிகழ்ச்சி.

    122-123 "– அல்லைப்
    பொருவு மிடற்றிலெங்கள் புன்மலமுஞ் சேர்த்தால்
    இருமைக் கருப்பாகு மென்பார்"-
- இருளுக்கு நிகராகு உம்முடைய கண்டக் கருப்பிலே எம்முடைய புல்லிய மலத்தையும் சேர்த்தால் கருப்பு இருமடங்காகுமென்பார்.
உயிருக்கு அறியமையைச் செய்யும் ஆணவமலத்தை இருண்மலமென்பது வழக்கு.

    123-124 "-திருநுதலில்
    தீவைத்த தெங்கள்பெருந் தீவினையெல் லாமொருங்கே
    வேவித்தற் கேயோ விளம்பென்பார்"
- அழகிய நெற்றியில் நெருப்பினைக் கண்ணாக வைத்தது எம்முடைய தீவினைக் காட்டையெல்லாம் சுட்டெரித்தற்காகவோ என்பார்.

    124-125 "–சேவித்தோர்
    தங்கள்மலம் போக்கவோ தண்புனலைச் சென்னிவைத்தாய்
    திங்களையும் வைத்ததென்ன சேர்த்தென்பார்"
- உம்மைக்கண்டு அழிபடுவோரின் மல அழுக்கைக் கழுவவோ குளிர்ந்த கங்கையைச் சிரசில் வைத்தாய்? ஆனால் கறையுடைய சந்திரனையுமுடன் வைத்தது என்ன காரணம் என்பார்.

    125-126 "– எங்கள்பொருட்
    டாயோர் நரவுருவு மானாய்க்கு வெங்கொடிய
    பேயோடு மாடலென்ன பெற்றி யென்பார்."
- எங்களை ஈடேற்றும் பொருட்டு மானுட உருவும் கொண்ட உனக்குக் கொடிய பேயொடும் ஆடுவது என்ன சிறப்பு என்பார்.
நரவுரு- குருவாக மானுடச் சட்டை தாங்கி வருதல். பேயொடாடல் சர்வசங்காரத்தின் பின் புனர் உற்பவத்தின்போது.

    126-127 ."- தீயபவக்
    காடெறியவோ கணிச்சியினைக் கைக்கொண்டாய்
    மாடாயொரு மானேன் வைத்த தென்பார்"
- எங்களுடைய கொடிய பிறவிக் காட்டினை அழிக்கவோ கையில் மழுவாயுதத்தைக் கொண்டாய்? ஆயின் அருகிலேயே ஒருமானையும் வைத்ததேன்? அதனைக் கொல்லுவதற்கு என அல்லவாஉள்ளது?

    127-128 "– பீடாரும்
    யோகத் திருந்தும் உமையாளைச் செம்பாதி
    பாகத்தில் வைத்ததென்ன பற்றி யென்பார்"
- புலனைஎன்று பெருமையுடைய யோகத்தில் இருந்தும் நீர் உம்முடைய இடப்பாகத்தில் செம்பாகமாக உமையாளை வைத்ததேன்? என்பார்.

    128-129 "– ஆகத்தில்
    கந்தபொடி பூசக் கருதாமல் வெண்ணிறமாய்
    வெந்தபொடி பூசலென்ன விந்தை யென்பார்"
- நீர் உம் திருமேனிமீது மணமுள்ள பொடி பூசாமல் வெந்த வெண்ணிறச் சாம்பலைப் பூசிக் கொள்வது என்ன வேடிக்கையாக அல்லவாஉள்ளது? என்பர்

    129-130 "– இந்தவகை
    தத்தமனக் கிசைந்த சாற்றித் தொழுதுநிற்ப
    எத்தனையோ பேர்சூழ்ந் திரங்கி நிற்பப்"
- இந்த முறையில் பலரும் தத்தம் மனத்துக்கு இசைந்தவகையில் பெருமானைத் தொழுது நிற்கவும், எத்தலையோ பலர் சூழ்ந்து தொழுது இறைஞ்சி நிற்கவும்;

    130 – 133 "- பித்தனேன்
    கொஞ்சமு முள்ளத்திலன்பு கொண்டதிலைக் கல்லான
    நெஞ்சமுருக நைந்து நின்றதிலைத் – தஞ்சமெனக் 131
    கண்ணருவி பாயவிலை கைதலைமேற் கொள்ளவிலை
    மண்ணதனில் வீழ்ந்து வணங்கவிலைத் – துண்ணெனவென் 132
    ஆகம்புளகம் அரும்பவிலை இவ்விழவின்
    மோகம் ஒருசற்றும் முயங்கவிலை"
- அறிவு மயக்கங் கொண்ட நான் , என் உள்ளத்தில் எள்ளளவும் பத்தி கொண்டதில்லை; கல் நெஞ்சம் அன்பால் நெக்குருகி நின்றதில்லை; இறைவனே துணையெனக் கண்நீர் பெருக்கவில்லை; நிலத்தின் மீது விழுந்து வணங்கவில்லை; உடம்பில் சிலிர்ப்பேற்படவில்லை; இறைவனின் பவனி விழவின் பத்திமயக்கம் என்னைக் கொஞ்சங் கூடப் பாதிக்கவில்லை. இவையெல்லாம் பத்தி மெய்ப்பாடுகள்.

    133– 134 "-வேகப்
    பறவைவிலங் கோட்டிப் பயமுறுத்த நாட்டி
    நிறுவுமொரு புல்லுருவை நேர்ந்தேன்"
- தானியத்தைக் கவ்ர வேகமாகவரும் பறவையை அச்சுறுத்தி விலக்க நாட்டும் புல் துருத்திய பொம்மை (scare crow) போல நின்றிருந்தேன்.
உயிரின் பண்பாகிய அன்பு நெஞ்சில் இருந்திருந்தால் அன்பர் கூட்டமும் அன்பர்களின் பத்திச் செய்ல்களும் உள்ளத்தை உருகுவித்திருக்கும். அத்தகைய அன்பில்லாமையால் புல் துருத்திய பொம்மையை நிறுத்தியதைப் போல நின்றிருந்தேன் என்றார்.

    134 -136 "– வெறுமையேன்
    ஆனாலும் அந்நா ளடியரடிப் பொடியென்
    மேல்,நான்செய் புண்ய விசேடத்தாற் – றானாகப்135
    பட்டங்கிரசம் பரிசனவே திப்பரிசப்
    பட்டதனாற் பொன்னாம் பரிசேபோல்"
- அன்பாகிய உள்ளீடு அற்று வீணனாக இருந்தாலும் அந்த நல்ல நாளில் அடியவர்களுடைய காற்புழுதி என் மேல், நான் முன்பு செய்திருந்த புண்ணிய விசேடத்தால், என் மீது தானாகவே வந்து பட்டு, பாதரசம் பரிச வேதியினால் பொன் ஆனதைப் போல;
‘ அறிவின்றி, விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு’ (திருவாசகம் 482) வெறுவியன் – வெறுவியன் – வெறுமை என்னும் பண்படியாகப் பிறந்த குறிப்பு வினையாலணையும்பெயர். பரிச வேதி- Alchemy

    136-137 "– விட்டகன்றும்
    குற்றியென நிற்குங் குறிபார்த் தெனக்கருளும்
    பெற்றி நினைந்து "
- அடியார் கூட்டத்தை விட்டகன்று கம்பம் போல நின்றாலும் என்னைக் குறித்துப் பார்த்து, எனக்கு அருள நினைத்து. குற்றி – கம்பம், தூண். பத்தியின்மெய்ப்பாடு எதுவுமின்றி நிற்றலினால் குற்றி என்றார். பெற்றி – இங்கு இரக்கத்தைக் குறித்தது.

    137-138 பெருங்கருணை – உற்ற கரு
    ணாகரனேயென் பொருட்டோ ராசிரியனாய்ச் சந்த்ர
    சேகர னென்றோர் திருப்பேர் சேர்த்தியே"
- கருணைக் கடலாகிய பரசிவமே கருணை கொண்டு என் பொருட்டு ஓர் ஆசிரியனாய்ச் சந்திரசேகரன் என்று ஒரு திருப்பெயர் கொண்டு.
சிவஞானபோதம் 8ஆம் நூற்பா காண்க.

    138- 139 "– சாகரஞ்சூழ்
    இவ்வுலகி லுள்ளமத மெத்ததனையோ அத்தனைக்கும்
    பௌவமெனும் வேதப் பயோததியைத்"
- கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகில் எத்தனைச் சமயங்கள் உளவோஅத்தனையையும் தன்னுள் அடக்கிக்கொள்ளும் சமுத்திரம் என்னும் பாற்கடலை’

    139-140 "– திவ்யாக
    மத்தின்வழியே மதித்தநவ நீதசைவ
    சித்தாந்த மெய்யுணர்த்துந் தேசிகனாய்க்"
- தெய்வீகமான ஆகமங்களாகிய பாற்கடலைக் கடைந்து எடுத்த வெண்ணெய் போன்ற சைவ சித்தாந்தமெய்ப்பொருளை உணர்த்தும் குருவாய்.
"வேதம் பசுவதன்பால் மெய்யாகமம்நால்வர்
ஓதுந்த மிழதனினுள் ளுறுநெய் – போதமிகு
நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான்
செய்ததமிழ் நூலின் றிறம்"

    140-141 "– கத்துகின்ற
    கற்பனா மார்க்கமெனுங் கட்செவிக்கு வல்லிடிபோற்
    சொற்பிர யோகஞ்செய் சுகோதயனாய்ப்"
- உண்மையின்றி வெறும் ஆரவாரமாகக் கத்துகின்ற கற்பனைச் சமயங்களாகிய பாம்புக்கு இடியேறு போல சொல்லம்புகளைத் தொடுக்கும் ஞான இன்பம் அளிப்பவன்.
கற்பனா மார்க்கம்- தாமே தம் விருப்பம்போல் கற்பித்துக் கொண்ட சமயங்கள். கட்செவி – பாம்பு. படைக்கலங்களை பகைவர்மேல் பிரயோகம் செய்வதுபோல் வாக்குவன்மை. சுகோதயன் – சுகம் + உதயன். அறிவு இன்பம் அறிவூட்டி இன்பளித்தலினால் சுகோதயன்.

    ’141-142 "–பொற்பார்
    மதமாவை மாக்கள் வசமாக்க மற்றோர்
    மதமாவைக் கொண்டே மடக்கும் – விதம்"
- பொலிவுடைய ஒரு மதகளிற்றை மற்றொரு மதகளிற்றின் துணை கொண்டு மடக்கும் விதம்;

    142-143 "-அவனென்
    போலோர் மனிதவுருப் பூண்டுஞ் சிவசின்னத்
    தாலே பிரானாம் தகைவிளங்க" –
- சிவனான அவன் என்னைப் போல ஒரு மனித உருப்பூண்டும் சிவசின்னங்களைத் தரித்துள்ளமையாலே சிவமாம் தகைமை விளங்கித் தோன்ற.
கண்டக் கறை , நெற்றிக்கண் முதலிய அடையாளங்களை மறைத்து மானுடச் சட்டை தாங்கி வந்தாலும் அவன் தரித்துள்ளசிவசின்னங்கள் அவன் சிவனே என்பதனை வெளிப்படுத்தின.

    143 – 144 "-ஆலடியில்
    அன்றமர்ந்த வாபோல் அரசமரத் தருகே
    நின்றெளியேன் காணநேர் நின்றருளி"
- கல்லாலின் நீழலில் முனிவர் நால்வருக்கு அருளி அன்று அமர்ந்திருந்ததைப் போல அரசமரத்தின் நீழலில் அடியேன் காணும்படியாக முன்னே நின்று

    144-145 "-– என்றன்னை
    அன்பொட ழைத்தங் கருகிருத்திப் பற்பலவா
    முன்பழமை பேசி முடித்ததற்பின்"
- என்னை அன்புடன் அழைத்துத் தன்னருகில் இருத்தி நலம் விசாரித்து முடிந்ததற்பின்

    145- 148 _என்பேரில்
    வைத்த பெருத்ததயா வால்என்முக நோக்கி
    வித்தகனே யெங்கோன் விழவிலுன் – மத்தனென 146
    நின்றாய் என்னேயுன்றன் நெஞ்சமிரும்போ கல்லோ
    ஒன்றாலும் உருகா ஒருபொருளோ – சென்றோடிப் 147
    பார்க்குங்கண் ணோவியன்செய் பாவையின்கண் ணோவோசை
    சேர்க்குஞ்செவி யிரும்பிற் செய்செவியோ"
- என்மேல் வைத்த பெருங்கருணையினால், என்னுடைய முகத்தைப் பார்த்து, ‘வித்தகனே! (ஞானவான் . எள்ளற்குறிப்பு) எங்கள் இறைவனின் திருவிழாவில் அறிவிலாப் பித்தன்போல எந்தச் சலனமும் இன்றி நின்றாய். உன்னுடைய நெஞ்சம் கடின இரும்போ?கல்லோ? எதனாலும் உருகாத வலியவொரு பொருளோ? அழகிய காட்சியைச் சென்றோடிப் பார்க்குங் க்அண்ணோ? அல்லது ஒவியன் வரைந்த அழகிய பாவையின் பார்வை இல்லாக் கண்ணோ? உன் செவி கேளாச் செவியோ? இரும்பாற் செய்யப்பட்ட வன்செவியோ?

    148-149 ‘– பார்க்குங்கால்
    நல்லகுடிப் பிறந்தாய் நாடிளமை யோடழகும்
    புல்லும் வடிவம் பொருந்தினாய்"
- உன்னைப் பார்க்கும்பொழுது நீ நல்லகுடியில் பிறந்துள்ளவனாகத் தெரிகின்றது. இளமையோடு அழகும் கூடியவனாக உள்ளாய்.

    149-150 "-கல்லுங்
    கரையும் எம்மான் செல்பவனி கண்டுங்கரையா
    துறையும் பெருமமதை யுற்றாய்"
- எம் இறைவன் பவனி செல்லும் இக்காட்சியைக் கண்ட கடினமான கல்லும் உருகுமே. நீ இந்தக் காட்சியைக் கண்டுவைஹ்தும் மனம் நெகிழாமல் திமிரோடுள்ளாய்.

    150- 152 "– முறையே
    வழிவழியாய்ச் சைவத்து வந்தமைக்குன்முன்னோர்
    மொழிபெயரே சான்றுமொழிய- வழுவிநீ
    பேயின்கோட் பட்டாயோ பேதைமையோ வேற்றவர்தம்
    வாயின் கோட்புற்ற வகைதானோ"
- நல்ல சைவ பரம்பரையான குடியில் நீ பிறந்துள்ளமைக்கு உன் முன்னோர் உனக்கு வைத்துள்ள பெயரே சான்று பகர்கின்றது. பாரம்பரியமான சைவ ஒழுக்கத்தில் நழுவி நீ அந்நிய மதமான பேயால் பிடிக்கப்பட்டுள்ளாயோ? உன் அறியாமையோ? அந்நியர்வாய்ச் சொல்லில் மயங்கி அகப்பட்டுக் கொண்டாயோ?

    152-153 "-– ஆயவிதஞ்
    சொல்லென்றான் காட்டினில்வாழ் துட்டவிலங்கனையேன்
    சொல்லன்று சொல்லத் தொடங்கினேன்"
- இவ்வாறு சைவ நற்குடிப் பண்புக்கு மாறுபட்ட விதம் சொல் என்றான். அதனைச் அன்று சொல்லத் தொடங்கினேன்.

    153- 157 "-–கல்லாத
    மாந்தரென என்னை மதித்தனிரோ இந்தப்பார்
    வேந்தரெனைக் கொண்டாடி மெச்சிடுங்காற் – போந்தெனைநீர் 154
    கல்லுக்கும் மண்ணுக்கும் காசடிக்கும் செம்புக்கும்
    மெல்ல வணங்க விலையென்று – சொல்லுதல்தான் 155
    அன்னத்தைப் பார்த்தொருகொக் கானதுவான் மேற்பொய்கை
    யின்னத்தை மீனாதி யில்லையெனச் – சொன்னத்தை 156
    யொப்பாகும்"
- என்னைக் கல்வியில்லாத மூடன் என நினைத்துவிட்டீர்களா? இவ்வுலகிலுள்ளார் எனைக் கொண்டாடி மெச்சிடும்போது எனை நீர் கல்லுக்கும் மண்ணுக்கும் காசடிக்கும் செம்புக்கும் வணக்கம்செலுத்தவில்லை என்று சொல்லுவதுதான் அன்னப் பறவையைப் பார்த்து ஒரு கொக்குதான் ஆகாய்த்திம் உள்ள பொய்கையில் நத்தை மீன் முதலியன இல்லை எனச் சொன்னதை ஒப்பாகும்.
திருக்கோவில்களில் வைத்து வணங்கப்படும் விக்கிரகங்களைக் கல்லென்றும் மண்ணென்றும் செப்பு உலோகம் என்று கிறித்துவர்கள் இழித்துரைப்பர். அன்னம் மேலான உணவான பாலை உண்ணும். கொக்கு இழிவான உணவான நத்தை மீன் போன்றவற்றை உண்ணும். இந்த உவமையினால் கிறித்தவன் தான் உயந்த நிலையில் இருப்பதாகவும் சைவன் கொக்குப் போல இழிந்த நிலையில் இருப்பதாகவும் கூறிக் கொள்வதைச் சுட்டினார். ‘சொன்னதை’ என்பது எதுகை நோக்கிச் சொன்னத்தை என ஒற்று மிக்கது.

    157-158 நீவிர் உயர்ச்சியெனுஞ் சைவமோ
    தப்பாகும் ஏசுச் சமயமொன்றே – இப்பாரை
    நீதி மிகவோதி நிலைநிறுத்த லாலதுவே
    ஆதி யெனலாமென் றறைந்தேன்யான்"
- நீங்கள் சைவ சமயமே உயர் சமயம் எனக் கூறியது தவறாகும். ஏசுசமயமாகும் கிறித்துவமே மக்கட் சமுதாயத்தில் நீதியான அறங்களைக் கூறி அவற்றை நிலைநிறுத்தும் சமயம். ஆதலால் அதுவே தலையாயது என்று உறுதியாகக் கூறினேன்.

    158-165 "– ஓதியவை
    கேட்டும் பொறுத்துக் கிருபையாய் என்மீது
    மீட்டும் அருட்கடைக்கண் வீட்சணியம் நாட்டி 159
- நான் மமதையோடு கூறியவை அனைத்தையும் கேட்டு வைத்தும் சினவாமல் பொறுத்துக் கருணையுடன் என்மீது கடைக்கண் பார்வை அருள் சாத்தி

    160 "அழகழகுன் செய்கை அழகழகுன் கல்வி
    அழகழகுன் சொற்பிறந்த ஆற்றல்"
- , "அழகு அழகு உன் செயல்; அழகழகு உன் கல்வியின் அறிவு; அழகழகு உன்னுடைய சொல் ஆற்றல், பேச்சுத் திறம்

    161 "அழகாருஞ்
    சைவத்தைப் போலாஞ் சமயமொன்றும் சங்கரனாந்
    தெய்வத்தைப் போலான தெய்வமொன்றும் "
- . அழகார்ந்த சைவத்தைப் போலும் சமயமும் சங்கரனைப் போன்ற தெய்வமும் ,

    161 – வையத்தில்
    ஆதித்தன் போலா யனைத்திருளை யுந்துறக்கும்
    சோதித் தனியாஞ் சுடரொன்றும்"
- உலகத்தில் சூரியனைப்போல அகத்திருள் புறத்திருள் அனைத்திருளையும் துரத்தும் ஒப்பற்ற ஒளியாம் தனிச்சுடரும்

    162 ‘– பூதலம்போல்
    ஏற்றுநாஞ் செய்கின்ற எப்பிழையையும் பொறுத்துப்
    போற்றியுண வளிக்கப் பூமியொன்றும்"
- நிலவுலகைப் போல நாம் தோண்டுதல், வெட்டுதல், அகழ்தல், துப்புதல் போன்ற எந்தப் பிழைசெய்தாலும் பொறுத்துப் போற்றுதல் மட்டுமே அல்லாமல் நமக்கு உணவளிக்கும் பூமி ஒன்றும்
    163 "– பாற்றுளிபோற் சூற்கொண் டுலகிற்குத் தோற்றுந் துணையாக
    மேற்கொண்டு பெய்தளிக்க மேகமொன்றும்"
- பாலின் துளிபோல் கருக்கொண்டு உலகுயிர்களுக்குக் கண்ணிற் தெரியும் துணையாக மழை பெய்து காப்பாற்றும் மேகமொன்றும்

    164 –" ஏற்கெனவே
    யில்லை யில்லை யில்லை யெனவே பறையறைந்து
    தொல்லை மறையாவுன் துணிந்துரைக்கும்"
- , இல்லை இல்லை இல்லவே இல்லை எனவே தெளிந்து உரைத்துப் பறைசாற்றும் பழமையான வேதங்கள் யாவும் .

    165 –"தொல்லுயிர்கட்
    கொன்றுந் தகைய விதிவிலக்கை யோதுவித்தே
    என்றுந் திரியாஇயல்பினதாய்"
- ஓங்கி உயர்வெல்லாம் உடைய சமயஞ்சைவம் உலகில் தொன்று தொட்டு வருகின்ற உயிர்களுக்கு ஏற்புடைய விதி விலக்குகளை ஓதுவித்து,

    166– "அன்றாலின்
    கீழிருந்தி யோகியர்கள் கேட்க வுணர்த்தியதாய்"
- முன்னாளில்கல்லாலின் நீழலில் இருந்து முனிவர் நால்வரும் கேட்க உணர்த்தியதாய்
"ஊழிதொறும் நிற்கும் உறவினதாய்"
ஊழிதொறும் நிலைத்து நிற்கும் தொடர்பு உடையதாய்

    167– ஆழியின்கண்
    ஆறனைத்தும் சென்றுபுகு மாறுபல சமயப்
    பேறனைத்தும் வந்தொடுங்கும் பெற்றியதாய்க்"
- கடலிலே எல்லா நதிகளும் சென்று புகுவதைப் போல ஒன்றற்கொன்று மாறுபடும் சமயங்கலெல்லாம் வந்து ஒடுங்கும்

    168 –170 "கூறுமுயிர்ப்
    பக்குவத்திற் கேற்பவருள் பாலிக்க வல்லதாய்"
    உயிர்களின் பக்குவத்திற்கேற்ப அருள் பாலிக்க வல்லதாய்,
    மிக்குயர் சோபாந விதானமுடன் – ஒக்கவே 169
    எல்லா இலக்கணமும் எல்லா மகத்துவமும்
    எல்லா நலமும் இயைந்துளதாய்க்"
- பிற சமயங்களோடு படிமுறை உறவு கொண்டு உய்ர்நிலையில் உள்ளதாய், சமயத்துக்குரிய எல்லா இலக்கணங்களும் பொருந்தியதாய் எல்லாமகத்துவமும் எல்லாநலங்களும் இயைந்துளதாய்க்

    170– கொல்லா விரத முடையதாய்" ,
- அறங்களில் உயர்ந்த கொல்லாவிரதம் உடையதாய்

    170 " வேதாந்த மோன சரதமெனு மோலி தரித்தே"
- வேதாந்த மோனம் என்னும் மகுடத்தைத் தரித்தே

    171" – கரதலத்தில்
    ஆமலகம் போல வருட்சத்திப் பேறளித்துக்"
- உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல அருள் சத்திப் பேறளித்துக்

    171 "காமக் குரோதங் களைவதாய்"
- காம குரோத மயக்கத் தீங்குகளைக் களைவதாய்

    172 "– நேம நிலையுள்ளதாய்"
- நியம நிட்டைகள் நிலையாக உள்ளதாய்.
நியமம்- முறைமை. (established course , rite or ceremony, ordinance)

    173 "முன்பின் நேர்ந்த மலைவற்றகலையுள்ளதாய்"
- முன்பின் மலைவற்ற சாத்திர நூல்களைக் கொண்டதாய்,

    173 " ஞானக் கண்ணாய்"
- ஞானமாகிய கண்ணை அளிப்பதாய்

    173 "மலையே
    இலக்காய் அடைந்தோர்கட் கெய்தற் குரித்தாய்க்"
- சேய்மையில் இருப்போருக்கும் எளிதில்கண்டு அடையத் தக்க இலக்காய் இருப்பது

    174 "கலக்காத இன்பக் கலப்பாய்"
- துன்பக் கலப்பே இல்லாத இன்பமளிப்பதாய்

    174– மலக்கன்மம்
    வீட்டித் திரும்பவரா வீட்டில் அருளின்முழுக்
    காட்டுவிக்கத் தக்க அருமருந்தாய்"
- ஆணவமலத்தினையும் கன்ம மலத்தினை அழித்து மீட்டும் பிறப்புக்கு வாரா வீட்டின்ப அருள்நீரில் முழுக்காடுவிக்கத் தக்கது; பிறவி நோயை நீக்கும் அருமருந்து

    175 " – நாட்டிலே
    சாது சமயமொன்றாய்த் தான்சமைந்தாலும் சமையா
    தீதப்பழம் பொருளைச் சேர்த்துவதாய் "
- உலகிலே நிலவும் சமயங்கள் பலவற்றுள் ஒன்றானாலும் தன்வழிப் பட்டு ஒழுகுவோருக்குச் சமயாதீதப் பழம்பொருளைச் சேர்த்துவது

    176-177 "– ஓதும்
    பதிநிலையும் பாசநிலையும் பசுக்க
    ளதுநிலையுந் தப்பா தறைந்தே-எதுநலமும் 177
    ஓங்கி உயர்வெல்லாம் உடையசமயஞ் சைவம்".
- சமய நூல்கள் பேசும் கடவுள் நிலை, பாசங்களின்நிலை, பசுக்களாகிய உயிர்களின் (நிலை- இலக்கணம்) ஆகியவற்றை வழுவின்றித் தெளிவாக உரைத்து எல்லா மேன்மைகளையும் கொண்டு உயர்ந்த சமயம் சைவம்.

    178- 185
    "ஆங்கதனில் நீவந் தவதரித்தும் – ஈங்கதனை
    உள்ளபடியே உணராது"
- இத்தகைய சிறப்புக்களையுடைய சைவசமயத்தில் நீ வந்துபிறந்திருந்தும், இச்சமயத்தின் மேன்மையை உள்ள்படி அறியாமல்.

    179 "சான்றோரால் தள்ளப்படும் புன்சமயமாய்"
- நூல்பலவுங் கற்ற அறிவு மிக்க பெரியோர்களால் கழித்துஒதுக்கித் தள்ளப்படும் இழிந்த சமயமாய்.

    ‘179 – எள்ளுங்
    கொலைசெய்யக் கற்றுக் கொடுப்பதாய்"
- பெரியோர்களால் கடியப்பட்ட கொலையைகற்றுக் கொடுப்பதாய்.

    180 "முன்பின்
    மலைவாய் மொழிவிகற்ப மார்க்கம் –நிலையுளதாய்"
- முன்னுக்குப் பின் முரண்படப் பேசும் விகற்ப நெறிகளை நிலையாக உடையதாய்.

    181 "இவ்வுலகில் வாழ்வோ ரிடர்ப்பட் டமைத்ததாய்த்"
- இந்த உலகில் மானுடராகப் பிறந்தவர் துன்பப்பட்டு உருவாக்கியதாய்.

    181 "தெவ்வர்களால் வேறுபடச் செய்ததாய்
- தமக்குள்ளே முரண்கொண்ட பகைவர்கள் வேறுவேறு சமயங்களாகச் செய்து கொண்டதாய்.

    181"– ஒவ்வாத சீவபர தத்துவங்கள் செப்புவதாய்ப்"
- அறிவுக்குப் பொருந்தாத உயிர் இறை பற்றிய கொள்கைகளைச் செப்புவதாய்.

    182 "புண்ணியமும்–
    பாவமும் அவ்வாறே பகருவதாய்"
- புண்ணியம் பாவம் பற்றியும் அவ்வாறே அறிவுக்குப் பொருந்தாத செய்திகளைக் கூறுவதாய்

    183 "– யாவரையும்
    சண்டைக் காளாக்கித் தளஞ்சேர்க்க வல்லதாய்த்"
- யாவரோடும் தர்க்கம் செய்து சண்டையிட்டு அணிசேர்க்க வல்லதாய்.

    183 "தண்டெடுப்போர் யாவர்க்குந் தாயகமாய்"
- குதர்க்க வாதம் பேசி சண்டையிடுவோருக்குத் தாயகமாக இருப்பது.

    183 -184 " – உண்டுடுத்தீண்
    டெய்துஞ் சுகமே பேரினபமெனத் தேற்றியருள்
    எய்துதற்கு முற்றும் எதிர்மறையாய்"
- நன்கு தின்பதும் உடுப்பதும் ஆக இங்கு அடையும் சுகமே வீட்டுப் பேரின்பம் என நம்பும்படி செய்து இறையருள் எய்துவதற்கு எதிர்மறையான நெறியிற் செலுத்துவதாய்.

    184 -185 "– வெய்தாக
    மாசு திரண்டோ ருருவாய் வந்ததென வந்துதித்த
    ஏசுமதமோ மனத்தில் எண்ணினாய் –
- அச்சம் விளைக்கும் களங்கம் எல்லால் திரண்டு ஒருருவாக வந்ததென் வந்து தோன்றிய ஏசு மதத்தினையோ உலகில் நீ பெரிதாக மனத்தினில் கருதினாய்

    185-186 "காசினியில்
    வீட்டிற் பெரிய விளக்கிருக்க மின்மினியைக்
    காட்டிற் போய்த் தேடுங் கயவரையும்"
- ஒளியை விரும்பி வீட்டில் பேரொளி வீசும் பெரிய விளக்கிருக்க சிற்றொளியை விட்டுவிட்டு மினுமினுக்கும் மின்மினிப் பூச்சியைக் காட்டுக்குப் போய்த் தேடும் கயவரையும்;

    186 – 187 "– ஈட்டியசெம்
    பொன்னை மடுவுட் புகப்பெய் தரிப்பரித்துப்
    பின்னைப் பொருளீட்டும் பித்தரையும்"
- தேடிச் சேர்த்த செம்பொன்னைப் பாழ்த்த பள்ளத்தில் வீசி விட்டு ஆற்று மணலில் பொன் துகளை அரித்தெடுத்துப் பொருள் சேர்க்கும் அறிவு கெட்டவர்களையும் ;

    187 - 188" – பன்னுசெழுந்
    தேனிருக்க உண்ணாமற் செந்தாமரை படர்ந்த
    கானிருந் துலாவுமண் டூகத்தினையும்"
- பெரிய செந்தாமரைமலர்களிலே நிறைந்த செழுந் தேனிருக்க அதனை உண்ணாது இழிந்த உணவுகளான புழு பூச்சிகளைத் தேடி செந்தாமரைக் காட்டினுள் அலையும் தவளையையையும்;

    188 - 189 "– மானிடர்கள்
    உண்ணத் தகும்பல் லுணவிருக்க வீதியிலே
    மண்ணுண்ணும் புத்தியற்ற மைந்தரையும்"
- மனிதர்கள் உண்ணுவதற்குத் தக்க பலவகை உணவுப் பண்டங்கள் இருக்க அவற்றித் தவிர்த்து மண்ணை உண்ண விரும்புகின்ற அறிவற்ற மடையரையும்;

    189 -190 "– நுண்ணுணர்வான்
    நூல்நிரம்பக் கற்றெங்கோன் றாள் பரவாமல்
    மானிடரைப் பாடும் பாவாணரையும்"
- நுண்ணறிவால் அரிய ப்ல நூல்களைய்க் கற்றுத் தேர்ந்து எம்பிரானாகிய இறைவனைப் பாடாமல் மானுடரைப் பாடும் பாவாணர்களையும்;

    190 -191" - மேனி
    கருமையாய் ஊற்றைக் கலக்கி நீருண்ணா
    எருமையையும் ஒத்தாய்நீ என்றான்"
- குட்டையைக் கலக்கி உடலெல்லாம் சேறு பூசிக் கொண்டு சேற்றுநீருண்ணும் எருமையையும் நிகர்த்தாய் நீ என்றான்.

    191 -193"– உருவமொன்றும்
    இல்லான் குணமொன்றும் இல்லான் குறியொன்றும்
    இல்லான் இறையென்றே எம்மனோர் – சொல்லிப்பின்
    மாறுபடக் கோலம் வகுப்பாரேல் மற்றதற்கு
    வேறு குறிப்பிருக்கவேண்டாமோ "
- உருவம் குணம் குறி ஒன்றும் இல்லான் எம்மிறை என்று எம் ஆச்சாரியர் கூறிப் பின் அதற்கு மாறுபட இறைவனுக்குக் உருவம் குணம் குறி வகுப்பர் என்றால் அவ்வாறு அவர்கள் கூறுவதற்கு வேறு குறிப்பு இருக்க வேண்டும் அல்லவா?

    193 - 194"– கூறுமவர்
    சொல்லும் பொருளுணராத் தோடத்தால் மூர்த்திகளைக்
    கல்லொடு செம்பென்றிகழக் கற்றனையால்"
- பெரியவர்கள் சொன்னதன் சொல்லும் பொருளும் உணராத குற்றத்தால் கடவுள் மூர்த்தங்களைக் கல்லென்றும் செம்பென்றும் மண்ணென்றும் இகழக் கற்றனை"

    194 -195"– நல்லதுபின்
    நீயுரைத்த ஏசுமத நீணிலத்தில் உற்பத்தி
    யாயவிதஞ் சற்றே அறையக்கேள்"
- நல்லது. இனி, நீ பாராட்டி உரைத்த ஏசுமதம் இந்த உலகத்தில் உற்பத்தியான விதம் எப்படி என்று உரைக்கின்றேன் கேள்;

    195-198" – ஆயிரத்தை
    நான்மடங்கு செய்யாண்டின் நாளிலிந்தப் பூமிமிசை
    மேன்முடங்கு நாட்டு மிலேச்சர்பலர் – கூன்முடங்கும் 196
    வெய்ய நிருவாண விலங்கொத் துழிதருங்கால்
    தெய்வ உணர்ச்சி சிறிதுதிப்ப – நொய்தாகும் 197
    ஏகோவா வென்றங் கியம்பு துட்டதேவதையை
    ஏகோபித் தேத்தும் இயல்புற்றார்."
- நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இப்பூமிமேல் முடங்கி இருந்த மிலேச்சர்கள் முது வளைந்து நிருவாண மிருகங்களைப் போல வாழ்ந்து திரிந்தனர். அவர்களுக்குத் தெய்வத்தைப் பற்ரிய அச்ச உணர்ச்சி சிறிது உண்டாயிற்று. ஏகோவா எனும்பெயரிய துட்ட தேவதையை வழிபடுதலை மேற்கொண்டனர்.
பைபிள் மொழிபெயர்ப்புகளில் அவர்களின் (யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய அபிராஹாமியர்களுக்கு பொதுவான) படைத்தவனாகிய ஜெஹோவா தேவன், கர்த்தர், சர்வேஸ்வரன், என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறார். ஆனால் தேவன், கர்த்தர், இறைவன், ஈஸ்வரன், ஆகிய சமஸ்கிருதம் தமிழ் உள்ளிட்ட பாரதிய மொழிகளில் இறைவனுக்கு கடவுளுக்கு வழங்கும் பெயர்களெல்லாம் ஜெஹோவாவிற்குப்பொருந்தாது]

    198 - 200" - ஏகோவாக்
    கோபத்துக் காயாட்டைக் கொன்று மாட்டைக் கொன்றுந்
    தீபமெடுத் துதிரத்தைத் தெளித்துந் – தூபமிட்டுங் 199
    கொண்டாடிச் சாதியாய்க் கூலித் தொழில்செய்து
    திண்டாடி வாடித் திரியும்நாள்" –
- ஏகொவாவின் கோபத்துக்கு அஞ்சி ஆட்டைக் கொன்றும் மாட்டைக் கொன்றும் குருதியை நீர்போலத் தெளித்து விளக்கு வைத்துத் தூபமிட்டுக் கொண்டாடி வழிபட்டு ஒரு கூட்டமாய்க் கூலிவேலை செய்து பிழைத்து வரும் நாளில்;

    200 -202"– உண்டான
    மோசேயத் தேவின் முழுநோக் கடைந்ததாய்
    மோசஞ்செய்து சூது மொழிகிணங்கி - ஆசையினால் 201
    ஆங்கவன் செய்மாயம் அனைத்தினையும் தேவனே
    தீங்ககலச் செய்ததெனத் தேறியே"
- அந்தக் கூட்டத்தில் மோசே என ஒருவன் இருந்தான். அவன் இறைவனின் (எகோவா) அருள் முழுவதும்பெற்றதாகக்கூறி வஞ்சனை செய்த சூழ்ச்சிகள் அனைத்தையும் தேவனே தங்கள் கூட்டம் தீதகலச் செய்தது என நம்பினர். [விடுதலைப் பயண நூலின் படி இசுரயேலர் எகிப்தில் அடிமைப்பட்டிருந்த காலத்தில் இவர் பிறந்தார் எனக்கூறப்படுகிறது. அடிமைகளாக இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது; இதனால் எகிப்திய அரசர் தங்களை எகிப்திய எதிரிகளோடு இணைத்துக் கொள்ளலாம் என்று கருதினார் [6]. இதன் தொடர்ச்சியாக எகிப்தில் பெருகிவரும் இசுரேலியர்களின் மக்கள் தொகையைக் குறைப்பதற்காக புதியதாகப் பிறந்த ஆண்குழந்தைகள் அனைவரையும் கொன்று விடும்படியும் ஆணையிட்டார். குழந்தையினைக்கொல்ல மனம்வராத மோசேயின் தாயார் குழந்தை மோசேவை ஒரு கூடையில் வைத்து நைல் நதியில் மிதக்கவிட்டார். கூடை எகிப்தின் இளவரசியால் கண்டெடுக்கப்பட்டு ஓர் அரசக் குடும்பத்தின் தத்துப்பிள்ளையாக வளர்க்கப்பட்டார். ஒரு எகிப்தியனைக் கொன்றதற்காக மிதியான் நாட்டில் பதுங்கியிருந்த போது இவருக்கு கடவுள் அருள் கிடைத்ததாக நம்பப்படுகிறது[7]. தொல்பொருளியளாலர்களிடையே விடுதலைப் பயணம் குறித்தும், மோசேயின் வரலாற்றுத் தன்மைக் குறித்தும் ஒத்தக்கருத்தில்லை.[3][4][5] பலர் இதனை வெண்கலக் காலத்தின் முடிவில் இசுரயேலர்களால் கானான் நாட்டில் இயற்றப்பட்ட புனைவுக்கதையாகக் கருதுகின்றனர்.

    202–204 "தாங்களும்போய்ச்
    சண்டைசெய்து நாடுசயங்கொள்ளு மோர்வுணர்வே
    கொண்டதனால் பண்டைவினை கூட்டியிடச் – சண்டையிலே 203
    வெற்றி யடைந்தம் மிலேச்சர்க் கதிபதியாய்
    மற்றவரைத் தங்கண் மயமாக்கி – உற்றிடுங்காற்"
- அவர்கள் கூட்டமாகக் கூடிச் சென்று சண்டையிடு அந்நிய நாஅடுகளை வெற்றி கொண்டு தம்முடைய ஆதிக்கத்தைப் பரவச் செய்யும் உணர்வோடு பிற பகுதியின்ரோடு போரிட்டு வென்று மோசசின் கொள்கை வயமாக்கினர். அவ்வாறு அக்கூட்டத்தினர் பிரித் தம் வயமாக்கி வரும்பொழுது,

    205-207 பூசாரி மார்க்குப் புகழும் பெருவாழ்வும்
    காசாதி சேருதலும் காரணமாய்க் - கூசாது 205
    கோர்க்கும் விடுகதையின் கொள்கையயாய்ப் பல்பொருள்சேர்
    தீர்க்கதரி சனங்கள் செப்பியே – பார்க்குள்ளே 206
    ஏழைமதி யோர்கள்தமை யெத்திமத மாய்ச்சேர்த்திப்
    பீழை பெருகப் பிழைத்தார்காண்" –
- பூசார்களுக்குப் புகழும் பொருள் முதலியனவும் வசதியான வாழக்கையும் சேருதலையும் காரணமாகக் காட்டிக் கற்பனையாக இறைவனின் தீர்க்க தரிசனங்களைத் தாம் பெற்றதாகக் கதை கட்டிவிட்டு மக்களைத் தம் மதத்தில் சேர்த்துப் துன்பம் பெருக வாழ்ந்தார்கள்

    207-209 "– கோழையா
    அந்தவுரைப் பௌவத்தில் ஆழாமல் தேற்றியிட
    முந்தச் சகுன மொழிவதொத்து – வந்ததிலே 208
    கள்ளக் குருமார் கணக்கில்லோர் தோன்றியுல
    கெள்ள வெளிப்பட் டிறந்ததற்பின் – பிள்ளையெனத்
    தச்சக் குலத்திலொரு தாய்வயிற்றின் நால்வரொடு
    முச்சப்பட வொருவன் உற்பவித்து - நச்சியே 210
    முப்பான் வயது முடியளவுஞ் சூனியங்கற்
    றப்பாற் சகப்புரட்ட னாகியே"
- தச்சர் சாதியிலே ஒரு தாய் வயிற்றில் நான்கு பேரில் முன்னவனக ஒருமகன் பிறந்தான். அவன் முப்பது வயது வரையிலும் சூனிய மந்திரங்கள் கற்று உலகத்தை ஏமாற்றும் சகப்புரட்டனாக வாழ்ந்தான்.

    211-212 இப்பாரில்
    ஏசுவெனப் பேர்பூண் டிருக்களவுங் கல்விமணம்
    வீசு மிடங்களிலு மேவாது"–
- அவன் இந்தப் பாரிலே ஏசு எனப் பேர் பூண்டு கல்வி மணம் வீசும் இடங்களில் சேராது;
    212-214 "– பேசும்
    வலைஞர் பரதர் மலசர் முதலான
    புலைஞருட னுறவு பூண்டு - மலையா 213
    திகளில்வசித் தலைந்தும் ஏழைகள் தம்மாலே
    புகழாதி மேன்மை பொருந்தி"
- வலைஞர், செம்படவர், மலசர் முதலிய கீழ்மக்களுடன் உறவு கொண்டு மலைக் குகைகளில் வாழ்ந்து அலைந்து கல்வி அறிவற்ற பாமர மக்கள் புகழ அவர்களில் மேம்பட வாழ்ந்தான்.

    214-216 "மகிதலத்தில்
    ஊமைக்குத் திக்குவா யுற்பாத பிண்டமென்று
    நாமறியக் கூறும் நகுமொழிபோற் – சாமியமாய்க் 215
    காட்டு மனிதர்கட்குக் கண்கட்டு வித்தை செய்து
    காட்டி யவராலே கனம்படைத்து"
- உலகத்தில் ஊமைக்குத் திக்குவாயன் (திருத்தமாகப் பேசாமல் உளறினாலும்) உற்பாதபிண்டம் என்று பழமொழியை நாம் வேடிக்கையாக வழங்குவதைப் போல ,,இவன் தன்னைக் கடவுளுக்கு நெருக்கமாக இருப்பதைப் போலக் காட்டு மனிதர்களுக்குக் கண்கட்டுவித்தைகள் காட்டி, அக்காட்டுமிராண்டி மனிதர்களாலே பெருமை படைத்து;

    216-217 ‘–மேட்டிமையோர்
    பொய்ய னிவன்செய்யற் புதங்களும்பொய்யென் றுவசை
    செய்ய மறைந்து திரிதந்து"
- மேன்மையுடையோர் பொய்யன் இவன் இவன்செய்கின்ற அற்புதங்களும் பொய் என்று அறிந்து கூறவே, மறைந்து திரிந்தான்.

    217-219 – வையத்திற்
    சஞ்சரிகுங் காலத்தே தந்தொழிலுக் கானியென்று
    வஞ்சவினைப் பூசாரி மார்திரண்டு –நெஞ்சில் 218
    விரோதத்தி னாலவன்றன் மேலே தஞ்சாமித்
    துரோகமெனுங் குற்றஞ் சுமத்த"–
- இவ்வாறு இவன் மறைந்து திரிகின்ற காலஹ்திலே, வஞ்சகத் தொழில் செய்யும் பூசார்மார்கள் இவன் செய்யும் அற்புதங்களால் தங்கள் பிழைப்புக்குக் குந்தகம் விளையும் என்று அஞ்சி ஒருங்கு திரண்டு நெஞ்சில் பகை உணர்வோடு தங்கள் கடவுளுக்கு எதிராக அவன் துரோகம் செய்கின்றான் என்னும் குற்றம் சாட்டினர்.

    219-220 "ஏரோதென்பான்
    அற்புதங்கள் செய்தக்கா லாக்கினைசெய் யாதுயிரைத்
    தப்பு விப்பதாய் வாக்குத் தந்திடவும் –
- ஏரோது என்னும் பெயருடைய அரசன் உண்மையாகவே அற்புதங்களைச் செய்து காட்டினால் தண்டியாது தப்புவிப்பதாக வாக்குறுதி தந்தான்.

    220-223 "–அப்படிச்செய்
    துய்யாமல் நெஞ்சம் உலர்ந்து பிலாத்தென் பவன்றன்
    கையாற் கொலைதீர்ப்புக் கட்டளைபெற் – றையோ 221
    சிலுவைதனி லேயழுது சின்னப் பட்டேறி
    வலுவிலுயிர் போக வருந்தித் - தலைவிதியாற் 222
    செத்தபின்னர்"
- ஏசு அவ்வாறு அற்புதம் செய்துகாட்டி உயிர் பிழைக்காமல், உள்லமும் உயிரும் வாடி உலர்ந்து, கொலைத் தண்டனை பெற்றுப் பிலாத்து என்பவனின் கையால் கொலைத்தண்டனை பெற்று, ஐயோ! சிலுவைதனிலே அறையப்பட்டு, அழுது, சீரழைந்து சின்னப்பட்டு, வலுவில் உயிர் போக வருந்தி இறந்தான்.

    223- 224 "செத்தபின்னர் அன்னவன்றன் சீடர்சில ரந்தச்ச
    வத்தைத் திருடி மறைத்துவிட்டுச் – செத்தோன் 223
    கடவுளே யென்றுமிந்தக் காசினியோர் பாவம்
    படக்கழுவிற் பட்டிறந்தா னென்றும் –"
- அவ்வாறு பண்டைத் தீவினையால் செத்தொழிந்த பின்னர் அவனுடைய சீடர்சிலர், அவனுடைய சடலத்தைத் திருடி மறைத்து வைத்துவிட்டுச் சிலுவையில் தண்டனை பெற்று மரித்தவன் கடவுளே என்றும் உலகத்தவரின் பாவங்களைப் போக்கக் கழுவினல் அறையப்பட்டு இறந்தான் எனவும்

    224-226 "–புடவிமிசை
    மாரியம்மை பேச்சியம்மை மாடன்பொம்மன் மதுரை
    வீரனு தேவென்னும் விதம்போலும் – ஊரகத்தே 225
    செத்தார்மேற் பொய்ப்புகழைச் சேர்க்கும் வகைபோலும்
    பித்தேறி வாயால் பிதற்றுங்கால்"
- மாரியம்மன்,பேச்சியம்மன், மாடன், பொம்மன், மதுரைவீரன் போன்றோர் இறந்த பின்னர் தெய்வம் என்று பொய்ப்புகழ் சேர்த்துப் பாமரமக்கள் கிராமங்களில் அழைக்கப் பட்டதைப் போல , இவனும் பித்துக் கொண்டார் வாயால் தெய்வம் எனப்பட்டான்.

    226-227 "ஒத்துப்
    பவுலென்னும் பொய்யிற் பயின்றோன் ஒருவன்
    கவுலாய்த்தன் பண்டைமதங் கைவிட்டு"
- (கவுல்-கவல்- அச்சம்) அந்தப் பித்தேறியவர்களுடன் ஒத்துப் பவுல் என்பான் ஒருவன், பொய் பேசுதலிலேயே பலகாலம் பயின்றவன், அச்சத்தினால் தன்னுடைய பழைய மதத்தினைக் கைவிட்டு.

    227- 229 "– அவலமுள்ள
    ஏசுவின்றன் சீட ரெழுதிய தென்றுமேசு
    பேசுசுவிசேட ப்ரசங்க மென்றும் – வாசகங்கள் 228
    கூட்டிக் குறைத்தெழுதிக் கொண்டுகுருப் பட்டமுடன்
    நாட்டினிலிவ் வேசுமதம் நாட்டினான்"
- ஏசுவின், வருந்துகின்ற சீடர் எழுதியதென்று பேசப்படுகின்ற ‘சுவிசேஷ பிரசங்கங்கள்’ என்னும்வாசகங்களை எழுதி வைத்துக் கொண்டு குருப்பட்டத்துடன் நாட்டினில் இந்த ஏசுமத்தைத்தினை நாட்டினான்.

    229-230 "-கேட்டனையோ
    வந்தமதம் இன்னும் அனேகவகை யாய்ப்பிரிந்த
    விந்தையெல்லாஞ் சொன்னால் விரியுங்காண்"
- பவுல் தொடங்கிய அந்தமதம் மேலும் பலவகையாய் பிரிந்தது. அவ்வாறு பிரிந்த கதையெயைச் சொல்லத் தொடங்கினால் அது விரிந்து செல்லும்.

    230- 232 "– அந்தமத
    ஆசிரியருந் தெருக்க ளாதியிலே செய்யுமுப
    தேசிகரும் பட்டத்திற் றேர்ந்தவிசு – வாசிகளும் 231
    எம்மதத் தையும்வீண் இகழ்ச்சிசெயினும் பொய்யாந்
    தம்மதத்தை மெய்யென்று சாதிக்க –"
- அந்த மதத்தின் குருக்களும் தெருமுனைகளில் சமயப் பிரச்சாரம் செய்யும் உபதேசிகளும் பட்டம் பெற்ற விசுவாசிகளும் பிற எந்த மதத்தினையும் வீணாக இகழ்ந்து பழித்தாலும், பொய்யில் புனைந்த தங்களுடைய மதத்தை மெய்ஞ்ஞானமளிக்கும் உண்மையான மதம் என்று சாதித்தாலும்;

    232-234 – அம்மதத்தைத்
    தாபித்தோன்றா யுதரந் தங்கி மதியம் நிறைந்து
    சோபித்தி யோனித் துவாரம் வந்துங் – கோபித்துக் 233
    கொல்ல வருவாரென்று கூசிப்பயந் தொளித்தும்
    எல்லவருங் காணவழு தேயிறந்தும் 234
- அந்தப் பொய்மதத்தைத் தோற்றுவித்தவனாகிய ஏசு, ஒரு தாயின் வயிற்றில் தங்கி, பத்து மாதங்கள் கருப்ப வாசம்செய்து , தாயும் தானும் கருப்ப வாதனையுற்றுத், தாயின் யோனித் துவாரம் வழியே வெளியே வந்தும், பகைவர் தன்னைக் கோபித்துக் கொல்ல வருவர் என்று நடுங்கிப் பயந்து ஒளித்து வாழ்ந்தும், எல்லோரும் காணக் ‘கடவுளே என்னைக் கைவிட்டு விட்டீரே’ என்று அழுதுகொண்டே சிலுவையில் இறந்தும்;

    234-236 "-புல்லும்
    உடலம்நரம்பென் புதிரந் தசைசேர்ந்
    திடவிளமை யாதி பருவங்கள் – அடைவாகக் 235
    கொண்டே மனிதகுணங் கொள்கையில் பேதமதா
    யுண்டே யுறங்கி யுழன்றவெலாங் – கொண்டே"
- எலும்பு நரம்பு தசை குருதி ஆகிய நாற்றமுடைய எல்லாம் பொருந்திய உடலைப் பொருந்தி, குழவி, பாலர், இளையோர் ஆகிய பருவங்களை எல்லாம் முறையாக அடைந்து, மனிதர்களுக்கு உரிய குணபேதங்கள் உண்டி, உறக்கம் ஏனை வருத்தம் எல்லாம் கொண்டு,

    236-238 "அவ்வேசுமனிதனே யென்பார் வாய்க்குப் பயந்து
    யோசப் பெனுங் கருமானுக் குமணம் – பேசிவைத்த 237
    கன்னிவயிற்றிற் றெய்வீகத்திலுதித்தா னென்றுஞ்
    சென்னிமிசை யாவிவந்து சேர்ந்ததென்றும் "
- அந்த ஏசு ஒரு மானுடப் பிறவியே தெய்வமன்று என்று பேசுவாரின் வாய்மொழிக்குப் பயந்து, அவ்வேசு, யோசெப்பு என்னும் பெயருடைய கருமானுக்கு மணம் பேசி வைத்திருந்த கன்னி வயிற்றில், (ஆணின் தொடர்பின்றித்) தெய்வீகத்தில் உதித்தான் என்றும், அவனுடைய தலயுச்சியில் ஆவி வந்து சேர்ந்தது என்றும்;

    238 -241
    "-தன்னுயிர்போய் செத்த மூன்றாநாள்தன் சீடர்கள்காணப் பிழைத்து
    முத்தியடைந் தானென்று முன்னுரைவந் -தொத்ததென்று239
    மானிடர்தந் தத்துவமும் வானவர்தந் தத்துவமும்
    ஆனவிரு தத்துவத்தி னானென்றும் – ஞானியர்கள்
    விண்மீ னொன்றினாலே வெளிப்படக் கண்டாரென்றும்
    எண்மீறி யற்புதம்வந் தெய்துமென்றும்"
- தன்னுடைய உயிர் நீங்கிச் செத்த மூன்றாம் நாள் தன்னுடைய சீடர்கள் காணக் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தான் என்றும், பின் முத்தி அடைந்தானென்றும், இவ்விரு நிகழ்ச்சி குறித்து முன்னமேயே தெய்வக் குறிப்புக் கிடத்ததென்றும் அக்குறிப்புப் பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு ஒத்திருந்தது என்றும் இவனிடத்தில் மானுடவியல்பும் தேவ இயல்பும் இரண்டும் இருந்தன என்றும், இவனுடைய தெய்வீக நிலையை ஞானியர்கள் விண்மீன் ஒன்று வெளிப்படக் கண்டனர் என்றும் இதனால் மனத்தாலும் எண்ண முடியாத அற்புதங்கள் தோன்றும் என்றும்

    241-242 "-உண்மையிலே
    இல்லாக் கருமமெல்லாம் ஏசுதலை மேற்சுமத்தி
    எல்லாரும்நம்பு மெனவிசைப்பார்"
- உண்மையில் நிகழாத பொய்யான நிகழ்ச்சிகளையெல்லாம் ஏசுவின் மேலேற்றி, அதனைப் பிறர் கட்டாயம் நம்ப வேண்டும் என்று கூறுவார்.

    243-244 "–அல்லாத
    வேற்றுமதத்துட் குறிப்பாய் மேவுபொருளைத் தமக்குத்
    தோற்று விதமாய்ப் பொருள்கள் சொல்லியே – தூற்றுவார்"
- தங்களுடைய மதமல்லாத ஏனைய மதங்கள் குறிப்பாகக் கூறும் கருத்துக்களை, தங்களுக்குத் தோன்றும் விதமாகத் திரித்துப் பொருள் சொல்லியே அம்மதங்களைப் பழித்துத் தூற்றுவர்.

    244-245 "மட்டடங்கா மோகி மடலூரத்தான் விரும்பப்
    பட்டவளைப் போலெழுதும் பாவனையுஞ் – சிட்டர் 244
    அரியவொலி வடிவா மக்கரத்தை யாருந்
    தெரிய வரிவடிவிற் றீட்டுதலும் – பொருவவே" 245
- காமுகன் ஒருவன் மடலூரும் பொருட்டுத் தான் காதலிக்கும் பெண்ணின் வடிவத்தினை ஓவியமாகத் தீட்டும் பாவனயையும், ஞானியர் உபதேசிக்கும் அரிய ஒலிவடிவாம் மந்திர எழுத்துக்களை வரிவடிவில் தீட்டுதலையும் போலவே

    246 "தம்மனத்துட் கொண்ட தலைவனைத்தந் தியானாதி
    செம்மைபெறவோர் வடிவஞ் செய்துளரேல் "
- தங்களுடைய மனதில் கற்பனையாக அமைத்துக் கொண்ட தலைவனத் தந்து, அது குறைவுபடாத செம்மையாக மைய ஓரு வடிவஞ் செய்துள்ளனர்.
எனவே,

    246- 248 "– அம்மவவர்
    நுந்தேவின்கண் நும்மை நோக்குமோ காலாலே
    வந்தேநீர் கேட்கும் வரம்தருமோ – வந்தே
    கதிதருமோ செய்தானுங் கம்மியனே யன்றொ
    மதியிலிகா ளென்றெமரை வைவார்"
- உங்களுடைய கடவுளாகிய அவர்களின் கண்கள் உம்மைப் பார்க்குமோ? தம் காலாலே நடந்து வந்து, நீங்கள் வேண்டுவதைக் கேட்டு வரம் தருமோ? வந்தே நற்கதி தருமோ? உங்கள் கடவுளரைச் செய்தவன் கம்மியன் அல்லவா? அறிவற்றவர்களே என்று எங்களைப் பழித்து வைவர்.

    248-251 "– பதிதான்
    இணையில் ஒருவ னெனினும் அவனைச்சேர்ந்
    தணையு மடியர்பல ராமே – துணையாக 249
    மன்னவனைச் சேவைசெய்வோர் மந்திரிக ளாதியரை
    முன்னர்ப் பணியு முறைபோல – வுன்னிப் 250
    பலவடியார் தம்மைப் பணிந்தா லுமக்குப்
    பலதேவ ரென்றே பழிப்பார்" –
- இறைவன் ஒருவனே; எனினும் அவன் அருள் அடைந்து அவன்பாற் சேர்ந்த அடியர் பலர் உளராவர். மன்னனுக்குத் துணையாக அவனைச் சார்ந்து சேவை செய்யும் அமைச்சர் முதலியவர்களைப் பணிதலைப்போல நினைந்து, அடியவர்களை வணங்கினால் நீங்கள் பலதெய்வ வணக்கம் உடையவர்கள் எனப் பழிப்பார்கள்.

    251- 253 "- குலதேவன்
    ஏகன்தமக் கென்பார் ஏகோவா வொன்றுபுறாக்
    காகவுயி ரொன்றேசுக் கத்தனுமொன் – றாகவே 252
    தோன்றிய வெவ்வேறு சொருபகுண பேதமுள்ள
    மூன்றும் அதன்மேலும் மொழிவார்கள் "
- தங்கள் குலதெய்வம் ஒன்றே என்பார்; எகோவா ஒன்று; புறாவுக்காக உயிரொன்றே; ஏசுவாஅகிய கர்த்தனுக்கும் ஒன்றே; ஒன்றே வெவ்வேறு சொரூப குண பேதமுள்ள இம் மூன்றகத் தோன்றின என மேலும் மொழிவார்கள். [நற்செய்திகளின்படி, ஆண்டவராகிய இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவர்மீது புறா வடிவில் தூய ஆவி இறங்கி வந்தார். ... எனவே புறா என்னும் அடையாளம் கிறிஸ்துவுக்குப் பொருத்தமே. ..... ஜேம்ஸ் மன்னனின் தமிழ் விவிலியம் இதனை "தேவன்" என மொழிப்பெயர்க்கிறது]

    253-254 "– ஊன்றியவவ்
    வேசுவெகு நீதிஇசைத் தான்என்பா ரிப்பாற்
    பேசுலகு நாகரிகம் பெற்றதென்பார் "
- ஏசு நீதிகள் பல உரைத்தான் என்றும்,அதனால் இந்த உலகம் நாகரிகம் பெற்றது என்று கூறுவார்.

    254-256 "– ஏசுதான்
    மாதாபோற் றோன்றி வகுத்ததெனு நீதியெலாந்
    தீதார் புன்கல்விச் சிறார்களெடுத் – தோதாத்தி 255
    சூடியெனும் புத்தகத்திற் சொல்லியுள நீதிகளிற்
    கோடியிலோர் கூறெனவுங் கூடுமோ"
- ஏசு அன்னைபோல் தோன்றி வகுத்தது என்னும் நீத்கள் எல்லாம் மடமை உடைய இளஞ் சிறார்கள் எடுத்து ஓதும் ஆத்திச்சூடி எனும் நூலில் சொல்லியுள்ள நீதிகளில் கோடியில் ஒரு கூறு எனவும் சொல்லத் தக்கதாகாது.

    256-257 "– நாடில்
    இதுகாலமிக்க இழிதொழில் பொய்ச்சான்று
    மதுபானம் நாகரிகம் ஆமோ" –
- ஆராயின், இக்காலத்தில் மிக்க இழிதொழிலாகிய பொய்ச் சான்று கூறுதல், மதுபானப் பழக்கம் போன்றன நாகரிகம் ஆகுமோ?

    257 -259 "பொதுமையறத்
    தேவனுலகத்தைச் சிருட்டித்த காரணமும்
    பாவம்வந் தவாறும்அந்தப் பாவந்தான் – போம்வழியும் 258
    எந்தவகை யென்றக்கால் எவ்வுயிருங் தோற்றத்துள்
    வந்தவகை சொல்ல அறியாமல்"
- குழப்பமின்றித் தேவன் உலகத்தைச் சிருட்டித்ததன் காரணமும் உலகத்தில் பாவம் வந்த முறையும் அந்தம் பாவம் கழியும் வழியும் எப்படி,, உயிர்களின் பிறப்புக்குக் காரணமென்ன என்று வினவினால் இவற்றிற்குத் தெளிவான் பதில் சொல்ல அறிவின்றி;

    259-260 "– புந்தியிலாத்
    தஞ்சிறர் சோறுண்ணத் தாயர்சொல்லுங் கதைபோல்
    எஞ்சியுரைவைவி லெனுந்திரட்டுட் – சஞ்சரித்துச்" 260
- அறிவு வளராத இளஞ்சிறார்களுக்குச் சோறூட்டத் தாய்மார் சொல்லுங் கதைபோல, பைபில் என்னும் கதைத் திரட்டுள் சென்று;

    261-263 "சாமியசை வாடச் சலம்வரும் பின்னேயொளியும்
    பூமியொடு வானும் பொருந்தவரும் – பூமியைநீ 261
    தானேபுல் பூண்டாதி தாவென்னச் சாற்றவரும்
    வானே ரிருசுடரும் வந்துதயம் – ஆனதன்முன் 262
    நாளுண்டென் றோதவரும் நாட்டைத் தனைவணங்க
    வாளுன்னிச் சிட்டித்த தாக்கவரும்"
- கர்த்தரான சாமி ‘வா’ எனச் சொன்னவுடனே நீர் வரும்; பின்னே வெளிச்சமும் பூமியும் வானும் பொருந்தி வரும். பூமியை நோக்கி ‘நீ புல்பூண்டு தாவரங்களைத் தா’ எனச் சொல்ல அவைவரும்; வானில் சூரியனும் சந்திரனும் வந்து தோன்றுவதற்கு முன் நாள் உண்டாததாகக் கூறவரும்; தேவன், தமது சாயலாகவும் தமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்கி அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் மிருக ஜீவன்களையும் பூமியனைத்தையும் பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளப்படைத்தார்.

    263-264 "– மூளுமுன்னைச்
    சென்மமிலைச் சென்மத்திற் சேர்ப்பதற்குச்செய்பழய
    கன்மமிலையென்றே களரவரும்"
- பிறவி மூளுவதற்குக் காரணமான முன்னைப் பிறப்பில்லை; பிறப்பி சேர்ப்பதற்கான பழைய வினை என்றே கூற வரும்.

    264-265 "– நன்மைசெய்ய
    வாதமெலும் பாலொருபெண் ணாக்கியவ னுக்களித்துச்
    சாதகஞ்செய் திட்டதெனச் சாற்றவரும் "
- ஆதாமுக்கு உதவ அவன் எலும்பிலிருந்து ஒரு பெண்ணை ஆக்கி அவனுக்குத் துணை செய்திட்டதென ச் சொல்ல வரும்.

    265-267 "– ஏதனெனுந்
    தோட்டமொன்று செய்தந்தத் தோட்டத்திற் சீவமரங்
    காட்டி யதிலான கனிபுசித்தாற் – கேட்டினாற் 266
    சாவாய்என் றோதவரும்"
- ஏதன் என்னும் பெயருடைய தோட்டம் ஒன்றை அமைத்து, அந்தத் தோட்டத்தில் சீவமரங்களைக் காட்டி அம்மரத்தில் உண்டான கனியினைப் புசித்தால் கேடு வரும் அதனால் நீ சாவாய் என்று கூற வரும்;

    267-268 "சர்ப்பமொன்று சற்பனையாய்
    மேவியதை யுண்ணும் விருப்பளித்துத் – தேவியினால்
    உண்ணுவிக்க வல்லதென ஓதவரும்"
- பாம்பு ஒன்றுவஞ்சனையாக வந்து அந்தக் கனியை உண்ணும் ஆசையை ஊட்டி உண்ணுவிக்கும் ஆற்றல் உடையதெனக் கூற வரும்.

    268- "உண்டவுடன்
    கண்ணுடைய ராய்மானங் காணவரும்"
- அந்தக் கனியை உண்டவுடன் அறிவு தோன்றி தான் அம்மணமாக நிற்கும் நாண அவமானம் காண வரும்.

    268- 269 "– கண்ணாலே
    நன்மைதின்மை ஓர்ந்து நரனுமொளி பெற்றுயர்ந்த
    தன்மைகண்டு பொங்கிச் சபிக்கவரும்"
- விலக்கப்பட்ட கனியை உண்டதனால் அறிவு பெற்று நன்மை தீமைகளை ஆராய்ந்து உணர்ந்த மானுடன் அறிவு பெற்றுயர்ந்த மேன்மையைக் கண்டு பொறாது பொங்கிச் சபிக்க வரும்.

    269-270 "– முன்மெலிந்தே
    ஆறு நாளுரை யமைத்தலுப்ப தாகியிளைப்
    பாறுநாளொன்றென் றறையவரும் –
- கடவுள் ஆறு நாட்கள் உழைத்துக் களைத்து மெலிந்து, ஏழாம் நாள் இளைப்பாறும் நாள் என்று கூற வரும்.

    270-271 "கூறுலகம்
    பீடுபெறன் முன்னமே பெய்துநனைந் துளதா
    மூடுபனி யென்றும் மொழியவரும்"–
- நிலவுலகம் தோன்றுவதற்கு முன்னமேயே மூடுபனி பெய்து நனைந்து (எது?) உளதாகக் கூறவரும்.

    271-272 "– நாடிலுயிர்
    ஒன்றி லிருந்துமற் றொன்றுண்டாகிப் பல்கியதாம்
    என்றெ டுத்துக் கூசா தியம்பவரும்"
- ஓருயிரிலிருந்து மற்றொரு உயிர் உண்டாகி, இவ்வாறு பல்கியதென்று (அறிவில்லாமல்) கூசாது கூற வரும்.

    272-273 "சென்றவர்க்கு
    நித்தியமாம் சொர்க்க நிரயம் வகுக்க வரு
    நித்திரையாய்ச் செத்தவர்கள் நிற்கவரும்"
- இறந்து போனவர்களுக்கு நிரந்தரமாக சொர்க்கம் அல்லது நரகம் என விதிக்கும் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் உறங்கிக் கிடப்பது போல ஒரிடத்தில் கிடக்கச் செய வரும்.

    273-274 "மெத்தியே
    சீடர்களையூரெங்குந் தேடித் திரட்டுதலே
    பீடுடையசெய்கை யென்று பேசவரும் "
- ஊரெங்கும் திரிந்து கவர்ச்சியாகப் பேசிச் சீடர்களைத் திரட்டுதலே பெருமை மிக்க சமய ஒழுக்கம் எனப் பேச வரும்.

    274-275 "ஆடுமுத, லாமுயிரின் காதில் அமைத்தோன் உயிரினைஊ
    தாமையி னாற்சீவ னற்ற தாக்கவரும்"
- ஆடு மாடு முதலிய உயிர்களின் காதில் அவற்றைப் படைத்தோன் உயிரினை ஊதாமையால் அவை உயிரற்றவைகளாக்க வரும்.

    275- 276 "யாமெவையும், தீனியெனக் கொண்டுகொன்று தின்னவரும் வேதமென
    மானிடர்தங் காதையென வைக்கவ்ரும்"
- ஆடு மாடுகளை உணவாகக் கொன்று தின்ன வரும். மானிடர்களின் கதையை வேதமென மேலாக வைக்க வரும்.

    276-277 " மேனிரையே
    சாமியசைவாடச் சலமிருந்தால் அச்சலந்தான்
    பூமியிருந் தல்லாற் பொருந்துமோ – பூமியது
    முன்னே யுண்டாகி முடிந்துளதேல் தேவனதைப்
    பின்னேஉண் டாக்கியதாய்ப் பேசுவதென்’
- தேவன் அசைவதற்கு நீர் இருந்தால் அந்த நீர்தான் நிலமாகிய பூமியிருந்தாலன்றி இருக்குமோ? நீர் தங்கியிருப்பதற்குப் பூமி இருந்ததென்றால் தேவன் மீண்டும் அதைப் படைத்தான் எனக் கூறுவதேன்?(தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் ஆதியாகமம் 1.2பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும் அது ஜலத்தைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாய விரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாய விரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவு உண்டாக்கினார் அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் எனப் பெயரிட்டார். தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும் சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார். 1.2-10)

    278-279 - முன்னம் இருட், கண்ணுறந்த ஏகோவா காரிருளும்
    பேரொளியும்பண்ணினான் என்றல் பழுதலவோ"
- முதலில் இருளில் இருந்த ஏகோவா பின்னர்க் காரிருளும் பேரொளியாகிய பகலும் படைத்தான் என்று கூறுவது பிழை அல்லவா?

    279-280 "-மண்ணதனைப், பல்பூண்டைச் செய்யப் பணித்தால் அஃதெல்லாப்
    புல்பூண்டுந் தேர்ந்து புரிந்திடுமோ?"
- -மண்ணைப்போய் பலவகையான தாவரங்களையும் படைத்திடு என்று கட்டளையிட்டால் அது எல்லாவகையான புல் பூண்டுகளையும் ஆராய்ந்து தெளிந்து படைக்க வல்லதாகுமோ?(பின்பு தேவன், பூமியானது ஜாதி ஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும் ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதி ஜாதியாகப் பிறப்பிக்கக் கடவது, என்றார். அது அப்படியே ஆயிற்று. அதி 1. 11,12)

    280- 281 "- அல்லும் பகலும் இதுவென்னப் பகலவ னில்ளாமற்
    புகல வகையுண்டோ புகலாய்"
- இரவும் பகலும் இதுவென்று சுட்டச் சூரியன் இல்லாமல் கூற இயலுமா?நீயேசொல்லு (1.13 சாயங்காலமும் விடியற் காலமுமாகி மூன்றாம் நாளாயிற்று..இருளும் பகலும் படைத்ததாகக் கூறியதே அன்றி பகல் தோன்றுவதற்குக் காரணமான சூரியனைக் கூறவேயில்லை)

    281 -282 "- பகலவனாம், எஞ்சுடர் இல்லாமல் தினம்மூன்று சென்றதாய்
    அஞ்சாது உரைப்பதும் ஓர் ஆச்சரியம்"
- -செஞ்சுடராகிய சூரியனே இல்லாமல் மூன்று நாட்கள் கழிந்தன என்று கூசாமல் சொல்லுவதும் ஒரு விந்தையே" (1.13 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாளாயிற்று. 1.14. பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்கத் தக்கதாக வானம் என்ற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக் கடவது என்றார். அப்படியே ஆயிற்று. தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச்சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 1.19 சாயங்காலமும் விடியற் காலமுமாகி நாலாம் நாளாயிற்று)

    282 -283 "– தஞ்சாமி
    மானிடரின் சாயலது வாய்த்துளனேற் சாயலுக்குத்
    தானிடமாம் ரூபம்வந்து சாராதோ"
- -தங்களுடைய சாமிக்கு னானிடரின் சாயல் வாய்த்துளது என்றால் அந்தச் சாயலுக்குத் தக்க உருவமும் வந்து சேராதோ. அதென்ன ‘பின்பு தேவன் நமது சாயலாக்வும் நமது ரூபத்தின்படியேயும் மனுசனை உண்டாஆகுவோமாக" என்று கூறுவது?(1.26) உருவத்தை விட்டுச் சாயல் தனியாக இருக்குமோ? (Then God said," Let us make man in our image, after our likeness)

    283 -284 " - வேனவனைத்
    தோற்ற வரூபியெனச் சொல்லுவத்தித் தோற்றமெலாந்
    தோற்றா விடத்துத் தொழிலென்னோ’
- (‘வேனவனை’ என்பது அச்சுப்பிழையோ என ஐயம். தேவனை என இருந்திருக்குமோ ?) தேவனை அரூபி (உருவமற்றவன்) என்றுசொல்லுவது இங்குப் படைக்கப்பட்டன என்று சொல்லப்படுவன படைக்கப்படுவதற்கு முன் அவனுடைய செயல் யாது?

    284-285 –" -ஆற்றலுடன்
    தன்சாயல்போல் நரனைத்தந்து நரன்கண்ணிலனேற்
    கொன்சாருந் தேவன் குருடனோ"
- தன்னுடைய சாயலிலே நரனைத் தந்தா னென்றால், ஒருவன் குருடனாகப் பிறந்திருந்தால். அவனைத் தன் சாயலிலே படைத்த உங்கள் இறைவனும் குருடனோ.

    285–287- "முன்சேர்ந்து
    தன்னை வணங்கச் சமைத்தானேன் மாக்கள்பலர்
    என்னைவணங் காதிகழ்ந் துரைத்தல் – முன்னை 286
    வினையின்றிச் சீவர்களை மேல்கீழாய்ச் செய்த
    தெனையோ விருப்பு வெறுப்பென்னோ "–
- தன்னை வணங்க நரர்களை இறைவன் படைத்தானென்றால், அவர்கள் தன்னை வணங்காது இகழ்ந்து பேசுதல், அவர்கள் முன்செய்த வினையே இல்லாதபோதும் அவர்களைக் கீழ்மக்களாகவும் மேன்மக்களாகவும் வேறுபடுத்திப் படைத்தல், தான் படைத்த மக்கள் சிலரிடம் வேறுப்பும் சிலரிடம் விருப்பும் காட்டும் ஓர வஞ்சனையல்லவா? (ஆன்மாக்கள் முன்பு செய்த வினையே அவற்றினிடையே காணப்படும் ஏற்றதாழ்வுகளுக்குக் காரணமாகும். காரணமின்றி ஏற்றத் தாழ்வுகளுடன் இறைவன் படைத்தலைச் செய்யான்.)

    287– 288 "- மனையாளை
    நல்லதுசெய் தோம்ப நரனெலும்பி லேபடைத்தால்
    அல்லதுவுஞ் செய்தல் அழகேயோ"
- நரனுக்கு நன்மை செய்வதற்கு அவனுடைய உடம்பிலிருந்தே எடுத்த எலும்பிலே படைத்த பெண் அவனுக்குக் கெடுதி செய்வது அழ்காகுமா? (1.2. 18. த்கேவனாகிய கர்த்தர் மனுஷன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். 21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையைவரப்பண்ணினார். அவன் நித்திரையடைந்தான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதியினால் அடைத்தார். 22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.)

    288-289 "- நல்லதென
    ஒன்றை நினைக்க அதுவொழிந்திட் டொன்றாயிற்
    றென்றல் கடவுட் கியல்பாமோ –"
- நல்லது என ஒன்றைப் படைத்தால் அது தீயதென ஆதல் கடவுளின் அறிவாற்றலுக்குப் பொருந்துமோ? (மனுஷனுக்குத் துணை ஆக தேவன் மனுஷியைப் படைத்தான். ஆனால் அவள் அவனைப் பாவியாக்கினாள். நல்லது செய்ய எனக் கடவுளால் படைக்கப்பட்ட மனுஷி தீயவளானால், தான் செய்ய முனைந்த ஒன்றைத் திறம்படச் செய்து முடிக்க இயலாமை கர்த்தருக்கு இழிபல்லவா?)

    289– 291"- அன்றவனோர்
    தோட்டமன்று செய்தததிற் தோற்றும் பலன்பெறவோ
    வாட்டமிலாச் சீவ மரம்வைத்த – நாட்டந்தான் 290
    என்னோ மனிதனைமுன் னேமாற்றிக் கொல்வதற்கோ
    பின்னோக்க மென்னோநீ பேசிடாய்"
- உங்கள் தேவன் முன்னாளில் ஒரு தோட்டம் அமைத்தான்; அத்தோட்டம் அமைத்தது, அதிலிருந்து கிடைக்கும் காய் கனி முதலிய நல்ல பலன்களைப் பெறும்பொருட்டோ , அன்றிக் கேடு விளைக்கவோ? அழியாத சீவ மரத்தை வைத்த தெதன் பொருட்டு?உங்கள் தேவனின் கருத்து மனுஷனை ஏமாற்றிக் வஞ்சித்துக் கொல்வதற்கோ? நீயே சொல்லு.(1.2.9 தேவனாகிய கர்த்தர் , பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும் தோட்டத்தின் நடுவில் ஜீவவிருட்சத்தையும் நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். 17. ஆனாலும் நன்மைதீமை அறியத் தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டா. அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளை யிட்டார்.)

    291 -292 "-அந்நாளின்
    மாறாகத் தேவனையும் வஞ்சிக்கப் பாம்புளதேல்
    வேறாயோர் தேவால் விதித்துளதோ "
- அந்த நாளிலே தேவனையும் வஞ்சிக்க ஒரு பாம்பு உள்ளதென்றால், அந்த தேவனுக்கு எதிரான ஒரு தேவனால் படைக்கப்பட்டதோ? (1.3.1 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரியை நோக்கி ‘நீங்கள் தோட்டத்திலுள்ள சகலவிருட்சங்களின் கனியையும்புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்ன துண்டோ என்றது. 4. அப்பொழுது சர்ப்பம் ஸ்தீரியை நோக்கி நீங்கள் சாகவே சாவதில்லை. 5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். என்றும் நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. 7. அப்போழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து அத்தியிலைகளைத் தைத்து தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள்.)

    292-293 "- கூறுமந்தப்
    பாம்பு நரனுக்கரிய பார்வைதந்த தத்தேவன்
    சாம்பரிசு தந்தான் சதுரரெவர்"
- பாம்பு அந்த நரனுக்கு நன்மை தீமை அறியும் அறிவு கொடுத்தான். அந்தத் தேவன் சாபம் கொடுத்தான். பாம்பு தேவன் இவ்விருவரில் யார் பெரியோன் கூறுவாயாக.(1.4. 22பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்க வனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனா; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவ விருட்சத்தின் கனியையும் பறித்து என்றைக்கும் உயிரோடிராதபடிகுச் செய்ய வேண்டும் என்று ---)

    293- 294" – நாம்புசிக்கப்
    பக்கிமிருகத் தையுண்டு பண்ணினால் யாமவற்றின்
    குக்கிற் கிரையாதல் கூடுமோ"
- மனிதர்களாகிய நாம் புசிப்பதற்காக தேவன் பறவைகள் மிருகங்களை உண்டுபண்ணினார் என்றால் நாம் அவற்றின் வயிற்றினுக்கு இரையாதல் இயலுமோ? இயலாதே. (ஆனால் காட்டு விலங்குகள் மனிதரையும் அடித்துக் கொன்று புசிக்கின்றனவே)

    294-295 "-- மிக்கிளைத்து
    வேலைசெய்வோ ரோர்நாள் விடாயாற்ற நின்றிடுதல்
    போலிருப்போன் தேவனெனப் போகுமோ"
- வெளை செய்வோர் மிகவும் களைத்துப்போய் ஒருநாள் ஓய்வெடுத்துக் கொள்ளுதலைப் போலச் சலித்து நின்றிடுவோன் தேவன் எனப்படுவானா? (ஆகானே.) (1.2.2. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி , தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். )

    296 "-ஞாலத்து
    வானமழை பெய்யாமுன் வந்துபனி பெய்ததென்றால்
    ஏனதனைக் கேட்போ ரிகழார்கள் "
- வானம் மழை பொழிவதற்கு முன் பனி பொழிந்தது என்று கூறினால் , கேட்பவர்கள் அவ்வாறு இயற்கைக்கு மாறாகக் கூறுவோனை ஏன் இகழமாட்டார்கள். நிச்சயமாக இகழ்வே செய்வர். (1.2. 5. நிலத்ஹினுடைய சகல்விதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை.ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை. 6. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி பூமியெலாம் நனைத்தது)

    296 -297 "-தானியா
    மோர்விளக்கில் வந்தே உதிக்கும் விளக்கென்னச்
    சார்வதற்குச் சீவன் சடப்பொருளோ"
- -ஒருவிளக்கின் நெருப்பைக் கொண்டு மற்றொரு விளக்கினை ஏற்றலாம். அதைப் போல ஒரு சீவன் மற்றொரு சீவனைச் சார்பினால் உருவக்குவதற்கு, அது என்ன சடப்பொருளா?
(தானத்தில் இருப்பது தானி. தானம் – இடம். தானத்தில் இருக்கும் பொருள். தானம் –விளக்கு. தானி- தீபம். 1.2.7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான். சடம் மற்றொரு பொருளின் சேர்க்கையினாலே பரிணாமம் எய்தும் அல்லது உருமாறும் சித்து பரிணாமம் எய்தாது.)

    297 -299 "—நேரொவ்வாத் தீவினையி லற்பத்தைச் செய்தோர் பலசெய்தோர்
    தீவினையே முற்றாகச் செய்திடுவோர் –தீவினைக்கண்
    எத்தனையோ பேதமிருக்க அவையா வினுக்கும்
    நித்ய நரகத்தழுத்தல் நீதியோ"
- சிலர் அற்பமான பாவத்தைச் செய்திருப்பர். சிலர் தீவினையையே முற்றாகச் செய்திருப்பர். ஆன்மாக்கள் செய்த தீவினைகளிலே பல பேதமிருக்கும். அப்படியிருக்க அவ்வகை ஆன்மாக்கள் அனைத்தையும் மீளா நரகத்திருத்துதல் நீதியாகுமா? (நாம் எல்லோரும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தோம் (ரோமர் 3:23). அந்த பாவத்திற்கு ஏற்ற தண்டனை மரணமாகும் (ரோமர் 6:23). நாம் செய்த பாவங்கள் எல்லாம் தேவனுக்கு விரோதமானதாய் இருக்கிறத்தினாலும் (சங்கீதம் 51:4), தேவன் எல்லையில்லாதவர் மற்றும் நித்தியமானவராய் இருப்பதாலும், பாவத்தின் தண்டணையும், அதாவது மரணமும், எல்லையில்லாததும் நீத்தியமானதுமாக தான் இருக்க வேண்டும். நரகம் என்பது பாவத்தினால் நாம் சம்பாதித்த எல்லையில்லாத, நித்தியமான மரணமாகும்)

    301 –"நித்திரைதீர்
    ஞாயத்தீர்ப்புக் கொடுக்கும் நாளின்றே வந்துறினும்
    மாயும் மனிதரெல்லாம் வந்தெழுந்தாற் – சாயாது 300
    நிற்குமோ பூமி நெருங்க நெருங்க மென்மேல்
    ஒக்கவடைத் தாலும் உலகங்கொள் –கிற்குமோ"
- உறக்கம் நீங்கி, நியாயத் தீர்ப்புக் கொடுக்கும் நாள் இன்றே வந்தாலும் மாய்ந்தமனிதரெல்லாம் எழுந்து வந்தால் இந்த பூமி தாங்குமோ? நெருக்கி அடைத்தாலும் எல்லோரும் இருக்க இடம் கொடுக்குமோ?
(கொரிந்தியர்: 15.51. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
52. எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
53. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
54. Belief in the Last Judgment (often linked with the General judgment) is held firmly in Catholicism. Immediately upon death each soul undergoes the particular judgment, and depending upon the state of the person's soul, goes to Heaven, Purgatory, or Hell. A soul in Purgatory will always reach Heaven, but those in Hell will be there eternally.
The Last Judgment will occur after the resurrection of the dead and the reuniting of a person's soul with its own physical body.[22] The Catholic Church teaches that at the time of the Last Judgment Christ will come in His glory, and all the angels with him, and in his presence the truth of each man's relationship with God will be laid bare, and each person who has ever lived will be judged with perfect justice with those believing in Christ (and the unknown number of the righteous ignorant of Christ's teaching, but who might be mysteriously saved through by Christ's atonement), going to everlasting bliss, and those who reject Christ going to everlasting condemnation. At that time, all will be resurrected. )

    301 "ஆற்று மணலெலாம் அளவிட்டாலும் உலகில்
    தோற்றியிறந் தோரெண் தொலையாதே"
- ஆற்று மணலையும் முற்ற எண்ணி முடிக்கலாம்; ஆனால், இந்த உலகில் பிறந்து இறந்த உயிர்களின் தொகையை எண்ணித் தொலையாதே.

    302-304 –"ஆற்றவே
    தாகித்தோர்நீர் தேடுந் தன்மையெனச் சற்குருவை
    மோகித்தோர் தேடன் முறையன்றி – ஊகித்துச் 303
    சீடர்களைத் தாம்வலுவிற் சேர்க்கத் தெருத்தெருவாய்த்
    தேடிக் குருமார் திரிவாறோ"
- மிக்க நீர் வேட்கை உடையவர்கள் நீரைத் தேடிச் செல்வதைப்போல் சற்குருவை அடைய விரும்புவோர் தேடிச் சேரல் முறையே அன்றி, யார் தனக்குச் சீடர்களாக அமைவார் என ஊகித்து அவர்களிடம் சென்று அவர்களை வலுவந்தமாகத் தம் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள குருமார்கள் தெருத்தெருவாக அலைவார்களோ?

    304–307" கூடியுள
    சீவன் சரமடையச் செய்யவிலையே லவைகள்
    யாவுநமைப் போல்வாழ் வமைவானேன் – சீவன்
    அறிவினுயர் வென்னில் அவையைந்தா றாய்மாறப்
    பிறிதுபிறி தாதிலனே பேதாய்- அறிவன்
    விதியா யென்றென்றும்விதித்தவிதி தப்பிப்
    புதிதாய்ப் பழதாய்ப் போமோ –
- அங்குக் கூடியுள்ள சீவன்களுக்கு உயிர்ப்புக் கொடுக்கவில்லையேல்; (சரம் – உயிர்ப்பு, சுவாசம், breath) அவற்றினுக்கும் நம்மைப் போலப் பிறப்பு இருப்பு இறப்பு எனும் வாழ்க்கை அமைவானேன்? மானுட சீவன் அறிவில் உயர்வு என்னில், அவை ஐந்து ஆறாய்ப் பிறிது பிறிதாதிலையே . அறிவனாகிய இறைவன் வித்தித்த விதி மாறி புதிதாய்ப் பழையதாய் மாறிப் போமோ (இந்தக் கண்ணிகளின் கருத்து விளங்கவில்லை மானுட சீவனுக்கு வாயில் ஊதி உயிர்ப்புக் கொடுத்ததின் தொடர்ச்சியாய் ஏதோ ஒரு கருத்தைக் கூறுகின்றார்.)

    307- 308"- இதுபோற் பலசரக்கு குப்பையெலாம் பார்த்தால் அவற்றுள்
    சிலசரக்குங் கிட்டாது சேர்த்தே" –
- இவை போலத் திரட்டிய பலபொருட் குப்பைகளைச் சேர்த்து ஆராய்ந்தாலும் ஒரு நல்ல பொருளும் தேராது.

    308-9" – அலகிலந்தச்
    சொற்பதரெல்லாம் புடைத்துத் தூற்றினால் ஆங்கவற்றுள்
    அற்பமணியேனும் அகப்படா"–
- அந்த விவிலிய நூலால் களத்தில் அளவில்லாமற் கொட்டிக் கிடக்கும் அந்தச் சொற்பதர்களையெல்லாம் புடைத்துத் தீட்டித் தூற்றினாலும் அற்பமான ஒரு நெல் மணியும் அகப்படாது.

    309- 311 "-– விற்பனர்கள்
    தர்க்க நிறைகோலாற் சரிதூக்கி உத்தியெனும்
    கற்கிடையே மாற்றுரைத்துக் காட்டினால் - பற்கெஞ்சிப் 310
    பையவிழித்துப் பதைப்புற்று நாக்குளறிக்
    கைவிரித்துத் தேவசித்தங் காணென்பார்"
- சான்றோர் தர்க்கம் என்னும் தராசினால் நடுநிலையில் நின்று தூக்கி எடை கண்டு, உத்தி எனும் உரைகல்லினில் மாற்று உரைத்துக் கண்டு இப்பொருள் பொன் அன்று என்று அதன் மதிப்பினையைக் காட்டினால், பல்லைக் காட்டிக் கெஞ்சித் திருதிரு என்று விழித்து நடுநடுங்கி நாக்கு உளறி, செயலின்மையால் கைவிரித்து, அதெல்லாம் ‘தேவசித்தம்’ (உங்களைப் போன்ற அஞ்ஞானிகளுக்கு எட்டாது) காண்பீர் என்பார்.

    311-312 "-– மெய்யுணர்ந்தோர் தட்டிப்பேசாது விட்டாற்
    சண்டப்ரசண்டமதா யெட்டிப்பார்ப் பார்கள்"
- உண்மையுணர்ந்தவர்கள் உரத்துப் பேசாவிடில் , உன்றும் அறியாத அஞ்ஞானிகள் என நினைத்து உள் நுழைந்து வேவுபார்ப்பார்கள்.

    312-313 "-இவர்கள்வயப் – பட்டுநீ
    பாம்பின்வாய்த் தேரை பருந்தின்கா லாகுவெனத்
    தேம்பி மடியாமல் திரும்பென்றான்"
- இந்த பித்தலாட்டக்கரர்களின் வசப்பட்டு நீ பாம்பின் வாய்த் தேரை போலவும் பருந்தின் கால் நகத்தில் சிக்கிய எலிபோலவும் வருந்தி மடியாமல் உன்னைப் பெற்றோரின் நிலைக்குத் திரும்பு என்றான்.

    313- 316 "-– வீம்புரைத்து
    நின்றமனம் சோர்ந்து நெடுமூச்செறிந் துதிகைத்
    தொன்றுந் தெரியா தொருமுகூர்த்தஞ்- சென்றதற்பின் 314
    அந்தக் கிறிஸ்தேசு அவதரிக்கப் பல்கால
    முந்தவதைக் கண்டு மொழிந்ததனால் –அந்தவுரை 315
    வேதமென்று சொல்லி வெகுபே ரனுசரிக்க
    ஏதிப்ப டிக்குரைத்தீர் என்றேன்யான்"
- போலிக்கவுரவப் பட்டு நின்ற மனம் சோர்ந்து, பெருமூச்சு விட்டு, சற்ரு நேரம் ஒன்றும் தோன்றமல் நின்று கழித்தபின், அந்த ஏசு கிறிஸ்து அவதரிக்கப் பலகாலம் முன்பே அதைக் கண்டு அந்த உரைகளை வேதம் என்று பலரும் பாராட்டி மேற்கொள்ள நீங்கள் எப்படி இப்படி அதனை இழித்து உரைத்தீர்கள் என்று யான் வினவினேன்.

    316-318 "-– ஓதக்கேள் பின்னர்நி கழ்வதனைப் பேசுவது தான்வேதம்
    என்னப் படுமோ இனிவருதல் – முன்னுணர்ந்து
    சோதிடங் கற்றோர்கள் சுலபமா யாவருக்கும்
    ஓதிடநாங் காணாத துண்டோதான்"
- சொல்கிறேன் கேள் பின்னால் நிகழப் போவதனை அறிந்து கூறுவதுதான் வேதமோ? பின் நிகழப் போவனை முன்னனேயே அறிந்து சோடிடம் கற்றவர்கள் எளிதாக எல்லாருக்கும் கூறுவது யாம் காணாத அதிசயம் அல்ல.

    318 -319 "-– வாதிடுமப்
    பித்துரை யிலேசு பிறப்பதுவுஞ் சாவதுவும்
    ஒத்தே யெடுத்துரைத்த துண்டுகொலோ"
- வேதமே அது என வாதிட்டுக் கூறும் அப்பித்தவுரையில் எங்கேனும் இயேசு பிறப்பதுவும் சாவதுவும் ஒரேபடித்தாக உரைத்தது உண்டோ?

    319 - 321 – சத்தியமாய்,
    அன்னோன் சரிதங்கள் ஆதியந்தமாய் அதனுட்
    சொன்னால் ஓர்கால்நாம் துணியலாம் – பின்னவர்கள்
    வேலிதனக்குக் கரட்டோணான் சாட்சியெனல்
    போலப் பலவும் பொருத்துவர்காண் –"
- உண்மையாக அன்னவனின் வரலாற்றைத் தொடக்கமுதல் இறுதிவரை முறைப்படி சொன்னால் ஒருசமயம் நாம் அவன் வரலாறு இன்னது என்று துணியலாம். துண்டு துண்டாகத் தொடர்பில்லாமல் கூறுவதால், எழுப்பப்படும் ஐயங்களுக்கு, வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப் போல வேறு கதை சொல்லிப் பொருத்துவர் என்று அறிவாயாக.

    321"- –மேலதுவென்
    றன்னதொரு நூலை அனுசரிக்கும் யூதரெலாம்
    இன்னமதைப் பொய்யென்ப தென்னையோ"
- மேலானது என விவிலியத்தின் ஒரு நூலைப் போற்றும் யூதரெலாம் அதன் இன்னொரு பகுதியை ஏற்காமல் அது பொய் என்பது ஏன்? கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. அதை எபிரேய விவிலியம் என்றும் கூறுவர்.
- யூத பைபிள், கிறித்தவ பைபிள் இரண்டும் சற்றே வேறுபட்டவை. யூத பைபிள் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட 39 நூல்களின் தொகை ஆகும். சிறிதளவு அராமிக் மொழியிலும் இது உள்ளது. கிறித்தவ பைபிள் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு 27 நூல்கள் கொண்டது. கிறித்தவ மதத்தில் உள்ள இரு பெரும் பிரிவினரால் பழைய ஏற்பாடு இரண்டு வேறுபட்ட வடிவங்களில் முதனூலாகக் கொள்ளப் பட்டுள்ளது. ரோமாபுரிக் கத்தோலிக்க மதம் யூதர்களின் பைபிளுடன் ஏழு வேறு நூல்களையும் சேர்த்துக் கொண்டுள்ளது. அவற்றில் சில நூல்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் கடிதங்கள். புரட்டஸ்டாண்டுகளின் பழைய ஏற்பாட்டில் யூத பைபிளில் உள்ள 39 நூல்கள் மட்டுமே உள்ளன. கத்தோலிக்க சபையால் சேர்க்கப்பட்ட நூல்கள் அபோகிரிஃபா [பிற்சேர்க்கை] என்று புரட்டஸ்டாண்டுகளால் சொல்லப்படுகின்றன. ரோமாபுரிக் கத்தோலிக்கர்கள் அவற்றை மூலநூல்சேர்க்கை [ ட்யூட்டரோ கானனிகல் ] என்கிறார்கள். [ஜெயமோகன்]

    322 – அன்னவருள் ,
    சுன்னத்தைத் தள்ளாத் துருக்கரதைப் பொய்யாமென்
    றென்னத் தினாலின் கியம்புகின்றார்"
- அவர்களுள் சுன்னத்தைத் தள்ளாத துருக்கர் அந்த விவிலியத்தைப் பொய் நூல் என்று என்ன காரணத்தினால் இயம்புகின்றனர்?

    323- அன்னதைத்தான்
    அந்நாட்டி லுள்ளோர் அனேகர் அருவருத்தால்
    எந்நாட்டில் உள்ளோருக் கேற்குமது"
- அதை அந்நாட்டில் உள்ளோர் அருவருத்து ஏற்க மறுத்தால் எந்த நாட்டில் உள்ளோருக்கு அந்நூல் ஏற்புடையதாகும்?–

    324 "-முன்னோர்
    பெரிதும் வருந்திப் பிழைத்திறந்த முன்னைச்
    சரிதமெலாம் வேதமோ சாற்றாய் – "
- மூதாதையர் பெரிதும் துன்பமுற்று வருத்தப்பட்டு வாழ்ந்து இறந்த கதையெல்லாம் வேதமாகுமோ? சொல்லாய்!

    325 – 327 "- சரிதங்கேள்
    பெட்டியொன் றினோவாதன் பெண்டுபிள்ளை யாதியுடன்
    சிட்டியொவ் வொன்றா யொருங்கே சேர்ந்தேறிப் – பெட்டியோடு
    அந்தரத்திலே மிதந்து அரராத் மலைமேலே
    வந்தடைந்தா ரென்ற மசக்கதையும்"–
- சிட்டி – சிருஷ்டி. மசக்கதை- மசை – அறிவின்மை. 2. Fool, idiot; மூடன்.
- "கிறித்தவர்களின் புனித நூலாகிய பைபிளில், பழைய ஏற்பாட்டில், ஆதியாகமத்தில், 6 மற்றும் 7 அதிகாரங்களில் இந்த நோவாவின் பேழை குறித்தக் குறிப்புகள் வருகின்றன. பைபிளின் பழைய ஏற்பாட்டில் அதிகாரம் 6-7 களில், நோவாவின் கதை வருகிறது. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் எனப் பிரளயத்தை உண்டுப்பன்னுகிறார். ஆனால் நீதித்தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் எப்படியாவது காப்பாற்ற கடவுள் எண்ணுகிறார். அதனால் கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக்கட்டளையின் படி நோவாவால் கட்டப்படுவதே "நோவாவின் கப்பல் அல்லது நோவாவின் பேழை என்பதாகும். கப்பலை நோவா கட்டியவுடன் நோவாவையும், நோவாவின் குடும்பத்தாரையும், உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடி விலங்குகள், பறவைகள், ஊர்வன என நோவாவின் கப்பலுக்குள் ஏற்றிக்கொண்டு மூடிக்கொள்ளும் படி கடவுள் கட்டளை இடுகிறார். அதனைத் தொடர்ந்து 40 நாட்கள் இடைவிடாத கடும் மழை, கடல் நீர் மட்டம் மலை முகடுகளுக்கும் மேலாக உயர்கின்றது. அந்த வெள்ளப்பெருக்கில் உலகில் உள்ள உயிரிணங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. ஆனால் நோவாவும், அவரது குடும்பத்தாரும், கப்பலில் ஏற்றப்பட்ட விலங்குகளும் மட்டுமே உலகில் மிஞ்சுகின்றது. மீண்டும் கடல் நீர் மட்டம் வடிந்து இயல்பு நிலை தோன்றுகிறது. நோவாவின் குடும்பத்தாருடன், மிருகங்களும், பறவைகளும் கப்பலை விட்டுச் சோடி சோடிகளாக வெளியேறுகின்றன." என்பது பைபில் கூறும் கதையாகும்
- ஆதியாகமம் நூல் நோவாவின் பேழை அரராத் மலைகளில் தங்கியதாக கூறுகின்றது தொடக்க நூல் என்னும் விவிலிய ஏடு "அரராத்து மலைத்தொடர்" எனக் குறிப்பிடுவது ஒரு தனிப்பட்ட மலையை அல்ல, மாறாக ஒரு பொதுவான மலைப் பிரதேசத்தையே ஆகும் என்று அறிஞர் விளக்குகின்றனர். விவிலியத்தில் வருகின்ற அரராத்து அசீரிய மொழியில் "உரார்த்து" (Urartu) என்றும் பாரசீக மொழியில் "ஆர்மீன்யா" (Arminya) என்றும் வரும். அந்த அரசு வான் ஏரிப் பகுதியை உள்ளடக்கியிருந்தது. அதுவே கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரடோட்டசு (Herodotus) என்பவரின் காலத்திலிருந்து "ஆர்மீனியா" என்று அழைக்கப்படலாயிற்று.

- "யூபிலி நூல்" என்னும் விவிலியப் புறநூல் கூற்றுப்படி (7:1), நோவாவின் பேழை அரராத்து மலைத்தொடரில் அமைந்திருந்த "லூபார்" என்னும் மலையுச்சியில் தங்கியது

    327- 329 வந்திடுங்காற்
    சாமி யெதிர்வந்து சலத்திரளி னாலினிமேற்
    பூமியழி யாதென்று போதிக்க – நேமியொன்றை
    வானத்தில் வைத்ததுவும்’
    - நேமி – வில். இங்கு வானவில்.
- -நோவா வெள்ளத்தில் மிதந்துகொண்டு வரும்பொழுது , வெள்ளத்தினால் இனி பூமி அழியாது என்று அறிவிக்க வில் ஒன்றினை அந்தரத்தில் வைத்ததுவும்; (9.11 இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும் , பூமியை அழிக்க இனிஜலப் பிரளயம் உண்டாவதில்லை யென்றும் உன்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். 12. அன்றியும் தேவன் , எனக்கும் உங்கலுக்கும் உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கின்ற உடன்படிக்கையின் அடையாளமாக13. நான் என் வில்லைமேகத்தில் வைத்தேன். அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். 14. நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்?

    329 –" வன்மதுவாற் றைந்தையினைக்
    கானான் சிரித்த களிக்கதையும்’
- -வெறிமிக்க மதுவினால் கானான் தன் தந்தையினை எள்ளி கேலியுடன்
சிரித்த கதையும்;
- [9.18. பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர் சேம், காம், யாபேத் என்பவர்களே. காம் கானனுக்குத் தகப்பன். 19. இம்மூவரும் நோவாவின் குமாரர்கள் இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள். 20. நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத் தோட்டத்தை நாட்டினான். 21. அவன் திராட்ச ரசத்தைக் குடித்து, வெறிகொண்டு , தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப்படுத்திருந்தான். 22. அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தன் தகப்பனுடய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில், இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். 23. அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் தோள்மேலும் போட்டுக் கொண்டு, பின்னிட்டு வந்து தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினாலே, தங்களுடைய தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. 24. நோவா திராட் ரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து; 25.கானான் சபிக்கப்பட்டவன்; தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். தந்தையின்செயல் தனயன்மீது விடிந்தது.]

    329-330 – மானவர் செய்
    பாபேலின் கோபுரத்தைப் பார்த்துப் பலபிரிவாய்
    மாபேதஞ் செய்து வகுத்ததுவும்.
- மனுஷர்கள் செய்கின்ற பாபேல் எனும் கோபுரத்தைப் பார்த்துத் தேவன் அதை அளவற்ற மிக்க பேதம் செய்து பலபிரிவுகளாக வகுத்ததுவும். பாபேல் கோபுரம் என்பது தொடக்க நூலின்[1] படி, சினயார் சமவெளியில் கட்டப்பட்ட ஒரு கோபுரம் ஆகும்.
-11.1 பூமியெங்கும் ஒரே பாஷையும் , ஒரேவிதமான பேச்சும் இருந்தது. : 2 ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
- ஆதியாகமம் 11 :2
- 3 அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
- ஆதியாகமம் 11 :3
- 4 பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
- ஆதியாகமம் 11 :4
- 5 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
- ஆதியாகமம் 11 :5
- 6 அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள்செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
- ஆதியாகமம் 11 :6
- 7 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
- ஆதியாகமம் 11 :7
- 8 அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
- ஆதியாகமம் 11 :8
- 9 பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது. கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
ஆதியாகமம் 11 :9

    330-331 "–ஆபிரகாம்
    சந்ததியைப் பெற்றதுவுஞ் சக்களத்தியாற் சாராள்
    சந்ததியைப் பெற்ற தனிக்கதையும்;
- - ஆபிரகாம் சந்ததியைப் பெற்ற கதையும் சக்களத்தியால் அவன் மனைவி
சந்ததியைப் பெற்ற தனிக்கதையும்;
-ஆதியாகமம்.21 அதிகாரம்
- 1. கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர்
தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
- 2. ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
- 3. அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.
- 4. தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.
- 5. தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.
- 6. அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்.
- 7. சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.
- 8. பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.
- 9. பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,
- 10. ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள்.
- 11. தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.
- 12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
- 13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
- 14. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயெர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.
- 15. துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,
- 16. பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
- 17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
- 18. நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
- 19. தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
- 20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.
- 21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.
- வாரிசு பற்றிய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தபோதிலும், சாராள் மலடியாகவே இருந்தாள். ஆபிரகாம் இந்த விஷயத்தை கடவுளிடம் முறையிட்டார். அவருக்குரிய எல்லாவற்றையும் அவரது ஊழியக்காரனாகிய எலியேசர் சொந்தமாக்கிக் கொண்டானா? இல்லை, ஏனென்றால் "இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப் பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்" என யெகோவா சொன்னார்.—⁠ஆதியாகமம் 15:1-4.
- என்றாலும், இன்னும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. 75 வயதான சாராள் கர்ப்பந்தரிக்கும் நம்பிக்கையை கைவிட்டுவிட்டாள். ஆகவே, ஆபிரகாமிடம் இவ்வாறு கூறினாள்: "நான் பிள்ளை பெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும்." பின்பு ஆபிரகாம் ஆகாரை தனது இரண்டாம் மனைவியாக ஏற்றுக்கொண்டு, அவளுடன் உறவு கொண்டார், அதனால் அவள் கர்ப்பமானாள். தான் கர்ப்பம் தரித்திருப்பதை ஆகார் அறிந்தவுடன், தனது எஜமானியை இகழ ஆரம்பித்தாள். ஆபிரகாமிடம் சாராள் மனங்கசந்து முறையிட்டாள், ஆகாரை கடினமாய் நடத்தினாள்; இதனால் அந்தப் பணிப்பெண் அவளைவிட்டு ஓடினாள்.—⁠ஆதியாகமம் 16:1-6.]

    331- 332– "அந்தநாள்
    ஆண்குறியின் தோலை அறுத்தலுந் தேவார்ப்பணமாய்
    நாண்குலையுஞ் செய்கை நடத்தியதும்"
- வாரிசு பெற்ற அந்த நாளிலே, மகனின் ஆண்குறியை
அறுத்ததுவும், வெட்கங் கெட்ட செயலைச் செய்ததுவும்;
[17.9. தேவன் ஆபிரகாமை நோக்கி, எனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும் , நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால் , உங்களுள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்னப்பட
வேண்டும்.
11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக் கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.
24. ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்த சேதனம் பண்னப்படும்போது அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
25. அவனுடையமகன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது அவன் பதின்மூன்று வயதயிருந்தான்.
26. ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும்
விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்]

    332-333 "-– வீண்குறித்துச்
    சோதேம்கொமோறா வாய்ச் சொல்லுந் தேயங்களின் மேல்
    தீதோர்ந்து தேவன் சினந்ததுவும்" –
- உலகின் முதல் மனிதனாகிய ஆதாமிடம் கடவுளாகிய யகோவா நேரடியாகப் பேசி வந்ததுபோலவே ‘விசுவாசத்தின் தந்தை’ என்று புகழப்படும் ஆபிரகாமிடமும் கடவுள் அடிக்கடி பேசிவந்தார். ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கைத் தனக்குப் பலியாகக் கேட்டு அவரது விசுவாசத்தைக் கடவுள் சோதித்தார். கொஞ்சமும் யோசிக்காமல் தனது மகனை பலிமேடையில் ஏற்றி, அவனைக் கொன்று பலி கொடுக்கக் கத்தியை உருவியபோது, கடவுள் தடுத்தார். இதனால் ஆபிரகாம் கடவுளிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்ளும் மனிதனாக இருந்தார்.

    333-334"- – தூதோர்கள்
    புக்கதுவும் அந்நாட்டோர் பும்மைதுனம்விரும்பித்
    தொக்கதுவும்தேடித் தொடர்ந்ததுவும்" –– மிக்கவவர் 334
    லோத்தின் மனையில் நுழைந்து விருந்துண் டிருந்தத்
    தேத்தவரைக் கண்கெடவே செய்ததுவும் – லோத்தை 335
    மலையேற்றி ஊரழித்த அந்நிலைமை நோக்கித்
    தலைவியப்புத் தூணாய்ச் சமைய – மலைமுழையிற் 336
    கண்ணுறங் கும்போது களிமதுவை யூட்டியவன்
    பெண்கள் புணர்ந்த பெருங்கதையும் – 337
- (பும்மைதுனம் – ஓரினச்சேர்க்கை)
- -ஆதியாகமம் 19லோத்தின் பார்வையாளர்கள்
- 19 அன்று மாலையில் இரண்டு தேவ தூதர்கள் சோதோம் நகரத்திற்கு வந்தனர். நகர வாசலில் இருந்துகொண்டு லோத்து தேவதூதர்களைப் பார்த்தான். அவர்கள் நகரத்துக்குப் போகும் பயணிகள் என்று நினைத்தான். அவன் எழுந்து அவர்களிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், "ஐயா, எனது வீட்டிற்கு வாருங்கள். நான் உங்களுக்குச் சேவை செய்வேன். உங்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டு இரவில் அங்கே தங்கி, நாளை உங்கள் பயணத்தைத் தொடரலாம்" என்றான்.
- அதற்கு தேவதூதர்கள், "இல்லை, நாங்கள் இரவில் வெட்டவெளியில் தங்குவோம்" என்றனர்.
- 3 ஆனால் லோத்து தொடர்ந்து தன் வீட்டிற்கு வருமாறு அவர்களை வற்புறுத்தினான். அவர்களும் ஒப்புக்கொண்டு அவனது வீட்டிற்குப் போனார்கள். அவர்களுக்காக அவன் ஆயத்தம் செய்த ரொட்டியை அவர்கள் சாப்பிட்டார்கள்.
- 4 அன்று மாலை தூங்குவதற்கு முன்னால், லோத்தின் வீட்டிற்கு நகரின் பலபாகங்களில் இருந்தும் இளைஞர், முதியோர்கள் எனப் பலரும் கூடிவந்து வீட்டைச் சுற்றிலும் நின்றுகொண்டு அவனை அழைத்தனர்.
5 அவர்கள், "இன்று இரவு உன் வீட்டிற்கு வந்த இருவரும் எங்கே? அவர்களை வெளியே அழைத்து வா, நாங்கள் அவர்களோடு பாலின உறவு கொள்ள வேண்டும்" என்றனர்.
- 6 லோத்து வெளியே வந்து வீட்டின் கதவை அடைத்துக்கொண்டான்.
7 லோத்து அவர்களிடம், "நண்பர்களே வேண்டாம். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கெட்டச் செயல்களைச் செய்ய வேண்டாம்.
8 எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை எந்த ஆணையும் அறியாதவர்கள். நான் அவர்களை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் அவர்களோடு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால் இந்த மனிதர்களை எதுவும் செய்து விடாதீர்கள். இவர்கள் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்" என்றான்.
- 9 வீட்டைச் சுற்றி நின்றவர்கள், "எங்கள் வழியில் குறுக்கிடாதே" என்று சத்தமிட்டார்கள். பிறகு அவர்கள் தங்களுக்குள்ளேயே, "லோத்து நமது நகரத்திற்கு விருந்தாளியாக வந்தான். இப்போது நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நமக்கே கூறுகிறான்" என்றனர். பிறகு அவர்கள் லோத்திடம், "நாங்கள் அந்த மனிதர்களை விட உனக்கே அதிகக் கொடுமையைச் செய்வோம்" என்று கூறி லோத்தை நெருங்கி வந்து, கதவை உடைப்பதற்கு முயன்றனர்.
- 10 ஆனால் லோத்தின் வீட்டிற்குள் இருந்த இருவரும் கதவைத் திறந்து லோத்தை வீட்டிற்குள் இழுத்து கதவை மூடிக்கொண்டனர்.
11 பிறகு அவர்கள் கதவுக்கு வெளியே இருந்த இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் பார்வையை இழக்கும்படி செய்தனர். எனவே, அவர்களால் கதவு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சோதோமிலிருந்து தப்பித்தல்
- 12 அந்த இருவரும் லோத்திடம், "உன் குடும்பத்திலுள்ளவர்களில் யாராவது இந்த நகரத்தில் இருக்கிறார்களா? உனக்கு மருமகன்களோ, மகன்களோ, மகள்களோ அல்லது வேறு யாராவது இந்நகரத்தில் இருந்தால் அவர்களை உடனே இந்நகரத்தைவிட்டு விலகச் சொல்ல வேண்டும். 13 நாங்கள் இந்த நகரத்தை அழிக்கப் போகிறோம். இந்த நகரம் எவ்வளவு மோசமானது என்பதைப்பற்றி கர்த்தர் அறிந்தபடியால் இதனை அழிக்க எங்களை அனுப்பினார்" என்றார்கள்.
- 14 ஆகவே, லோத்து வெளியே போய், தனது மகள்களை மணந்துகொள்வதாயிருந்த மருமகன்களிடம், "வேகமாக இந்த நகரத்தை விட்டு வெளியேறுங்கள். விரைவில் கர்த்தர் இந்த நகரத்தை அழிக்கப் போகிறார்" என்றான். அவர்களோ அவன் வேடிக்கையாகப் பேசுவதாய் எண்ணினார்கள்.
- 15 அடுத்த நாள் காலையில் தேவதூதர்கள் லோத்தை வெளியேற விரைவுபடுத்தினார்கள். அவர்கள், "இந்நகரம் தண்டிக்கப்படும். எனவே, உனது மனைவியையும், இரண்டு பெண்களையும், இன்னும் உன்னோடு வருகிறவர்களையும், அழைத்துக்கொண்டு இந்த இடத்தைவிட்டு விலகிப் போ. அவ்வாறு செய்தால் நீ இந்நகரத்தோடு அழியாமல் இருப்பாய்" என்றனர்.
- 16 லோத்து குழப்பத்துடன் வேகமாகப் புறப்படாமல் இருந்தான், எனவே அந்த இரண்டு தேவதூதர்கள் அவன், அவனது மனைவி, மகள்கள் ஆகியோரின் கையைப் பிடித்து அவர்களைப் பாதுகாப்பாக நகரத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். லோத்தோடும் அவனது குடும்பத்தோடும் கர்த்தர் மிகவும் கருணை உடையவராக இருந்தார். 17 எனவே, இரு தேவதூதர்களும் லோத்தையும் அவன் குடும்பத்தையும் பாதுகாப்பாக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தபின்னர் தூதர்களில் ஒருவன், "இப்போது உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிப் போங்கள். இந்நகரத்தைத் திரும்பிப் பார்க்காதீர்கள். இந்தச் சமவெளியில் எங்கும் நிற்காதீர்கள். மலைக்குப் போய்ச் சேரும்வரை ஓடுங்கள். இடையில் நின்றால் நகரத்தோடு நீங்களும் அழிந்துபோவீர்கள்" என்றான்.
- 18 ஆனால் லோத்து அந்த இருவரிடமும், "ஐயா, அவ்வளவு தூரத்துக்கு ஓடும்படி என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள்.
19 உங்கள் சேவகனாகிய என் மீது நீங்கள் மிகவும் இரக்கம் வைத்திருக்கிறீர்கள். என்னைக் காப்பாற்ற கருணையுடன் இருக்கிறீர்கள். ஆனால் மலைவரை என்னால் ஓட முடியாது. நான் மரித்துப்போய்விட வாய்ப்புண்டு.
20 அருகில் ஒரு சிறிய நகரம் உள்ளது. என்னை அந்நகரத்திற்கு ஓடிப்போகவிடுங்கள். அந்த அளவுக்கு என்னால் ஓடி என்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்" என்றான்.
- 21 அதற்கு தேவதூதன், "நல்லது, அவ்வாறு செய்ய உன்னை அனுமதிக்கிறேன். நான் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்.
22 ஆனால் அங்கு வேகமாக ஓடு. அங்கு நீ பாதுகாப்பாகப் போய்ச் சேரும்வரை சோதோம் நகரத்தை அழிக்கமாட்டேன்" என்றான். (அந்நகரின் பெயர் சோவார். ஏனெனில் அது மிகச் சிறிய நகரம்)
- சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுதல்
- 23 சூரியன் உதயமானபோது லோத்து சோவார் நகரத்திற்குள் நுழைந்தான்.
24 அதே நேரத்தில் கர்த்தர் சோதோமையும் கோமோராவை அழிக்க ஆரம்பித்தார். கர்த்தர் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் அந்நகரின் மேல் விழுமாறு செய்து,
25 அந்த நகரங்களையும் அதன் முழு சமவெளியையும், அங்கிருந்த செடிகளையும், ஜனங்களையும் அழித்துவிட்டார்.
- 26 அவர்கள் ஓடிப்போகும்போது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். அதனால் அவள் உப்புத்தூண் ஆனாள்.
- 27 அதே நாள் அதிகாலையில், ஆபிரகாம் எழுந்து கர்த்தரை தொழுதுகொள்ளும் இடத்துக்குச் சென்றான்.
28 அவன் அங்கிருந்து சோதோம், கொமோரா நகரங்கள் இருக்கும் திசையையும், அதன் சமவெளியையும் பார்த்தபோது அங்கிருந்து புகை எழும்புவதைக் கண்டான். அது பெரிய நெருப்பினால் ஏற்படும் புகைபோல் தோன்றியது.
- 29 தேவன் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்களை அழித்துவிட்டார். அப்போது அவர் ஆபிரகாமை நினைத்து, ஆபிரகாமின் உறவினனான லோத்தை அழிக்காமல் விட்டார். பள்ளத்தாக்கில் இருக்கும் நகரங்களுக்குள் லோத்து வாழ்ந்துகொண்டிருந்த அவ்விடங்களை அழிக்கும் முன்பு லோத்தை தேவன் வெளியேற்றினார்.
- லோத்தும் அவனது மகள்களும்
- 30 சோவாரில் தங்கியிருக்க லோத்துவுக்கு அச்சமாக இருந்தது. எனவே, அவனும் அவனது மகள்களும் மலைக்குச் சென்று அங்கு ஒரு குகையில் வசித்தனர்.
31 ஒரு நாள் மூத்தவள் இளையவளிடம், "உலகில் எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் மணந்துகொண்டு குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் நமது தந்தையோ வயதானவராக உள்ளார். நமக்கு குழந்தை தர வேறு ஆண்களும் இங்கே இல்லை.
32 எனவே, நாம் தந்தைக்கு மதுவைக் கொடுக்கலாம். அவர் மயங்கியபின் அவரோடு பாலின உறவு கொள்ளலாம். இப்படியாக நமக்குச் சந்ததி உண்டாக நம் தந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்றாள்.
- 33 அன்று இரவு இரண்டு பெண்களும் தந்தைக்கு மதுவைக் கொடுத்து குடிக்க வைத்தனர். பிறகு மூத்தவள் தந்தையின் படுக்கைக்குச் சென்று அவரோடு பாலின உறவு கொண்டாள். லோத்துவுக்குத் தன் மகள் தன்னோடு படுத்ததும், எழுந்து போனதும் தெரியவில்லை. அந்த அளவுக்குக் குடித்திருந்தான்.
- 34 மறுநாள் மூத்தவள் இளையவளிடம்: "நேற்று இரவு நான் தந்தையோடு பாலின உறவு கொண்டேன். இன்று இரவும் அவரை மீண்டும் குடிக்க வைப்போம். பிறகு நீ அவரோடு பாலின உறவுகொள். இதன் மூலம் நாம் குழந்தை பெற நம் தந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் குடும்பமும் அழியாமல் இருக்கும்" என்றாள்.
35 அதனால் இருவரும் அந்த இரவிலும் தந்தையை மது குடிக்கும்படி செய்தனர். பிறகு இளையவள் தந்தையோடு படுத்து பாலின உறவு கொண்டாள். லோத்து மதுவைக் குடித்திருந்தபடியால் அவள் படுத்ததையும், எழுந்து போனதையும் அறியாமலிருந்தான்.
- 36 லோத்தின் இரு மகள்களும் கர்ப்பமுற்றனர். அவர்களின் தந்தையே அவர்களது பிள்ளைகளுக்கும் தந்தை.
37 மூத்தவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவள் அவனுக்கு மோவாப் என்று பெயர் வைத்தாள். அவன் மோவாபியருக்கெல்லாம் தந்தையானான். 38 இளையவளும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு அவள் பென்னம்மி என்று பெயரிட்டாள். அவன் அம்மோன் ஜனங்களுக்குத் தந்தை ஆனான்

    337-338 " – மண்மிசையே
    ஈசாக்குக் கண்கெட்டிருக்கு நாள் யாகொபு
    ஏசாபோல் வஞ்சித்தே ஏத்தியதும்"
- ஈசாக்கின் குடும்பம்
- 19 இது ஈசாக்கின் குடும்ப வரலாறு: ஈசாக்கு ஆபிரகாமின் மகன். 20 ஈசாக்கிற்கு 40 வயதானபோது அவன் ரெபெக்காளை மணந்துகொண்டான். ரெபெக்காள் பதான் அராம் என்னும் ஊரைச் சேர்ந்த பெத்துவேலின் மகள். லாபானுக்குச் சகோதரி. 21 ஈசாக்கின் மனைவிக்குப் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது. எனவே, அவன் தன் மனைவிக்காக கர்த்தரிடம் ஜெபித்தான். ஈசாக்கின் ஜெபத்தைக் கேட்டு, கர்த்தர் ரெபெக்காள் கர்ப்பமடையச் செய்தார்.
- 22 அவள் கர்ப்பமாக இருந்தபோது, கருவிலுள்ள குழந்தைகள் மோதிக்கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் கர்த்தரிடம் ஜெபித்து, "ஏன் எனக்கு இவ்வாறு ஏற்படுகிறது?" என்று கேட்டாள். 23 அதற்கு கர்த்தர்,
"உனது கர்ப்பத்தில் இரண்டு நாடுகள் உள்ளன.
இரண்டு குடும்பங்களின் அரசர்கள் உனக்குப் பிறப்பார்கள்.
அவர்கள் பிரிக்கப்பட்டு ஒருவனைவிட இன்னொருவன் பலவானாக இருப்பான்.
மூத்தவன் இளையவனுக்குச் சேவை செய்வான்" என்றார்.
24 சரியான நேரம் வந்தபோது ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். 25 முதல் குழந்தை சிவப்பாக இருந்தது. அவனது உடல் ரோம அங்கி போர்த்தது போல இருந்தது. எனவே அவன் ஏசா என்று பெயர் பெற்றான். 26 இரண்டாவது குழந்தை பிறந்தபோது, அவன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டே வெளியே வந்தான். எனவே அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டனர். யாக்கோபும் ஏசாவும் பிறக்கும்போது ஈசாக்குக்கு 60 வயது.
27 பிள்ளைகள் வளர்ந்தார்கள். ஏசா திறமை மிக்க வேட்டைக்காரன் ஆனான். அவன் எப்போதும் வெளியே அலைவதிலேயே விருப்பப்பட்டான். ஆனால் யாக்கோபு அமைதியானவன், தன் கூடாரத்திலேயே தங்கியிருந்தான். 28 ஈசாக்கு ஏசாவை நேசித்தான். ஏசா வேட்டையாடிய மிருகங்களை உண்ண ஈசாக்கு விரும்பினான். ஆனால் ரெபெக்காள் யாக்கோபை நேசித்தாள்.
29 ஒருமுறை ஏசா வேட்டை முடித்து திரும்பிக்கொண்டிருந்தான். அவன் சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். யாக்கோபு ஒரு பாத்திரத்தில் கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். 30 எனவே ஏசா யாக்கோபிடம், "நான் பலவீனமாகவும் பசியாகவும் இருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் கூழ் கொடு" என்று கேட்டான் (இதனாலே அவனுக்கு ஏதோம் என்றும் பெயராயிற்று.)
31 ஆனால் யாக்கோபோ, அதற்குப் பதிலாக: "முதல் மகன் என்ற உரிமையை இன்று எனக்கு விற்றுவிட வேண்டும்" என்று கேட்டான்.
32 ஏசாவோ, "நான் பசியால் மரித்துக்கொண்டிருக்கிறேன். நான் மரித்துப் போனால் என் தந்தையின் சொத்துக்கள் எல்லாம் எனக்கு உதவுவதில்லை. எனவே நான் எனது பங்கை உனக்குத் தருகிறேன்" என்றான்.
33 ஆனால் யாக்கோபு, "முதலில் உன் பங்கைத் தருவதாகச் சத்தியம் செய்" என்றான். ஆகையால் ஏசாவும் சத்தியம் செய்தான். அவன் மூதாதையர் சொத்தாக தனக்குக் கிடைக்கவிருந்த பங்கை யாக்கோபுக்கு விற்றுவிட்டான். 34 பிறகு யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். ஏசா அவற்றை உண்டு, விலகிப் போனான். இவ்வாறு ஏசா தனது பிறப்புரிமையைப்பற்றி கவலைப்படாமல் இருந்தான்

    338- 342 – ஏசா
    கொலைசெய்யத் தீர்மானங் கொண்டதற்குத் தப்பி
    அலைவான் யாகோபும் அகன்றே – விலையாகி
    ஆடுகளின் மேய்ப்பால் அனேகமணஞ் செய்ததுவும்
    ஆடுகளை மோசத்தால் ஆர்ச்சித்து – வீடடங்க
    ஓட்ட மெடுத்ததுவும் ஓர்சாதி மாக்கள்வந்து
    காட்டிலவன் மகளைக் கற்பழிக்கக் – கேட்டஞ்சி
    வஞ்சித்துக் கொன்ற மதிக்கதையும் 342
- தம்பியின் மீது கொடுங்கோபம்
- தந்தைக்குப் பிறகு குலத்தலைவன் ஆகும் ஆசீர்வாதம் அந்நாட்களில் மூத்த மகனுக்கு அருளப்பட்டுவந்தது. இதனால் குடும்பத்தில் மூத்தவனே தந்தையின் மறைவுக்குப் பிறகு அனைத்துக்கும் உரிமையாளன் ஆனான். ஈசாக்கு முதுமையை எட்டி, கண்பார்வை மங்கியிருந்த காலத்தில் ஏசா பெற வேண்டிய குலத்தலைவன் ஆசீர்வாதத்தை அவரிடமிருந்து யாக்கோபு பெற்றுக்கொண்டான்.
- குலத்தலைவன் ஆசீர்வாதத்தைப் பெறும் உரிமையை ஏற்கெனவே அவன் யாக்கோபுக்கு விட்டுக்கொடுத்துவிட்டிருந்தால் அதை நினைத்து இப்போது கடுங்கோபம் கொண்டான். தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என ஏசா எண்ணினான். இந்த ஏமாற்றம் கொலைவெறியாக மாறியது. யாக்கோபைக் கொல்லப்போவதாகக் கோபாவேசத்துடன் கூறினான். இதைக் கேட்ட தாய் ரெபெக்கா மிகவும் கவலைப்பட்டாள்.
- அவள் யாக்கோபை அழைத்து அவனிடம், " உன் சகோதரன் ஏசா உன்னைக் கொல்லத் திட்டமிடுகிறான். எனவே நான் சொல்கிறபடி நீ செய். ஆரானில் இருக்கிற என் சகோதரனும் உன் மாமனுமாகிய லாபானிடம் ஓடிச் சென்று அவரோடு இரு. உன் சகோதரனின் கோபம் தீரும்வரை அங்கேயே இரு. கொஞ்ச காலம் ஆனதும் உன் சகோதரன் நீ செய்ததை மறந்துவிடுவான். பிறகு உன்னை இங்கு அழைக்க ஒரு வேலைக்காரனிடம் செய்தியைச் சொல்லி அனுப்புவேன். ஒரே நாளில் எனது இரண்டு மகன்களையும் நான் இழக்க விரும்பவில்லை" என்றாள்.
- நாட்டை விட்டுக் கிளம்பிய யாக்கோபு
- அதனால் ஈசாக்கு தன் மகன் யாக்கோபை அழைத்து, "கானான் தேசத்துப் பெண்ணை நீ கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக ஆரானிலிருக்கும் உன் தாயின் சகோதரன் லாபானின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொள்" என்று சொன்னார். பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வெகு தொலைவில் இருந்த ஆரானுக்குத் தன் மாமன் மகளைக் காண ஆவலுடன் புறப்பட்டார் யாக்கோபு.
- ஆடுகள் மேய்த்துக் கொண்டு மந்தையின் நடுவே லாபானின் மகளைக் கண்டான்
- மாமன் மகளைக் கண்ட யாக்கோபு, அவளது ஆடுகள் தண்ணீர் குடிப்பதற்காகத் தரைக் கிணற்றின் மீதிருந்த கல்லைப் புரட்டிப்போட்டார். தண்ணீரைக் கண்ட ஆடுகள் அவளுடன் ஓடி வந்து நீரைப் பருகின. தன் ஆடுகளுக்குப் பரிவுகாட்டிய இவர் யாராய் இருப்பார் என்று ராகேல் அவரது முகத்தைக் கூர்ந்து கவனித்தாள்; யாக்கோபை இன்னான் என்று அறிந்து கொண்டு விட்டிற்கு அழைத்துச் சென்றாள்
- ஆச்சரியமடைந்த லாபான், தன் மருமகனை வரவேற்கச் சென்றார். ராகேலின் ஆட்டு மந்தை யாக்கோவுக்குக் கட்டுப்பட்டு அவருடன் வந்துகொண்டிருந்தது. இதைக் கண்ட லாபானுக்கு மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. யாக்கோபு மிகச் சிறந்த மேய்ப்பன் என்பதை அந்த நொடியில் உணர்ந்து கொண்டார்.
- யாக்கோபுவைக் கட்டித் தழுவித் தன் பிரியத்தை வெளிப்படுத்தினார். ராகேலைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி லாபானிடம் கேட்டபோது அவர் இன்னும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், ராகேலைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமானால் ஏழு ஆண்டுகள் தனக்காக வேலை செய்ய வேண்டுமென யாக்கோபிடம் லாபான் கூறினார். ராகேல் மீது முதல் பார்வையிலேயே காதல்கொண்ட யாக்கோபு ஏழு ஆண்டுகள் ஏழுநாட்களாய் மறைந்துவிடும் என்று நம்பினார். மாமாவுக்காக உழைக்கத் தொடங்கினார்.
- ராகேல் நிச்சயிக்கப்பட்ட காலம் முடிவடைகையில் லாபான் ஒரு திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், அன்றிரவு, யாக்கோபு லேயாளோடு ‘உறவு கொள்வதற்காக’ (பொது மொழிபெயர்ப்பு) அவளை யாக்கோபிடம் அழைத்துக் கொண்டுபோய் யாக்கோபு மிகவும் கோபமடைந்தார். லாபானின் மகள்களிடமல்ல, லாபானிடமே யாக்கோபு இவ்வாறு தர்க்கம் செய்தார்: "ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலை செய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம் பண்ணினீர்." லாபானின் பதில்? "மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது . . . வழக்கம் அல்ல. இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான்." (ஆதியாகமம் 29:25-27) இவ்வாறு பலதாரமணம் முடிக்கும் சிக்கலில் யாக்கோபு வசமாக மாட்டிக்கொண்டார். இது கடும் பொறாமையை ஏற்படுத்தவிருந்தது.விட்டார்.—ஆதியாகமம் 29:23.
- யாக்கோபு ராகேலை நேசித்தார். ராகேலுடன் ஒப்பிட லேயாள் "அற்பமாய்" எண்ணப்பட்டதை கடவுள் கண்டபோது, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். ராகேலோ மலடியாயிருந்தாள். ஆனால் லேயாள், குழந்தையைவிடவும் யாக்கோபின் பாசத்திற்காக ஏங்கினாள். ராகேல் நேசிக்கப்படுவதைப் பார்த்த லேயாள் மிகவும் துயரப்பட்டாள். இருந்தாலும், யாக்கோபின் மூத்த மகனாகிய ரூபனைப் பெற்றெடுத்ததற்காக யாக்கோபின் அன்பைப் பெறும் நம்பிக்கையுடன் இருந்தாள். யாகோப்பு ராகேகுடைய பணிப்பெண்களுடனும் கூடிப் பல மக்களைப் பெற்றுச் சந்ததியை விருத்தி செய்தான். அவன் பாதுகாப்பில ஆட்டு மந்தைகளும் பெருகின. இவ்விதமாய் அவன் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும் வேலைக்காரிகளும் வேலைக்காரர்களும் ஒட்டகங்களும் கழுதைகளும் உடையவனானான். (30 43)
- தமையனிடம் செல்லுதல்;
- லாபானுடைய குமாரர்கள் தம் தகப்பனுடைய செல்வத்தையெல்லாம் தான்பு அபகரித்துக் கொண்டதாகச் சொன்ன வார்த்தையை யாகோப்பு கேட்டான். லாபனானுடைய முகமும் வேறுபட்டிருந்தது. எனவெ ஒருநாள் இரவில மனைவி மக்களுடனும் தன் பெருஞ் செல்வத்துடனும் மந்தைகளுடனும் லாபானிடம் சொல்லாமல் கானான் தேசத்திலுள்ல தன் தந்தை ஈசாக்கினிடத்துப் போனான். ஏசாவின் கோபத்தைத் தணிக்கப் மதிப்பு மிக்க பரிசுப் பொருள்கள் அனுப்பினான். ஏசா எதிர்கொண்டு தழுவி யாக்கோபை ஏற்றுக் கொண்டான். (33. 4., )
- ஓர்சாதி மக்கள் வந்து…
லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனா தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள். அவளை அத்தேசத்தின் பிரபுவாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைகொண்டுபோய் அவளோடே சயனித்துத் தீட்டுப்படுத்தினான்.அவளை அவன் பெரிதும் விரும்பினான். சீகேம் தன் தந்தையிடம் தீனவை மணந்து கொள்ள விரும்புவதக் கூரினான். அவன் தந்தை யாக்கோபு விடம் பெண்கேட்டான். அப்பொழுது யாக்கோபின் குமாரர்கள் தங்கள் சகோதரியான தீனாளைச் சீகேம் தீட்டுப்படுத்தியபடியால் , அவனுக்கும் அவன் தகப்பனாகிய ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக, " விருத்தசேதன மில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் தகோதரியைக் கொடுக்கலாக்து; அது என்களுக்கு நிந்தையாயிருக்கும்’ என்றனர். அதனைக் கேட்ட ஏமோரும் அவன் மக்களும் விருத்த சேதனம் செய்துகொண்டனர். விருத்த சேதனம் செய்துகொண்ட மூன்றாம் நாளில் அவர்கள் நோவெடுத்து வருந்தும் போது யோசோப்பினிடைய புதல்வர்கள் தங்கள் படையுடன் வந்து ஏமோரையும் அவனுடையகுமாரன் சீகேமையும் கொன்று தீனாளை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். யோசேப்பு மக்களைப் பார்த்து இப்படிச்செய்துவிட்டீர்களே, அவர்கள் எண்ணிக்கையில் மிக்கவர்கள் நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப் போடுவார்களே என்று கலங்கினான். அதற்கு அவர்கள் எங்கள் சகோதரியை அவர்கள் ஒருவேசியைப் போல நடத்தலாமோ என்றார்கள் (34.30-31)

    342. "-மூத்தமகன்
    மிஞ்சியவன் பெண்டுடனே மேவியதும்"
- தேவன் யாக்கோபை நோக்கி நீ எழுந்து பெத்தேலுக்குப் போய் அங்கு குடியிரு என்றார் பெத்தேலில் தேவன் யாக்கோபு என்ற பெயரை மாற்றி இஸ்ரவேல் என்ற பெயரைச் சூட்டினான். இஸ்ரவேல் பிரயாணம் பண்ணி ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான். யாக்கோபின் குமாரர் பன்னிரண்டுபேர். மூத்தமகன் ரூபன். இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது , ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையடியாகிய பில்காளோடெ சயனித்தான். அதை இஏரவேல் கேள்விப்பட்டான். (35. 22, )

    342 "-சஞ்சரித்தே 342
    யூதா மருமகளை யோரிரவி லேபுணர்ந்து
    தீதார் கருப்பமுறச் செய்ததுவும்" –
- யூதா யாக்கோபின் மகன்கள் பன்னிருவரில் ஒருவன். யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள பெண்ணை மனைவியாகக் கொண்டான். யூதாவின் மூத்தமகன் கர்த்தரின் பார்வையில் பொல்லாதவனாக இருந்ததினால் அவர் அவனை அழித்துப்போட்டார். யூதா தன்னுடைய அடுத்த மகன் ஓனானை நோக்கி நீஉன் தமையன் மனைவியைச் சேர்ந்து உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அவன் அது த்ன் சந்ததியாகாதென்று தன் வித்தைத் தரையிலே விட்டான். அவன் செய்தது கர்த்தரின் பார்வையில் பொல்லாததாக இருந்தது. அதனால் கர்த்தர் அவனையும் அழித்துப் போட்டார்.
- யூதா தன் மருமகளாகிய தாமாரை நோக்கி, என்மகன் சேலா பெரியவனாகுமட்டும் நீ உன் தகப்பன் வீட்டில் கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான். அந்தப்படிக்கே தாமாரும் தன் தந்தையின் வொஇட்டில் போயிருந்தாள்.
- சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட வில்லை என அவள் அறிந்தபடியால், தன் கைம்பெண் வஸ்திரங்களை களைந்துபோட்டு முகத்தை முக்காடிட்டு நீரூற்றுக்களுக்கு முன்பாக அமர்ந்திருந்தாள். யூதா அவளைக்கண்டு அவலை ஒரு வேசி என நினைத்து, அவளுக்கு த் தன் முத்திரைமோதிரம் அரம் கைக்கோல் ஆகையவற்றை அடைமானமாகக் கொடுத்து அவளோடு கூடினான். அதனால் அவள் கர்ப்பவதியானாள்.
- மூன்று மாதங்களுக்குப் பின் மருமகளாகிய தாமார் வேசியாக் கருப்பவதி யானாள் என யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. எரித்துத் தண்டிக்க அவளை கொண்டு வருமாறு யூதகட்டளை யிட்டான். அவள் தன் மாமனிடம் பெற்ற அடைமானப் பொருள்களை அனுப்பி, இந்தப் பொருள்களுக்கு உடையவன் எவனோ அவனே என்னைக் கருப்பவதியாக்கினான் என்றாள்.
- யூத அவைகளைப் பார்த்து அறிந்து என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரன் சேலாவுக்குக் கொடாமல் போனேனே என்றான்.

    343 -347 "-– சூதாக
    யோசேப் மறுதேய முற்றதுவும் ஆங்கொருத்தி
    ஆசையாய்ச் சேரற் கழைத்ததுவும் – யோசனையாற்
    சொற்பனத்தின் உட்பொருளைச் சொல்லியபின் வாழ்வுபெற்றுப்
    பற்பலவாய் வாழ்ந்த பழங்கதையும் – அற்பவிலைக்
    காலத்திற் சுற்றத்தார் கண்டடுத்து வாழ்கதையும்
    ஞாலத்தவ னென்பு நாட்படவே – கோலத்தில்
    வைத்த கதையும் கொல்கடுங்கதையும்"
- யாக்கோபுவின் 12 மகன்களில் யோசேப்பு 11ஆம் மகன் ஆவார். ராகேலின் முதல் மகனும் ஆவார்.[2] இவரின் தந்தை தன் மற்ற புதல்வரிலும் இவரை அதிகம் அன்பு செய்ததால், அவர்கள் இவரின் மீது பொறாமைப்பட்டு இவரை அடிமையாக விற்றனர். யோசேப்பை வாங்கிய வியாபாரிகள் எகிப்தில் யோசேப்பை விற்றுவிட்டார்கள். பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்குத் தலைவனுமான போத்திப்பாருக்கு அவனை விற்றார்கள்.
- கர்த்தர் யோசேப்போடே இருந்தார். அவனுடைய எஜமான் யோசேப்பைத் தன் வீட்டுக்கு விசாரணைக்காரன் ஆக்கித் தன்னிடத்தில் உண்டான செல்வம் யாவற்றையும் நிர்வகிக்கும் பொறுப்பை அவன்கையில் ஒப்புவித்தான். எஜமானனின் மனைவி யோசேப்பின் மீது கண்போட்டு என்னோடு சயனி என்றாள். யோசேப்பு இந்தப் பொல்லாங்குக்கு நான் உடன்படமாட்டேன், தேவனுக்கு வ்ரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
- ஒருநாள் எஜமானன் வீட்டில் இல்லாத பொழுது அவன் மனைவி யோசேப்பை அவனுடைய வஸ்திரத்தைப் பிடித்துச் சயனத்திற்கு அழைத்தாள் . அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வேளியே ஓடிப்போனான்.
- அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு அவன் தன்னோடு சயனிக்கும்படி அழைத்ததாகவும் தான் சத்தமிடவே தன்வஸ்திரத்தினை இங்கே விட்டுவிட்டு அவன் ஓடிவிட்டதாகவும் பொய் கூறினாள்.
- எஜமான் கட்டளையினால் யோசேப்பு சிறையிலடைக்கப்பட்டான். கர்த்தர் யோசேப்புடன் இருந்து அவன்மேல் கிருபை வைத்துச் சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்குபடிச் செய்தார்.
- சிறையில் யோசேப்பு சிறந்து விளங்கினான். அவன் நடத்தையை பார்த்த சிறைத்தலைவன் அவனை எல்லா கைதிகளுக்கும் தலைவனாக்கினான்.
- யோசேப்பு கர்த்தர் அருளால் இளமையிலேயே க்னவின் பலனை அறிந்து கூறும் ஆற்றல் பெற்றிருந்தான். பார்வோன் கண்ட இருகனவுகளின் பலனை அறிந்து, எகிப்தின் வளமெல்லால் அழின்ஹ்து கடும் வறட்சியும் பஞ்சமும் வரும் என்றும், பஞ்சத்தை எதிர்கொள்ள வளமான காலத்தில் உணவுப் பொருள்களைச் சேமிஹ்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினான். அவன் கூறியபடியே நடந்தது.
- யோசேப்பின் உயர்வு
- பாரோ இந்த விளக்கத்தினால் மனம் மகிழ்ந்தான். யோசேப்பை எகிப்தின் ஆளுநராக்கினான், ஒரு எகிப்திய பெண்ணையும் அவனுக்கு மணம் முடித்துவைத்து,"அரசன் எனக்கு அடுத்த படியாக நின்று எகிப்தை ஆள்வாய்" என்றான். அதே போல யோசேப்பு சென்ற இடமெல்லாம் மக்கள் அவனுக்குப் பணிந்தனர்.

    347–350 "- அத்ததியில்
    மோசே பிறந்ததுவும் மூடியொரு பேழையிலே
    மாசேற்றிப் புற்புதரில்வைத்ததுவும் – நேசமுடன் 348
    அந்நாட்டரசன்மகள் அக்குழவியை வளர்த்த
    பின்னாளவன் பிழைத்த பெற்றிமையும் – அந்நாளில் 349
    தங்கள் குலப்பகைவன் தன்னைத் தனிமையிற்கண்
    டங்கவனைக் கொன்றுகர வாயொழுகித் – தயங்கியதும்" 350
- -மோசே, இஸ்ரவேலர் எகிப்தில் பார்வோன் அரசனின் ஆட்சியில் அடிமைகளாக இருக்கும் போது ஒரு அடிமை பெற்றோருக்கு பிறந்தார்
- விடுதலைப் பயண நூலின் படி இசுரயேலர் எகிப்தில் அடிமைப்பட்டிருந்த காலத்தில் இவர் பிறந்தார் எனக்கூறப்படுகிறது. அடிமைகளாக இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது; இதனால் எகிப்திய அரசர் தங்களை எகிப்திய எதிரிகளோடு இணைத்துக் கொள்ளலாம் என்று கருதினார் [6]. இதன் தொடர்ச்சியாக எகிப்தில் பெருகிவரும் இசுரேலியர்களின் மக்கள் தொகையைக் குறைப்பதற்காக புதியதாகப் பிறந்த ஆண்குழந்தைகள் அனைவரையும் கொன்று விடும்படியும் ஆணையிட்டார். குழந்தையினைக்கொல்ல மனம்வராத மோசேயின் தாயார் குழந்தை மோசேவை ஒரு கூடையில் வைத்து நைல் நதியில் மிதக்கவிட்டார். கூடை எகிப்தின் இளவரசியால் கண்டெடுக்கப்பட்டு ஓர் அரசக் குடும்பத்தின் தத்துப்பிள்ளையாக வளர்க்கப்பட்டார். ஒரு எகிப்தியனைக் கொன்றதற்காக மிதியான் நாட்டில் பதுங்கியிருந்த போது இவருக்கு கடவுள் அருள் கிடைத்ததாக நம்பப்படுகிறது[7].

    351-353
    "சண்டைவினை யாலச் சதிக்கொலைமை தான்வெளிப்பட்
    டண்டை அயலார்க ளறிந்துகொண்டு – மிண்டதனை 351
    அரசற் கறிவிக்க ஆங்கவனுங் கோபம்
    விரவிக் கொலைபுரிய வேண்டித் – துருவிடுங்கால் 352
    ஆக்கினைக்குத் தப்பிப்போய் ஆசாரியன் ஆடு
    மேய்க்கி யெனவடைந்து"
- இஸ்ரேயர்கள் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, மோசே சமாதானம் செய்யவே, ‘‘நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ. நேற்று ஒரு எகிப்தியனை அடித்துக் கொன்று யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைத்து விட்டாயல்லவா… அதே போல எங்களையும் கொன்று புதைத்து விடலாம் என திட்டமிடுகிறாயா’ அவர்கள் கத்தினர். அருகிலிருந்தவர் அதனை அரசனுக்கு அறிவிக்க, அரசனும் மோசேயைக் கொலை செய்ய அவனைத் தேடினான். மோசே உயிர் பிழைக்க ஓடிவிட்டிருந்தார். எகிப்தை விட்டே வெளியேறி மிதியான் என்னும் நாட்டில் குடியேறினார். சிலகாலம் அங்கு தங்கியிருந்த அவர், அங்கு வாழ்ந்து வந்த ஒரு அர்ச்சகரின் மகளை மணமுடித்தார்.

    353-356 " விஞ்சைசெறி மார்க்கமெலாம்
    கற்றுத்தன் துட்டதெய்வங் கைவந்திடச் சித்தி
    பெற்றுத்தன் சாதியரைப் பின்கூடி – எத்தி 354
    அடிமைத் தனம்நீக்கி ஆறாகப் பால்தேன்
    வடியும் நல்லதேயத்தே வைத்துக் – குடியேற்றும்
    ஆசைகொளுத்தி அழைத்துவந்து தந்தேவைப்
    பூசைபலி யாதிகளாற் போற்றுவித்து"
- மாயவித்தைகளெல்லாம் கற்றுத்தேர்ந்து, தான் வழிபடும் துட்டதேவதையினால் சில சித்திகளெல்லாம் கைவந்திடப்பெற்று, தன் சாதிமக்களை அடைந்து அவர்களைப் பாலும் தேனும் ஓடும் வளமானதேயத்தில் குடியேற்றுவதாக அழைத்துவந்து, தன்னுடைய தெய்வத்தை பலிபூசைகளால் போற்றுவித்து.

    356-359"-– மாசனங்கள்
    தப்பிவிட லாகாதுசண்டையிடற் குந்தனதெண்
    ணப்படியே கேட்டு நடத்தற்கும் – ஒப்பியதோர் 357
    மார்க்கமெனப் பற்பலவா மாயவித்தை செய்ததுவும்
    தீர்க்கவிதி விலக்குச்செப் பியவை – யார்க்குமினி 358
    யென்றுமிருக்க இயம்பியதை விட்டுப்பொன்
    கன்றுதொழத் தேவன் கனன்றதுவும் 359
- மக்கள் கூட்டம் தன்னை விட்டுத் தப்பி ஓடிவிடாது இருத்தற்காகவும், தன்னுடன் சேர்ந்து எகிப்திய அரசனொடு சண்டையிடுவதற்காகவும் தனது எண்ணப்படியே நடத்தற்காகவும் அனைவரும் ஒப்பியதோர் நெறி எனத் தோன்றப் பலவித் மாய வித்தைகளைச் செய்தும், சட்ட விதி விலக்குகளைச் சொல்லியும் அவ்விதி விலக்குகள் எதிர்காலத்தில் எவரும் கைக்கொள்ள வேண்டும் என வித்தித்தும், அக்கூட்டத்தார் தான் இயம்பியதைக் கைவிட்டு ஒரு பொன்கன்றினைத் தெய்வமெனத் தொழக் கண்டு சினந்ததுவும்

    359 -360 "– அன்றொருவன்
    வேலைசெய்யா நாளில் விறகெடுக்கக் கொன்றதுவும்
    சீலமெல்லாம் ரத்தத்தாற் செய்ததுவும் "360
- ஓய்வுநாள் என்று மோசே விதித்த ஏழாம் நாளில் ஒருவன் விறகெடுக்க, இறை ஆணையை மீறிய குற்றத்துகாக அவனைக் கொன்றதுவும்,(யாத்திராகமம் 31. .15.ஆறு நாளும் வேலை செய்யலாம்.ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வு நாள் . அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. ஓய்வு நாளில் வேலை செய்கிற எவனும் கொலை செய்யப்பட வேண்டும்)
- காளையைக் கொன்று அதன் இரத்தத்தாலும் குடல் குண்டிக் காய் முதலியவற்றைத் தேவனுக்குக் கொடுத்து பாவநிவர்த்தி செய்து பாவமன்னிப்புப் பெற்றதுவும் (லேவியராகமம் 4.அதிகாரம்)

    360- 361 "-–மேலடைய
    எண்ணிவந்த தேயம்போ யெய்தாமுன் மோசேயிம்
    மண்ணி லிறந்து மடிந்ததுவும் –
- மோசே இஸ்ரவேலர்களைச் சுதந்திர நாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக்
கூறி அழைத்துவந்தார். அந்த நாட்டை அடையும் முன்பே மண்ணில்
இறந்து மடிந்த கதையும்
- -மோசே­யினால் அழைத்து வரப்­பட்ட மக்கள் சுதந்­த­ரி­க­ளாக வாழக்­கூ­டிய நிலப்­ப­ரப்­பினைக் காட்­டிய தேவன் ஆபி­ரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகி­யோ­ருக்கு வாக்­க­ளித்­த­படி இஸ்­ரவேல் ஜனத்­தா­ருக்­கான சுதந்­திர தேசத்தை காண்­பித்தேன் என்று மோசேக்கு கூறு­கிறார், அத்­துடன் மக்கள் அங்கு செல்­கின்ற போதிலும் உன்னால் அங்கு செல்ல முடி­யாது என்றும் மோசே­யிடம் கூறு­கின்றார்.

    361 " – அண்ணலா,
    யோசுவா என்பான்பின் னுற்றதுவும் அன்னவன்
    அத்தேசம் பெருகச் செயித்ததுவும்"
- பின்பு இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, யோசுவாவை இஸ்ரேலியர்களை வழி நடத்தும் தலைவனாக நியமித்தான். பின்பு மோசே யோசுவாவை நோக்கி: நோக்கி பலங்கொண்டு திடமனதாயிரு; கடவுள் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இவர்களை அழைத்துக்கொண்டபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படிசெய்வாய்.மேலும் கடவுள் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.
- மோசே மரித்தான்
- கடவுளின் தாசனாகிய மோசே மோவாப் நாட்டில் கடவுளுடைய வார்த்தையின்படியே மரித்தான். அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். பின்பு கடவுள் யோசுவாவுக்கு தரிசனமாகி நீயும் இந்த மக்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள் நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை, என்று கடவுள் அவனுக்கு வாக்கருளினார்.
- தேவனின் கட்­ட­ளைப்­படி ஒழு­கி­வரும் மோசே தேவனின் இறு­திக்­கட்­ட­ளையும் ஏற்­கிறார். அந்தச் சந்­தர்ப்­பத்தில் தனது ஊழி­யக்­கா­ர­னான யோசு­வாவை அழைத்து தேவனின் கட்­ட­ளையை விளக்கி, மோசே தனது மேலா­டை­யையும் அற்­புதக் கோலையும் அவ­ரிடம் ஒப்­ப­டைக்­கின்றார்.
- இனியும் நமது மக்­களை நீயே வழி­ந­டத்­துவாய். இறைவன் அளித்­துள்ள தேசத்­துக்கு மக்­களை அழைத்துச் செல்வாய் என்று பணிக்­கவே, இது எப்­படி என்னால் சாத்­தி­ய­மாகும் என்று யோசுவா மோசே­யிடம் கேட்­கிறார்.
- எனினும் தேவன் கட்­ட­ளை­யி­டுவார் அவ­ரது விருப்­பத்­தையும் எண்­ணங்­க­ளையும் நிறை­வேற்று என்று மோசே யோசு­வா­வுக்கு உறுதியாகக் கூறினார்.
- இதன் பின்னர் நேபோ மலைத் தொடரில் மோசேயின் இறு­திக்­கா­லமும் நிறை­வ­டை­கி­றது என்றும் இந்நாள் வரை மோசேயின் உடல் அடக்­கம்­பண்­ணப்­பட்ட கல்­லறை என்று எதுவும் கண்டு பிடிக்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது.
- மோசேயின் மேலா­டை­யையும் அவ­ரது அற்­பு­தக்­கோ­லையும், தாங்­கி­ய­வாறு நோபோ மலை­யி­லி­ருந்து இறங்கி வந்த யோசு­வாவை கண்ட மக்கள் மோசேயின் இறு­திக்­காலம் நிறை­வே­றி­விட்­டதை உணர்ந்­த­வர்களாய் அழுது புலம்­பினர்.
- யோசுவாவும் மோசேயைப் போல கடவுளை முழுமையாக நம்பி அவருடைய வழியில் நடந்து வந்தார். மோசேயைக் கடவுள் தன்னிடம் அழைத்துக் கொண்டபின் யோசுவா மோசேயின் இடத்திற்கு வந்தார். இப்போது மக்கள் யோசுவாவின் கீழ் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். யோசுவாவின் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் நிறைய போர்களில் ஈடுபட்டனர். கடவுள் அவர்களோடு இருந்ததால் பல வெற்றிகளைப் பெற்றனர்.

    362-363 "-- ஆசையினால்
    ஈப்தா எனவொருவ னீன்றமகளைப் பலியிட்டு
    ஆப்தமுடன் ஊரையர சாண்டதுவும்"
- யெப்தா செய்த சத்தியம்
- இஸ்ரவேலர்கள் மறுபடியும் யெகோவாவை விட்டுவிட்டு பொய் கடவுள்களை வணங்க ஆரம்பித்தார்கள். ஆனால், அம்மோனியர்கள் இஸ்ரவேலர்களைத் தாக்கி, அவர்களோடு சண்டை போட்டபோது, அந்தப் பொய் கடவுள்கள் இஸ்ரவேலர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. பல வருஷங்களாக இஸ்ரவேலர்கள் கஷ்டப்பட்டார்கள். கடைசியில் அவர்கள் யெகோவாவிடம், ‘நாங்கள் தப்பு செய்துவிட்டோம். எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று சொன்னார்கள். இஸ்ரவேலர்கள் தங்களிடம் இருந்த சிலைகளை அழித்துவிட்டு, மறுபடியும் யெகோவாவை வணங்க ஆரம்பித்தார்கள். அதனால், அவர்களுடைய கஷ்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று யெகோவா நினைத்தார்.
- இஸ்ரவேலர்களுக்குத் தலைவராக இருந்து, அம்மோனியர்களோடு போர் செய்ய யெப்தா என்ற வீரனைக் கடவுள் தேர்ந்தெடுத்தார். அவர் யெகோவாவிடம், ‘இந்தப் போரில் ஜெயிப்பதற்கு நீங்கள் உதவி செய்தால், நான் வீட்டுக்குத் திரும்பி வரும்போது, என்னைப் பார்க்க என் வீட்டிலிருந்து முதலில் யார் வந்தாலும் அவரை உங்களுக்கே தந்துவிடுகிறேன்’ என்று சத்தியம் செய்தார். அவர் ஜெபத்தில் கேட்டபடியே, போரில் ஜெயிக்க யெகோவா அவருக்கு உதவி செய்தார்.
- யெப்தா தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அவரைப் பார்க்க முதலில் வந்தது யார் தெரியுமா? அவருடைய ஒரே மகள்தான்! அவள் கஞ்சிராவைத் தட்டிக்கொண்டே நடனம் ஆடிக்கொண்டு வந்தாள். இப்போது யெப்தா என்ன செய்வார்? கடவுளுக்குச் செய்த சத்தியத்தை அவர் நினைத்து பார்த்து, ‘ஐயோ, என் மகளே! என் மனதைச் சுக்குநூறாக்கி விட்டாயே! நான் யெகோவாவிடம் ஒரு சத்தியம் செய்திருக்கிறேன். அதைக் காப்பாற்ற வேண்டுமென்றால், சீலோவில் இருக்கிற வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்வதற்கு உன்னை நான் அனுப்ப வேண்டும்!’ என்று சொன்னார். அதற்கு அவள், ‘அப்பா, நீங்கள் யெகோவாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்திருந்தால், அதைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். நான் என் தோழிகளோடு மலைகளுக்குப் போய் இரண்டு மாதங்கள் அங்கே தங்குவதற்கு அனுமதி கொடுங்கள். அதற்குப் பிறகு நான் சீலோவுக்குப் போகிறேன்’ என்று சொன்னாள். யெப்தாவின் மகள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வழிபாட்டுக் கூடாரத்தில் கடவுளுக்கு உண்மையாகச் சேவை செய்தாள். ஒவ்வொரு வருஷமும், அவளுடைய தோழிகள் அவளைப் பார்க்க சீலோவுக்குப் போனார்கள்(யெப்தா தன் மகளை பலி கொடுக்கவில்லை,அவள் கன்னியாகவே இருந்துவிட்டாள் என்பதே வேத வல்லுனர்களின் கருத்தாகும்.)

    363- 364 "– தீப்தியுடன்
    சிம்சோனொரு சிங்கத் தேன்கதைக்காய் முப்பதுபேர்
    தம்சோர்வு கண்ட தனிக்கதையும் –
- சிம்சோன் – வியப்பூட்டும் கதை !
- இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரிடம் அடிமைகளாக இருந்த காலம். அங்கு மனோவாகு என்றொருவர் இருந்தார். அவருக்குக் குழந்தைகளே இல்லை. தனக்கு ஒரு குழந்தைபாக்கியம் இல்லையே எனவருந்திய மனோவாகுவின் மனைவி கடவுளிடம் தொடர்ந்து வேண்டினாள்..
- கடவுளின் தூதர் ஒருநாள் அவளுக்கு முன்பாக வந்து நின்று அவளுக்குக் கடவுள் ஒரு குழந்தையைத் தரப் போவதாகவும், அவள் இனிமுதல் திராட்சை ரசமோ, மதுவோ அருந்தக் கூடாது. தீட்டான எதையும் உண்ணக் கூடாது’ என்றும் அக்குழந்தை மூலம் கடவுள் பெலிஸ்தியரிடம் அடிமையாய் இருக்கும் மக்களை விடுவிக்கப் போகிறார் என்றும் தூதர் சொன்னார்.
- அவள் மகிழ்ச்சியும் பரவசமும் அடைந்தாள்.
- தூதர் தொடர்ந்தார். ‘ உன் மகன் மிகப் பெரிய வீரனாக இருப்பான். அவன் கடவுளுக்கானவன், அவனுடைய தலையில் சவரக் கத்தி படவே கூடாது’.
- அவள் இதையெல்லாம் கேட்டுத் திகைத்துப் போய் வீட்டை நோக்கி ஓடினாள். ஓடிச் சென்று தன் கணவனிடம் தான் கண்டதையெல்லாம் கூறினாள். அவனும் வியப்பும், சந்தேகமும் கலந்த மனநிலையில் இருந்தான்.
- கடவுளின் தூதர் சொன்னபடியே மனோவாகுவின் மனைவி கர்ப்பமானாள்.
- பேறுகாலம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு சிம்சோன் என்று பெயரிட்டார்கள். கடவுளின் தூதர் கட்டளையிட்டிருந்தபடி அவனுடைய தலை மயிரை அவர்கள் கத்தரிக்கவே இல்லை.
- சிம்சோன் மிகவும் வலிமைசாலியாய் வளர்ந்தான். ஒருநாள் அவன் திமினா என்னும் ஊருக்குச் சென்றான். அங்கே ஒரு பெலிஸ்திய இளம் பெண்னைச் சந்தித்தான். அவளுடைய அழகில் சிம்சோன் தன்னை மறந்தான். மணந்தால் அவளைத் தான் மணக்கவேண்டும் என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டான். நேராக பெற்றோரிடம் வந்தான்,தந்தையிடம் அப்பெண்ணைத் தனக்கு மணம் முடித்து வைக்கக் கேட்டான்.
- அவள் பெலிஸ்தியர் மகள் என அறிந்த தந்தை ‘மகனே… நீ கடவுளிடமிருந்து வந்தவன். பெலிஸ்தியர்களோ விருத்தசேதனம் கூட செய்து கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள். அவர்களோடு சம்பந்தம் வைப்பது நல்லதல்ல. அது கடவுளுக்கு விரோதமான செயல்’ எனத் தந்தை மீண்டும் மீண்டும் சொன்னார்.
- சிம்சோனோ,’ நீங்கள் வந்து அந்தப் பெண்ணைப் பேசி முடித்து எனக்கு மனைவியாக்குங்கள். வேறு எதுவும் பேசவேண்டாம் ‘ என்றார். அதுதான் கடவுளின் சித்தம் என்பதை அறியாத பெற்றோர் வருந்தினர்.
- சிம்சோன் தன்னுடைய மனதைக் கொள்ளை கொண்ட பெண்ணைக் காணச் சென்றார். போகும் வழியில் திடீரென ஒரு சிங்கம் ஆவேசமாக சிம்சோனின் மீது பாய்ந்தது. சிம்சோன் சிங்கத்தை தம்முடைய வெறும் கைகளினால் தூக்கி இரண்டாகக் கிழித்து எறிந்தார். அந்த முரட்டுச் சிங்கம் சிம்சோனின் கைகளில் சின்ன ஆட்டுக்குட்டியாகி துடிதுடித்து இறந்தது. சிம்சோன் இதை யாருக்கும் சொல்லவில்லை.
- அவர் நேராகச் அந்தப் பெண்ணைச் சந்தித்துப் பேசினார். அவருக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிற்று. அவளும் அவரை விரும்பினார். சிறிது நாட்கள் இன்பமான காதல் பேச்சுகளில் செலவிட்டபின், சிம்சோன் அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தன் பெற்றோரிடம் திரும்பினார். வரும் வழியில் அவர் கொன்று போட்டிருந்த சிங்கத்தின் பிணத்தின் மேல் தேனீக்கள் கூடு கட்டித் தேனடை வைத்திருந்தன. அதை எடுத்துத் தின்றார்.
- நேராகத் தந்தையிடம் சென்று,’ அப்பா எனக்கு அந்தப் பெண்னை மிகவும் பிடித்திருக்கிறது, அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. நீங்கள் பெண்ணின் தந்தையிடம் பேசி எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்றார்.
- சிம்சோனின் தந்தை வேறு வழியில்லாமல் நேராக பெண்ணின் வீட்டுக்குச் சென்று பேசி திருமணத்தை நடத்தி வைத்தார். மணவிழா ஏழு நாட்கள் நடப்பதாக ஏற்பாடு. சிம்சோனின் தோழர்களாக ஊரிலுள்ள முப்பது இளைஞர்களை பெண்ணின் தந்தை அழைத்து வந்திருந்தார். அவர்கள் அவனோடு உண்டு குடித்து மகிழ்ந்திருந்தார்கள்.
- சிம்சோன் அவர்களிடம்,’ நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்கிறேன். அதன் பதிலை நீங்கள் இந்த விருந்து முடியும் முன் கண்டு பிடித்துச் சொன்னால், உங்களுக்கு முப்பது நாற்பட்டாடைகளையும், முப்பது மேலாடைகளையும் அளிப்பேன். ஒருவேளை விடுகதைக்கான விடையை நீங்கள் கண்டுபிடிக்காவிடில் நீங்கள் எனக்கு முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தரவேண்டும்’. என்றார். அவர்கள் சம்மதித்தனர்.
- சிம்சோன் அவர்களிடம்,’ உண்பவனிடமிருந்து உணவு வந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது – இதுவே விடுகதை. இதன் பதிலைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்’ என்றார்.
- அவர்கள் விடுகதைக்கான விடை தேடி அலைந்தார்கள். மூன்று நாட்களாகியும் அவர்களால் அதன் விடையைக் கண்டு பிடிக்க முடியவே இல்லை. அவர்கள் நேராக சிம்சோனின் மனைவியிடம்வந்து அந்த விடுகதையின் விடைய அறிந்து கூற்ம்படி வேண்டினர்.
- இரவில் அவள் சிம்சோனுடன் தனித்திருக்கையில் சிம்சோனை மயக்கும் வார்த்தைகளால் மயக்கி விடுகதைக்கான விடையைக் கண்டுபிடித்தாள். சிம்சோன் நடந்த அனைத்தையும் விளக்கினார். தன்னை உண்ண வந்த சிங்கத்திடமிருந்தே தனக்கு உணவு கிடைத்ததைச் சொன்னார். அவள் அதை அந்த இளைஞர்களிடம் சொன்னாள்.
- ஏழாவது நாள்.
- விடுகதியின் விடை தனக்கு மட்டும் தெரியும் என்றிருந்த சிம்சோனினிடம் அவன் நண்பர்கள், ‘தேனினும் இனியது எது ? சிங்கத்தினும் வலியது எது ?’ எனச்சொல்லிவிட்டு’ உன் விடுகதைக்கான விடையைக் கண்டு பிடித்து விட்டோ மே !!! எங்கே எங்கள் பரிசு ? சீக்கிரம் கொடு…’ என்று கூறிச் சிரித்தனர்.
- சிம்சோன் கோபமடைந்தான். எனக்கும் என்னுடைய மனைவிக்கு மட்டும் தெரிந்த இந்த ரகசியம் வெளியே தெரிந்திருக்கிறது. அப்படியென்றால் என் மனைவிக்கும் இந்த இளைஞர்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. இல்லாவிட்டால் இந்த ரகசியம் எப்படி வெளியே செல்லும் ? என்று - உள்ளுக்குள் பல்வேறு எண்ணங்கள் அலைமோத சிம்சோன் கடும் கோபமடைந்தான்.
- ‘உங்களுக்குப் பரிசு தானே வேண்டும். கொஞ்சம் பொறுங்கள்’ என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறி அருகிலுருந்தஅஸ்கலோனுக்குச் சென்று கண்ணில் பட்ட முப்பது பேரைக் கொன்று அவர்களின் ஆடையை எடுத்து வந்தார். அதை பந்தயத்தில் வென்ற இளைஞர்களிடம் கொடுத்தான்

    364-366 " எம்சோர்வை
    மாற்றலரும் எய்தி மடிகவென வீடிடிக்கும்
    ஆற்றலுளோன் கண்ணறைய னாகியே - சீற்றமுடன் 365
    பட்டதுவும்"
- திருமணம் செய்துகொள்ள சிம்சோன் தாமதிக்கவே, பெலிஸ்தியர் அந்தப் பெண்ணை வேறொருவனுக்கு மணமுடித்து வைத்தனர். அதனை அறிந்த சிம்சோன் கடுங்கோபம் கொண்டான்.
- ‘பெலிஸ்தியர்களே… உங்கள் புத்தியைக் காட்டி விட்டீர்களே… உங்களை நான் என்ன செய்கிறேன் பாருங்கள்’ என்று தங்களுக்குள்ளே கருவிக் கொண்டான்.

- அன்றைக்கே அவன் சென்று முந்நூறு நரிகளைத் துரத்திப் பிடித்தான். இரண்டிரண்டு நரிகளின் வால்களைச் சேர்த்து அதில் ஒரு தீப்பந்தத்தையும் வைத்துக் கட்டினான். பின் நரிகளை பெலிஸ்தியர்களின் வயல்களுக்குள் ஓடவிட்டார். நரிகள் தீப்பந்தத்தியும் கொண்டு அங்கும் இங்கும் இழுத்துக் கொண்டே ஓடியதில் பெலிஸ்தியர்களில் வயல்கள் எல்லாம் எரிந்து சாம்பலாயின. மிகப் பெரிய அழிவு அன்று ஏற்பட்டது.

- பெலிஸ்தியர்கள் ஆத்திரமடைந்தார்கள். நேராக சிம்சோனின் மாமனார் வீட்டுக்குச் சென்று,’ உங்களால் தான் அந்த இஸ்ரயேலன் எங்கள் தானியங்களை எல்லாம் அழித்தான். எனவே நீங்களும் செத்துத் தொலையுங்கள் என்று சொல்லி சிம்சோனின் மனைவியையும், அவள் தகப்பனையும் வீட்டோ டு தீயிட்டுக் கொன்றார்கள்.
- தன் அருமை மனைவி கொல்லப்பட்டதை அறிந்த சிம்சோனின் கோபம் தலைக்கேறியது. ‘பெலிஸ்திய நாய்களே… என்னோடா விளையாடுகிறீர்கள். உங்களைப் பழிக்குப் பழி வாங்காமல் ஓயமாட்டேன்’ என்று பகிரங்கமாய்க் கூவினார். சிம்சோனின் வலிமையை எல்லோரும் அறிந்திருந்ததனால் யாரும் அவரை நெருங்கவில்லை.
- சிம்சோன் நூற்றுக்கணக்கான பெலிஸ்தியர்களை அடித்தே கொன்றான் . பின் அங்கிருந்து ஏற்றாம் என்னுமிடத்திற்குச் சென்று அங்குள்ள பாறைப் பிளவு ஒன்றில் தங்கியிருந்தார்.
- பெலிஸ்தியர்களின் கோபம் பன்மடங்கு அதிகரித்தது. அவர்கள் ஒரு நாட்டைப் பிடிக்கப் போவது போல சிம்சோனைப் பிடிக்கப் போனார்கள். நேராக இஸ்ரயேலர்கள் அதிகமாக இருக்கும் நகருக்குப் போய் கூடாரமடித்தார்கள்.
- ‘ஐயோ… என்னவாயிற்று ? ஏன் போர்வீரர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்’ இஸ்ரயேலர்கள் பயத்தில் அலறினார்கள்.
- ‘உங்கள் சிம்சோனை நீங்கள் என்னிடம் ஒப்படைத்தே ஆகவேண்டும். இல்லையேல் அவன் பெலிஸ்தியர்களை அழித்தது போல இஸ்ரயேலர்களை எல்லோரையும் நாங்கள் அழிப்போம்’ என்று கர்ஜித்தார்கள்.
- ‘எங்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். நாங்கள் போய் சிம்சோனைக் கட்டி உங்களிடம் கொண்டு வந்து தருகிறோம்’ இஸ்ரேலிய மக்கள் வாக்களித்தார்கள்.
- ‘சரி உடனே போய் சிம்சோனைக் கட்டி இழுத்து வாருங்கள்’ பெலிஸ்தியர்கள் ஆணையிட்டார்கள். இஸ்ரேலியர் சூழ்ச்சியாகச்
- சிம்சோனைக் கயிறுகளினால் பிணைத்துக் கட்டி பெலிஸ்தியர்களிடம் கூட்டிக் கொண்டுபோனார்கள். உடல் முழுவதும் கட்டப்பட்ட நிலையில் பெலிஸ்தியர்களின் முன்னால் நிறுத்தப்பட்டார் சிம்சோன். பெலிஸ்தியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
- சிம்சோன் சிரித்தார்.’ ஏன் ஆரவாரம் செய்கிறீர்கள் மூடர்களே.. என்னையா கட்டிப் போடுகிறீர்கள்’ என்று சொல்லி உடலை முறுக்கினான். உடனே கட்டப்பட்டிருந்த கயிறுகளெல்லாம் அறுபட்டுத் தெறித்தன. அங்கே கிடந்த ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கையிலெடுத்து கூடிநின்ற பெலிஸ்தியர்களை மூர்க்கமாகத் தாக்கினார். அங்கேயே அவர் கையில் சிக்கி ஆயிரம் பேர் இறந்தார்கள். சிம்சோன் பெலிஸ்தியர்களின் கையில் சிக்காமல் தப்பினார்.
- பெலிஸ்தியர்கள் சிம்சோனை எப்படியும் பிடித்துவிட வேண்டுமென்று தவியாய்த் தவித்தார்கள். அவர் காசா நகரிலுள்ள ஒரு விலைமாதுவின் வீட்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவர்கள் நகரின் மிகப் பிரம்மாண்டமான வாசல் கதவை அடைத்து அதனருகே காவல் இருந்தார்கள். எப்படியும் சிம்சோன் இந்தக் கதவைத் தாண்டாமல் வெளியே போக முடியாது. இங்கே வைத்து அவனைக் கொன்று விடவேண்டும் என்று சத்தமில்லாமல் பதுங்கி இருந்தார்கள்.
- சிம்சோன் நள்ளிரவில் விலைமாதின் வீட்டை விட்டு வெளியே வந்தார். நகரின் வாசலருகே வரும்போது வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன் மீது ஏறிக் குதிக்கவும் முடியாது ! அந்த அளவுக்கு உயரமானது. சிம்சோன் அந்த வாசலருகே வந்ததும் பதுங்கியிருந்தவர்கள் அவரைத் தாக்க வந்தார்கள். சிம்சோன் அசரவில்லை, இரண்டு கைகளாலும் நகரின் கதவைப் பெயர்த்து எடுத்தார். தாக்க வந்த கூட்டம் நடுநடுங்கி பின்வாங்கியது. சிம்சோன் அந்த பிரம்மாண்டக் கதவைத் தலையில் சுமந்து கொண்டே நகரிலிருந்து வெளியேறி மலையுச்சிக்குப் போனார்.
- பெலிஸ்தியர்களால் சிம்சோனை நெருங்கவே முடியவில்லை. சிம்சோன் சோரேக்கு ஆற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் தெலீலா என்னும் பெண்ணைக் காதலிக்கிறார் என்னும் செய்தி பெலிஸ்தியர்களுக்குக் கிடைத்தது. அந்தப் பெண்ணை வைத்து சிம்சோனின் வீரத்தின் ரகசியத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.
- அவள் மூலமாக சிம்சோன் வலிமையின் இரகசியத்தை அறிந்துகொண்ட பெலிஸ்தியர்கள்
- பெலிஸ்தியர்கள் சிம்சோனை பிடித்து நிறுத்தி அவனுடைய கண்களைத் தோண்டி எடுத்தார்கள். சிம்சோன் கதறினார். அவரை அவர்கள் சிறையில் அடைத்து சங்கிலிகளால் பிணைத்தனர். அவரைக் கேலிப்பொருளாக்கி மாவரைக்கும் வேலையைச் செய்ய வைத்தார்கள்.
- சிம்சோன் உள்ளுக்குள் அழுதுகொண்டே மாவரைத்துக்கொண்டிருந்தார். அவரை பெலிஸ்தியர்கள் அவ்வப்போது அழைத்து சபையில் நிற்கவைத்து அவமானப் படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். சிம்சோன் நிராயுதபாணியாய் நின்றார்.
- மொட்டையடிக்கப் பட்டிருந்த அவருடைய தலைமுடி வளரத் துவங்கியது ! பெலிஸ்தியர்கள் அதைக் கவனிக்கவில்லை. தலைமுடி வளர வளர சிம்சோன் தான் இழந்த வலிமையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக் கொண்டிருந்தார்.
- பெலிஸ்தியர்கள் சிம்சோனைத் தங்கள்வசம் ஒப்படைத்த அவர்களின் கடவுளுக்கு மிகப் பெரிய விழா எடுப்பதற்காக ஒரு பெரிய மண்டபத்தில் ஒன்றுகூடினார்கள்.
- சிம்சோன் உள்ளுக்குள் ஆண்டவரை நோக்கி உருக்கமாய் மன்றாடினார்.
- ‘ஆண்டவரே… இந்த ஒருமுறை மட்டும் எனக்குப் பழைய பலத்தைத் தாரும். இந்த பெலிஸ்தியர்களின் கொட்டத்தை அடக்க எனக்கு உதவிசெய்தருளும்’ என்று வேண்டினார்.
- கடவுளின் அருள் அவர்மீது வந்திறங்கியது. அவருடைய முழு வலிமையும் அவருக்குள் திரும்ப வந்தது.
- ‘பெலிஸ்தியர்களைக் கொல்வதற்காக என் உயிரைக் கொடுப்பதில் மகிழ்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டே இரண்டு கைகளிலும் தன் முழுபலத்தையும் இறக்கி இரண்டு தூண்களையும் பலமாய்ச் சாய்த்தார்.
- தூண்கள் இரண்டும் சாயத் துவங்கின. மண்டபத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திகிலடைந்தார்கள். அதற்குள் மண்டபத்தின் கூரை மொத்தமாய் அவர்கள் மேல் விழுந்து நசுக்கியது. மண்டபம் தரைமட்டமானது. அனைவரும் அதே இடத்தில் இறந்தார்கள்.

- சிம்சோனும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.

    366 –"லேவியன்வைப் பாட்டியைப் பல்லோர் புணர்ந்து
    விட்டதனாற் போர்புரிந்து வீந்ததுவும்"
- -நியாயாதிபதிகள்
- லேவியனான மனிதனும் அவனது வேலைக்காரியும்
- அக்காலத்தில் இஸ்ரவேலருக்கு அரசன்இருக்கவில்லை. எப்பிராயீம் என்னும் மலைநாட்டில் ஒரு லேவியன் வாழ்ந்து வந்தான். அவனுடன் இருந்த வேலைக்காரி, அவனுக்கு மனைவியைப் போல வாழ்ந்து வந்தாள். அந்த வேலைக்காரி யூதா தேசத்துப் பெத்லெகேமைச் சேர்ந்தவள். 2 அந்த வேலைக்காரி லேவியனோடு ஒரு விவாதம் செய்து அவனை விட்டுவிட்டு, யூதாவிலுள்ள பெத்லேகேமிலிருந்த தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் சென்று, அங்கு நான்கு மாதங்கள் தங்கியிருந்தாள். 3 பின்பு அவள் கணவன் அவளை அழித்துவரச் சென்றான். லேவியன் அவளது தந்தையின் வீட்டை அடைந்தான். லேவியனைக் கண்ட அவளது தந்தை சந்தோஷம் அடைந்து உபசரித்தார். லேவியன்மாமனாரின் உபசரிப்பில் அவர் வீட்டில் ஐந்து நாட்கள் தங்கினான்
- மற்றொரு இரவும் தங்கியிருக்க அந்த லேவியன் விரும்பவில்லை. அவன் தன் 2 கழுதைகளோடும், வேலைக்காரியோடும் புறப்பட்டான்
- அவர்கள் கிபியா என்னும் நகரில் தங்கினார்கள். இரவை அந்த நகரில் கழிக்க எண்ணினார்கள். அவர்கள் நகர சதுக்கத்திற்கு வந்து அங்கு அமர்ந்தனர். ஆனால் இரவில் தங்குவதற்கு யாரும் அவர்களை அழைக்கவில்லை.
- 16 அன்று மாலை வயல்களிலிருந்து ஒரு முதியவன் நகரத்திற்குள் வந்தான். அவனுடைய வீடு எப்பிராயீம் மலை நாட்டிலிருந்தது. ஆனால் அவன் கிபியா நகரத்தில் வசித்துக்கொண்டிருந்தான். முதிய மனிதன் நகரசதுக்கத்தில் பயணியைப் (லேவியனை) பார்த்தான். முதியவன், "எங்கு போய்க் கொண்டிருக்கிறாய்? எங்கிருந்து வந்தாய்?" என்று கேட்டான்.
- 18 லேவியன், "நாங்கள் யூதாவிலுள்ள பெத்லெகேம் நகரிலிருந்து பயணம் செய்கிறோம். என்றான். முதியவன் லேவியனையும் மற்றவர்களையும் ஹன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
- 22 லேவியனும் அவனோடிருந்தவர்களும் முதியவனின் உபசாரத்தை அனுபவித்துக்கொண்டிருந்த பொழுது அந்நகர மனிதர்களில் துன்மார்க்கரான சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் முதியவனிடம் உரக்கப் பேசினார்கள். அவர்கள், "உன் வீட்டிற்கு வந்த மனிதனை வெளியே அழைத்து வா. நாங்கள் அவனோடு பாலின உறவு கொள்ளவேண்டும்" என்றனர்.
- முதியவன் வெளியே போய், அந்த துன்மார்க்கரிடம் பேசி, "வேண்டாம், எனது நண்பர்களே, அத்தகைய தீயகாரியத்தைச் செய்யாதீர்கள். அவன் என் வீட்டு விருந்தினன். இத்தகைய கொடிய பாவத்தைச் செய்யாதீர்கள். பாருங்கள், இவள் என் மகள். இதற்கு முன் பாலியல் அனுபவத்தை அறிந்ததில்லை. அவளை உங்களிடம் அழைத்து வருவேன். மேலும் எனது விருந்தினனுடைய வேலைக்காரியையும் அழைத்து வருகிறேன். உங்கள் விருப்பம் போல் அவர்களை நடத்தலாம். ஆனால் இம்மனிதனுக்கு அத்தகைய கொடுமை செய்யாதீர்கள்" என்றான்.
- ஆனால் அந்த துன்மார்க்கர் முதியோன் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. எனவே லேவியன் வேலைக்காரியை அழைத்து வெளியே அனுப்பினான். அவர்கள் அவளை இராமுழுவதும் கற்பழித்து காயப்படுத்தினார்கள். அதிகாலையில் அவர்கள் அவளைப் போகவிட்டனர்.
- விடியும்போது அவள் தன் எஜமானன் தங்கியிருக்கும் வீட்டிற்குத் திரும்பிவந்து முன் வாசலில் வந்து விழுந்தாள். வெளிச்சம் உதிக்கும்வரை அங்கேயே கிடந்தாள்.
- வேவியன் மறுநாள் அதிகாலையில் விழித்து தன் வீட்டிற்குப் போகவிரும்பி வெளியே போவதற்காக கதவைத் திறந்த போது கதவின் நிலையில் ஒரு கை குறுக்கே விழுந்தது. அவன் வேலைக்காரி அங்கே வாசலுக்கெதிரில் விழுந்துகிடந்தாள். லேவியன் அவளிடம், "எழுந்திரு புறப்படலாம்" என்றான். ஆனால் அவள் பதில் தரவில்லை (மரித்து கிடந்தாள்.)
- லேவியன் தன் வேலைக்காரியை கழுதையின் மேலேற்றிக் கொண்டு, வீட்டிற்குச் சென்றான்.
- அவன் வீட்டிற்கு வந்ததும், ஒரு கத்தியை எடுத்து அவளை துண்டுகளாக வெட்டினான். அந்த வேலைக்காரியின் துண்டுகளையும் இஸ்ரவேலர் வாழ்ந்த பகுதிகளுக்கெல்லாம் அனுப்பினான்.

    366-367"- – இட்டபந்துக்
    காகக் கொலைசெய்து கன்னியரைத் தேடியதும்
    ஏகும் வழியிற்பெண் ணெடுத்ததுவும் –"
- (இந்தக் கதை தெரியவில்லை)

    367–368 –" சாகக்
    கணவன்ற னைக்கொடுத்த காரிகை ரூத்துக்கோர்
    கணவன் நிருமித்த கதையும்’
- பெத்லேகம் ஊரினராகிய நிகோமி என்பவள் மாமியார்; ரூத் என்பவள் மருமகள். இருவரும் விதவையர். மாமியார் மருமகளை அவளுடைய தாய் வீட்டுக்குச் சென்று வேறு ஒரு ஆடவனை மணந்து மகிழ்ச்சியுடன் வாழ வற்புறுத்தியும் மருமள் மாமியாரை விட்டுப் பிரியச் சம்மதிக்கவில்லை. மாமியாரைப் பேணுதலே தேவன் தனக்குப் பணித்தது என்று இருந்தாள்.
- நகோமிக்கு அவளுடைய புருஷனின் உறவின் முறையில் போவாஸ் என்னும் மிகுந்த செல்வம் உடையவன். அவனுடைய வயல் வெளியில் வாற்கோதுமைக் கதிர்களை அறுக்கும் பணியில்மருமகள் ரூத் சேர்ந்தாள். தன் திறமையால் ரூத் போவாசின் கவனத்தை ஈர்த்தாள். மிகுந்த ஊதியம் பெற்று மாமியாரைப் பேணினாள்
- மாமியார் ரூத்துக்குப் போவாசக் கணவனாக மணம் முடிக்க நினைத்தாள் அதற்கு ஒரு யோசனையும் தெர்வித்தாள்.
- மாமியார் தனக்குக் கற்பித்தபடி, போவாஸ் புசித்துக் குடித்து மகிழ்ச்சியாயிருந்து களத்தில் படுத்துக் கொண்டிருந்தபோது, ரூத்து, மெள்ளப் போய் அவன் காலடியில் இருந்த போர்வையை வில்க்கிப் படுத்துக் கொண்டாள். பாதிராத்திரியில் அந்த மனுஷன், அருண்டு, திரும்பி அவளை யார் என்று விசாரித்தான். ரூத்து
- "நான்தான் ரூத்! உங்களுடைய அடிமைப் பெண். நீங்கள் என்னை மீட்கும் உரிமையுள்ளவர். அதனால் என்னை உங்களுடைய போர்வையால் மூடுங்கள்" என்று சொல்கிறாள். (ரூத் 3:9, NW) இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்" என்று போவாஸ் சொல்கிறார். (ரூத் 3:11) நகோமியின் இறந்த கணவருக்கு மிக நெருக்கமான உறவினர் ஒருவர் இருக்கிறார்... அவளை மீட்டுக்கொள்ளும் உரிமை முதலில் அவருக்குத்தான் இருக்கிறது... என ரூத்திடம் கூறுகிறார். ஆகவே, போவாஸ் முதலில் அந்த மனிதனை அணுகி ரூத்துக்குக் கணவனாகும் வாய்ப்பைக் கொடுக்க நினைக்கிறார். அவன் மறுக்கவே, போவாஸ் தானே ரூத்தை சாட்சிகளின் முன்னிலையில் மணக்கிறார். 5 ரூத்தை போவாஸ் கரம்பிடிக்கிறார். அதன்பின், ‘ஒரு ஆண்பிள்ளையைப் பெற யெகோவா அநுக்கிரகம் பண்ணுகிறார்.’ பெத்லகேம் பெண்கள் நகோமியை வாழ்த்துகிறார்கள், ஏழு மகன்களைவிட நகோமிக்கு ரூத் அருமையானவள் என்று சொல்லி பாராட்டுகிறார்கள். ரூத்துக்குப் பிறந்த மகன் பிற்காலத்தில் மகாராஜா தாவீதுக்கு மூதாதையாக ஆகிறார். (ரூத் 4:11-22)

    368 -369 "- மணமகனாய்ச்
    சாமுவேல் தோன்றியதுஞ் சாட்சியாம் பெட்டிகவர்
    காமுகரை நோயாற் கருக்கியதுஞ்"
- எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். அவருடைய இரண்டாம் மனைவி அன்னா குழந்தைப் பேறில்லாது அவமானப்பட்டாள் அவள் தேவனிடம் குழந்தசிப் பேற்றுக்கு மன்றாடினாள் ": "படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி, என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியே படாது". [2] உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். "நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்" என்று சொல்லி, அவர் அவனுக்குச் 'சாமுவேல்' என்று பெயரிட்டார்.
- 24 அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக் கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான்.
- 25 அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்.
- 26 பின் அவர் கூறியது: "என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டிருந்த பெண் நானே.
- 27 இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார்.
- 28 ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்
- அப்போது குருஏலியின் புதல்வர்கள் கீழ்த்தரமானவராக இருந்தனர். அவர்கள் ஆண்டவர்மீது அக்கறை கொள்ளவில்லை.
- 22 ஏலி முதிர்ந்த வயதடைந்தார். தம் பிள்ளைகள் இஸ்யேலருக்கு எதிராகச் செய்த அனைத்தையும், சந்திப்புக் கூடார வாயிலில் ஊழியம் செய்து வந்த பெண்களோடு தகாத உறவு கொண்டிருந்ததையும் கேட்டறிந்தார்.
- 23 அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இவ்வனைத்து மக்களிடமிருந்தும் உங்கள் தீய நடவடிக்கைகளைப் பற்றிக் கேள்விப்படுகிறேனே!
- 24 வேண்டாம் பிள்ளைகளே! ஆண்டவரின் மக்களிடையே பரவி இருப்பதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல.
- 25 ஒருவர் மனிதருக்கு எதிராகப் பாவம் செய்தால் வேறெவராவது கடவுளிடம் அவருக்காகப் பரிந்து பேசலாம். ஆனால் ஒருவர் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தால் அவருக்காகப் பரிந்து பேசுவோர் யார்?" இருப்பினும் அவர்கள் தங்கள் தந்தையின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் கொல்லப்பட வேண்டுமென்பது ஆண்டவரின் திருவுளமாக இருந்தது.
- 26 சிறுவன் சாமுவேல் வளர்ந்து ஆண்டவருக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்து வந்தான்.குரு ஏலியின் மக்கள் ஆண்டவனை மத்யாததினால், அவர்களைக் காப்பதாக்த் தாம் அளித்த உறுதிமொழியை கடவுள் திரும்பப் பெற்றார்

- இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: 'உன் வீடும் உன் மூதாதை வீடும் என்முன்பாக என்றென்றும் ஊழியம் புரிவீர்' என வாக்களித்திருந்தேன். ஆனால் தற்போது ஆண்டவர் கூறுவது: 'இவ்வாக்கு என்னைவிட்டு அகல்வதாக! ஏனெனில், என்னை மதிப்போரை நான் மதிப்பேன்; என்னை இகழ்வோர் இகழ்ச்சி அடைவர்"
- 22 சீலோவில் சாமுவேல் ஆண்டவனுக்குச் செய்த ஊழியத்தின் பயனாக அவனுக்கும் யெகோவாவுக்கும் இடையே ஒரு விசேஷப் பந்தம் உருவானது; அவன் யெகோவாவின் தீர்க்கதரிசியாகவும் பிரதிநிதி பேச்சாளராகவும் ஆனான். யெகோவா சொன்ன செய்தியை ஏலியிடம் தெரிவிப்பதற்குச் சிறுவன் சாமுவேல் முதலில் பயப்பட்டான்; ஏனென்றால் ஏலியின் குடும்பத்தின் மீது விதிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பு நிறைவேறப்போவதைக் குறித்து அவன் தெரிவிக்க வேண்டியிருந்தது. எப்படியோ, தைரியத்தைத் திரட்டி அதை ஏலிக்குத் தெரியப்படுத்தினான்; ஏலியும் கடவுளுடைய தீர்ப்பை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். யெகோவா சொன்ன எல்லாம் சீக்கிரத்திலேயே நிறைவேறியது. பெலிஸ்தருக்கு எதிராக இஸ்ரவேலர் போருக்குச் சென்றார்கள். தேவன் இஸரவேலருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் அடங்கியபெட்டியைப் பெலிஸ்தர்கள் கைபற்ரிக் கொண்டார்கள். ஒப்பந்தப் பெட்டி கைப்பற்றப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன் ஏலியும் இறந்துபோனார்.
- 2 அடுத்தடுத்து தாக்கிய துயரங்களில் ஒன்றுதான் இது. தலைமைக் குரு ஏலியின் பொல்லாத மகன்கள் ஓப்னியும் பினெகாஸும் புனித ஒப்பந்தப் பெட்டியை சீலோவிலிருந்து எடுத்துக்கொண்டு அணிவகுத்துப் போயிருந்தார்கள். பொதுவாக வழிபாட்டுக் கூடாரத்தின் மகா பரிசுத்த அறையில்தான் அது வைக்கப்பட்டிருக்கும்; மதிப்புமிக்க அந்தப் பெட்டி கடவுளின் பிரசன்னத்திற்கு அடையாளமாக விளங்கியது. மக்களோ அதை ஒரு மந்திரப் பொருள்போல் பாவித்து, போர்க்களத்திற்குக் கொண்டுபோனார்கள்; அந்தப் பெட்டி இருந்தால் வெற்றி தங்களைத் தேடி வருமென முட்டாள்தனமாக நம்பினார்கள். ஆனால், பெலிஸ்தர் அதைக் கைப்பற்றி, ஓப்னியையும் பினெகாஸையும் கொன்றுபோட்டார்கள்.—1 சா. 4:3-11.
- 3 சீலோவிலிருக்கிற வழிபாட்டுக் கூடாரத்திற்குப் பல நூற்றாண்டுகளாகப் பெருமை சேர்த்து வந்த அந்த ஒப்பந்தப் பெட்டி கைவிட்டுப்போகிறது. இந்தச் செய்தியைக் கேட்டதும் 98 வயதான ஏலி தனது இருக்கையிலிருந்து மல்லாக்காக விழுந்து உயிர்விடுகிறார். அன்று விதவையான அவருடைய மருமகளும் பிரசவத்தின்போது இறந்துபோகிறாள். "மகிமை இஸ்ரவேலைவிட்டு விலகிப்போயிற்று" என்று சொல்லி உயிர்விடுகிறாள். சீலோவின் சிறப்பு என்றென்றும் போய்விடுகிறது!—1 சா. 4:12-22.

    369-370 "-சாமுவேல்
    சவுலென் றொருவன் தனக்கரசு தந்து
    நவமாய் முடிசூட்டு நண்புஞ் –
- சவுல் என்பவன், இஸ்ரவேலர்களின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒன்றான யென்மீன் கோத்திரதனனான அபீயேல் என்பவனின் குமாரன். உடல் வகிமையும் நல்ல தோற்றமும் உடையவன்.அவன் தன் தந்தையின் கட்டளைப்படி காணாமற்போன் கழுதைகளைத் தேடும் வழியில் தேவனின் ஊழியக்காரனான சாமுவேலைச் சந்தித்தான்.சாமுவேல் சவுலைக் கண்டபோது ‘இதோ நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான்’ என்றார். சாமுவேல் அவனுக்கு பலியிடப்பட்ட விலங்கின் முன் தொடையினை உண்ணக் கொடுத்துச் சிறப்பு விருந்து செய்து பெருமையளித்தான். கர்த்தருடைய ஆவி சவுலின் மேல் இறங்கும் தேவன் உன்னோடே இருக்கிறார்’ என்று ஆசிர்வதித்துத் தேடி வந்த கழுதைகள் தந்தையிடம் சேர்ந்துவிட்டன; அதனால் உன் ஊருக்குச் செல்’ என்றான்.
- சாமுவேல் பன்னிரண்டு கோத்திரத்தாரையும் அழைத்து, அவர்கள் சமூகத்தில் திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்த்துச் சவுலை கர்த்தர் அரசனாகத் தேர்ந்தெடுத்ததை அறிவித்தான். அதை ஒரு புத்தகத்தில் எழுதிக் கர்த்தருடைய சந்நிதியில் வைத்தான்.
- அப்போது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி, ‘இதோ நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். என்றான்.

    370- 371 "சவுலரசைத்
    தாவீதடையச் சபித்ததுவும் தாவீதை
    யோவாது கொல்ல உசாவியதும்"
- ஒரு ராஜாவாக இருக்க தனக்குத் தகுதி இல்லை என சவுல் நினைக்கிறார். ‘நான் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், இது இஸ்ரவேலிலேயே மிகச் சிறிய கோத்திரம். அப்படியிருக்கும்போது நான்தான் ராஜா என்று எப்படிச் சொல்கிறீர்?’ என்று சாமுவேலிடம் கேட்கிறார். சவுல் தன்னை ஒரு பெரிய ஆள் போலவும் முக்கியமான ஆள் போலவும் காட்டிக் கொள்ளாததால் யெகோவாவுக்கு அவரைப் பிடித்திருக்கிறது. அதனால்தான் அவரை ராஜாவாக தேர்ந்தெடுக்கிறார்.
- என்றாலும், சவுல் ஓர் ஏழை அல்ல, சாதாரண ஓர் ஆளும் அல்ல. அவர் ஒரு பணக்கார குடும்பத்திலிருந்து வருகிறார். பார்ப்பதற்கு மிக அழகாகவும் உயரமாகவும் இருக்கிறார். இஸ்ரவேலில் உள்ள எல்லோரையும்விட ஓர் அடியாவது உயரமாக இருக்கிறார்! அதுமட்டுமல்ல, படுவேகமாக ஓடுகிறவராகவும் அதிபலசாலியாகவும் இருக்கிறார். சவுலை ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்ததற்கு ஜனங்கள் சந்தோஷப்படுகிறார்கள். ‘ராஜா நீடூழி வாழ்க’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
- இஸ்ரவேலின் எதிரிகள் இன்னமும் பலத்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இஸ்ரவேலருக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சவுல் ராஜாவாக்கப்பட்டதும் சீக்கிரத்திலேயே அவர்களுக்கு விரோதமாக அம்மோனியர் போர் செய்ய வருகிறார்கள். ஆனால் சவுல் ஒரு பெரிய படையைத் திரட்டி, அம்மோனியரைத் தோற்கடிக்கிறார். இதனால் சவுல் ராஜாவாக இருப்பதைக் குறித்து ஜனங்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
- ஆண்டுகள் செல்லச் செல்ல, சவுல் அநேக எதிரிகளைத் தோற்கடித்து இஸ்ரவேலருக்கு வெற்றிகளைத் தேடித் தருகிறார். சவுலுக்கு யோனத்தான் என்ற ஒரு மகனும் இருக்கிறார், அவர் படு தைரியசாலி. இஸ்ரவேலர் பல போர்களில் வெற்றிபெற அவர் உதவுகிறார். பெலிஸ்தர் இஸ்ரவேலுக்கு இன்னும் பயங்கர எதிரிகளாக இருக்கிறார்கள். ஒருநாள் ஆயிரம் ஆயிரமான பெலிஸ்தர் போர் செய்ய வருகிறார்கள்.
- அப்போது, யெகோவாவுக்குப் பலி செலுத்த, அதாவது காணிக்கைச் செலுத்த தான் வரும்வரை சவுலைக் காத்திருக்கும்படி சாமுவேல் சொல்கிறார். ஆனால் சாமுவேல் வருவதற்குத் தாமதமாகிறது. பெலிஸ்தர் எங்கே போரைத் தொடங்கி விடுவார்களோ என்று சவுல் பயப்படுகிறார், எனவே துணிந்து அந்தப் பலியைத் தானே செலுத்துகிறார். அதன் பின், சாமுவேல் வந்துசேர்ந்தபோது நடந்ததை அறிகிறார்; கடவுளுக்கு சவுல் கீழ்ப்படியாமல் போனதாக சொல்கிறார். அதனால் ‘இஸ்ரவேல் மீது அரசாள யெகோவா வேறொரு ஆளை ராஜாவாக தேர்ந்தெடுப்பார்’ என்றும் சொல்கிறார்.
- பிற்பாடு சவுல் மறுபடியும் கீழ்ப்படியாமல் போகிறார். ஆகவே சாமுவேல் அவரிடம்: ‘மிகச் சிறந்த செம்மறியாட்டை யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதைவிட அவருக்குக் கீழ்ப்படிவதே மேலானது. நீ யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் யெகோவா இனி உன்னை இஸ்ரவேலில் ராஜாவாக வைத்திருக்கப் போவதில்லை’ என்று சொல்கிறார்.
- தாவீதைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார்
- தாவீது. இவன் பெத்லெகேம் பட்டணத்தில் வாழ்கிறான். ரூத்துக்கும் போவாஸுக்கும் பிறந்த ஓபேத் என்பவர் இவனுடைய தாத்தா. தன் அப்பாவின் செம்மறியாடுகளை தாவீது கவனித்து வருகிறான். சவுலை ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்து 10 ஆண்டுகளுக்குப் பின்பே தாவீது பிறந்தான்.
- குறிப்பிட்ட ஒரு காலம் வருகிறபோது யெகோவா சாமுவேலிடம்: ‘நீ கொஞ்சம் விசேஷ எண்ணெய்யை எடுத்துக்கொண்டு பெத்லெகேமில் இருக்கும் ஈசாயின் வீட்டுக்குப் போ. அவனுடைய மகன்களில் ஒருவனை நான் ராஜாவாக தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று சொல்கிறார்.
- ஈசாய் தன்னுடைய மகன்களில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கூட்டிக்கொண்டு வருகிறார், என்றாலும் அவர்களில் எவரையும் யெகோவா தேர்ந்தெடுக்கவில்லை. ‘உனக்கு இவ்வளவு மகன்கள்தான் இருக்கிறார்களா?’ என்று சாமுவேல் கேட்கிறார்.
- ‘இல்லை, இன்னும் ஒரு மகன் இருக்கிறான், அவன் எல்லோரையும்விட இளையவன், அவன் வெளியே ஆடுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்’ என்று ஈசாய் சொல்கிறார். தாவீதை உள்ளே அழைத்துக்கொண்டு வந்தபோது, அவன் அழகாக இருப்பதை சாமுவேல் பார்க்கிறார். ‘இவனைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், இவன் தலையில் எண்ணெயை ஊற்று’ என்று யெகோவா சொல்கிறார். ஆம், காலம் வரும்போது தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக ஆவான்.
- தாவீது , கோலியாத் என்ற வலிமை வாய்ந்த பெலிஸ்தியனைத் தேவனின் அருளால் கொன்றான். கோலியாத்தை தாவீது கொன்ற பின்பு, இஸ்ரவேலின் படைத்தளபதி அப்னேர் அவனைச் சவுலிடம் அழைத்து வருகிறான். தாவீதைப் பார்த்து சவுல் மிகவும் சந்தோஷப்படுகிறார். அவனைப் படைத்தலைவனாக நியமிக்கிறார்; அதுமட்டுமல்ல, தன்னுடன் அரண்மனையில் வசிப்பதற்கும் அழைத்துச் செல்கிறார்.
- பிற்பாடு, இஸ்ரவேலின் படை பெலிஸ்தருடன் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்புகிறபோது, ‘சவுல் ஆயிரங்களைக் கொன்றான், தாவீதோ பதினாயிரங்களைக் கொன்றான்’ என்று பெண்கள் பாடுகிறார்கள். இதைக் கேட்டு சவுல் பொறாமைப்படுகிறார்; ஏனென்றால் சவுலைவிட தாவீதையே அவர்கள் உயர்த்திப் பாடுகிறார்கள்.
- சுரமண்டலத்தை வாசிப்பதில் தாவீது கெட்டிக்காரன். அவன் வாசிக்கிற இன்னிசையை சவுல் மிகவும் ரசித்துக் கேட்பார். ஆனால் தாவீதின் மீதுள்ள பொறாமையால் ஒருநாள் சவுல் பயங்கரமான ஒரு காரியத்தைச் செய்கிறார். தாவீது சுரமண்டலத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போது சவுல் ஈட்டியை எடுத்து: ‘சுவரோடு சுவராக உன்னை குத்திப் போடப் போகிறேன்’ என்று சொல்லி தாவீதின் மேல் எறிகிறார். ஆனால் தாவீது ஒரு பக்கமாக விலகி தப்பித்துக் கொள்கிறான். மறுபடியும் ஈட்டியை எறிந்து கொல்ல முயலுகிறார், அப்போதும் தாவீது தப்பித்துக் கொள்கிறான். தான் இனி மிகவும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்பதை தாவீது புரிந்துகொள்கிறான்.

    371 – 373 "-தாவீது
    நாபால் மதுவப்ப நல்கேனென நோக்கிக்
    கோபா வேசத்தால் கொலச்செல்லக் – கோபாலர் 372
    தம்மொழியால் நபாலின் தாரமெதிர் தோன்றியதும்
    இம்மெனவே நாபால் இறந்ததுவும் – செம்மி 373
    யவன்பெண்டைத் தாவீ தணைந்ததுவும்"
- சாமுவேல் மரித்தான். அவனது மரணத்திற்காக அனைத்து இஸ்ரவேலர்களும் கூடித் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டனர். ராமாவில் உள்ள வீட்டில் அவனை அடக்கம் செய்தனர்.
- பின் பாரான் பாலைவனத்துக்கு தாவீது போனான். 2 மாகோனில் ஒரு செல்வந்தன் இருந்தான்.. 3 இவனது பெயர் நாபால். இவன் காலேபின் குடும்பத்தவன். இவனது மனைவி அபிகாயில் புத்திசாலித்தனமும் அழகும் கொண்டவள். ஆனால் நாபால் அற்பனாகவும் கொடூரமானவனாகவும் இருந்தான்.
- 4 பாலைவனத்தில் நாபால் தன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பதாக தாவீது அறிந்து கொண்டான். 5 அவனோடு பேச, தாவீது இளைஞர்களை அனுப்பினான்.
- 9 தாவீதின் ஆட்கள் நாபாலிடம் சென்றனர். தாவீதின் செய்தியைச் சொன்னார்கள். 10 ஆனால் நாபால் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டான். அவன், "தாவீது யார்? இந்த ஈசாயின் மகன் யார்? இந்நாட்களில் பல அடிமைகள் தம் எஜமானர்களைவிட்டு ஓடிப்போகிறார்கள்! 11 என்னிடம் அப்பமும் தண்ணீரும் உள்ளன. மயிர் கத்தரித்தவர்களுக்காக, நான் ஆட்டைக் கொன்று சமையல் செய்திருக்கிறேன். ஆனால், அதை எனக்கு முன்-பின் அறியாதவர்களுக்காக கொடுக்கமாட்டேன்!" என்றான்.
- 12 தாவீதின் இளைஞர் திரும்பி வந்து நாபால் சொன்னவற்றை சொன்னார்கள்.
- அபிகாயில் ஆபத்தைத் தவிர்க்கிறாள்
- 14 நாபாலின் வேலைக்காரரில் ஒருவன் நாபாலின் மனைவியாகிய அபிகாயிலிடம் பேசி, "நமது எஜமானர் நாபாலைப் பாராட்டும்படி தாவீது தன் தூதுவர்களை அனுப்பினார். ஆனால் நாபால் அவர்களிடம் அற்பமாக நடந்துக்கொண்டான். 15 அவர்கள் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். நாம் வயல்களில் ஊருக்கு வெளியே இருந்தோம். தாவீதின் ஆட்கள் எப்போதும் நம்மோடு தங்கி இருக்கையில் அவர்கள் நமக்கு தீமை செய்யவில்லை! நமக்குரியவற்றை ஒருபோதும் திருடவில்லை! 16 இரவும் பகலும் தாவீதின் ஆட்கள் நம்மைக் காப்பாற்றினார்கள். நம்மைச் சுற்றிலும் அவர்கள் சுவர்களைப் போன்று காவலாக இருந்தார்கள். நாம் மந்தைகளை நடத்திச் செல்லும்போது உதவுவார்கள். 17 இப்போது சிந்தித்துப் பார்த்து நாம் என்ன செய்யலாம் என்று முடிவு செய்யுங்கள். நாபால் தன் காரியங்களைப் பேசினது அறிவீனமாய் இருக்கிறது! இப்போது நமது எஜமானனுக்கும் அவனது வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது" என்றான்.
- 18 இதைக் கேட்டதும், அபிகாயில் அவசரமாக 200 அப்பத்துண்டுகளையும், 2 திராட்சைரசப்பைகளையும், 5 சமைத்த ஆடுகளையும், 5 படி வறுத்த பயிரையும், வற்றலான 100 திராட்சைக் குலைகளையும், வற்றலான 200 அத்திப்பழ அடைகளையும் எடுத்துக்கொண்டாள். அவற்றைக் கழுதையின் மேல் ஏற்றினாள். 19 பின் அவள் தன் வேலைக்காரனிடம், "நீ போ. நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன்" என்றாள். ஆனால் அவளோ கணவரிடம் அதைச் சொல்லவில்லை.
- 20 அவள் கழுதையின் மேல் சவாரி செய்து மலையின் அடுத்தப் பகுதிக்கு வந்தாள். எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த தாவீதையும் அவனது ஆட்களையும் சந்தித்தாள்.
- 21 தாவீது அபிகாயிலை சந்திக்கும் முன், "நான் இந்தப் பாலைவனத்தில் நாபாலின் சொத்துக்களைக் காப்பாற்றினேன். அவனது ஆடுகள் எதுவும் தவறிப்போகாது என நான் உறுதி செய்தேன். நான் பிரதிபலனை எதிர் பார்த்துச் செய்யவில்லை! அவனுக்கு நன்மைகளைச் செய்தேன். ஆனால் அவன் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டான். 22 நாளைக் காலைக்குள் நாபாலின் குடும்பத்தில் உள்ள ஒருவரையாவது உயிரோடுவிட்டு வைத்தால் தேவன் என்னைத் தண்டிப்பார்" என்று சொல்லியிருந்தான்.
- 23 அந்த நேரத்தில் தான் அபிகாயில் வந்து சேர்ந்தாள். அவள் தாவீதைப் பார்த்ததும் கழுதையிலிருந்து இறங்கி தரையில் முகம்படும்படி குனிந்து தாவீதின் முன்பு நின்றாள். 24 அபிகாயில் அவன் காலில் விழுந்து, "ஐயா, உங்களோடு பேச தயவுசெய்து என்னை அனுமதியுங்கள். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். நடந்தவற்றிற்கு என்னைப் பழிவாங்குங்கள். 25 நீங்கள் அனுப்பினவர்களை நான் பார்க்கவில்லை. பயனற்றக் கொடிய மனிதனாகிய நாபாலிடம் கவனம் செலுத்தாதிருங்கள். 26 அப்பாவி ஜனங்களைக் கொல்வதினின்றும் கர்த்தர் உங்களை விலக்கட்டும். கர்த்தருடைய ஜீவன் பேரிலும் உங்கள் ஜீவன் பேரிலும், உங்களுடைய பகைவர்களும், நாபாலைப் போன்று உமக்குத் தீமை செய்பவர்களும் அழிந்து போவார்கள் என நம்புகிறேன். 27 இப்போது, உங்களுக்கு இந்த அன்பளிப்புகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை உங்கள் மனிதர்களுக்கு கொடுங்கள். 28 நான் தவறு செய்தால் மன்னித்துவிடும். தேவன் உம்மை இஸ்ரவேலரின் தலைவ ராக்குவார். 31 அப்பாவிகளைக் கொன்றப்பழி உங்களுக்கு வரக்கூடாது. நீங்கள் அந்த வலையில் விழக்கூடாது. கர்த்தர் உமக்கு வெற்றிகளைத் தரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்" என்றாள்.
- 32 தாவீது அபிகாயிலிடம், "இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்று. என்னிடம் உன்னை அனுப்பியதற்காக தேவனைப் போற்று. 33 உனது நல்ல தீர்ப்புக்காக தேவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும். இன்று அப்பாவிகளைக் கொன்றுப்போடாமல் என்னைக் காப்பாற்றினாய். 34 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சத்தியமாகக் கூறுகிறேன். நீ இவ்வளவு விரைவாக வந்து என்னை சந்திக்காமல் இருந்தால் நாளை விடிவதற்குள் நாபாலின் குடும்பத்தில் ஒருவன் கூட உயிரோடு இருந்திருக்கமாட்டார்கள்" என்றான்.
- 35 பிறகு தாவீது, அபிகாயிலின் அன்பளிப்புகளை ஏற்றக்கொண்டான். அவளிடம், "வீட்டிற்குச் சமாதானமாகப் போ. உனது வேண்டுகோளை ஏற்று உன் விருப்பபடியே செய்வேன்" என்றான்.
- நாபாலின் மரணம்
--36 அபிகாயில் நாபாலிடம் திரும்பிப் போனாள். அவன் தன் வீட்டில் ஒரு அரசனைப் போன்று உணவு உண்டு கொண்டிருந்தான். நன்றாக குடித்து போதையில் சுகபோகமாக இருந்தான். எனவே அபிகாயில் விடியும்வரை அவனிடம் எதுவும் சொல்லவில்லை. 37 மறுநாள் காலையில் நாபால் போதை தெளிந்தபோது, அவனது மனைவி அவனிடம் நடந்ததைக் கூறினாள். அவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவனது உடல் பாறையாக இறுகியது! 38 பத்து நாட்களில் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்.
- 39 நாபால் மரித்துப்போனதை தாவீது கேள்விப்பட்டு, "கர்த்தரைப் போற்றுங்கள்! நாபால் என்னைப் பற்றி அவதூறு சொன்னான். கர்த்தர் எனக்கு உதவினார். நான் தீமை செய்யாதபடி கர்த்தர் என்னை விலக்கினார். நாபால் கேடு செய்ததால் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்" என்றான்.
- பிறகு தாவீது அபிகாயிலிடம் தனது மனைவியாகுமாறு செய்தி அனுப்பினான். 40 தாவீதின் ஆட்கள் கர்மேலுக்குச் சென்று அபிகாயிலிடம், "உங்களை அழைத்துவர தாவீது எங்களை அனுப்பினார். நீங்கள் அவரது மனைவியாக வேண்டுமென்று விரும்புகிறார்" என்றார்கள்.
- 41 அபிகாயில் தன் முகம் தரையில் படும்படி வணங்கி, "நான் உங்கள் வேலைக்காரி. உங்களுக்கு சேவைசெய்ய தயார். எனது எஜமானனாகிய தாவீதின் வேலைக்காரரின் பாதங்களையும் கழுவ ஆயத்தமாக இருக்கிறேன்" என்றாள்.
- 42 அவள் உடனே ஒரு கழுதையின் மீது ஏறித் தாவீதின் ஆட்களுடன் புறப்பட்டாள். அவள் தன்னோடு 5 பணிப்பெண்களையும் அழைத்து வந்து, தாவீதின் மனைவி ஆனாள்.
374-"போரில்,சவுலிறந்து நேர்ந்த சழக்கும் – "
- பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்: பெலிஸ்தியருக்கு முன் இஸ்ரயேலர் புறமுதுக்கிட்டு ஓடினர்: பலர் கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்த்தினார்.2 பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர் தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர்.3 சவுல் இருந்த இடத்தில் போர் மிகவும் வலுத்தது: வில்வீரர் அவர் மீது குறி வைத்துத் தாக்க, அவரும் அந்த வில்வீரர்களால் பெரிதும் காயமுற்றார்.4 அப்பொழுது சவுல் தம் படைவீரர்களை தாங்குவோனை நோக்கி, இந்த விருத்தசேதனமற்றோர் என்னைக் குத்திக் கொன்று எனக்கு அவமானத்தை வருவிக்காவண்ணம் நீ உன் வாளை உருவி என்னைக் குத்திக் கொன்று விடு, என்றார். ஆனால் அவருடைய படைக்கலன் தாக்குவோன் மிகவும் அஞ்சியாதால் அதற்கு அவன் இசையவில்லை.எனவே சவுல் தனது வாளை உருவி தற்கொலை செய்து கொண்டான். 5 சவுல் இறந்துவிட்டதைக் கண்ட அவருடைய படைக்கலன் தாங்கு வோனும் தன் வாள்மீது விழுந்து அவரோடு மடிந்தான்.6 இவ்வாறு சவுலும் அவரின் மூன்று புதல்வர்களும் அவருடைய படைக்கலன் தாங்குவோனும் மற்றும் அவர் ஆள்கள் எல்லோரும் அதே நாளில் ஒன்றாக இறந்தனர்

    374– 376"- தவமாகத்
    தாவீது பூசைசெய்து சாமிசெய்ய நோக்கியிகழ்ந்
    தாவீதென்னென்ற மனை யாட்டி பிள்ளை – மேவாது 375
    வன்மலடி யாகவருந் தியுழலும் படித்தே
    வன்மைசெய் ததும்"
(2சாமு.6:16)
- தாவீதை திருமணம் செய்த பிறகு, பல்த்தியேல் என்ற ஒருவரை மீகாள் திருமணம் செய்துகொள்கிறாள். சவுலின் இறப்பிற்கு பிறகு தாவீது ராஜாவாகும் போது, மீகாளை திரும்ப தன்னிடமாக அழைத்து கொள்கிறார். இதிலிருந்து துவக்கத்தில் தாவீதின் மீது மீகாளுக்கு இருந்த காதல், பிற்காலத்தில் கசந்து போனது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- தாவீது ராஜாவானான்; மீகாளைத் திரும்பவும் தன்னிடம் வரவழைத்தும் விட்டான். இப்போது கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தேவனுடைய பெட்டியை (2 சாமு.6:11) தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியோடே கொண்டுவந்தான். அடக்கமுடியாத பெருமகிழ்ச்சி, தன்னை மறந்து ஆனந்த நடனமாடினான் தாவீது. தேவசமுகத்திலே தான் அற்பமானவன் என்று எண்ணி, ராஜ வஸ்திரத்தைக் கழற்றி, சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டான். இப்படியே சகல ஜனங்களும் மகிழ்ந்திருந்தபோது, மீகாளோ, தாவீதை தன் இருதயத்திலே அவமதித்தாள் என்று எழுதப்பட்டுள்ளது. மீகாள் தவறிவிட்டாள். கர்த்தருடைய பெட்டியின் மகிமையை அவள் உணர்ந்துகொள்ளவில்லை.
- ஒன்று, மீகாள் தன் கணவனை அவமதித்தாள்; அடுத்தது, தேவ சந்நிதானத்திலே தன்னை நீசனும் அற்பமுமாய் தாழ்த்தியதினிமித்தம் தாவீதை அவமதித்ததினால், அவள் தேவனையே அவமதித்தாள். இந்த தவறான இருதய நினைவினால், பின்னர் அவள் உதிர்த்த கடும்சொற்களால், பெரிய ஆசீர்வாதத்தையே இழந்தாள். அவள் மரணமடையுமட்டும் பிள்ளை இல்லாதிருந்தாள்.

    376 – 382 "-தா வீதரசன் – றன்மனையில்
    உப்பரிகை மேலே உலாவுகையில் மாதவிடாய்க்
    கப்பின்முழுகு பற்சோ பாளைக்கண் – டப்பொழுதே 377
    கொண்டுவரச் செய்தவளைக் கூயவள் கருப்பங்
    கொண்டுவிட் டாளென்ற குறிப்புணர்ந்து – தண்டுடன்போந் 378
    தன்சேவக னாமத் தையல்கண வற்கூவி
    உன்சேரி செல்லென் றுரைக்கஅவன் – மன்சேனை
    யுத்தமுடியா துடன்படேன் என்றிடவன்
    மத்தை மனத்தில் வைத்து மாற்றோரால் – தந்திரமாய்க்
    கொல்லும் படிக்குக் குறித்தெழுதிக் கொல்லுவித்துப்
    புல்லும் பற்சேபாளைப் புல்லியே – நல்லவன்போற்
    சாலோமோன் என்ற தனயனைப்பெற் றீந்ததுவும்"
- தாவீது ஒரு நல்ல ராஜாவாக இருக்கிறார். யெகோவாவை அவர் நேசிக்கிறார். அதனால் எருசலேமைக் கைப்பற்றியதும் முதலாவதாக அவர் என்ன செய்கிறார் தெரியுமா? யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வருகிறார். அதை வைப்பதற்கு ஓர் ஆலயத்தைக் கட்டவும் விரும்புகிறார்.
- சில ஆண்டுகளுக்குப் பிறகு தாவீது, மோசமான ஒரு காரியத்தைச் செய்கிறார். வேறொருவருக்குச் சொந்தமான ஒரு பொருளை எடுத்துக்கொள்வது தவறு என்பது தாவீதுக்கு தெரியும். ஆனால் ஒரு சாயங்கால நேரத்தில், அரண்மனை மாடியில் இருக்கும்போது அவர் கீழே பார்க்கிறார், அப்போது மிக அழகான ஒரு பெண் அவர் கண்ணில் படுகிறாள். அவளுடைய பெயர் பத்சேபாள். அவளுடைய கணவர் பெயர் உரியா, அவர் தாவீதின் போர் வீரர்களில் ஒருவர்.
- பத்சேபாள் தனக்கு வேண்டுமென்று தாவீது ரொம்ப ஆசைப்படுகிறார், அதனால் அவளை அரண்மனைக்குக் கொண்டுவரச் செய்கிறார். அவளுடைய கணவரோ போர் களத்தில் இருக்கிறார். தாவீது பாத்சேபாளிடம் காதல் செய்கிறார். பிற்பாடு அவள் கர்ப்பமாகி விடுகிறாள். இதை அறிந்த தாவீதுக்கு ஒரே மனக்குழப்பம். தன்னுடைய தளபதியான யோவாபுக்குச் செய்தி அனுப்பி, உரியாவை போர் களத்தில் முன்னணியில் நிறுத்தும்படி உத்தரவிடுகிறார், போரில் அவர் கொல்லப்பட வேண்டும் என்பதுதான் தாவீதின் திட்டம். அதன்படியே போரில் உரியா கொல்லப்படுகிறார், பிறகு பத்சேபாளை தாவீது கல்யாணம் செய்துகொள்கிறார்.
- தாவீது இப்படிச் செய்ததால் யெகோவாவுக்கு பயங்கர கோபம் வந்துவிடுகிறது. அதனால் அவர் செய்த பாவங்களை உணர்த்துவதற்காக தம்முடைய ஊழியக்காரன் நாத்தானை யெகோவா அனுப்புகிறார்.. தான் செய்த தவறுக்காக தாவீது மிகவும் வருத்தப்படுவதால் யெகோவா அவருக்கு மரண தண்டனை கொடுக்கவில்லை. என்றாலும், ‘இந்தக் கெட்ட காரியங்களை நீ செய்திருப்பதால் உன்னுடைய வீட்டில் உனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டாகும்’ என்று தாவீதிடம் யெகோவா சொல்கிறார். அவர் சொன்னபடியே பிற்பாடு தாவீதுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன.
- நாத்தான் தாவீதுக்கு ஆலோசனை வழங்குகிறார்
- முதலாவதாக பத்சேபாளின் மகன் செத்துப் போகிறான். பின்பு தாவீதின் முதல் மகன் அம்னோன் தன் சகோதரி தாமாரை தன்னுடன் தனியாக இருக்கச் செய்து பலவந்தமாக அவளிடம் காதல் செய்கிறான். இதைக் கேள்விப்பட்ட தாவீதின் மற்றொரு மகன் அப்சலோமுக்கு கோபம் வந்ததால், அம்னோனை கொன்று போடுகிறான். பிற்பாடு, அப்சலோம் நிறைய ஜனங்களுடைய ஆதரவைப் பெற்று தன்னை ராஜாவாக்கிக் கொள்கிறான். கடைசியில், அப்சலோமுக்கு எதிராகப் போரில் தாவீது வெற்றியடைகிறார், அப்சலோம் கொல்லப்படுகிறான். இப்படியாக, தாவீதுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டாகின்றன.
- இதற்கிடையே, பத்சேபாளுக்கு சாலொமோன் என்ற ஒரு மகன் பிறக்கிறான். தாவீது வயதாகி நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது, அவருடைய இன்னொரு மகன் அதோனியா தன்னை ராஜாவாக்கிக்கொள்ள முயலுகிறான். ஆனால், சாலொமோன்தான் ராஜாவாக இருப்பான் என்று எல்லோருக்கும் காட்டுவதற்காக அவன் தலையில் எண்ணெய்யை ஊற்றும்படி ஆசாரியன் சாதோக்கிடம் தாவீது கட்டளையிடுகிறார். இதன் பின்பு தன் 70 வயதில் தாவீது இறந்து விடுகிறார். 40 ஆண்டுகளுக்கு அவர் அரசாண்டார். இப்போது சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவாக இருக்கிறார்

    384 – 387 "- புவனியது
    தன்குடையின் கீழடங்கச் சாலோமோன் ராசாங்கம்
    நன்குடைய தென்றுபுகழ் நாளையிலே – முன்குறித்த 385
    கோவிலொன்று கட்டியதும்கொண்டாட்டஞ் செய்ததுவும்
    தேவியர் பல்லோர் தோளைச் சேர்ந்ததுவும் – பாவியெனப் 386
    பட்டிறுதியின் மாறு பட்டிறந்தபின் கன்றுக்
    குட்டிக்குப் பூசைவந்து கூடியதும்"
- சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவான பிறகு, யெகோவா அவரிடம், ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு சாலொமோன், ‘நான் சின்னப் பையனாக இருக்கிறேன். எனக்கு எதையும் சரியாகச் செய்யத் தெரியவில்லை. அதனால் உங்கள் மக்களை நன்றாகக் கவனித்துக்கொள்ள எனக்கு ஞானத்தைக் கொடுங்கள்’ என்று கேட்டார். அப்போது யெகோவா, ‘நீ ஞானத்தைக் கேட்டதால் இந்தப் பூமியிலேயே உன்னைப் பெரிய ஞானியாக ஆக்குவேன், பெரிய பணக்காரனாகவும் ஆக்குவேன். என் பேச்சைக் கேட்டு நடந்தால், நீ ரொம்ப நாள் வாழலாம்’ என்று சொன்னார்.
- சாலொமோன் ராஜா ஜெபம் செய்கிறார்
- சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவான பிறகு, யெகோவா அவரிடம், ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு சாலொமோன், ‘நான் சின்னப் பையனாக இருக்கிறேன். எனக்கு எதையும் சரியாகச் செய்யத் தெரியவில்லை. அதனால் உங்கள் மக்களை நன்றாகக் கவனித்துக்கொள்ள எனக்கு ஞானத்தைக் கொடுங்கள்’ என்று கேட்டார். அப்போது யெகோவா, ‘நீ ஞானத்தைக் கேட்டதால் இந்தப் பூமியிலேயே உன்னைப் பெரிய ஞானியாக ஆக்குவேன், பெரிய பணக்காரனாகவும் ஆக்குவேன். என் பேச்சைக் கேட்டு நடந்தால், நீ ரொம்ப நாள் வாழலாம்’ என்று சொன்னார்.
- சாலொமோன் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார். சுத்தமான தங்கம், வெள்ளி, மரம் மற்றும் கற்களால் கட்டினார். திறமையுள்ள ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அதைக் கட்ட உதவினார்கள். ஏழு வருஷங்களுக்குப் பிறகு, அந்த ஆலயம் யெகோவாவுக்காக அர்ப்பணிப்பதற்குத் தயாரானது. அந்த ஆலயத்தில் ஒரு பலிபீடம் இருந்தது, அதன்மேல் பலிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பலிபீடத்துக்கு முன் சாலொமோன் மண்டிபோட்டு ஜெபம் செய்தார். ‘யெகோவாவே, நீங்கள் தங்கும் அளவுக்கு இந்த ஆலயம் பெரிதாகவும் இல்லை, அழகாகவும் இல்லை. ஆனாலும், எங்கள் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு நாங்கள் செய்யும் ஜெபங்களை தயவுசெய்து கேளுங்கள்’ என்றார். அந்த ஆலயத்தையும் சாலொமோன் செய்த ஜெபத்தையும் பற்றி யெகோவா என்ன நினைத்தார்? சாலொமோன் ஜெபம் செய்து முடித்த உடனே வானத்திலிருந்து நெருப்பை அனுப்பினார். அது பலிபீடத்தில் இருந்த பலிகளை எரித்துப்போட்டது. இதன்மூலம் யெகோவா அந்த ஆலயத்தை ஏற்றுக்கொண்டதைக் காட்டினார். அதைப் பார்த்து இஸ்ரவேலர்கள் ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள்
- சாலொமோன் யெகோவாவை வணங்கிய வரைக்கும், இஸ்ரவேல் தேசத்தில் அமைதி இருந்தது. பிறகு, சாலொமோன் மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறைய பெண்களைக் கல்யாணம் செய்தார். அவர்கள் சிலைகளை வணங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக, சாலொமோன் மாறிவிட்டார். அவரும் சிலைகளை வணங்க ஆரம்பித்தார். அதைப் பார்த்து யெகோவாவுக்குக் கோபம் வந்தது. அதனால் அவர் சாலொமோனிடம், ‘இஸ்ரவேல் ராஜ்யத்தை உன் வாரிசுகள் கையிலிருந்து பிடுங்கிவிடுவேன். அதை இரண்டாகப் பிரித்து, பெரிய பகுதியை உன்னிடம் வேலை செய்கிற ஒருவனுக்குக் கொடுப்பேன். சின்ன பகுதியைத்தான் உன்னுடைய வாரிசுகள் ஆட்சி செய்வார்கள்’ என்று சொன்னார்.
- தான் சொன்னதை இன்னும் தெளிவாகக் காட்டுவதற்காக யெகோவா வேறொரு காரியத்தையும் செய்தார். ஒருநாள், சாலொமோனிடம் வேலை செய்த யெரொபெயாம் வழியில் போய்க்கொண்டிருந்தபோது அகியா தீர்க்கதரிசியைப் பார்த்தார். அகியா தன்னுடைய அங்கியை 12 துண்டுகளாகக் கிழித்தார். பிறகு யெரொபெயாமிடம், ‘யெகோவா இஸ்ரவேல் ராஜ்யத்தை சாலொமோனுடைய வாரிசுகளின் கையிலிருந்து பிடுங்கி, இரண்டாகப் பிரிப்பார். இதில் 10 துண்டுகளை நீ எடுத்துக்கொள். ஏனென்றால், நீதான் 10 கோத்திரங்களுக்கு ராஜாவாக இருப்பாய்’ என்று சொன்னார். சாலொமோன் ராஜா அதைக் கேள்விப்பட்டதும், யெரொபெயாமைக் கொல்ல நினைத்தார். அதனால், யெரொபெயாம் எகிப்துக்கு ஓடிப்போனார். சாலொமோன் இறந்த பிறகு, அவருடைய மகன் ரெகொபெயாம் ராஜாவாக ஆனார். அதனால், யெரொபெயாம் பயம் இல்லாமல் இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்தார்.
- யெரொபெயாம் செய்த தங்கக் கன்றுக்குட்டிக்கு இஸ்ரவேலர்கள் பலர் பலிகளைக் கொடுக்கிறார்கள்
- இஸ்ரவேலின் பெரியோர்கள் ரெகொபெயாமிடம், ‘நீங்கள் மக்களிடம் அன்பாக நடந்துகொண்டால், அவர்கள் உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள்’ என்று சொன்னார்கள். ஆனால், ரெகொபெயாமின் இளம் நண்பர்கள் அவரிடம், ‘மக்களுக்கு இரக்கம் காட்டாதீர்கள். அவர்களை நன்றாக வேலை வாங்குங்கள்’ என்று சொன்னார்கள். ரெகொபெயாம் தன்னுடைய நண்பர்களின் பேச்சைக் கேட்டு, மக்களிடம் இரக்கம் இல்லாமல் நடந்துகொண்டார். அதனால், அவர்கள் அவரை எதிர்த்தார்கள். யெரொபெயாமை பத்துக் கோத்திரத்துக்கு ராஜாவாக ஆக்கினார்கள். அதை இஸ்ரவேல் ராஜ்யம் என்று சொன்னார்கள். மீதியிருந்த இரண்டு கோத்திரங்களை யூதா ராஜ்யம் என்று சொன்னார்கள். யூதா ராஜ்யத்தைச் சேர்ந்த மக்கள் ரெகொபெயாமுக்கு உண்மையாக இருந்தார்கள். இப்படி, இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் இரண்டாகப் பிரிந்தன.
- தன்னுடைய மக்கள் கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்குப் போவது யெரொபெயாமுக்குப் பிடிக்கவில்லை. ஏன் தெரியுமா? எருசலேம் ரெகொபெயாமின் ராஜ்யத்தில் இருந்தது. அங்கே போனால் அவர்கள் ரெகொபெயாமின் பக்கம் சேர்ந்துவிடுவார்களோ என்று பயந்தார். அதனால், அவர் இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தார். ‘எருசலேம் ரொம்பத் தூரத்தில் இருப்பதால், இங்கேயே கடவுளை வணங்குங்கள்’ என்று மக்களிடம் சொன்னார். மக்கள் தங்கக் கன்றுக்குட்டிகளை வணங்க ஆரம்பித்தார்கள். மறுபடியும் யெகோவாவை மறந்துவிட்டார்கள்.

    387 -388 "- ஒட்டி
    மலிவா யரசர்முன் னைமார்க்கத் திற்சேர
    எலியா எலிசா இயற்றியதுஞ் – – சலியாது
    நாடாண்டி றந்தொழிந்த ராசாக்கள் தங்கதையும் –"
- எலியா தீர்க்கதரிசி. அந்தப் பெண் சாறிபாத் பட்டணத்திலுள்ள ஒரு விதவை, அந்தப் பையன் அவளுடைய மகன். ஒருநாள் அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை மோசமாகி, கடைசியில் அவன் செத்தே போய்விடுகிறான். அப்போது எலியா அந்தப் பெண்ணிடம்: ‘பையனை என்னிடம் கொடு’ என்கிறார்.
- எலியாவும் உயிர்த்தெழுப்பப்பட்ட மகனுடன் ஒரு விதவையும்
- செத்தப் பிள்ளையை மேல் மாடிக்கு எலியா தூக்கிச் சென்று அவனைப் படுக்கையின் மேல் கிடத்துகிறார். பின்பு: ‘யெகோவா தேவனே, இந்தப் பையனுக்கு மறுபடியும் உயிர் கொடும்’ என்று ஜெபிக்கிறார். ஜெபித்து முடித்ததுமே, அந்தப் பையனுக்கு மூச்சு வந்துவிடுகிறது! அப்போது எலியா அவனைத் திரும்பவும் கீழே கொண்டு போய்: ‘இதோ பார், உன் மகன் உயிரோடிருக்கிறான்!’ என்று அந்தப் பெண்ணிடம் சொல்கிறார். மகனைப் பார்த்ததும் அந்த அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமாகி விடுகிறது.
- யெகோவாவின் மற்றொரு முக்கிய தீர்க்கதரிசியின் பெயர் எலிசா. இவர் எலியாவின் உதவியாளராக சேவை செய்கிறார். என்றாலும், அற்புதங்கள் செய்வதற்காக ஏற்ற காலத்தில் எலிசாவையும் யெகோவா உபயோகிக்கிறார். ஒருநாள் சூனேம் பட்டணத்துக்கு எலிசா போகிறார், அங்கே ஒரு பெண் அவரை ரொம்ப அன்பாக உபசரிக்கிறாள். பிற்பாடு இந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் பிறக்கிறான்.
- கொஞ்சம் பெரியவனாக வளர்ந்த பின்பு, அவன் ஒருநாள் காலை வயலில் வேலை செய்து கொண்டிருக்கிற தன் அப்பாவிடம் செல்கிறான். அப்போது திடீரென்று, ‘ஐயோ, என் தலை வலிக்கிறது!’ என்று கத்துகிறான். அவனை வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள், ஆனால் அந்தப் பையன் செத்துப்போகிறான். அவனுடைய அம்மாவுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்! உடனடியாக எலிசாவை அழைத்து வருகிறாள்.
- எலிசா வந்ததும், செத்துப்போன அந்தப் பிள்ளையை தூக்கிக்கொண்டு ஒரு அறைக்குள் போகிறார். யெகோவாவிடம் ஜெபித்துவிட்டு, அந்தப் பிள்ளையின் மேல் படுக்கிறார். சீக்கிரத்தில் அவனுடைய உடம்பு சூடாகிறது, அவன் ஏழு தடவை தும்முகிறான். அவனுடைய அம்மா உள்ளே வந்து பையன் உயிரோடு இருக்கிறதைப் பார்க்கிறாள், மகனைப் பார்த்ததும் அவளுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை! இப்படிப் பல அற்புதங்களை யெகோவின் துணை கொண்டு நிகழ்த்தி, விக்கிரக ஆராதனைக்குச் சென்ற இஸ்ரவேலர்களை மீட்டும் தேவனை ஆராதிக்க மீட்டனர்.
389 – "மாடார் பிரசங்கி வன்கதையும்" –
- . பிரசங்கி தாவீதின் மகனும் எருசலேமின் அரசனுமானவன். எல்லாமே பொருளற்றவை. எல்லாமே வீணானவை என்று பிரசங்கி கூறுகிறான். எதுவும் புதியதல்ல
- துவக்கத்தில் இருந்ததுபோலவே அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன. எல்லாம் ஏற்கெனவே செய்யப்பட்டதுபோலவே செய்யப்படுகின்றன. வாழ்க்கையில் எதுவும் புதியதில்லை.
- ஒருவன், "பாருங்கள் இது புதிது" என்று கூறலாம். ஆனால் அந்தப் பொருள் ஏற்கெனவே இங்கே இருக்கிறது. நாம் இருப்பதற்கு முன்னரே அவை இருக்கின்றன.
- நீண்டகாலத்திற்கு முன்பு நடந்ததை ஜனங்கள் நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில், இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் நினைவில் வைத்திருக்கப் போவதில்லை. பின்னர் மற்றவர்களுக்கும் தங்களுக்கு முன்னிருந்தவர்கள் என்ன செய்தார்களென்பது நினைவில் இருக்காது.

    389 ‘- பீடழியச்
    சாத்தான்செய் யோபு சரித்திரமும்"
- ஊத்ஸ் நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் யெகோவாவை வணங்கினார். அவர் பெரிய பணக்காரர். அவருக்குப் பெரிய குடும்பம் இருந்தது. அவர் எல்லாரிடமும் அன்பாக இருந்தார். ஏழைகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும், அப்பா-அம்மா இல்லாத பிள்ளைகளுக்கும் உதவினார். இவ்வளவு நல்லவராக வாழ்ந்தாலும், அவருக்குக் கஷ்டம் வராமல் இருந்ததா?
- பிசாசாகிய சாத்தான்
- சாத்தான் யோபுவைக் கவனித்துக்கொண்டே இருந்தான். அது யோபுவுக்குத் தெரியாது. யெகோவா சாத்தானிடம், ‘என் ஊழியன் யோபுவைப் பார்த்தாயா? அவனைப் போல இந்தப் பூமியில் யாருமே இல்லை. அவன் என் பேச்சைக் கேட்டு நடக்கிறான், நல்லதையே செய்கிறான்’ என்றார். அதற்கு சாத்தான்: ‘யோபு உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பது உண்மைதான். நீங்கள் அவனைப் பாதுகாத்து, ஆசீர்வதிக்கிறீர்கள், நிலங்களையும் மிருகங்களையும் கொடுக்கிறீர்கள். அதையெல்லாம் எடுத்துப் பாருங்கள், அவன் உங்களை வணங்குவதை நிறுத்திவிடுவான்’ என்றான். யெகோவா சாத்தானிடம், ‘வேண்டுமானால் நீ யோபுவைச் சோதித்துப் பார். ஆனால் அவனைக் கொல்லக் கூடாது’ என்றார். யோபுவைச் சோதிக்க யெகோவா ஏன் அனுமதித்தார்? ஏனென்றால், யோபு தனக்கு உண்மையாக இருப்பார் என்று அவர் நம்பினார்.
- சாத்தான் யோபுவுக்குப் பல கஷ்டங்களைக் கொடுக்க ஆரம்பித்தான். முதலில், யோபுவின் மாடுகளையும் கழுதைகளையும் திருடுவதற்கு சபேயர்கள் என்னும் ஆட்களை அனுப்பினான். பிறகு, யோபுவின் ஆடுகள் எல்லாம் நெருப்பில் கருகின. அடுத்து, கல்தேயர்கள் யோபுவின் ஒட்டகங்களைத் திருடினார்கள். அவற்றைப் பார்த்துக்கொண்ட வேலைக்காரர்களையும் கொன்றார்கள். அதன் பிறகு வந்த கஷ்டம்தான் பயங்கரமானது. யோபுவின் பிள்ளைகள் விருந்து சாப்பிடும்போது, வீடு இடிந்து விழுந்து எல்லாரும் செத்துப்போனார்கள். இதையெல்லாம் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், யெகோவாவை வணங்குவதை அவர் நிறுத்தவில்லை.
- யோபு இன்னும் கஷ்டப்பட வேண்டும் என்று சாத்தான் நினைத்தான். அதனால், யோபுவின் உடம்பு முழுவதும் புண்கள் வர வைத்தான். யோபு வலியில் துடித்தார். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று அவருக்குத் தெரியாது. ஆனாலும், யெகோவாவைத் தொடர்ந்து வணங்கினார். நடந்த எல்லாவற்றையும் யெகோவா பார்த்தார். யோபுவை நினைத்து ரொம்பச் சந்தோஷப்பட்டார்.
- அடுத்து, யோபுவைச் சோதிக்க சாத்தான் மூன்று பேரை அனுப்பினான். அவர்கள் அவரிடம்: ‘நீ ஏதோ தப்பு செய்துவிட்டு அதை மறைத்திருக்கிறாய். அதனால்தான் கடவுள் உன்னைத் தண்டிக்கிறார்’ என்றார்கள். அதற்கு யோபு, ‘நான் எந்தத் தப்பும் செய்யவில்லை’ என்றார். இந்தக் கஷ்டங்களை யெகோவா கொடுப்பதாக யோபு நினைத்தார். அவர் தனக்கு அநியாயம் செய்வதாகச் சொன்னார்.
- இவர்கள் பேசியதை எல்லாம் எலிகூ என்ற இளைஞர் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு அவர்களிடம், ‘நீங்கள் சொன்னது எல்லாமே தவறு. நாம் நினைப்பதைவிட யெகோவா ரொம்பப் பெரியவர். அவர் யாருக்குமே கெட்டது செய்ய மாட்டார். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார், கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவி செய்கிறார்’ என்றார்.
- யோபுவும் அவருடைய மனைவியும் தங்கள் குழந்தையோடு இருக்கிறார்கள்
- கடைசியில் யெகோவா யோபுவிடம் பேசினார். ‘நான் வானத்தையும் பூமியையும் படைத்தபோது நீ எங்கே இருந்தாய்? நான் அநியாயம் செய்வதாக ஏன் சொல்கிறாய்? ஏன் இதெல்லாம் நடக்கிறது என்று தெரியாமல் நீ பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்றார். யோபு தன் தவறை ஒத்துக்கொண்டார். ‘நான் பேசியது தப்புதான். நான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்போதுதான் உங்களைப் பற்றி நன்றாகப் புரிந்துகொண்டேன். உங்களால் முடியாதது எதுவுமே இல்லை. தவறாக பேசியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்’ என்றார்.
- எல்லா சோதனைகளும் முடிந்த பிறகு யெகோவா யோபுவுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்தார். முன்பு இருந்ததைவிட நிறைய சொத்துகளைக் கொடுத்தார். அதன் பிறகு, யோபு பல வருஷங்கள் சந்தோஷமாக வாழ்ந்தார். கஷ்டமான சமயங்களிலும் தனக்குக் கீழ்ப்படிந்ததால்தான் யோபுவை யெகோவா ஆசீர்வதித்தார்

    389 "-சாலோமோன்
    தோத்திரமும் வேறுபலர் சொற்றிரளும் –சேர்த்தியே 390
    வேதமென்று சொன்னாலிம் மேதினியில் எக்கதையை
    வேதமல வென்று விலக்குவது – வேதத்துள்
    வந்ததெல்லாங் கேட்க வழங்காக் கதையானால்
    அந்தக்கதை மறைதான் ஆகுமே "
- சாலமோன் சொன்ன தோத்திரங்களும் இவனைப் போல வேறு பிறர் சொன்ன சொற்றிரள்களையும் ஒன்றாகச் சேர்த்தி, இக்கதைகளை வேதம் என்று சொன்னால், எந்தக் கதையை வேதமல்ல என விலக்குவது. குப்பைகளில் எந்தக் குப்பை நல்ல குப்பை எது ஆகாத குப்பை என விலக்குவது? இந்த வேதத்தில் கூறப்பட்டவெல்லாம் கேட்கச் சகிக்காத கதையானால் அந்தக் கதைதான் வேதமாகுமோ?

    392–393 "- இந்தக்
    கதைபலவும் பற்பலவி கற்பமுள வேல்யாம்
    எதைமுதல்நூல் தேவன்நூல் என்பாம்"
- இந்தக் கதைகளில் பலவும் பலவித விகற்பங்கள் உடையனவாய்ப் பலரிடமும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விகற்பக் கதைகளில் எதை தேவனின் முதல் நூல் எனக் கொள்வது? - கிறித்தவர்களால் தங்கள் மூலநூலாக ‘புனித பைபிள்’ என்று கொண்டாடப்பட்டு உலகமெங்கும் கொண்டுசெல்லப்படும் விவிலியம் உண்மையில் மிக நீண்ட வரலாறும், சீரற்ற வளர்ச்சிப்போக்கும் கொண்ட ஒரு சிந்தனை ஓட்டத்தை பதிவுசெய்துள்ள நூல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூல்கள் உருவாகி மொழியாக்கம் செய்யப்பட்டு பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பலவாறாக தொகுக்கப்பட்டு. சுருக்கப்பட்டு, சேர்க்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. இன்று நமக்கு கிடைக்கும் விவிலியமேகூட பல வடிவங்கள் கொண்டது.

    393-394 "– அதையன்றி 393
    யேசுகதை சீட ரெழுதுநிருபக் கதைவீண்
    வாசகங்களும் வேத மாயினவே "
- அதுவேயன்றி, ஏசு கதையும், அவருடைய சீடர்கள் எழுதிய பயனற்ற கடிதங்களும் வேதம் எனச் சொல்லப்படுகின்றன.

    394 – 395 " – பூசைக்
    குருமார் சரிதமவர் கூட்டத்தின் கொள்கை
    ஒருசாரார் வேதத் துரைப்பார்"
- எகோவாவின் கோவிலில் பூசை செய்யும் குருமார் கூட்டத்தின் கொள்கைகளையும் ஒருசாரார் வேதம் என உரைப்பார்.

    395-396 "-– கருதுங்கால்
    ஆலையில்லா வூருக் கிலுப்பைப் பூச்சர்க்கரையைப்
    போலினிதா மென்றல் புதுமையோ"
- இதையெல்லாம் காணும்போது, கரும்பில்லாதஊருக்கு இலுப்பைப் பூதான் சர்க்கரை என்னும் பழமொழி பொருத்தமே. புதுமையானதன்று.

    396- 398 "-– மூலையிலே 396
    தங்குங் கிணற்றுத் தவளையொப்பார் நாட்டுவளம்
    எங்கறிவாரையோ இதுபோல்மற் – றங்குள்ள 397
    கோட்டாலை சொல்லவொரு கோடிநாட் செல்லுமிதைக்
    கேட்டாரும் கொட்டுவார் கெக்கலிகாண்" 398
- கிணற்றின் ஒரு மூலையிலே தங்கும் தவளை ஒப்பவர்கள் நம் நாட்டின் தத்துவஞான வளத்தை எங்ஙனம் அறிவர். சற்றும் அறியார். இது போல அந்தக் கிறுத்துவ வேதத்தில் நிறைந்துள்ள மூடத்தனமான வேடிக்கைகளை எடுத்துச் சொன்னால் ஒருகோடி நாட்கள் செல்லுமே. கேட்டவர்களின் கைகொட்டிக் கெக்கலித்துச் சிரிப்பரே.
- [antic; விகடக்கூத்து. கூத்தாடுவாயிதென்ன கோட்டாலை (பணவிடு. 158). 3. [K.kōṭṭāra.] Stupid or foolish behaviour; மூடநடத்தை.]

    398- 402 "-– நாட்டிலே
    நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
    நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் 399
    தவத்தளவே யகுமாந் தான்பெற்ற செல்வங்
    குலத்தளவே யாகுங் குணங்காண் – கலப்பாய் 400
    நிலத்திற் பிறந்தவை கார்காட்டும் காட்டும்
    குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்லென் – றிலக்கியத்துட் 401
    சொன்னவிதிக் கேற்ப"
- நம்முடைய நாட்டிலே இலக்கியங்கள் கூறுவது போல
"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு- மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்."

- " நிலத்திற் பிறந்தவை கார்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்"
- நுண்ணறிவு ஒருவன் கற்ற நூல்களுக் கேற்பவே அமையும்,ஒருவன் வாயிலிருந்து பிறக்கும் சொற்களே அவன் பிறந்த குலம் இத்தகையது எனக் காட்டிவிடும்.

    402- 403 "-அவர் தொன்னூலி னாசாரஞ்
    சென்னீர் தெளித்தல் கொலைசெய்தலே- பின்னூலுள் 402
    ஏசுசதையும் இரத்தமும் உட்கொண்ட்டப்பங்
    கூசுமதுவுங் குடித்திடுதல் –"
- அவர்களுடைய வேதத்தின் சாரம்,முதல்வேத நூலாகிய பழைய ஏற்பாட்டில் உயிர்க்கொலை செய்து இரத்தத்தினைத் தெளித்தல், கொழுத்த கிடா, ஆடு முதலியவற்றைப் பலியிடல் செய்தல் முதலியனவும் பின்னூலாகிய புதிய ஏற்பாட்டில் ஏசுவினைடைய சதையையும் இரத்தமும் என மனத்திற் பாவித்து உட்கொண்டு அப்பம் தின்னல், நல்லோர் கூசும் மதுக் குடித்தல் முதலியனவே..

    403 – 406 _பேசிடுங்கால்
    நல்லா றெனப்படுவ தியாதெனில் யாதொன்றுங்
    கொல்லாமை சூழு நெறியென்று – வல்லார் 404
    வகுத்தமைக்கு முற்றிலும்நேர் மாறாய்க் கொலையே
    மிகுத்தமையால் யாங்கூறன் மேலென் –றொகுத்தாற் 405
    பெருமைகும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்
    கருமமே கட்டளைக் கல்லாம்"
- வீடுபேறுக்கு நல்லநெறியென்று சொல்லப்படுவது யாதென்று வினவில், யாதோருயிரையும் கொல்லாமையாகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி என்று தெய்வப் புலவர் திருவள்ளுவனார் முதலிய சான்றோர் வகுத்தமைத்த நெறிக்கு முற்றிலும் நேர்மாறாகக் கொலையையே பெரிதுபடுத்துக் கூறி, யாம் கூறுவதே மேல் என்று கிறித்துவன் சொன்னால், தெய்வப் புலவர் கூறியவாறு, "
- பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்
கருமமே கட்டளைக் கல்லாம்"

    406– 409 "-சரிதமெலாம்
    வேதமாம் என்று வெகுபேர் மதிப்பதால்
    ஆதிமத மாமென் றறைந்தாய்நீ- பேதாய்
    உலகின் மலிந்தவெலாம் உத்தமமோ செம்பொன்
    நிலைகுறைந்துந் தாழ்வுபட்டோ நிற்கும் – அலைகடல்தான்
    பென்னம்பெரிதே யெனினுஞ் சிற்றூறலென
    நன்னீர் மனிதர்க்கு நல்குமோ"
- -வரலாற்றுக் கதைகளையெல்லாம் பெரும்பான்மையர் வேதம் என மதிப்பதால் கிறித்துவம் தொன்மையான மதம் என நீ சொன்னாய். அறிவற்றவனே! உலகில் மிகுதியாக இருப்பனவெல்லாம் மேன்மையானவோ சொல். செம்பொன் எனை உலோகங்களைக் காட்டிலும் குறைவானதுதான். ஆனால் மதிப்பில் குறைவுபடுமோ? அலைகளையுடைய கடல் மிகப்பெரிதுதான். ஆனால் சிறு ஊற்று நீர்போல மக்களுக்குக் குடிநீராக நன்மை தருமோ?

    409– 411"- இன்னும்
    விரிவாய்ப் பலவுலகின் மேயவருள் ஞானி
    அரிய னொருவனென ஆன்றோர் – தெரிய 410
    உரைத்தா ரதனால் உயர்வு குறைந்து
    தரைப்பா லிழிவுமிகச் சாரும்"
- உன் கூற்றின்படிப் பார்த்தால் மக்கள் பலர்வாழும் உலகிலே ஞானி ஒருவனே இருப்பான் எனச் சான்றோர் கூறினால் அச்சொல்லால் அந்த ஞானிக்கு உயர்வு குறைந்து இழிவு மிகச் சேரும் அல்லவா?

    411-419 "-உரைப்பானேன்
    நன்றேல்லாந் தீதாயும் தீதெல்லாம் நன்றாயும்
    கன்றிவரத் தக்க கலிகாலம் – என்றென்றும் 412
    பொல்லாதார் நல்லாராய்ப் பொங்கி யருமறைநூல்
    கல்லாதார் வாழுங் கலிகாலம் – இல்லாளை 413
    அன்னியர் தோள்சேர்த்தி அரும்பொருளைத் தேடியிழி
    கன்னியர்தோள் சேருங் கலிகாலம் – மன்னரென்போர் 414
    பாதகங்கள் செய்து பணம்பறிக்கு மாந்தரொத்துக்
    காதகங்கள் செய்யுங் கலிகாலம் – தீததனால் 415
    எள்ளுண்போர் தள்ளுண்போ ரேசுண்போர் மாசுண்போர்
    கள்ளுண்போர்க் கான கலிகாலம் – முள்ளுள்ளே 416
    எக்குப்பெருத்து மதமேற் படுத்தித் தூஷணைத்தீ
    கக்குங் கொடிய கலிகாலம் –மிக்குலகில் 417
    ஈட்டுந் தவமாதி யின்மையாய்த் தெய்வநிலை
    காட்டா தொழிக்கும் கலிகாலம் – கூட்டுகலி 418
    காலமெலாம் வந்தோர் கனத்தவடி வெடுத்தாற்
    போலவந் திங்குப் புகுந்ததுகாண்"
- மிகப்பல சொல்லுவானேன்? இது கலிகாலம். நல்லதெல்லாம் கெட்டதாகவும் கெட்டதெல்லாம் நல்லதாகவும் திரிந்து வரும் கெட்ட கலிகாலம். தீயோர் நல்லவர்களாக வெளிப்பட, அறம் கூறும் வேதம் திருமுறைகள் ஆகியவற்றைக் கற்காதவர்கள் பெரியார்களாக வாழும் கலிகாலம். தன் மனைவியை அன்னிய ஆடவரின் தோள் சேர்த்துப் பொருள் சேர்த்து ஒழுக்கங்கெட்ட பரத்தையர் தோள் சேரும் கலிகாலம்
மன்னர் என்பவர்கள் (அரசியல் கட்சித் தலைவர்கள்) கொள்ளை யடிக்கும் பாதகர்களைப் போல, அக்கிரமங்கள் செய்யும் காதகர்களுக்கான கலிகாலம். தீயவை செய்வதனால் இகழத்தக்கவர்கள். பழகத்தகாதவர்கள், ஏசப்படுவோர், மாமிசம் தின்பவர்கள் கட்குடியர்கள் ஆகிய சமூக விரோதிகளுக்கான கலிகாலம்,நெஞ்சுக்குள்ளே வஞ்சகம் மிகுதியாகக் கொண்டு, மதமேற்படுத்திக் கொண்டு பிற மதங்களின்மேல் தூஷணைத் தீயைக் கக்குகின்ற கொடிய கலிகாலம், உலக வாழ்க்கையில் சிறப்பாகத் தேடவேண்டிய புண்ணியங்கள் முதலியனவும் தெய்வானுபவமும் இல்லாதொழிக்கும் கலிகாலம், இப்படிக் கலிகாலத்தின் கேடுகள் எல்லாம் ஒன்று திரண்டு பெருத்தவடிவம் எடுத்து வந்தாற்போல கிறித்துவம் இங்குவந்து புகுந்துவிட்டது காண்பாயாக.

    419– 421 "-மேலும்
    அரசர்கள்தம் கோட்பாடும் ஆனமையால் ஓங்கி
    முரசமென நின்று முழங்கும் - பிரசைகள்தாம் 420
    மன்னவர்கள் செல்லும்வழியே வழிக்கொள்வார்
    என்னுமுரை யெம்மால் இயம்பியதோ"
- மேலும் கிறித்துவம் நாட்டை அரசாள்வோரின் மதமாகவும் உள்ளது.மன்னர் எவ்வழி அவ்வழி மக்கள் என்பது பழமொழி. இது நானாகச் சொன்ன மொழிஅன்று.

    421- 423 "– பின்னுமது
    சற்சமய நூலுணர்ச்சி சாராநாட்டுப் புறத்தி
    னிற்செறிந்த கீழ்மக்க ளென்றறையுங் –கற்செறீந்த 422
    புல்லறிவோ ராஞ்சிறிய புட்குலத்தை யுட்படுத்த
    மெல்லியராங் கண்ணிபல மேவுவித்தும்"
- மேலும், ஞானவிசாரணை செய்யும் மெய்ஞ்ஞான நூலறிவு இல்லாத நாட்டுப் புறப் பாமர மக்கள் என்று சொல்லப்படுகின்ற, தாமே சிந்தித்து நல்லது கெட்டது என்று பகுத்தறியும் நெகிழ்ச்சியில்லாத கல்போன்ற கடின மனமுடைய புல்லிய அறிவுடையவர்களாகிய பறவைக் கூட்டத்தை தன்னுளகப்படுத்திக்கொள்ள, (அறிவாகிய கண்ணுக்குப்) புலப்படாத மெல்லிய வலைகள் பலவற்றைப் பரப்பியும்
- (கிறித்துவர்கள் சமூகசேவை எனச் செய்யும் மருத்துவப்பணி, கல்விப்பணி , இலக்கியப்பணி முதலியவை அத்தகைய வலைகளாம்)

    423– 426 "- வல்லகல்விச்
    சாலையென்று சொல்பஞ் சரமமைத்துங் கைக்கூலி
    வேலையென்று சொல்லும்வலை மேல்விரித்து –மூலைதொறும் 424
    பண்ணுமுப தேசப் பயில்குரலிற் கூவுவித்தும்
    உண்ணுபல பண்டமெனும் ஒட்டுவைத்தும் – மண்ணவரைச்425
    சேர்த்துத் திரட்டவல்ல செய்கையெலாஞ்செய்தக்காற்
    பேர்த்தும்அந் தக்கூட்டம் பெருகாதோ" –
- பள்ளிக்கூடங்கள் என்னும் கூண்டுகள் அமைத்தும் நல்லசம்பளம் தரும் அரசு வேலை என்ற வலையை அக்கூண்டின்மேல் விரித்தும் தெருமூலைகளைல் நின்று ‘பாவிகளே" எனப் பெரிய குரலில் விளித்து உபதேசம் எனக் கூவும் குரலில் அழைத்தும், சுவையான உண்ணும் பண்டங்கள் எனும் கவர்ச்சியை அதில் வைத்தும், உலகவரைக் கூட்டம் சேர்த்துத் திரட்ட வல்ல சாமர்த்தியங்களைச் செய்தால் அம்முட்டாள்கள் கூட்டம் பெருகாதோ?
- திரியும் பறவைகளைப் பிடிக்கும் வேடர்கள் அதற்கெனத் த்யாரிக்கப்பட்ட கூண்டினைப் பறவைகள் கூடும் இடத்தில் மறைவாக வைப்பர். அது சிறைசெய்யும் கூண்டு எனத் தெரியாத வண்ணம் அதன்மேல் கவர்ச்சியான வலையையும் விரிப்பர். அதனுள் அப்பறவை விரும்பி உணும் பண்டத்தை வைப்பர்; அந்தப் பறவையினை ஈர்க்கும் குரலில் கூவுவர். தன்னுடன் இணை சேர விரும்பும் பறவையினது அழைப்பு அக்குரல் என மயங்கிய பறவை வந்து கூண்டின் உள்ளோ வலையிலோ சிக்கிக் கொள்ளும். அந்த வேடர்களின் செய்ல் போன்றதே கிறித்துவ மத போதகர்களின் செயல்களும்..

    426 -427 "-– பார்த்துணரா
    தையோமதிமயங்கி அம்மதத்திற் சேர்ந்ததன்றி
    மெய்யோர்ந்து தேர்ந்ததன்கண் மேவினர் யார்"
- ஆராய்ந்து தெளியும் மெய்யுணர்வு இல்லாத குறைந்த மதியுடை யவர்கள், மதி மயங்கி அம்மதத்தில் சேருவதல்லாமல், மெய்யுணர்வு பெற்று அம்மதத்திற் சேர்ந்தவர்கள் யார்? ஒருவருமிலர்.
    427 – 431 " – உய்யுநெறி
    காட்டுமென் றுள்ளாய்ந்து கலந்தவரார் தங்கள்பவம்
    ஓட்டுமென்று நாடி உணர்ந்தவர்யார் – மீட்டுமதில் 428
    வந்துபுகுந்த மனிதருள்ளும் வன்மையுடன்
    முந்தவதி லுள்ள மூப்பருள்ளுஞ் – சிந்தைப் 429
    புலையுங் கொலையுங் களவுந் தவிர்ந்த
    நிலையுணர்ந்து நீங்கியார் நின்றார் – தொலையா 430
    அபசார மெல்லாம் அகற்றா விடினும்
    விபசாரஞ் செய்யா தார்விட்டார் –
- நாம் உய்யும் நெறி இது என்று ஆராய்ந்து தெளிந்து கிறித்துவத்தில் சேர்ந்தவரார்? கிறித்துமதம் பிறப்பு இறப்பு ஆகிய சுழற்சியை ஓட்டும் என்று அம்மதத்தில் விரும்பி உணர்ந்தவரார்? மேலும் அந்த மதத்தில் புகுந்தவருள்ளும் வலிமையுடன் அந்தமத மூப்பர்களாகிய போதகருள்ளும் தம் சிந்தையில் கொலையும் புலால் தின்னலும் கள்ளமும் பாவம் என்று உணர்ந்து நன்னெறியை அறிந்து அப்பாவங்க ளினின்றும் நீங்கியோர் யார்? (ஒருவருமிலர்). அபசாரங்களை யெல்லாம் அகற்றாது போனாலும் விபசாரம் செய்யாத கிறித்துவர்கள் இல்லை.
- மூப்பர் – பெரியோர்; கிறித்துவமத்தலைவர்களில் ஒரு பிரிவினர்.

    431-432 – சுபமாக 431
    மாதுசங்கஞ் சேர்ந்து மருவினரல்லா துயர்ந்த
    சாதுசங்கந்தேடிச் சார்ந்தார்யார்"
- மகளிர் கூட்டத்தைக் கூடியதல்லாமல் சாதுக்களின் கூட்டத்தைதேடிச் சேர்ந்தவர் யார்? (ஒருவரும் இலர்)
–வாதமிட்டுச் 432
சந்தைக்கடைபோலச் சண்டைசெய்வா ரல்லாது
சிந்தைமையல் சற்றேனுந் தீர்ந்தார்யார்"
- குதர்க்க வாதம் செய்து சந்தை வியாபாரத்தில்போலக் கூக்குரலிடுவதல்லது, அறிவு மயக்கம் நீங்கியவர் யார்? (ஒருவருமிலர்)

    433-434 "-அந்திசந்தி
    மூக்கறையர் ஞானமென மூலைதொறும் பேசலன்றி
    யாக்கைநிலைசோதித் தறிந்தார்யார் –
- காலையும் மாலையும் எல்லாப்பொழுதுகளிலும் அறிவற்ற மூடர்கள் தெருமூலைகளில் நின்றுகொண்டு பேரொலியில் கூச்சலிடுவதன்றி அவரவர் உடலின் நிலைமையை (நிலையாமை)ஆராய்ந்து அறிந்தவரார்?

    434-435 – ஊக்கமுடன்
    செல்வத்தைத் தேடுதற்குச் சிந்தைவைத்தா ரல்லததை
    அல்லலென் றுகைவிட் டகற்றினர் யார்"
- பேராசையுடன் செல்வத்தை எவ்வழியிலாவது திரட்டச் சிந்தையை வைத்தவர் அன்றிச் செல்வம் துன்பத்திற்கு ஏதுவாகும் எனத் துறந்தவர் அவர்களில் யார்?

    435-436 "– புல்லும் 435
    இனக்கோட்ட மெம்முள் இலையென்ப தல்லால்
    மனக்கோட்டம் நீங்கினார் மற்றார் –"
- எங்களிடத்தில் சாதி இன வேறுபாடு இல்லை என்று சொல்லிக் கொள்வதன்றி மனத்தில் அந்த மாறுபாட்டை நீங்கியவர் யார்?

    436-437 – கனக்கவேறு
    எந்தச் சமயத்தும் எய்தாச் சுகமதனை
    அந்தச் சமயத் தடைந்தார்யார்
– பிற எந்தச் சமயங்களில் எய்தப் பெறாத இன்பப் பேற்றினை அந்தக் கிறித்துவசமயத்தில் அடைந்தவர் யார்?

    437-439 "– அந்தச்
    சமயம் பெருகிடினும் தாழ்காலம்வந்தால்
    இமையி லழிவெய்தி இறுதல் – அமையுமந்தத் 438
    துப்பற்ற மார்க்கத்திற் றோயாதே மாயாதே
    கைப்புற்று நெஞ்சிற் கவலாதே"
- அந்தச் சமயம் இப்பொழுது பெருகியுள்ளதுபோற் காணப்பெறினும், அது தாழும் காலம் வரும்; இமைப்போதில் அறிவுறுதல்உறுதி. அழியும் அந்த நற்கதியற்ற (துப்பு – கதி) சமயத்தில் சேராதே; அதில் சேர்ந்து அழிந்து போகாதே; மனம் சலித்துக் கலங்கி ப் பின்னர்க் கவலைப்படாதே.

    439-440 "-– எய்ப்புற்றுப்
    பேய்த்தேரை நீரென்று பின்றொடர்ந்து நீர்நசையாற்
    போய்த்தே டல்போலப் புலம்பாதே"
- களைப்புற்றவன் நீர் வேண்டில் கானல்நீரினைத் தொடர்ந்து சென்று நீரில்லாததால் வருந்துவது போல நீ விரும்பும் நற்கதி கிறித்துவத்தில் கிடைக்காமல் பின்னர்ப் புலம்பாதே.

    440 -441 "– வாய்த்தவெளிப்
    பட்டப் பகலிற்கண் பார்வையிலாக் கூகையைப்போற்
    றட்டித் தடவித் தவியாதே –
- மறைப்பே இல்லாத வெட்ட வெளியில் பட்டப் பகலில் கண்பார்வை யில்லாத கூகை பொருள்களைக் காண முடியாமல் தட்டித் தடவித் தவிப்பது போல அறிவுக்கண் இல்லாமல் தவியாதே.

    441-442 "-– கிட்டி
    அவசமயத் துள்ளாழ்ந் தலையாதே யுன்றன்
    சுவசமயந் தேரென்று சொன்னான் "–
- பொய்ச்சமயமாகிய கிறுத்துவத்தை நெருங்கி அறிவிழந்து அலையாதே. உன்னுடைய சொந்த சமயமாகிய சைவத்தைத் தெளிந்து தேற் என்று சொன்னான்.

    442- 443 "சிவசமயத்
    துண்மையெல்லாம் நெஞ்சத் துறுத்தினான் வேற்றுமதத்
    திண்மையெலாம் நில்லாமற் செய்திட்டான்"
-சைவசமயத்தின் உண்மைகளையெல்லாம் என் நெஞ்சில் உறுதியாகப் பதிப்பித்தான்.வேற்றுமதமாகிய கிறுத்துவத்தின் அழுத்தமான பாதிப்பையெல்லாம் அழித்து இல்லாமற் செய்திட்டான்.

    443- 444 "- அண்மைசெறி
    பத்திநெறி யும்பழ வடியார் தாள்பணியும்
    புத்திநெறியும் எனக்குப் போதித்தான் –"
- சிவத்துடன் நெருங்கீருக்கும்படியாக் அன்புநெறியாம் பத்தி நெறியையும், பழ அடியார்களின் திருவடிகளைப் பணியும் அறிவு நெறியையும்போதித்தான்.

    444-445 "–சித்திநெறி
    காட்டினா னென்கட் கலந்துநின்ற தீக்குழுவை
    ஓட்டினான் வேறோர் உருச்செய்தான்"
- நற்பேற்றினை அடையும் நெறியை எனக்குக்காட்டினான். என் அறிவினுள் கலந்து நின்ற தீய எண்ணக் கூட்டங்களை விரட்டி ஓட்டினான். என்னைப் புதியவனாக மாற்றினான்.

    445-446- "– வேட்டுவனோர்
    மென்புழுவைத் தன்படிவம் எய்துவித்த வண்ணமெனைத்
    தன்புதிய கோலஞ் சமைப்பித்தான் –
- வேட்டுவன் என்னும் குளவி புழுவைக் கொட்டித் தன் வடிவம் அடைவித்தபடி என்னைக் கிறுத்துவ்ப் பிடிப்பினின்றும் நீக்கித் தன்னுடைய சிவக்கோலத்தைப் பெறுவித்தான்.
- "வேட்டுவனாம் அப்புழுப்போல் வேண்டுருவைத் தான்கொடுத்துக் கூட்டானே" எனும் சிவஞானபோத வெண்பாத்தொடர் எடுத்தாளப்பட்டுள்ளதுவேட்டுவன் எனும் ஒருவகைக் குளவிஒரு புழுவைக் கொணர்ந்து ஒரு கூட்டில் அடைத்து, அதனை எப்பொழுதும் கொட்டிக் கொண்டேயிருக்கும் என்றும், அதனால் அப்புழு அதனையே நினைந்திருந்து முடிவில் அக்குளவியாகவே மாறிவிடும் என்றும் கூறுவர். இதனை வடநூலார் பிரமகிரீட நியாயம் என்பர். புழு தன் வடிவு நீங்கி வேட்டுவனாம் உருப்பெறுதல் சிவானந்தம் துய்க்கும் ஞானவடிவு பெறுதலுக்கு உவமையாகக் கூறப்பெறும்.

    446-447 " – முன்பு
    பதைப்பற் றிறுமாந்து பாறையொத்த நெஞ்சைப்
    பதைப்புற் றுருகப் பணித்தான் - "
- முன்பு பாறைபோலத் திண்மையாக இருந்த என் நெஞ்சைஇப்பொழுது பனிக்கட்டி போல உருகக் கனிவித்தான்.
- "இல்லை நின்கழற் கன்ப தென்கணே
ஏல மேலுநற் குழலி பங்கனே
கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்
டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்" ( திருவாசகம். திருச்சதகம் 95)

    - 447- 448 "- புதைத்தவன்பால்
    எங்குமிருப்பான் இறையெனினும் மூர்த்தியிடைத்
    தங்கும் விசேடமெனச் சார்வித்தான்"
- இறைவன் எங்கும் எப்பொருள்களிலும் கலந்து அப்பொருள்களாகவே மறைந்து நிற்பானெனினும், அவன் மூர்த்தி (விக்கிரகம்)யிடம் மூர்த்திமானாகச் சிறப்பாகத் தங்குவான் எனக் கூறி அம்மூர்த்தியைச் சார்வித்தான்.

    448 -449 "–அங்கெனக்குக்
    கண்ணிணைநீர் வார்க்கவுடல் கம்பிக்க மெய்புளகம்
    நண்ணவொருசாலம் நவிற்றினான்"
- அந்த மூர்த்தியை நான் சார்ந்தபோது என் இரண்டு கண்களும் நீரினைப் பொழியவும் உடல் நடுக்கம் பெறவுமுடல் மயிர்க்குசெய்து புளகம் பெறவுமொரு மந்திர ஜாலம் செய்தருளினான்.
- இவை பத்தி மெய்ப்பாடுகள் .
‘மெய்தா னரும்பி விதிர்விதிர்த்
துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைதுதுக் கண்ணீர்
ததும்பி வெதும்பி யுள்ளம் (திருவாசகம் திருச்சதகம் 1)

    449- 450 – மண்ணிலையன்
    தாள்துணையிலென் றலையைத் தாழ்த்திப் பணிந்தெழுந்து
    மீட்டும் மொழிந்தேனோர் விண்ணப்பம்"
- நிலத்தில் ஆசிரியப்பிரானது திருவடிகளின் மீது என் தலை படியும்படி வீழ்ந்து வணங்கிப் பின் மீண்டும் ஒரு விண்ணப்பம் செய்தேன்.

    450- 455 "
    - வாட்டும்
    மனவிருளை நில்லாமல் மாற்ற வுதயஞ்செய்
    தினகரனே ஆனந்தத் தேனே – இனிதான
    சொந்தச் சமயத்தைத் தூஷணித்துக் கைப்பான
    வந்தசமயத்தை ஆதரித்தே – எந்தை
    தனையும் அவனடியர் தங்களையும் வேடத்
    தினையும் பலஇகழ்ச்சி செய்த – எனையும்
    பொறுக்குமோ கோபித்துப் புன்னரகில் தள்ளி
    ஒறுக்குமோ வேண்டா தொதுக்கி – வெறுக்குமோ
    செய்நெறி வேறொன்றுந் தெளிகிலேன் தீவினையேற்
    குய்நெறிதா னுண்டோவென் றோதினேன்"
- என்னை மருட்டும் மன இருளைச் சற்றும் இராமல் நீக்க உதயம் செய்த சூரிய மூர்த்தியே! ஆனந்தம் அளிக்கும் தேனே! இனிமை பயக்கும் என் சொந்தச் சமயத்தைத் தூற்றிக் கசப்பான அந்த (க்கிறித்துவ) சமயத்தை விரும்பியே, எம் தந்தையாம் சிவபெருமானையும், அவருடைய பெருமைமிகு அடியார்களையும், சிவவேடத்தையும் பலவாறு இகழ்ந்து உரைத்த பாவியாகிய என்னையும் அவ்விறை மன்னித்துப் பொறுக்குமோ? அல்லது சினந்து கொடிய நரகில் தள்ளித் தண்டிக்குமோ? என்னை இவன் ஆகான் என வெறுத்து ஒதுக்குமோ? தீவினையேனாகிய நான் இன்னது செய்வது என்று அறியாமல் கலங்குகின்றேன். யான் உய்தற்கு உரிய நெறிதான் உண்டோ? என்று ஆசிரியரிடம் ஓதினேன்.

    455-457 "–பையவே
    என்முகத்தை நோக்கி இரங்கியருளி எங்கோன்
    புன்முறுவல் சற்றே புரிந்தருளி – முன்மதித்த 456
    ஏசு சமயத்து உணர்த்தும் எந்நாளும் மீளாத
    - வாச நரகை மதித்தனையோ –"
- மெதுவாக என் முகத்தை இரக்கத்துடன் பார்த்து, சற்றே புன்முறுவலித்து, நீ முன் பாராட்டிக் கொண்டிருந்த ஏசு சமயத்தில் உரைக்கப்படும் என்றும் மீட்சி யில்லாத நிரந்தர நரகம் எனக் கருதினாயோ?

    457- 458 "-– ஈசன்
    நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
    சலமிலன்பேர் சங்கரன்காண்"
- ஈசன் , தன்னை அடையாதவர்களுக்கு நன்மை செய்யமாட்டான்; அடைந்தவர்மேல் அன்புடையவன். வஞ்சனை அற்றவன். அவன் பெயர் சங்கரன்.
இங்கு ஆசிரியர், இறைவனின் கருணையை எடுத்துக் காட்டத் திருவருட்பயன் 9ஆவது குறளை எடுத்தாண்டுள்ளார். குறளில் இல்லாத ‘ஈசன்’ என்ற எழுவாயை வருவித்துக் கொண்டார். அங்கரன் என்பதற்கு இன்பம் எய்பவன் என்பது பொருள். ‘இன்பம் செய்தலின் சங்கரன்’ என்பது காஞ்சிப் புராணம். ஈசனை நண்ணுதலாவது சிவோகம் பாவனையில் அவனை நெருங்குதல். நலமிலன் – நன்மை செய்யாதவனைப் போல இருப்பன்.அவர்கள் வினப்பயனை முழுதும் அனுபவித்துக் கழிக்கும்படியாக விடுதலினால் நலமிலன் எனப்பட்டான்.
"சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க் கல்லால்
நலமிலன் நாதோறும் நல்கு வானலன்" அப்பர்.(திருமுறை4 நமச்சிவாயப்பதிகம் 6)

    458-459 "-– மலையெடுத்த
    வல்லரக்க னுக்கும்மிக வன்மம்செய் தக்கனுக்கும்
    நல்ல வரம்பலவும் நல்கினான்"
- தன்னிடத்தில் வரமும் உரமும் பெற்ற தருக்கினால் தன் கயிலை மலையைப் பெயர்க்கும் அபராதத்தைச் செய்த இராவணனுக்கும் தன்னையே வியந்து வன்மம் செய்த தக்கனுக்கும், அவர்கள் செய்த பிழைகளை மன்னித்து வரம்பல நல்கினான்.

    459 -460 _"– எல்லவரும்
    ஆரமிர்தம் உண்டிடுவான் ஆலாலம் உண்டமைந்த
    காரமரும் நீலமணிக் கந்தரத்தான்"
- தேவர்களும் அசுரர்களுமாகிய எல்லோரும் கிடைத்தற்கு அரிய அமிர்தத்தை உண்ணும் பொருட்டு, ஆலகால நஞ்சை உண்டு அதனை க் கண்டத்தில் அடக்கியமையால் கரிய நிறமான நீலமணியணிந்தாற் போன்ற கண்டத்தை உடையவன்.

    460- 462 –"- நீரகமாம்
    அன்பில்லார் மால்பிரம ரானாலுங் காண்பரியான்
    அன்புடையார் புன்புலைய ராயிடினும் தன்பெருமை 461
    எண்ணா தெழுந்தருள்வான்"
- நீர்போற் கசிந்த அன்பில்லார், திருமால், பிரமன் போன்ற தேவர்கள் ஆனாலும் காண்பதற்கு அரியவன். ஆயினுமன்புடையவர் இழிந்த பிறப்பினராயிடினும் த்ன்னுடைய பெருமையினைச் சற்றும் கருதாது அவரிடத்து எழுந்தருளுவான்.

    462-" எவ்வுயிர்க்கும் எப்பொருட்கும்
    தண்ணா ரருளளிக்குந் தாயானான்"
- எல்லா உயிர்களுக்கும் எல்லாப் பொருள்களுக்கும் குளிர்ந்த அருளைத் தரும் தாயே ஆயினான்.
- பச்சிளம் மகவு தன்க்கென்று ஒன்றும் விரும்பி வேண்டுவதில்லை. பசிக்கு உணவு கூடக் கேட்பதில்லை. ஆனால், அதன் தேவையறிந்து ஊட்டுபவள் அன்னையேயாம். அவ்வாறே அடியவர்கள் கூடும் அன்பினிற் கும்பிடலே யன்றி வீடும் வேண்டா விறலினர். ஆயினும் அவர்கள் நுகர்ந்து இன்புற வேண்டிய சிவபுண்ணியங்களை அவர்கள் கேளமலே நுகரும்படி இறைவன் ஊட்டுவதால் தாயானான். (சி.சு.க. திருவாசகம் சிவக்குடில் விளக்கம்)
- உலகப் பொருள்களைப் படைத்துக் காத்தலினால் தாயானான்.

    462-463" – மண்ணகத்தே
    பெற்றெடுத்த தாயேதன் பிள்ளையைக் கைவிட்டக்கால்
    மற்றதனைக் காப்பாற்று வார்யாரே "
- நிலவுலகில் குழந்தையைப் பெற்றெடுத்த தாயே அதனைக் கைவிட்டால், பின், அதனைக் காப்பாற்றுபவர் யார் உள்ளார்? ஒருவரும் இலர். அவ்வாறே உயிர்களுக்குத் தாயேயாகிய சிவம் கைவிட்டால் அந்த உயிரைக் காப்பவர் யார்? ஒருவரும் இலர். தாய் கைவிட்டாலும் தாயிற் சிறந்த தயாவுடைய சிவன் கைவிடான் என்றார்.

    463- 464 –" – குற்றமொன்றுங்
    கொள்ளான் குணமாகக் கொள்வான் தொழிலனைத்துந்
    தள்ளான்நின் அச்சந் தவிர்திகாண்"
- அன்பரிடத்துச் சிவன் குற்றமொன்றுங் காணான். குற்றத்தையும் குணமெனக் கொள்வான். உன்னுடைய செயல்களைக் குற்ற மெனத் தள்ளான். ஆதலால் நீ உன் அச்சத்தை விடுவாயாக.

    464-465 "-- வள்ளல்தனைப்
    பற்றினா லுன்னையவன் பற்றுவா னெப்பற்றும்
    பற்றாமல் நின்ற பரமேட்டி –"
சிவன் எல்லாவற்றிற்கும் மேலான வணக்கத்துக்கு உரியவன். (பரமேட்டி). எப்பற்றுக்களும் பற்றாமல் இருப்பவன். வேண்டுதல் வேண்டாமை யிலாதவன். ஆனால் தன்னைப் பற்றியவர்களை அவன் பற்றிக் கொள்வான். கைவிடான். நீ அவனைப் பற்ரினால் அவன் உன்னைப் பற்றிக் கொள்வான்.
"பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டாணி" (7.61.2)

    465 - 468 "-உற்று
    மருத்துவன்றான் மந்த்ர மணிமருந்தா னோயைத்
    திருத்துதல்போற் சற்குரவன் தேர்ந்தே – பெருத்தபவ 466
    மூர்த்திதலந் தீர்த்தமெனும் மூன்றா லறமாற்றித்
    தீர்த்திடுவ னென்றுமறை செப்புதலால் – ஆர்த்திகொடம் 467
    மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
    வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்குங்காண்" –
- வைத்தியன் தன்னை அடந்த நோயாளியின் பிணியினை மந்திரம் மணி மருந்து ஆகியவற்றால் தீர்த்தல்போல் நல்லகுருவானவர் தன்னைச் சார்ந்தவரின் பிறவிப் பிணியை மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூன்றினைத் தக்கதொன்றின் மூலம் முற்றிலும் நீக்கி இன்பம் அளிப்பார்.இவ்வாறு வேதம் செப்பும். பத்தியுடன் அம்மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவற்றை முறையாக வழிபடுவோருக்கே சற்குரு வாய்க்கும். எனவே வழிபாடே அடிப்படை
- ஆர்த்தி- அருத்தி என்பது ஆர்த்தி என ஆயிற்று. அருத்தி – அன்பு, காதல், பத்தி.
- இங்கு ஆசிரியர், மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர் வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்குங்காண் பராபரமே’ எனும் தாயுமானவரின் பரபரக் கண்ணிப் பாடலை எடுத்தாண்டுள்ளார்.

    468 -470
    - கூர்த்தறிவாற்-
    றேராது முன்னிழைத்த தீவினைக்கா யச்சமுடன்
    ஆராமை நின்பா லடைந்தமையால் – சாராத 469
    வேற்றுச் சமயந் தனைமதித்த வெம்பாவம்
    - மாற்றுங் கழுவாய் வகுக்கக்கேள்"
-கூர்த்த மதியால் ஆராய்ந்து தெளியாமல் முன் செய்த தீயவினைகளுக்காகப் பயத்தோடு கூடிய ஆதங்கம் உன்னிடத்தில் இருப்பதனால், சேரக்கூடாத பரசமயமாகிய கிறுத்துவத்தை நீ பெரிதாக மதித்த கொடிய பாவத்திற்குப் பரிகாரம் சொல்கிறேன், கேட்பாயாக.

    470 -474 –"– தோற்றுகின்ற 470
    இந்தத்த லம்போல எல்லா விசிட்டமும்மற்
    றெந்தத் தலத்து மிலைகண்டாய் – முந்தையோர் 471
    போற்றுதலம் பாவங்கள் போக்குதலம் வேதத்திற்
    சாற்றுதலம் தானாய்ச் சமைந்ததலம் – ஏற்றற் 472
    குரியதல மிவ்வுலகத் துள்ள தலத்துள்ளே
    பெரியதலம் எம்மாலே பேசற் – கரியதலம் 473
    ஆனாலுஞ் சற்றே அறைவேன் அதன்பெருமை"
- உனக்குக் காட்சிப்படுகின்ற நீ இருக்கின்ற இந்தத்தலமாகிய திருப்பேரூர் போல எல்லா மேன்மையும் வேறு எந்தத் தலத்திலும் இல்லை என்பதை அறிவாயாக. (விசிட்டம் That which is superior, excellent, eminent; மேன்மையுள்ளது.) நம் முன்னோர்கள் போற்ரி வழிபட்ட தலம் இது. அறிந்தும் அறியமலும் முன் செய்த பாவங்களைப் போக்கும் தலம் இது. வேதத்தில் ஆதிபுரி எனக் கூறப்பட்ட தலமிது. இறைவன் தானாகத் தோன்றிய தலம். நிலவுலகிலே பேறூர் எனப்படுவது. இதன் பெருமை பேச்ற்கு அரியது. ஆயினும் சற்று நான் விளம்புவேன்

    474- 491
    "மானார் கரத்து மழுவலத்தெங் -கோனானோன் 474
    புற்றிற் சயம்பாகப் போந்தலந் தேவர்கடங்
    கற்றாத் தொழுது சிட்டி கற்றதலஞ் – சற்றேனும் 475
    மாலவனும் காணா மலர்த்தாள்கண் டர்ச்சித்துக்
    காலவனார் முத்தி கலந்ததலம் – மேலாந் 476
    தலத்தி லுயர்ந்த தலம்தேடி வானோர்
    நலத்ததெனக் கண்டடைந்து நண்ணுதலம் – வலத்தாலே 477
    கொம்பின் குளம்பின்வடுக் கொண்டருளி மெய்யடியார்
    தம்பிறவி மாசுவடுத் தள்ளுதலம் – அம்போரு 478
    கக்கண்ணான் கோமுனிவ னாகியடி யர்ச்சித்துத்
    தெக்கணகை லாயமொன்று செய்ததலம் – புக்கு 479
    நடையனத்தான் பட்டிமுனி நாமமொடு போந்து
    வடகைலை செய்து வசித்ததலம் – நடனமவர் 480
    பார்க்கும்படி ருத்ர பாதத்திற் றீவினைகள்
    தீர்க்கும் திருநடனம் செய்ததலம் – சேர்க்குமிகு 481
    சீரார் மருதமலைச் செவ்வேளால் அன்றமரர்
    சூராதி வாட்டித் துதித்ததலம் – நேராத 482
    பாவஞ்செயுஞ் சுமதிப் பார்ப்பான் இறந்தொழியத்
    தேவத்தலத் தவனைச் சேர்த்ததலம் – தேவர் 483
    சமுகத்தவ மானத் தான்முசுகுந்தன்றன்
    சுமுகம்பெற் றோங்கிச் சுகித்த தலம் – கமுகங் 484
    களத்தாள் பிருகுமகள் கைப்பற்று சாபம்
    உளத்தாம லிந்திரனா ருய்ந்ததலம் – பளத்தின்கண் 485
    வேதியனாம் ஏனத்தை வேந்தறியா தெய்தபழி
    காதியருள் நல்குங் கடவுள்தலம் – தூதிருளில் 486
    சென்றாண்ட தொண்டருக்குத் தேவியொடு நெல்வயற்கண்
    அன்றுபள்ள னாய்ப்போ யருளுதல் – நன்றுணர்ந்த 487
    தில்லைமுனி வோரழகு சிற்றம்பல செய்திங்
    கெல்லையறு பூசை யியற்றுதலஞ் – சொல்லைநம்பக் 488
    கைதூக்கிவ் யாசன்முனங் காசித்தலத் துரைத்த
    பொய்தூக்கு பாவத்தைப் போக்குதலம் – மெய்தூக்கிக் 489
    கோசிகனார் போற்றியருள் கொண்டுதிரி சங்கினுக்குக்
    காசினிவே றேயமைக்கக் கற்றதலம் – பேசிடுவோர் 490
    எல்லாங்கதி செலல்பார்த் தேமனிந்த நற்றலத்தில்
    நல்லார்க்கே பத்திவர நாட்டுதலம்" 491

- மானையும் மழுவையும் தம் கரத்திலேந்திய பெருமானார் இத்தலத்தில் புற்றின் வடிவாகத் தாமே (சுயம்பு தாந்தோன்றி) தோன்றினார். தேவர்களின் பசுவாகிய காமதேனு இங்கு வழிபட்டு உலகினைப் படைக்குந் தொழிலைக் கற்ற தலம். திருமால் சற்றும் காணமுடியாத இறைவனின் திருவடியைக் கண்டு அர்ச்சித்து முத்தி கலந்தது இத்தலத்தில். மேலான தலங்களிலெல்லாம் மேலான தலம் இதுவென்று அறிந்து தேவர்கள் கண்டடைந்த தலமிது. கன்றின் கால் புற்றில் சிக்கிக் கொள்ள காமதேனு தன் கொம்பால் பலமாக இடற அக்கொம்பின் வடுவினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, மெய்யடியார்களின் பிறவி மாசாகிய வடுவினைத் தள்ளும் தலமிது. செந்தாமரைக் கண்ணனாகிய திருமால் கோமுனி என்னும் பெயருடன் பட்டிநாயகனை அருச்சித்துத் தெக்கண கயிலாயம் எனும் திருக்கோயில் அமைத்த தலமிது. நடையழகு வாய்ந்த அன்ன வாகனனாகிய பிரமன் பட்டி முனி எனும் பெயருடன் இங்குப் போந்து வடகயிலாயம் எனும் கோயில் அமைத்து வழிபட்டுத் தங்கிய தலமிது. கோமுனியும் பட்டிமுனியும் திருக்கூத்தினைத் தரிசிக்குப்படியாக நடனக் காட்சி தந்த தலம்; இறைவனின் ருத்திர பாதத்தில் தீவினைகளைத் தீர்க்கும் தலம். சூராதிகளை வென்றழித்தபின் சீரார் மருதமலைச் செவ்வேளைத் தேவர்கள் துதித்த தலம். கொடிய பாவத்தினைச் செய்த சுமதி எனும் பெயரிய பார்ப்பான் இறந்தொழிய அப்பாவியையும் தேவலோகம் சேர்த்திய தலம். முசுகுந்தச் சக்ரவர்த்தி அவனுடைய முசு முகத்தின் காரணமாக தேவலோகத்து நாட்டியப் பெண்களால் அவமானம் உற, அழகிய முகம் இத்தலத்தில் பெற்றுச் சுகமுடன் வாழ்வித்த திந்தத் தலம். கமுகு போன்ற அழகிய கழுத்தையுடையலாகிய, பிருகு முனிவரின் மகளின் கையைக் கெட்ட எண்ணத்தினுடன் கைப்பற்றியதனால் முனிவனின் சாபம் வருத்த அதனினின்றும் இந்திரன் உய்ந்தது இத்தலம். வேட்டைக்குச் சென்ற ஒரு ஓடையில் பன்றியொன்று நீர் குடித்தலைக் கண்டு அம்பெய்து கொன்றான். வேதப் பிராமணன் ஒருவனே அப்பன்றியுருவில் வந்தவன். பார்ப்பனனைக் கொன்ற பழி உருவெடுத்து அவனை வருத்தியது. அவன் பேரூரை அடைந்து வழிபட் டு அவன் அறியாதெய்திய பழியை நீக்கி அருள் நல்கும் கடவுளது இத்தலம். நள்ளிரவில் வன்றொண்டருக்காகப் பரவைபால் தூது சென்ற பெருமான், ஆண்ட தொண்டருக்குத் தம் தேவியுடன் நெல்வயலில் முன்பு பள்ளனாய்ப் போய் அருளுதலை நன்கு உணர்ந்த தில்லைவாழ் அந்தணர்கள் போந்து அழகிய சிற்றம்பலம் அமைத்துப் பூசை இயற்றியது இத்தலம். காசித்தலத்தில் முனிவர்களின் வினாவுக்கு அவர்கள் நம்புவதற்காக, விசுவநாதர் முன்னிலையில் விஷ்ணுவே பரம் என்று கையை மேலே வியாச முனிவர் உயர்த்திக் கூறினார். மேலே உயர்த்திய கையோடு நாவும் தம்பிக்கத் தம்பம்போல் நின்றார். பொய்யுரைத்த அந்தப் பாவத்தைப் போக்கியது இந்தத்தலம். விசுவாமித்திர முனிவர் ஒரு வேள்வி செய்து திரிசங்கு எனும் மன்னனை இந்திரன் சபையில் இருத்தினன். இந்திரன் திரிசங்குவைக் கீழே தள்ளினன். திரிசங்கு விண்ணிலும் அல்லாமல் மண்ணிலும் அல்லாமல் அந்தரத்திலே தொங்கினான். விசுவாமித்திரர் தவம் செய்து திரிசங்குக் கென ஒரூலகம் படைக்கக் கற்றது இத்தலம். இத்தலத்தைப் போற்றிப் பேசிடுவோர் எல்லாம் நற்கதியடைவதைக் கண்டுள்ளோம்; நல்ல புண்ணியம் உடையவருக்கே இத்தலத்தின்மீது பத்தி வரும்.

    491- 495
    – பொல்லாக்
    கிராதனாய் வாழங்கிர னிறந்துங் கீழாய்
    வராதுகதி மேலேற வைத்ததலம் – பராபரையாள் 492
    நற்றவத்தைச் செய்துபட்டி நாதரிடப் பாலமரப்
    பெற்றுமகிழ் அந்தரங்கம் பெற்றதலம் – கற்றவர்கள் 493
    தாங்குசிவ சின்னந் தவத்தோர் சரிதமெலாந்
    தீங்ககல எங்கோன் தெருட்டுதலம் – ஆங்குவிளை 494
    நீற்றா லொருத்தியின்பேய் நீக்கி யந்தப்பேயினுக்கு
    மாற்றாலே முத்தி யளித்ததலம்"
- அங்கிரன் என்பவன் வழிப்பறி செய்யும் ஒரு வேடன். ஓர் நாள் ஓர்ரந்தணன் பத்தினியுடன் வர அவ்வேதியனைக் கொன்று அவனுடைய பத்தினியைக் கைப்பற்றி இன்பம் நுகர்ந்தான். பின்பு வேட்டையாடவிரும்பிக்காட்டினைலலைந்தான். பசியும் தாகமும் உற்றுகாஞ்சிமாநதியைக் கண்டு அந்நீரைப் பருகி மூழ்கி எழுந்தான். ஒருபாம்பு தீண்டி மாண்டான்.இயமதூதர்கள் அவனை எமலோகத்திற்குக் கொண்டு செல்லும் வழியில் சிவகணங்கள் மறித்து அங்கிரனை சிவலோகத்துக்கு அழித்துச் சென்றனர். அங்கிரன் சிறிதும் புண்ணியம் புரியாத கொடும் பாதகனே யாயிடினும்பேரூரை அடுத்த தென்கயிலையாகிய வெள்ளியங்கிரியைத் தரிசித்தமையாலும், காஞ்சி நதி நீரைப் பருகு மூழ்கினமையாலும் அதன் கரையில் உயிர் நீத்தமையாலும்சிவகதியினைப் பெற்றனன். இவ்வாறு கொடிய அங்கிரனும் நரகத்தைச் சேராது மேலாங் கதியளித்தது இத்தலம்.
பராபரையாகிய கௌரி நல்ல தவம் செய்து பரனின் இடப்பாகத்தமரும் பேறு அளித்தது இந்தத் தலம்.
மெய்ஞ்ஞானம் கற்றவர்கள் அணிகின்ற சிவசின்னங்களை தரித்த தவத்தினரின் வரலாறுகளையெல்லாம் எங்கோனாகிய சிவன் கூறி ஆன்மாக்களைத் தெருட்டுதலம், பேரூர்.
- கொங்கண தேசத்தைச் சார்ந்த ஓரந்தணன் மகாராட்ட்ர நாட்டையாளும் அரசனின் அவையை அடைந்து தன்னுடைய கல்விப்புலமையைக் காட்டித் தானமாகப் பெருஞ்செல்வம் சேர்த்தான். தானம் பெற்ற பொருளை அறவழியில் செலவழித்துப் புண்ணியம் தேடத் தென்னாடு போந்தான். பூர்வ புண்ணியம் இல்லாமையாலே பாதிவழியில் இறந்து போனான்.அவன் மனைவியும் கையில் இருந்த பொருள்களையெல்லாம் திரட்டி அவர்கள் திரட்டியபொருளை அவர்கள் தங்கியிருந்த மரத்தின் பொந்தில் பதுக்கிவைத்து விட்டு இறந்து போனாள். தவத் தொடர்பு இருந்தும் புண்ணியம் கைகூடப்பெறாது அப்பொந்தின் பொருளை அவ்வந்தணன் பிரம்ம ராச்சசுவாகக் காத்திருந்தனன். ஒருநாள் அழகு கல்வி கேள்விகளில் சிறந்த அரசகுமாரி ஒருத்தி அம்மர நீழலில் தங்கவே,அவளை அப்பிரம்ம ராட்சசு பற்றிக் கொண்டான். அந்த அரசன் மகலையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு திருப்பேரூர் வந்து பெருமானை வழிபட்டுத் திருநீற்று மேட்டின் விபூதியை பிரமதீர்த்த நீரில் குழைத்து மகளின் மேனிமேற் பூசினான். பேய் நீங்கிற்று. இவ்வாறு இங்கு விளையும் திருநீற்றால் அரசகன்னியினைப் பிடித்திருந்த பேயை நீக்கி அந்தப் பேயினுக்கும் முத்தியளித்தது இந்தத் தலம்.

    495-497
    "-– சாற்றுமதன்
    பேர்பலவாம் பேரூர் பிறவாநெறி வளருஞ்
    சீர்பலசேர் மேலைச் சிதம்பரமிப் –பார்பரவும் 496
    ஆதிபுரம் தென்கயிலை யாவினுயர் தேனுபுரம்
    போதிவனம் ஞானபுரம் போகபுரம் – ஆதியவாம் 497
- இத்தலத்தின் பெயர்கள் பலவாம். பேரூர், பிறவாநெறி,மேலைச்சிதம்பரம், ஆதிபுரர், தென்கயிலை,தேனுபுரம், போதிவனம், ஞனபுரம், போகபுரம் முதலியனவாம்.

    498- 499
    "-தோய்ந்தோர்கள் பாவஞ் சுடர்முன் இருளென்னத்
    தேய்ந்தோடத் தீர்த்தளிக்கும் தீர்த்தங்கள் – ஆய்ந்தக்கால் 498
    காஞ்சிநதி யாதி கணிப்பிலவாம் ஒவ்வொன்றும்
    வாஞ்சை யறிந்தே யுதவ வல்லனவாம்"
- மூழ்கியவர்களின் பாவங்கள் சூரியனின் முன் ப்ருள் எனும்படியாகத் தேய்ந்து ஓடும்படியாகத் தீர்த்து அளிக்கும் தீர்த்தங்கள் காஞ்சிநதி முதலிய பலவுண்டு. அவை ஒவ்வொன்றும் மூழ்கியோரின் விருப்பத்தை அறிந்து தீர்க்க வல்லனவாம்.

    499 -500 "-– பூஞ்சினைசேர்
    திந்திருணி யும்பனையுஞ் சென்மமிலை யிங்கடைந்தோர்க்
    கந்தமிலை யென்பதனுக் கத்தாக்ஷி" –
- பூக்கள் மிகுந்த புளிய மரமும் பனையும் இத்தலத்தை அடைந்தோருக்கு இனிச் சனனமில்லை என்பதற்கு அத்தாட்சியாகும்.

    500-501 "-– இந்தநகர்
    ஆவின்மயம் கிருமியாதி யடையா தென்னிற்
    பாவ நிரயத்தின் பயமுண்டோ "– பா
- இந்நகரில் சாணத்தில் புழு உற்பத்தியாவதில்லை என்றால் இந்நகரை அடைந்தவருக்குப் பாவ நரகமுண்டோ?

    501-502 "-– பாவமெலாஞ்
    சேர்த்திவி ழுங்கவொரு தீபகம்போல் வந்தபட்டி
    மூர்த்தி விசேட மொழிவானேன்"
- தன்னை அடைந்தவரின் பாவங்களை யெல்லாம் சேர்த்து விழுங்கும் விளக்கு (தீபகம்) போல இருக்கும் பட்டிப் பெருமானின் மூர்த்தி விசேடத்தைக் கூற வேண்டுவதில்லை.

    502 -504 _" – மூர்த்திதனை
    வந்தித்தோர் வேண்டும் வரம்பெறுவர் சிந்தையுள்ளே
    சிந்தித்தோர் பாவமெல்லாந் தீய்த்திடுவர் - - சந்தித்தே 503
    தோத்திரித்தோர் எய்தாச் சுகமுண்டோ பாவங்கள்
    மாத்திரமோ சன்மவிடாய் மாறுமே –"
- பட்டிப்பெருமானின் மூர்த்திதனை வழிபட்டோர் நல்ல வரம் பெறுவர்; உள்ளத்தில் தியானித்தவர் பாவமெல்லாவற்றையும் தீய்த்திடுவர்; தோத்திரித்துப் பாடுவோர் அடையாத சுகமில்லை, எல்லாச்சுகத்தையும் எய்துவர். மூர்த்தியை வழிபட்டாரின் பாவங்கள் மட்டுமா பிறவி வெப்பமும் மாறுமே.

    504-505 -"– கோத்திரத்தில்
    எள்ளால் தருப்பணஞ்செய் திட்டோர்பெறும் பேற்றை
    வெள்ளெலும் புங்கல்லாய் விளம்புங்காண்"
- தாம்பிறந்தகோத்திரஞ் சொல்லி எள்ளால் தருப்பணம் அடையும் பேற்றினை வெள்ளெலும்பும் கல்லாக மாறுவது எடுத்தியம்பும்.

    505 -506 "-– உள்ளவெலாம்
    என்னாற் சொலமுடியாது எண்ணிறந்த நாவுள்ளோன்
    சொன்னாலும் பன்னாட் தொலையுமால் "
– இத்தலத்திற்கு உள்ள சிறப்புக்களையும் பெருமைகளையும்என்னாற் சொல்லிமுடியாது. கணக்கிறந்த நாவுள்ளோனாகிய ஆதிசேடன் சொன்னாலும் எண்ணிறந்த பலநாட்கள் செல்லும்.

    506 -507 "-– உன்னிடத்து
    நற்காலம் வந்த நலத்தா லிஃதுணர்ந்தாய்
    துற்கால மெல்லாந் தொலைந்ததுகாண்" –
- நல்ல காலம் உன்னிடத்து இப்பொழுதுவந்துள்ளது. உன்னைப் பற்றியிருந்த கெட்ட காலம் எல்லாம் தொலைந்தது.

    507 -508 "-– முற்காணும்
    பட்டிப் பெருமானைப் பச்சைவல்லித் தாயுடன்கண்டு
    இட்டசித்தி யெல்லாம்நீ எய்துவாய் "
– உன்முன்னிலையில் உள்ள பட்டிப்பெருமானை பச்சைவல்லித் தாயுடன் தரிசித்து வணங்கினால் விரும்பியதெல்லாம் நீ எய்துவாய்.

    508 – 510
    "-– துட்டசங்கஞ்
    சேர்ந்தொழுகு பாவமுன் சென்மாந்தி ரப்பவமுந்
    தீர்ந்தகல நெஞ்சந் தெளிந்துகளி – கூர்ந்தே 509
    அருமையாய் யாரும் அடைதற்கரிய
பெருமையெலாம் நல்கப் பெறுவாய்"
- தீயோர் கூட்டத்தில் சேர்ந்தொழுகிய பாவமும் முன் சென்மாந்திரப் பாவமும் முற்றிலும் தீர்ந்தகல நெஞ்சம் உறுதிப் பொருள் இன்னதென்று தெளிந்து மகிழ்ச்சியடையும்யாரும் அடைதற்கரிய பெருமை யெல்லாம் அப்பெருமானால் அடையப் பெறுகுவாய்.

    510- 513
    "-– ஒருமையாய் 510
    இவ்வண்ணம் பன்னாள்நீ எம்மான்பணி புரிந்தால்
    அவ்வண்ணல் கண்ணுற்று அருளியே – செவ்வண்ணக்
    கோலமொளித்தோர் குருவடிவாய் வந்துதவ
    சீலமுடன் தீக்கையெலாஞ் செய்தருளி – மேலாகுந்
    தன்னிலையும் நின்னிலையும் சாரும் உயிரின் நிலையும்
    முன்னிலையாய்க் காட்டி முரணறுப்பான்"
ஒன்றிய சிந்தயோடு பலநாட்கள் இவ்வாறு நம்முடிய முதல்சனாகிய சிவனுக்குத் தொண்டு செய்தால் அத்தலைவன் உன்னுடைய தொழிலை அறிந்து அருளுடன் , தன்னுடைய எரிபோன்ற திருமேனியை மறைத்து ஒரு குருவடிவாய் வந்து ஆண்டுகொண்டி தீக்கை அளித்துத் தன்னுடைய வியாபக நிலையையும் அதலுள் நீ அடங்கியிருக்கும் உயிரின் நிலையும் அறியும்படியாகக் காட்டி உணர்த்தி உன்னுடைய மலத்தினை நீக்கி அருளுவான்."
513 -514
"- - இந்நிலையில் 513
ஐயமொன்று மில்லையென்று எனையனருள் செய்துதிருக்
கையதனாலே நுதலிற் காப்பணிந்தான்"
- இறைவன் அருளும் இந்த நிலையில் யாதொரு ஐயமும் இல்லை என்று உறுதி அளித்துத் தன் னுடைய திருக்கையால் என் நெற்றியில் திருநீற்றுக் காப்பும் இட்டான்.

    514 – 516
    -"– மெய்யை 514
    விரிந்த பொருளால் விளம்பிய என்னையன்
    பிரிந்தருளினான் என்னைப் பின்னர்த் – தெரிந்துணரா 515
    தங்கையுறும் பொன்னை அவமதித்து மண்ணினைத்தஞ்
    செங்கையுறக் கொள்ளும் சிறாரென்னத் – தங்கினேன்" 516
- மெய்ப்பொருளை விரித்துரத்தருளிய என் ஆசிரியப்பிரான் என்னைவிட்டுப் பின் நீங்கினான். நான் அப்பிரான் கூறிய பொருளின் பெருமையை அறிய முடியாதவனாகி, கையில் உள்ள பொன்னின் மதிப்பை அறியாமல் வீசிவிட்டு மண்ணை மதித்து அள்ளும் சிறுவர்கள் போலத் தங்கினேன்.

    517 – 520
    "கல்லெறியப் பாசி கலைந்து நன்னீர்தானும் நல்லோர்
    சொல்லுணரில் ஞானம்வந்து தோன்றுமெனச் – சொல்லுகின்ற 517
    மூதுரையி னாலென்றன் மூடஞ் சிறிதகன்றப்
    போதுசிறு ஞானமென்றன் புந்திவர- ஓதும் 518
    புனிதமொழி யுரைத்த போதகனை யானோர்
    மனிதனென மதித்த மாண்பால் - இனிதாக 519
    மெஞ்ஞானம் முற்றும் விளங்கவிலை உள்ளத்தில்
    அஞ்ஞான முற்றும் அகலவிலை" 520
- பாசிபடு குட்டத்தில் கல்லைவிட்டு எறிந்தால் , கல் விழுந்த இடத்தில் பாசி அகன்று நீர் தென்படுவது போல பெரியோர்களின் சொல் அறிவில் பட்டபொழுது ஞானம் வந்து தோன்றும் எனும் மூதுரைக்கு இணங்க என்றன் மூடத்தன்மை ஐயனின் வார்த்தைகளால் சிறிது நீங்கியது. அவன் உரைத்த ஞானச் செய்தியெல்லாம், யான் அவனைச் சிவம் என நினையாமல் என்னைப் போன்ற மனிதனாகக் கருதியதால் என்னிடம் ம்ய்ஞானம் முற்றும் விளங்கவில்லை; என்னைப் பற்றியிருந்த அஞ்ஞானம் முற்றும் அகலவில்லை.

    520 – 525
    -"– அஞ்ஞான்று 520
    தேசிகன்தன் நோக்கஞ் சிறிதடைந்த வாற்றாலும்
    பேசியவனோடு உறைந்த பெற்றியினும் – நேசமது 521
    பேரூரிற் பற்றிப் பிடர்பிடித் துந்தி யென்னைத்
    தேரூர் தெருவிற் செலுத்தவே - நேரேபோய்க் 522
    கங்கா சலத்துயர்ந்த காஞ்சிப் புனலாடிப்
    பொங்குபல தீத்தம் புகுந்தாடித் – தங்குதிரு 523
    நீற்றுத் திடரில்விளை நீ றாடித் தேவர்குழாம்
    போற்று மருகிற் பொடியாடித் – தேற்றுபுகழ் 524
    கொண்டாடி மேருவன்ன கோபுரத்தைக் கண்ணாரக்
    கண்டாடி யுள்ளக் கசிவாடித் –"
- அப்பொழுது குருதேசிகனின் திருக்கண் நோக்கம் சிறிதடந்தமையாலும் அப்பெருமகனோடு சிறிது நேரம் உரையாடி உடன் உறந்தமையாலும் ந்த அன்புப் பாசம் என்னைப் பேரூரில் பிடர் பிடித்து உந்தித் தேரோடும் தெருவிற் செலுத்தியது. அவ்வாறு செலுத்தவே நான் நேரே போய்க் கங்கையினும் உயர்ந்த காஞ்சிமநதிப் புனலாடி மற்றும் உள்ள தீர்த்தங்களில் முழுகி, திருநீற்று மேட்டில் திருநீற்றில் திளைத்தாடி, தேவர்கள் குழாம் குழாமாக நடமாடும் தெருவின் புழுதியில் தோய்ந்து, மேருமலை போன்று உயர்ந்து தோன்றும் திருக்கோபுரத்தைக் கண்ணாரத் தரிசித்தேன். புகழ்ந்து கொண்டாடினேன். உள்ளம் கசிந்தேன்.

    525 – 528 "- – தொண்டர்தொழும் 525
    பட்டிக் களிற்றின் பருத்தவிமானத் தடைந்து
    கிட்டிக்கன் மப்படலங் கீறவே – குட்டிக்கொண் 526
    டோரிரண்டு கையா லுபயசெவியும் பிடித்துப்
    பாரிற்படிதோப் பணம்போட்டு –நேராய் 527
    வலம்வந்து போற்றி வரமிரந்து நீங்கிப்
    புலம்வந்து கோவிலினுட் போகி"
- அடியார்கள் தொழுது வணங்கும் பட்டிவிநாயகனின் பெரிய விமானத்தையுடைய தளியினை அடைந்தேன். என்பூர்வ வினையான படலம் கிழியவே சிரசில் குட்டிக்கொண்டு இரண்டு கரங்களாலும் இருசெவியினையும் மாறிப் பற்றிக்கொண்டு நிலத்தில் படியுமாறு தோப்புக்கரணம் இட்டேன். வலம் வந்தேன். பட்டிப் பெருமானை வணங்கும் வரம் இரந்து கேட்டேன். பின் பட்டிவிநாயகனின் திருக்கோயிலை விட்டு நீங்கி வெளி வந்து பட்டிநாயகனின் கோயிலின் உட் போனேன்.

    528 -530 "-– நலம்வந்த 528
    கோபுரத்தி லுட்புகுந்து கும்பிட்டுத் தெண்டெனவீழ்ந்
    தேபுரளு மங்கப்ப்ர தெக்கணமாய்த் – தீபுரத்தில் 529
    இட்டான்திருச்சந் நிதிகண்டு தாழ்ந்தெழுந் தங்
    கட்டாங்க பஞ்சாங்கத் தாற்பணிந்து –"
- பெருமை மிக்க கோபுரத்தினுட் புகுந்தேன்.கும்பிட்டேன். தெண்டனிட்டேன். வீழ்ந்து அங்கப் பிரதட்சிணம் செய்து வலம் வந்தேன்.முப்புரம் தீயிட்டான் சந்நிதி கண்டு அட்டாங் பஞ்சாங்கமாகப் பணிந்தேன்.

    530- 532 "-வெட்டுண்ட
    நந்திப்பெருமா னகைமணிப் பொற்றாள் வணங்கி
    வந்தித்துட் போக வரமேற்றுச் – சந்தித் 531
    திரண்டாம் பிரகாரத் தெய்திக் கல்லாற்கீழ்ச்
    சரண்தொழுவார் சன்மார்க்கஞ் சாரக் – கரங்காட்டி 532
    மோன வழிதேற்றுபு சின்முத்திரையோ டாங்கமர்ந்த
    ஞானகுரு தேசிகன்றாள் நான்பணிந்தேன்"
- பள்ளனாக வந்த பெருமான் மண்வெட்டியால் வெட்டுண்ட நந்திப் பெருமானின் பொற்றாளினை வணங்கி வந்தித்து, சந்நிதியுட் போக வரம் பெற்று , இரண்டாம்பிரகாரத்தை அடைந்தேன். அங்குக் கல்லால் நிழற்கீழ், தன்னடி பணிவாருக்கு சன்மாற்க்கமாம் திருநெறி சார மவுனவழியைத் தெளிவிக்கும்சின்முத்திரையைக் கியிற் காட்டி அங்கி வீற்றிருக்கும் ஞானகுரு தேசிகனாம் தென்முகக்கடவுளைத் தரிசித்துத் தாளிணை வணங்கினேன்.

    533- 535 -" வானங் 533
    குடியேற்றித் தேவர்கள்தங் கோமான்தலைக்கு
    முடியேற்றி மூவுலகுஞ் சேவற் –கொடியேற்றிப் 534
    பன்னிரண்டு கண்கள் படைத்தருளுஞ் செவ்வேளை
    என்னிரண்டு கண்களால் யான்கண்டேன்"
- தேவர்களை விண்ணுலகத்தில் குடியேற்றி, இந்திரனுக்குத் தேவலோகத்தில்தலைவனாக முடிசூட்டி, மண்ணுலம் விண்ணுலகம் கீழுலகம் மூன்றிலும்சேவற்கொடியேற்றித் திக்குவிசயம்செய்த பன்னிருகண்ணுடைய செவ்வேட்பரமனை என் இரு கண்கள் குளிர யான் கண்டேன்."

    535 – 538 -" – முன்னர்
    வணங்கிப் புறத்தொட்டி வார்புனலை யள்ளி
    இணங்கிப் புரோகித்துள் ளேகி –மணங்கமழும் 536
    சிங்கதீர்த்தத்தைச் சிரத்தில் எடுத்துத் தெளித்துள்
    ளங்கையினாற் மூன்றுதர மாசமித்துப் –பொங்கிமேற் 537
    போந்திரண்டு துவாரம் புரப்போர் பதம்போற்றி
    ஏந்தல்திருச் சந்நிதிவந் தெய்தினேன்" –

    538- 543 – "தேய்ந்து
    வினையெனை விட்டேக விடைகேட் காநிற்ப
    நனையவிரு கண்ணீர் நனைப்பத் –தினையளவும் 539
    இல்லாத அன்பு பனையென்ன நனிபெருகச்
    சொல்லாத வானந்தந் தோன்றியெழப் – பொல்லாப் 540
    பொருட்செறிவு சேர்ந்தடர்ந்த புந்தியி லன்றேதோ
    தெருட்சி மருட்சி திகழ – அருட்செறிவொன் 541
    றில்லையென்று சொல்லும் எனக்கும் அஃதுண்டென்ன
    வல்லையிலே பிரத்யட்ச மாய்விளங்க – நல்லவெலாம் 542
    பெற்றேன்போற் பட்டிப் பெருமானையான் காணப்
    பெற்றேன்என் கண்படைத்த பேறுற்றேன்"
- என் தீவினை தேய்ந்து என்னை விட்டு நீங்க விடை கெட்க, என்னிருகண்களிலும் நீர் நிறைந்து மேனியை நனைப்ப, தினை யளவும் இல்லாதிருந்த அன்பு இப்பொழுது பனையளவு பெருக, இன்னது என்று சொல்ல முடியாத இன்பம் தோன்றி மேன்மேல் பெருகி எழ, கெட்ட சிந்தனைகள் சேர்ந்தமையால் இறுகிப்போன என்புத்தியில் அன்று மனக் கலக்கம் தோன்ற, சிவமும் சிவனருளுமில்லை என்று என்று நாத்திகம் பேசும் எனக்கும் அச்சிவனருள் உண்டென்று விரைவில் கண்கூடாக விளங்க நல்லனவெல்லாம் பெற்றேன். பட்டிப்பெஉமானையான் காணப் பெற்றேன். கண்படைத்த பேறு பெற்றேன்.

    543-544 "-– சற்றேனுங் 543
    கூசாதுனை யிகழ்ந்த குற்றம் பொறுத்தியென்று
    வாசா கயிங்கரியம் ஆற்றினேன்" –
- கொஞ்சங் கூட வெட்கப்படாமல் இம்மை இகழ்ந்த என்னுடைய குற்றத்தைப் பொறுத்தருள்க என்று வாய் வார்த்தையால் தொண்டு செய்தேன்.

    544 -546 " பூசாரி
    சாற்றுதிரு வெண்ணீறு தந்தாரிதுபோல
    வேற்று நிமித்த மிலையெனவே – யேற்றுடலில்
    அங்கந் திமிர்ந்தேன் அகங்கொண்டேன் உள்மாசுந்
    தங்கு புறமாசுந் தள்ளினேன்"
- அருச்சகர் வெண்திரு நீற்றினைத் தந்தார். அவர்கொடுத்த திருநீறு போல வேறு நல்ல சகுனம் இல்லை என்று அதனைப்பெருவாழ்வு வந்ததென ஏற்று உடலில் விளங்க அள்ளிப் பூசினேன். உள்ளும் விழுங்கினேன். அதனால் உடல் அழுக்கும் உள்ளத்தின் அழுக்கும் கழுவப் பெற்றேன்.

    546 547- ‘-– அங்கப்
    பெருமான் றனக்கெனது பின்காட்டா தேகி
    ஒருமா நடனசபை யுற்றேன்’
- பின் அங்கிருந்து, பெருமானுக்குமுதுகினைக் காட்டாது பின்னே நகர்ந்து சென்று நிகரற்ற பெரிய கனகசபையை அடைந்தேன்.

    547 -551 "-– திருமான்
    அழகாத்திரிநா யகன்பொன்னாற் செய்தங்
    கழகார் திருக்கயிலை யாக – அழகுசெய்து 548
    கண்கொண்டு பார்த்தற் கடங்காத ஓவியமா
    எண்கொண்ட தேவர்க் கிருப்பிடமாய் – விண்கொண்டு 549
    நின்றுநிலாவு நிலைபார்த்துத் தாயினைப்போய்க்
    கன்றுதொடர்ந்த கணக்கேபோற் – சென்றழலிற் 550
    பட்ட மெழுகென்னப் பதைத்துருகிக் கோமுனிவர்
    பட்டிமுனிவர் பதம்போற்றி –
- அரசன் அழகாத்திரி நாயக்கன் பொன்னார் செய்த கூத்தப் பெருமானையுமவன் இருக்கும் சபையைத் திருக்கயிலையாகவும் அழகுறச் செய்து, தேவர்களுக்கு இருப்பிடமாய் இருகண்களுக்குள் அடங்காத ஒப்பற்ற அழகிய சிற்பங்கள் கொண்டு விண்ணளவு உயர்ந்து நிற்கும் மண்டபத்தையும் கண்டேன். தாயினைக் கண்ட கன்றுபோல் தழலிற்பட்ட மெழுகுபோல் உள்ளம் பதைத்துருகிக் கோமுனி பட்டிமுனிவர் பதம் போற்றினேன்

    551 -552 "-– நெட்டிலைவேற் 551
    கண்ணுடைய வெங்கள்சிவ காமியுமை கண்களிப்ப
    விண்ணுடையோர் கண்கள் விருந்தயர –
- ஆல இலைபோன்ற அகலமும் கூர்மையும் உடைய வேல் நிகர் கண்களை உடைய சிவகாமியம்மையின் கண்கள் களிப்பவும் விண்ணோர்களின் கண்கள் விருந்துண்ணவும்;

    552- 554 "-– எண்ணுடைய 552
    தோற்றம் துடியதனில் தோன்றுந் திதியமைப்பிற்
    சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமாம் 553
    ஊன்றுமலர்ப் பதத்தே உற்ற திரோதமுத்தி
    நான்ற மலர்ப்பதத்தே நாடுகவென் –றான்றோர் சொல் 554
-- தோற்றம் துடியதனில் தோன்றுந் திதியமைப்பிற்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமாம்
ஊன்றுமலர்ப் பதத்தே உற்ற திரோதமுத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு"
என்று திருவதிகை மனவாசகங் கடந்தார் ‘உண்மை விளக்கம்’ (35 என்னும் சாத்திர நூலில் கூறியருளியபடி’ ‘எண்ணுடைய தோற்றம்’என்றார், தோற்றுவித்தவனாகிய முதல்வன் ஒருவன் உளன் என்றும் அவன் தோறுவித்தலுக்குக் காரணம் உண்டு எனவும் அது அவனுடைய அருளே எனவும் ஐந்தொழிலும் அவனுடையதே, ஐந்தும் அருளே எனக்கருதல் அளவை (infereance) யினால் எண்ணித் துணிதலின் எண்ணுடைய தோற்றம் என்றார்.
(எண்ணு-தல் eṇṇu-, 5 v. tr. [T. ennu, K. M. Tu. eṇṇu.] 1. To think; நினைத்தல். (பிங்.) 2. To consider, deliberate about, take counsel, ponder on; ஆலோசித்தல். எண்ணித் துணிக கருமம் (குறள், 467). 3. To resolve upon, determine; தீர்மானித்தல். (பிங்.) 4. To esteem, respect, honour; மதித்தல். வெயிலோன்மகற்கு முட னெண்ணத்தகுந் திறலினான் (பாரத. பதினெட். 4). 5. To guess, conjecture, surmise; உத்தேசித்தல். 6. To meditate upon; தியானித்தல். எண்ணி யஞ் செழுத்து மாறி (சிவப்பிர. உண்மை, 47). 7. To count, reckon, compute; கணக்கிடுதல். அன்ன கேள்வ ரனேகரை யெண்ணினாள் (உபதேசகா. அயமுகி. 59). 8. To set a price upon; to value; மதிப்பிடு தல். எண்ணற்கரிய முடிவேந்தர் (பாரத. இராச. 32). 9. To enjoy; அனுபவித்தல். எண்ணான் சிவனசத்தை (சி. போ. 5, 2, 1).

    554- 557 "-–றான்றோர் சொல் 554
    ஐந்தொழிற்குந் தானே அதிபனெனக் காட்டுதற்கஞ்
    சுந்தரமார் திவ்ய சொரூபமுடன் – வந்தனையோ 555
    இன்றென்ற னைப்பார்த் திளமுறுவல் காட்டியைந்தும்
    வென்றுளோர் சிந்தை விமலமென – நின்றிலகும் 556
    அம்பலத்தே யாடுகின்ற ஆனந்தச் செந்தேனைச்
    செம்பதும பாதங்கள் சேவித்தேன்"
- எனத் திருவதிகை மனவாசகங்கடந்தார் சொற்படி படைத்தல்முதலாய் ஐந்தொழிற்கும் தானெ முதல்வன், கருத்தா எனக் காட்டுவதற்குத் தன்னுடைய அழகிய தடத்த தெய்வீகவடிவத்துடன் "வந்தனையோ இன்று" என்று என உசாவுகின்ற வகையில் எனைப் பார்த்து இளமுறுவல் காட்டி , ஐம்புலன்களையும் வென்றவர்களின் தூய்மையான சிந்தை என விளங்குகின்ற திருவம்பலத்தே ஆடுகின்ற தேன்சொரியும் செந்தாமரைப் பாதங்களைச் சேவித்தேன்.

    557 -558 "-– கம்பிதங்கொண் 557
    டச்சந்நிதியை அகலா தகன்று சென்று
    பச்சைக் கொடிபாற் படர்ந்துற்றேன்"
- அச்சந்நிதிய விட்டு நீங்க மனமில்லாமல் நீங்கி அகன்று பச்சைப்பசுங்கொடியாம் பச்சைநாயகிபாற் சென்ற்டைந்தேன்.

    558-559 "-– நச்சியே. 558
    துற்கை யொருபாலும் துளவோ னொருபாலும்
    நிற்கும் நிலைகண்டு நேசித்தேன்" –
- விருப்பத்துடன் துர்க்கை ஒருபக்கத்திலும் திருமால் ஒரு பக்கத்திலும் இருத்தலைக் கண்டு அன்புற்றேன்.

    559- 561 "-– சொற்கத் 559
    திருப்போர் மனித ரெனவடைந்து போற்றி
    விருப்போடு கூட்டமாய் மேவும் – நெருக்கத்துட் 560
    புக்கேன் விரைந்துகரும் பொன்காந்தஞ் சேருதல்போல்
    மிக்கேன் நனிவிரைந்துள் மேவினேன்"
- இங்கு இருக்கும் அடியவர்களாகிய மனிதர்கள் சொர்க்கத்தில் இருப்போரேயாவர் எனப் போற்றி அவ்வடியவர்கள் ப்த்தியுடன் கூடிய கூட்டத்தினுள் காந்தத்தின் முன் இரும்புத் துண்டம்போல விரைந்து சென்று பச்சைத்தாயின் சந்நிதியுள் அடைந்தேன்.
- சொர்க்கம் எதுகை நோக்கிச் சொற்கம் எனவாயிற்று.

    561- 569 "-– அக்காலத்
    தெண்ணில் புவனங்கள் எல்லாங் கடைத்தேறக்
    கண்ணிற் பொழியருணோக் கத்தழகும் – எண்ணில் 562
    வளமை திகழும் வதனத் தழகும்
    களமாரும் மங்கலநாண் காப்புந் – தளதளவென் 563
    றெங்கும் ப்ரகாசித் திருளகற்றி மேனியெலாந்
    தங்கியொளி வீசுபணிச் சார்பழகும் – செங்கைச்சுட்டிச் 564
    சம்பந்தப் பிள்ளை தமிழ்பாடப் பால்சுரந்த
    கும்பத் துணைநேர் குயத்தழகும் – நம்பினருக் 565
    கொல்லைப் புறச்சமயத் துள்ளுதிக்கும் இன்பமென
    இல்லையுண்டென்னும் இடையழகும் – மெல்லப் 566
    புலம்பலம்பல் போலப் புரிநூ புரத்தின்
    சிலபலம்பு சேவடியின் சீரழகும் – நலம்பலவும் 567
    கண்ணாரக் கண்டு களிகூர் மரகதமாம்
    பெண்ணா ரமுதப் பெரும்பிழம்பை – அண்ணா 568
    அயர்ந்தே ஒருசற்ற வசமுற்று மீட்டுப்
    பெயர்ந்தே மதிகூடப் பெற்றேன்"
- அதுபோது, எண்ணில் அடங்காத புவனங்களெல்லாம் கடைத்தேறும் பொருட்டுக் கண்ணில் பொழியும் அருள் நோக்கின் அழகும், நினைத்தும் பார்க்க முடியாத வதனத்தின் இளமை அழகும் கழுத்தில் மங்கல நாண் காப்பும் , தளதள என்று எங்கும் பிரகாசித்து இருள் அகற்றித் திருமேனி முழுவதும் ஒளிவீசும் அனிகலண்களின் அழகும், பெம்மான் இவனன்றே’ என்று செங்கையால் சுட்டிக் காட்டிய சம்பந்தப் பிள்ளை தமிழ்ப் பாடல்கள் பாட ஞானப்பால் சுரந்த கும்பம்போன்ற நகிலின் அழகும் நம்பினவருக்கு உண்டு இன்பம் எனவும் புறச்சமயத்தினருக்கு இன்பம் இல்லை எனவும் பேசப்படுமாறு உண்டோ இல்லையோ எனும் இடை அழகும், மெல்லப்புலம்பல் போலச் புரிநூபுரம் சிலம்பும்சேவடியின் பெருமையுடையஅழகும், இத்தகைய அழகு அனைத்தையும் கண்ணாரக் கண்டு களிகூர்ந்து , மரகதம் எனப் பெயரிய பெண்ணாகிய அரிய அமுதத்தின் திருவுருவத்தை, அண்மித்துச் சற்று என்னை நான் மறந்தேன்; பின் நினைவுக்கு வந்தேன். அறிந்தவாறு நாக்குக் குளிரப் போற்றித் துதித்து அங்கிருந்து பெயர இயலாமல் நின்றிட்டேன்

    – 570 – 571 "-பாக்கியத்தால்
    கைத்தலத்தில் உன்னிருக்கை கண்டேன் களிகூர்ந்து
    சித்தத்தை நின்பாற் செலுத்தினேன்’
– புண்ணியத்தால் அன்னையின் கைத்தலத்தில் நீ இருப்பதைக் கண்டேன்.. என்னுடைய மனத்தை நின்பால் செலுத்தினேன்.

    571- 573 "-– தத்தையே
    நேராயெனை நோக்கி நீயாரென்றாற் போலோர்
    சீரான வாக்குச் செவிபுகலும் – ஆராயாது 572
    என்னையோ தோற்றம்அஃ தென்றெண்ணி யாய்ந்தபசும்
    பொன்னை யொக்கும் வாக்கைப் புறக்கணித்தேன் –
- தத்தையே! என்னை நேராக நோக்கி நீ யார் என்றது போல ஒரு வாக்கு என்செவியில் புகுந்தது. அதனைப் பொருட்படுத்தாது , அது ஒரு மனத்தோற்றம் என்று எண்ணினேன். பொன் அரிய அந்த வாக்கினைப் புறக்கணித்தேன்.

    573 -574 "-பின்னரிவ்வூர்
    நேயத்தால் நீங்காமல் நீங்கிக் குணதிசைக்கட்
    கோயம்பதியில்குடிபுகுந்தேன் "–
- பின்னர் இப்பேரூரினைப் பிரிய மனமில்லாமல் நீங்கினேன். பேரூருக்குக்கிழக்கில் உள்ள கோயமுத்தூரில் குடிபுகுந்தேன்.

    574- 576"-– ஓயாமே
    அன்றுதொட்டு மார்கழியில் ஆதிரையும் மீனமதி
    யொன்றும் திருநாளாம் உத்திரத்தும் – நன்றுசெறி 575
    நாட்களிலுஞ் சென்றுசென்று நாயகனார் நாயகியார்
    தாட்களிலே நாயேன் சரண்புகுந்தேன்"
- ஒழியாமல் அன்று முதல் மார்கழித் திங்கள் திருவாதிரை நாளிலும் மீனமதி எனப்படும் பங்குனித் திங்களில் உத்திர நன்னாளிலும் வேறு பல நல்ல நாட்களிலும் திருப்பேருர் சென்று சென்று அம்மை அப்பர் தாள்களிலே அடைக்கலம் புகுந்தேன்.

    576 – 577 "-– வேட்கையினால்
    சின்னாளில் நாயைச் சிவிகைமிசை யேற்றலென
    என்னால் அறியா இயல்பளித்தான்"
- சிலநாட்களில் என்னுடைய வேட்கையைக் கண்டு ஒரு நாயைச் சிவிகையில் ஏற்றி அமர்விப்பது போல என்னால் நினைத்தும் பார்க்க இயலாத சிறப்பை அளித்தான்.
- ‘நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த" (திருவாசகம், திருக்கோத்தும்பி 5) . இழிந்த நாயை உயர்ந்த மரியாதை தரும் சிவிகையில் ஏற்றுவிப்பது போன்ற செயலைச் செய்து.(சி.சு.க )

    577- 578 -" – ஒன்னார்போல்
    மாறா யெதிர்த்தபல மாற்றலரை மாற்றிமகப்
    பேறாதி பேறும் பெறுவித்தான் – "
- பகைவர்களைப்போல எனக்கு மாறான கருத்துக்களை சொல்லி எதிர்த்தவர்களைஆற்றலும் பெறுவித்தான்.

    578- "வீறாக
    எண்ணிய எண்ணங்கள் எல்லாம் எனக்களித்தான்
    மண்ணிலுள்ளோர் என்னை மதிக்கவே – பண்ணுந் 579
    திருப்பணியும் கொண்டருளிச் செந்தமிழ்ப்பாப் பாடும்
    விருப்பருளி யாண்டுகொண்டான்"
- நான் மேன்மை அடைய், என்னுடைய நினைஹ்தர்கரிய நினைவுகள் எல்லாம் ஈடேற எனக்குக் கருணை புரிந்தான். பெரியோர் என்னை மதிக்கும்படி என்னுடைய தொண்டுகளையுமேற்றுக் கொண்டான். செந்தமிழில் அவனைப் பாடும் விருபத்தையும் எனக்கு அருள் செய்து ஆண்டுகொண்டான்.

    580 -583 -‘மேனாள் – திருக்கனைத்தும்
    நீக்கி வலியவந்து நேர்நின் றொருமனிதன்
    ஆக்கி அருளும்பழய ஆசிரியன் – வாக்கியத்துள் 581
    அண்ணல் குருவாய்த்தம் அருமைத் திருவுருவங்
    கண்ணெதிரே காட்டிக் கருணையொடு – நண்ணுமெனும் 582
    ஒன்றொழிய எல்லாம் உறப்பெற்றேன்- அவ்வொன்றும்
    என்றெய்துங் கொல்லோவென் றெண்ணினேன் –"
- முன்பொருநாள் என்னுடைய மனக்கோணல்களையெல்லாம் வலிய வ்ந்து நீக்கி, என்னையுமொரு மனிதனாக்கி, அருளிய சொற்களில், முதல்வனே குருவாய் வந்து தம் அருளுருவங்காட்டிக் கருண்யோடு ஆட்கொள்ளும் என்னு ஒன்றொழிய மற்றைவையெல்லாம் அடையப் பெற்றேன். சிவம் குருவாய் வந்து ஆட்கொள்ளும் என்பது என்று அடையப் பெறுவேனொ என்று எண்ணினேன்.
- ‘ஒருமனிதன் ஆக்கி’- ‘என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவகபோற்றி’( திருவாசகம் போற்றித் திருவகவல் வரி130 ) அடியர் கூட்டத்தில் ஒருவனாக்கி. தகுதியற்ற என்னையும் தகுதியுடைவவனாக்கி.
- ‘அண்ணல் குருவாய்’ ‘தம்முதல் குருவுமாய்’(சிவஞானபோதம் நூற்பா8)

    583- 586 – "அன்றொருநாள்
    என்கனவினூடே எழுந்தருளித் தன்கோலம்
    முன்கோலமாய் வந்து முன்னின்று – நின்சரிதம் 584
    எல்லாம் அமைய இயற்றமிழால் தூதொன்று
    சொல்லாய்நீ சொல்லுமந்தத் தூதேசென் – றெல்லாந் 585
    தருமென்றான் எம்பெருமான் சற்குருவாய் உன்முன்
    வருமென்றான் சொல்லி மறைந்தான்" –
- ஒருநாள் என் கனவினுள்ளே தன்னுடைய கோலத்தை முன் பேரூரில் காட்டிய ஆசிரியர் உருவில் என்முன் வந்து தோன்றி, உன்னுடைய வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் எல்லாம் அமைய இயற்றமிழில் தூது ஒன்று சில்வாயாக. நீ சொல்லிவிடும் அந்தத் தூதே சென்றுநீ நினைத்ததெல்லாம் தரும் என்றான். எம்பெருமானாகிய பரமேசுவரன் சற்குருவாய் உன் முன் வரும் என்று சொல்லி மறைந்தான்.

    586- 587 "-– குருவாய்
    நனவகத்து வந்தஅந்த நாளினைஇப் போலவேயென் 587
    கனவகத்துங் காட்டிக் கரந்தான் –"
- நனவிலே முன்பு வந்த நாளினைப் போலவே கனவிலும் தன் வடிவைக் காட்டி மறைந்தான்.

    587 –590 "-நினைவெய்தி
    ஏதொன்றுங் கல்லா எனைப்பார்த்துக் கற்றவர்சொல்
    தூதொன்று சொல்லென்று சொல்லியதால் – தீதொன்று 588
    தன்மையேன் சொல்லத் தரமில்லே னாயினுமென்
    மென்மையே நோக்கி மெலியாமல் – வன்மையுள்ள 589
    போதகன் சொல்லாகும் புணைதுணையாக் கொண்டுதுணிந்
    தோத ஒருவாறு ஒருப்பட்டேன் – "
- கனவு ஒழிந்து நினைவு வந்தது. இயற்றமிழில் யாதொன்றையும் கற்றறியாத என்னைப் கற்ற அறிஞர்கள் சொல்லும் தூதுப் பிரபந்தத்தை நீ சொல் என்று சொல்லியதால்,சொலக் கூடிய ஆற்றலும் அறிவும் ஆகிய தரம் இல்லாத போயிடினும் , என்னுடைய அறியாமையை நோக்கித் தயங்கமல் ,அறிவுடையோன் சொன்ன சொல்லையே பற்றுக் கோடாகக் கொண்டு ஒருவாறு துணிந்து தூது சொல்ல ஒருப்பட்டேன்.

    590 – 593 "-– யாதினையாந்
    தூதுசெல முன்னிலையாய்ச் சொல்லுவதென் றெண்ணிமனம்
    வாதுசெய வுள்ளே மதித்துணரும் – போதுதனில்
    தாயார் கரத்திடைநீ தங்கியெனைப் பார்த்தொருநாள்
    நீயாரென் றோதல் நினைவுவர – வாயார
    என்சரிதம் நின்பால் எடுத்துரைத்தல் தக்கதென்று
    முன்சரித மெல்லாம்மொ ழிந்தனன்காண்"
- யாதினை முன்னிலையாகத் தூதினைச் சொல்லுவது என்று எண்ணி மனம் கலக்கம் செய்ய , யோசிக்கும் வேளையில், நீதாயார் கரத்தில் அமர்ந்திருந்து எனைப் பார்த்து ஒருநாள் நீ யாரென்று ஓதியது நினைவுக்கு வந்தது. ஆதலால், வாயார என் சைதத்தினை நின்பல் எடுத்துரைத்தல் தகுதியாகும் என்று என் முந்திய சரிதம் எல்லாம் நின்னைடத்து மொழிந்தனன்.

    593-594 -" வன்சரிதம்
    உள்ளே னானாலும் உற்றதுரைத் தேன்அதனால்
    எள்ளேல் என்மீதில் இரங்குவாய் –
- பாவப்பட்ட வாழ்க்கையே னாயினும், உள்ளதை உள்ளபடியே உண்மையை உரைத்தேன். அதனால் என்னைத் தள்ளிவிடாமல் என்மீது கருணை கொள்வாயாக.

    594 -596 -" தள்ளுகிலா
    அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கென்று – முன்புகன்ற 595
    பொய்யா மொழியுணர்ந்த புந்தியெற் குதவி
    செய்யா தொழிதல் திறமன்றே –"
- "அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு" என்பது தெய்வப்புலவர் வாக்கு. ஒதுக்கலாகாத இப்பொய்யாமொழியை யுணர்ந்த அறிவுடைய நீஎனக்கு உதவி செய்யாதொழிதல் பண்பன்றே.

    596 -597 -"– மெய்யாயென்
    அம்மையுடன் அப்பன் அருளுஞ் சமயங்கள்
    தம்மை உணர்வாய்நீதான் அன்றோ"
- உண்மையில் அம்மையுடன் அப்பன் அன்புடன் அருளும் இனிய காலத்தினை நீதான் அறிவாய் அல்லவா?

    597 – 599 -"– அம்மையப்பர்
    மேவுமிடஞ் சேறல் விண்ணோரின் மண்ணோரில்
    யாவருக்கும் ஒண்ணாதே ஆயிடினும் – தேவியார் 598
    கையூ டிருத்தலினால் காதூடு தூதோதற்
    கையமிலை நிற்கெளிதே யாகுங்காண் 599
- தூது சொல்லுவதற்கு அம்மையப்பர் இருக்கும் இடம் செல்லுவதற்கு மண்ணுலகத்தவர் விண்ணுலகத்தவர் யாவருக்கும் இயலாது. இருப்பினும் நீ அம்மையின் கையில் இருப்பதால் ஐயனின் காதூடு தூது ஓதுவதற்கு உனக்கு எளிதே. இதில் சற்ரும் ஐயமில்லை.

    599-600 "-– பையவே
    எவ்வாறென் செய்தி இயம்பினால் ஏற்றிடுமோ
    அவ்வா றெல்லாம்நீ அறிந்தோதி"
- மெதுவாக, எப்படிச் சொன்னால் ஐயன் ஏற்றுக் கொள்வானோ அம்முறைகள் எல்லாம் அறிந்து நீ ஓதுவாயாக

    600-601 -" எவ்வமுறும்
    மாலவற்கும் இந்திரற்கும் வானவர்க்கும் தானவர்க்கும்
    மேலவர்க்கும்நீ அருளா விட்டாலும்"
- குற்றம் செய்த திருமாலுக்கும் இந்திரனுக்கும்தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மறு முள்ள மேலானவர்களுக்கும் நீ அருள் செய்யாத போதிலும்;

    601-603 -"– சால
    வெளியா ரெங்குள்ளா ரெனத்தேடியாள்தல்
    அளியாரும் நிற்கே அணியாய் – மொழிதலால் 602
    அன்னவனை யாள்த லழகாம்"
- தாழ்வெனும் தன்மையராய் எளியவர் எங்குள்ளார் என்று அவரைத் தேடிச் சென்று ஆட்கொள்ளுதல் கருணை மிகுந்த உனக்கு அழகெனப் பெரியோர் கூறுவதால், அத்தகைய எளியானை ஆட்கொள்ளுதல் உனக்கு அழகாகும்.

    603 -607 "-அஃதன்றி
    இன்னமொரு வாற்றால் இசைவாகும் – அன்னவன்றான் 603
    புன்மதத்தி லாழ்ந்தலைந்து புந்திவரப் பெற்றுப்பின்
    நின்மதத்தை ஆதரித்து நின்றமையால்- தொன்மை 604
    முருகாரும் நின்சமயம் முற்றத் துறந்து
    திருகார் சமணமதஞ் சேர்ந்தங் –கருகான 605
    சொற்கோவை யாண்ட தொடர்பானுங் காத்தாளல்
    நிற்கே கடனென்று நேர்ந்துணர்த்திச் – சற்குருவாய் 606
    இன்னமொருகால் எழுந்தருளி என்முன்வரச்
    சொல்நீ பசுங்கிள்ளாய் தூது. 607
- அதுவேயன்றி, இன்னுமொரு வகையானும் அவனை ஆட்கொள்ளுதல் பொருத்தமுடையதேயாகும். அவன் புல்லிய மதமாகிய கிறித்துவக் கொள்கையிலே ஆழ்ந்து அலைந்து பின் நல்ல புத்தி வரப் பெற்றுப் பின் நின்னுடைய மதமாம் சைவநெறிதனை விரும்பி நின்றமையால், முன்பு, அழகிய நின் சமயத்தை முற்றத் துறந்து, கோணல் மிக்க சமணமதஞ் சேர்ந்து அங்கு அருகரான நாவுக்கரசை ஆண்ட அந்த முன்னிகழ்ச்சித் தொடர்பானும் அவனை நீக்காத்தாளுதல் உனக்கே கடன் என்று பணிந்து உணர்த்தி, சற்குருவக இன்னும் ஒருமுறை என் முன் எழுந்தருளி வரச் சொல்லி , பச்சைக் கிளியே! தூது சொல் நீ.
-----------
திருச்சிற்றம்பலம்
திருப்பேரூர் கிள்ளை விடு தூது பொழிப்புரை முற்றுப்பெற்றது.

Comments