Taṉippāṭalkaḷ
நாட்டுப் பாடல்கள்
Back வ. சு. செங்கல்வராய பிள்ளை:
தனிப்பாடல்கள்
tanipATalkaL
/ V.S. CengkalvarAya piLLai
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to Mrs. Gnanapurani Madhvanath for providing us
with a printed copy of the work and to Dr. Anbumani Subramanian for scanning the pages.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
V. Devarajan, R. Navaneethakrishnan, N. Pasupathy, V. Ramasami,
S. Karthikeyn, K. Ravindran and Thamizhagazhvan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2011.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
தனிப்பாடல்கள்
அநுபந்தம் V.
சரமகவி.
அறுசீரடி விருத்தம்..
திருத்தணிகைப் பெருமானே விண்ணப்பம் ஒன்றுண்டு செப்பு கின்றேன்
அருத்தியினோ டெனைவளர்த்தே ஆதரித்த எந்தையிந்த அவனி விட்டே
திருத்தமதாம் முத்தியதாம் நின்சரணஞ் சேர்ந்தனரோ செப்ப வேண்டும்
பொருத்தமதாம் ஒருதுணிவுந் தோன்றாது திகைத்தேங்கிப் புலம்பு கின்றேன். - (1)
மையாருங் கண்டத்தர் மைந்தாநந் திருத்தணிகை மலையில் வாழும்
ஐயாநின் திருப்புகழை அன்புடனே அச்சிலிட்டே அவனி யுள்ளோர்
பொய்யான நெறிநீங்கி மெய்யான வழிபற்றும் போக்கைத் தந்த
மெய்யான ரெந்தந்தை எங்குற்றார் விளம்பல் வேண்டும். - (2)
இந்நேரம் ஆயிற்றா ஆபீஸி லிருந்துவர என்று கேட்கும்
அந்நேயச் சொற்கள்பல இனியென்று கேட்பேன்நான் அந்தோ அந்தோ
தன்னேயத் தாயிழந்த கன்றெனவே தனியேனுந் தளரா நின்றேன்
உன்னேயத் திருப்புகழெங் குளதோஎன் றுசாவுதற்கோ உம்பர்ச் சென்றாய். - (3)
நெஞ்செல்லாம் புண்ணானோம் கண்ணெல்லாம் நீரானோம் நினைக்குந் தோறும்
எஞ்செல்வா எங்குற்றாய் என்றழுவோம் என்செய்தும் இனியாம் என்றோ
அஞ்சொல்லாய் உனைக்காண்ப தென்றிரங்கி நைகின்றோம் ஆத லால்நீ
செஞ்சொல்லா லுறுதிநிலை ஒன்றெமக்குத் தேர்ந்துணரச் செப்பாய் செப்பாய். - (4)
மூச்சற்றுப் பேச்சற்று நீகிடந்த கிடக்கையையாம் முன்னுந் தோறும்
ஆச்சற்ற தெம்வளமெல் லாமன்றோ டெனக்கவன்றும் அத்தன் சீர்த்திப்
பாச்சொற்ற திருப்புகழே எந்நாளுஞ் சிந்தனைசெய் பண்ப நின்றன்
ஏச்சற்ற தூமொழியைக் கேட்பதென்றோ எனக்கவன்றும் ஏங்கு கின்றேம். - (5)
துடிதுடித்தோம் பதைபதைத்தோம் செயலழிந்தோம் நெஞ்சமது துளங்கி ஏங்கிக்
கடிதடிப்பக் கருத்தழிந்தோம் கண்ணாஎன் அண்ணா! மின் காணா முன்னம்
இடியிடித்த செயலெனவே இப்போது மணியென்ன என்று கேட்டு
கொடிபடுமுன் நீமறைந்த மாயமதை யெண்ணி மனம் நொந்து நொந்தே - (6)
சில்லென்று நினதுடலம் ஆனதைக்கண் டையோஎஞ் செல்வா என்றேம்
கல்லென்று கதறியழு தலமந்தே இதுநனவோ கனவோ என்றேம்
இல்லென்ற இதுமாயை எனவோநீ யிவ்வுலகம் இகந்தாய் என்றேம்
அல்லென்ற மணிமிடற்றோன் அருள்புதல்வன் அருளிதுவோ அந்தோ என்றேம். - (7)
அப்பாநின் னருளிதுவோ ஒருவார்த்தை யுரையாடா தகன்றா யென்றேம்
இப்பாரில் உண்மைநெறி நிற்பாருள் உனைப்போல்வார் யாரே என்றேம்
மெய்ப்போத நெறிகாட்டுந் திருப்புகழை யச்சிலிட்ட மேலோய் என்றேம்
எப்பாடு மில்லாது சுகமுடிவு கண்டவரே என்றேம் என்றேம் - (8)
பற்றுள்ள அடியர்நிதம் பயிலுதற்குத் திருப்புகழிற் பரவா திங்கு
மற்றுள்ள பாடலெலாம் யாண்டுளதென் றறுமுகன்பால் வழியே கேட்டும்
உற்றுள்ள துள்ளபடி மறுபிறப்பே னும்மெடுத்தே உலகுக் கீவேன்
கற்றுள்ள அன்பர்களே இதனுண்மை காண்பிரெனக் கடந்தாய் கொல்லோ! - (9)
கன்னேரு மென்னெஞ்சுங் கரைந்துருகத் தேவாரங் கனிவி லோதும்
மன்னேநின் பத்தியெனுங் கடலினுக்கோர் கரையுண்டோ மாசில் லாதோய்
பொன்னேநின் மொழிகளெலாம் புகழேநின் திருவுடலம் பூதி சான்றோய்
என்னேநின் னருட்பெருமை என்னேநின் குணசீலம் என்னே என்னே! - (10)
காற்றுள்ள போதேநீ தூற்றிக்கொள் எனுமுரையைக் கருதி வேலை
யாற்றிவரும் நாளில்ரஜாக் காலமெலாம் சிவதலங்கள் அன்பிற் சென்றே
போற்றிமதி சூடிதல விளக்கநூல் வெளியிட்ட பூபா உன்றன்
ஆற்றலதை என்னென்றே எடுத்துரைத்துப் புகழ்வேன்நான் அப்பா அப்பா! - (11)
கட்டளைக் கலித்துறை.
தப்பான மார்க்கஞ் செலேனெந் தணிகைத் தயாபரனுக்
கொப்பான தெய்வமொன் றில்லை யதனா லுவன்புகழை
எப்பாடு பட்டும் பெருக்குவ னென்றே யிவணுதித்த
அப்பா உனைவிட் டிருப்பதெவ் வாறோ அருளுதியே. - (12)
அறுசீரடி விருத்தம்.
இதுவோ தேடித் தேடிவெளி யிட்டு மகிழ்ந்த திருப்புகழ்நூல்
இதுவோ அன்போ டெழுதிவெளி யிட்ட பிரமோத் தரகாண்டம்
இதுவோ நீயச் சேற்றிவெளி யிட்ட நீடூர்ப் புராணமது
இதுவோ ஈசன் தலவிளக்கம் யிதுவோ பூண்டி மான்மியநூல். - (13)
இதுவோ அவ்வா னரமதுரை யென்னுந் தான மான்மியநூல்
இதுவோ நீவேண் டியவண்ணம் எழுந்த ஆரூர்ப் புராணநூல்;
இதுவோ உன்சொல் வழிவந்த எந்தை பூவண் ணத்தருலா
இதுவோ ஆரல் நாள்தோறும் இங்கு நீசெய் தனிப்பாடல். - (14)
தங்கு புகழோய் உன்சொல்வழித் தணிகை யமக அந்தாதி
இங்கு வந்த திதுவேயோ இதுவோ தணிகைத் திருப்புகழ்நூல்
சங்கை யறநீ பதிப்பித்துத் தந்த திருவுத் தரகோச
மங்கை மங்க ளேசுரியின் மதித்த பிள்ளைத் தமிழிதுவோ! - (15)
அநுபந்தம் VI
சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இயற்றிய தனிப்பாடல்கள்.
விநாயகர்
[மஞ்சகுப்பம் கடைத்தெருவி லிருக்கும் விக்கினேசுரர்மேற் பாடியது.]
வெண்பா.
செல்வக் கணபதியே சீரளிக்குந் தெய்வமே
கல்விக் குறுதுணையே கற்பகமே -- நல்லவர்வாழ்
மஞ்சகுப்பந் தன்னில்வனர் மாமணியே யென்றுமெங்கள்
நெஞ்சகத்தி லேயுறைவாய் நீ. - (1)
செஞ்சரணந் தந்துஞ் சிறியேந் தமையாண்டும்
எஞ்சலிலாப் பேரின்பம் என்றருள்வாய் - மஞ்சைவளர்
கோவே அடியர் குறைகள் தவிர்த்தருளும்
தேவே அருஞ்செல்வ மே. - (2)
மூலமாய் நின்றருளு மூர்த்தியே முக்கணனாம்
ஆலமார் கண்ட னருள்வோனே - சீலமார்
போதத்தாய் என்றுமன்பர் போற்றிப் பணியும்பொற்
பாதத்தாய் நீகடைக்கண் பார். - (3)
பார்மீதி லென்போற் பரிதவித்து நிற்போர்கள்
யார்தா னிருக்கின்றார் எங்கோவே - சீர்தானம்
இல்லா எனக்கும் இபமுகத்தெந் தாயிரங்கிச்
சொல்லாயோ உய்யுந் துறை. - (5)
அறுசீரடி விருத்தம்.
யாதியற்றும் போதுமுதற் றொழப்படுநம் மிறையவனை
எழிலார் பாதப்
போதகத்து மறவாமற் பத்தியுடன் பூசனைகள்
புரியுந் தொண்டர்
தீதகற்றும் பெருமானைச் சிவபெருமான் சிவகாமிச்
செல்வன் தன்னைத்
தாதுகுக்கும் பொழிற்றணிகைச் சண்முகற்கு மூத்தவனைச்
சார்ந்து வாழ்வாம். - (5)
எழுசீரடி விருத்தம்.
எந்தகா ரியத்தை எவர்களே எனினும்
எடுப்பரேல் இனிததை முடிக்க
முந்தவுன் செந்தா மரைப்பதம் பணிந்தே
முயலுக என்றர னார்தாம்
சிந்தையில் மகிழ்ந்து செப்பின தால்நின்
சேவடி யென்றும்நான் மறவேன்
வெந்துயர் தீர்த்து வீடுபே றருள்செய்
வேழமா முகப்பெரு மானே. - (6)
கலிவிருத்தம்.
வித்தை அத்தம் விரும்பிய யாவையும்
சித்தி யாகவும் சீருடன் வாழவும்
முத்தி யென்னுநன் மோக்ஷ மடையவும்
அத்தி மாமுகத் தண்ணலை யேத்துவாம். - (7)
ஆன இன்பம் அனைத்துமுண் டாகுமால்
ஞான மும்பல நன்மையு நன்கெய்தும்
வான நாடர சாளவும் வந்திடும்
யானை மாமுக னைப்பணிந் தேத்தவே. - (8)
இரக்குந் தேவர்க் கிரங்கியோர் மாணியாய்
அரக்கர் கோனிடம் எய்தி அவன்செயல்
தரிக்கொ ணாவணஞ் செய்த தயாளனைங்
கரக்க ளிற்றினைக் காப்பக்கொள் வாமரோ. - (9)
சிவபெருமான்
கோயில்.
ஏக னாயுல குக்கெ லாமொரி றைவ னாயிம வான்மகள்
பாக னாய்ப்பரஞ் சோதி யாய்ப்பசும் பால்வெண் ணீறு விளங்கிய
தேக னாய்ச்சிவ லோக னாயெந்த தேவர் கட்குமொர் தேவனாய்
மோக னாய்மன்று ளாடு வான்எங்கள் முதல்வ னாகிய மூர்த்தியே. - (1)
திருப்பாசூர்.
வெள்ளந் தங்கிய செஞ்சடையானை
விரும்பி வந்தருள் செய்யும் வேதியனை
கள்ளந் தங்கிய நெஞ்சுடை யார்கள்
கனவிலுஞ் சற்றுங் காண்பரி யானை
உள்ளந் தங்கிய அன்பினோ டுருகி
யோது முத்தமர் தமைப்புரப் பானைப்
பள்ளந் தங்கிய நீருடைப் பாசூர்ப்
பரம யோகியைப் பணிந்துய்யென் மனனே. - (2)
திருப்பழனம்
வேட னாகியே வில்லெடுத் தானை
வேங்கை யின்னத ளரையுடுத் தானை
மூட னாந்தக்கன் மகங்கெடுத் தானை
முன்னம் பன்றிக்கு முலைகொடுத் தானை
கூடு சுந்தரர் மணந்தடுத் தானைக்
கூறு சேரன்பால் கவிவிடுத் தானைப்
பாட னாட்டியம் ஓய்ந்திடாப் பழனப்
பரம யோகியைப் பணிந்துய்யென் மனனே. - (3)
சீகாழி
காம னைக்கண்ணி னாலெரித் தானைக்
கரியி னைக்கரத்* தாலுரித் தானைச்
சோம னைத்திரு முடிதரித் தானைச்
சூர்யனைப் பற்கள் தாம்நெரித் தானை
எம* னைக்கழ லாற்சரித் தானை
இடர்செய் கங்கைக்குச் சடைவிரித் தானை
பூம னைச்சிரம் ஒன்றறுத் தானைப்
புகலியிற் சென்று போற்றிஉய் மனனே. - (4)
திருவாலங்காடு
சோதி யாகிய நல்லுரு வானைத்
தொல்லை யெல்லையில் தூய்மையி னானை
நீதி யாகிய செந்நெறி யானை
நித்தனை நிரை வளையணி மடந்தை
பாதி யாகிய பரமனை யன்பர்
பத்தி யாம்வலை யிற்படு வானை
ஆதி யாகிய அம்மையப் பனைத்தென்
னாலங் காடுசென் றடைந்துய்யென் மனனே. - (5)
இடும்பாவனம் [20-11-1896]
கொடும்பா தகமே புரியுங் கொடியேன்
படும்பா டுகளோ பகர்தற் கரிதால்
விடும்பான் மையிதென் றறியேன் வெறியேன்
இடும்பா வனம்வா ழிறையே அருளே. - (6)
கடிக்குளம்.[20-11-1896].
படிக்குளென் போலொரு பாவியிலை
இடுக்கண் தவிர்த்தெனை யேன்றருளாய்
பொடிக்கொளு மேனியெம் புண்ணியனே
கடிக்குள மேவிய கற்பகமே. - (7)
தண்டலைநீணெறி.[22-11-1896]
அண்டர் பிரானரி வாட்டாயன்
தொண்டை யுவந்தருள் தொல்பதியாம்
தண்டலை நீணெறி சார்ந்திடநம்
பண்டை வினைகள் பறந்திடுமே. - (8)
திருவுசாத்தானம்.[4-12-1896]
கருவினிற் பலதரங் கட்டுண்டு கலங்கித்
திருடனைப் போலத் தியங்குமென் நெஞ்சே
ஒருவிசைப் பணியினும் உயர்கதி கொடுக்குந்
திருவுசாத் தானமே சென்றடைந் துய்யே. - (9)
திருக்கேதாரம். [--4-97]
வேதாமுத லானோர், தாதார் மலர்தூவுங்
கேதார மெனீரே, ஆதாரம தாமே. - (10)
திருவாரூர்.
திருவாரூர் வாழுஞ் சிவனேநின் தாளை
மருவாரூர் மாளவைத்த மன்னா--கருவாரூர்
வீழாமற் குன்றன் விரைமலரை நாயேற்குத்
தாழாமற் றந்தருள்வாய் தான். - (11)
பொது
தில்லைக் கரசே திருவால வாயி லமர்ந்த செங்கரும்பே
வல்லத் தொளிர்செய் மாமணியே மாற்பே றுறையு மணிகண்டா
தொல்லைப் பிறவித் தீமையெனுந் தொடக்கா லந்தோ துறைகாணா
அல்லற் கடலி லலையுண்ணும் அடியேற் குன்சே வடியருளே. - (12)
அருவே சரணம் அடியார்கட் கமுதே சரணம் அறியொண்ணா
உருவே சரணம் உத்தமர்க ளுவப்பே சரணம் உயர்நால்வர்
குருவே சரணம் வானவர்கள் கோவே சரணங் குறைவில்லாத்
திருவே சரணம் யாவர்க்குந் தேவே சரணஞ் சரணமே. - (13)
வாழ்வு வந்து மன்னவர்கள் போல வாழ்ந்தே யிருந்தாலும்
தாழ்வு வந்து தரித்திரராய்ச் சல்யப் பட்டே யுழன்றாலும்
தாழ்ந்த சடையான் ஒருவனிரு தாளே சதமாஞ் செல்வமென
ஆழ்ந்த அறிவோ டவற்பணியும் அடியார்க் கடியே னடியேனே. - (14)
ஐய னடியை யடைந்தவர்க ளஞ்சார்கள்
வெய்ய கொடுங்காலன் வெம்பி வரும்போது
செய்ய கமலச் சிவனடியைச் சேராதார்
ஐயோ அவர்க ளடையுங் கதியாதோ! - (15)
என்னை யாளுடை யீசனை யெம்பெரு மானை
தன்னை யேநிகர் சங்கர மாமணி தன்னை
பொன்னை யேயொத்த மேனியெம் புண்ணியன் புநிதன்
தன்னை யேசரண் அடைவது தக்கவர் கடனே. [18-10-1897] - (16)
மாணிக்க வாசகரை வாழ்வித்த வல்லவரை
பேணிப் பணிந்துநல்ல பேறுபெறல் எக்காலம்! - (17)
பிறவாமை யும்பிறந்தால் பெம்மான் சிவனை
மறவாமை யும்பெற்று வாழுவதும் எக்காலம்! - (18)
நாதா அடியார்கள் நாளும் பணிந்தேத்தும்
வேதாஇவ் வேழை விருப்பெய்தல் எக்காலம்! - (19)
சென்றதெல்லாஞ் செல்லச் சிலகால மானாலும்
உன்றன் கழலிணையை உன்னுவதும் எக்காலம்! - (20)
காலமெலாம் வீணே கழித்துவிட்டேன் ஐயாவே
சீலமுடன் உன்னையினிச் சிந்திப்ப தெக்காலம்! - (21)
அல்லும் பகலும் அலைச்சலல்லால் வேறிலையென்
தொல்லையெலாம் நீங்கிச் சுகித்திருப்ப தெக்காலம்! - (22)
எண்ணிறந்த நன்மைகளை என்றனக்குச் செய்தவுன்றன்
தண்ணளியைப் பாடிச் சதாமகிழ்வ தெக்காலம்! - (23)
சஞ்சலமெல் லாமொழியச் சம்புவே உன்றனிடந்
தஞ்சமென யான்வந்து சாருவது மெக்காலம்! - (24)
கண்டதைச்சொல் லிச்செய்து காலங் கழிப்பேனுன்
தொண்டனாய் நின்று துதிசெய்வ தெந்நாளோ! - (25)
அல்லற் படுமிவ் வடியேனை ஐயாநீ
நல்ல நிலைதனிலே நாட்டுவது மெந்நாளோ! - (26)
எண்ணற் கருந்துயரால் ஏங்குமெனைக் கைவிடுதல்
புண்ணியமோ ஓர்சொல் புகலாய் பராபரமே! - (27)
நீரறியா தொன்றும் நிகழாதிந் நீணிலத்தில்
ஆரறிவா ரும்மகிமை ஐயா பராபரமே! - (28)
என்னஇடர் வந்தாலும் ஏக்கமிக* வுற்றாலும்
உன்னைநம்பி நானிருப்ப துண்மை பராபரமே! - (29)
உன்பாத மேதுணையென் றுன்னை யடைந்தேன்நான்
என்பாவந் தீர்ப்பாய் இறைவா பராபரமே! - (30)
அன்னைநீ பிள்ளைநான் ஆண்டவன்நீ நானடியேன்
என்னையீ டேற்றாத தென்னோ பராபரமே! - (31)
என்னசெய்கு வேனென் றிரங்கிநிற்கும் என்றனக்குத்
தன்னைநிக ரில்லாத் தயாபரநீ ஆதரவு! - (32)
முத்திக் கொருவித்தே முன்னுக்கெல் லாம்முன்னே
பத்திக் கிலக்கே பசுபதியே - எத்திக்கும்
ஆயவனே உன்னை அடைந்தோர்க்குப் பெற்றஅருந்
தாயவனே நீயே சரண். - (33)
உமாதேவியார்.
தாயே திரிபுர சுந்தரி யேநின்றன் தாளிணைக்கன்
பாயே உருகி அலர்தூவி அஞ்சலி செய்தெனக்கு
நீயே கதிமற்றி யாருண்டு நின்மலை யேயிரக்ஷிப்
பாயே எனஅரு ளாயே பரம்பரை யேபரிந்தே. - (1)
சிவசாம் பவியே சரணஞ் சரணம்
த்ரிபுராந் தகியே சரணஞ் சரணம்
பவநா சகியே சரணஞ் சரணம்
பரமேஸ் வரியே சரணஞ் சரணம்
தவமார் பயனே சரணஞ் சரணம்
ஜகதம் பிகையே சரணஞ் சரணம்
அவமா யுழல்வேன் தனையாண் டருள்வாய்
அமுதாம் பிகையே சரணஞ் சரணம். [23-11-1896] - (2)
முருகர்
[* உடுக்குறியிட்டன கிருத்திகை தினங்களிற் பாடிய தோத்திரப் பாடல்கள்.]
வெண்பா.
*அப்பா உனையன்றி ஆத ரவுவேறே
இப்பாரில் யாருண் டெளியேற்குச் - செப்பாய்
அருந்தணிகை மாமலைவாழ் ஆறுமுகத் தேவே
வருந்துமெனை யாதரிக்க வா.
[பிரஜோத்பத்தி ஆனி 30 புதன்கிழமை; மஞ்சகுப்பம். 12 ஜூலை 1871.] - (1)
*துன்பந் தனையொழித்துத் தொல்பிறவி வேரறுத்தே
இன்பம் பெறலாமென் றெண்ணியே - வம்புந்துன்
தாளைநினை யாநிற்குந் தாசன் தனையிரங்கி
யாளநினை யாய்தணிகை யா.
[பிரஜோத்பத்தி ஆடி 26 புதன்கிழமை; மஞ்சகுப்பம். 9 ஆகஸ்டு 1871.] - (2)
வேறா தரவுண்டோ மேதினியி லென்றனக்குக்
கூறாய் தணிகைவரைக் கொற்றவா - நீறாநான்
போமுன்னே யென்றனக்குப் போதிப்பாய் 'நின்பதத்தைத்
தாமுன்னே' யென்றிறைஞ்சத் தான். - (3)
எந்தநாள் என்றன் இடர்யாவுந் தீருநாள்
எந்தநாள் இன்பம்வந் தெய்துநாள் - எந்தநாள்
உன்ற னடிபாவி உய்யுநாள் தென்றணிகைக்
குன்றுறையு மென்துரையே கூறு. - (4)
பாவி யிவன்முகத்தைப் பார்க்கவுமொண் ணாதெனவே
நீவிடுவ துந்தகுமோ நீதியோ - தேவனே
இக்குவல யந்தனிலே எற்குனையல் லால்வேறு
திக்குளதோ தென்றணிகைச் சேய்! - (5)
இறப்புதருஞ் சென்மம் எத்தனையெ டுப்பேன்
சிறப்புதருந் தென்றணிகைத் தேவா - வெறுப்புதரும்
இச்சென்மம் யாவுமொழித் தென்றுமின்புற் றேயிருக்கும்
அச்சென்மம் எற்கருளா யா. - (6)
என்னதான் செய்தாலும் ஏழைக் குனையன்றிப்
பின்னையார் தென்தணிகைப் பெம்மானே - நின்னையே
நம்பி யிருக்கின்ற நாயேனை ஐயவுன்றன்
செம்பொற்றா ளுக்காளாச் செய். - (7)
நீயே துணையல்லால் நீணிலத்தி லேயிந்தப்
பேயேனுக் கார்தணிகைப் பெம்மானே - நாயேன்முன்
செய்த பவமெல்லாந் தீரும் படிக்குமின்பம்
எய்தும் படிக்குமரு ளே. - (8)
பன்னிபன்னி யென்குறையைப் பல்லா யிரந்தரம்நான்
சொன்னாலுந் தென்தணிகைத் தோன்றலே - இன்னாவைப்
போக்கவிலை யென்னையுன் பொன்னார் திருவடிக்கா
ளாக்கவிலை யீதநியா யம். - (9)
தண்டா மரையானுந் தண்டுளவத் தாரானும்
கொண்டாடுந் தென்தணிகைக் கோமானே - பண்டாய
வெவ்வினையா லேழைபடும் வேதனைநோ யெல்லாமிங்
கெவ்விதமாத் தீரும் இயம்பு. - (10)
இயம்ப முடியாத இன்னலெனக் கிட்டாய்
சுயம்புவே தென்தணிகைச் சோதி - தியங்கித்
திரிகின்ற எற்குன் திருவா ரருளைப்
புரிகின்ற தெந்நாள் புகல். - (11)
என்னா தரவே எனதரணே எந்தையே
அன்னாய் திருத்தணிகை அண்ணலே - எந்நாளோ
ஏ*குமென தின்னலெலாம் இன்பமென்ப தெந்நாளுண்
டாகு மதைநீ அறை. - (12)
விநாடிக் கொருகோடி வெந்துயருண் டென்று
சொனாலுந் தகுந் தணிகைத் தோன்றால் - எனாலிங்குப்
பட்டு முடியவிலை பாழும் அவத்தைகளைக்
கொட்டுதற்குக் காட்டோர் குழி. - (13)
அன்றசுர ரைக்கொன் றமரா வதிகாத்த
வென்றிமயி லூர்தணிகை வேலவா - என்றென்றும்
அன்னாயன் னாயென் றழுதழுது நின்றுமென்றன்
இன்னா ஒழித்திலையீ தென்? - (14)
முருகா குமரா முதல்வா முகுந்தன்
மருகா திருத்தணிகை வள்ளால் - ஒருகால்
முருகா எனவோதி முத்திநெறி கூடத்
தருவாய் வரமெனக்குத் தான். - (15)
இன்பம்வரும் நெஞ்சதனில் எண்ணியவை கைகூடும்
துன்பமக லுந்தணிகைத் தோன்றலே - நின்பதமே
கூடு மடியார் குறையின்றி யேவாழ்ந்து
வீடும் பெறுவரிது மெய். - (16)
எந்நேரந் தீமையையே எண்ணுமென்றன் பாழ்நெஞ்சே
எந்நேரம் நன்மையையே ஏனெண்ணாய் - முன்னே
கனியிருக்க நீயேனோ காய்வேண்டு கின்றாய்
முனியுனைப்பி டித்திருக்கு மோ. - (17)
ஐய னருளிருந்தால் ஆகாத தொன்றிலைமற்
றையனரு ளின்றியொன்று மாகாது - மெய்யிதுவே
ஐயனடி பற்றுவதே அல்லலெலாந் தீருமா
றுய்யுமா றும்மதுவா கும். - (18)
வாணாளை யெல்லாம் வகைதெரி யாதந்தோ
வீணாச் செலவழித்து விட்டேனே - காணாத்
திரவியமே தென்தணிகைத் தேவநினைப் போற்றும்
வரமருளாய் சித்த மகிழ்ந்து. - (19)
மக்களுயர் வாகவெணு மாநலங்க ளொன்றுமிலேன்
எக்கணமும் யான்படுவ தின்னலே - இக்கணமே
வாராய் கிருபையுடன் வந்தென் பழவினைகள்
தீராய் திருத்தணிகைச் சேய். - (20)
ஐயா வுனையன்றி ஆதரவு வேறுண்டோ
மெய்யா திருத்தணிகை வேலவா - நையா
திருக்கும் படியெனக்குன் இன்னருள்தா னென்று
சுரக்கும் படியிருக்குஞ் சொல். - (21)
நேரார் புரமெரித்த நித்தன் திருப்புதல்வா
சீரார் திருத்தணிகைத் தேசிகா - வீராநீ
வாராய் மயிலேறி வந்தேயென் வல்வினையைத்
தீராய்நின் சித்தமகிழ்ந் தே. - (22)
மூவா முதல்வனே மொய்ம்புடைய வேல்முருகா
தேவா திருத்தணிகைத் தேசிகா - ஒவாத
அன்போ டுனைவணங்க ஆண்டவனே நீயருளில்
என்போற் பயன்பெற்றார் யார்? - (23)
வானாட ரும்புவியில் வாழ்வார்க ளும்பணியுந்
தேனார் பொழிற்றணிகைத் தேசிகா - மானார்
விழியால் மதிமயங்கி வெய்யதுயர்க் காளாய்க்
கழியா தெனையிரங்கிக் கா. - (24)
பத்தியுட னேபணியும் பத்தர்க்கு முத்தியெனுஞ்
சித்திதருந் தென்தணிகைத் தேசிகா - பத்திநிலை
இன்னதென்று மேயறியா ஏழையே னைக்காக்க
உன்னதுள மென்றுருகு மோ? - (25)
நாவார நின்புகழை நாளுஞ் சொலித்துதிப்பேன்
தேவா திருத்தணிகைத் தேசிகா - மூவா
உனையே மிகநம்பி உன்றா ளடையும்
எனையேன்று கொள்ளா யினி. - (26)
நன்னெறிகாட் டென்றுன்னை நாடும் அடியவரைச்
செந்நெறிசேர்க் குந்தணிகைத் தேசிகா - அந்நெறியில்
ஆத னொழுகுவதற் காசைப் படுகின்றேன்
கோத னெனையுவந்தாட் கொள். - (27)
சீருஞ் சிறப்புமுயர் தெய்வீக முந்திருவும்
சேருந் திருத்தணிகைத் தேசிகா - பார்முழுதுங்
கொள்ளா தடியேன் குறைக ளவைதீர்த்துத்
தள்ளா தருள்புரிவாய் தான். - (28)
நாடும் பொருள்நல்லார் நம்மதல்ல வென்றறிந்தோர்
தேடுந் திருத்தணிகைத் தேசிகா - வாடுங்
கொடிபோல வேதுயரால் குன்றினே னந்தோ
அடியேனை யாதரியா யா. - (29)
ஆதார மில்லா தலைவேனை ஆதரித்தல்
தீதா திருத்தணிகைத் தேசிகா - கூதான
கட்டியணைத் தாலும்நீ கைநழுவ வேவிட்டே
எட்டஇருந் தாலும்நீ யே. - (30)
பேயேன் பெரிதும் பிழைகளே செய்கின்றேன்
தீயேன் திருத்தணிகைத் தேசிகா - நாயேனும்
புன்மையெலாந் தீர்ந்துன்றன் பொன்னடிக்கா ளாயிருக்கும்
நன்மைபெறல் எந்நாள் நவில். - (31)
மாறிவரி னும்முலகம் வல்வினையெல் லாமென்மேல்
சீறிவரி னுந்தணிகைத் தேசிகா - தேறும்வழி
கண்டே னதுநின் கழல்சிக் கெனப்பிடித்துக்
கொண்டே உயும்நற் குணம். - (32)
எப்பொழுதும் இன்னலால் ஏழை படும்பாடு
செப்பரிது தென்தணிகைத் தேசிகா - இப்பரிசே
கண்டே னடியேனிக் காசினியி லேபிறந்தே
உண்டோ சுகம்வே றுரை. - (33)
நையாம லேயிருக்க நாயேற் கிரங்கியருள்
செய்யாய் திருத்தணிகைத் தேசிகா - ஐயாவே
புண்ணியமு மாமிந்தப் பூவுலகி லேயுனக்குக்
கண்ணியமு மாமிதனைக் காண். - (34)
பூவாருந் தேனே பொருளேயெம் புண்ணியமே
தேவா திருத்தணிகைத் தேசிகா - நாவாரப்
பாடேனோ நின்புகழைப் பத்தியோ டேவல்செயக்
கூடேனா தொண்டர் குழாம். - (35)
கட்டளைக் கலித்துறை.
*பெருவாழ்வு மக்களும் பெண்டிருஞ் சுற்றமும் பின்னுமுள்ள
திருவா மெவையும் ஸ்திரமென்று நம்பித் திகைக்குமிந்தக்
கருவாழ்வு தன்னிலே வீழாம லுன்றன் கழலிணையே
தருவா யருள்புரி வாய்தணி காசல சண்முகனே.
[பிரமோ தூத வருஷம் மார்கழி மாதம் 22 தேதி, திங்கட்கிழமை, மஞ்சகுப்பம்.
2 January 1871. திருத்தணிகேசன் திருவடிகளே சரணம். வ.த. சுப்பிரமணியன். ] - (36)
*நீரே துணையன்றி வேறே துணையிந்த நீணிலத்திற்
பாரே னொருவரை அந்தோ எனக்குப் பரிபவரும்
ஆரே இனியா கிலுமரு ளீரழ கார்கடப்பந்
தாரே புனையுந் தணிகா சலமுறை சற்குருவே.
[பிரமோதூத வருஷம் தை மாதம் 19 தேதி, திங்கட் கிழமை, மஞ்சகுப்பம். 30 January 1871.] - (37)
*மண்ணாசை யென்கின்ற மாயையில் வீழ்ந்து மதிமயங்கி
எண்ணா துனைமறந் தேயிருந் தேனினி யாகிலுமென்
அண்ணாவுன் றன்பொன் னடிக்கம லம்வந் தடையும்வண்ணந்
தண்ணா ரருள்புரி யாய்தணி காசல சண்முகனே.
[பிரமோதூத வருஷம் மாசி மாதம் 16 தேதி; ஞாயிற்றுக்கிழமை. மஞ்சகுப்பம். 26 February 1871.] - (38)
*வாராத வல்வினை அந்தோ எனதிடம் வந்துமிகப்
போராடு கின்றது போகேனென் கின்றது புண்ணியனே
தீராத இவ்வினை தீர்ந்துய்யு மாறுன் திருவடியைத்
தாரா யருள்புரி யாய்தணி காசல சண்முகனே.
[பிரமோதூத பங்குனி௴ 13 சனிவாரம்; மஞ்சகுப்பம். 25 March 1871.] - (39)
*நோயால் முழுது நிறைந்த சரீரமும் நுன்திருத்தாள்
தோயாத நெஞ்சமுங் கொண்டுழல் வேனிந்தத் தொல்லுலகில்
மாயா முனமுன் றனைவந் தடையுநன் மார்க்கமதைத்
தாயா யருள்புரி வாய்தணி காசல சண்முகனே.
[பிரஜோத்பத்தி௵ சித்திரை 10 வெள்ளிக்கிழமை; 21 April 1871, சிதம்பரம்.] - (40)
*மனையாளை மக்களை மாநிதி தன்னை மதித்துநின்தாள்
நினையாமல் என்சிறு வாழ்நாளை வீணில் நிதங்கழிப்பேன்
தினையா மளவன்பும் இல்லே னெனினுந் திருவருள்கொண்
டெனையாள நீநினை யாய்தணி காசல ஈசுரனே.
[பிரஜோத்பத்தி வைகாசி 7 வெள்ளிக்கிழமை; - திருத்தணிகை. 19 May 1871.] - (41)
*வாவா முருக மயில்மீதி லேயேறி வந்தென்றனைக்
காவா யுனது கழலிணைக் காட்கொள்ளு வாயென்றுநான்
ஓவா துரைத்துமே உன்நெஞ் சுருகிலை உன்கருணைக்
காவா இதுவு மழகோ திருத்தணி ஆண்டவனே
[பிரஜோத்பத்தி௵ ஆனி௴ 3௳ வியாழக்கிழமை; கருக்கம்பட்டு குளக்கரை. 15 June 1871.] - (42)
*ஆதார மிந்த அகிலந் தனிலெனக் குன்றனம்பொற்
பாதார விந்தம தல்லாமல் வேறில்லை பத்தர்நெஞ்ச
மேதான மாக்கொண்டு வீற்றிருப் பாய்வினை யால்விளைந்த
தீதா னதையொழித் தாள்வாய் திருத்தணித் தேசிகனே.
[பிரஜோத்பத்தி ஆவணி 22 செவ்வாய்க்கிழமை; மஞ்சகுப்பம். 5 September 1871.] - (43)
*பல்லா யிரத்துக்கு மேற்பட்ட பாவம் பலபுரிந்து
சொல்லா லளவு படாத்துய ரத்திற் சுழலுமிந்த
பொல்லாத பாவியு முன்றாட் கடிமை புகுந்துய்வனோ
எல்லாஞ் செயவல்ல வாதணி கேச எனதரசே
[ப்ரஜோத்பத்தி மாசி 6 வெள்ளிக்கிழமை; மஞ்சகுப்பம்.] - (44)
*திருமுரு கா! அடி யேன்துயர் தீரத் திருவருளைப்
புரிமுரு கா! நின்* பொன்னடிக் கன்புடை யோர்க்கிரங்கி
வருமுரு கா! வந் திடர்தீர்த் தவர்க்கு வரம்பிலின்பந்
தருமுரு கா! கும ரா! சண் முகா! தணி காசலனே.- 45
*வாதா நினது மலர்த்தா ளிணையை மதியிலிமேல்
வாதா உனக்குமோ நின்மகி மைக்கிது சற்றுமுத
வாதா கொடுமைய தாகுமன் றோமற் றேவர்க்குமிறை
வாதா னவர்கால னேதணி காசல வானவனே.
(இதன் பொருள்.)
எல்லோருக்கும் இறைவனே! அவுணர்களுக்கு இயமனே! தணிகாசலக்கடவுளே!
(நீ) வந்து (அடியேனுக்கு) உன்னுடைய மலர்போன்ற இரண்டு திருவடிகளையுந்
தந்து (ரக்ஷிக்கவேண்டும்). மதியிலியாகிய ஏழைமீது உனக்குக் கூடவா வாது?
வாது செய்தல் உன் பெருமைக்குச் சற்றும் உதவாது. ஆ! அது கொடுமையல்லவோ,
மற்று அசை. திருத்தணிகேசன் திருவடிகளே சரணம்.
[ப்ரஜோத்பத்தி பங்குனி 30 புதன்கிழமை; மஞ்சகுப்பம்.] - (46)
பண்ணிலும் பார்க்க இனிதா மெனுமொழிப் பாவையர்தங்
கண்ணிலுங் கூந்தலி லும்மவர் காமக் கலவியிலும்
எண்ணில்பல் நாள்தொலைத் திட்டா யினியா யினுமெனெஞ்சே
தண்ணரு ளான்தணி காசலன் பாதஞ் சரணடயே. - (47)
மண்ணா சையில்மக்கள் மாநிதி ஆசையில் வாங்கரிய
பெண்ணாசை யென்கின்ற பேயா சையிலே பெருமகிழ்ச்சி
உண்ணாநின் றேன்மெய் யுணர்வெய்தி யேயுய்ய மாறுளதோ
அண்ணா அருள்புரி யாய்தணி காசல ஆரமுதே. - (48)
சாமி குமர முருக சரவணா சண்முக நன்
நேமிய மால்மரு காதணி காசல நின்மலனே
ஆமிது தீய தகற்றென்று சொல்லும் அறிவிருந்துங்
காம விகாரத்தை நீக்ககில் லேனென்ன கர்மமிதே! - (49)
நல்லா யுனைநம்பு மெல்லார்க்கு நன்மைக ணல்குமுனை
யல்லால் துணைசிறி தில்லாத யானென தல்லலெல்லாம்
பல்லா யிரந்தரஞ் சொல்லியுஞ் சற்றும் பரிந்திலைநீ
கல்லா வுனதகஞ் சொல்லாய் திருத்தணிக் காவலனே. - (50)
கந்தாசற் றும்நீ யு,கந்தா யிலைநின் கருணைகொண்டென்
சிந்தா குலந்தனைச், சிந்தாய் நினது திருவடியைத்
தந்தாண் டுயர்ந்த ப,தந்தா தணிகை முருகவென்றி
ரந்தாலு மந்த வ,ரந்தா னளித்திலை ராவுத்தனே. - (51)
கலிவிருத்தம்.
*ஆதா ரமிலா அடியேன் நிதமுன்
பாதாம் புயமே பணியக் ருபைசெய்
தீதா னதொழித் திடுதே சிகனே
வேத தணிகா சலவே லவனே.
[பிரஜோத்பத்தி புரட்டாசி 18 திங்கட்கிழமை மஞ்சகுப்பம். 2nd October 1871.] - (52)
எனதா தரவே எனதா ருயிரே
மனத்தார் புவிமா யைகள்மா யும்வணம்
இனிதா வருள்செய் யெழில்வே லவவுன்
றனதாள் மறவேன் தணிகா சலனே. - (53)
ஏழா முலகுங் கொளுமோ எளியேன்
பாழான மனம் படுதீ மைகள்தாம்
வாழா யெனநீ யினியே னும்வச*ந்*
தாழா தருள்வாய் தணிகா சலனே. - (54)
மனமா கியவோர் மறுப்பூ மியிலே
சினமா தியவாம் பலதீச் செடிகள்
வனமா வளரா மலளித் தடியேன்
தனையாண் டருள்வாய் தணிகா சலனே. - (55)
பேர*ர தபெருந் துயரால் மனமும்
நீரா யுருகுற் றதுநின் மலனே
வாரா யினியா கிலும்வந் துவரந்
தாராய் முருகா தணிகா சலனே. - (56)
நானே துதுயர் நலியப் படினும்
ஏனோ எனநீ யுமிருப் பதெனெங்
கோனே குருவே குலதெய் வமேநீ
தானே துணைநந் தணிகா சலனே. - (57)
ஏதுக் குமேநீ தளரே லெனவுன்
பாதத் தையேபற் றெனவே யருள்வாய்
ஓதற் கரிதாம் உபதே சமதைத்
தாதைக் கருளுந் தணிகா சலனே. - (58)
உன்னைப் பணியா தபடிக் குலகிற்
பொன்னைப் புவிபூ வையரைப் பொருளா
என்னைக் கருதச் செயுமிம் மருளூழ்
தன்னைத் தவிராய் தணிகா சலனே. - (59)
கலங்கும் மெளியேன் கனிவெய் திடவே
இலங்குன் னடியென் றருள்வா யிறைவா
நலங்கள் பலவற் றையும்நல் கியேசஞ்
சலங்கள் ஒழிக்குந் தணிகா சலனே. - (60)
ஒருவா றகம்நைந் துருகும் மவர்முன்
குருவாய் வருவாய் குறைதீர்த் தருள்வாய்
பெருவாழ் வருளும் பிறவா நிலைநீ
தருவாய் எனையாள் தணிகா சலனே. - (61)
பொல்லா தகொடும் பவமே புரிதற்
கல்லா தெனகம் அறநன் னெறியிற்
செல்லா திதனுக் கெனசெய் குவன்யான்
சொல்லாய் தணிகா சலசுந் தரமே. - (62)
வேலா நினதன் பர்கள்மே வுமது*
கூலா உமையாள் பெறுகுஞ் சரமே
பாலார் மொழிமங் கையர்பங் கமகா
சீலா தணிகா சலதே சிகனே. - (63)
ஒருவே லையுமின் றியுழன் றிடும்யான்
இருவே லையுமெண் ணுகெனோ அபயந்
தருவே லையுறுந் தணிகைப் பதியைக்
கருவே லையைவென் றுகளித் திடவே.
இதன் பொருள்.
வாளா திரிதரும் அடியேன் (வெல்லுதற்கரிய) பிறவிக்கடலைவென்று, பேரின்ப
வாழ்வெய்தும்படிக்கு 'அஞ்சேல்' என்று அபயமளிக்கும் வேலாயுதக் கடவுளானவர்
வீற்றிருக்குந் திருத்தணிகாசலத்தைக் காலையு மாலையுந் தியானிக்கேனோ !
வேல் = வேலாயுதம்; ஐ = கடவுள். - (64)
வேறு.
உன்னை யன்றிமற் றேதுணை யொன்றிலா
என்னை யிங்ஙன் இடருறச் செய்தையே
அன்னை யேயினி யாரை அடைகுவன்
கன்னல் சூழ்தணி காசலக் கர்த்தனே. - (65)
கரும நோயவை யாவுங் கருகச்செய்
திருமு ருகனைத் தென்தணி கேசனை
அரிம ருகனை அப்பனை ஐயனை
ஒரும னத்துடன் உன்னிநான் உய்வனே. - (66)
அந்த மில்லியை ஆதியைச் சோதியை
எந்தை யைத்தணி கேசனை யிப்புவிப்
பந்த மற்றுப் பரகதி யெய்திடச்
சிந்தை செய்குவன் சின்னஞ் சிறியனே. - (67)
ஐய னேதணி காசலத் தப்பனே
மெய்ய னேயிந்த மேதினி தன்னிலே
செய்யொ ணாப்பெருந் தீமைகள் செய்தஇவ்
வெய்ய னேனையும் உய்விக்க வேண்டுமே. - (68)
என்னை வாட்டும்இன் னாவைப் பிறருக்குச்
சொன்ன தாலொர் சுகிர்தமுங் கண்டிலேன்
உன்னை யேதுணை யென்னநான் உன்னினேன்
என்னை யஞ்சலென் பாய்தணி கேசனே. - (69)
நாத னைத்தணி காசலம் நண்ணுமெய்ப்
போத னைப்பொரு ளைப்பெரும் புண்யனை
வேத னைத்தணி காசல மேவுபொற்
பாத னைத்தொழப் பாறும்நம் பாவமே. - (70)
அற்பன் நானுன் னடியடை கின்றிலேன்
நிற்பன் நானென்றும் நீச நிலையிலே
தற்பரா நந் தணிகை யெனும்உயர்
வெற்ப நானெவ ணெய்துவன் வீட்டையே. - (71)
பாவ மான பரவையை நீந்தியான்
ஆவ லாயுன் னடியடைந் துய்வனோ
தேவர் போற்றுந் திருத்தணி மாமலை
மேவி வீற்றிருக் கும்வெற்றி வேலனே. - (72)
ஐய வோஎன் றழுதே யநுதினம்
நைய வோஎனை ஞாலந் தனில்வைத்தாய்?
மெய்ய வோஎன்றன் வெவ்வினை தீரஎன்
செய்ய வோசெப்பு தென்தணி கேசனே. - (73)
அத்த னேதணி காசலத் தையனே
முத்த னேமுரு காஎன் றுருகிடும்
பத்தர் கட்கருள் செய்திடு பண்பனே
கர்த்த னேகடை யேனையுங் காத்திடே. - (74)
தேவ தேவனைத் தென்றணி கேசனைப்
பரவ நாசனைப் பத்தர்கள் நேசனை
ஆவி போன்றஎன் ஐயனை அன்பிலாப்
பாவி யேன்பணி யேனென்ன பாவமே. - (75)
வேறு.
பொய்த்தாரணிப் போகந்தனிற் புந்திமிக அழுந்தி
எய்த்தேனுன்றன் மெய்த்தாளுக்கா ளென்றாவனோ அறியேன்
அத்தாகரு தடியாரிடர் அகற்றும் அருட்கடலே
சத்தாகிய பொருளேதிருத் தணிகாசல அமுதே. - (76)
வஞ்சிவிருத்தம்
பிணிபா வமெலாம்-நணுகா தருள்செய்
தணிகா சலனைப்-பணிவாய் மனனே. - (77)
கொச்சகக் கலிப்பா.
சஞ்சலங்க ளெண்ணிறந்த தாலே இடர்ப்பட்டு
நெஞ்ச மெலிந்திந்த நீணிலத்தில் நிற்குமியான்
தஞ்சமொன்றுங் காணாதுன் தாமரைத்தாள் வந்தடைந்தேன்
அஞ்சலென்பாய் தென்தணிகை யப்பா அடைக்கலமே. - (78)
பண்ணாத பாவமெலாம் பண்ணினேன் பாழ்நெஞ்சில்
எண்ணா தனவெல்லாம் எண்ணினே னேஅந்தோ!
அண்ணாநான் உன்பொன் னடியை யடைவேனோ
தண்ணார் பொழில்சூழ் தணிகைமலை வேலவனே! - (79)
காமாந்த காரக் கடலில் விழுந்தடியேன்
ஏமாந்தே அந்தோவுன் இணையடிக ளைம்மறந்தேன்
நாமார்ந்த என்மனதுன் நல்லடிபெற் றுய்யுவதற்
காமா றருள்தணிகை யம்பதிவாழ் அறுமுகனே. - (80)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
எந்தையே இமையோர் கோவே இறைவனே கறையார் கண்டன்
மைந்தனே மயில்மீ தேறி வந்தருள் புரியா நின்ற
கந்தனே கடவு ளேயென் கவலைதீர்ந் திடநின் பாதம்
தந்தருள் புரிய வேண்டுந் தணிகைமா மலையு ளானே. - (81)
அண்ணலே அமரர் கோவே ஆறுமா முகப்பி ரானே
பண்ணிலேன் அருந்த வங்கள் பணிகிலேன் நினது பாதம்
எண்ணிலேன் உய்யு மாற்றை ஏழையேற் கிரங்கி நீதான்
தண்ணருள் புரிய வேண்டுந் தணிகைமா மலையு ளானே. - (82)
கருணைவா ரிதியே யுன்றன் கழலிணை பணியும் அன்பர்
அரணமே! அல்லல் தீர்க்கும் அப்பனே ஒப்பி லானே!
மரணமே வருமுன் நின்தா மரைப்பதந் தந்து காக்க
தருணமீ தருள வேண்டுந் தணிகைமா மலையு ளானே. - (83)
கஞ்சனைச் சிறையிற் போட்டாய் கடவுளர் சிறையை மீட்டாய்
செஞ்சுடர் வேலி னாலே தீயசூர் முதலைச் செற்றாய்
அஞ்சலென் பாரைக் காணா தல்லலில் உழல்வே னுக்குத்
தஞ்சம்நீ யருள வேண்டுந் தணிகைமா மலையு ளானே. - (84)
பூசனை செய்யும் போதுன் பொன்னடி நினைந்தி டாமல்
யோசனை மேலும் மேலும் ஓய்வின்றிச் செய்வன் அந்தோ!
நாசன மடைவ தன்றி நற்கதி யெய்து வேனோ!
தாசர்கள் வணங்கி யேத்துந் தணிகைமா மலையு ளானே. - (85)
வள்ளிதெய் வானை யென்னு மங்கையர் மருவு நேசா!
புள்ளிமா மயிலின் மீதே வந்தருள் புண்ய மூர்த்தி!
கள்ளன்நா னென்று முன்றன் கழலிணை பணியே னென்றுந்
தள்ளிநீ விடிலென் செய்வேன் தணிகைமா மலையு ளானே! - (86)
இருக்குநா ளளவும் பாரில் இன்பமே பருகி மெத்தப்
பெருக்கவே வேண்டு மென்னும் பேய்பிடித் தாட்ட அந்தச்
செருக்கிலே அலைந்து கெட்டேன் சீர்ப்பட அருள்செய் யாயோ
தருக்களும் புனலுஞ் சூழுந் தணிகைமா மலையு ளானே. - (87)
ஆற்றொணாத் துயர்கொண் டேழை அலைகிறேன் அவனி தன்னில்
தேற்றுவார் ஒருவ ரேனுந் தேடியுங் காண கில்லேன்
போற்றுவேன் பத்தி யோடுன் பொன்னடி களையே என்றும்
சாற்றுவாய் உய்யு மாற்றைத் தணிகைமா மலையு ளானே. - (88)
மாதர்கள் மோகந் தன்னில் மயங்கியே வீழ்ந்தி டாமல்
போதநன் னெறியைப் பற்றிப் புண்ணியந் தனையே செய்துன்
பாதமே கதியென் றெண்ணிப் பத்தியாப் பணியும் நல்ல
சாதகம் வருவ தென்றோ தணிகைமா மலையு ளானே. - (89)
பத்தியாய் நாளு முன்றன் பதந்தனைப் பணிந்தி டாமல்
பித்தனாய் ஐயோ இந்தப் பேதையேன் திரிந்து ழன்றேன்
அத்தனே அடிய னேனுன் அடியிணை யடையும் அந்தத்
தத்துவ மருள்செய் யாயோ தணிகைமா மலையு ளானே. - (90)
கள்ளத்தைக் குணமாக் கொண்டான் கணிகையர் மோக மென்னும்
பள்ளத்தில் வீழ்ந்த நேக பாவங்கள் செய்தான் மேலும்
உள்ளத்தில் அன்பே யில்லா உலோபியா மென்றே யென்னைத்
தள்ளத்தான் நினைக்கின் றாயோ தணிகைமா மலையு ளானே. - (91)
அன்னையே அன்னை போல அடியரை ஆத ரிக்கும்
உன்னையே தேடு வோனை உத்தமச் செல்வ னென்பேன்
பொன்னையே மண்ணை யேமெய்ப் பொருளெனத் தேடு மூடன்
தன்னையே ஏழை என்பேன் தணிகைமா மலையு ளானே. - (92)
வேதனை விளைவே யென்றும் விளைக்கின்ற கொடிய பாவத்
தீதினை யொழித்து விட்டுச் சிறியனேன் கடைத்தே றும்மா
றீதென அருள வேண்டும் எத்திசை தன்னி லும்பூந்
தாதினை யுகுக்கும் பூவார் தணிகைமா மலையு ளானே. - (93)
பேய்போலும் பேதை போலும் பித்தனைப் போலுந் துட்ட
நாய்போலும் உழன்றே ஆயுள் நாளெலாங் கழித்த தல்லால்
சேய்போலன் புற்றே யுன்றன் திருவடி சேவி யேனைத்
தாய்போல்வந் தாள வேண்டுந் தணிகைமா மலையு ளானே. - (94)
மூடனா கியநான் உன்னை மூதறி வாளர் போலப்
பாடவே புகுதல் பேடி பைங்கிளி யன்னாள் தன்னைக்
கூடவே முயலு கின்ற கொள்கையை ஒக்கும் அன்றோ
சாடுவேற் கரத்தாய் ஒப்பில் தணிகைமா மலையு ளானே. - (95)
முத்தேநன் மணியே ஆதி மூலமே அடியேற் குற்ற
பற்றேயென் பாவ மெல்லாம் பற்றறுத் திடும ருந்தே
இத்தேகம் விழுமுன் நானுன் இணையடிக் கமலஞ் சேரச்
சற்றேநீ யருள்செய் யாயோ தணிகைமா மலையு ளானே. - (96)
வினைக்குவை பலவா லென்றும் வெந்துய ரினையே யெய்தும்
எனக்குவ கையுமுண் டாக எந்தையே அருள்கூர்ந் தேயென்
மனக்கவ லைகள்யா வும்போம் மார்க்கமொன் றுரைத்தி டாயோ
தனக்குவ மையே யில்லாத் தணிகைமா மலையு ளானே. - (97)
தேன்படு கடப்பந் தாராய் தேவர்கள் தமக்குத் தேவே
யான்படு கின்ற பாட்டை யாருடன் சொல்லில் தீர்ப்பார்
ஊன்படு வலிபோய் என்றன் உள்ளத்தின் வலிபோ யின்னந்
தான்படு வேனோ சொல்லாய் தணிகைமா மலையு ளானே. - (98)
எத்தனை தரந்தான் என்றன் இடுக்கணை எடுத்து ரைப்பேன்
அத்தனே வாய்நோ கின்ற தையனே என்ன செய்வேன்
பித்தனா னாலும் பொல்லாப் பேயனா னானா லுந்தான்
சற்றுநீ யருளொ ணாதோ தணிகைமா மலையு ளானே. - (99)
காலத்தை வீணாப் போக்குங் கடையனேன் எந்த நாளுன்
கோலத்தைக் கண்டு கண்கள் குளிர்வனோ அறிகி லேனே!
ஞாலத்தி லுன்ப தத்தை நணுகாம லெனைச்செ யிந்த்ர
சாலத்தை என்ன என்பேன் தணிகைமா மலையு ளானே. - (100)
தரித்திரம் நோய்பொல் லாத தன்மையெக் காலு நெஞ்சை
வருத்துந்தீ ராத தொல்லை வாய்விட்டுச் சொல்லொ ணாத
பெருத்தபாழ்ங் கவலை யித்தால் பெரும்பாடு படுத லேயென்
சரித்திரங் கண்டா யப்பா தணிகைமா மலையு ளானே. - (101)
அன்புடன் என்று முன்னை அஞ்சலி செய்வோர் தங்கள்
துன்பம்யா வையுமொ ழிந்து சுகத்தையே யனுப விப்பர்
இன்பமே நிறைந்த மோக்ஷம் என்கின்ற அரிய தாமுன்
தன்பதம் அடைவர் திண்ணந் தணிகைமா மலையு ளானே. - (102)
திருத்தணி மலையாய் போற்றி தேவர்கட் கதிபா போற்றி
பருத்தமா மயிலாய் போற்றி பத்தர்கட் கருள்வாய் போற்றி
ஒருத்தருந் துணையி லாஎன் ஊழ்வினை போக்கி யுள்ள
வருத்தமு நீக்கி யுன்றன் மலரடி சேர்த்தி டாயே. - (103)
வேறு.
கண்ணே கண்ணின் மணியேநற் கனியே கரும்பே கசிதேனே
விண்ணோர் போற்றும் வேலவனே விமலா மேலோர் மேலவனே
பண்ணே யனைய மொழிவள்ளி பங்கா தணிகைப் பதிவாழென்
அண்ணா உனையே வந்தடைந்தேன் அடியேன் உய்யு மாறருளே. - (104)
மாதா வும்நீ மக்களுநீ மற்று முள்ள சுற்றமுநீ
யாதா யினுமெற் கீவோனும் நீயே யன்றோ இறையவனே
வேதா வீர சிங்கமே விண்ண ளாவுந் தணிகைமலை
நாதா வுனையே வந்தடைந்தேன் நாயேன் உய்யு மாறருளே. - (105)
ஒப்பா ரில்லா உத்தமனே உம்பர் கோவே உயிர்க்குயிரே
இப்பா ராசை யெனுங்கடலில் ஏழை வீழ்ந்தே யிடருற்றுத்
தப்பா நிற்கும் வகையறியேன் தஞ்ச மாகுந் தணிகைமலை
அப்பா உனையே வந்தடைந்தேன் அடியேன் உய்யு மாறருளே. - (106)
பொல்லாப் பாவஞ் செய்தோமே போகும் வழியே தென்றிடிந்து
சொல்லாத் துயரால் நடுங்கியுன்றன் துணைத் தாட்கமலம் வந்தடைந்து
'வல்லாய் அடியேன் உய்யவொரு மார்க்கம் அருளாய்' என்றிரந்தும்
நல்லாய் இரங்கா ததுவென்கொல் நவிலாய் தணிகை நாயகமே. - (107)
அந்தோ அடியேன் அல்லலினால் ஆழித் துரும்பு போலடிபட்
டுந்தாள் சரணென் றேயடைந்தும் உள்ளம் உருகா திருக்கின்றீர்
எந்தாய் இதுவும் உமக்கழகோ ஏழைக் கிங்கா ருமையன்றிச்
செந்தே னொழுகும் பூஞ்சோலை திகழுந் தணிகைத் தேசிகரே. - (108)
கந்தா முருகா கண்மணியே கருணைக் கடலே பலவான
சிந்தா குலத்தால் வருந்துகிறேன் தேற்று வாரிங் கொருவரிலை
எந்தாய் இன்னும் எத்தனைநாள் ஏங்கி நிற்பேன் எனக்கின்பந்
தந்தா லென்ன குறையுண்டோ தணிகை வாழுந் தற்பரனே. - (109)
இடுக்க ணேமேன் மேலும்வந் தெய்த லாலே ஏழையேன்
நடுக்க முற்றுத் திகைப்புற்று நாய்போ லங்கிங் குழலுகிறேன்
திடுக்கிட் டலறச் செயுமிந்தத் தீமைக் குழியி னின்றென்னை
எடுக்க வல்லா ருனையல்லால் யாரோ தணிகைப் போரேறே. - (110)
செய்யா தென்ன செய்தேனோ செப்பொ ணாத பெருந்துயரால்
நொய்யா யிடிந்து நொந்தனன்யான் நுன்றாள் சரண மென்றடைந்தேன்
ஐயா யினியா கிலுமெனைநீ ஆண்டு கொள்ள நினைத்தருள்வாய்
மையார் தடங்கண் மடவார்கள் வாழுந் தணிகை மலைமருந்தே. - (111)
பண்ணாப் பாவஞ் செய்தபெரும் பாவி நானென் றாலும்வந்
தண்ணா என்னைக் காவென்றுன் அடியில் வீழ்வே னாகிலருட்
கண்ணா லென்னைப் பாராயோ கவலை யனைத்துந் தீராயோ
தண்ணார் பொழில்கள் பலசூழுந் தணிகைச் வாழுந் தற்பரனே. - (112)
கற்று மறியேன் நின்புகழ்நின் கழலுக் கடிமை யாம்பாக்யம்
பெற்று மறியேன் நினைவணங்கும் பெருஞ்சீ ருடைய அன்பர் குழாம்
உற்று மறியேன் உய்யுவதற் குண்மை யான நெறியதனைச்
சற்று மறியேன் தவிக்கின்றேன் அருளாய் தணிகைச் சண்முகனே. - (113)
சீகா ழியின்கண் அவதரித்த தேவே அடியார் செல்வமே
நாகா சலத்தி லினிதுறையும் நாதா அரிய நான்மறையைப்
பாகா யினிக்குந் தேவாரப் பதிக மாகப் பாடினவி
சாகா அடியேன் நின்சரண்என் றனைக்கா தணிகைச் சண்முகனே. - (114)
ஐயா அடியேன் படும்பாடிவ் வகிலந் தனிலே யொன்றுந்தான்
மெய்யாய்ப் படவே மாட்டாதென் விதிவலிக்கென் செய்வேன்நான்
நையா தினியா கிலும்ஏழை நன்மை யெய்தும் படிக்கருள்நீ
செய்யா திருத்தல் ஞாயமோ செப்பாய் தணிகை அப்பாவே. - (115)
அன்பைப் பணியாப் பூண்டவர்தம் அகத்தி லுறையு மருமருந்தே
என்பைப் பெண்ணா யாக்குவித்த எந்தா யுமையாள் மைந்தாஎன்
கண்மச் சிரமந்தனைத் தவிர்த்தென் கவலைக்கடலைச் சுவற்றி யென்றன்
துன்பச் சுமையை யொழித்தெனக்குச் சுகந்தா தணிகை யுகந்தாயே. - (116)
நானோ கொடியன் மிகுகொடியன் ஞாலந் தனிலென் போலொருவர்
தானோ யில்லை யில்லையிது சத்யம் முன்த னைப்பணியா
தேனோ ஒதிபோ லிருக்கின்றேன் இனிநீ யருள்செய் யாவிடிலுய்
வேனோ துணையும் வேறுண்டோ விரையார் தணிகை வரையானே. - (117)
பெண்கள் மோக வலைதனிலே பித்தாய் விழுந்து மயங்கியிரு
கண்கள் கெட்டாப் போலமதிக் கண்கெட் டலைந்து கவலைகளாம்
புண்கள் நிறைந்த நெஞ்சுடையிப் புலையேன் புண்ய னாவனோ
எண்கள் கொள்ளாப் பேரிறைஞ்சும் இறைவா தணிகை யுறைவாயே. - (118)
உன்னை யுருவ மாக்கியென துள்ளக் கோயில் தனிலிருத்தி
என்ன திருகண் ணாலிகொடுன் இருதாள் களையும் அலம்பிநிலை
இன்ன தெனவே யறியாத இன்ப அன்பா மலர் தூய்உன்
தன்னைத் தொழுநா ளெந்நாளோ சாற்றாய் தணிகை யேற்றாயே. - (119)
தீராத் துயரம் வைத்தாயே திக்கில் லாத பாவிக்கு
நீராக் கரைந்தே உருகுமென்றன் நெஞ்சம் இதனை நினையாது
பேராக் கோபங் கொண்டுநீ பின்னு மிந்தப் பேதையின்மேல்
போராச் செய்தல் புண்ணியமோ புகலாய் தணிகை அகலாயே. - (120)
ஏழைக் குற்ற துணையேயென் இறையே என்றன் ஊழ்ப்பயனால்
வாழ்வுக் கென்று நினைத்தேயென் வாணா ளெல்லாம் வகையின்றிப்
பாழுக் கிறைத்து விட்டேனே பாவி யேனும் இனியுன்பொற்
றாளுக் காளாய் உய்வழிதான் உண்டோ தணிகைக் குன்றோயோ. - (121)
எந்நே ரமுநின் னிணையடியை யிதயந் தனிலே யிருத்தேனோ
எந்நே ரமுநின் திருப்புகழை என்வா யாலே யியம்பேனோ
எந்நே ரமுநின் னடியவருக் கேவல் செய்தே வாழேனோ
எந்நே ரமுமிங் ஙனமிருப்ப தென்றோ தணிகை நின்றோயே. - (122)
ஐயா என்றன் அல்லலெலாம் அறிந்தே யிருந்தும் அழகியவேற்
கையா என்னைக் கைவிடலுன் கருணைக் கழகோ கருதாயோ
மெய்யா வெய்ய துயர்தீர்ந்து விருப்ப மெய்த இரங்கியருள்
செய்யா விடில்நான் என்செய்வேன் செப்பாய் தணிகை அப்பாவே. - (123)
பாட அறியேன் நின்தாளைப் பணியும் பத்தி நெறிதனிலே
கூட அறியேன் தீராத குறைகள் யாவுந் தீரும்வழி
தேட அறியேன் திகைக்கின்றேன் சித்த மிரங்கி யருளாயோ
வேடர் மகளை மணம்புரிந்த வேலா தணிகை மேலானே. - (124)
ஓவா தலைக்குங் கவலையினால் உடையாய் நொந்தேன் என்செய்வேன்
*பாவா வரையிற் பாரதமாம் பாவி படுமிப் பாடனைத்தும்
தேவா நீதான் பார்த்திருந்துஞ் சித்த மிரங்கா ததுவென்கொல்
ஆவா இதுவும் உன்கருணைக் கழகோ தணிகைப் புகழோனே. - (125)
மீடியாற் பிணியால்* துயராலே மிகவாய் மெலிந்தும் உன்னிடம்வந்
தடையா திருக்கின் றேனேயென் அறிவைஎன் னென்ற றைவனியான்
கடையார் தம்மிற்கடையேன்நான்கருணைக்கெங்ஙன்உரித்தாவேன்
உடையா யருள்கூர்ந் துய்யுநெறி உரைப்பாய் தணிகைப் பொருப்பாயே. - (126)
*பாவா = பாவாக; பாட்டாக; வரையில் = எழுதப்புகில்.
பொன்போலொளிசெய்மேனியனேபுலவர்போற்றும்புண்ணியனே
மின்போல் மிளிரும் பாதனே வேல னேயிம் மேதினியில்
என்போற் றுயரப் படுவோரும் இருக்கின் றாரோ நீயலதென்
தன்பா லிரங்கு வாருண்டோ சாற்றாய் தணிகை யேற்றாயே. - (127)
வேலா அடியர் துயர்தீர்க்க வெற்றி மயில்மே லேறிவரு
பாலா நினது பாதமெனும் பதும மலரைப் பத்தியொடு
நூலா ராய்ச்சி யில்லாஇந் நுளைய னேனுந் தொழவருள்வாய்
மேலா னவர்கள் பணியவளர் வெற்பாந் தணிகை நிற்பானே. - (128)
இறையே என்றன் இடுக்கணெலாம் என்று தீர்ப்பா யென்றடியேன்
முறையே யிட்டுக் கொண்டாலும் மோன மாநீ யிருப்பதன்றிக்
குறையே தெனவே கேட்டிலையென் குறையை யினியாரிடஞ்சொல்வேன்
மறையே பணியுந் தென்தணிகை வரையா யுயுமா றுரையாயே. - (129)
வாழு மாக்கள் தமையுலகின் வஞ்ச மாயை யெனுமோர்பேய்
ஆழுந் துயராம் ஆழியிலே அமிழ்த்து கிறதே அந்தோஇப்
பாழும் பேயை யேதுக்குப் படைத்தா யோநா னறிகிலேன்
மாழ்கு மனத்தேன் உய்வழிமற் றுண்டோ தணிகை நின்றோயே. - (130)
இன்னல் பலவால் வருந்துகிறேன் என்னைக் காவென்றுனையடைந்தால்
இன்னல் தீர்க்கா தவைகளைநீ இன்னம் அதிக மாக்குகின்றாய்
உன்னைத் தஞ்ச மென்றடைவோர்க் குண்டாம் பலனு மிதுதானோ
அன்னை யென்னும் உனக்கிதுவும் அழகோ தணிகைப் புகழோனே. - (131)
உன்னை நம்பி னோரெல்லாம் உள்ள கவலை தீருகிறார்
பின்னு மவர்க ளின்பெய்தி பெருமை யோடே வாழுகிறார்
அன்னை யேநா னுனையடைந்தென் அல்லல்பலகாலெடுத் துரைத்தும்
என்ன என்றுங் கேட்டிலையீ தென்னே தணிகை மன்னேநீ. - (132)
வரந்தா வரந்தா என்றென்றென் வாயும் நோவ வேமுறையிட்
டிரந்தா லும்முன் மனமட்டும் இரங்கு கிறதே யிலையிவண்நீ
கரந்தா லிதுவுங் கருணையோ கருணைக் கடலே நான்கலங்கி
யிருந்தா லதனாலுனக்கின்பம் என்னே தணிகைப் பொன்னே சொல். - (133)
துன்புற் றுழலும் அடியேனுன் தூய பாத கமலங்கட்
கன்புற் றழலின் மெழுகேபோ லகநைந் துருகிப் பணியேனோ
உன்பொற் றிருத்தாள் துணைகொண்டேன் உண்மையாக நற்கதிபெற்
றின்புற் றிருக்கு மாறருள்செய் எந்தாய் தணிகை மைந்தாவே. - (134)
கோவே அடியர் குறை தீர்க்கும் குணக்குன்றேயெங் குலக்கொழுந்தே
சேவே றீசன் மகிழ்ந்தளித்த செல்வக் கனியே செவ்வேளே
போவேன் வருவேன் பொய்யுரைப்பேன் இங்ஙன் காலம் போக்குவேன்
தேவே நானும் உய்யஅருள் செய்யாய் தணிகை ஐயாவே. - (135)
யானே தேது சொல்லினும்நீ யாதுங் கேளா ததுபோலத்
தானே மௌனஞ் சாதித்தல் தகுமோ உனக்குத் தகுமோதான்
ஊனே உருக உளமுருக உரோமஞ் சிலிர்ப்ப அடியேன்எம்
மானே உன்னை வணங்குதற்காம் வரந்தா தணிகை இருந்தாயே. - (136)
மானேர் விழியார் வலைப்பட்டு வனவே டன்றன் வலைப்பட்ட
மானே போல மதிகலங்கி வருந்து வேன்மா ளாமுனமெம்
மானே உன்றன் மனமிரங்கி வந்தாட் கொள்ளா யோஎங்கோ
மானே வள்ளி மணவாளா மைந்தா தணிகை எந்தாயே. - (137)
புத்தி யளிப்பா யென்றுமுயர் புண்ய கரும மேபுரியப்
பத்தி யளிப்பாய் நின்னுடைய பாத பத்ம மேபணியச்
சித்தி யளிப்பாய் நினதுபுகழ் செகத்தி லோங்க வேசெய்வாய்
முத்தி யளிப்பாய் காத்திடுவாய் முருகா தணிகை வருகோவே. - (138)
பாட அறியேன் திருத்தணிகைப் பரமா உனையன் பாய்ப்பணியக்
கூட அறியேன் தொண்டர்குழாம் குலவும் இடந்தா னேதென்று
தேட அறியேன் உனதுதிரு வடியே நிஜமாஞ் செல்வமென்று
நாட அறியேன் எவணுய்வேன் நாதா நீதா னருளாயே. [23-11-1896.] - (139)
வேறு
*என்போலு முழுமூடன் என்போலும் பெரும்பாவி எங்கு மில்லை
நன்போதம் நானெய்தி யுய்யுநெறி தனைச்சாரும் நாளு முண்டோ?
மின்போலும் இடைமடவார் இருமருங்கும் வீற்றிருப்ப வேல்கைக் கொண்டே
அன்பேயோ ருருவாகத் தணிகையினின் றருள்சுரக்கும் அமரர் கோவே.
[ஏவிளம்பி ஆவணி 6 20-8-1897.] - (140)
எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.
வேதனே தமிழில் வேதமுண்டாக்கும் விமலனே வெங்குருவேந்தே
போதனே ஞானப் புநிதனே ஒப்பில் புண்யனே பொன்னென மிளிரும்
பாதனே பாவப் பிணிக்கொரு மருந்தே பாரெலாம் போற்றுநற் றணிகை
நாதனே யிந்த நாயினே னுய்யும் நன்னெறி யேததை நவிலே. - (141)
பிள்ளைகள் தமக்கோர் குறையிருந் தாற்றம் பெற்றவ ரிடத்தினிற் சென்றே
உள்ளதையுரைக்க அவரிவர்தம்மை உவப்பித்தலுலகினில் முறைமை
வள்ளலேயுன்றன் மலரடிதந்தாள் என்றுநான்மனங்குழைந்தழுதும்
எள்ளளவேனும் இரங்கலை தணிகையிறைவனே யெம்பெருமானே. - (142)
மோகமாங் கடலைக் கடந்தமா தவத்து முநிவரர் தொழுமுழு முதலே
வேகமாச் செல்லு மயிலுவந் தேறும் வேலனே விண்ணவர் வேந்தே
தேகமா னதுவீழ்ந் திடுமுனே உன்றன் றிருவடி யடையுமாறருளாய்
ஏகனே எவரு மிறைஞ்சுநற் றணிகை யிறைவனே எம்பெரு மானே. - (143)
அரும்பொரு ளேயென் னப்பனே யிந்த அகிலஆ சைகளவை யனைத்தும்
துரும்பென மதித்துன் தூயடி களையெட் டுணையுமே மறந்திடா திறைஞ்சி
வரும்படி யான வரந்தனை யடியேன் தனக்குநீ மகிழ்ந்தருள் புரியாய்
இரும்பய னளிக்கும் எழில்திருத் தணிகை யிறைவனே எம்பெரு மானே. - (144)
துன்பமே யிதுகா றும்மநு பவித்தேன் சுகமினி யாகிலு மடைய
என்பவமொழித்துன்இணையடிகளுக்கே யாளாக்கநீயிரங்காய்
தன்பெய ரோதித் தன்னடி பணியும் சாதுக்க ளுக்குவீ டெனும்பே
ரின்பமே யளிக்கும் எழில்திருத் தணிகை யிறைவனே எனம்பெரு மானே. - (145)
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
நன்மை யென்பதோ ரணுவள வில்லா
நானும் ஐய இஞ் ஞாலத்தின் கண்ணே
புன்மை யென்பதோ ரணிகலம் பூண்டுப்
புல்ல ரிற்சிறந் தேபொலி கின்றேன்
இன்மை யென்பதே எனைவிடே னென்றே
என்னு டன்குடி கொண்டிருக் கிறதென்
தன்மை யென்பதீ துனக்குரைத் தேனென்
தன்னை யாண்டருள் தணிகைமன் னவனே. - (146)
* கற்று வந்ததோர் ஞானமு மில்லேன்
கடையனே னென்றன் காயந்தன் னுடனே
பெற்று வந்ததோர் நல்லறி வில்லேன்
பேதை யேன்பல பிறவிக டோறும்
உற்று வந்ததோ ரூழ்வினை யாலே
உன்ன ரும்பிணிக் கன்னமாய் நின்றேன்
சற்று வந்துநீ யருள்செயி லுய்வேன்
தணிகை யங்கிரிச் சண்முகத் தேவே.
[பிரஜோத்பத்தி ஐப்பசி 15, திங்கட்கிழமை, மஞ்சகுப்பம், 30 October 1871] - (147)
* பத்தி யென்பதோ ரணுவள வில்லாப்
பாவியே னுன்றன் பாதபங் கயத்தைச்
சித்தந் தன்னிலோ ரிமைப்பொழு திருத்தேன்
செம்மை யொன்றிலாத் தீயரிற் றீயேன்.
முத்தி யென்பதா மதனை யெண்ணுவது
முடவன் கொம்புதே னுக்கவா வுதலாம்
சித்தம் வந்துநீ யருள்செயி லுய்வேன்
திருத்த ணிப்பொருப் பமர்ந்தசெவ் வேளே.
[பிரஜோத்பத்தி கார்த்திகை 12, ஞாயிற்றுக்கிழமை, மஞ்சகுப்பம், 26 November 1871] - (148)
வேறு
ஆவியா யுயிர்கடொறும் அமர்ந்தாய் போற்றி
அயனகந்தை அடக்குவித்த ஐயா போற்றி
தாவரிய கடனடுவே மரமாய் நின்ற
சதுரனையும் வேற்படையாற் றடிந்தாய் போற்றி
பாவியரிற் பெரும்பாவி யான இந்த
பதகனுக்கும் பத்திநெறி யருள்வாய் போற்றி
தேவர்சிறை மீட்டபெரு மாளே போற்றி
திருத்தணிகை மலையானே போற்றி போற்றி. - (149)
எத்திசையும் புகழ்படைத்த இறையே போற்றி
என்றுமிளை யோனாய் இருப்பாய் போற்றி
முத்திதனைத் தரவல்ல மூர்த்தீ போற்றி
மூவுலகுந் தொழநின்ற முருகா போற்றி
பத்திதனை யறியாத பாவி யேற்குன்
பாதமலர் தந்துபணி விப்பாய் போற்றி
சித்தர்மனங் குடிகொண்ட தேவே போற்றி
திருத்தணிகை மலையானே போற்றி போற்றி - (150)
கீர்த்தனை.
தொப்பை யுடையநம்
அப்பனைத் தினமுநி
னைத்தரு வினைகள
னைத்து மறுப்பாம்.
1. பல்லவி.
திருத்தணியே தினம் பணியே - மனமே
திருத்தணியே தினம் பணியே.
சரணங்கள்.
1. ஒருத்தரு மறியாப் - பெருத்த மொழிக்கன்று
அருத்த முரைத்தநங் - கருத்த னுறைதரும்- (திரு)
2. புள்ளி மயிலைவிட்டு - நள்ளி ரவினில்வந்து
வள்ளியைத் திருடின - கள்ள னுறைதரும்- (திரு)
3. ஆரு மெதிர்க்கரும் - போர்புரி யுங்கொடுஞ்
சூரனை வென்றஅதி - வீர னுறைதரும்- (திரு)
4. ஒருகா லரிதிரு - மருகா எனவுளம்
உருகா சொலஅருள் - முருக னுறைதரும்- (திரு) - (151)
2. பல்லவி.
தஞ்சமருள் ஐயா-எனக்குன்
தஞ்சமருள் ஐயா.
சரணங்கள்.
1. மஞ்சு தவழுந் தணிகை மலையாய்
நெஞ்ச முருகி நிற்கும் எனக்குன்- (தஞ்சம்)
2. பஞ்சு மிந்தப் பாடு படுமோ
என்செய் வேனிவ் வேழை யேற்குன் - (தஞ்சம்)
3. தளர்ந்து வந்துன் சரணடைந்தேன்
உளந்த னில்நான் உவகை யெய்தத் - (தஞ்சம்)
4. மனது நொந்து நினை யடைந்தேன்
எனது துயரம் யாவுந் தீரத் - (தஞ்சம்) - (152)
3. பல்லவி.
சும்மா இருக்கலாமோ - மனமே - நாம்
சும்மா இருக்க லாமோ.
அநுபல்லவி.
எம்மான் எவருந் தொழும் பெம்மான் பெருந்தவர்கள்
தம்மான் தணிகை யமர் அம்மான் என்னாமலே - (சும்மா)
1. வெம்மாயை தன்னில் சிக்கினோம் - அதை
விட்டுவர என்ன பக்குவ ம்-
வேதா - விண்ணோ ரவர்க்குத் தாதா - தணிகைமலை
நாதா - நளினமலர்ப் பாதா என்றேபணி - (சும்மா)
2. நித்யா னந்தத்தை மறந்தோம் - நாம்
நிஷ்டை யடியோடே துறந்தோம் -
நீவா - நினைக்குமெனைக் காவா - கருணைசெய்து
வாவா - வளர்தணிகைத் தேவா என்றேசிந்தி - (சும்மா)
3. காலம் வீணாகக் கழித்தோம் - நாம்
கடவு ளடியாரைப் பழித்தோம் -
கண்யா - கனசுத்தசாட் - குண்யா* - குறைவில் தணிகைப்
புண்யா - புகழ்சுப்ர - மண்யா என்றே வணங்கு - (சும்மா) - (153)
4. பல்லவி.
என்ன செய்யலாம் - மனமே - நாம்
என்ன செய்யலாம்.
அநுபல்லவி.
பன்னி பன்னி மிக பாவங்கள் செய்தோம்
பரம னடிபணியும் பத்தரை வைதோம் -- (என்ன)
சரணங்கள்.
1. ஊழ்வினை யேபாலப்பட்டது - நமக் - குள்ளநற் குணமுங்கெட்டது
தாழ்மை யான புத்தி நம்மை தாறு மாறாச் செய்யச் சொல்ல
சற்றும் யோசியாமற்செய்து தவிக்கின்றோம் நற்கதியிற் செல்ல -- (என்ன)
2. காமம் ஓங்கி வளர்கின்றதே - நங் - கடவு ளன்பு தளர்கின்றதே
கால கோடி விஷம தாமக் காமம் வேரோ டறுவதற்கும்
கடவு ளன்பைப் பெற்று மோக்ஷ கதியில் என்றும் உறுவதற்கும் -- (என்ன)
3. துஷ்ட யோசனைகள் தொடுத்தோம் - நாம் - தூயநெறி யனைத்தும் விடுத்தோம்
துஷ்டத்தனம் எனும்பேய் தலையைச் சுழற்றிக் கொண்டே ஓடுதற்கும்
சுப்பிர மண்ணியன் பதத்தைப் பற்றி சுகத்தை யென்றுங் கூடுதற்கும் -- (என்ன) - (154)
5. பல்லவி.
தயவாய் நீ யிருப்பாய் - என் தன்னை - ஆதரிப்பாய்
சரணங்கள்
1. அயன்முத லமரர்கள் அநுதினம் அருமையா
அண்டத் திருந்து வந்து தெண்ட னிட்டு வணங்கும்
ஐயா - தணி - கையா (தயவாய்)
2. இலகுன தடியிணை களைத்தின மும்பணி
என்ற னுக்கு முன் சிந்தை மகிழ்ந்தருள்
ஈசா - தணி - கேசா - (தயவாய்)
3. மரைமல ரனவுன திருவடி களைத்தினம்
வந்தனை செய் கின்ற என்ற னிடமுஞ் சற்று
வாவா - தணிகைத் - தேவா - (தயவாய்) - (155)
6.பல்லவி.
பத்தி யருள வேண்டும் - உன் பாதம் பணிய
பத்தி யருள வேண்டும்.
அநுபல்லவி.
எத்திசையும் புகழ் முத்தி தருந் தணிகை
எந்தை யெனுங் குகனே - ஈச னருள் மகனே - (பத்தி)
சரணங்கள்.
1. முத்திநெறி யோசற்றும் அறியேன் - உயர்
முநிவர் தவநிலையுங் குறியேன்
பித்தன் கண்ட படி பிதற்றுகிறேன் வெறியேன்
பேரா னந்தத்துக்கோ பேதைமிகு சிறியேன்
பேதை யாகிலு மென் தாதையே என்றன்
மீது கிருபை செய்தே ஆதர வாகவே - (பத்தி)
2. சத்திய நெறியிலே நில்லேன் - உயர்
சற்சனர் குழுவிலுஞ் செல்லேன்
நித்திய முன்புகழை நேசமுடனே சொல்லேன்
நீயே கதியென் றுன்றன் நீள்கழல்களைப் புல்லேன்
நீச னாகுமென்றன் - மாச கலமிகும்
ஆசை யுடனே உப - தேசஞ் செய்து நல்ல - (பத்தி)
3.பஞ்சு போல மெத்த நொந்து போனேன் - பார்க்கும்
பலர்க்கும் பழிப்புக்கா ளானேன்
தஞ்சமாக வுன்றன் தாளையடைய லானேன்
சல்லியந் தீராமல் நான் இன்னந்தான் தளர் வானேன்?
தஞ்ச மென்ற என்றன் - நெஞ்சங் குறைதீர
மஞ்சு தவழ் தணிகை - குஞ்சரமே யிரங்கிப் - (பத்தி) - (156)
7.பல்லவி.
சுத்த மாக் கையா - மனதைப் - பரி
சுத்த மாக் கையா
அநுபல்லவி.
வெற்றி புரியும் வேலன் தணிகை
அத்த னென்று நித்தம் பணியச் - (சுத்தம்)
சரணங்கள்.
1. பத்தி யான பயிரை வளர்த்து
பாவ மான களையைத் தொலைத்து
முத்தி யான பலனை யெடுக்க
முருக உன்னைத் துணை யடுக்கச் - (சுத்தம்)
2. காம மான காட்டை யழித்துக்
கடுமை யென்னுங் கூட்டை யொழித்துக்
கங்குல் பகல்நின் கழ லிணையைக்
கருதிக் காத லுடன் அணையச் - (சுத்தம்)
3. துன்பம் என்பதி யாவுந் தீர்ந்து
தூய நன் னெறியிற் சேர்ந்து
சுப்ர மண்யனே நின் பாதம்
தொழவும் பெறவும் வரப்ர சாதம் - (சுத்தம்) - (157)
8.பல்லவி.
வேலாயுத தேவா - இனி
மேலாயினுங் காவாய்.
அநுபல்லவி.
ஆலாலம் உவந்தே யுண்ட அரனார் செல்ல புத்ரா
அன்பாய் மலர் தூவி அருச்சிப்போர் பிரிய மித்ரா.
1. ஆதி பராபர, மான மஹாசிவ,தேவ பிரானருள்
பால க்ருபாகர - (வேலா)
-----------------------------------------------------------
Image: pic0021_a.jpg Fileid: pic0021_a
2. ஒவெமைக் காவென, தேவர்குழாமழ, தாவி அபயந்தந்து,
ஆவி அவர்க்கருளும் -- (வேலா)
3.அந்தக னார்க்குயிர், சொந்தமா முன் உன்சு, கந்த அடிஅர,
விந்த்ம் பணிய அருள் -- (வேலா)
4. வேதனை யால்மிக, வாடி வருந்துகிற, பாதக னாமிந்த,
பாவிக் கிரங்கியருள் -- (வேலா) - (158)
9.பல்லவி.
தேவ தேவ திருத்தணி காசலத்துறை
செல்வனே எனையானே.
அநுபல்லவி.
மூவருந் தொழ நின்ற முதல்வனே
மொய் குழ லுமை யம்மை புதல்வனே
முருகா என, ஒருகால் மனம்,
உருகா சொலத் தருவாய் வரம் -- (தேவ)
சரணங்கள்.
1. காவி விழியர் மயற் கண்ணியி லகப்பட்டு
சடையனாய்க் கெட்டேனே
கருணை செய்தெனைக் காத்திரக்ஷி யென்றுன்
கழலிணை கிட்டேனே -- (தேவ)
2. நாவி னாலுன்றன் நல்ல திருப்புகழை
நாயினேன் துதியேனே
நன்மை யென்பதை நணுக ஒட்டாப் பவம்
நாடும் விதியேனே -- (தேவ)
3. சேவி யாம லென்றன் சென்மத்தை வீணாகச்
சிறியேன் கழித்தேனே
திருவடியே சர ணென்றுனை யடைதலைச்
சிரித்துப் பழித்தேனே -- (தேவ)
4. தாவியபய மென்றுன் தாளிணை யடைந்தேன்
சரவண பவ முருகா
தருணமிது எனக்குன் சரண மருளுதற்குச்
சண்முக அரி மருகா-- (தேவ) - (159)
10. சரணங்கள்.
1. பாது காத்து ரக்ஷிப்ப துன்கட னென்று
பன்னினேன் பலதரமே
பன்னியும் உன்மனம் இரங்கலை யேயென்ன
பண்ணுவேன் என்துரையே.
2. தாயைப் போல என்னைக் காத்திடு வான்தணி
காசலன் என்றேனே
சற்றுமே யிரங்காம லிருக்கி லென்ன
சதியிது என்பேனே.
3. தஞ்ச மெனக்குத்தணி காசல னுடையபொற்
றாளே யென்றேனே
தமிய னேனை ரக்ஷியாமற் கைவிடுதல்
தகுமோ எங்கோவே.
4. பிள்ளை தப்பு செயிற் பெற்றவர் தாமதைப்
பெரிதா நினைப்பாரோ
பேதையேன் செயம் பிழையைமன் னித்தாலுன்
பெருமைக்குக் குறைவாமோ.
5. கவலைக் கடல்நடுவில் கலங்கி நிற்குமிந்தக்
கடையனைக் காவாயோ
கருணைக் கடலெனும் பெயரைப் படைத்துமெனைக்
கைவிட்டு விடுவாயோ. - (160)
11. பல்லவி.
தணிகே சனைத்தொழு மனமே-உன்றன்
சல்யமெல்லாந் தீருஞ் சத்தியம் தினமே.
சரணங்கள்.
1. புவிமாயை பொல்லாத அம்பு-அது
புண்ணிய வான்களும் போராடும் லம்பு
தவியாமல் ஐயனை நம்பு-அவன்
தாளே தலைக்கணி யாகிய கெம்பு- (தணி)
2. சதமல்ல உலகிலுன் னாண்டு-நீ
சாவாமுன் நற்கதி பெறுதற்கு வேண்டு
இதமா ஐயன்பதம் பூண்டு-பாழ்
இடுக்கணாகிய பெருங் கடலைநீ தாண்டு- (தணி)
3. எல்லாம் இவ்வுலகத்தில் மாயம்-இதை
எண்ணா திருத்தல் வெகுஅநி யாயம்
கல்லோ தான் சொல் லிந்தக் காயம்-நங்
கருத்தனைக் கருதல்நற் கதிர்காமு பாயம்- (தணி)
4. இருப்போ மென் பதுசுத்த பொய்யே-மற்
றின்றோ என் றோநாம் இறப்பது மெய்யே
இரப் போர்க்குத் தருமங்கள் செய்யே-இந்த
இக துக்கம் யாவையும் விட்டுநீ உய்யே- (தணி)
5. உலகாசை பொல்லாத மல்லு-ஐயன்
உதவியில் லாததை வெல்வையோ சொல்லு
பலகாலுந் தணிகைக்குச் செல்லு-அவன்
பதமே துணைகொண்டி யாவையும் வெல்லு- (தணி)
6. பார்மீதி லென்னைப் போல் பாவி-சுற்றிப்
பார்த்தாலு மொருவரைக் காணேன் நான்தாவி
நீர்மேல் துரும்பா மென் னாவி-சற்றும்
நிலையின்றித் தவிக்கின்ற தையோநீ மேவி- (தணி)
7. உலகப் பொருளின்மேல் நேசம்-உனக்
குண்டா யிருந்தா லதுவெகு நாசம்
கலகப் ப்ரியர்சக வாசம்-ஒரு
காசுக் குதவாது கனமான மோசம்- (தணி)
8. தணி கேசனே மெய்யான தேவன்-அவன்
தாளிணை சேர்பவ னேபாக்ய னாவன்
குணமான யோக்யனு மாவன்-ஓர்
குறையின்றி மோக்ஷ கதிக்கவன் போவன்- (தணி)
9. மனமே நீ பொல்லாத துட்டன்-உன்றன்
வசமகப் பட்டல்லோ இப்படிக் கெட்டேன்
முனமறிந் தாலுனைக் கிட்டேன்-இனி
மோசஞ்செய் வாயாகில் உன்னைநான் விட்டேன்- (தணி)
10. பொல்லாப் புவியி லிருந்து-பாழும்
பொருள்தேட வேண்டி மிகவுந் திரிந்து
எல்லா விதமும் வருந்தி-மெத்த
இடர்பட்டோ மேயினி யேனும் பொருந்தி- (தணி)
11. பொய்யால் நிறைந்த துலகம்-இதில்
பொருள் தேடப் போகில் விளையுங் கலகம்
மெய்யான பொன்போ லிலகும்-ஐயன்
மேலாம்ப தந்தொழு தால்வினை விலகும்- (தணி)
12. காக்ஷி யளிப்பது பத்தி-நங்
கர்மங்கள் யாவும் ஒழிப்பது பத்தி
மோக்ஷ மளிப்பது பத்தி-ஐயன்
முன்னே களித்திடச் செய்வதும் பத்தி- (தணி)
13. தீமையெல் லாம்போவ தென்று-நாம்
செய்தபவ மெல்லாந் தீர்வது மென்று
காமந் தொலைவதும் என்று-நங்
கடவு ளடியை யடைவதும் என்று- (தணி)
14. சங்கடந் தன்னில்நின் றெழுவோம்-நாம்
சாமிபா தத்திலே சரணென்று விழுவோம்
துங்க மலர்ப்பதந் தொழுவோம்-எந்
துயர்தீர்த்தி டென்றே பலதரம் அழுவோம்- (தணி)
15. ஆதர வோநமக் கிலையே-நம
தல்லலெல் லாந்தீரு மாறேது சொலையே
நீதரு மநெறி நிலையே-நெறியா
நீயிருந் தாலெனக் கிலையோர்க வலையே- (தணி)
16. துன்பங்க ளைவிடத் துணிவோம்-ஐயன்
தூய மலரடி யைத்தலைக் கணிவோம்
அன்பாக நாளும் பணிவோம்-அவன்
அருளைப்பெற் றேமோக்ஷ வீட்டினில் தணிவோம்- (தணி)
17. தேகம் அநித்யமென் றெண்ணு -ஐயன்
திருவடி மறவாம லேதியானம் பண்ணு
மோகங் கொடியதென் றெண்ணு-ஐயன்
முன்னின்று தோத்திரம் பலகாலம் பண்ணு- (தணி) - (161)
12. செங்கல்வராயா-என்
பங்கில் வராயா.
கருணையங் கடலே-எனை
என்றுங் கைவிடலே. (1)
தணிகையங் கிரியாய்-எனக்குத்
தண்ணருள் புரியாய். (2)
பன்னிரு கையா-கண்
பாரெனை ஐயா. (3)
ஆறு மா முகனே -எனக்
கருள் செய்யாய் குகனே. (4)
கடையேனைப் பாராய்-என்
கவலையைத் தீராய். (5)
கதிர் காம வேலா-பர
கதியருள் சீலா. (6)
பரங்கிரி நாதா-எனைக்கண்
பார்க்கலா காதா. (7)
செங்கோட்டு வேலா-நல்லின்
பங்காட்டு சீலா. (8)
சண்முகத் துரையே-ஞான
தத்துவம் உரையே. (9)
ஆவினன் குடியாய்-என்
அல்லலை முடியாய். (10)
குமர கோட்டத்தா-என்
குறையை ஓட்டத்தா. (11)
வள்ளி மணாளா-நீ
வந்தெனை யாளாய். (12) - (162)
பொய்யுலக மாயைதனைப் போக்கியே தென்றணிகை
ஐயன் குமரன் அடி சார்வ தெந்நாளோ. - (163)
மூவாமுதல் வோனேதிரு முருகாஅரி மருகா
தேவாதிருத் தணிகாசலச் செல்வா எச்சரிக்கை. - (164)
வேல்.
துன்ப மறுத்தொழித்துத் தொல்வினையும் போக்கிப்பே
ரின்ப மருளு மினிதாக-அன்புடனே
தேவர்களுஞ் சித்தர்களுஞ் சென்றிறைஞ்சுந் தென்றணிகை
மேவிநின்ற சேயின்கை வேல்.
மகாவிஷ்ணு.
கோபாலா நின்னையே கோரிநிதம் போற்றாது
மாபாத கஞ்செய்தோம் மாயத்தால்-ஆபாவம்
வெய்யநர கக்குழியில் வீழாமே தப்பியாம்
உய்யும் வழியொன் றுரை. (1)
மாயவா போற்றி போற்றி வன்கணர் காண மாட்டாத்
தூயவா போற்றி போற்றித் தொண்டர்கள் தங்க ளுக்கு
நேயவா போற்றி போற்றி அவர்கள்தம் நெஞ்சி லென்றும்
மேயவா போற்றி போற்றி விஷ்ணுவே போற்றி போற்றி. (2) -
திருஞான சம்பந்த சுவாமிகள்.
ஊன சம்பந்த மற்றுயர் வாகிய
மோன சம்பந்த முற்று மொழிவரும்
வான சம்பந்தம் பெற்றுவா ழத்திரு
ஞான சம்பந்த னற்றா ளடைவமே.
[திருஞான சம்பந்த சுவாமிகள் திருநக்ஷத்திரம்-சுக்கில வைகாசி 16
வியாழக்கிழமை- மூலநக்ஷத்திரம்.]
சென்னை. / 27 மே 1869. /வ.த. சுப்பிரமணியன்.
திரு நாவுக்கரசு சுவாமிகள்.
சேவே றீசர்க்குத் திரிகர ணங்களால்
ஆவே போன்றன்பு டன்தொண் டியற்றுஞ்சொற்
கோவே யுன்னைத் துணைக்கொள்ளு வேனெனைக்
காவே நின்சீர்க் கழலிணைக் கீழ்வைத்தே. (1)
திருநாவுக்கரசு சுவாமிகள் திரு நக்ஷத்திரம்-சுக்கில சித்திரை 25
புதன்கிழமை-சதய நக்ஷத்திரம்.
சென்னை /மே 1869. /வ.த. சுப்பிரமணியன்.
பூவுக் கரசெனுந் தாமரை மேலுறை புங்கவனுந்
தேவுக் கரசெனு மாலுஞ் சிறந்தசெல் வங்கடருங்
காவுக் கரசுந் தொழுங்கட வுட்குக் கனியனைய
நாவுக் கரசுபொற் றாளிணை யேயென்று நந்துணையே. (2)
[திருநாவுக்கரசு சுவாமிகள் திரு நக்ஷத்திரம் பிரமோதூத சித்திரை 14,
சதயம், திங்கள்] மஞ்சகுப்பம், / 25-4-1870
தேவர்க் கிறைவன் சிவபெருமான் சிந்தை மகிழத் தேவாரப்
பாவைக் கறந்த பசுவனையார் பரம னுடைய கோலத்தைக்
காவிற் சிறந்த ஐயாற்றிற் கண்டு களித்த செல்வர்திரு
நாவுக் கரசர் பொற்பாதம் நாமெல் லோரும் அடைந்துய்வாம். (3)
சுந்தர மூர்த்தி சுவாமிகள்.
பாவ நாசனைப் பத்தர்கள் நேசனைத்
தேவ தேவன் சிவனெம் மிறைவனைப்
பாவை பாலிர விற்செலப் பண்ணுஞ்சீர்
நாவ லூரர்தாள் நாமடைந் துய்வமே. (1)
[சுக்கில ஆடி 31 வெள்ளிக்கிழமை சுவாதி நக்ஷத்திரம்-
சுந்தரமூர்த்திநாயனார் திருநக்ஷத்திரம்.]
சென்னை /13 ஆகஸ்ட் 1869. /வ.த. சுப்பிரமணியன்.
இந்திர னாதி யிமையோர் வியப்புறத் தானொருவெண்
சிந்துர மேலும் பரிமிசைச் சேரனு மாச்சிறந்தே
அந்தர மேசென் றருங்கயி லாயத் தனையடைந்த
சுந்தர மூர்த்திபொற் றாளையன் போடு துதித்துய்வமே.
[சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருநக்ஷத்திரம் -பிரமோதூத௵,
ஆடி 21 வியாழக்கிழமை; சுவாதி.]
மஞ்சகுப்பம் /4-8-70 )
மாணிக்கவாசக சுவாமிகள்.
ஈச னேகுரு வாகஎ ழுந்துவந்
தாசி லாஅன்போ டாண்டரு ளப்பெற்ற
மாசி லாமணி யேயுயர் மாணிக்க
வாச கர துணை நின்தாண் மலர்களே.
ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் திருநக்ஷத்திரம்-சுக்கில௵
ஆனி 30 திங்கட்கிழமை, மகநக்ஷத்திரம்.
சென்னை /12 ஜூலை 1869.
வேணிப் பிரானை விதியோ டரியுமே மேவரிய
தாணுக் கடவுளைச் சங்கர னைச்சம்பு வையெவருங்
காணப் படாப்பெரு மானைப் பரிமிசைக் காட்டுவித்த
மாணிக்க வாசகர் பொற்றாள் துணைக்கொண்டு வாழுவமே.
பிரமோதூத ஆனி 20; சனிக்கிழமை; மகம்.
ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் திருநக்ஷத்திரம்.வ.த.சு.
திருவெவ்வுளூர் / 2-7-70.
சமயகுரவர்.
நீறுடனே சண்டிகையும் நின்மலமா மைந்தெழுத்தும்
பேறு தருமென்று பேசுகின்ற-மாறில்
சமயமே உண்மையெனத் தாபித்த நால்வர்க்
கமைவமே நாமடியா ராய்.
---------------------
பிற்சேர்க்கை III
திரு. வ.சு. செ. அவர்கள் இயற்றிய தனிப்பாடல்களுள் சில.
11-1-1916.
தணிமலை கோபம் பிறவியைத் தாய்போற் றலையளிசெய்
தணிமலை நாதன் திருவடி யும்புனை தாருமொளி
தணிமலை யானை மகள்மயில் சேவல் தகுவர்நெஞ்சுந்
தணிமலை வேலுஞ் சதாதுதி செய்யென் னளிமனமே.
6-7-1916.
சட்டி விரதந் தமியே னனுட்டிக்கக்
குட்டி யயனைக் கொடுஞ்சிறையி--லிட்டிஃ
தாமெய்ப் பொருளென் றரற்குபதே சித்தவனே
சேமப் பொருளுரைத்தான் தேர்.
(சட்டி விரதம் ஆரம்பித்தபோது) 19-10-1916.
முருகா
ஒருகா
லருகா
இருகா
27-6-1921.
எண்ணம் நிறைவேற ஏரம்பன் பாதமலர்
உண்ணம்பி ஓதுவே னோர்.
-----------------------------
தணிகை நவரத்நமாலை. (காமாலை நீங்க)
பாமாலை சூடிப் பணிவேன் எனைவருத்துங்
காமாலை தீரக் கனிந்தருள்வாய்--பூமாலை
என்றாய் புனைய மகிழ்எந்தாய் தணிகைமலை
நின்றாய் உனையே நிதம். - 1
நிதமும் பணிவேன் உனைப் போற்றி
நீயல் லாமற் பிறரொருவர்
சதமு முண்டோ என்றனக்குச்
சாரங் கதிதான் வேறுண்டோ?
அதமுஞ் செயுங்கா மாலையெனும்
அந்நோய் தீரத் திருவாக்கால்
இதமுண்டாகுஞ் சொல்லொன்றை
இயம்பாய் தணிகை மலைக்கரசே. - 2
மலைக்கரசேநீ வாழ்காவிச்
சிலைக்குரு கேனென் தேகத்தைக்
கலக்கமு றச்செய் காமாலை
தொலைக்கும்வி தந்தான் சொல்லாயோ. - 3
சொல்லா யோஎனைச் சூழுங்காமாலை நோய்
நில்லா தோடு நெறியிஃ தாமென
நல்லா ரேத்து தணிகை நயந்தமர்
இல்லா கக்கொளு மெந்தை இறைவனே. - 4
எந்தையே இறைவனே என்று நாடொறுஞ்
சிந்தையே தணிகையிற் சேர்ப்பன் என்னுடல்
வந்துமே கூடுகா மாலைநோய் தெறக்
கந்தனே நின்னருள் காட்ட வேண்டுமே. - 5
காட்ட வேண்டுநின் காட்சி கொண்டுநான்
வாட்ட வேண்டுங்கா மாலை நோயதை
ஓட்ட வேண்டுநா னுற்ற தீவினை
பாட்ட றாத்தணிப் பதியில் வேலவா. - 6
வேலவா! தணிகை மேவு வேந்தனே! நீலத்தோகை
மேலவா! குரவு நீபம் வெட்சிகூ தளவிருப்ப!
மாலவா நீங்க என்கா மாலை நோய் நீங்க வுன்றன்
பாலவா ஓங்க உள்ளப் படரொழித் தருள்வாய் ஐயா! - 7
ஐயா உனையன்றி யார்துணை யிவ்வை யகந்தனிலே
பையா டரவெடுத் தாடு மயிலிவர் பன்னிரண்டு
கையா எனைநலி காமாலை தீரக் கடைக்கணிப்பாய்
செய்யாய் சிவந்த உடையாய் தணிகைச் சிவக்கொழுந்தே! - 8
தேவே தணிகைக் குமரா எனைச்சேரு மாலை
நோவே ஒழியச் செயுமாரருள் நோன்மைக் கீடா
யீவே னெதைநான் புனைந்தேனடி யேனு மன்பர்
பாவே றடிக்கிந் நவரத்தினப் பாவின் மாலை.
7-6-1921 - 9
10-1-1922
1. தேடும் பிரம னறியாச் சிவன்தரு மைந்தனே என்றும்
நாடு மடியவர்க் கென்றும் நன்மை தருபவ னென்றும்
பாடும் பரிசுடை யென்முன், பத்தர் தொழுகுக் குடமே!
ஆடுஞ் சிகண்டியி லேறி ஐயன் வரவே அழைப்பாய்.
2. புனமா னுடன்
தினைமா வுணும்
முனைவா என
வினைபா றுமே.
30-7-1922
துன்பம் வரினும் துதிவரினும் மற்றெந்த
இன்பம் வரினும் எதுவரினும்--முன்பி
னறியா இறைவ னருளிதுவா மென்றே
நெறியான மார்க்கத்தி னில்.
ஏனோ ஒருநிமிட மேனுந் தணிகைமலைத்
தேனோ எனவுருகிச் செப்பாது--மானோ
இவளுடைய கண்ணென்றே இவ்வுலகி லந்தோ
துவளுகின்றாய் என்னெஞ்சே சொல்.
வீண்பேச்சு பேச விரும்புமென் நெஞ்சேநீ
ஊண்பேச்சு மூச்சு மொழிகின்ற--மாண்பேற்ற
திவ்வுடலம் மென்பதையோர்ந் தெந்தை தணிகேசன்
செவ்வியபா தாம்புயமே சேர்.
போன பொழுதெல்லாம் போகட்டும் இன்றுமுத
லேனு மெழிற்றணிகை யேந்தலை--வான
நிலைக்கவே வேலெடுத்த நின்மலனைப் புந்தி
நிலைக்கவே போற்றாய் நிதம்.
4-8-1922.
சொல்ல வருமோ துரையே எனக்கருள்வாய்
கொல்ல வருமேமன் குறுகிநின்றே--அல்ல
லுறவா தனைசெய் துயிர்கொளுமவ் வேளை
இறைவா அறுமுகவா என்று.
தணிமலையென் றேநித்தம் சாற்றுவோர் கோபம்
தணிமனத்த ராகித் தமது -பிணிமலைவர்
ஆதலால் அன்புடனே அம்மலையி னாமங்கள்
ஓதலால் இன்பம் உறும்.
சின்னேரம் நின்புகழைச் சிந்திக்க யான்முயன்றால்
என்னே எனதுமனம் எங்கெங்கோ--கொன்னே
திரிந்து நினைமறக்கச் செய்கின்ற தீசா
பரிந்து திருக்கடைக்கண் பார்.
ஏதுகுறை யெனக்குண் டெம்மான் திருத்தணிகை
நாத னருளிருந்தால் நானிலத்தில்--பூதி
பெறுவேன் சுகமும் பெறுவே னினிஐ
யுறவேன் எதையும் உற.
14-1-1923
சுவாமிக்குத் தம்மேல் கோபம் என்று அம்மா சொல்லக் கோபந் தணியப் பாடியது.
என்றாய் நலியச் செயுநோ யகன்றவ ரின்பமுற
மின்றாழ் மருப்புமுக் கண்ணும் பிறையும் விளங்குகயக்
கன்றாம் விநாயகர்ப் போற்றித் திருத்தணி கைக்குமரன்
தன்றா மரையடிக் கேகவி மாலை தருகுவனே.
1. பொன்னடிக் கேதொண்டு செய்யு மடியார்பொருட் டிரங்கு
யன்னவர் செய்த பிழைபொறுத் தாளும்அருட் டிறந்தான்
நின்னதென் றோர்ந்து நினையே சரணுறு நெஞ்சினரென்
அன்னை பிழைபொறுத் தாளா திருப்ப தழகல்லவே.
2. அழகல்ல ஐயனே கோபந் தணியா தமர்வதுநீ
மழகன் றெனினுங் குருநாத னல்லவோ வாழ்பதிதான்
பழகி யுகந்த தணிகை யலவோ பரசிவனார்
குழக உனையன்றி உண்டோ துணையிக் குவலயத்தே.
3. தேவே தணிகை மலைக்கர சேயுன் திருவடிக்கே
பூவே நிதமணி தொண்டுபூ ணன்னை புரிபிழைகள்
யாவே யெனினும் பொறுத்தரு ளப்பா இமையவர்தம்
கோவே பிரமனைச் செற்றருள் செய்த குருமணியே.
4. குருமணி கீரன் குறைகேட் டுடனே குறைதவிர்சுப்
பிரமணி கையிழந் தாளுக் கிரங்கியே பின்னமில்கை
தருமணி என்றாய் தலையுறு நோயைத் தவித்தருள்செய்
திருமணி யேயுனை யன்றிப் பிறிதொரு திக்கில்லையே.
5. திக்கில்லை வேறே தணிகையாய் உன்றன் சினத்தினுக்கி
லக்கல்ல நாங்கள் பிழைபொறுத் தாளுதி லங்கைநகர்ப்
புக்கல்லல் செய்த தசமுகற் செற்ற புயனமருச்
சிக்கல் அலைவாய் பரங்குன்று வாழுஞ் சிகாமணியே.
6. மணியே உனையலங் காரங்கள் செய்து மலர்புனையப்
பணியே பணியாத் தலைக்கொளன் னன்னை பலதினமாப்
பிணியே வருத்த மெலிந்திட்டும் உய்வகை பேசலிலை
கணியே எனநின்ற கற்பக மேவழி காட்டுதியே.
7. காட்டுதி நோய்தவிர் மார்க்கமென்
னன்னைக்குக் காட்டியபின்
ஓட்டுதி எங்கள் பிணியெலாம்
பின்னர் உனையுணர்ந்தே
தாட்டுதி செய்கின்ற பாக்கிய
மொன்றைத் தரவிசைந்து
பூட்டுதி சேந்தனே ஏழையோ
நெஞ்சையுன் பொன்னடிக்கே.
1-7-1923
கடற்கத் தரிக்காய்வேற் கையாவத் திக்கா
யடற்கத்தர் வாழ்வே அருள்வாய்--விடற்கத்த
பேதமுள காயமிதைப் பேணித்தேங் காயர*சம்
பூதமு ளங்கி புரை.
(வேற்கையா! வாழ்வே! அத்த! ஆயாசம், புரை விடற்கு அருள்வாய்.)
20-9-1923
எவ்வேலை யான்செய்ய எத்தனங்கள் செய்திடினும்
அவ்வேலை நன்றா யமையவே--செவ்வேலைச்
சித்தந் தனிலிருத்திச் செவ்வேள் பதமலரை
நித்தந் துதிப்பே னினைந்து.
6-10-1923
யார்க்கு மிறைவன் திருச்சொக்க நாத னிடமமர்ந்த
சேற்க ணுமையா ளரசுசெய் சீருஞ் சிவபுரம்போ
லூர்க்கு ளுயர்வும் பிறங்கு மதுரை ஒருநகரைப்
பார்க்கும் பலன்பெற்ற கண்களின் பாக்கியம் பாக்கியமே.
8-5-1927
சரசுவதி தோத்திரம்.
(பள்ளிகளுக்கு)
கல்விக் கரசீ குணவதியே
கற்றோர் போற்றுங் குணநிதியே
வெண்டா மரைவாழ் சுந்தரியே
விளங்கும் வேத தந்தரியே
வைரக் கிரீடம் புனைந்தவளே
வீணை படிகம் புத்தகமும்
விளங்குங் கரத்து வித்தகியே
வெள்ளைக் கலையை யுடுப்பவளே
வேண்டுங் கலைகள் கொடுப்பாளே
வெள்ளைப் பணியே பூண்டவளே
வேண்டுங் கம்பரை யாண்டவளே
வேதா முதலோர் நாவிலுறை
வெள்ளைக் கிளியே பூவிலுறை
எளியேம் பாலர் நின்மலர்த்தாள்
என்றும் போற்றித் துதிக்கின்றோம்
கழக மிதன்கண் வருவாயே
கல்வி நிரம்பத் தருவாயே
சரஃச்வதி தேவி பூரணியே
சரணஞ் சரணஞ் சரணுனக்கே.
6-11-1928
1. எத்திக்கும் போற்று மெழிற்றணிகை வேலவர்க்குத்
தித்திக்கும் பாடல் செவிக்களித்த -- முத்திக்குச்
சொந்த அருணகிரி தூமலர்ப் பாதத்தை
எந்தவித மிறைஞ்சு வேன்.
பாடிப் பணியச் சுவைத்தமிழ் கூடு பதமறியேன்
ஆடிப் பணிய உருகாத நெஞ்ச அவலமுள்ளேன்
கூடிப் பணிய அடியவர் கூட்டங் குறுககில்லேன்
நாடிப் பணியத் தவநிறை யாத நடத்தையனே.
2. அருணகிரி யப்பா அருணகிரி யப்பா
அருணகிரி யப்பா அரைசே -- கருணைபுரி
என்ன அரற்றி இறங்குவ தேயல்லா
தென்ன தவமு மிலன்.
மதுரையை அணுகும்போது
3. அங்க யற்கண் ணமுத மொழியவள்
பங்க யப்பத மென்றும் பரவிடும்
செங்கை கொண்ட அடியர் திருவடி
அங்கை கூப்பித் தொழுவ னடியேனே.
அக்கும் ஆமையும் பூண்ட அழகராம்
சொக்க நாதர்து ணைமலர்ச் சேவடி
வைக்கு முள்ளத் தவர்மனை வாயிலைத்
திக்கு நோக்கித் தினமுந் தொழுவேனே.
28-3-31
பல்லவி
ஆதிஓம் சோதிஓம்
சந்தத் தமிழ்ச்சொலும் அன்பர்
சிந்தைத் தடத்திற் குடிகொண்ட -- ஆதி
அநுபல்லவி
உந்தன் பாதஞ் சிந்தனை செய்ய--ஏதம்
சிந்திட அருள்புரி--ஆதி
சொந்தத் தேவியவள் பைம்புன
வாசஞ் செயுங் குமரி
யாளை மணந்தருளு காளை
தவர் சித்தந் தித்திக்கும்--ஆதி
சுத்தர்கள் பத்தர்கள் மெச்சு திருப்புகழ்
செப்பி ப்ரியப்படு நிற்குணசதி--ஆதி.
சரணம்
பங்கேருகனைச் சீறிச் சிறையிட்ட வேந்தனாம்
பாலகுமர னெனப் பெயர்பெற்ற நஞ்சேந்தனாம்
கோங்கே விரிமலை வாழ்கின்ற வள்ளிக்குக் காந்தனும்
மனத்திற் கினிய மயிலான்--இவனே
எனதகத்திற் குடிகொ ளயிலான்
இவனையினி கெஞ்சிக் கும்பிடல்கதி
ஆத லினாதனை நாம் நிதம் ஓதுவமே--ஆதிஓம்.
14-8-1931.
உலகி லுள்ளார் பெரும்பாலும்
உண்மைப் பொருளை உணராது
விலகி நின்று பேய்த்தேரை
விளங்கும் ஓடை என்பரந்தோ!
கலக மிதனில் யான் கலங்கேன்
காண்மீர் சகத்தீர் எனவள்ளி
யிலகு மலையிற் றவமியற்றும்
எந்தாய் சச்சி தானந்த.
3-3-1932
மாவடு பாடல்
["நன்றுடையானை" என்னும் பண்ணமைப்பு]
மாவடுகாலம் வருகிற காலம் வடுமாங்காய்
ஆவடி சென்றே ஒருபடி வாங்கி அதை உண்டால்
பாவொடு நல்ல பண்ணது சேர்ந்த பதமே போல்
மேவிடு மின்பம் விண்ணமு தொக்கும் வியப்பிதே.
11-3-1932
அகப்பொருள்
மல்லி கேசுர நீவருவா யென்று
மல்லி கைமலர் மாலைநான் வாங்கினேன்
நல்ல நாளின்று நாயக நீவந்து
புல்லி என்னைப் புணருதல் வேண்டுமே.
28-3-32
சந்தப் புகழ்சொல் தலைவர் சரிதைத் தனியமுதை
இந்தப் புவியினர் யாருந் தெளிதர ஈந்ததுகாண்
கந்தக் கடவுள் கழலகத் தேகொண்டு காசினியோர்
வந்தித் திசைக்கத் திகழ்கிரு பானந்த வாரியதே.
16-8-32
(மயிலை)
பற்பகல் செய்தவப் பண்பு வாய்ந்துதம்
எற்பக மெங்குமே இன்ப ஊற்றெழும்
அற்பக நெஞ்சினர்க் கருள்சு ரந்திடு
கற்பக வல்லியின் கழல்கள் போற்றுவாம்.
15-10-32
(முருகனார் இயற்றிய ரமண சந்நிதிமுறை மீது)
இனித்த பாக்களா லெங்கள் ரமணரை
தனித்த புத்தமு தென்னுந் தகைமையிற்
செனித்த சென்மமீ டேறப் புகன்றனன்
மனித்த ரிற்றலை மாட்சி முருகனே.
முத்தி வித்தை முநியை ரமணரைப்
பத்தி மெத்தத் ததும்பு பதத்தொடு
துத்தி யஞ்செயுந் தோத்திரப் பாக்களின்
மெய்த்தி றத்தை வியக்கு முலகமே.
1-12-1932
ரமண சந்நிதிமுறை பற்றி
யானை
சத்தி யுமையவள் தானும் நடுங்கிட
அத்தி யுரித்தானென் றுந்தீபற
அவ்வுரி போர்த்தானென் றுந்தீபற
அண்ணல்
ஆதி ரமணனென் றுந்தீபற
ஐயன்
ஆர்த்துத் குறுகுமொ ராம்பலைச் செற்றுரி
மவ் வா
போர்த்துக் களித்தாரென் றுந்தீபற
பூதி ரமணனென் றுந்தீபற.
1-12-32
அந்தகன்
அறைகழ லோடெதிர் அந்தகற் செற்று
கறைகெழு வேன்மிசை யுந்தீபற
காட்டிக் களித்தானென் றுந்தீபற
அந்தகற் செற்றொரு சூலத்தி லாய்ந்தனன்
செற்றியில் அங்கனே ஏற்றனன்
அந்தகற் கந்தக னுந்தீபற
ஆதி ரமணனென் றுந்தீபற
பிரமன்
பரத்தினைப் பாரா மமதைப் பிரமன்
சிரத்தினைக் கொய்தானென் றுந்தீபற
சிட்டன் ரமணனென் றுந்தீபற
சலந்தரன்
சலந்தரனைச் செற்ற சக்கரம் மாயன்
வலம்பெறத் தந்தானென் றுந்தீபர
வாகை ரமணனென் றுந்தீபற
மைந்தன்
யானை
மத்த மதங்கத்தின் ஈருரி மூடிய
மதாவளித் தீருரி
பித்தன் ரமணனென் றுந்தீபற
பேயி னொடாடி யென்றுந்தீபற
பேயரிற் பேயனென் றுந்தீபற.
இராவணன்
தசமுகன் தாழைத் தாள் விரலூன்றிய
கசமுகன் தாதையென் றுந்தீபற
கடவுள் ரமணனென் றுந்தீபற
கர்த்தன்
எண்ணிக ராரென் றிருவர் கலாஞ்செய
அன்னவர் தம்மிடை யுந்தீபற
ஆரழ லாய்நின்றா னுந்தீபற.
வெடிதரு சோதி வியனுருத் தூணின்
அடிமுடி காண்கில ருந்தீபற
அகந்தை தொலைந்தன ரண்ணா மலையை
உகந்து பணிந்தன ருந்தீபற
உற்ற முதல்வனை உந்தீபற
ரமணனை
குவலயம் யாவுங் குலைய எழுந்த
அவளை யடக்கின னுந்தீபற
அடல் வேங்க டேசுர னுந்தீபற
ஊடிக் கலாஞ்செய்த காளி யுடனடம்
ஆடிச் செயித்திட்டா னுந்தீபற
அடல் வேங்க டேசுர னுந்தீபற.
23-3-1933
["சூறா செட்டியார், கந்தசாமி பிள்ளை ஆகியோர் சாமியார்
நம் நலம் உசாவினார் எனச் சொல்லக்கேட்டு மன நெகிழ்ந்து பாடியது."]
செய்தவ மில்லாச் சிறியனை யிந்தச்
செகத்தினி லொருவனென் றெண்ணி
எய்திடு மன்பர் தங்களை அந்த
ஏழையெவ் வாறுள னென்றுள்
பெய்திடு விழைவில் வினவுறு முன்றன்
பெட்புறு நட்பமை சீரைக்
கைதவ மில்லோய் கடையனே னெங்ஙன்
கணித்திட வல்லவ னாவேன். 1
உள்ளெலாங் குளிரும் செவியெலா மினிக்கும்
உடலெலாம் சிலிர்க்குமுன் வீழ்ந்தே
அள்ளலாம் போலச் சுவையமு தொழுகும்
ஆனந்தந் தந்திடுங் கேட்கித்
துள்ளலாம் போலத் தனைமறப் பித்துச்
சோதியின் சொரூபமுங் காட்டும்
புள்ளுயாங் கொடியோன் குழலெனா இனிக்கும்
புத்தமு தாந்திருப் புகழை 2
ஐயநீ பாட அடியனேன் கேட்கும்
அந்தநாள் இனிவரு மோவென்
றையமே கொள்ளும் அடியனேற் கோர்சொல்
அருளுதி வள்ளிமா மலையிற்
செய்யனாஞ் சிவந்த ஆடையன் முருகன்
செய்யதாட் சிந்தையின் மறவா
மெய்யனே சச்சி தானந்த வள்ளால்
மேருநேர் தவமுதல் வோனே. 3
14-4-1933
தேறுமுக மாக சிவனுக்கு முபதேசங்
கூறுமுக மான குருநாத குமரேசன்
வீறுமுக வேலொடுவிண் ணோர்கள் சிறைமீட்ட
ஆறுமுக சாமிபதம் அஞ்சலிசெய் வேனே.
15-4-1933
கச்சியே கண்டுதொழக் காதலுற்றேன் கண்ணாளா
பிச்சியேன் போய்த்தொழுநர் பேசாயோ - அச்சமேன்
கம்பன் தரிசனத்தைக் காண்போம் பலமுறைநாம்
நம்பென் மொழியைநீ நன்கு.
21-7-1933
ஆணாக யான்பிறந்தும் அந்தோ சிறுகுடிலாஞ்
சாணாக(ம்) நிற்கத் தவிப்புற்று - வீணாக
நாட்போக்கி னேற்கு நலஞ்சார ஈசாவுன்
தாட்போ திறைஞ்சுவரந் தா.
11-5-1935
திருவள்ளுவர் பெருமை
திருக்குற ளுருவில் விசுவரூ பத்தைத்
தெரிதரக் காட்டிய திருமால்
பொருக்கென உள்ளம் வியப்பது கொள்ளப்
புலவர்கட் கெய்ப்பினில் வைப்பாய்த்
திருக்குறட் பாவொவ் வொன்றிலும் விசுவப்
பொருளெலாந் திகழ்தரக் காட்டிப்
பெருக்குறச் சொன்ன வள்ளுவ தேவர்
பெருமைதான் பேசுதற் பாற்றோ!
31-10-1937
(திரு மீனாட்சியைக் கனவில் கண்டு)
நித்தியையே! மீனாட்சி! நின்பொற் கழலிணைக்கே
பத்தியை யேதந்து பல்வழிசெல் - புத்தியையே
உன்பால் நிலைநிறுத்தி ஊன்றுதற்கே பாலிப்பாய்
என்பாற் கிருபை இனிது.
வாழிகும ரேசனடி மறவாத நெஞ்சம்
வாய்த்ததவ மூர்த்திகிரு பானந்த வாரி
வாழியவர் உலகினரைத் தெருட்டிநல் வழியில்
வாய்ப்புறச்சொல் பொருணிறையும் பிரசங்க மழைகள்
வாழியவர் கட்டுரைகள் வாழியவர் நோக்கம்
வாழிதிருப் புகழ்நூலில் வாஞ்சையுடை யோர்கள்
வாழிதிருப் புகழமுத பத்திரிகை வாழி
வாழியதை வாசிப்போர் என்றென்றும் வாழி.
[திருமுருக கிருபானந்தவாரியார் விருப்பப்படி 17-3-1939
இவர் பாடிய திருப்புகழமுதத்தின் வாழ்த்துப்பா]
மங்கல் வராது மகிழ்ந்து திருப்புகழைச்
செங்கல்வ ராயன் தெரிந்தளித்தான் - அங்கல்வரை
எங்குங் குடிகொண்ட எம்மான் முருகேசன்
மங்கலத்தாட் கன்புசெய்யு மாறு.
[இவர் திருப்புகழ் நூல்களை அன்பளிப்பாகக் கொடுக்க
கி.வா.ஜ. அவர்கள் பாடியது. 14-2-1939.]
ஒன்றிய உள்ளத் துவகையது மீக்கூர
இன்று திருப்புகழ்நூல் யானளித்தேன் - என்றன்
குகநாத ருக்கன்பு கொண்டமெய் யன்பர்
ஜகநாத ஐயர் தமக்கு.
[திரு. கி.வா.ஜ. அவர்கள் தமது இல்லத்திற்கு வந்த பொழுது
திருப்புகழ் நூல்களை உவந்தளித்துப் பாடியது. 14-2-1939.]
ஆபத் சகாய ரடியெனது பொல்லாமுத்
தாபத்தைத் தீர்த்தல்சர தம். 1
ஆபத் சகாய ரடியே தொலைக்குமென்றென்
பாபத் திருக்காம் பழி. 2
ஆபத் சகாய ரருள்வா ரடியேற்கு
நீபத் தொடைய னினைவு. 3
ஆபத் சகாய ரகற்றி அருள்வாரென்
கோபத் தியற்கை குணம். 4
ஆபத் சகாய ரருளேகாண் மெய்ஞ்ஞான
தீபத் திருவிளக்கின் தீ. 5
ஆபத் சகாய ரகற்றுவார் காமாதி
ஆபத்திற் சிக்குமவ லம். 6
ஆபத் சகாயரை அன்பால்நீ தீபத்தால்
தூபத்தால் என்றுந் துதி. 7
ஆபத் சகாய அருட்கடலே! இப்பிறவிச்
சோபத் துறாவகைநீ சொல். 8
ஆபத் சகாயஎம் ஆபச் சகாயஎம்
ஆபத் சகாய அருள். 9
ஆபத் சகாய அடியேனைக் கா!தூக்கக்
கூபந்தி னின்றுங் குறித்து. 10
[ஆபத்சகாயர் மேல் பாடியது. 16-2-1940]
செந்தமிழே என்னுடைய உயிர்நிலையென்
றெப்போதும் செப்பும் உன்றன்
அந்தமிலா ஆர்வத்தை ஆங்குணர்ந்த
சிவபெருமான் அந்த ஆசை
சந்ததமும் நீயடையத் தமிழ்ச்சொல்அவன்
தாணீழற் சாலும் என்ற
பந்தனுரை கருதியுனைத் தனதுதிரு
வடிசேரப் பண்ணி னானே.
வேணியான் புகழ்நூல்கள் சங்கநூல்
ஆதிபல மேன்மை நூல்கள்
பாணியா துலகில்வர அருள்புரிந்த
பெருங்கருணைப் பண்ப! உன்னை
ஆணியாந் தமிழ்த்தொண்டுக் கெனவுரைத்தே
அகமகிழ்வோம் அந்த ணாள!
பேணியாம் கற்றதமிழ் நூல்களெலாம்
நீயிட்ட பிச்சை யன்றே.
சித்திர பானுவிற் சித்திரைத் திங்களில்
ஒத்தசுக்ல பட்சந்திர யோதசியில் - முத்திபெற்றார்
செந்தமிழ்க்கே தொண்டுசெய்த திருசாமி நாதமகான்
எந்தைகழுக் குன்றத்தி லே.
[உ.வே.சா. ஐயர் பிரிவு குறித்துப் பாடியது 30-4-1942]
இருணிலை மிகுந்தே பிழைபல செய்தேன்
இவையெலாம் பொறுத்துநீ எந்தாய்
அருணலத் துடனே முதுகிரிப் பாலாம்
பிகையென அடியனேன் கனவில்
தெருணலம் பெறவே திருநடங் காட்டித்
திருக்கையென் தலைமிசை வைத்த
கருணையை எவ்வண் விரித்தெடுத் துரைப்பேன்
கடவுளே தணிகையாண் டவனே.
[தேவி பாலாம்பிகையைக் கனவில் கண்டு பாடியது 31-12-1946]
(போலிக்குறள்)
அருசியை நீக்கி அருஞ்சுவையை யூட்டி
உருசி தருவதாம் உப்பு. 1
காணாதே முப்பாட்டன் உண்டென்று காணும்நீ
நாணாதே தெய்வத்தை நாடு. 2
பொழுதே உனது புதையலென் றோர்ந்து
பழுதுசெய் யாது படி. 3
(13-12-1947)
[மகாத்மா காந்தி இறந்த போது பாடியது]
காந்திமகான் ஈசன் கழலிணையைச் சார்ந்துசுக
சாந்தியுற்றார் திண்ணமிது தான்.
மனிதருட் பொல்லார் தங்கள் வழியினில் நில்லா தாரைச்
சனியெனக் கொள்வர் பின்னும் சாவவும் அடிப்ப ரந்தோ
கனிதரு கருணை பூண்ட காந்தியைக் கொன்ற தாலே
நனிநமைக் கொல்வ ரென்றோ நாதநீ அரூபி யானாய்!
(31-1-1948)
[கவிராஜ பண்டிதர் திரு. கனகராச ஐயர் பாடியது]
தணிகை நாயகன் பதமலர் அநுதினம்
தலைமிசை வைத்தேத்தும்
தணிகை நாயகன் அடியவர் தலைமணி
தமிழ்பயில் பெருநாவன்
தணிகை நாயகன் மாலையை யமைத்திடத்
தனதுள மிசைக் கொண்டான்
தணிகை நாயகன் அருளினால் வாழிய
தரைமிசை நெடுநாளே.
(9-3-1948)
[வல்லிமலைச் சுவாமிகள் மீது பாடியது]
அவநூல் படிக்கத் தரிக்காய்நீ
அஞ்சொற் றிருத்த மாங்காய்வாய்
சிவநூல் படியா தவரைக்காய்
சீமா னேநம் அருணகிரி
தவநூல் பூதி அலங்காரம்
சந்தப் புகழோ டந்தாதி
பவம்வே ரறுக்கும் திருவகுப்பு
பாட்டி லூறு காயேநீ.
(23-11-1949)
[ஸ்ரீரமண மகரிஷி மறைந்தபோது பாடியது]
அண்ணா மலையார் அருள்போல இன்றளவும்
கண்ணா ரதமுமாய்க் காணநின்ற - எண்ணார்
இலங்கொளிதான் இன்று மறைந்தாலும் என்றும்
நலங்கொடுக்க உய்ந்திடுவோம் நாம்.
அண்ணா மலையில் அறனும் ரமணருமே
விண்ணார் இருசுடர்போல் மேவினரால் இன்றளவும்
கண்ணார் சிவஒளிபோற் காணக் கிடைக்காமல்
மண்ணாட்டை விட்டு மறைந்ததிங் கோரொளியே.
(15-4-1950)
அப்பர் 310-11.
ஆறு முகங்கண்டேன் அயில்வேல் கண்டேன்
அம்பொன் மயில்கண்டேன் சேவல் கண்டேன்
கூறு மடியார் குழாத்தைக் கண்டேன்
கோலக் குறத்தி திறமு(க)ங் கண்டேன்
வீறு பெருவீர வாகு கண்டேன்
விண்ணவர்கோன் பெற்றதிரு மகளைக் கண்டேன்
நாறு கடப்ப கண்ணி கண்டேன்
நாதனைஎன் சிந்தையுள் நான்கண்ட வாறே.
(16-10-1951)
[திரு.வி.க. அவர்களைப் பற்றி பாடியது.]
திரு.வி.க. பேச்சோட்டச் சீரழகின் முன்னர்
அருவிகாள் உம்மோட்ட ஆற்றல் - ஒருவிதத்தும்
நேராகா தன்னார் நிகழ்த்துரைக்குக் கார்மழையே
நேராம் இதுவே நிசம்.
(22-9-1953)
[ஈசன் கருணை நினைந்து பாடியது]
எவ்வாறு நாயேன் எனதன்பைக் காட்டுவேன்
செவ்வான் நிகர்க்குந் திருவுருவா! - இவ்வாறு
செல்கஎன நீயே செலுத்துகின்றாய் நின்புகழே
வெல்கஇவ் வையகத்தின் மேல்.
(18-6-1954)
ஒருநிமிடம் நான்கவலை உற்றாலும் தாங்கா
தருகிலுற்றே தாய்போல் அமர்ந்து - வருகவலை
எல்லாம் ஒழித்தருளும் எந்தாய் தணிகேச
கல்லாமென் நெஞ்சைக் கரை.
(20-7-1954)
[அங்குலம் அடி கசம் அமையப் பாடியது]
சுறவங் கொடிபிடி மன்மத தேவின் துணைவிவனக்
குறவங் குலத்தி அடியும் கசவல்லி கோனடியும்
உறவென் தலையி லிரவினிற் காலையில் உச்சியிலென்
றிறவும் பிறவும் எனைத்தொட ராவகைக் கேத்துவனே.
(8-3-1955)
-----------------------------------------------------------
Comments
Post a Comment