Pirapantattiraṭṭu XXXVI


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XXXVI
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய
சித்திரச்சத்திரப் புகழ்ச்சிமாலை
பிள்ளையவர்களின் "பிரபந்தத்திரட்டு" பகுதி 36 (3954-4159)

Source:
திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து மஹாவித்துவான்
திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு
இது ௸ ஆதீனத்துத் தலைவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகரவர்கள்
உதவியைக்கொண்டு ௸ பிள்ளையவர்கள் மாணாக்கரும் ஸ்ரீமீனாட்சி
தமிழ்க்காலேஜ் பிரின்ஸிபாலுமாகிய உ.வே. சாமிநாதையரால்
சென்னபட்டினம் கமர்ஷியல் அச்சிற்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
இரண்டாம் பதிப்பு, அக்‌ஷய ௵, ஆனி௴, 1926
விலை ரூ.5-10-0.
copyright reserved
--------------

விநாயகர் துணை.

திருமயிலைச் சித்திரச்சத்திரப் புகழ்ச்சிமாலை.

காப்பு.
விருத்தம்.
3954. மின்னுபுகழ் மயிலைவிநா யகமால்சத் திரப்புகழ்ச்சி விளம்பநாளு,
மன்னுமொரு வரைமுடியிற் கங்கையும்வா ணியுமுதித்து வழிதலேய்ப்பத்,
துன்னுமதிப் பிறையொழுக்கு வெள்ளமுதுங் கொன்றைபொழி சுவைச்செந் தேனும்,
பன்னுமுடி நின்றிழியப் பொலியுமழ களிற்றடிகள் பரசு வாமே. (1)
---------------

நூல்.

3955. பூமேவு திருமயிலை நகரிற்கற் பகவல்லி புல்ல மேவு
மாமேவு கபாலீசர் சந்நிதிநற் றிருக்குளத்தின் வயங்கு தென்பாற்
றூமேவு புகழ்விநா யகமகிப் னித்திலவெண் சுதைதீற் றிச்செய்
பாமேவு சாத்திரமன் னவன்புகழே திரண்டதெனப் பகர லாமே. (1)

3956. மறையவர்க்குப் பிறப்பொழுக்குந் தவத்தினர்க்கு நிறையருளு மாண்பு சாலிற்,
றுறையவர்க்கு விருந்தோம்பு தன்மையுநற் சிவபூசை தொடங்கிச் செய்யு,
நிறையவர்க்கு மெய்யன்பு மெப்படியப்படி மயிலை நெடுந கர்க்குப்,
பொறையவர்க்கு ளுயர்விநா யகமால்சத்திரமென்று புகல லாமே. (2)

3957. இருநிதியோ கற்பகமோ வெழிலார்சிந் தாமணியோ வெழிலி யோவென்,
றருநிதியாம் புலவர்புகழ் திருமயிலை விநாயகமா லமைத்த சீர்சால்,
பெருநிதியாஞ் சத்திரநற் புகழ்கேட்டுத் தலையசையார் பிறர்யார் மிக்க,
வுறுநிதிசால் வரையடர்மண் டலைமேற்கொ ளனந்தனலா துலகிற் றானே. (3)

3958. திருவிநா யகமகிபன் புரிமயிலைச் சாத்திரத்தின் சிறப்பு நோக்கி,
யொருவிநா யகர்கபா லீச்சரத்துக் கூத்தாட லுவந்தா ரந்தப்,
பெருவிநா யகர்க்கதனாலப்பெயர்தோன் றிற்றுமுன்னே பிறந்த தென்னின்,
மருவிநா யகப்பெரியோ ரெதிர்காலச் செயலுணர்ந்து வகுத்தா ரன்றே . (4)

3959. காலருந்திச் சருகருந்திப் புனலருந்தித் தவம்புரிதல் கண்டோ மில்லை,
றாலருந்தி யுமிழ்மணமேன் மறையோரிக் காலமற்றஃ தெதனா லென்னிற்,
றாலருந்தின் புகழ்விநாயகமகிபன் புரிமயிலைச் சத்தி ரத்தின்,
பாலருந்தி யவணுறைதே வரைப்போற்று தவங்கொண்ட பண்பி னானே. (5)

3960. தெருள் பெற்றான் வியாசநகர் விநாயகமா லதற்கேற்பச் செயிர்தீர் மிக்க,
பொருள்பெற்றா னதற்கேற்ப மயிலையிற்சத் திரங்கட்டிப் புகழ்சால் பெம்மா,
னருள்பெற்றா னிவனன்றிப் பொருள்பெற்று மறஞ்செய்யா வவனி யுள்ளார்,
மருள்பெற்றார் சிறுமைபெற்றாரின்னுமென்பெற் றாரென்னின் வசைபெற் றாரே. (6)

3961. தண்ணியநன் னிழலுதவி யடைந்தவர்க்கு வேண்டுவதுந் தருவ தால்வா,
னண்ணியவைந் தருநிகரு மருச்சுனமால் புரிதவத்தி னன்கு தித்த,
புண்ணியவி நாயகவேண் மயிலைச்சத் திரமென்று புகல்வர் யாரு,
நண்ணியயா மவைகேட்கக் கொடுத்தலினொவ் வாதென்று நவிலு வோமே. (7)

3962. பொங்கார மணிமார்பன் புண்ணிய விநாயகமால் பொலிய நாளுஞ்,
சிங்கார வேலர்மகிழ் திருமயிலை யகத்தமைசத்திரத்தின் மேலா,
லங்கார முகில்படிந்து தோன்றுதல் விண்ணவர்கண்ணே றடையா வண்ண,
மிங்கார வருவார்கள் கரும்படாங் கொடுமறைத்த தேய்க்கு மாலோ, (8)

3963. தெள்ளமுத மதியொடுபா கீரதியெம் மான்சடைமேற் செறிந்து மேவற்,
குள்ளகருத் துணர்ந்தாந்தன் சுவையோடம் மதியமுது மொருங்கு கொண்டு,
வள்ளல்விநா யகமகிபன் மயிலைச்சத் திரக்கிணற்றுள் வந்து புக்காங்,
கெள்ளலிலாப் பெருஞ்சுவையை யடைந்தோர்க்கு நாணாளு மீயத் தானே. (9)

3964. தீராத புகழ்படைத்த மயிலைவிநா யகமுகில்சத் திரத்தை வந்து
பாராத பேருமிலை பார்த்தவுட னதன்சிறப்பைப் பலகாற் பாட,
வோராத பேருமிலை யோர்ந்துமேன் மேற்பாடி யுவகை வாரி,
சாராத பேருமிலை யென்னினதன் பெருமையெவர் சாற்று வாரே. (10)

3965. மைமணக்கும் விழிமாதர்க் கொருமதனன் பாவலர்க்கு வைப்பா யுள்ளோன்,
மெய்மணக்கும் வாய்மயிலை விநாயகமால் சத்திரத்துள் விரும்பிப் புக்கு,
நெய்மணக்குங் கறியமுதுந் திருவமுது மவாவடங்க நிரம்ப வுண்டோர்,
கைமணக்கும் வாய்மணக்குங் கழுவியநன் னீருநனி கமழு மாலோ. (11)

3966. என்னுரைக்கேன் மயிலைவிநா யகமகிபன் பெரும்புகழை யிருநீர் வைப்பின்,
மின்னுபொரு ளவனீட்டு போழ்தேசத் திரமாதி வேறு வேறாப்,
பன்னுபல வறங்களுக்கென் றேயீட்டி னான்பன்னூல் பயிலும் போழ்தே,
மன்னுமனை யான் புகழைப் பாடுதற்கென் றேபுலவர் மதித்தார் போலும், (12)

3967. வீடாத வளமலி வியாசநகர் விநாயகமால் விரும்பி யுள்ளங்,
கோடாத வன்பொடுநன் மயிலையிற்செய் சத்திரச்சீர் குறித்து நாளும்,
பாடாத புலவரிலை பாடுபுநல் கிடவனையான் பரிவிற் கொண்டு,
சூடாத செய்யுளிலை யென்னின்யா மினியென்னோ சொல்லு மாறே. (13)

3968. அத்திரவாள் விழிமடவா ரழகனருச் சுனமகிய னன்பி னீன்ற,
புத்திரன்வி நாயகமா றிருமயிலை யிடத்தருமை பொருந்தச் செய்த,
சாத்திரமே வட்டிலடைந் தோர்வாய்க்கு விருந்தூட்டுந் தவாதாங் குற்ற,
சித்திரமே கண்களுக்கு விருந்தூட்டு மென்றிடின்யாஞ் செப்ப லென்னே. (14)

3969. இரவிமுன மிருளில்லை யெம்பிரானருண்முன்மல மில்லை நாளும்,
புரவியன்மெய் யடியார்முன் பவமில்லை நல்லோர்முன் பொறாமை யில்லை,
யுரவியல்கு ணாகரவி நாயகபூ பதிமுன்ன முலோப மில்லை,
பரவியமெய்க் கீர்த்தியவன் றிருமயிலைச் சாத்திரமுன் பசியு மின்றே (15)

3970. எம்மையா ளுடையபிரான் கபாலீச னுவந்துறைதற் கிடமதாய,
செம்மையார் திருமயிலை சிவலோக மென்பதுவே தேற்ற மென்பர்,
வெம்மைதீர் குணவிநா யகமால்சத் திரவளமை மிகுதி யாலே,
சும்மையார் புகழ்ப்போக பூமியுமஃ தேயெனயாஞ் சொல்லு வோமே. (16)

3971. வினைத்திருக்கு மலத்திருக்குங் கடிந்திருக்குந் திருவடிமெய் விரவா யாமு,
நினைத்திருக்கும் படியருள்க பாலீச னுலாப்புறமாய் நெடுவீதிக்கட்,
கனைத்திருக்குந் தொடரவெழுந் தருள்வதுக்கண் டுவந்துபின்னுங் கண்டுவப்பார்,
தினைத்திருக்கு மிலாவிநா யகமகிபன் மயிலைச்சத் திரத்தை மாதோ. (17)

3972. வீங்குதிரைக் கடலுலகிற் பொருள் படைத்தார் தாமிருந்தே விருப்பின் வாழ்தற்,
கோங்குபெரு மாளிகைசெய் துவப்புறுவர் வியாசநக ருவந்து மேவும்,
பூங்குவளைத் தார்மார்பன் விநாயகமால் யாவர்களும் புக்கு மேவி,
நீங்குதலி லாதமர மயிலையிற்சத் திரஞ்செய்தா னிலவத் தானே. (18)

3973. வாரியினுண் மணலைநெடு வானகத்துண் மீனைமண்ணில் வந்து போன,
நாரியரைப் புருடரைமற் றளவிடினுந் திருமயிலை நகரி டத்துச்,
சீரியவி நாயகமா லியற்றியநற் சித்திரச்சத் திரமே யன்றி,
யேரியல்பல் லறமுமவன் செயக்கொண்ட வெண்ணமள விடப்ப டாதே. (19)

3974. ஆலமுயர் பரம்பரனை வருத்திடினு நீறணிமெய் யடியார் தம்மைக்,
காலன்வருத் திடினுமற மறத்தைவருத் திடினுமுயர் கனம்போ னல்குஞ்,
சீலமலி திருமயிலை விநாயகமால் சித்திரச்சத் திரத்தின் மேவி,
வாலனமுண் பானடைந்தோர் தமைநாளும் பசியெழுந்து வருத்தி டாதே. (20)

3975. கருதரிய புகழ்மயிலைக் காபாலி தீர்த்தநெடுங் கரையோர் நான்குட்,
பொருவருகீழ் கரைகபா லீச்சரத்தா லேக்கழுத்தம் பூண்டு மேவு,
மருமைகொடென் கரைவிநா யகமுகில்சத்திரத்தாலஃதடையு மற்றை,
யிருகரையு மென்செய்வா மென்செய்வா மென்றேங்கி யிருக்கு மாலோ. (21)

3976. திரைசெறியார் கலியுலகிற் பொருளினர்பல் சுவையுணவுஞ் சிறப்பிற் றேடிக்,
கரையறவுண் டுண்டுவந்து பூதவுடம் பினைவளர்க்குங் கடன்மேற் கொண்டார்,
வரைநிகர்தோள் விநாயகமான் மயிலையிற்சத் திரங்கட்டி வயங்க நாளு,
முரைபெறுநற் புகழுடம்பை மிகவளர்ப்பா னிவற்கிணையா ருரைக்குங் காலே. (22)

3977. விரும்புபுகழ் மயிலையெனுந் திருநகரில் வியாசநகர் மேவி வாழுஞ்,
சுரும்புமுர றொடைவிநா யகமால்செய் சாத்திரத்தின் றோற்றங் கண்டாங்,
கரும்புபல சத்திரமும் வானகத்திற் பசுங்கதிர்க ளமைய வீசி,
யிரும்புவியேத் திடத்தோன்று மதியமுன ருடுக்களென விருக்கு மாலோ (23)

3978. நாடி நோக் கிதுவென்ன விநாயகமா றிருமயிலை நகரில் யாரும்,
பாடிநோக் குறுசிறப்பிற் சித்திரச்சத் திரமொன்று பண்பிற் செய்து,
தேடிநோக் கறமெல்லாங் கொள்ளைகொள்வா னத்தகுசத் திரமு நாளுங்,
கூடிநோக் கிடுவார்த நோக்கமெலா நனிகொள்ளை கொள்ளு மாலோ. (24)

3979. நாடுதிரு மயிலைநக ரிடத்துவிநாயகமகினன்கு செய்த,
பாடுபுகழ்ச் சாத்திரத்தோ வியங்கள்வா டாமாலை பரித்த லானுங்,
கூடுவிழி யிமையாமை யானுமடி நிலந்தோயாக் குணத்தி னானு,
மாடுசெறி பேருலகின் வாழமரர் குழாமென்றே வகுக்க லாமே. (25)

3980. கந்தமலர்ப் பொழின்மயிலை விநாயகமா லிக்காலங் களிப்பிற் செய்த,
சந்தமலி சாத்திரம்போ லக்கால மொன்றிருந்தாற் றவத்தான் மிக்குப்,
பந்தமகல் கௌதமமா முனிவரன்வற் கடகாலம் பாறு மட்டு,
மெந்தமறை யவர்க்குமிக வுபசரிப்ப வேண்டுவது மின்று மாதோ. (26)

3981. விரைமலர்ப்பூம் பொழின்மயிலை யிடத்துவிநா யகமகிபன் விருப்பிற் செய்த,
புரைதவிர்சித் திரமலிந்த சாத்திரத்தின் முகமனொடு புக்கு ளார்க்குக்,
கரையறமேன் மேற்படைக்கு முணவையமு தென்றெவருங் கரையா நிற்பர்,
நரைதிரைமூப் பிவைமாற்றி னமரருணு மமுதெனயா நவிலு வோமோ. (27)

3982. மெய்ப்புகழ்வி யாசநகர் விநாயகமா றிருமயிலை விளங்கச் செய்த,
வைப்புநிதி யேயனைய சாத்திரத்தின் மடைப்பள்ளி வாய்மேற் போய,
குய்ப்புகைமேன் மேற்கமழத் தேவரும்வா யூறுவரேற் குவல யத்திற்,
கைப்புறுவா ரெவரனைய சாத்திரத்தி னுண்டுசுவை காணத் தானே. (28)

3983. நறையொழுகு மலர்ச்சோலை மயிலைவிநா யகமாகிப் னன்கு செய்த,
நிறைதரும சத்திரத்திற் றினந்தோறும்வந் துண்பதற்கு நீதி சான்ற,
மறையவரும் பின்னிடார் வந்தவவர் தமக்குமுக மலர்ச்சி யோடு,
குறைவறநன் கூட்டுவதற் கவனும்பின் னிடானென்னிற் கூற லென்னே . (29)

3984, ஓங்குபுகழ் விநாயகபூ பதியைமிகத் தெரிந்தவனென் றுரைப்பார் யாரும்,
பாங்குபெற யாம்புகல்வா மனையமகி பதிமயிலைப் பதியினாளு,
நீங்குதலி லாதமைத்த சாத்திரத்தி லொருதினத்தி னிகழ் கருத்தை,
வாங்குசுவை யமுதுண்பா ரித்தனைபே ரெனத்தெரிய மாட்டா னென்றே. (30)

3985. மீயுயர்வான் முகடணவச் சிலரமைத்த சத்திரத்தின் விளக்கங் கண்டாங்,
கேயடைந்தார் சிலரெனினு மிகப்பசியுற் றிருப்பதற்கோ ரிடையூ றின்று,
தாயினுநல் லவன்விநா யகமகிபன் றிருமயிலைச் சத்திரத்து,
ளாயிரம்பேர் புகுந்தாலு முண்டுதேக் கெறிவதற்கோ ரைய மின்றே (31)

3986. ஒருவரிய வலிமிகுசூர் முதறடிந்து தேவர்சிறை யொருங்கு மீட்ட,
மருவரிய பெரும்புகழ்சால் சிங்கார வேலர்மகிழ் மயிலை தன்னிற்,
றருவரிய வள்ளலெனும் விநாயகபூ பதிசெய்த சாத்தி ரந்தான்,
பொருவரிய தாயிலா னடியார்க்கோர் தாயாகிப் பொலியு மன்றே, (32)

3987. கடிநிலையில் லாதபெரும் புகழ்மயிலைச் சாத்திரத்திற் காமர் மேவு,
படிநிலைகொள் சுவர்த்தலத்திற் சித்திரத்தின் பலவண்ணம் படர்ந்து தோன்ற,
றொடிநிலைமுன் கைமடவார் மதனன்விநா யகமுகிலச் சுவர்த்த லத்தி,
னடிநிலையிற் போகட்ட பன்மணியின் சுடர்மேல்வந் தலங்கன் மானும். (33)

3988. பற்பலதே யத்தினின்று வருவார்க்கு விநாயகமால் பண்பு மேவச்,
சிற்பவிதிப் படியமைசத் திரத்தருக்கை விடமனமுஞ் செம்மை வாய்ந்த,
கற்பகவல் லிக்கொருபாலருண்மயிலைக் கபாலீசர் கமல பாத,
மற்படுநற் சேவைதனை விடமனமு மெஞ்ஞான்றும் வாரா வன்றே (34)

3989. திருமயிலை நகரிடத்து விநாயகமா லியற்றியசத் திரத்தின் வந்து,
மருவுபொரு ளாளர்களுந் தாங்குடிகொள் வளமனையை மறப்ப ரென்னிற்,
பொருவருமற் றதன்சிறப்பை யெங்ஙனம்யான் வகுத்துரைக்கப் புகுவேன் மற்றை,
யிருநிலத்திற் புலவர்களு முழுதுரைமி னென்னினதற் கிணங்கி டாரே. (35)

3990. வடதிசைதாழ்ந் ததற்கெதிராந் திசையுயரக் குறுமுனியை மலயம் வைத்தான்,
கடல்விடமுண் டவன்புவனி சமமாக மன்றல்வினை கழிந்த பின்பக்,
குடமுனியை யுத்தரம்வைத் திலன்புவியுந் தாழ்வுயரங் கொண்ட தின்று,
திடமயிலை விநாயகமால் சத்திரத்திற் சனநெருங்குந் திறத்தா லன்றோ . (36)

3991. புண்ணியவி நாயகமால் சத்திரநற் றண்மையுமுட் புகுந்து ளோராங்,
கெண்ணியவா றடைவதற்காஞ் செல்வமுமேன் மேலெய்தி யிலகா நிற்குங்,
கண்ணியபச் சிமமுகமா யமர்கபா லீசரிடக் கண்ணுந் தென்பா,
னண்ணியநன் முகத்தம்மை வலக்கண்ணு நோக்குமுயர் நலத்தான் மாதோ. (37)

3992. நற்றவர்சேர் திருமயிலை விநாயகமால் சத்திரமு னலமே மேவப்,
பெற்றவுயர் காவணமொன் றதன்சிறப்பை யென்னுரைக்கேன் பிறங்கு வாழை,
துற்றபசுங் கமுகுதெங்கங் குலைகரும்பு பனசமுதற் றுன்ற லாலே,
யுற்றவது தனைப்புலவர் காவணமென் றுரைத்திடுத லுண்மை யாமே. (38)

3993. முத்தநகைப் பெருமுலைச்சிற் றிடைக்கருங்கண் மடமாதர் மோகன் யோகன்,
வித்தகவி நாயகமா றிருமயிலை நகரிடத்து விளங்கச் செய்த,
சத்திரமுன் காவணத்தைக் கண்டமரர் கோன்மகுடந் தாங்கு நாட்செ,
யத்தகைய காவணந்த காவணமா யிற்றென்ப ரறிந்து ளோரே. (39)

3994. மேயபுகழ் மயிலைக்குக் கபாலீசார் சேவைசெயமேவு வாருக்,
காயசுவைப் பொதிசோறு சுமந்துமிக மெலிந்திளைத்த வவர்தோ ளிந்நாட்,
டூயகுண விநாயகமா லியற்றியசத் திரத்தாலச் சுமையொ ழிந்த,
வாயமைய விறுமாந்தன் னவன்வாழ்க வாழ்கவென வாழ்த்து மாலோ. (40)

3995. தோயார மணிமார்பன் விநாயகமா றிருமயிலை துலங்கச் செய்த,
மீயார வுயர்தரும சாத்திரத்துண் பதற்காய விருப்பஞ் சாற்று,
மோயாரங் குண்டுவந்து மேன்மேலும் வாழ்த்தெடுப்ப ருவரி நாண,
வாயார வுண்டவர்கள் வாழ்த்துதற்கெத்தடையுண்டு மண்ணின் மீதே. (41)

3996, விடையூரும் பெருமானார் மயிலைவிநா யகமகிபன் விருப்பிற் செய்நன்,
னடைமேவு சாத்திரமு னெருங்குபொற்றோ ரணங்கள்பல நல்ல றத்திற்,
கிடையூறு செய்வசுரர் வந்துபுக வழியின்மை யெண்ணி வீதிப்,
புடைமேவி வாய்வழியுட் புகாவண்ணம் யாத்தவலை போன்ற மாதோ. (42)

3997. இக்காலம் விநாயகமா றிருமயிலைப் பெருநகரி லினிது செய்த,
திக்கால மலிந்தபுகழ் நனிபடைத்த சித்திரச்சத் திரந்தா னம்ம,
வக்கால மிருந்ததெனிற் பசித்தடைந்த வொருவர்பொருட் டாகக் கச்சூர்,
நக்கால மயின்றபிரான் மனைதொறும்போ யிரப்பான்கொனாடுங் காலே. (43)

3998. வந்தரமங் கையர்தழுவ மகிழ்மகவானொடுமமரர் வதியும் வான,
மந்தரநின் றிடுங்கொல்லோ திருமயிலை நகர்பொலிய வலங்கற் றிண்டோண்,
மந்தரவி நாயகமால் புரியுயர்சத் திரத்துமுடி வைகா நிற்குஞ்,
சுந்தரமா மதுதோற்று மோவெனிற்சேய்மையின்விழிக்குத் தோற்றுங் கொல்லோ. (44)

3999. வானவழி யியங்குமதி மயிலைவிநா யகமகிபன் மகிழ்விற் செய்த,
வூனமினித் திலச்சுதைதீற் றியவுயர்சத் திரத்துமுடி யுரிஞிச் செல்லு,
மானவத னுண்மையையிவ் வகலிடத்தே யாரறிவா ரறிந்தாம் யாமே,
யீனமிகு முடற்களங்க மாங்கறுப்பைப் போக்கியுயர் வெய்தத் தானே. (45)

4000. தடுக்கரிய புகழ்மயிலை விநாயகமால் சாத்திரமேற் றங்கும் வானம்,
விடுக்கரிய கறைமதியச் சாத்திரம்வானமுதொன்றே விழைவீ ருங்கட்,
கடுக்கரிய சுவையுடைய திஃதுண்டு பாருமென வமைத்தோர் தோசை,
நடுக்கரிய வேப்பிலைத்தூ டூவிமேல் வைத்ததென நகுமிக்காயே. (46)

4001. காமருவு திருமயிலை விநாயகமால் சத்திரத்துக் கழுநீ ரோடிப்,
பூமருவு பணை பாய்ந்து செஞ்சாலிப் பயிர்வளர்க்கும் பொலி வினாலே,
தூமருவு புனல்பாய்ச்ச மண்டொடுதிண் கருவிபெருந் தோண்மேல் வையார்,
மாமருவு நிறத்தொழுவர் விளைவோர்ந்து மாற்றிடத்தோள் வைப்பர் மாதோ. (47)

4002. வழிவழிநல் லறம்பூண்ட கங்கைகுல விநாயகமான் மயிலை யாற்று,
மிழிவில்வளச் சாத்திரமு மலிந்தநீர்க் கூவமுமன் றிருக்கு மாயிற்,
றழியசுவை யன்னநனி யுண்டுமிக வருந்துகுண்டோ தரற்கா வன்னக்,
குழியொடுவை யையுமழையான் கூடனகர் மேவியவெங் கோமான் றானே. (48)

4003. குருகால நிறைவாவி மயிலைவிநா யகமுகில்பொன் கொண்டு செய்த,
விருகால வமுதுதவுஞ் சத்திரத்தைப் புகழ்ந்துரைப்பா னிவனோ வென்று,
திருகால மறிகுநரு மென்னையொரு குறைமொழியார் சேடற் கேயு,
மொருகால முரைக்கவெனிற் பலகால முணர்ந்தாலு முலப்பு றாதே. (49)

4004. செங்குவளைத் தார்மார்பன் கருங்குவளைக் கண்ணார்க்கோர் செல்வக் காமன்,
பொங்குபுகழ் விநாயகமா றிருமயிலைச் சத்திரமுன் பொலிய யாத்த,
தங்குசுவைச் செங்கரும்பு மிகப்பொலிதல் கலியென்னுந் தறுகணாள,
னங்குவரிற் றலைதகர்க்கச் சார்த்திவைத்த தண்டநிக ராகு மாலோ. (50)

4005. பிதிரரிய புகழ்மயிலை விநாயகமால் சத்திரத்திற் பிறங்கி மேன்மேன்,
முதிரொளியா யிரந்தீப மொய்ப்பனவச் சத்திரச்சீர் மொழியக் கேட்ட,
கதிரவன்பல் கரங்களையு நோக்கிவரும் படியனுப்பக் கலப்புற் றாங்காங்,
கெதிரறுபல் வளமுமவை தலைநீட்டி நோக்கிடுவ தேய்க்கு மாலோ. (51)

4006. குறைவில்புகழ் மலிமயிலை விநாயகமா லளவறுபொன் கொண்டு செய்த,
வறைதரும் சத்திரத்துச் சுவரெலாம் வெண்பளிங்கி னமைத்தான் றெய்வ,
மறையவருண் டிடுமிடத்துச் சுவர்மட்டு மதுகொண்டு வகுத்தா னல்ல,
னிறையவவ ருணும்பொழுது வெளியிருந்து பிறர்காணு நிகழ்ச்சி யோரந்தே. (52)

4007. மன்னுமலர்ப் பொழின்மயிலை வயங்கவிநா யகமகிபன் மகிழ்ந்து செய்த,
மின்னுபுகழ்ச் சத்திரத்தின் கீழ்நிலைநீர் நிலையேய்க்கும் விளக்க மேவத்,
துன்னுமதன் மேல்விரித்த சித்திரக்கம் பலமனைய தூநீர் மேற்ப,
லுன்னுகருங் குவளைசெந்தா மரைமுதற்பன் மலர்பூத்த தொக்கு மாலோ. (53)

4008. நலங்குலவு தண்பொழில்வி யாசநகர் விநாயகமா னன்கு மேவிப்,
பொலங்குலவு திருமயிலை நகர்த்தனது சாத்திரமுன் பொலியத் தூக்கு,
மலங்குகதிர் மணிமுத்த மெவ்விடத்துப் பெற்றனனோ வனைய முத்த,
மிலங்குவட திசைக்கோமான் மனைவிமுலை முகட்டிடத்து மில்லைமாதோ. (54)

4009. மட்டுண்டு வரிவண்டு வாய்திறந்து பண்பாடு மாலைமார்ப,
னிட்டுண்டு வருமயிலை விநாயகமால் சத்திரத்தி னெய்தி யன்னந்,
தொட்டுண்டு மகிழ்வாருண் சுவைப்பால்போ லன்றுதவுந் தூயருண்டேற்,
கட்டுண்டு மடியுண்டு மாய்ப்பாடி யுழல்வான்கொல் கண்ணன் மாதோ. (55)

4010. செய்தவன்வி நாயகமா றிருமயிலைச்சத்திரத்துச் சேர்ந்து ளாரு,
ளெய்தவிர தம்பிடித்தோர்க் கினிதூட்டுஞ் சிற்றுணவன் றிருக்கு மாயிற்,
பெய்தமலர் முடியின்மிசை வடுப்படமண் சுமந்துசிறு பிட்டுக் காகக்,
கைதவன்கைப் பிரம்படியும் படுவான்கொல் கூடனுதற் கண்ணி னானே. (56)

4011. வேலோடுங் கணையோடும் பொருகண்ணார் மடலெழுதும் வேண்மெய்சான்ற,
நூலோடு பயின்மனத்தான் விநாயகமான் மயிலையிட நோக்கிச் செய்த,
பாலோடு நெய்யோடு மமுதருத்துஞ் சத்திரமுன் பரந்த பந்தர்,
மேலோடுங் கதிரவன்றேர் கீழோடுங் கபாலீசர் வியன்பொற் றேரே. (57)

4012. நெடியவழி நடந்துகதி ராதவத்தா லுடல்வருந்தி நிறைந்த வெப்பங்,
கடியவுயர் மயிலைவிநா யகமுகில்சத் திரம்புகுதக் கண்டாங் குள்ளோர்,
முடியநறும் பனிநீரி னானனைப்ப முன்னைவெயின் மொய்த்து மேனி,
படியவிரைந் தோடிவெளி வந்துநிற்பார் குளிரடங்கப் படியு ளாரே. (58 )

4013. நாடுபுகழ்த் திருமயிலை விநாயகமால் சத்திரத்து நாளும் வந்து,
கூடுமவர்க் கணிசாந்த நறுமணம்பின் குடைதடநீர் கொள்ளை கொண்டு,
பாடுமலி தன்புடைவந் தாடுமைந்தர்க் களிப்பவவர் பாவை மாரோர்ந்,
தூடுவரிவ் வேறுமண மெம்மாத ரூட்டியதென் றுதைத்து மாதோ. (59)

4014. பின்னுபெரு நலமலியுந் திருமயிலை நகரமெனும் பெருங் குளத்துண்,
மன்னுபுகழ் விநாயகமா லியற்றியசத் திரமெனுமொண் மலரி னாளுந்,
துன்னுசுவை யாறனொடு மினிதமர்ந்த வடிசிலெனுஞ் சுவைத்தீந் தேனை,
யுன்னுபல சனங்களெனும் வண்டுகண்மேன் மேலடைந்துண் டுவக்கு மாலோ. (60)

4015. வெருவரிய புகழ்மலியுந் திருமயிலைப் பெருநகரில் விளங்குவானத்,
தருவரிய கொடையினனென் றுரைக்கும்விநா யகமுகில்செய் சத்திரத்துட்,
பொருவில்பசி கொண்டுபுகு பொழுது குண்டோ தரனையொத்துப் புகுவ ராங்கு,
மருவடிசி லுண்டுவரு பொழுதுகும்போ தரனையொத்து வருவர் மாதோ. (61)

4016. கந்தமலர்ப் பொழின்மயிலை விநாயகமால் சத்திரத்துக்காமர்மேவ,
முந்தவிலை போகட்ட வோரறைபுக் கவராடி முயக்கத் தாலே,
யந்தவறை புகுவேமோ விவ்வறையேயுறைவேமோ யாங்க ளென்னச்
சந்தநகை புரிந்தவணுள் ளாரிருத்த விருந்துண்பார் தளர்வு தீர்ந்தே. (62)

4017. நனையமலர்ப்பொழின்மயிலை விநாயகமால் சத்திரத்தினலஞ்சா லோவர்,
வினையமுற வாய்ந்தமைத்த வவனுருவப் படமொருபான் மேவி வைகு,
மனையவன்பாற் பேசவரு மறையவரப் படத்தினைக்கண் டாசி கூறித்,
தினையளவும் விடார்மொழிய வவனருகே யுண்ர்ந்துநகை செய்வன் மாதோ. (63)

4018. சீர்மருவு விநாயகமா றிருமயிலைச் சித்திரச்சத் திரமுன் மேய,
வேர்மருவோ வியக்கிளியைக் கண்டோராண் கிளியடைந்தாங் கிருந்து நோக்க,
நார்மருவு மதன்பேடு முனியவகன் றதற்குநல நவின்று தாழும்,
பார்மருவு மிக்கிளிநங் கிளியெனுமா ரனுமயங்கிப் பார்க்கு மாலோ. (64)

4019. இறையளவு நெறிதவறா விநாயகமாறிருமயிலை யிடத்துச் செய்த,
நிறைதரும சத்திரத்து மறையவர்பற் பலர்தினமு நெய்பா லோடு,
மறை சவைகொ ளடிசில்விலாப் புடைவீங்க வுண்டிடுவ ரதுதேர்ந் தன்றோ,
மறையவர்போ சனப்பிரிய ரெப்பொழுது மென்றுலகம் வழங்கு மாலோ. (65)

4020. வளமயிலைக் காபாலி தீர்த்தத்தென் கரைநடக்கு மாதர் மைந்த,
ரளவறுபொன் கொண்டுவிநா யகமுகில் செய் சத்திரப்போ ரழகு நோக்கி,
யுளமகிழ்வ தன்றியுநோக் கெதிர்செலா மையினொருவர்க் கொருவர் முட்டிப்,
புளகமெழுந் திருமுலைதோள் குலுங்குதலி னாலுமகிழ் பூப்பர் மாதோ. (66)

4021. நன்றலா தொன்றுமடை யாதகபா லீச்சரத்தை நாடி யோர்கான்,
மன்றநேர் கண்டவன்மற் றென்றுமய னாவனொளி வயங் குமேருக்,
குன்றநேர் புயன்மயிலை விநாயகமால் சத்திரத்தைக் கூடி யோர்கா,
லொன்றநேர் கண்டவன்மற் றென்றுமா லாவனிஃ துண்மை மாதோ. (67)

4022. நாறாத புகழடையாத் திருமயிலை நகரெனும்வா னகத்தி னன்மை,
மாறாத விநாயகமா லியற்றியசத் திரமெனுமா மதியினாளும்,
பாறாத வறுசுவைய வடிசிலெனு மமுதைமறைப் பற்றே யன்றிக்,
கூறாத குலமறையோ ரெனுந்தேவ ருண்டுகளி கொள்வர் மாதோ. (68)

4023. முருகுமலி தார்மார்பன் விநாயகமா றிருமயிலை மூதூ ராற்று,
பெருகுசுதை தீற்றியசத் திரம்பொடிபூசியமேனிப் பெருமா னேரு,
மிருகதவஞ் செறிவாய்த லனையபிரான் றிருநுதற்க ணேய்க்கு மவ்வா,
யருகடைவார் கொடும்பசிவேணிகருமெனி னென்னினியா மறைதன் மாதோ. (69)

4024. புண்ணியநன் மயிலையெனும் பொன்னுலகில் விநாயகமால் பொலியச் செய்த,
கண்ணியப்பற் பலவாய சித்திரச்சத் திரமெனுமோர் காம தேனு,
வெண்ணியபல் சுவையடிசி லெனும்பாலை யெவ்விடத்து மிருந்து மேவு,
மண்ணியல்பல் சனங்களெனுங் கன்றுகளை மிகவூட்டி வளர்க்கு மாலோ. (70)

4025. தார்மருவு புயசயிலன் விநாயகமா றிருமயிலைத் தலத்துச் செய்த,
பார்மருவு சாத்திரமும் பெருங்கடலு மொப்பாமெப் படியென் றானன்,
னீர்மருவு கடலுண்பா னெத்தனைகார் வரினுமிலை நீரென் னாதங்,
கேர்மருவு சத்திரமு மெத்தனைபேர் வரினுமன மிலையென்னாதே. (71)

4026. அனைத்துலகும் புகழ்மயிலை விநாயகமால் சத்திரத்தை யகிலத் துள்ளார்,
நினைத்தவுட னவர்பசிதான் புக்குறையத் தக்கவிட நினைக்கு மன்னார்,
கனைத்துநடந் திடநடந்தச் சாத்திரவாய் புகப்புகுந்து களித்து வாழும்,
வினைத்துயர்சா ருலோபர்தமை யடுத்துவாழ் பவருதர மேவித் தானே. (72)

4027. விள்ளரிய புகழ்மயிலை விநாயகமால் சத்திரமேல் விளங்க வேந்துந்,
தள்ளரிய துகிற்கொடிவான் மதிபோழு மனையன்மலர்த் தடக்கை யேந்து,
மெள்ளரிய வளமேழிக் கொடியுவமை யதற்கியைப்ப வெண்ணு வார்தங்,
கொள்ளரிய மதிபோழு மென்னின்யா மினிப்புனைந்து கூற லென்னே. (73)

4028. பாதிமதி யணிந்தபிரான் கபாலீசன் றிருமயிலைப் பதியின் மேய,
கோதில்புகழ் விநாயகமால் சத்திரத்துண் பார்பலருங் கூட லாலே,
நீதிமனை யிடம்புகுதும் பொழுதுமனை யவண்முனிவு நீங்கு மாறு,
வீதிதொறும் விருந்துநா டுவர்மைந்தர் பரத்தையரில் விட்டுத் தானே. (74)

4029. திங்கள்வா ணுதன்மடவார்க் கொருகாமன் விநாயகமால் சிறப்பச் செய்த,
துங்கமார் சத்திரமு மதன்முனர்க்கா வணமுமதன் றொலையாச் சீரு,
மெங்கள்கபா லீசருமை யொடுமுலாப் புறமாயங் கிலகு சீரு,
மங்கணா னோக்கியிது மயிலையன்று கயிலையென்ப ரகிலத் தோரே. (75)

4030. திருந்துகரும் புன்னைவனஞ் சூழ்மயிலைக் கபாலீசர் திருவி ழாவிற்,
பொருந்துவிநா யகமுகில்சத் திரத்தரசர் பலர்மேவும் புதுமை யாலே,
மருந்துநிகர் சுவையடிசி லூட்டொலியும் பாட்டொலியும் வாங்கி வேழ,
மருந்துகட கரியொலியும் பரியொலியுங் கடலொலியை யவிக்கு மன்றே. (76)

4031. பொய்வழியில் விநாயகமா றிருமயிலைச் சத்திரத்திற் புவன வேந்தர்,
மெய்வழிமற் றையர்பலரு மேவலிற்றண் ணுமைதாளம் விதியிற் கொண்டு,
கைவழியே கண்ணடப்பக் கண்வழியே மனநடப்பக் கதிர்ப்பூங் கொம்பின்,
மைவழிகண் ணார்நடிப்பக் கண்டுநாணடைவரர் மாதர் மாதோ. (77)

4032. உறவியிவன் யாவருக்கு மென்னும்விநா யகமகிய னுயர்மெய்ஞ் ஞான,
மறவியிலாத் திருமயிலை யியற்றியசத் திரத்தடிசில் வளம்பெற் றுண்டு,
திறவினையோ வியத்தமைத்த கண்ணனியற் றியலீலை தெரியக் கண்டோர்,
துறவியரே யாயினுமற் றவர்க்கடங்காப் பெருங்காமஞ் சுரக்கு மாலோ. (78)

4033. முதிய புகழ்த் திருமயிலை நகரில் விநாயகமகியன் முன்னி யார்க்கு,
நிதியமெனச் செய்தமைத்த சத்திரத்தோ வியர்பலவா நிரம்பச் செய்த,
திதியமைகண் ணன்புரிந்த லீலைகளைப் பரத்தையர்க டெரிய நோக்கி,
மதியமைத்து மேன்மேலு மைந்தருக்கின் பூட்டிமிக மகிழு வாரே. (79)

4034. அரியபுகழ் மயிலையெனுஞ் சுவேதவட்டத் தீவில்விநா யகமா லென்னும்,
பிரியநெடு மாறனது சித்திரச்சத் திரமெனும்பாற் பெருவா ரிக்கட்,
புரியவொளிர் பொன்னெனுமோ டதியினமை யுணவெனும்புத் தமுதை வேதக்,
குரியரெனுங் கோரிகையாற் பசியுடையா ரெனுமமரர்க் கூட்டு மாலோ. (80)

4035. புன்னைவனஞ் சூழ்மயிலைத் திருநகரில் விநாயகமால் பொலியச் செய்த,
தன்னை நிகர் சத்திரத்துப் பசுக்கள்பல கன்றுண்டு தளர்வு தீர்ந்த,
பின்னையரு கிருந்துகறப்பவர்கறந்து கையிளைத்த பின்னுஞ் சோர்பா,
லென்னையென வெதிர்வாவி பாய்வதுபாற் கடலையே யேய்க்கு மாலோ. (81)

4036. அயிலோடு பொருமதர்க்க ணணங்கனையா ரழகன்விநா யகமா னாளும்,
வெயில்வீசு மணிமாடத் திருமயிலை நகரிடத்து விளங்கச் செய்த,
வெயிலார்சத் திரஞ்சார்ந்த பலபொழிலும் பலபொழிலு மிறும்பூ தெய்த,
மயிலாடுங் குயில்கூவும் வானுலகப் பொழின்மாறா வயங்கு மாலோ. (82)

4037. தொண்டுபடு வார்க்கினிய கபாலீசர் மயிலையெனுந் தொன் மையூரி,
லண்டுமவர்க் கினியவிநா யகமுகில்சத் திரப்பொழில்வந் தடைந்தார் யார்க்கும்,
விண்டுமது வொழுகுசுவைக் கனிமுதற்பல் பயனுதவி விளங்கா நிற்கும்,
வண்டுகட்கும் பயன்படாக் கற்பகமோ மானுமதை வையத் தீரே. (83)

4038. மாதலமா மயிலைவிநா யகமுகில்சத்திரம்பயனுண் மகிழ்ந்து நாளும்,
பூதலங்கொண்டிடவுதவு மத்தகுசத்திரஞ்சார்ந்த பொழிலார் தென்னை,
மீதலங்கொண் டிடவிளநீ ராயபய னுதவுமிக விரும்பி மேன்மேற்,
பாதலங்கொண் டிடக்கனிக ளுதவிடுமப் பொழிலீரப் பலாக்கண் மாதோ. (84)

4039. ஆர்த்தவறி வினர்புகழுந் திருமயிலைப் பெருநகர மழகு மேவச்,
சீர்த்தவிநா யகமுகில்செய் சத்திரத்தின் மேலேறுந் திருவ மிக்கார்,
கூர்த்தமகிழ் வொடுமெட்டிக் கற்பகத்தி னறுமலரைக் கொய்வா ரங்குப்,
பார்த்தவம ரர்கள்குனிந்தச் சாத்திரஞ்சார் பொழின்மலரைப் பறிப்பர் மாதோ. (85)

4040. தலவுயர்வு பெற்றமயிலையில்விநா யகமகிபன் றழையச் செய்த,
நிலவுபுகழ் மிகுதரும சத்திரத்தைச் சார்ந்தவிளை நிலங்கள் பல்ல,
குலவுதள வரும்பனைய புனிதவமு தினுக்காகுங் குணநெற் பைங்கூ,
ழுலவுமத கயம்புகினு மறைக்குமே லச்செய்வள முரைப்பார் யாரே. (86)

4041. ஐயசிறி யிலைவெதிரி னெல்விளையு மெனப்பெரியோ ரறைந்தார் முன்னம்,
வையமிசை யுளவயலு ளிதுகாறுங் கண்டிலமவ் வார்த்தை மெய்யே,
செய்யன்விநா யகமகிபன் றிருமயிலைச் சித்திரச்சத் திரஞ்சார்ந் தியாரு,
முய்யவமை கழனியெலா மவ்வாறே விளையுமெனினுரைப்ப தென்னே. (87)

4042. நலமடந்தை யார்விரும்பும் வடிவழகன் விநாயகமா னன்கு செய்த,
பொலமடந்தை யுறைமயிலைச் சத்திரத்துண் டிலைபாகு பொலிய மென்று,
குலமடந்தை மாரொடும்வே தியர்வெளிவந் துமிழ்சாறு கூர்தலாலே,
நிலமடந்தை பூத்தனளோ வென்றையங் கொள்ளுவர்நீணிலத்து ளோரே. (88)

4043. ஒளித்தல்கூ டாதவள மயிலையில்வி நாயகமா லுவந்து செய்த,
களித்தசீர்ச் சத்திரத்துண் டவர்பிறர்சத் திரத்துண்டல் காம தேனு,
வளித்தபா லுடனினிய சுவையமுதுங் கூட்டிநனி யருந்தி னோர்கள்,
புளித்தகா டியையுமொரு பொருளாக்கொண் டருந்துவது போலு மாலோ. (89)

4044. நீற்றருமை யறிபவர்சூழ் மயிலையெனும் பெருநகரி னிலவு தென்றற்,
காற்றருமை புழுங்குமறைக் குள்ளிருந்து மாலைவாய்க் கரும்பு கான்ற,
சாற்றருமை யுவரிநீ ருண்டும்விநா யகமகிபன் சத்திரத்துச்,
சோற்றருமை மற்றையர்சத் திரத்துண்டு முணர்குவரேற் றுலங்கு மாதோ. (90)

4015. முருகுசெறி தாமரையு முள்ளியுமுண் டகமாமே முதிர்செம் பொன்னுங்,
கருகிரும்பும் பொன்னாமே தாரகையுங் கழிக்கயலுங் கரைமீ னாமே,
குருகணிகை யார்மதனன் விநாயகமான் மயிலைநலங் குலவச் செய்த,
திருகுதலில் சத்திரமு மற்றையர்சத் திரமுஞ்சத் திரமெய் யாமே. (91)

4046. தம்மையடைந் தவரவனி மிசைப்புரிந்த தவமுமந்தத் தவஞ்செய் நாளுஞ்,
செம்மையுற வுட்குறிக்கும் வான்றருக்க ளிவைகுறித்தல் செய்யா தென்று,
மும்மையுல கமும்புகழுந் திருமயிலை விநாயகமான் முழங்கச் செய்த,
கொம்மைமதிற் சத்திரம்வந் தடைந்தார்தம் பசியொன்றே குறிக்கு மாலோ. (92)

4047. நாடுவார் கடலுலகம் புகழ்மயிலை விநாயகமா னன்கு செய்த,
நீடுவார் கொடிமதில்சூழ் சித்திரச்சத்திரத்தகத்து நிரம்ப வந்து,
கூடுவார் பலர்க்குமிடங் கொடுக்குமனங் கொடுக்குமது குலவ மேன்மேற்,
பாடுவார் பலர்க்குமிடங் கொடுக்குமனங் கொடுக்குமதன் பளகில் சீரே. ( 93)

4048. முத்திக்கு வித்தாய பத்திமைபூண் டவர்க்கினிய முதல்வன் மாற்குஞ்,
சத்திக்கு மொருபாகந் தந்தபிரான் றிருமயிலைத் தலத்தி லோங்க,
வெத்திக்கும் புகழ்விநாயகமுகில்செய் சத்திரத்தினிருஞ்சீ ரென்றும்,
தித்திக்கும் பாடுநர்க்கு மேன்மேலு மெனினெவரே செப்பார் மாதோ. (94)

4049. மரங்களெலாம் பொன்னுலக மருவியகற் பகப்பெயர்நன் மரமா மேமட்,
புரங்களெலா மடைந்தவரின் படையமேல் விளங்குசிவ புரமா மேயக்,
கரங்களெலா முதலாகி விளங்ககரப் பெயருடையக் கரமா மேசத்,
திரங்களெலா மயிலைவிநா யகமுகில்சத் திரமாமே தேருங் காலே. (95)

4050. நீர்மருவு தாமரைகள் கதிர்கண்டு முகமலரு நிரம்பு வாசச்,
சீர்மருவு மரக்காம்பன் மதிகண்டு முகமலருந் திரைசார் வாரிப்,
பார்மருவு பசியினர்நன் மயிலைவிநா யகமகிபன் பண்பிற் செய்த,
வேர்மருவு சித்திரச்சத் திரங்கண்டு முகமலர்வ ரென்று மாதோ. (96)

4051. மைத்தகுழ லொருபாகன் கபாலீசனினிதமர்ந்த மயிலை மூதூர்த்,
தைத்தபுகழ் விநாயகமா லியற்றியசத் திரத்துள்ளோர் தண்ணீர்ப் பந்தர்,
கைத்தலின்மற் றதன்சிறப்பை யுளம்வையார் யாவர்முனங் கமழ்நீர்ப் பந்தர்,
வைத்தபுக ழாலவாய்ச் சுந்தரநாயகனுமுளம் வைக்கு மாலோ, (97)

4052. மான்மருவு கரதலத்தெங் கபாலீசர் மகிழ்ந்துறையு மயிலை மூதூர்த்,
தேன்மருவு தொடைமார்பன் விநாயகபூ பதியுவகை சிறப்பச் செய்த,
வான் மருவு மதிதவழ்சத் திரங்கண்டோர் யாருமுக மலர்வர் நாளுங்,
கான்மருவு நிலத்தணைதாய் முகங்கண்ட விளங்கன்று கடுப்ப மாதோ. (98)

4053. எத்தனைவானவர்களுள ரத்தனைவானவர்களும்வந் திறைஞ்ச நன்மை,
யெத்தனையோ வருண்மயிலை விநாயகமால் சத்திரத்தி லெய்தி நாளு,
மெத்தனை பேர் காண்பவர்மற் றெத்தனைபே ருறைபவரெத்தனைபேருண்போ,
ரெத்தனைபேர் துதிப்பவரெத் தனைபேர்யாப் பியற்றுநர்யா ரெண்ணு வோரே. (99)

4054. உற்றவன்பின் மேயகபா லீச்சுரர்கற் பகவல்லி யுவந்து வாழ்க,
கொற்றவன்செங் கோல்வாழ்க மறையவர்கள் வாழ்கமுகிற் குழாங்கள் வாழ்க,
நற்றவன்வி நாயகமான் மிகுசெல்வத் தொடுபொலிந்து நாளும் வாழ்க,
மற்றவன்செய் சத்திரத்துப் பெருந்தரும மெஞ்ஞான்றும் வாழ்க மாதோ. (100)

திருமயிலைச்சித்திரச்சத்திரப் புகழ்ச்சி மாலை முற்றிற்று.
----------------------------------------

தனிவிருத்தங்கள்.


4055. வந்தனங்கன் றிடமொடுபூ வாளிபெயுஞ் சீறிவரு மலயக் கானற்,
சந்தனங்கன் றிடக்கொதிக்கு நிலவுசினந் தெழுமினைய தன்மை யால்யா,
நொந்தனங்கன் றிடவிடப்போய்க் கழிவதையா வதுசடைமே னுவலு நீர்ச்சம்,
பந்தனங்கன் றிடபமுளான் மயிலைவிநா யகக்குரிசில் பார்ப்ப தென்றே. (1)

4056. திருந்தவளை யனமுண்ணாள் பாலனமும் வெறுத்தாளென் செய்வேன் சும்மா,
விருந்தவளை யநங்கனெய்திப் படிவருத்தும் பெருங்கழனி யெங்குந் தங்கும்,
பெருந்தவளை யனமிரியப் பாய்மயிலை விநாயகமால் பெட்பின் வந்து,
பொருந்தவளை யனகண்டத் தோழிநீ யின்றுசென்று புகலு வாயே. (2)

4057. தனைவிரும்பு மடவாரைத் தான்விரும்பி டாமையென்ன சதிரீ தென்ன,
நினைவிரும்பு தான்கொல்லோ மனமயிலை விநாயகமா னேரே நீவி,
ரனைவிரும்பு கலவந்தா லாயிற்றின் றெனில்வாங்கி யவன்றா ரென்றோள்,
புனைவிரும்புண் ணியமினிமேற் றாமதஞ்செய் யீரிரங்கிப் போது வீரே. (3)

4058. முந்துகன விடைக்கொடியார் திருமயிலை விநாயகமான் முன்னி நேற்று
வந்துககன விடைப்புணர்ந்தா னனவில்வந்து புணராத வஞ்சம் யாதோ,
நந்துககன விடைக்கிடுக்கண் புரிமுலையோ பணைத்துவிம்மு நானென் செய்கேன்,
சந்துகன விடைப்புணர்ந்தா லெதுவாமற் றதுவாமெய் தரிக்கிற் றானே. (4)

4059. தொக்கவனப் பாற்றனைவென் றவன்விநா யகமுகின்முன் றுணிந்து செல்லா,
திக்கவனப் பாற்றுளைக்கு மென்மயிலைத் தென்மயிலை யிடத்து வேட்டு,
நக்கவனப் பாற்கேங்கி யிருந்தவர்க்கான் பால்குமட்ட நாளு நல்கத்,
தக்கவனப் பாற்குறித்த தென்னையென வறிந்துவந்து சாற்று வாயே. (5)

4060. தலங்கலமா மையிலையா டரவாக்கொள் கபாலிநுதற் றழல்கா ணாத்தோ,
ளலங்கலமா மையிலையா யமர்விநா யகமகிப் னருகே மேவக்,
கலங்கலமா மையிலையாட் டியகண்ணார் போதனையைக் கலைக்க வெம்மால்,
விலங்கலமா மையிலையா தரித்தணைவா யென்றழைத்து மேவு வோமே. (6)

4061, சக்குவைத்தா யினும்பரம னுதல்கடக்கும் வலியடை யாத் தகுதியானோ,
ரிக்குவைத்தா யினும்பிரியர் மிகவெறுப்பக் கரத்தேந்தி யெய்யும் பூமா,
துக்குவைத்தா யினும்பரவு புகழ்மயிலை விநாயகநந் துரைமுன் காதிற்,
சுக்குவைத்தா யினும்விரைந்தூ தெனக்கிடந்தா ளென்றின்னே சொல்லு வீரே. (7)

4062. அரியதன மரும்பாபன் முளையாவிச் சிறுமகள்பா லணுகி வந்து,
பெரியதன மரும்பாவி வேடொடங்கு மாவெவனோ பேசுகே னெற்,
குரியதன மரும்பாவ லோர்புகழ்வி நாயகமா லொருவ னென்னுங்,
கரியதன மரும்பார்வெண் டளவனைய தெனினுமென்று கழறு மாலோ, (8)

4063. திருவசந்தனம் பால்வாய் விநாயகபூ பாவொன்று செப்பக் கேண்மோ,
வொருவசந்த னம்பால்வாய் மேயபிரா னுண்டவிட மொப்பச் சீறி,
வருவசந்த னம்பால்வாய் வெளிப்படுமுட் புகாவினைய மகண்மால் யார்க்கும்,
வெருவசந்த னம்பால்வாய் தாய்வாளி னரியென்னும் விலக மாதோ. (9)

4064. இலங்கறந்தா ரணிபரவ வளர்க்கும்விநா யகமகிய னிருந்தோள் சூடு,
மலங்கறந்தா னலங்கொள்வளத் கணிமயிலை மணிமயிலை யனையா யுள்ளங்,
கலங்கறந்தா வளமிருளாக் கொண்டுகைக்கும் வேள்புரிபோர் கடிய கல்லாக்,
குலங்கறந்தா லெதுவாமற் றதுவாம்வெண் ணிலாக்கதிருங் குளிரு மாதோ. (10)

4065. நேற்றருகே வந்தொருவன் முலைதொட்டுக் கிள்ளிநின்றா னீயா ரென்றேன்,
போற்றுபுகழ்த் திருமயிலை நகரிற்சத் திரங்கட்டு புகழால் யாருஞ்,
சாற்றுவிநா யகமகிபன் யானென்றா னதனாலென் றனத்தைக் கிள்ளற்,
காற்றுவிதி யென்னென்றே னகைத்துப்பின் மொழிகுவனென் றகன்றான் மாதோ. (11)

4066. அணிமயிலைத் தெருவின்மல ரோமல்ரென் றுரைத்துநென்ன லடைந்தே னாங்கோர்,
திணிபுயனேர் வந்தரும்பு தாவென்றா னின்றென்றேன் செப்பி னாய்பொய்,
கணிபுனையு மிரண்டுண்டே யென்றா னொன் றேனுமிலை காட்டு கென்றேன்,
மணிமுலைதொட் டிவை யென்றான் யாரென்றேன் விநாயகமான் மதியென் றாரே. (12 )

4067. முழுதுலகம் புகழ்மயிலைத் திருக்குளத்துப் படித்துறையென் முன்னர் வந்தோ,
ரெழுதரிய வடிவழகன் றன்மார்பி லென்மார்ப மிறுகச் சேர்த்துப்,
பழுதில்கனி வாய்முத்த மிரண்டுதந்து நீங்கினனிப் படித்து ணிந்து,
தழுவினவன் யாரென்றேன் விநாயகமா லென்றெவருஞ் சாற்றி னாரால். (13)

4068. அரியபுகழ்த் திருமயிலைத் திருக்குளத்து நேற்றுநீ ராடும் போதென்,
பிரியமிகு கலையெடுத்து விநாயகமா லவண்மறைத்த பெற்றி நோக்கித்,
தெரியவரு நீகண்ண னாயினும்யா னிடைப்பெண்ணோ செப்பு கென்றே,
னுரியவொரு சிற்றிடைச்சி யலையோநீ யெனநகைத்தங் குரைத்திட் டானே. (14)

4069. நீடுபுகழ்த் திருமயிலை விநாயகமால் சத்திரமு னேற்றுச் சென்றே,
னாடுமவ னெனைநோக்கிச் சிற்றிடைச்சி வருகவென்றா னான்முனிந்து,
கூடுமிதற் குண்டுகொலோ சான்றென்றேன் பாற்கலசங் கோட லாலே,
பாடுபெறு மென்றானின் றேயென்றேன் மார்பிரண்டு பாரென் றானே. (15)

4070. ஏர்மருவு வியாசநகர் விநாயகமான் மயிலையிலென் னெதிரே வந்து,
வார்மருவு தனந்தாவென் றானுனைப்போல் வள்ளலோ மன்னா வென்றேன்,
பார்மருவு சுவர்க்கந்தா வென்றானங் கபாலீசர் பாற்கே ளென்றே,
னார்மருவு நகையொடுமார் புறுமிவைதா வெனத்தொட்டா னாணி னேனே (15)

4071. அமைதரநேற் றொருத்திக்கு நீகொடுத்த வரிசையெலா மறியேன் கொல்லோ,
கமைதரயா னொன்றுமறி யேனென்றாய் பொய்சொலவுங் கற்றுக் கொண்டாய்,
சமைதரமற் றவள்செய்த வெச்சில்கழு வாதெனையுந் தழுவ வந்தா,
யிமைதரவாழ் மயிலைவிநா யகமகியா வறிவேனுன் னெண்ணந் தானே. (17)

4672. கன்றனங்கன் வருத்தாமன் மயிலைவிநா யகமகியா கட்டிச் சேர்த்தே,
யென்றனங்கைக் கொள்ளென்பேன் வாய்முத்தந் தாவென்பே னிவையல் லாம,
லுன்றனங்கைக் கொடுவென்னேன் விலைமுத்தந் தாவென்னே னூரார் பேசு,
மன்றனங்க கலவெனைவந் தணைவதனுக் குனக்கிருக்கும் வருத்தம் யாதே. (18)

4073. மன்னன்விநா யகமகிப் னேற்றெனைக்கை தொட்டிழுத்தான் மகிபா நீமற்,
றென்னகா ரியஞ்செய்தா யென்றேனென் மனத்தினைத்தொட் டிழுக்க லாமோ
வன்னநடை யாய்நின்பொற் றனமென்றா னஃதேலென் னங்கை தொட்ட,
துன்னுடைய பிழையென்றே னுள்ளதுதான் பொறுத்தி யென்றங் குரைசெய் தானே. (19)

4074. மாசுதவிர் திருமயிலை விநாயகபூ பாலாவென் மட்டு நீதான்,
பேசுவது பொய்யென்றே னின்னிடையே பொய்யென்றான் பெரியோனேநின்,
வீசுமனங் கல்லென்றே னின்முலையே கல்லென்றான் வேண்டே னின்பொற்,
பாசுபெறு பணியென்றேன் வேண்டுவேனின் னல்குற் பணியென் றானே. (20)

4075. பறந்துபல மலர்தொறும்போ யிருந்துமது வருந்தறுகாற் பறவை யேபோற்,
சிறந்துபல மாதரகந் தொறும்புகுந்து போகநுகர் திறமேற் கொண்டாய்,
மறந்துமொரு தினத்துமது தனைவிடாய் விநாயகமா மகிபா நல்ல,
வறந்துணிவு மிதுவன்றோ வென்னையும்வந் தேத்துவைநின் னருணன் றாமே. - (21)

4076. மருவுபுகழ் வியாசைவிநா யகமகிபா வினையாதிரு மயிலை மேலைத்,
தெருவுறையு மவளேபெண் ணவளழகே பேரழகு சிவசிவாவப்,
பொருவிலவளிளமுலையே வளமுலைமற் றவண்மொழியே பொய்யா வேத,
மிருநிலத்தி லுனக்கென்றால் யானாரென்னலம்யாதிங் கென்சொல் யாதே. (22)

4077. தென்கொடுத்த பெரும்பொழில்சூழ் வியாசைவிநா யகமகிபா செப்பக் கேண்மோ,
மின்கொடுத்த சிற்றிடைமா தருக்கெல் ம் பொருந்தும்வகை மேன்மேல் வாரிப்,
பொன்கொடுத்தாய் மணிகொடுத்தாய் செம்பவள முங்கொடுத்தாய் புரிந்தெ னக்கிங்,
கென்கொடுத்தா யொருமுத்தங் கொடுவென்றா லதற்குமனமில்லை தானே. (23)

4078. தென்மொழிதேர் வியாசைவிநா யகமகிபா வவள்வார்த்தை தித்திப்புள்ள,
தென்மொழியோ கைப்புள்ள தவள்செவ்வா யூறல்கரும் பென்வா யூற,
னன் மொழிசார் வேம்பேயாயினதால்யா ரிடம்போய்நான் சொல்வே னிந்த,
வன்மொழியை வேற்றுமையை நீயேசெய் வாயுனக்கே யடுக்கு மாலோ. (24)

4079. தேனிருக்கு மலர்மார்பா விநாயகபூ பாவொன்று செப்பக் கேண்மோ,
யானிருக்கு மனைநாடிக் கன்றகன்ற புனிற்றாப்போ லெண்ணுற் றேநீ,
தானிருக்கு மிடமாக வருவை முன்னாள் கடைக்க ணித்த றானுஞ் செய்யாய்,
மானிருக்கும் விழியவளா லிந்நாளென் றாலினியான் வகுப்ப தென்னே. (25)

4080. சீர்கொண்ட மயிலைவீதியிற்றயிரோ தயிரென்று செப்பி நென்ன,
லேர்கொண்ட யான்சென்றேனாங்கொருவன் றயிர்புளிப்போ வினிப்போ வென்றான்,
பார்கொண்ட வினிப்பெனநின் வாயூறல் போலினிக்கப் படுமோ வென்றா,
னார்கொண்ட விவன்யாரென் றேனவன்வி நாயகமா னலமென் றாரே. (26)

4081. பாலோபா லெனக்கூறி மயிலைவீ தியினேற்றுப் படர்ந்தே னாங்கு,
மாலோவென் றுரைக்கும்விநா யகமகிப் னெனக்கெதிரே வந்து நின்றே,
யாலோவென் றிடும்வயிற்றா யெத்தழனின் பாலுண்பார்க் கவிவ தென்றான்,
சாலோவாப் பசித்தழலென் றேன்காமத் தழலவிப்பிற் றருகென் றானே. (27)

4082. தேங்குலவு பொழின்மயிலைத் திருவீதிச் சித்திரச்சத்திர முனேற்று,
மாங்கனியோ வெனக்கூறி யடைந்தேன்வி நாயகமால் வந்து நேரே,
யேங்கிடையாய் கட்டிமாங் கனிகொலோ வென்றானா மென்றே னற்றேற்,
பாங்குபெறு நின்முலைபோ லிருக்குமெனிற் கொடுவென்று பற்றி னானே. (28)

4083. ஓவாத புகழ்மயிலை விநாயகமா லென்னெதிர்வந் துவந்து மானே,
கோவாத முத்தமொன்று கொடுத்தியெனின் யானுனக்குக் கோக்கத் தக்க,
தாவாத பலமுத்தந் தருவனென்றான் யான்மறுத்தேன் றடுத்துப் பின்னு,
மூவாத நீகொடுக்கு முத்தமே கொடுப்பனென்று மொழிந்திட் டானே. (29)

-----------------------

சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலைச் சிறப்புப்பாயிரங்கள் [$].


[$] *இவை பழைய பதிப்பைச் சார்ந்தவை; இந்நூல் பதிப்பித்தகாலம் நள சித்திரை (1856).

காஞ்சீபுரம் வித்வான் சபாபதி முதலியாரியற்றியது.
விருத்தம்.

4084. மேனாட்சி வனையுமைபோற் றும்மயிலை விநாயகமால் வியப்புட் கூரப்,
பூனாட்சி வரிகள்விதி யாமைநபு கானிநடுப் புனையும் பேருட்,
டானாட்சி யாயொன்றை யொன்றுறவொன் றுடன்றரித்தொன் றதனில் வாழு,
மீனாட்சி சுந்தரவேள் சித்திரச்சத் திரமாலை விளம்பி னானே.
----------------

பங்களூரிலிருக்கும் வல்லூர் - தேவராசபிள்ளையியற்றியது.
நிலைமண்டில வாசிரியப்பா.

4085. சீர்வள ரவனித் திருமக டனக்குப்
பேர்வளர் நாவற் பெயர்பெறு தீவங்
கவின்பெறு வதனங் கடுக்குமத் தீவிற்
கவிபுகழ் பரதக் காமரு கண்டங்
கயிரவச் செவ்வாய் கடுக்குமக் கண்டத் 5
துயர் தொண்டை நன்னா டொளிர்நகை பொருவும்
விளங்கதி னொளியெனத் துளங்குறு சீர்த்தி
பாவுறு வியாசர் பாடிவாழ் வேந்தன்
றேங்கட வரையுலாம் வேங்கட வரையா
னார மெறிதிரைக் கீரமா நதியா 10

னூழி வரையொளிர் மேழியம் பதாகையான்
மங்கையர் குவளை மலரொடு வரிபாய்
செங்கு வளைத்தார் திகழ்தரு புயாசல
னாம்பன் மலர்தர வலைகடற் றோன்று
மாம்பலின் பிடியென் றவிர்கர நீட்டுவெள் 15
ளாம்பலெந் நாளு மடைதரு முன்றிலான்
சந்தமார் குருத்துக் குந்தம துடையான்
சசியினைப் பொருவுஞ் சுசியுடைக் கோமான்
றிவளுஞ் சவளத் திருத்தோ ரணத்தா
னூழிவாய்ப் பொங்கு மாழிவா யொலியின் 20

பாழி யடக்கும் பண்புறு முரசினான்
யாரும் பரவு மேருவி னுக்குங்
கச்சிப் பதிக்குங் கன்னியம் பதிக்கு
மாவ லரும்பக் காவல் பூண்டவன்
றாதகி தாதவிழ் தாமந் துரோண 25
மேதகு மருக்க மென்மை சால்பதந்
தண்ணமு திறைக்கும் வெண்மதிக் கொழுந்து
மணிவளர் சுடிகைப் பணிசெழுங் கூவிளம்
புனைபரன் சடையிற் பொங்குவெண் கங்கை
நதிகுலாம் புதிக்குத் துதிவிது வன்னான் 30

கருக்கடல் சுவறத் திருக்குள விழியான்
மருக்கம லப்பத மலர்க்கன வரத
மருச்சனை யாற்று மருச்சுன வள்ளல்
பஃறினம் புரிதவப் பயனென வுதித்தோன்
புலவருள் ளவாவிய பொருளெலாம் பயத்தலாற் 35
பொற்றார் கொளலாற் புவனம் வாழ்த் துதலா
லடைந்தவர்க் கினிமை யமர்நிழ றரலா
லினையனைக் கற்பக மெனச்சிலர் சொல்வார்
நற்பயன் றூயர்க் கற்பொடு தரலா
னாலடி புகன்ற நன்னெறி நடத்தலா 40

னல்லவர்க் கடங்கி யல்லவர்க் கடிதலா
லினையனைத் தேனு வெனச்சில ரறைவா
ரெடுத்தெடுத் தளிக்கினு மென்றுங் குறைபடா
தடுத்து வளரு மரும்பொரு ளுடைமையா
லரனுடை நண்பற் குரிமைபெற் றிடலா 45
லிருநிதி யெனச்சில ரிவனைப் புகல்வார்
கைம்மா றடைவான் கருதாக் குணத்தாற்
றானமுந் தவமுந் தழைதர வழங்கலாற்
கருமுகி லெனச்சிலர் கழறுவ ரிவனை
யின்றென வடைந்தோர்க் கின்றென வுரையா 50

தொன்றவ ராசை யோடமிக் காசை
யென்று மளிக்கு மியல்புண் மையினா
லென்றூழ் சுதனென விவனைச் சிலர் சொல்வார்
கற்பக மோமரங் கவின்மிகு புமானிவ
னோரறி வுளதஃ தாற்றி வுளனிவன் 55
வேண்ட வதுதரும் வேண்டா திவன்றரு
மளிகொள் ளாத்தஃ தளிகொண் டவனிவன்
கண்ண னாலது கவரப் பட்டது
கண்ணெவ ராலுங் கவரப் படானிவ
னாதலி னஃதிவற் காகா திணையே 60

தேனுவோ விருகந் திகழிவன் குமரன்
பந்தமுற் றதுவது பகரஃ துறானிவன்
கொலையது புரிந்ததக் குற்றஞ் செயானிவ
னன்னதை யணுக வஞ்சுவ ரெவரு
மின்னனை யடுப்ப வென்னருங் களிப்பா 65
ராகலி னாகா தஃதிவற் கிணையே
யெழின்மிகப் பெற்ற விருநிதி யோவெனிற்
சுதந்தர முளவல சுதந்தர முளனிவ
னேமம தளிக்கு மெலாமளிப் பானிவ
னாதலி னாகா வவையிவற் கிணையே 70

கொண்டலோ வொரு பருவத்தினிற் கொடுக்கு
மெண்டகு மறுபரு வத்துமீ வானிவ
னுலகஞ்ச வாய்விட் டுரப்பியஃ தீயு
மிலகுமின் மொழிபுகன் றீகு வானிவ
னொருகா லளித்தலு முடலது விளர்க்கும் 75
பலகாற் றரினுமோர் படித்தொளிர் வானிவ
னனலிடி வழங்கி யாகிதஞ் செயுமஃ
தெவருங் களிக்க விதம்புரி வானிவன்
றருணந் தன்னிற் றழைவறக் கொடாததஃ
தெவ்வமை யத்து மினிதளிப் பானிவ 80

னாகையி னஃதிவற் காகா திணையே
கன்னனோ மத்தி யான தரித்திரன்
பன்னரும் பெருந்திருப் படைத்தவ னாமிவன்
சூது செய் தன்னவன் சூதணு விலானிவன்
போரிடை யச்சுறீஇப் புறந்தந் தன்னவன் 85
பாரிடை யப்பழி படையா தவனிவன்
கொடியரை யென்றுங் கூடி வாழ்ந் தனனவன்
படியின்மே லவரைப் பணிந்துவாழ் பவனிவ
னாதலா னாகா னவனிவற் கிணையே 90

கட்டழ குடைமையாற் கரத்தின்மீ னேந்தலாற்
கிள்ளை யூர்தலாற் கிளரளிக் குணத்தால்
வேழந் தாங்கலால் விதுக்குடை பரித்தலால்
வேணிக ரிவற்கென விளம்புவர் சில்லோ
ரவனுரு வில்லா னிவனுரு வுள்ளா
னவனறி வழிப்பா னிவனறி வளிப்பா 95
னவனரன் பகைவ னிவனரன் றொண்ட
னாதலி னவனிவற் காகா னிணையே
யின்னவன் கல்விக் கிணைதா னன்மையாற்
பன்னக வேந்தன் பாதலங் கரந்தன
னெனவியற் புலவ ரெவரும் புகழு 100

மனகன் விநாயக வண்ண லென்பா
னெயிலெரித் தவன்களிற் றீருரி புனைந்தவ
னயில் விழிக் குயின்மொழி யம்பிகை பங்கன்
கயிலைநா யகன்வாழ் மயிலையம் பதியிற்
காபாலி தீர்த்தத் தென்பாற் கரையினிற் 105

சிற்பநூல் வழியிற் பொற்புற வமைத்ததூஉ
மறுபான் மூவரென் றறையடி யவர்போற்
பன்னிரு வோரெனப் பகராழ் வார்போற்
போசன்முன் னாம்பல தேசமன் னவர்போற்
றீட்டிய மணிப்படந் திகழ்தரப் பெற்றதூஉ 110

மரம்பையுங் கந்தியு மவிர்தரு கன்னலுந்
திரம்பெற நாட்டித் திகழ்வாயி லுற்றதூஉந்
தெங்கின் மடலாற் செறிதர வேய்ந்து
கொங்கலர்ச் செழுந்தார் குளிர்தர வனைந்த
மங்கலப் பந்தர் வாய்த்தமுன் பாலதூஉ 115
மாசையால் வெள்ளியான் மணிகளா லியற்று
மாசிலாச் சுடர்நிலை மலிசிறப் பினதூஉந்
துவாதசி தன்னிற் றொக்கநல் லந்தணர்க்
கவாவற வனந்தன மருள்புகழ் கொண்டதூஉந் 120

துருமத் துதிக்குந் தூய வரவாற்
றருமமெந் நாளுந் தழையவாற் றுவதூஉந்
வந்தவர் தாகம் வளர்பசி போகச்
சந்ததங் காக்குந் தகைமையுற் றுளதூஉந்
தூய வாடியுந் தொங்கொளி வட்டமு
மேய பேரவை விளங்குறப் பெற்றதூஉந் 125
செந்தமிழ்ப் புலவருந் தேயமன் னவரு
மிருவகைப் பற்றிலா திலகுஞா னியருஞ்
சந்தத மவாவிச் சாரச் சிறந்ததூஉஞ்
சதுமறை யொலியுந் தருக்கநூ லொலியுந் 130

துதிகொள்வே தாந்தத் தூயநூ லொலியுந்
நால்வர்முன் னவின்ற நற்றமி ழொலியு
மாறிரண் டாழ்வா ரறைதமி ழொலியும்
பதிபசு பாசப் பகுப்பினைத் தெருட்டுஞ்
சைவசித் தாந்தத் தெய்வநூ லொலியு
மற்றைநூ லொலியு மலிதர வாய்த்ததூஉந் 135
தேசவர்த்த மானஞ் செய்யபத் திரிகையா
லாசற வெவர்க்கு மறிவுறுத் துவதூஉ
முப்பத் திரண்டென மொழிதரு நல்லறந்
தப்பற வளர்க்குந் தகைமை தன்னாற்
பரமற் குவப்பைப் பாலித் திடலாற் 140

புலவர் துயரம் போக்குவித் திடலாற்
காமக் கண்ணியைக் கடுத்திடு தவத்ததூஉஞ்
சசியும் வேணியுந் தவழ்முடி பெறலாற்
பத்தருக் கென்றும் பதமளிக் குதலான்
மாநிழ லமர்தலால் வல்லேறு பரித்தலா 145
லேகம் பத்திறைக் கிணையா வொளிர்வதூஉ
மாகிய சிறப்பெலா மமைசத்திரத்திற்
குலகம் வியப்ப வொருமாலை சொற்றா
னண்ட வுருவா யவிர்விராட் புருடனுக் 150

கெண்டகு சென்னியா விலகுகா ரணத்தாற்
சென்னிப் பெயர்பெறுந் திருநா டதனி
லம்முடிக் கென்று மழகுறக் கவித்த
பன்மணி முடியிற் பாங்குற வொளிருந்
திரிசிர கிரியெனுந் திருநக ராளி
கலையுணர்ந் திடலாற் கற்பவ ருளத்தி155
னிலைமுக் குற்ற நிசியைத் துரத்தலாற்
சைவ சமயத் தாமரை மலர்த்தலாற்
புறமதத் துகினம் புறமிடக் கடிதலான்
மதிஞரிற் சிலரிவன் மார்த்தாண்ட னென்றும்
புலவருக் குக்கலை பொலிதரத் தரலாற் 160

கலாநிதி யாகலாற் கவினளி செயலா
லறிஞரிற் சிலரிவ னம்புலி யென்றுஞ்
செந்தமிழ் பரப்பலாற் சிவன்புகழ் பாடலா
லாகம மனைத்து மறிந்துயர்ந் திடலா
லாய்ந்தவர் சிலரிவ னகத்திய னென்று 165
மனநனி மகிழ்ந்து வழங்குவ ரென்ப
கதிரவன் வெய்யோன் கழறிவன் றண்ணியோ
னகையிழந் தவனவ னகையிழ வானிவ
னெல்லிடை யுறானவ னெப்போழ்து முளனிவ
னாதலி னவனிவற் கன்றிணை யென்ப 170

மதிகலை தேய்பவன் வளர்கலை யானிவ
னவன்மா பாதக னிவன்மா புண்ணிய
னவன்வெந் நோய னிவன்மிகு தூய
னவன்பக லவனிடை யவிரொளி பெறுவா
னிவனியற் கையினி லென்று மிலகுவா 175
னாதலி னவனிவற் கன்றிணை யென்ப
கும்ப முனியோ குறியவ னாகு
நம்பனைப் பணியிவ னவிலரும் பெரியோன்
முன்னொர் நற் சீடனை முனிந்தவன் சபித்தனன்
சீடர்செய் பிழையெலாஞ் சிந்தி யானிவ 180

னாதலா னவனிவற் கன்றிணை யென்ப
வெண்ணிறந் தனவா யியன்மூ வகையவாய்ச்
சத்தையு மசத்தையுந் தகுதியிற் பிரித்தலிற்
சதசத் தெனும் பெயர் சார்ந்தொளிர் வனவாய்ச்
சிற்றறி வினவாய்ச் சேர்சக லத்தவாய் 185
வியாபகத் தனவாய் விரியுயிர்த் தொகைகள்
புனிதகா ரியங்களைப் புரியவொட் டாததூஉந்
தீயகா ரியங்களைச் செயமுயல் விப்பதூஉ
மாகிய வாணவத் தரட்டைதீர்ந் துய்யச்
சுத்தமு மசுத்தமு மென்று சொற்றிடு 190

மிருவகை மாயையா லிசைத்தவவ் வுயிர்க்குத்
தனுகர ணம்புவ னங்களைத் தந்தவை
யீட்டிரு கருமத் திருவகைப் போகமீந்
தொளிர்தலந் தீர்த்த முயர்தரு மூர்த்தியென்
றறையுமூன் றுருக்கொண் டவனியிற் கதித்திட் 195
டவ்வுயிர்க் கறியா வகையினு மறிந்துஞ்
செவ்விய புண்ணியஞ் சேர்தரச் செலுத்தி
யகச்சரி யாதி யாயநான் கனையு
முண்மைச் சரியைமுன் னுரைக்குமூன் றினையு
மென்மெல முறையின் மிளிர்தர நிரப்பிப் 200

பயின்மல வலியறப் பாசம் பயிற்றித்
தன்னருட் சத்தி தயங்கப் பதித்துச்
சாற்றிரு வினையைச் சமம தாக்கி
மலமு முயிரும் வயங்குதன் கீழுறத்
தான்மே லாகித் தங்கமை யத்தி 205
னீருறு முப்பு நிலவுறத் திரண்டெனத்
திருவரு ளதனாற் றேசிக வுருவுறீஇ
யத்துவா வாறையுஞ் சுத்தி புரிந்து
கூட்டம் பொதுதன் னியல்பெனக் குறிக்கு 210

நாட்டுமூன் றுணர்வா னவின்முப் பொருளை
யுறழ்தர வாகு மொன்பது வகையுங்
காட்டுபு பின்னர்க் காட்டுந் தானுங்
காணு மறிவுங் கதிர்நய னம்போல்
வயங்குறக் கலக்கு மாண்பெரும் பயனைத்
தெரித்ததி னழுத்துறீஇத் திகழ்தரு பசுபதி 215
யனாதி பந்தமு மாதி பந்தமு
மனாதியே யில்லா வனாதி முத்த
னியற்கையி னொருங்கே யெலாமறி பெருமா
னைந்தொழில் புரிந்து மறைவிகா ரம்மிலா
னேக னித்திய னெண்குண முள்ளான் . 220

பகர்சுதந் திரனாம் பரசிவ முதலே
யென் போன் றவருக் கின்னருள் புரிவான்
கடுவர வொடுசெழுங் கடுக்கை தவிர்த்து
மடலவிழ் குவளை மலர்த்தா ரணிந்து
பாலலோ சனமும் பனிமதிக் கோடுங் 225
களத்திடைக் கறையுங் காணாது மறைத்துச்
சிதம்பர வேண்முனஞ் செய்தமா தவத்தான்
மகிதல முற்றும் வாழ்த்துறச் சுதனாய்
வந்தன னெனலே வாய்மையா மென்று
தூயவ ரெவருஞ் சொற்றிடுந் தக்கோன் 230
மீனாட்சி சுந்தரப் பெயர்ச்செவ் வேளே.
---------------------

திரிசிரபுரவித்துவான்களியற்றியவைகள்.

வீரராகவ செட்டியாரியற்றியது.
விருத்தம்.
4086. சீர்விளங்கும் வியாசநகர் விநாயகமான் மயிலையினிற் சிறக்கச் செய்த,
பேர்விளங்குஞ் சத்திரத்தின் பெருமையள வறிந்துரைக்கப் பிறங்கு கல்வி,
யேர்விளங்கு மீனாட்சி சுந்தரநா வலனாலே யிசை வதன்றிப்,
பார்விளங்குங் கணபணக்கட் செவியாலு முற்றுணர்ந்து பகரொணாதே. (1)
-----------------------

சுந்தரம்பிள்ளை யியற்றியவை.

விருத்தம்.
4087. பூமேவு மங்கையர் குழற்குடைந் தெழிலிவிண் போதற்கு நாணியடர்பைம்-
        பொழிலொடுற வாதனன் றெனவுலாம் வியாசைவாழ் பூபால னதிவிதரணன்,
மாமேவு திண்டோ ளருச்சுனேந் திரனுதவு மைந்தனைந் தருவன முதல் -
        வள்ளலுள் ளியவருள் விநாயக வுபேந்திரனன் மாமயிலை யம்பதியினிற்,
கோமேவு சிகரம் பசும் பொனவ மணியாற் குயிற்றியரு ணன்பரியினங் கொட்பச்
        சிறக்குமுய ரன்னசத் திரமகிமை குலவுமொரு நாலைந்நூறு,
நாமேவு சேடனா லுஞ்சொலற் பாலதோ நளிர்சிர புரத்தில் வந்த -
        ஞானசம் பந்தனிகர் மீனாட்சி சுந்தர நலாரியனை யன்றி மாதோ. (1)

வேறு.
4088. பொன்னுல கத்தோ ரியாவரு மின்பாற் புணரியை மதித் தஞான் றெஞ்சாப் -
        புத்தமு தத்தோ டிருநிதி முதலாம் பொருள்பட வேற்றவர் தம்முள்,
மின்னிய நிதிக்கோ னறமலி வியாச வியனகர்த் தோன்றியன் பகலா -
        மிகுவிநா யகபூ பதியெனும் பெயரை மிலைந்துவந் தொருதிரு மயிலை,
யென்னுநற் பதியெண் ணான்கறந் தழைய வியற்றிய சத்திர வளனு -
        மியலுமன் னவற்குத் தோழனாம் பரம னிரசத வடகயிலையினின்,
றுன்னுதென் கயிலை யுவந்தெனை யாள்வா னுதித் துமீ னாட்சிசுந் தரப்பே-
        ருவப்புறக் கொண்டு மறைநவினாவா லுலகறிந் திடவுரைத் தனனே. (2)

வேறு.
4089. பண்ணியன் மொழியார் மயல்கொளுங் காமன் படிபுகழ் வியாசமா நகரிற்,
புண்ணியந் திரண்டோருருக்கொடு வந்தாற் போலவந் தருள்விநா யகவே,
டிண்ணிய மயிலைப் பதியிற்றன் பெயராற் செய்தசத் திரவள னடியார்,
கண்ணிய தருண்மீ னாட்சிசுந் தரநங் கடவுளாற் றெரிந்தன மாதோ. (3)

4090. உமையிரு நாழி நெல்லர னிடத்தேற் றுலகிலெண்ணான்கற முஞ்செய்,
தமையுணர்ந் தம்முன் னவன்றிரு மறையாந் தருமநூல் சாற்றின னதுபோற்,
கமைநிறை வியாச நகர்விநா யகவேள் கவின்மயிலையிற்செய்சத்திரத்தி,
னிமையறப் பயன்மீ னாட்சி சுந்தரவெம் மிறைவிளங் கிடவுரைத் தனனே. (4)

வேறு.
4091. எனதெனதென் றுரைத்தறஞ்செ யாதுணா துடுத்தாம லிழக்குஞ் செல்வர்,
மனமழிய வியாசநகர் வரும்விநா யகபூபன் மயிலாப் பூரிற்,
றினகரனேர் சாத்திரமொன் றியற்றுவித்தா னதன்பயனுஞ் சிறப்புஞ் சொற்றா,
னனகனுயர் மீனாட்சி சுந்தரமா லியற்றமிழா லவனி யோரே. (5)

நேரிசை வெண்பா
4092. நன்பான்மீ னாட்சிசுந்த ரக்குருவி னாற்றெளிந்தோ,
மின்பாய் புகழ்சேர் விநாயகவே - ளென்போர்,
பொருமயிலை வென்றவொண்கட் பூவையுருக் கொண்ட,
திருமயிலைச் சாத்திரத்தின் சீர். (6)

விருத்தம்.
4093. பாற்கடல் வியாச நகரமக் கடலிற் படுவலம் புரியருச் சுனமா,
னோற்கவந் துதித்த மணிவிநா யகவே ணுவலருந் திருமயி லையின்க,
ணேற்கவந் தவருக் கினியசத்திரத்தி னீகையா மொளியினை விரிக்க,
நாற்கவிக் கிறைமீ னாட்சிசுந் தரவா ணிகன்விலை பகர்ந்தனன் மாதோ. (7)

4094. இல்லறத் தவன்சீரியல்பதி னொருவர்க் கெழிற்றுணை யெனும்பெரியவர்சொல்,
வில்லகங் கொடுவி யாசமா நகர்வி நாயக பூபன்றென் மயிலை,
நல்லகத் துலோபர் மனமுக வியற்று நன்மைசேர் சத்திர வியல்பெ,
னல்லறீர்த் தாண்மீ னாட்சிசுந் தரமா லகிலநன் குணரச் சொற்றனனே. (8)

வேறு.
4095. எஞ்ஞான்றும் புலவர்மொழிக் கிசைபுகழ்வி நாயகவே ளீகை யில்லா,
வஞ்ஞானர் மனமழிய வரியதிரு மயிலையின்க ணமையச் செய்த,
செஞ்ஞாயி றனையமுடி திகழன்ன சாத்திரத்தின் சிறப்பை நன்றா,
மெய்ஞ்ஞானக் கடலெனையாண் மீனாட்சி சுந்தரமான் விளம்பி னானே. (9)
------------------

சி. தியாகராய செட்டியாரவர்கள் இயற்றியவை.
விருத்தங்கள்.
4096. வண்டிருக்கு மலர்ப்பொழில் சூழ் வியாசநகர் விநாயகமால் வந்தோர் யாரு,
முண்டிருக்கும் படிமயிலை யிற்புரிந்த சத்திரத்தி னுறுசீர் நாயேன்,
றொண்டிருக்குங் கழற்பெரியோன் மீனாட்சி சுந்தரப்பேர்த் தூய்மை யோன்வெண்,
பெண்டிருக்கு நாவினன்றி மற்றொருநா வாற்புகழ்ந்து பேசற் பாற்றோ. (1)

4097. மின்னுபுக ழருச்சுனமா றவத்துதித்த விநாயகவேள் விரும்பி யார்க்கு,
மன்னுமயிலைப்பதியில் விலாப்புடைவீங் கிடவருத்து மடத்தின் மேன்மை,
தன்னையருண் மீனாட்சி சுந்தரதே சிகன்றமிழாற் சாற்றக் கேட்டுத்,
துன்னமர ரவியொடமு துணவுநீத் தனரெனில்யான் சொல்வ தென்னே. (2)

4098. சீர்மருவு மருச்சுனமா றவப்பெருமை காட்டவந்த செல்வன் றிண்டோட்,
டார்மருவு விநாயகவே டிருமயிலை யிற்புரிந்த சத்தி ரத்தைக்,
கார்மருவு முடற்கண்ணன் கடிமனையு மொக்குமின்பங் கனியும் பாவாற்,
பேர்மருவு மீனாட்சி சுந்தரதே சிகன்புகழப் பெற்றான் மன்னோ . (3)

4099. மாமேவு மீனாட்சி சுந்தரதே சிகன்புகழ வாய்ந்த தன்றித்,
தேமேவு பலசுவையோ டின்னடிசி லூட்டியறந் திகழச் செய்யும்,
தூமேவு விநாயகமான் மடத்தையமு தூட்டியறந் தொலையச் செய்யும்,
பூமேவு புருகூதன் வசந்தமொக்கு மெனப்புகலேம் புகலே மன்னோ . (4)

4100. வீங்குபுகழ் மீனாட்சி சுந்தரதே சிகன்புகழ விளங்கு செல்வந்,
தாங்குமடந் திருமயிலைப் பதியிலன்றே விநாயகமால் சமைத்திட் டானேற்,
றேங்குசிறு விலைக்காலம் வரவீழி மிழலையுறை தேவைப் பாடி,
வாங்குவரோ சொல்லரசும் புகலியர்கோ வுங்காசு மறந்து மன்னோ . (5)

4101, ஆவணஞ்சேர் சிரகிரியெம் மீனாட்சி சுந்தரமானறையுஞ் செவ்வ,
மாவணஞ்சேர் விநாயகவேண் மயிலைமடத் துற்றீசன் வஞ்சஞ் செய்தே,
காவணஞ்சேர் திருநல்லூ ரமர்நீதி யார்மடத்திற் கரைந்தாற் போலக்,
கோவணஞ்சேர் நிறையிடெனக் கூறிடான் றன்னிறையுங் கொடுக்கு மென்றே. (6)

4102. முருகுகமழ் குவளையணி மீனாட்சி சுந்தரமான் மொழியச் சீர்த்தி,
தருகுணவி நாயகமான் மடமயிலை தனின்முனமே சமைத்திருந்தா,
லுருகுமனக் கோட்புலியார் பெருங்கிளைஞ ருளந்துணிவுற் றுமாப திக்காம்,
பெருகுசெந்நெற் கிட்டவிரை யாக்கலிக்குப் பிழைப்பர்களோ பிழைத் திடாரே. (7)

4103. நம்புமருண் மீனாட்சி சுந்தர வாரியன்புகழ நலமே வாய்ந்த,
பம்புவள விநாயகவே டிருமயிலை யிற்செய்மடம் பண்டே யுண்டேல்
வெம்பலிலா தரனடியார் பலருமுவந் தமுதுகொள விழைவார் கச்சூ,
ரெம்பெருமா னாரூரர்க் கிரந்திட்ட னெனும்பழியு மெய்தி டாதே. (7)

4104. இன்னுமொரு காலங்கம் பெண்ணாக்கத் திருமயிலைக் கெம்பிராட்டி,
மன்னுமுலைப் பாலுண்ட பிள்ளையுறின் விநாயகவேண் மடத்திற் சார்ந்தே,
துன்னுபுகழ் மீனாட்சி சுந்தரதே சிகன்புகழ்ந்த துதியுங் கேட்டுப்,
பன்னுமடி யாரொடமு துங்கொள்ளு மன்புடைய பண்பான் மன்னோ . (9)

4105. உளரளிவண் பொழிற்கூடற் பிரான்குறட்கன் றெழுந்தபசி யொருவ நல்குங்,
கிளரன்னக் குழியெனச்செய் விநாயகமான் மயிலைமடக் கீர்த்தி யெல்லாம்,
வளரருள்சேர் மீனாட்சி சுந்தரதே சிகன்றமிழால் வனைந்த மேன்மை,
தளர்விலவ னடியருக்கு மடியருக்கு மடியன்யான் சாற்றற் பாற்றோ. (10)
---------------------------------

புதுவை, செயகாநாயகர் குமாரர்
மகா ஸ்ரீ சவராயலுநாயகரவர்கள் இயற்றியவை.
விருத்தங்கள்.
4106. சீர்திகழ் வேதா விநாயக வள்ளல் செகமெலாங் களிக்கநன் கியற்று,
மேர்திகழ் மடம்போ லியைக்கநீ கண்ணி னியையுமோ வலதியைந் திடினு,
நார்திக ழெம்மீ னாட்சிசுந்தரமா னற்றமி ழணியஃ தடைய,
வூர்திக ழன்னங் கலைமக ளொழித்தொண் டவமுயற் றினுமுறுங் கொல்லோ (1)
வேறு
4107. புவிமகளுக் கோர்திலகன் விநாயகமால் விருந்தர்விலாப் புடைக்க வூட்ட,
அவிர்தரச்செய் சத்திரத்தை மீனாட்சி சுந்தரவென் னாசான் சொற்ற,
கவிமுகிலீ யாரகமாஞ் சுரத்துமற முளைத்தீகை கனிய வன்னார்,
செவியதர்சென் றிடுமிதனுக் கிணைசுரஞ்செல்லாமுகிலைச் செப்ப லாமோ . (2)

4108. திருக்கிளரு மருச்சுனமா றவப்பயனைக் காட்டவந்த சேயாம் நல்ல,
வுருக்கிளரும் விநாயகவேண் மயிலைதனி லினிதிழைத்த வொளிர்ம டத்தின்,
பெருக்கதனைப் புகழ்ந்துரைத்த மீனாட்சி சுந்தரநம் பெருமான் பாவைத்,
தருக்குடனே கருதியன்றோ சுரர்புலவ ரெனும்பெயரைத் தரித்திட் டாரால். (3)

4109. அத்திரம் போன் றொளிர்கணுமை நகிற்சுவட்டை யணிந்தநம்ப னடிப ராவு,
மித்திரங்கூர் வியாசநகர் விநாயகமால் புரிந்தவெ ழில்விளங்கு மன்ன,
சத்திரத்தி னெடும்புகழை மீனாட்சி சுந்தரநஞ் சான்றோன் பாவாற்,
சித்திரமா வியம்புதிறங் கண்டுகுறு முனிமலைவாய்த் திகைத்தான் மன்னோ. (4)

4110. பொன்னாடும் புகழ்தருவி நாயகவேண் மயிலையிற்றான் பொலியச் செய்த
தென்னாடு சத்திரச்சீர் மீனாட்சி சுந்தரதே சிகன்றீம் பாவாற்,
பன்னாடும் புகழநுவ லருமையறிந் தேபயிலும் பண்பாற் றொண்டை,
நன்னாடு சான்றோரை யுடையதெனும் பழமொழிக்கு நலிவு றாதே. (5)

4111. எண்கணற்கு மோர்கணற்கு மெட்டாத முக்கணன்வா ழிதைய னிந்த,
மண்கணுற்றோர் தொழுதேத்தெம் மீனாட்சி சுந்தரமான் மயிலை தன்னில்,
விண்களிக்க விநாயகமால் கண்டசத்ரச் சீர்தமிழால் விளம்பல் கேட்கத்,
தண்கடல்வா ழரிமருகன் முறச்செவிகொண் டிடினதனற் றகையார் சொல்வார். (6)

4112. பார்புகழும் விநாயகவே டிருமயிலைச் சாத்திரமாம் பாத்தி ரத்தி,
லேர்குடிகொண் டோங்கிவளர் மீனாட்சி சுந்தரப்பே ரெங்களாசா,
னார்நனிகொண் டமைத்துவைத்த நற்பாவாஞ் செவியுணவை நயந்தே விண்ணோர்,
சீர்தருதெய் வதவுணவை யவியவியென் றேவெறுத்துச் செப்பு வாரால். (7)

வேறு.
4113. துதிமிகு வியாச நகரருச் சுனவே டொல்புவிக் கருள்செய் வளித்த -
        தூயநற் சேயாம் விநாயக வள்ள றோன்றுறச் செய்மடந் தருவெண்,
டதிநெய்முற் பலவும் விராயவோ தனமுந் தடமலி சிராமலை தனில்வாழ் -
        தகுதிபெற் றொளிர்செந் தமிழ்முனி யென்னத் தக்கமீ னாட்சிசுந் தரமான்,
விதிமுறை யாவம் மடத்தினைப் புகழ்ந்து விருப்பினி லுரைத்ததீந் தமிழும் -
        வேதனைப் பயந்த மாதவன் பெற்றால் விதுரனில் லுற்றவோ தனமு,
மதிநுதற் செவ்வாய் வெண்ணகைக் கருங்கண் மலர்மக ளமுதமூற் றெடுத்து -
        வழிதரு மொழியுங் கனவிலு மினிதா மதிப்பனோ மதித்திடான் மன்னோ (8)

நேரிசையாசிரியப்பா.
4114. சீர்மலிந் திலங்குஞ் செழுமணி மாடத்
தேர்மலி கருங்குழ லிளமுலை மடவா
ரலங்கொளி விரிக்கு மரமியத் திருந்து
வண்டிமிர் பூந்தொடை வார்குழ லவிழ
வொண்டளிர்க் கரத்துறு வண்டினங் கலிப்ப 5
நுண்ணுசுப் பொசிய வெண்ணித் திலமென
முழுமதி முகத்தி லெழுவியர் வாட
வின்னிசை பாடித் துன்னுற வாடுறு
முத்த மழுத்திய கொத்தொளிக் கழங்கின்
றண்ணிலாப் பரந்து விண்ணகத் தெழுந்து 10

சுரநதி யகத்துறு மிரவல ரலர்த்தி
விளங்குறு மெழில்சேர் வியாசமா நகரோன்
றெய்வதக் கங்கைச் செழுங்குல திலகன்
றன்னிடத் தென்றுந் துன்னுறு வறிஞர்
குறிப்பறிந் திருநிதி வெறுப்ப வளித்துக் 15
கேட்டபின் வழங்குபொன் னாட்டுறு தருக்கள்
புறங்கொடுத் திரியப் பிறங்குறு கரத்தா
னருச்சுன மகீப னாற்றிய பெருந்தவப்
பாற்கட லதனிற் பனிமதி யென்னத்
தோற்றிய புனிதன் றுகளில் குணாகரன் 20

றானஞ் சுரந்து தழையருள் வாய்ந்து
தூக்கு பாவலர் துதிக்கை பெற்று
வேண்டுறு வார்தம் விக்கினந் தொலைத்துப்
பூண்டகு மங்கதம் பொலிபுயத் தணிந்து
செம்மையார் மணிநிறஞ் சிறக்கப் பூண்டு 25
மேவலி னுமாபதி விருப்பினி லளித்த
விநாயக மூர்த்தியை விழைதர நலஞ்சேர்
விநாயகப் பெயரை மிளிரப் புனைந்தோன்
றேமலர் நெட்டிதழ்த் தாமரை முனியும்
அசும்புதே னூற்றும் பசுந்துழாய் முகிலும் 30

பன்னருஞ் சுரரு மின்னமுங் காணா
மால்விடைப் பகவன் பாலமர் மலைமக
டுணைமுலைக் குடங்கள் சுரந்த தீம்பான்
மணக்குஞ் செவ்வாய் மாமறைக் குழவி
யென்புபெண் ணாக்க வினிதெழுந் தருள 35
வருந்தவம் புரிந்த திருந்தெழின் மயிலையி
னறங்குது கலிப்பப் பிறங்குற வியற்றிய
வன்னசத் திரத்தின் றுன்னுசீர் யாவும்
ஒண்டளிர் பொதுளிய தண்டலை முகட்டுப்
பூந்துகண் மூழ்கிப் புதுநிறம் வாய்ந்து 40

தவழ்ந்தினி திருக்குந் தழைமுழு மதிமேன்
முதிர்கனி யென்று முசுக்கலை பாயு
மின்னன வளம்பல துன்னுறக் கொண்டு
தேசுற வொளிருஞ் சிரகிரி வாண
னற்குண மேன்மை நல்லொழுக் குடைமை 45
பொற்புறு வாய்மை பொலிவுறு தூய்மை
புண்ணியஞ் சீலம் பொறைநிறை தேற்ற
முண்ணிறை யறிவிவை யொருங்கு திரண்டு
வந்தென வொளிரு மாதவப் புனித
னிலக்கண விலக்கிய மினிதுற வெவர்க்குங் 50

கலக்க மறப்புகல் கரிசில் குணாளன்
றன்னிடைக் கற்பவர் மன்னவைக் களத்து.
ளென்னையு மொருவனாத் துன்னுவித் தருளி
மெய்யருள் சுரந்த மீனாட்சி சுந்தர
நல்லா சிரிய னனியுள மகிழ்ந்து 55
கன்னலும் பாகுங் கனிசுவை யமுதும்
முக்கனி யிரதமும் முதிர்சுவைத் தேனுங்
கைத்திட மதுரங் கனிந்தூற் றெடுத்துப்
பாய்தரு நன்னலம் பரவுசெந் தமிழா
லிலகுறு செய்யு ளீரைம் பதாக 60

வொருங்குநா வலர்க ளுவப்புற்
றிருங்களிப் பெய்த வினிதியம் பினனே.
-----------------

குப்பு முத்தாபிள்ளையியற்றியவை.
விருத்தம்.
4115. துறவற முனிவர் யாவரும் விருந்து சூழ்ந்துண மயிலைமா நகரி,
லறைபுக ழோங்கு விநாயகச் செம்ம லமைத்தநன் மடத்தழ கருமை,
முறையுறக் குருமீ னாட்சிசுந் தரமான் மொழியுநற் றமிழமிழ் தினுக்குக்,
குறைவறக் கேட்குஞ் செவிகளுக் கினிமை கொடாதவிண் ணமுதிணை யாமோ. (1)

வேறு.
4116. வியனுறுவி யாசநகர் விளங்கவுதித் தொளிரும்விநாயகவேள் விண்ணோர்,
நயமுறுநன் மொழிநவின்று பெருவிருந்து தனக்கருத்த நன்கு தேர்ந்து,
புயல்வளஞ்சேர் மயிலைதனில் விருந்தளிக்கச் செய்மடத்தின் பொங்கு சீர்த்திப்,
பயனனைத்து மீனாட்சி சுந்தரதே சிகனன்றிப் பகர்வோர் யாரே. (2)

வேறு.
4117. மாநிலத் தெவரும் பசியெனும் பிணியால் வருந்துவ தறவரு மருந்து,
தானிது வெனவூண் சார்தர மயிலை தனில்விநா யகமுகில் சமைத்த,
வூனமின் மடத்தின் பெருமைமற் றோரா லுரைத்திடத் தகுவதோ வெனையாண்,
ஞானநன் மணிமீ னாட்சிசுந் தரப்பேர் நாவல னாவினுக் கலதே. (3)

4118. எண்டிசை பரவுஞ் சீர்விநா யகவே ளியற்றுசத் திரத்தினைப் புகழ்ந்து,
தண்டமிழ்க் குருமீ னாட்சி சுந் தரமான் சாற்றுமின் றமிழ்நறா வருந்தி,
யண்டர்மேற் புகழ்ந்து கூறுபே ரொலியை யவனியி லுறைபவர் யாருங்,
கொண்டல்செய் முழக்க மென்றுண ராது கூறுவர் வஞ்சனை யின்றே. (4)

4119. கற்பக மனைய கொடைவிநா யகவேள் கண்ணகன் மயிலையிற் கதித்துப்,
பொற்பகம் பொலியப் புரிதரு மடத்தின் புகலருஞ் சீர்த்திகண் முழுதும்,
விற்பன னெழின்மீ னாட்சிசுந் தரமெய்த் தேசிகன் விளங்குதீந் தமிழா,
னற்பக லவன்போல் விளக்கினன் புலவோர் நயந்துகொண் டாடவுண் மகிழ்ந்தே . (5)

4120. இந்திர நகர மெனவளம் பொலிய விலகுறு மயிலையம் பதியிற்,
சிந்தையுண் மகிழ்ந்து விநாயகக் குரிசில் செய்மட வளமெலாந் திரட்டி,
முந்துதீந் தமிழின் மொழிந்தனன் புலமை முதிருமீ னாட்சிசுந் தரப்பே,
ரெந்தையன் னான்சீ ரிருங்கடற் புவியில் யாவர்க்கு மியம்புத லரிதே. (6)

4121. திருமகள் குலவு மயிலைமா நகரிற் றெய்வத்தச் சனுமகிழ் சிறப்ப,
மருமலர் மணக்கும் புயவிநாயகவேண் மறுவிலா தமைத்தசத் திரத்தைக்,
குருமலி யருண்மீ னாட்சிசுந்தரப்பேர்க் குரவனின் னமுதமூற் றெழப்பாய்,
தருபசுந் தமிழாற் சாற்றிய திறத்தைச் சாற்றிட வல்லனல் லேனே. (7)

வேறு.
4122. செல்வமலி திருமயிலைப் பதியில்விநா யகச்செம்மல் செழிக்கு மன்பு,
மல்கியமைத் திடுமடத்தின் வளம்பலவு முளமகிழ்ந்து மன்னு மின்ப,
நல்குதமிழ்த் தேசிகனெம் மீனாட்சி சுந்தரப்பேர் நாத னாவாற்,
பல்கவுரைத் தருளருமை சேடவிசே டனும்பணிக்கற் பாற்றன் றாமே. (8)

வேறு.
4123. பயில்பவ ரெவரும் பண்ணவ ருலகம் பயின்றிட நினைத்திடா திருக்க,
மயிலையம் பதியில் விநாயகத் தூயோன் வகுத்திடு முணாத்தரு மடத்தின்
செயல்பசுந் தமிழிற் செப்புமீ னாட்சி சுந்தர தேசிகன் சீர்த்தி,
நயமுற வெவர்க்கு முலகெலாம் பரவி நன்குற நிலவுவ தியல்பே. (9)
------------------------------

திருவீழிமிழலை - கம்பராமாயணப்பிரசங்கம்
சாமிநாதகவிராயரியற்றியவை.
நேரிசை ஆசிரியப்பா.
4124. பொன்னார் கமலப் பூவார் வாவியில்
வரிச்சிறை யளிமுரல் கருப்புயல் விலோத
முருந்துறழ் மூரன் முகிணகைச் செவ்வாய்க்
கருந்தட நெடுங்கட் கவினுறும் வேய்த்தோட்
பருமுலைச் சிற்றிடைப் பணவர வல்குற் 5
றெரிவையர் புனலிற் றிளைத்தினி தாடக்
கண்ணிணைக் கஞ்சிய கயலினம் வெரீஇ
விண்மிசை வெடிபோய் விளங்கு பழுக்காய்த்
தாற்றிளங் கமுகின் றலையிறச் சாடித்
தலைவிரி யிலாங்கலித் தருவின் முப்புடைக் 10

குலையினை யுதிர்த்துக் குலவுவிண் மணியி
னிடஞ்சால் கொடிஞ்சி யெழிலுறுந் திகிரித்
தடந்தேர் பூண்ட தறுகட் கலின
மரகத நிறத்துக் குரகத மருட்டித் 15
தரளத் திரளைத் தண்டிரை கொழிக்கும்
விண்ணதி கலக்கி மேலெழீஇ யும்பர்த்
தருவிடைப் புக்குத் தண்ணிறால் கிழிப்பப்
படுதேத் துளியொடு பாரிடை யிறங்குஞ்
செழுநீர்ப் பண்ணைத் திருநா டுடுத்த
வசையில் வியாச மாநக ரதனிற் 20

றேனு மணியுந் திப்பிய நிதியுந்
தருவுந் திரண்டோர் தனுவெடுத் தென்ன
வரிச்சுரும் பரற்று மாலையந் தோளா
னருச்சுன வேள்செ யருந்தவப் பேற்றா 25
னாலெட் டறமு நற்குண மனைத்துந்
தகையுங் கல்வியுந் தவறின் மானமு
மடக்கமு மேன்மையு மருளு மீகையும்
வாய்மையுந் தூய்மையு மறுவில் சீலமும்
புலமையுங் கடவுட் பூசையு நேசமும்
வண்மையு மினிய மாட்சியும் யாவும் 30

புண்ணிய வடிவமாய்ப் பொலிவுற வந்தோன்
மணியணிச் சுடிகை வாண்முள் ளெயிற்றுப்
பகுவாய்ப் பஃறலைப் பாப்பர சுச்சிப்
பொறையாம் புடவியிற் புகலருஞ் சீர்த்தித் 35
தருவி னிழலுறீஇத் தானம் புரந்து
மாநிதி மரீஇ வச்சிர மேந்திப்
பொற்புறு மிவையாற் புரந்தரற் பொருவுங்
கற்பொரு தோளான் கருணை வாரிதி
வெண்மதி வதன விநாயகக் குரிசில்
வெயில் செலா வெயில்சூழ் மயிலையம் பதியிற் 40

பல்லுயிர் களிக்கப் பண்புற வியற்றிய
சத்திர தருமந் தன்னைப் புகழ்ந்து
நற்றமிழ்ப் பாவா னலனுறப் புனைந்தான்
றொல்காப் பியமும் பல்காப் பியமுமா
மிலக்கண விலக்கிய மெனும்பெருங் கடலிற் 45
றிளைத்தினி தாடுஞ் செந்தமிழ்க் குஞ்சர
மடிமையேன் போல்வார் மனத்திரு ளகல
வருளொளி விடுத்துநல் லறிவை விளக்க
வந்த ஞான வரோதயப் பருதி 50

தென்பான் மலயத் திருமுனி யிருந்தாங்
கன்பார் வடபாற் கருண்முனி யானோன்
சைவசித் தாந்தத் தனிப்பெருஞ் சாகரம்
பொய்ம்மை யில்லாப் புலவர் சிகாமணி
கல்லாக் கலராங் கரிகளை வெல்ல
வல்ல வீர வாளரிக் குருளை 55
கங்கைச் சடையெங் கண்ணுதற் பெருமான்
வடாது கைலையாம் வரையினை யொரீஇத்
தெனாது கைலையாஞ் சிரகிரி யதனிற்
றமிழ்க்கர சியற்றத் தான்வந்ததுபோற்
றானாட்சி யாகிய தலைவன் 60
மீனாட்சி சுந்தர விமலநா வலனே. (1)

விருத்தம்.

4125. திருமருவு கஞ்சப் பொகுட்டிற் பொலன் சிறைச் செஞ்சூட் டனங்குதிப்பச் -
        சேலினம் வெரீஇக்கவரி நாகின் குடம்புரை செருத்தலின் முட்டவொழுகுந் -
தீம்பா லுவட்டெழீஇக் கரையிறச் சாடிச் செழுந்தடம் பணைநிரப்பிச்-
        செந்நெலை வளர்க்குமயிலைப்பதியி லின்பஞ் சிறந்தனை வருங்களிக்கு,

மருமல ரலங்கலணி மார்பன் விநாயக வரோதயன் சத்திரத்தின் -
        மன்னறப் புகழுமற் றதனைத் திருச்சிரா மலையில்வா ழெந்தை யருள்சேர் -
மாட்சிமை விளங்குமீ னாட்சிசுந் தரமுகில் வடித்தினி தெடுத்து ரைத்த -
        வண்டமிழ்ப் பனுவலின் சொன்னயப் பொருணய வனப்புஞ் செவிக்க ணோர்ந்து,

பருமணி யிமைக்கும் பரூஉச்சுடிகை நெட்டுடற் பஃறலைப் பாந்தட்பொறைப்.-
        பாரிற் றிகழ்ந்தபல் லுயிர்கண்மிடி யாங்கொடும்
படருறாவண்ணந்தரப் - பண்ணவர் தமக்கர சியற்றுமும் மதவெண் பகட்டிறை தனாதுலகு பொன் -
        பாலித் திடும்பஞ்ச தருமணி யருஞ்சுரபி பதுமநிதி முதலிருந்து,

மருமைமிகு நல்லறம் புரிகிலே நற்புக ழருந்தமிழ் வியப்புணர்வதற் -
        காயிரங் கண்பெற்ற வஃதுபோற் செவிகளோ ராயிரம் பெற்றிலமெனா -
வஞருற்று நாணி வெளி வரலஞ்சி வானகத் தம்பர்க் கரந்தனனெனி -
        னலகில்மற் றிவர்கடஞ் சீர்த்திப்ரதாபத்தி னளவினை யுரைப்ப தெவனோ. (1)

வேறு.
4126. சீர்கொண்ட வியாசநகர் தன்னில்வா மதிககுண தீரனொய் யாரசு குணன் -
        றிருமா னிகர்த்திடு மருச்சுனக் குரிசிறன் செய்தவத் தாலுதித்த,
கார் கொண்ட கரதல விநாயக மகீபனற் கவினுறும் மயிலை நகரிற் கண்பெற வியற்றறச்
        சத்திரப் பெருமையைக் கவியினாற் புனைதல் செய்தா,
னீர்கொண்ட வேணிக் கறைக்கந் தரத்தெந்தை நிலவுஞ் சிராமலையிடை -
        நிலைமைசேர் செந்தமிழ்ப் புலமையை நடாத்திநெறி நீதிசெய வந்தகோமா,
னேர்கொண்ட தண்டா மரைத்திரு வடிக்கடிமை யென்னவெனை யாண்ட பெம்மா
        னிருநிலம் பரவுமீ னாட்சிசுந் தரனென்னு மினியநா வலவ ரேறே. (2)

வேறு.
4127. மருத்திகழ் கமல முகத்தினா ருலவு மாடநீ டிரிசிரா மலையின் -
        வழுத்தரும் புகழ்மீனாட்சிசுந் தரமால் வஞ்சனே னெஞ்சகச் சிலையிற்
குருத்தினி தலருந் தாமரைத் தாளன் குரைகட லமுதினுஞ் சீர்ப்பக் -
        குவலயத் தவர்தஞ் செவிக்கமு தென்னக் கூறுநற் றமிழினாற் புனைந்தான்,
றிருத்தகு வியாசச் செழுநக ரதனிற் றிகழ்தரு மருச்சுனச் குரிசில் -
        செய்தவ மனைத்துந் திரண்டென வுதித்த தேசுறும் விநாயகபூபன்,
றருத்திகழ் மயிலைப் பதியிலெவ் வுயிருந் தழைத்துளங் களித்திட வியற்று-
        சத்திர பதிகள் வியந்திடுந் தரும சத்திரப் பெருமையைப் புகழ்ந்தே. (3)

4128. மாநிலத் துறுநல் லுயிர்கடம் முளத்தின் மடமையாம் வறுமையி லுழலா -
        வண்ணமெண் ணருநற் றமிழ்ப்பெருங் கடலின் மன்னுநா வெனும் வரைநிறுவி,
மேனிலை தரும்பே ரறிவெனும் வடத்தை வீக்கிமென் சொற்பொருண் முன்னா -
        விண்ணவர் தம்மான் மதித்தெடுத் திஞ்சி விளங்குசீர் வியாசமா நகர்வாழ்,
வானிகா செங்கை விநாயகேந் திரனேர் மயிலையி லியற்றுசத் திரத்தின் -
        வண்புக ழமுதைக் கவியெனுங் குடத்தின் மாண்புற முகந்தினி தளித்தான்,
றூநிலாத் தவழுஞ் சிரகிரி யதனிற் றுளவணி யலங்கலாற் பொருவுஞ் -
        சொல்லரும் புகழ்மீ னாட்சிசுந் தரப்பேர்த் தூயநா வலர்சிகா மணியே. (4)

4129. தாரணி தனிற்பல் லுயிர்களோ ரின்பந் தனையடைந் திடற்கரி தென்ப -
        தவத்தவர் பரவு மயிலையம் பதியிற் றனிவிநா யகமுகி லியற்று,
மேருறுந் தரும சத்திரந் தன்னா லெழிலுடற்கின்பமு மதனோ-
        டிருள்புரை கரைக்கந் தரப்பணிப் பணிவா னிருநதி வெண்பிறை யறுகோ,
டாரணி சடிலத் தெந்தைவீற் றிருக்கு மருட்சிரா மலையில்வா ழெம்மா -
        னருந்தமிழ்க் கிறைமீ னாட்சிசுந் தரமா லவன்புகழ் தனைவிரித் துரைத்த,
கார்பொருங் கவியா னற்செவிக் கின்பங் கதித்திடக் களிப்பர்க ளென்னிற் -
        கருதுமற்றிவர் தம்பெருமை வெண்டிரைசூழ் கடலிடத் துரைக்குமா றெவனோ. (5)

வேறு.
4130. தெருளார் தமிழ்க்குச் சிரமளித்த செல்வக் குமுண னங்கர்பிரான்
சிமையத் தடஞ்சூழிமையவரைச் சிறுவிக் கொருபா லினிதளித்தோ
னருளா ரரிக்குப் புவியளித்த வடன்மா வலியிங் கிவர்கொடையி
லரைக்கா லொருகா லரைமுக்கா லாகுமென்பர் முழுக்கொடையிற்
றருவார் கரத்து விநாயகவே டானென் றுரைக்குங் குணசீலன்
நண்ணார் மயிலை நகரிலறந் தழைக்க வியற்று சத்திரத்தின்
திருவார் சிறப்பு நற்றமிழாற் றேவர் வியப்பச் செய்தனனூ
றெரிமீ னாட்சி சுந்தரதே சிகநா வலர்கள் சிகாமணியே. (6)

வேறு.
4131. மருக்கு லாவிய மலர்த்தடந் திகழ்திரு மயிலையம் பதிதன்னிற்
றிருக்கு லாவிய விநாயக முகிலுயிர் செழித்திட வினிதாற்று
மிருக்கு லாவறச் சத்திரத் தின்னிய லிசைத்தனன் றமிழான்முத்
தருக்கு லாவமு தொப்பமீ னாட்சிசுந் தரனெனும் பெரியோனே. (7)

வேறு.
4132. அருமறை புகழு மயிலையம் பதியி லருள்விநா யகப்பெயர் வள்ள
றருமசத் திரத்தின் புகழெனும் பைங்கூழ் தரணியிற் றழைத்தினி தோங்கத்
துரிசின் மீனாட்சி சுந்தரப் புயனற் றூத்தமி ழாங்கடல் பருகி
யிருமைசே ருலக மின்புறக் கவியென் றியம்புமா மாரிபெய் ததுவே. (8)

வேறு.
4133. திங்க ளுலவு மணிமாடந் திகழு மறுகிற் பரிதிதடந்
        தேரைப் பொருவ விளைஞர்கடாஞ் சிறுதே ருருட்டுத் திருமயிலைத்
துங்கத் தலத்தில் விநாயகவே டுகடீர் தரும் சத்திரத்தின்
        றூய பொலிவு மவற்புகழ்ந்து துயர்மாற் றிடுஞ்சீர்ச் சிரகிரியிற்
றங்கும் புகழ்நற் செந்தமிழ்க்குத் தலைமைப் புலமை நடத்துபெருந்
        தகைமீ னாட்சி சுந்தரமா றமிழு நோக்கக் கேட்கவன்றோ
புங்க முறுகட் செவியாகப் புரிந்தா னயனென் றுளக்களிப்பாற்
        பொறையென் றறியா துலகேந்திப் பொலிந்தா னுரகப் புரவலனே. (9)

வேறு.
4134 இருமையிலைத் துவசனைநே ரெழில்விநா யகமுகினல் லின்ப மேய,
திருமையிலை நகரினிற்பல் லுயிர்க்களிக்க வியற்றறச்சத் திரச்சீர்க் கொப்பப்,
பெருமையிலை யுலகிலெனப் பெருந்தமிழாற் புனைந்தனனெம் பெம்மான் செங் கைப்,
பொருமையிலை யுவந்தவனேர் மீனாட்சி சுந்தரப்பேர்ப் புலவன் றானே. (10)
------------------

தாராநல்லூர்
வீராசர்மிநாயகரியற்றியவை,
விருத்தம்.
4135. திருவளர் வியாச நகரருச்சுனமா றிகழ்தவத் துதித்தமா தனவா,
னுருவளர் விநாய கேந்திர னென்பை யொண்டொடி யாக்கிய வொப்பின்,
மருவளர் மயிலைப் பதியினாற் குலத்தோர் மாண்பினுக் கேற்றவா றினிய,
குருவள ரன்ன சத்திர நன்றாக் குலவிட வியற்றினன் மாதோ. (1)

4136. அவ்வியன் முதலா வறஞ்செயும் வளனவ் வறப்பய னியாவுந் தெண் டிரைநீர்,
கௌவிய வுலகோ ரறிதர வினிய கவியொரு நூற்றினா லிசைத் தான்,
செவ்விய மதுர மொழுகுதீந் தமிழிற் றிரிசிராப் பள்ளிவாழ் புனித,
னவ்விய மடியார்க் கறுத்தருள் புரிமீ னாட்சிசுந் தரகுரு பரனே. (2)
-----------------------

அப்பாவுப்பிள்ளை யியற்றியவை.
விருத்தம்.
4137. வானளாஞ் சோலைசெறி வியாசநக ரருச்சுனவேண் மைந்த னான
பானலார் தொடைவிநா யகபூபன் றிருமயிலைப் பதியி னன்றா
மோனமா தவர்பிரம சாரிவா னப்பிரத்தன் முதன்மற் றுள்ளோர்
மானமா தரம்பொலித னன்றெனச்சத் திரமினிதா வகுத்தான் மன்னோ. (1)

4138. கனம்பொலிதென் றிரிசிராப் பளிவளர்மா தவனருநூல் கற்றோர் நாப்பட்,
டனம்பொலித லெனவளரு மீனாட்சி சுந்தரமான் றரணி மீதிற்,
கனம் பொலியச் சத்திரத்தின் பெருமையையீ ரைம்பஃதாங் கவிசெய் தானன்,
மனம் பொலிவு ளவர்க்கும்வஞ்ச மனம்பொலிவு ளவர்க்குமற மருவ மாதோ. (2)
------------------

அழகிரிசாமிநாயகரியற்றியது.
விருத்தம்.
4139. பங்கய வாவி செறிதரும் வியாசப் பதிவிநா யகமுகில் பளகின்
மங்கலம் பொலிதென் மயிலையி லினிய மாண்புறச் செய்தசத் திரத்தி
னங்கமு மதன்க ணமையுநல் லறனு மவனியோ ருணர்தரச் சொற்றான்
றுங்கநற் குணமீ னாட்சிசுந் தரனென் றோமறுத் தருள்செய்தே சிகனே.
---------------------------------

கோவிந்தசாமிபிள்ளையியற்றியது.
விருத்தம்
4140. பகலவ னிரதப் பரிசுழன் மாடப் பந்திசேர் வியாசமா நகரி
லிகலற விளங்கும் விநாயக பூப னெழிற்றிரு மயிலையம் பதியிற் (
சகலரும் புகழ்ந்துண் டேக்களிப் படையத் தருகையி லார்சமழ்ப் படையப்
புகலறு மன்ன சத்திர நன்கு பொற்புற வியற்றினன் மாதோ. (1)

கட்டளைக்கலித்துறை.
4141. பூதர வில்லி மகிழ்மயி லாபுரி யிற்புலவர்க்
காதரஞ் சேரப் புரிதரு மச்சத் திரச்சிறப்பை
மாதரஞ் சேருல கெல்லா மறிய வகுத்தனனால்
சீதர னேரெங்கண் மீனாட்சி சுந்தர தேசிகனே. (2)
---------------------------

முருகப்பிள்ளை இயற்றியவை.
விருத்தம்.
4142. குளநாடு முளரிதிகழ் மயிலை தனில் விநாயகமால் குலவு சோழ
வளநாடு சோறுடைத்தென் றிடுமொழிவெந் நிடச்செய்த மடமென் னெஞ்சக்
கள நாடு கழற்குரவன் மீனாட்சி சுந்தரமான் கவிதைத் தேனோ
டுளநாடின் னமுதருத்த லாற்றொண்டை நாடேசோ றுடைய தாமால். (1)

4143. புண்ணியமெல் லாமொருங்கு திரண்டனைய விநாயகவேள் புரிந்தி யாரு,
மெண்ணுமயி லைப்பதியி லியற்றுசத்தி ரச்சிறப்பை யெளியேன் றீமை,
மண்ணியசீர் மீனாட்சி சுந்தரதே சிகன்றமிழால் வனைந்தபாவை,
யுண்ணமுதென் கோகனியென் கோபாகென் கோயாதென் றுரைப்பேன் மன்னோ. (2)
---------------------------

இராமசாமிப்பிள்ளையியற்றியவை.
விருத்தம்.
4144. தெண்டிரைசூழ் புவிமகட்குத் திலகமெனுந் திருமயிலை சிறக்க வோங்கு,
மெண்டிசையும் புகழும்விநா யகபூபன் றனதுளத்தி லிசைந்த வன்பாற்,
கண்டவறச் சத்திரத்தின் மேன்மையெலாம் பலபாவாற் கருணை கூர்ந்து,
மண்டலத்தின் மீனாட்சி சுந்தரவா ரியன்றமிழால் வகுத்தான் மாதோ. (1)

4145. சுந்தரஞ்சேர் மாதர்மட லெழுதுபுய சயிலனருச் சுனவே ளீன்ற
கந்தமலர்த் தொடையணிவி நாயகபூ பதிமயிலைக் கண்வ குத்த த்தச்
வந்தவரச் சாலையதன் றகைமையெலாம் புலவர்களிப் படைந்து வாழ்
செந்தமிழான் மீனாட்சி சுந்தரதே சிகனினிது செப்பினானால். (2)

4146. மங்கலஞ்சேர் திருமயிலை நகர்தனி லருச்சுனபூ மான் முன் செய்த
துங்கமிகு தவப்பயனா யுதித்தவிநா யகமகிபன் சூழிப் பாரிற்
றங்கிய வெங் கலியகலக் கண்டவறச் சாலையெழிற் றகைமை யாவும்
புங்கமிகு மீனாட்சி சுந்தரதே சிகன் றமிழாற் புனைந்தான் மன்னோ . (3)
-----------------------

பாலகுரு உபாத்தியாயரியற்றியது.
விருத்தம்.
4147. செங்கமலை வளர்மயிலைப் பதியில்விநா யகமுகில்கா சினியி னாளும்
புங்கமுறு முயிர்தழைக்கப் புரிந்தவறச் சத்திரத்தின் புகழை யார்க்கு
மங்கையிலா மலகமென வருங்கவியாற் புகழ்ந்தனனல் லறிஞ ரேத்துந்
தங்கியசீர் மீனாட்சி சுந்தரதே சிகனெனும்பேர்த் தமிழ்ச்சிங் கேறே. (1)
----------------------

நரசிம்ம உபாத்தியாயர் இயற்றியது.
கட்டளைக்கலித்துறை.
4148. வான்புகழ் சீர்த்தி விநாயக வேண்மயி லைப்பதியிற்
றான்புரி சத்திரச் சீரா மரதனந் தன்னையின் சொ
லான்மலி யின்றமிழ்ப் பொன்னிற் பதித்தணி யாவமைத்தான்
றேன்பொழி தார்ப்புயன் மீனாட்சி சுந்தர தேசிகனே . (1)
---------------------

மருதையாப்பிள்ளை இயற்றியது.
விருத்தம்.
4149. திக்கனைத்தும் புகழ்வியாச நகர்வாழ்வி நாயகவே டிருக்கு லாவுஞ்.
செய்க்கமல மலர்மயிலைப் பதியிலியற் றியவறச்சத் திரச்சீர் சொன்ன,
தக்கபுகழ் மீனாட்சி சுந்தரதே சிகன்றமிழைத் தானத் தோங்கு,
மிக்கவமு தென்னினது கடைப்பட்ட தென்றுரைப்பார் மேன்மை யோரே. (1)
--------------------

வயித்தியலிங்கபத்தர் இயற்றியவை,
விருத்தம்
4150. செழுமலர்ப் பொழில்சூழ் வியாசமா நகர்க்கோர் திருவென வளர்விநா யகவேள்,
பழுதினல் லறங்கள் பரவுவான் மயிலைப் பதியிலொண் சத்திரம் பகலோ,
னெழுபரி யினமு மீகையில் வஞ்ச வீனர்வன் னெஞ்சமுஞ் சுழலத்,
தழுவுமீ கையர்த மனமுமா தவர்நெஞ் சமுமகிழ் வுறவியற் றினனே. (1)

4151, சீர்மலி யுலகுக் கொருமுக மாகுந் திரிசிர புரவிறை திறம்பா
நார்மலி யன்ப ருளவிரு ளகற்று ஞானவா தித்தனற் குவளைத்
தார்மலி நம்மீ னாட்சிசுந் தரமான் றாழ்விலச் சத்திர வியல்பை
யேர்மலி தமிழா லின்கவி யொருநூ றிசைத்தன னன்பினின் மாதோ. (2)

வேறு
4152. மாமேவு குமுதத் தளிக்குல முலாவல்செழு மயிலனையர் கட்கு டைந்து -
        மாசிறீ விழனிகர் தடஞ்செறி வியாசநகர் வளரருச் சுனமாதவன்
பூமேவு செய்தவத் துறும்விநா யகவேள் பொருந்துதிரு மயிலை தன்னிற் -
        புலவர்முத லாந்தவர்க ளுட்களிப் பெய்திப் புகழ்ந்திட வறங்குலவுமோர்,
கோமேவு சத்திரங் கண்டவர் கணைத்திறை கொளும்படி யியற்றினன தன் -
        கோதில்புக ழைத்தமிழி லொருநூறு செய்யுளாற் கூறின னலஞ்சிறந்த,
தூமேவு தன்னடி யரொடுநாயி னேனையுந் துரிசறச் சேர்த்தருள் செயுஞ்-
        சுகுணசிர புரமேவு விமலவெம் மீனாட்சி சுந்தரப் பேர்க்கு ரவனே. (3)

4153. சீர்கொண்ட புவியின்முக மெனும்வியா சப்பதி சிறக்கும் மருச்சுன முகில் -
        செய்தவத் தால்வந்த மணிவிநா யகமால் செழிக்குமயி லைப்பதியினிற்
கார்கொண்ட முடியமைத் தன்னசத் திரநன்கு காணச் சமைத்ததன்கட் -
        கற்றவரு நற்றவரு மற்றவரு முள்ளங் களித்துண வறஞ்செய்வளனை,
யேர்கொண்ட நதிகுலச் சலதிவந் தமரர்மிக் கேத்துசிர கிரியுதித்தன் -
        பெஞ்சலின லடியவ ருளத்தஞானத்திமிர மிரியச் சவட்டி யருள்செய்,
தார்கொண்ட சிவஞான பானுமீ னாட்சிசுந் தரகுரு பரன்றரணியோர்-
        தம்முளத் துவகையுற வினியகவி நூறெனத் தமிழினாற் சொற்றனனரோ. (4)
--------------------

ஆறைமாநகர் ஐயாசாமி முதலியாரியற்றியது.
விருத்தம்.
4154. புவனமூன் றேத்தும் வியாசர்பா டியில்வாழ் புண்ணிய னருச்சுன வேள்செய்-
        புனிதமா தவத்தில் வந்தவன் கவிஞர் போற்றுறுங் கங்கையங் குலத்தோன்,
சிவபிரான் கமல வடியிணை நாளுஞ் சிந்திக்கு மடியரைப் பணிந்து -
      திருவருள் பெற்றோன் கொடையினிற் குமுணன் றிகழ்புகழ் விநாயக பூபன்,
நவமலர்ச் சோலை புடைவளர் மயிலை நகரினி லெவர்களு முய்ய -
      நன்கமை தரும சத்திரத் தினுக்கோர் நற்றமிழ் மாலைசொற் றனனால்,
பவமிலார் துதிக்குந் தமிழ்க்கட லுண்டு பாவல ரெனும்பயிர் தழைக்கப் -
      பனூன்மழை பொழிமீ னாட்சிசுந் தரப்பேர் படைத்திடு கருணைமா முகிலே.
-----------------------------

பங்களூர்ச் சதுர்வேத சித்தாந்த சபையைச்சார்ந்த தருமத்தமிழ் வித்தியாசாலை
முதலுபாத்தியாயராகவிருந்த காஞ்சீபுரம் இராமானுசபிள்ளையியற்றியது.
விருத்தம்.
4155. கடலெனத் தோன்று மலர்பொலி யகழுங் காமரு நேமிநே ரெயிலுங்-
      கவின்பா தலமும் வானமு நண்ணுங் கனம்பெறு வியாசர்பாடியினான்
கங்கையங் குலத்திற் பயோததி நாப்பட் கலைமதி யெனவவ தரித்தோன் -
      கலையுண ரறிஞர் புகழருச் சுனமால் காதல னெவர்க்குமெஞ் ஞான்றுந்,
திடமுற வளித்தோர் பருவத்தே யளிக்குஞ் செழுமுகி லினத்தைவெங் கண்டோன் -
      சேல்விழி மடவார் கிழிவரைந் துவக்கச் சிறப்புறு சுந்தர வுருவன் -
      றிகழ்தரு குவளை மாலையார் மார்பன் றிருவளர் வேங்கட முடையான் -
      செப்பரு மேழிப் பதாகையான் றவளச் சிந்துரம் பரிகுடை யுடையான்,

மடமிலார் வதியும் தொண்டைநா டுடையான் மாசறு சவளதோ ரணத்தான் -
      வயங்குறும் பாலி நதியினா னென்றும் வார்முர சொலிக்கும் வாயிலினான்,
மாசுரை வழங்கா நாவினான் றேசு மலிவிநா யகப்பெயர்க் கோமான் -
      மன்னுறு தரும நித்திய மென்னா மனத்திடை நன்கினி தாய்ந்தே,
யடலுறு மயிலைப் பதியினி லற்பி னமைத்தசித் திரச்சத்தி ரத்திற் -
      கருஞ்சிர புரஞ்செய் மாதவத் துதித்த வண்ணல்செந் தமிழ்க்குயர் கந்த-
      னவிர்பதி பசுபா சப்பொருண் முடிபை யடியடைந் தவர்க்கரு டூய-
        னறஞ் ய்மீ னாட்சி சுந்தரப் பெயர்கொ ளறிஞனோர் மாலைசாற் றினனே.
----------------------

மெய்யூர்
பொன்னம்பலநாயகரியற்றியது.
விருத்தம்
4156. மணிவளர் புவிக்கட் டொண்டைநன் னாட்டில் வயங்கிய வியாசர்பாடியினான் -
      மலிபுக ழருச்சு னப்பெயர் மால்செய் மாதவத் துதித்தவன் குவளை,
யணிவளர் புயத்தன் விநாயக வள்ள லற்பொடு மயிலையி லமைத்த - வருமைசேர் தன்ம
      சத்திரத் தினுக்கோ ரவிர்தமிழ் மாலைசொற் றனனால்,
கணிவளர் கூந்தற் பரையொடு பரமன் களித்துவாழ் திரிசிர புரியான் - கங்கையங்
      குலத்தான் செந்தமிழ் வாரிக் கரைகண்ட நாவலர் பெருமான்
றிணிவளர் சைவச் செழுமதம் விளங்கத் திருவவ தாரஞ்செய் யோன் - செய்யமீ
      ன்னாட்சி சுந்தர நாமந் திகழ்தரப் பெற்றசெவ்: ளைளே.
--------------------------

காஞ்சீபுரம், பாரதப்பிரசங்கம்
சாமையரென்கிற
இரகுநாதையரியற்றியது.
விருத்தம்.

4157. பொன்னனைய மலர்க்கடுக்கைச் சடிலவா னவன்போற்
      புலவர்களின் முதலானோன் புனிதனைப்போற் றுதலிற்
றன்னிகர்தா னாயவன்மீ னாட்சிசுந் தரமால்
      தழைவியாசர் பாடியில்வாழ் தருவிநா யகவேண்
மின்னிடையார் வாழ்மாட மயிலைதனிற் கண்ட
      விளங்குசத் திரத்தினுக்கு விளம்பியமா லையின்சீ
ரென்னனையா ரெடுத்துரைக்க வனந்தநா வளியா
      திருந்ததனாற் றளியிழந்தா னிவ்வுலகில் விதியே.
---------------


புன்னைப்பாக்கம் சுப்பராய முதலியாரியற்றியது.
விருத்தம்.
4158. நித்திலங் குலையி லெறிதிரை யிலஞ்சி நேமிநேர் வியாசர்பா டியில்வாழ்,
சித்தச னனைய விநாயகச் செம்மல் செழுமயி லையிலினிதமைக்த்த்த,
சத்திரத் தினுக்கோர் மாலையை யிசைத்தான் சைவநற் சமையதா மரைக்கு,
மித்திர னெனுமீ னாட்சிசுந் தரவேள் விளங்கியற் பாவல ரேறே.
--------------------------

தண்டம் சிதம்பர முதலியாரியற்றியது.
விருத்தம்.
4159. அரியதொழின் முயன்று பொரு ணனியீட்டி யீயா
      தவமிழக்கு மந்தககட் கறநெறியைத் தெரிப்பான்
பரவுதிரு மயிலையினிற் சத்திரமொன் றமைத்துப்
      பகரரிய பெருஞ்சீர்தி படைத்தவனாம் வியாசர்
புரியில்வா ழருச்சுனலே புதல்வன்விநா யகப்பேர்ப்
      பூபதியைப் புகழோடுகோ புகலதற்கோர் மாலை
பாவிசைதிற்கென மயினிசி சுந்தரநா வலனைப்
      பழிச்சுகோ பாவலியிலைகர்ந்தருளு வீரே.

சித்திரச்சத்திரப்புகழ்ச்சிமாலைச் சிறப்புப்பாயிரங்கள் முற்றுப்பெற்றன.
-------------------------------------------


Comments