Pirapantattiraṭṭu XXXIII
பிரபந்த வகை நூல்கள்
Backதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" (3332-3408)
பகுதி 33-1 : பட்டீச்சுரப்புராணம்
பகுதி 33-2: திருவரன்குளப்புராணம்
-
உ
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
** பிள்ளையவர்கள் இயற்றத்தொடங்கிய நூல்களிற்சில அபூர்த்தியாகவே
நின்றுவிட்டனவென்பது பலர்க்கும் தெரிந்ததே. அவற்றுள், கிடைத்தவை
பதிப்பிக்கப்படுகின்றன.
----------------
கடவுள் வாழ்த்து
3332 - விநாயகர்.
பூமேவு குழைச்செவிதம் புடையினெழு கடாங்கவரும் பொருட்டு மேன்மேற்,
றாமேவு வண்டரெலாந் துரப்பவகத் தொரு கருவி தகக்கொண் டாங்கு,
மாமேவு பொன்பொதிந்த காற்கவரி தூங் கியொளி வயங்க மேவுங்,
காமேவு மைந்தடக்கை யானைமுகப் பெரு மானைக் கருத்துள் வைப்பாம். - 1
3333 - ஆணைவிநாயகர்.
சீர்பூத்த பலபுவனத் தெவ்வுயிரு முனிவறத்தஞ் சிரமேற்கோட,
லார்பூத்த நமதாணை யெனறெரிப்ப வாணைவிநா யகரென் றோர்பேர்,
நீர்பூத்த குணத்தமைந்து வன்னியடிப் பொடிமூடு நெருப்பு மான,
வேர்பூத்த செம்மேனி வெண்ணீற்றோ டமர்பவர்தா ளிறைஞ்சி வாழ்வாம். - 2
3334 - மதவாரணப்பிள்ளையார்.
நாமதவா ரணங்குறித்த படிகொடுதீ வளர்த்துமென நவிலுந் தக்க,
நாமதவா ரணங்குசிவ மிகப்பினென வுங்கொள்ளா னண்ணு மாற்றண்,
ணாமதவா ரணங்குமிறுந் தடப்பட்டீச் சரம்புகுந்து நலியச் செய்தா,
நாமதவா ரணங்குளிர்பூந் தாளருள வின்பநல நண்ணினேமால். - 3
3335 - பட்டீசர்.
மாமேவு பண்ணவரு மெண்ணவரு மகவானு மறைநூ லாய
பாமேவு நாவலனுங் காவலனு முனிவரரும் பகர்மற் றோருங்
காமேவு பன்மலரு மென்மலரும் படியிறைப்பக் காட்சி நல்கு
தாமேவு திருவுருவோ ரெட்டீசர் பட்டீசர் சரணஞ் சார்வாம். - 4
3336 - வெளியுறலுட் புகலின்றிக் களத்துநடு வமர்தருவெவ் விடமு நாளு,
மிளிகிளர்பெண் ணுருவமுமா ணுருவமுமா கியவுருவு மருண்மு கத்தே,
யொளிர்விழிக ளொடுநுதல்சான் முரண்விழியுந் தன்பெருமை யுணர்த்த வோவாத்,
தெளிகிளர்பட் டீசம்வளர் பட்டிலிங்கப் பெருமான்றாள் சேர்ந்து வாழ்வாம். - 5
3337 - ஞானாம்பிகை.
நயனநுதல் பன்னிறத்த வயனரியா தியர்பலரு நயக்குமாறு,
வியனமைய வேற்றிடவும் வேறுநிற முறாவனையான் மேனியேபோற்,
பயனமையும் வெண்மகளுஞ் செம்மகளுங் கலக்கவுந்தம் பண்பு மாறாக்,
கயன்மருள்கட் பல்வளைக்கைக் காமருஞா னாம்பிகைதாள் கருத்துள் வைப்பாம். - 6
3338 - வண்ணிறங்கொள் பன்மலர்மா மகண்முதலோ ரிறைத் திடலால் வதிப ராக,
மொண்ணிறங்கொ ளன்பர்மன மாயாவணுக் குழாஞ்செறிவ துணர்த்துங் காலுந்,
தண்ணிறங்கொள் பல்லறமுமடைந்துகோ லுபுசெறியுந் தகையு ணர்த்தும்,
வெண்ணிறங்கொள் பல்வளைக்கை யும்பெறுஞா னாம்பிகைதாண் மேவி வாழ்வாம். - 7
3339 - சபாபதி.
வந்துதரி சித்திடுவார் மலமாசு மண்ணவெழு மாண்புபோலச்,
சிந்துபல சீகரமந் தாகினிவெவ் வினைக்காடு தீத்த லேபோன்
முந்துசுடர் விட்டெழுசெந் தழலின்மே னோக்கவொளிர் மூவா மன்றி
னந்துதிரு வருள்பெருக நடநவிலும் பெருமானை நயந்து வாழ்வாம் - 8
3340 - சிவகாமசுந்தரியம்மை.
3340.
தொண்டுகாட் டிடுதிறத்தா லொவ்வொருவ ரனுபவிக்கத் துணிவார் பூமே,
லண்டுகாட் டிடுபிரம னாதியர்மற் றென்செய்வாரவர்போ லாது,
பண்டுகாட் டிடுமன்றுட் பரமர்புரி திருநடமாம் பரமா னந்தங்,
கண்டுகாட் டிடுக்கருணைச் சிவகாம சுந்தரிதாள் கருத்துள்வைப்பாம். - 9
3341 - தஷிணாமூர்த்தி.
இருவரா லியற்றிரண்டு மெய்துருவ மெய்தாம லெந்தஞான்று,
மொருவரா லளப்பருந்தன் னடிமருவி யின்பநிலை யுவப்பயாங்க,
ளிருவரா லியற்றிரண்டு மெய்தாத திருவுருவ மெய்தி நாளு,
மொருவரா லளப்பருமா லடிமருவும் பெருமானை யுளங்கொள்வாமால். - 10
3342 - வைரவக்கடவுள்.
அரிவிதிசே வித்திடுகாற் கையுளதென் னெனவிதியையரிவி னாவ,
விரிதருபுண் டரிகமென வதனகத்தென் னெனவரியை விதிவி னாவப்,
பிரியமது வெனநகஞ்சூற் றலைச்சிவப்பென்சொற்றிரெனப் பிறர்வி னாவப்,
பரியசமழ்ப் பவர்கொளச்சூ லமுங்கபாலமுந்தரித்தோன் பாதம் போற்றி. - 11
3343 - அனுஞ்ஞைவிநாயகர்.
சடையிலிளம் பிறைபொலிய வதன்சாயை யெனமுகத்தோர் தவளக் கோடு,
மிடையவொழுக் கமுதெனவெண் ணூலிலங்க வீசியவெண் ணிலவு மான,
வடையரைவெண் படமிளிர வவ்வொளியை யஞ்சியிரு ளடிவீழ்ந் தென்ன,
விடைதலிலுந் துருவமைய வளரனுஞை மழகளிற்றை யெண்ணி வாழ்வாம். - 12
3344 - முருகக்கடவுள்.
இறவிதபுத் தலையுணர்த்த யமனைவருத் தியதந்தை யெண்ணந் தேர்ந்து,
பிறவிதபுத் தலையுணர்த்த வயனைவருத் துபுமறைகள் பிதாவுஞ் சேயு,
மறவிதபுத் துணர்மினந நியரெனறேற் றியகருணை வள்ள லன்ப,
ருறவிபசு மயிலுகைக்குங் குமாரநா யகன்மலர்த்தாளுள்ளி வாழ்வாம். - 13
3345 - திருநந்திதேவர். வேறு
இடையினொற் றொழியச் சூட லெப்பெய ரிறைக்கப் பேரே
யடைதரு தனக்கு மாக்கி யவன்பணி முடியிற் றாங்கிக்
கடையரேம் பணியு மங்கோ கனகநே ரடியிற் றாங்கு
முடையனெங் குரவர் முன்னோ னருளடைந் துய்வார் மேலோர். - 14
3346 - அகத்தியமுனிவர்.
வரையரத் தழுந்த வாழி வற்றமால் சிவமாக் காணப்
புரையுதள் பதும மாகப் பொலியொரு கரத்தா லாற்றிக்
கரைநகை முதலாற் றெவ்வைக் கடப்பவ னிலுஞ்சீர் வாய்ந்து
தரைபுகழ் பொதியில் வாழ்செந் தமிழ்முனிக் கடிமை செய்வாம். - 16
3347 - திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்.
இறையரு ளதனா லூர்தி யெய்தியு நீழல் செய்யு
முறையதொன் றெய்தி லேமென் றயனொடு முகுந்த னாணக்
குறைவிலாச் சிவிகை யோடு பந்தருங் குலவப் பெற்ற
நிறைவுசால் காழி ஞானப் பிள்ளைதா ணினைந்து வாழ்வாம் - 16
3348 - திருநாவுக்கரசுநாயனார்.
விடமெழ வெறுப்பு வைத்தா ரமுதெழ விருப்பஞ் செய்த
கடவுள ரயன்மா னாணக் கையரப் பூதி யிட்ட
வடர்விட மமுத மள்ளி யள்ளியுண் டளவா வின்பத்
தொடர்பமைந் தொளிர்வா கீசர் துணையடி போற்றி செய்வாம். - 17
3349 - சுந்தரமூர்த்திநாயனார்.
மறையவ னெனும்பேர் பெற்றேன் மன்னவ னெனும்பேர் பெற்றே,
னிறையவன் புகழ்யா வர்க்குண் டென்றயன் முகுந்தனாண,
முறைமறை மறையோ னென்று மொழிவதற் கேற்பத் தூது,
கறைமிடற் றவனைப் போக்கு நம்பிதாள் கருதி வாழ்வாம். - 18
3350 - திருவாதவூரடிகள்.
கரைசெயு மசுத்த மாயா காரிய மணியொன் றேற்று
வரைகொடன் மார்பில் வைத்த மால்சமழ்ப் புறவெண் ணில்லா
வுரையெனுஞ் சுத்த மாயா காரிய மணிக ளோவாப்
பரையிடப் பெருமா னுக்குச் சூட்டினார் பாதம் போற்றி. - 19
3351 - சண்டேசநாயனார்.
புரைதபு மன்பி னோர்பாற் புறமகங் கரையும் பெம்மான்
விரைகம ழாத்தி நீழற் புறங்கரை யாமன் மேவி
வரையென விருப்ப வான்பால் வரையறு குடங்கொண் டாட்டித்
தரைபுக ழின்பந் துய்த்த மழவுதாள் சார்ந்து வாழ்வாம். - 20
3352 - அறுபத்துமூவர்.
மறைமுதற் கலைக டேறா மாதேவை யேவல் கொண்ட
தறைபுகழ் நாவ லூரர் தனித்தனி யடியேன் யானென்
றறைபெருந் தவத்த ராய வறுபத்து மூவர்க் கெண்ணில்
குறையுடை யானு மவ்வா றுரைப்பது குணமாங் கொல்லோ. - 21
3353 - பஞ்சாக்காதேசிகர்.
புகழிக ழுபய மாய பொழிற்றலை வாழ்க்கை வேண்டே
மகிழ்மல மாதி தன்னே ரெய்தின ரெய்தா ராக
வகழ்மதில் தனிகு லாய வாவடு துறைக்கண் மேவித்
திகழ்குரு நமச்சி வாயன் சேவடி வாழ்க்கை யோமே. - 22
3354 - அம்பலவாணதேசிகர்.
நம்பல மாக வைகு ஞானக்கோ முத்தி மேய
வம்பல வாண தேவ னருளிய பிராசா தத்தால்
வம்பல சாத மெல்லா மாற்றியா னந்த சாத
மும்பல மாகப்பெற்றே முதற்குமேற் பெறுவ தென்னே. - 23
3355 - சுப்பிரமணியதேசிகர். வேறு.
நன்மைதிகழ் தென்றிருவா வடுதுறைச்சுப் பிரமணிய நமச்சி வாயன்,
மென்மைமல ரடிப்பணிசெய் விதம்வந்த விப்பிறப்பை வியந்தேன் சற்றும்,
புன்மையிலிப் பவங்கோடா கோடிவரு மேனுமுளம் புழுங்கே னந்தோ,
வென்மையவன் பிறவான்மற் றெனையுமவ்வா றியற்றுவன்யா னென்செய் கேனே. - 24
3356 - திருத்தொண்டுபுரிவோர்.
சத்திவனப் பட்டீசத் தனிப்பிராற் கியற்றுபணி தலைக்கொண் டாருண்,
முத்திவளர் திருப்பணியே முதலலகுப் பணியியற்ற முயல்வா ரீறாச்,
சித்திகொள்யா வருந்திருநீ றணிந்துருத்தி ராக்கமணிதிகழப் பூண்ட,
புத்திகொள்யா வருங்குழுமி யிருக்கவிடங் கொடுத்திடுமென் புந்தி தானே. - 25
3357 - ஆக்குவித்தோர்.
மாமேவு சோணுட்டு வேளாளர் குலதிலகன் வல்லோர் செந்நாப்
பாமேவு சத்திமுற்ற வாழ்க்கைநமச் சிவாயமுகில் பயந்த மைந்தன்
காமேவு கொடைத்தடக்கைச் சைவசிகா மணிகல்லிக் கடலா யுள்ளான்
றூமேவு நயவதுல வாறுமுக பூபால சுகண வள்ளல். - 1
3358 - வேறு.
நறைகமழ் கொன்றை மாலை நாயகப் பெருமான் மேய
மறைபுகழ் திருப்பட் டீச மான்மிய மொழிபெ யர்த்து
நிறைசுவைத் தமிழாற் பாடி நேயத்திற் கொடுத்தி யென்று
குறையிரந் தினிது கேட்பப் பாடுதல் குறிக்கொண் டேனால். - 2
3359 - அவையடக்கம்.
மறைபல புகழுஞ் சத்தி வனத்ததி விருப்பம் வைத்த
விறையவ னனைய சத்தி சொரூபமா மென்வாய்ச் சொல்லுங்
குறையற விரும்பும் வாயின் குற்றமுட் குறியா னீன
நிறைபார தாவர்கு லப்பெண் ணேயத்தின் மணந்த தோர்ந்தே. - 1
3360 - 3360.
குடம்படு செருத்த லான்செய் பூசையைக் குறியாக் கொண்டோன்,
மடம்படு சுணங்கன் செய்யும் பூசையு மதித்த வாற்றா,
லிடம்படு பெரியோர் செய்த வின்சுவைப் பாட்டொ டுஞ்சங்,
கடம்படு சிறியேன் செய்யும் பாடலுங் கைக்கொள் வானால். - 2
3361 - தொகையிலக் கணஞ்சி தைந்த தொழின்முதலாமோர் மூன்றுந்,
தொகையிலக் கணங்கே டெய்தாப் பலவொடுந் தொகுத்துக் கொள்வர்,
வகையிலக் கணமைந் தேலா வறுங்கவி யெனுமான்றோரை,
வகையிலக் கணமுஞ் சான்ற கவியொடும் வயங்கக் கொள்வார். - 3
3362 - வில்லெறி புருவ வாட்கண் விளங்கிழை பகிர்ந்த மேனி,
யல்லெறி கண்டத் தெண்டோ ளண்ணலார் பலரர்ச் சிக்கு, மெல்
லெறி மலர்க ளோடு மினியதென் றொருவர் வீசுங், கல்லெறி யெற்ற
தென்சொற் காமுறல் கருதி யன்றோ. - 4
33638 - அருளமை யொருபா கத்த னையன்மற் றனைய பாகத்,
தெருளமை செவிவெய் தாமென் செய்யுளைக் கவர்தற் கன்றோ,
மருளமை மான்மு ழக்க நாடொறு மருவ வேற்கும்,
பொருளமை யீது கண்டும் பாடாது போவேன் கொல்லோ. - 5
3364 - பொதிதுகிற் குற்ற மோர்ந்து மணியினைப் புறத்துப் போக்கார்,
மதியினிற் சிறந்து ளோரென் வாய்மொழிக் குற்ற மோர்ந்து,
திதிசெய்மா லயனுந் தேறாச் சிவபிரான் சரித மாய,
விதியினை யெந்த ஞான்றும் விலக்கல்செய் யாது கொள்வார். - 6
3365 - மால்கிளர் மனத்தா ரெம்மான் மான்மியக் குணங்கொளாமற்,
சால்பிலா வேறு வேறு குற்றமுட் டதையக் கொண்டே,
யோல்படக் குரைப்பாரந்த மூர்க்கருக் குரைப்பா ரியாரே,
பால்கொலோ விரத்தங் கொல்லோ முலையுண்ணி பருக லோர்வீர். - 7
3366 - சிறப்புப்பாயிரம்
திருவுலகர் மகிழ்தரக்கொ ளாறுமுக பூபாலன் சிறப்பிற் கேட்பப்,
பொருவுதவிர் பட்டீச மான்மியத்தைச் செந்தமிழாற் புனைதல் செய்தான்,
தருவுமணி யும்பொரவென் போல்வாருக் கருள் சுரக்குந் தகையான் மிக்கான்,
மருவுபுகழ்ச் சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே. - 8
3367 - திருநாட்டுப்படலம்
தம்மைநேர் பட்டி லிங்கர் தண்ணருட் பல்வ ளைக்கை,
யம்மையோ டினிது மேவ வமைந்தபட் டீச மாதி,
வெம்மைதீர் தலமெண் ணில்ல தன்னக மிதப்பக் கொண்டுட்,
செம்மைசேர் சோழநாட்டின் வளஞ்சில செப்ப லுற்றாம். - 1
3368 - சழக்கன்று கழுவாய் வேறே தகச்செய லாநின் செய்கை,
வழக்கன்று தவிர்தி யென்னு மந்திர ருரைகொள் ளாதான்,
குழக்கன்று நிமித்தந் தன்சீர்க் குலத்தரு மருந்தா யுள்ள,
மழக்கன்று தபத்தே ரூர்ந்த மனுவளித் ததுசோ ணாடு. - 2
3369 - மாயவ னிளவ லாக வானக முழுதுங் காப்போ,
னாயவனனைய வாழ்வி லதிகமா யிரம்பங் கென்று,
பாயவன் புகழ்சா றன்பாற் பயில்குலக் கடைஞ ரோடு,
மேயவ னாகச் செல்வ விளக்கமிக்கதுசோ ணாடு. - 3
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 2 (3370- 3408)
திருவரன்குளப்புராணம்
உ
கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்
கடவுள்வாழ்த்து.
3370 - சித்திவிநாயகர்.
சீர்பூத்த நறியமண முகமுன்வழி படுமன்பர் தேவ ராவா,
ரேர்பூத்த முகத்துநடுக் காட்டல்போ லாதுமுகத் தியைபு மோர்கை,
வார்பூத்த நுனிக்காட்டி மகிழவுறீஇ யவர்வேண்டும் வரங்க ணல்கும்,
பார்பூத்த சித்திமத குஞ்சரப்பொற் செஞ்சரணம் பணிந்து வாழ்வாம். - 1
3371 - குடவாயில்விநாயகர்.
புனைமவுலி முடிமணியாய் மதாணிநடுப் பதிமணியாய்ப் பொருந ரேத்த,
வனைகழலொண் மணியாய்விண் மணிபொலிய வுயர்ந்துகுட வாரிவேலை,
வினையரக்கற் பந்தாடி வியன்குடநீர்க் கரையுயர்ந்து மேவி யன்பர்,
முனைபடரைப் பந்தாடுங் குடவாயின் மழகளிற்றை முன்னி வாழ்வாம். - 2
3373 - தேரடிவிநாயகர்.
ஆதனத்தைச் சூழவரி பலவமர்ந்த வெனினுமிக லடுமோ ரியானை,
மாதனநட் புறாமெனிலச் சுறாவெனவச் சுற்றதனை வயக்கப் பூதி,
சாதனர்கை தொழுமிரதஞ் சார்ந்தமர்ந்தாற் போலமர்ந்து தாழ்வார் யார்க்குஞ்,
சேதனநன் கருள்புரியுந் தேரடிமால் களிற்றினடி சிந்தித் துய்வாம். - 3
3373 - அரதீர்த்ததலேசர்.
அகரவுயி ரெனச்சதசத் தெங்குநிறைந் திந்திரனே யயனே மாலே,
பகரவரு முனிவரரே யேனையரே போற்றிவழி படுந்தோ றன்னார்,
நகரமக ரங்களைந்து பாறோன்று மான்முலைபோ னயந்து தெய்வச்,
சிகரகருக் கிருகமம ரரதீர்த்த தலேசரடி சிந்தித் துய்வாம். - 4
3374 - பெரியநாயகியம்மை.
கருமுனிவார் கைகுவிக்குங் கண்ணுதற்கு மகளாகிக் கருத மீட்டுந்,
திருமுனிய றாயாகித் திகழுமொரு முறைமாறு செயல்குறித்தாங்,
கொருமுனிவன் றாயேயென் றுரைக்குமுறை யொடுமகளா மூழுங் கொள்ள,
வருமுனிவில் பெருங்கருணைப் பெரியநா யகிமலர்த்தாள் வணங்கி வாழ்வாம். - 5
3375 - சபாபதி.
மலரவன்செய் தொழிலொருகை மாயவன்செய் தொழிலொருகை வானோ ராதிப்,
பலர்புகழு முருத்திரநா யகன்செய்தொழி லொருகைமறை பரவு மீசன்,
புலர்வருஞ்செய் தொழிலொருதாள் சதாசிவன்செய் தொழிலுமொரு பொற்றா ளாகக்,
கலரணுகா மணி மன்று ணடநவிலும் பெருமானைக் கருதி வாழ்வாம். - 6
3376 - சிவகாமசுந்தரியம்மை.
வயாவருத்தத் துடனுயிர்க்கும் வருத்தமுமோ ரணுத் துணையு மருவு றாது,
தயாவின்மல ரவன்முதலெவ் வுயிர்களையு முயிர்த்துநனி தழைய நோக்கி,
வியாபகமாங் கொழுநனுக்கு வியாப்பியமாம் பதத்தின்பம் விளையு மாறு,
நயாவருளிற் பொதுநடனங் கண்டுகாட்டிடுபரைதா ணயந்து வாழ்வாம். - 7
3377 - தக்ஷிணாமூர்த்தி. வேறு.
மறையெனும் புருட னாதி மாண்பினர்க் குபதே சித்தே
யிறைமைகொள் குரவர் தாமீ ரெண்மரு ளொருவ ராகு
நறைமலர் நிம்ப நீழ னயந்தபொற் கோயி னின்ற
முறையருட் குரவர் பாத முண்டக முடிமேற் கொள்வாம். - 8
3378 - வைரவக்கடவுள்.
தேங்கமழ் மலரின் மேலான் செதுப்பழஞ் சென்னிபோக்குஞ்,
சாங்கமுந் திகிரிப் புத்தே டன்றிரு மேனி விம்மி,
வாங்கரு நெய்த்தோர் போக்கு முபாங்கமு மலர்க்கை யொன்றிற்,
பாங்கமை வடுகப் புத்தேள் பதமலர் பழிச்சி வாழ்வாம். - 9
3379 - சித்திவிநாயகர்.
துன்றுசித் திகளுள் வார்க்குத் தொகுத்தலாற் சித்தி யானை,
நன்றுமெய் யறிவன் னார்க்கே நல்கலாற் சித்தி யானை,
யென்றுல கத்தி லாய்ந்தா ரிரட்டுற மொழிய வப்பே,
ரொன்றுபூண் டமருமுக்க ணொருத்தன்மா மலர்த்தாள் போற்றி. - 10
3380 - முருகக்கடவுள். வேறு.
உயிருயிர்க்கா சாரியனா காமையினாற் குரவுபுனை யுயிரைவேதஞ்,
செயிரில்சிவ மென்றேபா வனைபுரிதல் வேண்டுமெனச் செப்பவவ்வா,
றுயர்பியல்பே யமைசிவமு நன்குரவ னெனவணங்குமுயர்புவாய்ந்த,
பெயர்வரிய பெருமையின்மே லான்குமர வேல்சரணம் பேணி வாழ்வாம். - 11
3381 - திருநந்திதேவர். வேறு.
மனமுதன் மூன்ற னால்யாம் வழிபடப் பெறுவா னாமெம்
மனகவா ரியன மக்கு முதற்குரு வாவா னோவாக்
கனமலி நந்திப் புத்தே ளெனக்காட்டக் கண்டோ மேலாத்
தினம்வழி பாடு செப்பான் வேறன்மை தேரான் கொல்லோ. - 12
3382 - அகத்தியமுனிவர்.
அலைபுனல் சூழுங் காஞ்சி யமைந்தமேற் றளியின் வைகு
கலைமுழு தோதா தோர்ந்த கவுணியர் வரவு நோக்கா
துலைவில்குற் றால மேயோ னொருசிவ மாக வன்னான்
றலைமிசை யங்கை வைத்த தமிழ்முனிக் கடிமை செய்வாம். - 13
3383 - திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்.
மறைவிலக் காயபுத்த மார்க்கமே பொருளென் றோதி
நிறைதர முனஞ்சா தித்த நெடியமா னாணுட் கொள்ள
வறைதரு பவுத்தர் மும்மை யாயிரர் சைவ ராகிக்
குறையற வருட்க ணோக்கங் கொடுத்துளார்க் கன்பு செய்வாம். - 14
3384 - திருநாவுக்கரசுநாயனார்.
அடுசினக் களிமால் யானை யதனொடு நனிபோ ராற்றி
விடுதலின் மருப்பி றுத்து வென்றமா னாணுட் கொள்ளப்
படுசம ணுய்த்த யானை பணிந்துசூழ்ந் தேத்தி யேக
விடுகலில் பதிகம் பாடி யிருந்தவர்க் கன்பு செய்வாம். - 15
3385 - சுந்தரமூர்த்திநாயனார்.
தடஞ்சிலை முறித்து மேறு தழுவியுங் குறித்த மாதர்
படம்பரை யல்குற் பௌவம் படிந்தமா னாணுட் கொள்ள
விடம்படு மொருபெண் ணானை யெண்ணுபு குறித்த மாதர்
குடம்புரை கொங்கைப் போகந் துய்த்தவர் குலத்தாள் போற்றி. - 16
3386 - மாணிக்கவாசகசுவாமிகள்.
சகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போகஞ் சாரா
தகலரா வணையான் பூவா னாதியர் நாணுட் கொள்ளச்
சகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போக மேசார்ந்
தகலரா தரியா வாத வூரர்தாள் சார்ந்து வாழ்வாம். - 17
3387 - சண்டேசுரநாயனார்.
பிறப்பிறப் பொழியு மின்பம் பெறல்குறித் தவன்ஞா லத்துப்
பிறப்பிறப் புளானைத் தந்தை யெனக்கொளிற் பெறானென் றோவிப்
பிறப்பிறப் பிலானைத் தந்தை யேயெனப் பேணிக் கொண்டு
பிறப்பிறப் பொழிசண் டீசப் பிரானடி யிறைஞ்சி வாழ்வாம். - 18
3388 - அறுபத்துமூவர்.
மனமணுத் துணையே யென்று நியாயநூல் வகுக்கு மேனு
மனகமெய்த் தவத்தா ராய வறுபத்து மூவ ராவார்
கனசரித் திரம னைத்துங் கவர்ந்துதற் குள்ள டக்கும்
வினவுறீ ரெவ்வா றென்று விடைவித்தி னாலே போலும். - 19
3389 - பஞ்சாக்கரதேசிகர்.
விழியறி வுடையார்க் காய மெய்ஞ்ஞானப் பெருங்கோ முத்திச்
செழியரு ணமச்சி வாயன் றிருப்பெரும் பெயர்ந வின்று
மொழிவிலப் பெயர்பி றர்க்கு முரைத்துமந் தோவன் னானை
வழிபட நாணுஞ் சில்லோர் மடமைக்கோ ரொழிபு முண்டோ. - 20
3390 - அம்பலவாணதேசிகர்.
வரியளி முரலுஞ் சோலை யாவடு துறைக்கண் வைகு
மரியமெய்ஞ் ஞான மூர்த்தி யம்பல வாண தேவன்
பிரியமிக் கெனையாண் டென்பாற் பெறுவது விடாது பெற்றெற்
குரியதை யுலோபஞ் செய்யா துதவினா னுய்ந்து ளேனே. - 21
3391 - மற்றசிவநேசர்கள்.
பெரியநா யகித்தா யோடும் பெருந்திரு வரன்கு ளத்து
மரியநா யகர்பொற் கோயில் வழிபடு வார்கள் யாரும்
புரியுமத் தளியி னீங்கார் நீங்குதல் புணரு மேனும்
விரியுமென் னெஞ்சி னீங்கார் மேவிவீற் றிருப்பர் மாதோ. - 22
3392 - ஆக்குவித்தோர்.
மறைமுடி யமருந் தெய்வ மான்மிய நீறு பூசி
மறைபல விடத்து மோத வயங்குகண் மணிகள் பூண்டு
மறைநடுப் பொலியு மைந்து வன்னமா மனுக்க ணித்து
மறைமுறை யிட்டுந் தேறா மாதேவன் கழல்பூ சிப்பார். - 1
3393 - திருவரன் குளப்பொற் கோயிற் றிருப்பணி யான வெல்லாம்
பொருவரு மன்பி னாலே பொதுத்திறங் கடிந்து செய்வார்
வெருவரு குபேர வாழ்க்கை மேலெனா வாழ்க்கை யுற்றார்
பெருவள வல்ல நாட்டிற் பெருங்குடி வணிக ராவார். - 2
3394 - அரியயன் முதலோர் போற்று மரன்குளத் தலபு ரானம்
பிரியமிக் கமையு மாறு வடமொழி பெயர்த்தெ டுத்துத்
தெரியுநற் றமிழி னாலே செப்பிட வேண்டு மென்று
விரியுமெய்ப் பரிவிற் கேட்க விழைந்தியான் பாட லுற்றேன். - 3
3395 - அவையடக்கம்.
சுவைபடு கருப்பங் காட்டிற் றோன்றவீற் றிருந்து ளோனச்
சுவைபடா வேப்பங் காட்டுந் தோன்றவீற் றிருத்த லாலே
நவைபடாப் பெரியோர் சொற்ற நயக்குமின் பாட லோடு
நவைபடு மடியேன் சொற்ற பாடலு நயந்து கொள்வான். - 1
3396 - விட்புனன் முடிமேற் கொண்டு மேவினோர் குடங்கர் கொண்டு
மட்புனன் முகந்தே யாட்டி வழுத்திட வுவப்பர் மேன்மேற்
கட்புனல் பொழிந்து நால்வர் கரைந்தபா வேற்றார் கண்ணி
லெட்புன லுந்தோற் றாவென் பாட்டுங்கேட் டினிது வப்பார். - 2
3397 - இருவருங் காண வெண்ணா ரீரிரு மறைக்கு மெட்டார்
திருவரன் குளத்து வாழ்மா தேவனா ரெனறெ ரிந்தும்
பொருவரு மவரைப் பாடல் புரிகுவ னன்பர் தம்பா
லருவருப் பிலரா யெண்மை யாதல்கை கொடுக்கு மென்றே - 3
3398 - சிறப்புப்பாயிரம்.
சீர்வருஞ் சிறப்பான் மிக்க திருவரன் குளப்பு ராண
மேர்வருந் தமிழாற் பாடி யினிதரங் கேற்றி னானா
றேர்வருங் கலையுந் தேர்ந்தோன் றிரிசிரா மலையில் வாழ்வோன்
சோர்வருங் குணமீ னாட்சி சுந்தர நாவ லோனே.
3399 - திருநாட்டுப்படலம்
இறைவ னார்திரு வரன்குளப் பெருந்தல மெழுவாய்
நிறைத லம்பல கொடுநிலா வல்லநா டாதி
யறைத ரும்பல நாடுந்தன் னகங்கொடு பொலிந்து
முறைபி றழ்ந்திடா வளவர்நாட் டணிசில மொழிவாம். - 1
3400 - சைய மால்வரைத் தாய்மனை நின்றெழூஉச் சலதி
யைய நாயகன் மனைபுக வணைதரு பொன்னி
வைய மாமகண் முகமெனும் வளவர்கோ னாடு
பைய நாடொறுந் தங்கிச்செஃ றானமாம் படித்தே. - 2
3401 - தாயி லாகிய சையமால் வரைமிசைத் தங்கு
மாயி லெண்ணிலா வயிரஞ்செம் மணிமுத லனைத்துந்
தோயில் சேர்தரக் கொண்டுபோய்த் தொகுத்தலா னன்றோ
பாயி லாழியை யரதனா கரமெனப் பகர்வார். - 3
3402 - தங்கு நீடுநல் லூழுடை யார்புடைச் சார்வா
யெங்கு முள்ளவ ரீண்டிநட் பாகுத லேய்ப்பக்
கொங்கு நாட்டொரு குலவரை யாம்பிரத் தடியிற்
பொங்கு நீத்தமோ டெண்ணிலா றளாவுவ பொன்னி. - 4
3403 - கலியொ டும்பெரும் போர்செயக் கலித்தெழு பொன்னி
மலிது ரோணம்வேய்ந் தடைந்தென நுரையொடும் வருமால்
பொலியு மாம்பிரத் தடியெழு குடிஞையும் பொற்ப
வொலிகு லாமதற் குடன்பட்டாற் போற்சிவந் துறுமால் - 5
3404 - பொன்னி மாநதிக் கரையிரு மருங்கினும் பொலிய
மின்னி யாகசா லைகள்பல மிடைகுவ வாங்கண்
வன்னி மேலெழு தூபம்வா னளாய்ச்சுரர் வைய
முன்னி மேவுற மனுச்செவி புகாமுன முய்க்கும். - 6
3405 - மாட மேனலார் குழற்கிடு விரைப்புகை வாசங்
கூட வானயாற் றாடர மங்கையர் கூந்த
லூட ளாய்முரு கேற்றலி னறுவிரை யுற்று
நீட லோர்ந்தவ ரியன்மண மென்பது நிசமே. - 7
3406 - முதிரு மாக்கனி பலபடு விடபமேன் முழங்கி
யதிரும் வானரம் பாய்தர வாங்குதிர் கனியா
லுதிரு நெற்பல வேனைநாட் டறுத்தடித் துறச்செய்
பிதிரு றாதநெற் பொலியெனப் பிறங்குவ நாளும். - 8
3407 - முனிவர் பற்பல ரடைந்துகா விரிப்புனன் முழுகிக்
கனிவ ரும்பவெண் ணீறொருங் கணிந்திருள் கடிந்து
பனித புங்கதி ரெதிர்பரப் பியசடைத் திவலை
யினிய செந்துகிர் நித்தில முகுத்தென வியையும். - 9
3408 - தழைசெ றிந்தபைம் புன்னைக ணடுவெழூஉத் தழைதீர்ந்
துழைசெ றிந்திடப் பலமர்ந் தோங்கிய முருக்கு
மழைபொ ருங்குழற் றிருமகண் மணாளனா மழைமேல்
விழைய வெம்பிரா னிவர்ந்தவோர் காட்சியே விழையும். - 10
work left incomplete by mInATcuntaram piLLai

Comments
Post a Comment