Pirapantattiraṭṭu XXXII


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XXXII
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 32 (3322-3331)
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது





சிவமயம்

காப்பு
3322.
வரமணிமா டத்தா வடுதுறைவா ழுஞ்சுப்
பிரமணிய தேசிகன்பாற் பெட்புற்-றுரமணியி
னாய்ந்துதஞ்ச மாயொருகோட் டண்ண லருட்கிலக்கு
வாய்ந்துநெஞ்சே தூதுசென்று வா.

நூல்
3323

பூமேவு செங்கமலப் பொற்றவிசின் மேயவனு
மாமேவு மார்பினெடு மாயவனு-மோமே - 1


வரும்பொருட்பே றெய்து மருண்ஞான சித்தி
தருங்கரும பூமியெனச் சாற்ற-லொருங்குணர்ந்து - 2


நால்வேத மோது நகுநீற்றா லைந்துபதத்
தால்வேறு மம்மரையென் றாயாமே-மேல்கீழு - 3


மன்னமு மேனமு மாய்ப்பறந் தும்புகுந்து
மின்னமுங் காணா வியல்பினான்-முன்னமே - 4


பாசங் கலந்த பசுக்களி லோர்வகைக்கா
நேசங் கலந்த நிகழ்ச்சியால்-வாச - 5


மளையு மிதழிமதி யஞ்சடில முன்னா
விளையும் பலவும் விலக்கி-வளையும் - 6


பிறைதவழு மாடமலி பேரா வடுதண்
டுறைதவழும் புண்ணியத்தாற் றோற்று-மிறைவ - 7


னொருமா னெமக்கொளிக்க வோர்கை யமரு
மொருமா னொளித்த வொருவன்-பெருமான் - 8


மதிமறைத்த மாசெக்கு மாற்றி யருள
மதிமறைத்த மாசடையா வள்ள-னிதிய - 9


மிருள்கண்ட யாமவ் விருள்காணா வண்ண
மிருள்கண்டங் காட்டா திருப்போன்-பொருள்கண்ட - 10


மானிடனே யென்ன மருவி யிருந்தாலு
மானிடனே யென்ன வயங்குவா-னீனவுல - 11


காயதரைங் கந்த மறுப்பவரொன் றல்லாமுட்
டேயதரென் பார்பரனா மென்பாருஞ்-சேய்மையிற்கண் - 12


டாலுமிரு கைதலைமே லாக்கிமன நெக்குருகிச்
சாலும்வணக் கஞ்செய் தவாச்சிறப்பான்-வேலரசர் - 13


தன்னடிநீ ழல்வைகத் தாவாத் திருவரசின்
மன்னடிநீ ழல்வைகு மாதேவன்-றுன்னடியார் - 14


நந்தான மென்கயிலை நந்திமுதன் மெய்கண்டான்
சந்தான மோங்கத் தழைத்தருள்வோன்-முந்தான* - 15


...... ........ ........ ......... ***
*** (இதற்குப் பின்னுள்ள 4-கண்ணிகளடங்கியபகுதி ஏட்டிற் சிதைந்து
போய்விட்டமையாலும் வேறு பிரதி அகப்படாமையாலும் அவை
இங்கே பதிப்பிக்கப்படவில்லை. ) - 16-19


எண்ணி யுழலு மிருளகற்ற வெங்கள்பா
னண்ணி யமரு நகுபரிதி-கண்ணிய - 20


வாலங் கலந்தசுவை யாரமுத மானாலு
மாலங் கலவாத வாரமுதஞ்-சாலு - 21


மறப்புக் குணத்தை மருவியுழ லெங்கள்
பிறப்புத் தபப்பிறந்த பெம்மான்-சிறப்புறலாற் - 22


பொன்னை யினிதளித்துப் போகவென்னா தெங்களுக்குத்
தன்னை யினிதளிக்குந் தம்பிரான்-முன்மறைத்த - 23


தொன்றேயென் றோதி யொழித்தெம்மை வேறுபடுத்
தொன்றே யருள்புரியு மொன்றானா-னன்றதோர் - 24


கற்றார் புரிபிழையுங் கைகுவித்துக் கூப்பிடுத
லற்றார் குணமு மறமறப்பான்-பற்றாச் - 25


சுரவடிவி லெங்கண்மனந் தோயாமை யெண்ணி
நரவடிவங் கொண்டுவந்த நம்மான்-விரவுபுழ - 26


மென்பயிர் போல விடயத் தரிப்புண்டு
துன்புறுவேங் கட்கோர் துணையானா-னன்பமையு - 27


நாதாந்த முத்தியருண் ஞானவினோ தன்றெளிவாம்
வேதாந்தன் பேறொன்றும் வேண்டாதான்-போத - 28


நரனென் றிருந்தாலு ஞானமிலா தாரு
மரனென் றறிய வவிர்வா-னுரனுடைய - 29


வல்லரக்க னேற்று மலையாத தாய்ப்புரத்தி
னெல்லரக்க வாங்க லியலாதாய்ச்-சொல்லரக்கு - 30


மிக்க புகழாழி மேவிச் சுழலாதாய்ப்
பக்க மரியப் படாததாய்த்-தொக்ககய - 31


லாழி கரவாதா யான்ற தமிழ்முனிகைப்
பாழியறிந் தஞ்சப் படாததாய்-வாழி - 32


பொறையருவி யெஞ்ஞான்றும் போற்றிவறந் தாலு
நிறையும்வள நல்கு நிலைத்தாய்-மறைபுகல - 33


வாய்ந்ததரு வைந்தோ டழகியசிந் தாமணியும்
வாய்ந்த பெருங்கருணை மாமலையான்-றோய்ந்தகா - 34


ராணவந் தீர்ந்த வறிவாங் குறிஞ்சியெனு
நீணவ மாயநில நின்றெழுந்து-காணவெழு - 35


காமமெனும் பாலை கடந்தேறி மாயையெனு
நாமநெடு முல்லை நகப்புகுந்தே-யேமமென - 36


வுற்ற பசுக்கவர்ந்தாங் கோங்காய ராயவைவர்
முற்ற வுஞற்றுதொழின் மோதியே-செற்ற - 37


வுளமா மருதநிலத் துற்று விடயக்
குளமாய வெல்லாங் குலைத்துத்-தளமாருங் - 38


கண்ணாய நெய்தல் கலந்துமலக் கட்டுற்றா
ரண்ணாமே யெவ்விடனு மாய்ப்பெருகி-யெண்ணா - 39


நிலமா விசும்பு நிறைந்தென்றும் வற்றா
நலமாமா னந்த நதியான்-புலமாரு - 40


முப்பகுதி யாயவுயிர் முத்தி பெறவாழு
முப்பகுதி மாயை முழுநாடன்-செப்பரிய - 41


மெய்யாய வன்பர் விடயக் கரவருறல்
செய்யா மனமாந் திருநகரான்-கொய்யா - 42


மரைமல ராளி மனச்சாலை நின்றும்
விரையநால் வாயில் வெளிப்பட்-டுரைசிறந்து - 43


மண்ணக மெல்லா மருவிப் பரந்தோடி
விண்ணக மெல்லாம் விராய்த்தாவி-யெண்ண - 44


வொருநாட்டிற் காடா யுறைகுவதல் லாம
லொருநாட்டில் வெற்பா யுறைந்தும்-பெருநாட்டி - 45


லேனையபோல் வெந்புறத்தி லேந்துவதல் லாதுதலை
மேனை யுறாது மிகத்தரித்துஞ் - சோனைக் - 46


கடலுலக மீர்த்துக் கடுகி நடக்கு
முடலின் மறைப்பரிமா வுள்ளா - னடல்சேரு - 47


மூலமல வேரென்னு மொய்கூர் தறிமுறித்துச்
சால மலமாந் தளையறுத்து - ஞாலமுத - 48


லாறாறு தத்துவ மாய படைதுரந்து
மாறாத கன்ம மரஞ்சாய்த்துக் - கூறு - 49


மனமாம் பரிமாவை மாய்த்துமத வேள்கைச்
சினமாங் கரும்பொடியச் சீறி - யினமாங் - 50


குடருங் கொழுவுங் குருதியு மென்புந்
தொடரு நரம்பொடு தோலு - மிடையிடையே - 51


வைத்த தடியும் வழும்பும் வெளித்தோற்ற
மொய்த்த கருந்தோலின் மூட்டொழியக் - கைத்து - 52


மடமா தரைமிதித்து வைத்த சமயத்
தடமார் படுகுழிசா ராம - லிடமார் - 53


குறையாத வானந்தக் கொள்ளைநீ ராடி
மறையா கமமா மணிக - ணிறைய - 54


விருபாலுந் தூங்கி யிரட்ட வெழுந்து
வருபான்மை ஞானமத மாவா - னொருநான்கு - 55


சொல்லாய பூவைச் சுவையாய தேனொழுகப்
புல்லா வழுவாய புல்லியெலா -- மில்லாமற் - 56


கற்று நிரம்பாக் கவியாங் கவிகளெலா
முற்று வருத்தா வுரவடையா - முற்றுமுண - 57


ரான்றோ ரெனச்சொ லளிக்கணங்கண் மொய்த்தளையச்
சான்றோர்சொ லன்பாந் தகுநாரால் - வான்றோயுஞ் - 58


செந்நா வெனுங்கரத்தாற் சீர்தொடுத்து வாட்டமொன்று
மன்னா வகையமைபா மாலையான் - பன்னயமார் - 59


சித்தாந்த சைவமொன்றே தேற்றமற் றுள்ளவெலாம்
பித்தாந்த மென்றெடுத்துப் பேசுதல்போ - லொத்தபல - 60


வண்டாடு மாலையொடு மண்ணின்று வான்கிழித்துக்
கொண்டாடு காவிக் கொடியாளன்-றொண்டர் - 61


கடியாத பேரொலியாய்க் கற்றோராற் சொல்லி
முடியாத நாத முரசான் - குடியாகுந் - 62


தானமல ராளிமுன்னோர் தங்களைக்கொண் டைந்துதொழி
லானவைநன் காற்றுவிக்கு மாணையான்-ஞான - 63


வரமணிய வாவினரே வாஞ்சித் திடுஞ்சுப்
பிரமணிய தேசிகனெம் பெம்மா-னுரமா - 64


ரொருநமச்சி வாய னுயர்நமச்சி வாயன்
குருநமச்சி வாயனெங் கோமா-னருள்சான் - 65


மகர மதியின் வயங்குமுத னாளி
னிகரிலபி டேகமுத னீடும்-புகரிலா - 66


வாரா தனங்கொண் டருளிமறு நாட்பகலி
லேரா ரடியவரெண் ணில்லாரோ-டோருமமு - 67


துண்டுளார் யோகசித்தி யுற்றுளார் ஞானசித்தி
கண்டுளா ராவரெனக் கைகுவித்து-மண்டிவரு - 68


மான்றவடி யாரோ டறுசுவை யாரமுது
தோன்ற வினிதுகை தொட்டருளிச்-சான்றவரு - 69


ணூலை யினிது நுனித்தமதி யார்க்குப்பின்
வோலை முழுதும் விரித்தருளி-மாலைவர - 70


மாமுனிவர் தூய்மை மருவுநறு நீராட்டி
யேமுறுமெய் யொற்றாடை யிட்டதற்பின்-காமன்வலி - 71


வென்றதிறங் காட்டி விளங்குறுகற் றோயாடை
யொன்ற வரையி லுடுத்தருளி-நன்றமையு - 72


மாதனத்து மேவி யருகமரும் வட்டகையின்
மாதனத்தி னாளும் வயங்குவதாய்-மோதும் - 73


பசுமலநீ றாக்கியுயர் பண்பே யருளப்
பசுமலநீ றாக்கியமை பண்பாய்-வசுவி - 74


னடுத்தவையெல் லாம்புனித மாக்குதிரு வெண்ணீ
றெடுத்தவைய வங்குலவ வேற்றி-விடுத்தசுட - 75


ரொன்பான் மணியு மொளிர்தருசிந் தாமணியும்
வன்பார் கவுத்துவ மாமணியு-மன்பி - 76


லொருதிரண மாக்கு முருத்திராக் கங்கள்
பொருவில் சிரமுதலாப் பூண்டு-கருது - 77


மிருவ ரழுக்கறுப்ப வேற்றசடா மோலி
யிருவரிரு கைகொடுப்ப தேற்றே-யொருவரினி - 78


தெங்கண் மணிமோலி யென்னவொளிர் பாதுகைமற்
றங்கணெதிர் வைப்ப வவற்றிவர்ந்து-துங்க - 79


முரசு முழவ முருடு திமிலை
பரசு தடாரி படகம்-விரசு - 80


பலவு மெழுந்து பரம்பி முழங்க
நிலவு பிறவு நிகழக்-குலவு - 81


திருவா வடுதுறைவாழ் செல்வன்வந்தா னெம்மு
ளொருவா வொருவன்வந்தா னுற்றார்-மருவு - 82


பிறப்பு முழுதொழிக்கும் பேராளன் வந்தான்
சிறப்பருள் செம்மல்வந்தான் றிண்பா-ருறப்புகுந்த - 83


துங்க மலிஞான சூரியன்வந் தானுயிரின்
பங்க மறுக்கும் பரன்வந்தா-னெங்கள் - 84


குருசாமி வந்தான் குணக்குன்று வந்தா
னருண்ஞான மூர்த்திவந்தா னன்பர்-பெருவாழ்வாந் - 85


தம்பிரான் வந்தான் றழைசுப் பிரமணிய
நம்பிரான் வந்தா னலமாரு-மெம்பிரான் - 86


வந்தான்வந் தானென்று மாண்பார் திருச்சின்ன
நந்தா வொலியெழுப்பி நன்குவர-முந்தா - 87


தரம்பெருக வாலவட்டந் தாலவட்டம் பற்றி
வரம்பெருக வோர்பான் மலிய-நிரம்பு - 88


முழுமதிய மேலமர்வான் முந்திமுயன் றென்ன
வெழுகவிகை செய்யுநிழ லேய்ப்பத்-தழுவு - 89


பெரும்புகழ்வெவ் வேறாய்ப் பெயர்ந்து பெயர்ந்து
விரும்பலுறத் துள்ளும் விதம்போ-லரும்பு - 90


பவளக்காற் சாமரைகள் பற்பலவு மொய்த்துத்
திவளத் தலைபனிப்புச் செய்ய-விவளவெனாக் - 91


கோணாத தண்டமொடு கோணலுறு தண்டமு
நாணாளு நீங்கா நலங்காட்டப்-பேணா - 92


வலர்மகர தோரணங்க ளாயு மொலியல்
பலவு நெருங்கிப் பரம்பக்-குலவுதிற - 93


லோதுவார் பல்லோ ரொருங்குதே வாரங்க
ளோதுவா ராய்த்தாள மொத்தலொடு-போதவெளி - 94


வந்து மணிச்சிவிகை வாயோர் களங்கமிலா
விந்துநிறைந் தென்ன வெழுந்தருளி-முந்து - 95


மனைதுறந்தார் செஞ்சடிலம் வைத்தாரஃ தின்றி
நினையு மழித்தலுற்ற நீரார்-புனையுமரைக் - 96


கீளொடு கோவணத்தார் கேடில்கர பாத்திரத்தா
ராளொடுவாழ் வாமில் லறத்தமர்ந்தார்-நாளுஞ் - 97


சரியை கிரியை தவயோக ஞானம்
விரியவனுட் டிக்கும் விருப்போர்-தெரிய - 98


வுலகம் பழியா துறுவேடம் பூண்டா
ருலகம் பழிக்க வுவப்பா-ரிலகு - 99


திரிபுண் டரத்தார் திகழ்கண் மணியார்
விரிதரவுத் தூளனமே மேயார்-பரியு - 100


மரனடியார் தொண்டி னமைந்தா ரளவாச்
சுரர்புகழ்கோ யிற்பணியே சூழ்வார்-விரவு - 101


மடியாருக் கன்னமுத லாதரித்து நல்கு
நெடியார் தியான நிறைந்தார்-கடியார் - 102


மலர்தொடுப்பார் தீபம் வயக்குவார் மற்றும்
பலர்புகழுஞ் சாத்திரங்கள் பார்ப்பார்-நிலவுபொரு - 103


ளாய்வார் வினவுவா ரங்கைகொட்டி நட்டமிட்டுத்
தோய்வாரா னந்தத் தொடுகடலில்-வாய்வார் - 104


துதியா ரயன்முதலாச் சொல்லும் பிறரை
மதியா ரருளே மதிப்பார் - கதியா - 105


ரிவர்மு னனைவோரு மேத்திக்கை கூப்பிக்
கவரடையா நெஞ்சங் கரைந்து - சிவசிவவென் - 106


றார்ப்பாரோர் சில்லோ ரரகரவென் றானந்தம்
போர்ப்பாரோர் சில்லோர் புடைநெருங்க - வேர்ச்சிவிகை - 107


செம்மையுறு காட்சிச் சிவிகை கொடுத்தடைந்தார்
தம்மை யியக்குவார் தாங்கிவர - வெம்மைக் - 108


கதிர்பன் னிருகோடி காணவெளிப் பட்ட
முதிர்விற் பெருந்தீப மொய்ப்ப - வதிர்சிலம்பிற் - 109


பொன்னங்கொம் பன்னார் புகுந்துநீ ராசனஞ்செய்
தன்னம் பெயர்ந்தாங் கயலொதுங்க - முன்னம் - 110


விரைமலர்கள் சிந்தி விரைச்சாந்தம் வாரிப்
புரையறப்பெய் வாரும் பொலிய - வுரைசிறந்த - 111


மெய்கண்டான் சந்ததிக்கு மேன்மேல் விளக்கமுறப்
பெய்கண்டா னாய பெருமானே - வையம் - 112


புகழ வருங்குரவர் போரேறே ஞானந்
திகழ வவதரித்த தேவே - யிகழ்வில் - 113


வரமணியே யெங்கள்பெரு வாழ்வே யருட்சுப்
பிரமணிய தேசிகனே பெட்பி-னுரமணிய - 114


முன்னமே செய்தோ முயங்கு தவத்தையினி
யென்ன குறையுடையோ மென்பாருஞ்-சொன்னகதிர் - 115


முன்னமிரு ணின்றாலு முற்று முணர்ந்தோய்நின்
முன்னமிரு ணில்லாது முற்றுமென்பார்-நன்னயமார் - 116


சித்தாந்த சைவமன்றிச் சேரமற் றுள்ளவெல்லாம்
பித்தாந்த மேலும் பிறப்பென்பா-ரித்தரணி - 117


பெற்றபே றுண்டோ பெருவானி னீபயில
லுற்றநா ளாதி யுரையென்பார்-கற்ற - 118


குருமணிநீ யாரையுமாட் கொண்டு புரக்க
வருமணியோ வென்று வகுப்பார்-பெருகொளிசால் - 119


விண்மணியே ஞான விளக்கே யடியேங்கள்
கண்மணியே யென்று கரைதருவா-ரெண்ணுமுழு - 120


மாயப் பெருஞ்சாரு வாகன்முத லோருமரு
ளேயப் பொலிவா ரினியென்பார்-தோயும் - 121


பகுதி யளவே பகரைந் திரவோர்
தகுதிவெண்ணீ றென்றணியச் சார்ந்தார்-மிகுதி - 122


யுனியா மெடுத்திங் குரைப்பதெவ னெல்லா
மினிமாறில் சைவமே யென்பார்-நனிபுரியும் - 123


வேலையொழிந் தான்பிரமன் வெய்ய நரகிலிடும்
வேலையொழிந் தானியமன் மேன்மேலுஞ்-சாலவருள் - 124


வீசி யனைத்துயிர்க்கு மெய்ச்சுப் பிரமணிய
தேசிகன் செய்யுந் திறத்தென்பார்-மாசி - 125


றிருவா வடுதுறையே திக்கனைத்தும் போற்றப்
பொருவாத தென்று புகல்வா-ரருள்சான்மா - 126


சில்லா மணியேமற் றிச்சுப் பிரமணியீ
தல்லா துரைப்பதுள தாங்கொலென்பார்-வல்லபிரா - 127


னெற்றிக்க ணீத்தமரு நேய மெவனென்பார்
பற்றிக் கரும்புகொடு பையவந்து-முற்றி - 128


யொருவே ளுடற்றாமை யேர்ந்தென்பா ரம்மை
யிருவாள் விழியுமிரு கையாற்-பெருகப் - 129


புதையாமை தேர்ந்தென்பார் பொங்குதலை மாலை
யதையே னொழித்ததென்பா ராவா-கதைமாலும் - 130


பங்கயனு முன்போற் பரனாம் பரனாமென்
சங்கையடை யாமையாற் றானென்பார்-பொங்கு - 131


மதியொழித்த தென்னென்பார் மாசிலா ருக்கே
கதியருளற் கென்று கரைவார்-பொதியு - 132


மிதழிமணந் தோளிலுறா தென்னென்பார் செவ்வா
யதுகமழ்த லாலென் றறைவார்-முதுமானொன் - 133


றோட்டிவிட்ட தென்னென்பா ரோட்டிவிடா னேலுயிர்கள்
வீட்டி லுறலெவ் விதமென்பா-ரீட்டமுறு - 134


மாசடையா னென்னும் வழக்கில்லையென் பாரென்று
மாசடையா னென்னல் வழக்கென்பார்-பேசுமொரு - 135


தோகையிடப் பாலனெனச் சொல்லாமென் பாரரைசூழ்
தோகையிடப் பாலனெனச் சொல்லுமென்பார்-வாகை - 136


பரசுகைக்கொள் ளாத படியெவனென் பார்நம்
பரசுகைக்கொள் ளும்பரனே யென்பார்-விரசு - 137


மருள்விடங்கண் டங்கழித்த வாறென்னோ வென்பா
ரருளமுதங் காணென் றறைவார்-தெருளு - 138


மடிநிலந் தோய்குவதென் னாமென்பார் தோயா
விடினியமன் றண்டநம் மெய்யின்-முடியப் - 139


படுமே யஃதுணர்ந்து பாரீரோ வென்பா
ரிடுமாறு சென்னிவைம்மி னென்பார்-வடுவரிய - 140


னென்பதெவ னென்பார்மெய் யேகம ருள்ளிருந்
தன்பி னமுதுசெய்த தாலென்பா-ரின்பமிகு - 141


மிந்தவிதம் யாரு மியம்பித் துதித்துவரப்
பந்த மகற்றும் பவனிவந்தா-னந்தப் - 142


பொழுதொருநன் னெஞ்சமே போதுவா ரோடு
தொழுதுவரு மாறு துணிந்தே-யெழுதுமெழில் - 143


வீதியிடைப் போந்தேன் விசயன் குனிசிலையான்
மோதி யிடுவதுள முன்னானா-யோதிப் - 144


பனிமலர்கள் சாத்தியிரு பங்கயக்கை கூப்பி
முனிவுதவிர்ந் தேத்து முடியுங்-கனியு - 145


நெருப்பைக் கரந்திருந்து நீறுகர வாது
விருப்பைச்செய் கின்ற விதத்தா-லொருப்படு - 146


காரணத்தைக் காட்டாது காரியத்தைக் காட்டுமெனத்
தாரணியோ ரோதத் தகுநுதலும்-வார்புனற்பூ - 147


வொன்றை மலர்த்துபுமற் றொன்றைக் குவித்தல்செயா
தென்று மலர்த்து மிருவிழியு-நன்றுமையாள் - 148


கூந்தன் மணத்தினொடு கொள்ளா தடியரன்பாஞ்
சாந்த மணங்கொ டனிமூக்கும்-போந்தோ - 149


ரியற்பகையார் பான்மனையை யீதியெமக் கென்ற
தயர்த்ததிரு வாயு மமையப்-பெயர்த்துமிழும் - 150


வேடரெச்சி லூனடங்க மெல்லுந் திறந்தீர்ந்தும்
வாடலற்றுத் தோன்று மணிநகையுங்-கூடுபுர - 151


மூன்று மவிய முகிழ்க்குந் திறமயர்த்துத்
தோன்றுஞ் சிரிப்புந் துணிபமைய-வான்றர - 152


வொருத்தி பதித்த வுகிர்க்குறிகாட் டாது
திருத்தியக போலமுமான் சீறிப்-பொருத்தும்ர - 153


பரவொலி யேலாது பற்றா வடியேம்
பரவொலியேற் குஞ்செவியும் பண்டே-விரவுறுமைர - 154


வண்ண வடிவொழித்து வாட்டந் தவிர்த்தருளோர்
வண்ணவடி வோடமரு மாமுகமும்-பண்ணமையும்ர - 155


பூணின்ப லொத்ததெனப் போற்றற் கிடங்கொடா
தேணி னமைந்த வெழிற்கழுத்து-நாணின்றிர - 156


யேமாலை யென்ன வெலும்பணியா தெங்கள்வாய்ப்
பாமாலை சூடும் பணைத்தோளுங்-காமருமால்ர - 157


கண்காணி னாணாக் கலங்கொள்விர லுண்மைநிலை
யெண்காணக் கொண்ட வெழிற்கரமு-மண்கார - 158


ணொருகுறியு மில்லென் றிருகுறி யுற்று
வருதிறங்காட் டாதவகன் மார்பு-மொருவர்ர - 159


மழவையரிந் தூட்டவெழும் வன்பசி தோற்றா
வழகின் வயிறு மமையப்-பழகதளுந்ர - 160


திக்கும் பிணங்கத் திகழுங்கற் றோயாடை
நக்கு விளங்கு நலத்தரையும்-பக்குமலம் - 161


விண்டொழியக் கூற்றுவன்போல் வெவ்வா ளரக்கன்போற்
றண்டுதல்செய் தோவாத் தளிரடியுங்-கண்டுநனி - 162


யாசைப்பட் டேனெஞ்சே யந்தோவக் காரணத்தா
லாசைப்பட் டேனெனநா னாயினேன்-றேசுறமு - 163


னன்னங்கா ணானைக்கண் டாரா மயக்கம்பூண்
டன் னங்கா ணாதவளே யாயினேன்-முன்னமொரு - 164


கோலங்கா ணானைக் குறுகியிரு கைதொழுது
கோலங்கா ணாமை குற்றுகினேன்-சால - 165


வளையாழி மாற்கீந்த வள்ளலைக் கண்டு
வளையாழி தோற்றுமனை வந்தேன்-விளையுமொரு - 166


தாய்வெறுக்கப் பட்ட தகையானைக் கண்டடைந்து
தாய்வெறுக்கப் பட்ட தகையானே-னாயுந் - 167


தனியானைக் கண்டு தனியாயி னேனென்
றுணிதீர நெஞ்சே சொலக்கேண்-முனியாமன் - 168


முன்னு மவனை முயங்கும்வகை நீபுரிவாய்
மன்னுமுனைப் போன்றதுணை வாய்க்குமோ-பன்னுபல - 169


வேதாக மங்கள் விதித்த விதியனைத்து
மேதாகு நீயியைவ தில்லையெனின்-மீதாரும் - 170


யோக மிருநான்கு முன்னை வயப்படுத்தற்
காக முயலுவன வல்லவோ-போகமுறு< - 171


தன்மைக்குஞ் செய்யுந் தவத்திற்குங் கற்றுணரு
நன்மைக்குங் கொள்ளுமொரு நட்பிற்கும்-வன்மைக்கு - 172


மீகைக்கு மோர்த னியல்புணர்ந்து முத்திபுண
ரோகைக்கு நீயே யுறுதுணைகா-ணாகையுறு - 173


மில்லறத்தா ரைத்துறவி லேற்றுவிப்பாய் மெய்த்துறவா
நல்லறத்தா ரைக்கீழ் நணுகுவிப்பாய்-சொல்லு - 174


மறத்தைமற மாக வமைப்பாய் கொடிய
மறத்தையற மாக்குதற்கும் வல்லாய்-சிறப்பி - 175


னொடுக்குதலே முத்தி யுனைப்பொறிவா யோட
விடுக்குதலே பந்தவினை மேலு-நடுக்குதலற் - 176


றுன்னா லுயர்ந்தவரை யுன்னா விழிந்தவரை
யென்னா வளவிடுதற் கேயுமோ-பன்னாளு - 177


மெம்மேனி யேனு மெடுத்தந்தி வானநிகர்
செம்மேனி யாளிவரச் செய்குவா-யம்மாநற் - 178


றில்லைவா ழந்தணர்மா தேவ னொடுங்கலவ
வொல்லை யுயர்ந்ததுவு முண்மைநெறி-வல்லபெருங் - 179


கோளாளர் நீலகண்டர் கோதை யொருத்திபுகல்
சூளா லிளமை துறந்ததுவும்-வாளா - 180


ரியற்பகையார் தம்மனையை யீயேனென் னாது
மயற்பகையை நீத்துயர்ந்த வாறு-மயர்ப்பி - 181


விளையான் குடிமாற ரெய்தி யிருளின்
முளைவாரி யன்னமிட்ட மொய்ம்புங் - கிளையோ - 182


டமர்மெய்ப் பொருளா ரடாதந்தோ தத்தா
நமரென் றிடைவிலக்கு நண்புஞ் - சமர்செய்விறன் - 183


மிண்ட ரடியாரை மேவாது போகியவன்
றொண்டர்புறம் பென்னச் சொலுந்துணிபு - மண்டர்பிரா - 184


னேரேயோர் தட்டிலமர் நீதியார் பல்பொருளோ
டாராய வேறி யமர்ந்ததுவும் - பாரா - 185


வெறிபத்தர் சீறி யிபமாதி மாய்த்து
மறிவற் றுயர்ந்தபெரு மாண்புங் - குறிபெற்ற - 186


வேனாதி நாத ரிரும்பகைவ னெற்றியினீ
றானாமை கண்டுருகி யஞ்சியதும் - வானார் - 187


கலைமலிந்த கண்ணப்பர் கண்ணிடந் தப்பு
நிலைமலிந்து பெற்ற நிலையு - முலைவில் - 188


கலையர்மனை மங்கலப்பொன் கைக்கொடுநெற் கொள்ளார்
மலைவி றுணிபுற்ற மாண்பு - நிலைவளங்கூர் - 189


கஞ்சாறர் மாவிரதர் கையின் மகள்கூந்த
லெஞ்சா தரிந்தெடுத் தீந்ததுவும் - வஞ்சவரி - 190


வாள்கொண்டு தாயனார் வண்கழுத்து வேறாக்குங்
கோள்கொண்டு நின்ற குணச்செயலுந் - தாள்கொண்ட - 191


வானாயர் கொன்றை யணைந்துருகி யஞ்செழுத்துந்
தானாய வோசைசெவி சார்த்தியது - மானாத - 192


சீர்த்திபெறு மூன்றே சிறப்பத் தழீஇக்கொண்டு
மூர்த்தியுல காண்ட முறைமையு - மார்த்தி - 193


முருகர்திரு மாலையான் முன்னோ னருளுக்
கருகரா யுற்ற வறனும் -பெருகிப் - 194


பரவுருத்தி ரப்பேர்ப் பசுபதியார் நீரில்
விரவுதவஞ் செய்த விதமு - முரவிற் - 195


றிருநாளைப் போவார் திருத்தில்லை மன்றுள்
வருநாட்போய்ச் சேவித்த வாறு - மருவு - 196


திருக்குறிப்புத் தொண்டர் சிலாவணத்திற் சென்னி
விருப்பறமோ துற்ற விதமுங் - கருப்பறிக்குந் - 197


தண்டீசர் தந்தையிரு தாடுணிய வீசுமழுக்
கொண்டீசர் சார்பிற் குறுகியது - மண்டர்புகழ் - 198


நாவரசு நீற்றறையு ணண்ணியிருந் தாலமுண்டு
மேவுகட னீந்திய வித்தகமும் - பாவு - 199


குலச்சிறையார் யாரையுங்கை கூப்பிப் பணியு
நலச்சிறைசார் புற்றசிவ நண்பும் - வலத்த - 200


மிழலைக் குறும்பர் வியப்புறுமெண் சித்தி
யழகிற் பயின்ற வடைவுங் - குழகமைந்த - 201


மாதுருவ நீத்து வருகாரைக் காலம்மை
பேதுருவங் கொண்ட பெருங்கோளுந் - தீதுதீ - 202


ரப்பூதி யன்ப ரரசரடிக் கன்புசெய்து
செப்பூதி யங்கவர்ந்த சீர்மையுந் - தப்பாத - 203


நீலநக்கர் தம்மனையை நீத்திட் டரனருள்பெற்
றேலவழைத் தின்புற் றிருந்ததுவுஞ் - சாலநமி - 204


நந்தி யடிக ணகுகுளத்து நீர்மொண்டு
முந்தி விளக்கெரித்த மொய்வலியுஞ் - சந்த - 205


வருண்ஞான சம்பந்த ரங்கமா தாகத்
தெருண்ஞான வாய்மலர்ந்த சீரும் - பொருவில்கவிக் - 206


காமர் வயிற்றிற் கருவி கொடுகுத்தி
யேமவருள் பெற்ற விருந்திறனும் - பாமருவு - 207


மூல ருடம்பொழிய மூவா யிரவருடங்
கோலவர சின்கீழ்க் குலாவியதுஞ் - சாலவுயர் - 208


தண்டி யடிக டவாக்குளத்தி னீர்முழுகி
யண்டி விழிபெற் றமர்திறனுந் - தொண்டினியன் - 209


மூர்க்கனார் சூது முயன்றாடி மெய்யடியார்
யார்க்கு முவகை யருண்மாண்பும் - பார்க்குளுயர் - 210


சோமாசி மாறர்வன் றொண்டர்க்கே யாளாகித்
தாமாறி லின்பந் ததைந்ததுவும் - போமாறொன் - 211


றில்லா சாக்கியனா ரெண்ணியெண்ணி நாடோறுங்
கல்லா லெறிந்து களித்ததுவும் - வல்ல - 212


சிறப்புலியா ரன்புடையார்ச் சேர்ந்துபணிந் தேத்தி
மறப்பிலமு தூட்டும் வகையு - மறப்பான்மை - 213


விள்ளாச் சிறுத்தொண்டர் வேண்டு மகவரிந்து
தள்ளாக் கறிசமைத்த தன்மையு - மெள்ளா - 214


வருளிற் கழறிற் றறிவார்மா வூர்ந்து
தெருளிற் கயிலைசென்ற சீரு - மருளில் - 215


கணநாத ரன்பிற் கரிசில்பணி யாற்றிக்
கணநாத ராய்ப்பொலிந்த கற்பும் - புணர்பெருமைக் - 216


கூற்றுவனார் மோலிய்யெனக் கொய்மலர்த்தாள் கூற்றினுக்கோர்
கூற்றுவனார் சூட்டக் குலவியதுந் - தேற்றுபுகழ்ச் - 217


சோழர் சடிலமுடி தோன்றக்கண் டாரழலி
னாழங் குளிர வழுந்தியதும்- வாழுநர - 218


சிங்க முனையரையர் சேரவிகழ்ந் தாற்கிரட்டித்
தங்க மளித்த தவாப்புகழுந் - துங்கவதி - 219


பத்தர் வறுமை பரந்தகா லத்துமொரு
மித்தங் கொருமீன் விடுத்ததுவு - மொத்தகலிக் - 220


கம்ப ரடிமை கலந்தடிய ரோடுவர
நம்புமனை கைதடிந்த நன்மையும் - வம்பில் - 221


கலியர் விளக்கெரிக்குங் காட்சி குறையா
தொலிமிடற்று வாள்பூட் டுரவும் - வலியதிறற் - 222


சத்தியா ரீசர்கழல் சார்ந்தார் தமையிகழும்
புத்தியார் நாவரிதல் போற்றியது - மெத்திசையுங் - 223


கண்டேத்து மையடிகள் காடவர்கோன் வெண்பாவைக்
கொண்டேத்து மேன்மை குலவியதும் - பண்டுகணம் - 224


புல்லர் விளக்கிட்டுப் போற்றுதற்கு முட்டுவர
நல்ல முடிகொளுத்து நன்மையுஞ் - சொல்லவரு - 225


காரியா ரெங்குங் கவிபாடி யண்ணலருள்
வாரியா ரப்பெற்ற வன்மையு - மூரி - 226


நெடுமாறர் நீறணிந்து நெல்வேலி வென்று
தடுமா றிலாதிருந்த சார்பும் - விடுமாறில் - 227


வாயிலார் தூய மனக்கோயிற் பூசித்துத்
தாயிலார் பாதநிழல் சார்ந்ததுவு - மேயும் - 228


முனையடுவார் மாற்றார் முனையடுசெம் பொன்னால்
வினையடுவா ராய விதமும் - வனைகழற் - 229


சிங்கர் மனைவி திருமலர்கை தொட்டதென்று
பங்க மறத்தடிந்த பான்மையுந் - துங்க - 230


விடங்கழியார் சோரரென வெய்தினார் தம்மைத்
திடங்கழியா தோர்ந்துவிட்ட சீரு - மடங்காச் - 231


செருத்துணையா ரோர்மன்னர் தேவியார் மூக்கின்
பொருத்துணையா தீர்ந்த புகழுந் - திருத்து - 232


புகழ்த்துணையா ரென்பார் புனித னருள
நிகழ்த்துமொவ்வோர் காசுபெற்ற நீரு - மிகழ்ச்சிதவிர் - 233


கோட்புலியார் பாலுண் குழவுங்கூ டாதென்று
வாட்புலியார்க் கீந்த வளத்திறனும் - வேட்குமொரு - 234


பூசலார் மிக்க பொருடேடி யாலயஞ்செய்
தேசலா ராதிருந்த வின்றிறனு - மாசகலு - 235


நீற்றின் பெருமை நினைமங்கை யர்க்கரசி
போற்றி யமைந்த புகழ்ப்பேறுஞ் - சாற்றரிய - 236


நேசனா ரன்பர்பா னேசனார் கோவணந்தந்
தீசனார் பேரருண்மிக் கெய்தியதும் - பாசமகல் - 237


செங்கட்சோ ழப்பெருமான் செம்பொற் றளிபலசெய்
தங்கட்டீ ராவன் பமைந்ததுவுந் - துங்கத் - 238


திருநீல கண்டர் செழும்பலகை யேற
வொருநீல கண்ட ருவப்பும் - பொருவில் - 239


சடையரிசை ஞானியார் தாவாப் பெரும்பே
றடைய வமைந்த வருளும் - விடையுடையா - 240


ராணைமேற் றாங்கி யருணாவ லூரர்வெள்ளைக்
கோணை மதமாமேற் கொண்டதுவும் - வீணை - 241


யுறாநெஞ்சே மற்றனைத்து முன்னாலே யன்றோ
மறாநின்சீர் யாவர் வகுப்பார் - வெறாதவருட் - 242


டாயே யணையாய் தவறுறுமோ நங்கரும
நீயேதூ தாக நிகழுங்கான் - மாயமன்றே - 243


முன்ன முயன்று முடிகா ணரிதாய
வன்ன முகமுன் னணையுமோ - முன்னமொரு - 244


பச்சை மயிலையொரு பாலடக்கி பாங்கரின்றோர்
பச்சைமயில் சென்றாற் பயன்படுமோ - வச்சை - 245


மதனைச் சுமத்தலினால் வாகையிலாக் கிள்ளை
யிதனைச் செயற்குவலி யாதே - சுதமகல - 246


வன்றுசடைக் காட்டி லடங்கிக் கிடக்குமுகி
லின்று புரிவ தெதுகண்டாய் - துன்றுபொருட் - 247


பாவை யடியர் பகரவேற் குஞ்செவிகள்
பூவை குழறுமொழி போற்றுமோ - பாவையெனுந் - 248


தோழி யுரிமை துணிந்தனுப்பி னாற்றிருமுன்
வாழி யடைய வலியளோ - பாழிமதன் - 249


சின்னமா யெங்குந் திரிந்துகூ வுங்குயிலம்
முன்னவன்பாற் சேறன் முடியாதே-மன்னு - 250


மரவா பரணனென்பா ரம்மொழிகேட் டங்கு
விரவாதே தென்றல் விடுத்தா-லுரவாரு - 251


முன்னைப்போல் வேறுதுணை யுண்டோ குரவர்பிரான்
றன்னைப்போல் வேறொருவர் தாமுளரோ-வன்னை - 252


யனைய குரவர்பிரா னான்ற மரபு
நினைய வகுத்துரைப்ப னீகேள் - புனையவரு - 253


காமர் கயிலையிற்சீ கண்ட வுருத்திரன்பா
லேமவருள் பெற்றநந்தி யெம்பெருமான் - றோமில் - 254


வழியே வருசனற்கு மார முனிவர்
பழியேது மில்லாத பண்பிற் - கொழியருள்சால் - 255


சத்திய ஞான தரிசனிகள் யாவோருந்
துத்தியஞ் செய்பரஞ் சோதியார் - நித்தியமார் - 256


மெய்கண்ட தேவர் விளங்குமரு ணந்தியார்
பொய்கண்ட யாரும் புணரருஞ்சீர் - மொய்கடந் - 257


தைவாழ் மறைஞான சம்பந்தர் தாளின்மதி
கைவா ழுமாபதியார் காட்சிமிகு - செய்ய - 258


வருணமச்சி வாய ரமைசித்த ராய
கருளில் சிவப்பிர காசர் - தெருள்செய் - 259


குருநமச்சி வாயர் குலவுமறை ஞானர்
திருவம் பலவாண தேவர் - மருவு - 260


முருத்திர கோடியா ரொப்பில்வே லப்பர்
திருத்தி யினிதருளச் செய்து - பொருத்து - 261


மிருகுமர சாமிகண்மா சில்லா மணியா
ரருமை யிராமலிங்க ரன்பார் - பெருமையிரு - 262


வேலப்ப ரென்று மிளிர்திருச்சிற் றம்பலவர்
பாலக்க ணில்லம் பலவாணர் - சால - 263


வருள்சுப் பிரமணிய ரம்பல வாணர்
தெருள்சுப் பிரமணிய தேவர் - பொருள்சான் - 264


மரபு நிலையிதுவால் வார்த்தைநீ பேசப்
பரவு சமயம் பகர்வேன் - விரவுநெஞ்சே - 265


பூதநான் கின்பம் புரிகுழலார் போகமெனுங்
கோதவுல காய்தரைக்கூடாதே - யேதமிகு - 266


கந்தமைந்துங் கெட்டாற் கனமுத்தி யென்றுழலும்
பந்தப் பவுத்தர்முகம் பாராதே - முந்தத் - 267


தலைபறித்துப் பாயுடுத்தித் தாந்தவமே பேசிக்
கொலைசெ யமணரைக்கூ டாதே - யலைபுரியுங் - 268


கள்ளைக் குடித்துக் களித்துழலும் வாமமதக்
கொள்ளைச் செருக்கருரை கொள்ளாதே - தள்ளாக் - 269


கருமமன்றி வேறு கருத்தனிலை யென்று
தெருமருவார் கூட்டஞ்சே ராதே - பொருவினெஞ்சே - 270


நின்னையணு வென்று நியாயம் புகன்றுழல்வான்
றன்னை யொருஞான்றுஞ் சாராதே - சொன்ன - 271


பகவனுக் குண்டு பரிணாம மென்னுந்
தகவிலைந்தி ராவினர்ச்சா ராதே - யிகவரிய - 272


முத்திநிலை யான்மா முதல்வனோ டொக்குமெனும்
புத்தி படைத்தவர்பாற் போகாதே - மெத்துமொளிப் - 273


பாலவிழி யாற்குப் பரிணாமஞ் சொற்றுழலு
மாலமைந்தார் கூட்ட மருவாதே- ஞாலமிசைத் - 274


தாம்பிரம மாகாமை தஞ்செயலி னாலுணரார்
நாம்பிரம மென்பாரை நாடாதே - யோம்பு - 275


திருவா வடுதுறையைச் சேர்ந்து வளங்க
ளொருவாத் திருவீதி யுற்றுப் - பொருவாத - 276


தென்முகப்பின் வாயில்வழிச் சென்றுகொலு மண்டபத்தின்
பொன்முகப்பி னுள்ளே புகலுற்று - நன்முகத்திற் - 277


சாத்திரங்க ளோதித் தனியமர்வார் சிந்திப்பா
ரேத்திரங்கும் வண்ண மெடுத்திசைப்பார் - பாத்துச் - 278


சடைகாய வைத்துத் தனியமர்வா ரன்னோர்
புடையாரை யும்வணங்கிப் போற்றி-விடையா - 279


நலமா ரதிகார நாடுதிருச் சிற்றம்
பலமா முனியைப் பணிந்து - பலமியாவுஞ் - 280


சேர்தரவுள் ளாற்போய்த் திருமாளி கைத்தேவர்
வார்கழல் போற்றி வணங்கியே - யோருங் - 281


குரவர்பிரான் மூல குருநமச்சி வாயன்
பரவுகழல் போற்றிப் பணிந்து - விரவு - 282


மிரண்டா மொடுக்க மெனப்புகல்பொற் கோயி
லரண்டா னெனவமரு வானைத் - திரண்ட - 283


கலைஞான வாழ்வைக் கருதுவார் பேற்றைத்
தொலையாப் புலவர்குழாஞ் சூழ-வுலையா - 284


வினாவிடை பேசி வியப்புற் றமரு
மனாதியுரு வாய வமுதை-யினாதகுண - 286


மெல்லாரு நீங்க வினிதுபோ தித்தமரு
நல்லா தரவு நயப்பானைச்-சொல்லு - 286


மொருநமச்சி வாயனென வோதப் பொலிந்து
வருநமச்சி வாயனடி வாழ்த்திப்-பொருவாக் - 287


குருசாமி கோயில்வலங் கொண்டுபடி யேறிக்
குருசாமி பூசைமுனங் கூடி-யுருகாமெய் - 288


யன்பின் வணங்கி யடியா ரமுதுகொள
வன்பி னமர்கோயில் வந்தித்தே-யின்ப - 289


விதமார் முதலொடுக்க மென்றிசைபொற் கோயிற்
புதவொர்பான் மெல்லப் புகுந்து-கதமோவி - 290


யாங்குநிற்பார் தம்மை யடுத்துச் சமயம்வினாய்ப்
பாங்குபெற வுள்ளாற் பயப்புகுந்து-தேங்குதிரு - 291


முன்னஞ்சே வித்து முனிவர்முத லோர்போற்ற
நன்னர்நீ றள்ளியள்ளி நல்கியம-ரன்ன - 292


பொழுதுரையா தேபல் புலவர்கவி பாடும்
பொழுது முரையாதே போற்றி-யெழுதுமடல் - 293


வாசித்து நிற்பாரை மானிக்கு மப்பொழுது
நேசிக்குந் தன்மை நிறைந்தாராய்ப்-பூசிக்குந் - 294


தொண்ட ருவக்கச் சுருதிப் பொருள்புகறல்
கொண்ட சமயத்துங் கூறாதே-மண்டவரு - 295


மன்னர் முதலோர் வணங்க வவர்க்குவப்பு
நன்னரியற் றும்பொழுது நாடாதே-சொன்ன - 296


மறையோர் பலரிரக்கும் வார்த்தைசெவி யேற்றுக்
குறைதவிர்க்கும் போதினுங்கூ றாதே-மறைசொல் - 297


சிதம்பரமுன் னாய திருக்கோயிற் கெல்லாம்
பதம்பரவு நித்தியமுற் பண்பி-னிதம்பரவ - 298


நன்றுவிசா ரித்து நயவாக் குறைதவிர்த்துத்
துன்று பொழுதுமிதைச் சொல்லாதே-சென்று - 299


பணிசிறா ரைக்கற்கும் பாடம் வினாவத்
துணியுங்கா லத்துஞ்சொல் லாதே-வணிதருமா - 300


னந்தக் களிப்பா னகச்சிலர்வந் தேத்தெடுக்கு
மந்தப் பொழுது மறையாதே - சந்த - 301


வுவளகத்து மேவு மொருசமய நோக்கித்
திவளநெஞ்சே நீகூடச் சென்று - தவளப் - 302


பொடியணியு மேனியெங்கள் பூரணன்பொற் றாளிற்
படிமிசை வீழ்ந்து பணிந்து - நெடியகுணக் - 303


குன்றேமெய்ஞ் ஞானக் கொழுந்தே யருட்கடலே
நன்றே யுயிர்க்கருளு நாயகமே - யன்றே - 304


யடுத்தமல பந்த மகற்றவுருக் கொண்டு
மடுத்த பெருங்கருணை வாழ்வே - படுத்தமைந்த - 305


மைம்மாறு சிந்தை வயங்கு மடியார்பாற்
கைம்மாறு வேண்டாத கற்பகமே - பொய்ம்மாறெம் - 306


பேறேயா னந்தப் பெருக்கேஞா னக்கருப்பஞ்
சாறேமெய் யன்பர் தவப்பயனே - நாறுமருட் - 307


சிந்தா மணியே செழுங்காம தேனுவே
சந்தாபந் தீர்க்குந் தனிச்சுடரே - நந்தா - 308


வரமணியே கோமுத்தி வாழ்வே யருட்சுப்
பிரமணிய தேசிகப்பெம் மானே - பரவு - 309


குருநமச்சி வாயவென்று கொண்டாடி யேத்திப்
பெருகருளுண் டாகநனி பேசி - யொருவரிய - 310


பாலை யுணர்த்திப் பசியநறுஞ் செங்கழுநீர்
மாலை கொடுவிரைந்து வா. - 311

ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் நெஞ்சுவிடுதூது முற்றிற்று.

தனிப்பாடல்கள்

நேரிசை வெண்பா


3324 - கண்ணான் மதனைக் கடிந்ததற்கேற் பப்புரப்பாற்
பெண்ணா ளுறாச்சுப் பிரமணிய - வண்ணால்
திருவா வடுதுறையாய் சிற்றடியே னின்ப
மருவா வடுமாற வை. - 1


3325 - விருத்தம்
மாமேவு புகழ்த்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய வள்ள லாய,
தூமேவு குரவன்பேர் சொற்றவுட னென்பிறப்புத் தொலைந்ததம்மா,
பாமேவு மிதுகண்டும் பிறப்பொழிப்பா னிவனென்று பலருஞ் சொல்வார்,
தேமேவு நலந்தெரியென் வாயினையே புகழாத செய்கை யென்னே. - 2


3326 - உரவுபொலி மறைமுடியாஞ் சிவக்கொழுந்தைப் பரானந்தத் துவாவை நாளுங்,
கரவுதவி ரன்பருளத் தகலாம லமுதூற்றுங் கருணை வாழ்வைப்,
புரவுமலி மெய்ஞ்ஞான வாரிதியைத் துறவரசைப் பொருவி லாத,
பரவுபுகழ்த் துறைசையிற்சுப் பிரமணிய குருமணியைப் பரவி வாழ்வாம். - 3


3327 - செல்லார்க்கும் பெருமுழக்க மண்முழக்க மெனமேற் போய்த் திகழ்மா டத்தாற்,
சொல்லார்க்குங் கழனிகளாற் றொலையாத வளங்காட்டுந் துறைசை மேவிக்,
கல்லார்க்கு மல்லார்க்கும் வல்லார்க்கும் வல்லார்க்குங் கணக்கி லாமற்,
றெல்லார்க்கு மெய்ப்பில்வைப்பாஞ் சுப்பிரம ணியகுரவ னிருதாள் போற்றி. - 4


3328 - தேடுக்கயி லாயபரம் பரைத்துறைசை மேயநமச் சிவாயன்றன்னைக்,
கூடுதன்முன் னுள்ளபதி னால்வருமுற் றோன்றலெனக் கொண்டா ரவ்வா,
றூடுதவிர் தரக்கொண்டும் பிற்றோன்ற லெனவுங் கொண் டுவக்குங் கோமான்,
நீடுபெரும் புகழமைசுப் பிரமணிய குரு மணியை நினைந்து வாழ்வாம். - 5


3329 - ஒப்புயர்வில் லவன்சிவன்மூன் றும்முடைமை யாலிர ண்டு மொன்று மேற்றார்,
தப்பறத்தாழ்ந் தவரெனறேர்ந் தனந்திருவா வடுதுறைநற் றலத்துள் வார்தம்,
வைப்பனைய சுப்பிரம ணியகுரவன் றன்பெயரை வகித்து ளாரை,
யெப்படியும் விலக்கலின்மற்றிவன்மூன்று மிலனென்றே யியம்பு வோமே. - 6


3330 - திருமணியை நிறத்தமைத்த நீன்மணிமெய்ம் மால்பிரமன் றேடிக் காணா,
வருமணியென் னையும்பொருளா வாண்ட சிந்தா மணியன்ப ரகத்தே மேய,
வொருமணியம் பலவாண சிரோமணிகண் மணியடிமை யுவந்தார் கண்ணுட்,
கருமணிவண் டுறைசையிற்சுப் பிர மணிய குருமணியைக் கருத்துள் வைப்பாம். - 7


3331 - வஞ்சித்துறை
ஒப்பருந் துறைசைச், சுப்பிர மணிய
அற்புத குரவன், நற்பதந் துணையே. - 8


Comments