Pirapantattiraṭṭu XXVI


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XXVI
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் "பிரபந்தத்திரட்டு"
பகுதி 26 (1811 - 1924) - திருச்சிராமலையமகவந்தாதி




சிவமயம்.
கடவுள் வாழ்த்து.



1811. - விநாயகக்கடவுள்.
கராமலையாநின்றபோதிபங்கூவக்கடிதக்கரா
விராமலையாழிவிட்டாற்குமயற்குமெட்டாதுநிற்குஞ்
சிராமலையாதிபனெம்மானந்தாதியைச்செப்பவிடர்
வராமலையாவங்குசபாசவென்முன்புவந்தருளே. - (1)



1812. - ஸ்ரீ தாயுமானவர்.
துப்பனைத்துந்தொழுஞ்செஞ்சடையான்கவிதொண்டருரைக்
கப்பனையேட்டிற்பொறித்தான்கடுப்பொலிகண்டன்றனை
யொப்பனையம்பனைச்செற்றான்சிராமலையுத்தமனென்
னப்பனையன்றிப்புகழாதென்வாய்புறத்தாரையுமே. - (2)



1813. - ஸ்ரீ மட்டுவார்குழலம்மை.
அகந்தக்குழலுமனத்துயர்தீரவயிலங்கைவைத்
தகந்தக்குழகனையீன்றாய்குயிலைத்தடிந்தமுதை
யிகந்தக்குழலைக்கடிந்தசொல்லாய்முத்திளநகையாய்
சுகந்தக்குழலம்மையேயடியேற்குமுன்றோன்றுவையே. - (3)



1814. - செவ்வந்திவிநாயகர்.
ஆனக்குழையுடையம்மான்புயத்துமழன்மெழுகு
மானக்குழையுமனத்தினராய்ப்பத்திமார்க்கநின்று
கானக்குழையையணிவார்சிரத்துங்கழனிறுத்துந்
தானக்குழைசெவிச்செவ்வந்தியானைதருமின்பமே. - (4)



1815. - முருகக்கடவுள்.
கரம்பன்னிரண்டுமுடியாறினனெவன்கைக்கவண்கன்
னிரம்பன்னிலத்திற்றினைத்தாளடர்நெறியேகிக்கண்ண
விரம்பன்னியமொழிவேடிச்சிபாற்சென்றுவேண்டிமிக்கா
தரம்பன்னினனெவனோவவனேயெனைத்தாங்குவனே. - (5)



1816. - கலைமகள்.
எண்டோட்டுமுக்கட்டுநீரார்சடைத்திடுமாதர்பலி
கொண்டோட்டுவைத்தபொருளேதுவோவதைக்கூறவிருள்
விண்டோட்டுசெம்மணிமான்மகனாவின்விளங்குநறா
வெண்டோட்டுமுண்டகத்தாண்மலர்த்தாண்முடிமேல்வைப்பனே. - (6)



1817. - திருநந்திதேவர்.
இன்னடியார்களுடனிருப்பாநல்லினமணிக
டுன்னடிவாயிலினின்றேபிரம்புகைதொட்டுமையாண்
மன்னடிகொள்ளவருமாலயன்முதல்வானவர்க்குத்
தன்னடிமுந்திக்கொடுப்பானடியெந்தலைக்கணிந்தே. - (7)



1818. - சமயாசாரியர் நால்வர்.
கருமப்பரந்தவிர்த்தாள்வாருததியிற்கன்மிதக்கத்
தருமப்பதியிற்கராச்சேய்தரவென்புதாழ்குழலா
மருமப்பணிந்தபெருமானரியுருமாற்றிவர
வருமப்பர்சுந்தரர்சம்பந்தர்மாணிக்கவாசகரே. - (8)



1819. - சண்டேசுரநாயனார்.
முரண்டடிகொண்டுவெம்போத்தைநடாத்திமுனிந்துநிற்பா
னரண்டடியப்பவமப்புறத்தோடவருந்துதிக
டிரண்டடியார்சொலத்தன்னையன்றாளைச்சிதைத்தெனைய
னிரண்டடிசேர்ந்தவிறையடிப்போதென்னிதயத்ததே. - (9)



1820. - மற்றைத் திருத்தொண்டர்கள்.
பருத்தொண்டராநிற்குங்கொங்கையர்மான்முதற்பற்பலவாங்
கருத்தொண்டராதலவிச்சைவெப்போடிக்கழியவந்திக்
குருத்தொண்டராசின்மலரடிநீழற்குறுகிநின்ற
திருத்தொண்டரானவர்தாடொழுவாமுட்டிருக்கறவே. - (10)



1821. - சேக்கிழார் முதலியோர்.
மாக்கிளையார்மொழிபங்கனுக்கேயன்புவைத்தளவி
லாக்கிளையாரன்பறுத்துய்ந்ததொண்டரரும்புகழை
வாக்கிளையாரெனநாவலரோதவழுத்தியுய்ந்த
சேக்கிளையார்முதற்பல்லோரும்வாழ்கவென்சிந்தையினே. - (11)



1822. - அவையடக்கம்.
கடியார்கடுக்கையணிந்தார்நெடியவன்கண்ணிருக்கு
மடியாரணத்துமுடிமீதுவைத்தவராப்பணியார்
துடியார்கரத்தெஞ்சிராமலைநாதரைச்சொல்லுவதாற்
படியார்களிலிகழ்வாரோநல்லோர்களென்பாடலையே. - (12)



1823. - திருமாதிருக்குமணீமார்பனான்முகன்றேவர்செங்க
திருமாதிருக்குந்தொழநின்றநாயகன்றீவினைமு
திருமாதிருக்குமடியார்க்கறுக்குஞ்சிராமலையான்
திருமாதிருக்குநுதலான்பொற்றாளென்சிரம்வைப்பனே. - (1)



1824. - சிரமரவம்புதரித்தசிராமலைத்தேவனைவச்
சிரமவம்புணைநீர்பாய்ந்தபோல்வினைதேய்க்கநொந்தேஞ்
சிரமரவம்புயத்தாடாவென்றோதிச்சிறப்பினிறைஞ்
சிரமரவம்புரிவெங்காலன்செய்யினென்செய்குவிரே. - (2)



1825. - குவையாவலவினையப்பவெப்பேமிகக்கொண்டுநொந்தேன்
குவையாவலவித்துநின்றிருத்தொண்டரிற்கூடிடச்செய்
குவையர்வலவிழுங்கண்டாநறுங்கொன்றைகொண்டொளிர்வா
குவையாவலவிர்தனத்தில்பங்காசிரகுத்திரனே. - (3)



1826. - திரங்காவலமரலிவ்வுடற்கெய்துமுன்செவ்வியபத்
திரங்காவலர்கொண்டருச்சித்திடேனிருள்சீக்குஞ்செங்க
திரங்காவலரும்பநின்றதொப்பாஞ்சிகரச்சிரகுத்
திரங்காவலவுமைபங்காவென்றீவினைதீர்த்தருளே. - (4)



1827. - அரவப்பணிலனயன்மகவான்முதலாகியபொய்
அரவப்பணிவிடைசெய்துழலேனுழையார்த்திடுங்கை
அரவப்பணிந்தசடையாய்சிராமலையாதிபனே
அரவப்பணியுடையாயடியேனுன்னடைக்கலமே. - (5)



1828. - கலக்கந்தரமடவார்மயல்வாரிகலந்தவென்முன்
கலக்கந்தரவெஞ்சமன்வருங்காலங்கடுக்கைதப்ப
கலக்கந்தரநதிசூடுஞ்சிராமலையாய்கன்னிபா
கலக்கந்தரநினைவேண்டிக்கொண்டேனெனைக்கண்டுகொள்ளே. - (6)



1829. - கண்ணாடிமானப்பொலியுங்கபோலத்தர்காதலெனுங்
கண்ணாடிமானமற்றுண்டிருந்தேன்கடையேன்பொன்மன்றின்
கண்ணாடிமானத்தனேயினிமேனின்கழல்வைப்பனேன்
கண்ணாடிமானச்சிராமலையாய்சடைக்கங்கையனே. - (7)



1830. - கங்காதரவிண்டொடுஞ்சிரபூதரக்காவலமு
கங்காதரவிந்தம்வள்ளையொப்பாமலைக்கன்னிபங்கா
கங்காதரவிதழிச்சடையாய்நின்கழற்கிலெனா
கங்காதரவிலுடையாய்புரத்தைக்கடந்தவனே. - (8)



1831. - கடனாகவதரிக்குந்தாளப்பற்கவுரிபங்கா
கடனாகவதட்சிராமலையாய்வினைகட்கிடனாங்
கடனாகவதனென்றாலுநையாதெனைக்காத்தனிற்கே
கடனாகவதண்டங்கொண்டெமன்றேன்றிடுங்காலத்திலே. - (9)



1832. - காலக்கடியமடவாரரலறவிண்கன்னியர்செங்
காலக்கடியவிர்பஞ்சார்சிராமலைக்கத்தசெந்நீர்
காலக்கடியரவாபரணாகண்சிவந்துவருங்
காலக்கடியனையஞ்சேலெனவந்துகாத்தருளே - (10)



1833. - காதாசங்கத்தமியேனாகியவென்கருமக்குவி
காதாசங்கத்தண்குழைசேர்ந்திலகிக்கவின்பெருகுங்
காதாசங்கத்தழனேத்திரத்தாய்சிகரச்சிரநா
காதாசங்கத்தார் மயற்குள்விழாமனின்கான்மலரே - (11)



1834. - கானகத்தானவனைகரியோற்களித்தாய்சிரநா
கானகத்தானகரியுரித்தாய்பொற்கடுக்கைமலர்க்
கானகத்தானயம்போலேபிறந்துகழிந்துசுருங்
கானகத்தானமெலாமென்னென்பேகுப்பல்கண்டதுவே - (12)



1835. - கண்டமட்டுங்கடுங்காலற்கஞ்சேன்கடைநாளினில்
கண்டமட்டுந்தருவானைமொய்கோடொளிர்காழகில்சி
கண்டமட்டுந்துபொழில்சேர்சிராமலைக்காவலனைக்
கண்டமட்டுங்கறுத்தானையென்னாசொலற்கற்றபின்னே - (13)



1836. - கற்பகச்சோலைமீப்பாய்முடிக்கதிராற்கதிர்வி
கற்பகச்சோதனமெனவாஞ்சிராமலைக்காவலனே
கற்பகச்சோரியயிலேவியகுழகற்கத்தனே
கற்பகச்சோரவின்னின்னையெந்நாளிற்கலப்பதுவே - (14)



1837. - கலக்குஞ்சரமைந்துடையானைசெற்றகண்ணாபிழைய
கலக்குஞ்சமுமணிந்தாய்சிராமலைகாரணவி
கலக்குஞ்சமுரித்தாய்துயராங்கடையேன்றலையிற்
கலக்குஞ்சரணத்தானேகத்தனேவெங்கறைகண்டனே - (15)



1838. - கண்டாவியங்குமிழ்மேற்பாய்ந்துமீண்டுசெங்கத்திரிகைக்
கண்டாவியங்குலியக்கையொட்டிநிற்கமைதீட்டுவரை
கண்டாவியங்குத்தடுமாறுவேற்கருளக்கடுவார்
கண்டாவியங்குஞ்சிராமலையாயென்கருதினையே - (16)



1839. - தினைப்போதகத்தன்பிலார்க்குநெஞ்சேசெந்திருத்தவனந்
தினைப்போதகத்தனனத்தையறுமுகன்செய்யகுந்தத்
தினைப்போதகத்தன்மிளைக்களஞ்சாரங்கண்சீரெனவோ
தினைப்போதகத்தன்சிராமலையானெனச்செப்பலையே - (17)



1840. - ஏற்றானைசாரர்க்கருள்கூர்சிராமலையீசனை
ஏற்றானைசாரதன்பேர்போர்த்தானையெம்பெருமானையையம்
ஏற்றானைசாரவிக்கானைச்செற்றானையெண்ணார்களையீடு
ஏற்றானைசாரநிற்பேர்க்கில்லையோநல்லவின்பங்களே - (18)



1841. - இன்பந்தரும்பிறப்பேகுநெஞ்சேயிளமாதர்முலை
இன்பந்தருபல்லின்முத்தென்றிரங்கியிடாமலும்பர்
இன்பந்தருமலர்போலாம்சிரவெற்பிறைவனீர்
இன்பந்தரும்பர்புகழவைத்தான்கழலேத்துவையே - (19)



1842. - வையம்பரிவிற்புகழுச்சிராமலையாய்வயங்கும்
வையம்பரிவின்மலைநாணிவாசுகியாய்தலைக்கு
வையம்பரிவில்வம்பூண்டாயுமைமணவாளாதயை
வையம்பரிவிடையாயென்னையாளவருமப்பனே - (20)



1843. - அப்பாசிராமலையாயெனையாளென்பவர்கன்பவால்
அப்பாசிராமலையாநிற்குமோதிவள்பங்கனே
அப்பாசிராமலையாநின்னையேசொல்லலன்றியுடல்
அப்பாசிராமலையாயார்மலரீரென்றறைகிலனே - (21)



1844. - அறக்காதகன்கொடியேன்வினையேனெனளவுமனத்து
அறக்காதலென்பதில்லெனைச்சிராமலையாய்கரியல்
அறக்காதவள்ளுகிராலுரித்தாயடியாரெனுமைய்
அரக்காதநெஞ்சருடன்சேர்த்தருள்செய்யகளங்கனே - (22)



1845. - களங்கறுப்பானஞ்சடைசிவப்பான்மறைகாண்பரியான்
களங்கறுப்பானன்மொழிபூண்முலையிதழ்க்கண்ணிபங்கன்
களங்கறுப்பானபுரரைச்செற்றானெனைக்காயும்வினை
களங்கறுப்பானஞ்சிராமலைவாழுமுக்கட்பரனே - (23)



1846. - கட்பரச்சுரும்பேறுங்கடுக்கையங்கண்ணியது
கட்பரச்சுகைத்தேயுயிரொடுமக்காலத்துநின்
கட்பரச்சுமாவறியாவெனைக்காத்தருண்முக்
கட்பரச்சுதன்போற்றுஞ்சிரவெற்புகந்தனே - (24)



1847. - கந்தரத்தாவண்சிராமலையாய்வெங்கறையுறையுங்
கந்தரத்தாவலினென்பணிந்தாயந்திக்காலம்வந்தற்
கந்தரத்தாவலர்ப்பூங்குழல்சோருமென்கன்னிக்குச்சு
கந்தரத்தாவறுநின்மாலைவேண்டுங்கருத்தினனே - (25)



1848. - கருமந்திரண்டதினாடோறும்வாடிக்கறையுற்றநு
கருமந்திரங்குநெற்போலதறீர்ந்துகதியடைவீர்
கருமந்திரகமதுவுணுங்கொன்றைக்கணியனைப்ப
கருமந்திரவஞ்செழுத்தான்சிராமலைகைகுவித்தே - (26)



1849. - குவிக்குந்தரமியேன்சிரமேற்கரங்கொண்டுயர்பா
குவிக்குந்தருமொழிபங்காசிரகுத்திரகொலையாக்
குவிக்குந்தறுகட்கமன்வருநாண்மெய்குலைவுற்றண்ணாக்
குவிக்குந்தருணத்தஞ்சேலெண்றெனையுய்யக்கொண்டருளே - (27)



1850. - அருந்தவருமந்தரருமடுகுலிசங்கொளங்கை
அருந்தவருமம்பும்வெற்பரியாயென்றடிதொழத்தீய்
அருந்தவருமழுவேந்துஞ்சிராமலையாய்விடத்தை
அருந்தவருமம்வைத்தாயென்னையாள்பணியத்தியனே. - (28)



1851. - தியங்காமனந்தந்தைதாயானவாசிரவெற்பவிர
தியங்காமனந்தமுனிந்தாயெனா*வுனைச்சிந்தைவைத்தோ
தியங்காமனந்தனையில்லேற்கெவ்வாறினித்தீர்வதுசத்
தியங்காமனந்தணன்மாறாழ்பதநமன்சேரச்சமே. - (29)



1852. - அச்சங்கராமலையக்கொண்டயானைமுன்பாகியவெள்
அச்சங்கராவணையானம்பமாதுக்கருமயறீர்
அச்சங்கராசிரவெற்பரநீயிங்கணைவதனுக்கு
அச்சங்கராகவிதழியந்தார்கொடன்பாகவென்றே. - (30)



1853. - கவனத்தனேகமினார்பாற்றிரிகடையேன்கயமு
கவனத்தனேசிரவெற்பரனேகஞ்சக்கண்ணன்றுர
கவனத்தனேடிடநின்றவனேயுன்கழற்கன்பனா
கவனத்தனேரிட்டுழல்விலனாகக்கருணைசெய்யே. - (31)



1854. - கருத்திருக்கையவர்தாளிலென்றோதிக்கசிவுறுவார்
கருத்திருக்கையறுப்பார்நரர்காள்சங்கரியிடப்பா
கருத்திருக்கையமற்றேத்துஞ்சிரவெற்பர்காலுமழற்
கருத்திருக்கையர்சரணேசரணென்றுகாத்திருமே. - (32)



1855. - இருந்தாலமேழினர்கையறுத்தாரெதிரேற்றடுசெய்
இருந்தாலமுண்சிரவெற்பரென்னாதயினியமுதய்
இருந்தாலம்வைத்துண்டரிவையர்பாலிறுமாந்திருப்பார்
இருந்தாலதிலென்னிராதொழிந்தாலுமென்னிப்புவிக்கே. - (33)



1856. - விக்காதமலைசெலுந்தெறுநோய்கண்மிகுந்துபர
விக்காதமலைக்கும்வெஞ்சமனஞ்சுமெய்யன்பர்க்குச்செவ்
விக்காதமலைபங்கார்சிரவெற்பரைமேவிக்கைகு
விக்காதமலையுடையார்க்கன்றோவிம்மிகுந்தத்ததே. - (34)



1857. - குந்தனஞ்சந்தனம்புற்றமைதீட்டுகட்கோதைநெருங்
குந்தனஞ்சந்தனம்பூசாததுங்குயில்காண்மயன்மி
குந்தனஞ்சந்தனந்தாமலர்நீத்ததுங்கூறுமின்வை
குந்தனஞ்சந்தனங்குந்தன்*றோழுஞ்சிரகுத்திரற்கே. - (35)



1858. - குத்தம்புவிற்கணுதலாள்பங்காவெங்கொடியரைச்செ
குத்தம்புவிக்கிடர்தீர்ப்பாய்நிலவுமிழ்கோதின்முத்து
குத்தம்புவிண்செல்சிராமலையாயெனக்கோக்களின்மி
குத்தம்புவிட்டுருகிப்பாடுவார்க்குக்குறைவிலையே. - (36)



1859. - இலங்காதவருறவாகாதென்பீர்தன்னையேத்துந்தொண்டாய்
இலங்காதவருக்கிலான்சிரவெற்பனியாகசபை
இலங்காதவருக்குப்பற்புடைத்தானென்றியம்பிடவாய்
இலங்காதவருசமனுக்கென்செய்வமென்னாதரமே. - (37)



1860. - தரங்கந்தரங்கச்சிளமுலைபொன்மலைதண்முருக்க
தரங்கந்தரங்கச்சபங்கூந்தல்சார்புறங்கால்வடமு
தரங்கந்தரங்கச்சுரர்தொழச்சூரடுசத்திகண்ணாந்
தரங்கந்தரங்கச்சடையார்சிராமலைத்தையலுக்கே. - (38)



1861. - தைக்குஞ்சரமெனமுன்னின்றெய்வேளைச்செற்றான்சமன்வ
தைக்குஞ்சரணத்தம்மான்சாயுகிர்பெறுந்தாளுடைத்தத்
தைக்குஞ்சரவொலிசெய்யுஞ்சிராசலத்தானுருமோ
தைக்குஞ்சரமுரித்தானெனக்கின்பந்தருமப்பனே. - (39)



1862. - பனையஞ்சருகிற்கவிபொறிப்பார்மடப்பாவியர்க்கொப்
பனையஞ்சருமகவான்மாலுமென்றலைவார்பகர்ந்தப்
பனையஞ்சருவணர்போற்றுஞ்சிராமலைப்பார்த்திபன்பண்
பனையஞ்சருக்கனெயிறுகுத்தானெனப்பாடிலரே. - (40)



1863. - இலங்காரமாடைகலன்பூமிமக்களிளமுலைமேல்
இலங்காரமாதர்தமர்நெஞ்சமேயிவையாவுஞ்சென்மத்து
இலங்காரகனட்டமச்சனியாமெனவெண்ணியிகழ்ந்து
இலங்காரணாசிரவெற்பாவென்னோம்பலனென்கடத்தே. - (41)



1864. - கடத்தும்பியானனத்தானைப்பெற்றானைமுக்கண்ணனைத்திங்
கடத்தும்பிணையனறுங்கொன்றையானைக்கவர்வினைச்சங்
கடத்தும்பிணியினும்யானுழலாமலென்கண்மயக்கைக்
கடத்தும்பிரானைச்சிராமலைமீதினிற்கண்டனனே. - (42)



1865. - கண்டங்குநெற்றியுமான்மழுக்கையும்வெங்கார்விடஞ்சேர்
கண்டங்குலவரவப்பணியுங்கதிர்கான்றிடக்கற்
கண்டங்குதலைச்சொல்பங்கன்சிராமலைக்கத்தனிற்கக்
கண்டங்குநின்றுதொழுதேனென்றீவினைகைவிட்டதே. - (43)



1866. - கையிலாயனம்பன்முக்கண்ணன்சிராமலைக்காரணன்செங்
கையிலாயனம்பனடிபணியாமல்வெங்காதலுவ
கையிலாயனம்பன்னரும்வினைக்கன்னெஞ்சமளவுசங்
கையிலாயனம்பன்மின்மண்முதலாசைகதியலவே. - (44)



1867. - அலரிக்கதிருக்குடுவொக்கினுமைந்தருவுக்கெட்டி
அலரிக்கடுமரமொக்கினுமாதிரவங்கனைமை
அலரிக்கரைச்செற்றவையர்சிராமலையன்பருக்கொப்பு
அலரிக்கரியவன்வேதாபுனிதனமரருமே. - (45)



1868. - அமலைத்தவரைச்சிராமலையாதிபரையழகிய்
அமலைத்தவரையுடையாரைநாளுமருமறையோது
அமலைத்தவரையரைப்பணியீர்முன்னடுத்தும்முடல்
அமலைத்தவரையெவ்வாறுவெல்வீரிவ்வருஞ்சன்மத்தே. - (46)



1869. - சனனம்பலவடிவம்பலவூர்பலதாய்பலவ
சனனம்பலமும்பலவிதிலவெள்ளித்தடவரையா
சனனம்பலவன்சிராமலையானெனத்தான்சொலும்வ
சனனம்பலனிச்சனனத்துண்டேயென்றனிநெஞ்சமே. - (47)



1870. - தனங்கட்டிமாங்கனிசெந்தாமரைசத்தியொத்திடும்வ
தனங்கட்டிருவொப்பர்மின்னாரென்றைவர்தளம்பினர்மைந்
தனங்கட்டிடென்றசிராமலையாய்தமிழ்க்கூடலிலிந்
தனங்கட்டிவிற்றவனேயென்னையாட்கொள்சலதரனே. - (48)



1871. - தருக்கும்படருஞ்சிராமலையாய்தனந்தாங்கியமா
தருக்கும்படர்வினைக்குஞ்சுழலாதெனைத்தாங்கிக்கொள்வே
தருக்கும்படலைத்துளவார்க்குங்காண்பரியாய்சலமுந்
தருக்கும்படவெரித்தாய்புரமுத்தலைச்சத்தியனே. - (49)



1872. - சத்தியங்கார்கலிவற்றவிட்டாற்கத்தனேமிகுவஞ்
சத்தியங்கார்புரஞ்செற்றாய்சிரசயிலாவினைப்பா
சத்தியங்கார்களிற்சேர்த்தெனையாதரித்தாளிதுவே
சத்தியங்கார்விடக்கண்டாசரணஞ்சரணுனக்கே. - (50)



1873. - சரமலங்காரமதனெய்யநீத்துவெண்டண்டரளச்
சரமலங்காரநறுங்குழலாளைத்தழுவுசல
சரமலங்காரச்சுனைசேர்சிராமலைச்சங்கரகுஞ்
சரமலங்காரவுரித்தாயுன்செஞ்சந்தனப்புயத்தே. - (51)



1874. - தனத்துக்கவாதையடியேன்சிரசயிலச்சிவவ
தனத்துக்கவான்மதியொத்தாள்பங்காகலன்சார்களஞ்சந்
தனத்துக்கவான்செங்கதலியொப்பாமொருதாயிடம்பால்
தனத்துக்கவாவுற்றழாதாண்டருண்முக்கட்சங்கரனே. - (52)



1875. - சங்கமையானனங்கைகாறமைத்தடவித்தமரின்
சங்கமையானந்தலென்றலறாமுனென்றன்னைவெம்பா
சங்கமையானதற்றான்கொண்டடாமுன்றளர்ந்துடல்க
சங்கமையானமுறாமுன்சிராசலத்தாயருளே. - (53)



1876. - அரும்பாலனம்பகமீராறினானென்றளித்திடுங்கற்பு
அரும்பாலனம்பல்வயினடைத்தேவிபங்கற்புதவுய்
அரும்பாலனம்பசிரவெற்பநீயணையாமையினய்
அரும்பாலனம்பல்கலனீத்துவாய்விட்டலறுமின்னே. - (54)



1877. - அலரம்பையோதிகவான்றுப்பதரத்தரிவையர்காள்
அலரம்பையோதிமன்றந்தைகுமாரனடுத்தெய்யவே
அலரம்பையோதிருக்காலுதிர்த்தேங்குவனத்தையறி
அலரம்பையோதியென்னோதீர்சிராமலையையரையே. - (55)



1878. - ஐயரைக்காணிகணமாவதுநினைத்தன்புடன்மெய்க்கு
ஐயரைக்காணிபத்தோல்புலித்தோலரையன்றெடுத்த
ஐயரைக்காணிசிரபூதரமென்றமர்ந்திருக்கும்
ஐயரைக்காணிலையோநெஞ்சமேநமனஞ்சுதற்கே. - (56)



1879. - அஞ்சார்கருமலரப்பாரைச்செற்றவென்னப்பன்வெப்பால்
அஞ்சார்கருமிடற்றான்சிரபூதரத்தையன்சரண்
அஞ்சார்கருதுமடியார்வெங்கோபத்தடுமியமற்கு
அஞ்சார்கருமந்தொலைப்பார்சுவர்க்கமவரதுவே. - (57)



1880. - அவராகமருப்படலாமையோடறுகக்குநெடி
அவராகமருப்பனமுலையாமினணிந்தவதூய்
அவராகமருப்பதமலரீந்தஞ்சிராமலையை
அவராகமருப்பமுள்ளேனையாண்டருளஞ்சலென்றே. - (58)



1881. - அஞ்சலிக்குஞ்சடையானைச்சிராமலையையனையம்பு
அஞ்சலிக்குந்திபவில்லானைச்செற்றவெனப்பனையால்
அஞ்சலிக்கும்படியுண்டானைவாழ்த்தியனுதினமும்
அஞ்சலிக்குந்தொழும்பேற்கில்லையோமுத்தியாயதுவே. - (59)



1882. - ஆயாவப்பாலரியம்பாய்சிராமலையையநின்னை
ஆயாவப்பானிற்கும்வெவ்வினைப்பட்டலைந்தேமனம்புண்
ஆயாவப்பார்சடையாவுழல்வேற்குவையச்சிலரை
ஆயாவப்பாவென்றினிப்பிறந்தோதலதைத்தவிரே. - (60)



1883. - அதரம்பவளமழகார்கபோலங்களத்தமனை
அதரம்பணைகொண்முலைமிகுவாசவனிச்சமலர்
அதரம்பதநிகரன்றெனமாதர்க்கறைவேற்குநல்
அதரம்பரசிரவெற்பாவருளங்கைநாகத்தனே. - (61)



1884. - நாகங்கண்மொய்த்தலர்ந்தோங்கிடநிற்குஞ்சிரநகமன்
நாகங்கணக்கையுமைமணவாளநம்பாவடியேன்
நாகங்கணங்கைசொலறாழல்பார்த்தனனிகுவித்தல்
நாகங்கணற்பணியாயுனக்கெசெயுநாடொறுமே. - (62)



1885. - நாடியிலங்குவருள்ளுறைவாய்சிரநாகதமிழ்
நாடியிலங்குலவும்மணவாளநம்பாவருவாய்
நாடியிலங்குலிசேர்த்தாயுள்வேதியர்நண்ணியென்கை
நாடியிலங்குக்கருத்தேதென்றோதுமந்நாள்விரைந்தே. - (63)



1886. - விரைத்தடங்கற்பகச்சோலைகள்சூழ்தரவெய்யவன
விரைத்தடங்கற்செய்தொளிர்சிகரச்சிரவெற்பரத
விரைத்தடங்கற்பின்முலைநகையாரைவிரும்பிமெய்யை
விரைத்தடங்கற்குபுறம்பாய்நின்றேன்வினைவெப்பரிந்தே. - (64)



1887. - அரிக்குங்கடியபிணிக்குமஞ்சேனென்னலர்க்குமஞ்சேன்
அரிக்குங்கடியரவுக்குமஞ்சேனென்னையாளுடையான்
அரிக்குங்கடியம்புயற்குமெட்டானமருங்குவடல்
அரிக்குங்கடியஞ்சிரவெற்பெனாதவர்க்கஞ்சுவனே. - (65)



1888. - அஞ்சங்கருடன்பரியார்க்கரியசிராசலத்தாய்
அஞ்சங்கருப்பமனத்தேனைக்காலனணுகுறுங்கால்
அஞ்சங்கருக்குப்பசுத்தானமீயுமுனாச்செனுமுன்
அஞ்சங்கருகுகளரலறாமுன்வந்தாதரியே. - (66)



1889. - ஆதரிக்கப்பட்டவெஞ்சூலர்கூடலையன்றினிதா
ஆதரிக்கப்பட்டஞ்சூடினரஞ்சிரவெற்பர்கயில்
ஆதரிக்கப்பட்டருமொழிபாகரென்னார்வினைப்பொல்
ஆதரிக்கப்பட்டந்தோகுணுங்காயலைவார்கரைந்தே. - (67)



1890. - கரியவனந்தணன்காண்பரியான்கடுஞ்சாபத்தின்வெண்
கரியவனந்தலிலாதளித்தான்கதித்தோங்கிடஞ்சி
கரியவனந்தமுறுமீச்சிராமலைகாயும்வினை
கரியவனந்தறவிர்ந்துலகீர்சென்றுகைதொழுமே. - (68)



1891. - கைக்கும்பினாகந்தரித்தான்புரத்திற்கனலுறந
கைக்கும்பினாகக்கரத்தான்சிராமலைகண்டிடினங்
கைக்கும்பினாகம்புரைமனஞ்சென்றுகவலையுறல்
கைக்கும்பினாகமவற்காயிச்சன்மங்கடிதறுமே. - (69)



1892. - கடிக்கமலங்குவளைமுகங்கண்ணென்றுகாட்டியிதழ்
கடிக்கமலங்குவிர்மாதர்கள்பானுங்கனவினைபோக்
கடிக்கமலங்குன்றவேத்துஞ்சிராமலைக்காவலனைக்
கடிக்கமலங்குலவுஞ்சடையானைக்கதிதக்கவே. - (70)



1893. - தக்கனியாகஞ்சிதைத்தாய்விண்கர்க்கடகந்தனைச்சூ
தக்கனியாலிகன்மந்திகடாவுஞ்சிரசயிலா
தக்கனியாயபுரத்தைவென்றாய்நின்றனக்கன்பின்மே
தக்கனியானலனாயினுந்தாளுதவியருளே. - (71)



1893. - தவியாச்சிறுமைதனிலுழல்வேற்குநின்றாளிணைப
தவியாச்சிறந்தளியாவிடிற்றான்சிரவெற்பமண்ணு
தவியாச்சியப்பிட்டுகந்தாய்தமியன்வழக்குப்பொல்லா
தவியாச்சியம்விடமாட்டேன்செவ்வந்திதகும்வண்ணனே. - (72)



1894. - வணமாடக்கூமனைமக்கணெஞ்சேயிந்தவாழ்க்கைகள்பொய்
வணமாடக்கூரகிபூண்டான்சிராமலையான்வளவா
வணமாடக்கூடலிற்சென்னியின்மேற்றட்டுவைத்துப்பின்கோ
வணமாடக்கூலிக்குமண்சுமந்தான்கழல்வந்தித்தலே. - (73)



1896. - வந்துடைத்தாயவினையேற்கருள்செய்வணங்குவர்ப
வந்துடைத்தாயற்றுடைப்பானகையைமகத்திற்கண்சி
வந்துடைத்தாயன்மகற்கோர்சிரமறுத்தாயதளு
வந்துடைத்தாயமதென்றாய்சிராமலைவாழ்சம்புவே. - (74)



1897. - சம்பையக்கூடலில்ன்மாவாக்கினாரைச்சிராதரம்வாழ்
சம்பையக்கூரகிபூண்டாரையன்னைதராததின்வ
சம்பையக்கூழிலிட்டாலெனப்பாலனந்தள்ளினனி
சம்பையக்கூடுவமென்றாற்சகிப்பின்றுமால்சகியே. - (75)



1898. - மாலையிராவதன்வேதாவொப்பார்கொல்கண்வாய்திறந்தால்
மாலையிராவதுபோல்வானிலங்குமவுலியெலா
மாலையிராவணனைநெரித்தானைவழுத்தியுன்னி
மாலையிராவருத்திச்சிரபூதரம்வாழ்பத்தர்க்கே. - (76)



1899. - பத்தானனத்தனழுந்தப்பனிமதிதேம்பவெள்ளி
பத்தானனத்தன்பணியச்சமனுயிர்பாறநற்ற
பத்தானனத்தன்விழிசூடத்தேடப்பண்பாயினசு
பத்தானனத்தன்சிராமலைநாதன்பொற்பாதங்களே. - (77)



1900. - தங்கக்கலைவளைத்துச்சூரியன்பற்றகர்த்தடுமா
தங்கக்கலையுரித்தந்தணன்சென்னிதடிந்தறுப
தங்கக்கலைக்கண்டுழன்றோடரியைத்தடுத்தனசீர்
தங்கக்கலைச்செஞ்சடைச்சிரவெற்பன்றடக்கைகளே. - (78)



1901. - தடவரைவில்லிசிராமலையப்பன்சரணத்தைநீ
தடவரைவீசங்கணமாயினுமென்றுசாற்றிற்றுப்பு
தடவரைநாடினைநெஞ்சேநல்லோரினித்தானெனைச்சி
தடவரைபட்டுழலென்பார்நீற்கிதுதருமமன்றே. - (79)



1902. - தருமங்குலவவளர்த்தபிராட்டிபொற்றாளுக்கும்வே
தருமங்குலனமெய்யாரும்பணியுநின்றாளுக்குநாத்
தருமங்குலச்சொன்மலர்தூய்த்தொண்டாயினன்றங்கியமா
தருமங்குலவுமின்னுஞ்சேர்சிராதரத்தாவருளே. - (80)



1903. - தாவிப்படிவழிமீதேறிமந்திகடண்டருவில்
தாவிப்படிகொள்கடகத்தைச்சீறுஞ்சிராதரவத்
தாவிப்படியடியேன்வாடவோநிற்குச்சம்மதியுள்
தாவிப்படியுளரேசாமனின்பதத்தாமரையே. - (81)



1904. - மருமந்தநாசையொழியாதுமிக்கமயக்கமுற
மருமந்தநாரியரின்பமெய்யாக்கிவந்தேனையல
மருமந்தநானெனச்சொற்றேயமன்வருகாலத்தைய
மருமந்தநாளிற்சிரவெற்பநீயும்வரலந்தமே. - (82)



1905. - அந்தனையாரிடையார்சிறியாரையலைக்கழிக்கும்
அந்தனையாரையகன்றுநெஞ்சேதொண்டனாவெனையால்
அந்தனையாவலினுண்சிரவெற்பனடிகட்குநல்
அந்தனையார்சுகந்தக்குழறாள்கட்குமாக்குவையே. - (83)



1906. - ஆகம்பரியன்சிகியம்பரியனத்தாகரிய
ஆகம்பரியனயற்கரியாயஞ்சிராமலையை
ஆகம்பரியமறைகந்தரவிடையாள்பங்கவென்
ஆகம்பரியடலேற்றாய்நின்றாள்கட்கன்பாவதென்றே. - (84)



1907. - ஆவிக்குமண்சுமந்தாயையவானத்துக்கப்புறமள்
ஆவிக்குமரியதாஞ்சிரபூதரத்தற்புதவென்
ஆவிக்குமறலிதோன்றிடுநாட்டொண்டையாவென்றுமெய்
ஆவிக்குமப்பொழுதெற்கேதுன்றாளன்றியாதரமே. - (85)



1908. - ஆதரத்தந்தமிலன்பர்க்கன்பாயுய்கிலார்மனங்கை
ஆதரத்தந்தருவாயார்க்கன்பாகியவரிதழ்த்தேன்
ஆதரத்தந்தமிலுண்டோய்ந்துநல்வழியற்றுழலும்
ஆதரத்தந்தசத்தெங்கள்சிராமலையத்தனுக்கே. - (86)



1909. - அத்தந்தருணமறிந்தார்க்குமீகையினாலையநின்
அத்தந்தருவொக்குமென்றேகவியசடர்க்குரையேன்
அத்தந்தருஞ்சடையான்சிரபூதரத்தானொருவீர்
அத்தந்தருக்கத்தனெம்மானையான்சொல்லலானபின்னே. - (87)



1910. - ஆனனம்பாணியைந்தீரைந்துளாயஞ்சிராமலையாய்
ஆனனம்பாவென்றுரைக்கினெஞ்சேகொடிதாய்மிகுபொய்
ஆனனம்பாற்சமனாணைசெல்லாதழலார்க்குமம்மய்
ஆனனம்பாரவுடல்சேருமன்றுண்மையாமிதுவே. - (88)



1911. - ஆவணங்காட்டமதிக்கச்சுமக்கவப்போதுதெரி
ஆவணங்காட்டநரியையெல்லாம்பரியாக்கமுதிர்
ஆவணங்காட்டநம்மையன்சிராமலையானைவத்தது
ஆவணங்காட்டன்மையாரன்பன்றேயிதறிமனமே. - (89)



1912. - மனந்தனவாசையொழியாதுமாதர்மயலொருந
மனந்தனடுக்கமகலாதென்செய்குவன்வந்தெதிர்கா
மனந்தனயனந்திறந்தாய்சிராமலைவாணவெழில்
மனந்தனகந்தரிபங்காநின்பாதமலரருளே. - (90)



1913. - மலையரையன்செழியன்றிருப்பாவையெனவளர
மலையரைமெய்யுறவைத்தாரைவாணிவலவரைக்க
மலையரையாளுஞ்சிராமலையாரைவருதுயர்விம்
மலையரையென்றுவைத்தேனடியேன்கன்மனத்திடத்தே. - (91)



1914. - மனையாட்டிபங்குறவைத்தார்க்குமாதங்கவத்திரத்து
மனையாட்டினேறுங்குகனைப்பெற்றார்க்குவராகனைப்பூ
மனையாட்டிரங்கொள்சிராமலைவாணர்க்குமாத்திரஞ்ச
மனையாட்டிவைக்கவழிபடுவீர்வையமானிடரே. - (92)



1915. - மானாட்டமங்கைமணமாலைசூட்டமதுரைவள
மானாட்டமர்ந்துசெ*கோலோச்சியசிரமாதிரவெம்
மானாட்டமன்றிற்புரிந்தோனென்றோதிமனத்திலன்பாய்
மானாட்டமன்பர்க்கிணையோபுரந்தரன்மாலயனே. - (93)



1916. - அயனத்தமாறகலிந்திரன்செல்வத்தருத்தியில்லேற்கு
அயனத்தமானகளத்தார்படையினிதாகுங்கிள்ளை
அயனத்தமாம்பலு*யானைச்செற்றசிராசலத்தாய்
அயனத்தமாசையறுத்தருள்வாய்நின்னடித்திருவே. - (94)



1917. - திருமாரனந்தணன்காண்பரியானெஞ்சிராமலையான்
திருமாரனந்தமுனிந்தான்சடையிற்செறியிருட்க
திருமாரனந்தநதிமாதுமுள்ளவன்றேன்மிகவ
திருமாரனந்தண்முளரியந்தாளென்சிரம்வைப்பனே. - (95)



1918. - பன்னகமாலையுறக்கடிந்தான்முதற்பண்ணவர்வைப்
பன்னகமாலையன்வேதங்கள்வாழ்த்தும்பனுவலுடன்
பன்னகமாலையரஞ்சிரபூதரப்பண்பரன்பிற்
பன்னகமாலையர்தஞ்செவிக்கேறுமென்பாடலுமே. - (96)



1919. - பாடலமானப்பொலிகுழல்பாகன்சிராமலையான்
பாடலமானதென்றூர்ந்தானையன்றிப்பரந்தலர்ந்த
பாடலமானபுன்மைத்தேவரைச்சொப்பனத்திலும்யாம்
பாடலமானமற்றெண்ணலநண்ணலம்பார்க்கலமே. - (97)



1920. - @ பாரம்பரியமென்னைம்பொறியுண்......
பாரம்பரியவகந்தோறுஞ்சென்று......
பாரம்பரியசிராமலையாவிட......
பாரம்பரியம்விடையாய்வினையற......
@ இந்நூல் எழுதப்பெற்றிருந்தபிரதியில் இப்பாட்டும், 100 - ஆவது பாட்டும்
உள்ள ஏடு முறிந்துபோய்விட்டபடியால், முற்றும் அறிந்து
இவற்றைப் பதிப்பிக்கக்கூடவில்லை. - (98)



1921. - பகவகங்காளசிரபூதரவயில்பாரவரை
பகவகங்காயம்புகழவிட்டாற்கப்பசீர்த்திரியம்
பகவகங்காதலொடுகாத்தற்கியார்பணிவாரெனுஞா
பகவகங்காரமறவெற்கருளுன்பதத்திருவே. - (99)



1922. - திருக்கையிலாதறுத்திந்தி......
திருக்கையிலாயத்தடைந்......
திருக்கையிலாங்கடனஞ்சு......
திருக்கையிலாயுதனீந்தா...... - (100)


திருச்சிராமலையமகவந்தாதி முற்றிற்று.


சிறப்புப்பாயிரம்.


1923. - கட்டளைக்கலித்துறை.
பூவார்பொழிற்சிர பூதரம் வாழ்முக்கட் புண்ணியனாந்
தேவாதி தேவனுக் கந்தாதி மாலையைச் செய்தணிந்தான்
பாவார் தமிழின் றவப்பய னாவரு பண்புடையான்
நாவார் பெரும்புகழ் மீனாட்சி சுந்தர நாவலனே. - (1)



1924. - அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
தேன்பிறந்த கடுக்கையணீ சடைப்பெருமான் றாயான செல்வ மாய்ச்சேர்
வான்பிறந்த தலப்பனுவல் பிறதலநூல் களினுமென்னே வயங்க லென்னிற்
கான்பிறந்த குவளையந்தார் மீனாட்சி சுந்தரமா கவிஞர் கோமான்
தான்பிறந்த தலநூன்மற் றையதலநூ லினுஞ்சிறத்தல் சகசந் தானே. - (2)


Comments