Pirapantattiraṭṭu XXIV
பிரபந்த வகை நூல்கள்
Backதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் "பிரபந்தத்திரட்டு"
பகுதி 24 (2771 - 2809) - திருஞானசம்பந்தசுவாமிகள் ஆனந்தக்களிப்பு
ஆனந்த மானந்தந் தோழி - திரு
வாளர்சம் பந்த ரருள்விளை யாடல்
ஆனந்த மானந்தந் தோழி
2771 - பார்புகழ் காழி நகரிற் - சிவ
பாத விருதயர் செய்த தவத்தாற்
சீர்புகழ் மிக்க மகவா - ஐயர்
திருவ ருளாலவ தாரஞ்செய் தாரால். (ஆனந்த) - 1
2772 - கூடும் பருவமோர் மூன்றி - லம்மை
கொங்கை சுரந்த கொழுஞ்சுவைத் தீம்பா
னாடுபொன் வள்ளத்தி னூட்ட - உண்டு
ஞானசம் பந்த ரெனப்பொலிந் தாரால் (ஆனந்த) - 2
2773 - சொல்லு மயனரி யாலு - மென்றுஞ்
சுட்டி யறியப் படாத பொருளை
யொல்லுஞ்செந் தாமரை யன்ன - செங்கை
யோர்விர லாற்சுட்டிக் காட்டிநின் றாரால் (ஆனந்த) - 3
2774 - வைதிக சைவந் தழையப் - பெரு
மண்ணுல காதி மகிழ்சிறந் தோங்க
வுய்திற மாந்தமிழ் வேதந் - தோ
டுடைய செவியனென் றாரம்பித் தாரால் (ஆனந்த) - 4
2775 - விண்ணும் புவியுங்கொண் டாடுந் - தமிழ்
தேவ மொழியும் பொழுதொற் றிடுமா
றெண்ணுந் திருக்கோலக் காவி - லைந்
தெழுத்தும் பொறித்தபொற் றாளம்பெற் றாரால் (ஆனந்த) - 5
2776 - என்னென் றியானுரை செய்கே - னைய
ரேழிசை யோங்க வினிமை ததும்பப்
பன்னும் புகழ்த்திரு வாக்காற் - கொடும்
பாலை குளிர்நெய்த லாகிய தென்னின் (ஆனந்த) - 6
2777 - மூவுல கும்புகழ் தில்லை - வளர்
மூவா யிரர்கண நாதராய்த் தோன்றப்
பாவு மிசையுரு வாய - புகழ்ப்
பாணருக் காங்கறி வித்துநின் றாரால் (ஆனந்த) - 7
2778 - மும்மை யுலகும் புகழச் - செழு
முத்தின் சிவிகை குடைதிருச் சின்னஞ்
செம்மை யரத்துறை மேய - தேவ
தேவ னருளச் சிறப்பிற்பெற் றாரால் (ஆனந்த) - 8
2779 - . தாரை திருச்சின்ன மெல்லாம் - பர
சமயத்தின் கோளரி வந்தன னிந்தப்
பாரையுய் விப்பவன் வந்தான் - ஞானப்
பாலறா வாயன்வந் தானென வூதும். (ஆனந்த) - 9
2780 - முந்திய மாமறை யின்க - ணைய
முற்று மொழிய மொழிந்து மறையோர்க்
கந்தியின் மந்திர மோரிற் - றிரு
வைந்தெழுத் தேயென் றருளிச்செய் தாரால் (ஆனந்த) - 10
2781 - அண்டர் புகழ்ந்துகொண் டாடும் - பாச்சி
லாச்சிரா மத்தெம் மடிகண்மு னன்பு
கொண்ட மழவன் மகளைப் - பற்று
கொடிய முயலக நோயொழித் தாரால் (ஆனந்த) - 110
2782 - கொங்கி னடியரைச் சார்ந்த - வெங்
குளிர்ப்பிணி யாதி குலைந்தொழி வெய்த
வெங்கும் புகழ்திரு நீல - கண்ட
மீற்றி னுறுதமிழ் வாய்மலர்ந் தாரால் (ஆனந்த) - 12
2783 - தாவில்பட் டீச்சரத் தையர் - நன்கு
தந்த மணிமுத்துப் பந்தர் விரும்பி
மேவு திருச்சத்தி முத்தத் - திடை
மெய்ம்மையிற் பெற்றனர் வெங்குரு வேந்தர் (ஆனந்த) - 13
2784 - தந்தை கருத்து முடிப்பான் - வளஞ்
சார்பொழி லாவடு தண்டுறை யார்பா
லந்தமின் முத்தமி ழாள - ருல
வாக்கிழி யாயிரம் பொன்னிற்பெற் றாரால் (ஆனந்த) - 14
2785 - நீலகண் டப்பெரும் பாணர் - திரு
நெஞ்ச முவந்து நெடுங்களி கூரக்
கோலத் தரும் புரத்தி - லிசை
கோலிய யாழ்மூரி வாய்மலர்ந் தாரால் (ஆனந்த) - 15
2786 - மாங்குயில் கூவும் வளஞ்சேர் - திரு
மருகலிற் பிள்ளையார் வாக்கெழு முன்னே
தூங்கி யெழுந்தவன் போல - விடத்
தோய்வா லிறந்தவன் றானெழுந் தானால் (ஆனந்த) - 16
2787 - வீழி மிழலைப் பிரானா - ரெங்கள்
வித்தகர் சண்பை விரகர்முன் றோன்றிக்
காழியிற் றோணியின் மேவும் - வண்ணங்
காட்டுகின் றோமென்று காட்டப்பெற் றாரால். (ஆனந்த) - 17
2788 - காமரு வீழி மிழலை - யமர்
கண்ணுத லாரடி யார்க்கமு தாக
மாமரு வோர்செம்பொற் காசு - தினம்
வைக்கப்பெற் றார்சண்பை வந்த விரகர் (ஆனந்த) - 18
2789 - .மன்னிய மாமறைக் காட்டிற் - சண்பை
வந்த கவுணியர் வாய்திற வாமுன்
றுன்னிக் கதவ மடைத்த - திறஞ்
சொல்லி னெவரே வியப்படை யாதார். (ஆனந்த) - 19
2790 - மானியா ரன்பு மமைச்சிற் - புகழ்
வாய்ந்த குலச்சிறை யாரன்பு மோர்ந்தே
யானி யிலாமறைக் காட்டி - னின்று
மாலவாய் மேவ வெழுந்தன ரையர். (ஆனந்த) - 20
2791 - செழுமணி யானத் திவர்ந்து - திருச்
சின்ன முழங்கத் திசைதொறு மொய்த்து
வழுவி லடியவர் போற்ற - ஆல
வாய்வந்து காட்சி கொடுத்தனர் யார்க்கும் (ஆனந்த) - 21
2792 - கூடலின் மேய பிரானார் - கழல்
கும்பிட் டடியவர் கூட்டங் குலாவ
வாட லமைச்ச ரமைத்த - திரு
வார்மட மேவி யமர்ந்திருந் தாரால் (ஆனந்த) - 22
2793 - தீய வமணக் கொடிய - ரையர்
திருமடத் திற்செய்த தீமை யருளான்
மேய வழுதி யுடம்பு - பற்றி
வெஞ்சுர மாகத் திருவாய் மலர்ந்தார் (ஆனந்த) - 23
2794 - செம்மையில் கூனொடு வெப்பு - நின்ற
சீர்நெடு மாறற்கு நீங்கப் பொலிவு
வெம்மை யமணர்க்கு நீங்க - ஐயர்
மேதகு நீறு திருக்கைதொட் டாரால் (ஆனந்த) - 24
2795 - அருகர் முகமு மனையா - ரழ
லாங்கிட்ட வேடு மொருங்கு கருகப்
பெருகிய சைவர் முகமு - மையர்
பேரழ லேடும் பசந்தன காணாய். (ஆனந்த) - 25
2796 - அண்ணுங் கொடிய வமண - ரோரெண்
ணாயிர ருங்கொடுங் கூர்ங்கழு வேற
வெண்ணு முயிர்களீ டேற - வையை
யாற்றிட்ட வேடெதி ரேறிய தம்மா. (ஆனந்த) - 26
2797 - உள்ள நிகரப் புறமு - மிக்
கோங்கிருண் மூடிக் கொடுவினை பூண்ட
கள்ள வமணர்கள் யாருங் - கண்
கலங்கிக் கழுமரத் தேறினர் மாதோ. (ஆனந்த) - 27
2798 - நந்திய சீர்மலை மங்கை - கொங்கை
ஞானமுண் டார்திரு வாய்மலர் சொல்லே
யுந்தி விடுநெடுங் கோலாச் - சுழ
லோடங் கரையரு குற்றது நோக்காய். (ஆனந்த) - 28
2799 - வித்தகர் தந்திரு முன்ன - ரூது
மெய்த்திருச் சின்னமெண் ணாது தடுத்த
புத்தன் றலையுருண் டோடச் - சினம்
பொங்கி யுருமொன்று வீழ்ந்தது கண்டாய். (ஆனந்த) - 29
2800 - வெங்குரு வேந்தர் திருமுன் - வாத
மேன்மேலுஞ் செய்து மெலிவுற்றுத் தோற்றே
அங்குறு புத்தரெல் லோரும் - சைவ
ராகின ரைய ரடிமலர் போற்றி. (ஆனந்த) - 30
2801 - நாடுல கத்தெவர் பெற்றார் - திரு
நாவுக் கரசுஞ் சிவிகையைத் தாங்கிக்
கூடுமன் போடு மகிழ்ந்து - தவங்
கூடிற் றெனவருங் கோதற்ற பேறு. (ஆனந்த) - 31
2802 - மன்னன் றிருவீரட் டானங் - காழி
மாமறைக் கன்று மகிழ்ச்சியிற் லெலப்
பன்னும் புகழ்த்தம்பி ரானார் - நடம்
பண்ணிய மேன்மைத் திருவரு ளோரின். (ஆனந்த) - 32
2803 - உய்ய வெமையெடுத் தாள்வார் - திரு
வோத்தூரில யார்க்கு மதிசய மேவ
வையர் திருவருள் வாக்காற் - பல
வாண்பனை பெண்பனை யாயின மாதோ. (ஆனந்த) - 33
2804 - கச்சியின் மேற்றளி மேய - கருங்
கண்ணனங் கண்ணுத லெண்ணுரு மேவ
வுச்சியின் மாதவர் சூடு - மைய
ருண்மைத் திருவாக் கியற்றிய தோராய். (ஆனந்த) - 34
2805 - பெற்றனர் யாவர் பெறுவ - ரறம்
பேணு திருவாலங் காட்டுறை யையர்
பற்றுங் கனவினிற் றோன்றி - நம்மைப்
பாட வயர்த்தனை யோவென் றருள. (ஆனந்த) - 35
2806 - மேவு சமயம் பலவுஞ் - சைவ
மேபொரு ளென்று விரும்பிக்கொண் டாடத்
தூவு மெலும்புபெண் ணாக - அருள்
சொல்லி னதிசய மல்லதெ னுண்டாம். (ஆனந்த) - 36
2807 - நாட்டும் புகழின் மலிந்த - திரு
ஞானசிந் தாமணி நல்லெழி லென்றுங்
காட்டும் பெருமண நல்லூர் - மணங்
காணவந் தார்சிவம் பூணச்செய் தாரால். (ஆனந்த) - 37
2808 - ஆரண மாகமம் வாழ்க - புக
ழாறு முகத்திரு ஞானசம் பந்த
காரண தேசிகர் வாழ்க - நெடுங்
கால மவரடி யார்களும் வாழ்க. - 38
ஆனந்த மானந்தந் தோழி - திரு
வாளர் சம்பந்த ரருள்விளை யாடல்
ஆனந்த மானந்தந் தோழி.
திருஞானசம்பந்தசுவாமிகள் ஆனந்தக்களிப்பு முற்றிற்று.
-----------
இந்நூலாசிரியர் மாணாக்கராகிய தெய்வநாயகம் பிள்ளையவர்களியற்றியது.
(* இது பழைய பதிப்பைச்சார்ந்தது.)
நேரிசையாசிரியப்பா.
2809
மாமலி பொருனை வளஞ்சுரந் தளிக்கும்
பாமலி பெரும்புகழ்ப் பாண்டிநன் னாட்டின்
மிளிர்மணி குயிற்றிய வொளிர்மணி மாடத்
தும்ப ருலாவும் வம்பலர்க் குழலார்
முகமதிக் குருகி நகநிலா மணியிற் - 5
புரிசெய் குன்றஞ் சொரிபுனல் பெருகி
வீசுவளி துறுத்த மாசறக் கழுவும்
பீடமர் வளஞ்சால் கூடன்மா நகரிற்
பிறவிப் பகைக்குள முறவுடைந் தடைந்தே
யொழியா வன்பின் வழிபடு மடியார் - 10
மலவிருள் குமைக்கு நலமலி கதிரெனப்
போற்றிப் புவனஞ் சாற்றவீற் றிருக்கு
மீன மிலாத்திரு ஞானசம் பந்த
வருளா சிரியன் றிருவடிக் கன்பாய்ப்
பூவிரி பொழிற்குலைக் காவிரி புரக்கு - 15
மளவிலா வளம்புனை வளவனன் னாட்டிற்
பத்தியிற் றவறா வுத்தம வணிகக்
குலமக டனக்கு நலமலிந் தோங்குந்
தாயா யளித்த தம்பிரா னென்று
மாயா வருளிற் கோயில்கொண் டமரத் - 20
துரிசிரா திலங்குந் திரிசிராப் பள்ளியிற்
கடன்மருங் குடுத்த தடநெடும் புடவியி
லுற்றநூல் யாவுங் கற்றவ னென்றுந்
தோலா நாவின் மேலோர் வகுத்துத்
தந்தருள் பலபிர பந்த மென்பன - 25
வெல்லாஞ் சொல்ல வல்லோ னென்று
முமிழ்சுவை யாரியத் துற்றபல் புராணமுந்
தமிழின்மொழி பெயர்க்கத் தக்கோ னென்றுந்
தனையடைந் தவரை நினைதரு தனைப்போல்
வல்லவ ராக்க நல்லதன் னியற்கையா - 30
மெலியா வன்பிற் சலியா னென்று
மற்றவர் பிறரைச் சொற்றன போலா
துற்ற குணங்கண் முற்ற வுணர்ந்து
செப்பமுள் ளோர்பலர்க் கொப்பயா னுள்ளன
நினைந்துரை செய்வது புனைந்துரை யன்றெனக் - 35
காட்சியின் விளக்கி மாட்சியி னமர்வோன்
கற்றவர் குழுமி யுற்றபே ரவையிற்
கனக்குநுண் ணறிவிலா வெனக்குமோ ரொதுக்கிடந்
தந்தமீ னாட்சி சுந்தரப் பெரியோன்
வனைந்து புனைந்த மாநலஞ் செறித்து - 40
வைத்த பதிற்றுப் பத்தந் தாதியு
மூன மொழித்தரு ளானந்தக் களிப்புந்
துதித்திடு மச்சிற் பதித்துத் தருகெனத்
தகவுளோ ரென்றுந் தங்கப் பெற்றுத்
துகளிலா தோங்குந் தொண்டைமண் டலத்திற் - 45
கயல்செறி புனல்சேர் வயல்செறி பண்ணையிற்
குடமருள் செருத்தற் றடமருப் பெருமைக
ளொருங்கு குழீஇயெம் மருங்கினு முலாவல்
விண்மூ டிருங்கருங் கொண்மூ வினங்கண்
மேவுசீர்த் தம்மிறை காவலிற் பொலிவுறு - 50
மிந்நில மென்றகத் துன்னிச் சூழ்ந்து
தயங்குவள நோக்கி யியங்குதல் கடுக்கும்
வயங்குபூ விருந்த வல்லிநன் னாட
னாடகத் தியன்ற மாடந் தோறும்
வண்டமர் புரிகுழ லொண்டொடி மடவார் - 55
மாந்தளிர் கவற்றி யேந்தெழில் வாய்ந்த
காற்சிலம் பணியு மரைமே கலையு
முன்னும் பின்னு முறையி னொலித்தன்
மாறாப் பம்மன் மாநக ராளி
மதியெழச் சிறக்கும் வானக மென்னத் - 60
துதியுறக் கொளுமுயர் துளுவவே ளாளர்
குலஞ்சிறப் படையக் கலஞ்சிறப் பப்புனை
வாகார் தருபுக ழேகாம் பரவே
ளீட்டு தவப்பயன் காட்டவந் துதித்தோன்
பிறங்குசீர் விசாகப் பெருமா ளையனென் - 65
றறங்குல வுலக மறைபுல வன்பாற்
றீந்தமி ழுணர்ந்தறி வேய்ந்தகுண சீல
னெட்டுத் திசையினு முட்டும் புகழா
னடைபிற ழான்பெருங் கொடையொடு பிறந்தோன்
கவிநயந் தெரிதலிற் குவிதரா வுணர்வினன் - 70
மற்றைநற் குணமெலாம் பெற்றதா யானோன்
கங்கைபொற் கடுக்கை வெங்கண்வா ளரவந்
திங்கள்சேர் வேணி யங்கண னருச்சனை
மங்கலின் மலர்கொடு பங்க மறப்புரி
துங்கனாம் விசய ரங்கபூ பாலன் - 75
கவின்றவுண் மகிழ்வொடு நவின்றன னாக
மின்னுமிந் நூல்கள்செய் வினைமுத லானோ
னென்னா சிரிய னாகவிந் நூல்கட்
குரிமையா னோன்றற் குறுமா சிரிய
னாகலி னொற்றுமை யறிந்துநின் றெனையிவ - 80
னேவலு நன்றியா னேவப் படுதலு
நன்றுநன் றென்றுளந் துன்றுபே ருவகை
கதித்தெழ வன்பிற் பதித்து முடித்தன
னிலக்கண விலக்கிய நலக்க வுணர்ந்தோ
னென்னுடை நட்பனா விலங்கு - 85
நன்னயத் தியாக ராசநா வலனே.
சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
வாளர்சம் பந்த ரருள்விளை யாடல்
ஆனந்த மானந்தந் தோழி
2771 - பார்புகழ் காழி நகரிற் - சிவ
பாத விருதயர் செய்த தவத்தாற்
சீர்புகழ் மிக்க மகவா - ஐயர்
திருவ ருளாலவ தாரஞ்செய் தாரால். (ஆனந்த) - 1
2772 - கூடும் பருவமோர் மூன்றி - லம்மை
கொங்கை சுரந்த கொழுஞ்சுவைத் தீம்பா
னாடுபொன் வள்ளத்தி னூட்ட - உண்டு
ஞானசம் பந்த ரெனப்பொலிந் தாரால் (ஆனந்த) - 2
2773 - சொல்லு மயனரி யாலு - மென்றுஞ்
சுட்டி யறியப் படாத பொருளை
யொல்லுஞ்செந் தாமரை யன்ன - செங்கை
யோர்விர லாற்சுட்டிக் காட்டிநின் றாரால் (ஆனந்த) - 3
2774 - வைதிக சைவந் தழையப் - பெரு
மண்ணுல காதி மகிழ்சிறந் தோங்க
வுய்திற மாந்தமிழ் வேதந் - தோ
டுடைய செவியனென் றாரம்பித் தாரால் (ஆனந்த) - 4
2775 - விண்ணும் புவியுங்கொண் டாடுந் - தமிழ்
தேவ மொழியும் பொழுதொற் றிடுமா
றெண்ணுந் திருக்கோலக் காவி - லைந்
தெழுத்தும் பொறித்தபொற் றாளம்பெற் றாரால் (ஆனந்த) - 5
2776 - என்னென் றியானுரை செய்கே - னைய
ரேழிசை யோங்க வினிமை ததும்பப்
பன்னும் புகழ்த்திரு வாக்காற் - கொடும்
பாலை குளிர்நெய்த லாகிய தென்னின் (ஆனந்த) - 6
2777 - மூவுல கும்புகழ் தில்லை - வளர்
மூவா யிரர்கண நாதராய்த் தோன்றப்
பாவு மிசையுரு வாய - புகழ்ப்
பாணருக் காங்கறி வித்துநின் றாரால் (ஆனந்த) - 7
2778 - மும்மை யுலகும் புகழச் - செழு
முத்தின் சிவிகை குடைதிருச் சின்னஞ்
செம்மை யரத்துறை மேய - தேவ
தேவ னருளச் சிறப்பிற்பெற் றாரால் (ஆனந்த) - 8
2779 - . தாரை திருச்சின்ன மெல்லாம் - பர
சமயத்தின் கோளரி வந்தன னிந்தப்
பாரையுய் விப்பவன் வந்தான் - ஞானப்
பாலறா வாயன்வந் தானென வூதும். (ஆனந்த) - 9
2780 - முந்திய மாமறை யின்க - ணைய
முற்று மொழிய மொழிந்து மறையோர்க்
கந்தியின் மந்திர மோரிற் - றிரு
வைந்தெழுத் தேயென் றருளிச்செய் தாரால் (ஆனந்த) - 10
2781 - அண்டர் புகழ்ந்துகொண் டாடும் - பாச்சி
லாச்சிரா மத்தெம் மடிகண்மு னன்பு
கொண்ட மழவன் மகளைப் - பற்று
கொடிய முயலக நோயொழித் தாரால் (ஆனந்த) - 110
2782 - கொங்கி னடியரைச் சார்ந்த - வெங்
குளிர்ப்பிணி யாதி குலைந்தொழி வெய்த
வெங்கும் புகழ்திரு நீல - கண்ட
மீற்றி னுறுதமிழ் வாய்மலர்ந் தாரால் (ஆனந்த) - 12
2783 - தாவில்பட் டீச்சரத் தையர் - நன்கு
தந்த மணிமுத்துப் பந்தர் விரும்பி
மேவு திருச்சத்தி முத்தத் - திடை
மெய்ம்மையிற் பெற்றனர் வெங்குரு வேந்தர் (ஆனந்த) - 13
2784 - தந்தை கருத்து முடிப்பான் - வளஞ்
சார்பொழி லாவடு தண்டுறை யார்பா
லந்தமின் முத்தமி ழாள - ருல
வாக்கிழி யாயிரம் பொன்னிற்பெற் றாரால் (ஆனந்த) - 14
2785 - நீலகண் டப்பெரும் பாணர் - திரு
நெஞ்ச முவந்து நெடுங்களி கூரக்
கோலத் தரும் புரத்தி - லிசை
கோலிய யாழ்மூரி வாய்மலர்ந் தாரால் (ஆனந்த) - 15
2786 - மாங்குயில் கூவும் வளஞ்சேர் - திரு
மருகலிற் பிள்ளையார் வாக்கெழு முன்னே
தூங்கி யெழுந்தவன் போல - விடத்
தோய்வா லிறந்தவன் றானெழுந் தானால் (ஆனந்த) - 16
2787 - வீழி மிழலைப் பிரானா - ரெங்கள்
வித்தகர் சண்பை விரகர்முன் றோன்றிக்
காழியிற் றோணியின் மேவும் - வண்ணங்
காட்டுகின் றோமென்று காட்டப்பெற் றாரால். (ஆனந்த) - 17
2788 - காமரு வீழி மிழலை - யமர்
கண்ணுத லாரடி யார்க்கமு தாக
மாமரு வோர்செம்பொற் காசு - தினம்
வைக்கப்பெற் றார்சண்பை வந்த விரகர் (ஆனந்த) - 18
2789 - .மன்னிய மாமறைக் காட்டிற் - சண்பை
வந்த கவுணியர் வாய்திற வாமுன்
றுன்னிக் கதவ மடைத்த - திறஞ்
சொல்லி னெவரே வியப்படை யாதார். (ஆனந்த) - 19
2790 - மானியா ரன்பு மமைச்சிற் - புகழ்
வாய்ந்த குலச்சிறை யாரன்பு மோர்ந்தே
யானி யிலாமறைக் காட்டி - னின்று
மாலவாய் மேவ வெழுந்தன ரையர். (ஆனந்த) - 20
2791 - செழுமணி யானத் திவர்ந்து - திருச்
சின்ன முழங்கத் திசைதொறு மொய்த்து
வழுவி லடியவர் போற்ற - ஆல
வாய்வந்து காட்சி கொடுத்தனர் யார்க்கும் (ஆனந்த) - 21
2792 - கூடலின் மேய பிரானார் - கழல்
கும்பிட் டடியவர் கூட்டங் குலாவ
வாட லமைச்ச ரமைத்த - திரு
வார்மட மேவி யமர்ந்திருந் தாரால் (ஆனந்த) - 22
2793 - தீய வமணக் கொடிய - ரையர்
திருமடத் திற்செய்த தீமை யருளான்
மேய வழுதி யுடம்பு - பற்றி
வெஞ்சுர மாகத் திருவாய் மலர்ந்தார் (ஆனந்த) - 23
2794 - செம்மையில் கூனொடு வெப்பு - நின்ற
சீர்நெடு மாறற்கு நீங்கப் பொலிவு
வெம்மை யமணர்க்கு நீங்க - ஐயர்
மேதகு நீறு திருக்கைதொட் டாரால் (ஆனந்த) - 24
2795 - அருகர் முகமு மனையா - ரழ
லாங்கிட்ட வேடு மொருங்கு கருகப்
பெருகிய சைவர் முகமு - மையர்
பேரழ லேடும் பசந்தன காணாய். (ஆனந்த) - 25
2796 - அண்ணுங் கொடிய வமண - ரோரெண்
ணாயிர ருங்கொடுங் கூர்ங்கழு வேற
வெண்ணு முயிர்களீ டேற - வையை
யாற்றிட்ட வேடெதி ரேறிய தம்மா. (ஆனந்த) - 26
2797 - உள்ள நிகரப் புறமு - மிக்
கோங்கிருண் மூடிக் கொடுவினை பூண்ட
கள்ள வமணர்கள் யாருங் - கண்
கலங்கிக் கழுமரத் தேறினர் மாதோ. (ஆனந்த) - 27
2798 - நந்திய சீர்மலை மங்கை - கொங்கை
ஞானமுண் டார்திரு வாய்மலர் சொல்லே
யுந்தி விடுநெடுங் கோலாச் - சுழ
லோடங் கரையரு குற்றது நோக்காய். (ஆனந்த) - 28
2799 - வித்தகர் தந்திரு முன்ன - ரூது
மெய்த்திருச் சின்னமெண் ணாது தடுத்த
புத்தன் றலையுருண் டோடச் - சினம்
பொங்கி யுருமொன்று வீழ்ந்தது கண்டாய். (ஆனந்த) - 29
2800 - வெங்குரு வேந்தர் திருமுன் - வாத
மேன்மேலுஞ் செய்து மெலிவுற்றுத் தோற்றே
அங்குறு புத்தரெல் லோரும் - சைவ
ராகின ரைய ரடிமலர் போற்றி. (ஆனந்த) - 30
2801 - நாடுல கத்தெவர் பெற்றார் - திரு
நாவுக் கரசுஞ் சிவிகையைத் தாங்கிக்
கூடுமன் போடு மகிழ்ந்து - தவங்
கூடிற் றெனவருங் கோதற்ற பேறு. (ஆனந்த) - 31
2802 - மன்னன் றிருவீரட் டானங் - காழி
மாமறைக் கன்று மகிழ்ச்சியிற் லெலப்
பன்னும் புகழ்த்தம்பி ரானார் - நடம்
பண்ணிய மேன்மைத் திருவரு ளோரின். (ஆனந்த) - 32
2803 - உய்ய வெமையெடுத் தாள்வார் - திரு
வோத்தூரில யார்க்கு மதிசய மேவ
வையர் திருவருள் வாக்காற் - பல
வாண்பனை பெண்பனை யாயின மாதோ. (ஆனந்த) - 33
2804 - கச்சியின் மேற்றளி மேய - கருங்
கண்ணனங் கண்ணுத லெண்ணுரு மேவ
வுச்சியின் மாதவர் சூடு - மைய
ருண்மைத் திருவாக் கியற்றிய தோராய். (ஆனந்த) - 34
2805 - பெற்றனர் யாவர் பெறுவ - ரறம்
பேணு திருவாலங் காட்டுறை யையர்
பற்றுங் கனவினிற் றோன்றி - நம்மைப்
பாட வயர்த்தனை யோவென் றருள. (ஆனந்த) - 35
2806 - மேவு சமயம் பலவுஞ் - சைவ
மேபொரு ளென்று விரும்பிக்கொண் டாடத்
தூவு மெலும்புபெண் ணாக - அருள்
சொல்லி னதிசய மல்லதெ னுண்டாம். (ஆனந்த) - 36
2807 - நாட்டும் புகழின் மலிந்த - திரு
ஞானசிந் தாமணி நல்லெழி லென்றுங்
காட்டும் பெருமண நல்லூர் - மணங்
காணவந் தார்சிவம் பூணச்செய் தாரால். (ஆனந்த) - 37
2808 - ஆரண மாகமம் வாழ்க - புக
ழாறு முகத்திரு ஞானசம் பந்த
காரண தேசிகர் வாழ்க - நெடுங்
கால மவரடி யார்களும் வாழ்க. - 38
ஆனந்த மானந்தந் தோழி - திரு
வாளர் சம்பந்த ரருள்விளை யாடல்
ஆனந்த மானந்தந் தோழி.
திருஞானசம்பந்தசுவாமிகள் ஆனந்தக்களிப்பு முற்றிற்று.
-----------
சிறப்புப்பாயிரம்.
இந்நூலாசிரியர் மாணாக்கராகிய தெய்வநாயகம் பிள்ளையவர்களியற்றியது.(* இது பழைய பதிப்பைச்சார்ந்தது.)
நேரிசையாசிரியப்பா.
2809
மாமலி பொருனை வளஞ்சுரந் தளிக்கும்
பாமலி பெரும்புகழ்ப் பாண்டிநன் னாட்டின்
மிளிர்மணி குயிற்றிய வொளிர்மணி மாடத்
தும்ப ருலாவும் வம்பலர்க் குழலார்
முகமதிக் குருகி நகநிலா மணியிற் - 5
புரிசெய் குன்றஞ் சொரிபுனல் பெருகி
வீசுவளி துறுத்த மாசறக் கழுவும்
பீடமர் வளஞ்சால் கூடன்மா நகரிற்
பிறவிப் பகைக்குள முறவுடைந் தடைந்தே
யொழியா வன்பின் வழிபடு மடியார் - 10
மலவிருள் குமைக்கு நலமலி கதிரெனப்
போற்றிப் புவனஞ் சாற்றவீற் றிருக்கு
மீன மிலாத்திரு ஞானசம் பந்த
வருளா சிரியன் றிருவடிக் கன்பாய்ப்
பூவிரி பொழிற்குலைக் காவிரி புரக்கு - 15
மளவிலா வளம்புனை வளவனன் னாட்டிற்
பத்தியிற் றவறா வுத்தம வணிகக்
குலமக டனக்கு நலமலிந் தோங்குந்
தாயா யளித்த தம்பிரா னென்று
மாயா வருளிற் கோயில்கொண் டமரத் - 20
துரிசிரா திலங்குந் திரிசிராப் பள்ளியிற்
கடன்மருங் குடுத்த தடநெடும் புடவியி
லுற்றநூல் யாவுங் கற்றவ னென்றுந்
தோலா நாவின் மேலோர் வகுத்துத்
தந்தருள் பலபிர பந்த மென்பன - 25
வெல்லாஞ் சொல்ல வல்லோ னென்று
முமிழ்சுவை யாரியத் துற்றபல் புராணமுந்
தமிழின்மொழி பெயர்க்கத் தக்கோ னென்றுந்
தனையடைந் தவரை நினைதரு தனைப்போல்
வல்லவ ராக்க நல்லதன் னியற்கையா - 30
மெலியா வன்பிற் சலியா னென்று
மற்றவர் பிறரைச் சொற்றன போலா
துற்ற குணங்கண் முற்ற வுணர்ந்து
செப்பமுள் ளோர்பலர்க் கொப்பயா னுள்ளன
நினைந்துரை செய்வது புனைந்துரை யன்றெனக் - 35
காட்சியின் விளக்கி மாட்சியி னமர்வோன்
கற்றவர் குழுமி யுற்றபே ரவையிற்
கனக்குநுண் ணறிவிலா வெனக்குமோ ரொதுக்கிடந்
தந்தமீ னாட்சி சுந்தரப் பெரியோன்
வனைந்து புனைந்த மாநலஞ் செறித்து - 40
வைத்த பதிற்றுப் பத்தந் தாதியு
மூன மொழித்தரு ளானந்தக் களிப்புந்
துதித்திடு மச்சிற் பதித்துத் தருகெனத்
தகவுளோ ரென்றுந் தங்கப் பெற்றுத்
துகளிலா தோங்குந் தொண்டைமண் டலத்திற் - 45
கயல்செறி புனல்சேர் வயல்செறி பண்ணையிற்
குடமருள் செருத்தற் றடமருப் பெருமைக
ளொருங்கு குழீஇயெம் மருங்கினு முலாவல்
விண்மூ டிருங்கருங் கொண்மூ வினங்கண்
மேவுசீர்த் தம்மிறை காவலிற் பொலிவுறு - 50
மிந்நில மென்றகத் துன்னிச் சூழ்ந்து
தயங்குவள நோக்கி யியங்குதல் கடுக்கும்
வயங்குபூ விருந்த வல்லிநன் னாட
னாடகத் தியன்ற மாடந் தோறும்
வண்டமர் புரிகுழ லொண்டொடி மடவார் - 55
மாந்தளிர் கவற்றி யேந்தெழில் வாய்ந்த
காற்சிலம் பணியு மரைமே கலையு
முன்னும் பின்னு முறையி னொலித்தன்
மாறாப் பம்மன் மாநக ராளி
மதியெழச் சிறக்கும் வானக மென்னத் - 60
துதியுறக் கொளுமுயர் துளுவவே ளாளர்
குலஞ்சிறப் படையக் கலஞ்சிறப் பப்புனை
வாகார் தருபுக ழேகாம் பரவே
ளீட்டு தவப்பயன் காட்டவந் துதித்தோன்
பிறங்குசீர் விசாகப் பெருமா ளையனென் - 65
றறங்குல வுலக மறைபுல வன்பாற்
றீந்தமி ழுணர்ந்தறி வேய்ந்தகுண சீல
னெட்டுத் திசையினு முட்டும் புகழா
னடைபிற ழான்பெருங் கொடையொடு பிறந்தோன்
கவிநயந் தெரிதலிற் குவிதரா வுணர்வினன் - 70
மற்றைநற் குணமெலாம் பெற்றதா யானோன்
கங்கைபொற் கடுக்கை வெங்கண்வா ளரவந்
திங்கள்சேர் வேணி யங்கண னருச்சனை
மங்கலின் மலர்கொடு பங்க மறப்புரி
துங்கனாம் விசய ரங்கபூ பாலன் - 75
கவின்றவுண் மகிழ்வொடு நவின்றன னாக
மின்னுமிந் நூல்கள்செய் வினைமுத லானோ
னென்னா சிரிய னாகவிந் நூல்கட்
குரிமையா னோன்றற் குறுமா சிரிய
னாகலி னொற்றுமை யறிந்துநின் றெனையிவ - 80
னேவலு நன்றியா னேவப் படுதலு
நன்றுநன் றென்றுளந் துன்றுபே ருவகை
கதித்தெழ வன்பிற் பதித்து முடித்தன
னிலக்கண விலக்கிய நலக்க வுணர்ந்தோ
னென்னுடை நட்பனா விலங்கு - 85
நன்னயத் தியாக ராசநா வலனே.
சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
Comments
Post a Comment