Pirapantattiraṭṭu XVII
பிரபந்த வகை நூல்கள்
Backதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 17 (2129 - 2236)
திருக்குடந்தைத்திரிபந்தாதி.
உ
கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
திருக்குடந்தைத்திரிபந்தாதி.
-----------------------
2129 - ஆதிவிநாயகர்துதி.
சோதிக்களிற்றையலோடுறுமாறுதுதிசெயற்கா
நீதிக்களிற்றைவரையருந்தாப்பிழைநீங்கவரால்
சாதிக்களிற்றையளாநீர்க்குடந்தையந்தாதிசொல்வா
னாதிக்களிற்றையடுத்தாமடுத்தவனைத்தும்வந்தே.. - 1
2130 - அவையடக்கம்.
குடந்தையந்தாதிதிரிபாவொருசதங்கூறிடுவ
னடந்தையந்தாதிகழுமாவலியென்றநாதனிற
மடந்தையந்தாதிவினைசெயவாழ்மங்களைமகிழ்ந
னிடந்தையந்தாதிவருந்தாடருமெனுமெண்ணங்கொண்டே. - 2
2131 - பூந்தாமரையில்வதிவானுமாயனும்போற்றிடப்பொன்
னாந்தாமரையில்வளக்குடமூக்கமரண்ணற்கடி
யேந்தாமரையில்வனத்துழலாந்தவமெய்தவஞர்
மாந்தாமரையில்வன்னாருமுடாமுள்ளிவாழ்குதுமே. . - 1
2132 - வாழும்பரவைபுகழ்குடமூக்கமர்வள்ளலுல
கேழும்பரவையமுதகும்பேசனிருந்தளியைச்
சூழும்பரவைவிடமயின்றாயென்றுசொல்லுமெதிர்
தாழும்பரவைமனைக்கேகவன்செயுந்தண்ணளியே. - 2
2133 - தண்ணஞ்சுமந்ததிருக்கரத்தானைச்சலதிசுற்று
மண்ணஞ்சுமந்தகனையுதைத்தானைவிண்மாய்க்குமென்று
கண்ணஞ்சுமந்தமுறுத்தவொண்ணாநங்கடேசற்றொழா
ரெண்ணஞ்சுமந்தவறிவினராயளற்றெய்துவரே. - 3
2134 - வரசங்கைமங்கையுதித்தார்கல்லேற்றவரதகலைப்
பிரசங்கமங்கையுறுநாவரேத்தும்பெருங்குடந்தை
யரசங்கமங்கையுடைக்கணையாய்நின்னடிக்கமலம்
பரசங்கமங்கையுறுமாறுண்டோவெம்படரொழிந்தே. - 4
2135 - படவரவத்தையணிவார்கும்பேசர்படியளந்த
விடவரவத்தையறுப்பார்நகர்விலையேந்திழையார்
நடவரவத்தையுகப்பாரெனினுநமக்கருளக்
கடவரவத்தையடையவிடார்பொற்கனங்குழையே. - 5
2136 - கனகச்சிலம்புவளைத்தார்கும்பேசர்கனமறையா
மனகச்சிலம்புபுனைவார்மறுகிலணிவிடைமீ
துனகச்சிலம்புமுரசோடணையத்தொழுதவர்பான்
முனகச்சிலம்புதொடுப்பான்கொலோமதன்முற்றிழையே. - 6
2137 - முற்றத்துவந்தனைசெய்தேனுனக்குமுழுமதியே
சொற்றத்துவந்தனையாய்குடமூக்கமர்சுந்தரர்வெண்
பெற்றத்துவந்தனையார்மார்புறயான்பெறுந்துணைதீர்
செற்றத்துவந்தனையாய்ப்பயில்வாயச்செழுவிசும்பே. - 7
2138 - செழுங்கமலத்துவெடிவாளைபாய்தரத்தேனெனக்கீழ்
விழுங்கமலத்துவழிசார்குடந்தைவிமலர்பொற்றா
ளழுங்கமலத்துநிலங்கரையக்கரைந்தன்பினுள்வாம்
புழுங்கமலத்துவிழுந்துயர்தீர்ந்தின்பம்புல்லுதற்கே. - 8
2139 - புல்லாவரையுடைநல்குங்குடந்தைப்புகழ்ப்பதியா
வல்லாவரையுடைசார்கயிலாயவரைவிடையேழ்
வெல்லாவரையுடையாரெனக்கூறும்விதமென்னெனு
மொல்லாவரையுடைகொங்கையிம்மங்கையுணர்ச்சிநன்றே. - 9
2140 - நன்றாதரித்தகுடந்தைப்பிரானைநயந்துவெள்ளிக்
குன்றாதரித்தமழுவாவெனத்துதிகூறக்கற்றோம்
பொன்றாதரித்தவினைகாளெமைவிட்டுப்போய்விரைவி
னன்றாதரித்தகையோராரவரையடைமின்களே. - 10
2141 - அடைந்தவராகமளவாப்பசப்பினமையச்சுற்றந்
தடைந்தவராகமளித்தருள்வார்கொறவாதவலி
மிடைந்தவராகமருப்பணிந்தார்விண்ணர்மேவிமல
முடைந்தவராகமரூஉங்குடமூக்கமருத்தமரே. - 11
2142 - உத்தமனத்தனவிர்மழுவோடுழையுற்றமரு
மத்தமனத்தனடிதேடநீண்டவனாய்மலர்தூய்
நித்தமனத்தனவாங்குடமூக்கமாநின்மலனிப்
பித்தமனத்தனமன்றானென்றென்னையும்பேணுவனே. - 12
2143 - பேணாததென்னைதமைப்பேணுவாரைப்பிறைமதிய
மாணாததென்னைவருத்துதற்கேயெழும்வானளவு
கோணாததென்னையடர்குடமூக்கிற்குலாங்குழகர்
நாணாததென்னையுறுபுகழார்கனனாட்டத்தரே. - 13
2144 - நாட்டஞ்சிவந்தனையென்செயலாநமனேகுடந்தைக்
கோட்டஞ்சிவந்தனைநேர்ந்தேயுறுமங்குக்கூடிமலப்
பூட்டஞ்சிவந்தனைசெய்தோங்கருணைபுரிந்ததிலை
வாட்டஞ்சிவந்தனைப்பொன்சொரிந்தாலுமதிக்கலமே. - 14
2145 - மதிக்கலமாலயனாதியர்வாழ்க்கையைமற்றுமொன்றைத்
துதிக்கலமாலயமாமறையானென்புந்தொண்டர்நெஞ்சு
நிதிக்கலமாலயமாகக்கொண்டான்பதநெஞ்சுள்வைத்தா
முதிக்கலமாலயனீத்தாங்குடந்தையுவந்தனமே. - 15
2146 - உவமையிலாடுபலவரிந்தாலுமொழிவதுண்டோ
வவமையிலாடுகரத்தனத்தாகும்பத்தற்புதனே
தவமையிலாடுதுறையாயலருந்தவாதுநெருங்
குவமையிலாடுதையுந்துயர்நீங்கக்குறித்தருளே. - 16
2147 - அரும்பாவலருமுலையென்பதென்பல்லுமத்தன்மைத்தே
விரும்பாவலருமகள்சுரம்போதல்விழைந்ததென்னோ
வரும்பாவலரும்புகழ்குடமூக்கமர்வள்ளல்வெற்பிற்
றிரும்பாவலருமுலகெங்குமாகுந்திறந்துணிந்தே. - 17
2148 - திறம்பாவமென்றுகுறிப்பார்மனைதொறுஞ்சென்றுழன்ற
மறம்பாவமென்றுமறிதருமேதிமரைபலர்வாய்
நிறம்பாவமென்றுதிரிகுடமூக்கமர்நித்தசிலை
பறம்பாவமென்றுகடலூருளாக்கொண்டபண்ணவனே. - 18
2149 - பண்ணப்பணைத்ததிருவுமுருவும்பலமகவுங்
கண்ணப்பணைத்தமொழியார்கலப்புங்கலப்புறுதோ
மண்ணப்பணைத்தவளவளையூரும்வளக்குடந்தை
விண்ணப்பணைத்தசடையானைமேவினமேவினமே. - 19
2150 - மேவியகல்லும்படியென்னைத்தென்றலும்வெண்மதியு
மோவியகல்லும்புனைதலெமையென்றொலிவளைமேற்
றூவியகல்லும்பொறுத்தார்கும்பேசர்துனைந்தருளா
ராவியகல்லும்படியுற்றதாலினியாரணங்கே. - 20
2151 - ஆரம்பரந்தமுலையாய்பங்கேருகத்தண்ணலும்பொற்
பேரம்பரந்தகையிற்புனைவானுமுட்பேணிவளங்
கூரம்பரந்தமிலாநல்லமேவிகுடந்தைவெற்பிற்
காரம்பரந்தவழுஞ்சென்றுளார்வரக்கண்டிலமே. - 21
2152 - கண்டத்திருப்புவயவிடமாவுட்கலங்குபுமா
றண்டத்திருப்புவதுமழுவாதண்டமிழ்க்குடந்தை
யண்டத்திருப்புவளைஞாலமேத்தவமர்பதியா
மண்டத்திருப்புவனச்சடையார்க்கெனுமாமயிலே. - 22
2153 - மாமையிலங்கையரிவிழிபால்வண்குடந்தையனை
நாமையிலங்கைநகத்தரிப்பாற்றருநம்பனைவெந்
தீமையிலங்கையறச்செற்றவாளிச்சிவனையெண்ணார்
தாமையிலங்கையையோவென்செய்வார்வெஞ்சமன்வலிக்கே. - 23
2154 - வல்லியம்பாயும்வனங்குடமூக்குள்வையாரினுயிர்
கொல்லியம்பாயும்வன்மீனாற்றின்வாய்க்குலவேதந்துழாய்
புல்லியம்பாயும்ப்ராரிறையோயென்புராணர்வெற்பி
வல்லியம்பாயும்பலைநேர்பவரிங்கடைதனன்றே. - 24
2155 - அடைக்கலமாலைவளக்குடமூக்கமர்வாய்தலைப்பன்
முடைக்கலமாலையணிவாய்மறையின்முழுமுதலே
யுடைக்கலமாலைவகைப்பொறியாற்றலுன்றாளுக்கன்பு
படைக்கலமாலையறோமெங்ஙன்வாழும்பரிசுளதே. - 25
2156 - உளத்துக்கலந்தகடுந்துயர்யாவுமொழிவதென்றோ
களத்துக்கலந்தகவில்லாநஞ்சாகிக்கனலில்விழுந்
தளத்துக்கலந்தகமலைமுன்னோரைத்தழைவித்தவா
வளத்துக்கலந்தகராக்குடமூக்கமர்மாமுதலே. - 26
2157 - மாமனுக்காட்டுமுகங்கொடுத்தாற்குமதுப்பெய்கொன்றைத்
தாமனுக்காட்டுவளப்பதத்தாற்குத்தவாதநல்லோர்
நாமனுக்காட்டுகுடந்தைப்பிராற்குநகுதழனீர்
காமனுக்காட்டுகண்ணாற்கடியோமுட்கலங்கலமே. - 27
2158 - கலங்கலந்தாரையறியாரினின்றுகைகூப்பினல்கு
நலங்கலந்தாரைவளக்குடமூக்கமர்நம்பரைக்கண்
டலங்க்லந்தாரையருண்மினென்றேயிவ்வணங்குவிழிக்
குதங்கலந்தாரைகவிழ்ப்பநின்றாளென்னகோலமிதே. - 28
2159 - கோலமருப்புமுறித்தார்குடந்தைக்குழகரிந்தக்
காலமருப்புமுலையார்க்கருளக்கடவரல
ரேலமருப்புகுதும்போதிழிக்குமிருங்குழன்மிக்
கோலமருப்புவனஞ்செவிதீத்திடுமொண்டொடியே. - 29
2160 - தொடிக்கமலங்குவித்தேன்குடமூக்கிற்சுடர்மறுகி
னடிக்கமலங்குபயில்பண்ணைத்தில்லைநயந்தவர்க்கு
முடிக்கமலங்குலவப்புனைந்தார்க்கிம்முதுபிழைக்காத்
துடிக்கமலங்குமனமமர்ப்பானொருதுட்டனென்னே. - 30
2161 - என்னையப்பாவலர்தூற்றுநர்தூற்றவெண்ணாதெறிந்து
நன்னையப்பாவலர்சூழுங்குடந்தைநகுமுதலே
யன்னையப்பாவலர்செஞ்சடைமேலென்றுரைத்தடைந்தேன்
பின்னையப்பாவலர்கூட்டத்துச்சேர்த்துப்பிறக்குகவே. - 31
2162 - பிறப்பாலனந்தமஞராமவற்றினும்பேணுதலி
லிறப்பாலனந்தமடுப்பதுநேருமென்செய்துமுற்றார்க்
குறப்பாலனந்தமகிழ்விற்றருமொண்குடந்தையுள்ளா
யறப்பாலனந்தமரசேயின்பெய்தவருள்புரியே. - 32
2163 - புரிந்தவரங்கம்வெதுப்புதலால்வரல்புண்ணியமோ
பரிந்தவரங்கம்வணக்கிடுமுன்னம்பரிந்துவந்து
விரிந்தவரங்கம்பலையருள்கும்பவிமலரென்று
தெரிந்தவரங்கம்புகலவுள்ளார்க்கிதுசீர்த்தியன்றே. - 33
2164 - அன்றலைவாரியெனக்கொடுபோகவழுங்குபுயான்
பொன்றலைவாரியெடுத்தொழித்தார்க்கன்றிப்புன்மைபுகல்
வன்றலைவாரிசனுக்கொழித்தான்கும்பவள்ளல்வெற்பி
லின்றலைவாரிவரியாருறுவர்கொலென்மணமே. - 34
2165 - என்னப்பனாகம்பவளமொப்பான்மின்னிருஞ்சடைமேன்
மின்னப்பனாகம்பகர்குடமூக்கமர்வித்தகன்பேர்
பன்னப்பனாகம்படுவிடந்தீர்ந்தோர்பனவன்மகன்
மன்னப்பனாகம்பலைக்கவுய்ந்தானொர்வணிகனுமே. - 35
2166 - வண்ணக்குவளைவிழியாளிவளென்றுமாழ்கிமண்ணோ
ருண்ணக்குவளைமுதுகாயினீரென்றுரையளவு
மெண்ணக்குவளையிலக்காக்குவீர்பயனென்குடந்தை
யண்ணக்குவளையணிபெருமானையடுத்துய்ம்மினே. - 36
2167 - உய்யாதபாதகனாமெனையாருணர்வார்குடந்தை
மெய்யாதபாதபுகழாய்துறைசைவெளிப்பட்டுநீ
யெய்யாதபாதரசம்போறலையற்றிருவென்றுநோய்
செய்யாதபாதமலர்தலைச்சூட்டல்செய்யாவிடினே. - 37
2168 - விடக்கந்தரத்தருமாபாகர்கும்பவிமலர்பைம்புற்
றடக்கந்தரத்தருவாவுரித்தார்பொற்றடவரைவா
யடக்கந்தரத்தருமம்புரிவார்நமதன்பர்வினை
மடக்கந்தரத்தருமஞ்சுமிவ்வாற்றுவரல்கொடிதே. - 38
2169 - வரந்தந்தவரைபெறநாவன்மேயவர்வாழ்த்துநரைப்
புரந்தந்தவரையுயர்த்துங்கும்பேசர்பொருப்பிலருள்
சுரந்தந்தவரைசெயவந்தயானைதொலைத்தென்னுயிர்
திரந்தந்தவரைவிடுத்தெவர்க்கார்க்குமித்திண்முரசே. - 39
2170 - முரசம்பலவனிதஞ்சிலைக்குங்குடமூக்கமர்வா
னரசம்பலவனிகமஞ்சொற்றானெளியானரியான்
பரசம்பலவனியுள்ளார்க்கரன்வெற்பிற்பங்கயத்து
விரசம்பலவனிதாய்கொடுங்கூற்றுநின்மெய்ம்முற்றுமே. - 40
2171 - மெய்யாதரித்தமழுவாசெந்தாமரைவெள்ளையன்னஞ்
செய்யாதரித்தகுடமூக்குளாயென்றுதேர்ந்துரைப்போ
மெய்யாதரித்தவினைகாள்விரைந்தினியெம்மைவிட்டுப்
பொய்யாதரித்தகவில்லார்கட்சென்றுபுகுந்துய்ம்மினே. - 41
2172 - புக்கவரிக்குமயனுக்குமுய்தல்பொருந்தநஞ்சுண்
டக்கவரிக்குவயற்குடமூக்கமர்சங்கரர்நீர்
மிக்கவரிக்குவியன்றேரர்சீரன்றிவெவ்வியகா
னக்கவரிக்குநிகர்வாரைப்பாடுதனன்றலவே. - 42
2173 - அலவானினக்குமொழிகுவதொன்றுண்டதுகுடந்தை
வவலானினக்குமிளிரவருமொருவள்ளல்வெற்பிற்
குலவானினக்குநலனாந்தவனெற்குறித்துறுங்கா
னலவானினக்குவெளிப்படலோவுநலமுணரே. - 43
2174 - நலப்பரியாயமறையான்குடந்தைநகர்புரப்பான்
கலப்பரியாயவளியாதொளிக்குங்கடவுள்பெயர்
சொலப்பரியாயமனந்தமுண்டேத்தித்தொழுதுருகி
யுலப்பரியாயமுதேயெனிலாடலொருதலையே. - 44
2175 - ஒருதலையாகவமோவிப்பொழிலிலுதையத்தொன்னார்
விருதலையாகவவேடர்செறிவர்வெய்யோன்மறையுங்
கருதலையாகவலாமலின்றேகுகழியயன்மா
றருதலையாகவமான்கும்பநாதன்றமிழ்வரைக்கே. - 45
2176 - வரைதலையாற்றுவருவானிரவென்றுமாழ்குமங்கை
கரைதலையாற்றுவிடாவின்பந்துய்த்தியெங்காவல்வெண்
டிரைதலையாற்றுவரைநேர்சடைக்கணிசெய்துமிலான்
புரைதலையாற்றுமகிழ்வான்கும்பேசன்பொருப்பகத்தே. - 46
2177 - அகத்திருப்பாரைமுகத்தாயெனினவரைப்பவத்து
நகத்திருப்பாரையரிக்கண்ணிபாகர்நடுங்குபுர
முகத்திருப்பாரைமுன்னூர்ந்தார்கும்பேசரையுற்றுத்தொழாச்
சகத்திருப்பாரையிரந்தும்பெறீர்மிடிதாக்கப்பட்டே. - 47
2178 - பட்டாதிசைவரகங்கணமாபணிபாயும்விடை
முட்டாதிசைவரவேயூதியாகுடமூக்கிடமா
தொட்டாதிசைவரவாய்ப்போற்றமேவுநந்தோன்றற்கெனுந்
தட்டாதிசையவரனாமேலின்பாமெனுந்தாழ்குழலே. - 48
2179 - குழக்கன்றியங்கமுலைபசுவாய்க்கொடுத்தாயெழுமா
முழக்கன்றியங்கநகைபுடைத்தாய்குடமூக்கமர்வாய்
சழக்கன்றியங்கம்மலிகடலானம்புதைப்பத்தென்ற
லுழக்கன்றியங்கமெலிதலுற்றாளென்னொருமகளே. - 49
2180 - ஒருத்தலரிக்குக்கரும்பொன்செம்பொன்னிற்குடுவொளியே
திருத்தலரிக்குக்கடுப்பாய்வரினும்வெந்தீயவிடம்
வருத்தலரிக்குக்கழித்தாய்சுதைக்கும்பவாணமயக்
கிருத்தலரிக்குக்கரனைச்செற்றாய்நினக்கில்லையொப்பே. - 50
2181 - ஒத்தவராகவருவாரிலாய்மலரொண்டொடிவாய்
முத்தவராகவலனழித்தாய்குடமூக்கமருஞ்
சித்தவராகவனமுலைமாதுசினந்தகரும்
புத்தவராகவந்தீர்வதெஞ்ஞான்றுபுகலுதியே. - 51
2182 - புகவெளிதாயமனுமஞ்சதரிருள்போந்ததிங்கல்
குகவெளிதாயபதமூனருந்திக்குறியிடம்வா
னகவெளிதாயதுணர்ந்தேகலாமன்பநப்பொருணூன்
மிகவெளிதாயமையென்றீகும்பேச்சுரர்வெற்பகத்தே. - 52
2183 - வெற்புக்குமரியவாங்கும்பநாதர்விலங்கலிலென்
பொற்புக்குமரியதோர்மகள்காதற்புணர்ப்பென்றிபோ
ரிற்புக்குமரியவாள்விதிர்போய்நின்னிசைப்பருந்தோள்
வற்புக்குமரியகற்புக்குமீதுவனப்பல்லவே. - 53
2184 - வனத்தையவாயமலப்பாண்டம்வீழ்முனமால்விடைவா
கனத்தையவாயவினிப்பாய்குடந்தைக்கண்ணாய்மறைவ
சனத்தையவாயவுனையேயுணருந்தவாதவன்ப
ரினத்தையவாயவியான்சேரச்சேர்ப்பித்தினிதருளே. - 54
2185 - அருளாகரனைமலமாயைகன்மமகழ்ந்தவர்க்கே
பொருளாகரனைவிடுத்தயலேயென்புலன்கள்சென்று
மருளாகரனையடரேவக்கும்பவரதனையே
தெருளாகரனைவரும்வாழ்கவிச்சேணிலத்தே. - 55
2186 - நிலங்கமலங்கனல்கால்வெளியென்றுநிலாவுயிரென்
றிலங்கமலங்கனல்குங்குடமூக்கினிறையவனை
யலங்கமலங்கனல்காரருளென்னினவ்வாணவநோய்
கலங்கமலங்கனல்கூர்தரவாளுங்கருணையென்னே. - 56
2187 - கருங்கலசத்தையுவந்தார்குடந்தைக்கண்ணார்சிலம்பி
வருங்கலசத்தையுடையாரின்வேலரடைந்ததொன்றா
மருங்கலசத்தையலையிழந்தாடுயர்மாற்றுதற்கோ
பெருங்கலசத்தைவதைப்பதற்கோவன்னைபேசுகவே. - 57
2188 - பேசவந்தானலமார்க்கமுள்ளாரினோர்பேதையுள்ளா
ரேசவந்தானலமோநிற்கெனவேகினான்விடம்பூ
வாசவந்தானலமார்குடமூக்கர்வயக்கிடினை
யோசவந்தானலவோவவன்றாழ்புருடோத்தமனே. - 58
2189 - மனவருத்தத்தையடைந்தோம்புவியைமடந்தையரைக்
கனவருத்தத்தைவிழைந்தேயொழிவதெக்காலமறை
யினவருத்தத்தைமுனிவருக்கோதுகும்பேசரின்பா
கனவருத்தத்தையொருபாகர்தாண்மலர்க்காணம்வைத்தே. - 59
2190 - ஆணவமாயமலம்பலநாளுமலைக்கப்பட்டேன்
பூணவமாயவிரங்கலெஞ்ஞான்றுபுவனமெல்லாங்
காணவமாயவனையேச்செய்தாய்கும்பக்கண்ணுதலே
யேணவமாயவிவனாவுறுமெனவெண்ணலற்றே. - 60
2191 - எண்ணம்பலவன்குடமூக்கிறைவனிசைப்பரிய
வண்ணம்பலவன்மனுப்பீடமங்களமாதுபங்கன்
விண்ணம்பலவன்முடியாளன்வெற்பினின்மேனியலாற்
கண்ணம்பலவன்மலர்க்குழலாயுயிர்காற்றுவதே. - 61
2192 - காற்றருந்தும்பையராப்பூண்கும்பேசர்கடல்கிடக்கு
மேற்றருந்தும்பைதிரப்புவியார்கொன்றையீயுமெனப்
பாற்றருந்தும்பைமதற்கீந்தனர்பயினாணமெனு
மாற்றருந்தும்பையறுத்தெழுமாலென்மனப்பசுவே. - 62
2193 - மனவிடையாமைமவனையுங்கும்பேசர்வனம்பயிலுஞ்
சினவிடையாமைதவிரெனவாண்டருள்செல்வர்வெற்பி
னனவிடையாமைவரக்கண்டிலஞ்சுற்றிநள்ளிருள்கூர்
கனவிடையாமையனைக்கண்டுங்கண்டிலங்கண்விழித்தே. - 63
2194 - கண்ணப்பரைவரையாதாண்டவர்கும்பக்கண்ணுதலார்
வண்ணப்பரைவரைமாதொருபாகர்வனச்சடைமேல்
விண்ணப்பரைவரைவெல்லாமெனினும்விழைந்தருளே
பண்ணப்பரைவரைநீழலில்வாழெங்கள்பண்ணவரே. - 64
2195 - பண்ணஞ்சுமாறுபடச்செயுமாற்றம்பதுமமுகங்
கண்ணஞ்சுமாறுவராகுங்குழலிதழ்கன்னியிய
லெண்ணஞ்சுமாறுமொருநான்கிரண்டொன்றுமெய்தெழுத்தார்
மண்ணஞ்சுமாறுபுனைந்தார்கும்பேசர்வரையிடமே. - 65
2196 - வரையாரணியமகிழ்வார்கும்பேசர்மதலையொடு
விரையாரணியமலர்கலர்காணரும்வித்தகரா
திரையாரணியவர்க்கேயினிப்பார்தந்திருவருட்டேன்
றரையாரணியமமருவுவரவர்தாங்கொள்வரே. - 66
2197 - கொள்ளப்படாதுசிறுகாமமுமதுகொள்ளின்மத
னள்ளப்படாதுவிடுமோகம்பேசரணிமலர்த்தார்
கள்ளப்படாதுகதிரெனுமிந்துகைக்கும்மெனுங்கண்
டள்ளப்படாதுமலர்க்குழல்சோரத்தரைவிழுமே. - 67
2198 - தரங்கப்ப்ரவையெழுவிடநோக்கிச்சதுமுகன்மால்
குரங்கப்பரவையருளாலஃதுண்குழகர்புவி
யரங்கப்பரவைமுடித்தார்குடந்தையமலரன்பர்க்
கிரங்கப்பரவைபுகுத்தியுயாத்தியெமைவைப்பரே. - 68
2199 - வையம்படைத்தவரன்றாழ்கும்பேசன்மடங்கருமோ
தையம்படைத்ததிருமால்வடவரைத்தாதுமலர்க்
கையம்படைத்தகைவாகைவில்லான்பொற்கழறொழுவே
நையம்படைத்தகராச்சினக்கூற்றுவனண்ணினுமே. - 69
2200 - நண்ணாதவரைநணுகாய்குடந்தைநகர்த்தளிவா
ழண்ணாதவரையகலாய்மெய்ப்பாதியணங்குடையாய்
விண்ணாதவரைவிழிபறித்தாயுனைவிட்டுமற்றொன்
றெண்ணாதவரைநிழற்பாற்பயிலினுமென்மனமே. - 70
2201 - மனமடங்காதுபொறிவழிபோம்பத்திமார்க்கமியங்
கினமடங்காதுநெறிகாட்டவுங்கண்டிலமென்செய்வோ
மனமடங்காதுகுடைமுரசார்ப்பவரம்பையெலாங்
கனமடங்காதுகிழிக்குங்குடந்தையிற்கண்ணுதலே. - 71
2202 - கண்ணுதலத்தனைவண்குடமூக்கிற்கடவுளைநீர்
மண்ணுதலத்தனையீவானையாழின்வளம்புகழ்வீர்
பண்ணுதலத்தனையும்பழுதென்னுஞ்சொற்பாகனைப்ப
லெண்ணுதலத்தனையேத்தார்பிறப்புமற்றெப்பிறப்பே. - 72
2203 - பிறவியலைக்கவருந்துகென்றேனிற்பெறுவதற்கா
மறவியலைக்கவலாதுணரேனினையன்றியெவ
னுறவியலைக்கவரிசெய்குடந்தையொருவவண்டு
நறவியலைக்கவருங்கொன்றையாயிந்தஞான்றருளே. - 73
2204 - அரும்பாதகன்மத்தன்மாறாவெங்கோபத்தனாகமநூல்
விரும்பாதகன்மத்தன்யான்கும்பமேயவவிற்கழல
திரும்பாதகன்மத்தன்மானத்தருவிடஞ்சேர்களத்தே
வரும்பாதகன்மத்தன்பித்தனென்பேர்க்கொப்பவந்தருளே. - 74
2205 - வந்தித்தலையுந்துதித்தலையும்முளம்வைத்தலையு
நிந்தித்தலையுந்துகில்லேனுறுப்பொடுநீண்மகத்து
முந்தித்தலையுந்துமித்தார்தென்காற்றின்முறுக்கவிழ்பூக்
கந்தித்தலையுந்துநீர்க்குடமூக்கரென்கற்பிப்பரே. - 75
2206 - கற்பனையத்தனையாதிகும்பேசனைக்காய்மலமா
மற்பனையத்தனையீயும்பிரானையடியவர்க்கே
பற்பனையத்தனைமாமயிலானைப்பண்பார்முகத்தோர்
பொற்பனையத்தனையீன்றானையன்றிப்புகழ்கிலமே. - 76
2207 - புகழுமலத்தையெடுத்தொன்னலார்நிறம்போழ்தருமா
லகழுமலத்தையுடையவனாகவடிதொழுநா
தகழுமலத்தையனேத்துங்குடந்தைத்தலத்தவின்றே
திகழுமலத்தையுடையானெனவெற்சிறப்பிப்பையே. - 77
2208 - சிறந்தவருக்கன்மதியழனாட்டச்சிவன்றெளிய
வறந்தவருக்கன்றமையச்சொற்றானறமாயதனை
மறந்தவருக்கன்பிலார்சேர்குடந்தைவரதன்முடி
யுறாந்தவருக்கன்பரிந்தெனையாண்டனனுண்மைசொற்றே. - 78
2209 - உண்மையறுக்கமிகச்செயுமன்னையரோர்கிலராய்
வண்மையறுக்கமுயல்வார்கும்பேசமகிழ்ந்தெனைவந்
தண்மையறுக்கவுகரநள்ளுற்றாதநங்கனறுந்
திண்மையறுக்கவலாதின்பெனாமைநின்சீரருட்கே. - 79
2210 - அருகாதவன்பகத்தைத்தெறுமென்றறிந்தாருக்கென்றுந்
திருகாதவன்பகத்தைத்தடிந்தானென்சிறுசொற்குந்தேந்
தருகாதவன்பகத்தைக்கும்வெஞ்சூலன்றண்கும்பத்தைச்சார்ந்
துருகாதவன்பகத்தைப்பெற்றுளாரிடருற்றவரே. - 80
2211 - உற்றவரையரைவண்கும்பநாதரையொண்புலித்தோல்
சுற்றவரையரையெண்ணாரினங்கைத்துணரொடலை
வற்றவரையரைசூழிப்புனத்திலலைத்தனன்றோ
கற்றவரையரையிந்துவொப்பாநுதற்காரிகையே. - 81
2212 - காரியங்காதுசுடலஞ்சியத்தகுகானின்று
வேரியங்காதுவலைசெயமேற்றவழ்விண்ணைமக
தூரியங்காதுகுடந்தைப்பிரானைத்தொழாரினிள
நாரியங்காதுமென்றோரேதிலன்பினடந்தனளே. - 82
2213 - நடலையகற்றிநமைப்புகழ்கல்விநயப்பலென்றா
சடலையகற்றியெனையாண்டுகும்பத்தருளினமர்
விடலையகற்றியறான்புனிற்றாவெனமேவவுந்த
முடலையகற்றியுழல்வார்பரமத்தூமர்களே. (அங) - 83
2214 - ஊமரும்பாவலராவார்வறியருமுத்தரநற்
றேமரும்பாவலராவாவினிச்செப்பவேண்டுவதேன்
னாமரும்பாவலராவாசவன்றொழுநற்குடந்தைக்
காமரும்பாவலராவாரடிநினைக்கைதொழினே. (அச) - 84
2215 - தொழுதனையேற்றாமருங்கும்பநாதனைச்சொன்மயல்பூண்
டழுதனையேற்றமருகத்தவனருள்வான்கொலெங்குங்
கெழுதனையேற்றமருவினரேகெழுமக்கொடுப்பான்
பழுதனையேற்றாமருவந்தவேள்செயல்பண்ணலென்னே. (அரு) - 85
2216 - என்னாயகனைமகராலயநஞ்சிறுத்தகண்ட
பொன்னாயகனையமுன்னங்குழைத்தபுராணமலர்
மின்னாயகனைவிடைசெய்தகும்பவிமலவென்று
பன்னாயகனையறுத்தின்பவீடுபடரநெஞ்சே. - 86
2217 - படப்பாயலையம்பரம்விரித்தோன்றெழும்பண்ணவர்தோம்
விடப்பாயலையம்பரவேற்றுக்கும்பவிமலர்வெற்பி
னடப்பாயலையம்பரம்புவிபோர்த்தனநண்ணருங்கான்
கடப்பாயலையம்பரக்கண்ணோடும்வைகிக்காலையிலே. - 87
2218 - காலையம்போருகமேகமுகங்குழல்கண்கடுவா
ழாலையம்போருகமேவாரைநோக்கபயன்பைதிரஞ்
சோலையம்போருகமேயதென்பாய்துயர்நீர்நொடியும்
வேலையம்போருகமேகும்பநாதனைமேவிலர்க்கே. - 88
2219 - மேவாதவரைவிழையார்கும்பேசவிமலர்வலி
தாவாதவரைவளைத்தாருருக்கண்டுதண்மதிகண்
டோவாதவரைவிடுத்தாரெவரெனுமோர்மதன
னாவாதாவரைவளைப்பதென்னோவெனுமாயிழையே. - 89
2220 - ஆயத்தவரைமறந்தாளெனையுமறமறந்தாள்
சேயத்தவரையறையில்வெப்புந்தெளியாள்புரங்கண்
மாயத்தவரைவளைத்தகும்பேசர்வரையிலய
னேயத்தவரைமதித்தேகினாளென்னிரைவளையே. - 90
2221 - வளையவளையவரம்பார்செய்வேழம்வளைத்தனன்வே
ளிளையவளையவமேகொல்லுவானெவன்செய்வளின்பம்
விளையவளையவருளுங்கும்பேசவிரும்புமன்ப
ருளையவளையவயவிடையாயெங்களுத்தமனே. - 91
2222 - மன்னவராகமதாணிவலாரிமலரயன்மான்
முன்னவராகமதித்துழலாங்குடமூக்கின்மணி
யன்னவராகமநூல்கொண்டறிவதறிந்தடங்கி
நன்னவராகமலரடிக்காட்செய்நசையினமே. - 92
2223 - இன்னம்பரம்பரவாயவர்நேயவிருங்குடந்தை
நன்னம்பரம்பரவாயவனியைநடாத்தினவ
ருன்னம்பரம்பரவாயமன்சேர்முனென்றோதுறின்வை
மன்னம்பரம்பரவாயகண்ணோடும்வந்தாளுவரே. - 93
2224 - ஆளாயமைதலையெண்ணாவிருவரடிமுடிதேர்
கோளாயமைதலைவென்றுழல்வேங்கும்பகோணமமர்
காளாயமைதலைசாயப்பொலிகவின்றோட்கருங்கண்
வாளாயமைதலையாகாதிடங்கொண்டவானவனே. - 94
2225 - வானவரம்பரையாண்டாருலாக்கொண்டுமாண்டபத்தி
யானவரம்பரைதாங்குடமூக்கரடிமையுறின்
மோனவரம்பரை யோடும்வந்தீபவர்மூன்றுதலைத்
தான்வரம்பரையேத்தாரிருத்தலிற்சாதனன்றே. - 95
2226 - சாத்திரமோதியளவுணர்ந்தேமிருதன்மைபடப்
பாத்திரமோதியமென்பதனாலெவன்பன்னிரண்டு
சூத்திரமோதியமைந்துகும்பேசற்றொழுதுருகி
யேத்திரமோதியமண்ணீரிடரிரியீருண்மையே. - 96
2227 - உண்மையவாவியநாயேனுறும்வகையுற்றமலத்
திண்மையவாவியவென்றாளுநாளென்றுதேர்வரிய
நுண்மையவாவியசெவ்வியன்மேனிநுவலொருபாற்
பெண்மையவாவியதென்குடமூக்கிற்பெருந்தகையே. - 97
2228 - தகைத்தலையாற்றுதிநேர்மலநாளுந்தகச்செயுந்தோ
முகைத்தலையாற்றுதியார்தொழவாழ்குடச்மூக்கிறைவா
நகைத்தலையாற்றுதிதாராக்கினாயென்னலிபிறவி
யகைத்தலையாற்றுதிநின்வசத்தாக்கென்னறிவினையே. - 98
2229 - வினையகலாமதியாப்பரமார்க்கவிழைவகற்று
மனையகலாமதியாதாங்குடந்தையனையிடத்தங்
கனையகலாமதியார்முடியாள*மூக்கண்ணவென்ற்றேத்
தினையகலாமதியார்க்குஞ்சமார்கஞ்செறிப்பதற்கே. - 99
2230 - பத்திக்கணங்கணமேனும்விடாதுபடர்குடமூக்
குத்திக்கணங்கணந்தோமறநோக்கியுங்கும்பிட்டுய்வாங்
கத்திக்கணங்கணவென்னவொர்பானல்குகாரணனெம்
புத்திக்கணங்கணவப்பதித்தான்றன்பொற்பூவடியே. - 100
திருக்குடந்தைத்திரிபந்தாதி முற்றிற்று.
----
இந்நூலாசிரியர் மாணாக்கராகிய
சி. தியாகராசசெட்டியாரவர்களியற்றியது.
கட்டளைக்கலித்துறை.
2231 - தண்ணிய வெண்மதி சூடுகும் பேசன் றமிழ்க்குடந்தை
பண்ணிய புண்ணியம் போலமர் வானடிப் பத்திமையே
நண்ணிய தீஞ்சுவை யந்தாதி யொன்று நவின்றணிந்தா
னண்ணிய வான்புகழ் மீனாட்சி சுந்தர வாரியனே. - 101
இந்நூலாசிரியர் மாணாக்கரும் திருவனந்தபுரம், மகாராஜா காலேஜில்
தமிழ்ப்பண்டிதராக இருந்தவருமாகிய கொட்டையூர்,
சி. சாமிநாததேசிகரவர்களியற்றிவை.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
2232 - சீர்கொண்ட சிதம்பரமால் செய்தவத்தின்
மலைவிளக்கிற் சிறக்கத் தோன்றிப்
பார்கொண்ட புகழ்முழுது மொருபோர்வை
யெனப்போர்த்த பண்பின் மிக்க
ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்
குடந்தைநக ரிறைவர்க் கீந்தான்
பேர்கொண்ட கவிஞரெலா மதித்தேத்தந்
தாதிப்ர பந்த மாதோ. - 102
2233 - அப்பலந்தங் கருத்துரையோ டம்புவியோர்
மகிழ்ந்திடவச் சமைத்திட் டானால்
ஒப்புயர்வி லாப்புலமை யப்புலவ
ரேறுணர்த்த வுணர்ந்தவ் வாறே.
திப்பியநன் னடைதெளிந்தோன் றிரிசிரா
மலையுடையோன் செப்ப மிக்கோன்
இப்புவியிற் புகழ்ப்பெரிய பெரியண்ணப்
புலவனெனு மியைபு ளோனே. - 103
------------
*இவை பழையபதிப்பைச் சார்ந்தவை;
பதிப்பித்தகாலம் சென்ற விஷுவருஷம் ஆடிமாதம்.
-------------------
இந்நூலாசிரியர் மாணாக்கரும், கும்பகோணதிலிருந்தவருமாகிய
திரிசிரபுரம் தி.க. பெரியண்ணபிள்ளையியற்றியர்து.
கட்டளைக்கலித்துறை.
2234 - பூவிற் சிறந்த வளக்குட மூக்கமர் புங்கவனற்
றேவிற் சிறந்த வமுதகும் பேசன் றிருவடிக்கீழ்ப்
பாவிற் சிறந்த வந்தாதிச் சொன்மாலை பரிந்தணிந்தான்
நாவிற் சிறந்தவன் மீனாட்சி சுந்தர நங்குருவே. - 104
இந்நூலாசிரியர் மாணாக்கராகிய காரைக்கால்
அ. சவேரிநாதபிள்ளையியற்றியவை.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
2235 - கோமேவு பொன்னகரை யின்னகராக்
கிடுவளஞ்சால் குடந்தை யீசற்
கேமேவு மந்தாதி நந்தாத
வணியெனநன் கிசைத்திட் டானால்
காமேவு கலைச்சலதி நிலையுணர்ந்தான்
புகழ்க்கலைமேற் கலையாக் கொண்டான்
றேமேவு சிரகிரிவாழ் மீனாட்சி
சுந்தரதே சிகனா மன்னோ. - 104
2236 - அத்தகைய வாரியன்பால் வித்தைபயின்
றிடுதீர னளவில் சீரன்
உத்தமவண் புகழுடையான் றிரிசிரா
மலையுடையா னுவக்கு ஞான
தத்துவஞ்சால் பெரியண்ணச் சற்குணவா
னப்பவந்தத் தமிழ்க்கு மோலி
பத்தியுறச் சூட்டலெனக் கருத்தொடுநின்
றொளில்ரவச்சிற் பதிப்பித் தானால். - 105
சிறப்புப்பாயிரங்கள் முற்றுப்பெற்றன.2231 - தண்ணிய வெண்மதி சூடுகும் பேசன் றமிழ்க்குடந்தை
பண்ணிய புண்ணியம் போலமர் வானடிப் பத்திமையே
நண்ணிய தீஞ்சுவை யந்தாதி யொன்று நவின்றணிந்தா
னண்ணிய வான்புகழ் மீனாட்சி சுந்தர வாரியனே. - 101
இந்நூலாசிரியர் மாணாக்கரும் திருவனந்தபுரம், மகாராஜா காலேஜில்
தமிழ்ப்பண்டிதராக இருந்தவருமாகிய கொட்டையூர்,
சி. சாமிநாததேசிகரவர்களியற்றிவை.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
2232 - சீர்கொண்ட சிதம்பரமால் செய்தவத்தின்
மலைவிளக்கிற் சிறக்கத் தோன்றிப்
பார்கொண்ட புகழ்முழுது மொருபோர்வை
யெனப்போர்த்த பண்பின் மிக்க
ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்
குடந்தைநக ரிறைவர்க் கீந்தான்
பேர்கொண்ட கவிஞரெலா மதித்தேத்தந்
தாதிப்ர பந்த மாதோ. - 102
2233 - அப்பலந்தங் கருத்துரையோ டம்புவியோர்
மகிழ்ந்திடவச் சமைத்திட் டானால்
ஒப்புயர்வி லாப்புலமை யப்புலவ
ரேறுணர்த்த வுணர்ந்தவ் வாறே.
திப்பியநன் னடைதெளிந்தோன் றிரிசிரா
மலையுடையோன் செப்ப மிக்கோன்
இப்புவியிற் புகழ்ப்பெரிய பெரியண்ணப்
புலவனெனு மியைபு ளோனே. - 103
*இவை பழையபதிப்பைச் சார்ந்தவை;
பதிப்பித்தகாலம் சென்ற விஷுவருஷம் ஆடிமாதம்.
-------------------
இந்நூலாசிரியர் மாணாக்கரும், கும்பகோணதிலிருந்தவருமாகிய
திரிசிரபுரம் தி.க. பெரியண்ணபிள்ளையியற்றியர்து.
கட்டளைக்கலித்துறை.
2234 - பூவிற் சிறந்த வளக்குட மூக்கமர் புங்கவனற்
றேவிற் சிறந்த வமுதகும் பேசன் றிருவடிக்கீழ்ப்
பாவிற் சிறந்த வந்தாதிச் சொன்மாலை பரிந்தணிந்தான்
நாவிற் சிறந்தவன் மீனாட்சி சுந்தர நங்குருவே. - 104
இந்நூலாசிரியர் மாணாக்கராகிய காரைக்கால்
அ. சவேரிநாதபிள்ளையியற்றியவை.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
2235 - கோமேவு பொன்னகரை யின்னகராக்
கிடுவளஞ்சால் குடந்தை யீசற்
கேமேவு மந்தாதி நந்தாத
வணியெனநன் கிசைத்திட் டானால்
காமேவு கலைச்சலதி நிலையுணர்ந்தான்
புகழ்க்கலைமேற் கலையாக் கொண்டான்
றேமேவு சிரகிரிவாழ் மீனாட்சி
சுந்தரதே சிகனா மன்னோ. - 104
2236 - அத்தகைய வாரியன்பால் வித்தைபயின்
றிடுதீர னளவில் சீரன்
உத்தமவண் புகழுடையான் றிரிசிரா
மலையுடையா னுவக்கு ஞான
தத்துவஞ்சால் பெரியண்ணச் சற்குணவா
னப்பவந்தத் தமிழ்க்கு மோலி
பத்தியுறச் சூட்டலெனக் கருத்தொடுநின்
றொளில்ரவச்சிற் பதிப்பித் தானால். - 105
-----------------
Comments
Post a Comment