Pirapantattiraṭṭu XVI


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XVI
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 16 (1925 - 2026)
துறைசையமகவந்தாதி.




கணபதிதுணை
திருச்சிற்றம்பலம்.


பாயிரம்.




1925 - கணையாவனமணிமாலைச்செய்தோனவன்கண்மலர்சூ
டிணையாவனசமலர்ப்பதத்தோனருளெய்தல்குறித்
தணையாவனநடைசெய்பூந்துறைசையந்தாதிசொல்லத்
துணையாவனநம்மழகியவேழந்துணைவந்ததே. - 1



1926. - குருவணக்கம்.
பாவன்புதீரென்றலைமீதும்வைகியின்பஞ்செய்தது
பேவன்புலவுக்கடன்மாற்றருட்சுப்பிரமணிய
தேவன்புடையுறாவாழ்வான்றுறைசைச்சிவன்முனமா
லாவன்புகழ்க்குருவம்பலவாணனடிமலரே. - 2

நூல்.




1927 - திருவம்பரவமலமாயைகன்மஞ்சிதைதரவ
திருவம்பரவமகலத்திகழ்சிவஞானத்துமு
திருவம்பரவமருமாவடுதுறைச்செல்வபுற்றோல்
திருவம்பரவமாவென்றுசிந்தைசெயின்மனமே. - 1



1928. - மனமாதவநந்தவேமுயலாநிற்குமாதர்தங்க
மனமாதவநந்தவேதமுற்றேனருள்வாமத்துச்ச
மனமாதவநந்தவேதாதுறைசைவள்ளால்வளைவா
மனமாதவநந்தவேற்றியென்றாயெங்ஙன்வாய்ப்பதுவே. - 2



1929. - பதுமத்தவளைநிகர்வாட்குமாரன்பகழிதுளைப்
பதுமத்தவளைகழல்வதுந்தீமதிபாரித்திறைப்
பதுமத்தவளைமுரல்வயற்கோமுத்திபற்றலரொப்
பதுமத்தவளைகவர்விடையாயறப்பார்த்தருளே. - 3



1930. - பாராதரிக்குமதிகாயுமாரன்பகழியொன்றும்
பாராதரிக்குமதிவேதனையுறும்பற்றநினைப்
பாராதரிக்குமதிலரசூருவப்பாரெனுந்தேர்ப்
பாராதரிக்குமதிமாலஃதோவப்பரிந்தருளே. - 4



1931. - பரம்பரமானந்தவாவரசூரபலியிடுகற்
பரம்பரமானந்தவாங்கிழப்பான்சென்றபண்பவெங்கும்
பரம்பரமானந்தவாங்குழையாயென்படர்மனம்பம்
பரம்பரமானந்தவாழ்க்கையெவ்வாறுறும்பாவமற்றே. - 5



1932. - பாவனஞ்செய்யவொருநீநினையிற்பலிக்குமதப்
பாவனஞ்செய்யவுழல்பிறராலென்படுமஃதப்
பாவனஞ்செய்யமருமாவடுதுறைப்பண்ணவவொப்
பாவனஞ்செய்யவுணர்ந்துநின்கண்டம்பதிந்தமர்ந்தே. - 6



1933. - பதம்படையாவந்தியேனடியார்க்குப்பல்பாவெனச்சொற்
பதம்படையாவந்திவன்றானெனவுழல்பாவிக்கும்வாய்ப்
பதம்படையாவந்திரைக்கடலாய்செய்யபங்கிக்குறும்
பதம்படையாவந்திவண்ணாதுறைசைப்பதியினென்னே. - 7



1934. - பதிகந்தரங்கவமுதெனமூவரும்பாடினர்கைப்
பதிகந்தரங்கநடிக்குநின்றாளெமர்பற்றற்கன்றோ
பதிகந்தரங்கமரசூர்முளைபணியாய்விடமுட்
பதிகந்தரங்கரியாயுணரேமெப்படியுய்வதே. - 8



1935. - படியாதவனிகமங்கூறுமாற்றுமெய்ப்பத்தியெய்தப்
படியாதவனிகமும்பரமுந்தவிர்பாவியிந்தப்
படியாதவனிகராசாற்கன்பில்லவன்பண்புறலெப்
படியாதவனிகவாதேத்துகோமுத்திப்பண்ணவனே. - 9



1936. - வனத்தாமரையரக்காம்பற்றுறைசைவனப்பர்விரை
வனத்தாமரையரக்காம்பற்படாத்தர்வைவாய்ந்தசடை
வனத்தாமரையரக்காம்பற்றலையணிவார்விடிற்க
வனத்தாமரையரக்காம்பற்றினோர்திமடநெஞ்சமே. - 10



1937. - மடக்கொடியாரையினிதோம்பல்வேட்டுவளந்தபுசு
மடக்கொடியாரைமரீஇத்திரிவாஞ்சைநின்மாட்டுவர
மடக்கொடியாரைவனைசடையாயன்னமாமலைகூர்
மடக்கொடியாரைமதிலாவடுதுறைமாமணியே. - 11



1938. - மாவலங்காரத்தனத்துமையாண்மணவாளனின்றே
மாவலங்காரத்தண்கோமுத்திவாழுமம்மானிடமம்
மாவலங்காரத்தநேர்நிறத்தாரைவைத்தான்களம்விம்
மாவலங்காரத்தழைவானலாற்கதிமற்றிலையே. - 12



1939. - மத்தாகமந்தரமாநீர்நட்டாருமருவருமே
மத்தாகமந்தரமாணாவெனக்கருள்வாயருள்வா
மத்தாகமந்தரமாலாய்தென்கோமுத்திவாழ்பவகா
மத்தாகமந்தரமாக்கிடுவானுனைவந்திப்பனே. - 13



1940. - வந்தனங்காமருவாளியெய்வாய்நின்வலிவளமு
வந்தனங்காமருவாவடுதண்டுறைமன்முன்செலின்
வந்தனங்காமருவார்சடையாயென்பைமற்றதுநி
வந்தனங்காமருவாவென்றுநாணமருவிலையே. - 14



1941. - மருவளகத்துமைமாதோடுயிரின்பவாழ்வுறக்கா
மருவளகத்துமையற்றுறையாரின்மன்னுங்கொன்றைத்தா
மருவளகத்துமையில்லார்புயத்தின்வண்காவிசுவை
மருவளகத்துமையாமவர்கோமுத்திமாநகரே. - 15



1942 - நகரமகரந்தகர்த்தாளிறைவர்க்குநற்றுறைசை
நகரமகரந்தகட்குழலோடுநயந்தமர்சி
நகரமகரந்தகப்பயில்வாரிதிநஞ்செனத்தி
நகரமகரந்தகர்மேவுமுன்னங்குநண்ணனன்றே. - 16



1943. - நந்தாவரத்தநகர்ஞானக்கோமுத்திநம்பவருள்
நந்தாவரத்தநமானாக்கியதெய்வநாதகுழை
நந்தாவரத்தநகுதோட்பஞ்சாக்கரநாமகுரு
நந்தாவரத்தநமென்றுகொள்வாஞ்சையிந்நாய்க்கருளே. - 17



1944. - அரவாவரையிலருண்ஞானக்கோமுத்தியையமறை
அரவாவரையிலகுங்கயிலாயத்தநாமயபொய்
அரவாவரையிலடியேனையேற்றலடல்விடைமேல்
அரவாவரையிலழல்கால்கட்கூற்றமணுகுமுன்னே. - 18



1945. - அண்ணாமலையத்தனைஞானக்கோமுத்தியண்ணலையாம்
அண்ணாமலையத்தனைவினையாலயர்ந்தாந்தமிழை
அண்ணாமலையத்தனையாண்டவாபல்லமரருக்கும்
அண்ணாமலையத்தனையொப்பவாவென்றறைந்திலமே. - 19



1946. - அறையாகமநம்படைத்தானயனெற்கதுதுயர்சார்
அறையாகமநம்பலவாநின்சீர்த்தியவாவச்செவி
அறையாகமநம்பகோமுத்திவாணவருளொடுநீ
அறையாகமநம்பமாட்டேனெவ்வாறுன்னடியுறலே. - 20



1947. - அடியாரையாவடுவேற்கண்ணிபாகவரவுமுடி
அடியாரையாவடுதண்டுறையாய்மலமாதிகுற்றம்
அடியாரையாவடுவென்றாய்தலின்றியமரயன்மால்
அடியாரையாவடுப்பேன்பவமாய்த்தின்பமர்வதற்கே. - 21



1948. - தக்கசிதம்பரவாந்தொழிறீரச்சுதாவருணந்
தக்கசிதம்பரவாதங்கொள்ளேலெனத்தண்டித்தவா
தக்கசிதம்பரவாவொளிர்நீற்றதண்கோமுத்திமே
தக்கசிதம்பரவாகதியுன்னைத்தவிர்ந்திலையே. - 22



1949. - தவந்தானஞ்சற்றுமிலானாளென்றேநந்தமக்கினிதோ
தவந்தானஞ்சற்றுநிலானென்றுநீயெனைத்தள்ளுதல்கை
தவந்தானஞ்சற்றுறுங்கண்டத்தினாவடுதண்டுறைநா
தவந்தானஞ்சற்றுநின்றன்மையென்றாளத்தடையெவனே. - 23



1950. - ஏதங்கலங்கப்பணிவார்முன்னிற்பவரெண்ணில்வலி
ஏதங்கலங்கப்பணிவார்துறைசையிறைவர்பணி
ஏதங்கலங்கப்பணிவார்திருவரசீயுநிழல்
ஏதங்கலங்கப்பணிவார்சடையிலென்பார்முத்தரே. - 24



1951. - முத்தனையானைக்கொடியிடையொப்பின்முலையுவந்த
முத்தனையானைக்கொடியமைத்தானைமுழங்குமவி
முத்தனையானைக்கொடியானைமூர்த்திமுதனவிலு
முத்தனையானைக்கொடியேன்றுறைசையின்முன்னுவனே. - 25



1952. - முன்னவராகந்தவாதாவடுதுறைமுற்றிநல
முன்னவராகந்தமாதியபொய்முகக்குங்கரண
முன்னவராகந்தகுபாற்பசப்பினர்மொய்கழறேர்
முன்னவராகந்தனக்கரியாரெங்ஙன்முந்துவரே. - 26



1953. - வரசங்கமங்கையுதித்தார்கலேற்றவவண்டுறைசை
வரசங்கமங்கையுடையவெள்ளேற்றுவருபவதா
வரசங்கமங்கையுறாவாறளவியவாவனலி
வரசங்கமங்கையுயுமாறிழந்தும்வளமிலையே. - 27



1954. - வளவாகுரவையுடைமதவேளெய்மலர்க்கணையெவ்
வளவாகுரவையுவக்குமளகமயிலெனுமி
வளவாகுரவையுமொவ்வாதின்பத்துமருவுபுதி
வளவாகுரவையுள்ளார்ஞானக்கோமுத்திவானவனே. - 28



1955. - நவகோடிசித்தமிறோலவவாதநகர்வருப
நவகோடிசித்தமையுநூலெனமுனநல்கியவா
நவகோடிசித்தமுகவனக்கேழனண்ணாக்கழலோய்
நவகோடிசித்தபுரவாசவென்னுநறுநுதலே. - 29



1956. - தலையாலங்காடவர்சாராப்பிறவுந்தலம்பதம்வி
தலையாலங்காடவர்கோன்றலைப்பாச்செய்வதவன்முளைமு
தலையாலங்காடவர்காணத்தந்தார்நட்பர்தாரணிம
தலையாலங்காடவர்தொண்டர்நங்கோமுத்திச்சங்கரற்கே. - 30



1957. - சங்கந்தரங்கங்குழையாவமாயன்சரம்பதநஞ்
சங்கந்தரங்கங்குழைவார்மன்றாற்றுதல்வாகனம்பஞ்
சங்கந்தரங்கங்குழையாரரவஞ்சடைக்கலமெச்
சங்கந்தரங்கங்குழைநேர்வர்சூழ்துறைசைப்பரற்கே. - 31



1958. - பரவாதவத்தன்மையுற்றேயவத்தைப்படுங்கொடியேன்
பரவாதவத்தன்மைபற்றிநிற்பேன்மறைபன்னுசிதம்
பரவாதவத்தன்மைதீரமுராரிபணிதுறைசைப்
பரவாதவத்தன்மைதந்திருபந்தமும்பாற்றுகவே. - 32



1959. - பாலத்தனையத்தனையோவழற்கட்பரமனைக்கா
பாலத்தனையத்தனையரசூரனைப்பன்மறைக்க
பாலத்தனையத்தனைமநமாய்த்தளிப்பானையுமை
பாலத்தனையத்தனைநேர்பவனையுட்பற்றினமே. - 33



1960. - பற்றம்பலமங்கைமார்நல்கக்கொள்வர்பரவிமறை
பற்றம்பலமங்கைகூப்பார்துறைசைப்பதிநினையம்
பற்றம்பலமங்கையாரிசையாயறப்பற்றலரும்
பற்றம்பலமங்கையாகூற்றரிக்கவர்பாழ்ம்பலமே. - 34



1961. - பலமாவருக்கவங்கம்பெறுசோலைப்பதித்துறைசைப்
பலமாவருக்கவங்கம்புனைவாரைப்பற்றான்கணையுற்
பலமாவருக்கவங்கம்பணிவான்மகன்பண்ணுவன்றேர்ப்
பலமாவருக்கவங்கம்பெறீனீந்தப்படுமிருளே. - 35



1962. - இருப்புவனத்தையடையானையுண்குளகெய்துங்கொலெய்த்த்
இருப்புவனத்தையுணிற்றாகம்போங்கொலிருந்துறைசை
இருப்புவனத்தையணிவிடையாளர்க்கென்றெய்திப்பணி
இருப்புவனத்தையெவராற்கடந்தின்பமெய்துவிரே. - 36



1963. - விரகம்பரமையவாங்கணல்லார்கண்விடுத்தொழிவான்
விரகம்பரமையவாற்றிப்பின்னாளுமெய்க்கோமுத்திய
விரகம்பரமையமாய்ப்பான்மகிழ்ந்தமர்விண்ணவத
விரகம்பரமையவென்னும்பொல்லாதவிரதத்தையே. - 37



1964. - விரியம்புவனம்பறிப்பானெரியவிழித்தவன்கா
விரியம்புவனம்பயில்கோமுத்தீசனைவிட்டயனீ
விரியம்புவனம்பரிப்பானைவேண்டலம்வேதமென்ற
விரியம்புவனம்பதினாலுங்கேட்கவிரித்திடுமே. - 38



1965. - விரையாக்கலியையொழித்திடமானிடர்மேற்கவிசொல்
விரையாக்கலியையுள்ளீர்ஞானக்கோமுத்திவிண்ணவனா
விரையாக்கலியைச்செயுங்கயிலாயத்தன்மேற்புகல்வீர்
விரையாக்கலியைதராவெருக்குஞ்சடைமேவியதே. - 39



1966. - வியவருகந்தபயன்பெறவும்மிளிர்கோமுத்திமே
வியவருகந்தபவோங்கரசாருன்னின்மேன்மையுத
வியவருகந்தபரனத்தர்மாமொழிவிட்டமர்வெவ்
வியவருகந்தபவுத்தர்சொல்வேட்பதுவெந்நரகே. - 40



1967. - நரம்பாயவம்பலம்போன்மொழிமாதுமெய்ந்நாடிமத
நரம்பாயவம்பலம்யாஞ்செய்வதாயிற்றுநாரதகிந்
நரம்பாயவம்பலம்வாழ்வாய்முகிலுநடுங்குறவா
நரம்பாயவம்பலம்வீழ்பொழிற்கோமுத்திநாயகனே. - 41



1968. - கனகத்தியாகந்தபப்போழ்ந்தபோதுங்கடுந்தழல
கனகத்தியாகந்தனைமானமூட்டினுங்கண்ணுதலே
கனகத்தியாகந்தர்பாற்சேறியென்றவன்காத்துறைசைக்
கனகத்தியாகந்தந்தானையல்லாதுகருதிலமே. - 42



1969. - கரும்பாவியங்கங்கங்கங்கவராமுன்கரிசுகட
கரும்பாவியங்கங்கணிசாறுறைசைக்கனமலிந
கரும்பாவியங்கங்கபத்திரம்வேதங்கரியவனே
கரும்பாவியங்கங்கமின்றியென்றாயுன்கருத்துறவே. - 43



1970. - கருத்தாதரித்தமைநோக்கியையோர்கையணைத்தனைய
கருத்தாதரித்தமைசாய்த்தியல்காவிரிக்காத்துறைசைக்
கருத்தாதரித்தமைதீருடைபோயுனைக்காமுற்றினிக்
கருத்தாதரித்தமைவாளுமின்பெய்தவோர்கையணையே. - 44



1971. - கையிலாயமானும்பலவளக்கோமுத்திக்கட்பொலியங்
கையிலாயமானும்பரசுமுள்ளான்கஞ்சன்வாய்பரிவாழ்க்
கையிலாயமானும்பர்சூழ்பாற்கடலமர்கண்மலைமங்
கையிலாயமானும்படர்வினைதீர்ப்பனங்கைதொழுமே. - 45



1972. - கைதவமேதகவாற்றிநின்றேனரகத்தமரு
கைதவமேதகவாள்வதென்றோகற்றுளாரியற்று
கைதவமேதகவாணம்வண்டார்க்குமங்காமதுரைக்
கைதவமேதகவாய்மாடக்கோமுத்திக்காவலனே. - 46



1973. - காவியங்கண்ணியமார்பாநெய்த்தோர்கவிழ்த்தாய்புவனங்
காவியங்கண்ணியமந்தவிர்ந்தாமென்றகாவலநின்
காவியங்கண்ணியநாவலர்கோமுத்திக்கட்சென்றுடைக்
காவியங்கண்ணியயாவருமாமுத்தர்கட்டுரையே. - 47



1974. - கட்டளையாவும்பன்மாமதங்கோடல்கடுத்துழல்வேன்
கட்டளையாவும்பறிமாயைவாதக்கலப்பெனும்புன்
கட்டளையாவும்பரோங்கரசூரகமழுநின்வாய்க்
கட்டளையாவும்பரேத்தடியாரிற்கலப்பித்திடே. - 48



1975. - கலக்கந்தரமஞ்சவாமேனிமானொருகண்பதிற்றுக்
கலக்கந்தரமஞ்சளாங்குழல்சோரக்கரைந்துநெஞ்சு
கலக்கந்தரமஞ்சலிப்பாடுறைசைக்கபாலிமறங்
கலக்கந்தரமஞ்சநஞ்சமுண்டான்வந்துகாப்பதென்றே. - 49



1976. - காப்பரவத்தையலைவாரிநஞ்சைக்கைகண்டங்கொண்டார்
காப்பரவத்தையலைவாய்துறைசைக்கண்ணார்கழிநீங்
காப்பரவத்தையலைவாமங்கொண்டவர்கட்டறுத்துக்
காப்பரவத்தையலைவாயதோவக்கலப்பளித்தே. - 50



1977. - கலகலவார்க்குங்குலமாமறைக்கழலாயிடஞ்ச
கலகலவார்க்குங்குமமுலையாய்கடுக்கைத்தொடைய
கலகலவார்க்குங்குளநேர்துறைசைக்கண்ணாய்நமனி
கலகலவார்க்குங்குளிர்தாளளித்தலென்காதன்மையே. - 51



1978. - காதம்பலபலசெல்வோநிற்சூழக்கடுமுடநீங்
காதம்பலபலவாண்மடவார்கண்ணென்றேத்துவமங்
காதம்பலபலமுற்றோந்துறைசைக்கண்ணாளகுழைக்
காதம்பலபலமென்றடைவோநினைக்கண்டுவந்தே. - 52



1979. - வந்திக்குமண்ணும்பரித்தனராவெனும்வண்டுறைசை
வந்திக்குமண்ணும்படியெங்ஙன்மன்மதரேநனிசி
வந்திக்குமண்ணும்பகழியும்வாட்டுவமாற்றுமெனும்
வந்திக்குமண்ணும்பகீரதியாரருள்வாரென்னுமே. - 53



1980. - வாரம்படைத்தகைவெய்யோர்குலஞ்செற்றவாளிமுளை
வாரம்படைத்தகைகொண்டமராடன்மகிழுமுழ
வாரம்படைத்தகையார்புகழ்கோமுத்திவாணர்வரு
வாரம்படைத்தகையாகாதலங்கரிமாளிகையே. - 54



1981. - மாளிகைத்தேவனைசித்தார்துறைசைவயிற்றிதழி
மாளிகைத்தேவனைமெய்ம்மாலதென்பன்வல்லேறுபெரு
மாளிகைத்தேவனையத்தோன்றுமின்பமருவுந்திரு
மாளிகைத்தேவனையுந்தொழுவேனுண்மயக்கறுத்தே. - 55



1982. - மயக்கந்தரத்தரைமேற்சீவர்போன்றுழல்வானவர்ச
மயக்கந்தரத்தரையிற்றோலரைவண்டுறைசைநிரா
மயக்கந்தரத்தரையாலாலமுண்டுவயங்குமெழின்
மயக்கந்தரத்தரையேத்தாரவர்கொடுவல்வினையே. - 56



1983. - வல்லியங்குஞ்சரங்கொங்கைகண்ணாகவயங்குமலை
வல்லியங்குஞ்சரமென்னநின்றார்மன்னுகோமுத்தியார்
வல்லியங்குஞ்சரந்தைப்படவேங்கும்வரைச்சரிவாய்
வல்லியங்குஞ்சரநீந்திநம்மாட்டுவரல்கொடிதே. - 57



1984. - வருந்தவரும்பணிநஞ்சன்னகாலன்வருமுனமே
வருந்தவரும்பணியும்பறம்பென்பர்வயங்குமறி
வருந்தவரும்பணிமாயோன்செய்கோமுத்திவாணர்விண்ண
வருந்தவரும்பணியும்பதம்போற்றுமின்மானிடரே. - 58



1985. - மானக்கஞ்சாறமையிக்கின்சொன்மங்கைமருவிடக்கோ
மானக்கஞ்சாறவிருங்கோவைபூண்டவன்வானத்தைவி
மானக்கஞ்சாறருகோமுத்தியான்மகளோதிநன்றான்
மானக்கஞ்சாறவென்றானென்றுகூறுநம்மாமயிலே. - 59



1986. - மாமதலையரியாதியர்போற்றவனைவனுண்க
மாமதலையரியாவட்டதென்னமகிழ்ந்தவன்புன்
மாமதலையரியாயென்றசித்தவன்வாழிடம்பூ
மாமதலையரியார்வயற்கோமுத்திமாநகரே. - 60



1987. - மானாகமாதுளங்காச்சூழ்துறைசைவரதனணி
மானாகமாதுளங்காப்பூதமாபடைவண்கரக்கோண்
மானாகமாதுளங்காவரையாவிலென்பாள்வயங்கம்
மானாகமாதுளங்காமுற்றிவ்வாறுதன்வாய்மலர்ந்தே. - 61



1988. - மலராதனத்தமருவோன்றிருநெடுமாலெனுமும்
மலராதனத்தமின்னோனரசுர்சொலல்வல்லர்விடா
மலராதனத்ததிபனாணப்பூணியுள்வார்முடிக்க
மலராதனத்தமிலராதன்மெய்யெனுமாமறையே. - 62



1989. - மறையாகமந்தவவோதிமெய்ஞ்ஞானமருவினர்க்கு
மறையாகமந்தவமாயேவிளங்கும்வயங்கியெதிர்
மறையாகமந்தவறிவாள்பவர்க்குவண்கோமுத்திச்செம்
மறையாகமந்தவழ்வான்றிருப்பாதமறைவனவே. - 63



1990. - வனமணமாலைமலரோனைவேட்டுமதிப்பொருவு
வனமணமாலையுறேன்பிறவேண்டலன்வாழ்தரப்பு
வனமணமாலையுமையாளொடுமையன்வாழரச
வனமணமாலையுற்றேன்பவங்கான்முன்மலர்ந்தபஞ்சே. - 64



1991. - பஞ்சாக்கரவைபதந்தொழுமாறுபணிவினைதீப்
பஞ்சாக்கரவைநிகர்மலமாயைபறித்தெறியின்
பஞ்சாக்கரவைபவமாகவாவினன்பற்கடகர்ப்
பஞ்சாக்கரவையகோமுத்திமேயபராபரனே. - 65



1992. - பரந்தாமனுக்குமரியவிடையைப்பணைத்தமுலைப்
பரந்தாமனுக்குமரியமர்தோணமர்பார்த்துச்சிவப்
பரந்தாமனுக்குமரியவிவ்வாய்தலில்பங்கயற்கும்
பரந்தாமனுக்குமரியர்துறைசைப்பதியணங்கே. - 66



1993. - பத்தவளக்கரும்பாசமினீயும்பயிலிடத்த
பத்தவளக்கரும்பாவியுமேவப்பணிநகையின்
பத்தவளக்கரும்பார்மொழிபாகபரவுபுயம்
பத்தவளக்கரும்பாலாய்துறைசைப்பதியரசே. - 67



1994. - அரசவனத்தைமகிழ்மாசிலாமணியையமலை
அரசவனத்தையணைத்தெழுந்தாயெங்குமாய்வயங்கும்
அரசவனத்தையணிமாலயன்முதலாயவர்சீர்
அரசவனத்தையவாவேனின்சீர்த்தியமுதைவிட்டே. - 68



1995. - அம்மனையாடுதிபந்தாடுதிகழங்காடுதியென்று
அம்மனையாடுதிவாவீர்ந்துமாற்றிலல்ளன்னமிடத்து
அம்மனையாடுதிசெய்கோமுத்தீசரருள்புரிந்தால்
அம்மனையாடுதிவைவாண்மதனெடுத்தார்ப்பினுமே. - 69



1996. - ஆரத்தனத்தையலையாலவாய்மணமாற்றியின்பம்
ஆரத்தனத்தையலையாடவேழழைத்தோனணிநா
ஆரத்தனத்தையலையாதமைத்தவனாய்ந்தவிடத்து
ஆரத்தனத்தையலையாற்றுகோமுத்தியாய்கைநன்றே. - 70



1997. - கையரும்பாவரும்பாராத்துறைசைக்கமழ்தெருவேற்
கையரும்பாவரும்பாசாங்குசருங்கனக்குமழுக்
கையரும்பாவரும்பாமாமுலையுங்கலக்கவிண்வாழ்க்
கையரும்பாவரும்பான்மையெம்போலியர்கண்ணருளே. - 71



1998. - கண்ணப்பரைவரையாதுவந்தாள்வர்கரையொளிருங்
கண்ணப்பரைவரையோடேற்றினார்கனிந்தூனருத்துங்
கண்ணப்பரைவரைக்காளத்தியாண்டவர்கட்டுசடைக்
கண்ணப்பரைவரைமாய்ப்பார்துறைசைகலந்துய்ம்மினே. - 72



1999. - கலவரையாதவமாற்றாரெனினுங்கடுவினைய
கலவரையாதவமாற்றுவதேநின்கருணைதலைக்
கலவரையாதவமாலையுற்றேற்கென்கதிசிலைய
கலவரையாதவமாலேக்கொள்கோமுத்திக்காரணனே. - 73



2000. - காமாசிலாமணியார்க்குமுன்வாங்கிக்கரும்பிணர்நீங்
காமாசிலாமணிவார்குழல்சோரவெய்கண்ணின்மைதீங்
காமாசிலாமணிகற்றார்மருவக்கமழரசக்
காமாசிலாமணிநின்சீர்நறவங்கவரும்வண்டே. - 74



2001. - வண்டலம்பாவைகும்பூங்குழன்மாதுமதியெழத்து
வண்டலம்பாவையழலாவுடைத்தென்றுமாழ்கிநசை
வண்டலம்பாவைமுதலியநீத்தனள்வாழ்துறைசை
வண்டலம்பாவையடியார்புனையவதிபவனே. - 75



2002. - பவனாசனார்த்தனன்மூண்டடையார்கட்படர்கடுப்பாம்
பவனாசனார்த்தனன்பானீர்த்துறைசைப்பதிமருவு
பவனாசனார்த்தனன்காணரியாப்பரனாவென்பன்காய்
பவனாசனார்த்தனன்றானென்றுசெய்வன்பரிந்தருளே. - 76



2003. - பரவலந்தீர்த்தமுழுகிலங்கோமுத்திப்பண்ணவசிற்
பரவலந்தீர்த்தநமனஞ்சுசேயுயிர்ப்பாலபரா
பரவலந்தீர்த்தவயனைவைத்தாயென்றும்பாடிலமன்
பரவலந்தீர்த்தநின்பாதாம்புயமெங்ஙன்பாலிப்பதே. - 77



2004. - பாலக்கரத்தர்துறைசைத்தியாகர்பழமறைக்க
பாலக்கரத்தர்நெடுமறையந்தப்பயனெனுமைம்
பாலக்கரத்தர்சிலைவேளெரியப்படர்ந்தநுதற்
பாலக்கரத்தர்பதம்பணியார்சிலபாதகரே. - 78



2005. - தகரங்கலந்தகுழல்பாகராவடுதண்டுறைவித்
தகரங்கலந்தவழ்வெம்முலையாரத்தழுவுறின்யாந்
தகரங்கலந்தவஞரென்றிடாதுதபும்பலவன்
தகரங்கலந்தபொழுதுமென்னாமிந்தத்தையலுக்கே. - 79



2006. - தையலையாதரியாதெழும்வீழுந்தசம்படவத்
தையலையாதரியாதேகுமோவெனுஞ்சார்மதியத்
தையலையாதரியாரெனும்வேளைத்தவிரெனுமுத்
தையலையாதரியாக்கோமுத்தீசசெய்தண்ணருளே. - 80



2007. - தண்ணந்தமருகமேற்றார்க்கிடந்துறைசையுவமை
தண்ணந்தமருகவாய்வைக்குமால்விடைசாற்றுடைதோல்
தண்ணந்தமருகமெண்ணில்கண்டார்குழைசங்கொடுபாந்
தண்ணந்தமருகவென்பான்மலையிறைதார்கொன்றையே. - 81



2008. - தாரங்கடுக்கைசிலைமலைபூதஞ்சமர்பொருது
தாரங்கடுக்கையடியாருளமுற்றுந்தந்தநற்றாய்
தாரங்கடுக்கைமலம்போக்கல்வேலைதனியிடங்கே
தாரங்கடுக்கையமைத்துண்பதுதுறைசைப்பரற்கே. - 82



2009. - கேதனமாவடுகோட்டேறுமேவிக்கிளர்தருநி
கேதனமாவடுதண்டுறையாவென்றுங்கேடிறனக்
கேதனமாவடுநேர்விழியாவென்றுங்கேட்பளிவட்
கேதனமாவடுமாற்றிடுவானெழுகேண்மையனே. - 83



2010. - அனேகந்தரத்தகைமாபாதகம்புரிந்தாங்கொடுமை
அனேகந்தரத்தகையேனளற்றாழவருட்டுறைசை
அனேகந்தரத்தகையேற்றாலந்துஞ்சவயின்றொளிரை
அனேகந்தரத்தகைவிட்டாலெனக்கினியார்துணையே. - 84



2011. - ஆராவமுதையனையநின்சீரறையேநினக்கியாம்
ஆராவமுதையடைந்தான்கவரவடையும்பச்சை
ஆராவமுதையலாக்கான்வெள்ளேற்றவவிர்சடைமேல்
ஆராவமுதையனேயுரசூரவருள்புரியே. - 85



2012. - புரப்பானலங்கண்டவாவளமோங்கும்புகழ்த்துறைசை
புரப்பானலங்கண்டவாணர்கொண்டாடப்பொலிபவநூ
புரப்பானலங்கண்டவாமொழிமாதுபொருந்தியொளிர்
புரப்பானலங்கண்டவாதமியேன்பவம்போக்குறவே. - 86



2013. - வேதண்டவில்லியைவாய்வான்வெரீஇத்தொழமேலெழுவெள்
வேதண்டவில்லியைவார்தெருவான்மிளிர்கோமுத்திக்கோ
வேதண்டவில்லியைவாய்போலடைதல்விலக்கெனவவ்
வேதண்டவில்லியைவாழ்த்தார்பிறப்பென்னவீண்பிறப்பே. - 87



2014. - பிறவித்துருமங்கவடுவிட்டோங்கிப்பிறங்குமதன்
பிறவித்துருமங்கவுய்வதென்றியான்வெண்பெருமுத்தங்கள்
பிறவித்துருமங்கள்சூழ்கோமுத்தீசநின்பெய்கழற்கன்
பிறவித்துருமங்கமுந்தண்ணென்றாநினைப்பேசுநர்க்கே. - 88



2015. - நரந்தந்தகரங்கமழ்குழல்வான்செயுநற்றவத்தி
நரந்தந்தகரங்கடிகட்டொழில்சொனகாவிடைகிந்
நரந்தந்தகரங்கடுப்பார்துறைசைநல்லாளியல்வா
நரந்தந்தகரங்கனிவான்கொண்மாம்பொழினாடிடமே. - 89



2016. - நாடரும்பாதகமாயாநவிலொருமாத்திரையில்
நாடரும்பாதகவுரிபங்காகற்பநண்ணியவான்
நாடரும்பாதகவார்சூழ்துறைசைநம்பாநெடுமால்
நாடரும்பாதகமலமென்றோவொருநான்பெறலே. - 90



2017. - நானந்தவாதகுழலார்புணர்ச்சிநசைஇயுழலு
நானந்தவாதமறாதுசெய்வேனுய்யநாடுமறை
நானந்தவாதமயில்பணியாய்நவின்றாய்செவிவாய்
நானந்தவாதவன்சூழ்பெருங்கோமுத்திநாயகனே. - 91



2018. - அகங்காதரசங்கமந்தவிர்ப்பானுன்னையாதரித்தை
அகங்காதரசங்கரவோரிருவரறையிசைகூர்
அகங்காதரசங்கவார்குழையாயென்றறைகுவனென்
அகங்காதரசங்கவின்வனஞ்சூழச்செயற்புதனே. - 92



2019. - அற்பரவைக்கட்புகுதாமன்மாமயிலன்னவர்மை
அற்பரவைக்கட்குடியாமற்கோமுத்தியையகண்டத்து
அற்பரவைக்கட்கநேர்விழிபாகவன்பாற்றுநர்பால்
அற்பரவைக்கட்டடியேனவினைநின்னருளழலே. - 93



2020. - அரும்புங்கவருமணிமுலைபாகனருமறையை
அரும்புங்கவருமணிதருகோமுத்தியண்ணலம்பொன்
அரும்புங்கவருமணிமைநின்றேத்துமரசிறைமால்
அரும்புங்கவருமணியேயென்னுள்ளத்தவிரொளியே. - 94



2021. - ஏதம்படரும்பலதொழிலாற்றியிளைத்திடுதற்கு
ஏதம்படரும்விழியார்மயன்முன்னியமரிறை
ஏதம்படரும்வரவிடுவாரினியானியற்றல்
ஏதம்படரும்பயிர்நான்றுறைசையிறையவனே. - 95



2022. - இறைக்கும்வளைக்கும்பொருத்தமின்மாமதியென்பதழல்
இறைக்கும்வளைக்கும்பொருகழைவேள்விடுமேவெனுமய்
இறைக்கும்வளைக்கும்பொருவாக்கடலிரைக்குந்துறைசை
இறைக்கும்வளைக்கும்பொருட்கீர்சொல்வாரினிலையருளே. - 96



2023. - இலையமலைக்கவளந்தீரிருவரையெண்ணலம்பொன்
இலையமலைக்கவளவாந்துறைசையிறைக்கன்புசெய்து
இலையமலைக்கவளருந்திருமடத்திற்கலப்புற்று
இலையமலைக்கவளமார்ந்தின்பெய்தவெழுமனமே. - 97



2024. - மனம்புதைக்கும்பலமாயவெங்காமமதிசுடுங்கா
மனம்புதைக்கும்பலமின்றென்றுயிரைவருத்திவிடா
மனம்புதைக்கும்பலவின்றேமொழிக்குவளங்கொள்பொன்னி
மனம்புதைக்கும்பலகால்பாய்தென்கோமுத்திவானவனே. - 98



2025. - வானம்பரவுமையாள்கணவாவெனின்வாழவருள்
வானம்பரவுமையாறன்றென்கோமுத்திவாணனணி
வானம்பரவுமையான்வருமென்னுமயின்மதனொவ்
வானம்பரவுமையாலோசிறந்துயிர்வாழ்வதுவே. - 99



2026. - வதனமைந்தான்குஞ்சியாகாயன்சேய்முனம்வந்தநம
வதனமைந்தான்குஞ்சிதையாவியமன்றன்வாழ்வுமைந
வதனமைந்தான்குஞ்சிசூழ்வயற்கோமுத்திமன்னினிய
வதனமைந்தான்குஞ்சிதபாதமேபல்வளத்திருவே. - 100

துறைசையமகவந்தாதி முற்றிற்று.

Comments