Pirapantattiraṭṭu X
பிரபந்த வகை நூல்கள்
Backதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
பிரபந்தத்திரட்டு - பகுதி 10 (1049)
திருவாவடுதுரை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்
Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 10 (verse 1049)
tiruvAvaTuturai AtInattuk kuruparamparai akaval
In tamil script, unicode/utf-8 format
- Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach
and following persons helped in the preparation and proof-reading of the etext:
S. Anbumani, Kumar Mallikarjunan, V. Devarajan, Subra Mayilvahanan, S. Karthikeyan and Vijayalakshmi Peripoilan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2006 .
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
பிரபந்தத்திரட்டு - பகுதி 10 (1049)
திருவாவடுதுரை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்.
1049 | திருவளர் கைலைச் சிலம்பில்வீற் றிருக்கு மருவளர் கடுக்கை மாலிகைப் பெருமா னருள்பெறு நந்தி யடிகடம் பான்மெய்ப் பொருள்பெறு கருணைப் புகழ்ச்சனற் குமாரர் மற்றவ ரருளுறீஇ வையகத் தியங்கிய | 5 |
நற்றவர் சத்திய ஞானதரி சனிக ளவந்தெறு மன்னவ ரருளொருங் குற்றுப் பவந்தெறு வாய்மைப் பரஞ்சோதி யடிக ளத்தகு குரவ ரருளடைந் துயர்ந்த வித்தகர் வெண்ணெய் மெய்கண்ட தேவ | 10 | |
ரிவர்முதற் குரவ ரியைந்ததிரு நாமந் தவர்புகழ் சமாதித் தலமடை மதிநா ளிவைமுறை யுரைப்பா மிசைத்தமெய் கண்டர் சுவையமை வெண்ணெய் துலாமதி சோதி தவலருங் கருணை தழையரு ணந்தியார் | 15 | |
கவலருந் துறையூர் கன்னிமதி பூரம் படர்மறை ஞானசம் பந்தர்வண் டில்லை வடகளாச் சேரி மடங்கன்மதி யுத்தரந் திக்கொத் திறைஞ்சத் திகழுமா பதியார் மெய்க்கொற் றவன்குடி மேடமதி யத்தம் | 20 | |
வாய்ந்தவரு ணமச்சி வாயதே சிகர்மேல் வேய்ந்தகொற் றவன்குடி வின்மதி யாதிரை திண்ணிய சித்தர் சிவப்பிர காசர் நண்ணிய தலமதி நாளவர்க் கில்லை யளவா வருளுற் றவிர்நமச் சிவாயர் | 25 | |
வளவா வடுதுறை மகரமதி முதனா ணலமலி தருமறை ஞானர்மே லுரைத்த வலமலி துறைசை மகரமதி சோதி வளம்பயி லம்பல வாணர் மேலெடுத்து விளம்பிய துறைசை மேடமதி யவிட்ட | 30 | |
மொருவா வருண்மலி யுருத்திர கோடிக டிருவால வாய்விருச் சிகமதி யனுட மணவிய வருள்வே லப்பர் திருப்பூ வணநகர் விருச்சிக மதியுத்த ராடந் தரமலி குமார சாமிகள் சுசீந்திரம் | 35 | |
வரமலி விருச்சிக மதியுத்த ராடந் தரைசொல்பிற் குமார சாமிகள் சுசீந்திர முரைமடங் கன்மதி யுத்தரட் டாதி மருவுமெய்ஞ் ஞான மாசிலா மணியார் வெருவில்வெண் காடு மேடமதி யுரோகிணி | 40 | |
யிராம லிங்கர்மு னிசைத்தகோ முத்தி பராவு விருச்சிகம் படர்மதி யனுடந் தாவில்வே லப்பர் சங்கர நயினார் கோவில்வான் கன்னி குலாமதி மூலம் பின்வே லப்பர் பெருந்துறை கோட்டிற் | 45 | |
பொன்வேய் சேமதி பூரட் டாதி யாய்புகழ்த் திருச்சிற் றம்பல தேசிகர் வேய்புகழ்த் துறைசை மிதுனமதி பரணி யம்பல வாண ராவடு துறையே | 50 | |
நம்பலர் கொடுஞ்சிலை நகுமதி கேட்டை வளமலி சுப்பிர மணிய தேசிக ரளவரும் புகழ்த்திரு வாவடு துறையே தெளிதர வொளிர்விருச் சிகமதி கார்த்திகை வெளிதர வுரைத்தேன் வேணவா வானே. | 55 |
குருபரம்பரையகவல் முற்றிற்று
Comments
Post a Comment