Paṭṭaṇattuppiḷḷaiyār purāṇam


பிரபந்த வகை நூல்கள்

Back

பட்டணத்துப்பிள்ளையார் புராணம்
பட்டணத்துப்பிள்ளையார்



பட்டணத்துப்பிள்ளையார் புராணம்



பட்டணத்துப்பிள்ளையார் புராணம்

Source:
பட்டணத்துப்பிள்ளையார் திருவாய்மலர்ந்தருளிய
பிரபந்தத்திரட்டும் மேற்படியார் புராணமும்.
ஸ்ரீமது ஞானராஜதானியான பொம்மையபாளையம்
பெரியமடம் சிவகஞ்சி மயூரா சலநிவாச எதிஈஸ்வர கர்த்தரான
சிவஞானபாலையசுவாமிகள் கட்டையின்படி.
இயற்றமிழாசிரியராகிய திரு-விசாகப்பெருமாளையரவர்கள் முன்னிலையில்
வே- குமாரசாமிஐயரால் பரிசோதித்து
வ - அண்ணாமலைபிள்ளையவர்களால்
வர்த்தமானதரங்கிணி சாகை அச்சுக்கூடத்திற் பதிப்பித்து
படத்துடன் வெளியிடப்பட்டன.

விபவ வருடம் சித்திரை மாதம்.
-----------------------------------------------------------


சிவமயம்.
கணபதி துணை.
திருவெண்காடரென்னும் பட்டணத்துப் பிள்ளையார் புராணம்.

பாயிரம்.

வழிபடு - கடவுள் வணக்கம்.

ஒளிமேவுந் தில்லைவனத் தோங்கியகற்ப கவனமொன்றுண்டு கண்டாற்,
றெளிமேவு மானந்த நிருத்தமிடு நினைந்தபடிச் செல்வஞ் சேர்க்குங்,
களிமேவுந் தும்பிமுகங் கனிகாட்டும் விண்ணுறை கற்பகமும்போலு,
மளிமேவும் பட்டினத்துப் பிள்ளைபுரா ணம்ப கர்தற்களிக்குமன்றே. - 1


மருமகற்கு வழக்கிசைத்து வளையல்விற்று மாணிக்கவணிகராகிக்,
குருமணிசூழ் நான்மாடக் கூடல் வருமொருவர்மன்றுட் குனிக்குங்கூத்தர்,
பொருண்மகனாம்வணிகவுருத் திரசன்மர்பிதா வருளும் பொருள்வளர்த்தா,
ரிருபதமாம் பொருள்செறித்தெம் மகத்தினினி திருப்பரா மெந்தஞான்றும். - 2



சபாநாதர்துதி.
பரஞ்சோதி தருபான்மைப் பதிஞானப்பொதுவகற்றும்
வரஞ்சேருமமரர்குழாம் வளைந்துள பொன்னம்பலத்தம்
புரஞ்சேருஞ் செழுங்கடக புரியரசனம்பலத்து
முரஞ்சேரு நடமூன்று முடையபிரா னடிபண்வாம். - 3



சிவகாமசுந்தரியம்மை துதி.
உலகமெலா மீன்றருளி யொருமலைக்குமகளாகி
யிலகுமயிலிளையோற்கு மிபமுகற்கும் பாலூட்டு
முலையினைய கன்னிகையாய் முகிழ்த்தபெருங்கருணையளாந்
தொலைவில் புகழ்ச்சிவகாம சுந்தரிசெந்தாள் பணிவாம். - 4



விநாயகர் துதி.
இருநான்கு மதம்பொழியு மிருள்வேழமிரிந்தோடத்
திருஞான மதமூன்றாஞ் சிவவேத மகிழ்களிறு
பெருநாத முடிநடிக்கும் பெரியோன்ற னுடனாடிக்
கருஞானமலைதொலைக்குங் கற்பகப்பொற்பதம்பணிவாம். - 5



சுப்பிரமணியசுவாமி துதி.
அருட்சிவனா ரருண்மலைக்கும் பலமலைக்குமதிபதியாய்
மருட்படவாருயிருண்ணும்வரைவயிறுகிழித்தொழித்துத்
தெருட்புலவர் சிறைமீீட்டச் சேவகனெஞ்சிறையாய
விருட்படலம்படச்சோதி யெறிக்குமவனடி பணிவாம். - 6



திருநந்திதேவர் துதி.
மருணூல் சொல்லொருகோடி மறுசமயக்கொடும்பேய்கள்
பொருணூல் சொல் பவர்போல்வார் பொய்யாக முடிவித்துத்
தெருணூல் சொல் பரம்பரையாஞ் சிவமுதலென் றுரையாடி
யருணூல்சொல் லருணந்தி யருளாலிங் கருள் பெறுவாம். - 7



திருஞானசம்பந்தசுவாமிகள் துதி.
மணிவாயாற்றிருமிடற்றால் மலர்கரத்தாற்றமிழ்மூன்று
மணியாக்கிப்புனனாடு மருந்தமிழ்நாடெனத்தோன்றுந்
தணியாத திருஞானசம்பந்தர் பதம்பணியும்
பணிவார்தம்பதம்பணியும் பணியெமக்குப் பணியாமே. - 8



திருநாவுக்கரசுசுவாமிகள் துதி.
கல்லோடம் வெள்விடஞ்சூழ் காசினியினடக்குமலை
யெல்லாமிங்கிறும்பூதா வின்பமெனவிளையாடிச்
சொல்லாடிச் சிவகதியைத் துதித்துமதித்துக்கதித்தார்
பல்லாரும்புகழ்நாவுக் கரசர்பதமலர்பணிவாம். - 9



சுந்தரமூர்த்திசுவாமிகள் துதி.
முதல்வனார்பாவையிட முன்னுகர்வானளித்*தருளி
யிதமுதலாம்பரவையமுதினிமை தரத்தானுகர்வான்
றுதிகுலாங்குபேரனையுந் தோழனெனவுடையாரை
மதனுறாத்தூதேவும்வன்றொண்டர் பதம்பணிவாம்.
* இஃது செய்தெனெச்சமாயினும் செயவெனெச்சப்பொருள் தரல் காண்க. - 10



மாணிக்கவாசகசுவாமிகள் துதி.
நானூற்றுமணிக்கோவை நடம்பயிலெம்பெருமாற்குத்
தேனூற்றும்பொன்னிதழித் தெரியலுமேம்படச்சாத்தி
வானூற்றமுதவுதிரு வாசகம்பேசினர்பாத
மானூற்றுவிலையாக வணங்குதும்யாம் வணக்குதுமே. - 11



தில்லைவாழந்தணர் துதி.
சீரசபா நடம்பயிலுந் திருவாரூரொருநாத
னாருறையா னந்த நட நாதனைநேராதலினா
லாரணராந்தில்லைவாழந்தணரென்றெடுத்தோதும்
பேருடையவேதாந்தப் பெரியோர்தம்பதம்பணிவாம். - 12



சந்தானதேசிகர் துதி.
*கண்ணிய மாயாபோதக்கடங்கடத்திக்கணிவித்துத்
தண்ணளியாலிருளறுத்துத் தன்னையென்னைத்தந்தனனால்
வெண்ணெய்நல்லூர்மெய்கண்டான்மென்மலர்த்தாண்முடிசூட்டி
யண்ணலந் தேசிதர் மலர்த்தாளங்கங்கே பணிந்தெழுவாம்.
*கண்ணியனவாகிய வெனலிக்குறிப்புமுற்றுப்பெயரெச்சப்பொருள் தருகின்றது. - 13



காரைக்காலம்மை துதி.
வீயாதமாயவுடல் வெறுப்பினாலோவிமல
ரோயாது பேயுடனாட்டு வந்ததனாலோவிங்குச்
சேயாயவெள்ளிமலைச்சேர்வதற்கோதெரியாது
பேயானால்காரைக்காற் பெண்ணணங்கன்னவட்பணிவாம். - 14



இயற்பகைநாயனார் துதி.
வினைமாளவரும் விமலர்வேதியராந் தூர்த்தற்கு
மனையாளைக் கொடுத்தவர்தாம் வருநெறியிற்றடைநோக்கி
முனைவாளாற்சுற்றமெலா முற்றுவித்தசேவகனா
ரெனையாளுஞ் செட்டிமையாரியற் பகையாம்பணியுறவே. - 15



மூர்த்திநாயனார் துதி
அலையாழிவிடமருந்து மாலவாயமுதருக்கு
மலையாரங்கிடையாமன் மறுத்தனர்விற்றிடுவோருஞ்
சிலையாரக்கரந்தேய்த்துத்திருவருளாற் கரம்வளர்ந்து
தொலையாதசெல்வமுறுந் தொண்டரடிமுடிமுடிப்பாம். - 16



அமர்நீதிநாயனார் துதி.
மறைதருகோவணமொன்றாமனையாட்டி தனையர்செல்வ
முறைபொருடாமுடனேறி முக்கணனார்மிக்கருளால்
நிறைதருமக்கட்டளையே நீண்டவிமா னமதாக
விறைபுரத்துப்போந்திருந்தாரிணையடித்தாமரைபணிவாம். - 17



கலிக்கம்பநாயனார் துதி.
ஐம்மேவுமுடியார்முன்ன ரனடியராகிவர
மெய்ம்மேவுந்திருவடிகள் விளங்குவான்விளக்குதலு
மொய்ம்மேவும்புனல்வாராமொய்குழலார் கைதடிந்த
கைம்மேவுங்கலிக்கம்பர் கையிணைகையாற்றொழுவாம். - 18


வேறு.

பட்டணத்துப்பிள்ளையார் துதி.
அறிவரியதொருபொருணீ யொன்றினுந்தோன்றாயென்றும டங்காயென்று,
முறுதியுறச்செய்யுள் செய்தாராதலினாலாதியந்த மொன்றிலானைச்,
சிறியபொதுவினில் மறுவொன்றின்றி விளங்கினையென்றுஞ் செப்பியிப்பால்,
முறையினிதுவதிசயமேவிளைக்கும் வினையாதுமென மொழிந்தாரன்றே. - 19


மொழிந்தபடிநாற்கோடியாறெண் ணாயிரமேலு முடிவின்மாயை,
பொழிந்தபலதத்துவங்களிருட்படலங் கிடப்படுமென்புந்தியுள்ளே,
தழைந்திடுநின்சடைமௌலிக்கங்கைநங்கைசிலம்பலம் புந்தடந்தாளோடும்,
நுழைந்தனையென் றதிசயித்தாரவரை
யென்சிந் தையிற்பாட்டி னுழைவித்தேனே. - 20

பாயிரம்
அவையடக்கம்


ஆனந்தையெனுங்கணிகையணியவணிமணிக்கடகமளித்தநாதன்,
பூநந்துஞ் சடைக்கரந்தவணிக வுருவிலிங்கவுருப்பொருந்துமாபோ,
லீனந்தமருதணுகாவெண்காடர்வணிகவுருவிலிங்கமானா,
ரியானந்தப்பெரியோர்தம்புகழ்புகழவென்புன்சொலின்சொலாமே. - 21


வாதனையோரிரண்டு மறமன்னுதவ முன்னிழைத்தார்மறங்கணீங்கிப்,
பேதமைதீர்பட்டினத்துப்பிள்ளையெனு மொருபெரியோர் பிறங்குஞானக்,
காதையினைப்பெரியோருஞ் சொலக்கேட்டிங் கிசைக்கின்றேன் கடன்ஞாலத்து,
ளேதமிலான்றொழிலைந்து மாருயிர்கள் புரிவார்களென்றல்போலும். - 22


வெங்கதிராயிரம்பரப்புமாதவனுமளக்கருஞ் சூழ்வியன்ஞாலத்துச்,
சங்கரன்றனடியாரைப் புகழ்ந்திடல் பூசனைபுரிதல்தருக்கவாற்றிற்,
பொங்குநலம்பெறுவரெனவாரணவாகமம்புகன்றபொற்பினாலும்,
பங்கமுறா வெண்காடர்சரிதமடியேனிசைந்து பகர்ந்தவாறே. - 23


இன்னுமொருவகையுவகை வெண்காடர்குலவணிகரின்புகூற,
மன்னியநல்லறிஞர் சிலர்பரந்தகதையிதைத் தொடுத்துவகுத்துக்காட்டு,
மென்னவெழிற்புலியூரிலிருங்கலைஞரறியு நெறியிசைத்துளன்யான்,
பொன்னவையி னிருத்தமிடுமொருத்தனெடும் புகழாகப்புகலலாலே. - 24


புலிமுனியும்பதஞ்சலியுமுதலானபெரியோர்தம்புகழ் புராண
மிலகியவாமவர்க்குமுனங்கதியடைந்தோரளவிலவரியற் புராணம்
பலபலவாமவைபோலவருவனவுமவ்வண்ணம்பகரலாகும், கலைவடநூல்
சொல்லிலென் சொல்லாவிடிலென் கதிக்கதைகள் கழறலாமே. - 25


மகவான்பட்டினம்படைத்தவண்மை திருவெண்காடர்வாழ்ந்த வாய்மை,
யகலாமலிடைமருதனாங்கவர்பாற் சிறுவனெனவடைந்தநேயந்,
திகழ்ஞானவுபதேசம்வைத்தவழி திருவிசைப்பாச்செப்புஞ்செப்பம்,
புகழோங்கு மொற்றியூ ருற்றிலிங்க மானதுவும் புகலுற்றேன். - 26


பாயிரமுற்றிற்று.
ஆக - திருவிருத்தம் - 26
-------------

1. பூம்புகார்ச்சருக்கம். (27-54)


செங்கரங்கால்விழிவதனந் திருநாபியெண்கமலம் சேர்ந்தானேனு,
மெங்கடிருமாலிதயகோகனங் கோயில்கொண்டங்கிருக்கும்பொன்மான்,
பங்கயம்போனீங்காமலிருக்கின்றகாவிரிப்பூம்பட்டினத்துப்
புங்கமொரு சற்றுரைக்கே னுருத்திதங்கொண் டருமொருமாப்புகன்றுளாரே. - 1


பொன்னுலகம்புரந்திருக்கும் புரந்தரன்வாழ்பரிமேதம்புரிந்தகோமா,
னன்னைபெரும் பூவுலகிலருஞ்சாயாவனஞ் சேருமமுதநாதன்,
றன்னையருச்சனைபுரியத்தினந்தோறும்போய் மீண்டுவருந்தன்மைதீர்ப்பா,
னுன்னிநெடுஞ்செங்கோட்டு வெள்ளிமலைப்பிடரேறியுவந்தான்மன்னோ. - 2


வந்துசிவக்குறிசெறியுமிட முதலாச் செடமுடிமட்டுந்தொட்டா,
னந்தமுடிமணிச்சாயை யெவ்வயினு மெறிப்பவெறிந்தாஃதாற்றாமற்,
சந்ததமுந் தாழைமணங்கமழ்சோலை வளநாடுதழுவுங்கோயிற்,
றந்திடவுன்னினன் முன்போலாயிரந்தாமரைபுரையுந்தடங்கணானே. - 3


அவ்வேலைமலைவிமலை புறத்தோடிக்கூவென்றமலைகாட்டச்,
செவ்வேளீன் றிடுமிலிங்க நாயகனன்னவனெடுத்தல் செய்யாவண்ண,
மெய்வாழுங்கருணைசெய்ய முன்போலச் சினகரச் சீர்விளங்கச்செய்தா,
னிவ்வேயினிளந்தோளி கூவென்றமென்மொழியாளெனும் பேருற்றாள். - 4


வாசவன் சாயாவனத்துளிறை பூசைநிறைவேற மகிழ்ந்தெஞ்ஞான்று,
நேசமுறவுலகிலுள்ளவணிகரெல்லாங்குடி தழைப்பநெடி தழைத்தான்,
காசினிசூழ்சோணாட்டிற்காவிரிப்பூம் பட்டினப் பேர்கண்டான்மண்டுந்,
தேசுதருநாற்பத்தெண்ணாயிரநற்குடி *லிரவச் செய்தானன்றே. - 5


குடிவிரச்செய்ததுஞ் சாயாவனத்துக்கொழும்பவளக்குன்றுக்கென்றும்,
படிபுகழும்பெரும்பூசையோவாமனடாத்தி விடும்பண்புமன்றி,
யடிகளுறைபல்லவனீச் சரமுதலாமாலையமுமவ்வாறாகி,
நெடிது விளங்கிடும்பொருட்டாமென்பரின்பநூல் பலவுநிரப்பினாரே. - 6



விண்ணவர்கோமானமைப்பாற் குருவிலிங்கசங்கமங்கள் விழைந்துநாளுந்,
தண்ணமரும்பெரும்பூசை யியற்றியிகபரமிரண்டுந்தமக்கேயாக,
மண்ணுலகிலிந்நகர மிழைத்தவன்போன்மலிந்த செல்வமலர்ந்துவாழ்ந்தா,
ரெண்ணவரும்வசியதன்மந் தடுமாறாதி னிதிருந்தங்கியன்றுளாரே. - 7


வேறு.

எண்ணியசீரறம்பொருளோ டின்பமுறுவணிகர்குழாங்
கண்ணியவீட்டின்பமுமேற்காண்பாராயினிதமர
வண்ணியபேரறமுதனான்கடைந்தவராம் வெண்காடர்
புண்ணியனார்பிறந்தபதிபூம்புகார்ப்பட்டினமே. - 8


கரிகாலன்பெருவளவன்மகள்கேள்னன்கடல்புக்கான்
றிருவேயேவெனவழைத்துத்திரைக்கரத்தாற்றரக்கொண்டாள்
வரைகேழ்வன் கலநோக்கிவருமளவுங்கல்லாநாள்
புரைதீரப்பிறந்தபதி பூம்புகார்ப்பட்டினமே. - 9


வன்னிமடப்பளியோடு சான்றாகவரவழைத்தாள்
பன்னியகாவிரிமணல்வாய் பாவையைநன்கேஅவனெனுங்
கன்னியர்களொடும்போகா டிரைகரையாவகைகாத்தாள்
பொன்னனையார்பிறந்தபதி பூம்புகார்ப்பட்டினமே. - 10


கூவலிற்போய்மாற்றாள் குழவிவிழத்தன்குழவி
யவலின்வீழ்த்தேற்றெடுத்தாளயல் நோக்கம்வேறென்றால்
மேவினாள் குரக்குமுகம் வீடுடையோன்வரவிடுத்தான்
பூவின்மேற்பிறந்தபதி பூம்புகார்ப்பட்டினமே. - 11


முற்றாதமுலையிருவர்முத்துவண்டவாவிடுத்துப்
பெற்றாற்றாமாண்பெண்பிறர்மணஞ்செய்யாவண்ணஞ்
சொற்றார்கள்பிறந்தபெண்ணாயகனைத்தலைசுமந்தாள்
பொற்றாமம்பிறந்தபதிபோம்புகார்ப்பட்டினமே. - 12


கன்னிகர்தோட்காளையர்கைக் காசேனுங்கற்புடையே
னென்னுமொருமனைத்தொழும்பியேனையர் கற்பாருரைப்பார்
நன்னகரத்தியற்போமனதிதெனத்தெற்கேகும்
பொன்னியுடைப்படைத்தவள்வாழ்பூம்புகார்ப்பட்டினமே. - 13


வேறு.

புயலோங்குஞ்சையகிரிப்புறத்தில்வெண்காவிரிப்பர்நகன் புறத்திற்போந்து,
வயலோங்குஞ் சோணாட்டுமண்ணுயிருண்டின் புறவோமாலுக்கேலு,
மியலோங்குமனையாகவிருப்பதற்கோகடலாட வெண்ணியோதன்,
னயலோங்கும் பூம்புகார்ச்சங்கமுகத்துறையாகி யமர்ந்ததன்றே. - 14


இன்னபொன்னிமன்னுமலைக்காரகிலுமாரமும் போரிபத்தின் கோடு,
மின்னுமணிகளும் பொன்னுஞ்செழுந்தேனுங்கொழுங்கனியும் விரைமென்பூவும்,
பன்னரியபலவளனுங்காவிரிப்பூம் பட்டினத்துப்பரப்பவாங்கி,
யந்நகரங்கடல்வளத்தால் யாவருக்குமள்ளியள்ளி யளிக்குமாலோ. - 15


முடக்கியபாடகக்குனிப்பிற்பற்பலதீவினிற்பொருள்கள்முகந்துநீந்தி,
யெடுக்குமணிநாவாய்கள் நாவாய்கள்புகலரிதா மெழிற்பட்டாடைத்,
துடக்கொடிகளசையவிசைக்காலே கவடந்தள்ளத்தள்ளாடாம,
னடக்கமிடத்திருந்தேறிற் பொற்றேவரெழுந் தருளனாட்டலாமே. - 16


போற்றுமளகாபுரியு முயருமமராபதியும் பூம்புகார்க்குத்,
தோற்றுறையுமாறுபெறாதேக் கறுமாற்பானாதசோதிநாத,
ராற்றலிடங்கொண்டிருந்தார்சிவஞானவெண்காடரமர்ந்தாரன்னோர்க்,
கேற்றநிறைகுபேரனையும்வச்சிரவாளனையுநிகரிசைக்கொணாதே. - 17


செய்யநிறப்பவளவல்லி மவுலிமணிகண்டமெண்டோட்டிருந்துமேவு,
மையனுறைபல்லவனீச்சரமுமவிர்வரிபிரசவமுதமாந்தி,
மையலிசைத்தேனளிக்குங்குளிர்சோலை நிலைமலியவளமாடஞ்சூழ்ந்,
துய்யுநெறிதருஞ் சாயாவன முமவன் கோயில்களுமொளிருமாலோ. - 19


வெள்ளிமலைபொன்மலைதூமணிமலைகள்வெண்காடர் வீட்டினிட்ட
மொள்ளியசோ தியரிவரை யாட்கொள்வானாளாகியுவந்தவந்தாற்
றெள்ளியராம்வாக்கிவர்களுளவேனுமிங்கிருக்கச்செய்தார்போலும்
புள்ளினொலிமலைசோலை வேதவெளிமலை சாலைப்பூம்புகாரே. - 19


கொள்வார்தம்பேரோதை கொடுப்பார்தஞ் சீரோதைகுளிர்சங்கீன்ற,
வெள்ளாரக்கருங் கடலினோதையினைவிழுங்கியிருவிசும்பினோங்கு,
முள்ளாருஞ் சிறுவீதிபலசாதித்தொழிலோதை யொழிவிலாவாம்,
பொள்ளாதநாகமணி யங்கடொறும் விளக்கொளிரும்பூம்புகாரே. - 20


நாரதனாரிசைமடந்தை யிசையமுதஞ் செவிவார்ப்பநயந்து கேட்போன்,
வாரணங்குந்துணை முலையாழுருப்பசிவாராதிருக்கும் வண்ணங்கண்ணிச்,
சீருலகின்மானிடமாமகளாகப் பிறக்கவெனத்தேவர்கோமான்,
போரியைந்த சாபமிடமாதவியாயவள் பிறந்த பூம்புகாரே. - 21


தெய்வமகள் மானிடமாமகளாக மானிடப்பெண்டெய்வமாகச்,
செய்தவன் வாசவனென்னக் கண்ணகியை விமானத்திற்சேர்த்தியன்னாட்,
டுய்யகணவனைச்சேரச்சேர்த்தினன் முன்னுள்ளமாதுறைந்தவாறாம்,
பொய்யுரையாமாந்தர்களுமிறும்பூதுநிறைந்தேறும் பூம்புகாரே. - 22


வேறு.

நெடுங்கருங்கோட்டுப்புன்னைநிறைந்த பூங்கொத்திற்செந்தேன்
படுங்கருந் தும்பிமந்திப்பாட்டிடும் பொன்னிநாட்டு
ளொடுங்கிடைமடந்தைமார்களுண்டு கொண்டாடுந்தண்டேன்
விடும்பரிசென்னக்கானம் விளைப்பராம்பூம்புகாரே. - 23


தொக்கார்மின்னித்துன்னுஞ் சோலைசூழிடங்கடோறும்
புக்குறாதீயமாக்கள் புகும்புனற்பொன்னிநாட்டுத்
திக்கலாம்புகழுநல்லோர் செல்குவார்மல்குவாராய்த்
தக்குளாரல்லார்பொல்லார்தாம் புகார்பூம்புகாரே. - 24


கன்னெடுங்குன்றந்துன்றுங் கடிகமழ்குறிஞ்சிமான
நென்னெடுங்குன்றந்துன்று நெடுநிலப்பொன்னிநாட்டு
மின்னெடுங்குன்றந்துன்று மின்னிடைமார்பாற் கொங்கை
பொன்னெடுங்குன்றந்துன்றும் புண்ணியப்பூம்புகாரே - 25


வெளிதங்கும் வெண்ணெற்போர்கள் விண்ணளப்பனபோனண்ணு
மனிதங்கிமுரலுஞ்சோலை யாலையம்பொன்னிநாட்டு
மொளிதங்குசங்கினார மோங்குபூங்குவாலமெல்லாம்
புளினங்கள்போன்று தோன்றும் புண்ணியப்பூம்புகாரே. - 26


வேறு.

காரோடுங் களிற்றோடுங்கடற்றிரைவாம்பரியோடுந்
தேரோடுங்கலத்தோடுந் தேவர்கள் செல்வர்களோடும்
பாரோர்க ளையுறுவார்படைக்குழாமெனப்பகர்வா
ராரோவிந்நகர் புகழ்வாரளந்தறியா வளந்தருமே. - 27


இந்நகர்போலெந்நகருமிவ்வுலகத்திடைக்காணேம்
பொன்னகரோவெனிலந்தப் பொன்னகர்வாழ்புரந்தரனே
மன்னியபூவினிற் போந்துவளம் பிறங்கவனைவித்தா
லெந்நகரும் பூம்புகார்க் கேற்றமிணையிலவாமே. - 28


பூம்புகார்ச்சருக்கமுற்றிற்று.
ஆக--திருவிருத்தம். 54.
_______________________________

2. ஆட்கொண்டசருக்கம் (55-192)


மடைமருதநறும் பழனங்கரும்புகளும் பெருஞ்சாலிவளங்களோங்கப்,
புடைமருதவனஞ்சூழத்தவமியற்று முனிவர்குழாம்புகழ்ந்துபோற்ற,
விடைமருதிலிருந்தபிரானிருங் கருணைத்திறம்பிறந்த வியல்பினாலே,
படைமருதந்தரவளவெண்காடரை யாட்கொண்டதொருபரிசுசொல்வாம். - 1


வேறு.

பொன்னிலங்கிய பூம்புகார்ப்பட்டினந்
தன்னின்மன்னுந் தலைவர்கலைகளாற்
பன்னரும்புகழ்ப் பட்டினத்துப்பிள்ளை
யென்னுமிக்குடிநாமமியன்றுளார். - 2


கருணையாளர் வெண்காடரெனும்பெயர்
மருவினார்மணிவண்ணனின்வாழ் குவார்
பொருவிலாச்சிவபுண்ணியநண்ணினா
ரிருவிசும்பினமரருமெண்ணவே. - 3


கலங்களெண்ணில் கடலிடையோடுவ
நிலங்கள்புக்கு நெடுந்துலை நீணிதிக்
குலங்கள் கொண்டு குலாக்கொடுமீள்குவ
வலங்களாயிரமாயிர மென்பவே. - 4


காணுமின்னவைகற் புடைமாதாரார்க்
காணியாங்கலமாயிரமென்பரால்
வாணிகேள்வன் வகுத்ததன்றிச்செல்வ
நீணிலாமுடி நித்தனளித்தவே. - 5


கற்பகப் பெயர்க்காமருதாருவும்
பொற்புநீடிய பூமணிச்சங்கமும்
நிற்பகற்பக வெண்காடர் நின்றதா
மற்புதத் திருவெண்காட தாகுமே. - 6


அரசருமிவர்க்கஞ் சுவர்நெஞ்சுளே
பரசுபாணிப்படையுடைப்பண்ணவன்
விரதநிற்கும்விறலுடையோரென
முரசுமும்முரசும் முழங்கும்மரோ. - 7


முன்றிறோறு முழுமணிவாளொளி
குன்றலில்லிடியர்குழாங்களுந்
துன்றுமென்றுந் தொடுகடன்ஞாலத்து
ளொன்றுமீங்கிவர்க்கொப்பல வென்பரால். - 8


கோடிசெங்கதிர்கூடியுதித்தென
நீடுசோதி நிமலரைப்பாடுதற்
காடுமன்புவந் தங்குரித்தங்குரித்
தீடுகொண்டங் கிருக்குமியல்பினார். - 9


கற்றகல் வியுங்கேள்வியுங்காண்குறிற்
குற்றமின்றிக்குணங் கெழுகொள்கையார்
முற்றுமீங்கிவர் நன்குமொழிகுவார்
செற்றமேவுஞ் சிவனடியார்களே. - 10


சத்தியாங்குறு சம்புவின்றாண்மனம்
வைத்தசெல்வமுமண்ணினமக்குறா
துய்த்தசெல்வமு முள்ளுமுள்ளத்தராய்
வித்தகத்தர் விளங்குமந்நாளிலே. - 11


வேறு

மஞ்சு சூழ்தரத்தேன்றுளிப்பூந்துணர்வயங்கச்
சஞ்சரீகங்கள் சஞ்சரித்திசைத் தமிழ்தழைக்க
வஞ்சலித்தமர் முனிக்குழாமாரழலோம்ப
வஞ்சமில்லரன்வாழ்வதுமருதமாவனமே. - 12


அவ்வனத்திடைமருதிடத்தருளுருக்கொடுசீர்ச்
செவ்வியானந்தத்திருப்பொருளிருப்பது தெளிந்தே
யிவ்வுருக்கொடுதிருப்பொருளிருப்பதென்றுணராப்
பவ்வநான்மறையவைவலோரெங்ஙனம்பகர்வார். - 13


அப்பொருட் குருவுருவுகொண்டானிழற்கதுவிச்
செப்பவவ்வுருமுனிவர் நால்வருமுளந்தெளிந்தா
ரிப்படிக்கலாற்றேவருள் யாவுமேயறியா
ரொப்பிலப்பொருளுவு கொள்ளாதெனவுரைப்பார். - 14


அந்தமாந்தருங் கண்டருங்கதிவிதியடையச்
சந்தாமாவிலிங்கப்பெயர் தாங்குசெஞ் சடையோன்
சிந்தையன்பினாற்புடவியிற் செறிந்தமானவர்கள்
நத்துவானவர் போற்றவீற்றிருக்குமந்நாளில். - 15


ஏகநாயகனாகிய தன்னிருத்திருத்தா
ளாககூன்றுகாலங்களும் பூசைசெய்தருள்வோன்
*மாகநாடரும்பணி சிவமறையவன் வறியோன்
போகமாகவும் பூங்கதிபுகுத்தவும் புகழ்வோன். - 16


மனைவிபோயவன்றனிமையோன் மனங்கவன்றிருப்போ
னினியமாமனையாட்டியைப் பெறும்படி யெண்ணிப்
புனிதநாதனைப்பூசனை முடிவினிவிற்போற்றிக்
கனகமீந்தருடோகைபாகாசெனக்கழறும். - 17


அன்பினிற்பிரியாதவள் பாகவென்றன்னோ
னன்பினிற்பிரியாவகை யநுதினமிரப்ப
வன்பினிற்கன்பனாகியவமுதனாதலினா
லன்புருக்கொடு வருவதற் கிசைந்தன னருளால். - 18


18)

அன்னவேதியற்கருந்தனமளிப்பவுங்களிப்பா
லின்ன்றீர்ந்தவெண்காடர்க்குக்கதியளித்திடவு
மன்னுபூவுகத்துளோர்கண்டு வாழ்வுறவு
மென்னையாளுடைப் பரம்பரனொருவடிவெடுத்தான். - 19


மருதவாணனென்றொரு பெயருலகெலாம் வழுத்தப்
பருவமெண்ணிரண்டாண்டுடைப்பண்ணவனாகிக்
கருதினுங்கணிற்காண்பினுங் கேட்பினுங்கலந்தோ
ருருகுமன்பினன்றன்னைத்தானருச்சனையுவப்போன். - 20


எழுதுமென்கணக்கியாவையுமறிபவருன்னன்
மழுவிளங்கெழுத்தாணியாத்திரித்துவாண்மலர்க்கைப்
பழுதில்புத்தகத்தேடுநீடேடெனப்பரித்து
மழகுதுன்றிவன்யாவனென்றி யாவருமறிய. - 21


பிட்டுவட்டவான் கடலிடைப்பிறந்தகாரால
மிட்டபிச்சை வேட்டுவன்றசை சேந்தனாரீந்த
கட்டுமட்டவிழ்போல வெண்சோறுகைக்கொண்டு
முட்டநின்ற தாட்டாமரைப்பூ மகள்முடிப்ப. - 22


வந்துநம்பிவாழிடவகையிடைப்புக்குமிக்க
கந்தமார்கடுக்கையுறுகண்ணியன் கனிவா
விந்தவாரமுதுண்டிடச்சுவைக்கறியீக
வந்தணாளவென்றறைதலும் பூசுரனறைவான். - 23


அறுசுவைக்கறியமுதுநின்வாக்கினாலறிந்தேம்
நறுமைமேவிய சிறுவகேளெனவிறைநவின்றா
னிறைவணங்கையிலன்னமங்கோரிடத்திருத்தி
யுறையுமில்லற நங்கையெங் கேயெனவுரைத்தான். - 24


போன்னுலாவியசெஞ்சடைப்புராதனன்புகல
வன்னவேதிய னியம்புவா னமருமில்லறத்தாள்
மன்னுநாயக னுலகுளா ளென்றுரைவரைய
வின்னும்வேறொருகன்னியைமணஞ்செய்வீரென்றான். - 25


வேறுமிங்கொருகன்னியைவேட்பதற்கன்னோன்
பேறுகாண்கிலேன்வறுமையெம்பே றெனப்பெற்றே
னாறணிந்தவர்திருவுளமின்னதென்றறியேன்
றேறுமன்னவர் நினைப்பரேற்றிருவெலாஞ்சேரும். - 26


என்றவாய்மோழிகேட்டலு மெழுந்திளங்காளை
நின்றதாய்தமரொன்றிலேனிகழுமெப்பொழுது
மொன்றுலோகத்திற்றொழிலெலாம் வல்லமையுடையே
னென்றனைக் கொடுவிற்றுநீர்வறுமைதீர்ந்திடுவீர். - 27


சொற்றுளேனெனப்பூசுரனினவுளந்துளங்கிக்
கற்றகல்வியான் மேல்வருவனமனங்கருதி
யிற்றைநாளுனைவிற்பனேல் விளைவதிங்கென்னோ
பற்றிலேனின்னகாரியம் பழுதெனப்பகர்ந்தான். - 28


பழுதடைந்திடிற் பரிகரித்திடலுமென்பார
முழுதும்வல்லவனெவ்விடத்தியாவையுமுடிப்பா
னெழுதுமாவண மீங்கிவர்க்கண்டெனவிசைத்தாற்
றொழுதுநீதியாய் முடிவுறுமிவ்வணந்துணிவே. - 29


நீதியின்றிது சிறுவநீ நிரப்பியவார்த்தை
வேதியர்க்குழாமரசராளேவலோர்வினவிற்
றீதுசெய்குவார்வைகுவார்சிறுநகை செறிப்பா
ராதலாலிவை தவிர்தலேயறனெனவறைந்தான். - 30


அஞ்சலையநீர்விலைக்குறவிற்பதேயழகா
லெஞ்சலில்பொருடருவதற்கிசைந்தியானிசைத்தேன்
வஞ்சமில்லதோர்புண்ணியமென்னுழிவருமாற்
செஞ்சொலாமெனப்புண்ணியன்றேற்றிடத்தெளிந்தான். - 31


தெளிந்தபூசுரனாவணம்பழம்படித்தீட்டி
விளங்கநல்கினோன்றனைக்கொடுகோயிலுண்மேவி
வளங்கொணாதனைவிடைகொண்டு பூம்புகார்மருவக்
களங்கமொன்றிலான்படர்ந்தனன் காவதமநேகம். - 32


சுந்தரப்பெருமாணையினார்க்கு முன்சுடர்ப்பொன்
றந்தவள்ளியோனவர்குலத்தலைவரா மொருவற்
குய்ந்திடப்படிக்கா சளித்தவனிவருடன்போய்
நந்தலில்லவாந்தமனியமீகுவானடந்தான். - 33


சங்கவான்றமிழ்மதுரையிற்பாணனார்தமக்குத்
துங்கமாகியவாளெனவிந்தனஞ்சுமந்தா
ரிங்குமாங்கதுபோன்றனராட்கொள்வானெண்ணி
யங்கவாருயிர்யாவையுமடிமையுமடியாவுடையார். - 34


புக்குளாரிலர்புகாரெனும்பட்டினப்புடைபோய்
மிக்கநீதியால்வாழ்வணிகேசர்தம்வீதிப்
பக்கமேவிலைபகர்ந்தனர் பகரலும்பரிவாற்
செக்கரஞ்சடைமுடியவரடியவர் தெரிந்தார். - 35


மறையவன்றனையிறையவன்றனைவரவழைத்துக்
குறையுறாதவெண்காடர்முற்காரணக்குறியா
லுறையுமீங்கிவனிடத்ததிசயமென்கொலுரையீர்
நறையுலாவியவிடைமருதுடையநாயகரே. - 36


இயம்புமம்மொழிக்கெதிர்மொழி யிவர்சொலாமுன்னர்
நயம்புணர்ந்தவாளாயவனலங் கொளநவில்வான்
வயங்குநன்மணியாவையும்விலைநிலைமதிப்பே
னியங்குபற்பலதொழிற்குமீங்கெனக்கு நேரெவரே. - 37


எனுமவன்றனைமகிழ்ச்சியானோக்கி யெம்மிடஞ்சேர்
வனமறாமணி விலைமதிப்புறாததுமதித்தா
லனையவன்சொன்னதொக்கு மென்றருமணியளித்தார்
புனிதவாண்மணிமதித்தனன்பின்னரும்புகல்வான். - 38


நவமணிக்கணவிலக்கணமியாவையுநவில்வேன்
கவலுநெஞ்சிலாத்தலைவர்நீரன்னதுகாணத்
தவமியற்றினீர் முன்னரேதிருவெலாந் தழைப்பப்
பவமகற்றவும் பெற்றுளீரறிவெனப்பகர்வான். - 39


வேறு.

பார்க்கவ முனிவன்சொன்னபடிவலாசுரன்றவங்கள்
சீர்க்கவேசெய்யச்செய்யச்சிவனவன்முன்னர்த்தோன்ற
வேர்க்கின்றதவங்கணன்று வேண்டியதென்னையென்னத்
தார்க்கொன்றை மௌலியானைவணங்குபு சாற்றுகின்றான். - 40


என்னுடைவடிவமெல்லாமினமணிவடிவமாக
நின்னதுகருணையாலேயருள் கெனநிமலனீந்து
முன்னரேமறைந்தபின்னர் முனைவலாசுரனும்போந்து
பன்னருமகவான்யாகப்பசுவெனத்தயாலி* ன்வந்தான். - 41


வந்தவப்பசுவைப்பற்றிவச்சிராயுதத்தினாலே
யுய்ந்திடவுரிந்துகொண்டவுறுப்பினைவிண்ணோருண்ண
வெந்தவவ்வுறுப்புத்தப்பி வீழ்ந்தனவித்தாய்மண்மேற்
சிந்துவிற்பொருப்பிற்றீவிற்சிறந்தநாட்டினிற்பரந்தே. - 42


விளைந்தனமணிகளாகவிண்ணவர்மண்ணோர்பூண்பார்
வளம்படு வெற்றிவீரவலாசுரனுடல மொன்பான்
களங்கமின்மணிகளாகிற்புனிதமேகாண்மினென்ன
விளங்குலககுபகாரத்தால் வீந்தனன்புநிதமாக. - 43


மன்றுளேயாடு மெங்கண்மாணிக்கக்கூத்தானார்க்கு
நன்றிசெய்வார மேழுநவமணிவிழாவிற் பூண்பா
ரென்றிடிற்சங்கையிங்கேனிவைதரிப்பவர்க்கு வென்றி
யொன்றியவீரஞ் செல்வமோங்குமென் றுரைக்குநூலே. - 44


மலரணிமாலைமேலாமணியணிவண்ணமாலை
விலைமணித்தாரைப்பற்றமாணிக்கமாலைமேலாம்
பலமெனவாகமத்தும் பகர்தருமாதலானு
மிலகியமணிகடேவர்யாவரும்பூணலாமே. - 45


ஞாயிறுமாணிக்கங்கோமேதகந்திங்களாரம்
வாய்வயிடூரியஞ்செவ்வாய்வளப்பவளமாகு
மேயவன்புதனிற்பச்சை வியாழமாம்புட் பராகங்
காய்கதிர்வெள்ளிவச்சிரங் கடுஞ்சனிநீலங்காணே. - 46


பசுவென்புவயிரம்பல்லு பனிமுத்தங்குருதியோதில்
வசையறுதிருமாணிக்க மயிர்வயிடூரியங்கண்
டசைபவளங்கணீலந்தரும்பிச்சுபச்சைமெச்சு
நிசகவம்புட்பராக நிணங்கோமேதகமென்றாமே. - 47


வயிரமுத்தந்தணாளன் மாணிக்கம்பவளம்வேந்த
னயமலிபுட்பராக நல்லகோமேதநீதி
வயவயிடூ ரிய மூன்றும் வாழ்வுறுவணிகனாகு
மியலுடைநீலம்பச்சை யிரண்டுஞ்சூத்திரனாமன்றே. - 48


படிகமஞ்சனக்கற்கூட்டிப்பதினொருமணியாச்சொல்ப
முடிவுறுமிம்மணிக்கு முக்குணப்பிரிவுஞ்சொல்வாம்
வடிவுறுபடிகமுத்துவைத்தசாத் துவிகமாமால்
விடுதுகிர்மாணிக்கங்கோமேதகமிராசதம்மே. - 49


அஞ்சனக்கல்லு நீலமாலுந்தாமதமாகு
மெஞ்சில்சாத்துவிகத்தோடு மிராசதங்கலத்தல்வச்சிர
மஞ்சுறு புட்ப ராக மணிவயி டூரியமாகுந்
தஞ்சராசதங்கலந்தசாத்விகம்பச்சையாமே - 50


நவமணியர்ச்சித்தற்கு நறுமலர்ப்புனைதல்சொல்வாந்
தவறின்மாணிக்கத்திற்குத்தாமரைப்பூத்தரிக்க
வுவகையாமுத்துக்கோதுமொண் சிறுசெண்பகப்பூ
சுவைபடுபவளம்பார்க்கிற்கமழுஞ் செவ்வல்லிப்பூவே. - 51


மரகதங்காந்தம்புட்பராகமல்லிகைப்பூவச்சிர
நுரைதருநீரிற்பூத்தநுாறிதழ்த்தாமரைப்பூ
கருநீலங்கருவிளங்கோமேதகங்கமழுங்காவி
திரைவயி டூரியப்பூத் தேம்படு வெண்மந்தாரம். - 52


தூயநனிலத்திலொத்தசுத்தபீடத்தைவைத்து
மேயவப்பீடமீதுவெண்படாம்விரித்துவைத்துப்
பாயவப்படத்து நாப்பண்பதுமராகத்தைவைத்துச்
செயவாதவனுதிக்குந்திசைமுதற்றிசைகடோறும். - 53


கோமேதநத்துமுத்துக்குளிர்வயிடூரியஞ்செந்
துாமேவுபவளம்பச்சை சுந்தரப்புட்பராகம்
யாமேவுவயிரநீல மெண்டிசைவலஞ்சூழ்வைத்துப்
பூமேவமுன்னஞ்சொன்னபூவினாற்பூசைவெய்வார். - 54


தோன்றியவயிரமென்றசொல்லுக்குப்பொருளென்னென்னின்
மூன்றுலோகத்திலுள்ளமுறையுலோகங்களெல்லாங்
கீன்றவைதுளைக்குந்தன்னைக்கிளைபடைதுளையாதென்று
மான்றவிச்செய்கையாலப்பெயர்பெற்றுமேலுமாமே. - 55


ஒருவலாசுரன்றதீசியுடலென்புவீழ்ந்ததேச
மரதனநாடென்றாகுமத்தேசங்கெளசலாதி
வருமதிலுதித்தவச்சிரம்வாகைப்பூநிறத்தவாகும்
புடைகலிங்கத்துதித்தவயிரம்பொன்னிறத்தவாமே. - 56


மாதங்கதேசவச்சிரமல்லிகைமலரின்மேனி
பீதஞ்சேரிமயவெற்பிற்பிறந்தன தவளமேனி
தீதங்கின்மாராட்டத்திற்செனித்தனசிவத்தமேனி
யோதுஞ்சவ்வீரதேசத்துதித்தனகரியமேனி. - 57


பேசியபௌண்டரத்திற்பிறந்தனகுவளைமேனி
யோசையேமக்கதேசத்துதித்தபொன்னிறத்தவிப்பால்
பூசியவாகைவாழை மூங்கிலின் பூநிறத்த
மாசிலாவச்சிரங்கட்கச்சுதன்றெய்வமாமே. - 58


ஓரமாறாய்வெளுத்தவயிரத்தேயும்பர்கோமான்
பாரியபசுவின்கொம்பிற் பலநிறவயிரங்கூற்றாங்
கூரமுள்ளிலவம்போது குலாவியபலாசம்பொற்பூச்
சீரியவயிரத்திற்குத்தெய்வமிவ்வாயுமே. - 59


கோங்கலர்நிறஞ்சிறந்த குறையுறாவயிரத்திற்குத்
தேங்கியநாராஞ் சேருந் தெண்டிரைவருணனாகு
மோங்கு நீர்நிறவச்சிரத்திற்கொளிகொள்வெண்டிங்கட்டேவன்
பாங்குறுகோபமேனிவயிரத்தே பரிதித்தேவே. - 60


தீநிறவயிரத்திற்குச்செய்யதீக்கடவுட்டெய்வ
மானவிவ்வயிரத்துள்ளு மமைந்தநாற்குல முமுண்டு
வானுறுபடிகம்பாயுமுயற்கண்வாழைக்குருத்து
நீனிறைகார்வானத்து நிறமணிமறையோராதி. - 61


வயிரங்கணான்குமந்தவருணத்தோரடைவிற் பூண்பார்
செயிரொன்று முறாவிவற்றுட் செங்கதிர்வயிரஞ்செப்பிற்
பயிலுறுவிலைமதிக்கப்படாத்திற்பணிகள்பூணார்
தயிரியஞ்செல்வமாரோக்கியந்தருந்தரிக்கலாமே. - 62


அரசர்தமௌலிமேலுமணியொணாவரசிமார்க்கு
மருவியதாலிப்பூணில்வயிரத்தாற்பண்ணவொண்ண
பரவுமிவ்வொன்றுமன்றிப்பற்பலவயிரத்திற்கு
மிருமைசூழ்குணங்குற்றங்களின்னுமிங்கியம்பலுற்றேன். - 63


*துவன்றிடுதாரைசுத்தி நோய்மையிந்திரசாபம்நே
ருவந்திடுபலகையாங்கணோக்கிய வெண்கோணங்க
ளவந்தவிராறுகோணமைந்து கோணங்களாக
நிவந்துளகுணங்களேழா நிகழ்த்துபமணி நூல்வல்லோர், - 64


குலவியதாரைகேடுகொடுந்தாரைமழுங்கல்கீற்று
மலமொடுகாகபாதம் வருதுளைபிளத்தல்விந்து
பலகொடிகெடுதல் கோடிமுரிதல்சப்படியிருத்து
விலகியகுற்றமீரா றென்றனர் வென்றிநூலோர். - 65


அம்புவாளிம்பர்தையாவாட்படைஞாட்பில் வெல்வார்
செம்பொருட்சிறுதேசத்தார் செலுத்துவர்பஃறேயங்கள்
பம்புநல்குரவு பூதம்பசாசுபாம்பங்கி தீண்டா
நம்பமுன்சொன்னசூரியநல்வயிரங்கொள்வார்க்கே. - 66


இனிமுத்தின்குணமுருட்சியிலும் வான்மீனின்றேசு
கனமறுவின்மைநோக்கிற்கவினுறல்படிகநன்று
வினவுமண்ணேறல்சென்னீர்சிவப்புமென் முகங்கறுத்த
லினமருளிவற்றினோடு கோணலென்றீரைங்குற்றம். - 67


பனிமதிகதலி மேகம்பைந்தொடி கழுத்தாவின்பற்
றனியானையேனக்கொம்பு தடங்கராவுடும்பு கொக்கு
வினையராச்சலஞ்சலஞ்சங்கிப்பிமீன் மூங்கிற்பூக
நினைசெந்நெற்கரும்புகஞ்ச நிகழிருபது முத்தீனும். - 68


இருபதுமுத்தீன்றாலுமிப்பியின் முத்தேநன்றால்
விரவுமைப்பசியிற்சோதி மின்னெறிசிறிதுநாளில்
வருமிப்பிவாயில்வீழ்ந்தமழைத்துளியொளி முத்தென்ப
தருமணிநெடுநாட்செல்லிற்றாய் வயினுருகியொன்றும். - 69


தடங்கலிலிங்கைமூதூர்ச்சமனொளிசூழ்ந்தபாங்கர்
மடங்கலிலலகையாறு மாவிலிகங்கைதங்கி
யிடங்கொள்கம்பலையினோடு கல்லிணையெனு நான்காற்றிற்
றிடம்படவிளைமாணிக்கத்திறங்களுமறிந்துசொல்வாம். - 70


குருவிந்தமொடுசாதாங்கங்கூறுகாவாங்கநன்மை
மருவுசௌகந்தி நான்கின்வடிவினிற்குணங்களீரா
றுருவினிற்குற்றமீரெட்டொளிக்குணமிருபத்தொன்பான்
பரவெளிக்குற்றந்தீரப்பன்னிப் பின்பகரலுற்றாம். - 71


செங்கையிலெடுக்கிற்றேய்க்கிற றீயினிற்சேர்க்கிற்றூக்கிற்
பங்குறுதகட்டிற் குச்சி னிற்பகர் வெயிலினள்ளின்
மங்குதலிலாவோரத்தின் மருத்திற்கைக்குறியினெய்த்துத்
தங்குபார்வையினினேர்ந்து சிவந்துசார்குணமீராறே. - 72


கருகுதல்போதில்செம்மண்கரும்புகையிறுகல்கோபந்
திருகுதல்முரண்டராசுமத்தகங்குழிதல்செப்பில்
விரவியபுடாயம்நெய்ப்பில் காற்றிலைச்சுமியேவெச்ச
மிருமைதீர்சந்தைகேடென்றிவைகுற்றம்பதினாறாமே. - 73


சாதகப்புள்ளினோட்டந்தாமரைகாவிகோபங்
கோதின்மின்மினியாதித்தன் கொழுங்கனலெரிவிளக்கு
மாதுளங்கனிப்பூப்பத்துஞ் சாதாங்கமணிக்குணங்கா
ணோதியகுருவிந்தத்தினொளிக்குணமினிமேற்சொல்கேன். - 74


செம்பஞ்சோடரத்தநல்ல திலகநீளிலோத்திரஞ்சீர்
நம்பியமுயலின்சோரிநக்க சிந்தூரங்குன்றி
வம்புறுமுருக்கம்போது வரு மெட்டாம சோகுசெம்பஞ்
சம்படுமலரி செம்போடிலவம்பூவருங் குயிற்கண். - 75


இவ்வாறுஞ் சௌகந்திக்காமெழிற் குணமினிக்காவாங்கின்
மெய்வாய்த்தகுணங்கார்ப்பூவெண் கோவைசெங்கமலமஞ்சள்
துவ்வாயகுங்குமம்போற் சொல்லொளியோரைந்தாகு
மவ்வாயமணிக்குணங்களாகவோரிருபத் தொன்பான். - 76


நீலத்தின்குணங் காயாம்பூ நெய்தற்பூக்குல்லையப்பூக்
கோலியகுழக்கன்றின்கட் குயிற்கழுத்தவிரிச்சாறு
வாலியமேகமெட்டாங்கிட்டமஞ்சணிதராசு
மேலுமன்பிணிகொள்வச்சமிரசஞ் சர்ச்சரையெட்டீனம். - 77


பவநனகுணஞ்சிந்தூரம் பன்னுசெம்மணிச்சங்காய
துவமுசுமுசுக்கைவீரை தூதுணம்பழம் போன்றாறாங்
கவைமுடந்துளை கறுப்புத் திருகுதல்வெளிறல்கல்லென்
றிவைகளோராறுங்குற்றமென்பர் நன்புலமையோரே. - 78


பச்சையின்குணங்களோதிற் பசுங்கிளிமயிற்கழுத்து
மெச்சிளம்பயிர்பொன்வண்டின் வயிறுமின்பொன்பசுத்தல்
நிச்சயப்பத்திபாய்தனெய்ப்பெழாவெளிறுகண்மண்
கச்சிடுந்தராசங்கற்றல் கருகுதல்பெறலேகுற்றம். - 79


தழைவயிடூரியம் பொற்றகட்டினின்முலைப்பால்வார்ப்ப
வொழுகியவொளியாங் கோமேதகம்வயிடூரியத்திற்
றழுவுதன் மேனியாம்புட்பராகம் பொற்றகட்டிற்றேன்பாய்
முழுநிறமாமிவைக்கு மும்மணியென்றுநாமம். - 80


அத்தனாரீச்சுரத்தால்வருமணிப்பச்சைசெம்மை
யொத்தொருநிறமதாக்குமொள்ளெரி யொளிவெள்ளாரம்
வித்துருவங்களென்றும் விளைவின்றிவிளைவிப்பார்க
ளுய்த்தகண்மணி யானொக்கினெண்மணிபோலுமாலோ. - 81


நல்லியற்கோரவல்லி நாட்டியகனக்கோர
வல்லிசொல்லியவாமற்றுமணிகளுமேரு வெற்பிற்
சொல்லியனடவாநிற்குந் துணைமணிவிடங்கடீர்க்கு
மொல்லியன்மணிகள்யாவு மும்மணியாகுமன்னோ. - 82


மானாகமீன்றவான்றமணிகளுமான்மார்பின்க
ணானாதமணியுஞ் சிந்தாமணியுமாங்காங்கறிந்து
வானாடர்மகுடக்காசுமதிப்பனவருமென்றென்று
பூநாகஞ்சடைக்கணிந்த புண்ணியனருளிச் செய்தான். - 83


மற்றுளதொழில்வெவ்வேறுவல்லமைசொல்லு நல்லோன்
குற்றமில்குணத்தானென்று குறித்தனர் திருவெண்காடர்
செற்றமில் சிந்தையிந்தமைந்தனே திறைகொண்டானென்
றிற்றுணர்ந்தந்தணாள ரெழின்முகநோக்கிச் சொல்வார். - 84


(84)

என்னுடையிடத்திலந்த மைந்தனுற்றிருத்தல்வேண்டு
மன்னவன்றனக்குப்பொன்னோராயிரமளிக்கேன் முன்னாட்
பன்னியமூலவோலைபலரறிதாலவோலை
யின்னரேநல்கீரென்றார் நம்பியுமியைந்தானன்றே. - 85


ஒருவனைமணம்விலக்கியுற்றவன்றொண்டு கொண்டு
பெருகுமாவணமுங்கொண்டோன்பிறங்குமங்கவன்குலத்தாற்
கிருமணஞ்செய்துவன்றொண்டாகியாவணமீவோன்போன்
றருளினால்வந்தவன்றனாவணந்தனங் கொண்டீந்தான் - 86


ஈந்தபினெழுந்து நம்பியேகநாயகனையேத்தி
வாய்ந்தவெண்காடர் நீடமாசிலாசிகளுங்கூறிப்
போந்திடமருதிற்புக்கு புதுமணம்புணர்ந்துவாழ்ந்தான்
சேந்திடுமருதவாணன்செய்கையேமேலியம்பலுற்றாம். - 87


மருதவாணனைவெண்காடர்மகண்மையாக்கொண்டதன்றி
யுரிமைகூரடிமாயாக வொருகணப்போதுமெண்ணா
ரருளினாலிவனுமந்தமன்பருக்கன்பனானான்
றெரிவராதிவருந்தானுன்திருநெல்வேலியின் வெயொத்தார். - 88


இவ்வாறிங்கொழுகுநாளி னெழிற்றொழில்வாணிபங்கள்
செவ்வானமேனியன்பாலளித்தனர் திருவெண்காட
ரொவ்வாததுறைகடோறு மூதியமதிகமாக்கித்
தெவ்வானபெயரும்வந்து திறையிடச்செய்வித்தானே. - 89


செய்திகளிவையுமன்றிச் சிந்துயாத்திரைக்குப்போந்திங்
கெய்திடல்கருதியாங்குமிங்கும்வேண்டியவையாவும்
பைதிரமதிக்கச்செய்து பற்பலசரக்கு மொக்கப்
பெய்தனர்கலங்கொடுய்த்தார் பெருந்திருநீங்காதோங்க. - 9'


ஓங்கியகலத்தினாளுமோரையுஞ்சேர நோக்கிப்
பாங்குறக்கண்டுகொண்டுபகட்டுமாமுகத்துவள்ளற்
காங்கணியினியசெந்தே னமுதமோடளாவிநல்கித்
தீங்கிலாதானையேத்திச் செழுங்களிபிறங்கினாரே. - 91


அருங்கலமீதுபோது மமுதனைக்கங்கைநங்கை
கருங்கடல்வடிவாய்த்தானுந் தாங்குதல்கருதினாள்போ
னெருங்கலைக்கரத்தாலேந்த நெடுங்கடலோடிநாடி
மருங்குறுவணி கமாக்கண்மனங்கவலுறாதுசென்றாள். - 92


சென்றுநாடியதோர் தீவிற்சேர்ந்துதான் கரையைச்சார்ந்து
வன்றிறச்சரக்குமாற்றி மறுசரக்கேற்றிப்போற்றிக்
குன்றினின்றிழிவார்போலக்குரைகடல்கலத்தானீந்தி
மன்றலங்க்கொன்றைவேய்ந்த வாண்டகைமீண்டுவந்தான். - 93


வந்தவாணிபத்தாற்பெற்றவளமெலாம்வளர்பொன்னாக்கித்
தந்தனன்றிருவெண் காடர்தருக்கறாமகிழ்ச்சிபொங்க
வெந்திறல்விடையினார்க்கு வேண்டியசிறப்புநல்கி
யுய்ந்திடச்செய்தாரிவ்வாறொழுகினான்வழுவிலாதான். - 94


மந்திரத்தலைமைசான்றமதிமுதுசேந்தனாருஞ்
சந்ததங்கண்டுகண்டு தம்முளேமகிழ்ச்சிபொங்க
வந்துறுமருதவாணன்வனப்புறுசிறப்புவாய்ப்பச்
சுந்தரம்பலிப்பச்செய்தார் சூழழுக்காறிலாதார். - 95


பின்னருமாரவாராப்பெருங்கடற்புக்கும் போந்துஞ்
சென்னியனாளுறாத தீவினுமரும்பண்டங்க
னின்னிலமதிக்கக்கொண்டுவருமிருங்கலங்களோட்டுந்
தன்மைமீகாமரெல்லாந்தங்கண் மீகாமனென்பார். - 96


ஆயதன் கருணையாகுமலைகடலிடையானந்தத்
தூயமாக்கலத்திலேற்றித் தொகும்பொருட்டனையேநல்க
மேயசீர்வெண்காடர்க்கு விளையாட்டுகாட்டிநாட்டு
நாயகனின்னவாறுநாடகநடிக்குமாலோ. - 97


இன்னம்பரெனு மூதூருமிருக்குமிவ்வணிகனம்ம
பொன்னம்பர்கமழுமாழிப்பூவம் பர்புழுகுசாந்த
மின்னம்பர்மாலாரம்மைமேருமால்வரையாம்வில்லர்
நன்னம்பரென்றுகாணா நல்லவெண்காடர்க்கீவான். - 98


பரந்தபாய்விரியா தோட்டும்படரெதிர்காற்றிலோட்டுஞ்
சரம்படர்வதுபோலோட்டுந் தடங்கடற்குதிரைநாவா
யரந்தையாற்றத்தார்பூட்டுமவர்களை நகைத்துநோக்கும்
வரந்தருமருதவாணன் வருதிருவிளையாட்டன்றே. - 99


இவனிவெணங்குளானோவெண்ணருந்தெய்வங்கொல்லோ
தவறிலாமோகர்சித்தர் தம்மிலீங்கொருவனேயோ
வவலமொன்றில்லானிந்தவாண்டகையென்றென்னும்
பவர்திருநீங்காதோங்கும்பட்டினம்பகருமாலோ. - 100


சிறிதுநாளின்னவாறு திருவுறச்சரித்தபின்னர்
மறுவிலான் முன்போலின்பமரக்கலம்பாய்விரித்து
நெறிசெறிவணிகரோடுநெடுங்கடலொருதீவத்துப்
பொறியுறப்போந்திருந்து புரிந்தவாபுகலலுற்றேன். - 101


வேறு.

கொடுபோகியசரக்கெங்கணுங்குலவாவிலைநிலவத்
திடமேலிடுநற்பொற்கிழி சேமத்திடையொடுக்கிக்
கொடைமேம்படலாகித்தெரிகுரவோர்மடம்பலபோய்த்
தடநீடியபுகழ்வேண்டினன்றாழாதறம்புரிவான். - 102


அலந்தோர்களுக்களித்தும் நெறியறிமாதவர்க்களித்தும்
நலந்தீங்கினரென்னாதறநல்கூர்ந்தவர்க்களித்துங்
கலந்தேபொருந்தினர்யாவர்க்குங்கடனாவுடனளித்தும்
நிலந்தேறிடத்தேவேசர்க்கு நிதிவேண்டியதளிப்பான். - 103


உடன்போந்துளபடுமாந்தரு முடையானறிகுவனே
லடங்காதிவன் புரிகாரியத்தாற்றீங்கிழைத்திடுமால்
முடங்காதினியாமாகவிம்முறைகூறிடின்முனிவான்
வடந்தாங்குமென்முலையாரொடுமருவாதொருநலனே. - 104


என்றென்றவர்மொழியப்பொழியேமக்கொடையுடையோன்
குன்றொன்றினைவகிர்செய்தறங் குறையாவகைநிறையப்
பொன்றங்கியதிருவாலய மெடுப்பிப்பது பொருட்டா
னன்றொன்றியநிமித்தக்கிளை நாட்டிப்பொருள்பூட்டி. - 105


மாலிங்கமெனத்தான்முளைத்திருந்தான்மணிகண்ட
னாலிங்கனம்பொருந்தாவுடையாளும்பெறநாளுங்
கோலஞ்செய்சோபானம்முதற்குளிர்தூபியந்தஞ்செய்
தேலும்படிகோலும்படியெல்லாமமைவிப்பான். - 106


வெண்டிங்களை முடிசூடியவியன்கோபுரமருங்கிற்
கண்டங்கியவாயிற்புடைகனமாமதிலியற்றி
வண்டங் கணியளகாடவிமடமாதருமாடற்
கெண்டங்குமுழாக்கொட்டிடுமிளமாக்களுமிசைத்தான். - 107


இசைவித்தொளிர் மணிமண்டபமெழிலோங்குறவியற்றி
யசைவற்றிடுமலையான்மகளணி கோயிலுங்குயிற்றித்
திசைவிட்டொளிர்வேழம்முகன் செவ்வேள்சினகரமு
நசையுற்றவிழாமற்றவு நடித்தானுடன்முடித்தான். - 108


தனைத்தானருச்சனையாற்றுதல் சோணாட்டினுந்தடங்கார்
கனைத்தோடியகடற்றீவினுங்கண்டேமெனப்பெரியோர்
புனற்கூட்டியசடைக்காட்டினன் பொருட்பூசனைபுரிந்தூ
னினைத்தாங்குறுசிறுமாக்களுநிறைமாக்கதிபெறவே. - 109


அத்தீவத்திலுள்ளோர்களு மையனுடனடைந்தோ
ரித்தேயத்தரெல்லோர்களுமிறைசே வையினுய்ந்தார்
மெய்த்தானத்துளெக்காலமும் விழைபூசனைபுரிவான்
வைத்தானிலந்தலையூர்களு மற்றுமமைவுறவே. - 110


பொன்னாமவைபலவுஞ்செலப்போக்குந்தானோக்கான்
என்னாமினியென்போர்களுக்கென்னா மினியென்னான்
பன்னாவருமெருப்பாண்டிங்கள் பலகோடிகளுளவாற்
றென்னாவெனவிசைபாடுமின் செல்கொமினியென்பான். - 111


எருவட்டங்கணந் தேய்த்து மிலவோபொருள்வருமா
றொருமித்திடுமென்பார்கடலுடனோடியபுடையோர்
வருமித்திறவோர் சொற்சொலவொருமித்தனமைந்தன்
முரணிச்சரக்கேற்றீரென முன்சொன்னமைசொன்னான். - 112


கிடையாச்சரக்கேதேனுமிக்கிளர் பூங்கலங்காணேம்
நடையாற்றிடைப்போதற்கிவனன்றாத்துணிவிற்றா
னுடையே நமக்கிணையாவர்க ளென்றுளங்களித்தார்
தடையாவதுமறப்போதற்குவிரைந்தான்றருக்குடையோன். - 113


பலவாய பொற்சரக்கேற்றினர்பலரும்பலமுறுவான்
நலனாமிவன்சரக்காமெரு நகையாடிடவேற்றி
யலையாழியினடக்கும்படியரும்பாய்மரம்விரித்தார்
சிலநாளிடையடைபூங்கலஞ் செல்கின்றனபலநாள். - 114


உடன்போந்துள வணிகக்கிளையுறுதீவிறகிலராய்க்
கடன்கோடற்குக்கரு திக்கொடுகடல்வாய் விடமிடற்றி
லடங்காவருமவனைக் கடனளிப்பாயெனவ ளித்தான்
முடங்காச்சரக்கிவைபோலவணளிப்பீரென மொழிந்தான் - 115


மொழிகின்றதற்கிசைந்தார்முறிமுக மன்னொடுகொண்டான்
வழிவந்தவன்மதுராபுரி மருங்கேயெரிகரும்பால்
விழைவொன்றிசை யிசையாளரை வெண்றோரிடநின்றோ
னழிவொன்றுமிலாதானவர் தமைவென்றிடலரிதோ. - 116


கடலோடிய கலநீடிய கரைகண்டது விண்டோ
யிடிபோன் முரசெறிந்தார்நகரெல்லோர்களு மறிந்தார்
மடியாதமனத்தானொடுவணிகக்கிளையெவரும்
படியேறினர் மலர்வாண்மும்பங்கேருக மொத்தார். - 117


திருமாநகரெங்குங்களி திளைக்கத்தெளிவிளைக்கு
மருதாளியும் வெண்காடர்த மணிமாளிகை புகுந்தா
னொருமாமணி யளித்தானவரு வகைக்கடல்புக்கார்
வருவோர்களிற் பொல்லார் சிலர்வந்தின்னனமொழிவார். - 118


தீவிற்புகுந்ததுவுஞ்செறிசெம்பொற்றிரட்பெருக்காற்
கோவிற்புனைந்ததுவுங்குறைகொண்டோர்க்களித்தனவு
நாவிற்புகழ்ந்தோர்க்கீந்தது நவின்றாரஃதன்றி
பூவிற்சரக்கெருச்சேர்த்ததும் புகன்றார்நகைபுரிந்தார். - 119


என்செய்தனை யென்றின்னவன் முகநோக்கினரிவனும்
பொன்செய்திரள்போயிற்றினிப்பொருள்வேண்டியதருகேன்
வன்செய்கையின்வெகுளாதொழிவீரென்றுரைவகுத்தான்
முன்செய்கைமொழி்ந்தார்களுமுரண்கொண்டயல்போனார் - 120


எருப்பாண்டில்களெல்லாஞ் சரக்கிடுசாலையினிறைப்பத்
தருக்காலிவன்சொற்றானிறை தாழாதுசெய்தழைத்தார்
மருப்பூவணிவெண்காடர்தம்வயத்தாங்கவர் முறிப்பால்
விருப்பாலளித்தனன்வாசித்து வெகுண்டார்பொருள்விழைவால் - 121


பொருளீகுவனெருப்பாண்டிலிற் புக்கொன்றெடுதொழுவா
மருளுள்ளவம் முறியாளரைவரவிங்கழைப்பவர்முன்
கரையொன்றினை யென்றானொரு கைவல்லவன் கரைத்தா
னெருவுள்ளெரியெனச் செம்மணி வெயில் விட்டெறித்தனவே - 122


இத்தன்மையிற்கடன்கொண்டுளவெருப் பாண்டில்களெவைக்கும்
வைத்தன்னவர்விலை நோக்கினர் வணிகக்கிளைமாக்க
ளொத்துள்ளன வென்றார் பொருளிலமென்றுரைவரைந்தா
ரத்தன்மையில்வெண்காடருமடிமைத்திறங்கொண்டார் - 123


கொண்டாரருடருமான்றனைக்கொண்டாடினர்குளிர்தோய்
வண்டாமரைமலர் போன்முகமலர்ந்தார்மகிழ்ந்ததற்பி
னெண்டானிறையெருப்பாண்டில்களராய்ந்தனரெரிநேர்
தண்டாமணிகண்டாரிலைதவறாமிது வென்றார். - 124


எருவஞ்சகனிவனைத்தனியிருத்தித்திடந்திருத்தித்
திருவஞ்செறிபொருள்கேண்மின்களென்றாரதுசெய்தார்
கருநெஞ்சினனவர்பக்குவக்கவினோக்கியங் கிருந்தா
னுருவஞ்சிறிதிலதுண்டலனொருவன்றெளியொளியோன். - 125


ஒளியானெனவிவனோரிடத்துறைந்தானெங்குநிறைந்தான்
குளிர்போகியகங்குற்பறைகொட்டுஞ்சிறுபூத
மளிநீடியசிலபூதங்க ளாடுஞ்சிலபாடும்
வெளிமேவியகணநாதர்கள் விண்ணோர்குழுத்தழுவும். - 126


மாலிந்திரன்மலரோன் முதன்மறைமாமுனிக்கணங்கள்
சீலந்த ருசிவஞானிக டெய்வத்திரண்மடவார்
ஞாலம்புகழிசை நாரதர்நல்லோர்கலைவல்லோர்
காலம்பலனுவாகமங் காணும்படிமிடையும். - 127


மருதப்பெருமானிங்ஙன மகிழ்நாள்களிலொருநா
டிருவிற்பெருந்திருவோலக்கமிருந்தான் றெரிந்திடுமா
றிருள் விட்டெறிவெள்ளிக்குவட்டிருக்குந்தரமிருந்தான்
மருள்வெற்றிசெய்வெண்காடர்தமனையாரதுகண்டார். - 128


கண்டோடினர்வெண்காடர்தங்கருத்தச்சுறமொழிவார்
வெண்டூளணிபணிவெண்டையன்மென்பச்சிளம்பாவை
செண்டாடியமிடலாகுவன் சிறுசெம்பவளச்சேய்
தண்டாவிடையுண்டென்றனர் தக்கார் பயமிக்கார். - 129


பயந்தோடினர்கண்டார்வருபச்சைப்பெருமானுங்
கயந்தோன்றியமலராளியுங்காணாததொர்காட்சி
வியந்தாரொருபேரற்புத மென்றார்மிகவெருண்டார்
நயந்தாருடன்மீண்டார்விழி துயிலார்நவைபயிலார் - 130


கங்குற்புலர்சிறுகாலையிலெழுந்தன்பருங்காண்பார்க்
கெங்கட்கிறைமருதப்பெருமாளாய்த்தனித்திருந்தான்
துங்கக்கமலச்சேவடிதுணையேதுணையாகிச்
செங்கைத்திருமலர்சாத்தினர்சென்னிக்குறப்படுத்தார். - 131


புன்மைப்பிழைபுரிந்தே னவைபொறுத்தாண்டிடவேண்டும்
வன்மைக்கொளனினையாது கொண்மருதப்பெருமானீ
நன்மைப்பொருளாய் வில்லிடுநாதப்பொருளாய
தன்மைப்பொருளாய் நின்றிடுதனியேயெனை முனியேல். - 132


ஏவற்றனியாளாயினை முறையோரெனவியைந்தாய்
தாவற்றிடுதேவாயினை தருவாய்த்தருகுருவே
யாவற்றனியேன்றன்னையு மவ்வாறருள்குவையோ
பூவிற்கமழ்மணம்போன்றுயர்புனி தாவெனைமுனியேல். - 133


மறையாமறையீறும் பெருவானோர்களுமறியா
விறைவாவெனையடிமைக்கொள வெண்ணித்துணிந்தனையோ
சிறுமானிடனடி யேனுறுதெய்வப்பெருமானீ
குறையோவிலைகுறையுண்டெனிற்கூறாயினிமுனியேல். - 134


பல்காலிவர்புகலப்பயில் பரநாதனும்பருவ
மல்காவருமுனக்குக்கதிவழங்கு முபதேச
நல்காவருள்செயவந்தன னென்றானவில்கென்றான்
செல்காரியமலநீங்குபதேசஞ்சிவன்செய்தான். - 135


செய்தங்ஙனஞ்சிலநாடரித்திருந்தான்சிவநன்னூ
லெய்தும்படிபடியென்றளித்திளஞாயிறுபோல்வான்
கைவந்தனநன்னூல்களுங்கண்டானதுவந்தும்
பொய்தங்கியமருள்வாழ்க்கையும் போகாதவுங் கண்டான் - 136


நவகோடிபொற்குவைநீடியநாட்டத்தர் வெண்காட
ரிவைபோயிடத்துறக்கிம்வண்ணமெவ்வண்ண மென்றெண்ணும்
பவமாற்றுதற்கிவைமாறெனப்பார்க்குஞ்சிவமாக்குங்
கவலாதசற்குருநாதனைக் காணும்பதம்பூணும். - 137


மருளுந்தெருளும்போர்புரிமாறாட்டமுங்கண்டான்
றெருளொன்றிடமருணின்றிடத்திருவிள்ளத்திற்கிடத்தி
யொருதந்திரம்புரிகின்றன னுடையானெவையெவைக்குந்
தருமந்தணப்பொருட்குஞ் சுதந்தரனானசங்கரனே. - 138


ஆட்கொண்டசருக்க முற்றிற்று.
ஆக-திருவிருத்தம். 192.
--------------------

3. துறவறச்சருக்கம். (193-336 )


முன்னெறித்தவம்பல முயன்றநன்னரான்
மின்னெறித்தனவெனவிளக்கமோங்குவார்
சென்னெறிக்கதியுறுதிருவெண்காடனார்
பன்னெறித்துறவறச்சருக்கம்பன்னுவாம். - 1


திருவிடைமருதுடைத்தெய்வநாயக
னொருபுடைக்காதறையூசிவாசியாற்
பிரிவுடைச்சரட்டொடுபேணிமானுறப்
பரிவுடைப்பட்டினாற்பயிலச்சூழ்ந்தரோ. - 2


ஏற்றபூம்பெட்டியினிட்டுக்கட்டுறத்
தேற்றமாமுத்திரை சின்னஞ்சேர்த்தினான்
கோற்றொடியன்னைகைக்கொடுத்துன்மைந்தனுக்
காற்றலீதளித்தியென்றகன்றுபோயினான் - 3


பண்டுபோன்றிருந்தனன்பரமநாயகன்
மண்டுகாதலின்வருமதிவெண்காடரும்
புண்டரீகத்திருப்பொருந்துமாளிகை
யண்டனைக்காணவென்றணைந்தபோதினில். - 4


ஞானசற்குருவினை நயந்தநாயகன்
போணதிக்கறிவுறாப்புனிதரானவர்
வானனைக்கண்டிலார்வனசவாள்விழிப்
பானல்வெண்டரளங்கள் பரப்பினாரரோ. - 5


துருவினாரெங்கணுந்துளங்கிக்காண்கிலார்
வெருயேயவ்வயின் விரைந்துதாயரு
மருவினார்பெரியவர்மணிகொள்பெட்டியொன்
றருளினாருமக்கெனவருளிப்போயினார். - 6


எனமொழியேழைப்பேழையீந்தனண்
மன்மொழிமெய்களால்வணங்குமன்பருங்
கனைகெழுசிலம்பணிகமலனீந்ததைத்
துனைவினால்விழித்துறச்சோதித்தாராரோ. - 7


முத்திரைகவிழவிட்டவிழ்த்துமுட்டறச்
சித்திரநேத்திரச்சுற்றுத்தீரத்தபின்
குத்திரமொன்றறக்கொடுத்ததோர்பொரு
ளத்திரம்வாக்கினாலறியப்பண்டமே. - 8


ஒடிவுரப்புரைவிழுந்தூறிக்கூர்முறிந்
தடிபடுகாதறையாகிச்செய்கையாய்
நொடிதரமுறுக்குறாநூலுங்கோத்துள
வடிவினாமூசியின்வாசிநோக்கினார். - 9


நோக்கினார்நீக்கறநெடிதுநோக்கினார்
பூக்கமழ்சடையினார்பொற்புநோக்கினார்
பாக்கியமிதுவெனப்பரிந்துநோக்கினார்
தேக்கியவுலகுவிண்டேறநோக்கினார். - 10


காதினூல்போதனங்காதிற்கல்விநூல்
போதலைக்குறிப்பினாற்புகன்றபொற்புமா
மேதகுமுலகெலாம்விடுங்குறிப்புமாஞ்
சேதமிப்பாசநம்பாசச்சேதமாம். - 11


ஊசிகாந்தச்சிலையுற்றுப்பற்றல்போ
னாசமிலாப்பரஞானமாற்றலா
மாசிலோமென்றுகொண்டலங்கலோங்கிய
மாசினாலங்குலவடிவம்போயினார். - 12


இச்சைஞானந்தொழிலிவைகளீசனா
ரிச்சைஞானந்தொழிலிவற்றுளாக்கினா
ரச்சமில்பரையுடனாக வாருயிர்க்
கச்சனாமவனிடையடைந்தொன்றாயினார். - 13


மறைபெறுசிவமுளேமறைந்து நின்றபின்
குறையறவிளங்கியகோலும்போலுமாத்
திறமுறுதாமுமச்சிவத்துட்புக்கொளித்
தறிவுறாவிளங்கினாரதீதவின்பமே. - 14


இன்பமாமதீதமேலிருக்கும்வள்ளலா
ரன்பிலாருலகெலாமசத்துக்காட்சிவந்
தன்பினாலரனடியமுதமாந்தினா
ரென்பராலிவர் நலமியம்பொணாததே. - 15


எறிந்தனர் முறிந்தவூசியினையேந்தலார்
செறிந்தனர் சிறைமுறிதெளிந்தநீரெனப்
பிற்ந்தனரில்லறம் பெரிய நூற்படி
நிறைந்துனர்துறவறநெறிகொணீர்மையே. - 16


விடுத்தனர்வீடுநல்வீடுகூடுமா
றெடுத்தனர்துணிவுகூர்துறவையேபெற
வடுத்தவூரம்பலதனிற்புக்குளார்
நடத்துளானம்பல் நண்ணும்வண்ணமே. - 17



போந்தபின்சுற்றமும்புடையிற்சுற்றவேல்
வேந்தனும்பட்டினம்விளங்குமேன்மையாற்
சேர்ந்தனன்மயக்கறாத்தேற்றந்தேற்றினா
ராய்ந்திடினனவுகாண்பரியவன்னவே. - 18



மாயையின்போதமற்றிருக்குமன்னவர்க்
காயிரம்போதமங்காற்றிரஃ
தேயினவல்லவாயிகழ்ந்தநெஞ்சினார்
தூயராவிருந்தனர்துளக்கமின்றியே. - 19



பகர்ந்தனர்பட்டினப்பலரும் பண்பினான்
மிகுந்திருச்சேந்தனார்விளம்புவீரெனப்
புகழ்ந்தவர்மவுனமாம் பொற்பின்வைகினார்
திகழ்ந்தமூகரைமொழிச்செல்வமாக்கினார் - 20



மற்றவர்மவுனமுற்றுறைந்தவாய்மையா
லற்றைஞான்றெவர்களுமகலவன்பரைப்
பெற்றபேறென்னையென்ற ரசன்பேசினா
னிற்கநீரிருக்கயாம்பெற்றநீர்மையே. - 21



எனவிசைத்தன்பனாரியைந்தகாலையி
லனகவம்பலத்துளானடியர்மேன்மையை
நினையவுமரிதெனாநிருபன்கூறினான்
மனையறக்கினைஞரோவழக்கம்பன்னினார். - 22



மன்னகேளிவர்பெருங்குடிமைவாழ்வுறத்
தன்னிகர்மருகனையிருத்தாழ்வுறப்
பன்னருந்திருவெலாம்பரிக்கச்செய்கவென்
றுன்னினருரைத்தலுமோகையாகியே. - 23



அரசனுஞ்சுற்றமுமகன்றுபோயொளி
யிரவிநேர்மருகனையிவர்க்குநேரென
வரிசைசெய்திருத்தினார் மைந்தன்றாங்கினான்
புரயிலாவிழுதுவிட்டன்ன பொற்பினான். - 24



இவன்சிறந்திருந்துழி யெழுதுகற்பினா
ணவம்புனை மனைவியார் தாமுநாடொறுந்
தவம்புரிகுவனெனத்தனிவெண்காடருங்
கவன்றுகட்டறவழி காட்டியோட்டினார். - 25



நங்கையாரிற்புக நடாத்திவிட்டபின்
மங்கலச்சேந்தனார்மனங்கரைந்துவீழ்ந்
தெங்கணாயகவெனவிறைஞ்சிப்பின்னரும்
பங்கயச்சேவடி பிடித்துப்பன்னுவார். - 26



எனையுமீடேற்றுதலெந்தஞான்றுகொன்
மனையறம்புகுத வோமன்றுளாடலை
நினைவினினிறுத்தவோநிகழ்த்துவீரென
வனையவர்கருத்தினுக்கமைந்தசெய்கென்றார். - 27



பக்குவக்குறைவதுபண்பராதலா
லக்கணம்விடைகொளாவகன்றுதம்மகம்
புக்கனர்முக்கணான்புனிதவன்பரு
மிக்கஞானக்கிளைவிளைவின் வாழ்குவார். - 28



தகவுநன்மனைவியாய் தனையராமவர்
மிகுமுயிராய்ச்சிவம் விரவுந்தொண்டரே
புகு முறவாயுறப்பூமென்பாயலா
நகைமலர்ப்பள்ளி மேனயந்து நண்ணுநாள். - 29




அங்கணின்றகன்றுபோயகங்கடோறும்புக்
கெங்கணாயகனென விரந்தருந்துவார்
பொங்கொளிவணிகர்தாம் பொறாதுமானத்தாற்
றங்களூரனமிடற் றடைசெய்தார்களே. - 30


அடைவிலாவாலமிட்டப்பமெய்ப்பயநங்
கொடுசமைத்துடன்பிறந்தவள்கொடீ ந்திடக்
கடுவிடனடியவர் கடுகிவாங்கினார்
முடிபொருளறிகிலார் மூர்க்கமாக்களே. - 31


வினையினைப்பிடித்தொன்றுவிளம்பியப்பநீண்
மனையி்ன்மேற்சொருகினார் மனையின்மண்டழல்
துனைவிறப்பற்றவூர் துயர்கண்டன்னபோ
தனையவர்க்கிரங்கியாரெரியைமாற்றினார். - 32


வேறு.

தங்களைக்கேட்டுப் பிறந்தில மென்னுந் தடந்தமிழ்சாற்றினாரதற்பின்,
பொங்கெரிபு குந்தவ்வூரெலாமுண்ணப் பூம்புகார் மாந்தர்களெவருஞ்,
செங்கனலவியாதிரங்கினாரதனாற் சிறியவரறிவிலாதவரென்,
றங்கியையவித்தார்பலபுரமெரித்தாரடியரோர் புரஞ்சுடலரிதோ - 33


பின்னருந்தமையே முன்னைநாட்கருதிப் பெறலருந்தவத்தினாற்பெற்ற,
வன்னையைக்குறித்துக்குடியிருந்துன் வீடனலிடுவேனெனவறைவா,
ரின்னவாசகத்தாலென்கொலோவென்றென்றிரங்குவார்நகருளோரெவரும்,
பன்னுமவ்வன்னையிறந்தநாள் வாக்காலாக்கைதீப்பற்றிடப்பணிந்தார். - 34


வேறு

எண்ணும்பசுங்குடிபன்னீராயிரவருள்ளும்
நண்ணும்பிறருள்ளுநல்லோர்பலர்குழுமி
யண்ணலேயேகுதியோவாராவமுதேயெங்
கண்மணியேயென்னாக்கனிந்து கரைந்தழுதார். - 35


ஆதித்தனேலாதவம்பரம்போலிந்நகரம்
பேதிக்குமென்னிலிஃதென்னாம் பெரியோனே
தீதகற்றற்கையனை நீயெண்ணுந்திறம்போலுன்
பாதத்தையெண்ணிப்பணிகின்றோம்பண்ணவனே. - 36


முன்னிச்சுடப்படுவாரில்லாத முப்புரங்கள்
வன்னிக்கிடுமவன்போன்மாதாவின்முப்புரங்க
டொன்மைச்சுடர்ஞானவங்கியினாற்சுட்டளித்தா
யின்னற்படுவோமுக் கின்னருளொன்றீந்தருளாய். - 37


முத்துக்கொழித்து முழக்கெழுப்பு முன்னீரூர்
கொத்துக்குடிப்பெரியோரிவ்வாறு கூறுதலும்
வைத்துப்படர்வாரை முன்போய்மறிப்பாரா
லுய்த்துத்திருவடிமேலொன்றாவணங்கினரால். - 38


வேறு

வணங்கினர்க்கருள் கூரெனுமுபதேசமறைப் பொருட்பாடலீந் திருத்திக்
குணங்குறியறியப்படாதமாப்பொருள்கொ டுலய வெண்காடிடைக்குறுகி,
யிணங்கிடும்போதி லிறைவர் தங்கோயிலேயவர்தூயவர்யாருங்,
கணங்கொளவெதிர்ந்தார் வணங்கிடவணங்கிக்
காமர்பூங்கோயிலுட்புகுந்தார். - 39


அன்பினாலுருகியாதரம் பெருகியையனேயமுத வாரிதியே,
யென்பொலாப்பிழைகள் பொறுத்தளித்தனையே யிளம்பிறைப்பவள வேணியனே,
பொன்புனைபொருளே யென்றவப்பொழுதிற் பூசுரர்மாணிக்கக்கந்தை,
யின்புறக்கொடுத்தாரிறைநயவருடுத்தற் கென்றனரென்செய்தாரிவரே. - 40


நாயினுக் காகாமணி யிரணியங்கணாயனுக்காகுமோவென்னா,
வாயினிற்புகலா முனமுதறினரான் மாணிக்கக்கந்தையாங்கனைத்தும்,
போயினநக்கனெனும்பெயர்புதுக்கிப்புணர்திசைத்திருவுடையாடை,
யாயினரனந்தவன்பருக்கின்பவருட் செல்வம் விளக்கினாரன்றே. - 41


அளக்கர் வெண்காட்டிலருட்டிருப்பொருந்தி யமர்ந்துலகறிவுறும் பொருட்டால்,
விளக்கினைவைய முய்யவென்பாடல்விளம்பினார் விளங்கியமேலோர்,
களக்கனிக்களத்தாரருட்பொருட்பிடித்தார் கரும்பினு மினியசெந்தமிழ்ப்பாத்,
துளக்கறப்பரவியுளக்கருத்துருகித் துளிக்கணீர்மழைபொழிந்துறைந்தார். - 42


ஒருவிடைகொடுபின் றமக்குவந்தளித்த வுத்தமருவப்புறா துறையுந்,
திருவிடைமருதைநோக்கி நின்றிறைஞ்சிச்சிறந்தகாவதம் பலகடந்து,
மருவிடையறா தவா*லியப்பதியிலெதி*ர்ந்தவர்வணங்கிடவணங்கி,
யுருவிடைமருவு குருபரன்றிரு முனொருமையிற் பணிந்துருகினரால். - 43


உருகிநீரிடத்திற்பிறந்த வொண்கமலமொளிகொணீ ருதவியதென்ன,
பெருகுநீரருவியிருவிழிபொழியச் சிவக்களிபிறங்கிநின்றாடி,
யுருவெலாம் புளகம் பரந்திடத்தெளிந்தவுரை தழுதழுத்தவுமொருவி,
மருவினாரிறைதன்விடைகொடுமீண்டுவசித்தனரங்கண்மாதவத்தான். - 44


முதல்வனைத்தெய்வத்தாமரை முதலாமும்மணிக்கோவையாற்றுதிப்பார்,
திதியவனநாதி நிலைபரம்பரையாய்ச் சித்தசித்தறி வொடாதாரம்,
விதியுறவொன்றா நிலைமுதலுரைத்தார் வியனிரண்டாய வாசரியத்,
ததிகனிற்பிடித்தாலன்றியுற்பவம்போகாதெனு மருமையும் புகன்றார். - 45


மூன்றில்வன்றொண்டர்வாசவன் செல்வமுழுக்கடல் குளப்படியென்றார்,
மான்றருகரத்தானஞ்செழுத்தருங்காய் மருதமாணிக்கத்தீங்கனியென்,
றூன்றினர் நான்கிலைந்தினிற் சகலமுற்றகேவலத்திலெற்காணே,
னேன்றநின் கருணைஞான நாட்டத்தா னின் பெருந்தன்மையான்கண்டேன். - 46


கண்டபினெனையுங் கண்டிளேனென்றார்கருதுமாறாவதிலொருவ,
னுண்டி வேண்டிருத்தல யினியின்குறை யோவுன்குறை யில்லையென்குறையீ,
தண்டனேயென்றார்வல்லுனர்வல்லாரம் பரத்தெறிந்தனர் நிலத்திற்,
கொண்டிடல்போலுன்னஞ்செழுத்துரைப்போர்
குறைவிலாரென்றனரெழிலார். - 47


எட்டினிலடி சார்ந்தவர்க் கருட்செல்வ மிறைவநீயாதினுங்குறையா,
திட்டனையென்றாரென்பதிற்புத்தனெறிந்தகலெனகுனரென்றார்,
பட்டவோபற்றிலென்செயலன்றிப்பரமநின் செயலினேனென்றார்,
முட்டிலிங்கிசைத்த திருவிசைப்பாவின் முடிவில் வெண்காடனென்றனரே. - 48


இவைமுதற்றமிழாற்றுதிபல வியம்பியிருக்குமந்நாடனிலொருநா,
ணவைவிடாய்கழிக்கநீர் பொறாதிருப்ப நாதர் தம்பாணிதண்பாணி,
யுவகையாலுதவுமின்றெனும்பாடலுரைத்தனர் மற்றுமோர்தினத்திற்,
கவலும்வல்விடத்தாலுறங்குறார்கட்டிக்கரும்பிடு கழனியீர்ப்புண்டார். - 49


இந்தவாறீர்ப்புண்டொருபுறந்திண்ணையிடங்கிடந்துறங்குறும் பொழுதி,
லந்திவான்மதியம்வலம்புரிக்கண்ணியா மெனப்புனைமருதாளி,
வந்துதன்னுடையூர் காப்பவன்போல வடிவுகொண்டிவர்மனஞ்சோதித்,
துந்துவான்கருணைபுரிகுவான் கருதியோரிரா*கள்ளிருளணைந்தான். - 50


காரிரும்பொலிக் குந்தடிநிலத்திடித்துக்காலினான் மார்பிடைத்தாக்கி,
யாரைநீயென்னவினாவிடவெருவாவமுத வெண்காடருமிசைப்பா,
ரூரிடையெவைக்குங் காவலுக்குரியோயுணர்ந்தியானுரைக்குமாகேட்டி,
சோரிபுன்மயிரின் றொகைகளோ டிறைச்சிதோலொடுமென்பு மூளைகளே. - 51


ஈனமாமெண்ணிறத்துவக் குழாமோவின்னதென்றென்னையான்கானேன்,
யானலதொன்றையா னென நினையுமிதுவென துள்ளமென்றிசைத்தார்,
தேனலரிதழிச்சேவகப்பெருமான் றெரிந்திலர்மறைந்தனர்சிறந்த,
வூனெலாமுருகிப்பெருகுமன்பினராயுவகையங் கடலிடைப்படிந்தார். - 52


படிந்தவரெழுந்து திசையினைநோக்கிப் பணிந்தனரணிந்தவெண்ணீற்றார்,
விடிந்தனவிருளுந் தாமரைச்சரணமெல்லிதழ்நொந்தவோவென்பார்,
கடிந்தசொன்னடந்த கருணையைப்புகழ்வார்காற் சுவடுரத்தினிற்குறிப்பார்,
முடிந்தமாப்பொருளைமுடிவிலாவருளை முன்னினர்பன்னினரிருந்தார். - 53


அறுவகைச்சமயமிடைமருதாளியாறு மாமுகத்தினுந்தோன்றி
மறுவறநடக்கும்புரநெறிச்சமயமற்றுளவாறுமாறாய
புறநடைச்சமயப்புன்மைபற்பலவாம்பொருவிலம்மருகனைநோக்கி
யுறவருமனைத்து மென்றனர்சமையாதீத முற்றிருப்பவரிவரே. - 54


இடைமருதாளிசமயபேதங்களின்ன்னவாறிழைத்ததென்னென்னின்
முடிவிலாவுயிர்கள்பக்குவக்குறையான்மொழிகதியடைதரமவுன
வடிவுறுமவர்கள்புகலிடமியம்பின்மாயைமாமாயையுளடங்கும்
படியிலாவொன்றினின்றனரிவர்தம்பாக்கியம்யாவரேபகர்வார். - 55


பிரிவில்சித்தாந்தர்சமயபேதங்கள்பேசியதெய்வமொன்றெனினு
நிருபனுநிருபன்மைந்தரும்புந்தி நிகழ்தருமமைச்சருமாக்கம்
பெருகுதந்திரரும் ஞாளிகைக்கொள்ளும் பிள்ளைமாக்களுநிகர்பகரு
முரிமையையுலகோரறிவுறப்பாடியுடையவனடிவிடாதுறைந்தார். - 56


அங்குறச்சிலநாளுறைந்தறாவிடைபெற்ற ருட்குறிக்குடந்தை வாயடைந்து,
சங்கரற்கன்பாற்றுதிபலவழங்கிச் சடைமுடியுடையவனிடங்க,
ளெங்கணுமிறைஞ்சியந்தணாரூ ருமிரைஞ்சியங்கமரு நாட்களவாற்,
பொங்குகாமத்தாலிறந்தவாபார்த்துச் செயுளெருவாய்க் கெனப்புகன்றார். - 57


அசபையாட்டயருங்கூத்தனைநோக்கியங்கு நின்றருள்விடைகொடுபோய்,
வசையுறாப்பாண்டிமண்டலம்புகுந்து வண்டமிழ் மதுரைமாநகரி,
லிசையிறைபோற்றிமலைகொணாட்டுள்ளவிறைவனாலயங்களுமேத்தி,
நசையினாலாங்காங்கன்பினாலின்பநாதனார்க் கருந்தமிழ்புனைந்தார். - 58


ஆலமுண்டவர்க்குத்தமிழமுதளிப்பா ரருள்விடைமருதில்வந்தடைந்து,
பாலவெண்டிங்கட்பழைய வற்பணிந்துபற்பலகாலமங்கிருந்து,
மேல்விடையவரைவிடைகொடுமீண்டு விரைந்து வெண்காட்டிடைப்புகுந்து,
வாலியசூல கபாலியைநீலமரலினிவாமனைப் பணிந்தார். - 59


ஐயனைவணங்கி வழிபடுங்காலத்தகன்றிடுமந்திரிச் சேந்தர்,
செய்யசேய்வந்திங்கிவ ரடிபணியச்சேருநீயாரெனச்சேந்தர்,
கையுறுதுணைய னென்றுபுன் றொழிலாற்கைதளைப் பட்டனன்றாதை,
வெய்யச்சிறைமீட்டருள்கெனப்பணிந்தான் விரைந்து வெண்காடருமெழுந்தார். - 60


எழுந்துபோந்தண்ணல் சன்னிதிப்புறத்திலிசைந்து மத்தளை தயிர்ப்பாடல்,
கொழுந்தெழப்பாடி முடித்திடக்கணங்கள் கொழும்புகழ்ச் சேந்தரைக்கொணர்ந்து,
தொழுந்தகையவர்முன்காட்டிடவருளாற் றொன்மைசால் சேந்தருந்தொழுது,
விழுந்தெழுந்தாடிப்பாடினரரற்கு மெய்யன்பரிருவருமிவரே. - 61


சேந்தர் வெண்காடரடியிணைபணிந்துதிருவுள மறிந்திடப்பணிந்தீ,
ரேந்தவிச்சிறைமீட்டென்னுடற்சிறை மீ்ட்டிடுநெறிகாட்டிடவேண்டும்,
வாய்ந்தநீரென்னவன்னவர் மகிழ்ந்து வனத்தினில்விறகொடித்தெடுத்திட்,
டாய்ந்தவவ்விற குவிற்றிடும்பொருளாலனந்தினமருவருக்களிப்பீர். - 62


எனுமுபதேசத்தவமளித்தகன்றா ரிவருமத்தவம்புரி காலை, வ
னவயிற்பொதிசோறொருபுடைதூக்கி வாய்திறந்துறங்கிடவாயிற்,
கனியனம்பிதிர்ந்து வீழ்ந்திடவாயிற்பயந்துகன்மன்றனுக்கென்றா,
ரனகமன்றாடுமெங்கடம்பிரானாரமுது செய்தரும்பசியகன்றார். - 63


பொருவிலக்காலத்தொருதிருவளவன்பூசனைகுறை வறப்புனைவான்,
பரவுமந்தத்திற்கோயிலாராச் சிப்பரூமணிநாதமங்கெழும்பு,
மருவுமன்றோசைகேட்டிலன யர்ந்துவருந்தினான்கனவினிற்கூத்த,
ருரைசெயச்சேந்தரன்பினையுணர்ந்திவ்வுல குளோரறிய வாய்திறந்தான். - 64


நீலநீர்வேலிஞாலமேலறிஞர் நிறைபரஞானிகளெவருஞ்,
சீலமாரன்பர்சேந்தனார்க்கீந்த திருவருட்டிறத்தினைக்கறித்தா,
ரேலுமன்னவர்தந்தவத்தினைத் துதித்தாரினியவெண்காடரைமதித்தார்,
பாலனம்புரியும் வளவனைப்பரவிப்பைம்பொனம்பலத்தையும் பணிந்தார். - 65


திருவிசைப்பாவிற்றிருவிடைக்கழியிற்றிருச்சிற்றம்பலமுடையவரை,
மருவமுன்வைத்த முருகவேடனுக்குமாலுலாமனத்தமிழ்பாடி,
யுருகு மன்பினராமன்றுணின்றாடு மும்பர்தம்பதமலரடையக்,
கருணைசெய்தனர் வெண்காடராங்கதனாற், கதியடைந்திடவணித்தானார். - 66


வேறு.

தோணியம்புரத்துட்புக்குச் சுடர்விடுமழு மான்விட்டுக்
கோணறநிற்குமின்பக்குழகனையழகுபூத்து
மாணுறுதோளியாணி மணியணிப்பச்சையாடுங்
காணுறுங்குரவர்ப்போற்றிக்கண்டுகண்களிக்கலுற்றார். - 67


கருங்கடற்றோணிவிட்டுக்கட்டுமட்டுடைமாணாக்கர்
பெருங்கடற்றோணிவிட்ட பெரியதங்குரவற்போற்றி
யொருங்கடற்கோலுநீலமொருமூன்றுமுடைந்துமாற
வருங்கடற்கண்டநாடுமகிழ்தமிழ்பாடுநாளில். - 68


பண்டினுமதிகசக்திபாதம்வந்தடைதலாலே
யொண்டி றற்றிருவெண்காடருடற்கலத்துயிர்ச் சரக்கைக்
கொண்டிடத்தில்லைக்கூத்தர்குறியருணற்றார்பூட்டி
யெண்டிகழ்சிவந்தபாதத்திருங்கரைசேரச் செய்வார். - 69


ஆதலாற்காழிவாழுமமுதனைவழிபட்டேத்திக்
கோதுதீர்குரவற்போற்றிக்குறிபற்றி விடைபெற்றண்ணல்
மாதவம்பெற்றோர்போற்றுமன்றுண் மாணிக்கம்பெற்றே
யேதமிலின்பாதீதவிலாபமுற்றிருக்கவந்தார். - 70


வந்தவர்மற்றுமுள்ளதலங்களும் வழிபாடாற்றிக்
கொந்தலர்ச்சிறைவண்டார்க்குங் கொள்ளிடப்பொன்னிபின்னிட்
டந்தளிர்ச்சோலைவேலியண்ணலூர்கண்டுங்கேட்டுஞ்
செ்தமிழ்திருவாக்காளர் திளைத்துளங்களித்துவந்தார். - 71


கொள்ளைவெண்கமலக்காடுங் குளிர்செந்தாமரைக்குழாமு
மள்ளலங்கழனிதோறுமனந்தகோடிகள்வண்டில்லை
வள்ளனாடகங்கண்டுள்ளவாணிலாவண்ணப்பானு
தள்ளறத்தலவாசஞ்செய்தன்மைபோன்றனவுங்கண்டார். - 72


தில்லைமாநகரஞ்சுற்றுந்திருமதிற்சிகரிநான்கும்
நல்லவர்மௌனப்பொற்பும் ஞாயிறுதோன்றிற்றென்னா
வெல்லொளிநிமிரும்வெற்புமிமையமும்பொதியிலும்போன்
சொல்லுவகண்டார்தூண்டு முவகையாரு ருட்புக்கார். - 73


வீதிகடொறும்பணிந்துவிதிமுறையந்தணாள
ராதிமூவாயிரத்தோரங்கிகளனேகஞ்சுற்ற
மீதிடாநிற்கு ஞானவங்கியைவியந்து காண்பான்
பேதமைதீருந்தீரப்பெரியவரரிதின் வந்தார். - 74


வேறு.

நீடுமறையாகமநிரப்பியபெருஞ்சொல்
லாடியவிதிப்படியமைந்தசதுவீதி
நாடுமதிலைந்தணவமாகநவமாகுந்
தேடரியவீடுதரு தெய்வநகர்கண்டார். - 75


கண்டனர்வணங்கினர் கணங்கொள விணங்குந்
தொண்டரொடுமுட்சிகரி சூழ்ந்தமதில்வாயி
லெண்டரவிறைஞ்சியுட் புகுந்தனரிலங்கு
மண்டர்நடமாடுமணியாலையமருங்கே. - 76


ஆலயமிலங்கு வதறிந்தனர்செறிந்தே
ஞாலநடுவிண்ணுயர்வுபாதலநலக்கீ
ழேலுமிதுவென்பதுவுமின்பமொடுகண்டா
ராலமணிகண்டரருள்செய்யிலரிதென்னே. - 77


ஏடவிழ்செழுங்கமலமெங்கணுமிலங்கப்
பாடுமளியாடுமவர்பாவமெனவோவத்
தேடுநருஞேயநிலைசேருமவர்நேச
நீடுசிவகங்கையினெடுந்தவர்படிந்தார். - 78


படிந்துசிவமாமிதெனவோர்ந்துபடர்பாவம்
விடிந்துசிவமூலமுறைமேதகையசோதி
முடிந்தபொருளாய் முடிவிலாதபொருள்கண்டார்
தடிந்திருள்கடிந்தபொருடக்கசபைபுக்கார். - 79


சற்றுமசையாதபொருடானசையமூல
முற்றநிலையுந்தலைமையுற்றபடிமற்றும்
பெற்றபடிகொற்றவர்பிறங்குசெயல் கண்டா
ரற்றமறியானருள்ளிக்கிலரிதென்னே - 80


கஞ்சமலைமஞ்சர்பலகாலரற்றிமூல
ரிஞ்சுதல்படாவிடபயோகிபுலிபாம்பு
நஞ்சமுறுதேசிகநடக்கலவிகண்டா
ரஞ்சலிசெயின்னவருமன்னவரையொத்தார் - 81


அந்தநடுவாதிவிடு மண்ணலவையுண்டாய்
வந்ததிசயத்தினைவழுத்தினர்தநெஞ்சில்
முந்துறவிளைந்ததொரு மூத்திவிசயத்தைச்
சிந்தைசெய்திருந்தனர்திருந்தினர்வருந்தார். - 82


செங்குருநடந்தரிசனஞ் செய்சமயத்தில்
வெங்ககனலிங்கவுருமேல்விளைதல்பெற்றார்
அங்கையினிலங்கியவனாடலிசைபாட
லங்கிசையவோதினரருந்திருவிசைப்பா - 83


வேறு.

பொன்னாருமணிமார்பன் பூமேலயனறியா
யென்னாவெடுத்தோதியேவிடைபெற்றேகியபின்
பன்னாகவாடகப்பொற்பாதமெனப்பாடியிடச்
சென்னாவுண்சோறளித்தாள் சிவகாமசுந்தரியே - 84


ஞாலமறியவெங்கணாயகியாரீந்தவன்னக்
கோலவருளுண்டுகுலாப்பெருகிக்கூத்தாடி
மூலவிலிங்கமமர்முழுச்சுடர்பின்னுந்தொழுது
சாலமகிழ்ந்துதருக்கினார்தண்டமிழார். - 85


பேசிக்கடைதொறும்போய்ப்பிச்சைகொண்டிங்குண்டிருத்தல்
வாசிக்களிப்புடைத்தாம்வண்ணமெனத்தண்ணளியார்
தேசுற்றிருந்தார்சிலகாலஞ்செந்தமிழாற்
பூசிக்கப்பெற்றார்புனிதனடித்தாமரையே. - 86


வான்றேடுமறையேயோவென்றெடுத்துவண்டமிழ்ப்பா
நான்றேடநானாரோ நானாரோவெனமுடித்தார்
தோன்றாப்பொதுச்சூழ்ந்து சோதிவிடைபெற்றேகி
யேன்றார்வடதிக்கிடைநடக்க வன்பாளர் - 87


வேறு

ஏயும்பூகமிளநாகமினியகனிசூழ்பனைமரங்கள்
காயும்போதுங்கலந் தளிப்பக்கனையார்புனல் சேர்தினைநகர்வாய்த்
தாயுந்தமருந்துறந்தவர்தாந் தம்பிரானார்தாம் வரக்கண்
டாயும்பெரியோருள முருகியருகாலின்பம்பெருகினரால். - 88


விடைகொண்டகன்றுசிவாலயங்கள் விரவிப்பரவியடிபோற்றி
படைகொண்டுடையும்புனற்கேடின்மணிநீர்வாவிமலரோடைப்
புடைகொண்டொருபாதிரித்தருவிற்புணர்சண்பகமும்பலபூவு
மடையுந்திருப்பாதிரிப்புலியூரடைந்தாருடைந்தமனமுடையார். - 89


அரக்கரனையார்விடுதூணையலைவாய்த்துரும்பினெளிதாக்கி
பரக்குமந்தக்கற்கலத்தாலொருமாதவரைக்கரையேற்றிப்
பரக்குங்கடல்வாய்மரக்கலந்தாழ்ப்படுத்தித்தமையுங்கரையேற்று
மிரக்கம்பெரியோர்தமைக்காணவிளநீர்க்கெடிலம்படிந்தாடி. - 90


கடற்பாற்றிகழ*ந்தசடைஞாழற்கன்னிவனத்தெம்பெருமானை
யுடற்பாலினிமேலுறவறியாருலவாச்செல்வம்பெறப் பணிந்து
மடற்பாற்கமலம்வழிபிரசம்வாவிச்செழுநீர் மேன்மிதந்து
விடற்பாலனவாந் திருவதிகைவியன்மாநகரத்தயல் போந்தார். - 91


கூற்றாயினவாறென்றெடுத்துக் கொழுத்ததமிழான்வழுத்துமவர்க்
காற்றாவின்பந்திருநாவுக்கரசென்றளித்தாரொளுத்தாள்கள்
போற்றாவணங்கிமணங்கமழும்பொற்பூவனையதமிழ்ப்பனுவ
லேற்றாநின்றார்மரகதவீரெட்டானத்தெம்மிறைவனையே. - 92


இறைவாழ்மூலவிலிங்கவடியிறைஞ்சிப்போந்தங்குடைஞாழன்
பறையார்சோலைத்திருவெண்ணைநல்லூருடையவிடையாரை
யுறவாடினர்தாமுறவாடியொன்றுமிருடீர்ந்தருள்பெற்றார்
பிறையார்மின்னற்பின்னலராப்பேணிப்பணிந்தார்பெரியோரே - 93


சோலைகாட்டுங்கரைப்பெண்ணைத்துறையார்மறையார்சுந்தரரை
மாலைகாட்டுந்தமையிமையோர்மகிழ்ந்துகாணமுறியூசி
யோலைகாட்டியாண்டாரையோவரவிடைபெற்றோகையினா
லாலைகாட்டும்பெருந்துழனியண்ணாமலையைநண்ணுவரால். - 94


நெடுந்தூரத்தேவன்னிமலைநிலையைநோக்கிப்பணிந்தெழுந்து
தடந்தாமரைத்தாணினைந்துருகிச்சந்தம்பெருகுந்தமிழ்வாயார்
நடந்தாரந்ததொண்டர்ப தநளினம்புளகம்பெறப்போற்றி
வடந்தாழ்முலையாரெனுங்கொழும்பால்வாரிமுழங்குமவ்வூரே. - 95


ஊருட்புகுந்துவீதிதொறுமுள்ளங்குளிரவொளிவளரப்
பாருட்பணிந்துதிணிந்தமதிற்பயில்கோபுரவாயிலும்பணிந்து
வேருட்பழுத்தமலர்க்னியைவிண்ணாட்டமுதைத்தண்ணளிகூர்
வாருற்றுணாணமுலையாளை மலைசூழ்போந்துவணங்கினரால். - 96


தாழாக்கருணை விடைகொடுபோய்த் தருக்கிப்பெருக்காற்றொழுததென
வாழாநின்றதிருவிசைப்பாவள்ளலுள்ளங்கரைந்துருகிப்
பாழாய்ப்பயிலாத்தொழிலாற்றும்பரனாலயங்கள்பலபோற்றிச்
சூழாவருவாரிடைமருதிற்றோன்றுங்குருவையொருவாதார். - 97


மற்றுமபதிகளாங்காங்கிவணங்கிகுணங்கோணீறணிந்த
சுற்றுஞ்ச்சடையார்க்கினியதமிழ்த்தொடைமாலகளும்பலசாத்தி
யெற்றும்புனலும்பெரியோருமிளம்பூவையரும்வளம்பூத்துக்
கொற்றந்தரும்வேதாகமமுங்குழுமுங்காஞ்சிநகர்புகுவார். - 98


வேறு.

மாயவளப்பொருடேடமாநீரிற்போய்வருவார்
நேயவனப்பொருடேடநீணிலத்தின்மேற்படர்வார்
தூயவனப்பெரியோர்வாழ்தொண்டீரமண்டலத்துத்
தாயவளெப்போதுமுறைதண்காஞ்சித்தலத்தணைந்தார். - 99


கச்சியாந்தலநலத்தைக் கண்டிரண்டுகைகூப்பி
யுச்சிவாளிளம்க=பளிங்கையொத்துவளருத்தமனார்
நச்சியாரணம்பாடி நாடியநற்றவங்காட்டும்
பச்சைநாயகிசிவந்த பாதநினைந்துட்புகுவார். - 100


மெய்காட்டியாண்டருளும் வித்தகர்மாவடித்தேவர்
கைகாட்டுந்தொண்டரெலாங் காவிரிப்பூம்பட்டினத்து
ளைகாட்டும்பெரியோர்வவந் தடைகின்றா ரென்றடைந்தார்
மொய்காட்டுமிவரவர்கண் முன்பணிந்தாரன்பாளர். - 101


மாடநெடும்பொன்வீதிவண்ணமெலாங்கண்ணுவப்ப
நீடியநீரார்பணிந்து நீர்மழைகண்ணாற்பொழிந்து
கோடலுறாவாக்காற்குணம்பாய்கொழுந்தமிழ்கள்
பாடினார்நாடிப்பரநாதன்முன்பணிந்தார். - 102


ஒன்றாகநின்றுருகி யோங்காரநீங்காம
னின்றானையேன்றன்பினின் கோலமாயிருப்பக்
குன்றாவரமளிப்பாயென்றார்குறைவறியார்
வென்றாளுமம்பிகைவாழ்மெய்க்கோயில் புக்கனரால். - 103


வேறு.

ஆருயிராமவையார்பெறுவீடுற
வாரநிலாவியமாதவன்மாதவள்
சீருறைவாள்விழிசீருறைவாளரு
ளேருறவேருறவேயிவர்நின்றார். - 104


செங்கழுநீர்மலர்மூன்றொருதீப
மங்கலர்நான்கொருநான்கெரிதீப
மெங்கனாமைக்கெனலாமிவையாவுஞ்
சங்கரனன்பர்தருக்கொடுகண்டார். - 105


தாயவணின்றுதவம்புரி காலைக்
கோயில்குலாநதிகொண்டமைகண்டார்
நாயகன்மேனிநஞ்செய்தழும்பை
யேயெவர்நாத்தழும்பேறமொழிந்தார். - 106


கச்சிநகர்கடலக்கடற்றோன்றும்
பச்சமுதப்பரையைப்பணிவுற்றார்
மைச்செறிகட்கடைவைத்தருன்வைத்தா
லிசிசிறுமைக்கடல்வற்றிடுமென்றார். - 107


என்றுவணங்கிவலங்கொடிணங்கிக்
குன்றில்விளைந்தகொழுங்கனியுட்கொண்
டென்றுமிருங்களியின்பநிரம்ப
மன்றினடந்தொழவந்தவர்வந்தார். - 108


வேறு

திருவேகம்பமுடையார்க்குத் திகழ்ந்தந்தாதியொருமாலை,
யிருபான்மெய்த்தொண்டெனவெடுத்தாரியற்றொண்டறியேன் கைத்தொண்டு,
புரிவாரதனிற் காற்றொண்டுபுரியே னுண்பான்பொய்த் தொண்டாய்,
வருவேனென்றார் மெய்நாட்டோர் நகைக்கவெனு மலையுமிசைத்தார். - 109


இசைத்தங்கிருப்பாரோரிரவிலெரிவந்துதரம்புகுந்தாற்போ
லொசிக்கும்பசிவந்தெழவயிறேயூருண்டுறங்கனடந்தனகாண்
வசிக்குமவர்களனம்பகிராரளியாயென்றுவழுத்திடவும்
பசிக்குந்தரமேலிடவிளக்குப்படுவீடொன்றிற்படர்ந்தனரால். - 110


காயும்பசியாலருட்பெரியோர்கங்குல்யாமத்தெளியராய்
வாயுந்திறவாரங்கைகொட்டமனைவாழ்பவன்சற்றறியாம
லாயுங்காமக்கள்ளனெனவந்தோவந்தோதீங்கிழைப்பத்
தீயோன்செயலையறிந்தங்கணயலானொருவன்றெரிந்தணைந்தான் - 111


போற்றும்பெரியோரிவர்தமைநீபுடைத்தல்பொல்லாதெனவதனை
மாற்றிக்கொடுபோயுடற்றடவிமகிழ்பாலன்னங்கறிநறுநெய்
கோற்றேனிவைகள்கலந்தூட்டிக்குளிர்சாந்தணிந்து பணிந்துசெயல்
சாற்றியிடநீரவரவர்க்குத்தக்கதடைந்தீரென்றார்பின். - 112


பிரியாவரனைவிடைகொடுபோய்ப்பெருங்காளத்திமலைநோக்கி
வரியார்சுரும்பர்வரியிசைக்குமலர்க்காவாலங்காட்டம்மைக்
குரியார்வணங்கிமணங்கமழுமுயர்பூங்கானநெடுஞ்சாரற்
பெரியோர்தவங்கள் புரிவன வுங்காண்பான் கருதிப்பெயர்ந்தணைந்தார் - 113


தொண்டர்திரண்டோடிப்பணிந்து தொழுதுவீதிச்சினகரத்தைக்
கண்டுவணங்கிக்கரங்கூப்பிக்கள்ளங்கொள்ளாவுளத்தார்
மண்டும்பேரன்பெனவறியா வண்ணம்பயிலுங்கண்ணப்பர்
பண்டைப்பணியைநினைந்துருகிப்பல்காலொல்கிப் பணிந்தனரால். - 114


பணிந்துதிருக்காளத்திமலைப்பரஞ்சோதியையும்பணிந்துபணிந்
தணிந்துபரஞ்சோதித்திருநின்றன்பென்புருகுமின்பாளர்
திணிந்தபடிவக்கொடுமுடிகடிசைகடோறுமிசையுமவை
துணிந்துகருணைத்திறம்பெறுவார்சூழப்போந்தார்வாழ்வுறவே. - 115


போதும்போதின்மணிநகரம்புடையிலாடலிசைநோக்கி
நாதர்க்கிடுதண்டுடைத்தீபநணியவாகுங்கதிக்காளற்
கேதமில்லாவுறவேயோவென்பார்முன்போம்பலயானை
சீதமதியோன்விழாவினுக்குத்திருமுன்படரப்போவென்பார். - 116


ஐயன்றிருமேனியினடங்குமத்தீயுறசவோவெனநினைவா
ரெய்யுஞ்சிலைவேட்டுவர்திண்ணர்க்கெண்ணுமுறவோபண்ணமைந்த
செய்யனிவாய்க்குறமளிர்சிவஞ்சேர்கன்னிமார்நேர்வார்
துய்யசீரர்தமிழிசையோர் சுரும்பின்பாடலாமென்பார் - 117


தவமற்றாமலாற்றுமவர் தம்மைச்சிவகோசரியாரென்
றுவமானத்தானினைந்துருகியொளிகூர்தென்றிசைக்கயிலைத்
தவமாமலையைச்சூழ்போந்துதொடர்ந்துபடர்ந்தத்தவத்தவரோ
டவமாறியலாக்கதியளிக்குமையன்றிருமுன்னடைந்தனரால். - 118


குளிர்கூரருவித்தென்கயிலைக்கோமாற்கில்லுமெனப்பாடி
யொளியார்திருமுன்விடைகொடுபோயொற்றியூர் கைப்பற்றினராய்த்
தளியாலயங்கள்பலபோற்றித்தண்டாமரைக்காட்டொடுமாட
வெளிமாமலைகள்கலைஞானவேலைநிலவப்பதிபோந்தார். - 119


அடியார்திரளவ்வயினோக்ககியடிகளடித்தாமரைபோற்றி
விடியாவிருளைவிடிவிக்கும்வீதிமதிற்கோபுரம்பணிந்து
பொடியாடியவொண்டிருமேனிப்புனிதனுனதப்புகழ்பாடி
நடியாநிற்குநாதாந்தஞானப்பொருளைநணுகினரால். - 120


குருவாய்வந்தென்குறைதீர்த்தகுன்றேகுன்றக்கொழுமணியே
பெருவாழ்வாகியெனைக்கலந்துபிரியாதிருக்கும்பெருந்தேனே
யுருவாயருவாயுருவருவாயுரையாடியமூன்றையுமொருவி
வருவாய்தருவாயென்னுயிர்வாய்மருவாய்மருவாய்மருவாயே. - 121


போற்றிபோற்றிநாயேனைப்பொருளாய்க்கொண்டவருள்போற்றி
யற்றின்வலிகூர்முகங்கோடியடக்குஞ்சடையாயடிபோற்;றி
தேற்றியினியாயினுமுனைப்போற்செய்வாய்மெய்வா யருள்போற்றி
நீற்றினுள்ளேபவளவொளிநிகழுந்திகழ்வேயருள்போற்றி. - 122


என்றென்றருளின்றிறம்போற்றியெள்ளாவுள்ளங்கனிந்திளைப்ப
மன்றுளாடியெமக்கருளுமணிமாணிக்கப்பதம்பணிந்து
நின்றுபோந்துவலஞ்சூழ்ந்துநிகழ்ந்துமகிழ்ந்தங்கிருக்கின்றார்
தென்றல்வந்துசுந்தரரைத்திருவாரூருக்கழைத்தவூர். - 123


மயனாலயனாலியற்றாதமணிச்சங்கிலிக்குத்தூதுபோய்
வியனாமிருகானடந்தார்க்குவிருந்தாய்வந்தவெண்காடர்
கயனாணியகட்கணிகையர்காற்கமலச்சில்ம்பினொலிமலியும்
பயனாரொற்றியூர்பற்றிப்பதிகொண்டிருந்தார்படிபோற்ற. - 124


வேறு.

இருநிலமடந்தையென்னவெடுத்தவாசிரியச்செய்யு
ளொருபதுமொன்றுமொற்றியூர்த்தொகையெனப்பேரிட்ட
திருவிசைப்பாவாற்பாடித்தெளியொளியுளம்விளங்கப்
பெருநிலையுடையாரின்பப்பேறெலாம்பெற்றுளாரே. - 125


பெற்றவர்திருநீராடித்திருநீற்றின்பெற்றிமுற்றுங்
கற்றவர்புறங்கண்மூன்றுங்கற்றவர்கருத்துட்கொண்டு
செற்றவரடிகள்பாடித்தினந்தொறுநியமமாற்ற
லுற்றனருற்றவாற்றினுண்மையிங்கியம்பலுற்றேன். - 126


நம்மிடைமருதநாதனற்குருவாகிவந்து
தம்பொருடனக்குத்தந்ததண்ணளிப்பெருமையாலே
யம்பொனஞ்செழுத்தினாலுமருநியமங்கள்செய்வார்
சம்புவையொழியாப்பூசைத்தன்மையுமவற்றாற்செய்வார். - 127


கிளர்ந்தகெற்பத்தினுள்ளுங்கெற்பகோளகையிடத்துங்
கொளுங்கெற்பநிலையத்துள்ளுங்கேவலஞ்சகலங்கூர
வளந்தறிசகலந்தாமேயதீதம்போன்றதீதமன்றாம்
வளங்களுங்கண்டுநீங்குமண்டொளிகொண்டுநிற்பார். - 128


அவத்தைகடணந்தவன்றியையனுக்காக்கையாக்கிச்
சிவத்தொழிலொவ்வெழுத்தாற் சிவலிங்கவடிவமாகிப்
பவப்பெரும்பிணிதணிப்பார்பரவுயிர்தமக்குளாக்கி
யவர்க்குளவுடலந்தாமேயாயினரொற்றியூரர். - 129


அவருயிர்தமக்கில்லாக்கியாண்டவாண்டகையார்நிற்ப
வுவரிவாய்மணற்பரப்பிலொளிவெளியிடத்திற்போந்து
கவலுறாச்சிறார்கள் சூழக்கண்டவர்தன்மையாகிப்
பவர்விளையாடலோடும்பாடலும்பயிலலுற்றார். - 130


குறுமகாரணிக்குழாங்கள்குளிர்மணப்புளினப்பாங்க
ருறுதிமெய்தளர்ந்துபின்னரொன்றும்வெண்காடர்தம்மை
மறுதரம்புதைத்துத்தொக்கவப்புறம்பரந்துநிற்பார்
மறுகுழிப்படுத்தபின்னு மன்னவர்விலகிநிற்பார். - 131


பன்முறயித்தன்மைத்தாம்படிபடிமணலிற்காட்டி
முன்னியபட்டினத்துமுனைத்தவவடிவந்தானே
சென்னெறியிலிங்கமாகிச்செழுமணறனின்முளைத்தார்
புன்னெனறிச்சிறார்களோடிப்புரத்துளார்க்குரைத்தாரன்றே - 132


ஒற்றியூருழியுள்ளாருமற்றுளபுரியுளாரும்
பற்றியூர்ந்தடைந்துகண்டார்பட்டினக்கடவுளாரை
வெற்றியூர்மூன்றுஞ்செற்றவிமலரேயிவராமென்றார்
பெற்றியூரதிசயத்தின்பெருமையாருரைசெய்வாரே. - 133


மலர்மழைபிழிந்தவெங்கும்வானதுந்துமிமுழங்க
நலமலிகணங்கள்சூழநாகநாட்டரம்பைமார்கள்
பலநடம்பயிலப்பூவிற்பாவையாரடியர்பாட
விலகியவிதழிமாலையீசனுக்கணிந்தாரன்றே. - 134


புகுவார்வார்த்தைநாத்தகவாப்புவனத்துள்ளுமந்தரத்து
மகிழுந்தேவருலகுள்ளுமணிநீர்வேலிஞாலத்துந்
தகுவோர்கேளாவிவர்பேறுந்தமக்குவருமோவெனக்களித்தார்
நகையானீலப்புரமூன்றுமெரித்தார்பெருமைநவில்வார்யார் - 135


திருவம்பலமேமுதலாயசிவத்தானங்கள்பணிந்தனவு
மருவும்பொழுதுதிருவிசைப்பாவழுத்துந்திறமுமொற்றுயூ
ரருளின்றிற்த்தாற்சிவலிங்கமானவாறும்பூம்புகார்
விரவுங்குலத்தாரறிந்தோகை வெள்ளத்தழுந்தாமிதந்தெழுந்தார். - 136


அழுவார்தொழுவார்சென்னியின்மேலங்கைத்தலவஞ்சலி முகிழ்ப்பார்,
வழுவாநமதுகுலத்தெய்வம்வருமோகாணவினியென்பார்,
முழுவாண்மதியிங் கெழுந்தருளப்பெறு மோவென்னமொழிகின்றார்,
பொழுதோடிவண்விட் டவ்விடம்போய்ப்பணிவோ
மென்பார் புண்ணியரே. - 137


சொன்னவண்ணங்கிளைகளொடுந்துழனியாய்ப்பவப்பதியோ
ரன்னபெரியோர்போனநெறியவனிதலமேற்பலர்படர்வா
ரின்னாவாற்றாலொற்றியூரிடத்திலடைந்தார்சிவபெருமான்
றன்னைப்பணிந்திச்சிவபெருமாம்றனையும்பணியாநிற்கின்றார். - 138


பேற்றிபோற்றிநின்னிரண்டுபூமென்கமலபதம்போற்றி
தேற்றமருவும்பரநாதச்சிலம்புபோற்றிநலம்பயிலன்
பேற்றவரியபுலியதளின்மருங்குல்போற்றிநெருங்கரவந்
தோற்றுமுதரபந்தமுந்திச்சுழியும்போற்றியெழில்போற்றி. - 139


புரிநூன்மார்பும்வெண்ணீறும்புயமீரைந்தும்புடைபோற்றி
வரியாரரவம்வச்சிரம்வாண்மழுவோடபயம்வலம்போற்றி
யரவார்பாசக்கயிறுமணியனலங்குசத்தோளிடம்போற்றி
கரவாதிருக்குந்திருநீலகண்டம்போற்றியொளிபோற்றி - 140


நடுவுகுணபாற்றென்றிக்குநடக்கும்வடக்குக்கிழக்கிவற்றி
னடைவுபடிகம்பொன்கருமையாத்தம்பாலாமுகம்போற்றி
முடிவிலாதமுகங்கடொறுமுக்கட்கமலபதம்போற்றி
சடையுமுடியும்பொன்னிதழித்தாமத்தொடையுந்தனிபோற்றி. - 141


சிவமொன்றாயச்சதாசிவமைந்தாகித்தெளிவுகூர்வோர்க்குப்
பவமாற்றவருமகேசமெனப்பரவுமுருவத்தைந்தாகி
யவமாற்றியமெய்க்கடவுளுடனாகும்பொறுளேயடிபோற்றி
கவலாதம்மைக்காக்கவருங்கருணாநிதியேயடிபோற்றி - 142


என்றுபோற்றிமாபூசையியற்றிப்பணிகள்பலபுரிந்து
மன்றல்கமழுமவ்வூரில்வசித்தார்சிலவரிவர்க்காக
நன்றிபெருகுமிஞ்சியிசைநகரமதனினினிதமர்ந்தார்
குன்றாச்செல்வமிருமைக்கும்பெற்றார்சற்றுங்குறைவிலரே. - 143


அருளுமிலிங்கமானவன்பர்தங்காதைகேட்போர்க்
கிருளாறுஞ்செல்வமல்குமென்றுநன்னலங்கணண்ணும்
பெருமையுமறிவுமென்றும்பிறங்கியகதியுமாகுந்
திருமகள்கலைமகள்கைசேர்வதுந்திண்ணமாமே. - 144


ஆக-திருவிருத்தம். 336
பட்டணத்துப்பிள்ளையார் புராணம் முற்றிற்று.

திருச்சிற்றம்பலம்.
-----------------------------------------------------------

Comments