Marutūrantāti
பிரபந்த வகை நூல்கள்
Backதலைமலைகண்டதேவர் இயற்றிய
"மருதூரந்தாதி" :
மூலமும்
ஆறுமுக நாவலர் உரையும்
தலைமலைகண்டதேவர் இயற்றிய "மருதூரந்தாதி"
மூலமும் ஆறுமுக நாவலர் உரையும்
Source:
மருதூரந்தாதி.
தலைமலைகண்டதேவர் இயற்றியது
இஃது நாவலூர் ஆறுமுக நாவலர் செய்த உரையுடன்
சென்னபட்டணம: களாநிதியச்சுக்கூடத்தில் பதிப்பிக்கபபட்டது.
விபவ௵ சித்திரை மீ (1928 April)
Copyright Reserved.
-----------
காப்பு
ஒரு கொம் பிருபத மும்மத நாலவா யொரை நதுகரம்
பெருகுஞ் செவிசிறு குங்கண புகாமுகம் பெற்றத நதி
முருகன் றமைய னுமைந்தனை நது முகனமகனமான
மருகன் றுணை நம் மருதூர நதாதி வருவிக்கவே.
இதனது பதப்பொருள் ஒரு கொம்பு -ஒரு கோட்டையும்; இரு பதம் - இரண்டு திருவடிகளையும்; மும்மதம் - மூன்று மதங்களையும்; நால வாய் - தூங்குகின்ற வாயையும்; ஓரைந்து கரம் – ஐந்து கரங்களையும்; பெருகும் செவி - பெருத்த காதுகளையும்; சிறுகும கண - சிறுத்த கண்களையும்; புகா முகம் - புறகென்ற நிறத்துடைய முகத்தையும்; பெற்ற தந்தி - பெற்ற யானையும்; முருகன்
தமையன் - முருகக் கடவுளுடைய தமையனாரும்; உமை மைந்தன் - பார்ப்பதி தேவியாருக்குக் குமாரரும்; ஐந்து முகன மகன் - ஐந்து முகங்களையுடைய சிவபெருமானுக்குப் புதல்வரும்; மால மருகன் - விடடுணுவுககு மருமகனுமாகிய விநாயகக் கடவுள்; நம் மருதூரந்தாதி வருவிக்கத் துணை - நம்முடைய மருதூரந்தாதியைச் செய்தற்குத் துணையாவா என்றவாறு.
----------
திருப்பங்கையத்தநம்மாதுக்களித்தவன்செந்துவர்வாய்த்
திருப்பங்கையத்தன்புகூர்மருதூரன்றிரையெழுந்த
திருப்பங்கையத்தனவாகத்தனான்முகன்றெம்முன்மழுத்
திருப்பங்கையத்தனிருப்பனென்னெஞ்சிற்றிருக்கறவே. (1)
(இ - ள்) திரு அத்தம் பங்கை நம் மாதுக்கு அளித்தவன் - அழகையுடைய பாதியாகிய பாகத்தை நம்முடைய உமாதேவியாருக்குக கொடுத்தவரும்; செம் துவர் வாய்த் திருப் பங்கயத்து அன்பு கூர் மருதூரன் - செம்பவளம்போலும் வாயையுடைய இலக்குமி தாமாரைமலரின் கண் அன்பு மிகுந்திருக்கப் பெற்ற மருதூரையுடையவரும்; திரை எழுந்து அதிர் அம் கயத்து உப்பு ஆன ஆகத்தன் நான்முகன் - அலை எழுந்து ஒலிக்கின்ற நீரையுடைய ஆழமாகிய கடலைப் போன்ற சரீரத்தையுடைய விட்டுணுவுக்கும் பிரமனுக்கும்; தெவ் முன் மழுத் திருப்பு அம் கை அத்தன் - பகைவராயுள்ளார்கட்கு எதிரே மழுப்படையைத் திருப்புகின்ற அழகிய கையையு டைய பிதாவுமாகிய சிவபெருமான்; என் நெஞ்சில் திருக்கு அற இருப்பன் - என்
மனசின் கண்ணே குற்றம் நீங்கும் வண்ணம் எழுந்தருளியிருப்பர். எ-று.
கயம் - ஆழம், உப்பு - கடல், அன்ன அன என இடைக்குறைந்து நின்றது.
-----
திருக்கண்டநம்புமடியார்க்கொட்டாதசிவன்கரிய
திருக்கண்டனந்தமருதூரன்வெற்பிணிற்றிங்கள்செங்க
திருக்கண்டநந்தினு நந்தார்தவமுஞ்சிதைக்குமிந்தத்
திருக்கண்டநண்பனங்கேவந்ததாலறத்தீர்ந்தவனே. (2)
(இ - ள்) நம்பும் அடியார்க்குத் திருக்கு அண்ட ஒட்டாத சிவன் - (தம்மை) விரும்பும் அடியவர்கட்குக் குற்றம் அணுக விடாத சிவபிரானும்; கரிய திருக்கண்டின் - கரிய அழகிய கழுத்தையுடையவரும்; நந்தம் மருதூரன் வெற்பினில் - நம்முடைய மருதூரையுடையவருமாகிய கடவுளுடைய மலையின்கண்ணே; திங்கள் செங்கதிர் உக்கு அண்டம் நந்தினும் - சந்திரனும் சூரியனும் உதிர்ந்து அண்டங்கள் கெடினும்; நந்தார் தவமும் சிதைக்கும் இந்தத் திரு - கெடா தாராகிய முனிவருடைய தவத்தையும் கெடுக்கின்ற இந்தப் பெண்ணை; கண்ட நண்பன் அங்கே வந்ததால் அறத் தீர்ந்தவன் - கண்ட சிநேகன் அங்கே வந்தமையால் மிகத் தெளிந்தவன். எ.று. (பாங்கன் தலைவனை வியத்தல்.)
------------
தவனனிலங்கமலராமயன் சந்திரன்மா
தவனனிலங்கமலமொருகால்வெம்மைத்தன்மைகுன்றா
தவனனிலங்கமலனவையாமவன்சாவொண்ணா
தவனனிலங்கமலன்மருதூரன்சரணமக்கே. (3)
(இ - ள்,) தவனன் – சூரியனும்; இலம் கமலமலர் ஆம் அயன் – வீடு தாமரை மலராகப்பெற்ற பிரமனும்; சந்திரன் – சந்திரனும்; மாதவன் – விட்டுணுவும்; நல் நிலம் - நன்மை யாகிய பூமியும்; கமலம் - நீரும்; ஒருகால் வெம்மைத் தன்மை குன்றாதவன் - ஒருகாலத்திலும் வெம்மையாகிய குணம் நசிக்கப்பெறாதவனாகிய அக்கினியும்; அனிலம் – காற்றும்; கம் அலன் - ஆகாயமும் அல்லாதவராயும்; அவை ஆமவன் -அவைகளாவோராயும்; சார ஒண்ணாத வணன் - அடைய வொண்ணாத சுடுகாட்டையுடையவராயும்; இலங்கு அமலன் – விளங்கா நின்ற மலமுத்தராயும்; மருதூரன் - மருதூரையுடையவராயுமுள்ள சிவபெருமான்; நமக்குச் சரண் – நமக்குப் புகலிடம் எ-று. வனம் – சுடுகாடு. (3)
-------
நமனத்தியான நஞ்சென்னக்கொதித்தெம்மை நாடிடுமு
னமனத்தியான நின்பாற்செல்ல நல்குமுந் நான்குகையா
னமனத்தியானனனத்தபத்தர்க்கென்று நல்லவனே
நமனத்தியானஞ்செய்வார்மருதூருறை நாயகனே. (4)
(இ - ள்) நமன் அத்தி ஆன நஞ்சு என்னக் கொத்த்து எம்மை நாடிடு முன் - இயமன் கடலில் உண்டாகிய விடம்போலக் கோபித்து நம்மைத் தேடுமுன்னா; நம் மனம் தியானம் நின்பால் செல்ல நலகு - நமது மனசினாலே செய்யப்படும் தியானம் உம்மிடத்தே செல்லும்வண்ணம் அருள்செய்யும்; முகநான்கு கை ஆன மன் – பன்னிரண்டு திருக்கரங்கள் (தமக்கு) உண்டாகப்பெற்ற தலைவராகிய முருகக் கடவுளுக்கும்; அத்தி ஆனனன் அத்த - யானையினது முகத்தையுடையவராகிய விநாயகக் கடவுளுக்கும் பிதாவே; பக்தர்க்கு என்றும் நல்லவனே - அன்பர்கட்கு எந்நாளும் நல்லவரே; நம - (உமக்கு) வணக்கம்; நத்து யானம் செய்வார் மருதூர் உறை நாயகனே - சங்குகள் ஊர்தலைச் செய்கின்ற நீரையுடைய மருதூரின்கண் எழுந்தருளியிரா நின்ற தலைவரே, எ-று. யானம் - ஊர்தல், வார - நீர்.
-------------
அகனகத்தானத்தடி வீழ்ந்தலறவடியொன்றினா
யகனகத்தானத்த நாலை நதினானையடர்த்தவன்றூ
யகனகத்தான்மதில்சூழ்மருதூாரையடையவரே
யகனகத்தா நினைத்தைம்புலத்துன்பமறுப்பவரே. (5)
(இ -ள்) அகல் நகம் தானத்து அடி வீழ்ந்து அலற - பரந்த (கைலாச) மலையாகிய இடத்தினிது அடியின்கண் விழுந்து கதறும்வண்ணம்; அடி ஒன்றின் நாயகம் நகத்தான் அத்தம் நாலத்தினானை அடர்த்தவன் - ஒருபாதத்திலுள்ள பெருலிரனகத்தினால் இருபது கைகளையுடையவனாகிய இராவணனை வருத்தினவராகிய சிவபெருமானுடைய; தூய கனகத்தான் மதில் சூழ் மருதூரை அடையவரே - சுத்தமாகிய பொன்னினாலே மதில்கள் சூழப்பெற்ற மருதூரைச் சேர்பவரே; அகன் நகத் தாம் நினைத்து - (தம்) மனம் மலரும்வண்ணம் தாம் சிந்தித்து; ஐம்புலம் துன்பம் அறுப்பவர் - ஐம்புலன்களாலாகிய துன்பங்களை ஒழிப்பவர் எ-று, சிவபெருமானுடைய மருதூரையெனக் கூட்டுக.
------------
அறுகாலனஞ்செறிவார்மருதூரையாழியின்பா
லறு காலனஞ்சமாகண்டாரைத்தொண்டரையாள்பவரை
யறுகாலனஞ்சொரிவேள்வியினால்வணங்கன் பாக்கரு
ளறுகாலனஞ்சவருகாலமுமோ ரலைவில்லையே. (6)
(இ-ள்) அற கால் அனம் செறிவார் மருதூரரை - வண்டுகளும் அன்னங்களும் நெருங்குகின்ற நீரையுடைய மருதூரையுடையவரும்; ஆழியின்பால் அறு காலன் நஞ்சு அமர் கண்டரை - கடலினிடத்துள்ள சேடனுடைய விடம் பொருந்திய கழுத்தினை-யுடையவரும்; தொண்டரை ஆள்பவரை - அடியார்களை ஆள்பவருமாகிய சிவபெருமானை; அறுகு ஆல் அனம் சொரி வேள்வியினால் வணங்கு அன்பர்க்கு - அறுகையும் ஆலஞ்சமித்தையும் அன்னத்தையும் சொரிகின்ற யாகத்தினால் வணங்குகின்ற பத்தர்களுக்கு ; அருள் அறு காலன் அஞ்ச வரு காலமும் - கருணை அற்ற இயமன் அஞ்சம் வண்ணம் வருகின்ற காலத்திலும்; ஒரலைவு இல்லை –ஒருதுன்பமும் இல்லை. எ-று.
--------------
அலையம்புயங்கமணிமுடியான்கொன்றையந்தொடைய
லலையம்புயன்மருதூர்வைகைநாட்டினிலாலைவிற்பை
யலையம்புயங்கும்வினைபோய்த்துயருமகல்கைக்குவந்
தலையம்புயமலர்ப்பான்றொலைப்பானென்றரிவையரே. (7)
(இ- ள்) அலை அம் புயங்கம் அணி முடியான்- திரையையுடைய கங்காசலத்தையும் பாம்பையும் அணிந்த முடியை யுடையவரும்; அம் கொன்றைத் தொடையல் அலை அம் புயன் - அழகிய கொன்றைமாலை அசைகின்ற அழகிய புயத்தையுடையவருமாகிய சிவபெருமானுடைய; மருதூர் வைகை நாட்டினில் - மருதூரைத் தன்னிடத்துடைய வைகைநீதி சூழ்ந்த நாட்டின் கண்ணே; ஆலை வில் பையல் ஐயம்பு உயங்கும் வினை போய் - கருப்புவில்லையுடைய சிறுவனாகிய மன்மதன் ஐந்து பாணங்களினால் (என்னை) வருத்துகின்ற தொழில் நீங்கி; துயரும் அகல்கைக்கு - துன்பமும் ஒழிதற்பொருட்டு; அலை அம்புயம் அலர்ப்பான் என்று வந்து தொலைப்பான்- இவ்விரவைத் தாமரைமலரை அலர்த்துவோனாகிய சூரியன் எப்பொழுது வந்து போக்குவான்; அரிவையரே - பெண்களே. எ-று, நான்காமடியில் அல்லையென்பது அலையென இடைக்குறைந்து நின்றது. [இரவினீட்டம்]
---------------
அரியரவிந்தன்புகழ்மருதூருறையையன்றுய்ய
வரியரவிந்தம்புனைவோன்சிலம்பினதர்மனித
ரரியரவிந்தமதமாவினையமராகுலத்துக்
கரியரவிந்தமுயலூன்றின்றேகுமவதரித்தே. (8)
(இ - ள்) அரி அரவிந்தன் புகழ் மருதூர் உறை ஐயன்-விட்டுணுவும் பிரமனும் புகழும் மருதூரின்கண் எழுந்தருளி யிராகின்ற பிதாவும்; துய்ய அரி அரவு இந்து அம்புனைவோன் - சுத்தமாகிய அக்கினியையும் பாம்பையும் சந்திரனையும் தங்காசலத்தையும் அணிபவருமாகிய சிவபெருமானுடையன; சிலம்பின் அதர் - மலையினிடத்ததாகிய வழியின்கண்ணே ; மனிதர் அரியர் - மனிதர்கள் அரியர்கள்; அ விந்தம் மதம் மாவினை அமரா - அந்த விந்தமலைபோலும் மதத்தையுடைய யானைகள் தந்தொழிலின் அடங்காவாம்; குலத்துக்கு அரியர் - குலத்தின்கண்ணே (நாம்) மேலோர்; அவதரித்து அவிந்த முயல் ஊன்தின்று ஏகும் - (நீங்கள் இங்கே) தங்கி வெந்த முயலிறைச்சியை உண்டு ( நாளைப்) போங்கள். எ-று. (விருந்து விலக்கல்).
---------------------
அவதரிக்கும்புகழ்மாமருதூரனென்னைம்புலனா
யவதரிக்கும்பகைசெற்றாளரன்வெற்பினாரழலவா
யவதரிக்கும்பசுந்தேனுந்தருஞ்சொல்முதொழுகி
யவதரிக்கும்பொறுக்கப்படைத்தான் கமலாலையனே. (9)
(இ -ள்) அவதரிக்கும் புகழ் மா மருதூரன் - தங்குகின்ற கீர்த்தியையுடைய பெரிய மருதூரையுடையவரும்; என் ஐம்புலன் ஆய் அவதரிக்கும் பகை செற்று ஆள் அரன் - என்னுடைய ஐம்புலன்களாய்ப் பிறக்கும் பகையைக் கெடுத்து ஆண்டருளும் அரனென்னுந் திருநாமத்தை யுடையவருமாகிய சிவபெருமானுடைய; வெற்பின் ஆர் அழல் வாய அதர் - மலையின்கண்ணே நிறைந்த அக்கினியைத் தன்னிடத்துடைத் தாகிய வழியை; இக்கும் பசுங்தேனும் தரும் சொல் அமுது ஒழுகிய அதரிக்கும் - கருப்பஞ்சாற்றையும் பசுங்தேனையும் போலும் சொல்லாகிய அமுதம் ஒழுகப்பெற்ற அதரத்தையுடையவனாகிய பெண்ணுக்கும்; பொறுக்கப் படைத்தான் கமலாலயன் - பொறுக்கும்படி படைத்தனன் பிரமன். எ-று. [பின்சென்ற செவிலி இரங்கல்].
----------
ஆலையனங்கனெய்யாமனெஞ்சே நம்மையன்பர்சிந்தை
யாலையனங்கமங்கத்தணிவோன ரனாரமளி
யாலையனங்கம்வருந்தியு ந்தேடற்கரியவன்கை
யாலையனங்கங்கொண்டோன்மருதூரனடிவணங்கே. (10)
(இ - ள்) நெஞ்சே – மனமே; ஆலை அனங்கன் நம்மை எய்யாமல் – கருப்பு வில்லையுடைய மன்மதன் எம்மை எய்யா வண்ணம்; அன்பா சிந்தை ஆலயன் - பக்தர்களுடைய இருதயமாகிய திருக்கோயிலேயுடையவரும்; அங்கம் அக்கத்து அணிவோன் - எலும்பைத் திருமேனியிலே தரிப்பவரும்; அரன் – அரனென்னுந் திருகாமத்தையுடையவரும்; ஆர் அமளி ஆல் ஐயன் அங்கம் வருந்தியும் தேடற்கு அரியவன் - தங்கிய சயனம் ஆலிலையாகக் கொண்ட விட்டுணு சரீரம் வருத்தமுற்றும் தேடிக் காண்டற்கு அரியவரும்; கையால் அயன் அம் கம் கொண்டோன் - திருக்கரத்தினாலே பிரமனுடைய அழகிய தலையை அறுத்துக்கொண்டவரும்; மருதூரன் அடி வணங்கு - மருதூரையுடையவருமாகிய சிவபெருமானுடைய திருவடிகளை நீ வணங்குவாயாக. எ-று. எய்யாவண்ணம் சிவபெருமானுடைய திருவடிகளை நீ வணங்குவாயாகவெனக் கூட்டுக.
---------------
வணங்கரியார்தமக்கன்பற்றவரன்று வன்றொண்டர்க்கா
வணங்கரியார்முன்புகாட்டவல்லார்கையும்வாயுஞ்செய்ய
வணங்கரியாரயன் காண்பரியார்மருதூரைங்கை
வணங்கரியார்தந்தையாரெந்தையாரெம்மனத்தவரே. (11)
(இ-ள்) வணங்கு அரியார்தமக்கு அன்பு அற்றவர்- (தம்மை) வணங்குதல் அரியசாயினாருக்கு அன்பு இல்லாதவரும்; அன்று வன்றொண்டர்க்கு ஆவணம் கரியார் முன்பு காட்ட வல்லார் - அக்காலத்திலே சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அடிமையோலையைச் சாக்ஷிகளெதிரே காட்ட வல்லவரும் ; கை வாயும் செய்ய வணம் கரியார் அயன் காண்பு அரியார் - கையும் வாயும் சிவந்தவராய் (உடம்பு ) நிறம் கரியவராயுள்ள விட்டுணுவும் பிரமனும் காண்டற்கு அரியவரும்; மருதூரர் – மருதூரையுடையவரும்; ஐங்கை வள் நம் கரியார் தந்தையார் – ஐந்து திருக்கரங்களையும் கொடையையுமுடைய நம்முடைய யானைமுகக் கடவுளுக்குப் பிதாவும்; எந்தையார் - எமக்குப் பிதாவுமாகிய சிவபெருமான்; எம்மனத்தவர் - நம்
திருதயத்தின் கணுள்ளவர். எ-று.
---------------
மனமாறுகைக்கெம்மைவந்தாளு நாதன்வரம்பெறவா
மனமாறுகைக்கு ந்திருவாயிற்கோபுரமாமருதூர
மனமாறுகைக்கொண்டடிக்க நின்றோன் கொன்றைமாமலர்த்தா
மனமாறுகைக்குஞ்சடையானென வினைமாறுமன்றே. (12)
(இ - ள்) மனம் ஆறுகைக்கு வந்த எம்மை ஆளும் நாதன் - (நமது) நெஞ்சம் ஆறுதற்பொருட்டு வந்து நம்மை ஆண்டருளும் தலைவர்; வரம் பெற வாமனம் மால் துகைக்கும் திருவாயில் கோபுரம் மாமருதூர் மன் - வரத்தைப் பெறுதற்குக் குறளுருக்கொண்ட விட்டுணு சஞ்சரிக்கின்ற திருவாயிலையுடைய கோபுரத்தை யுடைய பெரிய மருதூருக்கு அரசர் ; அம் மாறு கைக் கொண்டு அடிக்க நின்றோன் -அழகிய பிரம்பைக் கையிற்கொண்டு (பாண்டியன்) அடிக்க நின்றவர்; மா கொன்றை மலர்த் தாமன் - பெரிய கொன்றைப்பூவினாலே தொடுக்கப்பட்ட மாலையை-யுடையவர்; அம் ஆறு உகைக்கும் சடையான் என - சலத்தையுடிய நதி ஓடா நின்ற சடையையுடையவர் என்று சொல்ல; அன்றே வினை மாறும் - அப்பொழுதே வினைகள் நீங்கிவிடும். எ . று.
----------------
மாறாமதிக்கமறலியைச்செற்றவன்வஞ்சமென்று
மாறாமதிக்கபடர்க்கொளிப்பானரன்வண்ணவளை
மாறாமதிக்கமறுகூடுசென்றவன்மாமருதூர்
மாறாமதிக்கநந்தேர்முந்துமாயின்வலவ நன்றே, (13)
(இ-ள்) மாறா மதிக்க மறலியைச் செற்றவன் - விரோதமாகத் தருக்குற இயமனைக் கொன்றவரும்; வஞ்சம் என் அம் மாறா மதிக் கபடர்க்கு ஒளிப்பான் - வஞ்சகம் எந்நாளும் நீங்காத புத்தியையுடைய கபடர்களுக்கு ஒளிப்பவரும்; அரன் – அரனென்றுந் திருநாமத்தையுடையவரும்; வண்ணம் வளை மாறா மதிக்க மறுகு ஊடு சென்றவன் . பல நிறங்களையுடைய வளையல்களை விற்றுக்கொண்டு (கண்டவர்) மதிக்கும் வண்ணம் (மதுரை) வீதியினிடத்தே திரிந்தவருமாகிய சிவபெருமானுடைய; மாமருதூர் - பெரிய மருதூரின் கண்ணே; மால் தாமதிக்க நம் தேர் முந்துமாயின் - மேகம் தாழ்க்க நமது தேர் முற்பட்டுச் செல்லுமாயின்; வலவ நன்று - தேர்ப்பாகனே, நல்லது. எ று. [தலைவன் பாகனோடு சொல்லல்]
--------------
வலவம்படமழுவேந்தியவேந்தவரித்தசித்திர
வலவம்படவளருந்தனபாரமலைமகள்கா
வலவம்படர்பொழில்சூழ்மருதூரமதன்விரக
வலவம்படவரும்போதென்னேயாளவரவல்லையே. (14)
(இ-ள்) வலவம் பட மழு ஏந்திய - வேந்த (பகைவருடைய) வலிமை அழியும் பொருட்டு மழுப்படையைத் தாங்கிய இறைவரே; வரித்த சித்திரம் வல் அவம் பட வளரும் தனபாரம் மலைமகள் காவல - எழுதப்பட்ட அழகையுடைய சூதாடு கருவி குற்றத்துட்படும் வண்ணம் வளரா நின்ற தனபாரங்களையுடைய பார்ப்பதி தேவியாருக்கு நாயகரே; வம்பு அடர் பொழில் குழ் மருதூர - மணம் நெருங்கிய சோலை சூழ்ந்த மருதூரை யுடையவரே ; மதன் விரகம் வலம் அம்பு அடி வரும்போது - மன்மதனுடைய காமநோயை விளைக்கும் வெற்றியையுடைய பானங்கள் கொல்ல வரும்பொழுது; என்னை ஆள வல்லை வர - என்னை ஆண்டருளுதற்கு விரைவிலே வருவீராக. எ – று. முதலடியில் வல்லவம வலவமென இடைக்குறைந்து நின்றது. வரவென்பது அகரவீற்று வியங்கோண்முற்று. [பிரிவாற்று நாயகி கூறல்]
----------------
வலையலைவார்முலைபூங்குழலாக்கொண்டமங்கைபங்கா
வலையலைவார்விடவல்லவனே மருதூரவென்க
வலையலைவரர்மன நின் பாற்புரிந்தனன்மாயஞ்செய்ய
வலையலை வாரையனே செய்யபாத மலர்தரவே. (15)
(இ -ள்) வலை அலை வார் முலை பூம் குழல் ஆக் கொண்ட மங்கை பங்கா – சூதாடு கருவியையும் இருளையும் கச்சைய ணிந்த தனமும் பூவை முடித்த கூந்தலுமாகக் கொண்ட உமா தேவியாரைப் பாசத்திலுடையவரே; வலை அலை வார் விட வல்லவனே - வலையைத் திரையினையுடைய கடலின் கண் விடு தற்கு வல்லவரே; மருதூர - மருதூரையுடையவரே; என் கவலை அலைவு ஆர் மனம் நின்பால்
புரிந்தனன் - என்னுடை ய கவலையும் துன்பமும் சிறைந்த நெஞ்சத்தை உம்மிடத்தே ஆக்கினேன்; மாயம் செய்ய வலை அலை -மாயத்தைச் செய்தற்கு வல்லிரல்லிர்; வார் ஐயனே - நேர்மையையுடைய பிதாவே; செய்ய பாதம் மலர் தர – சிவந்த திருவடித்தாமரை மலர்களைத் தருவீராக. எ- று. முதலடியில் வல்லை அல்லை என்பனவும் நான்காமடியில் வல்லை அல்லை என்பனவும் இடைக்குறைந்து நின்றன.
---------------
மலரம்பையா ரஞ்சொரியாலைவிற்கொண்டுமாரெனெய்யா
மலரம்பையாரஞ்சும்வஞ்சிக்கருள்கிலர்மாலையைய
மலரம்பையரஞ்செறியாகா பாரத்தற்குவாய்த்தவெற்றி
மலரம்பையாரஞ்சடையார்மருதவனத்தவரே. (16)
(இ - ள்) மலர் அம்பை ஆரம் சொரி ஆலை விற்கொண்டு மாரன் எய்யாமல் – புட்ப பாணங்களை முத்தினைச் சொரிகின்ற கருப்புவில்லைத்கொண்டு மன்மதன் எய்யா வண்ணம்; அரம்பையார் அஞ்சும் வஞ்சிக்கு மாலையை அருள்கிலர் - தெய்வப் பெண்கள் அஞ்சுகின்ற பெண்ணுக்கு மாலையைக் கொடுக்கின்றிலர்; அமலர் – மலமுத்தரும்; அம் பை ஆரம் செறி ஆகர் - அழகிய படத்தையுடைய (பாம்பாகிய) ஆபரணம் நெருங்கிய திருமேனியையுடையவரும்; பார்த்தக்கு வாய்த்த வெற்றி மலர - அருச்சுனனுக்குப் பொருந்திய வெற்றியையுடைய மல்லரும்; அம்பை ஆர்.அம் சடையார் – கங்கா கலத்தை நிறைத்த அழகிய சடையையுடையவரும்; மருத வனத்தவர் - மருதவனத்தில் எழுந்தருளியிருப்பவருமாகிய சிவ பெருமான், எ-று. நான்காமடியில் மலலர் மலர் என இடைக்குறைந்து நின்றது,
----------------
வனத்தவனம்பன்மலர்க்கஞ்சத்தார்மருதூரன்செய்ய
வனத்தவனம்பன்னிருகரத்தானத்தன்மாயமெய்வேம்
வனத்தவனம்பனகப்பணியான் சதுர்மாமறைய
வனத்தவனம்பனெனச்சொலப்போமும்மலங்களுமே. (17)
(இ - ள்) வனத்த அனம் பல் மலர்க்கஞ்சத்து ஆர் மருதூரன் - நீரினிடத்தனவாகிய அன்னங்கள் பலதாமரைப்பூக்களின்மீது தங்கும் மருதூரையுடையவரும் ; செய்ய வனத்தன - செய்ய நிறத்த யுடையவரும்; நம பன்னிருகரத்தான் அத்தின் - நம்முடைய பன்னிரண்டு திருக்கரங்களையுடைய முருகக் கடவுளுக்குப் பிதாவும்; மாயம் மெய் வேம் வனத்தவன் – மாயமாகிய சரீரம் வேகின்ற சுடுகாட்டையுடையவரும்; அம் பனகம் பணியான் – அழகிய சருப்பாபரணத்தை யுடையவரும்; மா சதுர் மறையவன் நத்தவன நம்பன் - பெரிய நான்கு வேதங்களையுடைய பிரமனுக்கும் சங்கையுடைய விட்டுணுவுக்கும் கடவுளுமாகிய சிவபெருமான் ; எனச் சொல - என்று சொல்ல; மும்மலங்களும் போம் – மூன்று மலங்களும் நீங்கிவிடும். எ – று.
--------------
மலங்குவளைக்கு நடுவேதுயிலும்வயலிறசெங்க
மலங்குவளைக்குண்மலாமருதூர நின் மாலைபெறா
மலங்குவளைக்குங்கிட்லோசைகேட்டுவருந்திநெஞ்ச
மலங்குவளைக்குங்குமப்புயத்தாண்முக்கண்மைக்கண்டனே. (18)
(இ - ள்) மலங்கு வளைக்கு நடுவே துயிலும் வயலில் - மலங்குமீன் சங்குகளுக்கு நடுவே கண்வளரா நின்ற வயல்களினிடத்தே; செங்கமலம் குவளைக்குள் மலர் மருதூர - செந்தாமரைகள் குவளைகளுக்கிடையே மலர்கின்ற மருதூரையுடையவரே; நின் மாலை பெறாமல் - உம்முடைய மாலையைப் பெறாது; அம் கு வளைக்கும் கடல் ஓசை கேட்டு வருந்தி நெஞ்சம் மலங்கு உவளை - அழகிய பூமியைச் சுற்றாநின்ற கடலினது ஒலியைக் கேட்கி வருத்தமுற்று மனம் கலங்குகின்ற உந்தப் பெண்ணை; குங்குமம் புயத்து ஆள் – குங்குமத்தை யணிந்த (உம்முடைய) புயங்களினாலே ஆண்டருளும்; முக்கண் மைக் கண்டனே – மூன்று கண்களையும் கரிய கழ்த்தையுருடையவரே. எ - று. [பாங்கி கூறல்.]
----------------
கண்டங்களிக்கும்படி நஞ்சமுதுண்டகாரணவ
கண்டங்களிக்குமுழுதுங்கண்டாய்கின்றகாமருதூர்க்
கண்டங்களிக்குமகிழடியார்க்கவர்காதலன்பு
கண்டங்களிக்குங்கருணைதந்தென்தறெனைக்காப்பதுவே. (19)
(இ - ள்) கண்டம் களிக்கும்படி, நஞ்சு அமுது உண்ட காரண - கழுத்துச் செருக்குறும்படி விடத்தை அமிர்தமாக உண்டருளிய காரணரே; இக்கு முழுதும் அகண்டங்கள் கண்டாய் – இப்பூமி முழுதையும் (மற்றவைகள்) எல்லாவற்றையும் படைத்தவரே ; கா நின்ற மருதூர் - சோலைகள் நிலை பெற்ற மருதூரினிடத்தே; கண் தங்கு அளிக்கு மகிழ் அடியார்க்கு - (உம்முடைய) கண்களிலே பொருந்திய கருணைக்கு மகிழாகின்ற தொண்டர்களுக்கு; அவர் காதல் அன்பு கண்டு - அவர்களுடைய விருப்பமாகிய அன்பைக் கண்டு; அங்கு அளிக்கும் கருணை தந்து எனக் காப்பது என்று - அங்கே கொடுக்கின்ற திருவருளை (எனக்குந்) தந்து என்னைக் காப்பது எந்நாள்! எ -று.
-----------------
காப்பரவப்பணியாக்கொள்வர்மாக்கமலாலயங்கொள்
காப்பரவப்பணினானீக்கித்தேனைக்கவர்மருதூர்
காப்புரவப்பணியானிற்கும்வஞ்சகக்கன்னெஞ்சுரு
காப்புரவப்பணியென்னையுமாள்வர்கனற்கண்ணரே. (20)
(இ-ள்) காப்பு அரவம் பணியாக் கொள்வர் - கங்கணம் சருப்பாபரணமாகக் கொள்ளுவர்; மா கமலம் ஆலயம் கொள் காப்பு அரவம் பணினால் நீக்கித் தேனைக் கவர் மருதூர் கரப்பர் - வண்டுகள் தாமரை மலராகிய வீடு கொண்ட (இதழாகிய) கதவை ஒசையையுடைய பண்ணினாலே நீக்கித் தேனைக் கவர்கின்ற மருதூரைக் காத்தருளுவர்; அவம் பணியால் நிற்கும் வஞ்சகம் கல் நெஞ்சு உருகாப்பரவப பணி - வீணாகிய தொழிலினாலே நிலைபெற்ற வஞ்சகத்தையுடைய கல்லைப் போலும் மனம் உருகித் துதிக்கும்வண்ணம் செய்து; என்னையும் ஆள்வர் – என்னையும் ஆண்டருளுவர்; கனல் கண்ணர் – அக்கினிக் கண்ணையுடையவராகிய சிவபெருமான். எ-று.
------------------
கனகத்தமரவென்சென்னியின் வண்டின் கணங்கள்செங்கோ
கனகத்தமரும்புனன்மருதூரன்கரியகண்டன்
கனகத்தமருகக்கையானரக்கனைக் காதியதுங்
கனகத்தமரவிந்தப்பதம்வைப்பதெக்காலத்திலே, (21)
(இ-ள்) கணம் கத்து அமர - மிகுதியாயே (சமயக்} சுத்துக்கள் அடங்கும்வண்ணம்; என் சென்னியின் - என் சிரசின்மீது; வண்டின் கணங்கள் செம் கோகனகத்து அமரும் புனல் மருதூரன் - வண்டினுடைய கூட்டங்கள் செந்தாமரை மலரின்கண் இருக்கும் நீரையுடைய மருதூரையுடையவரும்; கரிய கண்டன் - கரிய கழுத்தையுடையவரும்; கனகம் தமருகம் கையான் -பொன்னிறத்தையுடைய உதிக்கை யேந்திய கையை-யுடையவருமாகிய சிவபெருமான்; அரக்கனைக் காதிய துங்கம் நகத்து அம் அரவிந்தம் பதம் - இராக்க தனாகிய இராவணனை நெரித்த பெரிய நகத்தையுடைய அழகிய செந்தாமரை மலர்போலுந் திருவடியை ; வைப்பது எக் காலத்தில் - வைத்தருள்வது எக்காலத்தில், எ – று. சமயக் சத்துக்கள் அடங்கும் வண்ணம் திருவடியை என்சிரசின்மீது வைத்தருள்வது எக்காலத்திலெனக் கூட்டுக.
---------------
காலம்பரம்பையங்காசினியங்கிலங்குமந்த
காலம்பரம்பையங்காய்த்தென்னையாளகைக்குக்கட்கழுநீர்க்
காலம்பரம்பையங்காட்டுக்குப்பாயக்கருகிமள்ளா
காலம்பரம்பையங்கூர்மருதூரமுக்கப்பரனே. (22)
(இ-ள்) கால் அம்பாம் பயம் காசினி அங்கி கலங்கும் அந்த காலம் - காற்றும் ஆகாயமும் நீரும் பூமியும் அக்கினியும் கலங்கா நின்ற முடிவுகாலத்தின் கண்; பயம் காய்ந்து என்னை ஆள்கைக்குப் பரம் -அச்சத்தை ஒழித்து என்னை ஆளுகிறபொருட்டு (உமக்கே) பாரம்; கள் கழுநீர்க் கால அம்பு-தேனைப் பொருந்திய செங்கழு நீரையுடைய வாய்க்காலிலுள்ள நீர்; அரம்பை அம் காட்டுக்குப் பாயக் கருதி - வாழைச்சோலைக்குப் பாய நினைந்து; மள்ளர் கால் அம் பாம்பை அங்கு ஊர் மருதூர -பள்ளர்கள் தங்கள் காலினுலே அழகிய பரம்புகளை அவ்வாய்க்காலிலே செலுத்துகின்ற மருதூரையுடையவரே; முக்கண் பரனே – மூன்று கண்களையுடைய மேலானவரே. ஏ-று. பாம்பு கழனி திருத்தும் பலகை.
------------------
பரமாகவந்தமறப்பூதஞ்குழ்படையாயதளம்
பரமாக வந்தமதிச்சடையாய்வையம்பாவகனம்
பரமாகவந்தமருத்தாகுவாய்வினைபற்றற நின்
பரமாகவந்தவெனைமருது கண்பார்த்தருளே. (23)
(இ - ள்) பரமா – மேலானவரே; கவந்தம் மறம் பூதம் சூழ் படையாய் –குறைத்தலைப் பேய்களையும் வலியையுடைய பூதங்களையும் சூழ்ந்த சேனையாகவுடையவரே; அதள் அம்பர - தோலாகிய வஸ்திரத்தை யுடையவரே; மாகம் அந்தம் மதிச் சடையாய் -ஆகாயததில் வருகின்ற அழகிய சந்திரனை யணிந்த சடையையுடையவரே; வையம் பாவகன் அம் பரம் கவநதம் மருத்து ஆகுவாய் - பூமியும் அக்கினியும் ஆகாயமும் பெரிய நீரும் வாயுவும் ஆகுமவரே; வினை பற்று அற நின் பாம் ஆக வந்த எனை (என்னுடைய) வினைகள் சராதல ஒழியும்பொருட்டு உம்முடைய பாரமாக வந்த என்னை; மருதூர கண் பார்த்தருள் - மரு.துரையுடையவரே கண் பார்த்தருளும். எ-று,
-------------
அருளத்தனை நம்பிறப்பேழு நீக்குமடிக்கமல
மருளத்தனை நமக்கண்ணியனாக்குவனாட்பட்டதொண்
டருளத்தனைமருதூரானையன்பரவத்தையில்வந்
தருளத்தனைமனமேயொழியாமனம்மையனென்றே. (24)
(இ-ள்) அத்தனை நம் பிறப்பு ஏழும் நீக்கும் அடிக் கடிலம் அருள - அவ்வளவினவாகிய நம்முடைய எழுவகைப் பிறப்பையும் போக்குகின்ற திருவடித்தாமரை மலரை ( நமக்குத்) தரும்பொருட்டு; தனை நமக்கு அண்ணியன் ஆக்குவன் - தம்மை நமக்குச் சமீபித்தவராக்குவர்; ஆட்பட்ட தொண்டர் உளத்தனை - அடிமைப்பட்ட அடியாருடைய இருதயத்துள்ளவரும்; மருதூரானை – மருதூரை யுடையவரும்; அன்பர் அவத்தையில் வந்து அருள் அத்தனை - பக்தர்களுடைய அவத்தையின்கண் வந்து (அவர்களைக்) காக்கும் பிதாவுமாகிய சிவபெருமான; மனமே ஒழியாமல் நம் ஐயன் என்றே அருள் - நெஞ்சே இடையறாது நங்கடவுளென்றே (நீ) சொல் வாயாக எ-று. சொல்வாயாயின், தம்மை நமக்குச் சமீபித்தரலராக்குவர்ர் எனக் கூட்டுக. [பூட்டுவிற்பொருள்கோள்.]
---------
ஐயம்பலருந்தாச்சென்றிரந்தவனாதவனா
ரையம்பலரும்பொடிபடச்செற்றவரனமருதூ
ரையம்பலருஞ்சடையானருளிலையேலகங்க
னையம்பலருங்கனஞ்சேர்குழலிக்கரும்பகையே. (25)
(இ-ள்.) ஐயம் பலரும் தரச் சென்று இரந்தவன் – பிக்ஷையைப் பலரும் இடப் போய் யாசித்தவரும்; ஆதவனாரை அம் பல் அரும் பொடி படச் செற்ற அரன் - சூரியனை அழகிய பற்கள் அரிய துகள் படும்வண்ணம் கோபித்த அ ரனென்னுந் திருநாமத்தை யுடையவரும்; மருதூர் ஐ - மருதூரையுடைய கடவுளும்; அம்பு அலரும் சடையான் அருள் இலேயேல் - கங்கை நீர் விரிந்த சடையையுடையவருமாகிய சிவபெருமானுடைய கருணை இல்லையாயின்; அநங்கன் ஐயம்பு அலரும் - மன்மதனுடைய ஐந்து புஷ்பபாணங்களும்; கனம் சேர்குழலிக்கு அரும் பகை -
மேகத்தைப்போலும் கூ ந்தலையுடைய தலைமகளுக்குப் பெரும்பகை, எ.று. [பாங்கி கூறல்.]
---------------
அரும்பரவைக்கடுக்கண்டர்வன்றொண்டரையாள்கையிலை
பரும்பரவைக்குறவாக்குத்திருவருளார்மருது
ரரும்பாவைக்கண்டரையரைவைப்பவரன்று நஞ்ச
மரும்பாவைக்கஞ்சன்வஞ்சமெனறட்டவற்கப்புறமே, (26)
(இ-ள்) அரும் பாவைக் கடுக் கண்டர் - பெருமையாகிய கடலினெழுந்த நஞ்சையடக்கிய கழுத்தையுடையவரு ம்; வன்றொண்டரை ஆள்கையில் அயரும் பரவைக்கு உறவு ஆக்கும் திரு அருளார் – சந்தரமூர்த்தி நாயனாரை அடிமைக் கொண்டமையால் (அவரை ஊடலினாலே) தளரா நின்ற பரவையாரோடும் உறவு செய்தருளிய திருவருளை யுடையவரும்; மருதூரர் - மருதூரையுடையவருமாகிய சிவபெருமான் ; ஆண் தரையரை (தம்மைச்) சார்ந்த பூவுலகத்தாரை; உம்பர் அவைக்கு வைப்பவர் அன்று - தேவர்களுடைய கூட்டத்தின்கண் வைப்பவரல்லர்; நஞ்சம் அரும்பு அரவைக் கஞ்சன் வஞ்சம் என்று அட்டவற்கு அப்புறம் – விடந்தோன்றுகின்ற பாம்பைக் கஞ்சனுடைய வஞ்சகமென்று கொன்றவராகிய விட்டுணுவினுடைய பதத்துக்கு மேலாகிய பதத்தின்கண் (வைப்பவர்) (எ-று.)
---------------
அப்புக்கரக்குஞ்சடைமருதூரரொன்னாரை மண்மே
லப்புக்கரக்குமணியணிவோர்வெற்பிணண்ணலெய்த
வப்புக்கரக்குஞ்சரங்கண்டிவ்வாறிங்கதரத்தின
யப்புக்கரக்குங்கறுக்குங்கொடி நின்றதாலிகொண்டே. (27)
(இ - ள்) அப்புக் கரக்கும் சடை மருதூரர் – கங்கை நீரை அடக்கிய சடையையுடைய மருதூரினரும்; ஒன்னாரை மண்மேல் அப்பு உக்கர் - பகைவர்களாகிய அசுரர்களை பூமியின்மேலே மோதிய அக்கினியையுடையவரும்; அக்கு மணி அணிவோர் வெற்பின் - எலும்புமணியைத் தரிப்பவருமாகிய சிவபெருமானுடைய மலையின் கண்ணே; அண்ணல் எய்த அப்புக் கரம் குஞ்சரம் கண்டு - தலைமகன் விடுத்த அம்பைப் புழைக்கையையுடைய யானையினிடத்தே கண்டு; அதரத்தின் நயப்புக்கு அரக்கும் கறுக்கும் கொடி - அதரத்தினது அழகுக்கு அரக்கும் கறுக்கின்ற கொடிபோலுந் தலைமகள்; இவ்வாறு இங்கு ஆவி கொண்டு நின்றது - இங்ஙனம் இங்கே பிராணனைக்கொண்டு நின்றனள். எ-று. உக்கர் என்பதற்கு இடபத்தையுடையவரெனப் பொருள்கூறினடிமையும். உக்கம் - அக்கினி, இடபம், மூன்றாமடியில் அம்பு அப்பு என வலித்தல் விகாரம் பெற்று நின்றது. [பின் சென்ற செவிலி இரங்கல்.]
--------------
ஆவிக்கனங்களங்கார்வண்டணிதந்தமர்மருதூ
ராவிக்கனங்களந்தொண்டர்க்கடாமைச்சென்றாண்டருளை
யாவிக்கனங்களங்காட்டமெய்வேர்க்குமவத்தையில்வந்
தாகிக்கனங்களருத்துமுன்னாண்டருளஞ்சலென்றே, (28)
(இ -ள்) ஆவிக்கு அனம் கள் அங்கு ஆர் வண்டு அணி தந்து அமர் மருதூரா - வாலிகளுக்கு அன்னங்களும் தேனை அங்கே உண்ணும், வண்டுகளும் அழகு செய்து கொண்டு இருக்கின்ற மருதூரையுடையவரே; விக்கனங்கள் அம் தொண்டர்க்கு அடாமைச் சென்று ஆண்டருள் ஐயா - இடையூறுகள் அழகிய அடியார்களுக்கு அணுகாவண்ணம் போய் ஆண்டருளும் ஐயரே; விக்கல் நம் களம் காட்ட - விக்கலை நம்முடைய கழுத்துத் தோற்றுவிக்க ; மெய் வேர்க்கும் அவத்தையில் - சரீரம் வேர்க்கின்ற அவத்தையின்கண்; ஆவிக்கு அனங்கள் அருத்தமுன் - பிராணனுக்குச் சோறுகளை ஊட்டுமுன்; வந்து அஞ்சல் என்று ஆண்டருள் – எழுந்தருளி வந்து அஞ்சாதொழியென்று ஆண்டிருளும். எ-று.
---------------
அஞ்சக்கரத்தை நினைவோர்க்கு நாச்செவியங்கமென்றுண்
டஞ்சக்கரத்தையணைவேற்கண்ணார்வசமாகவொட்டா
ரஞ்சக்கரத்தையரிக்களித்தார்மருதூரரங்கி
யஞ்சக்கரத்தையறுத்தாரென்பார்க்கில்லையச்சங்களே. (29)
(இ-ள்) அஞ்சு அக்கரத்தை நினைவோர்க்கு- பஞ்சாக்ஷரத்தைச் சிந்திப்பவர்களுக்கு; நாச் செவி அங்கம் மெல் தண்டம் சக்கு - நாக்கும் காதும் காயமும் மென்மையாகிய மூக்கும் கண்ணும்; அரத்தை அணை வேல் கண்ணார் வசம் ஆக ஒட்டார் - அரத்தைப் புணர்ந்த வேல்போலும் கண்களையுடைய பெண்களது வயத்தனவாக விடாதவர்; அம் சக்கரத்தை அரிக்கு அளித்தார் - அழகிய சக்கராயுதத்தை விட்டுணுவுக்குக் கொடுத்தவர்; மருதூரர் – மருதூரையுடையவர்; அங்கி அஞ்சக் கரத்தை அறுத்தார் என்பார்க்கு - அக்கினி அஞ்சும் வண்ணம் கையைச் சேதித்தவா என்று துதிப்பவர்களுக்கு; அச்சங்கள் இல்லை - பயங்கள் இல்லை, எ-று.
------------
அச்சங்கரிக்குறயான்றுயர்நீங்கவொரண்ணலெய்த
வச்சங்கரிக்குமரிது கண்டிர்மதனங்கமெரி
யச்சங்கரிக்குமரனுழவோர்பறியானமுத்தமீ
னச்சங்கரிக்கும்வயனமருதூரனணிவரைக்கே, (30)
(இ-ள்) கரிக்கு அச்சம் உற - யானைக்குப் பயம் பொருந்தவும்; யான் துயர் நீங்க - நான் துன்பத்தினின்றும் நீங்கவும்; ஒரண்ணல எய்த அச்சு - ஒப்பில்லாத தலைமகன் எய்த அச்சு; அங்கு அரிக்கும் அசிது கண்டீர் - அங்கே விட்டுணுவுக்கும் அரியது கண்டீர்; மதன் அங்கம் எரியச் சங்கரிக்கும் அரன் - மன்மதனுடைய சரீரம் எரியும்வண்ணம் கொன்றருளிய அரனெனனுந் திருநாமத்தையுடையவரும்; உழவோர் பறியால் முத்தம் மீன் அச்சங்கு அரிக்கும் வயல் மருதூரன் – உழவர்கள் பறியினாலே முத்துக்களைக்கும் மீன்களையும் அந்தச் சங்குகளையும் அரிக்கின்ற வயல்களினாலே சூழப்பட்ட மருதூரையுடையவருமாகிய சிவபெருமானுடைய ; அணிவரைக்கு - அழகிய மலையின் கண்ணே. எ.று. [மனம் விலக்கு]
-----------------
வரையரம்பாய்கதிர்வைவேன்முருகர்வழுவைமுக
வரையரம்பாசிலைக்கஞ்சப்புனன்மருதூரர்வெள்ளி
வரையரம்பாய்சடையாரிசையேழும்வரவமைத்த
வரையரம்பாய்வரக்கண்டோர்மலரடிவந்திப்பனே. (31)
(இ-ள்) வரை அரம் பாய் கதிர்வை வேல் முருகர் - வரையப்பட்ட அாத்தினால் அராவப்பட்ட ஒளியையுடைய கூர்மையாகிய வேலாயுதத்தையுடைய முருகக் கடவுளுக்கும்; வழுவை முகவர் ஐயர் - யானையினது முகத்தையுடை யவராகிய விநாயகக்கடவுளுக்கும் பிதாவும்; அம் பசு இலைக் கஞ்சம் புனல் மருதூரர் - அழகிய பசிய இலைகளையுடைய தாமரையையுடைய நீரினாலே சூழப்பட்ட மருதூரை யுடயவரும்; வெள்ளி வரையர் - வெள்ளிமலையையுடையவரு ம்; அம் பாய் சடையார் – கங்கைநீர் பாய்கின்ற சடையையுடையவரும்; இசை ஏழும் வர அமைத்த வரையர் அம்பு ஆய் வரக் கண்டோர் - ஏழிசைகளையும் வரும்படி அமைத்த வேய்ங்குழலை யுடையவராகிய விட்டுணு பாணமாய் வரச்செய்த வருமாகிய சிவபெருமானுடைய; மலர் அடி வந்திப்பன் – செந்தாமரை மலர்போலும் திருவடிகளை (யான்) வழிபடுவேன். எ-று.
---------------
வந்தியங்கரமலைகுட்டங்களைபித்தம்வாத நம்மேல்
வந்தியங்காமலையானனநாதனைவான்றனைச்செவ்
வந்தியத்தாமலைமாமருதூரனைவாழ்த்திநெஞ்சே
வந்தியங்காமலைசூடும்பிரானை வந்தினையே. (32)
(இ-ள்) அம் வந்தி காமலை குட்டங்கள் ஐபித்தம் வாதம் நம்மேல் வந்து இயங்காமல் -நீரிழிவும் காமாலையும் வெண்குட்டம் கருங்குட்டங்களும் சிலேட்டுமமும் பித்தமும்
வாதமும் நம்மேல் வந்து தங்காவண்ணம்; ஐயானனம் நாதனை – ஐந்து முகங்களையுடைய தலைவரும்; வான் தனைச் செவ்வந்தி அம் காமலை மா மருதூரனை - ஆகாயத்தைச் செவ்வந்தியையுடைய அழகிய சோலைகள் பொருகின்ற பெரிய மருதூரையுடையவரும்; அங்கு அலை ஆம் சூடும் பிரானை - அங்கே திரையையுடைய கங்கைநீரைத் தரித்த கடவுளும்; வரதனை - வரத்தைக் கொடுப்பவருமாகிய சிவபெருமானை; நெஞ்சே வாழ்த்தி வந்தி - மனமே துதித்து வழிபடுவாயாக. எ-று.
-------------
வரம்பலவாயன்பர்க்கீவாய்ககனம்வருங்கதிர
வரம்பலவாய்விட்டகலச்செற்றாய்தவர்மாதர்கற்பின்
வரம்பலவாய்விடவேடங்கொண்டாய்மருதூரபொன்னி
வரம்பலவாயமதண்டத்தென்மேலன்புவைத்தருளே. (33)
(இ-ள்) பல வரம் ஆய் அன்பர்க்கு ஈவாய் - பலவரங்களை (உம்மை) ஆராய்ந்தறியும் பக்தர்களுக்குக் கொடுப்பவரே; ககனம் வரும் கதிரவர் அம் பல் அவாய் விட்டு அகலச் செற்றாய் - ஆகாயத்தின்கண் வருகின்ற ஆதித்தருடைய அழகிய பற்கள் அவ்வாயை விட்டு நீங்கும்வண்ணம் உதிர்த்த வரே; தவர் மாதர் கற்பின் வரம்பு அல ஆய் விட வேடம் கொண்டாய் - முனிவர்களுடைய பன்னியர்களது கற்பினது எல்லை அல்லனவாய் விடும்வண்ணம் (பிக்ஷாடன) வேடங்கொண்டவரே; மருதூர – மருதூரையுடையவரே; நிவர் பொன்னம்பலவா- உயர்ந்த கனகசபையை யுடையவரே; யமன் தண்டித்து என்மேல் அன்பு வைத்தருள் -இயமனுடைய தண்டத்தின்கண் என்மேல் அன்பு வைத்தருளும், எ-று.
--------------
வையம்பரவமருதூருதையும்வரதிர்செந்தீ .
வையம்பரவமதித்தார்க்கரியவர்வாய்த்தவது
வையம்பரவமகட்சூட்டுவார்கழல்வாழ்த்தியுன்பு
வையம்பரவமுடியார் நெஞ்சே நல்லாந்தரவே, (34)
(இ -ள்.) வையம் பரவ மருதூர் உறையும் வரதர் - பூமியின்கணுள்ளார் ஆதிக்கும்படி மருதூரின்கண் எழுந்தருளியிருக்கும் வரத்தைக் கொடுப்பவரும்; செம் தீ வை அம்பர் - சிவந்த அக்கினியாகிய கூர்மையையுடைய பானத்தையுடைய வரும்; அவமதித்தார்க்கு அரியவர் - (தம்மை) அவமதித்தவர்களுக்கு அரியவரும்; வாய்த்த வதுவை அம் பரவ மகள் சூட்டுவரா கழல் - பொருந்திய மணமாலையை அழகிய வலைஞர் மகளுக்குச் சூட்டினவருமாகிய சிவபெருமானுடைய திருவடிகளை; வாழ்த்தி அன்பு வை -துதித்து அன்பை வைப்பாயாக; அம்பு அரவம் முடியார் - (கங்கை) நீரையும் பாம்பையு மணிந்த முடியையுடையவராகிய அக்கடவுள்; நெஞ்சே நல் வரம் தர - மனமே நன்மையாகிய வரத்தைத் தரும்பொருட்டு. எ-று.
----------------
தரவாகமஞ்சன்னமெய்க்கூற்றென்மேல் வருந்தண்டத்தினா
தரவாகமங்கைபங்கோடுவிளங்கத்தலங்கண நா
தரவாகமங்கணின்றேத் துஞ்செந்தாமரைத்தாளெனக்குத்
தரவாதமந்தொலையாமருதூருறைசங்கரனே, (35)
(இ - ள்) தரம் ஆகம் மஞ்சு அன்ன மெய்க் கூற்று என் மேல் வரும் தண்டத்தின் -மலையைப் போன்ற மார்பையும் மேகத்தைப் போன்ற சரீரத்தையுமுடைய இயமன் என்மேல் இத்தி செய்யும் தண்டத்தின் கண்; ஆதரவு ஆக மங்கை பங்கோடு விளங்க - விருப்பம் பொருத்த உமாதேவியார் ஒரு பாகத்தின் கண் விளங்கும்வண்ணம்; தலம் கணநாதர் அல் ஆகமங்கள் நின்று ஏத்தும் செந்தாமரைத்தாள் எனக்குத் தரவா - பூவுலகத்தாரும் கணநாதர்களும் அச்சிவாகமங்களும் நின்று துதிக்கின்ற செந்தாமரைமலர் போலுந் திருவடிகளை எனக்குத் தரும்பொருட்டு வந்தருளும்; கமம் தொலையா மருதூர் உறை சங்கரனே - (பொருள்களினது) நிறைவு நீங்காத மருதூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற சுகஞ்செய்பவரே. எ-று,
------------------
சங்கரவீரமதியாபரணதமிழ்மருதூர்ச்
சங்கரவீரமழுவேந்துநாதசரணெனக்கஞ்
சங்கரவீரமிட்டேத்தன்பர்போற்றுன்பந்தானறவச்
சங்கரவீரமுன்வந்துநிற்பாய்கொன்றைத்தாரவனே. (36)
(இ - ள்) சங்கு அரவு ஈரம் மதி ஆபரண - சங்கும் பாம்பும் குளிர்ச்சியையுடைய சந்திரனுமாகிய ஆபரணங்களை யுடையவரே; தமிழ் மருதூர்ச் சங்கர - தமிழையுடைய மருதூரின் கண் எழுந்தருளியிரா நின்ற சுகஞ்செய்பவரே; வீரம் மழு எந்து நாத - வீரத்தையுடைய மழுப்படையைத் தாங்கிய தலைவரே; சரண் எனக் கஞ்சம் கரவீரம் இட்டு ஏத்து அன்பர்போல் - புகலிடமென்று தாமரை மலரையும் அலரி மலரையும் இட்டுத் துதிக்கின்ற பக்தர்களுக்குப்போல; துன்பம் அற அச்சம் கரவு ஈர – துன்பம் நீங்கும் வண்ணம் பயத்தையும் வஞ்சகத்தையும் அரியும் பொருட்டு; முன் வந்து நிற்பாய் - எனக்குமுன் எழுந்தருளிவந்து நின்றருளும்; கொன்றைத் தாரவனே –கொன்றை மாலையுடையவரே. எ-று.
--------------
அவனித்தலத்தன்பர்துன்பந்துடைப்பவனம்புயன்மா
லவனித்தலத்தனென்றேத்தும்பிரானத்தளித்தவெண்டூ
யவனித்தலத்தண்வயன்மருதூரனையார்விழிக்கேற்
பவனித்தலத்தண்டைத்தாள்செல்லன்மீட்டென்னையாற்றியதே. (37)
(இ - ள்) அவனித் தலத்து அன்பர் துன்பம் துடைப் பவன் – பூமியின் கண்ணே பக்தர்களுடைய துன்பத்தை ஒழிப்பவராயும்; அம்புயன் மாலவன் நித்தல் அத்தின் என்று ஏத்தும் பிரான் - பிரமனும் விட்டுணுவும் நித்தமும் பிதாவென்று துதிக்கின்ற கடவுளாயுமுள்ள சிவபெருமானுடைய; நத்து அளித்த வெள் தூய வல் நித்தலம் தண் வயல் - சங்குகள் தந்த வெள்ளிய சுத்தமாகிய வலிய முத்துக்களையுடைய குளிர்மையாகிய வயல்களினாலே குழப்பட்ட; மருதூர் அனையார் -மருதூரைப் போல்வாராகிய இம்மங்கையருடைய; விழிக்கு ஏற்ப வனித்தல் அத்தண்டைத் தாள் செல்லல் மீட்டு என்னை ஆற்றியது - கண்ணுக்கு இயையப் புகழ்தலைப் பொருந்திய அந்தத் தண்டையையணிந்த கால் (பூமியிலே தோய்தலால்) என் வருத்தத்தை மாற்றி என்னை ஆற்றியது. எ – று. [தெளிதல்]
---------------
ஆற்றலைத்தண்டரும்போரிலைமாலுக்கரியவனே
யாற்றலைத்தண்டரு நீர்முடியாய்மருதூராசே
யாற்றலைத்தண்டருக்கூற்றாள் கொண்டேகிடுமன்றெனக்கோ
ராற்றலைத்தண்டருக்காணத்தந்தாண்டருளஞ்சலென்றே. (38)
{இ - ள்) ஆல் தலைத் தண்டு அரும்பு ஒரிலை மாலுக்கு அரியவனே - ஆலமரத்தினது தலைச்கொம்பில் அரும்பிய ஒரிலையின் கண்ணே நித்தரை செய்கின்ற விட்டுணுவுக்கு அரியவரே; ஆறு அலை தண் தரும் நீர் முடியாய் - நதியினது திரையினாலே குளிர்மையைத் தருகின்ற நீர்மையைப்பொருந்திய முடியையுடையவரே; மருதூர்
அரசே - மருதூருக்கு நாயகரே; ஆறு அலைத்து அண்ட அரும் கூற்று ஆள் கொண்டு ஏகிடும் அன்று - வழியின்கண் வருத்திக் கிட்டுதற்கரிய இயமனுடைய தூதர்கள் என்னைக் கொண்டுசெல்லும் அந்நாளிலே; எனக்கு ஒராற்றலைத் தண்டரும் காணத் தந்து அஞ்சல் என்று ஆண்டருள் - எனச்கு ஒருவலிமையைத் தண்டஞ் செய்வோரும் காணும்படி தந்து அஞ்சாதொழியென்று ஆண்டருளும் எ – று.
--------------
அஞ்சுகமாகமஞ்சொன்மருதூரரரக்கனையீ
ரஞ்சுகமாகமங்கச்செற்றுனையுமடர்த்தபங்க
யஞ்சுகமாகமனத்துள்வைப்பேனையடர்கைக்குச்சற்
றஞ்சுகமாகமழைமுகில்போனிறத்தந்தகனே. (39)
(இ - ள்) அம் சுகம் ஆகமம் சொல் மருதூரர் - அழகிய கிளிகள் சிவாகமங்களைச் சொல்லா நின்ற மருதூரின் கண் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய; அர்க்கனை ஈ ரஞ்சுகம் ஆசம் மங்கச் செற்று - இராக்கதனாகிய இராவணனைப் பத்தாகிய தலைகளும் மார்பும் நெரியும்படி ஊன்றி ; உனையும் அடர்த்த பங்கயம் - உன்னையும் உதைத்தருளிய திருவடித் தாமாரை மலரை; சுகம் ஆக மனத்துள் வைப்பேனை - இன்பம் உதிக்கும் வண்ணம் என்னெஞ்சத்துள் இருத்தித் தியானிக்குமென்னை; அடர்கைக்குச் சற்று அஞ்சுக - நெருங்குதற்குச் சிறிது அஞ்சுடவாய்; மாகம் மழை முகில் போல் நிறத்து அந்தகனே – ஆகாயத்தின் கண்ணதாகிய மழையைப் பொழியும் மேகத்தைப்போலும் நிறத்தையுடைய இயமனே. எ –று. சிவபெருமானுடைய திருவடித்தாமரை மலரை எனக்கூட்டுக.
---------------
அந்தத்தலைவரையாக்கையர்தென்மருதூரரன்பர்க்
கந்தத்தலைவரைமாத்திரையிற்செறுமத்தர்வெற்பி
ன நதத்தலைவரைபோல்கரிகொல்லுமுனஞ்சலென்ற
வந்தத்தலைவரையன்றியென்னார்ப்பதணிமுரசே. (40)
(இ - ள். அந்தம் தலை வரையாக் கையர் - அழகையுடைய பிரமகபாலத்தை நீக்காது கொண்ட கையினையுடையவரும்; தென் மருதூரர் – அழகிய மருதூரை யுடையவரும் ; அன்பர்க்கு அந்தத்து அலைவு அரை மாத்திரையில் செறும் அத்தர் வெற்பின் - பத்தர்களுக்கு முடிவுகாலத்திலுள்ள துன்பச்தை அரைமாத்திரையினுள்ளே போக்குகின்ற பிதாவுமாகிய சிவபெருமானுடைய மலையின் கண்ணே; அம் ததது அலைவரைபோல் கரி கொல்லுமுன் – மத நீர் பாய்கின்ற நடைமலை போலும் யானை (நம்மைக்) கொல்லுமுன் ; அஞ்சல் என்ற அந்தத் தலைவரை அன்றி –பயப்படாதே யென்று சொல்லிய அந்த நாயகருக்கக்லது; அணி முரசு ஆரப்பது என் - அழகையுடைய முரசம் ஆரவாரிப்பது என்னை, எ-ற்.. [மணம் விலக்கு.]
--------------
அணியவனந்திமருதூரனென்றிறைஞ்சன்பர்க்குப்பாம்
பணியவனநதி வணங்கொண்டமேனியனான நதனா
ரணியவனந்திகழீமத்துளாடியருள்புரிந்தா
ரணியவனந்திவரத்தன்பதத்திலமர்ந்தவனே. (41)
(இ-ள்) நந்தி மருதூரன் என்று – நந்தியென்னுந் திரு நாமத்தையுடையவர் மருதூரின் கணெழுந்தருளிலிருப்பவர் என்று சொல்லி; இறைஞ்சு அன்பர்க்கு அணியவன் - வணங்குகின்ற பக்தர்களுக்குச் சமீபித்தவர்; பாம்பு அணியவன் - சருப்பமாகிய ஆபரணத்தை யுடையவரும்; அந்தி வணம் கொண்ட மேரியன் - செவ்வானம்போலும் நிறந்தைப்பெற்ற திருமேனியையுடையவரும்; ஆனந்தன் – சுகரூபியும்; நாரணியவன் -உமாதேவியை யுடையவரும் ; நந்து இகழ் ஈமத்துள் ஆடி – கெடா நின்ற இகழப்படும் சுடுகாட்டின்கண் நிருத்தஞ்செய்பவரும்; அருள் புரிந்து ஆர் அணியவன் - கருணையை (அடியார்களுக்குச்) செய்து திருவாத்தி மாலையை அணிதலையுடையவரும்; நந்தி வரத்தன் - இடபத்தின்மேல் வருதலையுடையவரும்; பதத்தில் அமர்ந்தவன் -(அடியார்களது) பக்குவத்திற் பொருந்தினவருமாகிய சிவபெருமான், எ-று.
-----------------
அம்பரவம்புனைவேணியபாணியினங்கியவை
யம்பரவம்புனைகுழ்மருதூருறையையதிசை
யம்பரவம்புனைநெற்றிக்கனல்விழியாயென்பதை
யம்பரவம்புநைகொங்கையைவீழ்ப்பதறிந்திலையே. (42)
(இ - ள்) அம்பு அரவம் புனை வேணிய - (கங்கை) நீரையும் பாம்பையும் அணிந்த சடையையுடையவரே; பாணியின் அங்கிய - கையிலே தரிக்கப்பட்ட அக்கினியையுடையவரே; வையம் பரவு அம் புனை சூழ் மருதூர் உறை ஐய -பூமியிலுள்ளோர் துதிக்கின்ற அழகிய புன்னைமரங்கள் சூழ்ந்த மருதூரின்கண் எழுத்தருளியிரா நின்ற பிதாவே; திசை அம்பர திக்காகிய வஸ்திரத்தையுடையவரே; உனை நெற்றிக் கனல் விழியாய் என்பது வம்பு – உம்மை நெற்றியின்கண் அக்கினிக்கண்ணையுடையீரென்று சொல்வது வம்பு; ஐயம்பர் அ வம்பு நை கொங்கையை வீழ்ப்பது அறிந்திலை – ஐந்து பாணங்களையுடையவனாகிய மன்மதன் அந்தக் கச்சை வருத்துகின்ற தனத்தையுடையவளைக் கொல்வதை அறிந்திலீர் (ஆதலால்) எ.று., [பாங்கி கூறல்]
-------------
இலையையிலங்கையர்தங்தையர்தென்மருதூரரெண்க
யிலையையிலங்கையர்வீழவுதைத்தவரென்றஞ்சம்வே
றிலையையிலங்கையராவென்று பாலொழுக்கெல்லைமெய்யா
மிலையையிலங்கையராவுயிர்நீங்குமுனென்னெஞ்சமே. (43)
(இ-ள்) இலை அயில் அம் கையர் தந்தையர் - இலைத் தொழிலையுடைய வேற்படையை ஏந்திய அழகிய கையினையுடையவராகிய முருகக் கடவுளுக்குப் பிதா; தென் மருதூரர் - அழகிய மருதூரையுடையவர்; எண் கயிலை ஐ - மதிக்கப்படும் திருக்கைலாசமலையின்கண் எழுந்தருளிலிரா நின்ற கடவுள் ; இலங்கையர் வீழ உதைத்தவர் என் – இலங்கையை யுடையவனாகிய இராவணன் விழும்வண்ணம் ஊன்றினவர் என்று சொல்வாயாக; தஞ்சம் வேறு இலை - ( நமக்குத்) துணை வேறில்லை; ஐ இலங்கு ஐயர் ஆ என்று பால் ஒழுக்கு எல்லை - அழகு விளங்குகின்ற மூத்தோர்கள் ஆவென்று பாலை வார்க்கின்ற முடிவின்கண்; மெய் ஆம் இலை ஐயில் அங்கு அயரா உயிர் நீங்குமுன்; சரீரமாகிய வீட்டைச் சிலேட்டும மேலிடும்பொழுது அங்கே மறந்து ஆன்மா நீங்குமுன் ; என் நெஞ்சமே -என் மனமே; எ-ற். என்மனமே ஆன்மா நீங்குமுன் பிதா மருதூரையுடையவர் கடவுள் ஊன்றினவர் என்று சொல்வாயாகவெனக் கூட்டுக.
---------------
என்றலைக்குன்றிருத்தாடாவென்பாருய்கைக்கெண்கயிலை
யென்றலைக்குன்றினிருந்தருள்செய்யுமிறைமருதூ
ரென்றலைச்குன்றிநிறங்கவர்மேனிகொண்டீடழிக்கைக்
கென்றலைக்குன்றிவிடாதகல்வானத்தெழுவதுவே. (44)
(இ - ள்) என் தலைக்கு உன் திருத்தாள் தா என்பார் உய்கைக்கு - என்னுடைய தலைக்கு உம்முடைய திருவடிகளைத் தந்தருளுமென்று சொல்வோர்கள் உய்தற்பொருட்டு; எண் கயிலை என் தலைக் குன்றின் இருந்து அருள் செய்யும் இறை மருதூர் - மதிக்கப்படுகின்ற கைலாசமெனப்படும் முதன்மையாகிய மலையின் கண் எழுத்தருளியிருக் கருணையைச் செய்யா நின்ற சிவபெருமானுடைய மருதூரின் கண்ணே; என்று அலைக் குன்றி நிறம் கவா மேனி கொண்டு ஈடு அழிக்கைக்கு -சூரியன் இராத்திரியைக் குன்றிமணியினது நிறத்தைக் கவர்கின்ற சரீரத்தைக்கொண்டு வலியழித்தற்கு; என்று ஆலைக் குன்றிவிடாது அகல் வானத்து எழுவது - எப்பொழுது கடலினுள்ளே நசித்து விடாது பரந்த ஆகாயத்தின்கண் எழும்புவது. எ.று. [இரவினீட்டம்.]
------------------
எழுதாரணிபுகழ்மாமருதூருறையீசர்வெற்பி
லெழுதாரணிதிகழ்தோளண்ணலேயிந்தரத்தமன்ற
லெழுதாரணிகுழலாட்கெங்ஙனாந்தொய்யிலேந்துகொங்கைச்
கெழுதாரணியமடவாரிடையினிறுதிகண்டே. (45)
(இ - ள்) எழு தாரணி புகழ் மா மருதூர் உறை ஈசர் வெற்பில் - ஏழுலகமும் புகழ்கின்ற பெரிய மருதூரின்கண் எழுந்தருளியிரா நின்ற சிவபெருமானுடைய மலையின் கண்ணே; எழு தாரணி திகழ் தோள் அண்ணலே – எழுவையும் மலையையும்போல விளங்குகின்ற புயங்களையுடைய தலைமகனே; இந்த முத்தம் மன்றல எழு தார் அணி குழலாட்கு எங்கன் ஆம் - (நீ கையுறையாகக் கொண்டுவந்த} இந்த முத்து மாலை மணமெழுகின்ற மாலையை யணிந்த கூந்தலையுடைய தலைமகளுக்கு எப்படி ஆகும்; அணிய மடவார் - அடுத்த பெண்கள்; இடையின் இறுதி கண்டு - இடையினது இறந்துபடுதலைக் கண்டு; ஏந்து கொங்கைக்குத் தொய்யில எழுதார் - கனத்த தனங்களுக்குத் தொய்யிலை எழுதார்கள் (ஆதலால்.) எ . று. [பாங்கி கையுறை மறுத்தல்.]
------------
கண்டனையாரழலாக்கொண்டதேவைக்கரியதிருக்
கண்டனையாரவயன்மருதூர்தனிற் கண்களிக்கக்
கண்டனையார்வயிற்றிற்கருத்தாழ்வுங்கடந்துசொற்றேன்
கண்டனையாரயிற்கண்ணாம்வலையுங்கடந்தனமே. (46)
{இ- ள்) கண் தனை ஆர் அழல் ஆக் கொண்ட தேவை - கண்ணை நிறைந்த அக்கினியாகக் கொண்டருளிய தேவரும்; கரிய திருக்கண்டனை - கரிய அழகிய கழுத்தையுடையவருமாகிய சிவபெருமானை; ஆரம் வயல் மருதூர்தனில் கண் களிக்கக் கண்டு - முத்துக்களையுடைய வயல்களினாலே சூழப்பட்ட மருதூரினிடத்தே கண்கள் களிக்கும் வண்ணம் தரிசித்து; அனையார் வயிற்றின் கருத் தாழ்வும் கடந்து - தாயர்களுடைய வயிற்றினுள்ள கருவின்கண்ணே தங்குதலையும் நீங்கி; சொல் தேன் கண்டு அனையார் அயில் கண் ஆம் வலையும் கடந்தனம் - (தஞ்) சொற்கள் தேனையும் கற்கண்டையும் போலாகப்பெற்ற பெண்களுடைய வேல் போலும் கண்ணாகிய வலையையும் கடந்தேம். எ-று.
---------------
கடனந்திரும்பவந்தீர்கைக்குவைகைக்கவரின்வந்து
கடனந்தினம்படிவார்மருதூரன் கடுவுண்டவி
கடனந்திநம்பன் கடுங்காலகாலன்கங்காளன்கன்ம
கடனந்தினநதொறும்புல்லும்பிரானங்கருத்தினனே. (47)
(இ - ள்) கடன் நந்தி நம் பவம் தீர்கைக்கு - (முற்பிறப்புக்களிலுள்ள வினைக்) கடன் கெட்டு நம்முடைய பிறப்பு ஒழிதற்பொருட்டு; வைகைக் கவரின் வந்த கடல் கந்து இனம் படி வார் மருதூரன் - வைகையாற்றினது பகுதியாகிய கால்கடோறும் வந்து கடலிலுள்ள சங்குகளினது கூட்டங்கள் படிகின்ற சலத்தையுடைய மருதூரின்கண் எழுந்தருளியிருப்பவரும்; கடு உண்ட விகடன் - நஞ்சையுண்டஅஞ்சற் பாலரும்; நந்தி நம்பன் - நந்தி நம்பன் என்னுந் திருநாமங்களையுடையவரும்; கடும் காலகாலன் - கடுமையாகிய காலகாலரும்; கங்காளன் – முழுவெலும்பை யணிந்தவரும்; கல் மகள் தனம் தினந்தொறும் புல்லும் பிரான் – (இமைய) மலையினது புதல்வியாராகிய உமாதேவியாருடைய தனங்களை நாடோறுந்தழுவுகின்ற கடவுளுமாகிய சிவபெருமான்; நம் கருத்தினன் - நங்கருத்தினுளர். எ.று.
------------
கருமங்குலத்திறந்தற்சங்கைவிட்டுக்கசிந்துபவக்
கருமங்குலத்துமெய்யன்பர்க்குவீதிகமலங்கணி
கருமங்குலத்திருக்கைம்மங்கைபங்கன் கமுகுசென்று
கருமங்குலத்தனையும்மருதூரன் கழலினையே. (48)
(இ - ள்) கருமம் குலத்திறம் தற்சங்கை விட்டுக் கசிந்து - வினையையும் குலமேன்மையையும் தற்போதத்தையும் ஒழித்து (மன) நெகிழ்ந்து; பவம் கரு மங்க உலத்து மெய் அன்பர்க்கு வீடு - பிறப்புக்கு மூலமாகிய கரு நசிக்கும்வண்ணம் கெடுக்கின்ற மெய்ப்பக்தர்களுக்கு முத்தியாவது; கமலங்கள் நிகரும் அங்குலம் திருக்கை மங்கை பங்கன் - செந்தாமரை மலர்களைப்போலும் விரல்களையுடைய அழகிய கைகளையுடைய உமாதேவியாரைப் பாகத்திலுடையவரும்; கமுகு சென்று கரு மங்குலத்து அனையும் மருதூரன் - கமுக மரங்கள் போய்க் கருமையாகிய மேகங்களை அளாவா நின்ற மருதூரையுடையவருமாகிய சிவபெருமானுடைய; கழல் இணையே - இரண்டு திருவடியுமே. எ-று. இரண்டாமடியில் மங்க என்பதன் ஈற்றகரம் விகாரத்தாற்றொக்கது. நான்காமடியில் அத்து சாரியை, மெய்ப்பக்தர்களுக்கு முத்தியாவது சிவபெருமானுடைய இரண்டு திருவடியுமேயெனக் கூட்டுக.
-------------
கழலாதவஞ்செய்துபோற்றிடுகைக்கென்கருத்தைவிட்டுக்
கழலாதவன் புதருவாய்விடுதளக்கன்னியர்கைக்
கழலாதவன் பதந்தோய்மருதூரகருணைநின்பு
கழலாதவன்சொற்கதற்றும்பிதற்றுடைக்கள்வனுக்கே. (49)
(இ - ள்) கழலா – வீரக்கழலை யணிந்தவரே; தவம் செய்து போற்றிடுகைக்கு - தவத்தைச் செய்து (உம்மைத்) துதித்தற்கு; என் கருத்தை விட்டுக் கழலாத அன்பு தருவாய் - என்னெஞ்சத்தை விட்டு நீங்காத அன்பைத் தந்தருளும்; தளம் கன்னியர் கை விடு கழல் ஆதவன் பதம் தோய் மருதூர - உபரிகைகளினுள்ள பெண்கள் கைகளினால் எறிகின்ற கழங்கு சூரியனுடைய பதத்தை அணைகின்ற மருதூரையுடையவரே; கருணை நின் புகழ் அலாத வல் சொல் கதற்றும், பிதற்று உடைக் கள்வனுக்கு – திருவருளையுடைய உம்முடைய கீர்த்தியல்லாத கடிய சொற்களைக் கத்துகின்ற புலம்பு தலையுடைய கள்வனுக்கு எ-று. கள்வனுக்குத் தந்தருளுமெனக் கூட்டுக.
---------------
களங்கந்தரமனையாய்மூலமாயைகருமமென்னுங்
களங்கந்தரங்கெடநீர்சொரியாநிற்பக் கண்புளகங்
களங்கந்தரவென்னையாண்டருள்வாயென்று காவொழுக்குங்
களங்கந்தரமழைபோன்மருதூர்நகர் காவலனே. (50)
(இ – ள்) களம் கந்தரம் அனையாய் - கழுத்து மேகத்தை ஒப்பாகப் பெற்றவரே; மூலம் மாயை கருமம் என்னும் களங்கம் தரம் கெட - ஆணவமும் மாயையும் கருமமும் எனப்படும் (மும்) மலங்களும் வலிமை கெடும் பொருட்டு; கண் நீர் சொரியா நிற்ப அங்கம் புளகங்கள் தர – கண்கள் நீரைப் பொழியவும் சரீரம் உரோமஞ் சிலிர்த்தலைத் தரவும் ; என்னை என்று ஆண்டருள்வாய் - என்னை எங்காள் ஆண்டருள் வீர்; கா ஒழுக்கும் கள் அங்கு அந்தரம் மழை போல் மரு தூர் நகர் காவலனே - சோலைகள் ஒழுக்குகின்ற தேன் அங்கே ஆகாயத்தினின்றும் பொழிகின்ற மழையை நிகர்க்கின்ற மருதூரென்னும் திருப்பதியைக் காத்தலையுடையவரே. எ-று.
-------------
காவலராவரும்பர்க்கிறையாகுவர்கங்குன்மதிற்
காவலராவருங்கோற்கள்ளராயினுக்காலுகுக்குங்
காவலராவருந்தும்மருதூரரைக்கன்னிதன்பங்
காவலராவருந்தாரணிவாயென்றுகைதொழவே. (51)
(இ. ள்) காவலர் ஆவர் – அரசராவர்; உம்பர்க்கு இறை ஆகுவர் - தேவர்களுக்கு நாயகனுகிய இந்திரனாவர்; கங்குல் மதில் காவல் அராவரும் கோல் கள்ளர் ஆயினும் - இராத்திரியிலே மதிற்காவல் அராவுகின்ற கன்னக்கோலையுடைய திருடராயினும்; கால் உகுக்கும் கா அலர் ஆ அருந்தும் மருதூரரை - காற்றுதிர்க்கின்ற சோலையிலுள்ள பூக்களைப் பசுக்கள் உண்கின்ற மருதூரின்கண் எழுந்தருளியிரா நின்ற சிவபெருமானை; கன்னிதன் பங்கர - உமாதேவியாருடைய பக்கத்தையுடையவரே; வல் அரா அரும் தார் அணி வாய் - வலிய பாம்பாகிய அரிய மாலையை அணிபவரே; என் அறுகை தொழ - என்று சொல்லிக் கையிஞலே கும்பிட. எ-று, சிவபெருமானேக் கும்பிடத் திருடராயினும் அரசராவர் இந்திரனாவர் எனக் கூட்டுக.
--------------
கையுடையானையதளங்கியானைக்கதம்பெறுவேங்
கையுடையானை மருதூானைக்கருதராகள்வன்ப
கையுடையானைத்தொழுதிலில்வேடன்கடுங்கணையாக்
கையுடையானைமடவாருயிர்க்கென்கரைவதுவே. (52)
(இ - ள்) கை உடை யானை அதள் அங்கியானை - புழைக்கையையுடைய யானையினது தோலாகிய சட்டையை யுடையவரும்; சதம் பெறு வேங்கை உடையானை - கோபத்தைப் பெற்ற புலித்தோலாகிய வஸ்திரத்தை யுடையவரும்; மருதூரானே – மருதூரையுடையவரும்; கருதார்கள் வல்ப கை உடையானை - (தம்மைச்) சிந்தியாதவர்களுடைய வலிய பகையாகிய மலத்தைக் கெடுக்காதவருமாகிய சிவபெருமானை; தொழுது – வணங்கி; வில் வேள் தன் கடும் சுணை யாக்கையுள் தையா நை மடவார் - வில்லையுடைய மன்மதனுடைய கடுமையாகிய பாணங்கள் சரீரத்திலே தைத்து வருந்துகின்ற மங்கையர்; உயிர்க்குக் கரைவது என் - உயிர்ப் பொருட்டு இரங்குவது என்னை. எ-று. யாக்கையுட்டையா எனற்பாலது யாக்கையுடையா எனக் குறைந்து நின்றது, [பாக்கி வெறுத்திக் கூறல்.]
-----------------
கரைவானகங்குழைமெய்யடியார்க்குக்கலங்கவரக்
கரைவானகங்கொண்டடர்க்கும்பிரான்புரக்கள்ளவஞ்ச
கரைவான கங்தைகெடத்தகனஞ்செய்கடவுள்பொய்கைக்
கரைவானகந்தொடுமாமருதூானெங்கட்கிறையே. (53)
(இ - ள்) அகம் குழை மெய் அடியார்க்குக் கரைவான் - மனநெகிழ்கின்ற மெய்த்தொண்டர்களுக்கு இரங்கு வோரும்; கலங்க அரக்கரை வால் நகம் கொண்டு அடர்க்கும் பிரான் - கலக்கும்படி இராக்கதனாகிய இராவணனை வெண்மையாகிய நகத்தைக்கொண்டு நெரித்த எப்பொருட்கு மிறைவரும்; புரம் கள்ளம் வஞ்சகரை வான் அகந்தை கெடத் தகனம் செய் கடவுள் - முப்புரங்களிலுள்ள கள்ளத்தையும் வஞ்சகத்தையுமுடைய அசுரர்களைப் பெரிய செருக்கு அழியும்படி எரித்திலைச் செய்த கடவுளும்; பொய்கைக் கரை வானகம் தொடும் மா மருதூரன் - வாலிக்கரை ஆகாயத்தை அளாவா நின்ற பெரிய மருதூரையுடையவருமாகிய சிவபெருமானே; எங்கட்கு இறை - எங்களுக்கு நாயகர். எ-று.
----------------
கட்டாமாரையரமரர்க்குவேந்தர்கமலந்துழாய்க் கட்டாமரையாமருதூரிறைவர்கறையராவக்
கட்டாமரையர்மனமேயிருவினைக்கட்டற நங்
கட்டாமரையரென்றாட்கொண்டருள்கைக்குக்கற்பனையே. (54)
(இ-ள்) கள் தாமரையர் - தேனையுடைத்தாகிய தாமரை மலரையுடையவராகிய பிரமாவுக்கும்; அமரர்ச்கு வேந்தர் -தேவர்களுக்கு அரசனுகிய இந்திரனுக்கும்; கமலம் துழாய் கண் தாமர் ஐயா - செந்தாமரை மலரையும் துளசியையும் கண்ணும் மாலையுமாக உடையவராகிய விட்டுணுவுக்கும் பிதாவும்; மருதூர் இறைவர் - மருதாரின்கண் எழுந்தருளியிருக்கின்ற தலைவரும்; கறை அரவம் கட்டு ஆம் அரையர் – விடம் பொருந்திய பாம்பாலாகிய கட்டுப்பொருந்திய அரையையுடையவருமாகிய சிவபெருமான்; மனமே - நெஞ்சமே ; இரு வினைக் கட்டு அற - இருவினைப்பந்தம் அறும் பொருட்டு; நங்கண் தாம் அரையர் என்று ஆட்கொண்டருள் கைக்குக் கற்பனை - நம்மிடத்தே தாம் நாயகரென்று அடிமைக்கொண்டருளுதற்கு விதியேயாம். எ-று.
--------------
கற்பனையத்தனையாயினு நின்புகழ் கற்பது நான்
கற்பனையத்தனைகாணச்சரவணப்பொய்கைவந்தோன்
கற்பனையத்தனையாமருதூருறை காரணவக்
கற்பனையத்தனைபத்தாகுற்றத்தைக்கடிபவனே. (55)
(இ-ள்) நான் நின் புகழ் கற்பது அத்தனை கற்பனை ஆயினும் - நான் உமது கீர்த்தியைப் படிப்பது அவ்வளலும் பொய்யாமாயினும்; கற்ப நயத்தனை - படிப்பவைகளை விரும்பினீர்; அச் சரவணம் பொய்கை வந்தோன் – அந்தச் சரவணப்பொய்கையின் கண்ணே திருவவதரஞ் செய்தருளினவராகிய முருகக்கடவுளுக்கும்; கல் பனை அத்தன் ஐயா - (மாணிக்க) ரத்தினத்தாலாகிய பனைபோன்ற கையையுடையவராகிய விநாயகக் கடவுளுக்கும் பிதாவே; மருதூர் உறை காரண - மருதூரின்கண் எழுந்தருளிலிருக்கின்ற காரணரே: அக் கற்பு அனை அத்த – அந்தக் கற்பையுடைய மாதாவாகிய உமாதேவியாரைப் பாதியாக வுடையவரே; நை பத்தர் குற்றத்தைக் கடிபவனே - வருந்துகின்ற அன்பர்களுடைய குற்றத்தை யொழிப்பவரே, எ-று. காண் அசை.
-------------
கடியவம்போடிகல்கண்ணியைக்கண்டுகலங்கி நெஞ்சிற்
கடியவம்போய்நின்றழிந்தனன்காண்குற்றங்கண்டெனைநீ
கடியவம்போதமுன்கண்டதுண்டோவண்டின்காலணையக்
கடியதும்போருகங்கான் மருதூரரன் கல்வரைக்கே. (56)
(இ-ள்.) கடிய அம்போடு இகல் கண்ணியைக் கண்டு கலங்கி - கூர்மையையுடைய பாணத்தோடு பகைக்கின்ற கண்ணையுடையவளாகிய பெண்ணைக் கண்டு மயங்கி; நெஞ்சில கடி அவம் போய் நின்று அழிந்தனன் - மனசின்கணுள்ள காவல் வீண் போய் கின்று வருந்தினேன்; குற்றம் கண்டு எனை நீ கடிய அம்போதம் முன் கண்டது உண்டோ - குற்றத்தைக் கண்டு என்னை நீ கோபிக்க அழகிய அறிவை முன்னே நானறிந்ததுண்டோ; வண்டின் கால் அணையக் கடி அ அம்போருகம் கால் மருதூர் அரன் கல் வரைக்கு - வண்டினுடைய கால்கள் பொருந்த மணத்தை அந்தத் தாமரை மலர்கள் கால்கின்ற மருதூரின்கணெழுந்தருளியிருக்கும் சிவபெருமானது கல்லாகிய மலையினிடத்து. எ-று. காண் அசை. [தலைவன் பாங்கனுக்கு உற்றதுரைத்தல்]
------------
கல்லாரமாலைமென கூந்தற்கைக்காந்தட்கவுரிபங்கன்
கல்லாரமாலைத்திகழ்மருதூரிற்பொய்கைக்குண்மண்ணைக்
கல்லாரமாலையங்கையாற்றெழார்சைவகாவியங்கள்
கல்லாரமாலையன்காணாப்பதமெங்ஙன் காண்குவரே. (57)
(இ-ள்) கல்லாரம் மாலை மெல் கூந்தல் கைக் காந்தள் கெளரி பங்கன் –செங்கழுநீர் மாலையையணிந்த மெல்லிய அளகத்தையும் கைகளாகிய காந்தட் பூக்களையுமுடைய உ மாதேவியாருடைய பாகராகிய சிவபெருமானுடைய; கல் ஆரம் மாலைத் திகழ் மருதூரில் - இரத்தினங்களும் முத்துக்களும் மாலைக் காலத்தின் கண்ணே விளங்குகின்ற மருதுரினி டத்ததாகிய; பொய்கைக்குள் மண்ணைக் கல்லார் - வாலியினுள்ள மண்ணைத் தோண்டார்கள்; அம் ஆலயம் கையால் தொழார் - அழகிய திருக்கோயிலைக் கைகளினாலே கும்பிடார்கள்; சைவ காவியங்கள் கல்லார் – சைவ காவியங்களைப் படியார்கள்; அ மால் அயன் காணாப் பதம் எங்ஙன் காண்குவர் – அந்த விட்டுணுவும் பிரமாவும் காணாத திருவடிகளை எப்படி (இவர்கள்) தரிசிப்பார்கள்! எ-று.
-----------------
குவலயங்கற்பக நாடரவப்பதிரும்பிடுஞ்செங்
குவலயங்கட்பொழிவார்மருதூரிறைகூரயிலா
குவலயங்கற்பொடியாகத்தொடுங்கந்தர்கோக்கொற்றவா
குவலயங்கட்செவியாகக்கொள்வாரெங்குலதெய்வமே. (58)
(இ - ள்) குவலயம் கற்பகம் நாடு அரவம் பதி கும்பிடும் - பூமியும் கற்பக தருவையுடைய தேவலோகமும் நாக லோகமும் கும்பிடுகின்ற; செங்குவலயம் கள் பொழிவார் மருதூர் இறை – செங்குவளை மலர்கள் தேனைப் பொழிகின்ற நீரினாலே சூழப்பட்ட மருதூரின் கணெழுந்தருளியிருக்கும் நாயகரும்; கூர் அயில் ஆகு வலயம் கல் பொடி, ஆகத் தொடும் கந்தர் கோ - கூரிய வேலாகிய வல்லயத்தைக் கிரௌஞ்சமலை துகளாகும் வண்ணம் தொடுத்த முருகக் கடவுளுக்குத் தலைவரும்; கொற்றம் வாகுவலயம் கட்செவி ஆகக் கொள்வார் - வெற்றியையுடைய தோளணி பாம்பாகக் கொள்வோருமாகிய சிவபெருமான்; எம் குலதெய்வம் - எம்முடைய குலதெய்வம். எ-று.
-----------
குலஞ்சுகந்தாதிகள்விட்டுத்தவவுருக்கொண்டுநெஞ்சா
குலஞ்சுகந்தாகம்பொய்மோகந்தவிர்த்துகுணத்திரயங்
குலஞ்சுகந்தாட்படமாட்டாவெனைப்பிணிகொண்டதென்கோ
குலஞ்சுகந்தாதுகொய்காமருதூர்க்குன்றக்கோதண்டனே. (59)
(இ- ள்) குலம் சுகந்த ஆதிகள் விட்டு - குலத்தையும் சுகந்த முதலியவற்றையும் விடுத்து; தவம் உருக் கொண்டு - தவவேடத்தைப் பூண்கி; நெஞ்சு ஆகுலம் சுகம் தாகம் பொய் மோகம் தவிர்ந்து - மனசினுள்ள வருத்தத்தையும் சுகத்தையும் தாகத்தையும் பொய்யையும் மோகத்தையும் நீங்கி; குணத்திரயம் குலஞ்சு உகந்து ஆட்படமாட்டா எனை - முக்குணங்களுங் குலைந்து மகிழ்ந்து அடிமைப்பட மாட்டாத என்னை; பணி கொண்டது என் – அடிமைக்கொண்டதென்னை; கோகுலம் சுகம் தாது கொய் கா மருதூர்க் குன்றம் கோதண்டனே- குயில்களும் கிளிகளும் பூந்தாதைக் கொய்யாகின்ற சோலேகளினாலே சூழப்பட்ட மருதூரின் கணெழுந்தருளியிருக்கும் மகாமேரு மலையாகிய வில்லையுடையவரே. எ-று. கோகிலம் கோகுலம் எனமருவிற்று.
--------------
தண்டலைநாகங்கள் பூகங்கள்சூழுந்தடஞ்சுனையிற்
றண்டலை நாகங்கணைகழு நீரமுகை சற்றுவிண்ட
தண்டலை நாகக்கொலென்றஞ்சிமாறெனத்தன்னிழன்மேற்
றண்டலை நாகந்தவிர்மருதூரனென்றாபரமே. (60)
(இ-ள்) தண்டலை நாகங்கள் யூகங்கள் சூழும் தடம் சுனையில் -சோலைகளினுள்ள புன்னை மரங்களும் கமுக மரங்களும் சூழா நின்ற பெரிய சுரையினிடத்தே; தண் தலை நாகு அங்கு அணை கழுநீர் முகை சற்று விண் தண்டு – குளிர்மையையுடைய பெரிய சங்குகள் அங்கே சேர்ந்த கழுசீர் முகை சிறிது அலர்ந்த தண்டை; அலை நாகம் கொல் என்று அஞ்சி - அசைகின்ற பாம்போவென்று பயந்து; மாறு எனத்தன் நிழன்மேல் தண்டலை நாகம் தவிர் மருதூரன் - தன்பகை யென்று தனது நிழலின் மேலே எதிர்த்தலை யானை நீங்குகின்ற மருதூரையுடையவராகிய சிவபெருமான் ; என் தாபரம் - என்னுடைய துணை. எ.று.
--------------
தாபரசங்கமொராறுக்கும்போற்றுஞ்சதுர்மறைக்குந்
தாபரசங்கவயன்மருதூர்நகர்தங்கியநா
தாபரசங்கமர்சாடக்கொண்டாய்சுந்தரற்குச்செஃறூ
தாபரசங்கரவல்வினையேற்குன்சரணங்களே, (61)
(இ - ள்) பரிசு அங்கம் ஒராறுக்கும் போற்றும் சதுர் மறைக்கும் தாபர - துதிக்கப்படும் ஆறு வேதாங்கங்களுக்கும் (உம்மைத்) துதிக்கும் நான்கு வேதங்களுக்கும் நிலையாயுள்ளவரே; சங்கம் வயல் மருதூர் நகர் தங்கிய நாதா - சங்குகளையுடைய வயல்களினாலே சூழப்பட்ட மருதூரென்னும் திருப்பதியின்கண் எழுத்தருளியிருந்த தலைவரே; பரசு அங்கு அமர் சாடக் கொண்டாய் - மழுவை அங்கே போரின் கண்ணே (பகைவரைக்) கொல்லும் பொருட்கித் தாங்கினவரே; சுந்தரற்குச் செல் தூதா – சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுச்சென்ற தூதரே; பர மேலானவரே –சங்கர சுகத்தைச் செய்பவரே; வல் வினையேற்கு உன் சரணங்கள் தா - வலிய வினையையுடையேனுக்கு உம்முடைய திருவடிகளைத் தந்தருளும், எ-று. [பூட்டுவிற்பொருள்கோள்.]
-------
சரக்கன்றுகந்தமலரோற்குமேற்பதந்தண்கழு நீர்ச்
சரக்கன்றுகந்தர்ப்பனையெரித்தோரிருதாட்கடக்குஞ்
சரக்கன்றுகந்தன்றனக்கையர்பொய்யர்தமக்ககலீ
சரக்கன்றுகந்தவர்தென்மருதாரர்தமர்களுக்கே. (62)
(இ-ள்) கந்தம் மலரோற்கு மேல் பதம் சரக்கு அன்று - மணத்தையுடைய தாமரை மலரிலிருக்கும் பிரமனுக்கு மேலாகிய பதமும் ஒருபொருளன்று; தண் கழுநீர்ச் சரம் கன்று கந்தர்ப்பனை எரித்தோர் - குளிர்மையையுடைய கழுநீர் மலராகிய அம்பையுடைய கோபிக்கின்ற மன்மதனை எரித்தவரும் ; இருதாள் கடம் குஞ்சரம் கன்று கந்தன் தனக்கு ஐயர் – இரண்டு பாதங்களையும் மதத்தையுமுடைய யானைக்கன்றாகிய விநாயகக் கடவுளுக்கும் முருகக் கடவுளுக்கும் பிதாவும் ; பொய்யர் தமக்கு அகல் ஈசர் - பொய்யர்களுக்கு அகன்ற தலைவரும்; அக்கு அன்று உகந்தவர் எலும்புமணியை அந்நாளிலே மகிழ்ந்தணிந்தவரும்; தென் மருதூரர் தமர்களுக்கு - அழகிய மருதூரையுடையவருமாகிய சிவபெருமானுடைய அடியார்களுக்கு, எ-று.
--------------
தமரவரிக்களிவண்டுதன்றுக்கொன்றைத்தாமரன்பர்
தமரவரிக்குவயன்மருதூரர்பொற்றாளுயிரார்ந்
தமரவரிக்கிறையார்க்கரிதானுந்தமைவணங்குத்
தமரவரிக்குமிதயத்தியானந்தனக்கெளிதே. (63)
(இ-ள்) தமரம் வரிக் களி வண்டு துன்றும் கொன்றைத் தாமர் - இசையையுடைய புள்ளியைப் பொருத்திய களிப்பையுடைய வண்டுகள் நெருங்குகின்ற கொன்றை மாலையையுடையவரும்; அன்பர் தமரவர் - பத்தர்களுக்கு உறவினரும்; இக்கு வயல் மருதூரர் - கரும்புகளையுடைய வயல்களினாலே குழப்பட்ட மருதூரை-யுடையவருமாகிய சிவபெருமானுடைய; பெரன் தாள் – பொன்போலுந் திருவடிகள்; உயிர் ஆர்ந்தமரம் அரிக்கு இறையார்க்கு அரிதானும்- உயிரைப்போன்ற மரத்திலே சஞ்சரிக்கின்ற அனுமாருக்கு இறைவராகிய விட்டுணுவுக்கு அரியனவாயினும்; தமை வணங்கு உத்தமர வரிக்கும் இதயம் தியானம் தனக்கு எளிது - தம்மை வணங்குகின்ற மேலேரர்களுடைய விரும்புகின்ற இருதயத்திலே செயப்படும் தியானத்துக்கு எளியனவாம். எ-று..
--------------
தனக்கடங்காநெஞ்சனென்றெனைக்கொண்டுதருமன்செல்வி
தனக்கடங்காவனின்றாண்மருதூர நற்சந்திரவ
தனக்கடங்கால்கும்பத்தும்பிக்கொம்பென்னச்சமைந்தவிரு
தனக்கடங்காம்பலஞ்செங்கனிவாய்மங்கைதனபங்கனே. (64)
(இ - ள்) தனக்கு அடங்கா நெஞ்சன் என்று - தனக்கடங்காத மனத்தை யுடையவனென்று; எனைக் கொண்டு தருமன் செல் விதனம் கடம் - என்னைக்கொண்டு இயமன் செல்லாநின்ற வேதனையையுடைய அருநெறியிலே; காவல் நின் அறு ஆள் - காவலாக நின்று ஆண்டருளும்; மருதூர – மருதூரையுடையவரே; நல் சந்திரன் வதனம் - நன்மையாகிய சந்திரனைப்போலும் முகத்தையும்; கடம் கால் கும்பம் தும்பிக் கொம்பு என்னச் சமைந்த இரு தனம் - மதத்தைச் சொரிகின்ற மத்தகத்தையுடைய யானையினது கோடுபோல அமைந்த இரண்டு முலைகளையும்; கள் தங்கு ஆம்பல் அம் செம் கனி வாய் - தேன் பொருந்திய செவ்வாம்பன் மலர்போலும் அழகிய சிவந்த கனிந்த வாயையுமுடைய; மங்கை தன் பங்கனே - உமாதேவியாருடைய பாகரே. எ-று.
----------
பங்கமுகந்தலைமோதக்கயலினம்பாய்ந்துபைந்தட்
பங்கமுகந்தலைசேர்மருதூரபருப்பதத்தாள்
பங்கமுகந்தலைதேய்ந்திடவெண்டிங்கள்பட்டுபெரும்
பங்கமுகந்ததலைவநின்பாதம்பரமெனக்கே. (65)
(இ- ள்) பங்கம் முகந்து அலை மோத - சேற்றை முகந்து திசைகள் (கரையிலே) மோத; கயல் இனம் பாய்ந்து பைம் தட்பம் கமுகு அம் தலை சேர் மருதூர - கயற்கூட்டங்கள் பாய்ந்து பசிய குளிரமையையுடைய கமுக மரங்களினது தலையிலே சேர்கின்ற மருதூரையுடையவரே; பருப்பதத்தாள் பங்க – பார்ப்பதி தேவியாருடைய பாகாரே; முகம் தலை தேய் நதிட வெள் திங்கள் பட்ட பெரும் பங்கம் உகந்த தலைவ –முக முந்தலையுந்தேய வெண்மையாகிய சந்திரன் அனுபவித்த பெருந்தோல்வியை மகிழ்ந்தருளிய நாயகரே; நின் பாதம் எனக்குப் பரம் - உம்முடைய திருவடிகள் எனக்குச் தஞ்சம், எ-று.
----------------
பரவாதிருக்கைமருவாகமத்தைப்பழித்துப்பண்ணிற
பரவாதிருக்கைதிருவுளமோவலைபண்டெடுத்த
பரவாதிருக்கைமழுநாததேவர்பணிமருதூர்ப்
பரவாதிருக்கையறுத்தென்னேயாளும்பதநதரவே. (66)
(இ - ள்) பரவாதி - (உம்மை} வணங்காமலும்; இருக்கை மருவு ஆகமத்தைப் பழித்துப் பண்ணில் பரவாது - வேதங்களையும் பொருந்திய சைவாகமங்களையும் நிந்தித்து இசையோடு துதியாமலும்; இருக்கை திருவுளமோ - இருத்தல் திருவுள்ளமா!; வலை பண்டு எடுத்த பரவா - வலையை முன்னாளிலேயெடுத்த பரவருருக்கொண்டவரே; திருக்கை மழுநாத - அழகிய கையிலே தாங்கப்பட்ட மழுவையுடைய தலைவரே; தேவர் பணி மருதூர்ப்பர - தேவர்கள் வணங்குகின்ற மருதூரின் கணெழுத்தருளி-யிருக்கும் மேலானவரே; வா – வந்தருளும்; திருக்கை அறுத்து என்னை ஆளும் பதம் தர - குற்றத்தையொழித்து என்ன ஆண்டருள்கின்ற திருவடிகளைத் தரும்பொருட்டு. எ-று.
-----------------
பதங்கடந்தானிரைத்தன்னபன்மாதர்கள்பற்றறநற்
பதங்கடந்தாலென்னகைம்மாறுசெய்வன்பகைத்தபருப்
பதங்கடந்தான்பட்டகைம்மாவுத்தபரமன்மறைப்
பதங்கடந்தான்புகழ்மாமருதூர்மங்கைபங்கினனே. (67)
(இ -ள்) பதங்கள் தந்தால் நிரைத்து அன்ன பல் மாதர்கள் பற்று அற - சோறுகளை நூலினாலே நிரைத்தாற்போன்ற பற்களையுடைய பெண்களிடத்ததாகிய ஆசை நீங்கும்பொருட்டு; நல் பதங்கள் தந்தால் - நன்மையாகிய திருவடிகளைத் தந்தருளினால்; என்ன கைம்மாறு செய்வன் - என்ன பிரதியுபகாரத்தைச் செய்வேன்; பகைத்த பருப்பதம் கடந்தான் பட்ட கைம் மா உரித்த பரமன் - பகைத்த மலைபோலும் மதந்தான் பட்ட யானையையுரித்த மேலானவரும்; மறைப் பதம் கடந்தான்-வேதத்தினது சொல்லைக் கடந்தவரும்; புகழ்மா மருதூர் மங்கை பங்கினன் - கீர்த்தியையுடைய பெரிய மருதூரில் எழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாருடைய பாகருமாகிய சிவபெருமான், எ-று, சிவபெருமான் திருவடிகளேத் தந்தருளினால் எனக் கூட்டுக.
------------
பங்கையவாவியனையாட்களித்தபரமன்மன்றற்
பங்கையவாவிமருதூரிலோரிறைபாரவல்லி
பங்கையவாவியிவண்மேலிடுமப்பகையடுமின்
பங்கையவாவிம்மணமுமினிதல்லபாவையரே. (68)
(இ-ள்) பங்கை அவ் ஆவி அனையாட்கு அளித்த பரமன் – (தமது) பாகத்தை அவ்வுயிர்போலும் உமாதேவியாருக்குக் கொடுத்தருளிய சிவபெருமானுடைய; மன்றல் பங்கயம் வாவி மருதூரில் - மணத்தையுடைய தாமரை வாவிகளாலே சூழப்பட்ட மருதூரின்கண்ணே; ஒரிறை – ஒருதலை மகன்; பாரம் வல் இபம் கை அவாலி இவள் மேலிடும் அப்பகை - பாரமாகிய வலிய யானை புழைக்கையினாலே அவாவி இவளை மேலிட்ட அந்தப்பகையை; அடும் இன்பம் கயவா - விலக்கிய இன்பம் வெறுக்கப்படாது; இம் மணமும் இனிது அல்ல – இந்த மனமும் இனியதன்று; பாவையரே - பெண்களே. எ-று. [மணம் விலக்கு]
------------
பாவகனஞ்சக்கரந்துணித்தாய்பதமாறு நடப்
பாவக நஞ்சக்கறைமிடற்றாய்மருதூாப்பரம
பாவகனஞ்சத்திகுன்ற நின்றாளைப்பரந்தமலம்
பாவக நஞ்சர்ச்சனைபுரிந்தென்றுபணிவதுவே. (69)
(இ-ள்) பாவகன் அஞ்சக் கரம் துணித்தாய் - அக்கினிதேவன் அஞ்சும் வண்ணம் கையை வெட்டினவரே; பதம் மாது நடம் பாவக - பரதம் மாறிய நிருத்தத்தினது பாவகத்தையுடையவரே; நஞ்சம் கறை மிடற்றாய் - விடத்தையுடைய கருமையாகிய கழுத்தையுடையவரே; மருதூர்ப் பரம - மருதூரின் கணெழுத்தருளியிருக்கும் மேலானவரே; பாவம் கனம் சத்தி குன்ற - பாவத்தினது மிகுதியாகிய வலிமை குன்றும்பொருட்டு; நின் தாளை -உம்முடைய திருவடிகளை; பரந்த மலம் பாவு அகம் நைஞ்சு விரித்த மலம் பரவிய மனம் நைந்து - அர்ச்சனை புரிந்து பணிவது என்று - பூசைசெய்து வணங்குவது எந்நாள்! எ-று,
---------------
பணியாதவர்க்கத்தொடர்ச்சிக்கும்பத்திரபத்தர்சித்தப்
பணியாதவர்க்கருள்செய்மருதூரபடவரவப்
பணியாதவர்க்குன்றவென்றவின்றாட்செம்பதும நெஞ்சே
பணியாதவர்க்குமதிக்குமப்பாலைப்பதந்தரவே. (70)
(இ-ள்) பணியாது - (உனக்குத்) தொழில் யாது!; அவர்க்கத்தொகி அர்ச்சிக்கும் பத்திரம் பக்தர் சித்தம் பணி யா - அந்த உபகரணங்களோடு பூசிக்கின்ற பத்திரங்களையுடைய அன்பர்களது சித்தத்திலுள்ள தொண்டையுடையவரே; தவர்க்கு அருள் செய் மருதூர் - முனிவர்களுக்குக் கருணையைச் செய்கின்ற மருதூரையுடையவரே; படம் அர வம் பணியா - படத்தையுடைய பாம்பாகிய ஆபரணத்தையுடையவரே; தவர்க் குன்ற என்று - வில்லாயுள்ள மலையையு டையவரே என்று சொல்லி; அவன் தாள் செம் பதுமம் - அவருடைய திருவடிகளாகிய செந்தாமரை மலர்களை; நெஞ்சே பணி - மனமே நீ வணங்குவாயாக; ஆதவர்க்கும் மதிக்கும் அப்பால் பதம் தர - சூரியனுக்கும்
சந்திரனுக்கும் அப்பாலுள்ள பதத்தைத் தரும்பொருட்டு. எ-று, அப்பாலை என் பதன் ஐ சாரியை.
--------------
வேலைக்கையலைக்கவர்விழியார்வசம்வீழ்ந்தினது
வேலைக்கையலைக்கண்டும்முயலேன்புக்கவேளையுண்டோய்
வேலைக்கையலைத்துவருங்கொல்கூற்றைவெறுத்துயிர்போம்
வேலைக்கையலைப்புனன்மருதூர்முக்கண்மெய்ப்பயனே. (71)
(இ- ள்) வேலைக் கயலைக் கவர் விழியார் வசம் வீழ்ந்து - கடலையும் கயன்மீனையும் கவர்கின்ற கண்களையுடைய பெண்களது வசத்தில் அழுந்தி; உனது வேலைக்கு அயலக் கண்டும் முயலேன் – உம்முடைய தொண்டுக்கு அயலரைக் கண்டும் முயல்கின்றிலேன்; புக்க வேளை உண்டோய் - புகுந்த மன்மதனக் கொன்றவரே; வேலைக்கை அலைத்து வரும் கொல் கூற்றை வெறுத்து உயிர் போம் வேலைக் கை
- வேலாயுதத்தக் கையினாலே அசைத்து வருகின்ற கொல்கின்ற இயமனை வெறுத்து ஆன்மாப் போகின்றபொழுது கோபித்தருளும்; அலைப் புனல் மருதூர் முக்கண் மெய்ப் பயனே.- திரையையுடைய நீரினாலே குழப்பட்ட மருதூரின் கணெழுந்-தருளியிருக்கின்ற மூன்றுகண்களையுடைய மெய்ப்பயனா யுள்ளவரே. எ-று.
---------
பயநந்த நாகமலரிற்துயிலப்படு மருதூர்ப்
பயன நதனாகப்பகலைக்கண்டோன்பத்தர்சித்தத்துள்ளான்
பயன நதனாகமணிவோன கழலை நும்பலபிறவிப்
பயநந்த நாகந்துதிக்கவணங்கப்பரிந்திருமே. (72)
(இ - ள்) பயம் நந்து அம் காகம மலரின் துயிலப்படும் மருதூர்ப் பயன் - நீரிலுள்ள சங்குகள் அழகிய புன்னைப் பூவின்கண்ணே நித்திரை செய்கின்ற மருதூரின்-கணெழுந்தருளியிராகின்ற பயனுயுள்ளவரும்; அந்தன ஆகப் பகலைக் கண்டோன் - குருடனாகும் பொருட்டுச் சூரியனச் செய்தவரும் ; பத்தர் சித்தத்து உள்ளான் - அன்பர்களுடைய இருதயத்தின்கண் உள்ளவரும்; பை அனந்தன் ஆகம் அணிவோன் கழலை - படத்தையுடைய அனந்தனைத் திருமார்பின்கண்ணே அணிபவருமாகிய சிவபெருமானுடைய திருவடிகளை; நும் பல் பிறவிப் பயம் நந்த - உங்களுடைய பலவாகிய பிறப்புக்களினுள்ள அச்சங்கெடும் பொருட்டு; நா துதிக்கக் கம் வணங்கப் பரிந்து இரும் - நாக்குத் துதிக்கத் தலை வணங்க அன்புகூர்ந்து இருங்கள். எ-று.
-----------
இரும்பலவின்செய்மருதூரென்னார்தமிதயங்கள்போ
லிரும்பலவின்னலதுதீரவேண்டிடினிவிவ்வுலகுள்
ளிரும்பலவின்பமிலையாயினுமஞ்செழுத்தையுன்னி
யிரும்பலவின்சொலொடும்புகழ்ந்தேத்தியிரந்துகொண்டே. (73)
(இ- ள்) இரும் பலவின் செய் மருதூர் என்னார் தம் இதயங்கள் போல் இரும்பு அல - பெரிய பலாமரங்களையுடைய வயல்களாலே சூழப்பட்ட மருதூர் என்று சொல்லாதவர்களுடைய நெஞ்சங்களைப்போல (உங்கள் நெஞ்சங்களும்) இரும்பல்ல; இன்னலுது தீர வேண்டிடின் - துன்பம் நீங்க வேண்டின்; இவ் உலகு உள்ளிர் - இவ்வுலகத்தின்கண் உள்ளவர்களே; உம்பல இன்பம் இலை ஆயினும் – யானையுடைய இன்பம் இல்லையாயிலும் ; அஞ்சு எழுத்தை உன்னி இரும் - பஞ்சாக்ஷரத்தைச் சிந்தித்திருங்கள்; பல இன் சொல்லொடும் புகழ்ந்து ஏந்தி இரந்துகொண்டு - பலவாகிய இனிய சொற்களோடும் புகழ்ந்து துதித்து யாசித்துக்கொண்டு. எ-று.
------------
இரவித நந்தும்பரவையைச்சுந்தரரெய்தச்சென்றோ
னிரவிதனஞ்சயன்றிங்களங்கண்ணனெழிற்கரும்பு
யிரவிதனம்புணரும்மருதூரனிணையடியை
யிரவிதனங்களறுத்துயிர்வாழுகைக்கென்னெஞ்சமே. (74)
(இ- ள்) இரவு இதம் நந்தம் பரவையைச் சுந்தார் எய்தச் சென்றோன் - இராத்திரியிலே அன்புமிகுகின்ற பரவையாரைச் சுந்தரமூர்த்திநாயனார் அடையும்பொருட்டுத் தூது போனவராயும்; இரவி தனஞ்சயன் திங்கள் அம் கண்ணன் - சூரியனும் அக்கினியும் சந்திரனுமாகிய அழகிய கண்களையுடையவராயும்; எழில் கரும் பயிரவி தனம் புணரும் மருதூரன் - அழகையுடைய கரிய உமாதேவியாருடைய முலைகளைப் புணர்கின்ற மருதூரையுடையுவராயுமுள்ள சிவபெருமானுடைய; இணை அடியை இர – இரண்டு திருவடிகளேயும் இரப்பாயாக; விதனங்கள் அறுத்து உயிர் வாழுகைக்கு – துயரங்களை யொழித்து உயிர் வாழ்தற்பொருட்டு; என் நெஞ்சமே- என் மனமே, எ-று.
-----------
என்னாவரு நதக்கழுநீர்க்கிடங்கெங்குமீன்கறவை
யென்னாவருந்துமலர்மருதூருறையீசர்ம
வென்னாவருந்தமிழாற்றுதிப்பேன் பயனெய்துவதில்
கென்னாவருந்தன்மைவல்லியமாவுனக்கென்னிடத்தே. (75)
(இ-ள்) என் நா வருந்த - என்னுடைய நாக்கு வருந்தும்படி; கழுநீர்க் கிடங்கு எங்கும் ஈன் கறவை என் ஆ அருந்தும் மலர் மருதூர் உறை ஈச நம என்னா – செங்கழு நீரையுடைய குளமெங்கும் ஈன்ற கதவையெனப்படும் பசுக்கள் உண்கின்ற பூக்களையுடைய மருதாரின்கண் எழுந்தருளியிராகின்ற சிவபெருமானே வணக்கம் என்று; அரும் தமிழால் துதிப்பேன் - அருமையாகிய தமிழினாலே துதிப்பேன்; ஆவல் இயமா - ஆவலிய இயமனே; என்னிடத்து வருந்தன்மை உனக்கு இங்கு எய்துவது பயன் என் - என்னிடத்து வருந்தன்மையினாலே உனக்கு இங்கே வருவதாகிய பயன் யாது! எ-று.
-------------
இடத்தேயுமையைவைத்தோன்மருதூருறையெந்தைவன்ம
யிடத்தேயுமைவண்ணனையுதைத்தோன்வெற்பினிங்கனெங்க
ளிடத்தேயுமைவரப்பெற்றதுநன்றியின்றேந்தியமுத்
திடத்தேயுமையவிடையதிபாரவிளமுலைக்கே. (76)
(இ-ள்) இடத்தே உமையை வைத்தோன் - இடப்பாகத்திலே உமாதேவியாரை வைத்தவரும்; மருதூர் உறை எந்தை - மருதூரின்கண் எழுந்தருளிருக்கின்ற எமது பிதாவும்; வல் மயிடத்து ஏயும் மை வண்ணனை உதைத்தோன் வெற்யின் - வலிய எருமைக்கடாவின்மேலே பொருந்திய கரு நிறத்தையுடையவனுகிய இயமனை உதைத்தவருமாகிய சிவபெருமானுடைய மலையின் கண்ணே; இங்ஙன் எங்களிடத்தே உமை வரப் பெற்றது நன்றி - இப்படி எங்களிடத்தே உம்மை வரும்வண்ணம் பெற்றது நன்மையாம்; இனறு ஏந்திய முத்தி அதிபாரம் இளமுலைக்கு இட - இப்பொழுது ( நீர் கையுறையாகத்) தாங்கிய முத்துமாலையை அதிக பாரத்தையுடைய இளமையாகிய தனங்களினிடத்து அணிய; ஐயம் இடை தேயும் (உண்டோ இன்றோ என்னும்) ஐயத்தையுடைய இடையானது தேய்ந்துவிடும். எ-று. [பாங்கி கையுறை மறுத்தல்]
---------
முலையம்புலவிறைபங்கர்கங்காளர்முதன்மருதூர்
முலையம்புலகங்கொளினுங்குன்றாமன்றன்மொய்குழனின்
முலையம்புலவிகெடத்தழுவேமதன்மூன்றம்பெய்தான்
முலையம்புலவுமினியாவிநீலமுடித்திடுமே. (77)
{இ – ள்) முலை அம் புலம் இறை பங்கர் - முல்லை நிலத்துக்குத் தலைவராகிய விட்டுணுவைப் பாகத்திலுடையவரு ம்; கங்காளர் – முழுவெலும்பை யணித்தவருமாகிய சிவ பெருமானுடைய; முதல் மருதூர் - முதன்மையாகிய மருதூரின்கண்ணே; முலை அம்பு உலகம் கொளிலும் குன்றா மன்றல் மொய குழல் - கற்பானது சமுத்திரசலம் உலகத்தைக் கொள்ளினும் அழிப்பெறாத மணத்தையுடைய நெருங்கிய அளகந்தையுடைய பெண்ணே; நின் முலை அம் புலவி கெடத் தழுவேம் - உன்னுடைய தனங்களை அழகிய புலவி நீங்கும்வண்ணம் அணைகின்றிலேம்; மதன் மூன்று அம்பு எ ய்தான் - மன்மதன் (தாமரை சூதம் அசோகமென்னும் முதன்) மூன்று, பாணங்களைத் தொடுத்தான்; முலை அம்பு உலவும் - முல்லையாகிய (நான்காம்) பரிணம் (வந்து) உலவுகின்றது; இனி நீலம் ஆவி முடித்திடும் - இனி நீலோற்பலமாகிய ஐந்தாம்பாணம் உயிரைக் கொன்றுவிடும், எ-று. [தலைவன் தலைவிக்குத் தன் வருத்தங் கூறல்.]
----------
முடியப்படுவலைவீசும்பரவவெம்முப்புரவர்
முடியப்படுகணைதொட்டவனே மருதூரமுன்னோய்
முடியப்படுபலித்தோலரைமேவுமுதல்வவென்னை
முடியப்படுபிறவிக்கடல்வீழமுனிந்தனேயே. (78)
(இ-ள்) முடியப்பகி வலை வீசும் பரவ - முடியப்பட்ட வலையை வீசுகின்ற பரவரே; வெம் முப்புரவர் முடியப் படு கணை தொட்டவனே - கொடுமையாகிய முப்புரங்களை யுடையவசுரர் இறக்கும்பொருட்கிக் கொல்கின்ற அம்பை எய்தவரே; மருதூர் – மருதூரையுடையவரே; முன்னோய் – அநாதியாயுள்ளவரே; அப்பு முடி அடு புலித் தோல் அரை மேவு முதல்வ - கங்கைநீர் முடியிலும் கொல்கின்ற புலித்தோல் அரையிலும் பொருந்திய முதல்வரே; என்னை முடியப் படு பிறவிக் கடல் வீழ முனிந்தனை- என்னை முழுமையும் அழுந்துகின்ற பிறவிக்கடலிலே விழும்வண்ணம் கோபித்தீர். எ-று.
-------------
முனியாயமானுடர்க்காவந்த கனைமுனிந்தவனே
முனியாயமானதமிழ்மருதூருறைமுக்கண நின்
முனியாயமாலையனென்றேத்துகைசகன்புமுற்றுவித்து
முனியாயமாநிலத்திற்பிறவாமை நம்முன்வினையே. (79)
(இ-ள்) முன் நியாயம் மானுடர்க்கு ஆ அந்தகனை முனிந்தவனே - முன்னே நியாயத்தையுடைய மனிதருக்காக இயமனைக் கோபித்தவரே; முனி ஆயம் ஆன தமிழ் மருதூர் உறை முக்கண – அகத்திய முனிவரது பேறாகிய தமிழையுடைய மருதூரின் கண் எழுந்தருளியிருக்கின்ற மூன்று கண்களையுடையவரே; நின் முனி யாய் அ மால் ஐயன் என்று ஏத்துகைக்கு - உம்மைச் சிந்தித்து மாதாவே அந்த விட்டுணுவுக்குப் பிதாவே என்று துதிக்கும்பொருட்டு; அன்பு முற்று வித்து - அன்பை முதிர்வித்து; அம் மாநிலத்தில் பிறவாமை - அழகிய பெரிய பூமியின்கண்ணே (அடியேங்கள் இனிப்) பிறவாமைப்பொருட்கி; நம் முன் வினை முனியாய் - நமது முன்னை வினையைக் கோபித்தருளும், எ-று.
--------------
வினையகல்வித்தென்னையாண்டிடவேண்டும்விரைமலர்க்கா
வினையகல்வித்தகக்கண்ணியங்காக நடமெய்ப்பயில
வினையகல்வித்தனமாதர்க்குமோகம்விளைத்தருள்க
வினயகல்வித்தலைவாமருதூர்மைம்மிடற்றவனே. (80)
(இ - ள்) வினை அகல்வித்து என்னை ஆண்டிடவேண்டும் – வினைகளை யொழிவித்து என்னை ஆண்டருளவேண்டும்; விரைக் காவி மலர் நை அகல் வித்தகம் கண்ணி பங்கா - மணத்தையுடைய கருங்கு வளைமலர் தளரப்பெற்ற அகன்ற சதிரப் பாட்டையுடைய கண்களையுடைய உமாதேவியாருடைய பாகரே; நடம் மெய் பயில் அவிநய - கூத்தின் கண்ணே திருமேனியிலே பயிலா நின்ற அபிநயங்களையுடையவரே; கல்வி தனம் மாதர்க்கு மோகம் விளைத்தருள் கவின் ஐய - மலையைப்போலும் பருமையாகிய முலைகளையுடைய பெண்களுக்கு மோசத்தை வினைவித்தருளிய அழகையுடைய ஐயரே; கல்வித் தலைவா - கல்விக்குத் தலைவரே; மருதூர் மை மிடற்றவனே - மருதூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற கரிய கழுத்தையுடையவரே, எ-று.
----------------
அவனியம்பாரழல்கால்விசும்பாயெங்குமானவனே
யவனியம்பான்முப்புரமெரித்தாய்தென்னணிமருது
ரவனியம்பாவித்தெனைவாவெனவடர்த்தநதகனா
மவனியம்பாமுனருள்புரியாயுனனடைக்கிலமே. (81)
(இ - ள்) அவனி அம்பு ஆர் அழல் கால் விசும்பு ஆய் எங்கும் ஆனவனே - பூமியும் நீரும் நிறைந்த அக்கினியும் காற்றும் ஆகாயமுமாய் எங்குமாயவரே; அ வனி அம்பால் முப்புரம் எரித்தாய் – அந்த அக்கினியாகிய அம்பினாலே முப்புரங்களையும் எரித்தவரே; தென் அணி மருதூர - அழகிய அலங்காரத்தையுடைய மருதுரையுடையவரே; அந்தகன் ஆம் அவன் என அணியம் பாவித்து அடர்த்து வா என இயம்பாமுன் அருள் புரியாய் - இயமனாகிய அவன் என்னை வேறாகப் பாவித்துப் பொருதி வாவென்று சொல்லாமுன் அருள் செய்யும்; உன் அடைக்கலம் -உமக்கிடைக்கலம். எ-று.
--------------
கலங்காமனந்தந்து கூற்றுவன்றோற்றிடுங்காலத்தடைக்
கலங்காமனந்த நதருமருதூரையகஞ்சத்தன்ப
கலங்காமனந்தமுராரிதொழுஞ்சிவகாமமெனுங்
கலங்காமனந்தவிழித்தவனேகறைக்கந்தரனே. (82)
(இ - ள்) கூற்றுவன் தோற்றிடும் காலத்து அடைக்கலம் - இயமன்றோன்றும்பொழுது (உமக்கு) அடைக்கலம்; கலங்கா மனம் தந்தி கா - அஞ்சாத மனத்தைத் தந்து காத்தருளும்; மன் நந்து அம் தரு மருதூர் ஜய - நிலைபெற்ற சங்குகளை நீர் தருகின்ற மருதூரின் கணெழுந்தருளியிருக்கின்ற பிதாவே; கஞ்சத்தன பகல் அம் கா மன் நந்தம் மு ராரி தொழும் சிவ - பிரமனும் சூரியனும் அழகிய கற்பகக்காவுக்கரசனாகிய இந்திரனும் நம்முடைய விட்டுணுவும் வணங்குகின்ற சிவனே; காமம் எனும் கலம் காமன் நந்த விழித்தவனே - காமமெனப்படும் ஆபரணத்தையுடைய மன்மதன் கெடும் வண்ணம் விழித்தவரே; கறைக் கந்தானே - கரிய கழுத்தையுடையவரே. எ -று.
-------------
கந்தரவையன்யன்மாலென்றிந்திகணபதிவேற்
கந்தரவையன்புகழ்மருதூரகரியதிருக்
கந்தரவையம்புகுந்தவனே மதன்காயங்கன
கந்தரவையம்பெய்தாலுய்யுமோவென்றன்காதலியே, (83)
(இ - ள்) கந்தரம் வையன் - மேகமாகிய வாகனத்தையுடைய இந்திரனும்; அயன் மால் - பிரமலும் விட்டுணுவும் ; என்று இந்து - சூரியனும் சந்திரனும்; கணபதி வேல் கந்தா அவ் ஐயன் புகழ் மருதூர - விநாயகக்கடவுளும் வேலாயுதத்தையுடைய முருகக் கடவுளும் அவ்வையனாரும் புகழ்கின்ற மருதூரையுடையவரே; கரிய திருக் கந்தர - கரிய அழகிய கழுத்தையுடையவரே; ஐயம் புகுந்தவனே – பிஷை புகுந்தவரே; மதன் காயம் கனகம் தா ஐயம்பு எய்தால் - மன்மதன் உடம்பு பொன்போலுந்தேமலைத் தரும் வண்ணம் ஐந்து பானங்களையுந் தொடுத்தால்; என்தன் காதலி உய்யுமோ - என்னுடைய தலைவி உய்வாளா! எ-று. [தலைவன் முன்னிலையாகப் பாங்கி கூறல்]
---------------
காதலையானின்னடியேவணங்கக்கருதுகின்ற
காதலையானின்னந்தீர்கிலன்காணினிக்காலனென்மேற்
காதலையானின்புறத்தோற்றிமாற்றிக்கரையரம்பைக்
காதலையா நிறகுந்தெனமருதூரவெனகண்மணியே. (84)
(இ. ள்.) கா - காத்தருளும்; தலையால் நின அடியே வணங்கக் கருதுகின்ற காதலை யான் இன்னம் தீரகிலன் - தலையினாலே உம்முடைய திருவடிகளையே வணங்கும் பொருட் டு நினைக்கின்ற ஆசையை நான் இன்னமும நீங்குகின்றிலேன்; இனிக் காலன் என்மேல் காதலை - இனி இயமன் என்மீது பொருதிலை; ஆனின் புறம் தோற்றி மாற்று - இடபததின் முதுகிலே தோன்றி நீக்கியருளும் ; இக்கு அரை அரமரைபக் காதலையா நிற்கும் தென் மருதூர – கரும்புகளை யுரிஞ்சுகின்ற வாழைகளையுடைய சோலைகள் முதன்மையாய் நிற்கின்ற அழகிய மருதூரையுடையவரே; என் கண்மணியே - என்னுடைய கண்மணியே. எ -று, காண அசை.
--------------
கண்டீரவ ந்தங்குகாட்டிருவீருங்கதிர்மறைவுங்
கண்டீரவந்தனிபோவதிங்கேதங்கிக்காலையிற்போங்
கண்டீரவந்தமொழிபங்கனைத்தென்னங்காமருதூரக
கண்டீவந்தனைசெயதூரபுகுமின்கல்லையற்றே. (85)
(இ . ள்) கண்டீசவம தங்கு காட்டு - சிங்கம் இருக்கின்ற காட்டிலே; இருவீரும கதிர் மறைவும் கண்டீர் – நீங்களிருவரும் சூரியனுடைய ஆஸ்தமயனத்தையும் கண்டீர்; தனி போவது அவம - தனியே போதல் வீணாகும்; இங்கே தங்கிக் காலையில் போம் - இவ்விடத்தே இருந்து காலையிலே போங்கள்; கண்டு ஈர வந்த மொழி பங்கனை- கற்கணடை வெல்லும் வண்ணம் தோன்றிய சொல்லையுடைய உ மாதேவியாருடைய பாகராகிய சிவபெருமானே; தென்னங்கா மருதூர்க்கண் - தென்னஞ்சோலைகளினாலே சூழப்பட்ட மருதூரினிடத்தே; தீர வந்தனை செய்து - (வருந்தக்) தீர, வழிபாடு செய்து; கவலை அற்று ஊர் புகுமின் - கவலை நீங்கி ஊருக்குப் போங்கள். எ-று. [விருந்து விலக்கல்]
----------------
வலையம்பரிக்குங்கடற்றுறைவாகறைவாளரவ
வலையம்பரிக்கும்புயத்திற்கொண்டாய்மருதூரரசே
வலையம்பரிக்குமிசையேயசையமதுரைவந்தாய்
வலையம்பரிக்குவில்வாங்கினுண்டோவேன்மகட்குயிரே. (86)
(இ - ள்) வலை அம்பு அரிக்கும் கடற்றுறைவா - வலையினாலே சலத்திலே (மீனை) அரிக்கின்ற பரவவுருக்கொண் டவரே; கறை வாள் அரவம் வலயம் பரிக்கும் புயத்தில் கொண்டாய் - நஞ்சையுடைய ஒளிபொருந்திய பாம்பாகிய வாகுவலயத்தைத் தாங்காகின்ற புயத்திலே கொண்டவரே; மருதூர் அரசே - மருதூருக்கு நாயகரே; வலயம் பரிக்கு மிசையே அசைய மதுரை வந்தாய் - வல்லயம் குதிரையின்மீது அசையும் வண்ணம் மதுரையின்கண் எழுந்தருளி வந்தவரே; வல் ஐயம்பர் இக்கு வில் வாங்கின் - வலிய ஐந்து பாணங்களையுடைய மன்மதன் கருப்புவில்லை வளைக்கின்; என் மகட்கு உயிர் உண்டோ - என்னுடைய மகளுக்கு உயிருண்டோ, எ-று, [செவிலியிரங்கிக் கூறல்]
-------------
மகவானரம்பையர்சந்திரசூரியர்மாமுனிவோர்
மகவானரம்புவிபோற்றுங்கவுரிமருவியவா
மகவானரம்புயன்மாயோனெருங்கமருங்கிற்கொண்ட
மகவானரம்பையங்காமருதூர்க்கொன்றைமாலையரே. (87)
(இ-ள்) மகவான்- இந்திரனும்; அரம்பையர் – தேவமகளிர்களும்; சந்திர சூரியர் – சந்திர சூரியர்களும் ; மாமுனிவோர் - பெரிய முனிவர்களும்; மகம வானா - யாகத்தின் விருப்பையுடைய தேவர்களும்; அம்புவி போற்றும் -பூமியிலுள்ளவர்களும் ஆதிக்கின்ற; கவுரி மருவிய வாமம க வானா - உமாதேவியார் பொருந்திய இடத்தொடையை-யுடையவா; அம்பயன மாயோன் நெருங்க மருங்கில கொண்ட மகவான - பிரமாவையும் விட்டுணுவையும் நெருங்கும் வண்ணம் இரண்டு பக்கத்தினும் கொண்டருளிய ஒளியையுடையவர்; -அரம்பை அம கா மருதூரக கொன்றை மாலையா - வாழைச்சோலைகளினாலே சூழப்பட்ட மருதூரின்கண் ணெந்தருளியிருக்கிளற கொன்றை மாலையையுடையவராகிய சிவபெருமான் எ - று.
---------------
மாலையம்போருக நோக்குங்கண்ணானைமதியங்கொன்றை
மாலையம்போருக நதோறு நதரித்துமன்றாடியைபடின்
மாலையம்போருக நதந்நாளிரணியனமாரபகழங்க
மாலையமபோருகஞ்சூழமருதூரனை வந்திப்பனே. (88)
(இ - ள்) மால ஐயம்போ உக நோக்கும் கண்ணானை - மயக்கத்தைச் செய்கின்ற ஐந்து பாணங்களையுடைய மனமதன பொடியாகும் வண்ணம் பார்த்தருளிய கண்ணையுடையவரும்; மதியம் கொன்றை மால் அம்பு ஒருகந்தோறும தரித்து மன்று ஆடியை – சந்திரனையும் கொன்றை மாலையையும கங்கை நீரையும் ஓரோருகங்தோறும் அணிந்து கனகசபையின் கண்ணே நிருத்தஞ்செய்பவரும்; புல் மாலை அம் போர் உக்கது அந்நாள் இரணியன் மார்பு அகழ்ந்த மால் ஐ- புல்லிய மாலைப் பொழுதின்கண் அழகிய போரை மகிழந்து அந்நாளிலே இரணியனுடைய மார்பைப் பிளந்த விட்டுணுவுக்குக் கடவுளும்; அம்போருகம் சூழ் மருதூரன் –தாமரை மலர்கள் சூழ்ந்த மருதூரையுடையவருமாகிய சிவபெருமானை; வந்திப்பன் - (யான்) வழிபடுவேன். எ.று.
------------
வந்திக்குமாதர்பத்தர்சித்தத்தன்மனமகிழ்ச்து
வந்திக்குமாதரமாவதிதொழுமன்னனெல்லு
வந்திக்குமாதரக்கன் றருந்தும்மருதூரனமன்
வந்திக்குமாதரப்போதணுகாதென்னுள்வைகுவனே. (89)
(இ- ள்) வந்திக்கும் ஆதரம் பத்தர் சித்தத்தன் - வழிபடுகின்ற விருப்பத்தையுடைய அன்பர்களது சித்தத்திலுள்ளவரும்; மனம் மகிழ்ந்து வந்து இக்கு மாதர் அமராவதி தொழும் மன்னன் - நெஞ்சம் உவந்து வந்து இப்பூமியின் கண்ணே அழகையுடைய அமராவதியிலுள்ளவர்கள் வணங்குகின்ற நாயகரும்; நெல் இக்கும் உவந்து ஆதரம் கன்று அருந்தும் மருதூரன் - நெல்லையும் கரும்பையும் மகிழ்ந்து பசுக்களும் கூட்டமாகிய கன்றுகளும் உண்கின்ற மருதூரை யுடையவருமாகிய சிவபெருமான்; நமன் விந்திக்கும் மா தரம் போது அணுகாது - இயமன் நோய் செய்கின்ற பெரிய அச்சத்தையுடைய காலத்தின்கண் அணுகாத வண்ணம்; என்னுள் வைகுவன் - என்னுள்ளே எழுந்தருளியிருப்பா. எ-று.
------------
வையம்புரந்தரமாலங்கிலின்மலைமாசுண் நான்
வையம்பரந்தரர்வானவர்பாகயன்மாமறையி
வையம்புரந்தரமாறப்படைத்தனர்மாமதுரை
வையம்புரந்தாசாண்மருதூரர்தம்வல்லவமே, (90)
(இ-ள்) வை அம்பு அங்கி உரம் தான் மால் - கூர்மையும் பாணமும் (முறையே) அக்கினியும் வலிமையைத் தரித்தவராகிய விட்டுணுவுமாம்; வில் மலை -வில் மேருமலையாம்; நாண் மாசுனம் - நாணி பரம்பரம்; வையம்பாந்தார் வானவர் - தேர் இந்திரரும் தேவருமாம்; பாகு அயன் - சாரதி பிரமனும்; மா மறை - குதிரைகள் வேதங்களாம்; இவை அம்புரம் தரம் மாறப் படைத்தனர்- இவைகளை அழகிய முப்புரங்களும் வலிமை நீங்கும் பொருட்டுப் படைத்தருளினார்; மா மதுரை வையம் புரத்து அரசாள் மருதூார்தம் வல்ல வம் - பெரிய மதுரையின் கணெழுந்தருளியிருந்து பூமியைக் காத்து அரசாண்டருளிய மருதூரையுடைய சிவபெருமானது வல்லவம் இது. எ-று.
---------------
வல்லியமாமனதளுடையான்மருதூரன் வள்ளி
வல்லியமாமன்முருகன்பிதாமும்மலங்களென்றும்
வல்லியமாமனெகிழ்த்தென்னையாளுமென்மாட்டினிநீ
வல்லியமrமனத்துண்ணினையாய்கொல்வரத்தினையே. (91)
(இ - ள்) வல்லியம் மா மன் அதள் உடையான் - புலியினது பெரிய நிலைபெற்ற தோலாகிய உடையையுடையவரும்; மருதூரன் – மருதுரையுடையவரும்; வள்ளி வல்லி அம் மாமன் - வள்ளியென்னும் பெயரையுடைய கொடிபோல்வாளுக்கு அழகிய மாமனாரும்; முருகன் பிதா - முருகக் கடவுளுக்குத் தங்தையாருமாகிய சிவபெருமான்; மும்மலங்கள் என்னும் வல்லி அம்மாமல் நெகிழ்த்து – மூன்று மலங்களெனப்படும் விலங்குகள் அமுக்காவண்ணம் பிரித்து; என்னை ஆளும் - என்னை ஆண்டருளுவர்; வல் இயமா இனி நீ என் மாட்டு வரத்தினை மனத்துள் நினையாய்கொல் - வலிய இயமனே இனி நீ என்னிடத்து வருதலை உன்னெஞ்சிலே நினையாய்போலும். எ-று.
---------
வரப்புடைக்குஞ்சிச்சடையான்குவளைமதுவொழுகி
வரப்புடைக்குஞ்செறுமா மருதூர்வெற்பமங்கைதன்பால்
வரப்புடைக்குஞ்சிங்கங்கங்குலின்வாரலைவல்லெழிலி
வரப்புடைக்குங்கொங்கையாதலின்வேண்டும்வரைவினியே. (92)
(இ - ள்) வரம் அப்பு உடைக் குஞ்சியான் -மேலாகிய நீரையுடைய குஞ்சிச் சடையையுடைய சிவபெருமானது; குவளை மது ஒழுகி வரப்பு உடைக்கும் செறு மா மருதூர் வெற்ப – குவளை மலரினின்றும் தேனொழுகி வரம்புகளை யுடைக்கின்ற வயல்களினாலே சூழப்பட்ட பெரிய மருதூரிலுள்ள மலையையுடைய தலைமகனே; மங்கை தன் பால் வரச் சிங்கம் புடைக்கும் - தலைமகளிடத்து நீ வரச் சிங்கங் கொல்லும்; கங்குலின் வரலை - இரவிலே வராதொழி; வல் எழில் இவரக் கொங்கை புடைக்கும் - சூதாடுகருவியினது அழகு செறியும்வண்ணம் தனம் வீங்கும்; ஆதலின் இனி வரைவு வேண்டும் - ஆதலால் இனி விவாகம் வேண்டும். எ-று. [பாங்கி வரைவு முடுக்கம்]
-------------
இனியமனச்சுதலில்லைநெஞ்சேமன்றலீர்க்கமலத்
தினியமனச்சுதன்போற்றும்பிரான்மருதூரிறையா
மினியமனச்சுதம்போந்திடுங்கண்டனிலங்குபொற்றா
ளினியமனச்சுருதிப்பொருளோடுமிறைஞ்சவனே. (93)
(இ-ள்) இனி யமன் நச்சுதல் இல்லை - இனி இயமன் விரும்புதலில்லை; நெஞ்சே – மனமே; மன்றல் ஈர்ம் கமலத்தின் நியமன் அச்சுதன் போற்றும் பிரான் - மணத்தையுடைய குளிர்ந்த தாமரை மலராகிய கோயிலையுடைய பிரமாவும் விட்டுணுவுந் துதிக்கின்ற கடவுளாயும்; மருதூர் இறை ஆ ம் இனிய மன் - மருதூருக்கு நாயகராகிய இனிய தலைவரும்; நச்சு உதம் போந்திடும் கண்டன் – நஞ்சாகிய நீர் தங்குகின்ற கழுத்தையுடையவருமாகிய சிவபெருமானுடைய ; இலங்கு பொன் தாளின் - விளங்குகின்ற பொன்போலுந் திருவடிகளிலே; இயம் மன் அச் சுருதிப் பொருளோடும் இறைஞ்சுவன் - ஒலி பொருந்திய அந்தவேதத்தினது பொருளுடனே வணங்குவேன். எ-று.
--------------
இறையாமலகங்கையான்மருதூரனினையடியை
யிறையாமலகமெனக்கண்டிறைஞ்சுவனென்கவிபாழ்க்
கிறையாமலகமகிழ்வுறப்பாடுவனிங்கியமற்
கிறையாமலகண்டித்தென்மேல்வருவதியல்பல்லவே. (94)
(இ -ள்) இறை – கடவுளும்; ஆமலம் கங்கையான் - பரிசுத்தமாகிய கங்கையை யுடையவரும்; மருதூரன் - மருதூரையுடையவருமாகிய சிவபெருமானுடைய; இணை அடியை – இரண்டு திருவடிகளையும்; இறை ஆமலகம் எனக் கண்டு இறைஞ்சுவன் - கையிலுள்ள நெல்லிக்கனிபோலத் தரிசித்து வணங்குவேன்; என் கவி பாழ்க்கு இறையாமல் - என்னுடைய பாட்டுக்களை வீணுக்கிறைக்காது; அகம் மகிழ்வு உ றப் பாடுவன் - மனம் மகிழ்ச்சியடையும் வண்ணம் பாடுவேன்; இங்கு இயமற்கு இறை யாம் அல - இங்கே இயமனுக்குச் சிறுமையுடையேம் நாமல்ல; கண்டித்து என்மேல் வருவது இயல்பு அல்ல - கண்டித்து என்மீது வருதல் (அவனுக்கு) முறையன்று. எ-று.
------------
இயலுமிசையும்பயின்மருதூரிறைபின்னருளா
லியலுமிசையும்பரிசநின்றேங்கிடலெய்தவிவ
ணியலுமிசையுமிதுமுடிப்பாயிங்குப்போலவெங்க
ளியலுமிசையும்பர்தம்பதியு நீயுமிருந்திடவே. (95)
(இ - ள்) இயலும் இசையும் பயில் மருதூர் இன் அருளால் - இயற்றமிழும் இசைத்தமிழும் பயிலாகின்ற மருதூரின்கண் ணெயுந்தருளியிருக்கினற சிவபெருமானது இனிய கருணையினாலே; இசையும் பரிசம இயலும் - (நீ) உடன் படும் பரிசம் பொருந்தும் ; நின்று ஏங்கிடல் - நின்று இரங்காதே; இவண் இயலும் இசையும் எய்த -
இவ்வுலகத்திலே ஒழுக்கமும் கீர்த்தியும் அடையும்பொருட்டும் ; இங்குப் போல எங்கள் இயலும் நீயும் மிசை உம்பர்தம் பதி இருந்திட - இங்கேபோல எங்கள் பெண்ணும் நீயும் மேலுள்ள தேவருலகத்திலும் வாழும் பொருட்டும்; இது முடிப்பாய் - இவ்விவாகத்தை முடிக்கக்கடவாய். எ-று [வரைவெதில்கோடல்]
-----------------
இருவரும்பன்னமலர்வாவியிற்செலினீர்ங்கழுநீ
ரிருவரும்பனனநின்கணகண்டுவாடுமிருளெனக்கு
ளிரிருவரும்பன்னநெருங்கியகாவிலியான்செல்வனீ
யிருவரும்பன்னகப்பூண்மருதூரனெழில்வரைக்கே. (96)
(இ- ள்) இருவரும் மலர் பன்ன வாவியில் செலின் - நாமிருவரும் பூக்களைச் கொய்யும்பொருட்டு வாவியிலே போவாமாயின்; ஈர்ம் கழுநீர் இரு அரும்பு அன்ன நின கண் கண்டு வாடும் - குளிர்மையாகிய குவளையினது பெரிய அரும்புகள் (தம்மைப்) போன்ற உன்னுடைய கண்களைக் கண்டு வாடும்; இருள் எனக் குளிரு இரும் பன்னம் நெருங்கிய காவில் யான் செல்வன் - இருளென்று சொல்லும்வண்ணம் குளிர்மை வருகின்ற இலைகள் நெருங்கிய சோலையிலே நான் போவேன்; நீ இரு – நீ (இங்கே) இரு; அரும் பன்னகம் பூண் மருதூரன் எழில் வரைக்கு – அரிய பாம்பாகிய ஆபரணத்தை யணிந்த மருதூரையுடைய சிவபெருமானது அழகையுடைய மலையிடத்து. எ-று. [ பாங்கி தலைவியைக் குறியிடத்துயத்து நீங்கல்.]
--------------
வரைவிலங்கையன்றனதஞ்செழுத்துமறந்திருந்த
வரைவிலங்கையன் மருதூரன் வெற்பின்வடிவிதென்ன
வரைவிலங்கையர்தருஞ்சிற்றிடைச்சிக்குமன்னற்குமிவ்
வரைவிலங்கையன்றஉர்த்தானுந்தேவியுமானினவே. (97)
(இ - ள்) வரை வில் அம் கையன் - (மேரு) மலையாகிய வில்லையேந்திய அழகிய கையையுடையவரும்; தனது அஞ்சு எழுத்து மறந்து இருந்தவரை விலங்கு ஐயன் - தம்முடைய பஞ்சாக்ஷாத்தை மறந்திருந்தவர்களை விலகுகின்ற கடவுளும்; மருதூரன் வெற்பின் – மருதூரையுடைய வருமாகிய சிவபெருமானுடைய மலையின் கண்ணே; இது என்ன வடிவு - இது என்ன அழகு; வரைவு இல் – பிரிவில்லை; அங்கு ஐயம் தரும் சிறு இடைச்சிக்கும் மன்னற்கும் - அங்கே ஐயத்தைத் தருகின்ற சிறிய இடையையுடைய தலைமகளுக்கும் தலைமகனுக்கும்; இவ்வரைவு இலங்கை அன்று அடர்த தானும் தேவியும் மானின - இம்மணம் இலங்கையை அந்நாளிலே பொருதவனாகிய இராமனையும் (அவன் மனைவியாகிய) சீதையையும் போன்றன. எ- று. [செவிலி நற்றாய்க்கிருவர் காதலையுமறிவித்தல்.]
----------
மானத்தரையரைவன்புலித்தோலரைவட்டறுத்த
மானத்தரையரைத்தென்மருதூரரை மாமலரோன்
மானத்தரையரை வாழ்த்திவணங்குமின்வானத்தரு
மானத்தரையரை வைப்பரப்பாற்சிவமண்டலத்தே (98)
(இ - ள்) மான் அத்தரை - மானேயேந்திய கையை யுடையவரும்; அரை வல் புலித்தோலை - அரையின்கண்ணே வலிய புலித்தோலையுடையவரும்; வட்டறுத்த மான் அத்து அரையரை - (தடிக்கு இவ்வளலென்று) வரையறுத்த உமாதேவியார் பொருந்திய சிவப்பாகிய பாதியையுடையவரும் ; தென் மருதூரரை -தென் மருதூரையுடையவரும்; மா மலரோன் மா நத்தர் ஐயரை - பெரிய தாமரை மலரிலிருக்கும் பிரமனுக்கும் பெரிய சங்கையுடைய விட்டுணுவுக்கும் தந்தை யாருமாகிய சிவபெருமான்; வாழ்த்தி வணங்குமின் - துதித்து வணங்குங்கள்; வானத்தரும் மானத் தரையரை அப்பால் சிவமண்டலத்து வைப்பர் - தேவர்களும் நாணும் வண்ணம் பூமியினுள்ளோரை அப்பாலுள்ள சிவலோகத்தின்கண் இருத்தியருளுவர். எ.று.
------------
மண்டலமுண்டவன்கண்டறியாதவன்வண்டமிழ்க்க
மண்டலமுண்டமுனிமுதனால்வர்வணங்குமையன்
மண்டலமுண்டகக்காடுழக்கும்மருதூரன்முக
மண்டலமுண்டன்புசெய்நெஞ்சமேயஞ்சன்மாவினைக்கே. (99)
(இ. ள்) மண்டலம் உண்டவன் கண்டு அறியாதவன் – பூமியை யுண்டவராகிய விட்டுணுவும் கண்டறியாதவராயும் ; வள் தமிழ் கமண்டலம் முண்டம் முனி முதல் நால்வர் வணங்கும் ஐயன் - வளம் பொருந்திய தமிழை வளர்த்த கமண்டலத்தையுடைய திரிபுண்டத்தைத் தரித்த அகத்தியர் முதிலாகிய நான்கு முனிவர்கள் வணங்குகின்ற கடவுளாயும்; மண்டு அலம் முண்டகம் காடு உழக்கும் மருதூரன் - நெருங்கிய கலப்பை தாமரைக்காட்டை உழக்குகின்ற மருதூரையுடையவராயுமுள்ள சிவபெருதானது; முகம் மண்டலம் உ ண்டு - திருமுகமண்டலம் உண்டு; அன்பு செய் நெஞ்சமே; அன்பு செய்வாயாக மனமே; மா வினைக்கு அஞ்சல் - பெரிய வினைகளுக்கு அஞ்சாதொழி. எ-று.
--------------
மாவினலங்ககலச்செற்றமாறங்குவாமபங்கர்
மாலினலங்கனிநீர்செந்நெற்பாய்மருதூரர்மலை
மாவினலங்கவளைத்தவர்பாதம்வணங்கினர்க்கு
மாவினலங்கலங்கற்றோளில்வாழுமலர்த்திருவே, (100)
(இ - ள்) மா இனல் அங்கு அகலச் செற்ற மால் தங்கு வாமம் பங்கர் - யானையினுடைய துன்பம் அங்கே ஒழியும் பொருட்டு (முதலையைக்) கொன்ற விட்டுணு தங்குகின்ற இடப் பாகத்தையுடையவரும்; மாவின் நல் அம் கனி நீர் செந் நெல் பாய் மருதூரர்-மாமரத்தினுடைய நல்ல அழகிய பழத்தினது சாறு செங்நெற்பயிர்களுக்குப் பாய்கின்ற மருதூரை யுடையவரும்; மலை மா வில் நலங்க வளைத்தவர் (மேரு) மலை யாகிய பெரியவில்லை முடங்கும்வண்ணம் வளைத்தவருமாகிய சிவபெருமானுடைய ; பாதம் வணங்கினர்க்கு - திருவடிகளை வணங்கினவர்களுக்கு; மாவின் அலங்கு அலங்கல் தோளில் - வண்டுகளையுடைய விளங்குகின்ற மாலையை அணிந்த புயத்தின் கண்ணே; மலர்த் திரு வாழும் – தாமரை மலரிலிருக்கின்ற இலக்குமி வாழுவள். எ-று.
மருதூரந்தாதியுரை முற்றுப்பெற்றது

மருதூரந்தாதி : மூலமும் உரையும்

மருதந்தாதியுரை - நூல்

Comments
Post a Comment