Maṟaicaik kalampakam


பிரபந்த வகை நூல்கள்

Back

மறைசைக் கலம்பகம்
யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப்புலவர்



மறைசைக் கலம்பகம்
யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப்புலவர் அருளியது



மறைசைக் கலம்பகம்
யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப்புலவர் அருளியது


கணபதி துணை
source:
மறைசைக் கலம்பகம்
ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப்புலவர் அவர்கள செய்தது.
இஃது அவருடைய மூத்தபுத்திரரும் கொழும்பு இராசசபையிற் பிரதிவக்தரும்
ஆகிய முத்துக்குமாரப்பிள்ளை அவர்களால் சிவ. சங்கரபண்டிதர் அவர்கள்
செய் காப்புவிருத்தியோடு வண்ணைநகர் மெய்ஞ்ஞானப்பிரகாச
யந்திரசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது
விலை சதம்-18
சுபானு வருஷம் புரட்டாதி மாதம்
1883.
----------------------

பிழைதிருத்தல்
---------------------------------------------------------------
பக்கம் வரி பிழை திருத்தல்
----------------------------------------------------------------------
4 19 என்னவென என்னனென
4 35 திராசி தீராசி
7 நிலமண்டில நிலைமண்டில
8 14 திறக் திருக்
12 32 சையெம் சையம்
16 8 தவாவா தவர்வா
18 18 ரூசல் ரூச
21 12 க்கடா க்கட
26 17 மருந் மருஞ்
-----------------------------------------------------------



சிவமயம்

சிறப்புக்கவிகள்

ஸ்ரீலஸ்ரீ கீரிமலைச்சிவன்கோயில் அதிபதி கார்த்திகேயக் குருக்கள்
அவர்கள் புத்திரர் சிவ-சங்கரபண்டிதர் அவர்களிடத்திலே
சம்ஸ்கிருதமுஞ் செந்தமிழும் பயின்றுகொண்டவர்
சபாபதிக்குருக்கள் அவர்கள் திருவாய்மலர்ந்தருளியது

திருமருவு மறைசையுறை பரனை நீர்வை... ... *
      திகழ்தருபீ தாம்பரனாம் புலவன் போற்று, *
மருமருவு கலம்பகநூ லச்சிற் றந்தா..... ...*
      னவனருளுந் தவமதலை யருளின் குன்ற, *
முருமருவு மதனனிக ரழகரன் கல்வி ... ... *
      யுயரரசர் சபையினொளி யுடைய சிங்க, ...*
மருமருவு சுரதருவின் வண்மை பூண்டோன்...*
      வளர்புகழ்முத் துக்குமர மகிப னன்றே.... ...*

யாழ்ப்பானம் தெல்லிப்பழை மகா- - - ஸ்ரீமத்
சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் சொல்லியவை

அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

திசைமுகன்முன் றனியனமாய்த் தேடியின்று
      பலவாய்விண் சென்றாங்கெங்குஞ்
சுசிநிறக்கே தனமிவரத் துழாய்னன்பல்
      சூகரமாய்த் துளைத்தாங் கெண்ணின்,
றிசைவனசுற் றிலுநிலங்கீண் டிடநாலு
      கங்கைதரித் திறைதீ மாறச்,
சசிமுடித்த சிவனொளிபா தப்பொருப் புத்
      தயங்கீழத் தகைசா னாட்டில் (1)

கடனடுவட் கிடந்துரஞ்செங் கமலைதிகழ்ந்
      தெனச்சிறந்து கவின மாலாய்
மடனகலத் தமிழ்வாணி வதிதருநா வளத்தயனாய்
      வலியின் மாறாத்
திடனுடைய விராவணனைச் சிதைந்தகிரிக்
      குவடுறலாற் சிவனாய் மூவர்
நடையுமுறப் பரம்பதியாய் நவிற்றுமொரு
      யாழ்பாண நகரந்தன்னில். (2)

கற்பகத்தை மலர்களெலாங் கட்டுவிட்டு
      நகைக்கவது ககனத் தான
பொற்பெவனென் றுளங்கனன்று புதுத்தளிர்க
      ணெருப்பெடுப்பப் புறங்கண் டாங்கு,
முற்படவே றியகிளைகண் முகந்திருப்பிக் கிழக்கு
      றுஞ்சீர் முதிர்நீர் வேலி,
நற்பொழிலொன் றிரவிமதி நாடருநந் தன
      வனமாய் நண்ணிற் றன்றே. (3)

அந்நீர்வை தனில்வருசண் முகக்குரிசி
      வருந்தவத்தோ ரறிஞன் றொன்றி
முந்நீர்வைப் பினிலாறு முகக்கடவு ளகததியற்கு
      முதனாட் டந்தரிந்து
சொன்னீர்மை யொருங்கு தொக்க சேனாதி
      ராயனிடந் தோமின்றாய்
பன்னூலுந் தெரிபீதாம்பரப்புலவர்சிகரமனியாய்ப்
      பயின்றான்மன்னோ (4)

அன்னவன்வாய்த் தமிழமிழ்த மணைகடந்து
      வழிந்துலகி லறிஞர் நான்காய்ப்,
பன்னியபா வினத்தொழுகிப் பகர்மறைசைக்
      கலம்பகமாய்ப் பாரின்மீது,
மன்னவன்னோன் மகனுமெதிர மன்னசிங்க
      மன்னன்மரு மகனும் பேர்விற்,
பன்னனுமா யிலங்குபுகழ் படருமுத்துக்
      குமாரபூ பால சீலன் (5)

கொழும்புநகர்ப் பிரதிவக்தர் குழுவினடு
      நாயகமாய்க் குலவு வோனாத்
தழும்புபடத் தலமுழுதுஞ் சாற்றுபுகழ்
      தலைமுறையாத் தயங்குஞ் சீமா
னிழும்புதுநன் மொழிப்புலவ ரிதயமகிழ்
      தரவழங்கு மிரும்பொன் மாரி
கெழும்புயற்கைக் குபேரன்மிடி கெடவறியோர்க்
      குதவுநலங் கிளரும் வள்ளல். (6)

வளங்குலவும் வடகோவை மகரவித்து
      வானெனும்பேர் வையம்போற்ற
விளங்குதிறற் சபாபதியா மேதகைதன்
      றமயனென மேன்மை பூண்டோன்,
களங்கெழுகந் தரத்தனடி கனவின்மற
      வாதவன்கார் காத்த கோத்ரன்,
றுளங்கியவச் சினிலதனைத் துகடபுத்து
      நிலைநிறுத் துத் தொகுத்தான் மாதோ. (7)
-----

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் மருகரும் முதன்மாணாக்கரும்
வித்துவச்சிரோன்மணியுமாகிய ஸ்ரீமத் ச. பொன்னம்பலபிள்ளை அவர்கள்
சொல்லியது.

சீர்கொண்ட நீரவையெனும் பதியனுயர்
      செழுந்தமிழின் செல்வன் வாய்த்த,
பார்கொண்ட புகழினன்பீ தாம்பரவே
      ளெனும்புலவன் பசும்பொற் கொன்றைத்,
தார்கொண்ட சடையனமர் மறைசையாந்
      தலத்தினருங் கலம்ப கத்தைப்,
பேர்கொண்ட பாவாணர் பெட்புடனாய்ந்
      திடவினிதிற் பேசி னானே.
-------

ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலையுபாத்தியாயர்
ஸ்ரீமத் அ. குமாரசுவாமிப்புலவர் சொல்லியவை.

சித்திதரு மறைசைநகர்ப் பெருமா னுக்குச்
      செய்யதமிழ்ச் சொற்களெனு மலர்க ளாலே
பத்தியெனு நார்கொண்டு கோவை செய்த
      பண்பமருங் கலம்பகப்பா மாலை வேய்ந்தான்
நத்தமரும் வயனீர்வை நகரம் வாழ்வோ
      னற்றமிழிற் பற்பலநூ னன்கு கற்றோன்
வித்துவநற் சபாபதியைப் பெற்ற தந்தை
      வியனுறுபீ தாம்பரன்பா வாணரேறே.

அந்தமறை சைக்கலம்ப கத்தைப் பாரி
      லறிஞரெலா முறையினறிந் தன்பி னோத
முந்துசிவ சங்கரபண் டிதனார் காப்பின்
      முறைபுரியுந் திருவிருத்தி யதனி னோடு
சந்தமுறத் தந்தனனா லச்சிற் றானே
      தாரணியி லவனருளு முதலா மைந்த
னிந்திரனேர் வந்துகொழும் பரசின் வாழ்வோ
      னெழிலுறுமுத் துக்குமர விறைவ னன்றே.
-----

ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியாசாலை உதவி உபாத்தியாயர்
ஸ்ரீமத் சு.சி. சுந்தரம்பிள்ளை சொல்லியது

சீர்திகழ் நீர்வையிற் செந்தமிழ் நூல்பல தேர்ந்துளனிப்
பார்புகழ் நாவலன் பீதாம் பரபதி பண்டுசெய்த
வார்திக ழின்மறை சைக்கொள் கலம்பக மச்சிலிட்டா
னேர்திகழ் முத்துக் குமர னவனரு ளின்சுதனே.
------

நூலாசிரியருடைய மாணாக்கர்கள் சொல்லியவை

ஸ்ரீமத் ச. வீரசிங்க உடையார்

வேதா ரணியத்தின் மேவீ சுரர்தம்மேற்
பீதாம் பரன்சொல் பிரபந்தங் - காதாரக்
கேட்டா லினிய கிளர்வாய் மனக்கினிய
வாட்டா விருவினையும் வந்து.

ஸ்ரீமத் இ. வைத்தியலிங்கபிள்ளை பிரசித்த நொத்தாரிசு

செந்தமிழின் றிறமுழுதுந் தெரிந்த தீமான் சிறியனுக்குஞ் சிவநூல்க டெரித்த தீரன்,
முந்துறுபீ தாம்பரனற் புலவன் முன்னர் முறைபுரியு நூல்களினுண் முடிவிலாத,
சந்தமறை சைக்கலம்ப கத்தைத் தானே தாரணியி லச்சினிடைத் தந்தான் சாற்று,
மந்தலிறை தந்தமகன் கொழும்பின் மேன்மை யரசர்புகழ் முத்துக்கு மார னன்றே.

ஸ்ரீமத் அ. பூதத் தம்பிப்பிள்ளை.

என்னையோர் பொருட்ப டுத்தி யினியநூல் பயிற்றி யாண்ட
பன்னுதே சிகனாம் பீதாம் பரனருண் ம்றைசை மீது
சொன்னதோர் கலம்ப கத்தைத் துகளற வச்சிற் றந்தா
னன்னவன் முதற்சே யாகு மணிமுத்துக் குமர னன்றே.

ஸ்ரீமத்- ஆ . விநாயகமூர்த்திப் புலவர்.

சுத்த செந்தமிழ் வல்லசி காமணி தூய நற்சிவ பூசைவி திப்படி
பத்தி யோடு செய் தானடி யேனையும் பகரு நல்லறி வுச்சுடரூட்டியே
வைத்த பீதாம்பரப் புலவன் புகழ்மறைசை போற்றுகலம்பகமச்சினிற்
சித்த மாய்ப்பதிப் பித்தனன் மூத்தசேய் திகழுமுத்துக்குமாரநிருபனே.

ஸ்ரீமத் வ. குமாரவேற்பிள்ளை

தொண்டினெனைக் கொண்டருள்செய் தொல்குருபீ தாம்பரவேள்
கண்ட மறைசைக் கலம்பகநூ-லெண்டிக்
கமரவச்சி லிட்டா னவனருளு முத்துக்
குமரன் கொழும்பரசர் கோன்.

ஸ்ரீமத்.ப. சுப்பிரமணியப்பிள்ளை

இருளிடைக்கிடந்தவேழையேற்கிரங்கி யெழிற்கலையளித்தினி தாண்ட
ஒருகுரு நற்பீ தாம்பரப் புலவ னுவந்துமுன் மொழிந்திடு நூலுட்
டிருமறை சையினில் வருகலம், பகமாச செப்புநூ லச்சிடைத் தந்தான்
குருவவன் முதலிய னருளிய முத்துக் குமரனாந் திருமக னன்றே.
---------------

ச. சிவப்பிரகாசபண்டிதர் அவர்கள் மாணாக்கர்
ஆவரங்காற் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைஉபாத்தியாயர்
ஸ்ரீமத் ச. குமாரவேற்செட்டியார் சொல்லியது

துருமருவுசண்முகற் கொருதனயனின்னியற் செந்தமிழின்முந்துபுலவன்
      றேறுபுகழாறுமுகநாவலர்தமருகனாய்ச்செகமெலாம்புகழநின்றோ
னருமருவு மரனடிகள் பரிவினுடனநுதினமு மர்ச்சைசெய்யடியர்திலகன்
      அரியகன விதரணசு குலசுகுண சம்பன்ன னாயுளசபாப திப்ப்பே
ருருமருவுகுரிசிலொடுநிருபர்சபையிரிமையுளவொப்பில்வைத்தியநாதனை
      யொண்மருகராக்கொண்டவண்ணல்பீதாம்பரனுவந்துசெய்நூல்களுள்ளே
குருமருவுதிருமறைசையருளுறுகலம்பகங்குற்றமறவச்சிலிட்டான்
      கொற்றமுளமுற்சுதன்முத்துக்குமாரனாங்குமரனன் பெருமனன்றே.
----

மேற்படி மாணாக்கர் நீர்வேலிச் சைவப்பிரகாச பாடசாலை
உதவி உபாத்தியாயர் ஸ்ரீமத் வா. கந்தையபிள்ளை.

செந்தமிழ்ப் பாலி னோங்கித் திகழ்ந்தபீ தாம்பரப்பேர்ச்
சுந்தரக் கடலி னூலாய்த் தொன்று புத் தமுதந் தன்னைச்
சிந்தையிற் புலவர் கொள்ளத் திறத்தினி லளித்தா னன்னோன்
முந்துசேய் மாத வத்தன் முத்துக்கு மார னன்றே.
முந்துசேய் மாத வத்தன் முத்துக் குமார னன்றே.
-----------

சிறப்புப்பாயிரம்.

ஸ்ரீலஸ்ரீ சித்தாந்தபண்டிதராகியசோமசுந்தரக்குருக்கள் அவர்கள்
புத்திரர் நூலாசிரியர் அவர்களிடத்திற் செந்தமிழும் சிவ. சங்கரபண்டிதர்
அவர்களிடத்திற் சமஸ்கிருதமும் பயின்றுகொண்டவர் நீர்வேலி
வாய்க்காற்றரவை விநாயகமூர்த்திகோயில் அதிபதி
சந்திரசேகரக்குருக்கள் அவர்கள் திருவாய்மலர்ந்தருளியவை.

நீர்வேலி யெனநிலவு நிலவுலகிற் றென்புடையி னெறியாற் றானு
நீர்வேலி யெனநிலவு நீளிலங்கை யாழ்ப்பாண நிறைவாற் றான
நீர்வேலி யளவுக்கு நிமிர்கவுளி னரியருளி னீங்கா தான
நீர்வேலி யெனவகுக்கு நிருபரறி ஞருமுறையு நிகரி றானம். (1)

சண்முகனற் றந்தைபதஞ் சாரடியன் றாரணியிற் றானி ரண்டில்
சண்முகனற்றந்தையெனத்தகுபுருடோத்தமனரன்சீர் தனிகூறும்பேச்
சண்முகனற்றந்தையளவறவுணர்ந்து பெருமைமுழுதடைந்தகோமான்
சண்முகனற் றந்தையெனத் தானவனி லவதரித்த தகைசால் சிங்கம். (2)

பீதாம்ப ரப்பெயரிற் பேருலகு புகழ்திருவின் பிரிய னோடு
பீதாம்ப ரப்பெயரிற் பெருந்தமிழோ டுவரி யுண்ட பெருமா னாணப்
பீதாம்ப ரத்திலங்கிப் பெருந்தமிழோ டிங்கிலிசுப் பெருநீ ருண்ட
பீதாம்ப ரப்புலவன் பெய்யுமழை யெனத்தானம் பிறங்குங் கையான். (3)

வித்துவான் பிறவிக்கேவினையிரண்டுமெனவிடுத்துவியன்பொற்றாள்சேர்
வித்துவான் முத்தியருண்மெய்ச்சிவலிங்கத்தருச்சைவிதிசெய்தோனா
வித்துவான் மருகனென விரவுசிவ பண்டிதனைவிருப்பிற்கொண்டோன்
வித்துவான் சபாபதியைத் தியாகரா சனைச்சுதராய்மிளிரப்பெற்றோன். (4)

திருமறைசைப் பரமனரு டிகழடியன் புகலரிய சிவஞா னப்பேர்த்
திருமறைசைச் சிறுமையினைத் தெரிந்துமதுசிவப்பொருட்டாற்சேகரித்த
திருமறைசைவாகமத்திற்செப்பினெறியொழுகியிவன்செய்ந்நூலுள்ளே
திருமறைசைக் கலம் பகமாந் திவ்வியநூல் யாருமுளச்சிறப்பி னோத. (5)

முத்துக்குமாரனெனமொழிபெயரானவன்முதற்சேய்முழுநூல்வல்லான்
முத்துக்குமாரனறுமுகனருளிற்கொழும்பரசின்முதன்மைபூண்டோன்
முத்துக்கு மாரனவன் முறைகுனிக்குஞ் சிலையினுமாண் முந்திர்ந்தசீலன்
முத்துக்கு மாரவமர் முழுதுயிரு மகிழவச்சின் முறயிட்டானே (6)
-----------------------------------------------------------


சிவமயம்.

மறைசைக்கலம்பகம்.

காப்புவிருத்தி - மறைசைக் கலம்பகம்.

மறைசைக்கலம்பகமென்பது மறைசைமெனின்ற கலம்பகமென விரிக்கப்படுதலின்
இடைமொழி கெடத்தொக்க ஏழாம்பேற்றுமைத் தொகை. மறையென்னும் பெயர்,
ஓதியுணர்தற்கு அதிகாரமுடையரல்லாதாரின் மறைக்கப்படுவதென்னும்
பொருட்கண மறையென்னும் முதனிலையிரிச்சொல்லின் முன்னர்ச் செயப்படு-
பொருண்மையுணர்த்தும் ஐகாரவிகுதி புணர்ந்து கெட்டு முடிந்தது. இனி உலோகாயதம்
முதலிய பொய்ம்மதங்களைச் சிறந்த நியாயங்களான் மறுப்பதென்னும்
பொருட்கண், மறுவென்னும் முதனிலையுரிச் சொல்லின் முன்னர் வினை
முதற்பொருண்மையுணர்த்தும் ஐகாரவிகுதி புணர்ந்து மறையென்னும்
பெயர் முடிந்ததெனக்கொள்ளினும் அமையும். அது இருக்கு, யசு, சாமம் அதர்வம்
என்னும் நான்கு வேதங்களையுமே உணர்த்தலின் யோகரூடமாம்.

மறைகளாற் பூசிக்கப்பட்ட காடு மறைக்காடென இடைமொழிகெடத்தொக்க
மூன்றாம் வேற்றுமைத் தொகையாயிற்று.ஈண்டுக் காடென்பது தன்பொருளை
விடாதுநின்றே சம்பந்திபொருளாகிய சிவனையும் உணர்த்துதலின் விடாத
ஆகுபெயராம் . மறைக்காடென்பது மறைசையென மரீஇயிற்று. அற்றேற்
சேதனகாரியமாகிய பூசை அசேதனங்களாகிய மறைகளாற் செய்யப்பட்டதென்றல்
வழுவாம் பிற எனில் சிருட்டிகாலத்து இறைவனறிவுறுத்திய மறைகளை
ஆண்டுக்கேட்டு ஈண்டுத் தவத்தானுயர்ந்த முனிவர்க்கு அறிவுறுத்திய
வேதபுருடர்களாகிய தேவர்களே இலக்கணையான் மறைகளெனக்
கூறப்பட்டாராதலின் வழுவின்றாமென்க.

கலம்பகமென்பது கலவை:அஃதீண்டு வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
என்னும் பாக்களும் அவற்றினங்களுமாகிய பலதிறச் செய்யுட்களின் கலவையையுடைய
பிரபந்தம் என்னும் பொருள்பட்டு நின்றது.

மறைசைமேனின்ற கலம்பகம் எனவே, மறைக்காட்டுப்புகழ்மேலும் மறைக்காட்டிறைவன்
புகழ் மேலுநின்ற கலம்பகப்பிரபந்தம் என்னும் பொருள் போந்தது.

இந்நூற்கு விடயஞ் சிவமகிமைவிளக்கமென்பதூஉம், பிரயோசனம்
போகமோகமென்பதூஉம் அதிகாரிகள் அவற்றையவாவிய சைவரென்பதூஉம்,
முதனூல்களாகிய வேதாகமங்களிற் பரந்துகிடந்த சிவமகிமைகளிற் சில
இந்நூலிற் றொகுத்துக் கூறப்படுதலின் இதற்கும் முதனூற்கும் உளதாகிய
சம்பந்தந் தொகுப்பதூஉந் தொகுக்கப்படுவதூஉமாகிய தென்பதூஉம்
மறைசைக்கலம்பகமென்னுஞ் சொல்லாற் பெறப்பட்டன.

இங்ஙனங் காட்டிய விடயம் , பிரயோசனம், அதிகாரி, சம்பந்தம், என்னு நான்கும்
நூல்வழங்குதற்குக் கருவியாகிய சிறப்புப்பாயிரம் எனப்படும்.

அவதாரிகை.

புண்ணிய பூமியாகிய பரதகண்டத்திலே, தக்ஷிணதேசத்திலே, சோழ மண்டலத்திலே,
அதிமகாமகிமைபொருந்திய சிவஸ்தலங்களுள் ஒன்றாகி மிகச்சிறந்து விளங்குகின்ற
வேதாரணியம் என்னும் பெயரிய திருமறைக்காட்டின் இறைவனை நூறு
செய்யுட்களையுடைய கலம்பகப் பிரபந்தத்தாற் றுதிசெய்யத் தொடங்கிய
இந்நூலாசிரியர் " விடையூர் பரன்றரு விநாயகன் றனைமுத லிடையூ றொழி
பொருட் டினிதிறைஞ்சுகவே" என்று ஸ்ரீ பௌஷ்கராகமத்திற் பரமசிவன் அருளிய
உபதேச மொழியைத் தலைமேற்கொண்டு, தாமெடுத்துக்கொண்ட இந்நூல்
இடையூறின்றி இனிதுமுடிந்து நிலமிசை நிலைபெறீஇ நிலவுதற் பொருட்டுச்
சிவபுத்திரராகிய விநாயகக்கடவுளைச் சரணமெனக்கொண்டு துதிக்கின்றார்;
திங்களென்னுஞ் செய்யுளால்,

காப்பு.
வெண்பா.

திங்க ளணிந்த திருமறைச் சிற்பரன்மேற் ..........
தங்குங் கலம்பகப்பாச் சாற்றுதற்கு-மங்குனிகர் ........
மெய்யத்தி யானனத்தான் வேண்டங் குசபாசக் ........
கையத்தி யானைத்தான் காப்பு. ...............

இ-ள். சந்திரகலையைச் சிரசிற்றரித்த, திருமறைக்காட்டில் எழுந்தருளியிருக்கின்ற,
சித்துக்கள் எல்லாவற்றிற்கும் மேலாகிய சிவன்மேற் சென்று நிலைபெறுங்
கலம்பகம் என்னும் பிரபந்தத்தை யான் பாடுதற்பொருட்டு, மேகம் போலக்கரிய
சரீரத்தினையுடைய கடலினிடத்தே துயிலுகின்ற நாராயணனாலும்,
அன்னத்தையூரும் பிரமனாலும், விரும்பிய பேறெய்தும் பொருட்டுப்
பிரார்த்திக்கப்படுகின்ற அக்குசத்தையும் பாசத்தையுந்தரித்த கைகளையுடைய,
யானையின்முகம் போலும் முகத்தினையுடைய விநாயக்கடவுளே
காவலைச் செய்பவனாக. எ-று

விசேடம்.

கலம்பகப்பா என்பது இருபெயரொட்டாகுபெயர். காப்பென்னும் வினைப்பெயர்
வினைமுதன்மேனின்றது. ஆக என்னும் வேண்டுதற் பொருண் மேல்வந்த
வியங்கோள் வினைமுற்று வருவித்துரைக்கப்பட்டது. சித்பரனென்னும் வடமொழி
சிறபரனெனத் தற்பவமாகி நின்றது: சித்தென்பது அறிவுடைப்பொருளையும் அறிவையும்
உணர்த்தும்; பரன் மேலானவன்.

பதப்பிரயோசனம்.

தேவருக்கமுதீந்து தண்ணிலவுமிழந்து உலகமுழுவதையுங் குளிர்விக்குஞ்
சிறப்புடைமையின் மங்கலப்பொருளாகிய சந்திரனது அங்கமே அதிமங்கலமெனக் கருதி,
மங்கலமொழிமுதல் வகுத்துக்கூறுக என்னும் விதிபற்றி முன்னர்த் திங்களெனவும்,
தக்கனதுசாபத்தாற்றன் கலையிழந்து வருந்தித் தம்மைச் சரணமென்றடைந்த
திங்களை அக்குறை தீர்த்தற்பொருட்டுத் தந்தலைக்கட்புனைந் தருளினாராதலின்,
தம்மையடைந்த அடியார்க்கடைந்த இடையூறெல்லாம் உடனகற்றி வேண்டியதருளும்
பேரருள் வள்ளல் என்பது உணர்த்தற்பொருட்டுத் திங்களணிந்த எனவும்,
மனுடராலன்றி அரிபிரமேந்திராதி தேவர் களாலும் பூசிக்கப்படுந்தலமென்பது
தோன்ற மறைசையெனவும், போகத்திரு மோக்ஷத்திரு என்னும் பெருந்திருவிரண்டையுந்
தன்னையடைந்தார்க் கீயவல்லதென மறைசையென்றொழியாது திருமறைசையென்றும்,
ஆணவமலத்தாற்றடையுண்டு தம்வலியிழந்து தத்தங்கருமப்படி பிராகிருதவுடம்பெடுத்து
ஓரோரிடம் பற்றியுழலும் பசுக்களாகிய பிரமா விட்டுணு முதலிய சித்துப்பொருள்களுள்
ஒன்றாகாமல் அவற்றிற்கெல்லாம் மேலாகிநின்ற அநாதிசுத்தப்பிரமமாகிய
சிவனென்பார் சிற்பரனெனவும், இந்நூல் உலகியற்பொருளை ஒரேவழிக்கூறினுஞ்
சிவ மகிமையே பிரதானமாகக் கூறுமென்பார் சிற்பரன்மேற்றங்குங் கலம்பகப்பாவெனவும்,
சிவன்புகழைஎடுத்தோதலேபெரும்பயனென்பார் சாற்றுதற்கெனவும், அரிபிரமாதிகளும்
விநாயகரருளாற்றம் வேட்கை பெறுவரென்பார் மங்குனிகர் மெய்யத்தியானனத்தான்
வேண்டு எனவும் பஞ்சவிடயப் பிடிகளைஅவாவி எழுகின்ற மனமாகிய மத்தவாரணத்தை
அருளங்குசத்தாற் றடுத்து அன்புப்பாசத்தாற் கட்டித் தன்வசப்படுத்துதற்கு அங்குசமும்
பாசமும் ஏந்தித் திவ்விய யானைவடிவோடு வெளிப்படுமென்பார் அங்குச பாசக்கை
யத்தியானனத்தான் எனவும், அவ்விநாயகர் காப்பின் இனிது முடித்தற்கு ஐயமில்லை
யென்பார் காப்பெனவுங் கூறினார்.

அவாய்நிலை.

ஆகவென்னும் பயனிலைபற்றி எவனென வினைமுதலை அவாவியவழி
அத்தியானனத்தான் எனவும், அவன் என்னவென விசேடணத்தை
அவாவியவழி மெய்யத்தியானனத்தான் வேண்டங்குசபாசக்கையெனவும்
எங்ஙனமாகவென ஆக்கவிசேடணத்தை அவாவியவழிக் காப்பெனவும்,
எதற்கென நிமித்தத்தை அவாவியவழிச் சாற்றுதற்கெனவும் எவனென வினைமுதலை
அவாவியவழி வருவிக்கப்பட்டு யானெனவும், எதையெனச் செயப்படுபொருளை
அவாவியவழிக் கலம்பகப்பாவெனவும், அஃதெற்றென விசேடணத்தை
அவாவியவழித் திங்க- தங்குமெனவும் அவாய்நிலைமுடிபு வந்தமை காண்க.

அலங்காரம்.

இதிற் பொருளியல்பை உள்ளவாறு சிறக்கக்கூறலிற் சுபாவோத்தி யலங்காரம்
மங்குனிகர்மெய் எனப்போந்த பொதுத்தன்மை தொக்க வண்ணப்பண்புவமை
யணியும், கருதுடையடைகள் புணர்ந்தமையாற் போந்த பரிகராலங்காரமும்
அதற்கங்கமாய் வருதலிற் சங்கீரணாலங்காரமாயிற்று.

பா.

இச்செய்யுள் ஒழுகிசைச் செப்பலோசைத்தாய் நான்கடித்தாய் அடியெதுகைத்
தொடைத்தாய் வந்த இருவிகற்பத் திராசிடை நேரிசைவெண்பா.

இவ்விருத்தி சிவ. சங்கரபண்டிதர் செய்தது

மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா.

திருமேவும் பாற்கடலிற் சிறந்துறையு மாதவனு
மருமேவும் புண்டரிக மலரிலுறை நான்முகனுங்
கந்தமலர்க் கற்பகஞ்சூழ் கவினுறுபொன் னகர்வாழு
மிந்திரனு மிமையவரு மேனையரு மேத்தெடுப்ப
வலங்கொள்கர மலரிடைப்பொன் மணிப்பிரம்பு தனையேந்தி
வலங்கொளுங்கோ புரவாயின் மருவுநந்தி பணிகேட்ப
வணங்குறுவிஞ் சையர்முனிவ ரளவில்கண நாதருளத
தணங்குடன் சூழ்ந்தஞ்சலிசெய் தார்கயிலை தனிலமர்ந்தோய்.

காரணநா ராயணபூ சிதகவுரி கணவவெங்கள்
காரணவென் றாரணங்கள் கடிமலர்கள் சொரிந்திறைஞ்ச
அரியமா வெனவிளங்கு மணிமுலையா ழைப்பழித்த
வரியமா மலைமடந்தை யணிகொளிடப் புறமேவ
வாசமெனக் குழவிமதி மருவுசடை முடியிலங்க
வாசமுறுங் கொன்றையந்தார் மார்பகத்தின் மிகத்தயங்கச்
சீரேறு மதிலுடுத்த திருமறைசைப் பெருங்கோயி
லேரேறு மரியணையி லிசையுடன்வீற் றிருந்தோய்கேள்

(இவை இரண்டும் எட்டடித்தரவுகள்.)

மண்ணமுத மனலனிலம் வான்மதியெல்லுயிராகி
யெண்ணமுதந் தனைவழிபட் டேத்துமெமக் கருள்கோநீ

கொண்டனிறத் தான்வேண்டக் கோலமுறு களத்தாலங்
கொண்டருளு நின்கருணை கூறலாந் தகைத்தாமோ

தேங்கமல மலரிலுறை திசைமுகனும் புகலருநின்
றேங்குபுகழ் சிற்றடியேன் செப்புவதற் கெளிதாமோ

ஆதியந்த மில்லாம லகண்டபரி பூரணமா
மாதியுனை நானறிந்தஞ் சலிபுரிவ தெவ்வணமோ

உலகுயிர்க ளனைத்தையுமுன் னுதவியளித் தொழிப்பதுநின்
னலகிறிரு விளையாட்டென் றாலுனக்குப் புகழாமோ

நாம்பிரம மென்றிகலு நான்முகனா ரணற்குநடு
வாம்பிரம நீயென்றா னின்பெருமைக் களவாமோ.

(இவையாறும் ஈரடித்தாழிசைகள்)

மறைசைக்கலம்பகம்

அரிபிர மரிவட லமரரி லசுரரி .................
லரிபடை யினிலுட லழிவில னெனெவள .........
வரிபதொர் வரமுள வவுணனை யடவய .........
வரிமிகு கயமுக வமலனை யருளினை ..........

அரியய னரிமுத லமரர்கண் முறையிட ...........
வரிகரி முகமுள வவுணர்க் ளொடுமலை ........
யரிமிசை மரமென வணுகசு ரனையட ..........
வரிவிழி தனிலறு முகவனை யருளினை ........

அரிமலர் மிர்கமத மளவிய வளகமு ............
மரிமொழி யெனமொழி யழகிய வதரமு ..........
மரியென வளரிள வணிமுலை களுமுடை ......
யரிகிளர் பரவையி லணுகிமுன் னருளினை .......

அரிதிரி மலையினி லடவியி லுளபல .............
வரிமரை யுழைமுத லளவில தசையினை .........
யரிபலர் கொடுதின மகமகிழ் வொடுசொரி .........
யரியதொல் லெயினன்மு னமுதுசெய் தருளினை ...

(இவைநான்கும் நான்கடி அராகங்கள்)

ஆதிசிவ வரகரவென் றரிபுலியஞ் சலிபுரிய ............
வாதியின்மன் றிடைநடன மாடியருள் புரிந்தனையால் ...

ஆலமணி விழியிரதி யருத்தியுடன் வேண்டவல.........
ராலமர்செய் தழிந்தவனை யன்பினொடு மளித்தனையால்..

தனஞ்சயனிற் றோன்றரிவை தனக்குரிய மணமகனாந்....
தனஞ்சயன்செய் தவமகிழ்ந்து சமம்புரிந்து முதவினையால்..

மணிகிளரும் பணியைவன மாதவர்க ளனுப்பமுன........
மணிகிளரும் பணியாக வயங்குபுயத் தணிந்தனையால்....

(இவை நான்கும் பெயர்த்தும் ஈரடித் தாழிசைகள்)

ஊனுட னுயிருமாய்த் தோன்றி நின்றுமவ் ............
வூனையு முயிரையு மொழிந்து நின்றனை ............

விருப்பொடு வெறுப்புமாய் விளங்கி நின்றுமவ் .......
விருப்பையும் வெறுப்பையும் விடுத்து நின்றனை .....

(இவை இரண்டும் நாற்சீரீரடி அம்பத்தரங்கம்)

எழிலுறு நவமணி யிலங்குமா முடியினை.......
யிழிவிலா துயர்ந்தநல் லிடபமாங் கொடியினை..
அழிவிலா முனிவர்க ளனுப்பிய துடியினை......
செழுமைகொள் கிங்கிணி சேர்ந்திடு மடியினை...

(இவைநான்கும் நாற்சீரோரடி அம்பத்தரங்கம்)

தினகர னகையை யுடைத்தனை......
திரையெறி நதியை யடைத்தனை.....
தனுவென மலையை யெடுத்தனை....
தடகரி யுரியை யுடுத்தனை..........
பரியென மறையை நடத்தினை......
பகைவரொ டமர்செய் திடத்தினை....
வரியுறு புலியை யுரித்தனை........
வளரிள நிலவு தரித்தனை..........

(இவை எட்டும் முச்சீரோரடி அம்பத்தரங்கம்)

மண்ணு.......நீ, விண்ணு......நீ
வாயு.........நீ, தேயு..........நீ
கண்ணு.......நீ, மணியு........நீ
கதிரு.........நீ, மதியு....... .நீ
வேத.........நீ, வேள்வி.......நீ
மெய்ம்மை....நீ, பொய்ம்மை....நீ
சோதி........நீ, யிருளு........நீ
துன்ப........நீ, யின்ப.........நீ

எனவாங்கு .. .. தனிச்சொல்

(இவைபதினாறும் இருசீரோரடி அம்பத்தரங்கம்)

வாசமார் நறைமலர் மகிழ்வோடு சொரிவிசு........
வாசமார்க் கண்டனல் வந்தனை புரிந்திடக்.........
காலனை யுதைத்த கதிரெழு முதய................
காலம்வாய் விள்ளுங் கமலநேர் பதத்தோய்.........
பாலனை யரிந்து பரிவுடன் சமைத்தன்.............
பாலருந் தென்று பணிந்திடு தொண்டனுக்..........
கெல்லை யில்வர மீந்தரு ளனந்த.................
வெல்லைநே ரணியொளி யிலங்குமார் பகத்தோய்...
காய்சரு கருந்தியுங் கானகம் வருந்தியுந்...........
தீயின்மே னின்றுஞ் செய்தவம் பயின்று............
மருமகம் புரிந்து மலைநதி திரிந்து.................
மருமலர் சொரிந்து வந்தனம் புரிந்து...............
மடைபய னதனிலுன் னைந்தக் கரத்தையு..........
மிடைவிடா தோதி யேத்துதல் பயனென...........
வுன்னிவந் தடைந்தே னுன்பதாம் புயங்கடந்........
தென்னைநீ காத்தரு ளெம்பெரு மானே............
(இஃது பதினான்கடி நிலமண்டில ஆசிரியச்சுரிதகம்)

மடக்கு-நேரிசை வெண்பா.

மானாக மான வளர்முலையார் மாலகற்றி
மானாக மானவனை வாழ்த்தகமே-மானாகர்
பத்திமறை நாடரிய பாதமருள் வான்மாடப்
பத்திமறை நாட்டார் பரன். (2)

கட்டளைக்கலித்துறை.

பரனேசங் காழிக்கை யாற்கரி யாய்பொன் பனிச்சதபத்
திரநேசங் கொண்டமர் வேதாரணிய செழுங் கனன்மான்
கரநேசங் கற்பச னைத்தீ விழியினிற் காய்ந்தவனே
யரனேசங் கத்திருந் தாயடி யேற்குன் னடிதுணையே. (3)

கலிநிலைத்துறை.

துணையாமெ னக்கஞ்ச நிகரான பொற்றா டுதிக்குங்கருத்
திணையாமல் வீழ்நாள்க ழித்தேனுன் னருள்பார்த்த திறக்கின்றன
னணையாரும் வளைமுத்த நிலவூர வாய்விள்ளு மலர்வாவிசூழ்
பணையார்ம றைக்காட நினையெண்ண லரிதோது டரிசாரவல்லார். (4)

அறிசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

வல்லானை முகத்தானை மயிலானைப் பயந்தானை வணங்கார் நெஞ்சிற்
செல்வானைப் பிறவானை யிறவானைத் திருமறைசை சேரெம் மானை
மல்லானை யிவர்வானை மலைமானை யிடத்தானை மணியார் மேரு
வில்லானைத் துதிப்பவரே விரவுபவக் கடல் கடக்கும் விதங்கண்டாரே (5)

நேரிசைவெண்பா.

கண்டல் வனஞ்சூழ் கழனிமறைக் காடாமா
கண்டனயன் காணரிய காளகண்டா-கண்டதுய
ராற்றூவதே நின்கடனா மையவடி யேனின்பொற்
காற்றுணையே போற்றல் கடன். (6)

எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

கடலின்மே லவனுங் கமலயோ னியியும்பொற் கரியமே னியனுநான் மறையு
மடல்கொண்மா தவரு மமரரும் பிறரு மடிதொழு மமலனூர் வினவிற்
றடமெலா நிறைத்துப் பூம்பொழி லுலாவுந் தண்ணதி திரைக்கரந் தன்னான்
மடல்கொள்பூங் கமலச் சங்கமா நிதியு மணிகளுஞ் சொரிமறை வனமே. (7)

புயவகுப்பு ஆசிரியவண்ணவிருத்தம்.

வனமருவு கின்ற நறைகொளர விந்த மகிழ்குரவு கொன்றை
      மலரணி நிறைந்து மணிமலை யெனவே வனப்புற் றிருந்தன
வரையிலொளி தங்கு கனகமலை துங்க வலியதனு வென்று
      மனதுடன் மகிழ்ந்து வயமுற வலியால் வளைத்துச் சிறந்தன
வயலரி வருந்தி மருளவுரி கொண்டு வதனமொடி சைந்த
      குழையொடுமி சைந்து வருமழ விடையே நடத்திப் பிறங்கின
வரிசையிலுயர்ந்து புவியினிலு றைந்த வழுதிநகர் வந்துவளை மணிக
      ளுந்து மலைதிரை வலியா றடைத்துச் செறிந்தன,

வனமருவு கின்ற கனகநிற வங்க வயன்வலமி வங்க வரியிடமி லங்க
      வகமிக மகிழ்வா யமைத்துக் கிளர்ந்தன
வமலைமலை மங்கை கவுரியரி தங்கை யமரர்தொழு நங்கை யசலநிகர்
      கொங்கை யடைசுவ டுறமே லணைத்துட்குழைந்தன
வகில்களப சந்த மிர்கமதசு கந்த வளறுகுடி கொண்டு புகழொ
      டுதி ரண்ட வழகுட னிணையா வடுத்துக் கமழ்ந்தன
வகிலமுறு வண்ட நிருதர்புகழ் கொண்ட வசுரர்களை வென்ற
      வருமுகிலை யன்றொ ரயில்பெறு கணையா யகைத்துப் பொலிந்தன

தனமருவு கின்ற சிறுவிதித டிந்து தபனனைமு னிந்து சதுர்முகனி
      லங்கு தலையினை யரிந்து சரமணி யொளிவீச விட்டுத் தயங்கின
தழலினிடை நின்று தவசுசெயு மிந்த்ர தனயனெதிர் சென்று
      சரமுதவ முன்பு தனுவுறு சயமாஞ் சமத்தைப் புரிந்தன
தரணியென வெங்கு மிகவொளிவி ளங்கு தனிமணிக டங்கு
      கணபணபு யங்க வணிபணி யெனவே தயங்கப் புனைந்தன
தறியதனில் வந்து கனகனைமு னிந்து சயமொடுந டந்து
      வருநர மடங்க றடவுர வினையே யடக்கிக் கடிந்தன,

கனமருவு கின்ற தவளமுறு தந்த கரடதட கும்ப கவளமது
      கொண்ட கரியத ளினையே யுரித்துக் கவின்றன
கமலமலர் கொண்ட பிரமனுல குண்ட கரிய முகில் கண்ட
      கடவுளர்து ளங்க வருகடு வினையே யடக்கிப் புரந்தன
கனிலிபர் சம்பொ னவிர் பொறிவி ளங்கு கலையிரும ருங்கு
      நிலவுறவு கந்து கவுணியர் முதலோர்கள் சொற்பெற்று யர்ந்தன
கயிலையில்வி ரும்பு கணவரர னந்தர் கருதரும கண்டர் காளமுறு
      கண்டர் கதிதரு மறைநாடர் சித்ரப் பயங்களே.

[மடக்கு-நேரிசை வெண்பா]

புயங்கநடங் கொண்டானைப் பொன்மறைக்காட்டானைப்
புயங்கப்பூ ணானையும்பல் பூண்ட - புயங்கொண்ட
சேராரே தப்படமுன் செற்றானை யேதுதிப்போர்
சேரார்சென் மக்கடல்க டேர். (9)

[தவம் - கலிநிலைத்துறை]

கடல்கள் படிந்துந் நதிகள்படிந்துங் கதிகாணா
தடவி யடைந்தும் புடவி நடந்தும் மலைவீர்காள்
லிடமுறு கண்டன் மறைசைய கண்டன் மின்னாகன்
குடநட னன்றே டடியிணை நெஞ்சங் கொள்வீரே (10)

[மடக்கு - கட்டளை மண்டலக்கலிப்பா]

கொழுத்த யன்றலை வான்றரு மாலையே
குலவு வண்னமும் வான்றரு மாலையே,
விழித்தெ ரித்ததும் வேழனத் தானையே
விசையி லுய்த்ததும் மிக்கநத் தானையே,
யழித்து ரித்ததும் வாரணந் தன்னையே
யகைத்த துந்திரு வாரணந் தன்னையே.
வழுத்து வாயினு மாமறைக் கானமே
வளருங் கண்ணுத லூர்மறைக் கானமே. (11)

[எழுசீர்க்கழி - ஆசிரியவிருத்தம்]

கான்மருக் குழலைக் கனிவுறு மகவைக்
      கனத்தினைத் தனத்தினைக் கருதும்,
பான்மையை யகற்றிப் பிறப்பினை யிறப்பைப்
      பணித்துவான் பரகதி பெறுவீர்,
நான்மறை யவனை மாயனைப் படைத்த
      நாதனை போதனை நயந்த,
மானுறு கரனைப் பரனைமா மறைசை
      வாசனை யீசனைத் தொழுமே. (12)

கலிவிருத்தம்

மேதினியி லுற்றபல் புறச்சமய மேவும்
பேதையி ரிறந்துபிற வாதவகை பேணின்
மாதவனு நான்முகனும் வாழ்த்துமறைக் காடன்
பாதமலர் சென்னியுறு பான்மைபணி வீரே. (13)

[இரங்கல்-நேரிசைவெண்பா.]

பணியைமறந் தப்பாற் பறக்குமோ பைங்கா
வணிதே னருந்திடவங் காமோ-வணையுமளி
பொற்கடுக்கை வாங்கியுண்ட புங்கமறைக் காடன்பாற்
பொற்கடுக்கை வாங்கப்போம் போது. (14)

[வண்டுவிடு தூது-கட்டளைக்கலித்துறை.]

தும்பிக்கு வாய்த்த துணைசெய் தருள்புரி தூயநிலாக்
கம்பிக்கு வாய்த்த கரோதரன் காணருங் கண்ணுதலா
னம்பிக்கு வாய்த்த மணிசேர் மறைசை யளிகுலங்காள்
வெம்பிக்கு வாய்த்த மொழியா டுயர்சொலு மேவினர்க்கே. (15)

[இரங்கல்-கலிநிலைத்துறை]

மேவித்தி ருக்கஞ்ச மேனந்து துயில்வேத வியனார்நகர்க்
காவிற்க லந்தன்பர் பிரியோமே னச்சொன்ன காலத்திலே
மாவிற்சு ரும்புண்டு மயிலுண்டு குயிலுண்டு மதியாமலே
பாவிக்க டங்காத விரகஞ்செய் தாரென்ன பரிதாபமே. (16)

[அம்மானை-மடக்கு-கலித்தாழிசை.]

மேலோர் புகழ்மறைசை மேவெம்பி ரான்வடிவம்
மாலார் கலையணிவின் மானாக மம்மானை
மாலார் கலையணிவின் மானாக மாமாகில்
மாலார்ந்து பண்டுவள மருவினதே னம்மானை
வனத்தினிடை மருவினதும் வான்கருணை யம்மானை. (17)

[கட்டளைக் கலித்துறை.]

மானக் கமலக்கண் மாதவ னான்முகன் வாழ்த்துகழ
லானக் கமலக்க ணீங்கிடப் பெய்யல ராவியுலாய்க்
கானக் கமலக்கண் ணான்றசெய் சேர்மறைக் காட்டிலுறை
வானக் கமலக்கண் ணிப்பெரு மானை வழுத்திடுமே. (18)

[அறுசீர்க்கழி-விருத்தம்.]

மேனம றைப்பதி கொண்டீரே மெய்யிலர் தம்மக மண்டீரே
வானலை தன்னை விளித்தீரே மரு மலர் மாலை யளித்தீரேற்
கானம ருங்குழ னோகாதே கனவு மரும்பகை யாகாதே
வானில வும்பகை செய்யாதே மாவுலகும் வசை வையாதே. (19)

[மடக்கு-கட்டளைக்கலித்துறை.]

வைக்கோலஞ் செய்தவ னைக்காய்ந் துமையை மணந்தவது
வைக்கோலஞ் செய்தவ மில்லேற்குங் காட்டுவை மாவயக்கோ
வைக்கோலஞ் செய்தவள் வேட்டாற் குதவு மறைசையபூ
வைக்கோலஞ் செய்தன் றிடந்தான் வழுத்திடும் வானவனே. (20)

[முகில்விடு தூது-வெண்பா.]
வானுலவு மங்குல்காள் வந்தனஞ்செய் தேனுமக்கு
நான்மறவே னீர்புரியு நன்றியினை-நான்மனங்கொ
டாமந் தனைமறைக்காட் டாற்குரைத்துத் தண்ணிதழித்
தாமந் தனைக்கொளுநீர் தாம். (21)

[மடக்கு-கட்டளைக்கலித்துறை.]

தானத் தரிக்கு மரிவனத் தார்கொ டவளவரித்
தானத் தரிக்கு மரிவண்ணத் தாற்குந் தலைபெறுவீர்
தானத் தரிக்கு மரிகொண்ட சூரற்குஞ் சத்திவிடுத்
தானத் தரிக்கு மரியா ரணபுரஞ் சாருமினே. (22)

[பதினான்கு சீர்க்கழி-விருத்தம்.]

மின்னுறும் பொன்மலைவில் வெள்ளிமலை யாசனம்
      மிக்கமறை புரவி புவிதேர்
மிகுசமய மாறுடன் பிறவுமுண் டாக்கியருண்
      மேன்மையுறு தேவி மனையாள்,
தென்னுறுங் கதிரிரவி திங்கள்செங் கனலிவிழி
      செம்மணிகொ ளுரகமாரந்
தெண்டிரையி னஞ்சோத னங்கயத் துரியாடை
      செங்கண்மா னெடிய வூர்தி,
பொன்னுறுங் கரடதட கயமுகன் முதலான
      பூதகணர் வாயி லாளர்
புண்டரீ காசனன் கொண்டல்வா கனன்முதல
      புத்தேளி ரேவல் புரிவார்
மன்னுறுஞ் சீவகண முழுதுமுன் னாணைவழி
      மரபினா னிற்ப தன்றோ
மறைசையெம் பதியில்வள ரெம்பெருமநின்பெருமை
      வல்லவர்க ளார்க ருதவே. (23)

எண்சீர்க்கழி விருத்தம்.

கருதிரு மதியானுந் திருமுடி மதியானுங் கரிமத லையினானும்
      விரிமத லையினானும்,
மருவிட மலையானுங் கருவிட மலையானும் மரவுரி யிடையானும்
      பூவரி யுடையானும்,
பொருமலை மானானும் வருகலை மானானும் பொன்னக மானானு
      மென்னக மானானும்
பருவரை வில்லானும் மொருவரை வில்லானும் பரிதி
      வனத்தானுஞ் சுருதி வனத்தானே. (24)

நேரிசைவெண்பா.

வனத்தா னையினுரியை வாங்கீசா வாச
வனத்தான் வழுத்து மறைக காடா - வனத்தாமை
யோடரவிக தம்புனையு முத்தமா மன்றதனி
லாடரவிந் தஞ்சேர்த் தருள். (25)

நேரிசையாசிரியப்பா.

அருள்புரி யாதியை யொருபரஞ் சோதியை
ஆரண நாதனைப் பூரண போதனை
இந்தணி சடையனைச் சுந்தர விடையனை
ஈறிகந் தானை யாறுகந் தானை
உமைமண வாளனை யெமையரு டாளனை
ஊழிநா யகனை மால சாயகனை
எந்தையா னவனை யந்திவா னவனை
ஏகமாஞ் சிவனைப் போகமா மவனை
ஐந்துமா முகத்தனைச் சந்தவா னகத்தனை
ஒருதிருக் கோடனைத் தருமறைக் காடனை
ஓதுவா யொர்தர நெஞ்சே...
ஔவிய வினையிரும் புக்கர மாமே. (26)

தவம் - கட்டளைக்கலித்துறை.

ஆமே யிகபர மென்றடி தேய வவனியெங்கு
நோமே யெனாம னடந்துலை வீர்தகு நும்முளத்தி
னாமே யெனுஞ்செருக் கற்றுயர் வேத நகரடைந்தாற்
போமே கலக விழிமய லாய்வரும் புன்பவமே. (27)

சித்து-கட்டளைக்கலிப்பா.

புன்ப வந்தொலைத் தாண்டரு ளீசர்வாழ்
      பொன்மலிந்த மறைநகர்ச் சித்தரே,
மின்பு றும்மணிக் கன்னல்வில் வாங்கிடு
      மேந்த லுக்கயம்பொற்சுக மாக்கினோம்,
வன்பு றும்மயிலூர்கந்த வேளுக்கு
      மருவத் தாரமுன் மாதங்க மாக்கினோ,
மன்பு றுங்கரி யோனுக்குந் தாரமபொன்
      னாககினோஞ் சித்தளவில வண்ணமே. (28)

கட்டளைக்கலித்துறை

வண்ணம் புயனிகர் வாசவ னான்மறை வாழ்த்துகடு
நண்ணம் புயங்க வணியுடை யான்மறை நாட்டகத்தி
லெண்ணம் புயன்றந்தை யாசன மல்கு விலங்கவனி
வண்ணம் புயமுக மாகுநாண் பாவணி யாயிழைக்கே (29)

சித்து-நேரிசைவெண்பா

ஆயிழையோர் பங்க னலைசூழ் மறைக்காடன்
றூயமலர்ப் பாதந் துதிப்போமான்-மாயமுறு
சித்தினலக் கஞ்சத்திற் செந்தாது சோத்திடுவோஞ்
சித்திநலஞ் சேர்க்குவமே நாம் (30)

இடைச்சியார்-அறுசீர்கழி-விருத்தம்.

நாவலர்கள் புகழ்மறைசை நகரினுறை பவரிமய நங்கைபாகர்
மேவலர்கள் புரமெரித்து விளங்குநகை யார்விமலர் வீதி மீதிற்
கோவலர்கள் குலத்தமுத நிறைகுடங்க டதும்பிடமோர் கூறுவோர்க்குப்
பூவலர்க ளணிகளம்போற் புண்டரிக மேற்குவளை பொறியார்வண்டே. (31)

சித்து-மடக்கு-கட்டளைக்கலித்துறை.

வண்டாருங் கைமலை மானிடத் தான்வய மாரனம்பூ
வண்டாரும் பொய்கை மறைசையிற் சித்தினெம் வாண்மணிகால்
வண்டாரு மத்தன் மருகற்குக் கஞ்சம்பொன் னாக்கிவைத்தோம்
வண்டாருந் துய்ய மலர்பா லமுதின் மனவிருப்பே. (32)

கட்டளைக்கலிப்பா.

மனம்வி ரும்பிய தீயநற் போத்தார் மால யற்குமெட் டாதபொற் பாதத்தார்
கனம்பொ ருந்தரி மாகுவ லயத்தார் காசி லங்கரி வாகுவ லயத்தா
ரினங்கொ ளும்மறைக் கானமின் னாரையே யெண்ணி நொந்
தென்னயலின்மின்னாரையேவனஞ்செறிந்துபுகுந்துமாலையே
வந்திலார்தந்தவரெற்குமாலையே ............... (33)

காலம்-அறுசீர்க்கழி-விருத்தம்

மாலைசெறிந்திடுமா*ணமாபுரவேதந்திக்கண்வாய்க்
காலுல்வும்பெருநாரைகள்காதலைநானுமக்கென்சொல்வேன்
சால்வுறுமுன்பனிபின்பனிசார்ந்திருவேனிலுஞ்சார்ந்தபின்
பால்வருகொண்டலும்வந்தநமபாதகர்கொண்டிலர்பாணியே. (34)

இரங்கல்-மடக்கு-தாழிசை

பாணி மானைப் பரிந்துகொண் டார்நறைப்
பாணி மானைப் பரிந்துகொள் ளார்மிகும்
பாச மாலை வழங்கினர் பொன்னிறப்
பாசமாலை பரிந்து வழங்கிலார்,
தோணி யோடலை யாலம டக்கினார்
தோணி நேர்விழி யாலம டக்கிலார்
தும்பி வாய்வந் தமுதம ளித்தவர்
துய்ய வாய்வந் தமுதம ளித்திலார்,
வேணி யாருங் கலையைநி றுத்தினர்
வீழுந் துய்ய கலையை நிறுத்திலார்
விண்டு வேணடப்பொன் னாழிகொ டுத்தவர்
வீழு கின்றபொன் னாழிகொ டுத்திலார்,
சேணு லாவுமா மையலை யாற்றினார்
சேரு மாதின்மா மையலை யாற்றிலார்
திகழும் வேத வனத்தர்செய்ந் நீதியைச்
செப்பின் மற்றெவர் கேட்கவல் லார்களே. (35)

இரங்கல்-மடக்கு-அறுசீர்க்கழி-விருத்தம்.

வல்லுர மறைநகர் நந்தனமே வாரள வின்றுறு நந்தனமே
யல்லிகொ ளம்புய நண்ணளியே யன்பர்த மக்கிலை நண்ணளியே
கலெனும் வெண்டுறை வெண்குருகே கைகளின் மேவில வெண்குருகே
யல்லுறு நிலவும் வழங்கரியே யகமகிழ் தன்மை வழங்கரியே. (36)

[மடக்கு-நேரிசைவெண்பா.]

வழங்குமே நற்சுகத்தை வாவியகத் தன்னம்
வழங்கு மறைநகரில் வாழ்வார்-வழங்குமறை
விண்படியும் வேத மிகுமெனவே வந்துபடி
விண்படியும் வேதநதி மேல். (37)

[கட்டளைக்கலித்துறை.]

நதியைக் கரந்தையைக் கொன்றையை நாகத்தை நல்லெருக்கை
மதியைக் கரந்த சடையான் மறைநகர் மாணிடையர்
ததியைக் கரந்தவ னீற்றினன் வேலினன் சங்கெனுமா
நிதியைக் கரந்தபொன் னாட்டின னானல்ல னீள்வரையே. (38)

[இரங்கல்-மடக்கு-பன்னிருசீர்க்கழி-விருத்தம்.]

வரைவின் மலர்ப்பூங் கோட்டகமே மரையா தவாவாங் கோட்டகமே
வண்டார் சீத விளங்காவே மனமே தெனவே விளங்காவே,
பெருகெண் கலைகல் லஞ்சுகமே பேசுமோரல் லஞ்சுகமே
பிரச மயிலுங் கேசரமே பிரச மலரெற கேசரமே,
மருவு மறைசைக் கண்ணலையே வழங்கென் விரகங் கண்ணலையே
மடங்கி மேலங் கிரங்கலையே மயல்கொண் டேற்கிங் கிரங்கலையே,
யருகின் மணிகள் சொரிவளையே யணைக்குங் கரமுஞ் சொரிவளையே
யழகார் புளின விடங்கரையே யழையீர் புவனி விடங்கரையே. (39)

[எழுசீர்க்கழி-விருத்தம்.]

விடங்கமார் மறைசை யீசனீ பொறையன் வேண்டுவார் கருதுதற் கெளிய,
னடைந்தநின் னருளும் விரைந்துவாய்த் திடுநின் னடியவர் தமக்கவர் பேறுந்,
தொடர்ந்த வேட்கையினின் மேற்படப் பெறுவா சொற்றிடின் முழுது நின்னுடைமை,
முடிந்தவித்திறத்தாற் பயன்குறித் தவர்க்கு மொழியினீ சரணெணத் தகுமே. (40)

[நேரிசைவெண்பா.]

மேவுமலை மானை விழைவோ டிடம் வைத்து
வாவுமலை மானைமுடி வைத்தவா-காவகமேல்
வந்துவழங் கும்மறைசை வானவா வாழ்த்தெனக்கு
வந்து வழங் குன்றாண் மலர். (41)

[கைக்கிளை-அறுசீர்க்கழி-விருத்தம்.]

மண்டுபுன லுண்டுவள ரும்பெரிய நந்தன வனஞ்செறியு மாமறைசையார்,
பண்டுகட லண்டுகர ளம்பரிவி னுண்டருள்செ யும்பரமர் பைம் பொனருவி,
விண்டின்மிசை கண்டதொரு கொம்பிலிரு கஞ்சமுகை விஞ்சுமிகு கெண்டையிருகோ,
தண்டமொரு தொண்டையொரு கொண்டலொளி தங்குமொரு சந்த்ரமதி மண்டலமுமே. (42)

[கட்டளைக்கலித்துறை.]

மண்டலம் போகமின் னாசையே னாதெனும் வான்செருக்கை
விண்டலம் போகமுன் னேருழுஞ் சங்கு மிகமுழங்குங்
கண்டலம் போகவ யன்மறைக் காடனைக் கம்பெனுமா
குண்டலம் போகசர்ப் பம்புனை கோன்றனைக் கூறுமினே. (43)

[காலம்-மடக்கு-எண்சீர்க்கழி-விருத்தம்.]

மின்னிமுகில் கறுத்தலரம் பெய்கின்ற காலம்
      வேனில்வேள் கறுத்தலரம் பெய்கின்ற காலம்
பொன்னிதழி லளியுறவம் பலர்மலருங் காலம்
      பூவையர்க டுன்புறவம் பலர்மலருங் காலந்
தென்மலயத் தென்றறெரு மரத்தியங்குங் காலந்
      தெரிவையர்தஞ் சிந்தைதெரு மரத்தியங்குங் கால
மன்னவயல் சூழ்மறைசை யத்தரணி நாட்டி
      லன்பர்பொருட் கேகியின்னு மணைதலிலாக் காலம். (44)

[கட்டளைக் கலித்துறை.]

காலாந் தகனல் வளமறைக் காடன் கதிரலவன்
மாலாந் தகன னெனுங்கணி னான்புர மாற்றலர்தம்
பாலாந் தகனஞ்செய் தான்புகழ் பன்னலை பைந்தொடியார்
மேலாந் தகனல மென்றுநெஞ் சேமயன் மேவினையே. (45)

[கார்-கலித்துறை.]

மேவித்து தித்தண்டர் சூழ்வேத வனநாதர் வெற்பிற்கருங்
காவிக்கண் மழைகொங்கை மலைமீது பொழிகின்ற
கார்காலமென்னாவிக்கு நிகரா யமர்ந்தா ரறிந்தின் றயர்ந்தார்கொலோ
வாவிப்பு றத்தன்ன மேயின்ன மேதிங்கு வாராததே. (46)

[களி-எண்சீர்க்கழி-விருத்தம்.]

தேனிருக்கு மலர்வாவி மறைக்காட் டீசன்
றிகழிமய மலைமாது சேர்ம கேசன்
கானிருக்கு மிதழிநதி மதியார் வேணிக்
கண்ணுதலைக் கண்ணுதல்செய் களியேன் கஞ்ச
மானிருக்கு மார்பனறி வீனஞ் சொல்வேன்
வளர்கஞ்சாப் பனையிருக்க வடமேற் சாய்ந்தான்
வானிருக்கு மதுவாழி யணைகொள் ளாமல்
வலியவிட தரவணையின் மகிழ்கொண் டானே. (47)

[இரங்கல்-மடக்கு-பன்னிருசீர்க்கழி-விருத்தம்.]

கொண்ட னேருங் கருங்கூந்தல்-கொண்ட நீல விழிவரைநேர்-
கொண்ட வார விளமுலையைக்-கொண்ட பூமின் கொண் டாடுங்,
கண்ட னாட வரியவன்மார்க்-கண்ட னாரா தனைபுரிதல்-
கண்ட போதங் கருள்புரிகார்க்-கண்டன் வாழு மறைக்காட்டை,
யண்டி நாறுங் களிக்கரையே-யழைப்பார் மகளிர் களிக்கரையே-
யலைவீ சிடமேல் வரும்வண்டே-யணியு மலரு மலர்வண்டே,
வண்டார் கமலத் திருந்தேனே-மலர்ப்பூம் பொழில்விட் டிருந்தேனே-
மணியா ரால முந்நீரே-மயக்கந் தீர முன்னீரே. (48)

[ஊசல்-எண்சீர்க்கழி-விருத்தம்.]

நீராருங் கடலாடைப் புவியின் மீதே
நிலையில்பவ வூசலா டுவதை மாற்றி
யேராரும் பலகையென் னகம தாக்கி
யெண்ணருநின் கருணையினைக் கயிறாப் பூட்டிப்
பேராருங் குழையசைய வாடீ ரூசல்
சீராருந் தேமாதோ டாடீ ரூசல்
றிருமறைக்காட் டீசரே யாடீ ரூசல். (49)

[நேரிசைவெண்பா.]

ஊசல் வடம்போ லொழிவின் றுடம்பெடுத்துப்
பாசத் தளைக்குட் படாமலே-பாசவரிக்
கைவல்லி யந்தந்தஞ் சேருமறைக் காடாவுன்
கைவல்லி யந்தந்து கா. (50)

[சம்பிரதம்-பன்னிருசீர்க்கழி-விருத்தம்.]

காரேறு நீருலவு பூவெடுத் திடுவன்மிகு
      கடிதட்ட மலைவீசுவன்
கங்குல்பக லாக்குவன் பகல்கங்கு லாக்குவன்
      கருதருண கிரணமணியார்,
சீரேறு மெண்ணாக முங்கொண்ட டைப்பனனி
      சித்ரகா யமுமறைப்பன்
செங்கதிர் வடக்கெழத் திங்களொரு தெற்கெழச்
      செய்வனிது வித்தையென்றால்,
வாரேறு கொங்கைமலை மங்கைபா தியனுலகம்
      வாய்த்தவுட லாழியானை
மலரிலுறை நான்முகனை வாசவனை மற்றுமுள
      மன்னுயிர் தமைப்புரந்தே,
பேரேறு வேதவன மீதாரு மெம்பிரான்
      பிண்டநஞ் சுண்டகண்டன்
பிறைகுலவு நறையிதழி பிரபைவிடு சடிலனருள்
      பேசிடுவ னிவ்வண்ணமே. (51)

[கட்டளைக்கலித்துறை.]

வண்ணஞ் செறிகுந்தி மைந்தருக் காக வயக்கழுவார்
வண்ணஞ் செறிவண் டறியாத கஞ்ச மலரனைந்து
வண்ணஞ் செறிமறைக் காடன் மலர்தரின் மால்புரியும்
வண்ணஞ் செறிமத னென்செய்கு வான்மினை வாங்கிவில்லே. (52)

[புலம்பல்-மடக்கு-பன்னிருசீர்-விருத்தம்.]

வாங்குங்கனல்கொள்செங்கையினான் மருவுந்தினமுஞ்செங்கையினான்
      வன்னிக்கோலத்திசையுடையான் வயங்குங்கோலத்திசையுடையா
னோங்கும் புரத்தை நேர்மலைந்தா னொளிர்செக் கரிந்து நேர்மலைந்தா
      னுமைமான் பிரியா துறைபதியா னுயர்மா மறைசை யுறைபதியான்
றேங்குஞ் சீரைக் கண்டேனே சிறந்த பாயற் கண்டேனே
      சேலு லாவு மறியலையே செப்பென் றுயர மறியலையே
தூங்கு நாரைக் குஞ்சினமே சொல்லென் னயலார்க் குஞ்சினமே
      தூது போமங் கிருந்தத்தையே சொல்லி வாரு மிருந்தத்தையே. (53)

[புன்னையொடுபுலம்பல்-கலிநிலைத்துறை.]

தத்தித் தரங்கங் கறங்காழி மறைநாடர் தனிவெற்பிலென்
புத்திக் கடங்கார் பிரிந்தார்கொல் வழையே புகுந்தென்றலால்
வத்தித்து நிழலாரு மிலையாயி னாயின்னு மயலேகிளைத்
தெத்திக்கு மலர்தேனு குத்தெய்தி னாயென்னோ டிணையாகவே. (54)

[தழை-கட்டளைக்கலிப்பா.]

வேனில் வேள்புரம் வெவவெ ரித்தெழின் மேவு
      மாமலை மங்கையை வேட்டருண்,
ஞான நாயகன் வாழ்மறை நன்னகர் நண்ணு நண்புடை
      யீர்நறுங் கற்பகக்,
கான மேவிய வொப்பறு நற்றழை காசி னிக்கடை
      நின்றுத ழைத்திடுந்,
தேனு லாந்தழை போற்கெட லின்றிதன் றேசி
      னேரிலை செப்பிடிற் சேணுமே. (55)

[கொற்றி-எண்சீர்-விருத்தம்.]

சேணாக முடனதியு மதியுங் கொண்ட திருமறைக்காட் டிறைவர்
      நகர் வருங் கொற்றீரே,
வாணாக முழுமதிய மீதிற் றோன்றும் வாணீல
      நஞ்சதனான் மயக்கா நின்றீர்,
பூணாகந் தனையுநஞ்ச நேராய்க் கஞ்சன்
      புரிந்தனனா கிற்கரம திக்குப் பூண்டோ,
ரூணாக விழைந்தவரென் றெண்ணா
      தோது முரைவீசி யெப்படியுள் ளுருக்கு வீரே. (56)

[மறம்- -விருத்தம்.]

வீரனா மெனவிருக்கும் வேந்தன் கீர்த்தி விளங்குதிரு
      முகங்கொணர்ந்த வெஞ்சொற்றூதா,
பாரையாண் முசுகுந்தன் போற்று மாதி பரமர்திரு
      மறைக்காடர் பதங்கண் மீது,
சேரமால் கொண்டிருக்கு மறவர்பெண்ணைச்
      சேரவந்த வரசர்களைச் செற்றே யோங்கு,
கோராமாஙே கழுமுள்வேண் முசலமாதி
      கோதண்ட மிருப்பதுநீ குறிக்கொன் னாயோ. (57)


[குறம்-அறுசீர்-விருத்தம்.]

குறை சொல்லு கின்ற குறத்திநான் குறைவின்று னக்கொரு கோடிதா
நறுநெய்யொ டன்னமுங் கொண்டுவா நாடிப்பார்த் துள்ளது சொல்லுவேன்,
மறிவென்ற கண்மட மங்கைநின் மாமுகத் திற்குறி நன்றுகாண்,
செறிதண்பொ ழின்மறைக் காடரைச் சேருவை நாளைநீ திண்ணமே. (58)

[மதங்கி-அறுசீர்-விருத்தம்.]

திண்ண னளித்திடுமூனைத் தின்றவ னுக்கரு ளீசர்
வண்ண மலர்ப்பொழில் சூழு மறைநகர் வாசரை யுள்ளத்
தெண்ணி மதங்கி நடித்தா லிதயம தங்கி யரக்கா
நண்ணிட விட்டனி ராயி னன்றிமி கும்பணி விடையே. (59)

[அதிசயம்-கட்டளைக்கலித்துறை.]

விடைகொண்ட சுந்தர மாமறைக் காடன் மிளிர்பவளச்
சடைகொண்ட வன்கிரி சாரன மேநூ தனமிதுகாணடை\
கொண்ட நின்கையி லஞ்சனந் தங்கிட நன்னயத்திற்
றொடைகொண்ட வென்னிரு கண்களுக் கேதனந் தோற்றியதே. (60)

[வலைச்சி-அறுசீர்-விருத்தம்.]

தோற்றமுடி வில்லாதார் சுந்தரமா மறைவநத்தர் துலங்கு நாட்டின்,
மாற்றல்விளைந் துங்கள்விழி வண்டொடிகல் கெண்டைபகர் வலைச்சியீரே,
யேற்றமுட னூன்விற்போ ரெண்ணிலரைக் கண்டுளமா லெழிலினோங்கு,
மூற்மிகு முமைப்போல வுண்டெனவாய் விண்டுரைக்க வுணர்கிலோமே. (61)

[கலிநிலைத்துறை]

உணர்வுக்கு மெட்டாத திருவேத வநநாத ரொளிவீசிடு
மணியுற்ற வரைமீது வருமாதர் மேலுள்ள மகிழ்வண்டுகா
ளணிபெற்ற வரவிந்த மேனீல மமாசோ றந்தாமனீ
ரிணையற்ற வவர் கூழை வளைவுற்று வீணாக வேன்வாடுவீர். (62)

[கட்டளைக்கலித்துறை.]

வாடிக் கடுக்கை மதியைப் பொறாள்வின் மதன்கணைக்குக்
கோடிக் கடுக்கை முலைமொழி யென்செய்வள் கோட்டகத்தின்
மாடிக் கடுக்கை மென் றான்றுள்ளி யோட மயினடிக்க
நாடிக் கடுக்கைசெம பொன்றூற்றும் வேத நகரிறையே. (63)

[பிச்சி-மடக்கு-கட்டளைக்கலிப்பா.]

நகர மேவுமறைவனப் பிச்சியார் நறைகொ ளுங்குழன்
      மோகனப் பிச்சியார்,
மகர மேவுமெய் வண்ணம்பொன் னாசையே மனத்தில்
      வண்ணமும் வாங்குபொன் னாசையே,
தகர மேவுந றுங்குய நாகமே தயங்கு காழணி
      யுங்குய நாகமே,
ககர மேவுமோ காரநன் கஞ்சமே கவின்
      செ றிந்தந டையுநன் கஞ்சமே. (64)

[கட்டளைக்கலித்துறை.]

கஞ்சன் றலைமண்டை யோடாமை யோடு களத்தணிந்தான்
மிஞ்சன் றலைவிட முண்டான் ணறைநகர் வெற்பினிற்கோ
வஞ்சன் றலைநல்கு மன்னமின் னேமயி லாடினகார்
மஞ்சன் றலைநிகர் நின்னோதி தன்னின் மகிழ்வுறவே. (65)

[புலம்பல்-அறுசீர்-விருத்தம்]

வேதம டைந்தனை நாதநி றைந்தனை மேல்வளை யுந்தினைவெம்
பாதம லிந்தனை பாயலை விண்டனை பாரில டங்கிலையா
னாதனை நம்பனை மாதொரு பங்கனை நான்மறை யம்பதிவா
ழாதிய கண்டனை நீயும்வி ரும்பினை யாகுமை யம்பரமே (66)

[நேரிசைவெண்பா.]

அம்பரத்தார் வேழவன வாரணநாட் டானமுத
வம்பரத்தான் மைந்த னடுத்தேவு-மம்பு
சருவாதை யோகத்திற் சார்ந்தான்றாட் கஞ்ச
மருவாதை யோநெஞ்ச வண்டு. (67)

[எழுசீர்-விருத்தம்]

வண்டுநறை யுண்டுறையு மம்பொன்மலர் கொண்டகில
      மாதவர்கள் வேதமுடனே,
யண்டரிறை கொண்டல்வண னம்புயன்வ ணங்கவர ன
      மருநகர் தன்னை வினவின்,
மண்டுபுனல் கொண்டதட மங்கையர் கருங்குழன்ம
      கிழ்ந்துமயி லாட வனசம்,
விண்டமல ரண்டிநறை வண்டுகளு
      றங்குவயன் மிக்கதிரு வேத வனமே. (68)

[கட்டளைக்கலித்துறை.]
வனத்தானை யானை யுரித்தானை வான மதிமுடிச்செவ்
வனத்தானை யானை வரைகொடு காத்த மலர்மகள்கேள்
வனத்தானை யானை முகன்றந்தை யானை மறைநகர்க்கோ
வனத்தானை யானை வழுத்துதல் வேண்டுமென் வாயிடையே. (69)

[கலிவிருத்தம்.]
இடைவிடாப் பிறவியெனு மிருங்கடலி னிடைப்பட்டுக்
கடியபிணி பசியுடனே காமமெனுந் திரைமோதக்
கொடுவினையி னழுந்துவனோ கொடிமாட்ங் கொளுமறைசை
யுடையவனே யடியேனுக் குயவருளுன் னடிமாட்டே. (70)

[கட்டளைக்கலித்துறை.]
மாடரங் கம்பள்ளி கொள்ளும்பி ரானயன் வான்றருப்பொன்
னாடரங் கங்கரி யோன்போற்று நாத னயந்தமருங்
கோடரங் கந்துயில் கொள்ளு மறைநகர்க் கோயிறொழா
வேடரங் கம்வியப் பின்றாகு மற்றது வீண்முடியே. (71)

[வஞ்சித்துறை.]
முடிவிலா துலகுயி
ரடையமுன் னருளுவான்
மடிவிலா மறைசைவா
ழடிகளா மாதியே. (72)

[எழுசீர் விருத்தம்.]
ஆதியா யகில முழுதுமீன் றெடுத்தாங் கருள்புரி யாதியா மங்கை
பாதியா யென்று பரவுவா ரன்றோ யாம்பணி பரமெனப் படுவா
ரோதியாய்ந் தியாக முஞற்றின ரேனு முலகினை வலஞ்செய்தா ரேனும்
வேதமா நகரைத் தொழாதவர்க் கேது மெய்ப்பொரு ளாகிய வீடே. (73)

[மேற்படி விருத்தம்]
வீடு சென்றிடும் வகைபுரிந் தாயிலை நெஞ்சமே விளங்குவெம் முலையார்
கூடு மின்பெனும் வலையிலே பூண்டுமால் கொண்டனை குழவிமா மதியோ
டாடு வெம்பணி யணிந்தரு ணித்தனை யத்தனை மறைவனத் தனைநீ
தேடு கின்றிலை துதிக்கிலை மதிக்கிலை சிந்தனஞ் செய்திலை யென்னோ.(74)

[வஞ்சிவிருத்தம்.]

என்னை யாட்லொளு மெம்பிரான்
புன்னை வாய்த்திடு பூம்பொழின்
மன்னு வேத வனம்புகிற்
புன்மை யாம்வினை போகுமே. (75)

[கட்டளைக்கலித்துறை.]

போங்கண் மால்விடப் பூமிசைத் துய்க்கிலென் பூம்பொழிலார்
நாகங்கண் மால்கொள் கயிலாசம் வாழிலெ னானடைந்தேன்
பூகங்கண் மாலள வோங்கா ரணபுரப் புங்கவனைப்
பாகங்கண் மாலய னாயிருப் பானைப் பரமனையே. (76)

[மடக்கு-எழுசீர்-விருத்தம்.]

பரமனைப் பரம பதத்தனைப் பதத்தைப் பரவிடு பரவைபாற் றூதாங்
குரவனைக் குரவம் புலியணி புலித்தோற் கோலனைக் கோலநீற் றானை
வரதனை வரசங் கரனைநற் கருணை வாரியை வாரிசூழ் மறைசை
யரவனை யரவ வாழியாற் காழி யளித்தண் ணளியனைத் தொழுமே. (77)

[அறுசீர்-விருத்தம்.]

தொழுமடி யார்மிடி துயரம கற்றுயர் சுந்தர சுந்தரிதன்
கொழுநபு ராதன வேதவ நேச குரங்கமி டங்கொளுவா
யழிவில நின்புக ழாயிரம் வாய்களை யம்புய னெய்தினனாய்
முழுவதும் வழுவற வெண்ணி மொழிந்திட முன்னினு முடிவிலதே.

[கலிநிலைத்துறை.]

முடிவில நிசிசரர் பொடிபட முறுவல்செய் முதன்மோனந்
தடைசெயு நினைவினி லவன்முன மடைதுயர் தானெண்ணா
தடியவ ருறைமறை நகர்மிசை யணுகின னஞ்சாதே
யிடர்வரு மெனமன துணர்கில னறைமல ரெய்வானே. (79)

[கட்டளைக்கலித்துறை.]

வானக மோவுயர் வையக மோசுரர் வாழ்கனக
மானக மோவடி யார்மன மோமணி வான்கயிலை
யாநக மோசதுர் வேதமி றைஞ்சி யமருமறைக்
கானக மோவிடந் தண்கா விடையினிற் கண்டவர்க்கே. (80)

[நேரிசையாசிரியப்பா.]

சண்டல்சுழ் பணைமறைக் காட்டினில் வாழு
மண்டர்நா யகனே யாதிநூல் சூழு
முயர்கா யத்திரிப் பொருளாய் விரிந்தனை
வயமால் வேண்டிட மகவருள் புரிந்தனை
கண்ணே டாயிரங் கமலமிட் டகந்தனை
நண்ணிட மாக்கிமா னயந்திட வுகந்தனை
பராவுமாற் காழிப் படையினை யீந்தனை
யீராமனாற் றாபித் தேத்திட வாய்ந்தனை
பூங்கணைக் கிழவன் புரமெரி படுத்தனை
தாங்கருங் கடுவிடந் தாங்கிமுன் விடுத்தனை
தருமரா சன்றனைத் தாளினி லுதைத்தனை
புரமொரு மூன்றும் பொடிபட வதைத்தனை
தக்கன் புரிமகந் தகர்த்தொளி தொகுத்தனை
மிக்கபார்த் தற்குநின் விறற்படை பகுத்தனை
நரசிங் கந்தனை நடுங்கிட முடித்தனை
பரசம் புலிபணி பார்த்திட நடித்தனை
மருவுறு குழலியாய் வந்தகார்க் கண்ணனை
மருவியன் றுதவினை வான்கடல் வண்ணனை
யான்றோ ரருச்சனை யன்புட னார்ந்தனை
யான்றவெண் சித்தியு மவர்க்கருள் கூர்ந்தனை
பத்துப் பிறப்பின்மால் பரவுற வுறைந்தனை
செத்தபல் பிரமர்தஞ் சிரங்களா னிறைந்தனை
யடலூறு சூர்க்கிளை யழித்தருள் சேயினை
யடிமுடி தேடரு மழற்பிழம் பாயினை
மெய்யடி யார்தொழு மேலிய பித்தனை
பொய்புகல் வியாதன் கைதம் பித்தனை
பிறப்பிறப் பாதியா முயிர்க்குண மொருவினை
சிறப்புறு பதிக்குணத் திறமெலா மருவினை
மாதவன் விடையாய் வகித்திடக் களித்தனை
யாதியின் வேதா கமங்களை யளித்தனை
போதமு முத்தியும் போற்றுவோர்க் கீகுவை
யாதலி னீயே யெவர்க்குமே லாகுவை
யென்னவித் திறமா நியாயத் தாற்றுணிந்
துன்னையே நம்பி யுயர்நீ றணிந்துன்
சரணமே தஞ்சமென் றடைந் தேன்
மரணவே தனையினை மாற்றினின் கடனே. (81)

[கட்டளைக்கலித்துறை.]

கடநாகத் தானயன் கண்ணிற் கரிய கதியடைவார்
தடநாகத் தார்தண் டலைமறைக் காடனைத் தண்டரள
வடநாகத் தார்சுந் தரியிடத் தானை மதியுடன்வார்
படநாகத் தாரணி யெம்பெரு மானைப் பணிபவரே. (82)

[அறுசீர்-விருத்தம்.]

பணிந்துலகம் பரசுமறை நகரிலுறை பரமர்பரி
      மளமென் சாந்த
மணிந்தமுலை யுமையிடத்த ரடியிணைக்கா
      ராதனைசெய் தன்பின் மிக்கோர்
துணிந்துளத்தெண் ணியவனைத்துந் துய்த்துலகிற்
      பவக்கடாவாழ் துயர மெல்லாந்
தணிந்தயன்மா தவன்றனக்கு மரியபர
      கதியடைந்து தழைப்ப ரன்றே. (83)

[கட்டளைக்கலித்துறை.]

அன்றத்தி யாரங் கடுவுண் டருள்செய் யரனயன்மால்
பொன்றத்தி யாரம் புயத்தான் கழைவழை பூங்கதலி
துன்றத்தி யாரஞ் செறிமறைக் காடன் றுணையடிமே
லென்றத்தி யாரந் தனநகை மாலிகந் தேறனெஞ்சே. (84)

[நேரிசைவெண்பா.]

நெஞ்சி லுனையா னினையா ததுபோதும்
வஞ்சியர்காண் மாலு மினிப்போதுங்-குஞ்சரமான்
காட்டா மரைபயிலுங் கான்மறைசை நாடாவுன்
றாட்டா மரைத்துணையைத் தா. (85)

[இரங்கல்-தாழிசை.]

தார மிஞ்சும் வேலையே-கோர மிஞ்சு மாலையே
      தார்நி றைந்த கண்டலே-நீர்மு கந்த கொண்டலே,
யூரு நந்தி னங்களே-தேரும் வந்த னங்களே
      யுப்ப மைந்த கானலே-வெப்ப மைந்த பானலே,
காரு றும்புன் னாகமே-வாரு றுஞ்சுன் னாகமே
      கஞ்ச வாவி மறைசையார்-வஞ்சநெஞ்சி லுறைசெயா,
ரார மார்பி லதனமு-மீர மாரும் வதனமு
      மந்தி வண்ண மேனியுஞ்-சிந்தை கொண்டு போனவே. (86)

[கட்டளைக்கலித்துறை.]

போனகங் கொண்டடி யார்புரி பூசையிற் புன்குறவன்
கானகங் கொண்டநல் லூனிட வுண்டருள் கண்டதுபோ
னானகங் கொண்ட நசையி னவின்றசொ னன்குகொள்வான்
வானகங் கொண்டமுத தொண்டர் வழுத்து மறைசையனே. (87)

[கைக்கிளை-மருட்பா]

மறையா விழியிமைக்கும் வாசமலர்ப் பாத
முறையுநிலம வாடுமல ரொண்டார்-குறையாத
திருமறைக் காட்டில்வாழ் சிற்பர மூர்த்திதன்
மருமலர்ச் சோலை மலையில்
வருமிவ ளணங்கல ளகவிட மானே. (88)

[எண்சீர்-விருத்தம்]

மானேறு மயலகற்றி மருவு மூல மலமதனைக்
      கடந்துமணிக் கயிலை மேவி,
வானேறு விபூதியணி தொண்ட ரோடே மருவியுன தடிமை
      செயுங்காலமென்றோ,
தேனேறு மலர்க்கண்ட லடவி சூழுந் திருமறைக்
      காட்டினிலமருந் செய்ய சோதீ,
யானேறுந் திருக்கொடியா யருளை யெண்ணி யனுதினமும்
      பாத்திருப்பே னடிய னேனே. (89)

[பாண்- எழுசீர்- விருத்தம்.]
அடிகண மகிழ்வுட னமரு மறைநக ரதனில்
      வருமொரு பாணனீ
படிகொ ணவமதின் மறுகி லரிவையா
      பரிவு கொளவிசை பாடவே
யிடியின் மிகுகுர லெவர்கொல் வினவுவ
      ரெனவுன் னிசையினை யிகழுவா,
ரிடையின் மிகுதன முடையா தமைவில
      கிறைவ ரிசையினை யிசைசெய்வாய். (90)

[மடக்கு- கட்டளைக்கலித்துறை.]

வாயா ரனந்தந் துதிசொலி வாழ்த்தி மணியுறுசே
வாயா ரனந்த சயநன் வகிக்க மகிழ்ந்தவதென்
வாயா ரனந்த வயக்கூற் றுறுமெல்லை வந்துதவு
வாயா ரனந்த வனமறைக் காட்டுறை வானவனே. (91)

[வேனில் கலிநிலைத்துறை.]

வானிற்க ணூர்செம்பொன் மதிவேணி முடியீசா மறைசைப்பதிக்
கானிற்க லந்தென்னை விட்டேகி னார்நெஞ்சு கன்னெஞ்சமோ
வேனிர்க ணுறுகால மிகுமெல்லை யிலதாக மேவுற்றதாற்
றேனிற்கு ளித்திந்த்ர வாசத்தி லுறைகின்ற சிறுகீதமே. (92)

[எழுசீர்-விருத்தம்.]

சிறுமை யெனும்வெயி னலிவை விலகிமெய் திகழ வருணமழை பொழியுமவா,
னறுமை யுறுசத தளனும வலவனு நணுகி யுறைமறை நகர் மின்னார்,
தறுக ணுறுகன விகட கடதட சமர கயமுலை முகபடாம
பிறியி னரரொடு சுரரு மிகலுவா பிரிய முறவமர் புரியவே. (93)

[வேற்றொலி வேண்டுறை.]

புரிவொடு மாலய னும்பணி யாரணா புரமீதில்
விரிவுறு கலையின் விரும்பினர் மேவிடம் வீசாதோ
மருவிள வேனிலின் மணம் பரப்பியென்
னருகுற வீசிவந் தணுகுந் தென்றலே. (94)

[கட்டளைக்கலித்துறை.]

தென்றலைக் கொண்ட * முனி மூவர்முன் செப்பிரசத்
துன்றலைக் கொண்ட சுருதிகட் கென்புன் றொடர்புறு சொல்
கன் றலைக் கொண்டபுன கத்தபக் கத்தாங் கமலமலர்
மன்ற லைக் கொண்ட வயன்மறைக் காட்டுறை வான்பதியே. (95)

[குறளடி-வஞ்சிப்பா.]

வான்பதியெலாம் வலம்வருதலிற், கான்புரிதவங் கையிடுதலிற,
பிறவறங்களிற் பெரிதிதுவென்ப, பிறைமுடிப்பிரான் மறைநதிக்கயற்,
பொழில்வளர்தருப் பூஞ்சினையிடை, யெழிலுறுகவி யின்முகண்டிட,
மரகதந்துகிர் மணிவகைபுரிந், தருள்கமுகுறும பருமடல்விழத,
தாழைக்கனி சலசலென்றுக, வாழைப்பழம் வார்ந்திநெறை,
தேங்கமழ்பலாத் தீங்கனிநறை, யோங்குமாம்பழத் துறைநறைநிறைந்,
தொன்றாயணைந் துயர்நதியுடன், சென்றுலாவிய செறுவடைந்திடு,
மங்கையர்செலும் வனம்படிந்திடப், பங்கயமலர்ப் பள்ளிகொளனஞ்,
செம்பொனிற்சிறைச் சேவலொடெழ, வம்பறாமலர் மலருமோடையி,
லுறங்குவால்வளை யுகந்துளமிகக், கறங்கிமேல்வரக் கலந்தயற்புற,
மயிற்குழாமன மகிழ்ந்தகவுறக், குயிற்குழாம்பொழிற் கூடொளித்திட,
முகிலெனப்பெரு முரசதிரவுற, வகமலர்வுட னரகரவென,
வணங்கியாரண மலர்சொரிந்திடக், கணங்கொளுமணிக் கவின்மறைநக,
ரரியணைமிசை யழகுறவமர்ந, தருள்புரி பரமேச் சுரனைப் பரமெனச்,
சரணா ரவிந்தஞ் சார்ந்தன மன்னோ. (96)

[அறுசீர்-விருத்தம்.]

மண்ணுல கதனிற் புன்மை வளர்வழி விலக்கி மேலா
நன்னெறி யதனி லுய்த்து ஞானமெய் யுணர்வு நல்கித்
தன்னடி யாரி னாயேன் றன்னையுந் தடுத்தாட் கொள்ளும்
பன்னரு மறைக்காட் டீசர் பாதபங் கயங்கள் போற்றி. (97)

[எழுசீர்-விருத்தம்.]

போற்றிசெய் தறியே னிருவினை யுடையேன்
      பொருந்துதொண் டெனுந்துறை குளிக்க,
வேற்றுதண் ணளியின் பாசந்தொட் டிழிந்தே
      இன்பமா முத்தியான் பெற்றேன்,
கீற்றுவெண் மதியோ டாலமுள் ளடக்கிக் கிளர்ந்தெழு
      நதிக்கதி பதியாய்த்,
தோற்றிய மறைக்கா னமர்மகோ ததியே
      துணையெனக் குனையன்றி யுண்டோ. (98)

[கட்டளைக்கலித்துறை.]

உண்டாலங் கொண்ட புலியை யுமிழ்ந்தன் றுறங்குதற்குப்
பண்டாலங் கொண்டவ னான்முகன் போற்றிப் பணிமறைசை
மண்டாலங் கொண்டருள் வானமணக் கோல மனமகிழக்
கண்டாலங் கொண்ட விழியார் மயல்வினை காணரிதே. (99)

[எழுசீர்-விருத்தம்]

அரிமுன்னாகிய கடவுளர் நாயக னகிலமா ருயிர்களீன் றருளந்
தரிதன் னாயகன் சதுர்மறை நாயகன் றண்பணை சூழ்ந்திடும் வேத
புரிகொ ணாயக னெமையரு ணாயகன் புகழினை மகிழ்வொடு வினவத்
தெரியு நாயக மாமெனக் கொண்டவர் சேருவர் சிறந்தவான் றிருவே.

பீதாம்பரப்புலவர் செய்த மறைசைக்கலம்பகம் முற்றிற்று.

திருச்சிற்றம்பலம்.
____________

Comments