Kalampakak kothu


பிரபந்த வகை நூல்கள்

Back

கலம்பகக் கொத்து
த. சந்திரசேகரன்



கலம்பகக் கொத்து
(பேரைக் கலம்பகம், திருமயிலாசலக் கலம்பகம்
மற்றும் ஞான விநோதன் கலம்பகம்)
த. சந்திரசேகரன் (தொகுப்பு)



கலம்பகக் கொத்து
(பேரைக் கலம்பகம், திருமயிலாசலக் கலம்பகம் மற்றும்
ஞான விநோதன் கலம்பகம்)

Source (நூல் விவரக் குறிப்பு):
Kalampakak Kothu - கலம்பகக் கொத்து
Edited by T. CHANDRASEKHARAN, M.A., L.T.,
Curator, Government Oriental Manuscripts Library, Madras
and the Staff of the Library
Published Under the Orders of the Govt. of Madras
1960
Price Rs. 2-50
Printed at the Rathnam Press
65, Tiruppalli Street, Madras-1.
Madras Government Oriental Manuscripts Series Nr. 68
----------------

    பொருளடக்கம்
    1. முன்னுரை (ஆங்கிலம்)
    2. முன்னுரை (தமிழ்)
    3. பேரைக் கலம்பகம்
    4. திருமயிலாசலக் கலம்பகம்
    5. ஞான விநோதன் கலம்பகம்
    6. செய்யுள் முதற்குறிப்பு அகராதி
    ------------

INTRODUCTION

The public are perhaps aware of the fact that the Government of Madras have launched upon a scheme of publication of rare manuscripts treasured in two premier institutions of this state, namely, the Madras Government Oriental Manuscripts Library, Madras and The Tanjore Maharaja Serfoji's Sarasvathi Mahal Library, Tanjore. Financial help has also been extended to Dr. U. V. Swaminatha Iyer Library, Adyar, Madras, for similar purpose. Though the publication of rare manuscripts was started by the Government of Madras as early as 1909, only 12 works were taken up for publication till 1942. Of these, the printing of 3 works has not yet been completed.

Only in the year 1949—50, a regular scheme for the publication of manuscripts was prepared and accepted by the Government of Madras under the MADRAS GOVERNMENT ORIENTAL SERIES. This scheme included the mauuscripts in all the South Indian Languages in which there are manuscripts in the Library. The selection of manuscripts was done by an Expert Committee appointed by the Government specially for this purpose. Till now 157 manuscripts in different languages have been printed. Of these, 35 manuscripts are from Tanjore Maharaja Serfoji's Sarasvathi Mahal Library, Tanjore and 2 from Dr. U.V. Swaminatha Iyer Library, Adyar. In addition, 3 manuscripts, two from this library and 1 from the Dr. U. V. Swaminatha Iyer Library, Adyar, are in the press.

While all the manuscripts under the Madras Government Oriental Series were edited by various scholars drawn from different learned institutions, the publication of manuscripts under the Madras GovernmentOriental Manuscripts Series was resumed in the year 1950–51. All the manuscripts published under this Series before 1942 were in Sanskrit. But from 1950–51, they included the manuscripts in other languages also. These are edited by the Curator with the assistance of the Pandits in respective languages. Till now 60 works have been printed including the total number of 51 since 1931.

Since 1958-59 however no fresh manuscripts were taken up for publication in both the Series. There were several proposals for the printing of manuscripts. Of these, the Government of Madras have now sanctioned the publication of the following 7 Tamil Manuscripts in G. O. No. 81859/-E6/59-15, Education, dated 5-1-1960 communicated in Proceedings RC. No. 138-K2/60 dated 27-1-1960 of the Director of Public Instruction, Madras.

I. GOVERNMENT ORIENTAL MANUSCRIPTSLIBRARY, MADRAS.
1. Tani.p.Pādalkal.
2. Kērala Dēśa Varalāṟu.
3. Yāpparuṅkala Virutti (with Kuṟippurai).
4. Kaṭṭabomman Varalāṟu.
5. Pal̤amol̤i-t-Tiraţţu.
6. Kalambaka-k-Kottu.
7. Uttara Rāmāyaṇa Nāţakam.

II. DR. U. V. SWAMINATHA IYER LIBRARY, ADYAR, MADRAS.
1. Manuvijñānēśvariyam.
2. Śuddhānanta Bharatam.

Of the 7 manuscripts from this library, Pal̤amol̤i-t-tiraţţu has been dropped as it was found to contain many archaic proverbs. The entire publicationhas been recommended for aid from the Government of India under the scheme for the Development of Modern Indian Languages. It is also hoped that the Government of India aid will be forthcoming in due course. Since the amount has to be reimbursed from the Government of India, it was ordered that the expenditure on the scheme should be incurred before 31-3-1960. Though the time actually available for getting the manuscripts printed is less than 2 months, the publication has been started in right earnest and every possible efforts are being made to complete the same before the stipulated time. There has, however, been one change in the scheme of publication as submitted by the Curator on account of the limited time available. Originally the above manuscripts were intended to be edited by outside scholars under the Madras Government Oriental Series but now they have been edited by the Curator himself with the assistance of the Tamil staff of the Library under the Madras Government Oriental Manuscripts Series.

On account of the great speed with which the press copies were prepared, edited and rushed through the press, a few mistakes might have crept in. It is hoped that the learned scholars who read the works will make necessary corrections, if any.

In this connection, I will be failing in my duty if I do not express my thanks to the Controller of Stationery and Printing, Madras, for scrutinizing the quotations of the private presses, for supplying the required paper for printing, for passing the printing bills from the presses in a very short time and for taking up the printing of the biggest of the six manuscripts in the Government Press itself.

In the ancient lore of Tamil Literature, it has been established: that there are ninety-six different divisions called “Prabandas," each unique in its respective technique. The ancient grammarian Tolkāppiyar has however not specifically indicated in his Tolkāppiyam about “Prabandam", but he has described a new set of literature as “Virundu” (விருந்து). The later exponents of Tolkāppiyam have explained that what he meant by "விருந்து" is the later acquisition of "Prabandas" in Tamil Literature It is also interesting to note that the usage of the word "விருந்து" directly denotes pleasant thoughts. The ninety six Prabandas abound in this sense of pleasing the senses.

Of these Prabandas, an important component is “Kalambakam". The later grammarians have amply described the nature of Kalambakam. It is always sung in praise of a God-head or an equally great being. It contains one hundred different stanzas approximately and is composed in all the different varieties of poetry, such as Venbā, Āśiriyam, Kalippā etc. It is invariably in the form of Antādi - the last word or letter of a piece following immediately thereafter in the subsequent piece. “Kalambakam" contains eighteen Aṅgas which are expounded in the Tamil Preface.

In the series of Kalambakam, some of the most famous pieces are “Tiruvaraṅga-k-kalambakam, Madurai-k-Kalambakam and Tiruvāmāttūr Kalambakam. Many have praised the beauteous form of those Kalambakams.
In the present book, three Kalambakams are published in one volume. They are “Pērai-k-kalambakam, Tirumayilāсala-k-kalambakam and Jñānavinodan Kalambakam."

1. PĒRAI-K-KALAMBAKAM

This series is sung in praise of the presiding deity at Tentiruppērai, a village in Tirunelveli district. It is one of the famous 108 Vişṇu Sthalams and has also been sungby Ā l̤vārs, the twelve pillars of Vaişṇava sect. The deityis known as Makara-Nedum-Ku l̤ai-k-kādar and therefore Pērai-k-kalambakam is also known as “ Ku l̤ai-k-kādar Kalambakam". Tentiruppērai happens to be one of the nine sacred places of pilgrimage near Tirukurukur, the birth place of the great Vaişṇava Saint Nammā l̤vār.

The author of this Kalambakam is unfortunately unknown, but it is presumed that the author is one Tirumēni Tiruvēṅkaţak-kavirāyar. From the songs, it is found that he is a great Tamil scholar and a Vaişṇavaite. He seems, naturally, to have aboundant love and regard towards the great saint Nammā l̤vār as seen from the very first poem in his praise.

The work was transcribed from Madurai Tamil Śangam manuscript in the year 1952-53 and is described in the Triennial Catalogue under number R. 3419. It is regrettable that a complete copy could not be had. Only fifty poems viz. 1 to 46 and 98 to 101 are available. However, the lyric is so full of pathos and devotion that it richly deserves to be widely read.

2. TIRUMAYILĀCALA-K-KALAMBAKAM

“Mayilam" very popularly known as a great Sri Subrahmanya Sthalam is situated in the South Arcot District. The great saint. Arunagirināthar, the author of "Tiruppuga l̤”, has sung in praise of Sri Subrahmanyasvāmi of Mayilam. It is a place of pilgrimage for a good number of devotees from all parts of the country. An Antādi "Tirumayilācala-t-tantādi" in praise of this Deity has been published by this library in Antādi-k-kottu, Part II. The present work describes the village of Mayilam, its presiding deity and his beauty.

The author is one Dandapāṇi Svāmigal also known as Tirunelveli Tiruppuga l̤ Svāmigal. From the work, it is observed that this piece was sung under the instructions of Sri Pa l̤aiya Svāmigal, brother of the popular Śivaprakaśa Svāmigal.

This piece contains one hundred songs, all of which are lucid, simple and full of interesting particulars regarding LordSubrahmaṇya. There is mention of one Poygaipākkam Vaidyanathan, who, it is presumed, was the scribe who wrote the piece. Nothing else of definite nature is heard of him.

This is described in the Triennial Catalogue of Tamil manuscripts, under No. R. 2812, palm leaf. This has been restored on paper under R. No. 5969. This was presented by Sri K. Shanmugam of Kumarakuppam, Valavanur post, S. A. District in the year 1951-52.

3. JNĀNA VINODAN KALAMBAKAM.

This is a piece containing one hundred songs sung in praise of one "Svarūpānandar” by his disciple named “Tattuvarāyar". The author has sung several other pieces about the greatness and other qualities of his Guru. He proclaims that his ultimate aim in his life is to be blessed by his Guru. This contains, as already said, 100 songs besides the first prayer song. There are four copies of this manuscript described under No. D. 1531 to 1534, all of which are on palm-leaf.

Srimans V. S. Krishnan, M. Pasupathi, and T. Krishnamurthi, Tamil Pandits of this library, were in charge of the preparation of the press copy of the three Kalamabakams and my thanks are due to them for helping me in editing the manuscript before giving it to the press. The Government of India have to be thanked for their kind grant to the Government of Madras for enabling the Government Oriental Manuscripts Library, Madras, to get printed these invaluable manuscripts.The Rathnam Press (Branch) also deserves my thanks for printing the manuscript neatly in a very short period of one month.

Madras-5,         T. CHANDRASEKHARAN,
1-3--60         Curator.
-------------------
கலம்பகக் கொத்து
முன்னுரை


    "இருந்தமிழே வுன்னா லிருந்தே இமையோர்
    விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன் " (தமிழ்விடுதூது)

இமையவருலகத்து அமுதினும் தமிழ் இனிமையுடையது. அமுதமுண்டார் சாவார் என்பது தொன்மொழி. அந்த அமுதமும் வேண்டேன் இனிய தமிழ்மொழி இருக்க, என்கிறார் ஒருபுலவர்.

இமிழ்கடல்வரைப்பில், இந்த அமிழ்தினுமினிய தமிழ் மொழி வழங்கும் பகுதியில் பல புலவர்களும், ஆன்றவிந்தடங்கிய சான்றோரும், முடியுடை யரசர்களும், குறுநில மன்னர்களும் வள்ளல்களும் பண்டுதொட்டே சிறந்து வாழ்ந்திருந்தனர்.

முடியாட்சியும் குடியாட்சியும் மேம்பட்டு விளங்கின. ஆளுவோர் மக்களின் தேவைகளை யறிந்து நடந்தனர். குடிமக்கள் கடமையுணர்ந்து கவலையற்று வாழ்ந்தனர். கல்வி பெருகியது. இறைவழிபாடு சிறந்தது. புலவர் பெருமக்கள் தங்கள் அறிவுத் திறனை அருந்தமிழ்ப் பாக்களால் வெளியிட்டனர்.

புலவர்கள் தங்களது புலமையினை நன்கு வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் அமைத்தான் ஒரு பாண்டிய அரசன். அங்குத் தமிழ்ப் புலவர்கள் கூடியிருந்து தமிழாராய்ந்தனர். ஒவ்வொரு புலவரும் தாம் தாம் செய்தபாடல்களையோ, நூல்களையோ இந்தச் சங்கத்தில் அரங்கேற்ற வேண்டும். இங்குக் கூடியிருக்கும் புலவர்களின் நன்மதிப்புப் பெற்ற நூலே சிறந்ததாகக் கருதப்பட்டது அக்காலத்தில். "சங்கத்தில் அரங்கேற்றப்பட்ட தமிழ் நூலே தகுதிவாய்ந்தது ; அல்லாதன பயனற்றன"என்ற எண்ணம் தமிழ் நாட்டில் வேரூன்றியிருந்தது. சங்கத்தமிழ் என்றாலே தனிச்சிறப்பு. ஒளவையாரியற்றிய நல்வழி என்ற நூலின் கடவுள் வாழ்த்தாகியமுதற்பாடலைப் பார்ப்போம் :

    பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
    நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலத்
    துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
    சங்கத் தமிழ்மூன்றுந் தா.

இப்பாடலில், தமிழ் நூலறிவை வளர்ப்பதற்கு விநாயகரை வேண்டுகின்றார் ஆசிரியை. நீ சங்கத் தமிழ் மூன்றுந் தருவாய், நான் பாலும் தேனும் பாகும் பருப்பும் ஆகிய இவை - நான்கையுங் கலந்து உனக்குத் தருகிறேன்"என்று விநாயகரை வேண்டுகின்றார் ஒளவையார். இதனைக் கைம்மாறு கருதும் உதவி என்றுகூடக் கூறலாம். இக்காலத்தும் ஆண்டவனை இம்முறையில் வேண்டிக்கொள்ளுவதைக் காணலாம்.

இப்பாடலில் நாம் எண்ணிப் பார்க்கவேண்டியது சங்கத்தமிழ் என்ற தொடரேயாகும். தமிழை மட்டும் தருமாறு வேண்டினாரில்லை ஒளவையார். சங்கத் தமிழ் என்று கூறுகின்றார். சங்கத்தாரால் ஆராயப்பட்ட தமிழ் என்பது இத் தொடரின்பொருள். ஆகவே, சங்கத்தமிழ் அதாவது சங்கத்தாரால் நன்கு ஆராய்ந்து தெளியப்பெற்ற தமிழ் நூல்களே அக்காலத்து மிகவும் மதிக்கப் பெற்றன என்பது நன்கு விளங்குகின்றது. இங்ஙனம் அறிஞர்களால் பாராட்டப்பெற்ற தமிழ்ச் சங்கத்தில் தமிழ்(மொழி) நூல்களை மூவகையாகப் பகுத்தனர். அவை, இயல் இசை நாடகம் என்பன. ஒளவையாரின் பாடலில் காணப்பெறும் "சங்கத்தமிழ் மூன்றும் "என்ற தொடர் இம் மூவகைப் பிரிவினையே உணர்த்த வந்ததாம்.

மேற்கூறப்பெற்ற இயல் இசை நாடகம் என்ற மூவகைப் பிரிவுகளையுங் கொண்ட நூல்கள் பல, பண்டைத் தமிழ்ப் புலவர்களால் ஆக்கப்பெற்றுச் சங்கமேறி வெளிவந்தன. அவற்றுள் இசை, நாடகம் என்பவைபற்றிய நூல்கள் பல, கடல்கோள் பட்டதாகக் கூறுவர்.

தற்பொழுது சங்க நூல்கள் எனப்படுவன, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்பனவாம். இவையெல்லாம் இயல் நூல்களாம்.

கி - பி இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நூலாகிய சிலப்பதிகாரத்தை இயல் இசை நாடகம் என்ற மூன்று வகையும்பொருந்தியது எனக் கூறுவர்.

இங்ஙனம், பண்டைப் புலவர் பெருமக்கள் நூல்கள்பல இயற்றித் தந்தனர். அவற்றுள், அக்காலத்திய நாகரிகநிலை, அரசாட்சி, மக்கள்நிலை, கல்வி முதலியன பற்றி விரிவாகக்கூறப்பெற்றுள்ளன. இயற்கைக் காட்சிகளையும் வாழ்க்கை நிலையையும் ஒப்பிட்டுப் பாடல்களில் பாடியுள்ளனர். பண்டைக் கால நிகழ்ச்சிகள் பலவற்றையும் படக்காட்சிகள் போலப் புலவர் பாடல்களிற் கண்டு களிக்கலாம். இவையெல்லாம் முற்காலச் செய்யுட்கள் என்ற வகையில் அடங்குவன.

வாழ்க்கையில் கவலையற்று வாழ்ந்த மக்கள், நாட்கள் செல்லச் செல்ல, மாறிவரும் காலத்திற்கேற்பத் தங்கள் அறிவை மேன்மேலும் பெருக்கினர். புலவர்கள் வேற்று மொழிகளைப் பயின்று, அவைகளிலுள்ள சிறந்த நூல்களைத் தழுவித் தமிழில் இயற்றினர். அங்ஙனம் வேற்றுமொழி நூல்களைத் தழுவி தமிழில் நூலியற்றும் பொழுது தமிழ்மொழியின் சிறப்பும், தமிழ்நாட்டின் பண்பாடும், முதல் நூல்களின் தரமும் சிறிதும் குன்றாதவகையில் இயற்றினர். கம்பராமாயணம், திருவிளையாடற்புராணம், வில்லிபுத்தூராழ்வார் பாரதம், கந்தபுராணம், பெருங்கதை முதலியன இங்ஙனம் வடமொழியிலுள்ள நூல்களைத் தழுவி இயற்றப்பெற்ற நூல்களில் சிறந்தனவாக எண்ணத்தக்கன. தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை முதலிய இலக்கண நூல்கள் வடமொழி நூல்களைத் தழுவிய நூல்களேயாம். இவை யனைத்தும் இடைக்கால நூல்கள் என்று கூறப் பெறும்.

தொடர்நிலைச் செய்யுட்கள், சிறுகாப்பியங்கள், சிறு பிரபந்தங்கள் முதலிய பலவகை நூல்கள் இடைக்காலத்தில் தோன்றின. கற்பனைச்சுவைகளை அமைத்துப் பாடல்களும் நூல்களும் மிகுதியாகப் பாடப்பெற்றன. ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற சமயகுரவர்களும் இவ் இடைக்காலத்திலேயே தோன்றி பத்திச்சுவை சொட்டச் சொட்டப் பாடல்களைப் பாடினர்.

இவ்வாறு இலக்கியச் சுவையுணர்விலும், சமய ஈடுபாட்டிலும் மக்கள் சிறந்து விளங்கினர். இத்துணைப் பெருமைகளுடன் பொருந்தியிருந்த இடைக்காலத்தைப் பொற்காலம் என்றே கூறலாம்.

பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், சிறுபிரபந்தங்கள் முதலியவை பாடப்பெறும் முறைகளுக்கு இலக்கணம் வகுத்தனர். சங்ககாலத்தில் இவ்வகைப்பட்ட நூல்கள் தோன்றவில்லையாதலின், இவற்றிற்கு இலக்கணம் கூறப் பெறவில்லை. ஆயினும், தொல்காப்பியம் என்ற தொன்மையான இலக்கண நூலில் விருந்து என்ற நூல்வகை ஒன்று கூறப்பெறுகின்றது.

"விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே"என்பது தொல்காப்பியம். இந்நூற்பாவுக்கு உரை வகுத்த பேராசிரியர் "புதுவது கிளந்த யாப்பின் மேற்றென்ற தென்னையெனின், புதிதாகத் தாம் வேண்டிய வாற்றாற் பலசெய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது ; அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க"என்று கூறியுள்ளார். இங்குக் கூறப்பெற்ற அந்தாதியினைப் பிற்கால இலக்கியங்களில் சிறுகாப்பியத்துள் அடக்குவர். எனவே, காப்பியங்கள், சிறுபிரபந்தங்கள் முதலியன " விருந்து”என்ற வகையைச் சார்ந்தன என ஒருவாறு உணரலாம்.

மேற் கூறப்பெற்ற சிறு பிரபந்தங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பகுத்துள்ளனர், சங்க காலத்துக்குப் பின்பு தோன்றிய இலக்கண நூலார். பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் முதலியனவற்றில் சிறு பிரபந்தங்களின் வகைகள், அவற்றிற்கு இலக்கணங்கள் ஆகியவை விரிவாகக் கூறப்பெற்றுள்ளன.

இவ்வாறு, தொண்ணூற்றாறு வகையாகப் பகுக்கப்பெற்ற பிரபந்தங்களில் கலம்பகம் என்பதும் ஒன்று. கலம்பகம் என்பது, வெண்பா, ஆசிரியப்பா முதலிய பலவகைப் பாக்களால் அந்தாதித் தொடையில் நூறு பாடல்கள் பாடப்பெறுவதாகும். தெய்வத்தைப்பற்றியே பெரும்பாலும் கலம்பகங்கள் பாடப் பெறும். திருவரங்கக் கலம்பகம், மதுரைக்கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக்கலம்பகம், அழகர்கலம்பகம்முதலியன இவ்வகையிலமைந்த சிறந்த கலம்பகங்களாம்.

கலம்பக உறுப்புக்கள் பதினெட்டெனக் கூறுவர். இப்பொழுது வெளியிடப்பெறும் கலம்பகங்களுள் ஒன்றான திருமயிலாசலக்கலம்பகத்துள், ஒரு பாடலில் பின் வருவன கலம்பக உறுப்புக்களாகக் கூறப்பெற்றுள்ளன. அவை,மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா, புயவகுப்பு, அம்மானை, மறம், களி, சித்து, ஊசல், தழை, ஊர், மருட்பா, சம்பிரதம், மதங்கு, இரங்கல், கட்டு, மடக்கு, குறம், பாண், கைக்கிளை, தூது, கழிக்கரைப் புலம்பல், காலம் என்பன. இன்னும் தமிழ்ப் புலவர் தம்தம் மனத்தில் தக்கன எனக்கருதும் துறைகளையும் அமைத்துப் பாடலாம் எனவும் அந்நூலில் கூறப்பெற்றுள்ளதோடு, "கலம்பக உறுப்புக்கள் பதினெட்டு என்று நூல்கள் கூறுதலும் உண்டு "எனவும் குறிக்கப் பெற்றுள்ளது. அப்பாடல்,

    மயங்கிசைக் கொச்சகக்கலிப்பாப் புயவகுப்பு அம்மானை
    மறங்களிசித் தூசல்தழை வாழுமூர் மருட்பா
    வயங்கெழிற்சம் பிரதமதங் கிரங்கல்கட்டு மடக்கு
    வண்குறம்பாண் கைக்கிளை பலவாறாய்த் தூது
    தயங்குகழிக் கரைப்புலம்பல் காலமுத லாகத்
    தமிழ்ப்புலவர்க் கருத்திலவர் தக்க துறை யெல்லாம்
    இயங்குகலம் பகத்தினுக்கா மானாலு மொருவா
    ரொம்ப தெனச்சிலநூ லியம்புதலு முளவே.
    (திருமயிலாசலக் : பாயிரம் - 4).

என்பதாகும்.
கலம்பகங்களில், அழகிய மணவாள தாசரால் பாடப்பெற்ற திருவரங்கக் கலம்பகம், குமரகுருபர சுவாமிகளால் பாடப்பெற்ற மதுரைக் கலம்பகம், திரு ஆமாத்தூர்க் கலம்பகம் ஆகிய இவை சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் மிகச் சிறந்தனவாக
அறிஞர்களால் பாராட்டப் பெறுவன.

இப்பொழுது வெளியிடப்பெறும் கலம்பகக்கொத்து என்னும் இத்தொகுதியினுள் மூன்று கலம்பகங்கள் அடங்கியுள்ளன. அவை : 1. பேரைக் கலம்பகம், 2. திருமயிலாசலக் கலம்பகம், 3. ஞான விநோதன் கலம்பகம் என்பன.

1. பேரைக் கலம்பகம்

இது, திருமால் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள திருத்தலங்கள் நூற்றெட்டினுள் பாண்டிய மண்டலத்தைச் சார்ந்த தென்திருப்பேரை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைப் பற்றிப் பாடப்பெற்றுள்ள கலம்பகமாகும். இத் தலத்தில் கோயில் கொண்டுள்ள பெருமானின் திருநாமம் " மகரநெடுங்குழைக்காதர் " என்பது. ஆதலின் இதனை, "தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கலம்பகம் "எனவும் வழங்குவர். இந்நூலாசிரியர் "குழைக்காதர் கலம்பகம்"என்றே இந்நூலுக்குப் பெயர் சூட்டியுள்ளார் எனத் தெரிகின்றது. "குழைக்காதர் கலம்பகம் என் றொருபேர் நாட்டி "என்று இந்நூலின் அவையடக்கச் செய்யுளில் வந்துள்ள தொடர் இதனைப் புலப்படுத்துகின்றது.

தென்திருப்பேரை என்னும் இத்தலம், திருநெல்வேலி மாவட்டத்தில் திருவாய்மொழி பாடிய ஆழ்வாராகிய நம்மாழ்வார் திருவவதரித்த திருக்குருகூரின் அருகே உள்ளது. திருக்குருகூரைச் சார்ந்த நவதிருப்பதிகள் என்று போற்றப்பெறும் ஒன்பது திவ்வியத் தலங்களில் இதுவும் ஒன்று. ஆழ்வார்களால் பாடப்பெற்ற பெருமை யுடையது இது. இத்தலத்து எம்பெருமானைப் பற்றி, குழைக்காதர் வண்ணம், குழைக்காதர் பாமாலை, மகரநெடுங் குழைக்காதர் ஊசல், தென் திருப்பேரை திருப்பணிமாலை முதலான சிறு பிரபந்தங்கள் தோன்றியுள்ளன.

இந்நூல், சொல் நயம், பொருள் நயங்களால் சிறந்து படிப்பவர் மனத்தில் பத்திச் சுவையை நிறைத்து உருக்கும் இயல்பு வாய்ந்துளது. ஓர் எடுத்துக் காட்டினைப் பார்ப்போம். "வாயினால் நாராயணன் பெயரை ஓதாவிடில் பயனேதுமில்லை; திருமாலின் புகழை யார் எடுத்துக்கூறினும் அதனைக் கேட்காத செவியிருந்து பயன் இல்லை ; அவன் திருமேனி யழகினைத் தணியாத காதலுடன் காணாத கண்ணினால் யாது பயன்? திருப்பாற்கடலில் ஆதிசேடன் மீது அறிதுயில் செய்பவரான தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயிலை வலம் வராத கால்களால் பயன் எதுவும் இல்லை "என்ற கருத்து ஒரு பாடலில் கூறப்பெற்றுளது.

    நாராய ணாவென வோதாமல் வீண்மொழிகள்
    நாவாலு மேதுபய னவர் புகழே
    யாராலு மோதிலவைகேளாத மூடர்செவி
    யானாலு மேதுபய னறிவிலிகாள்
    காரான சோதியழ காராத காதலொடு
    காணார்க ணாலுமொரு பயனுளதோ
    வாராழி மீதுதுயில் பேரேசர் கோயில்வலம்
    வாராத காலுமொரு பயனிலையே. (பேரைக். 21)

என்பதே அப்பாடல்.

இப்பாடல் பத்திச் சுவை நிறைந்து மனமுருக்கும் வகையில் அமைந்துள்ளது. இது,

    "செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே "
    "திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே"
    "நாராயணா வென்னா நாவென்ன நாவே"

என்று சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை " படர்க்கைப் பரவல் "என்ற தலைப்பில் வந்துள்ள செய்யுளடிகளையும்,

    கேசவனையே செவிகள் கேட்கத் திருவரங்கத்து
    ஈசனையே சென்னி யிறைஞ்சிடுக - நேசமுடன்
    கண்ணனையே காண்க இரு கண்ணிணர்கொள் காயாம்பூ
    வண்ணனையே வாழ்த்துகவென் வாய்

என்னும் திருவரங்கக் கலம்பகச் செய்யுளையும் நினைவுபடுத்துகின்றதன்றோ ?

இவ்வாறு பல பாடல்கள் உள்ளன இந்நூலில்.

இத்துணைச் சிறந்ததொரு நூலினை இயற்றி நமக்கு அளித்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை. திருமேனி திருவேங்கடக் கவிராயர் என்பவரால் இயற்றப் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இந் நூலாசிரியர் சிறந்த வைணவர் என்றும், வைணவ நூல்களிலும் தமிழ் நூல்கள் பலவற்றிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்பதும் இந்நூற்பாடல்களால் விளக்கமாகின்றன. நம்மாழ்வாரிடம் ஆழ்ந்த பத்தி கொண்ட வீர வைணவர் இவர் என்பது,

    "செவிதொறுங் கனிந்த செந்தேன் தெளிந்த சொற்றவறுண் டேனும்
    புவியுகந் தெடுத்த பேரைப் புகழ்க்கலம் பகத்தைக் காக்கப்
    பவவிலங் கறுத்த புள்ளின் பாகனைத் தொடர்ந்து பற்றிக்
    கவிமதம் பொழியும் ஞானப் பராங்குசர் காப்புத் தானே"

என்று நூலின் முதலில் வந்துள்ள காப்புச்செய்யுளால் புலப்படுகின்றது.

இந்நூலாசிரியரைப்பற்றி வேறொன்றும் அறியக்கூடவில்லை .

இந்நூலில் முதலில் 46 பாடல்களும், இறுதியில் 98 முதல் 101 ஆவது முடியவுள்ள பாடல்களுமே உள்ளன. இடையில் விடுபட்ட பாடல்கள் கிடைக்கப்பெறவில்லை.
இது, இந் நூல்நிலைய மூவருடக் காட்டலாக்கு 3419 ஆம் எண்கொண்ட காகிதக் கையெழுத்துப் பிரதியினை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப் பெறுகின்றது. இப்பிரதி 1951-52- ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வரவழைக்கப் பெற்ற ஓலைச்சுவடியினின்று இந் நூல்நிலையத்தில் பிரதி செய்து வைக்கப்-பட்டதாகும்.

2. திருமயிலாசலக் கலம்பகம்

இந்நூல், முருகப்பிரான் எழுந்தருளியுள்ள "திருமயிலாசலம்"என வழங்கும் திருமயிலம் என்னும் தலத்தைப் பற்றிய கலம்பகமாகும். இத்தலம், தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ளது. மயிலம், மயில்மலை எனப் புகழப்படுவது. இத்தலத்தில் மயில் வடிவமான மலைமீது முருகன் கோயில் கொண்டுள்ளார். இத்தலத்தைப்பற்றி, 'திருமயிலாசலத்தந்தாதி' என்ற பிரபந்தம் ஒன்று உளது. அது, இந் நூல்நிலையத்தாரால் "அந்தாதிக்கொத்து" என்னும் தொகுப்பு நூலின் இரண்டாம் பகுதியில் வெளியிடப்பெற்றுளது.

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தலத்தினைப் போற்றிப் பாடியுள்ளார்.

இந்நூல், சொற்சுவை பொருட்சுவைகளில் சிறந்ததாயும், படிப்போர் மனத்தைத் தன்வயப்படுத்தும் பான்மையதாகவும், பத்தி ரசம் கனிந்து விளங்கும் பெற்றியதாகவும் அமைந்துளது. இது, மதுரைக் கலம்பகம், திருவரங்கக் கலம்பகம் போன்ற நூல்களின் வரிசையில் வைத்தெண்ணப்பெறும் சிறப்புப் பெற்ற தொன்றாகும். பாடல்கள் எளிய இனிய நடையுடையன.

திருமுருகப்பிரானின் கருணைத்திறம், அவனது பெருமை, திருமேனி யழகு, பிரமனைச் சிறையிட்டது, சிவபெருமானுக்கு உபதேசித்தது முதலிய பல செய்திகளும் பாடல்களில் ஆங்காங்கே கூறப்பெற்றுள்ளன. பாராயணஞ் செய்யத் தகுந்த நூல்களில் இதனையும் ஒன்றாகக் கொள்ளலாம். இந்நூற் பாடல்கள் ஒன்றிரண்டினைக் காண்போம்.

தம் தம் சமயம் உயர்ந்ததெனப் பலவாறு வாதங்கள் புரிந்து வீண் காலம் போக்குமவர்கள் காண்பதற்கரிய மயிலாசலப்பெருமானின் மெய்ஞ்ஞானக் கடலில் மூழ்கித் திளைக்க விரும்பாமல், யான், மனம் நொந்து செய்வதறியாது புலம்பிக் கொண்டிருத்தல் தகுமா? என்று முருகக் கடவுளைப் பார்த்து முறையிடுகின்றார்.

    வாத நூற் பிணக்க காளர்கண் காணரு
    மயில் மால்வரை மாமுனி தன்னருட்
    போத வாரியின் மூழ்கிட நாடுவேன்
    புந்தி நொந்து புலம்பிட லாகுமோ
    வேத நான்முக கள்வனைக் குட்டிய
    வீறு கொண்டொளிர் மெய்ஞ்ஞான தேசிகா
    மாத மோர்திரு நாள் வருஞ் சீர்திகழ்
    மயில மால்வரை வாழ்முரு கையனே.(திருமயிலாசலக்: 6)

என்பதே அப்பாடல். இதனுள், முருகப் பிரானின் பெருமையை நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

'முருகக் கடவுளை நாடோறும் சிறந்த மலர்களைக்கொண்டு பூசிக்கும் அடியவர்களின் பாதங்களிலுள்ள துகளை என் தலையில் அணிந்துகொள்ளுகிறேன் ; அது வீண்போகுமா?' என்று வினவுகின்றார். பின் காணும் பாடலில் இக்கருத்தினைக் காணலாம்.

    சேயமா மலர்கொண் டுன்னைத்
    தினந்தின மருச்சித் தேத்தும்
    தூயவர் கமலப் பூந்தாள்
    துகளணி தலும் வீண் போமோ!
    மாயவன் மருகா விண்ணோர்
    மகள்புணர் கணவா வள்ளி
    நாயகா மயில வெற்பில்
    நடஞ்செயு முருக வேளே.(திருமயிலாசலக் : 8)

இப்பாடலில் முருகனை வழிபடும் அடியார்களது பெருமை நன்கு விளக்கப்படுகின்றது.

முருகப் பிரானின் திருவுருவச் சிறப்பினையும், அப்பெருமானை விட உயர்ந்த தேவர் எவருமிலர் என்பதனையும், மயில மாமலையின் சீர் சாற்றுதற்கரிது என்பதனையும் கீழ்க்காணும் பாடலில் கூறுகின்றார்.

    சேயமா முகங்க ளாறுடைக் குமர
    தேசிகன் திருக்கைவேற் பெருமான்
    தூயவெண் சேவற் கொடியணிந் தாடுஞ்
    சுப்பிர மணியனை யன்றி
    மாயவன் பிரமன் கணபதி முதலாம்
    வானவ ரிலையென வுணர்வார்
    தாயக மான மயிலமா மலைச்சீர்
    சாற்றிடத் தக்கவர் எவரே.(திருமயிலாசலக்: 16)

மயிலமலைக் குகனின் திருப்பாதங்களையே பற்றுக்கோடாகக் கொண்டு, அரிய தவமியற்றி வாழும் பெரியோர்களை அடைக்கலமாக அடைந்தவர்கள், சத்தியமும், இனிமையும், நயமும் பொருந்திய தமிழ், சிவன் திருமால் பிரமன் இந்திரன் இவர்களை யொத்த திறமை, இன்பம் நிறைந்த சமரசமாகிய முத்தி இவற்றைப் பெறுவார்கள் என்று பின்காணும் பாடலில் கூறப் பெற்றுளது.

    "எவர்க ளும்புகழு மயிலம லைக்குக
    னென்மொ ழிந்தவன் திருச்சரணத்திடை
    தவமுயன் றுரையு மனமுள வித்தகர்
    தமையடைந் தவர்கள் பெறுவன செப்பிடில்
    அவனி யெங்குநிறை தருபுகழ் சத்திய
    மதிவி தங்குலவு மதுரந யத்தமிழ்
    சிவமு குந்தனயன் மகபதி யொப்பவர்
    திறமை யின்பமலி சமரச முத்தியே.(திருமயிலாசலக் : 17)

இவ்வண்ணம் மனத்தைக் கரையச் செய்யும் பாடல்கள் பல காண்கின்றன இந்நூலில். இதனுள் பாயிரமுட்பட 109 பாடல்களும், நூல் முடிந்தபின்பு நூற்பயன் முதலான மூன்று பாடல்களு முள்ளன. இந்நூலில் பாயிரம் என்ற தலைப்பில் உள்ள 4 பாடல்களைச் சேர்த்து மொத்தம் 104 பாடல்களளுள்ளன. ஏட்டின் இறுதியில் நூற்பயன் முதலியவற்றைக் குறிக்கும் 3 பாடல்களுள்ளன.

இந்நூலை இயற்றிய ஆசிரியர் திருப்புகழ் சுவாமிகள் எனப்படும் தண்டபாணி சுவாமிகள் என்னும் பெயரினர் என்று தெரிகின்றது. இந்நூற் பிரதியின் முதலேட்டில் "திருநெல்வேலியில் எழுந்தருளியிருக்கும் திருப்புகழ்ச் சுவாமிகள் இயற்றிய திருமயிலாசலக் கலம்பகம்"என்ற தொடரென்று காணப்படுகின்றது.

இவர், சிவப்பிரகாச சுவாமிகளது சோதரராகிய பாலைய சுவாமிகள் என்பவரின் வேண்டுகோட் கிணங்க இந்நூலை இயற்றியதாகப் பின்காணுஞ் செய்யுளால் விளங்குகின்றது.

    அன்றுசிவப் பிரகாச னரியதுதி தனக்கெய்தச்
    சென்றுபகர்ந் தமைநாடிச் சிவஞான பாலையன்
    குன்றுளுயர் மயிலமலைக் குமரனுக்குக் கலம்பகமொன்
    நின்றுசொலத் திருப்புகழோ னிடத்திலிது இசைத்தானே.
    (பாயிரம் : முதற் பாடல்)

இவர் கௌமார மதத்தைச் சார்ந்தவர் என்பது, இந்நூலின் 100-ஆவது பாடலில் வந்துள்ள 'பத்திநெறிக் கவுமாரர் பண்பு வாழி"என்ற தொடரால் விளங்குகின்றது. இவர் முருகப் பிரானிடத்தில் எல்லையில்லாப் பத்தி பூண்டவர். தமக்குப் பல வகையில் முருகனருள் கிட்டியதை இந்நூலுள் பல்வேறிடங்களில் கூறியுள்ளார்.

இந்நூலைக் கற்றவர்கள் அடையும் பயனைப் பின்வரும் பாடல் தெரிவிக்கின்றது.

    மயிலமலைக் கோயிலுக்குள் வாழ்முருக வேளுக்
    கயலதனைப் போற்றுமவ னன்பாற்—பயிலுங்
    கலம்பகத்தைக் கற்குமவர் கல்வியறி வென்னும்
    நலம்பகம்பெற்றுய்யு நரர். (நூற்பயன் : பக். 51)

பிரமாதியாண்டு, ஆவணித் திங்கள் 17-ஆம் தேதி திங்கட்கிழமை திருவோண நட்சத்திரம் சில நாழிகையிருந்து பின்பு அவிட்டம் வந்த நாளில் இந்நூல் எழுதப்பெற்றதாகப் பின்வரும் பாடல் உணர்த்துகின்றது.

    'பிரமாதி யாண்டதனிற் பேசுமதி சிங்கம்
    வருபாநு விற்றெய்தி வளர்பத்தேழ்—திருவளரும்
    வோணம திற்பிறக்கு மோங்கவிட்ட மிந்நாள்
    காணவெழு துந்தினமே காண். (பக். 52)

வளர் பத்தேழ் என்பதற்கு வளர்பிறை, அதாவது பூருவ பட்சம் பத்தாம் நாளாகிய தசமி என்னும் திதி, ஏழாம் தேதி எனவும் பொருள் கொள்ளலாம் எனத் தோன்றுகின்றது. பிரமாதி யாண்டென்பதால் இற்றைக்குச் சுமார் நூறு ஆண்டுகளுக்குள் இந்நூல் இயற்றப்பட்டிருக்கலாமென்று தெரிகின்றது.

"பொய்கைப்பாக்கம் வைத்தியநாதன் எழுதிய திருமயிலாசலக்கலம்பகம் எழுதி முடிந்தது முற்றும் "என்றொரு தொடர் இறுதியேட்டிற் காணப்பெறுகின்றது. வைத்தியநாதன் என்பவர் இவ்வேடு எழுதியவரா யிருக்கலாம்.

இது, இந்நூல்நிலைய மூவருடக் காட்டலாக்கு 2812 ஆம் எண்ணில் விவரணஞ் செய்யப்பெற்றுள்ள பனையோலைப் பிரதியினை ஆதாரமாகக் கொண்டு வெளிவருகின்றது. இது, 1951-52- ஆம் ஆண்டில் குமாரக்குப்பம் ஸ்ரீ R. சண்முகம் என்பவரால் இந் நூல்நிலையத்துக்கு நன்கொடையாக அளிக்கப்பெற்றதாகும்.

3. ஞான விநோதன் கலம்பகம்

இது, சொரூபானந்த சுவாமிகள் என்னும் பெரியாரைப் பற்றிப் பாடப்பெற்றுள்ளதொரு கலம்பகமாகும். சொரூபானந்தர் கலித்துறை, அந்தாதி, சொரூபானந்த உபநிடதம் முதலிய பல நூல்கள் இப்பெரியாரைப்பற்றிப் பாடப்பெற்றுள்ளன. பிறவி யெடுத்ததன் பயன் சொரூபானந்தரின் தாள்களில் பணிந்து ஞானம் பெறுதலே எனவும், இவ்வுலகிலுள்ள மற்றச் செல்வங்கள் நிலையற்றன், சொரூபானந்தர் திருவடிகளைப் பற்றுதலே நிலையான இன்பந்தரும் என்றும் விளக்கமாக இந்நூலில் கூறப்பெற்றுளது.

மனம், சொரூபானந்தரின் அடியார்பாலே செல்லும் ; சொரூபானந்தரின் சிறந்த பாதங்களில்ன்றித் தலை வணங்காது; என்னை ஆட்கொண்ட சொரூபானந்தனையன்றி என் வாய் வேறொருவரையும் பற்றிப் பேசாது என்று இந்நூலாசிரியர் கூறுகிறார். பின்வரும் பாடலில் இக்கருத் தமைந்திருப்பதைக் காணலாம்.

வேண்டா தேநெஞ்ச மடியா ருடனன்றி மேவத்
தீண்டாது சென்னி யுறைசே வடியன்றி யென்னாத்
தூண்டா விலங்குசொருபானந்தச் சோதி யென்னை
யாண்டா னையன்றி யுரையாட வறிந்தி ராதே.
(பக். 61 ; பாடல் 31)

இல்வுலகில், படித்தவர்களும், சிறந்த கருத்துக்கொண்ட பெரியோர்களும், நினைத்தனவெல்லாம் பெற்றவர்களும், பெருமையுடைய நல்ல தவத்தைச் செய்தவர்களும், ஞானிகளும், எல்லா நன்மைகளையு மடைந்தவர்களும் ஆகிய எல்லோரும் எம் சொரூபானந்தர்க்கு அடிமைத் தொழில் செய்பவரே என்று இந்நூற் பாடலொன்று கூறுகின்றது.

    கற்றவர்க ளாவாருங் கருத்துடையா ராவாருங் கருதிற் றெல்லாம்
    பெற்றவர்க ளாவாரும் பிறந்தவர்க ளாவாரும் பீடு சேர்ந்த
    நற்றவர்க ளாவாரும் ஞானிகடாமாவாரும் நன்மை யெல்லாந்
    துற்றவர்க ளாவாருஞ் சொரூபானந் தர்க்கடிமைத் தொழில்செய் வாரே
    (ஞான, பா. 60)

இவ்வுலகில், "புண்ணிய நீரில் நீராடுவதும், அரிய தவமியற்றலும், அருச்சனை செய்தலும் ஆகிய இவையெல்லாம் செய்வதனால் ஏற்படும் பலனை எமது சொரூபானந்தரின் அருள் மொழிகளைக் கேட்டலினாலேயே பெறலாம் ; இதனை மனத்தில் கொள்ளுவாயாக"என்று பின்வரும் பாடலில் கூறப்பெற்றுளது.

    தீர்த்த மாவதுஞ் செய்தவ மாவது
    மார்த்த மாவது மருச்சனை யாவதுஞ்
    சேர்த்த மாவது மென்சொரூபானந்தன்
    வார்த்தை கேட்கை மதியே மதிக்கொளே.(ஞான. பக். 68)

இவ்வாறு சிறந்த நல்லுபதேசங்களைக் கொண்ட பாடல்கள் பலவற்றை இந்நூலிற் காணலாம்.

இந்நூற் பாடல்களனைத்தும் எளிய இனிய நடையுடையன. கடவுள் வாழ்த்து நீங்கலாக நூறு பாடல்களுள்ளன இந்நூலில்.

இந் நூலாசிரியர் பெயர் தத்துவராயர் என்பது. தத்துவ தேசிக நாயனார் எனவும் இவரைக் குறிப்படுவது உண்டு. சொரூபானந்தரின் சீடர் இவர் எனத் தெரிகின்றது. சொரூபானந்தரைப்பற்றி இவ்வாசிரியர் பல நூல்கள் இயற்றியுள்ளார்.

இப்பொழுது வெளியிடப்பெறும் மூன்று கலம்பகங்களிலும், பாடல்களின் தலைப்பில் அவ்வவற்றுக்குரிய உறுப்புக்களின் பெயர்கள் கொடுக்கப்பெறவில்லை. இவற்றின் மூலப் பிரதிகளில் சில பாடல்களின் தலைப்பில் உறுப்புக்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன ; பெரும்பாலானவற்றில் இல்லை. ஆதலின், ஒருதன்மையனவாய் இருத்தல் வேண்டி எந்தப் பாடலுக்கும் அதன் தலைப்பில் உறுப்பின் பெயரைக் குறிக்காமல் பதிப்பித்துள்ளேன்.
சென்னை,
2-3- 1960. தி. சந்திரசேகரன்.
----------------------


ஸ்ரீ:

1. பேரைக் கலம்பகம்

>
காப்பு : விருத்தம்

செவிதொறுங் கனிந்த செந்தேன் றெளிந்தசொற் றவறுண் டேனும்
புவியுகந் தெடுத்த பேரைப் புகழ்க்கலம் பகத்தைக் காக்கப்
பவவிலங் கறுத்த புள்ளின் பாகனைத் தொடர்ந்து பற்றிக்
கவிமதம் பொழியும் ஞானப் பராங்குசக் களிறு தானே.

அவையடக்கம்

மழைக்காவல் புரந்துலகந் தழைப்ப நீதி
        மன்னவர்செங் கோலளிப்ப மறைநூல் வாழக்
குழைக்காதர் கலம்பகமென் றொருபேர் நாட்டிக்
        கொழித்ததமிழ் சுழித்தெடுத்துக் கூறும் பாட
லுழைக்காவலடிதொடைசீர் தளைமா றாட
        லொருபொருட்கு மொவ்வாத தெனினு மின்சொற்
பிழைக்காக யிகழ்வரோ பெரியோர் ஞானப்
        பெருமான்றன் றிருநாமம் பெற்றக் காலே.

நூல்
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.

பூமாது நலம்பெருக்கப் புவிமாது வளஞ்சுரப்பத்
தேமாலை புனைந்தேத்தித் தேவர்களுந் தலைகுனிப்ப
நீதியரும் பியகருணை நிறைபுனலா நூற்றெட்டு
வேதியருந் திருப்பேரை வியனகருந் தழைத்தோங்கக்
கவிச்செல்வ மூதரியின் கனிந்துருகும் பழம்புலவர்
செவிச்செல்வந் தவறாது செந்தமிழின் றேனிரைப்ப
வரிவளைக்கை யரம்பையர்கள் மலர்க்கவரி யெடுத்தியக்கத்
தருமலர்ப்பூந் தாதருந்தித் தமிழ்த்தென்ற லடிவருட
வெளியகத்தே னென்றுயர்ந்த வீங்குமணித் தூணிரையி
னொளிகெழுமி யிருடுடைத்த வோலக்க மண்டபத்துட்
காசினத்த கோளரிகை கழுத்துளுக்கச் சுமந்தேந்து
மாசனத்துக் கடவுளருக் கரசெனவீற்றிருந்தனையே.

இஃது ஆறடித் தரவு.

கோதுபிடி தரித்தமுதங் கொடுத்துநீ யளைகவர்ந்து
சூதுபிடித் தடிச்சுவடு தொடர்ந்து பிடித் தசோதையெனு
மாதுபிடித் தடிக்கவுடன் மண்ணையுண்ட வாய்மலர்ந்து
காதுபிடித் தழுதுமவர்க் கைப்பிடிக்க நின்றனையே!

பெருவிருந்தா யொருவரிடைப் பிறந்துவளர்ந்(தே) திரப்படுமுன்
னருகிருந்த மதலையைமற் றவுணனழித் திடுமன்றோ
திருவுளந்தான் விரைவிரைந்து சிறுபொழுது மவர்வயிற்றிற்
கருவிருந்து வளராமற் கற்றூணிற் பிறந்தனையே!

விரிகடலும் புவியுமுண்டு விசும்பளக்க நின்றுயர்ந்து
தருபிரம னடிவீழ்ந்து தலைதாழுந் தன்மையினாற்
பெருகிவரும் பிரளையமுன் பேருருவம் போன்றதென்னத்
திருவுருவ மீனாகிச் செருவிலெடுத் தடக்கினையே!
இவை யாறு மீரடித் தாழிசை.

பயிரவி யெனவரு படுகொலை யலகையி
னுயிரையு முலையுட னொருவழி பருகினை ;
பிடியென நெடிலுவ பிறையெயி றொடிபட
வடிமதி கரியொடு வலிகொடு பொருதனை ;
ஒருபது சிரமொடு மிருபது கரமுடன்
பருவரை பிறமிடு பரிவம தருளினை ;
இதுபொரு ளதுதவ மிதுகதி யென்றது
சதுமறை படவறு சமையமு மருளினை.
இவை நான்கு மராகம்.

மலைகுனிய விசும்படைக்கு மதிலிலங்கை வழிதிறப்பச்
சிலைகுனியப் புயநிமிரத் திருச்சரமொன் றெடுத்தனையே;
மூவடிகேட் டீரடியால் முழுதுலகு மளந்தசெழும்
பூவடியில் பிரமகங்கைப் புனலாடி நின்றனையே.
இவை யீரடியா லிரண்டம்போதரங்கம்.

துட்டவா ளரவவடந் துலக்கிவரை திரித்தனையே;
வட்டவான் குறளாமை வடிவெடுத்துக் கிடந்தனையே;
முட்டவான் முகடதிர முழங்குகடற் கடைந்தனையே ;
பட்டவரா முகமார பசிக்குவிருந்தளித்தனையே.
இவை யோரடியால் நான்கம்போதரங்கம்.

மருந்தொடு         சகட         மொடித்தனை!
மணிமுடி         யரவில்         நடித்தனை!
பருவரை         நிமிர         வெடுத்தனை!
பரிமள         துளப         முடித்தனை!
இவை முச்சீரால் நான்கம்போதரங்கம்.

மயலு         மறிவுநீ!
யியலு         மிசையுநீ !
யுயிர்ப்பு         மிழிவுநீ !
புயலு         மழையுநீ !
மலரு         மணமுநீ!
யெளிது         மரிது நீ!
யுடலு         முயிருநீ!
புறமு         மகமுநீ!
இவை யிருசீரா லெட்டம்போதரங்கம்.

எனவாங்கு ;
இது தனிச்சொல்.

அரும்பவிழ் குவளையுஞ் சுரும்பவிர் குமுதமுங்
கருங்கொடி வள்ளையுங் கமலமுங் கலந்து
கண்ணும் வாயும் வண்ணவார் குழையுந்
திருமுகச் செவ்வியு மொருமுகப் படுத்திக்
கண்டவர் மருளுங் காட்சியிற் றுவன்றி
நலங்கிளர் மணிநிற நன்னீர்ப் பண்ணை
பொலன்கொடி மகளிற் பொலிந்த பேரையுள்
மகரக் குழையன் மலரடி நோக்கி
யுச்சியிற் றெழுத்தை யுரியவ ருளரேல்
வச்சிரத் தடக்கை மன்னரிற் சிறந்து
விதிப்படு செங்கோல் நடாத்தி
மதிக்குடை கவிப்பர் மண்ணுமா கமுமே. (1)
இது சுரிதகம்.

வெண்பா
மாகவலைப் பட்டழிந்து மங்கைமார் தங்களனு
போகவலைப் பட்டமனம் போதாதோ—நாகவணைக்
கோன்புரக்கு நேமிக் குழைக்காத ரேயடியேற்
கான்புரக்கு மோவொருகா லம். (2)

கலித்துறை
ஒருகைமுகக் குஞ்சரஞ் சொன்னபே ரென்றுரைக் கும்பெரிற்கா
தருகை முகக்கு மயில்விழி யீரருட் பேரையில்மால்
முருகை முகக்கும் பசுந்தண் டுழாயென்னு மொய்குழலச்
சருகை முகக்கு மிருக்குமுள் ளாவி தழைக்குமென்றே. (3)

கழிநெடில்
தழைத்தெழுங் கிரணப் பனிநிரை மதியம்
தடங்கடி பருதியென் றுதிக்குந்
தமிழுடன் பிறந்த மந்தமாருதமுந்
தழற்குடம் பெத்தெடுத் திறைக்குங்

குழைத்தகுங் குமச்செங் களபலே பனமுங்
கொதித்துயிர் குடிக்குமென்னளவிற்
கொடுவினை விளைந்தே காலநல்லனவுங்
கொடியவா மென்பதின் றறிந்தேன்

கழைக்குலங் கடிந்து சந்தனந் திமிர்ந்து
காரகிற் குழாமுரித் தெரிந்து
கரிமுகம் ரூபதபுங் கவரியுஞ் சுமந்து
கனகமுந் தரளமுங் கொழித்து

மழைக்குலம் பிளிறு நெடுஞ்சுரங் கடந்து
வணிகர்போற் கடைநிலம் புரக்க
வருபெரும் பொருனைத் துறைவனே குவளை
வள்வயற் பேரைமா தவனே. (4)

வண்ண விருத்தம்
தவசரிதை கிரிகையிது தவிரவினை கொலைகளவு
        தனைநினையு மறிவிலியைமா
கவலைபடு விகடகப டனையபக டனையு[னது]
        கழலிணைக ளடிமைகொளுமோ
நவமணியு மலர்மகளு மிளமதியு மதகளிறு
        நறைகமழு மமுதுமெழவே
திவலையெறி கடல்கடையு நிகரில்முகி லவணமரர்
        தெளியுமரு மறைமுதல்வனே. (5)

சந்தத் தாழிசை
மறைமு டித்தலையி லுறமி தித்தபசு
மருதி டைத்தவழு மாயனார்
வழுதி நாடர்மகரக்குழைக்கடவுள்
மழைகொழித்தொழுகி யருவிபாய்

நிறைமு டித்தலையிலிருவி குப்புறனி
லாவுதித் தொழுகு வெற்பனே
நீய ளித்ததிவை வேயின் முத்தமென
நிச்சயப்பட மொழிந்ததேன்

பிறைமு டித்தலையில் வடிய விட்டதொரு
பின்னல் பட்டசடை யில்லையோ
பிணையெ டுத்ததிலை திரிபுரத்தையழல்
விழிய விட்டநகை யில்லைமா

கறைமு டித்தமிட றில்லை முக்கணன்
கைக்க பாலமிலை யெங்கள்மால்
கழலிணைத்தொழம றந்த தாலெமர்கள்
கைவிடக்கடவ தாகுமே. (6)

சந்த விருத்தம்
ஆகமொன்றிரண்டு கூறுகண்டு பண்டை
        யாடகந் தனங்க மடுபோர்
வாகைவென் றிகொண்டு பேரைவந்த கொண்டல்
        மாயவன் றுயின்ற கடலே
பாகையும் பிழிந்து தேனையுங் கலந்து
        பாலுடன் கலந்த மொழிகோ
கோகுலங் களினா விமென்று தின்று
        கூவுகின்ற தன்பர் குறையே. (7)

கலித்துறை
குறைக்கொழுந்தாயமு தின்கொழுந் தாரைக் கொழிக்குமந்திப்
பிறைக்கொழுந் தார்மதிட் பேரைப்பிரான்றம்பி பின்வாவென
குறைக்கொழுந் தாவேணு மென்மொழிச் சீதை முலைமுயங்கி
மழைக்கொழுந் தாயன்று கைமாறு செய்தனன் வானவர்க்கே. (8)

வண்ண விருத்தம்
வானவர் தானவர் மாமனு சாதிகள் வாழ்வதுசா வதுமேலா
வானுல காள்வது கீழ்நர காவதுன் மாய்கையி லேயலவோ
வேனமு மாயொரு வாமன னாகயி ராமனு மானவனே
ஞானவ ரோதய பேரைய ராதியு நாரண காரணனே. (9)

சந்த விருத்தம்
காரணங்குறி யாய்விளங்கிவள் காதல் மங்கையரே
வாரணந்தனில் வீதிவந்தனன் மாலை தந்திலனே
நாரணஞ்செக பூரணந்திரு ஞானசிந் தனையா
வாரணம்புகழ் பேரையம்பதி யாழியம் புயலே.(10)

விருத்தம்
ஆழி மாதவன் பேரை மாலளந்
        தவனியுண்டவன் பவனி கண்டபின்
றோழி மீரவன் றுளப மாலையென்
        றுணைமுலைக்கிடார் குழல்மு டிக்கிலார்
ஊழி வேர்விழுங் கங்கு னட்டது
        முடுபதிக்குவே றழல்கொ டுத்ததுங்
கோழி வாயையுங் கூ(வ)வொண் ணாமல்மண்
        கூறுகொண்டதுங் கொடிய காயரே. (11)

வெண்பா
ஏடவிழுங் கண்ணிக் கிரப்பாள் வளைகலைநாண்
கூடவிழுங் கண்ணீர் குறையாதோ—மாடமதில்
வீதிமக ரக்குழையும் வெண்மதியுந் தோய்பேரை
நீதிமக ரக்குழைய னே. (12)

கலித்துறை
குழைத்ததிருப் பார முக்கனி வாயிற் குழல்பதிக்குங்
கழைத்ததிருப் பாவிசை கண்டருள் வோர்க்குழைக் காதர்நன்னாட்
டிழைத்திருப் பார்மணற் கூடலென் றாலு மிறப்பதன்றிப்
பிழைத்திருப் பாருமுண் டோவன்பர் சூள்பொய்த்தபின்னையுமே. (13)

தாழிசை
பின்னை யைத்தழு விப்பு ணர்ந்தருள்
பெற்ற செங்கனி வாயனார்
பெருமி தத்தமிழ் முறைகொ ழித்தறி
பேரையம்பதி யன்னமே

யன்னை யிப்படி மலர ணைக்கு
ளணைத்த கையை நெகிழ்த்துவே
றடைகொ டுத்தக பாட நீதி
யடிச்சி லம்பொலி வானளாய்

முன்ன டித்தெரி யாதி ருண்டு
முதிர்ந்து கண்புதை கங்குல்வாய்
முளரி யம்பத நோவ வன்பினின்
மூதறிந்தவர் போலவந்

தென்னை யிப்படி வாழ வைத்தது
மின்ப மோகன வாழ்வுமற்
றியான்மறக்கிலு நான்மறக்குமா
றிப்பிறப்பினி லில்லையே. (14)

விருத்தம்
ஏது காரணத் தேவர்க ளேனுமற்
        றிழிகு லத்தெழும் புலைய ரேனுமுட்
சாதி பேதமற் றவர்கள் மிச்சிலைத்
        தருவ ராயினும் புனித வாழ்வுதா
னாத லாலருட் பேரை நாரணற்
        கடிமை யானவுத் தமச ரோருகப்
பாத தூளிபட் டுலகம் வாழ்தலில்
        பரவு வார்பதத் தளவி லாததே. (15)

இன்னிசை
அளவறியாப் புனலிடைப்பட் டழுந்தினர்போ லணியிழையீர்
விளவறியாப் பதைமயில் வெள்ளத்தி லழுந்துவபோற்
களவறியாத் தயிர் நுகர்செங் கனிவாயா மணிப்புயத்தில்
அளவறிவாள் பின்னையொன்றுஞ் சொலவறிய மாட்டாரே. (16)

விருத்தம்
ஆளைப் பொருது கயங்கலக்கி யடியிற் படிந்து மதகிடிய
வாளைப் பகடு புகுந்துழக்கும் வயல்சூழ் வழுதித் திருநாடன்
றாளைத் தொழுது பசுந்துளபச் சருகுக் கிரந்து மடவீர்மா
றோளைக் கருதி மடலெழுதத் துணிவாள் விரகொன் றறியாளே.(17)

விருத்தம்
அறிவி லேனொரு சமைய நீதியி னடவி லேதிரியே
னெறியி லேனுறு கதியி லேனுனை நினையு மாறுளதோ
விறைவ னேமறை முதல்வ னேதொழு மெமது நாயகமே
மறுவி லாமர புடைய பேரையில் மருவி வாழ்முகிலே. (18)

ஊஞ்சல்
வாழிவலம் புரிந்துநெடுங் குழைக ளாட
மலர்க்காந்தட் செங்கைவரி வளைக ளாட
வனமுலையிற் கிடந்துமுத்து வடங்க ளாட
மளைகவிழக் குழல்விழுந்து மருங்கு லாடச்

சூழிவலம் புரிகளிற்று மைந்த ராடச்
சுரர்முனிவ ருயிரனைத்துஞ் சூறை யாடச்
சுடர்வயிர வடம்பிணைத்துக் கமுகு மேற்றித்
தூங்குமணிப் பொன்னுச துவக்கி யாட

மேழிவலம் புரிபழனப் பேரை நாட்டில்
மேதகுசீர் வளம்பாடி யாடீ ரூஞ்சல்!
விரைத்துளபச் செழும்புயலைத் தொழுநூற் றெட்டு
வேதியர்தம் புகழ்பாடி யாடீ ரூஞ்சல்!

ஆழிவலம் புரிபாடி யாடீ ரூஞ்சல்!
அவன்கருடக் கொடிபாடி யாடீ ரூஞ்சல்!
ஆழ்வார்கள் தமிழ்பாடி யாடீ ரூஞ்சல்!
அமுதனையீ ரணியிழையீ ராடீ ரூஞ்சல்! (19)

வண்ண விருத்தம்
ஆடிலாள்கழ லாடிலாள்சுனை யாடிலாள் பனிநீர்
போடுவாள்களை தேடிலாள்வளை பூணிலா ளவள்தான்
பீடுலாவிய வீதிகோலிய பேரைவாழ் முகிலே
நாடுவாளிசை பாடுவாணம நாரணா வெனவே. (20)

சந்த வண்ண விருத்தம்
நாராய ணாவென வோதாமல் வீண்மொழிக
        ணாவாலு மேதுபய னவர்புகழே
யாராலு மோதிலவை கேளாத மூடர்செவி
        யானாலு மேதுபய னறிவிலிகாள்
காரான சோதியழ காராத காதலொடு
        காணார்க ணாதுமொரு பயனுளதோ
வாராழி மீதுதுயில் பேரேசர் கோயில்வலம்
        வாராத காலுமொரு பயனிலையே. (21)

தாழிசை
ஒருபிழைகண் டயற்பாரு மாதரல்ல வோதா
        னுறவுநினைந் திருப்பார்கள் கோபமமை யாதோ
விருவருமிங் கிதத்தோடு கூடியணை யானா
        இளமைநலங் கிடைத்தாலிங் கேதுபய னாமோ
முருகவிழ்செங் கனிக்கோவை வாய்மொழியி னாலே
        முனிவர்பெறுங் குடித்தாழ்வு வாரதறி யீரோ
மருவியசந் தனக்காவில் மாமலர்கொய் வாரே
        மகரநெடுங் குழைக்காதர் பேரையனை யாரே. (22)

கலித்துறை
ஆரைய ராம லிருப்பா ரவருக் கருள்புரியும்
பேரைய ராதிப்பர் நங்குழைக் காதர் பிறங்கல்மின்[னே]
தாரைய ராவிக் கடைந்தசெவ் வேலெனச் சாய்ந்தகுழற்
காரைய ராவிருப்ப னெஞ்சை யராவுங் கடைக்கண்களே. (23)

கழிநெடில்
கண்ணகம் புதைப்ப வெளியிடஞ் சுவறக்
கருந்தடத் திருட்படாம் விரித்துக்
கடல்விடக் குழம்பை யள்ளியிட் டுலகங்
கரந்துகொண் டெனவெனத் தணிந்து

விண்ணகம் புதைத்த பருதியு மதியும்
விழுங்கியுண் டொருபுடை செறிப்ப
வேர்விழுந் தூழி முடிவிலாக் கங்குல்
விடிவிலாத் தகைமையே துரையாய்

மண்ணகம் புதைத்த துணையடி முனிவர்
மனத்தகம் புதைத்தவேழ் புவியும்
வயிற்றகம் புதைப்ப பேரும்வென் றிடைச்சி
மார்க்கமும் புதைப்பநீ வெருவிப்

பண்ணகம் புதைத்த பவளவாய் புதைத்துப்
பருமணிக் குழைபிடித் தாடப்
படித்தவர் சுருதி முடித்தவர் பேரைப்
பதிவளம் புரக்குமா முகிலே. (24)

வெண்பா
மாவளர்த்த வன்னையரு மாரன் குயில்வளர்க்க
காவளர்த்தா ரென்றுகுழைக் காதரே!—நாவளர்த்துச்
செற்றார் நகைவெடிப்பத் தீவெடிப்பப் பூந்துளவின்
முற்றார் நகைவெடிக்கு மோ. (25)

கலித்துறை
வெடித்துச் சிவந்த வப்பாலைக் கப்பாலை வெளியில்வெப்பம்
பிடித்துச் சிவந்தன வோய்ந்தணீர் கண்ணன் பேரைவெற்பில்
வடித்துச் சிவந்த செம்பஞ்சோடனிச்ச மலருறுத்தித்
தடித்துச் சிவந்தது கண்டீர் மடந்தைபொற் றாளிணையே. (26)

சந்தத் தாழிசை
தாளெடுத் துலக ளந்த பேரைமுகி
றனத ருட்குறுநி லத்துளோர்
தைய லைப்புதும ணங்கு றித்தெழுது
சருகு கொண்டுவரு தூதனே

வேளெ டுத்தவடி வேல்ப டப்பொருது
வினையெ டுத்தவர சரையெல்லாம்
வெட்டி விட்டதிரு முகம லாதுதிரு
முகமும் வேறறிவ தில்லையே

நாளெ டுத்தபடை பாடெ டுத்ததிலை
நாணை யப்பிழையி லின்னமுன்
னர்ப தித்தலைவர் தலையெ டுத்ததிலை
நமனெ திர்த்துவரு மாயினும்

வாளெடுத்துவரி சிலைகு குத்துவளை
தடிபி டித்துமவர் வெல்வரால்
மனுவ ரம்பழியு நாளு மெங்கள்குல
மறவ ரம்பழிவ தில்லையே. (27)

கழிநெடில்
இல்லத் தடங்கா மடந்தையர்கற்
பெனவும் பசிக்கொன் றிரந்தவர்க்கொன்
றீயா தவர்கைப் பொருளெனவு
மிரவிக் கிருள்போ லவுமடியார்

சொல்லத் தொலையா வெழுபிறப்புத்
துடைக்குங் கருணைக் குழைக்காதர்
துணைத்தா ளளக்கும் புவிமருங்குல்
சுற்றிக் கிடக்குங் கருங்கடலே

கொல்லத் துணியா தன்னையருங்
கொதியா மதியு மதன்படையைக்
கூப்பிட் டழையாக் கருங்குயிலுங்
கொடுமைப் படுத்தாக் குழலிசையு

மல்லற் படுத்தா வயலவரு
மளித்துப் பிரிவீ ரெனவறையா
தயர்த்துக் கொடுத்த மனமிருக்க
யாரை வெறுக்கக் கடவோமே. (29)

விருத்தம்
கடல டங்கலுழி தொறுசி றங்கைபுனல் கடுகிலும்புகுது மூசிவே
லிடம்வலஞ்சுழலும் வடத டங்கிரியு மெமது சம்பிரத மீதெலா
முடனிருந்துமகிழ் குருப ரன்பரவை யுலக ளந்தமுகில் பேரைமா
லடல்புரிந்துபகலிரவு கண்டதுவு மரிய சம்பிரத மானதே. (29)

வெண்பா
தேவகியார் பெற்ற திருவருத்தம் பாராமற்
கோவியர்தம் மன்றுகுழைக் காதரே!—தாவி
யடிக்குங்கை மாறோநீ யஞ்சினபொற் காது
பிடிக்குங்கை மாறோ பெரிது. (30)

விருத்தம்
பெருவிட வரவணைப் பேரை மாதவன்
மருவிட நினைக்கிலான் மங்கை மாதரே
தருவிட வெண்ணிலாத் தழைத்த தெங்கணு
மொருவிட மிலைநமக் குறைவி டங்களே. (31)

கலித்துறை
உரைக்கொடு மாடவர் வாளா லொருகொம் பிழந்துமற்றக்
குறைக்கொடு கொண்டுழல் குஞ்சரம் போலுங் கொடியிடையே
துறைக்கொடு வாய்வைத்த மால்பேரை யிற்றென்னர் சூழ்ந்தபண்டைச்
சிறைக்கொடு மேகம் பிறைக்கொடு தாங்கிச் சிறக்கின்றதே. (32)

சத்த விருத்தம்
சிறந்தார் தொழத்தகு மருந்தாம ழைப்புயல்
        செழும்பேரை யுத்தமர்போ
லறந்தானறக்குரு கினங்கான் மடப்பேடை
        யனங்காளுரைத்தருள்வீ
ரிறந்தோ மெனிற்பிழை யிருந்தோ மெனிற்பழு
        திரங்காம னத்தவர்போல்
மறந்தால் மறக்கவு நினைந்தால் நினைக்கவு
        மனந்தான மக்கில்லையே. (33)

வெண்பா
எமக்கு முகம்வாட விந்தால் மரைக
டமக்குமுகம் வாடுஞ் சலிப்பே – னமைத்துரையும்
பெண்மதி யென்னாதே மால்பேரை நாட்டன்னங்
கொண்மதி யுண்டோ கழல். (34)

சந்தத் தாழிசை
தழல்பிழிந்து சாறுகொண்டு சந்தனத்தி லிட்டதார்?
        தண்ணிலவை யெரிபடச் சமைத்துவிட்ட பாவியார்?
குழல்பிழிந்த விசையிலே குளுந்தசிங்கி வைத்ததார்?
        கொடுமைவந்த காலமாசை கொண்டிருக்க வல்லரோ?
நிழல்பிழிந்து பருகவென்று நினையுமாவு மருதமு
        னெரியவென்ற குரிசில்பேரை நீர்குளிக்கு நாரைகாள்
அழல்பிழிந்த வேலரெம்மை யாணையிட் டகன்றதா
        லந்தவாய்மை யுடல்பிழிந்தெனாவியுண்டு விட்டதே.(35)

பின்முடுகு வெண்பா
ஆவியுண் டுமையுண் டறிவையுண்டு நிற்குமிரு
காவியுண்டு தாமரைக்கே கண்டீரோ—தேவியுடன்
மால்வளர்ந்த பேரையின்கண் வாவிகண்டு பூவையுண்டு
கால்குறைந்த நீலவண்டு காண். (36)

விருத்தம்
வண்டிருக்குங் குழல்புரத்து வாட்டமடித் துப்பிடித்து
        வடிந்த வள்ளைத்
தண்டிருக்குங் குழைமடவீர் குழைக்காதர் பேரையில்முத்
        தமிழே போல
வுண்டிருக்க வுவட்டாத விதழமு துமிளஞ்ச
        முகங்கள் பாலிற்
கொண்டிருக்கப் பெருங்காயம் பசிக்குதவா திருப்பதுவுங்
        கொடுமை தானே.(37)

விருத்தம்
கொடித்தேரினர் குழைக்காதினர் குலக்கார் வரைமேற்
றடித்தீர்தழை தொடுத்தீர்கரி பிணைத்தே வேத
னடித்தாரையி னடப்பீரவை யடைத்தா ளுவரோ
கொடித்தோழியர் புனைச்சார்வொரு தொழுத்தா னலவே.(38)

கலித்துறை
தொழும்பாக் கியண்டர் தொழகற் பகாடவிச் சூழலாற்றே
னெழும்பாக் கியமென் றிருப்பதல் லாலிந்து விட்டந்திட்டித்
தழும்பாக் கியபொழில் சூழ்பேரை மால்சரணாரவிந்தச்
செழும்பாக் கியமென் றவனடி யார்பண்டு செய்தவமோ. (39)

விருத்தம்
செய்யிற் கரும்பும் வளர்பேரை திருநா டனையே யீதான
றொய்யிற் கரும்புந் தொடர்ந்துகொலைத் தொழிலுக் கரும்பும்விழியுமதன்
கையிற் கரும்பு மலர்க்கணையுங் கைக்கொண்டிருக்கக்கண்டனைமே
லெய்யிற் கரும்புங் கணையுமிலையின்றைக் கிறவா திருப்பேனே. (40)

கழிநெடில்
இரும்பை நெரித்துத் துதிக்கைமடுத்
திளங்கோ மகளிர் விரனெரிப்ப
வெதிர்த்தார் சிரத்தை நெரித்துமலை
யேறி நெரித்துக் கடப்புறத்துச்

சுரும்பை நெரித்து வளிகறங்கச்
சுற்றும் பிழைக்காற் செவிப்படலத்
துங்கக் களிற்றின் மிசைப்பவனி
தொழுதால் விரகந் தொலையாதோ

கரும்பை நெரித்து விழுப்பலவின்
கனியை நெரித்து மடைமுதுகற்
கதலிப் படலைக் குலைநெரித்துக்
கன்னிக் கமுகின் மடனெரித்துக்

குரும்பை நெரித்துத் தேனொழுகக்
குவளை நெரித்துப் புடைத்துவரால்
குதிக்கும் புனற்பே ரையில்மகரக்
குழையே யெவர்க்குங் கோமானே. (41)

விருத்தம்
மானென்பார் கலையென்பார் தொடுக்க வாடு
        மலர்த் தழையா லெய்ததொரு மதத்த வேழந்
தானென்பார் பதியென்பார் வழியே தென்பார்
        தாமரைப்பூங் கோவிலென்றே விரந்தீ ரென்பார்
கோனென்பார் குலத்துதிக்குங் கருணை மேகங்
        குழைக்காதர் பேரையிளங் கொம்பே வம்பே
யானென்பா ரல்லவென்பா ரில்லை யென்பா
        ரிவர்கொட்டிக் கெதிருதைப்பார் யாவர் தாமே. (42)

விருத்தம்
தாமோதர மதுசூதனர் தகுபேரையில் மடவீர்
நாமோதர மாமோகினி நலமோதர மறியீ
ராமோர்தர மலவோவெளி தடியேனுடன் முனிவாய்ப்
போமோதர நினையீர்கமழ் புதுவாய்மல ரமுதே. (43)

கலிப்பா
தேனார் பொருனைத் திருமால் மிடைபேரை
யானாத கல்வியறிவார் பயனன்றோ
கானார் கருங்குழலார் காமத்தின் பால்மறந்து
போனாரறத்தின்பால் போட்டுப்பொருட்பாலே. (44)

இன்னிசைக் கலிப்பா
பால்வடிவுந் திரண்முலையும் பச்சுடம்பும் பசுநரம்புஞ்
சூல்வடிவுந் தோன்றாமற் றூண்வயிற்றிற் பிறந்தநாள்
மேல்வடிவா மிரணியனை வினைதொலைக்குத் தமிழ்ப்பேரை
மால்வடிவாந் திருவடிவ மரகதத்தின் மணிவடிவே. (45)

கலித்துறை
வடித்தூதுச் சங்கொப்ப வெண்டோட்டு மல்லிகை வாயிற்கவ்விப்
பிடித்தூதும் வண்டோடும் பேசுகி லேன்பிரி யாதஐவர்
குடித்தூது சென்ற குழைக்காதர்க் கென்மயல் கூறிவரும்
படித்தூது நீசொல்லு வாய்மழை சாடும் பனிக்கொண்டலே. (46)

(47 முதல் 97 முடியவுள்ள செய்யுட்கள் விடுபட்டுள்ளன.)

வண்ணத் தாழிசை
சரமழைக்கும் புயல் கொழிக்குந் தமிழ்வளர்பே ரையிலே
மதிக்கும்பொருள் மிகப்பெண்டு கிறளைவொறுக்குங்
குடிதழைக்கும் படிவளர்க்குந் திருமடமா மயிலே
விதிக்கும்படி படிக்குஞ்சிறி தனிச்சங் களும்
லரப்பஞ்சினு வெறுக்கும்பத முனதா கையினா
லுதிக்குங்கதிர் வறுக்கும்பரல் கொதிக்குஞ்சுடர்
நடக்குந்தொறு முறைக்கும்பொழு துயிர்வா டுவையே. (98)

வாழி யகவல்
வாடைவந் தியங்கப் பீடைகொண்டுளதே
தென்றலங் கன்று மென்றுதின்றுமிழ்ந்து
கோதுபட வாருயிர்க் குறையையுஞ் சுழித்து
குழைத்துவிரல் குறைந்த கொழித்தமணற் கடலு
மள்ளி யிட்ட புள்ளியம் பசலையுந்
துயிற்சுவை யறியாப் பயிர்ப்புறு தடங்கலு
மறவா வன்புந் துறவா வுள்ளமு
மன்னப் பேடும் புன்னையங் காவுந்
துணைபட விரிந்து துயர்வருங் காலத்துப்
பழுதிலா வுயர்ந்த வழுதிநாட் டவையும்
யாரை யுந்தமிழ்ப் பேரையும் புரப்ப
வளநகர் வார்குழைச் சிகரபூ தலத்தோட்
டெய்வ நாயக னைவர்தேர்ப் பாகன்
மலய மால்வரைத் தலைவரைச் சாரலின்
மணங்கொள் பூங்கொடி பிணங்கு தண்போ
தும்பரிற் சிறந்த காட்சியிற் பிறந்த
தண்ணளி பொற்கை கொட்டுத் தலைவர்மெய்
தொட்டுப் பயின்று பணைமுலைக் குரும்பை
யிணைவரைப் புயத்தி னூடுறப் பொருது
பாடுறக் கிடப்ப வரிவளைத் தழும்பு
மார்பிடத் தழுந்த பரிபுரச் சில்லொலிப்
பலகல னொலிப்பப் புல்லியுங் கல்லியும்
பொருந்தி நற்சீர் நலமிகு பெருஞ்சுவை
நமக்கினி தளிக்குஞ் சிறுதுயிற் கனவு
தந்தருளு மகரநெடுந் தகைவாழி வாழியே. (99)

வெண்பா
வாழிபுகழ்ப் பேரை மகரக் குழைக்காதர்
வாழிதமிழ் நூற்றெட்டு மாமறையோர்—வாழியே
தேக்கும் பதகமலந் தீர்த்தெனது சிந்தையுள்ளே
பூக்கும் பதகமலப் பூ. (100)

விருத்தம்
பதித்தநவ ரத்னமணி வாழி [வாழி]
        பங்கயப்பூந் திருமுகஞ்செம் பவள வாய்நீள்
கதித்தசீர் வாணுதல்வெண் டிருமண் காப்புக்
        கத்தூரித் திலதமிகு கண்கள் வாழி
துதித்தநறும் பசுந்துளவத் தோள்கள் வாழி
        கரிமுகச்சங் காழிகதை வில்வாள் வாழி
மதித்தபீ தாம்பரஞ்சே ரரைனூல் வாழி
        சரணங்குழைக் காதர்மால் வாழி தானே. (101)

பேரைக் கலம்பகம் முற்றும்.
-----------------------

2. திருமயிலாசலக் கலம்பகம்

பாயிரம்

கொச்சகக் கலிப்பா
அன்றுசிவப் பிரகாச னரியதுதி தனக்கெய்தச்
சென்றுபகர்ந் தமைநாடிச் சிவஞான பாலையன்
குன்றுளுயர் மயிலைமலைக் குமரனுக்குக் கலம்பகமொன்
நின்று சொலத் திருப்புகழோ னிடத்திலிது இசைத்தானே. (1)

வெண்பா
ஆட்டுப்பால் வாய்வை யடக்கி யடுத்துவந்து
சீட்டுக்கு ளாடலொன்று செய்துபல—பாட்டுடைய
பாலையனை யேவியென்னைப் பற்றிவலிந் தாண்டுகொண்டான்
சோலை மிகுமயிலத் தோன். (2)

எண்சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்
சயிலமு ழுக்கவும் வெட்கச்சி ரந்தரனார்
        தமதுரு வொத்தருவிப் பொற்பிசைந் துளதால்
மயில மலைக்குக னாருக்குக் கலம்பகநூல்
        வனைகுவதற் குயிர்சொற் கட்டுவந் தருள்வீர்
வெயிலவ னுற்ற வயிற்றுஞ் செழுங்களிறே
        வெளிறு மலக்குளி ருக்கைக் கிசைந்தவனே
யயின்மயில் குக்கிட முற்செப்பனின்றனவே
        யடியர் பதக்கம லத்துற்ற நுண்பொடியே. (3)

கலம்பகத்தினுறுப்புக்கள்.

எண்சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்
மயங்கிசைக்கொச் சகக்கலிப்பாப் புயவகுப்பு அம்மானை
        மறங்களிசித் தூசறழை வாழுமூர் மருட்பா
வயங்கெழிற்சம் பிரதமதங் கிரங்கல்கட் டுமடக்கு
        வண்குறம்பாண் கைக்கிளை பலவாறாய்த் தூது
தயங்குகழிக் கரைப்புலம்பல் காலமுத லாகத்
        தமிழ்ப்புலவர்க் கருத்திலவர் தக்கதுறை யெல்லா
மியங்குகலம் பகத்தினுக்கா மானாலு மொருவாறீ
        ரொன்பதெனச் சிலநூ லியம்புதலு முளவே. (4)

நூல்

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
திருமகள்சேர் நெடுமாயன் செங்கமலக் கண்கடரு
மிருமடவார்க் கிடைநீடு மெழிற்பவள மலைபோல்வாய்
பரிதிமதி பிசைந்தாங்கு பகர்முடியு முகமொன்றும்
விரிகருணை விழிமூன்றும் விளங்குழைச் செவியிரண்டும்
வண்பனுவற் பைங்கிள்ளை மணநுகரு மணநாசிச்
சண்பகமும் சிறுமுறுவற் றரளநகைக் கனிவாயும்
பொற்பணியும் பன்மலரும் பொலிந்தகழுத் தொடுமார்பும்
விற்படுமின் னெனக்காணும் வென்றிவேல் வியன்சீரும்
மடல்வயிரம் திரிசூல மபயவர தந்துலங்குங்
கடகநெடுங் கரந்தாங்குங் கவின்தோள்கள் ஒருநான்குங்
குஞ்சிமணிச் செஞ்சதங்கைக் கோத்தரையுங் கோசிகமும்
விஞ்சியபேரானந்தம் விளைத்தருளும் துணைத்தாளுங்
கொண்டுமயி லாசலத்திற் குவட்டிலுறுங் கோயிலிடை
மண்டுசடைச் சிவஞானி வலத்தமர வாழ்கின்றாய்
மயிலேறித் தகரேறி மழவெள்ளைக் களிறேறிக்
குயில்போலு முமையாள்கண் குளிரவருங் குருந்தோநீ !

இவையெட்டுந் தரவுகள்.

அரன்வழி படமுன மருணல மருளினை ;
முரகரி யமரர்முன் மொழிபுகழ் மருவினை;
யயன்முத லமர வரமொடு தருவினை ;
புயலிவர் மகபதி புனைமுடி யுதவினை.

இவை நான்கும் அராகங்கள்.

அன்பொடுமுன் றுதிகூறி யாறெழுத்தா லருச்சித்துத்
தென்பொதியை மிசைவாழ்வான் சிறப்பனைத்தும்பெறச்செய்தாய்;
நின்னாமத் தொன்றினையே நிதங்கூறச் சலியாத
மின்னாளன் றிழந்தகரம் விரைந்துதவி மீண்டுவந்தாய்;
நற்கீரன் சிறை நீக்கி நவிலரிய தமிழணிவான்
கற்கீரி யலகையையுங் கடியவடி வேல்விடுத்தாய்;
முற்றுசுவைக் கவிப்பொய்யா மொழிப்புலவன் களிகூறப்
பற்றுமொரு கோலொடுமுன் பாலையுமுட்டையுமானாய்;
தென்னருணைக் கோபுரத்திற் றிகழொருவன் தனக்காக
முன்னமொரு தூணிடத்தின் முளைப்பதற்கு மிசைவுற்றாய்;
போரிநகர் முனிவன்முதற் புகலுமவர் புகழ்கின்ற
சீரியவாழ் வில்லார்(கள்) சிந்தித்த பேரளித்தாய்.

இவை யாறுந் தரவுகள்.

ஏன மருப்பற மோதி வகுத்தனை ;
யேழிசை யிற்கவி கோடி தொடுத்தனை;
மானவிர் கட்குரி யாரை மயக்கினை ;
மாசறு சிட்டி வினோத மியக்கினை.

இவை நான்கும் நாற்சீர் ஓரடி யம்போதரங்கங்கள்.

மாவடி யோடற வென்றனை;
மால்வரை யாவினு நின்றனை;
தாமத ரோர்வரி தாயினை;
சாரணர் வாழ்வர மேயினை.

இவை நான்கும் முச்சீர் ஓரடி யம்போதரங்கங்கள்.

ஆதலில் ;

இது தனிச்சொல்.

சேவல் பொறுத்தனை பாவ மறுத்தனை
சிந்தைக ளுற்றனை விந்தைகள் பெற்றனை
கடலிற் பொருனையிற் கனவிற் றமியேன்
றிடமுடன் விடுத்த செழுந்தமிழ்ப் பனுவ
லனைத்தினு மீண்டொளிர் தரவளித்து முன்னின்று
தினைத்துணை துயருஞ் சேரா தொரீஇத்
திருமலைக் குவட்டில் செய்தபோராட
லுருமலைக் கோயிலுரைத்த மாற்ற
மாதிய பிறவு மகிலத் தோரும்
பேதியா வண்ணம் பேசப் புரிந்து
கைச்சிலைக் குறவர் கவின்றரு சாரற்
பச்சிளஞ் சோலை பரண்மீ திருந்தான்
மதலையென் றியாவரும் வழுத்த வைத்து
பதநிழற் றருவாய் பரமென வந்தேன்
விதிமுறை தவறி வெள்ளிலை மென்று
கதிர்மணி வடமுலை கருத்துட் டோன்றப்
பழையபா வொன்று பகர்வான் றனையும்
விழைதரு கருணை மிகையாற் புரந்தாய்
நின்றிரு வுள்ளமென் னேரத்
தென்றிசைப் பொழிக்கு மெனவிரங் கினனே. (1)
இஃது ஆசிரிய விருத்தத்தினால் வந்த சுரிதகம்.

நேரிசை வெண்பா
இரங்குந் திருவுள்ளத் தேற்றமுற்ற செவ்வேள்
வரங்களெல் லாநல்கு மலைவேள் - குரங்கனைய
பாழ்மனமே பல்கோடி பத்தர் பரிசுபெற்று
வாழ்மயிலத் துள்ள மலை. (2)

கட்டளைக் கலித்துறை
மலைத்தெய்வ மேபர மென்றொப்பி டாச்சில மானிடருஞ்
சிலைத்தெய்வம் வைத்துப் பலவாறு நாமங்கள் செப்பலென்னோ
நிலைத்தெய்வம் வாழு மயிலா சலத்தி னிறைபுகழ்நேர்
கலைத்தெய்வ மான பிடியேவெண் டாமரைக் கன்னிகையே. (3)

கலிப்பா
கன்னிக் குறத்தி கணவன் மயிலவெற்பை
யுன்னிக் கருத்தோ டுடலுருகப் போற்றிசைக்கு
மென்னிட்ட மின்னதென யாரறிவா ரென்றனக்கு
மின்னிற் றிகழ்ந்தகதி வேலுமயி லுந்துணையே. (4)

கலிநிலைத்துறை
மயிலாச லத்துற்ற குமரேச னுக்கான வழிபாடதாற்
கயிலாய மொடுமேரு வரைமீ திருக்குங்க னற்கண்ணுதல்
பயிலாக மத்தைப்ப ழிக்கின்ற தீயோர்கள் பகைமிஞ்சுநா
னொயிலாரு மடவார்த மக்கிச்சை கொடுவாட லொவ்வாததே. (5)

கட்டளைக் கலிப்பா
வாத நூற்பிணக் காளர்கண் காணரு
        மலைய மால்வரை மாமுனி-தன்னருட்
போத வாரியின் மூழ்கிட நாடுவேன்
        புந்தி நொந்து புலம்பிட லாகுமோ
வேத நான்முக கள்வனைக் குட்டிய
        வீறு கொண்டொளிர் மெஞ்ஞான தேசிகா
மாத மோர்திரு நாள்வருஞ் சீர்திகழ்
        மயில மால்வரை வாழ்முரு கையனே. (6)

கலி விருத்தம்
அய்யமின்றி முன்னறைந்த வாசகப்படியருளி
மெய்யர் தம்புடை யூடுற விடுக்குநா ளுளதோ
வையம் வானொடு துதிசெயு மயிலமா மலையின்
செய்ய பொற்குவ டாமெனத் திகழ்தரு சோதியே. (7)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
சேயமா மலர்கொண் டுன்னைத்
        தினந்தினம் அருச்சித் தேத்துந்
தூயவர் கமலப் பூந்தாட்
        டுகளணி தலும்வீண் போமோ!
மாயவன் மருகா விண்ணோர்
        மகள்புணர் கணவா வள்ளி
நாயகா மயில வெற்பி
        னடஞ்செயு முருக வேளே. (8)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
முருக றாமலர்க் கடம்பணி புயத்தனை
        மூவிரு முகத்தானை
யருகர் பாழ்மதத் திமரமிவ் வுலகைவிட்
        டகலவந் தருள்வானைப்
பெருகு சீர்த்திரு மயிலமா மலைமிசை
        பேணிய பெரியோர்தங்
கருணை ஞானமுஞ் சித்தியு முணர்பவர்
        காலனுக் கஞ்சாரே. (9)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
அஞ்சலளித் தாண்டபெருங் கருணைச் சீரு
        மருணகிரி தானெனநீ யறைந்த சொல்லும்
வஞ்சகமென் றிகழ்வதற்கு மஞ்சு கின்றேன்
        வருத்தமினிச் சகிப்பதற்கும் வல்லே னல்லேன்
நெஞ்சகத்தன் றாடியதை மறக்க மாட்டேன்
        நெடுமயிலக் குவட்டின்முன் னின்றேன் கண்பார்
பஞ்சவர்ணச் சிகியூரும் பவள மேனிப்
        பண்ணவனே யெண்ணரிய பான்மை யானே. (10)

இரட்டையாசிரிய விருத்தம்
ஆனமட் டிற்பணி புரிந்துனது மெய்யன்ப
ரவையினிற் புகவிரும்பா
தனிநகை மடந்தையர் முலைத்துணை நினைத்துருகி
யலமருந் தமியனேனை

யீனருக் கெமனனைய வீரர்முத லோர்களு
மிறைஞ்சும்ப தத்தில்வைத்துன்
னெழில்வதன நிரைகுலவு மறுவகை நெறித்தலைவ
னென்றொளிர வுஞ்செய்வையோ

கானவக் குடிலொரு கருங்கல மெனவந்த
கன்னிக்கி சைந்தகணவா
கனகநக ரதிபன் வளர்த்தபிடி கண்டுளங்
களிகூர வருகந்தனே

வானளக் குங்குவடு தொறுமிழியு மருவிபல
மாலிகையெ னக்குலாவு
மயிலா சலத்தில்வரு புலவோர் துதிக்குமொரு
வடிவேல்பி டித்தகுருவே. (11)

புயவகுப்பு
குருபரர் வெனத்தினமு முருகிநாடு மெய்ப்புலவர்
கொணர்வதானமுத்தமிழை நேசித்து யர்ந்தன;
குரவநீ முற்பகரு மளவிலா மலர்த்தொகுதி
குரவுமா லிகைத்திரள்கள் சூடிப்பொ லிந்தன;
குறைவுறா வொளிப்பருதி யனையதோ ளணிப்பகுதி
கொடுபல்பூ ணெடுத்தொருமு நூலுற்றி லங்கின;
குலிசமூ விலைப்படைவில் கணைவைவேன் முதற்பலர்சொல்
குருதியூ னுடைக்கருவி சேரச் சுமந்தன;
குகுகுகூ வெனத்தனது சிறகைமோ தடற்பரவை
குளறிடா மொழிக்கிளியோ டேறிப் பிறங்கின;
குளிரும்வா வியிற்கெளவுரி முலையினோடு கார்த்திகையர்
குயமுமார்வ முற்றமுத மீயப் பிசைந்தன;

கொடியரா வினைப்பசலை யுலகின்மாரி வைத்தமரர்
குழுவெலா மெதிர்த்தமர்செய் தோடக் கவின்றன;
குறளைநாரதத்தவசி முயலும்வேள்வியிற்றகரோர்
குதிரையா கிடக்கசையி னால்விட்டுவந்தன;
குடையதா மெனக்கலப நிழல்கொண்மா மயிற்கடவல்
குணமெனா நினைப்பவர்களூடுற் றவிர்ந்தன;
குமிழிதோய் மதத்தயிலம் ஒழுகும்வா ரணக்களிறு
குதறினா லெயிற்றலையின் மோதிச் சிவந்தன;
குவளைநேர் விழிச்சசிமின் மருவுவான் வளர்த்துதவு
குமரிபூண் முலைக்களப மாரக்க மழ்ந்தன;
கொடியினுடு வைத்திறுக முடியும்வார் தழைக்கலைகொள்
குறமினாளணிப்பரண்மு னேகிக் குவிந்தன;
கொலைசெய்வாள் விழிச்சிறிய மகளிர்பார்வை மெய்த்தவர்கள்
குலைவுறா மனக்கவன மீறப் பொருந்தின;
கொடுமையே மிகப்புரியு மவர்கள்வேரறக்கறுவு
குறியுளார் தமக்கிழிவு றாமற் புரந்தன;
கொடையிலா முழுக்கயவர் மனைகடோறு முற்றடியர்
குறுகிடா தருட்கடலின் மூழ்கச்செய் பண்பின;
குசையுனாணு ரக்கதுமை யுடையம்யா மெனப்பெரிது
குதிகொள்வே னுளத்தினுமந் நாள்சற் றொளிர்ந்தன;

வருவவாத மிட்டுழலு மவர்கள்போக மற்றவர்க
ளணுகுமாரிரட்டியன் வீதிக்கு ளொன்றின;
வணிகொள்வார் செவிக்குழைக ளுலவுசீர்பொ ருத்தழுவி
வசலமே யெனக்கவிஞர் பேசக் கிடந்தன;
வடலையாகு டற்பரமர் பிரணவாக ரப்பொருளை
யறியுநாள் புனற்சடில மேறிக் குளிர்ந்தன;
வகிலலோக முற்பருகி யுமிழுமால் வயப்படையை
யடையுமாறியற்றியநல் வீறுற் றெழுந்தன;
வரிய நான் மறைக்கிழவ னுடலில்வேர்வை விட்டலறி
யவசமா கிடச்சிறிது கோபிக்கை கொண்டன;
வமரர்கோன்மி கப்பயமோ டிணையில்காவிரிக்கரையி
லமையெனாவு றுப்பெறுத றீரப் புரந்தன;
வடல்கொள்வீ ரருட்டலைவ னொருவனீ சுரக்கணைகொ
டவுணர்கோ னினைப்பழிதல் காணச் சிறந்தன;
வளரும்வாரி சக்கடவுள் வரமதா லுவப்படையு
மவர்கண்மே லெதிர்த்தவனை யாளப் புகுந்தன;
வளவின் மாயை வெற்புருவ முடையதான வப்பயலை
யணுவைநேர் பொடிபடமு னாளட்டு நின்றன;
வழலும்வாய் விடக்கடிது பொருததா ருகக்கொடிய
னழியவேல் விடுத்துலக மோதத் திகழ்ந்தன;
வறிவினான் மிகப்பெருமை யுடையகோ ளரித்தகுவ
னறையும்வா சகப்படிய னோனைத் தடிந்தன;
வலைமகோததிக்கிடையி னெடியமா மரத்துருவோ
டருவிவா னையப்பொழுதி லேவெட்டு மொய்ம்பின;
வமலயோ கத்தவசின் மயசிவோக முற்றவர்த
மரசனா மகத்தியனை நேர்முகத் தரன்பின;
வயவுறாம லெக்கணமு முருகனே யெனப்பகரு
வ(ள)[ழ]கைவேறு பட்டதனை யீதா குறங்கின;
வலகையான் மிகத்தளரு மொருவனோடு பற்பலரும்
விரும்புறாது கற்கதவு கீளப் பிளந்தன;
வதிகவாழ் வுடைப்பழைய மதுரையூரினிற்புலவ
ரலமறா துகைக்குறியினால்வைத்த நண்பின;

கருதுமாறு முற்குலவி யுதவிடாத பொற்குலவு
கதறுமோ திடத்தகுதி யரவுற்ற செண்டின;
கடலையே விடத்துணியும் வருணனார் தொழத்தனது
கதிர்குலா வுசத்தியினை வீசிக்கனன்றன;
கனகநா டுடைத்தலைவன் வலியதூ தரைக்கொடுசெய்
கபடமானதிற்சிறிது நோவற்றிருந்தன;
கவிசொலே னெனத்தினமு நுவல்பொயா மொழிக்கெதிரோர்
கரியகோல் பிடித்திசையு மாடற்ப யின்றன;
கனலதா மலைக்கருகினிலவுகோ புரத்துயுமோர்
கவிஞனா தியிற்பகர்பல் பாடற்று தைந்தன;
களிறுநா ணுறத்தொனிசெய் பனுவலா னொருத்தனது
கலியின்வேரறத்திருடி யீயத்து ணிந்தன;
கலைவலார் மிகப்புகழு மிசைகள்போயிற்றவசி
கவலைதீர் வதற்கொருக ளாசத்தியைந்தன;
கரையிற்பா லையற்குவகை பெருகவோர் கவிக்குரிய
கனவினார் மலர்க்கொடுசெல் வாரத்த மிழ்ந்தன;
கலுழனார் கையிற்றலையை நிருமலா நதிக்குரிய
கரையில்வீ சுமுற்கடிதி லேகிக்க வர்ந்தன;

கழறுமேழ் வகைப்புவியி னுயிரெலா மழத்தனது
களியினான் மிகக்குதிகொள் ளேனத்தை வென்றன;
கயிலையீ சனைப்பொருவு முனிவன்வாய் மொழிப்படியோர்
கடவுண்மா மணிச்சுடிகை வீழத் துரந்தன;
கனியெண்மோ தகக்குவிய லனையவே மிகப்பருகு
கரியனீள் வயிற்றிரவி மேவக் கடிந்தன;
ககனமா நதிப்புனலை யனையநீ ரழைத்துமைகொள்
கனவிடா யறச்செயுவி னோதத்தொ ழும்பின;
கமலவா விவிட்டெழுமோர் முதியதா தையுட்கருது
களவுதீர் தசக்கரம்தான் மேயப் புகன்றன;
கவளயா னையொத்தொளிரும் வழுதிகடன் விடச்சுரமோர்
கணநிலா தறத்திருவெண் ணீறிட் டுகந்தன;
கடுவைநே டுடற்சமண முனிவரர் முழுக்கொடியர்
கழுவிலே கிடத்தமிழை வாரிச் சொரிந்தன;

மருவறா மலர்க்கணைக ளளவில்கோ டிதைத்துருகி
மகளிற்சே னையிற்குரிமை மீறிப்பு ணர்ந்தன;
மதுரசா கரத்தமிழை யுதவுசீ ருடைப்பொதியை
வரையின்வாணர் மெய்த்தவசி போலப் படர்ந்தன;
வகுளநாண் மலர்த்தொடையல் புனையுவேண்மு தற்சிலருண்
மகிழ்வெலாமறப்பெருகு கோலத்த மைந்தன;
வரதமா னதைப்பொருவி லபையமா னதைக்கொடுதன்
வலிமைநா டுமுத்தமர்வி சாரத்தை விண்டன;
மறவனோ டுகைச்சமர்செய் திரவிலோர் கொடிக்குவகை
மலியுமா றெழிற்கயல்கண் மீளக்கொணர்ந்தன;
மறதியா லுனக்களியின் முடுகுவான் வெளிப்படவு
மனையின்மே யதிற்சிறிதி லாமற்ப கிர்ந்தன;
வயதினால் மிக்குயரு மவள்முனா வலிற்கடியின்
மணலிலோர் பழத்தினைய நாள்விட் டெறிந்தன;
மறுவிலா வரைக்கவிதை யொருவனோ தலிற்புளிய
மரமதூடு கொப்பொடிவ தாகத் தெரிந்தன;
மனையிலாது மற்றவரை யனையெனாநினைப்பவன்முன்
மணியினா வறப்பகர்த லாதிக்க மர்ந்தன;
வனசலோ சனத்தொருபெண் முடியின்மேல் விழித்தகுகல்
வழுகுமோர் படிக்கடியி லேநிற்கைக் கண்டன;

வயினவாத ரத்தொருவ னிசையுனாளின் முற்புனையும்
வளையமா மடற்றளைக ளோவத்தொ டர்ந்தன;
வயிரவாதி கட்களவினிணமுமூணு மிக்குதவும்
வலியபோரி னுக்குரிய வீரத்த ழுந்தின;
மனதுவேறு பட்டிடுத லிலதுநாடி நிற்பவர்கண்
மறலிதூதருக்கயர்வுறாமற்றி ரிந்தன;
மலையிலேறி முற்புவியி லுருளுமாண வச்சிறுவன்
மடிவுறாதெ டுத்துலகி லேவிட்ட வம்பின;
வரியிராவினத்தரசர் பலர்சொனாலு முற்றுதலின்
மகிமையாண்மை யொப்பனவே லாமுற் றடர்ந்தன;
வளமைசேர் திருப்புகழை மொழிகுவார் களுக்கெளிய
மயிலமா மலைக்குமரன் வாகைப்பு யங்களே. (12)

நேரிசை வெண்பா
புயலார் மயிலமலைப் புண்ணியமே போல்வான்
கயலார் கண்வள்ளி கணவ—னியல்பாரப்
பாடுமடி யேன்றனக்குப் பத்தர்மனப் பங்கயந்தோ
றாடுமடி யேன்றரமாட்டான். (13)

கட்டளைக் கலித்துறை
மாட்டாத வென்னை வலியவந் தாட்கொண்டு வண்கமலத்
தாட்டா மரைத்தொண்டு செய்யென்ன முன்பு தடுத்துநின்றான்
கேட்டார் மகிழ வரங்களெல் லாந்தருங் கீர்த்திகொண்டு
பாட்டா லுயர்மயி லாசனத் தோங்கயிற் பண்ணவனே. (14)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
பண்குலவு செந்தமிழானின்கமலத் திருவடியே
        பரவு மென்முன்
கண்குலவு தோகைமயிற் பரிமீதி லொருதரநற்
        காட்சி யீந்தாள்
பெண்குலவு மொருபாகம் பிஞ்சகனுக் குபதேசம்
        பேசும் வாயாய்
திண்குலவு மயிலமலைக் குருபரனே வேலணியுந்
        திரடோட் சேயே. (15)

எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
சேயமா முகங்க ளாறுடைக் குமர
        தேசிகன் திருக்கைவேற் பெருமான்
றூயவெண் சேவற் கொடியணிந் தாடுஞ்
        சுப்பிர மணியனை யன்றி
மாயவன் பிரமன் கணபதி முதலாம் .
        வானவ ரிலையென வுணர்வார்
தாயக மான மயிலமா மலைச்சீர்
        சாற்றிடத் தக்கவர் எவரே. (16)

எண்சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்
எவர்களும்புகழு மயில்ம லைக்குக
        னெனமொ ழிந்தவன் திருச்சர ணத்திடை
தவமுயன் றுறையு மனமுள் வித்தகர்
        தமையடைந் தவர்கள் பெறுவன செப்பிடி
லவனி யெங்குநிறை தருபுகழ் சத்திய
        மதிவி தங்குலவு மதுரந யத்தமிழ்
சிவமு குந்தனயன் மகபதி யொப்பவர்
        திறமை யின்பமலி சமரச முத்தியே. (17)

இரங்கற் றாழிசை
முத்த மனைய நகைமடவீர்
மொழியக் கேளீ ரென்கனவின்
முன்ன மொருநாண் மயிலமலை
முருகக் கடவுள் வலியவந்து

சித்தங் கவர்ந்தான் வளைகவர்ந்தான்
சேலை கவர்ந்தான் திறல்கவர்ந்தான்
சிறிது நாணமில்லாமற்
றேடித் திரிந்து நகைவிட்டான்

பைத்த வரவக் கடிதடமும்
பணைத்த முலையும் மதவேளும்
பரவைத் தொனியும் பிறவுமெனைப்
படுத்து துயரஞ் சகிக்கறியேன்

எய்த்த குரவங் குவளைவெட்சி
நீப முதலா மாலைகளி
னேரு மொன்றை யெனக்காக
நீர்போயிருந்து கொணர்வீரே.(18)

நேரிசை வெண்பா
வீரவடி வேற்கை வித்தனை வெள்ளிமலைக்
காரன்விழித் தீயில்வந்த காரணனை—நீரருவி
கோட்டுமயி லாசலத்திற் கும்பிட்டுக் கொண்டபின்னு
மீட்டுமயி லாரிடஞ்செல் லேன்.(19)

கட்டளைக் கலித்துறை
ஏனலங் கானிற் பரண்மீதிருந்த விளங்குறத்தி
பானலங் காமற் குருகிப் பணிந்தவன் பண்ணவற்கா
வீனலங் காதிபற் செற்றோன் மருக னெனத்துதித்து
நானலங் காண மயிலா சலத்தினை நண்ணின்னே. (20)

கலி விருத்தம்
நண்ணல் கண்டு நமக்கு மயிலம்வா
ழண்ண லோர்வர மாயினு நல்கிலான்
கிண்ண நேர்முலை கீர்த்திகைப் பானுகர்
வண்ண வாய்ச்செயல் வன்மையில் வன்மையே. (21)

கலிப்பா - கைக்கிளை
வன்னமுலைத் துணையை வாய்மொழியைத் தாழ்குழலை
நன்னயஞ்சேர் கண்ணைமிக நம்புமென்னை நத்துகில்லாய்
கன்னல்விற்கை மாரன் கடும்போர் விளைக்கின்றான்
என்னடிநான் செய்வேன் எழின்மயிலத் தேந்திழையே. (22)

தாழிசை : நெஞ்சுவிடு தூது
ஏந்து பூண்முலை மங்கை மார்களை
யேவினாலவர் தங்களுக்
கின்ப மெய்திட நாடி வாடி
யிறைஞ்சு வாரெழின் வண்டினம்

பூந்துணர்கடம் பார மீது
பொலிந்த தேன்மிக வுண்டுதன்
புந்தியின்றி மயங்கு மஞ்சுகம்
பொற்பு யத்துறு நற்கிளி

வேந்து டன்களி கூறு நாரைகண்
மெல்லெனப்பக ராதுபோ
மேக மாதிய யாவு மென்றன்
விருப்ப முற்றுரை யாதவே

நீந்து தற்கரி தாகு மென்றுயர்
நெஞ்ச நீயறி கின்றயா
னீடு சீர்மயி லாச லக்குக
னேரி னின்று நிகழ்த்தவே. (23)

நிலைமண்டில வாசிரியப்பா

நிகழ்த்தரும் பெருமை நிலவுதென் மலயத்
தகத்திய முனிவர்க் கருளிய வீறும்
பண்டுநற் கீரன் பருவரல் ஒழித்துத்
தொண்டுகொண் டவிர்தரு தூய புகழுங்
கருணையே வடிவ மாகக் காண்டரு
மருணையூர் புலவர்க் களித்தசெந் தமிழுங்
கடனடு விழுந்து கரைமடத் தவிர்தரு
திடமதி பாலய னாதிய சித்த
ரெண்ணிலாற் குதவு மெழிற்பெருஞ் சிறப்பு
நண்ணிநின் றன்பா னானும்வந் தடுத்தே
னென்பெருங் குற்றமி யம்பரி தாயினும்
நின்பெருங் கருணை நினைக்கரும் பாற்றாற்
றவிர்க்குமென் னுன்னித் தமிழ்கொடு சிறிது
கவித்தொடை வனையக் கருதின னாதலி
னைஞிறக் கலாபத் தணிக்குடை பறிக்கு
மஞ்ஞைவா கனத்தின் மரகத வண்ணக்
கிள்ளையோர் பாகங் கிளர்தர வொருபால்
வெள்ளைமால் களிறு மேனாள் வளர்த்த
பொன்னிறத் தன்னம் பொலிதர நடுவி
லுன்னிய பதினாறுருவிலொன் றெடுத்துச்
சேவலுந் தண்டுந் திருக்கை வேலும்
பாவலர் பனுவல் பகர்வன பிறவும்
திகழ்தரும் வந்தருட் சேவை நல்கிப்
புகழொடு தவமும் பொருந்தவைத் தருள்வாய்
தென்னையு மாவுஞ் செருந்தியுங் குருந்தையும்
புன்னையும் பிறவும் பொலிதரு சாரற்
குயிலினம் பாடக் குரங்கினங் கொட்ட
மயிலின மாடும் வளந்திகழ் மயில
மாமலைக் கோயில் வயினினி தமருங்
கோமளக் குமர குருபரக் குகனே.(24)

நேரிசை வெண்பா
குகனே மயிலமலைக் கோமானே யீசன்
மகனே யெனத்தினமும் வாழ்த்தி—முகமாறும்
பன்னிரண்டு தோளும் பதமிரண்டு நாடுணர்மு
னென்னிரண்டு கைகுவியு மே. (25)

கட்டளைக் கலித்துறை
குவிக்குங்கைத் தொண்டரைக் காப்பான் மயிலக்
        குவட்டிறைவன்
செவிக்கென் றுயரமெல் லாமுரைத் தாடருஞ்
        செய்யதழை
கவிக்கின்ற திங்கட் குடைமத வேடன்
        கணையைவென்று
புவிக்கண் ணிறைந்த புகழ்வானத் தூடும்
        புகச்செய்ததே. (26)

மடக்குக் கொச்சகக் கலிப்பா
புகழனந்த முறவாக்கும் பொருளுநல்கு முறவாக்கும்
மிகலறுக்கு மயிலமலை யிடஞ்சேர்க்கு மயிலமலை
மகனெனினுங் களித்தாளு மவண்கொடிதாங் களித்தாளு
மிகவதனிற் செய்வேளே வினைவிலக்குஞ் செய்வேளே. (27)

கலிவிருத்தம்
வேளைக் குதவிடு மெய்ப்பொருள் வினைவே ரறவென்று
தாளைத் தலைமிசை வைத்தரு டருசண் முகமுருகோன்
வாளைப் பொருகண் ணாருடன் மகிழும் திருமயில
நாளைக் கெனுமொழி யின்ப முண்ணுகச் செயினலமே. (28)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
நலங்குலவு மயிலமலைக் குமரேசன் திருவடியை
        நண்ணி டாமல்
விலங்களொறுஞ் சென்றிரந்து பட்டசள மித்தனையென்
        றியம்பப் போமோ
கலங்கரிய நெஞ்சகத்தோ டாறெழுத்தைத் தினந்தோறுங்
        கருதி யன்பாற்
றுலங்குபுகழ்க் கடன்மூழ்கேள் வேடமாறாமிகத்
        தோய்ந்த நானே. (29)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
நானும் நீயுமற் றனைத்துமொன் றெனப்பல
        ஞானநூல் சொலக்கேட்டு
மூனு மாவியு மொன்றெனுந் துணிவுகொண்
        றுழன்றிட விடலாமோ
தேனு மாவுமுன் றருமொரு குறமகள்
        சிறுபதம் பணிந்தோனே
வானு ளார்வரும் பொழின்மிகு மயிலமா
        மலையுடைக் குகவேளே. (30)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
வேள்விடும்பூங் கணைகளைந்து தைக்க மேனி
        மெலிவடைந்து வெண்ணகைவாய் மின்னா ருண்கண்
வாள்விடத்தா லிறந்தமுதற் பிழைக்குஞ் சிந்தை
        வசமாமென் றனக்கிரங்கா வன்மை யேதோ
கேள்வியுற்ற நிந்தைமொழி போதா தேயோ
        கிளிதானென் றனைப்பலகால் கிளத்தி லாயோ
கோள்விலக்கு மயிலமலைக் கோயி லானே
        குன்றுதொறு நடமாடுங் குலத்தாட் கோவே. (31)

மடக்கு : கட்டளைக் கலிப்பா
கோவில் கொண்ட குறிஞ்சியி ராகமே
கூறக் கேட்கை குறிஞ்சி யிராகமே
வீவின் மேனி முதிர்ந்தவராகமே
வென்று மீண்ட தெதிர்ந்த வராகமே
காவி செங்கடம் பம்புய மாலையே
கான வள்ளி கணம்புய மாலையே
ஆவி யென்பவர் காட்சி மயிலமே
அன்பர் வேண்டருட் காட்சி மயிலமே. (32)

குறளடி வஞ்சிப்பா
மயிலெனநடித் தயிலெனவிழித்
தொழிலுறநடந் துயர்கவர்பல
ரிருபூண்முலைக் கருதாமருண்
டருளாவலற் றிருள்பாழ்மனம்
போலும்பதஞ் சாலுங்கவி
மாலுண்டுளார் பாலுந்தினந்
தேனெனவினித் தூனையுமுருக்
கீனமில்கவி யானவிலகிலேனிதனாற்
செந்தகைக் கிரியெனச் சிகிமேல்
வந்தருள் செயத்தகு மயிலத் தரசே.(33)

பதினான்குசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்

சேயநின் முகங்கள் பூதமோ ரைந்துந்
திகழ்பரப் பிரமமு மாகுந்
திறன்மலி திரடோ ளகப்புற மெனநூல்
செப்பிய பன்னிரு சமயந்

தூயவர் விரும்புந் திருவடித் துணைபல
சுருதியா கமப்பொருண் முடிபு
துலங்கவே லுலகைத் தருமவன் மற்றுஞ்
சொலும்படை யுருத்திரத் தலைவர்

மாயவன் முதலோர் வணங்கிடு மொருவன்
மயிலுடன் சேவலு மீசன்
மலையமா முனிவன் பாலைய னனையார்
வழிபடுஞ் சீடரிவ் வாறே

யாயசீ ரனந்த முடையநீ யெளியேற்
கருள்செயா திருப்பது முறையோ
வருவிசூழ் மயிலா சலப்பெருங் கோயிற்
கழகிய குமரநா யகனே. (34)

நேரிசை வெண்பா
நாயிற் கடையாகி நானிலத்தூரத்தனைக்கும்
போயிற் றொருமிரக்கும் போலென்றன்—வாயிற்
றமிழ்மணக்கச் செய்தபிரான் றையநல்லார் கொங்கைச்
சிமிழ்மணக்குந் தென்மயிலச் சேய். (35)

கட்டளைக் கலித்துறை
சேயிலங் குந்திரு வுள்ளமுள் ளீரொன்று செப்புகின்றேன்
கோயிலன் குன்றக் குறிஞ்சியெங் கெங்குங் குறுகிநொந்து
வாயிலங் குன்றி வருந்தாம லெங்கண் மயிலவெற்பின்
மேயிலங் குங்குமக் கொங்கைமின் னாற்பொன் வெறுத்துய்மினே. (36)

தாழிசை - மடக்கு
மின்னிலங்கிய வேலனென்சிறு மின்னிணக்கம் விரும்பிலான்
        மேவலர்க்கெம ஞானவேண்மகன் மேலநாடுத லோர்கிலான்
பன்னிரண்டு செவிக்குகன்சிலர் பன்னிருஞ்சொலி நாவிலான்
        பாடுவார்க்கருள் கந்தனீங்கிவள் பாடுகண்டு பரிந்திலான்
மன்னிடும்புகழ் சேந்தனைங்கணை மன்னிடும்பை மறுக்கிலான்
        வாரணக்கொடி கொண்டசேய்முலை வாரணத்துயர்மாற்றிலான்
வன்னிசேர்கரத் தண்ணலார்மகன் வன்னினைப்பை விடுக்கிலான்
        மயிலமாமலை வள்ளலியான்பெறு மயிலின்மட்டிலின்வஞ்சனே. (37)

அம்மானை
வஞ்சமெல்லாந் தீர்க்கு மயிலமலை வாழ்முருகோன்
கஞ்சனரி யீசனுக்குக் கண்டனன்கா ணம்மானை
கஞ்சனரி யீசனுக்குக் கண்டனனே யாமாகிற்
கொஞ்சங்கரு மங்கைக் கொண்டதே னம்மானை
கொண்ட தமரக் குலத்தினரா லம்மானை. (38)

தாழிசை
அம்மானை யாடிகழங் காடிமுத் தாடி
யணிமேவு பந்தாடிச் சிறாரோடு விளையாடி
யயல்வாடி யயர்வின்றியே

செம்மானம் வருமட்டு முச்சில்வைத் தாடிச்
சிரித்தாடி யென்சோலைத் தொட்டாடித் தினந்தோறும்
மறவாது சீராடுவாள்

பொய்ம்மா னுடன்போன வன்றங்கை மைந்தனைப்
பொறிமஞ்ஞையிற் புகழ்கொண்ட மயிலாச லச்சார
லிற்கண்ட போதேயெனைச்

சும்மாவி ராதேய வன்பாலெ னக்கான
சொற்சொல்லெனச்சொல்லத் துணிந்துறங் காளெ
னெஞ்சந்து டிக்கின்றதே. (39)

வஞ்சி விருத்தம்
துடியடிக் களிற்றின் றோழனை
யடியர்சூழ் மயிலத் தண்ணலை
வடியயிற் கரத்து வள்ளலைக்
கொடியனென் றுரைக்கக் கூடுமே.(40)

கொச்சகக் கலிப்பா
கூடுமவர்க் கருள்வேளைக் கூடாரைக் கொல்சேயை
யாடுமருட் கொடியானை யாடாம லசைப்பானைத்
தேடுமன்பர்க் கெளியானைத் தேடாரைத் திருந்தானைப்
பாடுநருண் மயிலத்தைப் பாடாதார் பதர்தாமே. (41)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருந்தம்
தாமரைக்கண் முகுந்தனென வளர்ந்து காட்டுந்
        தனிமயிலா சலக்குவட்டின் தவத்தோர் போலுந்
தூமணிமண்டபத்திலிரு மகளி ரோடுந்
        துவர்மேனி யெழிலோங்கத் தொண்டர் சூழ
வேமவடம் பூண்டவிர்செம் மணிப்பீடத்தி
        லெழுந்தருளி யினியதமிழிசைகேட் டும்பர்க்
காமகளி ரங்கைவழி யாடீ ரூச
        லயில்வேற்கைப் பெருமானே யாடீ ரூசல்.(42)

இன்னிசை வெண்பா
ஊசற் குழைமடவார்க் குள்ளத்தை யொப்புவித்து
நாசப் படாத நலமளிக்க வல்லாயோ
மாசற்ற தென்மயில மாமலையில் வண்டுமொய்க்கும்
வாசக் கடம்பணிதே வா. (43)

கட்டளைக் கலித்துறை
தேவருக் குஞ்சசி கேள்வன் றனக்குஞ் சிவமுதலா
மூவருக் குந்துணை யாமுரு காவென்று முன்னுமன்பர்
யாவருக் கும்பொது வாய்மயி லாசலத் தெய்தினர்க்கே
பூவருக் குந்தள ராவுண்மை ஞானப் பொருளெய்துமே. (44)

கலிநிலைத்துறை
பொருசேவ லணிநீடு மயிலாச லத்தெந்தை
        பொதுவாய்மையிற்
றருசேவை யொருவாறு பெற்றோர்ம லர்த்தாட
        லைக்கொள்வதே
குருசேவை முதலாய பலபேறு மென்னுங்கு
        ணத்தோர்களாற்
றிருசேரு மருமத்தன் முதலாக நூல்சொன்ன
        சிலருய்வரே. (45)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
உய்யநல் வரந்தந் தாட்கொண்
        டுலகரோ டுழலா வண்ணஞ்
செய்யநின் புகழே நாடுஞ்
        சிந்தையுந் திகைக்க லாமோ
பையர வருந்துந் தோகைப்
        பரிநடம் பயிலுஞ் சோலை
மையறா மயிலக் குன்றில்
        வதிதரும் வளமை யானே.(46)

தாழிசை
வளம லிந்த மயில வெற்பின் மன்ன ரென்னை முன்னைநாள்
        வலியவந் திரந்த ணைந்த வன்மை யொன்று மறிகிலா
யளவி லாத வுண்மை சொல்லி யவைம றந்து வஞ்சமா
        யவரி ருக்கை நீத மென்ற றைந்தி டத்த காதடா
பளபளத்த வேல ணிந்த பன்னி ரண்டு தோளிலென்
        பாவி நெஞ்சிருந்தும் வேறு பாவை மாரை நாட்டினாற்
களவினீயுரைத்த தூது போது நீடில் பாணர்போய்க்
        கந்தர் பாலுன் னெஞ்சறிந்த கன்னி யென்று பன்னிடே.(47)

வேற்றொலி வெண்டுறை
பன்னிரண்டு தோளானைப் பவளமலை யனையானைப்
        பழுதி லாறு
சென்னியுடை குருபரனைத் திருமயிலக் கிரிபுரக்குஞ்
        சேயை நாளு
முன்னியுன்னி யுறங்கிடா யுறங்கிடா........
        ……………….
நன்னிலத் தலைவ ஞானிகட் கானதே.......
        …………….. (48)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
ஆனையுரு வானதிரு ஞானமிசை தோன்று
        மழகியசண் முகத்தொருசெங் குழவியினை முன்னாள்
பூனையுய்யச் செய்தானைத் தேனைநிகர் பாடற்
        பொழிவாருக் கருள்புரியும் விழிமூவா றுடைய
கோனை நெடும் பனிவரையின் மேனைமக டன்னைக்
        கொற்றவைவே லெனக்கரத்திற் பற்றவல்ல குகனை
மானையொக்கும் விழியார்கண் டீனமுறப் பவனி
        வரும்பரனை மயிலவெற்பில் விரும்பியதென் மனமே.(49)

இரட்டை யாசிரிய விருத்தம்
மனமுனது திருவடியை யல்லாது மற்றொன்றின்
மருவாதி ருக்கு மியல்பும்
வாக்குனது புகழன்றி வேறுவித மொன்றையும்
வழுத்தாத வன்மை நெறியும்

கனபணியு னக்கன்றி வேறொருவ ருக்குமுயர்
காயமுய லாத நிலையுங்
கமழும்ப னீரிலையில் வைத்தவெண் ணீறுகொடு
கடையனேற் கமைய வருள்வாய்

புனமறம டந்தையொடு பொன்னகர்ப் பிடிதழுவு
புயநிரைபொ லிந்த புனிதா
புனலிகுர வங்கடம் பிந்தீவ ரஞ்செச்சை
பொற்பணி யுடன்பு னைந்தா

யனவரத நடனவிலு மரகதம யூரத்தி
லயில்வேலெ டுத்து வருவா
யணிமயில மலையினது தலையினிதம் விளையாடு
மானந்த முருகேச னே.(50)

நேரிசை வெண்பா
ஏசகன்ற பல்பாட் டிசைந்தபுகழ்த் தோள்களிலென்
மாசடைந்த சொல்லும் வனைவானே—யீசனுக்குச்
சொன்னதனைக் கிள்ளையொடுஞ் சொல்லிமயிலாசனத்தின்
மின்னவிர்வேல் பற்றிநிற்கும் வேள்.(51)

கட்டளைக் கலித்துறை
வேளஞ் சித்தன் னுருமாறித் திரிய விளங்கெழிற்சேய்
வாளஞ் சிறந்தகண் ணார்நட மாடு மயிலவெற்போன்
காளஞ் சிறிதுமில் லாப்பொருள் கேட்டுய்ந்த கண்ணுதற்பால்
றாளஞ் சிவிகைபெற் றுத்துதி பாடிய தன்மையென்னே. (52)

கலிநிலைத்துறை
என்னே யமுநின் றிருக்கூத்து மிரண்டுமொன்றா
யின்னே களிகூற வைக்குந்திற லில்லைகொல்லோ
மின்னேர் சடையான் முதலாகிய மேலவர்க்கோர்
மன்னே மயிலாசலக் கோயிலில் வாழ்பிரானே.(53)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
வாழுங் கிளியி னிலைநீங்கி
        வளர்மென் முகையா முலைபசந்து
சூழு மனையா ரிடைநாணிச்
        சோர்ந்து வாடித் தளர்வெய்தி
வீழுங் காய மிகக்காய்ந்து
        வேனிற் சகியா வியன்கோங்கென்
பாழு மகள்போன் மயிலமலைப்
        பவளக் குகன்மால் படைத்ததுவே. (54)

கலித்தாழிசை
படையாலொரு முதுசூருடல் பப்பாதி யாகப்
        பண்ணுங்குகன் மயிலாசல நண்ணுங்களி யுடையே
முடைநாறிய வூணுண்பவர் முன்னேகியு நில்லே
        முதிர்செந்தமிழ் பொழியுஞ்சில முனிவர்க்குற வாவேம்
விடையேறிய பரமன்றலை மீதேமுயலகனும்
        விறன்மாயவனதுசெங்கையின் மிளிர்கின்றவை வேலு
மடையாள மெனக்கூறிடு மவருக்கிழி வுரையே
        மயன்மாதை வெறுக்காதல ரறையும்புகழ் நமதே. (55)

எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
நமனஞ்சிய பெரியோரவர் தவமிஞ்சிய பயனாமென
        நவிலும்பனு வலைநாடொறு மிகழ்தீயார்
தமரென்றுழல் வதுபோயனு தினநின்பணி புரிவேனொரு
        தரமிங்கித மயில்மேலெதிர் வருவாயே
குமரன்குரு பரவேள்குகன் முருகன்சர வணநீர்தரு
        குழகன்றுணை யெனவோதுநர் செவியூடே
யமலன்பெற மொழிதாரக விபரஞ்சொலி மயிலாசல
        மதினின்றருள் பொழிசீர்திகழ் கிழவோனே.(56)

மருட்பா
கிழமுனிவன் வேடமிட்டுக் கேகயத்தை விட்டுப்
பழகிவஞ்சஞ் செய்தகுறப் பாவை குழல்சரியச்
சேர்ந்தளி கூர்வான் திகழ்தரு மயிலத்
தார்ந்தமெய்யடியவர்க் கஞ்சிக்
கூர்ந்தபூங் கணையான் கும்பிடல் லியனே. (57)

தாழிசை : மடக்கு
வியனார் கமல மலரினமே
விளம்பு முலக மலரினமே
வெள்ளை நிறத்துக் குருகீரே
வேண்முரி நிறத்துக் குருகீரே

கயலின் குலமே கேதகையே
கருத்தைச் சுடுமே கேதகையே
கருங்குவளையே கடனுரையே
காணேன் வளையே கடனுரையே

புயல்வந் தருந்துங் கசப்புனலே
பொருந்து முறவுங் கசப்புனலே
புளினத் திடரே யளப்புனையே
பொல்லா திடரே யளப்புனையே
வயமிக் குளவன் பேரொலியே

மயிலத் தொருவன் பேரொலியே
மயலி னிலையஞ் சகியேனே
வந்தா ளிலையஞ் சகியேனே.(58)

நேரிசை வெண்பா
ஏனமற மங்கைவைவேற் கிட்டானை யீடில்பசுங்
கானமற மங்கைவைவேற் கைக்குகனை—ஞானமற
மங்கையத்த ரேயா மயிலத்திற் கண்டுசென்னிக்
கங்கையத்த ரேயாக லாம்.(59)

கட்டளைக் கலித்துறை
கலையான வத்திர வாணி புகழுங் கவின்மயில
மலையான வத்திர வாணிந்தை யேனையும் வாழ்விக்கும்வே
ணலையான வத்திர வாணிபங் குன்றொடு நந்தவென்§È¡
னிலையான வத்திர வாணித்தர் போலு மியல்பினர்க்கே. (60)

அறுசீர்க் கழிநெடிலா சிரிய விருத்தம்
இயல்வளமு மலைவளமும் பொழில்வளமும் புனல்வளமு
        மிமையோர் போற்றும்
புயல்வளமு மற்றுமுள்ள பலவளமுந் திகழ்மயிலம்
        புரந்த செவ்வேள்
கயல்வளமுங் காட்டியநெடுங்கட் குஞ்சரிக்குங் குறமகட்குங்
        கணவன் செந்நெல்
வயல்வளத்தண் மருதமுத னானிலத்துஞ் சென்றாடி
        வருத லுண்டே .(61)

எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
வரும மின்றிய தொண்டருக் கருட்செயு
        மயில மாமலைச் சேய்க்குத்
திருநி லாவிய பரங்கிரி யோகஞ்
        செந்திலம்பதி சோலை
மரும மாமலை யாவினன் குடிமுதல்
        வண்டமிழ்ப்புல வோர்சொல்
பொருவி லாயிரங் கோடிக ளாகிய
        பொருப்பெ லாந்தன தூரே.(62)

அடிமடக்குக் கொச்சகக் கலிப்பா
தனம்பகவானவர்மீதே தனம்பகவா னவர்மீதே
விளம்பரவு பதியென்னா வினம்பரவு பதியென்னா
வுனம்புயத்தாட் டுதியாதோ வுனம்புயத்தாட் டுதியாதோ
கனம்படரு மயிலமனே கனம்படரு மயிலமனே. (63)

தாழிசை
அமலன்புகழ் மயிலாசல மதில்வாழ்சிவ ஞானிக்
கருள்செய்தயி லணிதோளுட னருகிற்றிகழ் சித்தன்
றமரென்றுள பலசித்தர்கடந்தாண்மலர் மகரந்
தலையிற்புனை தருசித்தர்த மைபேணிட லுள்ளே
மெமதன்பைவி டாதேபல மீயங்கொடு வந்தா
லெண்ணூறுவ ருடமாயுளி லிலங்கச்செய வல்லே
முமலதடை யறியேமிரு நரகர்தரு வாயேன்
முன்கட்டிவெ ளுக்கச்செயு முறையுந்தெரி வேமே. (64)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
வேமப்பால் முழுக்காட்டி யாடை சாத்தி
        வெண்ணீறு மிகப்பூசி வேண மட்டும்
யேமப்பாத்திரத்திலன்னம் பருப்பு நெய்பா
        லிருமூன்று சுவையுடனீ யீந்தா யானால்
யாமப்பாலியைந்தரச வாதஞ் செய்வோ
        மிராப்பகல்மாறிடப்புரிவோ மிவையல் லாமற்
சேமப்பா குறுமயில மலைபொற் கோயிற்
        றிருக்கைவேற் சித்தர்தம்பேர் செப்பு வோமே. (65)

நேரிசை வெண்பா
செப்பரிய பலசீர்த் திருமயில மாமலையிற்
றுப்பனைய மேனிச் சுராதிபனை—யெப்படியுங்
காணாம லென்றன் கலிதீர மாட்டாது
நாணாம லுந்திரியே னான். (66)

கட்டளைக் கலித்துறை
நானங் கமழு மயிலா சலத்தி னடிக்குமருட்
கோனங் கமழு மயிலா சனத்தினர் கும்பிடுந்தா
ளானங் கமழு மயிலாசலத்தின னன்றடர்சூர்
வேனங் கமழு மயிலா சலத்தினல் வீட்டிடுமே. (67)

கலிவிருத்தம்
வீட்டு நேய மிகுந்துனை நாடுமென்
பாட்டு மாலை பரிந்தருள் செய்குவையோ
காட்டு வள்ளியைக் காவுடை யான்மகளிற்
கூட்டு வாய்மயி லாசலக் கொற்றவனே. (68)

தாழிசை
கொற்ற வர்க்குமுயர் மாத வர்க்குமொரு
கோனெனக்குலவு குமரவேள்
கோழியங்கொடிகொண் மயில் வெற்பிலிரு
கோதையர்க்குநடு மேவுவா

னற்ற மீதெனவ றிந்த ளிக்குமுரு
கைய னெய்யொழுகு மயிலினா
னம்புயக்கழனி னைந்து தெண்டனிடு
மன்பு கொண்டுதமிழ் பாடினான்

மற்ற வர்க்குநிகர் வாழ்வெய்தா துடலு
மனமும் வெள்ளைநிற மாகிடும்
மானி லத்திழியெ றும்பு மோர்பெரிய
மலையெ னத்திகழும் விழியினீர்

வற்ற லின்றிவரு நல்வினைப்பயனும்
வம்ப தாமணியும் வெண்கலை
மண்ண டைந்துநிற மாறு மெண்ணில்பல
வாயி லிற்புகலு மாகுமே. (69)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
ஆகுமதை யழிப்பதற்கு மழிவதனை யாக்கு(வ)தற்கு
        மயிலவேற் குருபரனை யன்றியிலை யெனத்தேறிப்
பாகுநிகர் தமிழ்ப்பாடல் பலபாடிக் களிகூறும்
        பழையோர்கள் பெற்றபயன் படிறேனும் பெறவேண்டி
யோகுடையார் மலிபொதியை யுயர்திருச்செந் தூரருணை
        யொளிர் திருமா மலைபொருனை யுறுமலையா தியதலந்தோ
றேகுமதிற் சலிப்பெய்தி யெழின்மயிலா சலக்குவட்டி
        லின்றுவந்து பாடுகின்றேன் இனிநடப்ப தறியேனே. (70)

வஞ்சித்துறை
அறிஞர்சூழ் மயிலத்
தெறிகதி ரெழிற்சேய்
வெறிகமழ் மென்றாட்
குறிகொளல் குணமே. (71)

நேரிசை வெண்பா
குணப்பிசகுந் தோள்வலியுங் கொண்மறவர் பெண்ணை
மணப்பதற்கு மண்ணிச்சை வைத்தார்—கணப்பொழுதில்
லந்தப்புரத்திருக்கு மாயிழைமா ரெல்லோரு
மிந்தமயி லத்துறுவா ரே. (72)

கட்டளைக்கலித்துறை
வார்வேல் புரக்கு மயிலா சலத்து மறவர்கொம்பைச்
சேர்வேனென் றெண்ணு மரசேயுந் தூதனுந் தேயவழக்
கோர்வேம்பைக் கட்டுத லன்றோமுன் கற்பகத் தூரொழித்த
சீர்வேங்கைக் கோவுங்கோன் மாப்பட்ட பாட்டைத்
தெளிந்துசொல்லே. (73)

கலி விருத்தம்
சொல்லு மாயப் பொருளான சோதியை
யல்லு மாகிப் பகலாகி யல்லதைப்
புல்லு மாறெழின் மயிலப் புங்கவ
னொல்லு மாறுமா முகங்க ளோதுமே.(74)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
ஓதும் பனுவற் றொகையா வையுநின்
        னுபயக் கழல்சூ டிடுமுண் மையுணர்ந்
தேதுந் தனதென் றுரையா வழியா
        லெனையுந் தருவே னிடையத் தகுமோ
காதுஞ் சிலைவே டர்புனத் தினளுங்
        ககனத் தினர்கன்னிகையும் புரியும்
வாதுங் களியா கிநடிப் பவனே
        மயிலத் தொருநல் வரமின் றருளே.(75)

தாழிசை
மின்றயங்கும் வடிவேலணி தோளுடை விகிர்தன்
        விரைமலிந்த பனிநீபமு ளான்வியன் மயிலக்
குன்றெடுத்து மயின்மேல்வரல் கண்டதினாலே
        கொண்டமைய லெனநின்குறி கூறுது கோதாய்!
நன்றவன் சுகம்பெறு வாய்மலை யாதே
        நானுரைத்தது பொய்யல்லநின் னாணைமெய் நம்பா
யென்றனுக்கு நிரைநாழியி னெல்லொடு சோறு
        மெண்ணையுங் கலையுமீந்து விடிப்பொழு தம்மே. (76)

கட்டளைக்கலிப்பா
மகிழ மாமலர் மாலிகை மாரவேண்
        மயிலக் காவில்வ ரக்குயில் வாய்விடச்
சகிக ணிந்தையு மம்புலி யுஞ்சுடத்
        தையல் வாடித்த யங்கிட லாகுமோ
வெகின மூர்த்தியைக் குட்டிய கையனே
        யீசன் மால்பணிந் தேத்திய மெய்யனே
முகில றாமயி லாசலத் தையனே
        முத்தமிழ்ச்சுவை முற்றுணர் தெய்வமே.(77)

இரட்டை ஆசிரிய விருத்தம்
தெய்வங்க ளத்தனையு மொன்றென வுணர்த்திடத்
திருவுரு வெடுத்த தெய்வம்
சிவசமய முதலாக வறுவகைச் சமயமுந்
தெண்டனிட நின்றதெய்வம்

பொய்வலித் தானவர்கள் வலியொழித் தமரர்வளர்
பொன்னுல களித்ததெய்வம்
பொறியனைய குஞ்சரிமு லைத்துணைக் களபம்
பொலிந்தமார்புடைய தெய்வம்

மைவனக் குயிலனைய வள்ளிமின் றந்ததினை
மாவினின் மகிழ்ந்ததெய்வம்
வண்டமிழ்ப் புலமைதிகழ் கவுமாரருக்கினிய
வரமெலா முதவுந்தெய்வம்

வைவதற் கஞ்சாத கொடியேனை யன்றுதிரு
மலைமீது காத்ததெய்வம்
மயில்வாகனத்தெய்வம் மயிலார் புரத்தெய்வ
மயிலாச லத்தெய்வமே.(78)

நேரிசை யாசிரியப்பா
தெய்வப் புலமையுந் திருப்புகழ்ச் சிறப்பு
மைவகைப் பொறிகட் கடங்கா வறிவுந்
தொண்டர்தம் பணியுந் தூய நெறியு
மண்டலத் தரையரும் வணங்கு மாண்பு
மன்னபல சீரு மடைவது குறித்து
நின்னருட் பேறே நினைத்துநெட் டுயிர்த்துத்
தோகைமா மயிலை சுடர்செஞ் சூட்டு
வாகைவெண் சேவலை வடிவேற் படையை
மூவிலைச் சூல முதிரொளி வயிர
மாயிலம் படர்வாள் வயங்கயற் கட்கஞ்
சக்கரஞ் சங்கு தனிக்கயிறங்குச
மிக்கசீர் பணிகண் மிகவணிந் துள்ள
பவளமால் வரைநேர் பதினா றுருவிற்
றவளவெண் ணீற்றுச் சங்கரன் பரவுஞ்
சிற்சில வற்றொடுந் தினந்தினங் கருது
நற்செயல் பொலிந்த நாயினேன் மனத்தைத்
தளர்வொடு சலியாத் தகையுறப் புரிவா
னளவில்பே ராட லலைபுனற் பொருநைத்
திருவுரு மாமலை யாதியிற் செய்து
பருவம்வந் தடுத்துப் பதறே லென்ன
விருதரங் கூறி யிறுமாப் புயத்தும்
பருவான் மிடியிற் பட்டார் போலப்
புல்லர்தம் மனைகளிற் போய்வர விடுத்து
நல்லறல் கடுக்கு நறைகுழன் மகளீர்
கணைபிணை யிணைவிழிக் காமர் கனிவாய்
துணைமுலை யிளநலந் தொய்யின் மென்றோள்
திருநிகர் வேளர்ச் சிறுக்கையா தியினு
முருவரச் செய்தனை யொருகணத் தொருதர
மாதலின் மருண்டன னருண கிரியென்
றோதலும் பிறவு மொளியா வண்ணங்
கழீஇயவண் முனிவர் குழாத்தொடு மாசு
கழீஇய மதிநிகர் களிற்றிற் றோன்றித்
தகர்கொணர் வீர வாகுத் தலைவ
னிகரென விளங்கவெண் ணீறளித் தருள்வாய்
பைம்புயற் புனலைப் பவள் மேய்க்குஞ்
செம்புகர் வேழத் திரணெடுந் தடக்கைப்
புழைவழி யுறிஞ்சும் புதுமலர்ப் பொதும்பர்
தழைவளர் மயிலா சலப்பெருங் குவட்டிற்
பொன்ம திற்றிருக் கோயி
னிலவுசீர்பொறுத்த நிமலசற் குருவே.(79)

நேரிசை வெண்பா
சற்குருவாந் தன்மைத் தவத்தோர் தமைமறந்து
நிற்குமிசை மதங்கி நீலவிழி—பொற்குவட்டை
யன்னமயி லாசலத்தா னாறிருதோ ணாடியதா
லின்னமிசை யாதிருந்த தே. (80)

கட்டளைக்கலித்துறை
இருஞ்சூலங் கொண்ட வயிரவர் போற்று மிகன்மதங்கி
வருஞ்சூரைக் காற்றெனச் சீறிச்சி னத்தழல் வாய்திறந்து
பெருஞ்சூத ரான புறமதத் தோர்களைப் பிய்த்தருந்திக்
கருஞ்சூதங் கொன்ற பிரான்மயி லாசலங் காண்பவனே. (81)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
பவச்சாதி யாமதங்கி தருநரம்பு பஞ்சினுக்கும்
        பருவ நல்கு
மவச்சாலர் வெய்யின்முன்னிற் றவிப்பாரைக் கழல்புரக்கு
        மன்றிப் பின்னுந்
தவச்சார்பி லுயர்வசிட்டன் கைக்கொண்டான் மதனடியார்
        தவிப்பார் கொல்லோ
நவச்சாமை பயிரெள்ளா மயிலத்தா னன்பர்சொல்லு
        நவைச்சொற் கேட்டே. (82)

கலிவிருத்தம்
கேட்டினுக்கு ளஞ்சிநின் கிளித்தமிழ்க்கிளத்துவேன்
மாட்டிரங்கி டாதிருக்கும் வன்மையென்ன வன்மையோ
கோட்டினத்துயர்ந்தவன்மை கொண்டதான மயிலம்வாழ்
தாட்டிகச்சடானனச்ச ரோசமுற்ற தலைவனே.(83)

வேறு: கலிவிருத்தம்
தலையாலன் புடனேயுனைச் சந்ததமும் பணிவேன்
முலையானைக் கிடைபோமென் மூடமொழித் தருள்வா
யிலைவேல்கொண்டவனேதக ரேறியசேவகனே
யலைசூழ்பார் புகழ்சீர்மயி லாசலவித் தகனே.(84)

எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
வித்தை யாலும்வருந்தி டாதுன்
        விரைப்ப தாம்புயம் வேண்டுவேன்
முத்தை யணிந்தவெண் ணீற ணிந்தொரு
        முத்த முந்தர வல்லையோ
தத்தை யொன்றுகு லாவு திண்புய
        சண்மு காமயி லாசலத்
தத்தை தங்கையோ டாடல் கண்டுவப்
        பான சீர்புனை யண்ணலே.(85)

பதினொருசீர்க் கழிநெடிலாசிரிய வண்ண விருத்தம்
அண்ணற் கொருபொருள் பேசுநின்
வன்மைப் புகழ்மிக வோதியு
மன்னச் சிறுநடை யான்மயன்—மிஞ்சு தீயேன்

விண்ணப் பமுமுன தாறிரு
நன்மைச் செவியினு ளேகிமுன்
வெம்மைக் கலிகெடு மாறுபு—ரிந்திடாதோ!

கிண்ணத் துணைமுலை வேடுவ
மின்னுக் கெதிர்பசி மீறிய
கின்னக் கிழமுனி யாயும—ணந்து ளானே!

வண்ணத் தமிழ்மயி லாசல
நண்ணித் தொழுமடியார்களை
வன்மைச் சமனணு காதருள்—கந்த வேளே!(86)

பதினாறுசீர்க் கழிநெடிலாசிரிய வண்ண விருத்தம்
வேளணி மலர்ச்சமரு மீனமலி வுற்றபுலை
மேவியநெறிக்கயவர்—பகையும் வீணே
வீடுதொ றலைக்குமிடி நோயுமிக லிற்றமியன்
வேதனைபொறுத்துழல்வ—தறிகிலாயோ

காளவிட மிக்கொழுகும் வாயரவி னைப்பருகு
கானமயி லிற்கலப—நிழலி னூடே
காதலிரு வர்க்குநடு வேலுடநு தித்தளவில்
காலபய மற்றநிலை—யுதவு வாயே

வாளவுண ருக்கரச தாமெனமுளைத்தநெடு
மாமரம றக்கறுவு—புயவி சாகா
வாரண முகத்தமைய னாரொடுப கைத்துலக
மாதிரமு ழக்கவலம்—வருகு மாரர்

தாளநிகர் பொற்புமுலை மாதரனை வர்க்குமொரு
சாமியெனு மெச்சிடினு—மகிழ்கு கேச
தாரணி துதிக்குமயி லாசலமு கட்டில்வரு
தாபதர்த மக்கருள்செய்—தகையு ளானே.(87)

நேரிசை வெண்பா
ஆனதா கின்றதினி யாவதெனுங் காலமற்ற
ஞானபரானந்தநமக்கருள்வான்—வானளவுஞ்
சீரார் மயிலமலைச் செவ்வே ளெனவிலங்கும்
பேரார் குருபரப்பி ரான்.(88)

கட்டளைக்கலித்துறை
பரம்பிய தென்றற் கனல்காட்டி மாங்குயிற் பாட்டொலித்து
வரம்பெறு மாநதி நீருண்ட வேணின் மயிலமலைச்
சிரம்புனை தாளுடைச் செவ்வேண் மயிலிற் செலுத்துமென்றாற்
றரம்படு கார்பனி யென்செய்யு மோயிளந் தையலையே. (89)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
தையலுக்கு முலையரும்பு முதிராக் காலஞ்
        சரசயன மொழிப்பயனுஞ் சாராக் காலம்
வெய்யமதன் கணையெடுத்து வெகுளாக் காலம்
        வியன்கழங்கம் மானைமுச்சில் வெறுக்காக் காலம்
பையனைய கடிதடப்பூ மலராக் காலம்
        பழையமத னூல்சிறிதும் படியாக் காலம்
வையமுதன் மூன்றுலகுந் துதிக்குந் தொல்சீர்
        மயிலமலைக் குகன்மோகம் வந்த தன்றே. (90)

தாழிசை
மலியுங் கருணை விழியான் வானோர்
பரவு பெருமான் வடிவேன் முருகக்
கடவுண் மயில மலைச்சண் முகவே
ளொலிதங் கியதிண் கழல்சே ருபய
சரணங் கருதி யுருகித் தொழுமெய்
யடியார்க் குரிய பணிகள் புரிவார்
கலியை மதனை விதியைக் காலன்
றனையுண் மதியார் கவலைக் கடலிற்
சுழலார் கமழ்செந் தமிழ்முற் றுணர்வார்
புலியைக் கரியை யுரித்தோர் போலுஞ்
சிலரைப் பணியும் புனிதச் சமய
மாறும் புகழத் திகழ்கின்றவரே. (91)

வேறு : தாழிசை
திகழுஞ் சண்முகப் பண்ணவன் வீரஞ்
        செறிந்த பன்னிரு திண்புயன் றேவர்
புகழும் வேலுடைச் சேவக னாண்மை
        பொலிந்த சேவலன் பொற்கொடிக் காரன்
அகழுஞ் சாகரஞ் சூழ்புவி மெச்ச
        வவிந்த சீர்மயி லாசலத் தண்ணல்
இகழுஞ் சிந்தையு ளேனையு மாட்கொண்
        டிடத்து ணிந்ததை யாரறி வாரே.(92)

பெருந்தாழிசை
ஆரார் செஞ்சடைப் பரம னார்விழி
யழலி லுற்ற முருகவே
ளகத்தி யன்முத லான தொண்டருக்
கருள்விளக்கமு னளித்தனன்

வாரார் பூண்முலைக் குறத்தி குஞ்சரி
மருவு திண்புய வானவன்
மயில மால்வரை யருவி நீர்மிக
வந்து பாயுநல் வயலிலே

யேராருழவர் களித்து மையல்கொண்
டேப்ப மிட்டுவந் தடுப்பதா
லினித்த மொழிகள் பேசி சரசத்
திணங்கி நாழிகை போக்குறீர்

காரார் மென்குழல் சரியப் பெரிய
களப முலைகள் குலுங்கிடக்
கவிழ்ந்து நிமிர்ந்து நாற்றை யெடுத்துக்
கையாண் டிடுமின் பள்ளீரே. (93)

நேரிசை வெண்பா
ஈரம் பொருந்தா விதயத் தெளியேனை
வாரம் பெருத்து வலிதாண்டா—னாரம்
போர மயிலத் தன்பர்பகை மாற்றுதற்காம்
வீரம் பெருங்கதிர்வேல் வேள். (94)

கட்டளைக்கலித்துறை : மடக்கு
வேளைக் கருளும் மயிலத்தன் றன்னை விரும்பநன்றே
வேளைக் கருளும் மயிலத்தன் றன்னை விரும்பநன்றே
வேளைக் கருளும் மயிலத்தன் றன்னை விரும்பநன்றே
வேளைக் கருளும் மயிலத்தன் றன்னை விரும்பநன்றே. (95)

தாழிசை
நன்றே வருகச் சிவபெருமான்
ஞானா கரமே வருகமறை
நாலு முணராப் பொருள்வருக
நரைப்பூங் கடம்பு மலர்ப்பவளக்

குன்றே வருக மயிலூருங்
குருந்தே வருக கனகநகர்
கோமான் மகள்சேர் குகன்வருகக்
குறத்தி கணவா வருகவிரைந்

தின்றே வருகக் களிறேறி
யின்னே வருக கழறியவா
றியற்றி யானே வருகவுன
தின்ப [மமுதே] கொடுக்கவருண்

மன்றே வருகப் பலகோடி
மலையாய் வருக வருகவே
மயிலா சலத்தில் விளையாடும்
வாழ்வே வருக வருகவே.(96)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய வண்ண விருத்தம்
வருபல கனவின லொருவா சகமே
        மகிழ்வுட னுரைசெயு முருகோ னிமையார்
திருமக ளழகிய குறமா துடனே
        தருகிய மலைகளிலுயர்வானதுகே
டிருவருள் வளமுறு சிவஞானி யைநேர்
        சிலர்பிரணவமத னுரைதே றியதா
லிருமையு மெளியவர் பெறுமேன் மையினா
        லிசையொடு வளமிகு மயிலா சலமே. (97)

முடுகுத் தாழிசை
சலன மற்றதிரு மயில வெற்பிலரு
டழைவு றக்குரவை—யிடுமினோ
சண்முகக்கடவுள் வள்ளி குஞ்சரித
மக்கெ னக்குரவை—யிடுமினோ

வலமி குத்ததொரு சேவல் வேல்கலப
மயிலெனக்குரவை—யிடுமினோ
வண்டமிழ்ச்சுவைம லிந்தி டப்புலவர்
வாழ்வு றக்குரவை—யிடுமினோ

நலமனைத்துமுத வித்த குந்தசிவ
ஞானி முன்குரவை—யிடுமினோ
நானிலத்துயிர்கண் மிடியிலாவுவகை
நடுவு றக்குரவை—யிடுமினோ

குலம றப்பகுதி யாக மத்தினொடு
கூடி டக்குரவை—யிடுமினோ
கோதை யீர்சிறிய கொங்கை யீரளவில்
குமரி யீர்குரவை—யிடுமினோ. (98)

நிலைமண்டில் வாசிரியப்பா
மின்னவிர்ந் திலங்கு மிளிர்கதிர் வேலும்
பொன்னவிர் மஞ்ஞையும் பொருதகர்ப் பரியுங்
களிறுஞ் சேவலுங் கழறுவ பிறவும்
வெளிறுநீ றணிந்த மேனியும் விளங்கப்
பரசிவன் றிருமால் பதுமப் புத்தே
ளரசிலை போன்றே யவிர்தரு மல்குற்
சசிமினாள் கணவ னாதியர் சார்தரப்
பசிமுத லொழிந்த பல்லோர் சூழக்
கந்தநா யகனை கவின்றிகழ் பொதியை
மந்த மாருதம் வரப்பெறு மயிலத்
தந்தணர் போற்ற வமர்பெருந் தகையைச்
செந்தகைப் பைந்தகைத் தேவியரிருவர்
நடுவினி தருளும் ஞானபண்டிதனை
மடுவினு மொருக்கால் வந்தசண் முகனை
யேத்துவா ரேத்து மியல்பினுக் கிசைந்த
நாத்துணை வாணி நவைதவிர் முதுநூல்
கற்றுழி வணங்குங் கான்மலர் படைத்த
முற்றுணர் புலவனை முருகக் கடவுளை
கனவினு நனவினுங் கண்டுவப் பெய்திச்
சினமறக் களைந்து திரும்பா முத்தி
வீட்டுறக் கருதி வியன்றமிழ் மொழியாற்
பாட்டுரைத் தணியும் பழங்கவு மாரர்க்
கணிமலர்ப் பொதும்ப ரடர்ந்தபல் குறிஞ்சியும்
பணியறுத் தழியாப் பெருமை நல்கும்
புனிதப் பூசையும் புரைதவிர் நாட்டமுங்
கனியுமெய்யுணர்வுங் கழிக்கருந் திருவேள்.(99)

(வாழி) [வாழ்த்து]
அழகியசண் முகத்தொருமெய்க் கடவுள் வாழி!
        யமரர்குலா திபன்வளர்த்த வணங்கு வாழி!
குழலுடைப்பூங் குயிலனைய குறத்தி வாழி!
        கொற்றவைவேன் மயில்சேவற் கொடிச்சீர் வாழி!
பழமறையோ லிடுமயிலப் பொருப்பு வாழி!
        பத்திநெறிக் கவுமாரர் பண்பு வாழி!
மழவிடைக்கோ னனையசிவ ஞானி வாழி!
        வையகமும் வானகமும் வாழி மாதோ. (100)

நூற்பயன்
நேரிசை வெண்பா
மயிலமலைக் கோயிலுக்குள் வாழ்முருக வேளுக்
கயலதனைப் போற்றுமவ னன்பாற்—பயிலுங்
கலம்பகத்தைக் கற்குமவர் கல்வியறி வென்னு
நலம்பகம்பெற்றுய்யு நரர்.

நூலாசிரியர்
வெண்பா
சேய்முத் தமரர் பொய்கைத் திகழும் பதிதனிலே
வையமெல்லாம் போற்ற வளர்புலவ!—மெய்யடியார்
சாமியெனச் சொல்லி சாற்றுங் கலம்பகத்தை
தீமையிலா மற்கொணர்வீர் தேர்ந்து.

நூலெழுதப்பெற்ற நாள்
பிரமாதி யாண்டதனிற் பேசுமதி சிங்கம்
வருபானு விற்றெய்தி வளர்பத்தேழ்—திருமருவு
வோணம தில்பிறக்கு மோங்கவிட்ட மிந்நாள்
காணவெழு துந்தினமே காண்.
திருமயிலாசலக் கலம்பகம் முற்றும்.
----------------------

3. ஞான விநோதன் கலம்பகம்

காப்பு
நேரிசை வெண்பா
அடியேனை யாள வருண்மேனி சாத்திப்
படிமீதில் வந்த பரனே—கொடியேனென்
றெண்ணா விமைப்பளவினிங்ஙனே வீடளித்த
கண்ணா கடைபோகக் கா.

நூல்
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
ஒன்றாயும் பலவாயு முருவாயு மருவாயு
மன்றாயு நின்றாலு மறிவேநின் னருளுருவம்.
மணங்கமழுஞ் செழுங்கமல மலரடிக்கு வடிவுணர்ந்தா
ருணர்ந்ததுவே வடிவாகு முணர்வேநின் னொளியுருவம்.
தன்னியல்பு வானவருந் தாமறியா ராயினுமென்
சென்னியினின் றொழியாத திருவடித்தா மரைமலரே.
சுழலனைய வினைவழியே சுழன்றுசுழன் றிடையோவா
துழலுமெனைப் புகுந்தாள வோருருவம் புனைந்தருளி
யழலனைய விப்பிறப்பி னழுந்தாம லடியேற்குன்
கழலிணையை யளித்தாய்க்குக் கைம்மாறு காண்கிலமே.
துரியநிறங் கவர்ந்தொளிருஞ் சொருபானந் தச்சோதி
யரியரனிந் திரன்பிரம னமரருளந் தடுமாறப்
பெரியதொரு பொருளாகப் பேதையே னுளம்புகுந்துன்
னுரிய பழ வடியவர்த முடனாள வுவந்தனையே.
முப்பொழுது நீயேயாய் நின்றாலு மூர்த்திநினக்
கொப்பெழுத வொண்ணாத வோங்குசொரு பானந்த
வப்பொழுதைக் கப்பொழுது மாறாத பேரமுதா
யெப்பொழுது மென்னிதயத் திப்படிநீ யிருந்தருளே.
அறிவிலே னுளம்வரு மருளினை யயர்வுறும்
பொறிபுலன் மனவிருள் பொடிபட வருளினை.

குறுகிய வவாவினை கொலை செய்த விழியினை
முறுகிய பிறவிகண் முடிவுறு மொழியினை.
காயமதே யானாகிக் கழிகின்றே னொழியாத
மாயையெலா மறவுலகில் வாராநீ வந்தனையே.
முனியே நல் லமரர்கடம் முடிகிடப்பக் கடையான
தனியேனுக் கிரங்கியடித் தாமரைநீ தந்தனையே.
தரமறியா னிந்திரன்மால் கமலத்தோ னிவர்நிற்பத்
தரமறியா தென்னையுநீ தானாகப் பார்த்தனையே.
நிலைகுலையத் தோன்றியதே நீகொண்ட வெனதுடலங்
குலைகுலையத் தோன்றியதே நீயுண்ட வெனதுள்ளம்.
ஓங்கிவிரி கடற்றிரையோ டுலகொடுயி ருணர்வுன்பா
லாங்குவிரிந் தடங்கவிரிந் தடங்காத வழகினையே.
தேவர்க்குந் தேவுநீ தெளிவிற்குத் தெளிவுநீ
மூவர்க்குங் கோவுநீ முற்றுயிர்க்கு மூலநீ.
எப்பொருட்குந் தோற்றநீ யெவ்வுயிர்க்கும் வீடுநீ
மெய்ப்பொருள்க டோற்றநீ மெய்யினர்க்கு மெய்யனீ.
வானுநீ நிலனுநீ வளியுநீ வெளியுநீ
யூனுநீ யுயிருநீ யுண்மைநீ யின்மைநீ.
தோற்றநீ யிறுதிநீ துன்பநீ யின்பநீ
மாற்றநீ மனனநீ மற்றுநீ முற்றுநீ.
(என வாங்கு)
உருவா யிந்த வுலகுய வந்த
சொருபானந்தனைப் பரவுதும்
வருபா சங்களை மாற்றுவோ னெனவே. (1)

நேரிசை வெண்பா
எனதே பிறவித் துயரெனதே யென்றன்
மன்தே யலமரக் கவற்றுந்—தனையேதா
னன்னோ னருட்சொருபானந்தனனைத்தினுக்கு
முன்னோ னெழுந்தருளா முன். (2)

கட்டளைக்கலித்துறை
முன்னே நடுவே முடியவே முடியா வருள்சுரந்த
வன்னே பரிந்தெனை யாண்டவ னேயழி வின்றியசெம்
பொன்னே புகழ்சொருபானந்த னேபுலை யேனளவே
யின்னே யருளிய வாறெம்பி ரான தியல்புகளே. (3)

கலி விருத்தம்
புகழ்பெறு வேதாந்தான் புகலளியா தென்றா
லகழ்வுறும்யானின்றா ளிணைபுகழ்வா னுண்டே
நிகழ்வென்னா நின்றே நினையுரையா நின்றாய்
திகழ் சொருபானந்தா சிரமிசைமே னின்றே. (4)

எண்சீராசிரிய விருத்தம்
மேனின்ற வானவர்க டானின்று தேடுவதும்
        வேறொன்ற தாகுமெனு மாறொன்றி லாததுவு
மூனின்ற நோவினிடை வார்சென்று தீர்வதுவு
        மோர்வொன்றி லாதவடி யேனின்று சூடுவதும்
வானின்ற வூதைகன னீரண்ட மூடுருவி
        வாழ்சந்திர சூரியர்கள் காலங்கள் சூழ்திசைக
டானன்றி மேவுபர மானந்த மாகமறை
        தானின்று கூறுசொரு பானந்தர் தாளிணையே. (5)

கொச்சகக் கலிப்பா
இணையாய் வந்து புகுந்தென தாருயிர்ப்
புணையா குஞ்சொரு பானந்தர் பொன்னடி
யணையா நின்றகல் வார்களுக் கார்கொலோ
துணையாய் நின்றிடு வார்துயரன்றியே. (6)

அறுசீராசிரிய விருத்தம்
அன்றிய பிறவிக ளறும்வகை யுறவினொ டகநக மிகநாளுந்
துன்றிய மலர்கொடு முனிவர்நின் மலரடி தொடர்சொருபானந்தர்
ஒன்றிய மலரடி யிணையென தலைமிசை யுறவேறுமுணர்வாய்வே
றின்றிய படியதி சயமதி சயமினி யென்செய வியலாதே. (7)

எண்சீராசிரிய விருத்தம்
இயலுமிசை களும்விரகு படநின் றோதி
        யீதலறி யாதவரைக் காத லோடும்
புயலுமிகு சுரதருவு நிதியு மென்று
        போய்ப் புகழ்ந்து திரிகுவமோ பொய்யு மெய்யு
மயலுமுள வுகளுமருஞ் சொருபா னந்தர்க்
        கடிமைசெய்து முடியாத கொடிய மாய
மயலுமற வியுநினைவு மறுமா னந்த
        வடிவினொடு நிலமிசையின் வாழு வோமே.(8)

எண்சீராசிரியச் சந்தவிருத்தம்
வாழு கின்றனர்கள் போலிந்த மானுடவர்
        மாளுகின்றனர்கள் பூதங்கள் பானுமதி
சூழு கின்றதிசை காலங்கள் யாதுமறு
        சோதி யெங்கள்சொரு பானந்தர் பாதமலர்
தாழு கின்றிலர்க ணீள்பந்த பாசவினை
        தாயர் தந்தைமனை யாண்மைந்த ராயதனுள்
வீழு கின்றனர்கள் கேடொன்றி லாதபர
        வீடு சென்றுபுகு வாரென்று தானிவர்களே.(9)

நேரிசை வெண்பா
தானிவ் வுலகி னுருவாகித் தன்னடியே
னூனில் வருமா றொழித்ததே—மேனி
நினைந்ததுவேயாகி நிகழ்சொருபா னந்தன்
புனைந்தவினைப் பாதாம் புயம்.(10)

அறுசீராசிரியச் சந்த விருத்தம்
புயமே குன்றமு நுமதீகை
        புயலே யென்று புலவீர்காள்
கயமே யன்றி நயவாரைக்
        கவிநீர் பாட றவிரீரே
துயர்மே லின்றி யிடமேவுஞ்
        சொருபா னந்த வெனின்ஞான
மயமே யுங்கள் வடிவாகி
        மறுகால் வந்து பிறவீரே. (11)

கலிவிருத்தம்
பிறவி யானுள பேறிது காணும்வந்
திறுக வேதழு வீரெனை யும்முட
னுறவு கூரவெ னுள்வரு மாதர்
அறிகிலீர்சொருபானந்த நாதரே. (12)

கொச்சகக் கலிப்பா
நாதனையென் சொருபானந்தனையென் றலைசேர்
பாதனையோர் வுறுவார் பாலனையோ தியநால்
வேதனைவேதனைநோய் தீர்வுறமெய் பணியார்
சேதனமன் றவர்தஞ் சிந்தைவெறுந் திணியே. (13)

அறுசீராசிரியச் சந்த விருத்தம்
திணியமுரு டாயொன்றை யறிவிலேனு ளேவந்து
        செறியநினை யாவின்பமே
யணிகொளரு ளாகங்கொ டவனிதனி லேவந்த
        வரியசொருபானந்தனார்
பணிகொள்பர மானந்த பதமொழிய வேறிங்கோர்
        பதநினைவர் நீள்சிந்தைநோய்
தணியவிரு பாதங்க டலைமிசையி லேதந்த
        தகவைநினை யாவந்தரே.(14)

வேறு
வந்தவர லாறொன்று மறியாய்
மண்டுபுலனார்கொண்டு செலவே
பந்தநெறி யேசென்று மனனே
பங்கமுற நீமங்கி யழியா
வெந்தைபெரு மானின்ப வடிவாய்
நின்சொரு பானந்த னிருதாள்
சிந்தைமய லால்வந்த பவநோய்
சிந்தும்வகை நீசென்று செறியே. (15)

பதினாறு சீர்க் கழிநெடிலடி யாசிரியச் சந்த விருத்தம்
செறிவுறு மடியார் சிந்தை செறிந்தன
சினமுடன் மதமானங்கள் களைந்தன
செயமக டிருநா மங்கை பொருந்தின
திசையொரு பதுசூழ் நின்று பொதிந்தன

விரவறு பரமானந்தம் விளைந்தன
வெனதித யமெலா முண்டு திகழ்ந்தன
விகபர மெனவே றின்றி யிசைந்தன
விதுவெனி னதுதா னன்றி யொழிந்தன

பிரிவறு பொருடர நின்று நிறைந்தன
பிரமனோ டரன்மா லென்று பகுந்தன
பெருமறை பலவா நின்று புகழ்ந்தன
பிறவியின் முதுவே ரின்று பிடுங்கின

வரிவயர் வெனலா யன்றி யிருந்தன
வகமித மெனுமால் பொன்ற வணைந்தன
வதிசய மிகுமா றெங்க ணுறைந்தன
வழகிய சொருபானந்தர் புயங்களே.(16)

எண்சீராசிரியச் சந்த விருத்தம்
புயம் பொருந்தநடு வேநின்று நீமகள்
        புலம்ப லொன்றுமறி யாயன்று காணவர்
தியம்ப கன்பிரமன் மாலென்று தேடிய
        திறங்கடந் தசொருபானந்தர் காணவர்
வயம்பு குந்தவர லாறன்பர் பாலருள்
        வருந்துகின்றதொழி வாயின்று நாளையு
மியம்புகின்றவெழில் வேதங்க டானுணர்
        விறந்து நின்றவுணர் வேயென்று மேனியே. (17)

இதுவுமது
மேனி வேறுமறி வேயென்ற தேயென
        வேத மொழிவுறு மேநின்று தேடுநர்
வானினிமையவ ரேகண்டு நாமிக
        வாழ நிலன்மிசை யேவந்து தாழ்பவர்
ஊனில் வருபவ நோயின்றி யேயிட
        வோர்சொன் மொழிகுவ ரேபந்த நீள்வினை
யானி செயுமவ ரேயின்ப மேயரு
        ளாகி னவர்சொருபானந்த நாதரே.(18)

கொச்சகம்
தரையதன்மேல் வந்தே தலையதன்மே லுன்றா
டுரையாநீ தந்தே சுடர்சொருபானந்தா
புரையறவே நின்றாய் புலனறியா வொன்றே
யுரையுணர்வா லொன்றா லுணர்வறியா யினரே. (19)

கலிவிருத்தம்
இன்று ளேநின்றி லேலெனத் தோற்றர
நின்று ளேனழி யாவகை நேயமோ
டின்று ளேசொரு பானந்தர் வாய்மொழி
யொன்று ளேபர மானந்த லோகமே. (20)

எழுசீராசிரியச் சந்த விருத்தம்
கமையால் வந்த துளவான் முந்து
        கலையா லொன்று மனனாலோ
ரமைனால் விஞ்சு மறிவா லெந்தை
        யருடா னின்ற விடினாகா
தெமையாள் கின்ற சொருபானந்த
        னிருபா தங்க டரிலோர்கா
லிமையா தொன்றில் விழியா தென்று
        மிறவா வொன்றை யுறவாமே.(21)

கட்டளைக்கலித்துறை
உறவே யுயிர்கட் குயிரே யொருபற்று மற்றுநின்ற
துறவே சுடர்ச்சொரு பானந்த னேதுயர் தீரக்கண்ட
திறவே யழிவுபடாச்செல்வ மேயென்றுந் தித்திக்கின்ற
நறவே சிறியே னுரைப்பதெவ் வாறுனை ஞாலத்திலே. (22)

இருவிகற்ப நேரிசை வெண்பா
ஞாலம் புகுந்தருளி நாயேனை யாட்கொண்ட
சீலம் புகழுமா செய்கண்டாய்—கோலங்கொண்
டாண்டானே மாறா வருட்சொருபானந்தனே
வேண்டா வடியேற்கு வேறு.(23)

அம்மானை
வேறொன் றெனுமந்த வேறெங்கே யம்மானை
        வேறொன்றுமில்லை வெறுமறிவே யம்மானை
பேறென்ப திப்படியே பேறன்றோ வம்மானை
        பேரின்பம் பேசும் வகையென்னோ வம்மானை
கூறுஞ் சுருதிகளின் கூறெங்கே யம்மானை
        கூறாமற் கூறியவர் கொண்டாடா யம்மானை
யாறுந் திறந்தான்வந் தேறுங்கா ணம்மானை
        யண்ணல்சொரு பானந்த னம்பொற்றா ளம்மானை. (24)

எழுசீராசிரியச் சந்த விருத்தம்
மானா குத்துணை விழியா கின்றன
        மயிலா மிங்கிவ ரியறானுந்
தேனா ருங்குழன் முகிலா னன்றிசெய்
        திருவா மிங்கிவ ருருநேரே
பானா றுங்குழன் மொழியா மென்றிடர்
        படுவார் தம்மொடு தடுமாறா
யானா ரன்பொடு சொருபா னந்தர்தம்
        மிருபா தந்தொழு திடுவேனே. (25)

கலிவிருத்தம்
இடுவார் யாரென் றேசறு கின்றா ரிப்போதிக்
கெடுவார் மேலுங் கீட மரிக்குங் கொப்பத்தார்
நடுவா நின்றா னஞ்சொரு பானந் தன்றாளிற்
படுவா ரல்லா ரின்னமு மீதோ படுவாரே.(26)

கலிநிலைத்துறை
வாராய் வருவா யொருமா னுடனாகி யென்னு
நீரா யுருகு நெஞ்சினு மிங்கிவ ணெக்குநெக்குச்
சோரா வெழுமென் சொருபா னந்தச் சோதியென்னும்
பேரா யிரத்தானை நினைந்திவள் பெற்ற பேறே. (27)

எண்சீராசிரியச் சந்த விருத்தம்
பெறுவ தினியொரு பேறென்கொ லோவரு
        பிறவி யறுமிதில் ஞானந்தன் மேனனி
செறிவ தினியுற வேதின்ப வார்கடல்
        செறிய வருள்சொரு பானந்தர் தாளல
துறுவ தினியேது வேறென்பி னானக
        முருகு மடியவ ரோடொன்றி வாழ்தலி
னறிவ தினியேது வோவொன்று வேறற
        வடைய நமதுரு வாய்நின்ற தாகிலே. (28)

எண்சீராசிரியச் சந்த விருத்தம்
நின்றுநிலை யாதும்பர் வாழ்வங்கு நேரா
        நெஞ்சுகுலை யாநின்று வாழிம்பர் வாழ்வோ
வின்றுநிலை யாகின்ற வாழ்வென் றிராதே
        யென்றுமுளர் போலிங்கு வாழ்கின் றுளீர்கா
ளொன்றுநிலை யாதென் றீரெங்கு மாய்வோ
        ரொன்றுமில தாவொன்று மாவன்று மாயே
யென்றுநிலை யாவின்ப மாகின்ற தானீ
        ரெந்தைசொரு பானந்தர் பாதந்தொ ழீரே. (29)

கட்டளைக் கலிப்பா
தொழுவார் வினைதீர்த்தருளுஞ் சொருபானந்த(ன)ன்றோ
டழுவா வெனமுன தாயினு நீவெந் தழலாயே
யெழுவா யோதண் மதியே யென்னே யென்னேபோய்
விழுவார் மேலே தடிகொடு சென்றாய் வேண்டாதே. (30)

இதுவுமது
வேண்டா தேநெஞ்ச மடியா ருடனன்றி மேவத்
தீண்டா துசென்னி யிறைசே வடியன்றி யென்னாத்
தூண்டா விலங்குசொருபானந்தச் சோதி யென்னை
யாண்டானையன்றி யுரையாட வறிந்தி ராதே.(31)

புயவகுப்பு
இரவுபக லுயிர்கழியு மாகண்டு வானவர்க
ளெரியனைய பிறவியதி லேநின்று மாளுமெம
தெளிவரவு கெடவினிய பாதங்க ணீயருளி
யிதுவதென வொருசொன்மொழி யாயென்று தாழுவது;

முரியபழ வடியர்வெளி யேகண்டு வாழ்வதுவு
முலகரொரு வருமறியு மாறின்றி மாளுவது
முபநிடத மடையுநெறி யேநின்று பாடுவது
முருவொடரு வலதோர்பொரு ளாமென்று கூறுவது ;

நிரதிசய பரமசுக மேயென்று நாடுவது
நினையவுரி யவர்கள்பிற வாரென்று பேசுவது
நிகழ்வடிவு கருணையென வேநின்று வோதுவது
நிறைவுகுறை வறுமமிர்த மாயன்பர் மூழ்குவது ;

மரனொடரி யயனமரர் கோனின்று தேடுவது
மகிலபுவனமுமுடைய கோனென்று பேணுவது
மறுசமய வித்திபல வாதங்கொ டாடுவது
மறிவிலெனுளே புகுதுசொரு பானந்த நாதனையே. (32)

அறுசீராசிரியச் சந்த விருத்தம்
தனையாருந் தெரியா தென்று தடுமாறும் படிதா னொன்று
நினையாவிங் குருவாய் வந்து நெறிதானொன் றறியா வன்பி
னெனையாளுஞ் சொருபானந்த னிருபாதந் தலைமேல் கொண்டு
புனையாவந் தகமே னின்று புலையாடும் புலனா மஞ்சே. (33)

ஊசல்
அச்சமெலா மறுத்தாண்டா னென்றாடா மோவூச
        லாண்டருளுந் திறம்பாடி யாடாமோ வூசல்
மெச்சியவன் கழல்பரவியாடாமோ வூசல்
        வெறுமறிவே யானேமென் றாடாமோ வூசல்
லிச்சகத்தே மெய்ச்சொருபா னந்தனெனத் தோன்றி
        யின்பவெள்ளத் தழுத்தியிட வென்னையுமாட் கொண்ட
பிச்சனென வும்பாடி யாடாமோ வூசல்
        பெருங்கருணைப் பெருமானென் றாடாமோ வூசல். (34)

அறுசீராசிரிய விருத்தம்
ஊசலாடுமிவ் வுடலுயி ரிதுதனை யொருபொழு தொழியாதே
பூச லாடிடு பொறிபுலன் மனனொடு புணர்வுறு குணன்முற்றுந்
தேச லாதன சிதைவகை யுருவொடு நிகழ்சொருபானந்தா
பேசலாமள வலவென துளம்வரு பெருகிய வருடானே. (35)

கட்டளைக்கலித்துறை
தானே வணங்குமென் சென்னியென் னாவுனைச் சாற்றுதொறு
மூனே யுருகு முரோமஞ் சிலிர்க்கு முகுமென்கண்ணீர்
நானே துமொன்று மறிகின் றிலேன்வெறு ஞானகனத்
தேனே யருட்சொருபானந்த நீதந்த செல்வினையே. (36)

எழுசீராசிரிய விருத்தம்
வினைவளை கழன்று புனைகலை குலைந்து
        விழியருவி நின்று சொரியவே
நினைவு பிறிதின்றி நிசிபக லதின்றி
        நினையநிகழ் கின்ற சொருபாதோள்
வினைவளை கழன்று புனைகலை குலைந்து
        விழியருவி நின்று சொரியவே
நினைவு பிறிதின்றி நிசிபக லதின்றி
        நினைவுமயி லென்று புணர்வதே. (37)

எண்சீராசிரியச் சந்த விருத்தம்
புண்ணியமவன் கொண்டதோ ராகமே
        போத மேசொருபானந்த ராகமே
யண்ணி யனதி தூரத்த னல்லனே
        யன்பரானவர்க் கேயத்த னல்லனே
மண்ணி யங்கு காலினீர் வானுமாய்
        வைத்த ளித்து மறைத்திடு வானுமாய்ப்
பண்ணி யுமழித் தும்விளை யாடுமே
        பழைய நான்மறை யேயுரை யாடுமே. (38)

நேரிசை யாசிரியப்பா
உரைசெய் மனனே உரைசெய் மனனே
கரையி லாசைக் கடலிடைப் பட்டுக்
கலங்கித் திரையின் மலங்கியலைந் தலைந்து
பன்னெடு நாளாப் பாரிடை விசும்பிடை
மன்னுப யாவினும் வந்துழி வந்துழி
யோரோ ருருவி னுடலெடுத் தழிந்தது
பாரே ழன்றே பழுவென்பு பகரி
னட்ட கிரியி னெட்டடுக் குடைத்தே
குழவியிற் பருகிய செழுமுலைப் பாலிவ்
வெழுகட லதனி னெழுமை யதன்றே
மலர்தலை யுலகிற் பலபல மாக்கட்குத்
தாயென வீன்றுந் தந்தையென வளித்துஞ்
சேயெனப் பிறந்துந் தேவரெனப் பகைத்துங்
கணவரெனப் புணர்ந்துந் துணைவரெனச் செறிந்து
மோரோர் யோனியி னுற்றதும் பிரிந்ததும்
பாரேழ் சூழ்கடற் படுதிரை தொகுத்த
நுண்மணற் பகரினு மெண்வகை யரிதே
யிவ்வகை பிறந்திறந் தியைபுழி யவ்வயின்
கூடிய பொருள்களை நாடுவ தரிதே
கலவியிற் கழறிய தெல்லைய திலையே
மறுமை யன்றி மற்றவை யனைத்தும்
பிறிது நீயே யறிதி யன்றே
யன்ன தன்மையை யறிந்து மின்னு
மென்னதி யானென் றிசைந்து மன்னோ
வடிவு மெழிலும் வனப்புறு கல்வியுங்
குடியுந் திருவொடு குலனு மிகுவதோர்
நாமமுஞ் சுமந்து நாம்பிற வென்று
சாமள வுஞ்சழக் குரைத்துப் போமிது
தன்னா னிந்தப் பன்னெடுங் கால
மென்னீ பெற்றனை யியம்பே யன்னோ
பயனில செய்து கழியா தயனர
னிந்திர னெடுமா லின்னமு நிற்பச்
சிந்துரச் சேவடி யந்தரத் தின்றித்
தீண்டவிப் புவியிற் சீரடியார்களை
யாண்டுகொண் டருள்வோ ரந்தண னாகி
வந்தருள் சொருபா னந்தனைச்
சிந்தைசெய் யிடருறு பந்தவீ டறுமே.(39)

எண்சீராசிரிய விருத்தம்
அறையாநின் றிடுஞ்சுருதி யறையு மாறு
        மறிவோமென் றறையவர்க ளறியு மாறுஞ்
சிறையாகும் பிறவிசிறைச் செய்யு மாறுஞ்
        சிலையாகுஞ் சிந்தைசிலை யாகு மாறு
மறையாநின் றிடுமாயை மறைக்கு மாறு
        மதியாலன்றாகுமென வகுக்கப் பட்ட
துறையாறும் படுமாறு மறிய லாகுஞ்
        சொருபானந் தன்றிருந்தாள் சூடு ஞான்றே. (40)

எழுசீராசிரிய விருத்தம்
ஞான்றவா ளருவி யிருவிழி சொரிய
        நானெனை யேயதி சயிப்ப
வான்றன்மே லமரர் வியப்புற மண்ணோர்
        மத்தனுன் மத்தனென் றுரைப்பத்
தோன்றநீ வந்திங் கென்னையாண் டவனே
        சொருபானந் தச்சுடர்ச் சோதி
சான்றதாய் நின்ற வுருவமே தாராய்
        தமியனேன் மருளடுத் தாளே. (41)

எண்சீர்க் கழிநெடிலா சிரிய விருத்தம்
மருளால்வன் றறியேநன் றறியேனா மதனால்
        மதனாரைங் கணையாநன் கணையாநெஞ்சுருளச்
சுருளாரங் குழலார்சொற் குழலார்நஞ் சுழலச்
        சுழலாறிற் சுழலாறிற் சுழல்வேனோர் பொருளாப்
பொருளாமென் றருணாடும் பருணாடும் புகலைப்
        புகல்வாரெஞ் சொருபானந் தன்தாளா னென்றென்
றருளானரு ளானமெய் யன்பால்மெய் யன்பாலே
        (பற்றார்)பற்றற்றார் வேதனையே தும்பெற்றார்வேதனையே. (42)

கொச்சகக் கலிப்பா
வேதநா யகனா ரென்னுண் மேவிய
நாதனார் சொருபானந்தர் நாண்மலர்ப்
பாத மேதுதி யாமொழிப் பலபிறப்
போத வேலை யொலிதரு மோசையே. (43)

எண்சீர் ஆசிரியவிருத்தம்
ஓசை தந்தமிர்த நாவந்த தோவா
        தோதி யொன்றுபல வாமென்று வேறு
பேசு நுங்களள வேயெங்கள் வானோர்
        பேணு கின்றசொருபானந்த னார்தாள்
வாச கங்கண்மன னோடுங்கள் வாணாண்
        மாளு மெங்களுட னேயின்ற டாநீர்
பூச லென்றுவரு போதெங்கள் கூர்வாள்
        போதம் வந்தவழி யேயின்று போமே.(44)

எண்சீராசிரிய விருத்தம்
இன்றவா விதுவாக யானேயா னாகவினி
        யென்செயலோ விவையாக விமைப்பளவு மொன்றி
நின்றவா தில்லாத நெஞ்செனக்கு நெஞ்சா
        நினைவரிதா யிதுவெனவோர் நெறியுமதற் கின்றி
யன்றுவா னவர்களரு மறையினுடன் றேடற்
        கரியவொரு பொருளாகும் பொருளையா னுஞ்சென்
றொன்றுவா னெறியுண்டோ சொருபானந் தச்சோதி
        யுடையதிரு வுளத்தினரு ளுண்டாகி னுண்டே. (45)

அறுசீராசிரிய விருத்தம்
உண்டுமில் லையும தாகி
        யுருவமிங் கருவ மாகிப்
பண்டொடின் றடைய வாகிப்
        பலவொடொன் றாகித் தானே
கொண்டகொண் டளவ தாகிக்
        குறிக்கொணாத் திறத்த தாகி
யண்டனென் சொருபானந்த
        னடியிணை யலர்ந்த வாறே.(46)

கட்டளைக்கலித்துறை
அலராயின் செய்யு மைம்புலன் கரணம் மறுவகையாங்
கலர்காள் பல்குணங் காணமலங் காள்கரணங்களென்னும்
பலர்கா ளருட்சொரு பானந்த னார்பவ ளத்திருவாய்
மலரா தளவுமன் றோவெங்க ளோடுங்கள் வாழ்வுகளே. (47)

எண்சீராசிரிய விருத்தம்
வாழும் பதநீ சங்கரன் மால்பூ
        வாழ்கின் றவனீ யும்பர்கள் கோனீ
சூழுந் திசைநீ காலமு நீமா
        தூலங் களுநீ நேர்மையு நீயே
வீழும் பவநீ வீடது நீயான்
        மேவுஞ் சொருபா னந்தவெ னெஞ்சந்
தாழு மிறைநீ யெந்துணை நீயெந்
        தாயென் பவனீ தந்தையு நீயே.(48)

எண்சீராசிரியச் சந்த விருத்தம்
தந்தையொடு தாய்மைந்தர் முன்பினுடன் வந்தார்
        தாரமொடு பேரர்மிகு கூறுமுற வாகும்
பந்தமென வேவந்த தொந்தமிவை யொன்றிற்
        பட்டதல காணுமிவை விட்டுவிடு நேரா
வந்தமுத றானன்றி யென்றுமுள தானே
        யண்டமுத லாயன்றி நின்றபொரு ணாமா
விந்தவுல கேவந்து தந்தருளு மாறா
        தெந்தைசொருபானந்த னென்றுமொழி யீரே. (49)

அறுசீராசிரிய விருத்தம்
மொழிகிலீர் சொருபானந்தர்
        மொய்கழல் வெய்ய வாழ்க்கை
கழிகிலீ ரிரங்கி யாளுங்
        கருணையை நினைந்து கண்ணீர்
பொழிகிலீர் புலவீர் பொய்யே
        பொருளலா தவரைப் போற்ற
லொழிகிலீ ரவமே யுங்க
        ளுரையெலா முகுத்தீ ரன்றே.(50)

பதினான்குசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்

குத்திரம தாவுலகர் பிச்சையிட வென்றுலகில்
கூறியருள் வேறு படுமக்
குறத்தியல் நாயகர் திறத்தின்வழு வாதவருள்
கூறுமவள் வேறு நினைவா

மித்தனைவி டாய்நினைவை விட்டுநினை யாயறிவி
றந்திட னிருந்த படிபா
ரெங்குமறி வேயினி யகம்புற மிறந்திட
விருந்துவி டிருந்த படியே

சுத்தமறை யோதவறி யாதபொரு டன்னைவெளி
சொன்னபடி யுன்னி நமையா
டுய்யசொருபானந்தர் செய்யகழ லோதொரு
துவட்சியுள் சொல்லி விடவோ

வெத்தியெனை யாளுடைய நாயகனு மென்பணி
பிசைந்து கொளுமோ வெனுமதே
யெப்படிநினைந்தனைகொலப்படிய தாகுமிதி
னேதுமொரு போது மிலையே.(51)

அறுசீராசிரியச் சந்த விருத்தம்
இலதுள திகபர மிதமக மிருள்வெளி
        யிழிபுயர் பெனுமெல்லா
மலதல வையல வறிவல வயர்வல
        வமரரு மறிவானோர்
வலதில தருள்வடி வொடுவரி னலதெனுள்
        வருசொரு பானந்த
னலதிரு வுருவின தெனுமொழி பனுவல்க
        ணாடுதல் கூடாதே. (52)

கலிப்பா
கூடாதே யவனடியார் குழாத்தையவன் குரைகழற்றாள்
சூடாதே யெனையாண்ட சொருபானந் தச்சுடரைப்
பாடாதே யவந்தந்த பரமானந் தக்கடல்புக்
காடாதே யின்னெடுநா ளென்செய்தே னானேனே. (53)

கட்டளைக்கலிப்பா
ஆனேனதுநா னென்றிங் கோது மளவேயா
யூனே வடிவா மவரோ டுழலா வகைநெஞ்சே
தானே சொருபா னந்தன் கமலத் தாள்வந்துன்
பானேர் படமா தவமேன் செய்தாய் பகராயே.(54)

கட்டளைக்கலித்துறை
பகராநின் றேனெவர்க் குஞ்சொருபானந்த பண்டைமறைச்
சிகராலை யத்துமென் சென்னியு மன்னுஞ் செழுங்கமலச்
சுகராசி யையென்று மேத்தித் தொழுமின்னுந் தொல்பிறவி
மகராலை யத்தை வறளாக்க நல்ல மருந்திதுவே.(55)

நேரிசை வெண்பா
மருந்தா மவன்பெயரை வாழ்த்துகிலே மின்பந்
தருந்தா ளிணைசாரேஞ் சார—விருந்து
மொருபாக மில்லே முணர்விலேம் யாமாஞ்
சொருபானந் தன்கழற்குத் தொண்டு. (56)

வஞ்சி விருத்தம்
தொண்டர் வாழ்சொருபானந்த னார்பதங்
கண்ட நாண்முதல் கண்களு நீர்நிலா
பண்டை யாளல ளென்றுபல் காலுமாக்
கொண்டல் காள்மொழி யீர்கொடி யேனையே. (57)

அறுசீராசிரிய விருத்தம்
கொடிய வினையான் மங்கைமார்
        குழறு மொழியே கொண்டுநீ
முடிய விங்ஙனே நின்றுபொய்
        முறிகை மதிகே டென்றீரா
யடியர் பவநோய் மங்கவே
        யருளு சொருபானந்தனார்
படியின் மிசையே வந்ததாள்
        பணிய நினையாய் நெஞ்சமே. (58)

இதுவுமது
நெஞ்ச மறியத் தன்வடிவை
        நிகழ்த்தி நெடுநா ளுடனாயத்
துஞ்சல் பிறத்த லறச்செய்த
        சொருபா னந்தர் துணையடிபோல்
வஞ்ச மறுக்க வற்றாயோ
        மணமுண் பாயோ மதியாதே
கஞ்ச மலர்கொண் டுவமிக்கக்
        கருதிற் றென்னோ கற்றவரே.(59)

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கற்றவர்களாவாருங் கருத்துடையா ராவாருங்
        கருதிற் றெல்லாம்
பெற்றவர்களாவாரும் பிறந்தவர்களாவாரும்
        பீடு சேர்ந்த
நற்றவர்க ளாவாரும் ஞானிகடா மாவாரு
        நன்மை யெல்லாந்
துற்றவர்க ளாவாருஞ் சொருபானந் தர்க்கடிமைத்
        தொழில்செய் வாரே.(60)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
தொழிலவ ரடியிணை தொழலா வென்றன்
        சொல்லவா திறன்வரு துதியா வென்றலை
விழிலவரடியா ரடியார் பங்கய
        விரைமல ரடியிணை மிசையா வன்புகொ
டழினவர் பிறவிக ளறவே தன்திரு
        வருளொரு வடிபுகொள் சொருபா னந்தர்த
மெழில்புரை திருவுரு விதுவே யன்றியோ
        ரிகபர மிதமக மிலதாய் நின்றதே.(61)

எழுசீராசிரியச் சந்த விருத்தம்
நின்றதடி யார்தங்க ணெஞ்சினிடை யேவஞ்ச
        நெஞ்சமுடை யார்கள் விரகே
வென்றதடி யாரன்ப ரன்பரடி யார்தங்கள்
        வெம்பிறவி யான பகையே
கொண்டதக லவர்நன்றி நின்றுதடு மாறவருள்
        கொண்டுவிளை யாடி யிசையா
வென்றதெனை யேயிங்கே னெந்தைசொரு பானந்த
        னின்பவிரு பாதங்களே.(62)

கட்டளைக்கலிப்பா
பாதந் தலையிற் பதித்தேன் பவங்களைந்த
நாதன் பரன்சொரு பானந்தன் பரங்கருணைக்
கேதங்கட் செவியாற் கேட்குந் தொறுமென்னா
வோதுந் தொறுமுருகி நீராயு ருகுமூனே.(63)

எண்சீராசிரியச் சந்த விருத்தம்
ஊன்வரு பெருநோய் தான்விட விறைபா
        லுகுதரு மன்பாய் மிகுதவ முறவே
வான்வரு மிமையோர் கானவர் நிலனே
        வந்தருள் சொருபா னந்தர்தம் மலர்சேர்
தேன்வரு மிருதா ளிணைமல ரென்றன்
        சென்னியின் மிசையே யின்ன மொருகா
றான்வரும் வகைபோய் நீபணி யாயே
        தார்குழல் வண்டே வரிகழல் கண்டே.(64)

கலிநிலைத்துறை
கண்டே சொருபானந்தன் பாதங் காணார்போல்
விண்டே யுழல்வேன் மெய்யடியாரவர் போலன்பு
கொண்டே னெனவுங் கூறா நின்றே னென்னைப்போ
லுண்டோ வுடையா னொடுகை தவமிங் குடையாரே. (65)

எண்சீராசிரிய விருத்தம்
உடையானெ னவுவந்த சொருபானந்த
        னுருவாய்வந் திருக்கவவன் றிருவா சற்கோர்
தடையான தற்றிருக்க வழிவொன் றில்லாத்
        தானாகத் தனையடைவார்க் கருளா நின்ற
கொடையான தவனடியாரடியே யாகக்
        கூடுவதும் பாடுவதுங் குவலை யத்தோர்
கிடையாது கிடைத்திருக்க வவமே தாம்போய்க்
        கெடுகின்றாரவமாக்கப் படுகின் றாரே. (66)

ஒருவிகற்ப வெண்பா
படக்கடவ தெத்தனையும் பட்டேனிக் கட்ட
விடக்கொழியும் வண்ணம் விளம்பாய்—கடற்கருணை
மாமுகிலே யாள வருசொருபானந்தாவென்
றீமலையாஞ் சிந்தைநோய் தீர். (67)

வஞ்சி விருத்தம்
தீர்த்த மாவதுஞ் செய்தவ மாவது
மார்த்த மாவது மருச்சனை யாவதுஞ்
சேர்த்த மாவது மென்சொருபானந்தன்
வார்த்தை கேட்கை மதியே மதிக்கொளே. (68)

அறுசீராசிரிய விருத்தம்
மதிக்கை மதிகே டென்றீர
        மலப்பொ தியைநீ ரென்றுநீ
ருதித்து மரியா நின்றதோ
        யொழிக்க நினையா நின்றிலீர்க்
கதிக்கு நெறியே தென்பீரேல்
        கருத்தின் மிகுநே யங்கொண்டே
துதித்தப் பொழுதே சிந்தைநோய்
        துடைப்பர் சொருபா னந்தரே.(69)

கட்டளைக் கலிப்பா
பானந்திய சுவையோசொரு பானந்தன தின்பந்
தானொன்றிய விருசேவடி தருமின்சுவை மதுரத்
தேனொன்றிய சுவையோதிரை யமிர்தந்தரு சுவையோ
ஞானந்தரு சுவையோவெது நாடும்பெரு நலனே.(70)

கட்டளைக்கலித்துறை
நலனா குவதுநன் ஞானம தாவது நன்மைமிகுங்
குலனா குவதுங் குரம்பைகொண் டாரிவர் கொண்டுகொண்ட
பலனா குவது பணிதந்து செய்த றணித்தனெஞ்சே
நலனா வருசொருபானந்த நாதனல் லன்பருக்கே.(71)

நிலைமண்டில வாசிரியப்பா
பருதியு மதியு மெனுமிவை வித்திப்
படுபூ தங்க ளுற்ற வாருயிர்
பலபல வுலகம் விரவிய பிரமன்
முதலா வந்து தித்த யோனிகள்
பகர்வுறு திசைக ணிசிபகன் முதல
வருகா லங்கண் முற்றும் வேறொரு
பரமற வெமது வடிவென வருளி
விளையா டென்று விட்ட தேசுறு
சுருதியின் முடிவு மறைவுற வரிய
சொருபானந்த நித்த மாகிய
துணையடி தொழுது துதிசெய்து மிகவு
மருசியா நின்ற சித்த ரேமணி
துளவ னோடய னரன ருளிய
பதமா கின்ற குத்திர வாழ்வுகள்
சுகமல திரிய வரும்வழி பழைய
குருடே நன்று னிட்ட மேதுரை
கருதிய தரிது மழிவரு பொழுது
மிலதா கின்ற சித்தி யேபல
கலைகளி னலையி னலவது வினவி
யெனையாள் கின்ற வத்த னாரருட்
கழலிணை தொழுது வழிபட வவர்த
மருளால் வந்த வித்தை காண்வரு
கருவறு குளிகை யிதுமுன மொருவா
கிடையா தொன்று கிட்டி னாய்மிக
வரிதிது பரம குருவரு ளுடைய
பரமா னந்த சித்த னாயிரு
வருபர னமரு மழகிய கருணை
யிதின்மூ லங்கொ டொப்பி லாதவ
னதிரச முடைய வடியவர் திரளை
மிகவே கண்டுதி ருட்டணை யானவ
ரருளிய வமிர்த கிருதகு ளசகித
மயிலவே மென்று மிட்ட மாகவே. (72)

அறுசீர்ச் சந்த விருத்தம்
ஆக முடையீ ருங்கண்மே
        லாடு புலனா வைந்துமா
நாகம் நலியா திந்திரமா
        ஞால பவமே வந்துறா
சோக மெனுநோ யிங்குறா
        தூய சொருபா னந்தர்தா
மாக வருபா தங்கண்மே
        லாசை யொருபோ தொன்றிலே.(73)

கொச்சகக் கலிப்பா
போதா தனன்மா லானே யெனினும் பொய்யில்லா
வேதா கமமெய்ப் பொருடா மெய்கண் டவரேனு
நாதா வெனையா ளுடையாய் சொருபா னந்தாவென்
றோதா தவர்மேன் மையெலா மொன்றுக் குடனன்றே.(74)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
உடலை யார்த்தவைம் பூதமட்டன்றெனக்
        கோரள வறுமாசைக்
கடலை யார்த்ததிவ் வடவையாங் காமகோ
        பாதிவெங் கனன்மண்டுஞ்
சுடலை யார்த்தவொண் சிலதருள் வடிவொடு
        சுடர்ச்சொரு பானந்தர்
முடலை யாக்கைகொ டல்லன்வான் முடிபுநாண்
        மொழிதந்தருள் செய்யாயே.(75)

கட்டளைக்கலித்துறை
செய்தவந் தானில்லைச் சீலமொன் றானில்லை
        மால்கொணெஞ்சிற்
கைதவ மொன்றில்லைக் காமரு பூங்கழற்
        காமளவு
நைதலுந் தானில்லை ஞானமொன் றாலில்லை
        யாநடுவே
யெய்தவென் றால்வரு மோசொரு பானந்த
        னின்னருளே. (76)

இருவிகற்ப நேரிசை வெண்பா
அருணாறு மெம்பெருமா னாக மழியாப்
பொருணாறு மென்னுள் வரும்போதந்—திருவாயென்
வாணாளே நாறும் வருஞ்சொருபானந்தன்மலர்த்
தாணாறு மென்புன் றலை.(77)

நேரிசை யாசிரியப்பா
என்புன் றலைமிசை யிணையடிக் கமல
மன்புற வளிக்க வென்றே முன்பு
சொருபானந்தத் திருமா முனிவன்
செறிந்துல கிடையிற் செய்த சேவக
மறிந்தன னறிந்தன னம்ம! செறிந்த
வாயிற் கோடி யனல்கனன் றுயிர்க்கும்
வாயின் வெய்ய மறந்திக ழைம்புலக்
கொத்தொரு மொழிபடக் கோளரக் கன்சிரம்
பத்தொரு கணைப்படுத் தினையே சுத்த
நஞ்சமு முண்டனை நம்ப! நாயேன்
வஞ்ச நெஞ்சம் வாரியுண் பதற்கே
சிலைபெண் ணாகச் சேவடி சேர்த்தினை
நிலைபெற வென்னை நீயாக்கு தற்கே
வரைத்தனு வாக வளைத்தனை
கரைப்பது கருதியென் மனப்பெருங் கல்லே.(78)

எண்சீராசிரியச் சந்த விருத்தம்
கல்லையல்லா லுவமையில்லா மனன்கனியுங் காலங்
        காதலெலா மீசனுக்கே கூரவருங் காலந்
தொல்லையிலா கியபிறவி தொலைந்துவிடுங் காலஞ்
        சொருபானந் தச்சுடர்தான் றோன்றவரு காலஞ்
சொல்லவிலா வொருசுகமா யெனில்வே றொன்றுந்
        தோன்றாத திருவடியென் றலைமே லேறி
யெல்லையில்லா வின்பவெள்ளங் கரையழியுங் கால
        மென்னையுமாண் டருள்புரிவா னெழுந்தருளுந் காலம். (79)

கட்டளைக்கலிப்பா
காலம்பல தரநின்கழல் காணுந்திற னேதென்றான்
மாலம்புயன் மாலங்குற வாவென்றெனை யாளுந்திறன்
ஞாலம்புகு தாநின்றரு ணாதன்சொரு பானந்தனோர்
கோலம்பழ வேதம்பல கூறும்பொரு ளாகின்றதே. (80)

எழுசீராசிரியச் சந்த விருந்தம்
ஆகின் றவையழி யாநின் றமையறி
        யாநின் றறுகின் றிலைவாணாள்
போகின்றதுபுகு தாதென் றறிகிலை
        பொய்யென் றறிகிலை மெய்யென்றே
சாகின் றனைபிற வாநின் றனைதடு
        மாறும் படிகெடு வாய்நெஞ்சே
யாகின் றளவினு மாகின் றிலைசொரு
        பானந் தரொடுற வாமன்பே. (81)

கட்டளைக்கலிப்பா
அன்பே சொருபா னந்தச் சுடரே யகிலத்தின்
முன்பே பின்பே முடிவீ றறியா முதலோனே
யென்பே றுநினைந் திமையோ ரலம்வந் திடவிங்கோர்
வன்பே யனையே னென்பா லன்பாய் வந்தாயே. (82)

இருவிகற்ப நேரிசை வெண்பா
வந்துபர மானந்த வாழ்விந்த மண்ணிடையே
தந்தசொரு பானந்தர் தாள்சூடிச்—சிந்தைமயல்
தீர்ப்பா ரலாதவரே தேவர்கோ வாச்செல்லப்
பார்ப்பா ரமரர் பதிக்கு.(83)

எண்சீராசிரிய விருத்தம்
பதியா கின்ற பதந்த நின்செயல்
        பழவே தங்க ளிரந்த தாந்தனி
துதியா நின்று மீதென் றறிந்திலர்
        சொருபானந்தர் புகுந்து சந்தத
முதியா நின்ற விரண்டு பங்கய
        முழுதே னுண்ட மதங்கி யென்றனை
மதியா வின்று விலங்கு கென்றனை
        மறையோ னென்று விலங்கொ துங்கியே.(84)

எழுசீராசிரியச் சந்த விருத்தம்
துங்கத் திருவடி தனைத்தே ரிதரு
        சொருபானந்தன தருளாலே
சங்கைத் திறனது தவிரத் தனதிரு
        தாளைத் தலைமிசை யாளத்தரு
தங்கைக் கனியென வருளிச் செய்தவ
        ரயர்புற் றயல்படு மயனெஞ்சே
யெங்குத் தனையினி யெங்குத் தனையவ
        னிருபொற் கழலிணை மலரிற்கே.(85)

நேரிசை யாசிரியப்பா
மலர்மிசை மடந்தை யொருமண வாள
பலர்புகழ் தக்க கலைமகள் கணவ
கெவுரி கேள்வ பார்மகட் கிறைவ
மவுன நன்மொழி ஞான விநோத
வறிவரு மறிவ நெறியரு ணிமல
போதங் கொடுக்கும் பூத வல்லப
கேதங் கெடுக்கும் பாத பங்கய
வெனக்கென வந்த தனித்துணைத் தலைவ
வொருவரு மறியாச் சொருபா னந்த
பெரும நின்புகழ் பெரியோய் கேட்டருள்
ஓருருப் புனையினு மும்ப ருலகத்
தாருருப் புகழு மறிவுரு வாமே
யிந்நிலத் தடியிட விறைவ விந்நில
மந்நிலத் தேற வடியிட் டறுமே
பண்டை வடிவொழிந் துன்பங் கயமலர்க்
கண்கண் டவர்க்கு உடம்புகண் ணாகுமே
செய்ய பாதஞ் சிரமிசை யேறின
வெய்ய பாசம் விட்டே றும்மே
யன்னிய மறுமொழி மொழியின்
முன்னிய சமய மொழிபிணக் கறுமே.(86)

எண்சீராசிரிய விருத்தம்
பிணங்குவனோ பேதமா பேதங்க ளென்று
        பிதற்றுகின்ற பிதற்றருடன் பிறவி யொன்றுற்
றுணங்குவனோ குணங்கடந்த சொருபானந்த
        னொளிமலர்ச்சே வடியொழிய வொருதே வுண்டா
வணங்குவனோ வவனடியா ரடியார் தம்மை
        வழிபடுவார் குழுவொழிய மற்றை யாரோ
டிணங்குவனோ வென்னையெனக் கென்னிற் றந்த
        வியல்பைநினைந் துருகியழிந் திடுகின் றேனே. (87)

கட்டளைக்கலித்துறை
இடுகின்றி லேனொன்று மேற்கின்றி லேனல்லனிந்தியத்தை
யடுகின்றி லேனொன்று மாய்கின்றி லேனொன்றுமாசையொன்றும்
விடுகின்றி லேனொன்றின் மீட்கின்றி லேனெஞ்சுன்றாட்கண்வந்தாட்
படுகின்றி லேனென்ப டக்கட வேன்சொரு பானந்தனே. (88)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
சொருபானந்தத் திருமா முனிவன்
        றுணையார் கமலத் தொலையா நறவைப்
பருகா வுருகிப் பெருகா நிறையும்
        பரமானந்தப் பெருமா களியே
னொருபா வனையற் றுரையற் றுணர்பற்
        றுருபற் றொழிபற் றுலகற் றிலகுற்
றிருகா தலுமற் றவரென் றுலகத்
        தெண்பட் டவரென் கண்பட்டவரே. (89)

இருவிகற்ப வெண்பா
பட்டமத கரிமேற் பலகோடி யாண்டவனி
வட்டமுழு தாளு மன்னர்பத—மட்டோ
சொருபானந் தன்கீர்த்தித் தொல்லமுதை வாரிப்
பருகா வுருகும் பகற்கு.(90)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
பகுத்த பேதமும் பூதமும் போதமும்
        பற்றுவிட் டதுமுற்றுந்
தொகுத்தி யாவையு நானெனத் தானெனுள்
        சுடர்ச்சொருபானந்தன்
மிகுத்த தாமரை செகுத்ததா ளல்லது
        வேறுவேறுலகத்தே
வகுத்த மூவர்தம் பதத்தையொன் றாகயான்
        மறவியு மதியேனே.(91)

அறுசீராசிரிய விருத்தம்
மதியிலே னெனைப்போல வல்வினைசெய் தாருண்டோ
        மங்கு மின்னார்
கதியிலே சுழன்றவலக் கடலிடையே நடனாடக்
        கடவேனாகித்
துதியிலே யருள்சுரக்குந் தூயசொரு பானந்தச்
        சோதி யென்னு
நதியிலே புகுந்திருக்க விதியிலேன் முகவாதே
        நின்றற் றேனே. (92)

கலி விருத்தம்
அற்றவர்களாகியறவேடங்கொண் டாசறாதே
கற்றவர்களாகியரிதாய கலைகளெல்லாந்
துற்றவ ரிலாதிச் சொருபானந்தன் தொண்டரெல்லா
மற்றவர்கள் கோடி பலகோடி மடங்குநன்றே.(93)

கட்டளைக்கலிப்பா
நன்று மறியே என்று மறியே னாயேனுட்
டுன்று சுடரே சொருபானந்தச் சோதியென்
றென்றிங் குரையா டளவேனிதையஞ் செயுமாறிங்
கொன்று மறியே னெனினு முரையா தொழியேனே. (94)

கட்டளைக்கலித்துறை
ஒழித்திலை சிற்றின்ப முண்டிலை நீயுண்டு முண்மைதனின்
விழித்திலை மெய்ச்சொரு பானந்த வென்று வெறுமொருகான்
மொழித்திலை தீமை மொழிந்தற் றனைபல மோகமென்றுங்
கழித்திலை யாவி கழிந்தனை யேயென் கடைநெஞ்சமே. (95)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்

கடைய தாகிப் பிபீலிகை யாதியாக்
        கமல யோனிக் கணக்கில் சராசரத்
தொடைய தாயொன்று போலுல கங்களாந்
        தோற்ற மென்சொருபானந்தச் சோதியை
யிடையறாவின்ப வாரியை யிங்குவந்
        தென்னை யாண்டவெங் கோனை யிறைஞ்சியே
யடைய யான்விழுங்கும்படி பாரினி
        யகில லோகமெங் கேயறி வன்றியே. (96)

அறுசீராசிரியச் சந்த விருத்தம்

அன்றென்று கூறுதனை யாமென்று கூறுமறு
        சமயங்க ளோதியவையே
நன்றென்று கூறுமவர் நடுவென்று ஞானகன
        வொளியென்று நாலுமறையா
யொன்றென்று கூறுசொருபானந்த நாதனுரு
        வாய்வந்து மேவிவரவா
வென்றென்று கூறியிரு பாதங்கண் மேவவிதி
        யின்றிங்கி லாதவிவரே.(97)

கலிநிலைத்துறை
தவிர மீதொன்று மொன்றுபகாச்சமயத்தினொன்றுந்
துவரே மனைத்துஞ் சொருபானந்தச் சோதிதொல்லைப்
பவரோக மாறும் படிகண்ட பதங்களென்னு
மவிரோத மான நெறியல்லன வையமுண்டே. (98)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
வையமினி யெனைப்புகழ்ந்தென் மற்றெனையிங் கிகழ்ந்தாலென்
        மாறா தென்றுஞ்
செய்யவள்வந் தென்னுடனே செறிந்திருந்தென் பிரிந்திருந்தென்
        சிதையா தென்று
மையமற விருந்தெனுடம் பழிந்தாலென் னாக்கமழி
        வதனா னுண்டோ
துய்யசொரு பானந்தன் றுணையடியென் றலையாரச்
        சூடி னேற்கே. (99)

வெண்பா
சூடினேன் பாதஞ் சொருபானந் தச்சுடரைப்
பாடினேன் பண்டை யடியாரிற்—கூடினேன்
கண்டேன் களிகூரக் காயம் படைத்ததனா
னுண்டேன் பெறாதபய னொன்று.(100)

ஞானவிநோதன் கலம்பகம் முற்றும்.
-------------------------------------

செய்யுள் முதற்குறிப்பு அகராதி (செய்யுள் எண்களுடன்)

1. பேரைக் கலம்பகம்

அளவறியாப்
புனலிடைப்பட்ட 16
குழைத்திருப் பார 13
அறிவி லேனொரு 18 குறைக்கொழுந் தாயமு 8
ஆகமொன் றிரண்டு 7 கொடித்தேரினர் 38
ஆடிலாள் கழல் 20 சரமழைக்கும் 98
ஆரைய ராம 23
ஆவி யுண்டுமை 36 சிறந்தார் 33
ஆழி மாதவன் 11 செய்யிற் கரும்பும் 40
ஆளைப் பொருது 17 செவிதொறும் ???
இரும்பை 41 தவசரிதை 5
இல்லத் தடங்கா 28 தழல் பிழிந்து 35
உரைக்கொடு மாடவர் 32 தழைத்தெழும் 4
எமக்கு முகம் 34 தாமோதர 43
ஏடவிழுங் கண்ணிக் 12 தாளெடுத் துலகளந்த 27
ஏது காரணத்
தேவர்களேனும் 15
தேவகியார் 30
ஒருகைமுகக் 3 தேனார் பொருளைத் 44
ஒருபிழை 22 தொழும்பாக்கி 39
கடல டங்கலுழி 29 நாராய ணாவென 21
கண்ணகம் 24 பதித்தநவரத்னமணி 101
காரணங்குறி யாய் 10 பால்வடிவுந் 45
பின்னையைத் தழுவிப் 14 மானென்பார் 42
பூமாது நலம் வடித்தூது 46 வெடித்துச் சிவந்த 26
பெருவிட வரவணைப் 31 வண்டிருக்கும் 37
மழைக்காவல் வாடைவந் தியங்க 99
மறைமு டித்தலை 6 வாழி புகழப்பேரை 100
மாகவலைப் ??? வாழி வலம் 19
மாவளர்த்த 25 வானவர் தானவர் 9
---------------

2. திருமயிலாசலக் கலம்பகம்

அஞ்சலளித் தாண்ட 10 ஈரம் பொருந்தா 94
அண்ணற் கொருபொருள் 86 உய்ய நல்வரம் 46
அமலன் புகழ் 64 ஊசற் குழைமடவார் 43
அம்மானை யாடி 39 எவர்களும் புகழும் 17
அய்ய மின்றி 7 என்னே யமுநின் 53
அழகிய சண்முகத்
தொருமெய் 100
ஏசகன்ற 51
அறிஞர்சூழ் 71 ஏந்து பூண்முலை 23
அன்றுசிவப் பிரகாசன் 1 ஏன மற 59
ஆகு மதை 70 ஏனலங் கானில் 20
ஆட்டுப்பால் 2 ஓதும் பனுவல் 75
ஆரார் செஞ்சடைப் 93 கலையான 60
ஆன தா கின்றதினி 88 கன்னிக் குறத்தி 4
ஆனமட் டினிற்பணி 11 கிழமுனிவன் 57
ஆனையுரு வான 49 இயல்வளமும் 61
இரங்கும் 2 இருஞ்சூலம் 81

குகனே மயிலமலை 25 தெய்வங்களத்தனையும் 78
குணப் பிசகும் 72 தெய்வப் புலமையும் 79
குருபரா வெனத்தினமும் 12 தேவருக் குஞ்சசி 44
குவிக்குங்கை 26 தையலுக்கு 90
கூடுமவர்க் 41 நண்ணல் கண்டு 21
கேட்டினுக்கு ளஞ்சி 83 நமனஞ்சிய 56
கொற்ற வர்க்குமுயர் 69 நலங்குலவு 29
கோவில் கொண்ட 32 நன்றே வருக 96
சயிலமுழுக்கவும் 3 நாயிற் கடையாகி 35
சலன மற்றதிரு 98 நானங் கமழும் 67
சற்குருவாம் 80 நானு நீயும் 30
செப்பரிய 66 நிகழ்த்தரும் 24
சேயநின் 34 படையா லொரு 55
சேயமா மலர் 8 பண்குலவு 15
சேயமா முகங்கள் 16 பரம்பிய தென்றல் 89
சேயிலங்கும் 36 பவச் சாதி 82
சேய்முத் தமரர் பன்னிரண்டு 48
சொல்லு மாயப் 74 பிரமாதி யாண்டதனில்
தலையாலன் புடனே 84 புகழனந்த 27
தனம்பகவானவர்மீதே 3 புயலார் மயிலமலைப் 13
தாமரைக்கண் 42 பொருசேவலணி 45
திகழுஞ் சண்முக 92 மகிழ மாமலர் 77
திருமகள் சேர் 1 மயங்கிசை 4
துடியடிக் களிற்றின் 40 மயிலமலை 2
மயிலாசலத்துற்ற 5 மயிலென 33
மலியுங் கருணை 91 வாத நூற்பிணக் காளர் 6
மலைத் தெய்வம் 3 வார்வேல் 73
மனமுனது 50 வாழுங் கிளியின் 54
மாட்டாத வென்னை 14 வித்தை யாலும் 85
மின்றயங்கும் 76 வியனார் கமல 58
மின்னவிர்ந் திலங்கு 99 வீட்டு நேயம் 68
மின்னிலங்கிய 37 வீரவடி வேற்கை 19
முத்த மனைய 18 வேமப்பால் 65
முருக றாமலர் 9 வேளஞ் சித்தன் 52
வஞ்சமெலாம் 38 வேளணிமலர் 87
வருபல கனவினில் 97 வேளைக்கருளும் 95
வரும மின்றிய 62 வேளைக் குதவிடு 28
வளமலிந்த 47 வேள்விடும் பூங்கணை31
வன்னமுலைத் துணையை 22

------------------------
3. ஞான விநோதன் கலம்பகம்

அச்சமெலாம் 34 இடுகின்றிலேன் 88
அடியேனை 0 இடுவார் 26
அருணாறும் 77 இணையாய் 6
அலராயின் 47 இயலுமிசை 8
அறையாநின் 40 இரவுபக லுயிர் 32
அற்றவர்க ளாகி 93 இலதுளது 52
அன்பே ??? இன்றவா 45
அன்றிய 7 இன்றுளே 20
அன்றென்று 97 உடலை யார்த்த 75
ஆகமுமுடையீர் 73 உடையானென 66
ஆகின்றவை 81 உண்டு மில்லையும் 46
ஆனேனது 54 உரைசெய் மனனே 39
அன்பே சொரூபா 82 உறவே 22

ஊசலாடுமிவ் 35 தந்தையொடு 49
ஊன்வரு பெருநோய் 64 தரையதன் மேல் 19
எனதே பிறவி 2 தவிர மீதொன்று ???
என்புன்றலைமிசை78 தனையாரும் 33
ஒழித்தலை 95 தானிவ் வுலகின் 10
ஒன்றாயும் 1 தானே வணங்குமென் 36
ஓசை தந்தமிர்த 44 திணியமுருடாயொன்றை 14
கடையதாகிப் 96 தீர்த்த மாவதும்68
கண்டே சொருபானந்தன் 65 துங்கத் திருவடி 85
கமையால் வந்தது 21 தொண்டர் 57
கலையல்லால் 79 தொழிலவரடியிணை 61
கற்றவர்க ளாவாரும்??? தொழுவார் 30
காலம்பல??? நலனாகுவது 71
குத்திரம தாவுலகர் 51 நன்று மறியேன்94
கூடாதே 53 நாதனையென் 13
கொடிய விளையான் 58 நின்ற தடியார் ???
சூடினேன் 100 நின்றுநிலை யாது 29
செய்தவம் 76 நெஞ்ச மறிய 59
செறிவுறு மடியார் 16 பகராநின் றேன் 55
சொருபானந்த 89 பகுத்த பேதமும் 91
ஞாலம் புகுந்தருளி 23 படக்கடவது 67
ஞான்றவா ளருவி 41 பட்டமதகரி 90
பதியாகின்ற 84 பானந்திய சுவை 70
தவிரே 98 பருதியு மதியும் 72
கற்றவர்கள் 60 பாதந்தலையில் 63

பிணங்குவேனோ 87 முன்னே நடுவே 3
பிறவியானுள 12 மேனி வேறுமறிவே 18
புகழ்பெறு 4 மேனின்ற5
புண்ணிய மவன் 38 மொழிகிலீர் 50
புயமே குன்றமும் 11 வந்தவர லாறொன்று 15
புயம்பொருந்தநடு 17 வந்துபர மானந்த 83
பெறுவதினி 28 வாராய் 27
போதா தனன் 74 வாழு கின்றனர்கள் 9
மதிக்கை 69 வாழும் பதநீ 48
மதியிலே னெனை 92 வினை வனை 37
மருந்தா மவன் 56 வேண்டாதே 31
மருளால் 42 வேதநா யகனார் 43
மலர்மிசை மடந்தை 86 வேறொன்றெனும் 24
மானா குந்துணை 25 வையமினி 99
-----------------

Comments