Cīkāḻit talapurāṇam II
பிரபந்த வகை நூல்கள்
Back அருணாசலக் கவிராயர் இயற்றிய
சீகாழித் தலபுராணம்
பாகம் 2 / அத்தியாயம் 14 - 31
அருணாசலக் கவிராயர் இயற்றிய
சீகாழித் தலபுராணம்
Source:
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
அருணாசலக்கவிராயரருளிய " சீகாழித்தலபுராணம்"
திருக்கைலாச பரம்பரை நிகமாகம சித்தாந்த
சைவ சமயாசாரியபீடமாய் விளங்காநின்ற
திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணியதேசிகசுவாமிகள்
கட்டளையிட்டருளியபடிக்கும்,
ம-ள-ள-ஸ்ரீ சீகாழி சபாநாயக முதலியாரவர்கள் விருப்பத்தின்படிக்கும்,
ஷயூர்நேடிவ் ஐஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் சீகாழி சிதம்பரபிள்ளையாலும்,
சிதம்பரம் சபாபதிதேசிகர் குமாரர் சோமசுந்தரதேசிகராலும்,
சென்னை:
ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
விய ளூ மாசி மீ
-----------------------------------------------------------
18. 14 - ஆவது, கிளியுபதேசித்தவத்தியாயம். 39 (822-860)
19. 15 - ஆவது. வேணுபுரமானவத்தியாயம். 46 907 (861-907)
20. 16-ஆவது.கழுமலமானவத்தியாயம் 19 (908-926)
21. 17 - ஆவது. புறவமானவத்தியாயம் 39 (927- 964)
22. 18 - ஆவது. பூந்தராயானவத்தியாயம். 19 (965- 984)
23. 19 - ஆவது. மலைவரவுரைத்தவத்தியாயம். 51 (985-1035)
24. 20 -ஆவது, ஆபதுத்தாரணவத்தியாயம். 41 (1036- 1076)
25. 21-ஆவது. கழுமலநதிவரவுரைத்தவத்தியாயம். 86 (1077- 1162)
26. 22-ஆவது. குமரவேளுபதேசம்பெற்றவத்தியாயம். 36 1198
27. 23 - ஆவது. திருஞானசம்பந்தப்பிள்ளையார்
திருவவதாரவத்தியாயம். 84 1282
28. 24 - ஆவது தீர்த்தமகிமையுரைத்தவத்தியாயம். 72 (1282-1354)
29. 25 - ஆவது. வடுகநாதவத்தியாயம்.40 (1355-1395)
30. 26- ஆவது வேதவியாசரத்தியாயம். 32 (1395- 1426)
31. 27- ஆவது. அக்கினீசுரர்மகிமையுரைத்தவத்தியாயம். 20 (1427-1446)
32. 28- ஆவது. சூரியன்பூசித்தவத்தியாயம். 18 (1447-1464)
33. 29- ஆவது சந்திரன்பூசித்தவத்தியாயம். 14 (1465-1478)
34. 30- ஆவது சேடனுங்கேதுவும்பூசித்தவத்தியாயம். 32 (1479-1510)
35. 31- ஆவது அண்டநாயகர்மகிமையுரைத்தவத்தியாயம். 40 (1511-1550)
-----------------
திருச்சிற்றம்பலம்.
ஸ்ரீசம்பந்தகுரவேநம:
சீகாழித்தலபுராணம்.
822 ஊழிமுதன்மூப்பொடுங்குதவத்துரவோன்பணியக்கொச்சையென்ற
காழிநகர்க்கணொருபான்மைகற்பநாளிற்கவுடேசன்
வாழியொருபைங்கிளிமூலமனுவொன்றளிப்பவினையகன்ற
பாழியியலும்பண்ணவர்கோன்பகர்ந்தமுறையிற்பகர்கிற்பாம். 1
823 முரசுதுயிலாமணிமுன்றின்முடித்தேர்மிடைந்தகொடித்தானை
அரசுவணங்குங்கடைத்தலையினவனிபொதிந்தகவிகையினான்
பரசுமவரேயன்றியொருபகையொன்றிலதாற்சமர்வேட்டுக்
குரவுமலர்த்தோட்டினவடங்காக்கோவிதாரத்துசனென்பான். 2
824 திரைநீருடுத்தபெருவயலுட்செங்கோலெருவிட்டங்கார்வக்
குரைநீர்ப்பாய்ச்சிவேள்விமுதற்குறையாவேலிபுறங்கோலித்
தரைமேலிடும்பைக்களைகடிந்துதருமப்பைங்கூழ்தலையெடுக்க
நிரையாளரிமன்னுழவனெனநெடுநாள்புறந்தந்திடுநாளில். 3
825 மற்போர்தொடங்கவேழிசைத்தேன்வளர்ப்போர்பொழியவாதிகடம்
சொற்போர்தழங்கமுடித்தாமந்துணைத்தாள்சூட்டுமருவலர்பூம்
பொற்போர்குவியநீடுலகம்புரப்போர்பணியத்திணியிருள்சீத்
தெற்பாய்மணிமண்டபத்தொருநாளிருந்தானரசர்பெருந்தகையே. 4
826 இருந்தவமயத்தருந்தவநூலியன்றநடையன்றோலுடையன்
வருந்துபசியனாறைந்துமாறுமொருவனண்பகல்வாய்
விருந்தினெதிர்புக்கோர்கடிகைவேலையிறந்துபணியாமல்
பருந்துசுழல்வேலவனிருப்பப்படர்ந்தமுனிவனடந்தனனால். 5
827 நெடுந்தாபதனைப்பழித்தவினைநெருப்பாரழலாற்கவுடர்பிரான்
கொடுந்தாண்முதலைக்குண்டகழிக்கோடாரெயிற்சத்தியவதிப்பேர்
தடந்தேர்நகரத்தரசிருப்புந்தானைத்தலமுநிதித்தலமும்
அடுந்தூரியமார்த்தெழுகடையுமடலையணிந்தபிதிர்வனம்போல். 6
828 ஆசொன்றணையாவருந்ததியாமனையாண்மனையானுறையுளன்றி
வாசங்கழகங்கல்லூரிமாடமரங்குபடைச்சாலை
கோசமரணம்பலந்தெற்றிகொடுங்கைசுருங்கைபணிச்சாலை
தேசம்பெறுபட்டறைமலர்மென்சேக்கைபலவுஞ்சிதைந்தனவே. 7
829 கவைநாவளைத்தவழற்சிகையாற்கடிமாநகர்போற்புறனுமழிந்
தவையால்வருவாய்பலசுருங்கியருநோயாற்றுமருமருந்தைச்
சுவையாதியைநீத்தின்பமொறீஇத்துய்த்தான்பிடகநெறிபிறழ்ந்த
நவையாலதன்பேறிழந்தான்போனாளுமீட்டும்பொருளிழந்தான். 8
830 ஆனாவறிஞாவெறுத்துழியுமளவில்சிறப்பாமதுமெய்யே
மேனாளடைந்தகடவுண்மினிவினைவெம்பிறப்பொன்றேவறியன்
மானாபரணன்கவுடர்பிரான்மற்றைமுனிவன்மனம்வெறுப்ப
ஏனோர்பலருநகையாடவெல்லாம்வறியனாயினனால். 9
831 அணிவேலுண்கட்டிருவனையாரலமந்துருகவறிவிலியாய்ப்
பணியாற்றல்வாளுழவன்பக்கமளவுமறையலகைப்
பிணியாலலமந்துளந்திரிந்துபெரும்பேதுறுவானறனையளிக்க
மணிமாடகத்துப்பிணிகுரலார்மகதிமுனிவனாண்டடைந்தான். 10
832 பனியிற்றிரிந்தபதுமமெனப்பனவப்பேயான்முகந்திரிந்து
குனிவிற்றடக்கைமாறடுதாட்கோவிதாரத்துவசனுற்ற
துனியைத்துடைப்பெனெனப்போந்ததொன்மைமுனியைநன்மையுளம்
கனியப்பதும்மாலினியாங்காவற்கிழத்தியெதிர்கண்டாள். 11
833 கண்டாளிறைஞ்சிமறைமுனிவன்கமலத்தோடோய்நறுந்துளிநீர்
உண்டாள்பசும்பொற்கலந்திருத்தியுவட்டாவமுதப்பதனடிசில்
தண்டாமரைப்பூங்கரத்தூட்டித்தரளம்பொருவப்பெருவிழிநிர்
கொண்டாள்கருணைக்குன்றனையகோதின்முனிவன்வினவுறுங்கால். 12
834 புரைதீர்கற்பின்வடபுலத்துப்புத்தேண்மின்னனாண்முனிமாட்
டுரைசான்மூரற்றருபலனாலொட்பமடைந்துவாளுழவன்
விரையார்கமலமுனியனையவீணைமுனியைநனிபேணித்
தரைதோயடிக்கீழ்முடிசூட்டித்தாடோய்தடக்கைமுகிழ்த்தலுமே. 13
835 இன்னநாளிலெமையுணராதிருந்தவாறேயியறிரியா
முன்னைநாளிலொருமுனிபாலத்ததுளதோமுடிவேந்தே
உன்னையறியாமறையலகையுறுத்தவாற்றாலெனவுயிர்கட்
கன்னையனையாயிழைத்துளெனென்றரசுகூறவவன்கூறும். 14
836 ஆராவமுதாநிறைபரத்தோடாவியிருத்தியோரெட்டுக்
காரார்கருமச்சித்திகளுங்கணியாதுணர்ந்தசிவயோகம்
பேராவறிஞரருவருத்துப்பெயர்த்தபொருளைநிலையென்றே
தேராவெளிற்றுச்சிற்றறிவிற்செருக்கினாய்நீயென்செய்தாய். 15
837 வேறற்றெழுந்தபரஞ்சுடரைவெளியில்வெளியையொளிக்கொளியை
தேறத்தெளிந்தசிவயோகிசேர்ந்ததானஞ்சிவதானம்
ஊறற்றெறிநீர்க்கங்கைமுதலொன்பானதியுமாடுகின்ற
பேறுய்ப்பதுதானவரடிக்கீழ்ப்பெய்தபுனலோர்துளியன்றே. 16
838 விருந்தினெதிர்ந்தயோகிதனைவிரைவிற்போற்றாதில்லறத்தின்
இருந்தவொருவன்செயுமறங்களெல்லாமிழப்பன்மற்றவனைத்
திருந்துபூசைசெயின்முனிவர்தேவர்சனகாதியர்வசுக்கள்
பொருந்துமூவர்முதலியரைப்புனையும்பூசைப்பலனடைவான். 17
839 இமைக்குங்காலங்கொன்றையினுமிரட்டிகாலங்கூவிளத்தும்
சமைத்தகடிகையிலிங்கத்துந்தார்வேந்திடத்தோர்மாத்திரையும்
அமைக்குங்காலநின்றெவையுமாக்கியளித்துத்துடைத்தருள்கூர்
உமைக்குநாதனெக்காலும்யோகியிடத்தேயுறைதலினால். 18
840 மேருவாதிபுல்லீறாய்விரிந்தவுயிர்களுடன்சாரச்
சாருமதிதிக்கிடர்புரியிற்சகலவுயிர்க்கும்புரிந்தவினை
சேருமனையாருளமுவப்பவெவையுமுவக்குமெனத்தெரியா
தோருஞ்செருக்கான்மறையலகையுற்றாயுணர்வுமற்றாயால். 19
841 வெள்ளியடுக்கலிறைஞ்சியயாமீண்டுன்மனையிலனமிசையத்
தெள்ளியறியுமுணர்வடைந்தாய்சீறுமலகைபாறும்வண்ணம்
புள்ளியலவனூறுசெய்பூம்பொதியம்புயம்வேசியர்கலவை
அள்ளன்முலைநேர்வயற்புகலிடைவாயிடருமுடைவாயே. 20
842 வழுக்கூனுகர்தலிழிவயிறன்மதுவாய்மடுத்தலயன்மடவார்
எழிற்காமுறுதலதிதவறியற்றலாதிவினையும்விண்ணோர்
குழுக்காவலன்முன்னிறைஞ்சியருட்குரவாப்பிழைத்தவினைகெடல்போல்
இழுக்காதொழியுமுனதிடருமிரியல்போகுமொருதலையே. 21
843 கோலமலரோன்றடமாடிக்கொச்சையிடையார்திறத்தேனும்
மூலமனுவேட்டாலநிழன்முதல்வன்றிருமுன்கணித்தவர்க்கே
மாலும்பிரமகத்திமுதன்மாற்றல்வகையாலிதற்கிதென
நூலிலறியாவினையனைத்துநூறுமிதுசத்தியமறிநீ. 22
844 நன்னர்முனிவனிதுகூறிநடப்பவன்றாடொழுதரசன்
கன்னலிழிசாறடும்புகையைக்கமஞ்சூன்மழையென்றிளஞ்சூட்டு
வன்னத்தடங்கணெடுந்தோகைமயில்களாலுமலர்ச்சோலை
அன்னப்பணைசூழ்புகலியின்மாடணைந்தானெல்லைபணிந்தானே. 23
845 இடங்கூர்நறுஞ்சேயிதழ்க்கமலத்தெழிலோதிமப்பார்ப்பிறைகொள்ள
நுடங்காரழற்கண்ணாமடந்தைநோற்கின்றமையொத்ததுகண்டான்
அடங்காப்பொறியைந்தடக்கிவெண்ணீறாடியசைவற்றிருப்பார்போல்
நெடுங்காலுறைத்துக்கண்முகிழ்த்துநிற்குங்குருகினிலைகண்டான். 24
846 நீறுதாங்குமெய்யன்பர்நேர்ந்தபோதுநெறிக்கெதிரே
சோறுதாங்கிநிற்பவர்போற்சுமந்தமலர்க்கேதகைகண்டான்
நீறுதாங்கிச்சிவசிவவென்றேத்திக்கருவேரரிமினெனக்
கூறியாண்டும்பலரறியக்கோலப்பூவைசொலக்கண்டான். 25
847 தண்ணீர்நிலைநின்றொருதாளிற்சதுரானனன்செய்யருந்தவம்போல்
கண்ணீரரும்பியவணுறையுங்கமலந்தானுஞ்செயக்கண்டான்
விண்ணீர்மதிமேலினுங்கழுத்தின்விரியம்புயலுமுறச்சுதைதோய்
தெண்ணீர்மாடங்கறைமிடற்றுச்செம்மலுருவந்தரக்கண்டான். 26
848 துயிலாவரமும்பனுவன்மறைசோராவொழுக்கும்பரத்திலன்றிப்
பயிலாவுணர்வுமைம்பதமும்படர்கண்டிகையுநீறுமின்றி
இயலாவடிவும்பத்திநெறியிகவாநடையுமிழித்தல்புலால்
அயிலாவெருகுமீன்குத்தாவலகார்குருகுமவண்கண்டான். 27
849 சொன்னதலத்தைநோக்கிமுடிதுளக்கியவனித்தலங்களிந்த
மன்னுதலத்தோடொக்குமெனல்வழுவாமதிகமீதெனலால்
அன்னதலத்தொவ்வொவ்வுருவினமைந்தவொருவனனையதன்றி
இன்னதலத்தின்மூவுருவத்தியைந்தவாற்றாலெனநினைந்தான். 28
850 ஆழிகுழித்தவழிதூர்க்குமந்நலார்மெல்லிழைகிளரப்
பாழிமதமால்வயக்களிற்றின்பருத்தாள்கிளைக்கும்வீதிபுக்கு
வாழவலங்கொண்டிழிகண்ணீர்வாராவருவான்செவிமிசை**
ஊழினியன்றவைம்பதத்தினுரைசாலொலியொன்றுற்றதுவே. 29
851 உற்றகாலைவாளுழவனோரேருழவன்றூற்றுமுகில்
பெற்றவொலிகொண்டுவந்ததெனப்பெற்றகளியால்வியப்பெய்திப்
பற்றியேகுமந்நெறிக்கட்படருங்காஞ்சிவிலைமடந்தை
முற்றுமனைக்கணன்னவொலிமுழங்கவுணர்ந்துள்ளகம்புகுந்தான். 30
852 கருவித்துகிரால்விளைந்தசிறுகால்வாய்க்குடம்பைநடுவணிருந்
துருவச்செந்தார்மடக்கிள்ளையொளிவாயினிலிம்மனுமிழற்றத்
தருமச்சுகதேசிகனடிக்கீழ்த்தாழ்ந்ததனிவேனிருபன்போல்
ஒருமைப்படத்தாழ்ந்துபதேசமுற்றானுறுதிபெற்றானே. 31
853 கூட்டுச்சுகமன்றளித்தமனுக்கொண்டான்வீணைக்குருக்கள்சொன்ன
வீட்டுச்சுகமுமெய்தினன்போல்வியந்தானயந்தாரொடுமுன்னை
நாட்டுற்றுளதன்கோளனைத்துநவின்றானுந்தாலயம்புக்குத்
தோட்டுக்கமலாலயன்புனலுட்டோய்ந்தானிடரைக்காய்ந்தானே. 32
854 பலகட்டுரைப்பதென்னையினிப்பைம்பொன்போன்றுகவுடர்பிரான்
அலகைத்தழல்பாய்ந்துருகுதலுமந்தீஞ்சுருதிமகதிமுனி
இலகப்புகன்றவுரைக்குறட்டாலெறிநீர்ப்பிரமதடத்துய்பத்
தலைமைப்பசும்பொனுருவடைந்துதணிந்தானலகைத்தழலென்றால். 33
855 அதுபின்னியதிச்சடங்காற்றியணிநீறணிந்தைம்பதமோதி
முதிருங்கடவுண்மணியலங்கன்மொய்ப்பவளைந்துமுகைதிறந்து
மதுவங்கறங்குமலர்க்கொன்றைவரதன்வழிபாடியற்றியண்டம்
பொதியுமொருசிற்றுதரமலைப்பூவைதனையும்போற்றிசைத்தான். 34
856 ஓதப்புணரிபுறங்கோப்பவுலத்துலையாநிலைநாடி
நாதப்பெருந்தோணியிலிருந்தநம்பன்றிருத்**ண்மலர்பணிந்து
சீதக்கமலத்தடங்கண்ணன்றிணிதோல்போ***தமுடைமாறப்
போதப்புழுகுபுனைவடுகன்புனைதாள்பணிந்துவினைதீர்ந்தான். 35
857 புரிநூன்மார்பரகமகிழப்பூமிதானங்கோதானம்
வரிவேல்விழிக்கன்னியர்தானமற்றுங்கோடிதானமெலாம்
விரிவாலாற்றிநித்தவிழாவியப்பாலாற்றித்தொண்டுபல
பரிவாலாற்றிப்பணியுமிழ்ந்தபரிதிபோன்முன்னுருவடைந்தான். 36
858 மன்றல்கமழுமகன்பொதியில்வடித்ததமிழைமுடிக்கொடுபூந்
தென்றலிழிந்துபுறந்தவழுஞ்சிறுசாளரத்துநெறிமாடக்
குன்றுநிரைத்தமனுவீதிக்கொச்சையகன்றுபதிபுக்குத்
துன்றுமரும்பல்வளநுகர்ந்துதுணைவன்மலர்த்தாளிணைசேர்ந்தான். 37
859 வள்ளத்தமுதிட்டூட்டியுரைவருத்துங்கிளியேயருட்குருவாய்
உள்ளத்துணர்ந்தவதிதிதவறொழிந்தால்தன்சீருரைக்கவற்றோ
கள்ளப்பொறியைந்தவித்துநெடுங்காலந்தழற்கண்ணாற்றுநரும்
வள்ளற்பெருமான்புகலியிலோர்மரத்தோடொவ்வார்மதிக்குங்கால். 38
860 கன்னிமணிவண்டிசைமுரன்றகார்கொள்வணங்குந்தடஞ்சோலைப்
பொன்னிநதிவானதியாகப்பொலன்கற்பகத்தினலங்காட்டும்
செந்நெல்வயல்சூழகாளிபுரிச்செம்மன்மனுவையம்மவொரு
வன்னியுரைத்ததிதுவென்றான்வன்னிவளாக்குமுனிசூதன். 39
(14 - ஆவது கிளியுபதேசித்தவத்தியாயம்முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 860)
----------------
861 அரசுதேக்கெறிவேலினாற்கஞ்சுகமிரங்கி
பரசுதொன்மனுநல்கியபுகலியம்பதிக்கே
விரவுவார்சடைமுனிவரன்பின்னரும்வேணு
புரமெனும்பெயர்புணர்ந்தவாபுகன்றமைபுகல்வாம். 1
862 பண்டைமன்பிரபாகரன்மக்களினிரட்டை
கொண்டபன்மனுஞ்சூரனுந்துணையொடுகுழுமி
மண்டருந்தவம்புரிந்துபாரிடங்களாய்வருநாள்
அண்டசாரதச்சாபமுண்டசுரராயவர்தாம். 2
863 ஏயபன்மனுஞ்சூரனுமோருருவெய்தி
ஆயகாசிபனிடத்துவந்தாடல்வெவ்வலியால்
பாயவல்லிருள்விழுங்கமராபதிபரிக்கும்
நாயகன்றனைப்பொருதுவானீருருநண்ணி 3
864 மடங்கலேறிநல்லொருபதினாயிரமதுகை
இடங்கலந்ததோட்பதுமனுஞ்சூரனுமிவரோ
டுபங்கியைந்தவெஞ்சேனையுமும்பர்தொல்லுலகம்
அடங்கலுங்கவர்வானமராடினரடிநாள். 4
865 அண்டவாணருந்தானையுமார்த்துடன்போர்ப்பக்
கொண்டலூர்தீயாண்டெழுதலுங்கொடியவர்சேனை
மண்டியார்கலியொன்றொடொன்றேற்றனவானம்
விண்டுபோழ்பட்டவிளைந்ததுகொடுஞ்சினவெம்போர். 5
866 தளர்ந்தமாதிரக்களிற்றினந்தாளடித்தூள்போய்
அளந்ததாரணனவனியையடல்வருதினிகள்
கிளந்துபூசலிட்டுரப்பியபேரொலிகெழுமிப்
பிளந்ததண்டமுங்கலந்ததுகிளப்பரும்பெரும்போர். 6
867 படவமாகுளிவெள்வளைசல்லரிபணவம்
குடமுழாத்துடியணைவயிர்காகளங்குளிறித்
தடவுமொல்லொலித்துழனியால்வீடுணர்தவத்துக்
கடவுளோருமென்செவித்துணைபுதைத்தனர்கரத்தால். 7
868 குழையின்காறுமுள்வாங்கியகடுஞ்சிலைக்கொடுங்கோல்
மழையின்வீசினர்வானவர்வடவையிற்பொங்கித்
தழையநோன்சிலைகுழைத்துநாண்டெறித்துவெஞ்சரங்கள்
முழைகொள்வாயருமழையெனப்பெய்தனர்முறையே. 8
869 தலையைச்சிந்துவபுரவியைமுருக்குவதடக்கை
மலையைக்கீறுவமன்னரையரக்குவவரிக்கைச்
சிலையைநூறுவதேர்க்குலஞ்சிதைப்பனதெவ்வர்
நிலையைமாற்றுவபுலவர்வெஞ்சிலைபொழிநெடுங்கோல். 9
870 முடிபிளப்பவுமுரசினைப்பிளப்பவுமுனைந்தோர்
கொடிபிளப்பவுமந்தரகணநிலைகுலுங்கும்
படிபிளப்பவுமூர்திபிலுருத்தெழும்பலகார்
இடிபிளப்பவுமீர்ப்பவுநிருதர்கையிருங்கோல். 10
871 வில்லினாணொலிகளிற்றினம்பிளிறொலிவியன்றேர்ச்
சில்லிவாயொலிதழங்கியவாயொலிசெருவில்
வல்லியம்பெருங்குழுவிடைமறிக்குழாமென்னப்
புல்லினாரகனிலத்திடைத்தயித்தியர்பொடியாய். 11
872 காலமின்னதுசெல்லுழித்தானையங்கடலைக்
கூலமாற்றுகச்செம்புலமடுத்ததைக்குறியா
ஆலமென்னநின்றழன்றுதன்றானையோடடர்ந்தான்
நீலமால்வரைநிகரியநிறத்துவெஞ்சூரன். 12
873 அடன் முழங்குசெந்தழல்பொறிவிழியினானலைநீர்க்
கடல்கிடந்தனதானையன்காசினிவயிற்றுக்
குடல்கிழித்தெழுகுன்றுறழ்தோற்றத்தன்குதித்தான்
தடவுவெஞ்சினத்தமரர்வாரிதியின்மந்தரம்போல். 13
874 கரங்களென்றும்வெங்கரியென்றும்பரியென்றுங்கருதார்
சிரங்களென்றும்வெங்கோலென்றும்வேலென்றுந்திணிதோள்
உரங்களென்றும்வேறறிவுறாதொருதனித்தேர்மேல்
சரங்கள்கொண்டெழுமுகிலெனப்பெய்தனன்றருக்கால். 14
875 ஊறுபட்டபுண்ணீர்படவும்பரையொறுத்து
வீறுபட்டவெஞ்சூரன்மேலுருமெனவெகுண்டு
நீறுபட்டுகவெதிர்ந்தனன்முதிர்ந்தவெண்ணிறத்துச்
சேறுபட்டமாமதலையுகைத்தெழுந்தேவன். 15
876 நெருக்கிவார்சிலைகுழைத்துமிழ்கணைகளைநேரே
ஒருக்கியாயிரங்கோடிதானவர்முடியுருட்டிப்
பொருக்கெழுங்களஞ்செம்புனலாறுகள்புதுக்கிப்
பெருக்கமேற்பிணப்பிறங்கலேபெருக்கினன்பிறங்க. 16
877 விண்ணிற்றூவியும்வெற்பினில்வீசியும்விரிநீர்
மண்ணிற்சிந்தியுமருவத்திலுறுத்தும்வாய்நுழைத்தும்
கண்ணிற்காணருநிருதர்வெம்படையெலாங்கவிழ்த்தான்
பண்ணிற்றாக்குவெள்ளடலயிராவதப்பாகன். 17
878 நெற்றிமேற்சிலநிறத்தின்மேற்சிலமுரணெடுந்தோட்
சுற்றின்மேற்சிலதொடுகரமேற்சிலதுரப்பப்
புற்றின்மேற்செலுமரவெனக்கொடுங்கணைபுகலால்
கற்றிவீழ்ந்தனர்தயித்தியர்கழலிளங்காய்போல். 18
879 திவசமன்னதிற்சூரன்வெந்தேரையுஞ்சிதைத்துத்
துவசமுந்துமித்தடுபரிக்குலத்தையுந்துணித்துக்
கவசமுங்கிழித்தவனுருஞ்சிரத்தையுங்கரத்தால்
அவசமுற்றிடவரிந்தனன்குலிசவேலதனால். 19
880 கணங்கொளிந்திரன்கடிந்தவெஞ்சூரன்மாயையினால்
இணங்குபன்மனையெய்தியீருருவுமோருருவாய்
மணந்துசூரபன்மாவெனநின்றனன்மகவான்
புணர்ந்தவாகைகண்டுடைந்தனனுறுவலிபோனான். 20
881 விரிந்தநோன்சினைத்தொன்மரமிவர்ந்தவன்விழினும்
திரிந்துமச்சினையிடைப்பிடித்தேறுமச்செயல்போல்
பரிந்துவானவருலப்பினுமுயர்ந்தனர்பாவம்
புரிந்தபுல்லியோரிறந்தவாறிறந்தனர்போனார். 21
882 போனகாலையிற்சூரபன்மனைப்புறங்கண்ட
வானவில்லிதன்வாகையுமற்றவன்செருவில்
ஊனமெய்தினான்றோல்வியுநோக்கியேறூர்ந்த
மானமில்லிதன்னடியவரோருரைவகுத்தார். 22
883 குன்றவார்சிலையானடிபணிந்துவெங்குலிசன்
வென்றியெய்தினனிவனஃதின்மையான்மெலிந்தான
என்றுமெம்பிரானருள்கடைப்பிடித்தவர்க்கேற்றம்
ஒன்றுமோபொருண்மும்மையுமவர்திறத்துறலால். 23
884 புரையறுந்தமிழ்த்தென்றலங்குழவிவாழ்பொதிய
வரையில்வாழ்சிவயோகியாசமனநீர்கடக்கக்
கரைபடாமையேழ்தினம்வரங்கிடந்தனன்கார்போல்
உரைசெய்மேனியனென்னின்மேலுரைக்கவுமுளதோ. 24
885 வரித்தவேணியானடித்தொழும்பால்வரும்வலியைப்
பரித்திலானிவனாதலிற்பரித்துளார்வாகை
தரித்திலானெனப்பலகொடுவாயொடுந்தவத்தோர்
தெரித்தமூதுரைவீழ்ந்ததுதயித்தியன்செவிக்கே. 25
886 அகன்றகேள்வியார்நுவன்றதையகனுறுகடவுள்
புகன்றதாமெனப்புலன்கொடுசூரபன்மனுமா
றிகந்ததன்குலக்குரவனையிருபதமேத்திப்
பகர்ந்தவைம்பதம்பெற்றனனுறுவலிபலிக்க. 26
887 நீறுதோய்ந்தசெம்மேனியன்கண்டிகைநிலவும்
வீறுமாமணிக்கோவையன்விமலன்மெய்யடியார்
தேறுமாகநடையினனெம்பிரான்றிருத்தொண்
டூறுநெஞ்சினன்புகலிவாயணைந்தனனுவப்பால். 27
888 வேறு.
குமுதவாயவிழ்க்குமமுதவாய்த்திங்கட்கூன்புறங்கொடிநிரைதடவும்
சமுகநீண்மாடக்காழியம்பதிவாழ்தனிமுதற்கோயில்புக்கலரோன்
இமிழ்தடம்படிந்துபிரமநாயகன்றனிருசரண்பணிந்துசேயொளிவிட்
டுமிழெரிநாப்பணளப்பருங்காலமூதையுண்டுறுதவமிழைத்தான். 28
889 இழைக்குறுந்தவங்கண்டழற்பொலிமேனியெம்பிரானன்புபூத்தவன்முன்
தழைப்பசுங்கழையாய்முளைத்துநல்லிலிங்கத்தனியுருக்கொண்டுமற்றதன்கீ
ழுழைப்பெருஞ்சங்கத்தீர்த்தமொன்றுதிப்பவுதவினன்கதழ்சினச்சிறுகட்
புழைக்கைமாவுரியிற்பவளமால்வரைமேற்புயறவழ்ந்தனையபொற்புயத்தான். 29
890 எழுந்தபாசொளிவள்ளிலைத்தலைவேணுவிலிங்கநோக்குற்றவாணிருதன்
பொழிந்துகண்பனிப்பக்கரமலர்முகிழ்த்துப்புளகமுற்றகநெகிழ்ந்தவசத்
தழுந்தியானந்தவாரியுட்டிளைக்குமளவையிற்களைகணாயெங்கும்
தொழுந்தொறுமடியார்ககெளிவருங்கருணைச்சோதிவானவனெழுந்தருள. 30
891 பாயிவிடையூர்ந்துபசுங்கொடிபுணரும்பவளமால்வரையினிற்பொலிந்த
தூயவனிணைத்தாமரையடிபணிந்துசுந்தராபோற்றிமாலயன்பால்
மீயுயர்கடவுட்குன்றெனமுளைத்தவியப்பெனவிதியிலேன்காண
மாயிருந்திறலார்வேணுவாய்முளைத்தவரதனேபோற்றியென்றிசைத்தான். 31
892 ஏத்தெடுத்திறைஞ்சுமனையன்மாட்டருள்கூர்ந்தென்னையாளுடையவன்கருணை
பூத்துனக்கினியன்றகேளெனமறைதேர்புங்கவாபங்கயனாதி
வாய்த்தமன்னுயிர்களெவற்றினுமாயாவலியுமிவ்வண்டகோடிகளைக்
காத்தல்செய்வலியுநிகரிலாவலியுங்கனிந்தருள்செய்யெனக்கரைந்தான். 32
893 அரண்பொருமூரற்கரந்தைவார்சடையானவனுவந்தனவளித்தொருநீ
வரம்பெறுவேணுவுழைப்பொலிசங்கமாதடமிதுபடிந்திடுவோர்
நிரந்தரவலிபெற்றோங்குகவருநாணிமிர்கடம்பணிபுயத்தொருவன்
கரந்தொடர்வேலாலெம்முழைவருக்கடையிலென்றிணையிலான்மறைந்தான். 33
894 தொல்லைநாள்பதுமாசுரன்வரமடைந்துதுயர்விளைத்தானெனவரத்தால்
ஒல்லையேசூரபன்மன்மனுமமரறுபதமொருதனிமுருகன்
மல்லன்மாஞாலத்துதிக்குநாட்காறும்வவ்விவாழ்ந்தனனெனின்மேல்கீழ்
இல்லையேயெம்மான்றிருவருட்கென்னாவிருந்தவன்மற்றுமொன்றிசைப்பான். 34
895 பீடுறுதோற்றத்தாடகக்குடுமிப்பெருந்தளித்தோணியம்புரிக்கே
ஈடுறுவேணுபுரமெனும்பெயர்தானின்னுமோராற்றினாலியைந்து
நாடுறுகாதைகேண்மினோநமர்காணகுபுகர்முகத்தொருநான்கு
கோடுறுமயிராவதப்பெரும்பாகன்கூத்தியராடலின்மேனாள். 35
896 மாலுழந்திருக்குமமைதியிலெல்லாம்வல்லதன்குரவனாண்டணைந்த
காலுறவணங்காநிலையறிந்தனையான்கவன்றயலேகலுமகவான்
மேலுறுபெரும்போர்நிருதராலுடைந்தவேதனைவேதனைவழுத்தி
ஒலுறவியம்பத்தேசிகற்பிழைத்தவுறுபழியெனவயனுரைத்தான். 36
897 உரைத்துழிக்குரவன்றனைவரக்காணாவுறுதவக்காசிபன்போன
வரைக்கிணையாற்றல்விசுவரூபனைத்தன்வழிக்குருவாக்கியோர்வேள்வி
உரைப்படவளர்ப்பமற்றவனிருதர்க்கூட்டலுமவனையொள்வாளால்
அரைக்கணத்தரித்தசதமகன்செயலையறிந்தனனவனுடைத்தந்தை. 37
898 அறிந்தவனொருதீவேள்விசெய்தொருவாளரக்கனைவிடுப்பவன்னவன்மா
றெறிந்ததோள்விருத்திராசுரனெனவந்தேற்றலுஞ்சீற்றவெள்ளானை
ஊறுந்தனிப்பாகனவனையும்வாட்டியுபயதேசிகரையும்பிழைத்துச்
செறிந்தவல்வினைபோலரக்கனைச்செகுத்ததீவினைத்தொடரடமெலிந்தான். 38
899 மெலிந்தவன்முன்னராழ்கடற்குடித்தமேலவனெய்தியயவ்வினையை
இலங்குநீர்விரிமண்ணரிவையர்தருக்களிவையிடத்திறக்கிவானுரிமை
நலம்பெறநளிநீரலம்புதண்பணைசூழ்நகுமணிமாடநீள்காழித்
தலம்பணிகெனத்தண்டமிழ்முனிவிடுப்பச்சதமகனதுகுறித்தெய்தி. 39
900 தேவியல்வேணுவழிபிடித்திழிந்துசெம்பொனாரெயில்புடையுடுத்த
மாவியற்றளிபுக்கயன்றடமாடிமழுவலானருச்சனைமுடித்துப்
பூவியல்பொலன்றாளடிக்கடிபணிந்துபுரந்தரனிரப்பமற்றவன்முன்
கோவிடைப்பாகனினிதெழுந்தருளிக்குறைவிலாவாறருள்கொழித்தே. 40
901 குன்றிருஞ்சிறகரொருங்குறவரிந்தகுலிசவேலொருவநினவினைகள்
இன்றிதிலெம்மையிறைஞ்சலினொழிந்தாயீண்டுநீவேணுவாலிறங்கி
நின்றதால்வேணுபுரமெனவிவ்வூர்நிலவுகவென்றகன்கோயிற்
பொன்றிருஞ்சயையான்மறைந்தனன்வேணுபுரமெனப்பொலிந்ததுமூதூர். 41
902 தாதளாயறுகாற்பேடிசைமுரலுந்தருநிழற்காவலன்முன்போல்
ஏதமொன்றில்லாவமருலகாட்சியெய்தினனிதுவீற்றிருந்தான்
ஆதலாற்காழிபுரத்தியலெல்லாமந்தணீரித்துணைடஞான்றும்
ஓதினேனலனேனான்முகத்தொருவனோதினுமொழிவுறாவன்றே. 42
903 உம்பர்வாழ்கடவுணிதிகளோரிரண்டுமுறுதவமாற்றியிந்நகர்க்குத்
தம்பெயரிரண்டும்புனைந்திறைகோயிற்றலைக்கடைக்காவல்பூண்டுலகின்
விம்பவாண்முகத்தின்விழித்தவர்மிடிநோய்விலக்கவேளாண்மையும்பெறலான்
இம்பரேசங்கநிதிபுரம்பதுமநிதிபுரமென்பதுமிதையே. 43
904 விழுப்பநீளெல்லையைங்குரோசத்தும்விண்ணவராதியர்பணிந்து
வழுத்தியவிலிங்கமணற்குழுவாகவயங்கலாலடிபடலாகா
செழித்தபொற்சிகரி சேய்நிலத்திறைஞ்சிற் றிருக்கறப்பொருப்புவிற் குழைத்தோன்
எழிற்புனைபுகலிக்கெய்தலாமன்றியிதுபெறாரெய்துவதிழுக்கே. 44
905 வைகலொன்றேனும்பூந்தராயிருந்தோர்மஞ்சனப்பொருள்சிலவளித்தோர்
செயகலன்கவிகைபிடிமுரசாடைசெய்துளோர்பெரும்பயனென்னோ
துய்கவர்திரியொன்றெரிமணிச்சுடர்க்குத்தூண்டினோரிழைக்கொருபருவம்
மைகவர்மிடற்றோன்கயிலைமால்வரையில்வதிவரென்றருமறைவகுத்தால். 45
906 தத்துநீர்வேணிப்பிரமநாயகற்குத்தக்கவின்னாரமுதொருக்கால்
பத்தியாலூட்டிலாயிரம்பருவம்பண்ணியபலனொருங்கடைவ
சித்திரையாடிப்பிறப்பின்மஞ்சனநீர்திருமுடிக்காட்டுநர்தமக்கு
முத்தியேயலதுமற்றையோர்போகமூவுலக்தினுமிலையால். 40
907 மண்ணிடங்கொள்ளவைங்குரோசத்துமல்கியவிலிங்கமிக்கலிநாட்
கண்ணிடங்கொள்ளவிளங்குறாததனாற்காழிமாநகர்வியப்பெல்லாம்
பெண்ணிடங்கொள்ளுமொருவனேயறியும்பெற்றியையன்றியென்னனையார்
எண்ணிடங்கொள்ளவழுத்தரிதென்றானேதமில்சூதமாமுனிவன். 46
(25-ஆவது, வேணுபுரமானவத்தியாயம்முற்றிற்று.
ஆக திருவிருத்தம்-907)
-------------------------------------------------------------
908 கடவுண்மரகதப்புரவிகுரத்தாலெற்றக் கருவிமுகில்விழுத்தியங்குஞ்சோலைவாய்ந்த, தடவுமலர்க்கோட்டினிறாலுடைந்துசெந்தேன்சாறுபடச்சேறுபடும்வயல்சூழ்காழி, இடனுடையவேணுபுரமெனும்பேர்பூண்டவியற்கையிதுகழுமலமென்றிவிவ்வூர்க்குற்ற, அடைவும்விரித்திசைப்பலெனமுனிவர்கோமானறைந்ததையுமொருவழியீண்டறைவென்மாதோ. 1
909 துகளகன்றபெருங்கேள்விமறைதேர்வாழ்க்கைத்தொழிலுரோமசனெனுமோர்பகவன்றொன்னாள், அகலிடத்தா ரழலாடிதலங்கடோறு மரும்பெறன் மாதவமுயன்றுளைப்பிறெண்ணீர், புகலரியகடவுணதிபடிந்துமாயைப்புணர்ப்பகன்றவெறுவெளியுட்டூங்கித்தூங்கா, நிகழுநிராலம்பசிவஞானந்தன்னைசேர்படாதுளமுருகிநிற்குநாளில். 2
910 கன்னியிளமடெடையளியுந்துளிக்குந்தெய்வக்கற்பநாண்மலர்நறைவாய் கவர்ந்துண்டாடும், மன்னியபூஞ்சுரும்பு மிமிர்வான்றோய்சோலைவளர்புகலிப் பதிபரவவருவானுள்ளே, தன்னியலும்பசுபோதமகன்றுமேலாந்தலைவனருட் போதம்வருந்தரத்தாலார்வம், துன்னிமனமொருட்படுவான்பன்றடாகந்தோய்ந்துபிரளயவிடங்கற்றொழுதுபோற்றி3
911 நஞ்சுபொதிமணிமிடற்றுக்கஞ்சுகேயனளினமலர்த்தாள்பரவிநகைவெண்கோட்டுப், பிஞ்சுமதிகிடந்திமைக்கும் பெருநீர்வேணிப்பிரமேசனடிக்கன்பு பெருக்கிநல்லான், அஞ்சுமமுதோரைஞ்சுவிதியாலாட்டியருத்திவழிபாடாற்றியடியேற்குன்றன், செஞ்சரணமுளரியைவிட் டெஞ்சல்செய்யச் சித்தநிலை பெறவருளிச்செய்வாயென்று4
912 காற்றிசையி னினிதிருந்ததிங்கண்மாலைக் கடவுளடிக்கருச்சனையில் கடமையாற்றி, மாற்றருமைப்புலனொடுக்கித் தோணிமேபாழ்விடையந்தணன்றிருத்தாண்மனத்தின்முன்னி, ஆற்றலுருகுணங்கரணம்பிறவு மெட்டாவற்புதநீடொளியொடும்பக்கழுந்திப்பன்னாள், நோற்றுடலம்வாட்டிய பேரறிஞன் முன்னநுனையெயிற்றுப்பணிமாலைநுடங்கமாதோ.5
913 கங்கைநதிவேணியுமுக்கண்ணுமான்றகறைமிடறும்பிறைமுளையுங்கரங்கணான்கும், மங்கையொருபாலு மணிகிளர்முந்நூலுமறிமழுவுமபெறுகருணை வதனப்போதும், கொங்கடருங்கொன்றையும்வெண்ணீறுமார்புங்கொலையுழுவையதளுமணிக்குழையுமாயன், பங்கயாண்ணிய மலரும்பொலியவாதிபகவனெழுந்தருளமுனிபணிந்துகண்டான்6
914 அருமறைநாயகபோற்றிஞானவல்லியாருயிரேபோற்றிமுக்கணமலபோற்றி
நிருமலமாயுலககாரணமாயம்பொனெடுவரையிலிருந்தவனேபோற்றிநேமித்
திருமகனையனலையடுகணையாக்கொண்டசிவபோற்றிநீறணிதிண்டோளபோற்றி
பெருகுசராசரவுயிர்கட்குயிராய்நின்றபெரியநாயகபோற்றிபெம்மான்போற்றி.7
915 ஓவருமைந்தொழிலுடையாய் போற்றியோகருளத்தி லெழுபரஞ்சுடரே போற்றிமாயன்,
பூவயன் போற்றியபாதகாலகால புண்ணியமங்களமேனிப்புனிதபோற்றி,
தாவருமான்மழுவணிகைத் தலத்தாய்போற்றிசந்திரசேகரகாமதகனபோற்றி,
மேவுபகனெனுங்கதிர் கணிடந்தாய்போற்றி விறல்வேங்கையதள்புனைந்தவிமலாபோற்றி.8
916 செக்கரிளஞ்சடைமுடியாய்போற்றி நீண்டசெம்பொன்வரைச்சிலைவளைத்தநம்பிபோற்றி,
அக்கரவமணிந்ததிரு வரையாய்போற்றி யாரணநாரணன்றேடற்கரியாய்போற்றி,
பக்கமலிகுறட் பூதப்படையாய்போற்றி பாய்திரைவெவ்விடநுகர்ந்த பரனேபோற்றி,
திக்கெவையுமம்பர மாவுகந்தாய்போற்றி சிவஞானகுருமுதல்வாபோற்றியென்றே. 9
917 என்புருகமயிர்பொடிப்பமொழிதள்ளாடவிணையடிப்பூங்கமலமிசையிரங்கியேத்தி,
அன்புருவாநின்றானையுன்போலன்பராருளர்நீமகிழ்ந்தன கேளளித்து மென்னப்,
புன்பிறவிப்பிணிதணிக்குமருத்துவாநின்பொன்னடியைப்பிரியாத நன்னர்ஞான,
நன்புலனொன்றிடவடியேற்களித்தல்வேண்டுநாதவெனப்போதமுதனம்பன்கூறும். 10
918 மம்மரறுத்தருள்யாமுய்யநின்னைமருட்டிய மாயையுமலமும்வினையுமோர்ந்து,
மெய்ம்மையுணர்வது ஞானமதுதான்றொல்லைவினைப் பாடொத்துழித்தோன்றுந்தோன்றுங்காலை,
எம்மருட்சத்தினிபாத மியையத்தோன்று மெமதருளேயுனக் குரிமையென்றுந்தோன்றும்,
அம்மலமைந்தும் மோருநாமுநீயுமநாதியெனவறிந்திடுதியறிவானமிக்கோய். 11
919 இருமாயைநீங்கியசத்தினி பாதந்தானிறைசரிதையாதிகளை யிழைத்தார்க்கன்றி,
மருவாதுநாமியற்றுந் தொழிலோரைந்துமன்னுயிரின்பொருட்டாகுங்களிம்புமூடி,
ஒருவாதசெம்பெனமாமலத் தாற்றம்மையுணராதெம்மையுமுணராதுயிர்கள்யாவும்,
கருமேவிமுன்னையிருவினைக்கீடாகக்கறங்கெனநின்றுழலுமுறுகதிகாணாமல். 12
920 பருவமதுகன்னியுழைப்பாரா நின்றபதிபோலப் பசுவினதுபருவம்பார்த்துத்,
தருதலினாற்பசுபதிநாமு*பொங் கன்னிசரிதைமுதல்வழிநான்குந் தகைசால்கேள்வன்,
பெருமிதநல்லிசைகேட்டலவனையெய்தும்பேராராதனைமுடித்தல்விழியாற்காண்டல்,
ஒருமையறுத்தனை மறந்துகலத்தல்போலுமுணரினெம தளவிலின்பமுண்ணுமாறே. 13
921 இயற்கைநிறந் திரிந்துறுபன்னிறங்கடானாயிருந்தபளிங்குச்சிபடு மிரவிமுன்னே,
மயக்கமறவிளங்குதல்போற்புலன்கண்மூடிமருண்டவுயிர்நமதருளை மருவித்தத்தம்,
செயற்கையுறுபசுகரணச் செய்கைநீங்கிச்சிவகரணத் தெமையுணர்ந்துதிளைப்பதல்லால்,
அயிற்பிலெமதைந்தொழிலையியற்றமாட்டாவலகை யுடையுறுப்பினர்போலமையுமன்றே. 14
922 ஓதறுகேவலசகலசுத்தமூன்றினுணர்வுமலிசுத்தவுயிர்க்கொழியவேனைப்
பேதுயிர்கட்கருளாற்றவிளங்காதுற்றபிணியறியுமருத்துவன்போல்வினைநாமீய
மீதுநுகரணுக்கண்மலவழுக்கைஞானவிரிபுனலாற்றுடைத்தன்றிவிவனீர்நீத்தம்
ஓதுகடற்புனலேனுங்கழுவலாற்றாமொய்த்தபுலப்பகைகடந்தமுனிவரேறே. 15
923 ஈட்டியனவிழித்தளவேயொழிந்தவேனையெடுத்தவினையுடலோடுமெதிர்நாளெய்தக்,
கூட்டும்வினையெமையுணருந்திறத்தான்மாயுங்குறைவறவே குறியாதுகுறித்துச்செல்வன்,
நாட்டுறுபல்பொருடொறுநாமியைந்தவண்ண நயப்பதுவேஞானமெனநல்கியாங்கே,
ஓட்டுபுனல்விழியருவியொழுகாநின்றவுரோமசன்பாற் பின்னருமொன்றுரைப்பானண்ணல். 16
924 மாற்றரியவெமதுதிருவாக்கினாலுன்மலங்கழுவவிளங்குதலா லிவ்வூர்க்கென்றும், சாற்றரியகழுமலமென்றாகுநீயுந்தாணிழற்கீழெய்துகெனத்தண்டேன் சிந்திக்,
கீற்றுமதிக்கோடுழக்கமுகைவாய்விண்டகிளரொளியகடுக்கையந்தார்கிடக்கும்வேணிக்,
கூற்றடுதாண்மழவிடையூர்குழகன்செம்பொற்கோயிலிடைமறைதலொடுங்குணக்குன்றன்னான். 17
925 பாசமலவலிகடந்துகலாதிமாறிப்படர்கரணம்குணம்பொறிகள்பலவுஞ்சாய்ந்து,
நேசமதிநினையாதுநினைந்துஞானநீடொளியிலொன்றியொன்றா நிலைமைத்தாகி,
மாசகல்பேரானந்தவாரிதோய்ந்தமாமுனிவன்சரிதையிதைவரைந்தோர்கேட்டொர்,
தேசுபெறவிளம்பிடுவாரெவருஞானச்செல்வரெனவீற்றிருப்பார் சிவன்றாள்பெற்றே 18
926 கொள்ளைவரிவண்டுழக்கமுகைவாய்விண்டகோகனகத்தடம் பொகுட்டிற் பொலன்சூட்டன்னம்,
கள்ளவிழிப்பெதும்பையர்காற்சிலம்பினேங்கக் கருங்களமரரங்கிதெனக்கணிக்குமாநீர்,
வெள்ளமுதுதடத்தெழுந்தவெடிவாய்வாளைமிடற்க்கமுகமடல்கீறிவிரிதேனாட்டும்,
அள்ளல்வயற்கழுமலத்தினியலிதென்றானருங்கலை நூற்றுறைகடந்தவறிஞர்கோமான். 19
16-வது கழுமலமானவத்தியாயம் முற்றிற்று
ஆக திருவிருத்தம் 926
-----------
927 சிறையாருமலப்பகைசெற்றுமுனித்திலகன்சிவஞானபதம்பெறலால்
மறைவாணர்துவன்றியகாழிகழுமலமாகியவாறிதுமேலிதுதான்
குறைநாடுகபோதநிறைக்கொருவன்கொழுமேனியரிந்தெழில்பெற்றிடலால்
முறையேபுறவப்பெயருற்றதுவுமுனிபுங்கவனோதியவாமொழிவாம். 1
928 விரையார்தருகொன்றைநறுந்தொடையான்வேடங்களினீடுகருத்துடையான்
வரையாதுதருங்கடிவார்முரசமாறாமன்முழங்குகடைத்தலையான்
புரைதீரருணகுலதீபமெனப்புனைமாமுடியான்முனைநாளினெடுந்
திரையாடைமடந்தைமணாளனடற்சிவிசக்கரவர்த்தியெனுந்திறலான். 2
929 மலையொத்ததடம்புயமுஞ்செயமுமலரொத்தவிழிக்கடையுங்கொடையும்
கலையொத்தகுணத்துறையும்பொறையுங்கடலொத்தநிதித்தனமுங்கனமும்
துலையொத்தசமத்துவமுந்தவமுந்துகளற்றமனத்தருளுந்தெருளும்
உலகொத்தசரித்திரமும்பரமுமுடையான்மனுநீதிவரம்புடையான். 3
930 காலந்தொறுமாமழைமாரிகொளக்கலைவாணர்மகிழ்ந்துபொன்மாரிகொளச்
சீலம்புனைநூல்வழிதீவளையச்சேரும்புகழோரெழுதீவளையக்
கோலொன்றினிரும்புவியேவல்செயக்கோவூர்தியடிக்குளமேவல்செயச்
சால்பொன்றியசென்னிகுலம்பொலியத்தன்னோர்குடைகொண்டுபுரந்தருணாள் 4
931 அனையான்முதுவேள்விசெயக்குறியாவகிலத்தலகோடியினுத்தமமாய்
முனையோகிகண்ஞானிகள்வாழிடமாய்முத்தாபமுருக்குவதாய்மறுமைத்
துனைபவநூறியருட்டருமத்துணையாயதிபாவமொழித்திடர்தீர்
புனைமாதவசித்திவிளைக்குமெழிற்பொலிகாழியுண்மந்திரிமார்களொடும். 5
932 தானைக்கடல்சூழ்வரவெய்தியயன்றடமூழ்கியருட்பிரமேசனைமெய்ஞ்
ஞானக்குருவைத்திருமாலுரிசேர்க்குகஞ்சுகனைத்திரசுந்தரியைச்
சோனைப்புயலன்னவனன்பிடனொடுந்தொழுதந்நகரத்தின்வடக்கயல்சூழ்
மானத்துறவோர்விதிநூல்வழியேமகமொன்றுதொடங்கியவெல்லைதனில்.6
933 ஆதிக்கயிலாயவரைப்பெருமானரசன்புரிநீதியுமாற்றமும்
சோதிக்கநினைந்தமரேசனையுஞ்சுடரோனையுமுன்னினன்மற்றவரும்
நாதித்தகறங்கருவித்திரள்சூழ்நகுவெள்ளியடுக்கலினந்திபிரான்
ஓதிப்புகுவிப்பநுழைந்தெனையாளுடையானடிகண்டுபணிந்திடலும். 7
934 முன்னிற்பவர்தம்மொடுமெம்முடையான்முறையாலருள்செய்திருவீருநெடும்
பொன்னித்திருநாடுறுகாவலவன்புகழ்மிக்கபுகார்நகரத்ததிபன்
சென்னிப்பெருமானுலகம்பரவுஞ்சிவிசெய்மனுநீதியைமூதுலகோர்
உன்னித்தெரிவான்மனம்வைத்தனநீருடனிக்கணமேதெரிவித்தணைவீர்.8
935 என்றாதிபரம்பரனல்குதலாலிமையோரிறையுந்தழல்வானவனும்
சென்றார்பலதேயமகன்றுகளிச்சினவாளையெழும்புனனாடணுகிக்
குன்றாமுறைநீதிசெய்வேலுழவன்குறியாதவுருக்கொடுகூடினமேல்
இன்றேநமதெண்ணநிரம்புமெனாவிருவோருமறைந்துருமாறினரால். 9
936 சேனத்திறைவானவனாகிவரச்செங்கட்புறவங்கியுமாய்வெருவா
மானக்கொடிசூழ்திருமாநகர்வாய்மனுசேகரன்வேள்விசெய்சாலையினில்
கூனற்புறவாவிதளர்ந்தலறுங்குரலோடுமொடுங்கியடைந்துநெடும்
தானக்கடலொத்துளமன்னர்பிரான்சரணேசரணென்றுவிழுந்ததுவே. 10
937 வீழுஞ்சிறுகட்புறவுக்கருளால்வெருவேலொருபோதுமெனக்கருகே
ஆழுந்துயர்விண்டினிதாயுறைகென்றபயந்தருமவ்வுழிவெவ்வியகட்
போழுஞ்சிறுதுண்டமொடும்பொருமிப்புறவெங்ஙனமென்றொருகங்கமுமேல்
ஏழுண்டவயக்களிறன்னவன்முன்னெய்திச்சிலவெய்யவுரைத்திடுமால். 11
938 அரைசேயுயர்சோழர்பெருந்தகையேயளியேனெடுவெம்பசியாறிடுமா
றிரைதேரியவந்தகபோதமரோவின்னேதருகென்னலுமன்னர்பிரான்
உரைசாலுயிரேனுமளிப்பதலாலுன்றஞ்சமெனப்புகுமோருயிரைத்
தரையாள்பவரீவதுநேர்குவரோதருமத்தினெறிப்படுதன்மையினால் 12
939 தண்டாரவனீ துரைசெய்த லொடுந்தணியாவெனிரும்பசிதீர்புறவைக்
கொண்டாயென்வயிற்றெரிமண்டியடக்குடர்வேவதுனக்கழகோகணமுன்னே
உண்டாகவடுக்கவிரங்கினையோவூனுண்ணவிரும்பினுனக்கரிதோ
கண்டார்பொருண் மன்னவர்கொள்வரெனிற் கங்கத்தினுமுண்டுகொல் காவலனே. 13
940 வெருவுற்றபுறாவெனநாடியநின்விழியாலழியும்பசிகொண்டொருபா
றுருகுற்றதெனத்தனிநாடிலிழுக்குளதோவுனதாள்புவிமன்னுயிர்போல்
மருவுற்றனன்யானயல்வேறுளெனோமற்றொன்றினையொன்றடமாமலரோன்
நிருமித்தவிரைக்கிடையூறுசெய்தானீதிக்கிதடாதுநெடுந்தகையே. 14
941 போர்க்கென்றிருமன்னுயிர்பொங்கியெழிற்புறநின்றுமகிழ்ந்திடலன்றியுமே
பார்க்கின்றவர்சீறுவரோவவர்போற்பார்வேந்தர்பொறார்களெனிற்றலவா
வேர்க்கின்றனநின்னுலகத்திலையோவிழிகண்டதொறுப்பரெனிற்பசியால்
கூர்க்கின்றவெனக்குமொராறுதனைக்கூறென்றுயர்பாறுபுகன்றதுவே. 15
942 வெம்பாறுபுகன்றதுமன்னர்பிரான்மிளிர்செஞ்செவியேறிவியப்பமுறீஇ
அம்போருகவாண்முகவன்புகல்வான்பயம்புகுமொருயிராருயிர்போல்
நம்பாதரமிக்கதுகாணிடர்கூர்நனிநோயடவந்துளதேலதனுக்
கைம்பூதவுடம்பிலிடந்தருவாராரோபுகல்வீரமுடைப்பறவாய். 16
943 பாருள்ளவுயிர்க்குடல்யானெனவேபாராவதமென்னடிபற்றிவரச்
சூருள்ளுபுநீயுமடுத்தனையாற்சுடுவெம்பசியாலுயிர்போகறியாச்
சாரும்புறவன்னதுநீபருகிற்றன்னாருயிர்போமினிநீவிழையின்
தேருந்தசையேனுமிறந்துபடாச்சேணாரமுதேனும்வழங்குவெனால்.17
944 சோராவமுதுந்தருதன்மையனீதொல்லூனைவிரும்புதலன்றியெனக்
காராவமுதென்னெனமன்னர்பிரானயலோருயிரைக்கொலைசெய்திலெனென்
சீராருடலூனிடுவென்கவருந்திறமெங்ஙனமென்னமகிழ்ந்தபருந்
தோராதுலையிற்புறவுக்கிணையொத்திடவுன்றசைதந்தருளென்றதுவே18
945 பாறங்ஙனமோதலுமீதுமெனப்பல்லோருணவுள்ளதெலாமுதவா
தாறொன்றுகவர்ந்ததன்மேனியின்மேலருளற்றுமுனிந்தனனோவலரும்
கீறுண்டமுளைப்பிறைவேணியினன்கிளருஞ்செயலோவயலொன்றுளதோ
கூறுண்டதனீதியினிற்சிறிதுங்கோடாமைகுறித்தனனோநிருபன். 19
946 மறைவாயிருவானவரும்பலமாமறைவாயிருவானவருங்கரையத்
துறையூபதலத்தருகாகநெடுந்துலையொன்றுநிறுத்திமதிக்குடையான்
நிறைவேதியராதியர்போதியல்கண்ணிணையாரிமைமூடியிரங்கவெழுந்
துறைசாயவிடுத்தொருபூமுகவாளுருவிக்கொடுநின்றுபினொண்டிறலோன்.20
947 மண்ணாள்பவர்மாதிசையாள்பவர்மாமலையாள்பவர்வார்கடலாள்பவர்நீள்
விண்ணாள்பவர்யாவரும்வெய்துறவோர்வினைவெங்குருதிக்கணரும்புறவைப்
பண்ணாநொருதட்டிடையிட்டுமுறைப்படியேயடிதொட்டுமிடற்றுவரைக்
கண்ணர்தசைமற்றொருதட்டிடையேகைவாளினரிந்துசுமத்தினனால். 21
948 கோலேறியவூனிடுதட்டொருபுட்கொண்டேறியதட்டதுகீழுறவே
மேலெறுதல்கண்டடலேறனையான்வேறுந்தசையில்லெனமெய்யிளையான்
சால்பெறியதாரணியெங்கணுமோர்சமமேறவிருந்தியல்செவதெனப்
பாலேறுதன்னாகமொடேறியதைப்படிவித்தனன் மெய்பொய் யெனத்தெரிவான்.22
949 மெய்யோடுதிரம்பொழியக்கழிபோல்வெற்றென்புநரம்புதுலங்கநிணப்
பய்யோடுகழிந்துமுன்னாமியல்பிற்பயில்கின்றவனாவியைவைத்ததுதான்
மெய்யோமனுநீதிகொலோவெனையாள்விமலன்செயலோவரசன்பொறையோ
அய்யோவிவனொப்பவர்முப்புவனத்தாரோவினிமேலுமுன்னாளினுமே. 23
950 மண்ணஞ்சினமாதிரமஞ்சினநான்மறையஞ்சினமாதவநோன்மைகெடார்
எண்ணஞ்சினயாகதலத்தறவோரின்மஞ்சினவிண்டைமலர்க்குடிவாழ்
பெண்ணஞ்சவுமஞ்சலனாகியறம்பிழையான்விரதத்தையறிந்தியமன்
கண்ணஞ்சினவந்துகரந்துறையுங்ககனாதிபனுந்தனியஞ்சினனால்.24
951 அப்போதுபருந்திறைவானுலகத்தவருக்கிறையாகிவிளங்கமலர்க்
கைப்போதுபொழிந்திமையோர்மகழக்கடிவார்முரசங்களியங்குளிறச்
செப்பேர்முலைமங்கையராடல்செய்ததேசாதிபர்நின்றுதொழத்துலையின்
துப்பேறியதட்டினிறங்கியெழிற்றோளாமணியன்னவனின்றளவே. 25
952 உலகத்தறியாதவருந்தெரிவானுன்னீதியையாதிதனேவலினால்
இலகத்தெரிவித்தனனிந்திரன்யானிவனுந்தழல்வானவன்முன்னொருநாள்
தலைபெற்றதவிசிவெந்நென்புதனைத்தருகென்னவருந்தவனிதலுமே
நிலைமைக்குலசப்படைபெற்றனென்யானின்னொப்பவனன்னமனோபுகலாய்.26
953 புரமட்டபுராதனனின்னருளிற்புக்கேமொருமுப்புவனத்துளும்வாழ்
அரசர்க்கரசானபெருந்தகையேயழிபட்டநின்மேனியைநிலகமுகில்
பரமுற்றபசுங்குலையைச்சிதறப்பைஞ்சேலுதறிச்செஞ்சேறுபடும்
தரமிக்கவயற்புகலிப்பதிவாழ்தலைவன்றரந்வலிகொண்டிடுவாய்.27
954 வேறு.
என்றுபுகன்றீர்வாளினரிந்ததகையாவையுமுன்னியல்பிற்கூடி
நன்றுபொலிவுறப்பொலிந்துவாழ்தியெனமன்னனுமன்னன்மைவாய்ந்து
குன்றினிருசிறகரிந்தோய்நீர்வேட்கைமிகவுடையேன்கொடுத்தியென்ன
அன்றுபுறவினைநோக்கியைங்கரன்காவிரிப்புனல்கொண்டளித்தியென்றான். 28
955 ஆங்கதுசென்றகன்கரையையலகுகொடுகீண்டுய்ப்பவலங்குதெண்ணீர்
ஏங்கொலியின்வரலோடுநிருபனந்நீர்பருகிவிடாயிகந்தான்விண்ணில்
ஓங்குதருக்காவலனுமனலோனுந்தம்பதியிலுற்றார்மண்மேல்
வீங்குசிறைப்புறவுகொணர்ந்தளித்தலினாற்புறாதியாய்விளங்கிற்றன்றே.29
956 இவ்வாறுநிகழ்ந்தபின்னர்வேள்விவினைத்துறையாற்றியிமயவெற்பால்
தெவ்வாறுகடந்தபரன்றிருவருளீதெனவுன்னித்திணிவெண்கோட்டு
மைவ்வாரிமதமலையானைம்பெருஞ்சுற்றமுந்தழுவமதுகைத்தானை
அவ்வாறும்புடைநெருங்கத்தோணிபுரம்பேணியவென்றெழுந்துபுக்கான். 30
957 தேராழிகிழித்தநெடுந்திருவீதிகடந்தமலன்செம்பொற்கோயில்
ஓராழிமகன்மகன்செய்தீர்த்தமதுபடிந்துகடனொருங்கேயாற்றி
நீராழியிளம்பரிதிநிகர்நிறத்துக்குருபரனைநிமலையோடும்
பாராழியன்பினொடும்வணங்கிமலைக்கொழுந்தினடிப்பதுமம்போற்றி. 31
958 கைம்மலையீருரிபோர்த்தபிரமேசனிருபாதங்கனிந்துபோற்றிச்
செம்மலர்ப்பொற்றடக்கையினாற்றுநறுமஞ்சனமாட்டித்தெய்வச்சாந்து
மெய்ம்மலியானைந்துமமுதோரைந்தும்விரையுளவெவ்வேறுமாட்டி
அம்மலர்கொண்டருச்சனையின்றுறைமுடித்துப்பரிவொடுமின்னமுதுமூட்டி32
959 வாசநறுந்தூமமெடுத்தலங்குசுடர்நிரைகாட்டிமலர்கடூவி
நேசபரம்பரவிமலநித்தியதத்துவஞானநிமலமூல
பாசவிமோசனவாதிபகவவெனவகநெகிழப்பனிக்கண்வார
ஏசகலுமயிர்பொடிப்பப்பணிந்தான்முன்னுயிர்க்குபிராயிருந்தானன்பால்33
960 மறுவறுவெள்ளியங்குவட்டின்மழைபுணரும்பொற்குவடுவந்தாலென்னக்
குறுநகைவாணுதற்கூந்தற்கொடியுடன்வெள்விடையிவர்ந்துகோமான்றோன்றி
உறுபொருளுள்ளியதுதவும்வள்ளியோய்நின்வழிபாடுவந்தேமெண்ணம்
பெறுதியுனக்களித்துமெனமதிசூடியெதிரரசன்பேசுமன்றே. 34
961 தென்றலந்தேர்க்காளையெழில்கவர்ந்தநுதல்விழியழகாதிரைநீராடை
மன்றனிலம்பரிததிறுதிவருநாளுன்னிருதாளிலவரவுஞாலத்
தென்றுமிசைவிளங்கியரும்புறவினுக்கூன்கொடுத்துனைவந்தேத்துமிவ்வூர்
பொன்றலரும்புறவமெனப்பொலயவுமீங்கருளுகெனப்புகன்றுபின்னும். 35
962 கோதிலருங்குணக்குன்றேயளியெனுக்காப்புறவுதந்தகுளிர்நீர்த்தெய்வச்
சீதநதியிதிலாடித்திங்கடனிலீரொன்பான்றினத்தில்வெற்பன்
மாதரசோடெழுந்தருளிமன்பதையுய்ந்திடத்தீர்த்தம்வழங்கிமூழ்கிப்
போதருவோர்க்கிருமையினும்புத்தியுமுத்தியுந்தகைசால்புதல்வர்ப்பேறும்.36
963 தண்ணளியான்மகிழ்ந்தருளியைம்பெரும்பாதகமுப்பாதகங்களாதி
அண்ணலிருமுதுகுரவர்முதலோரையிகழ்ந்தவினையனைத்துநீக்கி
எண்ணரியசித்திகளுங்கொடுத்தருளுகெனவேண்டவிணர்ப்பூங்கொன்றைப்
பண்ணவனாங்கவைகளளித்தெழுந்தருளினான்விடைமேற்பசும்பொற்கோயில்.37
964 வரங்களலகிலபெற்றுமனமகிழ்ந்துவிரிந்தபழமறைநூற்கேள்வி
நிரந்தரவேதியர்திறத்துநிகரிலடியவர்திறத்துநிறைபொன்மாரி
சுரந்தெழிலியெனவீசிநால்வகையகூற்றானைசூழ்ந்துபோத
அரந்தைதணிந்தெழில்கனிந்தவரசர்பிரான்றிருநகரமணைந்தான்மன்னோ.38
965 முடங்குளைவாளரியணைமேலிருந்துபுறந்தருமொருகோன்முறைநடாத்தி
அடங்கலரைவலிகவர்ந்துநால்வகையபேரறமுமளியாலாற்றித்
தொடர்ந்தபுகழ்நிலைநிறுவிநிலவணிவேணியனடிமைத்தொண்டுபேணி
நடங்கிளரும்பிரமேசன்பதம்புகுந்தான்சிவியெனுமோர்நாமவேலான். 39
(17 - ஆவது. புறவமானவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 965
-----------------------------------------------------------
966 இன்னறீரெழின்முன்னியோர்புறவின்பொருட்டரசெய்தலால்
மன்னுமாநகர்புறவமாகியவாய்மையீதிதிலாதிநாள்
பொன்னுலாவியமார்பனுந்தொழுபூந்தராயெனவாய்ந்தபேர்
தன்னைமாமுனிசொன்னவாறொருதன்மையோதுவெனுண்மையே.1
967 காற்றினுஞ்சுடுகனலினுங்கடைநாளில்வந்தெழுகாலவெங்
கூற்றினுங்கொடியானெடுங்கடல்கொப்புளித்துமிழ்வாயினான்
ஆற்றல்வானவருயிர்பிசைந்துணுமயிலினானடிநாளிலோர்
ஏற்றமண்டியவிரணியாக்கனெனுங்கடுந்திறலவுணர்கோன். 2
968 அண்டவாணரொடொன்றுபோர்செயுமந்தநாள்வலியிந்திரன்
சண்டவார்படைமண்டவாவிதளர்ந்துபோயவுணனகருங்
கொண்டலூர்தியுமமரரும்பெறுகோளிலாவலிவீறெலாம்
மண்டலந்தொறுமேதழைத்திடுமாதவத்திறலாமெனா. 3
969 மானவேள்விவிதித்தளிப்பனமாமனுக்கள்கணிப்பன
தானமிக்கவர்பாலளிப்பனசாறயர்ச்சிவிளைப்பன
ஆனவிவ்வறனாலிருந்திறலாருமும்பர்கள்வீற்றப்
பூநலந்தனையான்முகந்தயல்போவலென்பதுவவ்வியே. 4
970 ஏதமிக்குளபாதலத்திடையேயமைத்தருகாகவோர்
மாதலத்தடலோனொளித்தலும்வானவர்க்கிறையாதியோர்
ஓதரக்கர்புலாலொழுக்ககலாதசக்கரபாணிதன்
பாதமுற்றடியேமனத்திடர்பாறுதற்கருள்கூறெனா. 5
971 எற்குலாவுதுறக்கமீதிலெமக்கெலாமொரிடுக்கணாய்ப்
பொற்கண்மேயவொருத்தனாடமர்புக்குமேலுமெமைக்கொல்வான்
வற்கநீடறமிக்கபாரைவகுத்தபாதலம்வைக்கயாம்
ஒற்கமேவினமைக்குமாமுகிலொக்குமேனிமலர்க்கணாய். 6
972 என்றுநேருறநின்றதேவரையிங்குநீவிரிரங்கவீர்
வென்றுமீள்குவலென்றுமண்ணொடுவிண்ணுநீடியவெள்ளியங்
குன்றுபோலொருபன்றியாயுறுகோளன்மேவியபாதலத்
தொன்றுமாறொடுசென்றுவெஞ்சினமூக்கிநின்றெதிர்தாக்கினான் 7
973 தாக்கிவந்தடர்கேழன்மேலொருதண்டுகொண்டுநிசாசரன்
தூக்கிமோதமருப்பினாலதுதூளிபட்டுகநூறியே
மேக்கொடுங்கருநீலவெற்பினைவெள்ளிவெற்பதுபாய்தல்போல்
மாக்கடுந்திறலவுணர்கோன்மிசைவாய்ந்துவல்லுளிபாய்ந்ததே. 8
974 மிக்ககோடுகிழிக்கமார்புவெடித்துவேறுபிளப்பதாய்ச்
செக்கர்வான மெனக்குலாயசிவந்தசோரிபுறந்தரத்
தொக்கதேவர்வலக்கணென்னவரக்கன்மேனிதுடிப்புறப்
புக்கதூதுவர்கைக்குளாருயிர்போயினானெதிர்மேயினான்.9
975 பள்ளவாயனைவெல்லவாகைபடைத்துஞாலவரைப்பெலாம்
வெள்ளையேனமதொண்மருப்பரிமேலெடுத்தலும்வானுளோர்
கள்ளறாமலர்மாரிபெய்துகரங்குவிப்பவகந்தையாய்த்
தொள்ளைசேருணர்வெய்திவேறிணைசொல்லுவாரினியில்லெனா. 10
976 பீடுகொண்டுழியாடன்மாமயிலூர்திவந்திகல்பேசியோர்
கோடுகொண்டருள்போதமுஞ்சிலகூறியங்ககல்வேலைவாய்
வாடுபன்றியும்யோகுணர்ந்துபின்மாயிரும்புவியாவையும்
சேடன்வெந்திறலாயிரங்கொள்சிரத்துமீதிலிருத்தலால். 11
977 மன்னியெங்குநிமிர்த்தபல்லுயிர்வரைவிலாதனவரைபடப்
பின்னிரும்பழிதுன்னிநின்றபெருத்தகேழலுருத்துறந்
தென்னிருங்கடவுட்பராவியிகப்பலிப்பழியென்றெழும்
கன்னிமங்கலவின்னியங்கிளர்காழிவந்தனனாழியான். 12
978 பால்கருங்குயில்வீணைபைங்கிளிடாங்குமென்கனிபூவைதேன்
கோல்கரும்பிழிசாறொடுஞ்சுவைகூசநின்றுரைபேசுவார்
மேலரங்கினிலாடல்பொங்கணிவீதிகண்டொருசோதிவாழ்
ஆலயந்தனினாரணன்றடமாடினன்குடமாடினான். 13
979 பேறுதுங்கடன்யாவுமன்பொடுபேணியைம்பதமோதிவெண்
ணீறுகண்டிகைமேனிகொண்டுநிலாவிளம்பிறைவேணியான்
வீறிலங்கியபாதபங்கயமேலருஞ்சிவபூசைநூல்
ஆறுகொண்டடைவேவணங்கலுமாழ்தடங்கடலாழியான். 14
980 கோமளக்கொடிபாலுறப்படர்கோடுடைத்தனியேறுகைத்
தேமவிற்குழைசேவகப்பெருமானடுத்தலுமீறிலா
மாமறைப்பொருளேயெனக்கருண்மாதவப்பொருளேயெனப்
பூமலர்ச்சரண்மேன்முடித்தலைபோதம்வைத்தலுமாதிதான். 15
981 செருமுகம்படுநிருதர்பொங்குயிர்தினமருந்தியதிகிரியாய்
உருகியிங்கெமைவழிபடுஞ்செயலுவகைகொண்டனமொருவனீ
கருதுகின்றனதருதுமென்றருள்கருணையங்கடலடிவிடா
தருகுநின்றிருநிலமடங்கலுமமுதுகொண்டவனறைவனால். 16
982 அனகநினதடியவரையிடர்கள்செய்தவனிகவர்தரநிருதனோர்
கனகவிழியனையழியமுரணியகடுவலுளியெனவடையயான்
பனகமுடியிலென்னுலவைநுதிபடுபடியைநிறுவலுமளவிலா
இனியவுயிர்பலநலியவருவினையெனையுமருவினதிறைவனே. 17
983 *நீந்ததீவினைதீந்துபோதரவேண்டுநீள்புவிநோன்றலால்
பூந்தராயெனநான்செய்பூசனைபூண்டவூர்பெறவேண்டுமால்
ஆய்ந்தநான்மறையேந்தலேயெனவாண்டுகூறியமாண்பெலாம்
மாய்ந்துதாண்மிசைவீழ்ந்தமாயனையெழுகெனாவருண்மொழியினால். 18
984 பின்னரும்பலவரமளித்தொருபேதைபங்கினன்மூதெயிற்
பொன்னலங்கிளர்கோயிலூடுபுகுந்தபின்னர்முகுந்தனும்
தன்னரும்பதமெய்தினானுயர்தவமுளீரெனமறையெலாம்
முன்னருந்துறைகண்டுளானடிமுளரிசூடிமொழிந்தனன். 19
(18 - ஆவது. பூந்தராயானவத்தியாயம்முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 984.)
--------------------------------
985 வேந்தராமுடிமேற்பாரைவிடுத்தமால்வினைவிண்டேகப்
பூந்தராயானதொல்லைப்புனைபெயரொடுமுந்நான்கு
வாய்ந்தபேர்த்திறனும்வேறுமான்மியம்பலவுமுன்னித்
தோய்ந்தவாலறிஞராங்கட்சூதனையிரந்துசொல்வார். 1
986 பருதியொன்றுதயஞ்செய்யப்பாயிருண்மாயுமல்லால்
கருதருமவிச்சையென்னுங்கங்குலுமாயவற்றோ
ஒருவனின்னருளாள்யாண்டுமொழிவுறாவுளத்துமாயை
இருளையுந்தடிதாய்ஞானத்திரவிநீயெங்கட்கென்றார். 2
987 பன்னெடுங்காலநோற்றபடிறுநீர்தவம்பழுத்தாங்
கிந்நெடுங்கானத்தெம்முன்னெளிவந்தாயொளிருங்காழி
நன்னெடுநகரினாப்பணகுமணிமுயங்குங்கோட்டுப்
பொன்னெடுங்குன்றமுற்றபெற்றியென்புகல்வாயென்றார். 3
988 வியனுறுகாந்தந்தன்னில்விரிவுறக்கிளத்தலொன்றோ
இயலுமூவறுபுராணத்தீற்றுறுபிரமாண்டத்தின்
நயனுடையுபரிபாகநவிற்றுகேத்திரகாண்டத்தும்
உயர்மலைவரலாறெல்லாமோதுமென்றுரைப்பார்மேலோர். 4
989 அருணமாமணிசெய்மோலியாரியாவர்த்தந்தன்னில்
கருணையங்கடலன்னானோர்காலவித்தென்னும்வேந்தன்
இருநிலமுழுதுந்தந்தையெனமுறைபுரக்குநாளில்
பெருகொளிமகப்பேறின்றிப்பேரஞருற்றானன்றே. 5
990 அறிஞரைமகப்பேறெய்துமந்நெறிபணித்தீரென்ன
உறுவர்சொல்வழியால்வேள்வியுயர்தவந்தானமாதி
பெறுமுறைபுரிந்துமைந்தர்பெறப்பெறாதழுங்கித்தேர்ச்சித்
துறைவர்பாலரசபாரஞ்சுமத்தினன்வனத்திற்புக்கான். 6
991 அவனுரோமசனென்றோதுமறிஞனைவணங்கவன்னோன்
கவலகிலாதுவந்தகாரியம்வினவமைந்தர்
இவணறமெண்ணில்செய்துமெய்திலேனென்னவெம்மான்
துவளருங்கயிலைக்கோடுதொழத்தருமகப்பேறென்ன. 7
992 இழுதையேனென்செய்தாலுமெய்துமோவெந்தைநீயே
தொழும்வகையளித்தியென்னத்தோமிலானரசைஞாலம்
முழுதுடன்காக்கவேவிமொய்யொளிக்கயிலையெய்திப்
பழுதறுதவங்கணோற்றான்பானுமாங்கவன்முன்னுற்றான். 8
993 கருதியுதுரைத்தியென்னக்கனைகடலுலகிலுள்ளார்
இருமையுமகவுமெய்தவிருவகைப்பொன்னிநாப்பண்
குருமணிக்கயிலைக்கோட்டோர்கோடுறைதரவுஞானத்
திருவொடுமிவண்போல்வாசஞ்செய்யவும்வேண்டுமெந்தாய். 9
994 என்னலுந்திங்கட்கண்ணியிமையவன்காற்றின்வேந்தும்
பன்னகவரசுமேலோர்பகலிகல்விளைப்பரந்நாள்
அன்னவாபுரிதுங்கற்பத்தவணியாம்வருதுமென்ன
இன்னறீர்ந்தந்நாட்காறுமிருந்தனன்முனிவனிப்பால். 10
995 மாமலிமார்பன்வேதன்வானவர்க்கிறைவனேனை
நாமமாதிரத்துச்செல்வர்நகுமிருசுடர்ப்புத்தேளிர்
ஏமுறுமகதிவல்லானிமையவர்பிறருமெம்மான்
தோமிலாவெள்ளிவெற்பிற்றொக்கனர்மிக்கதொன்னான். 11
996 தொக்கவரவரில்வீணைத்துறைவலான்பகுவாய்தோறும்
மைக்கறைவிடங்காலைஞ்ஞூற்றிரட்டிமாமவுலியானைப்
புக்கதொல்வலியாலீரேழ்புவனமும்பரிக்குநின்னை
ஒக்குநர்யாரேயென்னாவுவந்தனன்புகழ்ந்தவாயான். 12
997 சேட்டிளங்க திரைநக்கதிருமணிப்பணிகடோழன்
பூட்டினுமுவகையொல்லாப்புனிதனின்கிளையைவேணிக்
காட்டினும்புயத்தும்வேயுங்கலனெனப்பரித்தவாற்றால்
ஈட்டினுன்பெருமைபூண்டாரேவர்முப்புவனத்துள்ளும். 13
998 திவவியாழ்முனிவனிவ்வாறுரைத்தலுஞ்செருக்குமீக்கொள்
பவனனெஞ்சழுக்காறுள்ளிப்பருவிழிசிவந்துவாளா
இவனையேவியந்தாய்மேலோயிவன்முதலெவருமாயா
உவமைதீருயிர்ப்புநல்குமொருவெனுமிருக்கவென்றான். 14
999 அதுபொழுதுலவைவேந்துமணங்கராவரசும்வெம்போர்க்
கதுமெனப்பொருவானென்றுங்கருத்துடையொருத்தன்வல்லே
முதுமதிவல்லசேடன்முன்னருற்றென்னேநின்னை
இதுபுகன்றிழித்தானூதையிறைவனென்றினையசொன்னான். 15
1000 இயங்குவநிற்பவென்றேயெடுத்தபல்லுயிர்கட்கெல்லாம்
முயங்குநான்பொதுவனேனுமுற்றுநின்னுடலுக்காவி
நயந்துதான்றருதலின்றிநகுமணிச்சூட்டராவென்
றியங்குமாறெங்ஙனென்றானெறுழ்வலியரவவேந்தே. 16
1001 வரையிடைப்பிணித்தஞான்றுமறிகடலிடத்தங்காந்து
புரைவிடங்கொழித்துமுக்கட்புனைவடுக்காணவைத்தான்
மரைமலர்த்திருவின்கேள்வன்மாணெழின்மழுங்கச்செய்தான்
நிறைகதிர்க்கடவுளோரைநெருக்குவானென்றுஞ்சொன்னான். 17
1002 கொல்லினுங்கொடியனேழுகோளினுங்கொடியன்கேண்மை
புல்லினுங்கொடியனாற்றுட்போகினுங்கொடியன்மிக்கார்
அல்லினும்பகலினுந்தாமவையகத்திருந்துதன்பேர்
சொல்லினுங்கொடியனென்றுசொல்லினன்செல்வவென்றான். 18
1003 பாப்பரசதனைக்கேளாப்படரெரிபொறிப்பப்பாரா
நாப்புடைவளையாநன்றுநன்றரோசுழலுங்காற்றின்
மூப்புடைவலிமற்றென்னாமுரணியஞாட்பினுற்றால்
வாய்ப்புறத்தெரிப்பென்போர்க்குவல்லனேல்வருவியென்றான். 19
1004 வருவியென்றுரைத்தலோடுமரைமலர்க்கிழவனன்னான்
பொருமொலிக்கிறைமுன்போந்துபொறுப்பனானென்றுநின்னை
உருவிலியென்றுந்தீயோடுறவென்றுநெறியொன்றின்றி
வருபவனென்றுமொன்பான்வாயிலும்புகுவாயென்றும். 20
1005 முள்ளரிமுளரிச்செம்மண்மூதுலகடைந்தகங்கை
ஒள்ளிழையுத்தரீகமுடைத்துமஞ்சனையென்றோதும்
வள்ளைவார்குழையைவன்பான்மருவியுமாரனூரும்
கள்வனீயென்றுஞ்சொன்னான்கட்செவிக்கிறைவனென்றான். 21
1006 வேறு.
சுருதிநூன்முனிவனித்துறையெடுத்தறைதலுஞ்சுடுசினப்பொறிவிழிக்கடையினிற்றெறிபடக், கருகிமாதங்கமூதண்டவேதண்டமுங்கணமுடைத்தொகுதியுங்கதிர்களுஞ்சுழல்படப், பெருகுவானிடியுகத்துருவன்மாவடுவுறப்பிலம் வெடித்திடவரைக்குலம்வெடித்தலம்வரத், துருவுநாரதனுளத்தளவிலாமகிழ்வரத்தோள்புடைத்தனனெடுங்காலுடைத்தலைவனே. 22
1007 உலவையந்தலைவனிங்ஙனம்வெகுண்டெழுதல்கண்டோதுமா முனியுரைக்கோதினாலெரிமணித், தலைகளாயிரமுடைச்சேடனுங்கூடிவெஞ் சமர்வினைத்திடமறுத்தமரரத்தலையினிற், பொலன்மணிப்படமெடுத்துரகருக் கிறைவலிப்புனைமணிப்பஃறலைக்குவடுறக்கவியுருத், தலைவளித்தலைவவிக்கனக வெற்பினிலுனக்கமர்வலித்திறனிலப்புதைதிறந்திடுகென. 23
1008 தெறுசினத்திருவருஞ்சமரதற்கிசைவுறச்சேடனாயிரபணத்தாடகாசலமதிற், குறைவறக்கொடுமுடித்திரள்புதைத்திடநெடுங்கோடைவானவன்விசைத்தாடலாலருகினிற், பிறவரைக்குலமுதற்சருகெனத்திரிதரப்பெருகலைப்புணரிநெட்டலைவிரித்துலகடத், துறுமலர்த்தருமுதற்றருவினம்பொடிபடத்தூளியாகியனகீழுலகுமேலுலகுமே. 24
1009 பத்தெனும்பெயருடைத்திறல்வளித்தொகையினிற்படருயிர்ப்பொழியமற்றுளைவுயிர்ப்புகளெல்லாம், கொத்துடன்குழுமியத்தடவரைப்புடையினிற்குவடுசூழ்வரவடித்தவனியீடழியவும், நத்துறும்பொறிபுலத்திடைமனத்தினைவிடாநண்ணுகேவலமகன்றெண்ணுபாழ்வெளியினில், சித்தொடன்றியவுயிர்ப்பத்தியின்றிறனெனச்சேடன்விட்டிலன்மறைத்தாடகக்கிரியையே. 25
1010 அதுகணத்தமரரிந்திரன்வசுத்தலைவரோடகிலவானவன்முனைத்திகிரிவானவன்முதல், பதைபதைத்துறுவளிப்படையினிற்கடையுகப்படியெனப்படியிடிப்பதனைவிட்டொழியவே, விதிர்விதிர்ப்புடைவளிக்குறைசெயிற்பழுறுதெனாவிரிதலைப்புவனமுற்றிலுமெடுக்குறும்வலத், தெதிரறப்பொருபணத்ததிபனைத்துதிதுதித்தெமைமதித்திதுபொறுத்திடுகெனப்பகருவார். 26
1011 உலகனைத்தையுமவற்றுறுமனுக்களையும்வைத்துறுபடத்தினிலெடுக்குறுமுனக்கிணையெனப், பலருமொத்திலரெனிற்சலசலப்புடையவிப்பவனனெப்படியுனக்கிணைபெறக்கடவனோ, நிலமிசைப்பொறைபொறுத்தவர்பொறுப்பவரெனாநிகழுமிச்செயலினாலகல்வரைக்குவடெலாம், அலர்பணிப்படமுறப்புதைபுதைத்தவையிலோரணிகுவட்டினைவிடுத்திடுவதுத்தமமரோ. 27
1012 நீவிடுக்கெனமுதற்றேவருற்றறைதலானீடுயிர்க்கணமெலாமீடறத்திரிதலான், ஆய்வினைத்தெளிபொருட்டேயுமுற்றறிவினாலன்றநந்தன்படத்தொன்றையங்ஙனம்விடக், கோவியற்றமனியக்கிரியினிற்பலகிளைக்கோதிலாவெள்ளிவெண்சேகரந்தன்னிலொன், றாவலிற்கடுவளித்தேவிடந்திடவணித்தாய்முதற்கிளைவிழுந்ததிலுறுங்கிளையெலாம். 28
1013 கதிதருந்திரிசிராமலையெறும்பீசுரங்கமலையேரகமிடைமருதநாகேசுரம்
அதிகதிந்துருணிமாநகரமாணிக்கவெற்பரவமாநதிகுடக்கானதண்காழிபொன்
பொதியுமாமிழலையோடெண்ணுபன்னொன்றெனும்புரியிலத்தொகையுடைக்கிளைவிழப்பெருகுநீர், குதிகொளுஞ்சடையினானருளினிற்குருகினங்கொண்டுசென்றனபெருந்திண்டிறற்கிளையையே. 29
1014 வேறு.
இறைவனருளாலதுகாலத்திகல்வெங்கணங்கள்குருகினத்தின்
சிறையினிவர்ந்துசெலக்கடவுட்டிருமாமுனிரோமசனும்வர
நறைபொன்மலர்ப்பூம்பொன்னியிருநதியினாப்பண்முத்தமிழின்
துறைமல்கியபூம்புனற்காழித்தொல்லைநகரத்திறுத்தனவால். 30
1015 இறுத்தகாலைமுனிவர்பிரானிருகண்களிப்பப்பகைஞாவலி
பறித்தவடிவேற்காலவித்தைப்பணிவித்திடமற்றாங்கவனும்
குறித்தவிமயவரையளித்தகோதையொடுவீற்றிருந்தாலம்
கறுத்தமிடற்றானினிதுறையுங்கயிலைக்குவட்டையெதிர்பணிந்தான். 31
1016 குழலினாவிநிரைதொகுத்தகொண்டலனையாண்மிகப்பரவி
மழலைமொழிமென்கிண்கிணிக்கான்மகப்பேறெய்தியகமகிழ்ந்து
சுழலும்பொறிபோக்கறவெறிந்ததோமின்முனிவனடிபோற்றிப்
பழகுந்துதிசெய்தவனுவப்பப்பலவாற்றானுமுபசரித்தான். 32
1017 மதிவான்குவடங்கதுகாலைமறைந்துநிற்கவண்சுதையால்
கதிர்வான்சடிலச்சிவகணமுங்கதவெஞ்சிறையங்குருகினமும்
முதிர்வானவரும்பல்லுறுப்பின்முகந்தோறமைத்துமணித்தசும்பு
விதிநூன்முறையினினிதமைத்தான்வேலைஞாலத்தவர்போற்ற. 33
1018 பசும்பொற்கமலத்தயன்றடத்துப்படிந்துபிரமேசனுக்கெழில்கூர்
அசும்புமணிப்பொற்கலனிலங்கவவிர்பூணாடையிருநிதியம்
விசும்புமிடைமண்டபமுதலவெவ்வேறமைவித்திரவியெனத்
தசும்புமிளிர்மாளிகைநகரஞ்சார்ந்தான்முனியாயிடையிருந்தான். 34
1019 மற்றுமொருநான்முகக்கடவுள்வாழ்நாளிறுமோர்பிரளயத்தில்
முற்றுங்குடிலைத்தோணிமிசைமுதிருஞானத்திருவினொடும்
சுற்றுஞ்சடிலத்தனிமுதல்வன்சொன்னகடவுட்கொழுங்குவட்டில்
உற்றங்கிருந்துமுதுநீத்தமொடுங்கவுளத்தினினிதுன்னி. 35
1020 அடலேற்றரசுக்கருணோக்கமளிப்பவதுபேருருக்கொண்டு
கடைவாய்நாவிற்றடவந்துகடைநீர்நோக்கியுரப்புதலும்
உடனேகரைக்கணடங்கியபின்னொருமூவரைத்தோள்வலமிடமுள்
இடனால்வருவித்தவர்படிகவிலிங்கத்தருச்சித்தனர்போற்ற. 36
1021 போற்றுமவர்முன்சிவஞானம்புகலுங்குரவன்படைத்தளித்து
மாற்றும்வரங்கள்வரன்முறையேவழங்கவனையாரவைபுரிந்தார்
சேற்றுவயற்காழியினமர்ந்ததெய்வக்குவட்டிற்கயிலையைப்போல்
கீற்றுமதிவேணியனிருந்தான்கெண்டைத்தடங்கட்கிள்ளையொடும்.37
1022 வேறு.
தலத்தரசிதைத்தொழச்சார்துமென்றுபின்
செலப்பெறாதிருந்தவர்தீயநெஞ்சர்தென்
புலத்தவர்சாபமும்பெறுவர்போற்றுவார்க்
கிலைப்பொழுதொழுக்கெனுநியமமென்பவே. 38
1023 ஒழுகொளிப்பொலன்குவட்டுச்சிமால்வரைக்
கழுமலத்திருத்தலாற்கடல்வளாகமேல்
அழல்வினையந்தணீரன்றுதொட்டதற்
கெழிலுலாங்கிரிபரமென்றுமோர்பெயர். 39
1024 இணர்ப்பசுங்கொன்றையானிறைவிக்கின்னருள்
புணர்த்தலினுமாபதிபுரமென்றோமதில்
கணத்தரைக்கணத்தளவிருப்பிற்காலனும்
பிணக்குறானகலும்வெம்பிரமகத்தியே. 40
1025 தேசொடுவிளங்கியதெய்வக்குன்றிதை
யோசனையகனிலத்துவந்துகண்டுளோர்
காசினித்தலமெலாங்கண்டமெய்ப்பலன்
ஆசறமருவிமேலடைவர்முத்தியே. 41
1026 காளிகேசுரன்பிரமேசன்கஞ்சுகன்
நீளிரும்பராசரநிமலன்றோணிவாழ்
ஆளுடையொருவனென்றரனையுள்ளுவார்
மூளுமைம்பாதகமுருக்கியுய்வரே. 42
1027 புள்ளறாநறும்பொழிற்புகலிவாழுமிவ்
வள்ளல்பேரைந்தையுமனக்கொடெண்ணினோர்
வெள்ளநீரலகைதீவேங்கைவெந்திடர்
கள்வராறலைப்பிவைகடப்பர்திண்ணமே. 43
1028 தொடுத்தபேரெயில்கிளர்தொல்லைக்காழியை
அடுத்தடுதிறைஞ்சினோரநகராகிவெங்
கடுத்திகழ்மிடற்றினோன்கயிலையெய்திமெய்
நடுக்குறுநடுவனூர்நண்ணலாமையால். 44
1029 அணங்குறுமறலிகாமாதியாயவெங்
குணங்களைத்தூதராய்க்குறித்தவ்வூருளோர்
இணங்குசேய்நிலத்துளோரெந்தைகாழியை
வணங்குறாதிடர்செயவகுத்தபான்மையால். 45
1030 முன்னருந்தீவினைமுயன்றமூவர்தாம்
இந்நகர்தொழவெளிதெய்தற்பாலரோ
பன்னருந்தவம்பலபண்டுநோற்றுள
நன்னர்நெஞ்சுடையரேநணுகும்பான்மையார். 46
1031 தாவரும்புலப்பகைதணந்தவித்தகர்க்
கோவருமின்பவீடுதவுவானிதில்
மூவடிவெடுத்ததுமுற்றுமிந்நகர்
ஆவலோமற்றவனருளின்பெற்றியோ. 47
1032 ஆதலான்முனிவிர்காளந்தண்காழியை
ஓதலாந்தகைத்தெனவுணரர்பாலதோ
ஈதெலாமியம்பவுமினிதுகேட்கவும்
மாதவமெய்தினாம்வாழ்வுமெய்தினாம். 48
1033 இனையமான்மியந்தனையெழுதுமேடொரு
மனைவயினிருக்கினம்மனைக்கண்வாழுநர்
வினையமிக்கறிவனூல்விரிவெலாமுணர்
முனைவராகுவரவர்முகங்கண்டாருமே. 49
1034 மடனுறுமகந்தைவேரரிந்தமாமறைக்
கடவுளர்முகத்தினிக்காதைகேட்டுளோர்க்
கிடரறுநினைத்தவையெய்தும்வல்வினைத்
தொடரறுமருமறைத்துணிவிதாமரோ. 50
1035 கய்தவங்கடந்துளீர்கடவுண்மால்வரை
எய்தியவியப்பமிதென்றுமும்மலத்
தொய்யலையொழுக்கினாற்றுடைத்தசூதனாம்
தெய்வமாமுனிவரன்றெரிந்துகூறினான். 51
(19-வது மலைவரவுரைத்தவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் -1035)
-----------------
1036 அன்னந்தடமன்னும்பணையணிகாழிபுரத்தில்
பொன்னங்கிரிமுன்னஞ்செறிபொருளீதெனுமுனிவன்
இன்னுந்திறல்வடுகேசனதியல்பேசியநெறியே
என்னெஞ்சினிலியலுந்திறனினிதோதுவெனினியே. 1
1037 வண்டாறுநறுங்கொன்றைமணக்குஞ்சடைமுதல்வன்
தண்டாமரையடிநல்கியதாவாவலிதன்னால்
பண்டாடகவுலகத்தவர்பதம்வவ்வியமதுகைத்
திண்டோளிரணியனென்றொருதேவாந்தகன்மேனாள். 2
1038 முகிலொன்றுநிறத்தானொடுமுத்தேவர்பெரும்போ
நிகழெங்கணுமேறாதுதன்னெடுநாமம்வளர்ப்போன்
அகிலம்படுமிவ்வண்டமுமல்லாதுபுறஞ்சூழ்
பகிரண்டமுமிவனாணைபரிக்கும்படியாள்வான். 3
1039 பொருப்பெட்டையுமருப்புக்கிளர்பொருப்பெட்டினொடடிப்பான்
நெருப்பைக்கறைவிழிக்கட்சினநெருப்பிட்டுறவவிப்பான்
இருப்புப்புரைதடக்கைத்தலத்தெடுத்துப்பிலத்தினில்வாழ்
சருப்பத்தையுமரைக்கச்செனத்தரிப்பானுலகரிப்பான். 4
1040 காற்றும்படுபுனலுஞ்சுடுகனலும்பொருநிலனும்
தேரீற்றுந்தலைவரைவென்றவர்தொழின்முற்றுமிழைப்பான்
ஏற்றுஞ்சுடரிருவோர்மணியெழிலூர்தியினூர்வான்
கூற்றுங்குலைவுறவாருயிர்கொல்வானிகல்வெல்வான். 5
1041 மூலக்கடனீராடியுமுதுபாதலமகளிர்
ஓலக்கமடுத்தும்பகலுவணைத்தலமதுபோய்
ஏலத்தருநிழல்வைகியுமிரவிற்சதுமுகன்வாழ்
கோலப்பசியுற்றுந்துயில்கூர்வானிடர்தீர்வான். 6
1042 மொய்யார்கலிகடையப்புகுமுழுமத்தவனேந்தும்
கய்யார்கதையாமென்பதுகதையோகதுருலவும்
பெய்யாடொளியிருமால்வரைபெருமால்வரையனையான்
மய்யாடியநாளிற்புனைமகரக்குழையென்றால். 7
1043 ஏமத்துணவமரர்க்கிடுமெழுதாமறையவர்செய்
ஓமத்தவியெல்லாமவருருவாகிமடுத்தான்
வாமப்பழமறைநூல்வழிவல்லார்பொழுதெல்லாம்
நாமத்திரணியாயநமநமவென்றிடவைத்தான். 8
1044 பெண்ணிற்புகலாணிற்பெருகிடியிற்சுடுபடையாம்
எண்ணிர்பலபகலிற்கறையிருளிற்செறிமனையுள்
கண்ணிற்பிறவெளியிற்சுடர்கனலிற்படர்புனலில்
மண்ணிற்பிறபொருளின்னுயிர்மாளானடுதோளான். 9
1045 பாரார்புவிமேலாரிருள்படுபாதலவைப்பார்
ஆராருமிவ்வசுரன்றுணையடியேந்தியமுடியார்
நாராயணவெனுமன்புடைநன்மைந்தனையல்லால்
பாராயணமதுசெய்வதுபதகன்கொடுநாமம். 10
1046 இவ்வாறுலகீரேழுமிடுக்கண்செய்வலத்தால்
வெவ்வாளவுணன்பின்னருமிடலெய்தியமடல்சூழ்
செவ்வாரிசமுகைகிண்டியசிறைவண்டிசைமுரலும்
கைவ்வார்திரைநிரைபொன்கொழிகாவேரியின்வடபால். 11
1047 வினைவேரறநினைவார்பணிவெண்காடதன்வடமேல்
புனைசாரினிலொருதோணிபுரக்கீழ்த்திசையாங்கண்
நனைவார்மலர்விரைமென்சினைநகுவில்வவனத்தே
தனைநேர்குருவருளாலொருதனிவேள்விதொடுத்தான். 12
1048 ஓராயிரவெள்ளம்புடையொடுசூழ்தரநடுவே
சாராவொருகொடுவேள்விசமைக்கின்றதைநிருதன்
சூரால்வடவெற்பூடுதுணுக்கம்படுவிண்ணோர்
போராழியினான்முன்புபுகன்றாவிகரைந்தார். 13
1049 மஞ்சேயொளிமணிமேனியன்வானீரினிமேனீர்
அஞ்சீரெனமுதுபொன்வரையதன்மேல்வருபுயல்போல்
செஞ்சேவல்வயப்புள்ளிறைதிணிதோண்மிசையிவரா
எஞ்சாதிரணியன்வேள்விசெயெல்லைக்கணடைந்தான். 14
1050 அற்றத்தினிலுலகஞ்சு றவலையஞ்சுறவடபால்
ஒற்றைக்கிரிவெடிபட்டுகவுருமுக்கணமுதிரத்
தெற்றித்தனியெட்டிற்கிரிதிசைமாறிடவசைதீர்
கொற்றச்சிலைவரிநாணொலிகொண்டானுலகுண்டான். 15
1051 உலகுண்டவன்வளையுஞ்சிலையொளிருங்குணவொலியால்
கலகம்பெருகொலியென்றடுகனகன்படையுடையப்
பலரும்பலதலைசிந்தியபடிகண்டுபின்னெடியோன்
அலருங்கையிலொருசங்கினையார்த்தானுடல்வேர்த்தான். 16
1052 இரிந்தார்சிலர்பொடிந்தார்சிலரிடிந்தார்சிலரிகல்போய்ப்
பரிந்தார்சிலர்முடிந்தார்சிலர்படிந்தார்சிலர்துளபப்
பெருந்தாரவன்விரைந்தூதியபிறங்கோர்வளையொலியால்
முரிந்தார்சிலர்கனகன்புறமுனைந்தார்படையெல்லாம். 17
1053 ஊழித்தலையெழுமார்கலியொக்கும்படையுக்கிப்
பாழித்தலைமதவெங்கரிபரிதேர்முதலிரியக்
கேள்வித்தலையல்லார்நிலைகிழியக்கதழெரிகால்
வேள்வித்தலையழிகுற்றபின்வெளிவந்தனனிருதன். 18
1054 கடலோடெதிர்கடலும்படுகாரோடெதிர்காரும்
தடமால்வரையொன்றோடொருதடமால்வரைதானும்
உடல்போரதுசெயுமாறெனவோராழிநெடுங்கைச்
சுடரோனெதிரடலானமர்தொடுத்தான்முரணடுத்தான். 19
1055 வெடிவாயொலிதோள்கொட்டியவிறலாரொலிசிலையின்
துடிவாயொலியடுவாளிகடொடுபேரொலிவிசயக்
கொடிவாயொலியிருவோரிகல்கொடுமேறொலிகளினால்
அடிமாதிரமதயானைகள்செவிடேறிவவையே. 20
1056 மாயன்சிலைபொழியுங்களையவுணன்கணைமாற்றத்
தீயன்சிலைபொழியுங்கணைதிருமால்கணைநுகரப்
போயண்டமுநிலனும்படர்திசையும்புகைபுகையக்
காயுங்கடுவலிவெஞ்சமர்கலந்தாரெதிர்மலைந்தார். 21
1057 அழன்றார்கணையரிந்தார்புறமகன்றாரெதிர்புகுந்தார்
கழன்றார்விழிசிவந்தாரிருகறங்காமெனவொருங்கே
சுழன்றார்திசைவிசைவாளிகடூர்த்தாருடல்வேர்த்தார்
உழன்றாரிருவரும்வெஞ்சமரோராயிரவருடம். 22
1058 அவ்வாயிரவருடஞ்செலவமராடியுமழியா
இவ்வாளவுணனைவெல்லுவதினியோர்திறமென்னா
மைவ்வான்வழிமுதல்வன்புகவதுகண்டுவலத்தால்
வெவ்வாயவுண்ணுமன்றமர்வென்றேனெனவன்றே. 23
1059 தனியோதியமகனோடொருதனயாவிதுகண்டாய்
இனியேனுமென்னொருபோதனையிசையென்றலும்வசைதீர்
கனிவாய்மகனுலகுக்கொருகத்தாவவனைத்தான்
நனிநாரணனேயென்பவனுனென்றிடலானான். 24
1060 வேறு.
என்றலும்வாளவுணன்வெகுண்டெயிறதுககிவிழிசிவக்கவிமைகடீயத்
துன்றுபுயந்துடிப்பநிலைகுலைகுலையவலமந்துசுரர்களேங்க
அன்றுசினத்திடித்தெழுந்துநின்கடவுளெங்கணுளனவன்யாரென்ன
என்றுமுளன்றுரும்பிடத்துந்தூணிடத்துமாயனெனவிசைத்தான்மைந்தன். 25
1061 அளந்தவனாண்டறைதலொடுமொருகோடியசனியிடியறைந்தாலென்னத்
துளங்கொளியமணிக்கடகத்தடக்கையெடுத்தறைந்தவன்முன்றுண்ணென்றோதை
கிளர்ந்ததுபேரண்டமுடிகிழிந்ததுதீயவனுரம்போற்கீறித்தூணம்
பிளந்ததுமானுடமடங்கல்பிறந்ததுவானவர்க்குநலம்பிறக்கமாதோ. 26
1062 அண்டகோளகையதிரத்திசையதிரப்புகையுமிழகண்ணரிமாவாகிச்
சண்டமாருதக்கரத்தானமடித்தலமிட்டுரங்கீறித்தாழிப்பேழ்வாய்
மண்டவாரிழிகுருதிமடுத்துமடுத்தவுணனுயிர்மடுத்தான்வாயால்
கொண்டல்போன்மணிநிறத்துக்கோகனகம்போலலர்ந்தகுளிர்பூங்கண்ணான். 27
1063 வானொன்றுமயன்முதலாயெறும்புகடையுபிரிலொன்றான்மடியான்மேனி
தானொன்றுமுகமொன்றுமெழுந்துகடைத்தலைநாப்பண்டகுமாலைக்கண்
ஊனொன்றுமுதிரமரியருந்தியுயிர்கவரமடிவுற்றபெற்றி
நானொன்றுநினைக்கவுறுந்தெய்வமொன்றுநினைத்ததென்றநயமாமாதோ. 28
1064 சுடர்க்கனகத்துகள்சிதறவடற்கனகனுடற்குருதிச்சுவைகண்டாங்கண்
மிடற்குருதிக்களியெடுத்துவிண்ணையுமண்ணையுநலந்துவெறியாட்டாட
அடற்கருமானுடமடங்கலருந்துயராற்காளிபுரத்தணைந்துவேதன்
முடைத்தலைகொய்வடுகேசனிடத்தமரர்முடிசாய்த்துமுறையிட்டாரால். 29
1065 ஆயிடையெம்மிறையருளாலடல்வீரபத்திரனோரட்டபாதத்
தேயெனுமாத்திரையின்முரட்சரபவுருவெடுத்திகன்மானுடத்துச்செங்கண்
சீயமறப்புடைத்துதறிமுடிதகர்த்துமுன்னுண்டசெந்நீரெல்லாம்
வாயினிடைமடுத்தகலமறிந்ததுமானுடமடங்கன்மறிந்தகாலை. 30
1066 அள்ளிதழ்த்தாமரைப்பொகுட்டினரசிருக்குந்திருமடமானதுகண்டோடி
முள்ளெயிற்றுப்பணிமாலைமுயங்கியதோள்வடுகனடிமுளரிசூடி
எள்ளுலவுமெண்ணயெனவெவ்வுயிர்க்குமுயிராயவிறைவகண்பார்த்
தொள்ளிழைமங்கலநெடுநாணோங்கவெனக்கீங்கருளெம்முடையாயென்ன. 31
1067 பொன்னொழுகுகற்பகப்பூங்கொம்பரெனத்தென்பிரமபுரத்துமேல்பால்
மின்னொழுகுமுக்கோன்மட்டெல்லையினிற்கடுக்கைமலர்விரிபூங்கானில்
மன்னிரவித்தடத்தயாலாறிருபருவமருந்தவஞ்செய்மலர்மான்காணத்
தன்னிகரில்வடிவநுடும்வடுகேசன்பேருவகைதழைப்பச்சென்றான். 32
1068 இருக்கோலஞ்செயுமிருதாளெழிற்கோலமலரின்விழுந்திறைஞ்சச்செய்யாள்
அருட்கோலமுடையபிரானணிக்கோலமாலைமுன்போலளித்தான்மேனாள்
திருக்கோலம்புனைதலினாற்றிருக்கோலக்காவெனவித்தெண்ணீர்ஞாலத்
துருக்கோலந்துடைப்பவர்தாமெக்காலுந்தொழுமூரொன்றுளதுமாதோ. 33
1069 அவ்வழியெம்பெருமானையடலாழித்தடங்கரத்தானலர்கடூவிக்
கைவ்வனசமுகிழ்த்திருகண்டுளிதூங்கவொளிதூங்குங்கழற்றாள்போற்றி
இவ்வடியேன்மடமகற்றியெடுத்தாண்டபெருங்கருணையிறைவாபோற்றி
தெவ்வடுபோரிலைச்சூலந்திரித்துலகம்பரித்தருளுஞ்செல்வாபோற்றி. 34
1070 நிரையிதழ்த்தாமரையானும்யானுநெடுமொழிபேசிநிற்பவேதன்
நரைமுடிகொய்திகலறுத்தென்னிரைமணிமாநகர்போந்துநகுங்கைவேலால்
வரையகலந்துறந்தெனதுவடிகுருதிமுடிநிறையமடுத்தவாறே
தரையினுமானுடமடங்கலுருவிடந்துகுருதியுண்டசரபபோற்றி 35
1071 முன்னுமெனைமறித்தாண்டமூதருளான்முடங்குளைமான்முரணைவென்றாய்
இன்னுமெனக்கிரங்கினையேலிதனுரிநின்றிருமேனிக்கியையவேண்டும்
மன்னுநினதின்னருளைவழியடியேன்கடைப்பிடித்துவாழவேண்டும்
பொன்னுலவுமதிட்காழிப்புண்ணியனேயெனநெடியோன்போற்றிவீழ்ந்தான். 36
1072 அருமுடிசச்சூட்டரவணையிலறிதுயில்கூர்பவனிவ்வாறறையவேதன்
ஒருமுடிகொய்மணிநகத்தானரமடங்கலடிமுடிதொட்டுரித்துமீக்கொண்
டிருண்முடியவெழும்பரிதியெனவொளிருமரைக்கணிந்தானிமைக்குங்கோட்டுத்
திருமுடியில்வீற்றிருந்துகருமுடியவினைகடியுந்தேவதேவன். 37
1073 கோபத்துநரமடங்கல்விளைத்ததுனிதுடைத்தலினாற்குறையாதென்றும்
ஆபத்துத்தாரணனென்றாயினனிவ்விருங்ககதைதானருட்டதீசி
மாபத்தியொடுமருகற்பழித்தகொடுந்தக்கன்மனமம்மர்நீங்கத்
தீபத்தின்விரித்தவனுக்கருமறையின்றெளிவிதனைத்தெரித்தான்மேனாள். 38
1074 சேணிலத்தில்வடுகேசன்றிருமலையைவணங்குநருஞ்செம்பொன்வாய்ந்த
நீணிலத்தார்பரவமுத்திநெடுநிலத்தில்வீற்றிருப்பார்நிகழுமன்பு
பூணுலரும்புகர்வாரத்தழகொழுகப்புழுகவன்மேற்புனைந்துளோர்கள்
ஏணிலகுநிலமனைத்துந்தமதடியிற்படுத்தியரசியற்றுவாரே. 39
1075 தூரத்தேதொழுகுநர்க்குமுத்திகொலோவெனவுயிர்கள்சோராவண்ணம்
ஆரத்தாழ்திருமார்பனரிவையொடுவில்வவனத்தணைந்துமேல்பால்
நீரத்தாழ்வயற்காழிநெடுவரையைப்பணிந்துருகிநின்றானிந்தச்
சீரைத்தானுறலாலேதிருநகரியன்றொருபேர்சிறந்ததவ்வூர். 40
1076 வேறுமளப்பில்பெருமைவினவவுமோதவுமுடியாவியப்பாலந்தண்
சேறுபடுவயற்காழித்திருமலைவாழ்மலைக்கொழுந்தின்றிறனீதென்றான்
ஆறுமிடரைரந்துமகன்றாதியிடையீறிலிதாளகத்துட்பூண்டு
கூறுமறைத்துறையறிந்தகுரவனடிக்கடிமைபுகுங்குணக்குன்றன்னான். 41
(20-ஆவது, ஆபதுத்தாரணவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம்-1076)
-----------------------------------------------------------
1077 தாற்றிளங்கமுகின்சூற்பழுங்கழுத்துத்தமனியப்பாளைவாய்கிழியச்
சேற்றெழுவாளையேற்றெழுங்காழித்திருமலைக்கொழுந்தினதியற்கை
போற்றியமுனிவன்கழுமலமெனும்பேர்ப்புண்ணியத்தீம்புனற்பொன்னி
ஆற்றினதியலுஞ்சாற்றுவெனென்றாங்கறைந்தவேறொருவழியறைவாம். 1
1078 கனைத்துவண்டிமிருமலர்த்தடஞ்சினையகற்பகநாடுகாவலவன்
முனைக்கடுந்தானைநுனிப்பரும்வலத்துமூரிவெஞ்சூரனான்மேனாள்
அனைத்துளபொருளுந்தனித்தனிதுறந்துமாற்றலனாகிவேற்றடங்கண்
மனைப்பொலன்கொடியோடருட்பெருங்குரவன்வாய்மையான்மண்ணகத்திழிந்தான்.2
1078 கரைக்குறும்பெறிந்ததிரைத்தடந்தோறுங்கதிர்வளைவயிறுளைந்தீன்ற
நிரைக்கொழுந்தரளநெடுநிலாவிரிக்குநீள்வயல்விளிம்புசூழ்வேணு
புரத்திலாளுடையான்றிருத்தகுமலர்த்தாள்போற்றினனிருப்பநெய்த்திருண்ட
விரைக்கருங்கூந்தற்சசிமுலைவியக்கவிருப்பினாற்றருக்குவாளவுணன். 3
1080 காற்றினுங்கொடியகடுநடைத்தூதகணங்களைக்கூஉய்மலருலகின்
மாற்றலர்க்கடந்தவபிரவாளுழவன்மனையிளங்கொடிதனைவல்லே
வேற்று*வேதண்டமெவற்றினுந்துருவிவிரைந்தளித்தும்மெனவிடுப்பக்
கூற்றினுங்கொடியார்விசும்பிடைத்தேடிக்குரைகடல்வைப்பினிற்குதித்தார். 4
1081 தீந்தொடைமகதித்திருமுனியனையார்செய்தியைவெய்துறக்கதங்கால்
ஏந்துகோட்டயிராவதப்பெரும்பாகனிருக்கைபுக்கியம்பலும்வெருவிச்
சாந்தணிந்தோங்குந்தமனியத்தசும்பிற்றதும்பியதடமுலைச்சசியோ
டோய்ந்துருமாறித்திரளுருப்பசுங்கண்ணுறுகழையுருவெடுத்துறைநாள். 5
1082 காலையும்பகலுங்கங்குலும்பணிவான்காழிகாவலன்பணிக்காய
சொலையுந்துணர்ப்பூந்துடவையும்பெறுவான்றுளியறமுளியடைந்தமையால்
மாலைவெள்ளருவிவரைச்சிறகரிந்தவானவன்படருறுமேல்வை
மேலைவானின்றுமண்ணகத்திழிந்தவீணையங்கிழவனொன்றுரைப்பான். 6
1083 மாலிருங்குடுமிலிந்தமொன்றுறுமான்மணிவரையள்ளிருள்விழுங்கும்
மேலிருங்கதிர்சூழாடகக்குடுமிமேருவோடிகலியோராழி
ஆலுமேழ்பரிமானூர்திவானவனையந்தரமுகட்டடியியங்கா
தோலுறத்தடுப்பெனெனநிவந்தகல்வானுறுவெளியடைந்ததையன்றே. 7
1084 பொருகடலுடுத்தவிரிநிலமனைத்தும்புதையிருள்விழுங்குபுபுலரா
தருமறைக்கிழவரருங்கடினிறுத்தற்கலரியோனின்மையால்யாரும்
தெருமரலுறுநாள்விரிநிலாவெறிக்குஞ்சேயுயர்வெள்ளியங்கிரிக்கண்
முரிதிரைகுடித்தமுனிவரனுணர்ந்துமுக்கணற்கக்கணமொழிந்தான்.
[footnote: * வேற்றண்டமெனவும்பாடம்.] 8
1085 கருதலர்புரத்தூளெழத்தனிநகைத்தகண்ணதற்சாமிமுவந்தாங்
கருவரையடக்குமுரனுமேழ்நதிகளவற்றினிற்பொன்னியுமருளித்
தெரிதமிழ்முனியைவிடுப்பமற்றவனுஞ்சிரகமேறீம்புனலேந்தி
விரிகதிர்க்கடவுள்வழக்கறுத்துயர்ந்தவிந்தமால்வரையுறவருங்கால். 9
1086 அத்தலைமாயாபுரத்தில்வெம்முனைசாலருந்திறற்கிரவுஞ்சனெனுமோர்
மத்தனாந்தகுவன்மண்ணொடுவிண்ணுமறைத்துமால்வரையெனநிவப்ப
உத்தமமுனிவன்பற்பலவழிபுக்குழன்றுமந்நெறிபெறாதொருசார்
பித்தரினிருப்பக்கதமுறைபிலிற்றும்பெருமழையுய்த்தனன்கொடியான். 10
1087 நிலம்பகவிடித்துவலஞ்சுழன்றெழுந்தநீனிறமுகில்பொழிமாயை
அலங்கெடநுனித்தோனோதியிலுணர்ந்தாங்கவுணனையருவரையுருவாய்த்
தலந்தனிற்கிடத்திநின்னையுங்கேண்மைத்தாரகன்றன்னையும்வேலால்
இலங்குபூண்முருகனெறியநீர்முடிதிரெனவெகுண்டுரைத்தயலகன்றான். 11
1088 பாசடைப்பதுமப்பள்ளியிற்பவளப்பரட்டடிச்சூட்டனப்பார்ப்பை
ஆசறுதரங்கத்தடங்கையாலாட்டியளிபுனற்றவளைதாலாட்ட
வாசமெல்லிலஞ்சித்துணைப்பெருஞ்செவிலிமகவெனவளர்க்குநீர்வேலிக்
காசிமாநகரையிறைஞ்சிவெய்யவனைக்கண்டவல்வினையவண்டொலைந்தான். 12
1089 ஆண்டுநின்றறவோன்றென்றிசைப்பேராறயர்வுழியள்ளிருள்பரப்பும்
சேண்டொடுகுடுமிவரைத்தடந்துருவித்தெரிவிலனிதுகொலோகதிரோன்
தூண்டுதேர்மறித்தவரையெனக்கருதித்தூங்குவெள்ளருவிதாழ்முகட்டில்
மாண்டகுகரத்ததானழுத்தமண்ணொடுபோய்மறைந்ததுமாலிருங்குன்றம். 13
1090 மண்ணகத்தழுங்கும்வரைதனக்கிரங்கிமறித்திவண்வந்துனக்களிப்பாம்
எண்ணலையெனத்தென்றிசைபடர்நெறிக்கணிகலுடையசமுகியீன்ற
பண்ணவர்படிவத்தவுணர்வில்வலன்வாதாவியாம்பதகராலமைத்த
உண்ணருங்கருணைவாசநெய்யடிசிலுண்டவராவியுமுண்டான். 14
1091 உண்டவனிருண்டகொண்டல்கண்படுக்குமோங்கல்சூழ்கொங்குநாட்டொருசார்
அண்டநாயகன்றாளருச்சனையாற்றியரும்பெறற்பொன்னிமாநதிப்பொற்
குண்டிகைதனைவைத்திருந்தனனந்நிர்கொணருமாறைங்கரக்கன்றை
வண்டடங்கரத்தான்வணங்குகவென்னமறைமுனியுரைப்பவானவர்கோன். 15
1092 முருகுவாய்மடுத்துவரியளிமிழற்றுமொய்ம்மலரிலஞ்சிசூழ்காழித்
திருவநீள்குடுமித்தென்றிசைச்சிகரித்திருக்கடைவாயிலினிருத்திப்
பெருகுநீரனையநிறைகடாங்கவிழ்க்கும்பிறைமருப்பொருதனிக்களிற்றைத்
தருவுலாமலர்தூஉய்வரன்முறைபரவித்தாட்டுணைபழிச்சிநின்றவன்முன். 16
1093 வீங்குகோட்டிமயப்பனிவரையுயிர்த்தமெல்லியல்சுணங்கணிகருங்கட்
கோங்குமாயமுதமுலைப்பிடியீன்றகுஞ்சரக்கன்றெதிர்தோன்ற
ஈங்கெனையளிப்பானெழுந்தருடோன்றாலென்னுயிராதிமன்னுயிர்கள்
தாங்குவான்மலயமுனிகமண்டலநீர்தருகெனச்சதமகன்றாழ்ந்தான். 17
1094 தாழ்தலுமஞ்சேலென்றெருவல்வாய்த்தடஞ்சிறைக்கொடியுருவாய்ந்து
வீழ்பனிமுயங்குகொங்குநாட்டொருசார்விரிதமிழ்த்திருமுனிக்காகத்
தாழ்புனல்விளிம்பினிவந்துமாசெறிந்தோனங்கைகள்புடைப்பவஞ்சினன்போல்
கீழ்திசைகாட்டிச்சிரகநீர்கவிழ்த்துக்கிளர்ந்தனன்றொடர்ந்ததுபொன்னி. 18
1095 வேறு.
மீதுறமலர்கெழுசெயலையுமகருவும்விசையொடுதொடுதிசைதிசைசிதறப்
பூதரவுடல்கிழிகுடரெனவிடமுமிழ்பொறிமணியரவுகணெளிநெளியக்
காதுறுமடுபுலிகரடிகளிடையிடைகடமைகளொடுமிருகரைபுரள
வாதுவர்விடுபரிநிரையொருதிரையொடுவருமொருகழுமலமுதுநதியே. 19
1096 மீனிரைவிழியொடுநுரையணிதுகிலொடுமிளிரொளிவளையொடுமிளிர்தரளத்
தூநிறநகையொடுகொடிமறுகிடையொடுசுழிபடுசுழியொடுநிகழுமறற்
பூநிறைகுழலொடுகுமிழ்கொடுமுலையொடுபுதுமலர்முகமொடுமுதுதிரைநீர்
மாநிலமகள்பெறுமகளெனவெழில்பெறவருமொருகழுமலமுதுநதியே. 20
1097 ஆறலையெயினர்கள்வரிசிலையெறிகவணடுகணைபடுசிறுகுடிலிடறித்
தூறியசிறுதலைமுசுவொடுவசிகலைதுறுமியமுளிசினைமரம்விசிறி
ஏறொடுமுருமிகல்களிறதுபிளிறிடவெறிதிரைநிரையிருகரைபொருத
மாறடுவளவனதிருநிலைமலர்தரவருமொருகழுமலமுதுநதியே. 21
1098 பண்டுளபரிகரைவிரிதிடரிடுவதுபடுதிடர்களையவலிடுவதுநீள்
விண்டலமதிபுனைமுதலுறைபதிதொறுவிரிவளைமணிமலர்பொழிலதுசூழ்
எண்டிசைதொறுமுழலிரவலர்கொடைதருமிறைவனையெதிர்கொடுபுகழ்வதெனா
வண்டிரைமலர்விரிகுரைதிரைநிரையொடுவருமொருகழுமலமுதுநதியே.22
1099 வீசுறுகவரியுமொளியுமிழ்மணிகளும்விடுமதகரிகளுமடுகொடியும்
மூசியசிலைகளும்வகைபடுகணைகளுமுரிதிரைநிரைமிசைகொடுவரலால்
ஆசறுகுடபுலவரசரையிகல்பொருதளவறுபொருள்கவர்வளவர்பிரான்
மாசறுதெறுபடைவயவரைநிகரெனவருமொருகழுமலமுதுநதியே. 23
1100 ஏமுறுநடைமலியனமிசைபுனைதலினிசைமறைவிரிதிசைமுகமுறலில்
தாமரைவிரவலினவனியைவிதிமுறைதருதலின்மணிவரைவழிவரலின்
நாமலிகொடியொடுதழுவலின்முழுதுணர்நயனுடையளிவளரயனெனநீள்
மாமலிநிலமகள்வனமுலைவடமெனவருமொருகழுமலமுதுநதியே. 24
1101 தானமுமருமறைநெறிகளுமுயர்சிவதருமமும்விழுமியகருமமுமெய்ஞ்
ஞானமுநவையறுகலைகளுமொருகுடைநரபதிமுறைசெயுமனுநெறியும்
ஊனமிலனமுதலினமலிபொருள்களுமொருமுதலடியவர்திருவடிசொல்
மானமுமலர்தலையுலகினினிலைபெறவருமொருகழுமலமுதுநதியே. 25
1102 வேறு.
ஆழியபொருளாயொழுகலாறுடைத்தாயைந்திணைநெறியளாயகன்று
சூழிருந்துறைத்தாய்ரேற்பொருள்பயக்குந்தொன்னெறித்தாகிநல்லுரவோர்
வாழிசால்கவிபோற்கழுமலமெனும்பேர்மணிநதியணிகிளர்மாடக்
காழிமாநகர்க்கணணைந்ததுமுனியுங்காரியைக்கடிவலென்றணைந்தான். 26
1103 அணைந்தவன்விரல்களொருங்குறமுறுக்கியருளுடைப்பிள்ளைமேற்றாக்கப்
பிணங்கினன்வரலுமொருதனிக்கோட்டுப்பிள்ளையாய்த்துள்ளலர்மழைதூஉய்க்
கணங்களேத்தெடுப்பப்புகர்முகச்சிறுகட்கடம்பொழிநனைகவுட்களிற்றின்
இணங்கியநிலைகண்டலமரலுற்றவேதமின்மாதவனிசைப்பான். 27
1104 குலமறைபுகன்றகடவுளரெவர்க்குங்குழகநின்னடித்துணைபோற்றி
அலதொருசெயலுமுற்றுறாவதனாலாண்டகைநின்னையீண்டறியா
துலகுறுகொடியேன்றிருக்கரமுறுக்கியோங்கியகுட்டெனக்காக
கலைவலாயெளியேன்பிழைத்தமைபொறுத்திகளைகணேபோற்றியென்றிடலும். 28
1105 ஏதமில்குணத்தாய்மகபதிக்காகவிருமுதுகுரவர்தம்பணியால்
மோதலைக்குடிஞைகவிழ்த்தனமெம்மான்முன்னருற்றிடினிதுதெரிப்பன்
போதருகெனக்கொண்டமலனையறியும்பொழுதுநேராதயலிருப்ப
மாதவனொருகோட்டிருசெவிமலையைவணங்கினனதிபெறவிரந்தான். 29
1106 இரந்துழியனையான்கரம்படுகரகத்தெறுழ்வலித்தடக்கையாற்றுளிநீர்
வரந்தருமொருகோட்டிறைமகனளிப்பவயங்குபொற்கரகமேன்முன்போல்
பரந்தபின்காழிபுரந்தனிலென்பேர்படைத்துலகிடரெலாந்துடைத்துப்
புரந்திடென்றொழியவாதியைங்கரன்பேர்புணர்ந்ததுகழுமலப்பொன்னி. 30
1107 புணர்ந்தபூம்பொன்னியணங்குமாதவத்துப்பொருப்புறழ்முனிவரநின்னால்
கணங்குழைபாகன்கயிலைமால்வரைபோற்காழிமாநகரிலுங்கலந்தேன்
உணங்குபல்லுயிர்கட்குன்னருள்வலியாலுலைவறுமேலைவீட்டின்பம்
இணங்குமாறளிப்பல்வரம்பிலாவுவகையித்தலத்தெய்தியவதனால். 31
1108 தொடக்குறும்பிறவியடற்பிணிதணிக்குந்துகளறுமருந்தும்வல்வினையின்
கடக்கரும்புணரிகடத்துநாவாயுங்கரைபெறாவவிச்சைவல்லிருளை
அடக்கிநல்லொளிவிட்டெறிக்குமொண்சுடருமழிபசிநிரப்புறுபரப்பை
உடைத்தினிதளிக்குங்கடவுண்மாமணியுமாவெனிந்நகரில்யானுரவோய். 32
1109 வார்ந்ததெண்டிரையதெய்வநதிகள்வகைக்கெலாமொருதனிசிறந்து
சேர்ந்தவிண்ணவரோடெவர்க்குநல்விழுப்பஞ்செய்துவையகத்திலென்மேனி
ஈர்ந்திரையிளங்காறோய்ந்திடிற்காணிலெய்திடிற்கைதொடிற்பருகில்
கூர்ந்தவல்வினைகள்பரிதிமுன்பனிபோற்குமைப்பெனெக்குலத்துமன்பதைக்கும் 33
1110 ஐவ்வகைப்பவத்தோர்வெவ்வழல்வேள்வியலைத்துளோர்குரவரையிகழ்ந்தோர்
செவ்வரித்தடங்கணயன்மனைவிழைந்தோர்செயிரறுதெய்வதம்பழித்தோர்
எவ்வமுற்றுழலும்வறிஞரைநலிந்தோரிருமுதுகுரவரையயர்த்தோர்
கைவ்வினைகரந்தோர்பொய்க்கரிபுகன்றோர்கடுஞ்சமரினில்வெரிநிடுவோர். 34
1111 சுளித்துரைதருவோர்தூநறைமடுப்போர்சுற்றம்வெம்படருறக்களிப்போர்
களங்கறுமுல்லைக்கற்பினல்லாரைக்கனன்றுளோர்கன்னியைக்கலந்தோர்
துளங்கருநன்றிகொன்றுளோர்நட்டோர்தொகுபொருள்கவர்ந்துளோர்மூத்த
விளங்கிழையவர்தோண்மணந்துளோர்நறையூன்விலைஞர்கையிழிபொருள்வேட்டோர். 35
1112 விருந்தினைத்துறந்தோரபயமென்றளித்துவிடுத்துளோர்கருவினைச்சிதைத்தோர், தரும்பொருள்கெடத்தென்புலத்தவர்வேள்விதணந்துளோர்நாண்டுறந்துழல்வோர், அருங்கனலகன்றுமிருங்குழன்முடித்தோரமணராயரும்புனலிழிந்தோர், பெருந்துறைவழிக்கணைடுந்தருக்குரைத்தோர்பேதுறவாறலைத்திடுவோர். 36
1113 அருமறைக்கிழவர்பெறும்பயனுகுத்தோரரசியற்றிறம்பினோரிருள்வாய்
தருமிடமறுத்தோர்கண்ணியின்வலையிற்சார்ந்தபுளவிலங்கினைவளைத்தோர்
பெருகுநீர்க்கூவல்வீழ்பசுவெடாதோர்பெய்கவறாடுவோர்குரவன்
திருமொழிமறுத்தோர்காலையிற்கடவுட்சினகரம்பணிந்திடாதகன்றோர். 37
1114 கடவுளாலயத்துமகளிரைப்புணர்வோர்கணிகைமாட்டரும்பொருளேற்போர்
தடமலர்வாவிதூர்த்துளோர்குறளைச்சாற்றுவோர்மணவினைகெடுத்தோர்
மடமகவினைநீர்வீழ்த்துளோர்விலைநெல்வாணிகர்க்கேற்றினைவிற்போர்
புடைவனமுலையாளொருதனிப்பாகன்புனைவுறுமலரினையணைந்தோர். 38
1115 மெலியபால்விஞ்சைதடுத்துளோரையம்விலக்குவோர்பொய்விலைபகர்வோர்
நலியிளங்கன்றைப்பால்விடாதலைப்போர்நயனிலகூறுவோராதி
கலிகெழுவிலைஞரேவருமுவந்தென்கடவுணீரிடைப்பணிந்தனரேல்
வலிவினைகழுவிக்கழுமலநதியாய்வயங்குவென்றயங்குமிந்நகர்க்கண். 39
1116 கோணிலைதிரிந்தகாலையுமாலைக்கொழுஞ்சுவையமுதுமிழ்புனலாய்
வாணிலாஞ்சுடரோரிரண்டுளகாறுமாறுறாதிந்நகர்வாழ்வேன்
சேணலாங்கங்கையாடின்முத்தினத்துந்தெய்வநீர்யமுனையைந்தினத்தும்
ஆணியாம்பலபேறளிக்குமோர்தினம்புக்காடினாற்பலனளிக்குவென்யான். 40
1117 தென்புலக்கிழவர்க்கருத்துநாளுரகஞ்செழுஞ்சுடர்விழுங்குநாள்கதிரோன்
அன்புறுதகர்மேற்றுலையின்மேலவருநாளயனநாளுவவுநாண்மாகம்
என்பெருநெடுநாளிவற்றினென்மேனியீர்ம்புனல்படிந்துளோரடிநாள்
துன்பிருவினைக்கோர்கனலியுமனையார்தொல்லுயிர்க்கமுதுமாகுவெனால். 41
1118 படிபடுமாந்தர்கரைபடிற்பிணியிற்படிபடார்நெடுகியதிரைநீர்
அடிபடிலகலாவிருவினைத்துவக்கிலடிபடாரடைகரைவார்ந்த
பொடிபடினிரயத்தருந்தழல்வறுத்தபொடிபடாரெள்ளளவுறுநீர்
குடிபடிலினியோரன்னையர்முலைப்பால்குடித்திடார்முடிப்பருங்குணத்தாய்.42
1119 பற்பலவியப்போடிந்நகரிருப்பென்பகவநின்னருளுமோர்புழைக்கை
அற்புதனருளும்பயத்தலாலென்னவகமகிழ்தூங்கியமுனிவன்
பொற்பொடுபொலிகவடபுலத்தமைந்தபுனிதநீர்க்கங்கைபோலுன்பேர்
எற்படர்மவுலிச்செம்பியன்புவிக்குமெய்துகதெய்வநீரணங்கே. 43
1120 கழிதருங்குவளைகயந்தொறுங்கமலங்கரைதொறும்வெள்வளைமடைநீர்
இழிதொறுந்தரளமேர்தொறும்பசும்பொனிருகரைதொறுமறைமுனிவர்
பொழிறொறும்புயல்கள்புடைதொறுங்கடவுட்புனைமணிச்சினகரமியங்கும்
வழிதொறுங்கன்னல்வயறொறுஞ்செந்நென்மல்குகநின்னுழைமாதோ. 44
1121 கறங்குவெண்டிரையகங்கையேயாதிகடவுண்மாநதிகளுநின்பால்
அறங்கிளர்துலைக்கணாடிமாசகற்றியருளுமாறலறியமுந்நீர்
பிறங்குதொல்புவிக்குமருளுகவென்னாப்பேரியன்முனிசெலமகவான்
நிறங்கிளர்நளிநீர்மலர்த்தியமலரானிருமலன்பூசனைமுடித்தான். 45
1122 ஆண்டுதண்கயிலைக்கமரர்கோனேகவுயிலெழிற்றசமுகியென்பாள்
தூண்டுமான்றடந்தேர்த்துணைவனுக்களிப்பான்சுந்தரிவலக்கைதொட்டீர்ப்பப்
பூண்டுழாயலங்கன்முகிற்குமுக்கணற்கும்புதல்வன்வெஞ்சேனையந்தலைவன்
காண்டலுங்கொடியாள்கையரிந்தெறியூர்கைவிழுஞ்சேரியொன்றுளதால்.46
1123 மற்றவளகலப்புகலிமாநகர்க்குவன்னியந்திசையின்மாகாளன்
வெற்றியங்கழற்காலொருதனிச்சாத்தனவியன்பணிபுரிந்தனன்வைக்கக்
கற்றைவெண்டிரைநீர்பொன்னிமாதளிப்பக்கடிமலர்த்துடவையும்பிறவும்
பொற்றலிரகுழைத்தூறுமலர்விரித்துப்பொலிந்தனபொங்கராங்கதன்பின்.47
1124 பூதலங்கடந்தவொருதனிமுளரிப்புங்கவன்றேடருங்காழி
மாதலத்தொருகூன்பிறையணிவேணிவரதனதாரருள்பூண்டும்
காதலஞ்சசியோடமரர்கோன்போதக்கடமுனிசைமெய்தினனென்
றோதியசூதனருவரைவளனாண்டுறுவருக்குணர்த்தியநெறியை. 48
1125 வேறு.
தெய்வங்கமழும்பளிக்குண்டைத்திரள்காய்நெல்லிதருமூலத்
தய்யமகன்றமுனிக்கரகத்தினீருய்யப்பநதிநீராய்ப்
பெய்யுங்குளிர்பூம்பொன்னியினாற்பெருமாநிலத்தின்னுயிர்புரக்கும்
வய்யம்புகழுங்சையமெனும்வரையின்வளனீங்கறைகுவெனால். 49
1126 அடர்செஞ்சடையுமிராவணன்மேலடருங்சிறுகானகக்கண்ணும்
படரம்புலியுமாசுணமும்பலதாழ்வடமானிடமும்
தடகண்கலையுமடங்கலுடைத்தருக்குஞ்செருக்குந்தன்மையினால்
கடலின்விடமுண்டளித்தமலர்க்கையனிகர்க்குஞ்சையவரை. 50
1127 கோடுதாங்வெயின் மறைத்துக்கொண்மூவடிக்கொண்டலைவிலதாய்
நீடுதருமாமணிமணந்துநெறிக்கட்டடந்தாமரைகாட்டித்
தேடும்பலனுமூலமுமாய்ச்செல்வந்தேறவதரமெல்லாம்
ஆடும்பாகட்டாலறிதுயில்கூரையனிகர்க்குஞ்சையவரை. 51
1128 முன்னூலணியாலெவ்வாறுமுழங்குமதாவாரணச்செறிவால்
மின்னூர்வாயால்வனாப்புறவேதண்டமருங்கைவிரித்தலினால்
கொன்னூர்குகரங்காட்டலினாற்குடுமிநாலுமருவியதால்
தொன்னூல்விரிக்குமடல்வனசத்துய்யனிகர்க்குஞ்சையவரை.52
1129 ஏவார்தடங்காட்கொடிச்சியார்வாழில்வாய்விளக்கும்பொற்றுகள்போய்ப்
பூவார்தடமென்சினைதோறும்போதுளியொளிசூழ்கிடந்தமையால்
தாவாவிண்ணோர்வதிதருபூந்தருவைநெடும்பொற்றருவென்றே
ஓவாவொருபேர்கொடுத்ததிந்தவோங்கற்கிடந்ததிணிமுன்றில். 53
1130 சோதிவாய்ந்தபசுங்கமுகந்துணர்ப்பூம்பாளைவாள்விதிர்த்துப்
போதிவாரமென்றலினாற்பலகைதாங்கிப்பொருப்பரசன்
மீதிலாகண்டலனிலையாய்ந்தெழுந்துமிளிர்வன்சிறையரிந்த
சாதிமானப்பழிதுடைக்கத்தருக்கின்றதுபோனெருக்குமால். 54
1131 திவளப்பசும்பொற்கொழுந்துயிர்க்குஞ்சேமப்பாறைநிழலுடன்மேல்
இவரத்திரியும்வரைவருடைபசியபிணையென்றெறிசுடரோன்
பவளக்குரத்துக்கொய்யுளைமானேழும்படர்மாலுழந்துருகி
அவணத்திமையாக்கண்கொடுபார்த்தலைக்குந்தடந்தேர்நிலைக்கவே. 55
1132 பெருகியொளிகால்நறுங்குலிகப்பெருஞ்சேதகந்தோய்ந்தொழுகுதெண்ணீர்
அருவிகுளித்துப்பவளமருப்பாயவேழமியங்கிடுமால்
திருகுசினத்தின்ஞாட்பினுற்றசெறுநர்மார்பிற்செருகிவரும்
குருதிபொழியுங்கூர்ங்கோட்டுக்குறுங்கட்பெருங்கைக்குஞ்சரம்போல். 56
1133 கண்ணார்பீலிமஞ்ஞையுயிர்கதிர்கான்மணியைக்கோபமெனா
எண்ணாதயில்வான்கவர்ந்துபசையின்றியெறிவமாலுழந்து
பெண்ணாருருக்கண்டுணர்விழந்தவிழியான்முயங்கிப்பெறுமின்பம்
நண்ணாமடவார்நசையின்மைகுறித்தாங்கொருவுநல்லவர்போல். 57
1134 கூன்றோய்மருப்பையறைதீட்டிக்கூர்மையறிவான்குழியழற்கண்
ஊன்றோயகட்டுத்துறுமயிர்மெய்யொடுக்கியடுக்கத்தெற்றேனம்
தேன்றோய்மலர்ப்பூந்தருவிலக்காய்ச்செருக்கிப்பாயப்பிலிற்றியதேன்
மான்றோற்பள்ளியெயின்மகவாய்மடுக்குந்துயிற்கணடுக்குமே. 58
1135 நெறியாரிந்தவரைக்குடுமிநிலவுமுரவோரருளுண்மை
சிறியார்புகலுந்தரத்ததோசெற்றநீங்கிமுற்றமெலாம்
பொறியார்மனவப்பெருமணிப்பூண்பொம்மன்முலைப்பால்பருகியவாய்
வெறியாரெயினக்குழவியொடுவேங்கைப்பறழுமகளுமே. 59
1136 கருங்கால்வேங்கைவீயுகுத்தகடுக்கைநறுந்தண்டுணர்சொரிந்த
இருந்தாதரிக்கொண்டரிதாரமீர்த்துப்பசும்பொன்சேர்த்துவரைப்
பெருந்தாளடிக்கண்முடியினின்றும்பெருகுமருவிதூங்குமுல
கொருங்கேயுண்டவானவன்பொன்னுத்தரீகந்துயல்வரல்போல். 60
1137 கொல்லாடரவமிரைரேக்குறித்துக்கான்றமணிக்குவைகள்
வில்லாரொளிவிண்முகட்டளவும்விரியப்புரைதீரறிஞரிடைப்
புல்லாவெழுத்தின்வறுங்கோட்டிப்புலனில்புலவர்முகம்போல
ஒல்லாக்கதிரும்வெண்கதிருமொளிமாண்மழுங்கியியங்குமே. 61
1138 தானமடுத்தமுகிற்குலங்கடவழுங்குவட்டிற்றோகைவிரித்
தானகளியின்மஞ்ஞைபலவமைந்ததோற்றமலிரொளிசூழ்
வானமடவாரகன்சுனைநீராடிமயிர்க்கால்விரலுளர்ந்து
கானமருப்பூங்குழலாரவிரித்தாங்கிருத்தல்காட்டுமே. 62
1139 வளிசால்விசும்பூடுரிஞ்சுபசுங்கழைமேற்குறுகூன்மடமந்தி
களிசால்பவுரியிடநோக்கிக்கங்கைப்பசுங்கட்குழிகவுளின்
அளிசால்கடுவன்முட்பலவின்சுளைநல்குவவேலடர்வேந்தர்
ஒளிசால்பொன்னந்துணிகளைக்கண்ணுளர்பாலீவதொத்துளதே. 63
1140 வெளிறுநீத்தகருமுகிலைப்பிடியேயென்றுவியன்புழைக்கைக்
களிறுநீட்டவிலங்குழுமீக்கண்ணின்றமுதுகான்றுவளைந்
தொளிறும்பிறையைச்சிமையவரைப்பாகற்களிப்பானுருத்தெறிந்து
பிளிறிநிவந்துதோட்டியெனத்தடவும்பெற்றியன்னதே. 64
1141 இமைக்கும்புனல்கோட்டருவரைநின்றிழியுமருவிவிழுந்தரையில்
குமைக்குங்குழிவாய்மாமருப்பாற்குறுங்காற்குரம்பைக்கொடிச்சியர்கள்
சமைக்குங்கிழங்காலகழ்குழிவாய்வல்சியாகத்தனிகொழிக்கும்
அமைத்திண்கதிர்கான்மணிமுத்தந்தூர்க்குமாதோவகன்சாரல். 65
1142 சகடொன்றுடைத்தேரிரவிதெறுந்தழலங்கரங்கள்காணரிய
முகடுமாய்த்தபனிப்பாறைகிடந்தவண்ணமூதண்டத்
தகடுதேய்க்குங்குவட்டிலுறையறவோரியங்கலாற்றைவெள்ளித்
தகடுபொதிந்துபடுத்திழைத்ததன்மைபோன்றுதயங்குமே. 66
1143 வருங்காலாற்றின்மருங்கெல்லாமைகோடுறழுந்தழைமேனித்
திருகுகொட்டுப்பாரமடிச்செங்கண்மேதிபொழிதீம்பால்
முருகுமலர்ப்பூங்கோடுழுதுமுழுவெண்மதியினுடல்கிழியப்
பெருகிவழியாரமுதோடுமயங்குமொருசார்பெருமுன்றில். 67
1144 முழைக்குன்றிடைக்கோளரியுகிரியின்முளையாலுறுகண்டூதியுறா
திழைக்கமோட்டுவெரிந்காட்டினெரிகண்முகிழ்த்துநாலவிட்ட
தழைக்குங்குழைகாற்றெறிசெவியதந்தாவளத்தின்பிணருருவப்
புழைக்கையேறிப்பொன்னூசற்கொளுமவ்வரிமாண்பூங்குருளை 68
1145 உரையிற்கூடாமேதகுசீர்யோகக்கிழவர்முறைபயிற்றும்
கரையிற்றுளமாமறையோதைசெவிவாய்மடுத்துக்கன்றொடும்போந்
திரையிற்கண்ணாதுருகியவானினம்வெஞ்சினவேரெறிந்தவர்தம்
புரையுட்டொறும்பான்மணிச்சிரகவிளிம்புதுளும்பப்பொழியுமே. 69
1146 எறிகொள்வடந்தைசுழன்றாடவீர்ங்கொண்மூநின்றயலாடப்
பொறிகொள்கலபப்பிணிமுகங்கூத்தாடல்புகன்றென்புரைவிடங்கால்
செறிமுள்ளெயிற்றுநெட்டுடல்வாளரவமாடுந்தெறுஞ்சுடிகை
மறியுநிழற்கட்சீறெலிபாய்ந்தாடுந்தடஞ்சார்மாடெல்லாம் 70
1147 மெய்தூங்கழலோன்வழிபடல்போலரும்பலாசின்மிடைந்தலர்ந்த
நெய்தூங்கடர்ப்பூஞ்செம்மலுகுநெடுங்கல்விடர்வாய்முரட்கடுவன்
கய்தூஞ்சுனைநீர்பெய்தேனின்கணமேற்றூவியிறால்பொதிந்த
பெய்தேன்கெடச்சூளில்லான்போல்வினையேயிழைத்துப்பிழைத்திடுமால். 71
1148 ஒழுங்கிற்சிறந்தோருழைப்பல்லாண்டுறநட்டாலும்புலனிலர்தம்
மழுங்கிக்கிடந்ததிண்ணறிவுநுண்டுகொல்லோவண்பளிக்கின்
எழுங்கிற்பாறைநிழனாறவேதிலேறென்றெதிரளித்துக்
கொழுங்கட்சுடர்கான்றடிநிலத்தைக்குரத்தாற்கிளைக்குங்கொல்லேறு. 72
1149 துருவியோடுமழைப்படலஞ்சூழவோடும்புல்லொடுமான்
மருவியோடுநுதற்சூட்டுமாலைபோலக்குவட்டினிழிந்
தருவியோடும்பருவரைபோலானேறோடுமேனன்மிசைக்
குருவியோடும்வயவேழங்குழியவோடும்வழியெல்லாம். 73
1150 விரைப்பைந்துணர்தோய்மரனிடத்தீவிளிசால்விரிபூம்பொழிறோறும்
கரைக்குங்கண்ணீரொடுந்துரியங்கடந்தவெளியிற்கருத்தொடுங்கி
இரைக்குஞ்செயல்போதெழுதும்விளக்கெனலாயசைவற்றிருப்பவர்மேல்
உரைக்குமுழுவைதனைத்தெருட்டுமுயாந்தோர்கரம்போல்வியன்காந்தள். 74
1151 ஓடுமதிமேலுரிஞியகோடுகுத்தவமுதுமுட்பலவின்
கோடுகுனியுங்குடங்கனிவீழ்ந்தழிதீஞ்சாறுங்கோரண்டத்
தாடுமலர்வாயிலங்குமிறாலழிதேனொழுகியாறிழுக்காப்
பீடுதருமாமுனிவருக்குமவ்வாறிழுக்கும்பெரிதாக. 75
1152 விண்வாயெழுந்தமின்னலெனவிருகுன்றேந்திவியன்கீதம்
பண்வாய்மிழற்றச்சுடர்ப்பவளவல்லியார்த்தபசும்பலகைக்
கண்வாயெழிற்சூரர்மகளிரூசலாடக்கவின்றருவ
தண்வாய்நறவமலர்கொழிக்குந்தடமென்சினைச்சந்தனப்பொதும்பர்.76
1153 மூன்றுபுவியுமுன்றிலிடையுய்ப்பார்முதுமாமறைக்கொடிகள்
ஊன்றிவளருந்தருவனையாருறங்காதுறங்கும்யோகுடையார்
சான்றபனுவலாட்டிதனிக்கிழவன்வியக்குந்தவக்கிழவர்
ஆன்றமுதுதாபதப்பள்ளியலகில்லனவாண்டுளதம்மா. 77
1154 விடங்கூர்தொளைமுள்ளெயிற்றுமணிவெஞ்சூட்டரவமீக்கிடந்து
தடங்கூர்கமலத்தவட்புணர்ந்துதழல்வாய்நேமியுருட்டியகல்
இடங்கூர்ந்தளித்தோனவனளித்தோன்முதலோர்பதமுமிகழ்ந்திவர்பால்
கடன்கூர்ந்தேவற்றுறைபிழையாதொழுகுமாணர்களும்பலரால். 78
1155 விரிக்குங்கமலாசனத்திருந்துவிழியைக்கொடிமூக்கிறுதிநிறீஇப்
பரிக்குந்தொடர்மார்பெதிரேறப்பண்டியாழாதுயராது
தரிக்கும்படிதோளுயரநகைத்தரளம்பிரியாமூலவொளி
தெரிக்கின்றவனைத்தெரியோகத்திறத்தினவரும்வரம்பிலரே. 79
1156 தென்பால்வடபான்மேல்கீழ்பால்சிகைநாவளைக்குஞ்சுடர்நாப்பண்
இன்பாலகந்தைக்கிழங்கையகழ்ந்தெறிந்துபனிக்கோட்டிமயவரை
மின்பாலவனையுளத்திருத்திவெய்யோனிடைக்கட்புலனமைத்துத்
தன்பாலூசிநுதிக்கணின்றுதவமாற்றுநரும்பலராங்கே. 80
1157 அகனும்புறனும்புனிதமுறவாறைந்தடக்கியனற்கடமை
தகநன்கியற்றிநறுந்தூமந்தாமந்திருமஞ்சனமீட்டிப்
பகலுந்துணர்வான்மாயன்வலிப்பருகுங்கணிச்சிவானவனைப்
புகலும்பூசைத்தொண்டுபுரிகிரியையோரும்பொலிந்தனரே. 81
1158 எடுத்தபொருளுக்கேற்றகடாவடுத்துவிடைகொண்டதைவிடுத்துத்
தடுத்தவழிநின்றருட்குரவன்குறிப்பானுணர்ந்துசைவநெறிக்
கடுத்தமேற்கோளிறைவனடியகத்திலிருத்தியவனருளே
மடுத்துச்சிவநூன்முறைபயிலவல்லார்பல்லார்குழுமினரால். 82
1159 பாலரனையவைம்பொறியும்படுக்கும்படையர்சுருக்கணிந்த
கோலருயிர்கட்குயிராகிக்குன்றாதொழுகுங்குணக்குன்றர்
சீலரெவற்றுஞ்செறியாதுசெறிந்தோனடிக்கேபிறிந்தறியா
மாலர்முத்திமுற்றத்தர்வைகும்வரையின்வளனீதால். 83
1160 குழைக்குங்கோட்டுநெல்லியொன்றக்குடுமிநடுவட்பொலிந்ததத
னுழைக்குஞ்சரவீருரியான்றொண்டுடையார்துவன்றபழமறைநூல்
தழைக்குமுதலாய்மாமனுக்கட்டடமென்கிளையாயாகமங்கள்
இழைக்குமிலையாயருட்டுணராயிகவாமுத்திக்கனிபழுத்தே. 84
1162 அன்னகடவுட்டருமூலத்தளிநீர்ப்பொன்னிதனையிறக்கித்
தென்னன்பெருநாட்டளிதூங்குந்தென்றற்குழவிநடைபயிலும்
பொன்னங்குவட்டுப்பொதியவரைபுக்கானுழுந்தாழ்புனலாக
முன்னங்கடலேழையுமுண்டமுதுமாதவத்துக்குடமுனிவன்.85
1162 இனையகடவுண்முனியளிப்பவீர்ந்தண்பொன்னியிருவகைத்தாய்க்
கனைநீருலகிற்சிறந்ததெனக்கலைதேர்சூதனெனுமேலோன்
வனைநீர்க்காந்தபுராணத்துவருசங்கரசங்கிதைசொன்ன
வினைதீர்கதையீங்கிதைச்சூதன்வேணிமுனிவர்க்குரைத்தனனால்.
(21 - ஆவது. கழுமலநதிவரவுரைத்தவத்தியாயம்முற்றிற்று.)
ஆக திருவிருத்தம் - 1162.
-----------------------------
1163 குலைவிரிகுடக்காய்த்தெங்கின்கூரிலையெனவெவ்வேறு
தலைவிரிந்தளிக்குந்தெய்வத்தண்கழுமலையாறுற்ற
நிலையிதுவாகுமிவ்வூர்நிமலனைமுருகன்போற்றி
மலைவிரியுபதேசங்கொள்வண்ணமும்பகரலுற்றாம்.1
1164 போழுலாந்திங்கட்கண்ணிப்புரிசடைமுனிவன்சோதி
வீழுலாங்கயிலைக்குன்றின்விரிந்ததென்றிசையினூடே
சூழுலாமருவிமாலைதுவன்றியதடமென்கோட்டுக்
கேழுலாங்கடவுட்டேவகிரியுளதொன்றுமாதோ.2
1165 அக்கிரிதன்னிலெம்மானருளினாலொருமுந்நான்கு
கைக்குமரனுக்குமுந்நூற்கடிமணமுடித்துவெங்கோல்
திக்கிரிதரச்செய்சூரன்றெறுபடைக்குடைந்தமேனி
மைக்கிரியனையானாதிவானவர்க்கிரங்கிவள்ளல். 3
1166 கவலருமறைகள்பூத்தகனிமலர்ந்தருளிக்கோடி
திவளொளிப்பரிதிமேனிச்சேட்டிளங்குகனைநோக்கித்
தவலருந்திருவேஞானத்தனியிளங்குன்றேவானோர்
அவலவேரரிவான்சூரனாயல்வேரரிவாயென்று. 4
1167 நொறில்வயப்புரவிபூண்டநுகம்படுதரங்கத்திண்டேர்
பொறிவழிச்சிங்கனாதிபொருந்துநூற்றெண்மர்தேர்ச்சி
செறிமதிவீரவாகுமுதலியதுணைவர்செந்தீ
எறிமயிர்க்குறுந்தாட்பூதமிரட்டியாயிரத்தவெள்ளம். 5
1168 அசனியேறலறத்தாக்கியங்கையிற்பிசைந்துநூறும்
வசையறுமாற்றலொன்பானிலக்கவாளுழவரோடும்
திசைமுகங்கமழுந்தெய்வச்செச்சையந்தெரியலானுக்
கிசையுறவளித்துவெவ்வேறெரிமுகப்படையுநல்கி. 6
1169 ஓதைமாற்றியவண்டாடுருளநறுங்கடப்பந்தாரோய்
ஈதெலாங்கொடுநீவெஞ்சூரிகறடிந்தெறிகவென்னாக்
கீதயாழ்மருட்டுந்தீஞ்சொற்கெண்டையந்தடங்கட்பேதை
மாதர்பாலொருவனீயமற்றவனிச்சைபூண்டே. 7
1170 குலிசவேலிறைவனாதிகுண்டலவாணர்தத்தம்
வலனுறுமிருக்கையேறமாமணியிரதமேறித்
தொலைவறுகடலந்தானைசூழ்வரத்தென்பாலென்பர்
பலனுறவினிதுசென்றான்பன்னிருகரத்துப்புத்தேள். 8
1171 பொற்பமர்கடுக்கைமாலைப்புண்ணியனண்ணுந்தானம்
பற்பலவொடுங்கேதாரபனிவரையிறைஞ்சிவேதச்
சொற்பதங்கடந்தோன்வேணித்துறையினின்றிறங்குகங்கை
அற்புதங்கிளருங்காசியமலனையலர்கொண்டேத்தி. 9
1172 வேறு
குளிர்தூங்கருவித்திருச்சயிலங்குறைவில்விருப்பாக்கமும்பரவித்
தெளிநீரேறிபொன்முகலிநதித்திருக்காளத்திவரைபோற்றி
வினியாவொருதன்மனக்கியன்றவிரிவேங்கடமால்வரைநோக்கிக்
கனியாலூர்த்ததாண்டவஞ்செய்கடவுளாலங்காடெய்தி. 10
1173 முன்மாமறைகடேடறியமூலச்சுடராமொருமுதல்வி
நன்மாவடிக்கீழுறைகரஞ்சிநகர்வாழொருவனடிபோற்றிச்
சொன்மாசகற்றுங்கார்த்திகைநாட்சுடரோங்கியமால்வரைதாழ்ந்து
பன்மாதவர்க்குமுத்திநெறிபயக்குமுதுகுன்றினைத்தொழுது. 11
1174 காரானந்தமருஞ்சோதிக்களத்தினிடத்தன்மணிக்குழையன்
பேரானந்தமணிமன்றிற்பெருமானிருதாண்மலர்போற்றி
நீராமண்ணிப்பெருநதிக்குநிறைகாவிரிக்குநடுவணெனக்
காராவமுதனவனுறையுமந்தண்காழிநகரணைந்தான். 12
1175 வீரந்தருபூணெழின்முருகன்வேணுபுரத்தைக்காணலொடும்
பாரந்தருதிண்புயத்துமிடற்பானுகோபற்பயந்தவெய்யோன்
வாரந்தருமென்பகைவரவைவழுத்திலாயென்றிழித்தென்னைக்
கோரந்தருமென்றொளிப்பான்போற்குடபாலொளித்தானடல்வெய்யோன். 13
1176 உரிமைதாதாயவுயிர்ப்புடைநாணுடையாளன்றேகடலீன்றாள்
*மருகற்காணூமடற்கதவமறைத்தாங்கெனத்தாமரைமுகிழ்ப்பத்
திருவுக்கினியவுயிர்ப்பாங்கிசெல்வாவருகவருகவெனா
அருமைக்கனிவாய்திறந்தழைத்தாங்கலார்ந்ததாலோவரக்காம்பல. 14
1177 குமுதம்விரியக்கதிர்விரியுங்குளிர்வெண்மதியென்றுலகுதொழும்
அமிழ்தமெழுமுன்விடமெழுந்தாங்கனையவிருளுமாரமுதத்
திமிதமிறைத்தாங்குடுக்கணமுந்தெள்ளாரமுதமெனநிலவும்
இமிழ்தெண்டிரைநீரொலிவேலியீர்ங்கண்ஞாலத்தெழுந்தனவே. 15
1178 தொலையாவமணப்பேரிருளைத்தொலைத்தபூதிசாதனம்போல்
அலையாருலகத்திருணூறியலர்வெண்ணிலவந்தலைகொழிப்பக்
கலைதேர்காழிக்கவுணியர்கோன்கடவுண்முருகனென்னமலைச்
சிலையானன்பர்மாநேசச்செழியனானகடவுளர்கோன். 16
1179 கடல்வாய்முளைத்தசுதைத்திங்கட்கற்றைநிலவஞ்சுற்றியபின்
மிடல்வேன்முருகற்கிடனாகமெய்ம்மைக்கடவுட்கம்மியர்கோன்
சுடர்மாளிகைவிண்முகடளவித்தொடுதோரணத்தினிழல்பரப்பும்
வடமாமறுகிற்படரொளிகான்மணியாலமொன்றணிசெய்தான். 17
1180 இருள்சீத்தொளிகான்மணித்தசும்பினிமைக்கும்பசும்பொன்னெயில்வளைத்துக்
குருமாமணித்தூணிரைபரித்தகோட்டநடுவண்மோட்டரிமான்
தருமர்தனமேலுருள்கடப்பந்தாரோனிருப்பவார்கழற்காற்
புருகூதனும்விட்புலவோரும்புறஞ்சூழகம்புக்குறைந்தாரால். 18
1181 உறைந்தார்பலரிற்கிம்புரிக்கோட்டொருவெள்ளயிராவதப்பாகன்
அறந்தாழ்சூரன்கொடுங்கோலாலலையார்பழனக்கழுமலத்துள்
புறந்தாழ்கூந்தற்சசிமடந்தைபுனைமாணிழைகண்முனைநாளில்
சிறந்தோருழைவைத்திருந்தவெலாந்தெரிந்தானுருகிப்பரிந்தானே. 19
1182 பரிந்தானுரிமைப்பெருந்தேவிபணைமென்முலைமேற்றணியாமால்
புரிந்தான்விரகக்கனல்கனற்றப்பொரிந்தான்கன்னற்பொழுதுகமாய்ப்
பிரிந்தானொருபெண்சசிக்காகப்பெருவெண்சசியின்கதிருருப்பக்
கரிந்தான்கங்குற்பெரும்புணரிகழித்தான்கதிரோன்விழித்தானே.20
1183 குவளைக்களத்தன்கண்வரலாற்கோதாடசுரப்பகைதெறலால்
அவனிக்காறுதலையுறலாலம்போருகக்கண்ணனைவிடலால்
தவருக்கருண்முன்னாமுன்னாலுகையாற்றாவில்பூதமகிழ்வரலால்
உவனித்தனிவேன்முருகனெனவுதித்தான்கதிரோனுத்தலுமே. 21
1184 மாலைக்கவிகைவாசவனும்வானுளோருமுனிவரரும்
சோலைக்கவிகைநிழல்பரப்பிச்சூழுங்கழனிக்காழிபுரத்
தாலைச்சுவைநேர்கழுமலப்பேரந்தண்பொன்னிகுடைந்தாடிக்
காலைக்கடவகடனிறுத்துக்கடம்பன்றுணைத்தாளிடம்பணிந்தார். 22
1185 நடக்குங்காலமிதிற்காந்தணறுமென்குஞ்சித்திருமுருகன்
சுடர்ச்செஞ்சுடரோனெயிறுகுத்ததொல்லைக்காழிவல்லவன்மேல்
கிடக்குங்கருத்தால்வழிபடற்குக்கேழிலொருதன்கோயின்முன்னே
முடக்குங்கொடித்தெண்டிரைபுரட்டுமுதுநீர்த்தடமொன்றதுகண்டான். 23
1186 கண்டதடத்துக்கங்கைமுதற்கடவுணதிகளெனைப்பலவும்
மண்டவிருத்திமலர்க்கரத்தான்மணிநீரேந்திப்பணிமாலை
அண்டர்பெருமான்பிரமன்முடியணிந்தபெருமான்பழமறைநூல்
விண்டபெருமான்முடிக்காட்டிவெட்சிப்பெருமானர்ச்சித்தான். 24
1187 தொண்டால்வழிபாடிழைத்தலர்தூஉய்ச்சுடரேயிடர்தீரரு மருந்தே
பண்டாரணநூல்விரித்ததனிப்பவளமணியேபணிவிலர்பால்
அண்டாவொளியேயறிவிலெனாலறியாவறிவேயெனைப்புரந்த
தண்டாவமுதேவேணுபுரித்தலைவாவெனமுன்பணிசெய்தான். 25
1188 உண்ணீருருகநெக்குநெக்குள்ளுடைந்துகுழைந்துதரும்புளகம்
கண்ணீராறாயுள்ளமலர்க்கண்ணீராறாய்க்கரைந்தவன்முன்
பண்ணீர்க்குதலைக்கிளியொடுமான்பரிமேலிவர்ந்துசண்பைவளர்
முண்ணீரெயிற்றுப்பணிமாலைமூன்றுவிழியான்ரோன்றினனால்.26
1189 கனிவாய்மகனையாறுமுகக்கருணைக்கடலைக்கழற்றுணைமேல்
பனிநாண்மலர்தூஉய்ப்பணிவானைப்பணைத்தோளழுந்தவணைத்தேந்தி
நனிதரங்கொண்டுன்பூசைநயந்தேநயந்தேநின்னுளத்தில்
இனிவேண்டுவதென்னென்றருளியிமயச்சிலைவாங்கியமுதல்வன். 27
1190 பாலம்புனைவெண்பொடிபுனைந்துபவளச்செவியிலுவகையினான்
மூலம்படுமோரைம்பதமுமுறையாலோதிமுறைதணந்தோர்
காலம்பருகும்பாசுபதக்கணையுங்கதிர்க்கூரிலைவேலும்
ஆலம்பொருவெம்படைபலவுமளித்தான்கடுக்கையளித்தாரான். 28
1191 தெவ்வுப்புலத்தைவேரரிந்துசேண்வாயமரர்மாணிழந்த
கவ்வைச்சிறைமீட்டெய்துகெனக்காளிபுரியாளுடையபிரான்
கொவ்வைக்கனிவாய்மகற்கருளிக்கோயில்புகலுஞாயிறெனச்
செவ்விக்கதிர்வேலிளங்குமரன்சென்றானயல்போய்வென்றானே.29
1192 அண்டமனைத்துந்தனிக்கவிகையளித்தவசுரன்முரணழிய
அண்டவாணர்தத்தநிலையடையக்கடவுண்முருகனுக்கும்
அண்டமளிக்குநிலைமைபெறவருட்செய்ததுவெங்குருப்பதிவாழ்
அண்டர்பெருமானருளென்றாலதன்சீர்புகல்வதெவன்கண்டீர்.30
1193 முரணிக்கவைமாமுதறடிந்தமுருகக்கடவுண்முன்னமைத்த
உரவுத்தடந்தெள்ளாரமுதையுதகமெனுங்காற்பதகமெய்யே
குரவுக்கடப்பந்தாரொருவன்குழித்தலாற்றன்மகனளித்த
வரமிக்குயர்பூந்தடமிதெனமந்தாகினிப்பெண்மருவலினால். 31
1194 பருக்கைக்கவளக்களிறட்டபகவன்மதலைதெளியமொழி
குருக்கட்பெரியோன்றடமென்றாற்கூறுமாறென்குருகினங்கள்
செருக்கிப்படிந்துவிதிர்த்தசிறைத்திவலைபடினும்புள்விலங்கு
விருக்கக்குலங்கண்மானுடங்கள்வினைவெம்பவத்தாலினையாவே. 32
1195 தேளார்மதியின்முழுமதியைத்தீர்ந்தநாள்களோராறும்
வாளார்துலைகட்டெரிசமொழிமற்றைநாள்களவையாறும்
தாளார்மலர்ப்பூந்தடம்படிந்துதக்கவிரதம்புரிபவரே
தோளாமணிப்பொற்கந்தனுறைதொல்லையுலகின்பயன்றுய்ப்பார். 33
1196 மதியந்தொறுமிவ்வறுநாளும்வந்துபடிந்துமுனைமழுவாள்
அதிபன்மனுவைவிதிமுறையாலறைந்தோர்புறந்தாழ்கருங்கூந்தல்
பிதிருந்திதலைமுலைமுளரிப்பெண்ணாரமுதின்கண்ணருள்கூர்
நிதியம்படைத்துமறுமையினுநிலைசேர்முத்தித்தலைவாழ்வார். 34
1197 மீனமிறுவாய்மதிதோறும்விரிகார்த்திகைமீனதிகமின்றி
ஊனமறுகார்த்திகைமாதத்தொருகார்த்திகைமீனவற்றதிகம்
தீனமறுகார்த்திகைமதியுஞ்சிங்கமதியுந்திங்களெனும்
மானமலிநாளிக்கமலவாவிபடிவார்சீவன்முத்தர். 35
1198 என்னமலர்ப்பூந்தடத்தியல்புமிறைவேன்முருகனெந்தைபிரான்
சொன்னமனுவால்வென்றதுவுஞ்சூதனோர்ந்துதுகளெறிந்த
நன்னர்மறைதேர்முனிவரர்க்குநலஞ்சேர்காந்தபுராணத்தில்
பன்னவரியசங்கரசங்கிதையிலெடுத்துப்பகர்ந்ததனால். 36
(22-வது. குமரவேளுபதேசம்பெற்றவத்தியாயம் முற்றிற்று.)
ஆக திருவிருத்தம்-1198.
---------------------------
1199 கான்மலிகடப்பந்தாரினாற்குவந்துகாழிகாவலன்றிருவருள்செய்
மான்மியமுணர்ந்தேஞானசம்பந்தவள்ளலாய்முருகன்வந்துதித்த
பான்மையுண்டென்றாயனையதும்விரித்துப்பகர்கெனமுனிவரர்கேட்ப
மேன்மைசால்சூதன்வினவரும்பொருளீதென்றுபின்விரிவுறவிளம்பும். 1
1200 ஆன்றதொல்கேள்வியறிஞரிற்போதாயனமுனிசூத்திரத்தொழுகி
ஏன்றமாதவத்தாலுயர்சிவபாதவிரதயன்காழிமாநகர்வாழ்
ஊன்றுமாமறையோனருமகவிருப்பாலுலகளித்தவன்றடத்தொருசார்
தோன்றவாயயில்வேன்முருகனைப்பெறுவான்றோய்தவம்புரிந்தனனெடுநாள். 2
1201 இத்தகைநெறிசால்கவுணியர்தலைவனியறவம்புரியுநாளநாதி
முத்தனதுணர்ந்துமூவிருகமலமுகவனைநோக்கிமண்ணிடைநம்
பத்தரைமறையைப்பனுவலையிகழும்படிறரைவல்லமணரைவெம்
புத்தரைத்தடிந்துசைவவைதிகவெண்பூதிசாதனமுறைநாட்டி. 3
1202 தலந்தொழப்பதினாறாயிரம்பதிகத்தண்டமிழ்மாலிகைசாத்தும்
பெலங்கொள்காரணமுண்டாதலினுலகிற்பிறந்திவண்வருகெனமகிழ்கூர்ந்
திலங்குநீர்வேணியண்ணலாங்கருளியெண்ணிரண்டாயிரங்கணத்தை
நலங்கிளரடியராகவென்றேவநாமவேன்முருகனுநயந்தே. 4
1203 இன்னணமிழைத்திங்கெய்துவெனெனலுமிறைதிருவுளமகிழ்பூப்பக்
கன்னலங்கிளவிக்கவுரியண்மகிழ்ந்துகளிவரவுச்சிமோந்திறைவன்
சொன்னவாறுதித்ததலத்தியான்போந்துதுணைமுலையமுதளிக்குவெனென்
றுன்னருங்களியால்விடுப்பவேலரசுமுயர்கணத்தலைவரைநோக்கா. 5
1204 ஆதியங்கடவுளருள்வழிபதினாறாயிரவீருநீர்சூழ்ந்த
மேதினித்தலங்கடொறுமவதரித்துமேவுமென்றேவிவெண்கயிலைப்
பூதலமதனிற்காழிமாநகரிற்புண்டரீகன்றடத்தொருசார்
மாதவம்புரிவோன்முன்னிளங்கதிர்போன்மதலையாய்வந்தனன்கந்தன். 6
1205 நீங்கருந்தவத்தோன்மகவுகண்டுவந்துநிரப்பினன்கடவுண்மாமணிபெற்
றோங்கினனென்னவியப்பமீதூரவுயர்வடமீனனகற்பின்
மாங்குயிற்கிளவிப்பகவதியெனும்பேர்மனைவிபாலெடுத்தினிதளிப்பப்
பூங்குழல்களிகூர்ந்துச்சிமோந்தினியபுதல்வனைக்கொடுமனைபுகுந்தாள். 7
1206 பாணிமூவுலகும்புதையமேன்மிதந்துபல்லுயிர்புரக்குமோர்குடிலைத்
தோணியாளுடையான்மேனியஞ்சுடராய்த்துலங்கவந்துதித்தமாமகற்கு
பேணியதிருநாளையிரண்டினுஞ்செய்பெருங்கடனாற்றிநீறணிந்து
மானியல்பருவந்தொறுமழகதிர்போல்வளர்ந்துமூவாண்டெனவருநாள். 8
1207 குலப்பெருந்தாதைமலர்ப்பெருங்கிழவன்குளிர்தடம்படிகுவான்செலுங்கால்
தலத்துறமழலைக்கிண்கிணிமிழற்றுந்தாள்கொடுநடந்துறுமகவை
மலர்க்கணால்வெகுண்டுமுடன்வரக்கொடுபோய்மணித்தடங்கரையினினிறுவிப்
புலப்பகையெறிந்தோன்புனற்படிந்தாடப்புகுதலுங்குமுதவாய்ப்புதல்வன். 9
1208 இளம்பசிகூர்ந்தாரெனவுளமுருகியிரங்கலும்வரம்பிலாமறைநூல்
அளந்தறியாதானணங்கொடுவிடைமேலாங்கெழுந்தருளிநின்மகற்கு
விளங்கிழாய்முலைப்பாலருளெனக்கனகவில்லுமிழ்வள்ளமேன்ஞான
வளங்கொள்பாலருத்திமலர்க்கணீர்துடைத்தான்மலர்தலையுலகமீன்றாள். 10
1209 துடைத்தலுஞானபோனகமுண்டதோன்றலாரான்றபல்கலைகள்
இடைப்புணர்ஞானந்தோய்ந்துதோய்வின்றியெவ்வுயிர்க்கண்ணுமோர்நிலையே
படைத்தளித்தழிக்குநிறைபரம்பொருளுட்படருமெய்ஞ்ஞானமுமாங்கே
கிடைத்தனரொருதன்றாதையுமாங்கேகிட்டினார்சிறிதுளம்வெகுண்டு. 11
1210 யார்கொலோவிதுபாலளித்தனரெனலுமின்றளிர்மணிவிரற்சுட்டித்
சீர்செய்தோடுடையசெவியனென்றெடுத்துச்செங்கண்வெள்ளேற்றினிலிவர்ந்த
ஓர்பொருட்கடையாளம்பலவழுத்தியொழிந்தபேரருளுரைத்திவனே
ஏர்பெறுமிதுவேபொருளெனக்காட்டியீர்ந்lதமிழ்ப்பதிகமொன்றிசைத்தார். 12
1211 பதிகமுமிமையோர்பொழிமலர்மழையும்பஞ்சதுந்துபியொலியதிர்ப்பும்
மதிபுனைவரதனுமையொடும்போந்தவண்ணமுந்தந்தைகண்டிரங்க
எதிரில்பொற்றோணியிருமுதுகுரவரிணையடிபோய்ப்பணிந்தென்னில்
குதுகுதுப்பொடுந்தன்றிருமனைபுகுந்தார்குலமறைதமிழினில்வடித்தார். 13
1212 துவரெறிகனிவாய்கழைபொருதடந்தோட்சுந்தரியளித்தமெய்ஞ்ஞான
நவையறுதீம்பாலருந்தியவாற்றான்ஞானசம்பந்தரானவர்தாம்
புவிபுகழ்ந்தெடுப்பவணியகோலக்காப்புனிதன்மேன்மடையில்வாளைகளென்
றுவமைதீர்பதிகம்புகன்றுகைம்மலராலொத்தினார்முத்தமிழ்விரகர். 14
1213 ஒத்தியோதுதலுமைந்தெழுத்தமைந்தவொளிசெய்பொற்றாளமெய்யருளால்
கைத்தலம்பெறலுமுமையொலிகொடுப்பக்கனிந்துபண்பாடுபுகாழி
முத்தன்மேற்பூவார்கொன்றையென்றலர்சொன்முருகவிர்மாலைசெய்துயிர்த்தாய்
உத்தமநகராந்திருநீனிவள்ளியுடன்வருந்தாதையோடிறைஞ்சி. 15
1214 காரைகள்கூகையென்றுமெய்யானைக்காட்டியபதிகமங்கிசைத்து
நாரைபாய்பழனத்தலைசயம்பேரூர்நற்றிருவலம்புரம்வளையூர்
தேரைவாய்ப்புனல்சூழ்பல்லவனீசமிவைதொறுஞ்சுவைத்தமிழேத்திப்
பிரரையாண்டளிப்பான்மண்புகாரென்றபாடல்சாய்க்காட்டினிற்போற்றி.16
1215 வேதவெண்காடுபணிந்துகண்காட்டுநுதலெனுந்திருமொழிவிளம்பி
ஓதநீண்முல்லைவாயில்வண்குருகாவூர்மயேந்திரப்பள்ளியோதி
நாதனான்மறைசூழ்காழியம்பதிக்கணண்ணுநாட்டிவவுயாழ்ப்பாணர்
காதல்சேர்பன்னியுடன்வரவவரைக்களித்தனர்கவுணியர்திலகர். 17
1216 புக்கிருவோருங்கீதயாழகத்துப்புகன்றதண்டமிழிசைபோற்ற
மைக்கருமிடற்றுத்தோணிநாயகன்றாண்மன்னருள்பூண்டுபொன்னெயில்சூழ்
திக்குறவளைக்குந்தில்லைமன்றிறைஞ்சத்தெள்ளலைசுருட்டுகொள்ளிடநீர்
அக்கரைநெற்றிக்கொண்டந்நகரடைந்தாரருந்தமிழ்ப்பொழிமுகிலனையார். 18
1217 மன்றுறைமூவாயிரவருங்களிப்பமாதுமைகாணநாதாந்தத்
தொன்றுமரீநந்தநாடகம்பரவியுவந்துகற்றாங்கெரியோம்பி
என்றுறவாழ்த்திவேட்களம்பாடியியல்கழிப்பாலையும்பழிச்சிச்
சென்றுபாணருக்குத்தில்லையந்தணரைத்தெரிந்தனர்முழுதிலுந்தெரிந்தார். 19
1218 பின்னருங்கனகமன்றுடையான்மேற்பெட்புறவாடினாய்நறுநெய்
என்னியற்பாடிநிவாக்கரையோடுமேழிசைச்சுருதியாழ்ப்பாணர்
முன்னுரையெருக்கத்தம்புலியோரைமொழிந்துபற்பலதலம்பணிந்து
கொன்னொடும்புரிசைமுதுகிரியணைந்தார்கொழுந்திலேவயிரமுற்றனையார்.20
1219 தேங்குநீர்வேணிக்குன்றவாணருக்குந்திருவிருக்குக்குறள்சாத்தி
வாங்குதூங்கானைமாடமும்புகழ்ந்துமாறனூர்வந்தபாலகர்தாழ்
பூங்கழல்வருந்தாதாரவெண்சிவிகைபுனைமணிக்கவிகைபொற்சின்னம்
ஆங்கவையளித்தாரறத்துறைக்கெந்தையீசனென்றாய்தமிழணிந்தார். 21
1220 மிளிர்சிவிகையிற்போந்தரத்துறைபழுவூர்விசயமங்கைப்பதிவைகா
3நளிர்புனற்சேய்ஞலூர்திருப்பனந்தாணண்ணுமோமாம்புலியூர்வாள்
கொளிநகர்கடம்பூர்நாரையூர்மிக்கோர்கொள்கருப்பறியலூரேத்தித்
துளிமுகிற்சோலைக்கழுமலமணைந்தார்துரியநீங்கியபொருளணைந்தார். 22
1221 தேவியிற்றோணியிறைவனைப்பரவித்திருமனைபுகுந்துபாணரைப்பாங்
கேவியன்புடைத்தாய்நீற்றணிபேணியிலங்குமுந்நூன்மணங்கண்டு
மேவுபன்மறையுமந்திரப்பரப்பும்விதிமுறைபுகன்றுவேதியருக்
கோவிலந்தியுண்மந்திரமெனும்பனுவலோதினாரோதுமுன்னுணர்ந்தார்.23
1222 அன்னநாளடுத்தநாவினுக்கரசோடளவளாயாங்கவரகல
இன்மொழிமாற்றுமாலைமாற்றெழுகூற்றிருக்கையீரடியின்மேல்வைப்பு
மன்மடக்கேகபாதநாலடிமேல்வைப்பிருக்குக்குறளிராகம்
பன்னுசக்கரமாற்றாதிகளோதிப்பாணர்பண்ணிசைப்பவைகியநாள். 24
1223 ஆரிலைச்சூலத்தாரழலாடியருந்தலம்பலதொழவருளால்
தேரியற்றாதையுடன்வரத்தரளச்சிவிகைபொற்கவிகைமுன்னிழற்றப்
பேரியற்பீலிபிறங்கொலியார்ப்பப்பெருந்திரைப்பொன்னியின்வடபால்
ஏரியவடியார்குழுவொடுமெழுந்தாரிறையுருக்க்காட்டுமாறெழுந்தார். 25
1224 பொடிப்புயன்வேளூர்நின்றியூர்நீடூர்போற்றுபுன்கூரொடுமண்ணிப்
படிக்கரைகொறுக்கைபுன்னியூருயர்பந்தணைநல்லூர்திருமணஞ்சேரி
கடிப்பொழிலெதிர்கொள்பாடிதொல்வேள்விக்குடிதிருக்கோடிகாக்கஞ்சை
எடுத்தமாந்துறைமங்கலக்குடிவியலூரிறைஞ்சிவண்டமிழ்தொடுத்திசைத்தார். 26
1225 மேலதுதேவன்குடியினின்மருந்துவேண்டிலென்றோதியின்னும்பர்
பாலலோசனன்மேலிடைமடக்கிசைத்துப்பஃறலம்பணிந்துவெண்களிற்றுத்
தோலுடையொருவன்வடகுரங்காடுதுறைபராய்வழுத்திவெவ்வேறு
சீலமார்தலமும்பழனமுமேத்தித்திருவையாறணைந்தனர்செல்வர். 27
1226 தலமதிற்புலனைந்தெனுந்தமிழ்கோடல்கோங்கமென்றொருதமிழ்சாற்றி
அலர்பெரும்புலியூரையனெய்த்தானமணிமழபாடிகண்டவ்வூர்
மலைவிலிக்கங்கையாரழலென்னாவாழ்த்துபுவைகியக்கானூர்த்
தொலைவிலிக்கிறைஞ்சியயல்வடகரைமாந்துறையணைந்தார்மறைத்துறையார்.28
1227 பணிவளர்புயத்தானன்பிலாலந்தண்டுறைபராய்ப்பாச்சிலாச்சிராமத்
திணையுறுகொல்லிமழவன்மாமகடனிடரறிந்தெம்பிரான்றிருமுன்
மணிவளர்கண்டர்மங்கையைவாடமயல்செய்வதோவிவர்மாண்பென்
றணிவளைக்கிரங்கிமுயலகற்றீர்த்தாரருளினாற்புவியிடர்தீர்த்தார். 29
1228 அயற்பலதலம்பைஞ்ஞீலியீங்கோயிலங்குறீஇக்கொங்கிலுள்ளனவாம்
உயற்றரும்பொன்னித்தென்கரைச்செங்குன்றூர்நணாப்பதிபணிந்துறைநாள்
வியக்குமவ்வினைக்கிவ்வினையெனப்பனிநோய்வீட்டிநீள்கொடுமுடியேத்தி
வயப்பதிவெஞ்சமாக்கூடல்கருவூர்மாணிக்கமலைபராய்த்துறையே. 30
1229 துரிசறுமாலந்துறையொடுதிருச்செந்துறைகொள்கற்குடிசிராப்பள்ளி
சரியிலானைக்காத்திருமயேந்திரம்பொற்றவத்துறைபாற்றுறையெறும்பீச்
சுரநெடுங்களங்காட்டுப்பள்ளியாலம்பொழிலொடுதுலங்குபூந்துருத்தித்
திருமலிகண்டியூர்சோற்றுத்துறைமெய்த்திருவேதிக்குடிவெண்ணிப்பதியே. 31
1230 பிறபலதலங்கள்சக்கரப்பள்ளிபிள்ளைமங்கைப்பதியாலந்
துறையொடுதிருச்சேலூர்திருப்பாலைத்துறைநல்லூர்பற்பலவேத்தி
இறைகருகாவூரினிலத்தர்வண்ணமென்றிசைத்தவளிவணல்லூர்
உறுதிருப்பருதிநியமமென்பூவனூரொடாவூர்நல்லூரேத்தி. 32
1231 திருவலஞ்சுழிமேற்பளியொடுசத்திமுத்தமுமுத்தமிழ்சேர்த்தி
இருமுதுவேனிற்பருவநாளடுத்தவின்னல்கண்டண்ணல்பட்டீசர்
பொருவெயிறணித்துவிரிநிலாவெறிப்பப்பூதராலுய்த்தமுத்திழைத்த
அருமணிப்பந்தர்பெற்றுமேலவ்வூர்க்கருந்தமிழலங்கல்செய்தணிந்தார். 33
1232 வேறு.
பின்னர்வடதளியொடிரும்பூளையரதைப்பெரும்பாழிசெறைநாலூர்குடவாசற்சீர்,
அன்னநறையூர்புத்தூர்சிவபுரத்தோடாதிகுடமுக்குக்கீழ்க்கோட்டமெய்தி, நன்னரினெம்மிறையேயென்றுறுகாரோணநாகீசம்வாழ்த்தியிடைமருதூர்நண்ணிப்,
பன்னருமோடேகலனென்றிசைத்துத்தானம்பலபணிந்து குரங்காடுதுறையும்போற்றி. 34
1233 ஆவடுதண்டுறையினிடரினு மென்பாடலணிந்தமலனருளிய பொற்கிழியைவேள்வி,
மாவினைத்தந்தையர்க்குதவித் திருக்கோழம்பம்பை கன்மாடக் கோயினல்லசெம்பொற்,
றூவியழுந்தூர்பல கண்டிறைஞ்சிவாழத்தித் துருத்திநகர்பர்விவரைத் தலையென்றோதி,
மூவனகர் @திருமயிலைச் செம்பொற்பள்ளிமுளைத்தவிளநகர்கண்டார் முழுதுங்கண்டார்.
@திருமயிலை - மாயூரநகர் 35
1234
குளிர்பறியலூரொடு மற்றுளவும் வேட்டக்குடியுமடுத்திசை மாலைதொடுத்துச்சோலை,
வளர்தருமபுரம்பணிந்தியாழ் முரிமாதர்மடப்பிடி யென்றெடுத்தோதிநள்ளாறெய்தி,
மிளிர்போகமார்த்தவெனப் புகழ்ந்துதானம் வேறுமுறைவணங்கியுயர் சாத்தமங்கை,
யளிநீலநக்கர்மனைய முதுங்கொண்டாரன்னைதிருநிலையழகிய முதமுண்டார், 36
1235 கிளக்குமதுதலத்தொடு நாகைக்காரோணங்கீழ்வேளு ரொடுபிறவுபணிந்துசெந்நெல்வளத்,
தடஞ்சூழ்மருகலிலோர்வணிகனாவிவரளரவபருகவ வன்மண்ககும்பேதை,
துளக்கெரியின்மெழு கெனவுள்ளுருகியாவி சோர்ந்தலறு மோதைசெவித்துணையினேறத்,
தளர்ச்சிதருமோவுடையா யிவளுக்கென்று சாற்றியளித்தாருயிரைத்தானம் பெற்றார். 37
1236 வடிநெடுங்கட்புகார் வணிகன்மகட்குமாவி வணிகனுக்கு மணமுடித்துத் திருச்செங்காட்டங்,
குடிபரவியங்கமும் வேதமுமென்றோதிக் குளிர்புகலூர் வர்த்தமானீசம் போற்றி,
யடிமுருகனார் மடம்புக்குழித் தென்னாரூரரசுவர வறிந்தவ்வூரணைகுவார்விற்,
குடிபணிந்து சாநாளென்றோதியா ரூரடைவோ மென்றிசத்திருக்குக் குறளுஞ்சாற்றி, 38
1237 பதியதனிலந்தமாயுலகென்றோதிப்பவனமாச் சேரடையாயென்று மேத்தி,
மதிமுடியானற்றலங்கள் பனையூர்சோலைவலி வலங்கோளிலிவாழ்த்திப் புகலூர்நண்ணி,
முதியகுறிகலந்தவிசையெனுநூற் சாற்றிமுருகனார் சிறுத்தொண்டர் நீலநக்கர்,
விதியொடவர் தமக்கருள் செய்தரசோடங்கண்மேவினாரயில் பரவவேதவாயார். 39
1238 புடைவயல் சூழம்பரமாகாளம் புல்குபொன்னிறமென்றறைந்து கடவூரிற் சார்ந்து,
சடையுடையாயென விளம்பி #மயானம்போற்றித் தகுகலையனாரமுதுண்டாக்கூரெயதி,
விடையுடையான் மீயச்சூர்பரம்புரத்திற்சார்ந்து வீழிமிழலையிலர சேரரடிறைஞ்சியர்ங்க,
ணுடையரையொடுசடையார் புனலென்றோதி யெரருதிலதைபேணு பெருந்துறைமெய்தி,
#மயானம் - திருக்கடவூர் மயானம் 40
1239 வாகீசரொடுமிழலையெய்திப் பன்னாள்வைகிய நாட்சிபுரமா சனங்கண்ணப்,
பாகூரின்னமுதூட்டிக் கனவிற்கண்டபடி தோணியழ்கனையத் தளியிற்கண்டு,
மாகாதன்மைம்மருபூங்குழலென்றோதி வறந்த சிறுவிலைநாளவ்வள்ளலீயந்த,
சேகார்பொற்காசு பெற்றுவாசி தீரச்செந்தமிழ் செய்தார்பசி நோய்தீரச்செய்தார். 41
1240 அவ்வழிவாஞ்சிய $மாலங்காடேவேளுரணிசாத்தங்குடியொடுதென்கரவீரஞ்சேர்,
செய்விளமர்பணிந்துதிருவாரூராறாய்த் திருக்காறாயிற்றேவூர்திருநெல்லிக்கா,
எவ்வமிகைச்சினந்திருத்தெங்கூர்கொள்ளிக்காடிசைகோட்டூர்வெண்டுறைதண்டலையுஞ்சோலை, மவ்வல்கமழ்திருக்களருமரசோடெய்திவாழ்த்தினார்திருவருட்பான்மணத்தவாயால். (42)
$ ஆலங்காடு - திருத்தலையாலங்காடு42
1241 மறைவனத்தின்மறையடைத்தமணிக்கபாடம்வாகீசர் திறக்கும்வழிவகுத்துமற்றை,
இறையவன்மேற்சதுரமறைஉஎன்றுபாடி யிணைக்கதவமடைத்தருளிவாய்முரீசர்,
நிறைகனவு தெளிந்தரசுசெல்லச்சென்று நிலவுதளிரிளவெனவோர்பதிகஞ்சாற்றிக், கறைமிடற்றார்மறைக்காட்டிலணைந்தார்யார்க்குங்காணாரைக்கண்டழுத கனிவாய்மைந்தர். 43
1242 ஆயமறைக்காட்டினில் வீற்றிருக்குமந்நாளணிபாண்டிநாடனைத்துமமண் பேய்கொண்டு, நோயடையக்கூன்வழுதிமருளக்கண்டுநுடங்கிடைமங்கையர்க்கரசியாருந்தேர்ச்சித்,
தூயவினைக்குலச்சிறையுமெந்நாடுற்றதுன்பமறுத்தின்பமிகச்சைவமோங்கத்,
தாயனையாயெழுந்தருள்க வென்றுதீட்டித்தமிழ்விரகரிணையடிக்கீழ்ச்சாரவிட்டார். 44
1243 விட்டதுகொண்டெழு மமயத்தரசு பொல்லாவிகட முடைப்பறிதலையரிழைக்குமாயை, மட்டலநன்னாளுமலவெனுங்கானன்மைவலங்கெழுவேயுறு தோளிபங்கனென்றே, இட்டதமிழியம்பிமுத்தின்சிவிகைமேற்கொண்டிலகுமணிக்குடைநிழற்றவடியாரீ*ண்டத், தொட்டமணிச்சின்னவொலிபோர்ப்பமுத்தின்சுடர்மணித்தண்பந்தனிழறுலங்கச்சென்றார். 45
1244 வருகோடிக்குழகர்கடிக்குளமிடும்பாவனமுசாத்தான மொடுகொடுங்குன்றேத்தித்,
திருவாலவாயுறுங்காலமைச்சர்போந்து சென்னிமிசைமுகிழ்த்தமலர்க்கரத்தராதி, இருபாதம்வணங்கலுநும்மரசியாருக்கின்பமோவெனவடிகளருளாலின்பம்,
ஒருவாதென்றகமகிழ்வுற்றெழுவார்க்கன்ப ருதுக்காணுமாலவாயென்னத்தாழ்ந்தார். 46
1245 அதுகணத்தவ்விருவர்பெயராலவாயாவதுமிதுவேயெனும்பதிகத்தமையப்போற்றி, மதுரைமறுகடைந்திருக்குக்குறளுஞ்சாற்றிமடத்திலெழுந்தருளிமதியமைச்சர்செய்த,
விதமலிசீருவந்திருப்பஞாயிறாதி வெங்கோளுநல்லவெனப்பகர்ந்தார்வெல்ல,
எதிரிருள்செய்தமணிருளையழிப்பான்போலவிரவியொளித்தனன்மடவோரினையசெய்வார். 47
1246 பன்னகமென்குருளையிடியொலிகேட்டென்னப்பரசமயகோளரியார்வந்தாரென்று,
சின்னவொலிதிசை போர்ப்பத்தலைகள் கீறிச்செவிதகர்ந்துதென்னவர்கோனோடுமெண்ணி, மன்னருமந்திரத்தழல்விட்டேறாதாகவயங்குசுடுதழற்கொடுபோய்மடத்திலுய்ப்பப், பன்னுமடியவர்க்குறுமோசொக்கேயித்தீபையவேசென்றுபாண்டியர்க்காகென்றார். 48
1247 என்றலுமீனவனுடலிலத்தீமேவவிதுவெதுப்பென்றமணர்கண்மந்திரங்களாலும், துன்றுபிரம்பாலுமயிற்பீலியாலுந்தொழுதுதுடைத்திடநெய்வார்சுடர்போற்பொங்கிக், கன்றுபிரம்பெரிந்துகரமெரிந்துபீலிகரிந்துசுடுநாறியயற்கண்ணுந்தாவிச், சென்றதருட்பிள்ளைசொல்லால்வந்ததீயைத்திர்க்கவந்ததெய்வதமுந்தீந்ததன்றே. 49
1248 உலகிருளையொழிக்குந்தானெழியப்பாயலுடையிருளையொழிப்பார்கண்டுவப்பான்போலச்,
சலதிமுகட்டினில் வெய்யோனுதிப்பத்தேமாந்தளிரழலிட்டெனவழுதி துயருங்காலை, அலைபொழிகண்ணரசியராலமைச்சரெய்தியருந்தமிழ்வித்தர்க்குரைப்பவஞ் சீர்வெப்பால், மலைபிணியுமமண்பிணியுந்தொலையக்காட்டுமாவுரியென்றிறைகோயில்வாழ்த்திப்போந்தார். 50
1249 போந்தளவிலரகரவென்றொலிவிண்போர்ப்பப் புதுநிலவுக்குடைநிழற்றச்சின்னமார்ப்ப, வேந்தனகம்புகுந்தரசன்முடிக்கட்பீடமேலெய்திவல்லமணக்குழுவையஞ்சும்,
பூந்தொடி முன்மானினேர் விழியென்றோதிப் புரவலர்க்கும்புனைபெயரிராறுபூண்டு, வாய்ந்தகழுமலமெம்மூரெனலுமன்னான்மனமமணர்மயக்கினைவிட்டொ*இயதன்றே. 51
1250 மொழிவழுதிப்பிள்ளையார்முகமும்பொல்லாமூகர்முகமும்பார்த்தென்னோய்தீர்ப்பார்க்கே,
வழியடியேனெனலுமிடப்புறங்கொண்டீனர்மாற்றியிடமந்திரமாவதுநீறென்றே,
கழுமலக்கோன் வலப்புறங்கொண்டின்னறீர்ப்பக்காணருமுத்தியுநரகுமமுதுநஞ்சும், தழுவினபோல்வலங்குளிர்செய்திடந்தீமூளச்சமணினத்தைவெகுண்டொழித்தான்றமிழ்சேர்நாடன். 52
1251 இடமருங்குந்தமிழ்விரகரருளானோய் தீர்ந்திறைமகனுமடிமைபுகவமணரெங்கட்,
கடவுள்வலிநுங் கடவுள்வலியுந்தீட்டிக் கனலிலிட்டுத்தேர்துமெனக்காழிவேந்தர், மடலவிழ்புத்தகம்பகுத்துபோகமார்த்தவண்பதிகமேந்தி நள்ளாற்றிறைமேலார்வம்,
உடையதளிரிளவளரென்றொருபா வேத்தியொள்ளெரியினடுவணிட்டாரொளிநீறிட்டார். 53
1252 இட்டவேடொளிபசியதாகப்பொல்லாவேடரிவண்டுகளாகத் தேரார்பின்னும்,
பட்டதிரையாற்றினிலிட்டறிதும் யாதும்பழுதுபடிற்கழுமுனையிற்படர்வோமென்ன,
ஒட்டலுமினவனொடு நீள்வைகைப்பேராற்றுறுகரையினின்றமணரோலைகீழ்பால், விட்டகலப்பிள்ளையார்வாழ்கவென்றுவிடுமொழிப்பாசுரமெதிர்நீர்விரைந்ததன்றே. 54
1253 அன்றுபுனலெதிரேறுமேடு கொள்வானமைச்சர்பரியேறிவண் பாசுரஞ்செல்லாறே, சென்றுழியாயிடைவன்னியெனும்பேரேற்றிச்சிவஞானப்பிள்ளையருளேறப்பாட,
நின்றதனையமைச்சர்கொண்டுகரையிலேறநிருபன்வியப்பேறவமண்கழுவிலேறக், கன்றுதலில்கன்னிநாடெல்லாநீற்றுக்காப்பொடுமைந்தெழுத்தேறிக்கலந்தவன்றே. 55
1254 கலந்தவழி முறாநிறுத்திப்பொற்கைபூண்ட கவுரியர்*மினிக்காளைக்காழிச்செல்வர்,
நலம்புனைந்துமுழுதிலும்பொன்னானானென்றுஞாலம்வியந்திடப் பாண்டியரசியாரோ,
டிலங்குமதியமைச்சனொடுவழுதிபோற்றவிறைவனமேநினைப்பதேநியமமென்றோர், அலங்கல்புனைந்துழிகாழித்தந்தையார்தாமணைவுறக்கண்டகமகிழ்ந்தாரமணைவென்றார். 56
1255 முறிறறிவிற்பருவத்தே யாண்டதோணிமுதல்வனையு முதல்வியையுநினைந்துள்ளூறி,
மற்றவர்மேல்மண்ணிநல்லவனமென்றோதிவழிபடுமூவரும்போதச்சிவிகைமேற்கொண், டுற்றபலபதிபரங்குன்றாப்பனூர்புத்தூரொடுபூவணஞ்சுழியலுயர்குற்றாலம், அற்றமில்நெல்வேலிபுடைமருதூரேத்தியணியிராமீச்சுரம்போற்றிசைத்துக்கீழ்பால். 57
1256 கோணமாமலைகே தீச்சரநின்றேத்தியாடானை புனவாயில் கூறித்தேர்ச்சி,
வாணன்மணிமேற் குடிகண்டொருமூவர்க்கும் வழியருளிக்களர்ப்பாதா ளீசம்போற்றிப், பேணிமுள்ளிப்பெருநதியிற்கொள்ளம்பூதூர்ப்பெருமான்மேற்கோட்டகமேகமழுமென்றோர்,
தோணியாரருள்படைத்தோ ரோடமேறிச்சொல்லலங்கல்புனைந்துதிருநள்ளாறெய்தி. 58
1257 பாடகமெல்லடிபாடிவாதிற்காத்தபரிசோதித்தெளிச்சேரியிரைஞ்சிப்புத்தர்க்,
காடிடிவீழ்ந்தருளி யொழிந்தவரைவாதிலடிப்படுத்திக் கடவூர்புக்கப்பர்வாழ்க்கை, தோடியுயர்பூந்துருத்திபுகுமுனன்னார்சென்றெதிரேதெரிவிலராய்த்தெரிந்துபோற்றிக்,
கூடுமணிச்சிவிகைபுறம்பரித்தாரென்னக் குதித்தவரைப்பணிந்தவ்வூர்க்கொடுபோய்ப்போற்றி. 59
1258 நாவரையர்மடத்தமுதுவிரும்பிக்காஞ்சிநகர்முத லங்கவர்பணிந்தநலம்பாராட்டிப்,
பாவிமண்குறும்பெறிந்தவாகைகூறிப்பதிபலகைதொழவேவிநளிநீர்ப்பொன்னி,
மாவடபானெய்த்தானந்திருவையாறுவளர்பழனம்பணிந்துகழுமலம்புக்காதி, தேவன்மிசையுற்றுமையாம்பதிகம்பாடித்தில்லைநகர்பணிந்துதிருத்தினையூர்போற்றி. 60
1259 மாணிகுழிகன்னிவனம்வடுகூராதிவக்கரையோடிரும்பை மாகாளமேத்தி,
ஆணமலியதிகைகுண்டை குறளாமாத்தூரதிற்குன்றவார்சிலையாமலங் கல்சாத்தி,
நீண்மதிள்சூழ்கோவலறையணிநல்லூர் பின்னிலவண்ணாமலைபணிந்தவ்வரையிலெம்மான்,
தாண்மலர்க்குண்ணாமுலை பூவாரென்றாய்ந்துசாற்றினாரணியதிருவோத்தூர்சார்ந்தார். 61
1260 மற்றதிலாண்பனைகனியக்கனிவாய்பூத்துமாகறலுங்குரங்கணிமுட்டமும் வந்தேத்தி,
எற்றுபுனற்காஞ்சியினின்மறையானென்றும்யமகமொடுமின்னிருக்குக்குறளும்போற்றி, அற்றமில்காமக்கோட்டநெறிக்காரைக்காடனேகதங்கரப தந்திருமேற்றளியுஞ்சூழ்ந்து, சுற்றியபாலாற்றொடுபோய்த்திருமாற்பேறுதுதிவல்லமிலம்பயங்கோட்டூர்கண்டேத்தி. 62
1261 விற்கோலந்தற்கோலமூறலாதிவிரிபழையனூர்பரவியாலங்காடர், சொற்
கோலக்கனவுணர்ந்துபதிகமாலை துஞ்சவருவாரெனுஞ் சொற்றொடுத்துச்சூட்டி,
நற்கோலப்பதிய தினிலிருப்பார்வாய்மைநழுவாமைநயந்தி சைத்துப்பாசூரெய்தி,
எற்கோலஞ்சிந்தையுடையாரென்றேத்தியேதமில்வெண்பாக்கநகரினிது வாழ்த்தி. 63
1262 வரத்துயர்காளத்திவரைபணிந்தவ்வூர்க்குவானவர்களெனுமாலைவகுத்துச்சோதி,
பரப்பியகேதாரங்கோகரணந் தெய்வப்பருப்பதமிந்திரநீலப் பருப்பதாதி,
இருக்குமலையதர்பரவியெந்தையாரென்னிசைமாலைபுனைந்துவேற்காடுமேத்தி,
உருக்கமாடுவலிதாயம்பரவியொற்றியூர்க்கண்விடையவனெனும்பாவுரைத்துவாழ்நாள். 64
1263 தேமருபூம் பொழின்மயிலாப் பூரினாய்கன்சிவநேச னார்மகளேழ்பருவஞ் செல்ல,
மாமுனைவாளெயிற்றரவமுருக்கவாவிமரிந்தவுடலெற்புமணித்தசும்பை யெம்மான்,
பூமணிமுன்றிலர்கொணர்வித்தோர்மட்டிட்டபுன்னையெனவொருபதிகம்புனைந்துமாதை, ஏமுறுமாறெழுவித்துவான்மியூர்பக்கிறைஞ்சினாரெவ்வுலகுமிறைஞ்சவந்தார். 65
1264 வேறு.
கண்ணாரும்விடைச்சுரம்போந்திவர்வண்ணத்தமிழ்பாடிக்கழுக்குன்றெய்தி
எண்ணாருநிறைகாதல்செய்கோயில்கழுக்குன்றேயெனுநூற்சாத்திப்
பண்ணாரச்சிறுபாக்கத்தாட்சிமொழிந்தரசிலியும்பனைங்காட்டூரும்
தண்ணாரன்பொடும்வணங்கித்தில்லைநகர்*மிண்டணைந்தார்தமிழ்ப்பாலுண்டார். 66
1265 அக்கனகமணிமன்றிலருமருந்தையடிதொழுதாண்டமருமந்நாள்
புக்கடருஞ்சினைகடொறும்பைங்கிளிசெந்தமிழ்தெரிப்பப்பூவைகேட்கும்
மிக்கபொழில்புடையுடுத்தகாழிபுரத்தந்தையார்விருப்பினேற்பத்
தக்கமனத்தொருதோணித்தாதையாரடிபணிவார்சண்பைவந்தார். 67
1266 மானகரமணித்தாகவெய்துழிவண்டார்குழலென்மாலைசத்தித்
தேனகுதார்நரையிதழிப்பெரியநாயகன்றுணைத்தாள்சென்னிசேர்த்திப்
பானல்வயற்காழினகர்செர்மினெனவொருபதிகம்பரவிச்செம்பொன்
வானகுமாளிகையணைந்தார்நீலநக்கர்முருகர்புகமருவிவாழ்நாள். 68
1267 பழமறைதேரந்தணருஞ்சிவபாதவிரதையரும்பலரும்வேள்விக்
கிழமைதனக்குரியமணக்கிழமைவினைமுடித்துமெனக்கிளக்குநல்லூர்
அழல்வினைதேர்நம்பாண்டாரருங்குலத்துமகட்பேசியமலன்காழி
மழவிடையான்றிருமணியைச்சிவிகைமிசைக்கொடுபோந்தார்மறைகளார்ப்ப. 69
1268 நிறைக்கோலமதிகண்டநெடுங்கடல்பொலியங்குளிரநிகருஞ்சைவத்
துறைக்கோலந்தலையெடுப்பவழகினுக்கோரழகுசெயத்தொடங்கினாற்போல்
சிறைக்கோலத்தும்பிபடர்நறைக்கோலக்கொன்றையினார்செவிக்கட்டீஞ்சொல்
மறைக்கோலம்புனைபவரைமணக்கோலமதுபுனைந்தார்மறையோரெல்லாம். 70
1269 விதிமுறையான்மறைச்சடங்கின்விண்ணவர்பூமழைபெய்யவிளங்குஞ்சோதி
மதிவதனத்தருள்பொழியச்சின்னவொலிதிசைபோர்ப்பமருங்குபோற்றப்
பொதிமணிபூஞ்சிவிகையிழிந்தங்கமலத்தாள்பெயர்த்துப்புனைமுத்தாரக்
கதிர்மணிப்பந்தரினடந்துகடிமணப்பந்தரினிருந்தார்காழிவேந்தர். 71
1270 மங்கலதூரியமுழங்கமாதவர்பல்லாண்டிசைப்பமறைகள்வாழ்த்தப்
பொங்குமெரிவலஞ்சுழலப்புண்ணியதெய்வங்களிக்கப்பூமாதோங்க
அங்குளநல்லடியவர்பேரானந்தக்கடன்மூழ்கவகிலமெல்லாம்
நங்கள்பெருமான்மகனார்நம்பாண்டார்மருகரெனநலம்பாராட்ட. 72
1271 குறுத்தநகைமுகத்தினராய்ப்பேருவகைதலைக்கேறக்குலவுநல்லூர்
நெறித்தருமப்பெருந்தகையார்நீள்புகலிப்பெருந்தகையார்நீண்டகையில்
கறுத்தகுழல்வெளுத்தநகைசிவத்தவிதழ்பசுத்தகுழைக்கதிர்வேலுணீகண்
பொறித்தநுதற்செறித்தவளைப்பூங்கொடியையாங்களித்தார்புனைநீர்க்கையார். 73
1272 ஒருமாதைமுயலகனீத்தொருமாதைத்திருப்புனைவித்துயருங்கூடல்
வருமாதையடிப்படுத்திவழிமாதையெழுவித்துவாக்கின்ஞானத்
திருமாதைப்புணர்ந்துபெருந்தரைமாதையிருடுடைத்தார்தெண்ணீரோடு
தருமாதைக்கைப்பிடித்தார்வரைமாதைப்புணர்ந்தவர்தாடணவார்மாதோ. 74
1273 பஞ்சியொளிவிஞ்சுமலர்ப்பாட்டளிசெங்கிண்கிணிக்காற்பதுமம்பூத்த
கிஞ்சுகமென்மடவரலோடங்கிவலம்வருவாரைக்கிரியைசான்றோர்
அஞ்சொலிவளடிமலரையம்மியில்வைத்தருளுமெனவணிசேர்திங்கள்
பிஞ்சுமுடியரைநல்லூர்ப்பெருமணமென்றதைமறுத்துப்பெயர்த்துஞ்சொல்வார். 75
1274 ஈதமலன்றிருத்தாளுக்கியற்றுவதுமுறைமையெனவெழுந்துபோந்து
நாதனைநல்லூரரசைநமச்சிவாயப்பதிகநவிற்றலோடும்
பூதலமுமீதலமுநீடொளியவாடெரிகால்பொருப்பாயோங்கி
வேதமுதலளப்பரியான்விளங்கவதிலடியவரைவிடுவித்தல்செய்தார். 76
1275 இன்னிசையாழ்ப்பாணரொடுநீலநக்கர்சிவபாதவிதயர்முந்நூல்
மன்னியதோட்டிருமுருகர்வழியடியாரெனைப்பலருமடியாக்கற்பில்
பன்னியரோடுறுஞானப்பாயொளியிற்புகவேவிப்பனிக்கைதோய்ந்த
கன்னியொடுமதிற்புகுந்தார்கனலோடும்புனலறியுங்கவிதைவல்லார். 77
1276 பொறிவாகைமாறனுடலெழிலாகப்பூதியரும்பொருண்டாக
நெறிவாய்ந்தவைதிகமுஞ்சைவமும்வீறுண்டாகநிகரில்காழி
மறிவார்ந்தகரதலத்தார்மகவானோர்புகுந்தமுத்திவழியென்றியார்க்கும்
அறிவாகச்சிவலிங்கக்குறியாயிற்றாயிடைமுன்னலங்குசெந்தீ. 78
1277 வேறு.
இன்னவாறுநிகழ்ந்ததன்மேலெழிற்சீகாழிப்பதிநாதன்
அன்னவூர்திபுள்ளூர்தியானையூர்தியாதியரைத்
துன்னலோடுமவரெய்தியுலகேழீன்றசிற்றுதரக்
கன்னிபாகத்திருந்தானைக்கசிந்துபணிந்துமுன்னின்றார். 79
1278 செம்மைக்கருணைக் கடலனையான்றிருமுன்னின்றோர்தமைநோக்கி
எம்மைத்தலங்கடொறும்பதிகத்தேத்துஞானக்கவுணியனை
அம்மைப்பொலஞ்செய்விம்பத்திலாவாகனஞ்செய்தெந்நாளும்
மும்மைப்பயன்பெற்றுலகுய்யமுதுபூசனைநித்தியமியற்றி. 80
1279 நிகழ்சித்திரைபங்குனிமாதநிறையாதிரையும்வைகாசிப்
பகர்மூலத்துமாவணியைப்பசியாமாதச்சதயத்தும்
மகரமதியிற்கதிர்மதியமருவுநாளுமிதுனமதி
திகழவருரோகணியுமென்றேழ்தினத்துநைமித்தியமியற்றி. 81
1280 புரையில்கேள்வியிமையோர்காள்புகல்பங்குனியிற்சதயத்தின்
நிரைசெய்மணிப்பூங்கொடியேற்றிநெடுமான்றலைநாடேர்நடத்தித்
திரைசெய்தீர்த்தமாதிரைநாடிளைத்தாடுதிரென்றருள்செய்ய
வரைவிலமரராண்டுதொறுமகிழ்ந்திவ்வாறுபுரிந்தனரால். 82
1281 ஓதுமினையநல்விழவுக்குதவுந்திறலோருயர்ந்தகதி
மீதுபுகுவாரதுபுரியார்வெவ்வாய்நிரயத்திடைபுகுவார்
கோதின்ஞானப்பிள்ளை தனைக்குழைத்துப்பணிந்தோர்மறலிநகர்
போதலறியார்தொழவேண்டிப்போந்துவழிக்கண்மாய்ந்தவரும் 83
1282 வீடுபெறுவாரிச்சரிதைவினவினவரும்படித்தோரும்
நீடும்பரமமுத்தியெலாநெறியேதுய்த்துப்பொறிமணிச்சூட்
டாடுமரவமசைத்தவன்றாளணைவாரென்னவருட்சூதன்
நாடுமறைதேர்முனிவரர்க்குநவின்றவாறுநவின்றனனால். 84
23 - ஆவது. திருஞானசம்பந்தப்பிள்ளையார் திருவவதாரவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 1282
----------------------
1283 திங்கண்முடியணிவேணிச்சிவபெருமானடித்தொழும்பின்றிறத்தைநாடிப்
பங்கமில்சீரொளிக்கொளியாய்ப்படர்ந்தகவுணியப்பெருமான்பரிசுகேட்டோம்
புங்கவவின்னமுந்தீர்த்தந்தனித்தனிசொற்றனைதொகுத்துப்புலப்பாடெய்த
இங்கருளுகெனச்சூதனங்கவருக்குரைத்தமுறையியம்பலுற்றாம் 1
1284 ஞாலப்பேராழிவரையுலகனைத்துநிலைகுலையநலிந்துமூழ்கி
மூலப்பேராழிமொய்த்தகடைநாளின்மலைவாய்ந்தமுளரிப்புத்தேள்
கோலப்பேராழியம்புட்பொருப்பரனைப்பணிந்துவரங்கொண்டதீர்த்தம்
ஓலப்பேராழிவைப்பிலதுபிரமதீர்த்தமெனவோங்கிற்றன்றே. 2
1285 ஓருமறையோனீராடிச்சேட்டுலகுதனைப்பயந்தானுலவாத்தெய்வத்
திருமறையோனெனநின்றானொருமறையோனகன்கரைக்கட்சேர்ந்தவாறே
இருமறைநூலியல்விரித்துவீட்டுலகுதனைப்பயந்தானெனினித்தீர்த்தம்
பெருமறைந்நூலறிவதல்லாற்பிறிதொருநூலோவறிந்துபேசுநூலே. 3
1286 ஓருணர்வாலிருமைவினைமும்மலங்கணாற்பிறப்புமொழிப்பானைந்து
பேருறுமிந்திரியங்களாறடக்கியேழிசையும்பிறங்கவோதி
நீருறுமெண்குணத்தோன்பானிகழொளியாயாபத்தைநீக்குங்காழிக்
காருறுகண்டனையறிவாரவரேகண்டறிவாரக்கடவுட்டீர்த்தம். 4
1287 மின்மணிநூபுரமலம்புமிளிரிலங்காலரமாதர்விமானஞ்சூழ
என்மணிக்காலினைவருதாதிணைக்கவரிகாலசைப்பவேறிச்செல்வார்
நன்மணிவார்சிறையறுகாலிசைமுரலுமொருகணைக்கானளினப்புத்தேள்
பன்மணிக்கான்மலர்த்தடத்திற்றவழ்பசுங்காலஃதுடலிற்படுங்கான்மாதோ. 5
1288 கூர்த்தவருந்தவம்பன்னாளிழைத்துமுயர்மதிட்காழிக்குன்றின்மேய
தீர்த்தனருள்படைத்தெல்லாவலிபடைத்தானேனுமயன்றிறமென்னேயோ
வார்த்ததடந்திரைக்கடவுட்டீர்த்தமதுபடிந்துலகையளித்தானன்ன
பேர்த்தடமாடுநரெல்லாமேற்படையாவீட்டுநெறிப்பெறப்பெற்றாரே. 6
1289 வண்டறாநறைமலர்தூஉய்வணங்கினர்பான்மோனமுத்திவழங்குமெம்மான்
அண்டகோடிகள்பொதிந்தசிற்றுதரப்பூவையிடத்தருட்கண்காட்டப்
பண்டைநூல்போற்றுதிருநிலையழகிகண்ணருளேபசுக்கள்யாவும்
உண்டகமாசகற்றியொளிதருபுனல்போற்றிருமுனநின்றொளிருமீதால். 7
1290 முத்தலையையேந்தலினான்முடிவிலாரணங்காட்சிமுடித்தவாற்றான்
மெய்தவராடகம்பெறலாற்சுற்றுமலங்களைதலினால்விமலந்தன்னால்
சித்தியருட்கண்பொலியுந்தரத்தாலும்பேரரவந்தரித்தலானும்
இத்தகையவிதிதடந்தான்மத்தமலர்தர்தொடைவேணியீசன்போலும். 8
1291 திரையாடைநிலமடந்தைதிருமுகமோவரிவிழியோதிலகமேயோ
வரையாமங்கலநாணோதிருமகட்குமருமலரோமணிப்பூண்வைப்போ
புரைதிருமாலுலகின்மேலுலகோவென்னும்பிரமபுரியிலிந்நீர்க்
கரைகாணாரெவருளர்மற்றவரன்றோமுத்தியெனும்கரைகாணாரே. 9
1292 மறைநான்குவல்லபிரான்பதினறுநான்கோடிரண்டுவகையாங்கோடி
முறைநான்குந்தருங்கடவுட்டீர்த்தமெலாந்தொகுமிதனின்முழுகியண்டத்
துறைநான்குகதியும்வகுத்துறுநான்குபவத்தினில்வீழ்ந்துழலாதியார்க்கும்
துறைநான்குமளித்திடுமாறொருநான்குகோணமுறத்துலக்கினானால். 10
1293 வேறு.
கோன்மதிநாளில்வெய்யோன்குலவியதினத்திற்கங்கை
மாநதிமுதலாந்தெய்வமணிநதியெனைத்துமீண்டித்
தானதிலுறலாலந்நாட்டடமதுபடிந்தோர்தீர்வார்
ஊனவல்லினையுமாயையுற்பவவினையுமாங்கே. 11
1294 ஆயமாமதியுவாவினருந்ததிக்கிறைவனாதி
தூயநீர்க்கங்கையாதிசுரபதியாதியோகத்
தேயவன்சனகனாதியெய்துவரிதுபுக்காடப்
போயதுபடிவாரெய்தாப்பொருளெவைபுவனமூன்றில். 12
1295 முன்புறுமேடத் தென்ற்ழ்முளைத்த நாளிடையுவாவி
னன்புறுமின்னீராடி வரும்பவக் கடலிலாடார்
பின்பு மோரயனஞ் சேயாற்பேதுறு மடவார்தோயி
னின்புறுமழலைச் செவ்வாயெழின் மகப்பெறூவருண்மை.13
1296 ஓரரிண்டயன் மரண்டினு தையங்கள்வெதிபாதங்கள்
சேர்தருதினம் புக்காடிற செங்கதிச் செல்வனாதி
யோதருகோளு நாளு மின்னறீர்பலதகை நல்கக
வாரகடலாடை மாதைமணந்துலகளிப்பான் மன்னோ. 14
1297 துளையெயிற்றழல்வாய்ப்பாந்தன் சுடர்களைத்தொடு நாட்போன
சொலையெயிற்றரவை முன்னூலறவமாட்டறல் பெயதீர்வார்
களைகணாயுலகமூன்றிற் காவலுந்திருவு மெய்தி
முளைமதிக்கண்ணியெம்மான் மூதுலகடைவரம்மா.15
1298 வீழியங்கனிவாயாரை வேதவாணிபர்ககு நல்கி
னாழியினடுவட்டுஞ் சுமர்வணைப் புனிதனாவர்
கோழிளமபுனிற்று நல்லான் கொடுப்பரேல் மயிர்க்கோரராடை
வாழினாளளவுன் தாவாவளனெடுங்க யிலைவாழ்வார்.16
1299 எரிமணிப்பொலன் கோட்டேரா சாரியல்புளி மனுவொன்றாய்ந்தோர்
விரிகடலுலகத்தான்ற விழுத்தலமெவற்றுங்கோடி
தெரிதருமனுக்களாய்ந்த திண்பலம் பெறுவாரென்றே
கரியுரிவனைந்த வெண்டோட் கண்ணுதல்கழறினானால்.17
1300 அரிமலர்க்கிழவன்றீர்த் தாழ்ந்த புள்ளினங்கண்மீக்கண்
விரிசிறைவிதிர்த்ததெண்ணீர் மேனியிற்படினுமன்னார்
முரிதிரைமுகட்டிற்றோன்று மொய்யொரளிச செல்வன்போன்று
பிரிவரூர்மாயை போய்ப்பெரு வெளிக்கருவராவார். 18
1301 உலப்பிறென்புலத் தார்வேழ்வியூட்டு புதிலதமீந்தோ
ரலக்கண்வல்வினை போயீசனருள் பெறததில்கமாவார்
குலப்பெருங்கிழவர் தாமுங்கோமள்க் கொடியோன்பாகன்
மலர்ப்பதம் பெறுவரல்லால் மறுபதம் பெறுகலாரே. 19
1302 படைப்பினுக் காதியாய பனிமலர்த்தடமாமீது
கிடைப்பவுமயல புகநாடக் கெழுமுதலமிழ்தவாரி
யுடைப்பருந்தசுமை வீசியுறுபலிக்கலனென்றேந்தி
யடைப்படாதுழன்று வாளயங்கையை நக்கல்போலும். 20
1303 பற்பலமனுக்கடம்மிற் பழிப்பி லைந்தெழுத்தும் வேதத்
துற்றனமனுக் கடம்மி லுருத்திரசம் கந்தானு
மற்புதத்தருக் கடமமில் வில்வமும் மரர்தம்மில்
கற்பனைகடந்த முக்கட்கறைமிடற் றிறையுமாங்கே. 21
1304 புனிதரிலற்புத்தேளும்பொங்கொளிகளில்வெய்யோனும்
முனிவரிலென்னையாண்டமுதல்வனுமுதன்மைசான்ற
தனிவிரதத்திற்கொல்லாவிரதமுந்தருமந்தம்மில்
கனிபடும்பொறையும்யோகக்காட்சியிற்சனகன்றானும். 22
1305 மைவரிமணிவண்டூதிமகரந்தமிறைப்பவானாட்
டைவகைத்தருக்களேய்க்குமணிபொழிற்காழிதன்னில்
பெய்வகைகிடந்ததீர்த்தபேதத்திறபிரமன்கண்ட
தெய்வநீர்ப்பெருக்கறாததீர்த்தமுமதிகமாதோ. 23
1306 மனவலிகடந்தமிக்கீர்மற்றதன்கரைக்கட்பட்ட
வினைதருகுப்பைவாரியெறிந்தவர்பெறுவர்மெய்யே
கனைதிரைக்கங்கையாதிகடவுண்மாநதிகட்கெல்லாம்
புனைகலனணிந்துதெய்வப்பொற்படாம்புனைந்தபேறே. 24
1307 வேறு.
காதமணஞ்சினமடங்கல்கவுணியர்கோன்பருகருட்பால்
காதமணந்தருதடத்தைக்கண்டார்நோய்விண்டாரே
மாதரங்கமலையிளங்கால்வரைமார்பிலுறப்பெறுவார்
மாதரங்கமலையரங்கேமன்னுரிமைப்பெறுவாரே. 25
1308 முத்தமிழும்படித்துறைநீர்முகந்துதுளியருந்தினரேல்
முத்தமிழும்படித்துறைநீர்முகிலெனத்தண்டமிழ்பொழிவார்
சித்தமருங்கலையாதுதீரமதிற்கணமுறினும்
சித்தமருங்கலையாதுந்தெரிவரியநிலைசேர்வார். 26
1309 பத்திவலைமுடித்தலைமேற்படராதாரித்தடத்தின்
பத்திவலைமுடித்தலைமேற்படின்மாயையடுவாரே
நித்திலமாடகந்தருமிந்நீரேந்தியோர்பலமுன்
னித்திலமாடகந்தருவார்நினைத்தசெயல்பெறுவாரே. 27
1310 பதகமலம்வலம்வருவார்பண்டுயிரோடுறத்தோய்ந்த
பதகமலம்வலம்வருவார்பாயொளியொன்றாயிடைத்த
மதுகையிடவரையகன்றவல்வினைபோய்த்தொல்லருளம்
மதுகையிடவரைவென்றோன்மன்னுரிமைப்பெறுவாரே. 28
1311 மாகனத்ததினங்காட்டுமணிமறைநான்மறையவர்க்கு
மாகனத்ததினங்காட்டும்வல்லார்மாறில்லாரே
கோகனகத்துச்சிவந்தகோதைமணாளன்பணியும்
கோகனகத்துச்சிவந்தகுழகனடிபெறுவாரே. 29
1312 திருக்குளத்தினிருள்பாறச்சேமநெறிதரும்பிரமன்
திருக்குளத்தினியற்கையிதுதிரைமுரசுபடைத்தானை
உருக்கவருமரன்சூலத்துஞற்றியருளேபொருளாய்
உருக்கவருமொருசூலத்தீர்த்தவியலுணர்த்துவமே. 30
1313 கன்னிமணிவண்டுழலுங்கடிகமழ்தாமரைத்தடஞ்சூழ்
பொன்னிவளந்தருபுகலிப்புண்ணியன்போற்றளிக்கயலே
முன்னியகாற்பெருந்திசையின்முக்கோலெல்லையினுரைத்த
தன்னிகரிலொருசூலத்தீர்த்தவியல்சாற்றரிதால். 31
1314 முத்தலைவேலகழ்ந்ததுதான்முழங்கலையினடுநாகப்
பைத்தலையான்முனிசாபம்பரித்தலையாதவன்படிய
அத்தலையேவினையகற்றியலைத்தலைமானொடுமுன்போல்
வைத்தலையாதிருத்தியதிம்மலர்தலைமாநிலம்போற்ற. 32
1315 துலைமதியின்முழுமதியிற்சூழுததிமறுகநெடு
மலைமதிமாயவன்பெறலான்மறுமதியிலவர்படிந்து
நிலைமதிசேர்தென்புலவோர்நிறைமதிசால்கடனிறுத்தோர்
கலைமதிவேணியனிருபொற்கழன்மதிபெற்றிருப்பாரே. 33
1316 கலிகடியுந்தனிக்கவிகைக்கன்னியாகுச்சபதி
பலிகவருங்கொடியுருவிற்பறந்தவன்முன்னிறம்பொலிய
ஒலிகெழுநீர்ச்சூலதடத்தருமுனிவனவிதிர்த்ததுளி
வலிபலவுமளித்ததென்றால்வழுத்துவதுமற்றெவனோ. 34
1317 மல்குமதிப்பக்கத்துமாசியினேகாதசிக்கண்
புல்குபுகழ்விகடாங்கன்புரையறுமாணெழில்பெறலான்
பல்கிளைஞரொடுங்கயிலைப்பனிவரையினினிதிருப்பார்
ஒல்கலிலந்நாளதுபுக்குடனாடக்கடவாரே. 35
1318 வேறு.
நீர்த்தலைவெடிவாளைநீடமரிடைவாளைப்
பார்த்தெனவெதிர்பாயும்பணைமலிபுகலிக்கண்
பேர்த்தளியதன்மேல்பாற்பிறழ்திரையானந்தத்
தீர்த்தமதுளதந்நீர்த்திறமினியறைகிற்பாம். 36
1319 அம்புயமலர்வாணனந்நகரிடைவைத்த
உம்பருமுனிவோருமுணர்வுடையுரவோரும்
செம்பொருளியல்கண்டுஞ்சேமறைநெறிநின்றும்
தம்புலமறவென்றுந்தவநிலைதவறாராய். 37
1320 அறநெறிவழுவாருமரனருள்பிழையாரும்
மறவினைகடிவாருமகவினைமுடிவாரும்
இறைபணிவழுவாராயிவர்புரிசெயல்கண்டே
பிறைமுடியொருகாழிப்பெருமுதலருள்கொண்டே. 38
1321 மதிநதிமுடியாடவதனமென்மதியாடப்
பொதியவிழ்தொடையாடப்புலிமுனியரவாடடக்
கதிர்விரிவடிவாடக்கரதலநிரையாடப்
பதமலர்தனியாடப்பலமுனிவரராட. 39
1322 ஆடினனெடுநாள்புக்கவ்வழியானந்தம்
நாடியவமயத்தோர்நாயகனயனத்தே
பீடியலருள்வெள்ளம்பெருகியதுளிவீழக்
கூடியததுமேல்பாற்குறுமுனியுறைசாலை. 40
1323 மேலருண்முனிகண்டேவிமலனதானந்தத்
தால்வருமிதுவென்றங்கனைவர்களொடுமாடிச்
சால்புறவரலாலேதரணியிலதுபேராக்
கோலளவினிலாடக்குடதிசைதனிலுண்டே. 41
1324 மற்றதைநினைவோருமருமலர்புனைவோரும்
முற்றிடநினைவோருமுறையினிலணைவோரும்
கற்றறிவருஞானக்கடலெனுமடலேறூர்
கொற்றவனடிநீழற்குலவுவரிஃதுண்மை. 42
1325 வேறு.
கூளியகற்றியகாளிபுரத்தருள்குழைவிக்கும்
ஆளியுகைத்தெழுகாளிதடத்தியலறைகிற்பாம்
மீளிவயப்புலியூரிலிடர்ப்படுவினைமோடி
நாளுமிகக்கருநோயினளப்பருநலிவாலே. 43
1326 கொச்சைநகர்த்தலைவர்கருகுற்றகுடக்கூடே
மெய்ச்சதுரத்தொர்தடத்தையியற்றிவிரித்தாடி
அச்சிவனொப்பநிருத்தமிழைத்தவதிற்பாவ
குச்சிதமுற்றகரும்பிணிவிட்டொளிகொண்டாளால். 44
1327 வர்க்கவினைப்பிணியகலநினைப்பவர்மதிதோறும்
துர்க்கைமனுக்கொடுதெரிசதினத்திதுதோய்வாரேல்
விற்கழைபெற்றவனெழிலுருவத்தொடுமேலான
வற்கலின்முத்தியினளிமையினிற்பெறலாவாரே. 45
1328 இயல்பகலுஞ்சிவநிந்தனையாதியுமிதுதோயின்
பெயருமதற்கிணைவேறுரைசெய்வதுபிழையாமால்
வெயில்விரிமாளிகைவேணுபுரிக்கயல்வடபாலோர்
வயினவதீர்த்தவியப்பமுமொருவழிவருவிப்பாம். 46
1329 அந்நகருக்கொரிரண்டுகுரோசத்தளவாகப்
பொன்னணிமார்பனகழ்ந்துவிரிந்தபொலன்கோட்டின்
தன்னுடைநாதனைவைத்துவிழைந்ததவம்பெற்றான்
பன்னியவாவிபடிந்தவர்தீவினைபடியாரே. 47
1330 கும்பமதிக்குளபூரணைநாளிதுகுடைவாரேல்
உம்பரருந்தவர்சாபமுதற்பவமொழிவாரே
இம்பரிலிம்மொழிசத்தியமேயெனவெனையாளும்
நம்பெருமானதுமும்முறையாகநவின்றானால். 48
1331 அம்மதிமுற்றவுமாடினரும்பவமாடார்பொன்
இம்மியளித்தவர்கோடியரும்பலனிசைவாரால்
கொம்மைமுலைச்சியர்மண்ணணியாடைகள்கோதானம்
இம்மையிலீபவர்பேறுதெருக்குநர்யாரேயால். 49
1332 முத்துறழ்தண்டுலநல்குநர்தண்டுலமுறைவானோர்
அத்துணையாண்டுமரன்கயிலைக்கிரியகலாரால்
முத்தமிழாளிமுயங்கியவெங்குருமூதூரில்
மைத்தவராக்குதடாகமுமேலொருவழிசொல்வாம். 50
1333 வேறு.
தடத்தியல்காழியந்தளிக்குநீள்வட
குடக்கினின்மேலொருகோலின்மேயது
கடற்றிரைமுகட்டெழுகதிரின்செல்வனைப்
படப்பொருபணிமகன்பண்டுதொட்டது. 51
1334 அனல்வினைக்குரவனையயர்த்தசிங்ககே
தனன்மறையலகையைச்சாய்த்தநீரது
முனைவருமமரருமுற்றுமற்றும்வே
றெனைவரும்வினைகெடவென்றுந்தோய்வது. 52
1335 போதருகோட்டிடைப்புயங்கனாமத்து
நாதனையுள்ளத்துநாளுமாடுநர்க்
காதவன்முதல்கோளனைத்துநன்றிசால்
ஏதமில்பலன்றரவிலங்கும்பொற்பது. 53
1336 மற்றதனயலொருவாளியெல்லையின்
முற்றரவணையினான்முனிவன்வெம்பழி
பற்றறவாடுவான்பண்டுதொட்டது
பெற்றபேராழியின்பெயரினோர்தடம். 54
1337 ஆசிலத்தடமுவந்தாடிமாமறைத்
தேசிகர்திறத்தொருசெம்பொனீவரேல்
வீசிவில்லுமிழ்மணிமிளிருமார்புடைப்
பாசிலைப்பள்ளியான்பதத்தில்வாழ்வரே. 55
1338 மங்குறோய்மதிண்மகேந்திரத்துக்காவலன்
பொங்குறுதவஞ்செயப்புகலிவாணன்முன்
சங்குறுகொடுங்குழைத்தாணுவேணுவாய்
அங்குவந்துறத்தடமவணொன்றுற்றதால். 56
1339 சங்கொலிவழங்கலிற்சங்கதீர்த்தமென்
றெங்கணுநிலவியவிதுபுக்காடுநர்
வெங்கொலைமருவலர்த்தொலைத்துவேலைசூழ்
அங்கண்மாநிலமுழுதளிப்பருண்மையே. 57
1340 தீர்த்தமகிமையுரைத்தவத்தியாயம் .
விண்ணவர்க்குடைந்தவெஞ்சூரன்வெவ்வலி
நண்ணியதடமிதினாளுந்தோய்பவர்
எண்ணரும்பகைப்புலங்கடப்பரென்றருட்
கண்ணுதலந்தணன்கழறினானரோ. 58
1341 அளிபுரைதிருநிலையழகியாயபூங்
கிளிபுணர்மருங்கினான்கிளர்பொன்னாலயத்
தொளிபுணர்தெற்கிலோர்கணையிலோங்குநீர்த்
தெளிதரைச்சுக்கிரதீர்த்தமொன்றரோ. 59
1342 வன்கணாலெண்கணான்மறித்துவீழ்த்தநாள்
பொன்கணானூர்திவாழ்புகலிமாநகர்த்
தென்கணான்கொன்றெனக்கோணஞ்செய்தடத்
தின்கணானந்தநீரிழைத்துப்புன்கணான். 60
1343 தோய்ந்தனன்பூந்தராய்த்துணைவனாலுயிர்
தேய்ந்திடாமிருதசஞ்சீவினிப்பெயர்
ஆய்ந்தநூல்விஞ்சையுமமரர்தேசிகன்
ஏய்ந்தநல்விழுப்பமுமெய்தினானரோ. 61
1344 தனிப்புகர்வாரமத்தடம்புக்காடுநர்க்
கினிப்படர்வறுமைநோயில்லைக்கோமயம்
பனித்தபுல்லறுகொடுபரித்துக்கோன்மதி
தனிற்படிந்தோர்க்கிணைதரைக்கணில்லையால். 62
1345 இளிதருவலைஞர்தமேழைதோள்புணர்
மிளிர்சடைமுனிவரன்விமலன்கோயிலுள்
தெளிதரநாட்டியதீர்த்தமொன்றது
குளிர்புனற்பராசரகூபமென்பவே. 63
1346 அச்சுதனனையமேலவர்க்குமேலவன்
கொச்சையையகற்றுமிக்கூபந்தோய்பவர்
நிச்சயமூணலூணேர்தலேதிலாள்
இச்சையின்முயங்கன்மற்றெவையந்தீர்வரே. 64
1347 தேட்பெயர்மதியினிற்செறிந்தபூரணை
நாட்புனல்படிந்துநென்மணியைநான்மறை
ஆட்சியர்திறத்தினிதளிக்குமன்பினோர்
வேட்கைகூர்பிறவிவெவ்வினைப்படார்களே. 65
1348 வாங்கொலியருவிவீழ்மலயமாதவன்
பூங்குயிற்கிளவிபாற்புரைநற்பூந்தராய்க்
காங்கிருகோலளவாகக்கீழ்புலத்
தோங்குநீர்மலிதடமொன்றுநாட்டியே. 66
1349 பைந்தொடிப்பாகனைப்பதித்துப்பாங்கரின்
வந்தனைமலர்கடூஉய்வணங்கிவீறுபெற்
றுய்ந்தனனொலிதிரையுலகுளோரதைச்
செந்தமிழகத்தியதீர்த்தமென்பரால். 67
1350 கோதமன்குறுமுனிகுழித்தவாவிபால்
போதலரொருதடம்புதுக்கிபூந்தராய்
நாதரையிறஞ்சிமெய்ந்நலம்பெற்றானது
தீதறுகவுதமதீர்த்தமென்பரால். 68
1351 இவ்வகையாறிரண்டிண்டைவானவன்
செவ்வனீர்த்தடமுதற்றீர்த்தமாமிவை
ஒவ்வொருதீர்த்தமேயுய்க்கும்வீடெனின்
எவ்வகைவிரிக்குமதின்னுங்கேட்டிரால். 69
1352 முந்தையீரொன்பதாமுதுபுராணங்கள்
செந்தழல்வானவன்றிங்கள்வெய்யவன்
அந்தமிலுலகினோடலகிலண்டங்கள்
தந்தசீர்புனைதடந்தனிப்புறாநதி. 70
1353 இவ்வகைப்பேர்புனைந்திலங்குதீர்த்தங்கள்
கவ்வையிலவர்பணிகாழிசூழ்தரும்
செவ்வியதிசைதொறுந்திகழுமான்மனத்
தெவ்வமின்முனிவிர்காளின்னுங்கேட்டிரால். 71
1354 வேறு.
கின்னரர்கிம்புருடர்சித்தரியக்கர்நாலிருவசுக்கள்கேடில்வானோர்
பன்னகர்பாரிடரசுராமுனிவர்முதலோர்புகலிப்பணிந்துபோற்றி
அன்னவரோரொருதடமுந்தடத்துழையோரிலிங்கமும்வைத்தரிச்சித்தாரால்
இந்நகரக்காழிவரைவடுகேசன்மகிமையினியிசைக்குமன்றே. 72
24 - ஆவது தீர்த்தமகிமையுரைத்தவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 1354.
--------------------------------
1355 கொண்டல்கண்படைகொளக்கிளந்தளிகுலாவியின்னிசைமிழற்றுபூம்
தண்டலைப்பொழிலுடுத்தகாழிவரைதன்னிலேவடுகனென்னவே
அண்டநாயகனிசைந்தகாதைவரலாறுகூறுகெனவீறிலா
எண்டவத்துமுனிவோர்வினாவவருளேறுசூதனதுகூறுவான். (1)
1356 முள்ளெயிற்றரவரைக்கசைத்தமுழுமுதல்வனன்கருணைமுதல்வியோ
டெள்ளிலிச்சகமளிக்குமாறுமுனிணங்குகேளியின்மணங்கொளீஇ
பள்ளிவைகவருமறைவனத்திலொளிபாய்திருச்சுடர்மழுங்கல்கண்
டொள்ளிழைக்கொடியைநோக்கியாக்கமறையோதினானிதனையோதினான். (2)
1357 இன்னவேலையிவ்விளக்கைவில்லுமிழவீண்டியாவரதுதூண்டினார்
பொன்னனாயவர்புரக்குமாறுவிரிபுவனமும்மையுமளித்துமென்
றென்னையாள்பவனுரைப்பவன்னையுமெவர்க்குறுங்கொலெனவெண்ணினாள்
அன்னபோதொரெலிதீபரூமவியறியாதுநாசிகொடுதூண்டியே. (3)
1358 பொருகுறும்புபுரிமிருகமாமியல்பொருந்தலாலதுதருஞ்சுடர்
உருகுகின்றநறையிழுதையன்றுசிறுதுண்டதவ்வெலியையண்டர்கோன்
வருகநீசுடர்துலக்கலாலுரிமைவைத்துமுப்புவிபரிப்பதற்
கொருவனாகியறிவொடுபிறத்தியிழுதுணலின்வாணிருதனாதியால். (4)
1359 நம்பெருந்தரணியாலயங்கடொறுநகுபெருஞ்சுடரிழைத்துமேல்
எம்பதம்பரவுமன்பரந்தணரிடத்துமீகைநனியீகெனா
வம்பறாவிதழியானுரைப்பவதுவலிவிரோசனனெனும்பெயர்
செம்புலநலொழுகுவேலுடைத்தகுவர்செம்மலின்மதலையாயினான். (5)
1360 மாவலிப்பெயர்புனைந்துநால்வகைவயப்படைக்கடலொடுங்குழீஇ
காவன்முப்புவனமுந்தனாதுகவிகைக்குள்வைகமுறைசெய்யுநாள்
ஓவறப்பெருகுகளியினாலமரருலகுபுக்குவிரிதருநிழல்
தேவரைப்பொருதழிப்பவங்கமொடுதேவர்கோன்முரணிமேவினான். (6)
1361 ஆண்டவாசவனுநிருதன்மாவலியுமாழிவேந்தனொடுமுரணுகும்
பாண்டனுந்தனதனோடுசம்பரனும்பவனனுந்திருதிமானுமெய்
நீண்டதீயினொடுதூமகேதுவுநெருங்குகாலனொடுநாகனும்
காண்டகீசதிசையதிபனோடுபயங்கரனும்டிண்டிமனுநிருதியும். (7)
1362 இளையவாணிருதருந்திசாதிபருமேற்றபோரினிடையாற்றல்சால்
வனைகருங்கழன்முரட்டயித்தியர்செய்வாகைகண்டதிகவேகமாய்
நுனைமுகக்குலிசவேலெடுத்ததிரநூக்கிமாகபதிதாக்கினான்
அனையபோதசுரர்கோன்வெகுண்டுவிறலமரரோடவமராடினான். (8)
1363 எறுழ்வரிச்சிலைகுழைத்துநாணொலியெறிந்தழன்றுபதினாயிரம்
தெறுகடுங்கணைவலாரிமீதும்விரிதிசையுளோர்மிசையநேகமும்
கறுவுகொண்டலெனவீசினானிலைகலங்கினாரமரரதுதெரிந்
துறுதடக்கையயிராவதத்தையெதிருந்திவாசவனுமுந்தினான். (9)
1364 மிகநெருக்கியெயிறதுகடித்துருமுவிசையினிற்கரமெடுத்தடித்
தகலமத்தியெறிகுலிசமிட்டுறவடித்தலும்பொருதயித்தியன்
பகன்மணித்தலையினடுவணிற்பதைபதைப்பவங்கையுறுதண்டினால்
உகவடிப்பமகபதிதனக்கவசமுற்றதாலவசமுற்றினான். (10)
1365 அக்கணத்தையறிந்தமாவலியகன்றதேரிலவனைக்கவர்ந்
தொக்கவோருழையிலறிவுறாதவகையோடினாரமரர்வாடினார்
மிக்கவேழ்திசைபரிக்கும்வானவரும்வேறுவேறிரியல்போயினார்
புக்கமாவலிதுறக்கமேயபலபோகமும்பருகலாயினான். (11)
1366 ஆடகத்தலமகன் றுஞாலமிசையரசுபேணிநிறைமணிவளைச்
சூடகக்கொடிமணாளான்மேயதளிதோறுமொள்ளொளியசுடரிழைத்
தேடடுத்தமார்மஞ்சனாதியினிலெந்தைபூசனைசெய்தன்பர்பால்
நாடாகத்துவழிபாடியற்றிநனிநன்னரன்புசெயுமன்னநாள் (12)
1367 வருகுலக்குருவைமகவினைக்கிடம்வழுத்துகென்னவவன்வானுளோர்க்
குருமெனப்பொருசிவத்துரோகமுமொழித்தவூர்பிரமனெண்ணிலார்
அருவினைத்தொடாபிரித்தவூரிறுதியாழிசூழரியகாழியூர்
இருதலத்தினினுயர்ந்தவூரதிலிழைக்கலாகுமெனவவுணர்கோன் (13)
1368 சொன்னவாறுபுரிமகவினைக்குரியசோர்விலாதபொருண்மேவரப்
பன்னருஞ்சடைமுடித்தமாமுனிவர்பலர்களோடுமறையவரொடும்
தன்னெடும்படைதழீஇவரக்கதிர்தடுப்பநீள்கொடிதொடுத்தபூம்
கன்னிமூதெயிலுடுத்தகாழிநகர்காவில்வல்லவுணன்மேவினான் (14)
1369 எகினவூர்திதடமாடியீசனையிறைஞ்சியங்கமரர்கம்மியன்
மிகலதென்றிசையினயோசனைப்பரவைவேள்விபந்தருமிழைத்ததிற்
சகலமுங்கொடுபுகுந்துநாதனிருதாள்குறித்தனனியற்றமேல்
இகலுடைந்தகடவுளரும்வாசவனுமிண்டைவானவனையண்டினார் (15)
1370 புண்டரீகமனைகொண்டபூரணபுராணமாவலியினேவினால்
சண்டமாருதமுடன்றபோதுபடுசருகதாயினமெனக்கரைந்
தெண்டிசாதிபரிரங்கவேதனவரேவரோடுமுயர்காழிபுக்
கண்டராழ்துயருநிருதன்வாகையுமெனத்தன்முன்றொழுதுரைத்தனன். (16)
1371 ஈதியம்பலுமிரங்கலீர்பலருமென்றுகாழிவரைநின்றுளான்
சீதரன்றனைநினைப்பநீர்பருகுசெல்லையன்னவனவ்வெல்லைவாய்ப்
பாதபங்கயமுன்வந்திறைஞ்சியிசைபன்னியங்கைமலர்சென்னிகொண்
டாதரம்பெருகிநிற்கமாயவனொடருள்புரிந்திதனையுரைசெய்தான். (17)
1372 மாயமாவலிசெயன்புமன்பினில்வரம்பெறுந்திறனுமும்மைசால்
ஏயதிண்புவிபரிப்பதுந்தவமிகந்துவிண்ணவரைநலிவதூஉம்
நீயறிந்துணாதியாவரேனுமறைநேயாபாலிலுமெமன்புடைத்
தூயர்பாலிலுமொரிடர்விளைக்கிலவர்தோய்வரானிரயவாதையே. (18)
1373 மைந்தர்தந்தையர்களேனுமெம்முடையவடிவமானபழவடியர்பால்
நிந்தையாளரையொறுத்தபேரெமறுநேயமுள்ளவர்களதுசெயார்
புந்திநல்லறமிழைத்துமென்னகதிபுகுவர்யாமதுபொறேமெனா
அந்தமாவலியடங்குமாறுபுவியாசிலாதமுனிகாசிபன். (19)
1374 பாலனாகியவுணனையொடுக்கிவிரிபாய்திசைத்தலைவர்கீழுளோர்
மேலுளோரைநிலைநிறுவிமீள்கெனவிரைத்துழாய்மணியலங்கலான்
சாலநன்றிதெனவம்புயம்பொருவுதாளிறைஞ்சிவிடைகொண்டுநீள்
மாலகன்றமுனிகாசிபர்க்கதிதிமணிவயிற்றினொருமதலையாய். (20)
1375 தெளிபசுங்குறளதாகிவந்துவிரிசிகையொடும்புரிமுந்நூலொடும்
ஒளிதருங்குசையொடுங்கமண்டலமொடுங்குறுங்கையறுதண்டொடும்
மிளிர்தரும்பிரமசாரியாயடல்விரோசனன்புதல்வன்வேள்விவாய்க்
களிதரும்படிபுகுந்தமாலையெதிர்கண்டுநேயமதுகொண்டனன். (21)
1376 அருக்கியாதிவழிபாடுசெய்துமணியாசனத்ததிசயத்தொடும்
பொருத்தினானமுனிவரும்பராவினாபுகன்றமன்னனைமுகுந்தனும்
இருத்தியோவினிதினென்றுமூவடிமணயாம்விரு*சரனமளிக்கெனக்
கருத்தியைந்தன்னுவப்பவங்கணுறுகவிமகன்கருதியிதுசொனான். (22)
1377 ஆழிமாயனெழிலுருமறைந்துகுறளாகிவஞ்சனை*யிலெய்தினான்.
வாழியாயிதுகொடுப்பினின்னடைமன்னுவாயதவிர்தியென்னலும்
ஊழிமாலெமைபிரக்கினீவதினுமுறுதிவேறுமுளதோவெனா
வீழிவாய்மனைவிதானநீர்கொணரவிரகினாலவுணனுரைசெய்தான். (23)
1378 கொண்டுவந்தநிறைகெண்டிகைப்புனல்கொடைத்தடக்கையன்விடுப்பரே
வண்டுவார்மதனைப்பொ*மையுடைமையல்வெள்ளிதடைசெய்தலும்
தண்டுழாயவனறிந்துகையணிதருப்பைகொண்டதுகற்றதலான
மண்டுசுங்கனொருகண்ணிழந்தயலன்ருவினானதுடனிருதர்கோன். (24)
1379 மூவடித்துணைநிலங்கொளென்றுபுன்னமளரியங்கை*யைவிடுக்கமால்
ஓவவற்புவியளக்குநீள்விசுவவுருவமெய்திவிரிதரையையோர்
சேவடிப்படவளந்துவிண்ணையொருசேவடிக்களவைகண்டுமேல்
மாவலத்தகுவனமுடியிலோரடியைவைத்துமண்ணிடையழுந்தினான். (25)
1380 நேரமன்னதனில்விண்ணும****நிலைகலங்கியல*றுதலும்
சூரணைந்தபுருகூதனோடமர்ந்து*னைப்பதறிஎண்ணினில்
காரணைந்தெழில்கனிந்தசோலைநிறைகாழிமாநகரிலாபதுத்
தாரணன்றிருமுன்வந்துகூறவவர்தம்மையெம்மிறைதடக்கையால். (26)
1381 அஞ்சலென்றருளிவடுகனாகிமுரணவுணனைக்கடியு*மவனைநாம
மஞ்சுலாமவடுகரூபமுற்றிகனமடித்துமென்று****
எஞ்சலலலவனுமவ்வருக்கொடவ**லெழுந்தருளு***
நஞ்சுகொண்டவன்வணங்கல*****டோதுவான் (27)
1382 விழியிருந்துமவிழிமலரினீதுபுரிமிடலதென்னையெனவெகுளியால்
அழிவிலானொருகரத்தினமார்பனிலமப்***வனுமாமிபோய்
இழிவொடுந்தரணிமேல்விழுந்தனனவ்வெல்லைமமுளரிவலக்கண்
டொழிவின்மங்கலமெனக்களித்தருள்கவூழி***காழியாய். (28)
1383 வேறு.
என்றுதுளிநறையுமிழுமிரங்கமலத்தரசிருந்தாள்
கன்றுதுயர்க்கனல்கனற்றக்கடுவேனிகளந்தளிர்போல
நின்றிடர்கூரமயத்துநீதுவளேலெனக்காழி
குன்றுடையான்வேற்றுருவிற்கொழுநனையாங்**களித்தான். (29)
1384 அவ்வழிமாயவன்போற்றியகந்தையெனக்ககற்றியதை
எவ்வழியோருந்தெரிவானிடும்பையானகற்றிடுவான்
இவ்வழியேகிடந்தவுடலென்புமதனுரியையுநீ
வெவ்வழியில்லாய்தரித்தல்வேண்டுவலென்விருப்பிதுவால். (30)
1385 எனமொழியத்திருவருள்கூர்ந்திமையவர்தங்கம்மியனை
மனவணியான்பணித்தருளமறிந்தவுடற்பசுந்தோலைக்
கனைவிரைவாலுரித்தெலும்பின்கணத்தையொருகதையாக்கி
முனைமழுவாளேந்திதிருமுன்வைத்தான்வணங்குதலும். (31)
1386 பாசொளியவீருரியைப்பரித்தருள்கஞ்சுகமெனக்கொண்
டாசிகந்தமணிக்கதையையங்கையினிற்பிடித்தருளி
வாசவனாதியர்போற்றவடுகேசன்வயற்காழி
தேசுபொலிமலைச்சிகரத்தென்றிசையிலினிதிருந்தான். (32)
1387 வியல்வடுகனெனநிருதன்மிடல்கெடுத்தான்றனையடலால்
பெயர்வடுகநாதனெனும்பிஞ்ஞகனும்பரையருளால்
இயலிடமெய்துதிரெனலுமெம்பெருமானின்பூசை
அயர்வகலப்புரிகுதுநின்னருளுண்டேலெனவாங்கண். (33)
1388 அண்ணன்முடிக்கணிபெறுமானைந்துமுதன்முறையாட்டி
பண்ணமரும்புழுகுநறும்பளிதமொடுங்கலந்தணிந்து
தண்ணமருங்கொழுந்துகொழுஞ்சண்பகமாதியவிரைதோய்
ஒண்ணறுந்தார்வகைபுனைந்தவொலியன்முறைமுறைசாத்தி. (34)
1389 பதனுழுந்தினப்பமொடுபாளிதமுஞ்சஃகுலியும்
மதுவொழுகுமுக்கனியுமடற்றெங்கின்கொழுங்கனியும்
விதிமுறையினினிதருத்திவெள்ளியிராநள்ளிருட்கண்
இதயமலர்தரவழிபாடியற்றியிசையெடுத்தேத்தி. (35)
1390 ஈற்றுளைந்துவலம்புரிகளீன்றமணிநிலவுமிழச்
சேற்றுமரைமலர்குவியுந்தென்காழிப்பொருப்பரசே
போற்றுமெமைப்போலுமையிப்புகர்வாரத்தெவர்பூசை
ஆற்றுநர்மற்றவர்பெறுமாறருள்கவரம்பலவுமெனா. (36)
1391 பொற்புவியின்மாலன்புபுரிந்துவேண்டினர்நிற்ப
மற்புயனங்காழிவரைவடுகேசனெவ்வாறே
சொற்புகர்வாரத்திலெமைத்தொழுதாராதனைசெயினும்
அற்பினொடுதுதிப்பினும்யாமளிக்குதுமால்வரமனைத்தும். (37)
1392 என்னமுதுமறையொழுகுமீர்ங்கனிவாய்மலர்ந்தருள
அன்னவரும்விடைகொண்டாங்கமருலகினினிதணைந்தார்
தன்னனையான்மாலெலும்பைத்தண்டமெனப்பிடித்ததனால்
பன்னருமோர்பெயர்தண்டபாணியெனமருவியதால். (38)
1393 பானிலாம்புகர்தினத்துப்பானாட்கங்குலிற்பணிவோ
ஏனைவாரமுந்தொழுபேறெய்தினுமோர்போதெனும்
ஞானநாயகன்சட்டைநாயகனைத்தொழுவோர்வே
றானமாநிலத்திறினுமணைவரரும்பெறல்வீடு. (39)
1394 ஆதலினிவ்வியற்சரிதமனைத்துநுமக்கறிவித்த
தோதவுலவாதெனினுமுரைத்தனன்யானறிந்ததெனா
ஏதமிலாமுதுமறைநூலெனைத்தும்வடித்தெடுத்ததனி
மாதவனைப்பணிசூதமாதவன்மாதவர்க்குரைத்தான். (40)
25 - ஆவது வடுகநாதவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 1394.
----------------------------
1395 பாதிமதிநின்றொளிர்வேணிப்பரமன்வடுகநாதனியல்
நீதியுணர்ந்தபெருமுனிவர்நினதுகுரவனின்னகர்வாய்
நாதனருளான்மறைவகுத்தநலங்கூறென்னச்சூதனெனும்
கோதில்குணத்தான்விரித்தவழியறிந்தவாறுகூறுதுமால். (1)
1396 தண்டாமறைதேர்கவுதமன்செய்சாபவலியான்மதிபிறழ்ந்து
பண்டாயுலகாயுதனருகன்பவுத்தன்மீமாங்கிசன்வாமன்
உண்டாமினையோர்மதம்பொருளென்றுணர்ந்துறவோர்முதலானோர்
வண்டாமரைவாழ்புத்தேனைமருவார்துளபத்திருமாலை. (2)
1397 இரவிமுதலொன்பதின்மர்தமையெண்மாதிரத்துக்கடவுளரைப்
பரவிநாளுந்தனித்தனியேகருத்தாவென்றும்படிற்றுணர்வால்
விரந்தமையேகருத்தாவென்றக்கததேமாந்துவிபரீதக்
கரவினழுந்திமருண்டார்முன்கற்பகத்தியன்றதுவாபரத்தில். (3)
1398 பறவாப்பூவைநிறத்தானும்பதுமத்தானுமீதுணர்ந்து
திறலார்கயிலைச்சிவபெருமான்றிருமுன்னமரரொடும்பரவி
உறவாங்கருணைக்களைகண்ணேயொன்றாமுதலேகவுதமன்செய்
விறலார்சாபத்தறிவுடைந்தார்வேலைஞாலத்தவரெல்லாம். (4)
1399 காலுங்கதிரோனுதவியுன்னார்காட்சிக்கிருகண்ணமையுமென்பர்
போலும்புறத்தாறொழுகியெமைப்பொருளாய்மதித்துப்புன்னெறியால்
சாலும்பிறமேற்கோளினின்றுந்தலைவாநின்னைமறந்தறமோர்
நாலுந்துறந்தாரெனச்சிலம்பார்நளினமலர்க்கீழுரைத்தனரால். (5)
1400 ஆதிபகவனதுகேளாவருள்பூத்தெழுதாக்கிளவியொடும்
தீதிலுகத்தவர்க்குயர்வான்சேரும்புராணமெனைப்பலவும்
நீதிபுணரும்வியாதனெனநிலமீதுதித்துநெறிதிறம்பா
தோதுமுறைசெய்திடுகவெனவுவணவூர்திக்குரைத்தனனால். (6)
1401 நலனாருலகிற்கருமநெறிநழுவாவண்ணமூவாறு
பலனார்மனுமுன்மிருதிகளைப்பரிபாலனஞ்செய்தளித்தியெனப்
புலனார்கமலக்கிழவனுக்குப்புகறலோடுமிருவோரும்
வலனார்மேருவரைகுழைத்தான்மலர்த்தாடொழுதுவிடைகொண்டார். (7)
1402 கதிர்செய்மேருவரையில்வந்துகண்ணன்விண்ணோர்தமைத்தத்தம்
பதியேபுகுத்திப்பராசரனாம்பகவனெனைத்தன்மகவாதற்
கெதிரிலுறுமன்புறுபுணர்ச்சியெய்தவகுத்தவைகலுமிண்
டுதவலாலங்கணைவதெனாவுலகீன்ற்வனுக்குரைத்தகன்றான். (8)
1403 அனையகாலத்ததுவிழைந்தவறிஞர்பெருமான்பராசரமா
முனைவறீர்த்தமுழுதாடுமுறையாலெறி*ர்த்திரைக்காத்தில்
கனைவண்டிமிர்பூந்தாரேந்துங்கடவுள்யமுனைப்பேராற்றில்
துனைவினொடும்வந்ததுகடப்பான்றோணி*யக்குந்துறைசார்ந்தான். (9)
1404 இயங்குதோணியிவாந்துமச்சகந்தியெதுமோரிளங்கொடியை
வயங்குமுனிகண்டாண்டிரண்டுபருவங்குறித்தமகப்புணர்ச்சிக்
கயந்தீரோரையடுத்ததெமைமயணைதியெனலுமாயிழையும்
நயந்துள்ளுவப்பதெய்வநதிநடுத்*வினிலெய்தினர்கலந்தார். (10)
1405 கடவுண்முனியுமடவரலுங்கலந்தபுணர்ப்பாலாயிடையோர்
அடல்செய்திகிரிப்பெரும்படையானருமாமகவாய்வந்துதித்தான்
படர்செய்வலைமான்முலைதிளைத்தபழிபோயகலப்பிரமபுரத்
திடனெம்மடிகளடிபோற்றியென்றமுனியுமுயன்றதன்மேல். (11)
1406 தன்பேர்பெறவோர்சிவலிங்கந்தாபித்தயலோர்கூபமமைத்
தின்பார்பணியவுயர்ந்தானையெழில்செய்*வினுதித்தமையால்
அன்பார்தீபாயனனெனும்பேரணைந்தசிறுவன்பணிந்தேத்தி
உன்பால்கனியானுய்யுமதியுறுத்துகெனலுமுறுவர்பிரான். (12)
1407 பாரின்முதுநூற்பயிர்வளரும்பாத்தியனையதென்புகலி
ஊரிலெனக்கன்றருள்புரிந்தவுமைகேள்வனைநீபணிகெனலும்
நீரிற்கமலங்கண்முகிழ்ப்பநிறைவெள்வளைமுத்தொளிகாலும்
காரிற்பொலிபூம்பொழிலுடுத்தகாழிநகர்க்கண்ணவனும்வந்தான். (13)
1408 வந்துபிரமன்றடத்தாடிமதிக்கோடுரிஞ்சமுகையவிழும்
கொந்துமலிபூங்கொன்றைமுடிக்குழகன்பிரமேசனைப்போற்றி
இந்துவனையநுதற்பேதையிடத்தெம்பெரியநாயகனை
முந்துவழிபாட்டியலாற்றிமுறையாலிறைஞ்சிமுன்னின்றான். (14)
1409 எம்மான்போற்றியேறூர்ந்தவிறைவாபோற்றியுயிர்க்குயிராம்
அம்மான்போற்றியுலப்பிலாவழகாபோற்றியெனையாளும்
பெம்மான்பொற்றியளப்பரியபெரியோன்போற்றிநின்னடியேன்
மைம்மாசொழியவருள்பொழியும்வரதாபோற்றியெனத்துதித்தான். (15)
1410 துதிக்குமேல்வையெழிலொழுகுஞ்சுடர்காலொற்றைக்குழைகிழவன்
கதிர்ப்பூண்முலைமென்கொடியெனொடுங்காமர்விடைமீதெழுந்தருளி
உதித்தகுணத்தாய்நினதுதுதியுவந்தேம்பெறுகவரமெனலும்
விதிர்ப்பினொடுங்கைத்துணைமுகிழ்த்துவினைதீர்தீபாயனன்மொழிவான். (16)
1411 நின்றாமரைத்தாளென்னுளத்துநிலையல்வேண்டும்பலமறையும்
பொன்றாமேல்வீட்டியல்விரிக்கும்புராணப்பெருக்குமேழையினேன்
குன்றாவண்ணம்பெறவளித்தாட்கொள்ளவேண்டும்வள்ளலென
நன்றாய்ப்பரிசதீக்கைசெய்துநாதனினையவரங்கொடுத்தான். (17)
1412 அதுபின்முனிவன்முதுக்குறைவுற்றாருமாமறைநூல்பற்பலவும்
முதுமைநெறியாலீரிரண்டுமுறைசெய்தவற்றுளிருக்குவினைப்
பொதுமைதருமுவெழுகூறாய்ப்புணர்த்துப்பயிலவருக்குரைத்தான்
இதுபின்மறையைச்சதவிதஞ்செய்தியல்வைசம்பாயனற்கீந்தான். (18)
1413 சாமமறையையாயிரங்கூறியற்றிமுனிவன்சயிமினிக்கும்
ஓமநெறிசாலதர்வணத்தையொன்பானாக்கிச்சுமந்துவுக்கும்
தோமில்புராணவிரிவனைத்துமூவாறாகத்தொகுத்தவற்றைப்
பூமியினில்யாவருமுய்யும்பொருட்டாலினிதுபுகன்றளித்தான் (19)
1414 அளித்தபுராணமூவாறுமருமையுருவாய்ந்தாரமுதம்
துளிக்கும்பிறைக்கீற்றொளிர்சடையான்றுரிசில்பூசைபுரிதுமென்று
களிக்கின்றனமாலென்னமுனிகருணைபூண்டுபிரமதடத்
தொளித்தண்புனல்புக்கினிதாடியுரவன்பிரமேசனைப்பரவி. (20)
1415 அஞ்சிலோதியுமைக்கருள்செயம்பொற்றோணிமுழுமுதலை
நெஞ்சுளுருகிவரன்முறையானின்றுபணிந்துவென்றிபுனை
கஞ்சுகேசன்பதத்துணைகண்களிப்பத்தொழுதுகொழிதமிழால்
விஞ்சுமறைபாடியஞானவிரகன்றனையும்பரவியப்பால். (21)
1416 கொண்டறவழுமேனிலத்தகொடியினுடக்கம்பரிதிவெயில்
மண்டமெலிந்தபசுநிறத்தவயமான்குலங்கட்கயர்வாற்றி
அண்டமளக்குங்காழிபுரத்தவன்கோயிலுக்குவடகீழ்பால்
கண்டகணையோரிரண்டளவிற்கனற்பேரீசன்றென்கீழ்பால். (22)
1417 கேழில்விழுப்பந்தருமிலிங்கமொன்றங்கமைத்துக்கெழுமணியால்
வாழிநறுமஞ்சனவிதிநூல்வகைமையாற்றித்தகைநறும்பால்
ஆழியுயிர்த்தவாடகப்பூந்தருமாமலராலருச்சனைசெய்
தூழினியன்றதெய்வநைவேதனங்களாற்றியுளமகிழ்ந்து. (23)
1418 மடமைப்பிறவித்துயர்விளைக்குமாயைப்பிணிக்க்கோர்மருந்தாய
கடவுட்கூபதீர்த்தமதன்வடபாலிழைத்துக்கண்பனிப்ப
உடலஞ்சிலிர்ப்பவிறைஞ்சிநின்றவொன்பானிரட்டிக்கடவுளர்முன்
படலைப்பணியான்விடையிலெழுந்தருளிமகிழ்ந்துபகர்ந்தருள்வான். (24)
1419 என்னேயுமதுபணிநயந்தேமியைந்தவரநீர்பெறுகெனலும்
பொன்னேயனையான்றிருமுன்புபுராணத்தலைவர்துவண்டுடராஅய்
இன்னேயமைத்தகடவுளுக்குமின்னதீர்த்தந்தனக்குமெம்பேர்
மன்னேவிளங்கவருளென்றார்மதிவேணியனுமஃதளித்தான். (25)
1420 அன்றுமுதலேநம்புகலியமலன்றளிக்கீசானத்தில்
என்றும்பதினெண்புராணேசனெனவாய்ந்திருந்தவெம்மானை
மன்றவொருபோதிறைஞ்சுவரேல்வரம்பில்பலநூற்கடல்கடந்து
பொன்றலருமெய்ப்பொருட்டுணிவார்புகரில்வீடும்பொருந்துவரால். (26)
1421 அன்னபரமனருள்படைத்தவரும்புராணமூவாறும்
பின்னரெனதுதேசிகன்பாற்பேணிவரலுமாங்கவற்றை
என்னதறிவின்றிரிபகலவென்பாலளித்தானிதுநிற்கச்
சொன்னமறையின்பொருளெல்லாந்தொகுத்தோரிரண்டுவகைசெய்தான். (27)
1422 நகைசால்கிரியாகாண்டமெனஞானகாண்டமெனவவற்றை
வகையாலிருசூத்திரப்பெயரின்வைத்தான்வியாதனெனப்பெற்றான்
தகைசாலயனுமனுவாகித்தகட்டுமடல்கீண்டளிநறுந்தேன்
முகைவாயுகுக்குங்கமலவயன்முதுநீர்க்காழிப்பதியடைந்தான். (28)
1423 வேரிமலர்த்தாமரைக்கிழவன்வியன்பேர்த்தடம்புக்கினிதாடி
ஒருநியதிச்சடங்குமுடித்தோரைந்தெழுத்தினுருவோதி
ஆரங்கண்ணிப்பிரமேசனாராதனைசெய்தருந்தவங்கள்
பாரிசாதத்தருவினிடைபயின்றோர்திங்கண்முயன்றளவே. (29)
1424 வண்ணமிடற்றுப்பசுங்கமுகின்மடல்வாயுதிர்த்தசெம்பழுக்காய்ப்
பண்ணைவனசக்கைக்கழங்காம்பரிசுகாட்டும்வயற்காழி
அண்ணல்விடைமேலெழுந்தருளியன்பார்மனுவேதவமகிழ்ந்தேம்
எண்ணமுரைத்தியளித்துமெனவிறைவனுரைப்பமனுவுரைப்பான். (30)
1425 துயர்தீர்சுருதிமிருதியெனச்சொன்னபொருளையென்மடமை
வெயில்பாயிருள்போல்விளிந்தோடவிளம்பியருள்வாயெனத்தொழலும்
உயிர்தோருயிராயிருந்தபிரானுவந்தாங்கருளவப்பொருளை
இயலீரொன்பான்முனிவர்தமக்கிதயங்குளிரமனுவுரைத்தான். (31)
1426 வளங்கொளினையகதையையுரைவகுத்தோர்கேட்டோரெஞ்ஞான்றும்
களங்கமகன்றுமங்கலத்தாற்காதற்புதல்வர்ப்பேறடைவார்
துளங்கும்படர்கூர்தொல்லைவினைத்தொடர்ப்பாடொழிவாரெனத்தவத்தால்
விளங்குமுனிவருளங்கனியவினைதீர்சூதமுனிபுகன்றான். (32)
26 - ஆவது. வேதவியாசரத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 1426.

1427 ஆன்றவின்னருட்டேசிகன்காழிவாழமலனதடிபோற்றி
ஏன்றநான்மறைவகுத்தவாறுணர்ந்தனமென்றுமாதவரிப்பால்
சான்றசெந்தழல்வானவன்பணிந்ததுஞ்சாபம்விண்டதுமிவ்வூர்த்
தோன்றலெம்பிரானளித்துஞ்சொன்மெனச்சுதமாமுனிசொல்லும். (1)
1428 உவணைவானவரிரிதரவிருசுடருறுநிலைதடுமாறத்
தவமுயன்றுளோரலமரவெண்டிசைத்தந்திகள்வெருக்கொள்ளைக்
குவலயந்தனினெளியவாயிரமுடிக்கோளராவியல்சாய
அவனியங்குவானசுரரிற்புலோமனென்றசனியன்னவன்மேனாள். (2)
1429 ஓர்வருந்தவப்பிருகுவையிந்திரனொடுபுணர்ப்பினனென்னாத்
தீர்வருங்கொடுமொழியனமமுனிவனாச்சிரமமோர்தினத்தெய்தி
பேர்வருங்குணப்பிருகுவுமொழிந்துளபேருமாயிடைக்காணான்
சார்வருந்தவப்பன்னியைவேள்வியந்தலத்தினிலெதிர்கண்டான். (3)
1430 கண்டுமற்றவன்யாரைநீயென்றலுங்கருவயிற்றினளாய
வண்டுவார்குழலாள்பௌலாமியாமறைமுனியுயிர்த்தேவி
விண்டுநெஞ்சினிலதிர்ப்பினாலுரைதராதிருப்பவெய்யவன்வேள்வி
உண்டுதேக்கெறிவெஞ்சடர்க்கடவளையுற்றிதுபகர்கிற்பான். (4)
1431 புனிதமிக்கநீயறிகலாப்பொருளிலைப்புரியுமெச்செயற்கேனும்
நனிசெய்சான்றுளாயாரிவளுரைக்கெனநானியம்புறின்வேத
முனிவன்வெம்புறுமொளித்திடிற்றயித்தியன்முருக்கும்வேற்றுரையாடின்
துனிவிளைக்குமென்றழுங்கியுமுண்மையைத்துணுக்கினாலவன்சொன்னான். (5)
1432 மற்றவாய்மொழிகேட்டலுந்தடக்கையான்மடவரல்வளரைம்பால்
பற்றியீர்த்தலும்புரண்டனள்சிவவெனப்பன்முறைப்பெண்மான்போல்
உற்றரற்றினாள்கற்பினுமதிர்ச்சியிலுயிர்த்தசேட்டிளம்பாலன்
சொற்றமேனியிற்பிரமகாந்தியினும்வெந்தூளியாயினன்வெய்யோன். (6)
1433 ஆயவேலையிற்சேயினையேந்திநல்லகம்புகுந்தடல்வெய்யோன்
தீயசெய்கையோர்ந்தடிக்கடியினைவுழித்தேவர்கோன்மகமுற்றி
மேயநல்வளத்தொடுவரும்பிருகுவாமிக்கவன்மனையாடன்
பாயவெந்துனியோதியிலுணர்ந்தனன்பையுள்கூர்ந்தனன்மென்மேல். (7)
1434 காலமுன்றையுமொருங்குணர்பெருந்தவக்கருணையங்கடலன்ன
சீலமேன்மைசால்பிருகுமாமுனிவரன்செயிர்த்துவெங்கொலையோவா
ஆலமன்னவாளவுணனுக்குண்மையையறைந்தசெந்தழலோனை
ஞாலமீதுநீசருவபக்கணனென்னடக்கெனச்சபித்தானால். (8)
1435 இட்டசாபமேற்றனலவன்சினமுறீஇயீர்ங்கண்மாஞாலத்துப்
பட்டதன்கலையாவையுங்கொடுசெலப்பன்மகச்சடங்கெல்லாம்
முட்டல்கண்டவியெய்துறாவானவர்முகலுறழ்மணிமேனி
வட்டநேமியாந்குரைத்தலுமாங்கவன்வன்னியோடிதுசொல்வான். (9)
1436 பரந்தநின்கலைபண்டுபோற்பரப்புதிபாரினின்முனிசாப
அரந்தவெந்துயர்நீங்குறமுகிறவழம்பொனீடெயிற்றோணி
புரந்தனிற்புகுந்தெந்தையாராதணைபுரிதியென்றலுநேர்ந்து
நிரந்தனன்கலையனைத்தையும்விரித்தனனெருப்பினுக்கிறைமுன்போல். (10)
1437 விரித்தசெந்தழல்விண்ணவன்பண்ணைநீர்விரியிதழ்க்கமலத்தே
வரித்தநீளிலைமீக்கொளவணங்குபுவாய்ந்தநெற்கதிர்தெண்ணீர்
பரித்தவள்ளநீர்பருகுறுமிவுளியின்பான்மைகாட்டியகாழிப்
புரிக்கண்வந்தனனயன்றடமாடினன்புரிந்தனனியமங்கள். (11)
1438 குய்யகாசியென்றிலகியபுகலிவாழ்குழகனதடிபோற்றித்
துய்யவைந்தெழுத்தோதிமூதெயில்கெழுசுடர்த்தளிவடகீழ்பால்
எய்யுமுக்கணையளவையுட்டன்பெயரிலங்கமொன்றதுதாமித்
துய்யுமாறுதன்பெயர்புனைதீர்த்தமொன்றுஞற்றினானதன்றென்பால். (12)
1439 பின்னரும்பலபூசனைநெடும்பகல்பேணினன்பயில்வான்முன்
வன்னிவேணியான்போந்துநின்பூசனைமகிழ்ந்தனமுனிசாபத்
தின்னல்கூர்படரகல்கநீபெறுவரமின்னமுங்கொள்கென்ன
மின்னிலங்கொளியொள்ளழற்கிறையவன்விளம்புவானுளங்கூர. (13)
1440 அளியனேன்முயன்றிழைத்தவித்தடத்தினிலாடியீண்டமலேசன்
ஒளிமலர்ப்பதம்பரவினோர்சாபம்விண்டுறுபவமகன்றோங்கி
விளிவில்போகமுமேலைவீட்டின்பமுமேவுமாறருள்கென்னக்
களிநல்யானையீருரியரைக்கசைத்தவன்கனிவொடங்ககருள்செய்வான். (14)
1441 அன்னியம்படுநிந்தையிலொளிறுவேலரசர்செயிடையூற்றில்
மன்னிமண்டியவறுமையிற்கிரகங்கண்மாறியவிழுக்காற்றில்
இன்னலெய்துறாதின்பமேவெய்துறவெழிலுலாம்பொழிற்காழி
வன்னிலிங்கமும்வன்னியந்தீர்த்தமும்வயங்குமால்வடகீழ்பால். (15)
1442 வேறு.
இன்னணம்வழிபடுமெறிசுடரிறையவனிறையவனருளாலே
தன்னமர்பதியினின்மருவியபிறகொருதரமெயில்வளர்காழி
மன்னவனடிதொழுதிகல்பெருகினனெனமதிமதிமுனிசூதன்
சொன்னபின்முனிவர்களதுபுகலெனவகைதொகையொடுநனிகூறும். (16)
1443 ஆதியிலொளியுமிழ்தமனியவரைமிசையமரர்கள்பலர்கூடி
மாதலமிசைபுரிமகமுழுதிலுமொருவழியுணும்வகையாதே
ஓதுதிரெனவனலிறைபிருகுவினிடரொருவல்செய்தருள்காழி
நாதினலுமதுருமருவியவ்வுணவினைநானொருவழிகொண்டே. (17)
1444 என்றுநல்குவனென்விமையவரினிதெனவெரிசுடருயர்காழிக்
குன்றுறைமுதல்வனைவரன்முறைபரவுபுகுழைதரவிடைமீதே
அன்றெனையுடையவன்வரவருள்புரிதலுமலர்பொருமிருதாளில்
சென்றெதிர்பரவினனிதுதருகெனவிறைதிருமுனமெழுநாவான். (18)
1445 என்னெனிலிமையவர்மன்னுருவெவைகளுமெனதுருவினிலாக
நின்னருள்புரிகெனநிமலனுமருள்செயநிலமிசையதுநாள்கொண்
டின்னணவுருவொடுகடவுளரவியுணவியன்மகவினைதோறும்
வன்னிநல்குவனிதுமறுமுறைபுகலியின்மருவியவரலாறே. (19)
1446 இங்கிவன்வரவிதுவன்கறையிருள்கெடவெழுதருமொளிவெய்யோன்
மங்கலவளமலிவெங்குருவினிலுறைவரதனதடிபேணி
அங்கவனுயர்நிலைதங்கினனெனமுனியரசர்களதுகாதை
இங்கருளெனலும்விளம்பினன்மகிழ்தரவேதமின்முனிசூதன். (20)
27 - ஆவது. அக்கினீசுரர் மகிமையுரைத்தவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 1446.
-----------------------------
1447 வெங்குருவினில்வாழெந்தைமெல்லடிபணிந்துமேன்மை
அங்கியக்கடவுள்பெற்றவடைவிதுமகவானுக்கும்
செங்கதிரவற்குமுற்றசெருக்கினாலிவ்வூரெய்தி
பங்கமிலுயர்ச்சிவெய்யோன்படைத்ததும்பகரலுற்றாம். (1)
1448 தமவலிதுரக்குஞ்சோதித்தபனனுக்குலிசவேற்கை
அமரர்காவலனுநீயேயதிகன்யானதிகனென்னாக்
கமையிலார்முரணிமேனாட்கலங்கினர்தடுப்பொன்றில்லார்
மமதைநோய்கொண்டார்யாரேமருந்துவேறுதவற்பாலார். (2)
1449 முரணியவிருவோர்தங்கண்மொய்ம்பையாண்டளப்பான்றன்பால்
விரவினருரைப்பவன்னான்விண்ணவர்வேந்தனென்பான்
உரமலிகுலிசபாணியொருவனீதையமின்றே
கரமலிகதிரோயென்னக்கதிரவன்கனன்றுபின்னாள். (3)
1450 கடவுளர்பலர்க்குமேலாங்கருத்தனுங்கடல்சூழ்வையத்
திடனுளார்பலரும்போற்றுமிறைவனும்பல்லாறாக
அடர்கருமங்கட்கெல்லாமறிஞனுமாவேனென்னா
உடலும்வெங்கதிரோன்புக்கானொலிதிரைப்பொன்னிவைப்பில். (4)
1451 ஈரிரண்டியற்கைவிண்ணோரிருக்கையாயிருக்கையாய்ந்தோர்
பேரியல்வளர்க்குங்காழிப்பெருநகரெய்திவேதன்
சீரியதடத்துமூழ்கித்திருநிலையழகியென்னும்
காரிகைபாகன்செம்பொற்கழலிணைவழிபாடாற்றி. (5)
1452 அண்ணலேபோற்றிவிண்ணோரதிபனேபோற்றிமூன்று
கண்ணனேபோற்றிசூலக்கையனேபோற்றிசோதி
வண்ணனேபோற்றிகாழிவரதனேபோற்றியோர்பால்
பெண்ணனேபோற்றியாதிப்பிரமநாயகனேபோற்றி. (6)
1453 இனையனபுகழ்ந்துபோற்றியெந்தைவாழ்தளியிலாண்ட
கனைமதக்கன்றேயாதிக்கடவுளரடிபராவி
முனைவனாலயத்துமேல்பான்முக்கணையளவைக்கப்பால்
புனைதிருக்கோலக்காவாம்பூங்கொன்றைவனத்திற்புக்கான். (7)
1454 பூமலர்க்கிழத்திக்கென்றும்புனையுமங்கிலியமீந்த
மாமுழுமுதலைப்போற்றிமற்றதன்கீழ்பாற்றன்பேர்த்
தாமரைவாவிதொட்டுத்தன்பெயரிலிங்கந்தாபித்
தேமுறநனியாராதித்திருந்தனனுலப்பில்காலம். (8)
1455 வேறு.
இவ்வழியிருந்துழியென்னையாளுடை
மவ்வலங்கோதையாண்மகிணனேற்றின்மேல்
அவ்வழியினிதெழுந்தருளவேழ்பரி
வெவ்வெயிற்றேரினான்வீழ்ந்துவாழ்த்துமால். (9)
1456 அய்யனேபோற்றிநல்லழகபோற்றிவான்
மெய்யனேபோற்றிமால்விரிஞ்சன்காணருஞ்
செய்யனேபோற்றியென்றுவந்துசெங்கதிர்க்
கய்யனேத்தெடுத்தலுங்கடவுள்கூறுமால். (10)
1457 வளமலிபூசைநீவகுத்தவண்ணமெம்
முளமகிழ்ந்தனமுனக்குறுவதோதென
இளமதிகண்ணியாயிமைக்கும்வான்முதல்
தளர்வின்முப்புவிக்கும்யான்றலைவனாகவும். (11)
1458 ஏவருமெனைத்தொழுமெதிரில்செல்வமும்
தேவநீயருள்கெனத்திருவுளத்தினால்
ஆவயின்மகிழ்ந்தவையளித்துப்பின்னரும்
கோவுயரியகொடிக்குழகன்கூறுமால். (12)
1459 இத்தலைநீபணிந்தியலிலிங்கமும்
உத்தமத்தடமுமுன்பெயரினோங்குக
பத்தியாலிப்புனல்பானுவாரத்தில்
சித்திசெய்யானியாவணியிற்றேடியே. (13)
1460 தேளுறுந்திங்களிற்செயிரில்பங்குனி
நாளுறுமகத்தினினயந்துமூழ்கியே
தாளுறப்பணிந்துநந்தமைப்பராவினோர்க்
காளுறுதருமமுமனைத்துமீதுமால். (14)
1461 நின்னொடுநெடுமொழிநிகழ்த்தும்வாசவன்
பொன்னியுறோளினான்புவிக்கிராமனாய்
மன்னுநாள்வாலியாய்வருவனீயவன்
பின்னுதித்தவனுயிர்ப்பிரிவுசெய்தியால். (15)
1462 என்றுபல்வளங்களுமிரங்கிவெள்விடைக்
குன்றினானளித்தனன்குவலயத்தின்மேல்
மன்றவத்தடத்திடைமருவியாடினார்
பொன்றரும்பெரும்பிணிபோக்குவாரரோ. (16)
1463 ஆறரும்விழிப்பிணியங்ககவீனம்வெங்
கூறதிகாரமாங்கொடியவன்பிணி
வேறுறவிலகிவெய்யவனில்வீறுபெற்
றேறெழின்மதனெனவிருக்கின்றார்தமை. (17)
1464 நனியறிகுவெனெனநவின்றுசூதனாம்
முனிவரன்பின்னருமுதல்வன்காழிவாழ்
புனிதனதடியிணைபோற்றியுய்ந்தனன்
பனிமதியென்றதன்பரிசுங்கூறுவான். (18)
28 - ஆவது. சூரியன் பூசித்தவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 1464
------------------
1465 தண்ணறாவுமிழுங்கடுக்கையங்கண்ணித்தாழ்சடைத்தனிமுதற்காழி
அண்ணறாள்பரவியாயிரங்கதிரோனமரரிலுயர்நிலைமேய
வண்ணமீதன்னமணிநகர்போற்றிவாலமுதிறைக்கும்வெண்கதிரோன்
விண்ணுளோர்பழிச்சவியனிலையடைந்தவியப்பமும்விளம்புவான்றுணிந்தாம். (1)
1466 மிக்கமாதவந்தோய்தக்கனென்றுறுபேர்மிடவினானளித்தமூவொன்பான்
மைக்கருங்கூந்தலுடுநலார்தம்மைமதிக்கடவுளுக்குளமகிழ்ந்து
புக்கநாள்வதுவையாற்றினனவரைப்பொதுவறப்புணர்ந்தனைவாழ்கென்
றொக்கநல்குதலுமியைந்ததண்கதிரோனுறுமனைக்கொடுமணந்திருந்தான். (2)
1467 தினந்தொறுமொருவர்வனமுலைதிளைத்துச்செல்லுநாள்வல்லிருங்கூந்தற்
கனங்குழையவரிலுரோகணியிடத்துங்கன்னியங்கார்த்திகையிடத்தும்
மனங்குழைந்தனையானனிவிருப்பூர்ந்துமணத்தல்கண்டதுபொறாதேனை
அனந்தருநடையார்கொழுநனதியல்பையண்ணறந்தந்தைபாலுரைத்தார். (3)
1468 கேட்டலுமழன்றதக்கனாங்கமுதகிரணனைப்பக்கமொன்றினிலுன்
னீட்டெழிற்கலைசுள்யாவையுங்குறைகவெனச்சபித்திடலுமவ்வாறே
நாட்டொறும்வைகறோறுமோர்கலைபோய்நலிந்தனனிப்பெருஞ்சாபம்
வீட்டியானுய்வதெத்தலமென்னாமிக்குளங்கவன்றனன்விதுவே. (4)
1469 குரைகடற்புவியோர்குறித்தபல்பொருளுங்கொடுத்துவிண்ணகத்துவாழுநர்க்கும்
புரையுறுமிடர்நோயகற்றிவீடளிக்கும்புரமதுதோணியம்புரமென்
றுரையுளவதன்பாலெய்தியிவ்விடும்பையொழிகுவலெனவுடுபதிதான்
மரைமலர்க்கழனிக்காழிமாநகர்க்கண்வந்தயன்றடத்துநீராடி (5)
1470 இழுக்கறுநியதிச்சடங்குகளாற்றியியற்குருலிங்கசங்கமமாம்
முழுப்பரஞ்சுடரைவரன்முறையிறைஞ்சிமுன்புநின்றன்புமீதூர
ஒழுக்குறுகண்ணீர்வாரமெய்சிலிர்ப்பவுலையுறுமெழுகினுள்ளுருகி
விழுப்பமீக்கிளப்பப்பழிச்சினன்பலகால்வெண்ணிலாவுமிழ்கதிர்வேந்தன். (6)
1471 எந்தையாலயத்தைவலம்புரிந்தயல்போயீர்ந்தநுண்பளிங்கெனத்தெளிந்த
அந்தணீர்கொழிக்கும்விக்கினேசுரப்பேரணிநதித்தெய்வநீராடிச்
சிந்துரவேணிச்சிறுவிழிப்புழைக்கைச்செல்வனுக்கருச்சனையாற்றிச்
சந்தமோதகமங்கருத்தியெம்புகலித்தலைவன்வாழ்தளிக்குநேர்கீழ்பால். (7)
1472 முக்குரோசனைதூரத்ததாய்வசிட்டமுனிபணிதிட்டையின்வடகீழ்ப்
பக்கலாய்வில்லவனமுல்லைவனமேல்பால்தாய்க்குருக்கைக்குநிருதி
திக்கதாய்மாநீர்ப்புறவமாநதிக்குஞ்செம்பாம்பன்குடிக்குமோர்தெற்காய்த்
தக்கசீர்விழுப்பந்தரப்பெருநூலோர்சாற்றியமுகூர்த்தமொன்றாய்ந்து. (8)
1473 அள்ளிலைப்புன்னையகத்தினிற்றன்பேரலங்குமோரிலிங்கமுமப்பேர்த்
தெள்ளுநீர்த்தடமுமமைத்துவந்தனையுஞ்செய்தொரைந்தெழுத்துமந்நிழல்வாய்
உள்ளுறக்கணித்துத்தவம்பலமுயன்றவொளியுலாந்திங்கள்வானவன்முன்
வள்ளைவார்குழைமென்கொடியொடுங்குழகன்மழவிடைமீதுதோன்றினனால். (9)
1474 உவமனில்குணத்தாய்நினதுமாதவமீங்குவந்தனம்வரம்பெறுகெனலும்
தவளமால்விடையாய்தக்கனெற்களித்தசாபமுந்தவிர்த்தியென்பெயரில்
புவனியிற்பொலியித்தடம்படிந்திவண்வாழ்புனிதரைப்போற்றுநர்யாரும்
கவலுறும்வினைதீர்ந்தரும்பெறல்வீட்டிற்களிக்கவிஞ்செய்கெனக்கரைந்தான். (10)
1475 தலைவனுமவனுக்கவ்வரமளிப்பான்றக்கனெம்மடியனன்னவன்செ*
உலைவறுசாபமொழிப்புறாதேனுமுன்பணிக்குதவவேண்டுதலால்
நிலையுமுன்னுவாவிலொவ்வொருகலையாய்நிரம்புவாய்பின்னுவாவினிலோர்
கலையதாய்க்குறைவாய்வைகலுங்குறையுங் கலயையோர்கடவுளர்க்களிப்பாய். (11)
1476 வழங்குமவ்வரத்தாலொவ்வொருகலையாய்வளர்கவிக்கலைவளர்பக்கம்
அழுங்கலில்சுபமாமக்கலை நுகர்வோரனல்கதிர்விச்சுவதேவர்
முழங்குநீரிறைசட்காரனிந்திரனேழ்முனிவரோடசகபாதன்போர்க்
கொழுஞ்சமன்வாயுகவுரிதென்புலத்தார்குபேரனெம்மொடுமயன்முறையே. (12)
1477 நந்தையேதொடங்கிநுகரநீமறையோர்நாயகனெனும்பெயர்பெறுவாய்
சந்ததம்பயிர்களெவைக்குமோரிறையாய்த்தயங்குவாய்பிணியெலாந்தவிர்ப்பாய்
வந்த்மூவொன்பான்மகளிரையியல்பாய்மணந்தனைவாழியப்புணர்ச்சி
அந்தமார்குடிகைநான்கினுங்கருமமாவனசெயக்காவன்றே. (13)
1478 இப்பரிசெவையுமளித்தரன்விடைமேலிவர்ந்துவிண்படர்ந்தனனுளந்தோய
வெப்புறுமிடர்போய்த்திங்களங்கடவுள்வியனுலகெய்தினனெனலும்
ஒப்புறுமுனிவர்செடனேத்தியதுமுயர்கேதுபுரவரலாறும்
துப்புற்ழ்சடையாயருள்கவென்றிரப்பச்சூதமாமுனிவரன்சொல்வான். (14)
29 - ஆவது. சந்திரன் பூசித்தவத்தியாயம் முற்றிற்று.
(ஆக திருவிருத்தம் - 1478)
------------------
1479 வெள்ளிவெண்மதிமேலைநாட்டக்கன்வெஞ்சாபம்
தள்ளியுய்ந்தவாறின்னதித்தனிநகர்சார்ந்து
புள்ளிநீண்முடிச்சேடனுங்கேதுவும்போற்றித்
தெள்ளியோரெனப்பெற்றதுமொருவழிதெரிப்பாம். (1)
1480 முக்குரும்பையுமுருக்கியகாசிபமுனிக்குத்
தக்கதேவியாம்வினதைகத்துருவெனுந்தரத்தார்
மக்களெய்துவான்மனமலிந்தனையவன்மலர்த்தாள்
மிக்கவாதரத்தொடும்பணிந்துரைத்தலுமேனாள். (2)
1481 ஏலவார்குழல்வினதைகேணின்வயிற்றிரண்டு
சீலவண்டம்வந்துயிர்ப்பவாண்டாயிரஞ்செல்லக்
கோலமைந்தராங்கவற்றுதிப்பாரெனக்கூறிக்
காலமூன்றுணர்முனிவன்மாற்றவட்கிதுகரைந்தான். (3)
1482 உன்னகட்டினிலண்டமாயிரமொருங்குதிக்கும்
அன்னவயிற்றினீயருகமகப்பேறடைகென்னச்
சொன்னவாற்றினாயிரஞ்சினைகத்துருத்தோகை
தன்னிடத்துவந்தெய்தியோராண்டதுதணந்தே. (4)
1483 கணிக்குமண்டங்களவற்றினிற்கணிப்பிலாதனவாய்
மணிப்பணாடவிச்சேடனாதியபணிவரலால்
அணிப்பொலன்றொடிமகிழவம்மகிழ்ச்சிகண்டழுங்கித்
தணிப்பிலாதொருமுட்டையைவினதைகைத்தலத்தால். (5)
1484 வெருவலியின்றியேதகர்த்தலுமுனிவரன்விளம்பும்
பருவமுற்றுறாதுதித்ததோரருணனோர்பாதி
உருவொடெய்திமாற்றவட்குநீதொழும்பியாயுழல்கென்
றருளில்சாபமொன்றன்னைபாலளிப்பநொந்தனையாள். (6)
1485 மைந்தரெய்துறும்விருப்பினால்யானுமற்றவள்போல்
முந்துயிர்த்தலொவ்வாமையான்முட்டையைத்தகர்த்தேன்
இந்தவெங்கொடுஞ்சாபமீந்ததனையென்றிகப்பேன்
தந்துநீயிதிதவிருமாறுறையெனத்தனயன். (7)
1486 ஏனைமுட்டையிலெம்பிதோன்றுவனுனக்கென்னால்
ஊனமெய்தியசாபமாற்றுவனெனவுரையா
ஞானநாயகன்பூசையாலிரவிதேர்நடத்தற்
கானவெந்திறல்வலவனாயினனரோவருணன். (8)
1487 ஈதுநிற்கவவ்விருமடந்தையருமின்னளிசூழ்
தாதுலாமலர்ச்சோலையாட்டயருநாட்டனிவிண்
மீதுதோன்றியதேரொலியதுசெவிவிழலால்
ஓதுகென்றகத்துருவினுக்கோதுவாள்வினதை. (9)
1488 சதமகன்பரியார்ப்பெனவிப்பரிதனக்கு
நுதலுமேனியெந்நிறமெனமுழுமையுநோக்கின்
எதிரிலாதவெண்ணிறமெனவினதையாண்டியம்ப
அதனில்வாலதிகறுப்பெனக்கத்துருவறைந்தாள். (10)
1489 வாலுமவ்வொளியென்றனள்வினதையிவ்வார்த்தை
ஏலுமேலுனக்கடிமையென்றளவட்கிளையாள்
சாலும்வாலொளிகறுப்பெனினடிமைநின்றனக்கியான்
வேலுலாங்கணாயாவெனென்றுரைத்தனள்விதியால். (11)
1490 இளையசூள்புகன்றிவரகன்றிடலுமுன்னவடன்
தனையர்வானினின்றநந்தனாதியபணித்தலைவர்
துனைவினெய்தினாரிந்திரன்பரிநிறஞ்சொல்வீர்
வினையமிக்குளீரென்றலும்வெண்ணிறமெய்யே. (12)
1491 மேனிதன்னிலும்வெண்மைவாலென்றலுமுணர்ந்த
கானிருங்குழல்கறுப்பெனவுரைத்தவென்கடுஞ்சூள்
ஈனமெய்துறாதிருண்டவாளரவெலாமிமையோர்
கோனுலாம்பரிவாலினைமறைத்திரென்குறிப்பால். (13)
1492 என்றவாய்மொழிகேட்டலுமென்னிதுவன்னாய்
ஒன்றுதீமைசெய்துயர்வதிலொழுக்கினாலுடைந்தால்
வென்றியெய்துமாலறம்பிழைத்திடினுமேலோரைக்
கன்றல்செய்யினுநிரயமெய்துவர்பலகாலம். (14)
1493 தருமமுந்தெறுமெந்றொருகாதையைத்தாய்பால்
ஒருமைமைந்தர்களுரைப்பமுன்னளனெனுமுறுபேர்
நிருபனீதிசெய்தளிக்குநாட்கலிவலிநெருக்குண்
டருநிலந்துறந்தெய்த்துமவ்வறங்கெடாமையினால். (15)
1494 நவையுறுங்கலியகன்றொருநளிமதிக்குடைக்கீழ்ப்
புவியளித்தனனின்னமுமவன்பெயர்புகன்றோர்
எவரும்வெங்கலிநீங்கலானன்றியையிகந்தோர்
தவறியம்பினோர்வஞ்சகருய்வரோதரைமேல். (16)
1495 அன்னதாலடாதென்றலுமன்னைமுன்னாகச்
சொன்னதெய்வம்யானெனமொழிமறுத்தநீர்துகடீர்
மன்னவன்சனமேசயன்சத்திரமகத்தீத்
தன்னிலாகுதிக்காகுதிரென்றனள்சபித்தாள். (17)
1496 ஆயபோதரவரசருண்ணடுங்கீயீன்றாளை
ஏயவந்தனைபுரிதலுமென்மொழிகேட்பின்
மேயமாமுனியத்திகனும்மையிவ்வேள்வித்
தீயுறாவகைதெரிப்பனஞ்சலிரெனத்தெரித்தாள். (18)
1497 அவ்வுரைக்குடன்படுகிலாரநந்தனேயாதி
வெவ்வயிற்பொழிமணிப்பணாடவிப்பணிவேந்தர்
எவ்வமிக்கவிச்சாபமெவ்வாறினியிகப்பேம்
கவ்வைதீர்நெறியாதெனமனத்திடைகவன்றார். (19)
1498 அறிந்திழைத்தவல்வினைதொலைத்தரும்பெறல்வீடு
சிறந்தளிப்பதுங்காழியம்பதியெனத்தேறி
மறந்தழைத்தசேட்டநந்தனாதியரெலாம்வல்லே
உறுந்திறத்தில்வந்தெய்தினார்வெய்துறலொழிவார். (20)
1499 வரசரோருகன்றெய்வநீர்படிந்துநன்மலர்தூஉய்த்
பிரமநாயகற்பணிந்தருளுமையிடம்பிறங்கும்
குரவனீரடிதொழுதுகஞ்சுகத்தனிக்கொழுந்தின்
சரணமேத்திநின்றிருநிலையழகிதாடாழ்ந்தார். (21)
1500 உலவையந்திசைக்கடவுணாகேசனின்புறுதாட்
சலசமேத்திவெள்வளைகள்பந்தெனவெறிதரங்கம்
இலகும்விக்கினேசுரப்பெருநதிபடிந்தெவரும்
மலருலாம்பொழில்சூழ்கேதுபுரத்தினில்வதிந்தார். (22)
1501 வேறு.
வரமலிசூதமுனிவனிவ்வாறுவகுத்தலுமருந்தவரெமக்கோர்
புரவலகேதுபுரிவரலாறென்புகலுகவென்றலுமேனாள்
சிரபுரப்பெருமைதெரித்துழியந்தச்சிரமதுநீங்கியவுடற்கூ
றுரகனெம்பனாற்கேதுவென்றொருபேருற்றனன்பெற்றதையன்றே. (23)
1502 ஆங்கவன்கமலத்தந்தணனமைத்தவருட்பெருங்கடவுணீராடி
ஓங்குலகளித்ததிருநிலையழகியொடும்பிரமேசனைநிறைஞ்சிப்
பூங்கொடிக்கருள்செய்பெரியநாயகன்றன்பொன்னடிபடிந்துயர்குவட்டின்
பாங்கமர்ந்தெனையாள்கஞ்சுகமுதல்வன்பதந்தொழுதாயலக்கீழ்பால். (24)
1503 உளந்தருமெல்லையொருகுரோசத்தினொண்ணறாவூற்றெழுந்தொழுகும்
துளங்குபொற்றுணர்தூங்ககன்சினைசாதித்துருமமூலத்தினிலெவர்க்கும்
வளந்தருங்கடவுளிலிங்கமொன்றமைத்துமணிதெளித்தனையமாதீர்த்தக்
குளந்தனிகண்டுவரன்முறைபூசைகுழைவொடும்புரியுநாளாங்கே. (25)
1504 ஒள்ளியதகட்டுநெட்டுடல்வாளையுகளுபுதாக்கலுமுயர்ந்த
வெள்ளிவெண்பாளைப்பசுங்கமுகுகுத்தவிழுத்தகுதாற்றிளம்பழுக்காய்
தெள்ளொளிப்பவளத்திரளெனவிமைக்குஞ்செழும்பணையுடுத்ததென்காழி
அள்ளிலைச்சூலத்தொருமுதல்விடைமேலணங்கொடுமெழுந்தருளினனால். (26)
1505 எழுந்தருளிமையவில்லியைக்காணுஉவிணைவிழிபனிப்பமெய்சிலிர்ப்ப
அழுங்கலிலார்வமீமிசைபெருகவலர்கடூஉயங்கைமேன்முகிழ்த்து
விழுந்துபன்முறையால்வணங்கிநின்றானைவிடைக்கொடியுயரியபெம்மான்
ஒழுங்குறுநினதுபூசனைமகிழ்ந்தேமுறுவதுகேளெனவனையான். (27)
1506 பழமறைமலர்ந்தபவளவாய்முதல்வாபனிப்பகைவானவன்றன்னைக்
கிழமையான்மறைக்குமியலும்வெவ்வேறுகேழ்கிளர்கோள்களோடியானும்
நிழல்பெறுவலியுமளித்தியென்றிரப்பநீனிறவண்ணனேடரிய
கழலினானவனுக்கவ்வரமாங்கேகருணையாலளித்தனமென்றான். (28)
1507 என்றபூங்கடுக்கையீர்ந்தொடையாகத்தெம்பிரானணங்கொடுமேற்றுக்
குன்றினையுகைத்தாண்டினிதெழுந்தருளக்கோட்டமின்மனத்தொடுங்கேது
துன்றுபல்வளங்கூர்தனதுலகணைந்துதுளக்கமில்வலிபடைத்திருந்தான்
அன்றுதொட்டதனான்முனிவிர்காள்கேதுபுரியெனலாகியதவ்வூர். (29)
1508 உரைதருமனையான்செவ்வராவுருக்கொண்டுறைதலான்முறைமையாலிதற்லே
குரைகடலுலகத்திலகுசெம்பாம்பன்குடியெனப்பெயர்பெறுமிதன்கண்
நிரைமணிமௌலிச்சேடனேயாதிநீள்சினமாசுணத்தலைவர்
விரைமலிகேதுதீர்த்தநீராடிவிதிமுறைநியதிமுற்றினரால். (30)
1509 ஒருகணமேனும்பணிபவரிடையூறொழித்திருமையினுமெய்யுறுதி
தருபரன்கேதுநாதன்மென்கமலத்தாண்மிசைநாண்மலர்தூவி
வருசிரமுழந்தாளுரங்கரஞ்செவிகீழ்வாய்புயமுந்தியென்றிவற்றால்
தெருளுமோரைந்துமெட்டுமென்றியற்றுந்தெய்வவந்தனைபுரிந்தனரால். (31)
1510 ஆண்டினிதிருந்தவமலனாரருளாலன்னைவெஞ்சாபமுநீங்கி
ஈண்டியவிழுப்பமெய்தினருயர்ந்தாரிப்புனலாடியிம்முதல்வன்
வேண்டியதளிக்கும்பதந்தொழப்பெறுவார்வினையொடுங்கிரகநோயொருவி
நீண்டமெய்ஞானத்தொன்றியொன்றாநன்னிலையினினிலவுவரன்றே. (32)
(30-ஆவது சேடனுங்கேதுவும் பூசித்தவத்தியாயம் முற்றிற்று.)
ஆக திருவிருத்தம் 1510.
--------------
1511 புண்டரிகவயற்காழிபுரத்தநந்தன்முதலானோர்போற்றுமாறும்
பண்டடல்சேர்கேதுபுரவரலாறும்பகர்ந்தனையிப்பதியைமேனாள்
அண்டமெலாந்தொழுதமையும்புகன்றனையாலதனைவிரித்தருள்வாயென்ன
எண்டவத்தோர்தொழச்சூதமுனியுரைத்தலியலொருவாறியம்பலுற்றேன். (1)
1512 குணங்குறிகாரணங்கடந்ததனிமுதல்வனுயிர்க்கருள்வான்குறித்தோர்கற்பத்
திணங்கவருமுடிவதனில்விச்சையினின்றண்டமெலாமியற்றுங்காலை
மணந்தபிருதிவிக்குநிறம்பொன்னெனவாய்ரங்கோடிவகைசேரண்டம்
கணந்தனிலேவிரித்தவற்றையினிதளிக்கவயனாதிகடவுளோரை. (2)
1513 மாணுறுதண்கலையிருத்தியதிகாரமுதல்வரெனவகுப்பவன்னோர்
ஏணுமுறையளிபுரிந்துவருநாளிலவர்பலருமீண்டியென்றும்
பூணுமுதுஞானமுநல்லிசையுமிசைவான்விழையும்போதன்னோரில்
காணுறுநான்முகன்கலையாங்கடவுளரங்கவையடையக்கருதிச்சொல்வார். (3)
1514 தீட்டரியபழமறைநூலுரைப்பதுமுப்பொருளாகித்தெளிசேர்நெற்றி
நாட்டமுறுதனிமுதல்வன்வதிவதுதேரூழிபுக்கநாளுமுந்நீர்க்
கோட்டமிசைபொலிவதுதென்பிரமபுரம்பரவினுளங்குறித்தவெல்லாம்
ஈட்டமுறுமெனலோடுமெனையண்டமுதல்வருமங்கியைந்தார்பின்னர். (4)
1515 வென்றிதரும்புலியூர்க்குத்தென்றிசையிற்புள்ளிருக்குவேளூருக்கு
நன்றிசையீசானத்தில்வள்ளலுறைமுல்லைவனநகர்க்குமேற்கில்
பொன்றிகழுங்குரைதிரையபொன்னிநதிவடதிசையிற்புலவர்போற்ற
என்றுமுலப்பருமிறும்பூதெய்தியதென்பிரமபுரத்தெய்தினாரால். (5)
1516 அல்லியந்தாமரைக்கிழவன்றடத்தாடிப்பிரமேசனலர்தாள்போற்றி
வல்லியுமைக்கின்னருள்கூர்தோணிமதிவேணியனைவழிபாடாற்றிச்
செல்லியலுமேனியினானென்பையொருகதையாகச்செங்கைகொண்ட
எல்லியலும்வடுகேசனிணையடித்தாமரைபரவியேத்தல்செய்தார். (6)
1517 பூரணபுங்கவபோற்றிபுண்ணியநன்னிதிபோற்றிபுரைமைதீர்ந்த
ஆரணசுந்தரபோற்றியாடகநாடகமன்றத்தாடிபோற்றி
நீரணவுமணிவேணிநித்தியதத்துவபோற்றிநிமலபோற்றி
காரணகாரியங்கடந்தசிவபோற்றிகாழியருட்கடலேபோற்றி. (7)
1518 என்னவருந்துதிபலவுமேத்தியண்டமூர்த்திகடாமிமயவில்லி
தன்னமர்பொற்கோயிலின்முக்கோலளவைத்தாய்வடமேற்றலையினாகப்
பொன்னணிதாரிலிங்கமொன்றுதாபித்துக்குடக்கினொருபுதுநீர்த்தோயக்
கன்னிமலர்த்தடமியற்றியருச்சனையின்றுறைநின்றார்கணிப்பில்காலம். (8)
1519 அருந்தவங்கள்பலமுயலுமண்டமூர்த்திகண்முன்னரடல்வெள்ளேற்றின்
முருந்துறழுமுகிழ்நகையோடெழுந்தருளியெனையாளுமுதல்வனீண்ட
திருந்தியநும்பணிமகிழ்ந்தேம்விழைந்தபொருள்கேண்மினெனத்திருமால்செங்கண்
இருந்தமலர்ப்பதம்பரவியெழுந்துகுழைந்திதுகேட்பாரெவருமாங்கே. (9)
1520 நின்பதுமச்சேவடிகளெங்களகத்தெனுந்தடத்தினிலவல்வேண்டும்
பின்புலகினழியாதபேரிசையும்பெறல்வேண்டும்பெருமவென்ன
அன்புரிமையறிந்தமலனவெயளித்துவிண்ணிலெழுந்தருளிநாளும்
மன்பதைகள்பணிந்தேத்துமண்டநாயகனெனும்பேர்வனைந்தான்வள்ளல். (10)
1521 அளப்பரியகளிப்பொடண்டமூர்த்திகளுமியைந்ததலத்தடைந்தாரன்னோர்
விளக்கியபூங்குளத்துவந்துமாசிமதியாடியந்தவிமலற்போற்றி
வளப்படுமாணிதிமாதர்மக்களொடுநலனுகர்ந்துமறுமைவீடும்
துளக்கறுமாறெய்துவரத்தலத்தியலித்துணைத்தெனயாஞ்சொல்லற்பாற்றோ. (11)
1522 இந்நகரிலிழிந்துபதமைந்தோதிநீறுபுனைந்தெந்தைவேடம்
தன்னையணிந்தவர்பேற்றையானுரைக்குந்தரத்ததுவோதவத்தீரென்ன
அன்னவற்றின்பெருமையுமீங்கருளுகென்றுமுனிவர்தொழவளிசால்வேத
நன்னிலையிற்பகுத்தவன்றாள்சென்னியில்வைத்தருண்முனிவனவிலலுற்றான். (12)
1523 பரம்பனதுருவாகிப்பிரவணத்தோடொன்றியவைம்பதத்தைச்செவ்வே
கரந்தழுவுசிவவடத்தான்முப்பொழுதுநூற்றெட்டுக்கணிப்போர்வேதம்
உரந்தருமங்கத்துடனேபகர்ந்தபயனடைகுவரீதுயர்ந்தமூன்று
நிரந்தகுலத்தவர்க்காகுமைந்தெழுத்தெக்குலத்தார்க்குநிகழ்த்தலாமால். (13)
1524 மருவலுறுபதவிகட்குமுதன்மையதாயெழுகோடிமனுக்களுக்கும்
கருதுநடுநாயகமாய்ப்பரமனுருவாமைந்தெழுத்தைக்கணித்தோர்யாரும்
நிருமலனதுருவாவார்நிகழும்பாராயணத்தைநீத்தோரேனும்
ஒருபொழுதுநீறணிந்தீதெண்ணுவரேல்வல்வினையையொருவுவாரால். (14)
1525 குரையிருமலொடுதும்மல்கொட்டாவியுறிலாயுக்குறையாவண்ணம்
உரைதருமிவ்வைந்தெழுத்தையுச்சரித்தல்விதிமதியாலுஞற்றும்பாவம்
புரைவிடற்குமிதுதுணையாம்பூதிநிகரொழுக்கமும்புண்ணியமும்போற்றும்
விரதமுமொன்றினதறனாலெக்காலுநீறணிவார்மிக்கார்மாதோ. (15)
1526 புண்ணியநீரணிகல்லார்புரிதருமப்பயனின்றாம்புரிதானத்தார்
அண்ணரியகும்பிபாகத்தழிவார்மனுவொடுமற்றதுவின்றேனும்
கண்ணுதனீறணிவாரைக்கண்ணுறில்வல்வினையகலுங்கடவுணீற்றை
ஒண்ணுதலினணியாரைக்காணினிரவியைக்காணினொழியும்பாவம். (16)
1527 வாளிரவிகாணாரேலிலிங்கத்தைச்செந்தழலைவளஞ்சேராவை
நீளறலைவேதியரைப்பொன்னையுருத்திரமணியைநெறியேகாணின்
மூளுறும்வல்வினையகலுமிந்நிற்றின்வகுப்பையினிமொழியின்யாண்டும்
நாளுறுவேள்வியினீறும்வேள்வியினீறும்மறையோர்நயக்கலாமால். (17)
1528 ஏனைமுதுகுலத்தவருக்கியன்றசிவநிசியினில்வாளிரவிதோற்றத்
தானசுசியொடுகொணர்ந்தகோமயத்தைப்புனிததலத்தலங்குவில்வத்
தூனமின்மெல்லிலையொடுசேர்த்துண்டையமைத்துமியிடையிட்டொளிறுந்தீயால்
ஈனமறவிளைந்ததனைச்சிவகாயத்திரிமனுவாலெடுத்துப்பின்னர். (18)
1529 வரியரவம்புரிசடையான்றிருமுனிட்டுப்பதினொன்றுமனுவாலோதித்
திரிதலிலெண்ணிருகூறுசெய்தவற்றுட்சிவபெருமான்றிறத்தாலொன்றும்
உரியசிவவேதியர்பாலொருமூன்றுகூறுமளித்தொழியீராறு
விரிதருகூற்றையுங்கொடுபோய்மதிக்கொருகூறாயணியவேண்டுமாதோ. (19)
1530 வேறு
சாருமிவ்வியல்வெண்ணீற்றைத்தரித்துளார்க்குலகமூன்றில்
நேருறாப்பொருளொன்றில்லைநிகழிவன்கிளையினுள்ளோர்
ஆருநன்கயிலைசேர்வாரண்ணல்கண்மணிமற்றெம்மான்
சீருறுமுருவமென்பார்தெளிந்தவாலறிஞர்மாதோ. (20)
1531 மருவுருத்திரன்கணின்றுவந்ததோருருத்திராக்கப்
பெருமையையேவரேயோபேசுவாரதனைநன்றாய்ந்
தொருமுகமாதிமுன்னான்கொளிமுகமளவும்பூண்பார்
குருமணிவேணிமுக்கட்குழகனதுருவைச்சேர்வார் (21)
1532 தீயுமிழ்கணிச்சியண்ணற்றிருவிழிமணியின்சும்மை
மேயவான்கழுதையொன்றுமேற்கொளீஇவிந்தவெற்பில்
போயுயிருலந்துமன்னபுண்ணியப்பொருட்டாலன்றே
மாயிருங்கயிலைமீதுவதிந்ததோரூழிகாலம் (22)
1533 இம்மணியொன்றுசூடியியங்கிலோரடிக்கொன்றாக
மெய்ம்மலிவாசிவேள்விவியன்பலனடைவார்மிக்கீர்
எம்மனோர்விரித்துக்கூறுமிட்டதோர்நியுதமேனும்
அம்மவாயிரமதேனுமைஞ்ஞூறேயெனினுமாங்கே. (23)
1534 பரிந்தனர்வனையிலீசன்பதந்தனிலடைவார்கண்டம்
தெரிந்தவான்சென்னிதிண்டோள்சேர்மணிப்பந்தந்தன்னில்
அரந்தையில்லாதநூற்றெட்டதிற்பாதிபாதியீரெட்
டுரந்தருமுபவீதத்துமொண்சிகையினுமொவ்வொன்றே. (24)
1535 செவியினிலொவ்வென்றாதலாறாதல்சிவணவேய்ந்தாங்
கவிர்மதிக்கண்ணிவள்ளலைந்தெழுத்தோதுகிற்பான்
புவியின்மானுடவனேனும்பூதேசனவனன்னோனை
எவரெதிர்தொழினும்வல்லேயிகப்பரால்பிரமகத்தி. (25)
1536 இத்தகையவலிமைசான்றயெந்தைகண்மணியைநீற்றை
பத்தியாலணிந்துகாழிப்பதியினில்வதிவோரன்றே
முத்தராகுவரிவ்வூர்க்குமுக்குரோசஞ்சூழெல்லை
மத்தியிலுதித்தோர்யாரும்வருணவேற்றுமையொன்றில்லார் (26)
1537 இங்குலப்புறுவோர்க்கெல்லாமெதிரணைந்திமயவல்லி
பங்கனஞ்செவியிலைந்துபதந்தனைநுவலுமாற்றால்
அங்கவர்சீவன்முத்தராதலாலந்தணீர்காள்
வெங்குருநகர்க்குச்சீவமுத்தியூரென்பார்மேலோர் (27)
1538 சேற்றெழும்பகட்டுவாளைசெம்பழுக்குலைகள்சாயத்
நாற்றிளங்கமுகிற்பாயுஞ்சண்பையின்வியப்பமெல்லாம்
போற்றுமிக்கதையையாரேபுகலினுங்கயிலைவெற்பில்
ஆற்றலோடமர்வார்முன்னையரும்பவத்தொடர்புமாய்த்தே (28)
1539 ஆயிரஞ்சிவநிசிக்கணருந்துயிலயாமநான்கும்
ஏயுறாதெந்தைபூசையியற்றுறுபலனைச்சார்வார்
நாயகன்றிருமுன்காழிநற்கதையந்நாளாய்ந்து
நேயமோடுரைப்போர்கேட்போர்படித்துளோர்நிகழ்த்தினம்மா. (29)
1540 கதையிதுபுகல்கிற்பார்க்குக்காஞ்சனங்கூறைநல்லான்
முதலியவளித்துப்பூசைமுற்றினோன்றன்னையாதி
மதலிடைப்பாகனாளுமகிழ்தருமனத்தாலீட்டும்
இதமறுவினையுநீங்குமிம்முறைபுகன்றுளோர்க்கே. (30)
1541 இதிலொருகாதைகேட்குமிடையிலெய்யாமையாலே
மதிபிறழ்ந்தெழுவாராயின்மாணிதிமனைவியில்லம்
பதிமுதற்பலன்கடுய்க்கும்பருவத்தினிடையூறெய்திக்
கொதியழற்கும்பிபாகங்குளிப்பரான்மறுமைக்கண்ணும். (31)
1542 சென்னியிற்பஞ்சியாத்துத்தேறுமிக்காதைகேட்போர்
வெந்நுனையெயிற்றுப்பாந்தள்வேசரியாவரக்கால்
பன்னியவடைக்காய்மென்றோர்பசும்புழுநுகர்வோராவர்
அந்நிலைவணங்கார்கேட்பினலறுவாய்க்காரியாவார். (32)
1543 ஒதுநரிருக்கைமீக்கொண்டுறைகுநரெருவையாவார்
ஏதுறவடையவொப்பாயிருப்பவர்கோழியாவார்
போதுமிக்கதையைவேட்டோர்புகன்றுளோர்படித்தோர்தம்மைத்
தீதுரைத்திடுவோர்நாயாயோந்தியாய்செனிப்பாரன்றே. (33)
1544 முறையிதுவிரிக்கின்றோரைமுகமனன்கியம்பார்மாநீர்
அறைமுரற்றவளையாகியையிருபிறவியீனப்
பொறையுடைக்கரமுமாவார்புராணமீதுரைசெய்கின்ற
துறையிடையிடர்செய்வாரேற்றுணையெயிற்றுரகமாவார். (34)
1545 புகலியாளுடையான்காதைபொறித்ததோர்முறைக்குஞ்செவ்வே
பகருநர்தமக்குந்தூயபலகைகம்பளங்களீந்தோர்
துகளினேழ்மனுநாட்காறுஞ்சுவர்க்கபோகங்கடுய்த்து
நிகரிலாமுத்திவீட்டினிலவுவர்மெய்ம்மையீதால். (35)
1546 துகிரிளஞ்சடையினானுந்தொல்லுலகெல்லாமீன்ற
நகிலிளங்கொடியுமாங்கேநன்முனிக்கணங்கள்போற்ற
மகிழ்மலர்மகள்சேர்காழிமான்மியமனைத்துந்தேர்ந்து
பகர்தருமிடத்துநீங்கார்பயில்வரீதுண்மையுண்மை. (36)
1547 மாதியல்பாகன்காழிமான்மியம்படிக்கினீரெட்
டாதியம்புராணஞ்சொன்னவடைவொக்குங்கலியொன்றேனும்
பாதியேயெனினுமேகபாதமாயினுஞ்சொன்னோரும்
நீதியால்வினவினோருநேர்படார்மறலியாடல். (37)
1548 பட்டிமைவிளைப்போர்பொய்ம்மைபகருவோரயலோர்தம்மை
இட்டிடர்சொல்வரேனுமிக்கதையொருகாற்கேட்பின்
ஒட்டியவினைகளெல்லாமொருவிமாசகல்வார்கண்டீர்
சுட்டியோர்வரியஞானத்துறைக்கடல்படிந்ததொல்லீர். (38)
1549 பொற்புறுமெயில்சூழ்காழிப்பொருப்பினைநீலகண்ட
வெற்பெனவுரைப்பாரிந்தவெற்பினைப்பணிகின்றோரும்
அற்புறத்தொழுதுய்ந்தோரையாற்றெதிர்தொழப்பெற்றோரும்
கற்பனைகடந்தோன்செம்பொற்கழலிணையடைவாரன்றே. (39)
1550 இவ்வகையருண்மீக்கூறியியலுமாமறைகளெல்லாம்
செவ்விதின்வடித்தமேலோன்றிருவருள்படைத்தசூதன்
அவ்வியமகன்றநோன்மையருந்தவச்சவுனகாதி
மெய்வ்வழிமுனிவர்க்கெல்லாம்விருப்புறவிளம்பினானே. (40)
(31 - ஆவது அண்டநாயகர் மகிமையுரைத்தவத்தியாயம் முற்றிற்று.)
ஆக திருவிருத்தம் - 1550.
-------------------------
பொங்குபவு டிகபுரா ணத்தீ ரொன்பான்
புகல்பிரமாண் டத்தொன்று காந்தந் தன்னில்
சங்கரசங் கிதையிலொன்பான் சனற்கு மார
சங்கிதையி லொன்றுமும்மைப் பரிச்சே தத்தில்
அங்கொருபன் னொன்றத்தி யாய மாக
வறைதருநாற் பதுந்தமிழான் முப்பத் தொன்றா
இங்கவையா யிரத்தைஞ்ஞூற் றைம்பான் செய்யு
ளெனக்காழி மான்மியந்தா னியன்ற வாறே.
வாழி.
சீர்வாழ்கவானவரானினம்வாழ்கவருசெங்கோற்காவல்வேந்தன்
பார்வாழ்கமறைவாழ்கவெண்ணீறுமைந்தெழுத்தும்பரவிவாழ்க
ஏர்வாழ்கவேணுபுரிவாழ்கசிவனடியார்களென்றும்வாழ்க
சீர்வாழ்கவிந்நூலைவாழ்த்துநருங்கேட்குநருஞ்சிறந்துமிக்கே.
சீகாழித்தலபுராணம் முற்றிற்று.
ஸ்ரீசம்பந்தகுரவேநம:
திருச்சிற்றம்பலம்.
----------
சிவமயம்.
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
அருணாசலக்கவிராயரருளிய " சீகாழித்தலபுராணம்"
திருக்கைலாச பரம்பரை நிகமாகம சித்தாந்த
சைவ சமயாசாரியபீடமாய் விளங்காநின்ற
திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணியதேசிகசுவாமிகள்
கட்டளையிட்டருளியபடிக்கும்,
ம-ள-ள-ஸ்ரீ சீகாழி சபாநாயக முதலியாரவர்கள் விருப்பத்தின்படிக்கும்,
ஷயூர்நேடிவ் ஐஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் சீகாழி சிதம்பரபிள்ளையாலும்,
சிதம்பரம் சபாபதிதேசிகர் குமாரர் சோமசுந்தரதேசிகராலும்,
சென்னை:
ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
விய ளூ மாசி மீ
-----------------------------------------------------------
-----------------
திருச்சிற்றம்பலம்.
ஸ்ரீசம்பந்தகுரவேநம:
சீகாழித்தலபுராணம்.
14 - ஆவது, கிளியுபதேசித்தவத்தியாயம். (822 - 860 )

15 - ஆவது. வேணுபுரமானவத்தியாயம். (861-907 )

16-ஆவது. கழுமலமானவத்தியாயம் (908-926)
908 கடவுண்மரகதப்புரவிகுரத்தாலெற்றக் கருவிமுகில்விழுத்தியங்குஞ்சோலைவாய்ந்த, தடவுமலர்க்கோட்டினிறாலுடைந்துசெந்தேன்சாறுபடச்சேறுபடும்வயல்சூழ்காழி, இடனுடையவேணுபுரமெனும்பேர்பூண்டவியற்கையிதுகழுமலமென்றிவிவ்வூர்க்குற்ற, அடைவும்விரித்திசைப்பலெனமுனிவர்கோமானறைந்ததையுமொருவழியீண்டறைவென்மாதோ. 1
909 துகளகன்றபெருங்கேள்விமறைதேர்வாழ்க்கைத்தொழிலுரோமசனெனுமோர்பகவன்றொன்னாள், அகலிடத்தா ரழலாடிதலங்கடோறு மரும்பெறன் மாதவமுயன்றுளைப்பிறெண்ணீர், புகலரியகடவுணதிபடிந்துமாயைப்புணர்ப்பகன்றவெறுவெளியுட்டூங்கித்தூங்கா, நிகழுநிராலம்பசிவஞானந்தன்னைசேர்படாதுளமுருகிநிற்குநாளில். 2
910 கன்னியிளமடெடையளியுந்துளிக்குந்தெய்வக்கற்பநாண்மலர்நறைவாய் கவர்ந்துண்டாடும், மன்னியபூஞ்சுரும்பு மிமிர்வான்றோய்சோலைவளர்புகலிப் பதிபரவவருவானுள்ளே, தன்னியலும்பசுபோதமகன்றுமேலாந்தலைவனருட் போதம்வருந்தரத்தாலார்வம், துன்னிமனமொருட்படுவான்பன்றடாகந்தோய்ந்துபிரளயவிடங்கற்றொழுதுபோற்றி3
911 நஞ்சுபொதிமணிமிடற்றுக்கஞ்சுகேயனளினமலர்த்தாள்பரவிநகைவெண்கோட்டுப், பிஞ்சுமதிகிடந்திமைக்கும் பெருநீர்வேணிப்பிரமேசனடிக்கன்பு பெருக்கிநல்லான், அஞ்சுமமுதோரைஞ்சுவிதியாலாட்டியருத்திவழிபாடாற்றியடியேற்குன்றன், செஞ்சரணமுளரியைவிட் டெஞ்சல்செய்யச் சித்தநிலை பெறவருளிச்செய்வாயென்று4
912 காற்றிசையி னினிதிருந்ததிங்கண்மாலைக் கடவுளடிக்கருச்சனையில் கடமையாற்றி, மாற்றருமைப்புலனொடுக்கித் தோணிமேபாழ்விடையந்தணன்றிருத்தாண்மனத்தின்முன்னி, ஆற்றலுருகுணங்கரணம்பிறவு மெட்டாவற்புதநீடொளியொடும்பக்கழுந்திப்பன்னாள், நோற்றுடலம்வாட்டிய பேரறிஞன் முன்னநுனையெயிற்றுப்பணிமாலைநுடங்கமாதோ.5
913 கங்கைநதிவேணியுமுக்கண்ணுமான்றகறைமிடறும்பிறைமுளையுங்கரங்கணான்கும், மங்கையொருபாலு மணிகிளர்முந்நூலுமறிமழுவுமபெறுகருணை வதனப்போதும், கொங்கடருங்கொன்றையும்வெண்ணீறுமார்புங்கொலையுழுவையதளுமணிக்குழையுமாயன், பங்கயாண்ணிய மலரும்பொலியவாதிபகவனெழுந்தருளமுனிபணிந்துகண்டான்6
914 அருமறைநாயகபோற்றிஞானவல்லியாருயிரேபோற்றிமுக்கணமலபோற்றி
நிருமலமாயுலககாரணமாயம்பொனெடுவரையிலிருந்தவனேபோற்றிநேமித்
திருமகனையனலையடுகணையாக்கொண்டசிவபோற்றிநீறணிதிண்டோளபோற்றி
பெருகுசராசரவுயிர்கட்குயிராய்நின்றபெரியநாயகபோற்றிபெம்மான்போற்றி.7
915 ஓவருமைந்தொழிலுடையாய் போற்றியோகருளத்தி லெழுபரஞ்சுடரே போற்றிமாயன்,
பூவயன் போற்றியபாதகாலகால புண்ணியமங்களமேனிப்புனிதபோற்றி,
தாவருமான்மழுவணிகைத் தலத்தாய்போற்றிசந்திரசேகரகாமதகனபோற்றி,
மேவுபகனெனுங்கதிர் கணிடந்தாய்போற்றி விறல்வேங்கையதள்புனைந்தவிமலாபோற்றி.8
916 செக்கரிளஞ்சடைமுடியாய்போற்றி நீண்டசெம்பொன்வரைச்சிலைவளைத்தநம்பிபோற்றி,
அக்கரவமணிந்ததிரு வரையாய்போற்றி யாரணநாரணன்றேடற்கரியாய்போற்றி,
பக்கமலிகுறட் பூதப்படையாய்போற்றி பாய்திரைவெவ்விடநுகர்ந்த பரனேபோற்றி,
திக்கெவையுமம்பர மாவுகந்தாய்போற்றி சிவஞானகுருமுதல்வாபோற்றியென்றே. 9
917 என்புருகமயிர்பொடிப்பமொழிதள்ளாடவிணையடிப்பூங்கமலமிசையிரங்கியேத்தி,
அன்புருவாநின்றானையுன்போலன்பராருளர்நீமகிழ்ந்தன கேளளித்து மென்னப்,
புன்பிறவிப்பிணிதணிக்குமருத்துவாநின்பொன்னடியைப்பிரியாத நன்னர்ஞான,
நன்புலனொன்றிடவடியேற்களித்தல்வேண்டுநாதவெனப்போதமுதனம்பன்கூறும். 10
918 மம்மரறுத்தருள்யாமுய்யநின்னைமருட்டிய மாயையுமலமும்வினையுமோர்ந்து,
மெய்ம்மையுணர்வது ஞானமதுதான்றொல்லைவினைப் பாடொத்துழித்தோன்றுந்தோன்றுங்காலை,
எம்மருட்சத்தினிபாத மியையத்தோன்று மெமதருளேயுனக் குரிமையென்றுந்தோன்றும்,
அம்மலமைந்தும் மோருநாமுநீயுமநாதியெனவறிந்திடுதியறிவானமிக்கோய். 11
919 இருமாயைநீங்கியசத்தினி பாதந்தானிறைசரிதையாதிகளை யிழைத்தார்க்கன்றி,
மருவாதுநாமியற்றுந் தொழிலோரைந்துமன்னுயிரின்பொருட்டாகுங்களிம்புமூடி,
ஒருவாதசெம்பெனமாமலத் தாற்றம்மையுணராதெம்மையுமுணராதுயிர்கள்யாவும்,
கருமேவிமுன்னையிருவினைக்கீடாகக்கறங்கெனநின்றுழலுமுறுகதிகாணாமல். 12
920 பருவமதுகன்னியுழைப்பாரா நின்றபதிபோலப் பசுவினதுபருவம்பார்த்துத்,
தருதலினாற்பசுபதிநாமு*பொங் கன்னிசரிதைமுதல்வழிநான்குந் தகைசால்கேள்வன்,
பெருமிதநல்லிசைகேட்டலவனையெய்தும்பேராராதனைமுடித்தல்விழியாற்காண்டல்,
ஒருமையறுத்தனை மறந்துகலத்தல்போலுமுணரினெம தளவிலின்பமுண்ணுமாறே. 13
921 இயற்கைநிறந் திரிந்துறுபன்னிறங்கடானாயிருந்தபளிங்குச்சிபடு மிரவிமுன்னே,
மயக்கமறவிளங்குதல்போற்புலன்கண்மூடிமருண்டவுயிர்நமதருளை மருவித்தத்தம்,
செயற்கையுறுபசுகரணச் செய்கைநீங்கிச்சிவகரணத் தெமையுணர்ந்துதிளைப்பதல்லால்,
அயிற்பிலெமதைந்தொழிலையியற்றமாட்டாவலகை யுடையுறுப்பினர்போலமையுமன்றே. 14
922 ஓதறுகேவலசகலசுத்தமூன்றினுணர்வுமலிசுத்தவுயிர்க்கொழியவேனைப்
பேதுயிர்கட்கருளாற்றவிளங்காதுற்றபிணியறியுமருத்துவன்போல்வினைநாமீய
மீதுநுகரணுக்கண்மலவழுக்கைஞானவிரிபுனலாற்றுடைத்தன்றிவிவனீர்நீத்தம்
ஓதுகடற்புனலேனுங்கழுவலாற்றாமொய்த்தபுலப்பகைகடந்தமுனிவரேறே. 15
923 ஈட்டியனவிழித்தளவேயொழிந்தவேனையெடுத்தவினையுடலோடுமெதிர்நாளெய்தக்,
கூட்டும்வினையெமையுணருந்திறத்தான்மாயுங்குறைவறவே குறியாதுகுறித்துச்செல்வன்,
நாட்டுறுபல்பொருடொறுநாமியைந்தவண்ண நயப்பதுவேஞானமெனநல்கியாங்கே,
ஓட்டுபுனல்விழியருவியொழுகாநின்றவுரோமசன்பாற் பின்னருமொன்றுரைப்பானண்ணல். 16
924 மாற்றரியவெமதுதிருவாக்கினாலுன்மலங்கழுவவிளங்குதலா லிவ்வூர்க்கென்றும், சாற்றரியகழுமலமென்றாகுநீயுந்தாணிழற்கீழெய்துகெனத்தண்டேன் சிந்திக்,
கீற்றுமதிக்கோடுழக்கமுகைவாய்விண்டகிளரொளியகடுக்கையந்தார்கிடக்கும்வேணிக்,
கூற்றடுதாண்மழவிடையூர்குழகன்செம்பொற்கோயிலிடைமறைதலொடுங்குணக்குன்றன்னான். 17
925 பாசமலவலிகடந்துகலாதிமாறிப்படர்கரணம்குணம்பொறிகள்பலவுஞ்சாய்ந்து,
நேசமதிநினையாதுநினைந்துஞானநீடொளியிலொன்றியொன்றா நிலைமைத்தாகி,
மாசகல்பேரானந்தவாரிதோய்ந்தமாமுனிவன்சரிதையிதைவரைந்தோர்கேட்டொர்,
தேசுபெறவிளம்பிடுவாரெவருஞானச்செல்வரெனவீற்றிருப்பார் சிவன்றாள்பெற்றே 18
926 கொள்ளைவரிவண்டுழக்கமுகைவாய்விண்டகோகனகத்தடம் பொகுட்டிற் பொலன்சூட்டன்னம்,
கள்ளவிழிப்பெதும்பையர்காற்சிலம்பினேங்கக் கருங்களமரரங்கிதெனக்கணிக்குமாநீர்,
வெள்ளமுதுதடத்தெழுந்தவெடிவாய்வாளைமிடற்க்கமுகமடல்கீறிவிரிதேனாட்டும்,
அள்ளல்வயற்கழுமலத்தினியலிதென்றானருங்கலை நூற்றுறைகடந்தவறிஞர்கோமான். 19
16-வது கழுமலமானவத்தியாயம் முற்றிற்று
ஆக திருவிருத்தம் 926
-----------
17 - ஆவது புறவமானவத்தியாயம் (927- 965 )
927 சிறையாருமலப்பகைசெற்றுமுனித்திலகன்சிவஞானபதம்பெறலால்
மறைவாணர்துவன்றியகாழிகழுமலமாகியவாறிதுமேலிதுதான்
குறைநாடுகபோதநிறைக்கொருவன்கொழுமேனியரிந்தெழில்பெற்றிடலால்
முறையேபுறவப்பெயருற்றதுவுமுனிபுங்கவனோதியவாமொழிவாம். 1
928 விரையார்தருகொன்றைநறுந்தொடையான்வேடங்களினீடுகருத்துடையான்
வரையாதுதருங்கடிவார்முரசமாறாமன்முழங்குகடைத்தலையான்
புரைதீரருணகுலதீபமெனப்புனைமாமுடியான்முனைநாளினெடுந்
திரையாடைமடந்தைமணாளனடற்சிவிசக்கரவர்த்தியெனுந்திறலான். 2
929 மலையொத்ததடம்புயமுஞ்செயமுமலரொத்தவிழிக்கடையுங்கொடையும்
கலையொத்தகுணத்துறையும்பொறையுங்கடலொத்தநிதித்தனமுங்கனமும்
துலையொத்தசமத்துவமுந்தவமுந்துகளற்றமனத்தருளுந்தெருளும்
உலகொத்தசரித்திரமும்பரமுமுடையான்மனுநீதிவரம்புடையான். 3
930 காலந்தொறுமாமழைமாரிகொளக்கலைவாணர்மகிழ்ந்துபொன்மாரிகொளச்
சீலம்புனைநூல்வழிதீவளையச்சேரும்புகழோரெழுதீவளையக்
கோலொன்றினிரும்புவியேவல்செயக்கோவூர்தியடிக்குளமேவல்செயச்
சால்பொன்றியசென்னிகுலம்பொலியத்தன்னோர்குடைகொண்டுபுரந்தருணாள் 4
931 அனையான்முதுவேள்விசெயக்குறியாவகிலத்தலகோடியினுத்தமமாய்
முனையோகிகண்ஞானிகள்வாழிடமாய்முத்தாபமுருக்குவதாய்மறுமைத்
துனைபவநூறியருட்டருமத்துணையாயதிபாவமொழித்திடர்தீர்
புனைமாதவசித்திவிளைக்குமெழிற்பொலிகாழியுண்மந்திரிமார்களொடும். 5
932 தானைக்கடல்சூழ்வரவெய்தியயன்றடமூழ்கியருட்பிரமேசனைமெய்ஞ்
ஞானக்குருவைத்திருமாலுரிசேர்க்குகஞ்சுகனைத்திரசுந்தரியைச்
சோனைப்புயலன்னவனன்பிடனொடுந்தொழுதந்நகரத்தின்வடக்கயல்சூழ்
மானத்துறவோர்விதிநூல்வழியேமகமொன்றுதொடங்கியவெல்லைதனில்.6
933 ஆதிக்கயிலாயவரைப்பெருமானரசன்புரிநீதியுமாற்றமும்
சோதிக்கநினைந்தமரேசனையுஞ்சுடரோனையுமுன்னினன்மற்றவரும்
நாதித்தகறங்கருவித்திரள்சூழ்நகுவெள்ளியடுக்கலினந்திபிரான்
ஓதிப்புகுவிப்பநுழைந்தெனையாளுடையானடிகண்டுபணிந்திடலும். 7
934 முன்னிற்பவர்தம்மொடுமெம்முடையான்முறையாலருள்செய்திருவீருநெடும்
பொன்னித்திருநாடுறுகாவலவன்புகழ்மிக்கபுகார்நகரத்ததிபன்
சென்னிப்பெருமானுலகம்பரவுஞ்சிவிசெய்மனுநீதியைமூதுலகோர்
உன்னித்தெரிவான்மனம்வைத்தனநீருடனிக்கணமேதெரிவித்தணைவீர்.8
935 என்றாதிபரம்பரனல்குதலாலிமையோரிறையுந்தழல்வானவனும்
சென்றார்பலதேயமகன்றுகளிச்சினவாளையெழும்புனனாடணுகிக்
குன்றாமுறைநீதிசெய்வேலுழவன்குறியாதவுருக்கொடுகூடினமேல்
இன்றேநமதெண்ணநிரம்புமெனாவிருவோருமறைந்துருமாறினரால். 9
936 சேனத்திறைவானவனாகிவரச்செங்கட்புறவங்கியுமாய்வெருவா
மானக்கொடிசூழ்திருமாநகர்வாய்மனுசேகரன்வேள்விசெய்சாலையினில்
கூனற்புறவாவிதளர்ந்தலறுங்குரலோடுமொடுங்கியடைந்துநெடும்
தானக்கடலொத்துளமன்னர்பிரான்சரணேசரணென்றுவிழுந்ததுவே. 10
937 வீழுஞ்சிறுகட்புறவுக்கருளால்வெருவேலொருபோதுமெனக்கருகே
ஆழுந்துயர்விண்டினிதாயுறைகென்றபயந்தருமவ்வுழிவெவ்வியகட்
போழுஞ்சிறுதுண்டமொடும்பொருமிப்புறவெங்ஙனமென்றொருகங்கமுமேல்
ஏழுண்டவயக்களிறன்னவன்முன்னெய்திச்சிலவெய்யவுரைத்திடுமால். 11
938 அரைசேயுயர்சோழர்பெருந்தகையேயளியேனெடுவெம்பசியாறிடுமா
றிரைதேரியவந்தகபோதமரோவின்னேதருகென்னலுமன்னர்பிரான்
உரைசாலுயிரேனுமளிப்பதலாலுன்றஞ்சமெனப்புகுமோருயிரைத்
தரையாள்பவரீவதுநேர்குவரோதருமத்தினெறிப்படுதன்மையினால் 12
939 தண்டாரவனீ துரைசெய்த லொடுந்தணியாவெனிரும்பசிதீர்புறவைக்
கொண்டாயென்வயிற்றெரிமண்டியடக்குடர்வேவதுனக்கழகோகணமுன்னே
உண்டாகவடுக்கவிரங்கினையோவூனுண்ணவிரும்பினுனக்கரிதோ
கண்டார்பொருண் மன்னவர்கொள்வரெனிற் கங்கத்தினுமுண்டுகொல் காவலனே. 13
940 வெருவுற்றபுறாவெனநாடியநின்விழியாலழியும்பசிகொண்டொருபா
றுருகுற்றதெனத்தனிநாடிலிழுக்குளதோவுனதாள்புவிமன்னுயிர்போல்
மருவுற்றனன்யானயல்வேறுளெனோமற்றொன்றினையொன்றடமாமலரோன்
நிருமித்தவிரைக்கிடையூறுசெய்தானீதிக்கிதடாதுநெடுந்தகையே. 14
941 போர்க்கென்றிருமன்னுயிர்பொங்கியெழிற்புறநின்றுமகிழ்ந்திடலன்றியுமே
பார்க்கின்றவர்சீறுவரோவவர்போற்பார்வேந்தர்பொறார்களெனிற்றலவா
வேர்க்கின்றனநின்னுலகத்திலையோவிழிகண்டதொறுப்பரெனிற்பசியால்
கூர்க்கின்றவெனக்குமொராறுதனைக்கூறென்றுயர்பாறுபுகன்றதுவே. 15
942 வெம்பாறுபுகன்றதுமன்னர்பிரான்மிளிர்செஞ்செவியேறிவியப்பமுறீஇ
அம்போருகவாண்முகவன்புகல்வான்பயம்புகுமொருயிராருயிர்போல்
நம்பாதரமிக்கதுகாணிடர்கூர்நனிநோயடவந்துளதேலதனுக்
கைம்பூதவுடம்பிலிடந்தருவாராரோபுகல்வீரமுடைப்பறவாய். 16
943 பாருள்ளவுயிர்க்குடல்யானெனவேபாராவதமென்னடிபற்றிவரச்
சூருள்ளுபுநீயுமடுத்தனையாற்சுடுவெம்பசியாலுயிர்போகறியாச்
சாரும்புறவன்னதுநீபருகிற்றன்னாருயிர்போமினிநீவிழையின்
தேருந்தசையேனுமிறந்துபடாச்சேணாரமுதேனும்வழங்குவெனால்.17
944 சோராவமுதுந்தருதன்மையனீதொல்லூனைவிரும்புதலன்றியெனக்
காராவமுதென்னெனமன்னர்பிரானயலோருயிரைக்கொலைசெய்திலெனென்
சீராருடலூனிடுவென்கவருந்திறமெங்ஙனமென்னமகிழ்ந்தபருந்
தோராதுலையிற்புறவுக்கிணையொத்திடவுன்றசைதந்தருளென்றதுவே18
945 பாறங்ஙனமோதலுமீதுமெனப்பல்லோருணவுள்ளதெலாமுதவா
தாறொன்றுகவர்ந்ததன்மேனியின்மேலருளற்றுமுனிந்தனனோவலரும்
கீறுண்டமுளைப்பிறைவேணியினன்கிளருஞ்செயலோவயலொன்றுளதோ
கூறுண்டதனீதியினிற்சிறிதுங்கோடாமைகுறித்தனனோநிருபன். 19
946 மறைவாயிருவானவரும்பலமாமறைவாயிருவானவருங்கரையத்
துறையூபதலத்தருகாகநெடுந்துலையொன்றுநிறுத்திமதிக்குடையான்
நிறைவேதியராதியர்போதியல்கண்ணிணையாரிமைமூடியிரங்கவெழுந்
துறைசாயவிடுத்தொருபூமுகவாளுருவிக்கொடுநின்றுபினொண்டிறலோன்.20
947 மண்ணாள்பவர்மாதிசையாள்பவர்மாமலையாள்பவர்வார்கடலாள்பவர்நீள்
விண்ணாள்பவர்யாவரும்வெய்துறவோர்வினைவெங்குருதிக்கணரும்புறவைப்
பண்ணாநொருதட்டிடையிட்டுமுறைப்படியேயடிதொட்டுமிடற்றுவரைக்
கண்ணர்தசைமற்றொருதட்டிடையேகைவாளினரிந்துசுமத்தினனால். 21
948 கோலேறியவூனிடுதட்டொருபுட்கொண்டேறியதட்டதுகீழுறவே
மேலெறுதல்கண்டடலேறனையான்வேறுந்தசையில்லெனமெய்யிளையான்
சால்பெறியதாரணியெங்கணுமோர்சமமேறவிருந்தியல்செவதெனப்
பாலேறுதன்னாகமொடேறியதைப்படிவித்தனன் மெய்பொய் யெனத்தெரிவான்.22
949 மெய்யோடுதிரம்பொழியக்கழிபோல்வெற்றென்புநரம்புதுலங்கநிணப்
பய்யோடுகழிந்துமுன்னாமியல்பிற்பயில்கின்றவனாவியைவைத்ததுதான்
மெய்யோமனுநீதிகொலோவெனையாள்விமலன்செயலோவரசன்பொறையோ
அய்யோவிவனொப்பவர்முப்புவனத்தாரோவினிமேலுமுன்னாளினுமே. 23
950 மண்ணஞ்சினமாதிரமஞ்சினநான்மறையஞ்சினமாதவநோன்மைகெடார்
எண்ணஞ்சினயாகதலத்தறவோரின்மஞ்சினவிண்டைமலர்க்குடிவாழ்
பெண்ணஞ்சவுமஞ்சலனாகியறம்பிழையான்விரதத்தையறிந்தியமன்
கண்ணஞ்சினவந்துகரந்துறையுங்ககனாதிபனுந்தனியஞ்சினனால்.24
951 அப்போதுபருந்திறைவானுலகத்தவருக்கிறையாகிவிளங்கமலர்க்
கைப்போதுபொழிந்திமையோர்மகழக்கடிவார்முரசங்களியங்குளிறச்
செப்பேர்முலைமங்கையராடல்செய்ததேசாதிபர்நின்றுதொழத்துலையின்
துப்பேறியதட்டினிறங்கியெழிற்றோளாமணியன்னவனின்றளவே. 25
952 உலகத்தறியாதவருந்தெரிவானுன்னீதியையாதிதனேவலினால்
இலகத்தெரிவித்தனனிந்திரன்யானிவனுந்தழல்வானவன்முன்னொருநாள்
தலைபெற்றதவிசிவெந்நென்புதனைத்தருகென்னவருந்தவனிதலுமே
நிலைமைக்குலசப்படைபெற்றனென்யானின்னொப்பவனன்னமனோபுகலாய்.26
953 புரமட்டபுராதனனின்னருளிற்புக்கேமொருமுப்புவனத்துளும்வாழ்
அரசர்க்கரசானபெருந்தகையேயழிபட்டநின்மேனியைநிலகமுகில்
பரமுற்றபசுங்குலையைச்சிதறப்பைஞ்சேலுதறிச்செஞ்சேறுபடும்
தரமிக்கவயற்புகலிப்பதிவாழ்தலைவன்றரந்வலிகொண்டிடுவாய்.27
954 வேறு.
என்றுபுகன்றீர்வாளினரிந்ததகையாவையுமுன்னியல்பிற்கூடி
நன்றுபொலிவுறப்பொலிந்துவாழ்தியெனமன்னனுமன்னன்மைவாய்ந்து
குன்றினிருசிறகரிந்தோய்நீர்வேட்கைமிகவுடையேன்கொடுத்தியென்ன
அன்றுபுறவினைநோக்கியைங்கரன்காவிரிப்புனல்கொண்டளித்தியென்றான். 28
955 ஆங்கதுசென்றகன்கரையையலகுகொடுகீண்டுய்ப்பவலங்குதெண்ணீர்
ஏங்கொலியின்வரலோடுநிருபனந்நீர்பருகிவிடாயிகந்தான்விண்ணில்
ஓங்குதருக்காவலனுமனலோனுந்தம்பதியிலுற்றார்மண்மேல்
வீங்குசிறைப்புறவுகொணர்ந்தளித்தலினாற்புறாதியாய்விளங்கிற்றன்றே.29
956 இவ்வாறுநிகழ்ந்தபின்னர்வேள்விவினைத்துறையாற்றியிமயவெற்பால்
தெவ்வாறுகடந்தபரன்றிருவருளீதெனவுன்னித்திணிவெண்கோட்டு
மைவ்வாரிமதமலையானைம்பெருஞ்சுற்றமுந்தழுவமதுகைத்தானை
அவ்வாறும்புடைநெருங்கத்தோணிபுரம்பேணியவென்றெழுந்துபுக்கான். 30
957 தேராழிகிழித்தநெடுந்திருவீதிகடந்தமலன்செம்பொற்கோயில்
ஓராழிமகன்மகன்செய்தீர்த்தமதுபடிந்துகடனொருங்கேயாற்றி
நீராழியிளம்பரிதிநிகர்நிறத்துக்குருபரனைநிமலையோடும்
பாராழியன்பினொடும்வணங்கிமலைக்கொழுந்தினடிப்பதுமம்போற்றி. 31
958 கைம்மலையீருரிபோர்த்தபிரமேசனிருபாதங்கனிந்துபோற்றிச்
செம்மலர்ப்பொற்றடக்கையினாற்றுநறுமஞ்சனமாட்டித்தெய்வச்சாந்து
மெய்ம்மலியானைந்துமமுதோரைந்தும்விரையுளவெவ்வேறுமாட்டி
அம்மலர்கொண்டருச்சனையின்றுறைமுடித்துப்பரிவொடுமின்னமுதுமூட்டி32
959 வாசநறுந்தூமமெடுத்தலங்குசுடர்நிரைகாட்டிமலர்கடூவி
நேசபரம்பரவிமலநித்தியதத்துவஞானநிமலமூல
பாசவிமோசனவாதிபகவவெனவகநெகிழப்பனிக்கண்வார
ஏசகலுமயிர்பொடிப்பப்பணிந்தான்முன்னுயிர்க்குபிராயிருந்தானன்பால்33
960 மறுவறுவெள்ளியங்குவட்டின்மழைபுணரும்பொற்குவடுவந்தாலென்னக்
குறுநகைவாணுதற்கூந்தற்கொடியுடன்வெள்விடையிவர்ந்துகோமான்றோன்றி
உறுபொருளுள்ளியதுதவும்வள்ளியோய்நின்வழிபாடுவந்தேமெண்ணம்
பெறுதியுனக்களித்துமெனமதிசூடியெதிரரசன்பேசுமன்றே. 34
961 தென்றலந்தேர்க்காளையெழில்கவர்ந்தநுதல்விழியழகாதிரைநீராடை
மன்றனிலம்பரிததிறுதிவருநாளுன்னிருதாளிலவரவுஞாலத்
தென்றுமிசைவிளங்கியரும்புறவினுக்கூன்கொடுத்துனைவந்தேத்துமிவ்வூர்
பொன்றலரும்புறவமெனப்பொலயவுமீங்கருளுகெனப்புகன்றுபின்னும். 35
962 கோதிலருங்குணக்குன்றேயளியெனுக்காப்புறவுதந்தகுளிர்நீர்த்தெய்வச்
சீதநதியிதிலாடித்திங்கடனிலீரொன்பான்றினத்தில்வெற்பன்
மாதரசோடெழுந்தருளிமன்பதையுய்ந்திடத்தீர்த்தம்வழங்கிமூழ்கிப்
போதருவோர்க்கிருமையினும்புத்தியுமுத்தியுந்தகைசால்புதல்வர்ப்பேறும்.36
963 தண்ணளியான்மகிழ்ந்தருளியைம்பெரும்பாதகமுப்பாதகங்களாதி
அண்ணலிருமுதுகுரவர்முதலோரையிகழ்ந்தவினையனைத்துநீக்கி
எண்ணரியசித்திகளுங்கொடுத்தருளுகெனவேண்டவிணர்ப்பூங்கொன்றைப்
பண்ணவனாங்கவைகளளித்தெழுந்தருளினான்விடைமேற்பசும்பொற்கோயில்.37
964 வரங்களலகிலபெற்றுமனமகிழ்ந்துவிரிந்தபழமறைநூற்கேள்வி
நிரந்தரவேதியர்திறத்துநிகரிலடியவர்திறத்துநிறைபொன்மாரி
சுரந்தெழிலியெனவீசிநால்வகையகூற்றானைசூழ்ந்துபோத
அரந்தைதணிந்தெழில்கனிந்தவரசர்பிரான்றிருநகரமணைந்தான்மன்னோ.38
965 முடங்குளைவாளரியணைமேலிருந்துபுறந்தருமொருகோன்முறைநடாத்தி
அடங்கலரைவலிகவர்ந்துநால்வகையபேரறமுமளியாலாற்றித்
தொடர்ந்தபுகழ்நிலைநிறுவிநிலவணிவேணியனடிமைத்தொண்டுபேணி
நடங்கிளரும்பிரமேசன்பதம்புகுந்தான்சிவியெனுமோர்நாமவேலான். 39
(17 - ஆவது. புறவமானவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 965
-----------------------------------------------------------
18 - ஆவது. பூந்தராயானவத்தியாயம் (966- 984).
966 இன்னறீரெழின்முன்னியோர்புறவின்பொருட்டரசெய்தலால்
மன்னுமாநகர்புறவமாகியவாய்மையீதிதிலாதிநாள்
பொன்னுலாவியமார்பனுந்தொழுபூந்தராயெனவாய்ந்தபேர்
தன்னைமாமுனிசொன்னவாறொருதன்மையோதுவெனுண்மையே.1
967 காற்றினுஞ்சுடுகனலினுங்கடைநாளில்வந்தெழுகாலவெங்
கூற்றினுங்கொடியானெடுங்கடல்கொப்புளித்துமிழ்வாயினான்
ஆற்றல்வானவருயிர்பிசைந்துணுமயிலினானடிநாளிலோர்
ஏற்றமண்டியவிரணியாக்கனெனுங்கடுந்திறலவுணர்கோன். 2
968 அண்டவாணரொடொன்றுபோர்செயுமந்தநாள்வலியிந்திரன்
சண்டவார்படைமண்டவாவிதளர்ந்துபோயவுணனகருங்
கொண்டலூர்தியுமமரரும்பெறுகோளிலாவலிவீறெலாம்
மண்டலந்தொறுமேதழைத்திடுமாதவத்திறலாமெனா. 3
969 மானவேள்விவிதித்தளிப்பனமாமனுக்கள்கணிப்பன
தானமிக்கவர்பாலளிப்பனசாறயர்ச்சிவிளைப்பன
ஆனவிவ்வறனாலிருந்திறலாருமும்பர்கள்வீற்றப்
பூநலந்தனையான்முகந்தயல்போவலென்பதுவவ்வியே. 4
970 ஏதமிக்குளபாதலத்திடையேயமைத்தருகாகவோர்
மாதலத்தடலோனொளித்தலும்வானவர்க்கிறையாதியோர்
ஓதரக்கர்புலாலொழுக்ககலாதசக்கரபாணிதன்
பாதமுற்றடியேமனத்திடர்பாறுதற்கருள்கூறெனா. 5
971 எற்குலாவுதுறக்கமீதிலெமக்கெலாமொரிடுக்கணாய்ப்
பொற்கண்மேயவொருத்தனாடமர்புக்குமேலுமெமைக்கொல்வான்
வற்கநீடறமிக்கபாரைவகுத்தபாதலம்வைக்கயாம்
ஒற்கமேவினமைக்குமாமுகிலொக்குமேனிமலர்க்கணாய். 6
972 என்றுநேருறநின்றதேவரையிங்குநீவிரிரங்கவீர்
வென்றுமீள்குவலென்றுமண்ணொடுவிண்ணுநீடியவெள்ளியங்
குன்றுபோலொருபன்றியாயுறுகோளன்மேவியபாதலத்
தொன்றுமாறொடுசென்றுவெஞ்சினமூக்கிநின்றெதிர்தாக்கினான் 7
973 தாக்கிவந்தடர்கேழன்மேலொருதண்டுகொண்டுநிசாசரன்
தூக்கிமோதமருப்பினாலதுதூளிபட்டுகநூறியே
மேக்கொடுங்கருநீலவெற்பினைவெள்ளிவெற்பதுபாய்தல்போல்
மாக்கடுந்திறலவுணர்கோன்மிசைவாய்ந்துவல்லுளிபாய்ந்ததே. 8
974 மிக்ககோடுகிழிக்கமார்புவெடித்துவேறுபிளப்பதாய்ச்
செக்கர்வான மெனக்குலாயசிவந்தசோரிபுறந்தரத்
தொக்கதேவர்வலக்கணென்னவரக்கன்மேனிதுடிப்புறப்
புக்கதூதுவர்கைக்குளாருயிர்போயினானெதிர்மேயினான்.9
975 பள்ளவாயனைவெல்லவாகைபடைத்துஞாலவரைப்பெலாம்
வெள்ளையேனமதொண்மருப்பரிமேலெடுத்தலும்வானுளோர்
கள்ளறாமலர்மாரிபெய்துகரங்குவிப்பவகந்தையாய்த்
தொள்ளைசேருணர்வெய்திவேறிணைசொல்லுவாரினியில்லெனா. 10
976 பீடுகொண்டுழியாடன்மாமயிலூர்திவந்திகல்பேசியோர்
கோடுகொண்டருள்போதமுஞ்சிலகூறியங்ககல்வேலைவாய்
வாடுபன்றியும்யோகுணர்ந்துபின்மாயிரும்புவியாவையும்
சேடன்வெந்திறலாயிரங்கொள்சிரத்துமீதிலிருத்தலால். 11
977 மன்னியெங்குநிமிர்த்தபல்லுயிர்வரைவிலாதனவரைபடப்
பின்னிரும்பழிதுன்னிநின்றபெருத்தகேழலுருத்துறந்
தென்னிருங்கடவுட்பராவியிகப்பலிப்பழியென்றெழும்
கன்னிமங்கலவின்னியங்கிளர்காழிவந்தனனாழியான். 12
978 பால்கருங்குயில்வீணைபைங்கிளிடாங்குமென்கனிபூவைதேன்
கோல்கரும்பிழிசாறொடுஞ்சுவைகூசநின்றுரைபேசுவார்
மேலரங்கினிலாடல்பொங்கணிவீதிகண்டொருசோதிவாழ்
ஆலயந்தனினாரணன்றடமாடினன்குடமாடினான். 13
979 பேறுதுங்கடன்யாவுமன்பொடுபேணியைம்பதமோதிவெண்
ணீறுகண்டிகைமேனிகொண்டுநிலாவிளம்பிறைவேணியான்
வீறிலங்கியபாதபங்கயமேலருஞ்சிவபூசைநூல்
ஆறுகொண்டடைவேவணங்கலுமாழ்தடங்கடலாழியான். 14
980 கோமளக்கொடிபாலுறப்படர்கோடுடைத்தனியேறுகைத்
தேமவிற்குழைசேவகப்பெருமானடுத்தலுமீறிலா
மாமறைப்பொருளேயெனக்கருண்மாதவப்பொருளேயெனப்
பூமலர்ச்சரண்மேன்முடித்தலைபோதம்வைத்தலுமாதிதான். 15
981 செருமுகம்படுநிருதர்பொங்குயிர்தினமருந்தியதிகிரியாய்
உருகியிங்கெமைவழிபடுஞ்செயலுவகைகொண்டனமொருவனீ
கருதுகின்றனதருதுமென்றருள்கருணையங்கடலடிவிடா
தருகுநின்றிருநிலமடங்கலுமமுதுகொண்டவனறைவனால். 16
982 அனகநினதடியவரையிடர்கள்செய்தவனிகவர்தரநிருதனோர்
கனகவிழியனையழியமுரணியகடுவலுளியெனவடையயான்
பனகமுடியிலென்னுலவைநுதிபடுபடியைநிறுவலுமளவிலா
இனியவுயிர்பலநலியவருவினையெனையுமருவினதிறைவனே. 17
983 *நீந்ததீவினைதீந்துபோதரவேண்டுநீள்புவிநோன்றலால்
பூந்தராயெனநான்செய்பூசனைபூண்டவூர்பெறவேண்டுமால்
ஆய்ந்தநான்மறையேந்தலேயெனவாண்டுகூறியமாண்பெலாம்
மாய்ந்துதாண்மிசைவீழ்ந்தமாயனையெழுகெனாவருண்மொழியினால். 18
984 பின்னரும்பலவரமளித்தொருபேதைபங்கினன்மூதெயிற்
பொன்னலங்கிளர்கோயிலூடுபுகுந்தபின்னர்முகுந்தனும்
தன்னரும்பதமெய்தினானுயர்தவமுளீரெனமறையெலாம்
முன்னருந்துறைகண்டுளானடிமுளரிசூடிமொழிந்தனன். 19
ஆக திருவிருத்தம் - 984.)
--------------------------------
19 - ஆவது. மலைவரவுரைத்தவத்தியாயம். (985-1035)
985 வேந்தராமுடிமேற்பாரைவிடுத்தமால்வினைவிண்டேகப்
பூந்தராயானதொல்லைப்புனைபெயரொடுமுந்நான்கு
வாய்ந்தபேர்த்திறனும்வேறுமான்மியம்பலவுமுன்னித்
தோய்ந்தவாலறிஞராங்கட்சூதனையிரந்துசொல்வார். 1
986 பருதியொன்றுதயஞ்செய்யப்பாயிருண்மாயுமல்லால்
கருதருமவிச்சையென்னுங்கங்குலுமாயவற்றோ
ஒருவனின்னருளாள்யாண்டுமொழிவுறாவுளத்துமாயை
இருளையுந்தடிதாய்ஞானத்திரவிநீயெங்கட்கென்றார். 2
987 பன்னெடுங்காலநோற்றபடிறுநீர்தவம்பழுத்தாங்
கிந்நெடுங்கானத்தெம்முன்னெளிவந்தாயொளிருங்காழி
நன்னெடுநகரினாப்பணகுமணிமுயங்குங்கோட்டுப்
பொன்னெடுங்குன்றமுற்றபெற்றியென்புகல்வாயென்றார். 3
988 வியனுறுகாந்தந்தன்னில்விரிவுறக்கிளத்தலொன்றோ
இயலுமூவறுபுராணத்தீற்றுறுபிரமாண்டத்தின்
நயனுடையுபரிபாகநவிற்றுகேத்திரகாண்டத்தும்
உயர்மலைவரலாறெல்லாமோதுமென்றுரைப்பார்மேலோர். 4
989 அருணமாமணிசெய்மோலியாரியாவர்த்தந்தன்னில்
கருணையங்கடலன்னானோர்காலவித்தென்னும்வேந்தன்
இருநிலமுழுதுந்தந்தையெனமுறைபுரக்குநாளில்
பெருகொளிமகப்பேறின்றிப்பேரஞருற்றானன்றே. 5
990 அறிஞரைமகப்பேறெய்துமந்நெறிபணித்தீரென்ன
உறுவர்சொல்வழியால்வேள்வியுயர்தவந்தானமாதி
பெறுமுறைபுரிந்துமைந்தர்பெறப்பெறாதழுங்கித்தேர்ச்சித்
துறைவர்பாலரசபாரஞ்சுமத்தினன்வனத்திற்புக்கான். 6
991 அவனுரோமசனென்றோதுமறிஞனைவணங்கவன்னோன்
கவலகிலாதுவந்தகாரியம்வினவமைந்தர்
இவணறமெண்ணில்செய்துமெய்திலேனென்னவெம்மான்
துவளருங்கயிலைக்கோடுதொழத்தருமகப்பேறென்ன. 7
992 இழுதையேனென்செய்தாலுமெய்துமோவெந்தைநீயே
தொழும்வகையளித்தியென்னத்தோமிலானரசைஞாலம்
முழுதுடன்காக்கவேவிமொய்யொளிக்கயிலையெய்திப்
பழுதறுதவங்கணோற்றான்பானுமாங்கவன்முன்னுற்றான். 8
993 கருதியுதுரைத்தியென்னக்கனைகடலுலகிலுள்ளார்
இருமையுமகவுமெய்தவிருவகைப்பொன்னிநாப்பண்
குருமணிக்கயிலைக்கோட்டோர்கோடுறைதரவுஞானத்
திருவொடுமிவண்போல்வாசஞ்செய்யவும்வேண்டுமெந்தாய். 9
994 என்னலுந்திங்கட்கண்ணியிமையவன்காற்றின்வேந்தும்
பன்னகவரசுமேலோர்பகலிகல்விளைப்பரந்நாள்
அன்னவாபுரிதுங்கற்பத்தவணியாம்வருதுமென்ன
இன்னறீர்ந்தந்நாட்காறுமிருந்தனன்முனிவனிப்பால். 10
995 மாமலிமார்பன்வேதன்வானவர்க்கிறைவனேனை
நாமமாதிரத்துச்செல்வர்நகுமிருசுடர்ப்புத்தேளிர்
ஏமுறுமகதிவல்லானிமையவர்பிறருமெம்மான்
தோமிலாவெள்ளிவெற்பிற்றொக்கனர்மிக்கதொன்னான். 11
996 தொக்கவரவரில்வீணைத்துறைவலான்பகுவாய்தோறும்
மைக்கறைவிடங்காலைஞ்ஞூற்றிரட்டிமாமவுலியானைப்
புக்கதொல்வலியாலீரேழ்புவனமும்பரிக்குநின்னை
ஒக்குநர்யாரேயென்னாவுவந்தனன்புகழ்ந்தவாயான். 12
997 சேட்டிளங்க திரைநக்கதிருமணிப்பணிகடோழன்
பூட்டினுமுவகையொல்லாப்புனிதனின்கிளையைவேணிக்
காட்டினும்புயத்தும்வேயுங்கலனெனப்பரித்தவாற்றால்
ஈட்டினுன்பெருமைபூண்டாரேவர்முப்புவனத்துள்ளும். 13
998 திவவியாழ்முனிவனிவ்வாறுரைத்தலுஞ்செருக்குமீக்கொள்
பவனனெஞ்சழுக்காறுள்ளிப்பருவிழிசிவந்துவாளா
இவனையேவியந்தாய்மேலோயிவன்முதலெவருமாயா
உவமைதீருயிர்ப்புநல்குமொருவெனுமிருக்கவென்றான். 14
999 அதுபொழுதுலவைவேந்துமணங்கராவரசும்வெம்போர்க்
கதுமெனப்பொருவானென்றுங்கருத்துடையொருத்தன்வல்லே
முதுமதிவல்லசேடன்முன்னருற்றென்னேநின்னை
இதுபுகன்றிழித்தானூதையிறைவனென்றினையசொன்னான். 15
1000 இயங்குவநிற்பவென்றேயெடுத்தபல்லுயிர்கட்கெல்லாம்
முயங்குநான்பொதுவனேனுமுற்றுநின்னுடலுக்காவி
நயந்துதான்றருதலின்றிநகுமணிச்சூட்டராவென்
றியங்குமாறெங்ஙனென்றானெறுழ்வலியரவவேந்தே. 16
1001 வரையிடைப்பிணித்தஞான்றுமறிகடலிடத்தங்காந்து
புரைவிடங்கொழித்துமுக்கட்புனைவடுக்காணவைத்தான்
மரைமலர்த்திருவின்கேள்வன்மாணெழின்மழுங்கச்செய்தான்
நிறைகதிர்க்கடவுளோரைநெருக்குவானென்றுஞ்சொன்னான். 17
1002 கொல்லினுங்கொடியனேழுகோளினுங்கொடியன்கேண்மை
புல்லினுங்கொடியனாற்றுட்போகினுங்கொடியன்மிக்கார்
அல்லினும்பகலினுந்தாமவையகத்திருந்துதன்பேர்
சொல்லினுங்கொடியனென்றுசொல்லினன்செல்வவென்றான். 18
1003 பாப்பரசதனைக்கேளாப்படரெரிபொறிப்பப்பாரா
நாப்புடைவளையாநன்றுநன்றரோசுழலுங்காற்றின்
மூப்புடைவலிமற்றென்னாமுரணியஞாட்பினுற்றால்
வாய்ப்புறத்தெரிப்பென்போர்க்குவல்லனேல்வருவியென்றான். 19
1004 வருவியென்றுரைத்தலோடுமரைமலர்க்கிழவனன்னான்
பொருமொலிக்கிறைமுன்போந்துபொறுப்பனானென்றுநின்னை
உருவிலியென்றுந்தீயோடுறவென்றுநெறியொன்றின்றி
வருபவனென்றுமொன்பான்வாயிலும்புகுவாயென்றும். 20
1005 முள்ளரிமுளரிச்செம்மண்மூதுலகடைந்தகங்கை
ஒள்ளிழையுத்தரீகமுடைத்துமஞ்சனையென்றோதும்
வள்ளைவார்குழையைவன்பான்மருவியுமாரனூரும்
கள்வனீயென்றுஞ்சொன்னான்கட்செவிக்கிறைவனென்றான். 21
1006 வேறு.
சுருதிநூன்முனிவனித்துறையெடுத்தறைதலுஞ்சுடுசினப்பொறிவிழிக்கடையினிற்றெறிபடக், கருகிமாதங்கமூதண்டவேதண்டமுங்கணமுடைத்தொகுதியுங்கதிர்களுஞ்சுழல்படப், பெருகுவானிடியுகத்துருவன்மாவடுவுறப்பிலம் வெடித்திடவரைக்குலம்வெடித்தலம்வரத், துருவுநாரதனுளத்தளவிலாமகிழ்வரத்தோள்புடைத்தனனெடுங்காலுடைத்தலைவனே. 22
1007 உலவையந்தலைவனிங்ஙனம்வெகுண்டெழுதல்கண்டோதுமா முனியுரைக்கோதினாலெரிமணித், தலைகளாயிரமுடைச்சேடனுங்கூடிவெஞ் சமர்வினைத்திடமறுத்தமரரத்தலையினிற், பொலன்மணிப்படமெடுத்துரகருக் கிறைவலிப்புனைமணிப்பஃறலைக்குவடுறக்கவியுருத், தலைவளித்தலைவவிக்கனக வெற்பினிலுனக்கமர்வலித்திறனிலப்புதைதிறந்திடுகென. 23
1008 தெறுசினத்திருவருஞ்சமரதற்கிசைவுறச்சேடனாயிரபணத்தாடகாசலமதிற், குறைவறக்கொடுமுடித்திரள்புதைத்திடநெடுங்கோடைவானவன்விசைத்தாடலாலருகினிற், பிறவரைக்குலமுதற்சருகெனத்திரிதரப்பெருகலைப்புணரிநெட்டலைவிரித்துலகடத், துறுமலர்த்தருமுதற்றருவினம்பொடிபடத்தூளியாகியனகீழுலகுமேலுலகுமே. 24
1009 பத்தெனும்பெயருடைத்திறல்வளித்தொகையினிற்படருயிர்ப்பொழியமற்றுளைவுயிர்ப்புகளெல்லாம், கொத்துடன்குழுமியத்தடவரைப்புடையினிற்குவடுசூழ்வரவடித்தவனியீடழியவும், நத்துறும்பொறிபுலத்திடைமனத்தினைவிடாநண்ணுகேவலமகன்றெண்ணுபாழ்வெளியினில், சித்தொடன்றியவுயிர்ப்பத்தியின்றிறனெனச்சேடன்விட்டிலன்மறைத்தாடகக்கிரியையே. 25
1010 அதுகணத்தமரரிந்திரன்வசுத்தலைவரோடகிலவானவன்முனைத்திகிரிவானவன்முதல், பதைபதைத்துறுவளிப்படையினிற்கடையுகப்படியெனப்படியிடிப்பதனைவிட்டொழியவே, விதிர்விதிர்ப்புடைவளிக்குறைசெயிற்பழுறுதெனாவிரிதலைப்புவனமுற்றிலுமெடுக்குறும்வலத், தெதிரறப்பொருபணத்ததிபனைத்துதிதுதித்தெமைமதித்திதுபொறுத்திடுகெனப்பகருவார். 26
1011 உலகனைத்தையுமவற்றுறுமனுக்களையும்வைத்துறுபடத்தினிலெடுக்குறுமுனக்கிணையெனப், பலருமொத்திலரெனிற்சலசலப்புடையவிப்பவனனெப்படியுனக்கிணைபெறக்கடவனோ, நிலமிசைப்பொறைபொறுத்தவர்பொறுப்பவரெனாநிகழுமிச்செயலினாலகல்வரைக்குவடெலாம், அலர்பணிப்படமுறப்புதைபுதைத்தவையிலோரணிகுவட்டினைவிடுத்திடுவதுத்தமமரோ. 27
1012 நீவிடுக்கெனமுதற்றேவருற்றறைதலானீடுயிர்க்கணமெலாமீடறத்திரிதலான், ஆய்வினைத்தெளிபொருட்டேயுமுற்றறிவினாலன்றநந்தன்படத்தொன்றையங்ஙனம்விடக், கோவியற்றமனியக்கிரியினிற்பலகிளைக்கோதிலாவெள்ளிவெண்சேகரந்தன்னிலொன், றாவலிற்கடுவளித்தேவிடந்திடவணித்தாய்முதற்கிளைவிழுந்ததிலுறுங்கிளையெலாம். 28
1013 கதிதருந்திரிசிராமலையெறும்பீசுரங்கமலையேரகமிடைமருதநாகேசுரம்
அதிகதிந்துருணிமாநகரமாணிக்கவெற்பரவமாநதிகுடக்கானதண்காழிபொன்
பொதியுமாமிழலையோடெண்ணுபன்னொன்றெனும்புரியிலத்தொகையுடைக்கிளைவிழப்பெருகுநீர், குதிகொளுஞ்சடையினானருளினிற்குருகினங்கொண்டுசென்றனபெருந்திண்டிறற்கிளையையே. 29
1014 வேறு.
இறைவனருளாலதுகாலத்திகல்வெங்கணங்கள்குருகினத்தின்
சிறையினிவர்ந்துசெலக்கடவுட்டிருமாமுனிரோமசனும்வர
நறைபொன்மலர்ப்பூம்பொன்னியிருநதியினாப்பண்முத்தமிழின்
துறைமல்கியபூம்புனற்காழித்தொல்லைநகரத்திறுத்தனவால். 30
1015 இறுத்தகாலைமுனிவர்பிரானிருகண்களிப்பப்பகைஞாவலி
பறித்தவடிவேற்காலவித்தைப்பணிவித்திடமற்றாங்கவனும்
குறித்தவிமயவரையளித்தகோதையொடுவீற்றிருந்தாலம்
கறுத்தமிடற்றானினிதுறையுங்கயிலைக்குவட்டையெதிர்பணிந்தான். 31
1016 குழலினாவிநிரைதொகுத்தகொண்டலனையாண்மிகப்பரவி
மழலைமொழிமென்கிண்கிணிக்கான்மகப்பேறெய்தியகமகிழ்ந்து
சுழலும்பொறிபோக்கறவெறிந்ததோமின்முனிவனடிபோற்றிப்
பழகுந்துதிசெய்தவனுவப்பப்பலவாற்றானுமுபசரித்தான். 32
1017 மதிவான்குவடங்கதுகாலைமறைந்துநிற்கவண்சுதையால்
கதிர்வான்சடிலச்சிவகணமுங்கதவெஞ்சிறையங்குருகினமும்
முதிர்வானவரும்பல்லுறுப்பின்முகந்தோறமைத்துமணித்தசும்பு
விதிநூன்முறையினினிதமைத்தான்வேலைஞாலத்தவர்போற்ற. 33
1018 பசும்பொற்கமலத்தயன்றடத்துப்படிந்துபிரமேசனுக்கெழில்கூர்
அசும்புமணிப்பொற்கலனிலங்கவவிர்பூணாடையிருநிதியம்
விசும்புமிடைமண்டபமுதலவெவ்வேறமைவித்திரவியெனத்
தசும்புமிளிர்மாளிகைநகரஞ்சார்ந்தான்முனியாயிடையிருந்தான். 34
1019 மற்றுமொருநான்முகக்கடவுள்வாழ்நாளிறுமோர்பிரளயத்தில்
முற்றுங்குடிலைத்தோணிமிசைமுதிருஞானத்திருவினொடும்
சுற்றுஞ்சடிலத்தனிமுதல்வன்சொன்னகடவுட்கொழுங்குவட்டில்
உற்றங்கிருந்துமுதுநீத்தமொடுங்கவுளத்தினினிதுன்னி. 35
1020 அடலேற்றரசுக்கருணோக்கமளிப்பவதுபேருருக்கொண்டு
கடைவாய்நாவிற்றடவந்துகடைநீர்நோக்கியுரப்புதலும்
உடனேகரைக்கணடங்கியபின்னொருமூவரைத்தோள்வலமிடமுள்
இடனால்வருவித்தவர்படிகவிலிங்கத்தருச்சித்தனர்போற்ற. 36
1021 போற்றுமவர்முன்சிவஞானம்புகலுங்குரவன்படைத்தளித்து
மாற்றும்வரங்கள்வரன்முறையேவழங்கவனையாரவைபுரிந்தார்
சேற்றுவயற்காழியினமர்ந்ததெய்வக்குவட்டிற்கயிலையைப்போல்
கீற்றுமதிவேணியனிருந்தான்கெண்டைத்தடங்கட்கிள்ளையொடும்.37
1022 வேறு.
தலத்தரசிதைத்தொழச்சார்துமென்றுபின்
செலப்பெறாதிருந்தவர்தீயநெஞ்சர்தென்
புலத்தவர்சாபமும்பெறுவர்போற்றுவார்க்
கிலைப்பொழுதொழுக்கெனுநியமமென்பவே. 38
1023 ஒழுகொளிப்பொலன்குவட்டுச்சிமால்வரைக்
கழுமலத்திருத்தலாற்கடல்வளாகமேல்
அழல்வினையந்தணீரன்றுதொட்டதற்
கெழிலுலாங்கிரிபரமென்றுமோர்பெயர். 39
1024 இணர்ப்பசுங்கொன்றையானிறைவிக்கின்னருள்
புணர்த்தலினுமாபதிபுரமென்றோமதில்
கணத்தரைக்கணத்தளவிருப்பிற்காலனும்
பிணக்குறானகலும்வெம்பிரமகத்தியே. 40
1025 தேசொடுவிளங்கியதெய்வக்குன்றிதை
யோசனையகனிலத்துவந்துகண்டுளோர்
காசினித்தலமெலாங்கண்டமெய்ப்பலன்
ஆசறமருவிமேலடைவர்முத்தியே. 41
1026 காளிகேசுரன்பிரமேசன்கஞ்சுகன்
நீளிரும்பராசரநிமலன்றோணிவாழ்
ஆளுடையொருவனென்றரனையுள்ளுவார்
மூளுமைம்பாதகமுருக்கியுய்வரே. 42
1027 புள்ளறாநறும்பொழிற்புகலிவாழுமிவ்
வள்ளல்பேரைந்தையுமனக்கொடெண்ணினோர்
வெள்ளநீரலகைதீவேங்கைவெந்திடர்
கள்வராறலைப்பிவைகடப்பர்திண்ணமே. 43
1028 தொடுத்தபேரெயில்கிளர்தொல்லைக்காழியை
அடுத்தடுதிறைஞ்சினோரநகராகிவெங்
கடுத்திகழ்மிடற்றினோன்கயிலையெய்திமெய்
நடுக்குறுநடுவனூர்நண்ணலாமையால். 44
1029 அணங்குறுமறலிகாமாதியாயவெங்
குணங்களைத்தூதராய்க்குறித்தவ்வூருளோர்
இணங்குசேய்நிலத்துளோரெந்தைகாழியை
வணங்குறாதிடர்செயவகுத்தபான்மையால். 45
1030 முன்னருந்தீவினைமுயன்றமூவர்தாம்
இந்நகர்தொழவெளிதெய்தற்பாலரோ
பன்னருந்தவம்பலபண்டுநோற்றுள
நன்னர்நெஞ்சுடையரேநணுகும்பான்மையார். 46
1031 தாவரும்புலப்பகைதணந்தவித்தகர்க்
கோவருமின்பவீடுதவுவானிதில்
மூவடிவெடுத்ததுமுற்றுமிந்நகர்
ஆவலோமற்றவனருளின்பெற்றியோ. 47
1032 ஆதலான்முனிவிர்காளந்தண்காழியை
ஓதலாந்தகைத்தெனவுணரர்பாலதோ
ஈதெலாமியம்பவுமினிதுகேட்கவும்
மாதவமெய்தினாம்வாழ்வுமெய்தினாம். 48
1033 இனையமான்மியந்தனையெழுதுமேடொரு
மனைவயினிருக்கினம்மனைக்கண்வாழுநர்
வினையமிக்கறிவனூல்விரிவெலாமுணர்
முனைவராகுவரவர்முகங்கண்டாருமே. 49
1034 மடனுறுமகந்தைவேரரிந்தமாமறைக்
கடவுளர்முகத்தினிக்காதைகேட்டுளோர்க்
கிடரறுநினைத்தவையெய்தும்வல்வினைத்
தொடரறுமருமறைத்துணிவிதாமரோ. 50
1035 கய்தவங்கடந்துளீர்கடவுண்மால்வரை
எய்தியவியப்பமிதென்றுமும்மலத்
தொய்யலையொழுக்கினாற்றுடைத்தசூதனாம்
தெய்வமாமுனிவரன்றெரிந்துகூறினான். 51
ஆக திருவிருத்தம் -1035)
-----------------
20 -ஆவது, ஆபதுத்தாரணவத்தியாயம் (1036- 1076)
1036 அன்னந்தடமன்னும்பணையணிகாழிபுரத்தில்
பொன்னங்கிரிமுன்னஞ்செறிபொருளீதெனுமுனிவன்
இன்னுந்திறல்வடுகேசனதியல்பேசியநெறியே
என்னெஞ்சினிலியலுந்திறனினிதோதுவெனினியே. 1
1037 வண்டாறுநறுங்கொன்றைமணக்குஞ்சடைமுதல்வன்
தண்டாமரையடிநல்கியதாவாவலிதன்னால்
பண்டாடகவுலகத்தவர்பதம்வவ்வியமதுகைத்
திண்டோளிரணியனென்றொருதேவாந்தகன்மேனாள். 2
1038 முகிலொன்றுநிறத்தானொடுமுத்தேவர்பெரும்போ
நிகழெங்கணுமேறாதுதன்னெடுநாமம்வளர்ப்போன்
அகிலம்படுமிவ்வண்டமுமல்லாதுபுறஞ்சூழ்
பகிரண்டமுமிவனாணைபரிக்கும்படியாள்வான். 3
1039 பொருப்பெட்டையுமருப்புக்கிளர்பொருப்பெட்டினொடடிப்பான்
நெருப்பைக்கறைவிழிக்கட்சினநெருப்பிட்டுறவவிப்பான்
இருப்புப்புரைதடக்கைத்தலத்தெடுத்துப்பிலத்தினில்வாழ்
சருப்பத்தையுமரைக்கச்செனத்தரிப்பானுலகரிப்பான். 4
1040 காற்றும்படுபுனலுஞ்சுடுகனலும்பொருநிலனும்
தேரீற்றுந்தலைவரைவென்றவர்தொழின்முற்றுமிழைப்பான்
ஏற்றுஞ்சுடரிருவோர்மணியெழிலூர்தியினூர்வான்
கூற்றுங்குலைவுறவாருயிர்கொல்வானிகல்வெல்வான். 5
1041 மூலக்கடனீராடியுமுதுபாதலமகளிர்
ஓலக்கமடுத்தும்பகலுவணைத்தலமதுபோய்
ஏலத்தருநிழல்வைகியுமிரவிற்சதுமுகன்வாழ்
கோலப்பசியுற்றுந்துயில்கூர்வானிடர்தீர்வான். 6
1042 மொய்யார்கலிகடையப்புகுமுழுமத்தவனேந்தும்
கய்யார்கதையாமென்பதுகதையோகதுருலவும்
பெய்யாடொளியிருமால்வரைபெருமால்வரையனையான்
மய்யாடியநாளிற்புனைமகரக்குழையென்றால். 7
1043 ஏமத்துணவமரர்க்கிடுமெழுதாமறையவர்செய்
ஓமத்தவியெல்லாமவருருவாகிமடுத்தான்
வாமப்பழமறைநூல்வழிவல்லார்பொழுதெல்லாம்
நாமத்திரணியாயநமநமவென்றிடவைத்தான். 8
1044 பெண்ணிற்புகலாணிற்பெருகிடியிற்சுடுபடையாம்
எண்ணிர்பலபகலிற்கறையிருளிற்செறிமனையுள்
கண்ணிற்பிறவெளியிற்சுடர்கனலிற்படர்புனலில்
மண்ணிற்பிறபொருளின்னுயிர்மாளானடுதோளான். 9
1045 பாரார்புவிமேலாரிருள்படுபாதலவைப்பார்
ஆராருமிவ்வசுரன்றுணையடியேந்தியமுடியார்
நாராயணவெனுமன்புடைநன்மைந்தனையல்லால்
பாராயணமதுசெய்வதுபதகன்கொடுநாமம். 10
1046 இவ்வாறுலகீரேழுமிடுக்கண்செய்வலத்தால்
வெவ்வாளவுணன்பின்னருமிடலெய்தியமடல்சூழ்
செவ்வாரிசமுகைகிண்டியசிறைவண்டிசைமுரலும்
கைவ்வார்திரைநிரைபொன்கொழிகாவேரியின்வடபால். 11
1047 வினைவேரறநினைவார்பணிவெண்காடதன்வடமேல்
புனைசாரினிலொருதோணிபுரக்கீழ்த்திசையாங்கண்
நனைவார்மலர்விரைமென்சினைநகுவில்வவனத்தே
தனைநேர்குருவருளாலொருதனிவேள்விதொடுத்தான். 12
1048 ஓராயிரவெள்ளம்புடையொடுசூழ்தரநடுவே
சாராவொருகொடுவேள்விசமைக்கின்றதைநிருதன்
சூரால்வடவெற்பூடுதுணுக்கம்படுவிண்ணோர்
போராழியினான்முன்புபுகன்றாவிகரைந்தார். 13
1049 மஞ்சேயொளிமணிமேனியன்வானீரினிமேனீர்
அஞ்சீரெனமுதுபொன்வரையதன்மேல்வருபுயல்போல்
செஞ்சேவல்வயப்புள்ளிறைதிணிதோண்மிசையிவரா
எஞ்சாதிரணியன்வேள்விசெயெல்லைக்கணடைந்தான். 14
1050 அற்றத்தினிலுலகஞ்சு றவலையஞ்சுறவடபால்
ஒற்றைக்கிரிவெடிபட்டுகவுருமுக்கணமுதிரத்
தெற்றித்தனியெட்டிற்கிரிதிசைமாறிடவசைதீர்
கொற்றச்சிலைவரிநாணொலிகொண்டானுலகுண்டான். 15
1051 உலகுண்டவன்வளையுஞ்சிலையொளிருங்குணவொலியால்
கலகம்பெருகொலியென்றடுகனகன்படையுடையப்
பலரும்பலதலைசிந்தியபடிகண்டுபின்னெடியோன்
அலருங்கையிலொருசங்கினையார்த்தானுடல்வேர்த்தான். 16
1052 இரிந்தார்சிலர்பொடிந்தார்சிலரிடிந்தார்சிலரிகல்போய்ப்
பரிந்தார்சிலர்முடிந்தார்சிலர்படிந்தார்சிலர்துளபப்
பெருந்தாரவன்விரைந்தூதியபிறங்கோர்வளையொலியால்
முரிந்தார்சிலர்கனகன்புறமுனைந்தார்படையெல்லாம். 17
1053 ஊழித்தலையெழுமார்கலியொக்கும்படையுக்கிப்
பாழித்தலைமதவெங்கரிபரிதேர்முதலிரியக்
கேள்வித்தலையல்லார்நிலைகிழியக்கதழெரிகால்
வேள்வித்தலையழிகுற்றபின்வெளிவந்தனனிருதன். 18
1054 கடலோடெதிர்கடலும்படுகாரோடெதிர்காரும்
தடமால்வரையொன்றோடொருதடமால்வரைதானும்
உடல்போரதுசெயுமாறெனவோராழிநெடுங்கைச்
சுடரோனெதிரடலானமர்தொடுத்தான்முரணடுத்தான். 19
1055 வெடிவாயொலிதோள்கொட்டியவிறலாரொலிசிலையின்
துடிவாயொலியடுவாளிகடொடுபேரொலிவிசயக்
கொடிவாயொலியிருவோரிகல்கொடுமேறொலிகளினால்
அடிமாதிரமதயானைகள்செவிடேறிவவையே. 20
1056 மாயன்சிலைபொழியுங்களையவுணன்கணைமாற்றத்
தீயன்சிலைபொழியுங்கணைதிருமால்கணைநுகரப்
போயண்டமுநிலனும்படர்திசையும்புகைபுகையக்
காயுங்கடுவலிவெஞ்சமர்கலந்தாரெதிர்மலைந்தார். 21
1057 அழன்றார்கணையரிந்தார்புறமகன்றாரெதிர்புகுந்தார்
கழன்றார்விழிசிவந்தாரிருகறங்காமெனவொருங்கே
சுழன்றார்திசைவிசைவாளிகடூர்த்தாருடல்வேர்த்தார்
உழன்றாரிருவரும்வெஞ்சமரோராயிரவருடம். 22
1058 அவ்வாயிரவருடஞ்செலவமராடியுமழியா
இவ்வாளவுணனைவெல்லுவதினியோர்திறமென்னா
மைவ்வான்வழிமுதல்வன்புகவதுகண்டுவலத்தால்
வெவ்வாயவுண்ணுமன்றமர்வென்றேனெனவன்றே. 23
1059 தனியோதியமகனோடொருதனயாவிதுகண்டாய்
இனியேனுமென்னொருபோதனையிசையென்றலும்வசைதீர்
கனிவாய்மகனுலகுக்கொருகத்தாவவனைத்தான்
நனிநாரணனேயென்பவனுனென்றிடலானான். 24
1060 வேறு.
என்றலும்வாளவுணன்வெகுண்டெயிறதுககிவிழிசிவக்கவிமைகடீயத்
துன்றுபுயந்துடிப்பநிலைகுலைகுலையவலமந்துசுரர்களேங்க
அன்றுசினத்திடித்தெழுந்துநின்கடவுளெங்கணுளனவன்யாரென்ன
என்றுமுளன்றுரும்பிடத்துந்தூணிடத்துமாயனெனவிசைத்தான்மைந்தன். 25
1061 அளந்தவனாண்டறைதலொடுமொருகோடியசனியிடியறைந்தாலென்னத்
துளங்கொளியமணிக்கடகத்தடக்கையெடுத்தறைந்தவன்முன்றுண்ணென்றோதை
கிளர்ந்ததுபேரண்டமுடிகிழிந்ததுதீயவனுரம்போற்கீறித்தூணம்
பிளந்ததுமானுடமடங்கல்பிறந்ததுவானவர்க்குநலம்பிறக்கமாதோ. 26
1062 அண்டகோளகையதிரத்திசையதிரப்புகையுமிழகண்ணரிமாவாகிச்
சண்டமாருதக்கரத்தானமடித்தலமிட்டுரங்கீறித்தாழிப்பேழ்வாய்
மண்டவாரிழிகுருதிமடுத்துமடுத்தவுணனுயிர்மடுத்தான்வாயால்
கொண்டல்போன்மணிநிறத்துக்கோகனகம்போலலர்ந்தகுளிர்பூங்கண்ணான். 27
1063 வானொன்றுமயன்முதலாயெறும்புகடையுபிரிலொன்றான்மடியான்மேனி
தானொன்றுமுகமொன்றுமெழுந்துகடைத்தலைநாப்பண்டகுமாலைக்கண்
ஊனொன்றுமுதிரமரியருந்தியுயிர்கவரமடிவுற்றபெற்றி
நானொன்றுநினைக்கவுறுந்தெய்வமொன்றுநினைத்ததென்றநயமாமாதோ. 28
1064 சுடர்க்கனகத்துகள்சிதறவடற்கனகனுடற்குருதிச்சுவைகண்டாங்கண்
மிடற்குருதிக்களியெடுத்துவிண்ணையுமண்ணையுநலந்துவெறியாட்டாட
அடற்கருமானுடமடங்கலருந்துயராற்காளிபுரத்தணைந்துவேதன்
முடைத்தலைகொய்வடுகேசனிடத்தமரர்முடிசாய்த்துமுறையிட்டாரால். 29
1065 ஆயிடையெம்மிறையருளாலடல்வீரபத்திரனோரட்டபாதத்
தேயெனுமாத்திரையின்முரட்சரபவுருவெடுத்திகன்மானுடத்துச்செங்கண்
சீயமறப்புடைத்துதறிமுடிதகர்த்துமுன்னுண்டசெந்நீரெல்லாம்
வாயினிடைமடுத்தகலமறிந்ததுமானுடமடங்கன்மறிந்தகாலை. 30
1066 அள்ளிதழ்த்தாமரைப்பொகுட்டினரசிருக்குந்திருமடமானதுகண்டோடி
முள்ளெயிற்றுப்பணிமாலைமுயங்கியதோள்வடுகனடிமுளரிசூடி
எள்ளுலவுமெண்ணயெனவெவ்வுயிர்க்குமுயிராயவிறைவகண்பார்த்
தொள்ளிழைமங்கலநெடுநாணோங்கவெனக்கீங்கருளெம்முடையாயென்ன. 31
1067 பொன்னொழுகுகற்பகப்பூங்கொம்பரெனத்தென்பிரமபுரத்துமேல்பால்
மின்னொழுகுமுக்கோன்மட்டெல்லையினிற்கடுக்கைமலர்விரிபூங்கானில்
மன்னிரவித்தடத்தயாலாறிருபருவமருந்தவஞ்செய்மலர்மான்காணத்
தன்னிகரில்வடிவநுடும்வடுகேசன்பேருவகைதழைப்பச்சென்றான். 32
1068 இருக்கோலஞ்செயுமிருதாளெழிற்கோலமலரின்விழுந்திறைஞ்சச்செய்யாள்
அருட்கோலமுடையபிரானணிக்கோலமாலைமுன்போலளித்தான்மேனாள்
திருக்கோலம்புனைதலினாற்றிருக்கோலக்காவெனவித்தெண்ணீர்ஞாலத்
துருக்கோலந்துடைப்பவர்தாமெக்காலுந்தொழுமூரொன்றுளதுமாதோ. 33
1069 அவ்வழியெம்பெருமானையடலாழித்தடங்கரத்தானலர்கடூவிக்
கைவ்வனசமுகிழ்த்திருகண்டுளிதூங்கவொளிதூங்குங்கழற்றாள்போற்றி
இவ்வடியேன்மடமகற்றியெடுத்தாண்டபெருங்கருணையிறைவாபோற்றி
தெவ்வடுபோரிலைச்சூலந்திரித்துலகம்பரித்தருளுஞ்செல்வாபோற்றி. 34
1070 நிரையிதழ்த்தாமரையானும்யானுநெடுமொழிபேசிநிற்பவேதன்
நரைமுடிகொய்திகலறுத்தென்னிரைமணிமாநகர்போந்துநகுங்கைவேலால்
வரையகலந்துறந்தெனதுவடிகுருதிமுடிநிறையமடுத்தவாறே
தரையினுமானுடமடங்கலுருவிடந்துகுருதியுண்டசரபபோற்றி 35
1071 முன்னுமெனைமறித்தாண்டமூதருளான்முடங்குளைமான்முரணைவென்றாய்
இன்னுமெனக்கிரங்கினையேலிதனுரிநின்றிருமேனிக்கியையவேண்டும்
மன்னுநினதின்னருளைவழியடியேன்கடைப்பிடித்துவாழவேண்டும்
பொன்னுலவுமதிட்காழிப்புண்ணியனேயெனநெடியோன்போற்றிவீழ்ந்தான். 36
1072 அருமுடிசச்சூட்டரவணையிலறிதுயில்கூர்பவனிவ்வாறறையவேதன்
ஒருமுடிகொய்மணிநகத்தானரமடங்கலடிமுடிதொட்டுரித்துமீக்கொண்
டிருண்முடியவெழும்பரிதியெனவொளிருமரைக்கணிந்தானிமைக்குங்கோட்டுத்
திருமுடியில்வீற்றிருந்துகருமுடியவினைகடியுந்தேவதேவன். 37
1073 கோபத்துநரமடங்கல்விளைத்ததுனிதுடைத்தலினாற்குறையாதென்றும்
ஆபத்துத்தாரணனென்றாயினனிவ்விருங்ககதைதானருட்டதீசி
மாபத்தியொடுமருகற்பழித்தகொடுந்தக்கன்மனமம்மர்நீங்கத்
தீபத்தின்விரித்தவனுக்கருமறையின்றெளிவிதனைத்தெரித்தான்மேனாள். 38
1074 சேணிலத்தில்வடுகேசன்றிருமலையைவணங்குநருஞ்செம்பொன்வாய்ந்த
நீணிலத்தார்பரவமுத்திநெடுநிலத்தில்வீற்றிருப்பார்நிகழுமன்பு
பூணுலரும்புகர்வாரத்தழகொழுகப்புழுகவன்மேற்புனைந்துளோர்கள்
ஏணிலகுநிலமனைத்துந்தமதடியிற்படுத்தியரசியற்றுவாரே. 39
1075 தூரத்தேதொழுகுநர்க்குமுத்திகொலோவெனவுயிர்கள்சோராவண்ணம்
ஆரத்தாழ்திருமார்பனரிவையொடுவில்வவனத்தணைந்துமேல்பால்
நீரத்தாழ்வயற்காழிநெடுவரையைப்பணிந்துருகிநின்றானிந்தச்
சீரைத்தானுறலாலேதிருநகரியன்றொருபேர்சிறந்ததவ்வூர். 40
1076 வேறுமளப்பில்பெருமைவினவவுமோதவுமுடியாவியப்பாலந்தண்
சேறுபடுவயற்காழித்திருமலைவாழ்மலைக்கொழுந்தின்றிறனீதென்றான்
ஆறுமிடரைரந்துமகன்றாதியிடையீறிலிதாளகத்துட்பூண்டு
கூறுமறைத்துறையறிந்தகுரவனடிக்கடிமைபுகுங்குணக்குன்றன்னான். 41
(20-ஆவது, ஆபதுத்தாரணவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம்-1076)
-----------------------------------------------------------
21-ஆவது. கழுமலநதிவரவுரைத்தவத்தியாயம் (1077- 1162 ) .
1077 தாற்றிளங்கமுகின்சூற்பழுங்கழுத்துத்தமனியப்பாளைவாய்கிழியச்
சேற்றெழுவாளையேற்றெழுங்காழித்திருமலைக்கொழுந்தினதியற்கை
போற்றியமுனிவன்கழுமலமெனும்பேர்ப்புண்ணியத்தீம்புனற்பொன்னி
ஆற்றினதியலுஞ்சாற்றுவெனென்றாங்கறைந்தவேறொருவழியறைவாம். 1
1078 கனைத்துவண்டிமிருமலர்த்தடஞ்சினையகற்பகநாடுகாவலவன்
முனைக்கடுந்தானைநுனிப்பரும்வலத்துமூரிவெஞ்சூரனான்மேனாள்
அனைத்துளபொருளுந்தனித்தனிதுறந்துமாற்றலனாகிவேற்றடங்கண்
மனைப்பொலன்கொடியோடருட்பெருங்குரவன்வாய்மையான்மண்ணகத்திழிந்தான்.2
1078 கரைக்குறும்பெறிந்ததிரைத்தடந்தோறுங்கதிர்வளைவயிறுளைந்தீன்ற
நிரைக்கொழுந்தரளநெடுநிலாவிரிக்குநீள்வயல்விளிம்புசூழ்வேணு
புரத்திலாளுடையான்றிருத்தகுமலர்த்தாள்போற்றினனிருப்பநெய்த்திருண்ட
விரைக்கருங்கூந்தற்சசிமுலைவியக்கவிருப்பினாற்றருக்குவாளவுணன். 3
1080 காற்றினுங்கொடியகடுநடைத்தூதகணங்களைக்கூஉய்மலருலகின்
மாற்றலர்க்கடந்தவபிரவாளுழவன்மனையிளங்கொடிதனைவல்லே
வேற்று*வேதண்டமெவற்றினுந்துருவிவிரைந்தளித்தும்மெனவிடுப்பக்
கூற்றினுங்கொடியார்விசும்பிடைத்தேடிக்குரைகடல்வைப்பினிற்குதித்தார். 4
1081 தீந்தொடைமகதித்திருமுனியனையார்செய்தியைவெய்துறக்கதங்கால்
ஏந்துகோட்டயிராவதப்பெரும்பாகனிருக்கைபுக்கியம்பலும்வெருவிச்
சாந்தணிந்தோங்குந்தமனியத்தசும்பிற்றதும்பியதடமுலைச்சசியோ
டோய்ந்துருமாறித்திரளுருப்பசுங்கண்ணுறுகழையுருவெடுத்துறைநாள். 5
1082 காலையும்பகலுங்கங்குலும்பணிவான்காழிகாவலன்பணிக்காய
சொலையுந்துணர்ப்பூந்துடவையும்பெறுவான்றுளியறமுளியடைந்தமையால்
மாலைவெள்ளருவிவரைச்சிறகரிந்தவானவன்படருறுமேல்வை
மேலைவானின்றுமண்ணகத்திழிந்தவீணையங்கிழவனொன்றுரைப்பான். 6
1083 மாலிருங்குடுமிலிந்தமொன்றுறுமான்மணிவரையள்ளிருள்விழுங்கும்
மேலிருங்கதிர்சூழாடகக்குடுமிமேருவோடிகலியோராழி
ஆலுமேழ்பரிமானூர்திவானவனையந்தரமுகட்டடியியங்கா
தோலுறத்தடுப்பெனெனநிவந்தகல்வானுறுவெளியடைந்ததையன்றே. 7
1084 பொருகடலுடுத்தவிரிநிலமனைத்தும்புதையிருள்விழுங்குபுபுலரா
தருமறைக்கிழவரருங்கடினிறுத்தற்கலரியோனின்மையால்யாரும்
தெருமரலுறுநாள்விரிநிலாவெறிக்குஞ்சேயுயர்வெள்ளியங்கிரிக்கண்
முரிதிரைகுடித்தமுனிவரனுணர்ந்துமுக்கணற்கக்கணமொழிந்தான்.
[footnote: * வேற்றண்டமெனவும்பாடம்.] 8
1085 கருதலர்புரத்தூளெழத்தனிநகைத்தகண்ணதற்சாமிமுவந்தாங்
கருவரையடக்குமுரனுமேழ்நதிகளவற்றினிற்பொன்னியுமருளித்
தெரிதமிழ்முனியைவிடுப்பமற்றவனுஞ்சிரகமேறீம்புனலேந்தி
விரிகதிர்க்கடவுள்வழக்கறுத்துயர்ந்தவிந்தமால்வரையுறவருங்கால். 9
1086 அத்தலைமாயாபுரத்தில்வெம்முனைசாலருந்திறற்கிரவுஞ்சனெனுமோர்
மத்தனாந்தகுவன்மண்ணொடுவிண்ணுமறைத்துமால்வரையெனநிவப்ப
உத்தமமுனிவன்பற்பலவழிபுக்குழன்றுமந்நெறிபெறாதொருசார்
பித்தரினிருப்பக்கதமுறைபிலிற்றும்பெருமழையுய்த்தனன்கொடியான். 10
1087 நிலம்பகவிடித்துவலஞ்சுழன்றெழுந்தநீனிறமுகில்பொழிமாயை
அலங்கெடநுனித்தோனோதியிலுணர்ந்தாங்கவுணனையருவரையுருவாய்த்
தலந்தனிற்கிடத்திநின்னையுங்கேண்மைத்தாரகன்றன்னையும்வேலால்
இலங்குபூண்முருகனெறியநீர்முடிதிரெனவெகுண்டுரைத்தயலகன்றான். 11
1088 பாசடைப்பதுமப்பள்ளியிற்பவளப்பரட்டடிச்சூட்டனப்பார்ப்பை
ஆசறுதரங்கத்தடங்கையாலாட்டியளிபுனற்றவளைதாலாட்ட
வாசமெல்லிலஞ்சித்துணைப்பெருஞ்செவிலிமகவெனவளர்க்குநீர்வேலிக்
காசிமாநகரையிறைஞ்சிவெய்யவனைக்கண்டவல்வினையவண்டொலைந்தான். 12
1089 ஆண்டுநின்றறவோன்றென்றிசைப்பேராறயர்வுழியள்ளிருள்பரப்பும்
சேண்டொடுகுடுமிவரைத்தடந்துருவித்தெரிவிலனிதுகொலோகதிரோன்
தூண்டுதேர்மறித்தவரையெனக்கருதித்தூங்குவெள்ளருவிதாழ்முகட்டில்
மாண்டகுகரத்ததானழுத்தமண்ணொடுபோய்மறைந்ததுமாலிருங்குன்றம். 13
1090 மண்ணகத்தழுங்கும்வரைதனக்கிரங்கிமறித்திவண்வந்துனக்களிப்பாம்
எண்ணலையெனத்தென்றிசைபடர்நெறிக்கணிகலுடையசமுகியீன்ற
பண்ணவர்படிவத்தவுணர்வில்வலன்வாதாவியாம்பதகராலமைத்த
உண்ணருங்கருணைவாசநெய்யடிசிலுண்டவராவியுமுண்டான். 14
1091 உண்டவனிருண்டகொண்டல்கண்படுக்குமோங்கல்சூழ்கொங்குநாட்டொருசார்
அண்டநாயகன்றாளருச்சனையாற்றியரும்பெறற்பொன்னிமாநதிப்பொற்
குண்டிகைதனைவைத்திருந்தனனந்நிர்கொணருமாறைங்கரக்கன்றை
வண்டடங்கரத்தான்வணங்குகவென்னமறைமுனியுரைப்பவானவர்கோன். 15
1092 முருகுவாய்மடுத்துவரியளிமிழற்றுமொய்ம்மலரிலஞ்சிசூழ்காழித்
திருவநீள்குடுமித்தென்றிசைச்சிகரித்திருக்கடைவாயிலினிருத்திப்
பெருகுநீரனையநிறைகடாங்கவிழ்க்கும்பிறைமருப்பொருதனிக்களிற்றைத்
தருவுலாமலர்தூஉய்வரன்முறைபரவித்தாட்டுணைபழிச்சிநின்றவன்முன். 16
1093 வீங்குகோட்டிமயப்பனிவரையுயிர்த்தமெல்லியல்சுணங்கணிகருங்கட்
கோங்குமாயமுதமுலைப்பிடியீன்றகுஞ்சரக்கன்றெதிர்தோன்ற
ஈங்கெனையளிப்பானெழுந்தருடோன்றாலென்னுயிராதிமன்னுயிர்கள்
தாங்குவான்மலயமுனிகமண்டலநீர்தருகெனச்சதமகன்றாழ்ந்தான். 17
1094 தாழ்தலுமஞ்சேலென்றெருவல்வாய்த்தடஞ்சிறைக்கொடியுருவாய்ந்து
வீழ்பனிமுயங்குகொங்குநாட்டொருசார்விரிதமிழ்த்திருமுனிக்காகத்
தாழ்புனல்விளிம்பினிவந்துமாசெறிந்தோனங்கைகள்புடைப்பவஞ்சினன்போல்
கீழ்திசைகாட்டிச்சிரகநீர்கவிழ்த்துக்கிளர்ந்தனன்றொடர்ந்ததுபொன்னி. 18
1095 வேறு.
மீதுறமலர்கெழுசெயலையுமகருவும்விசையொடுதொடுதிசைதிசைசிதறப்
பூதரவுடல்கிழிகுடரெனவிடமுமிழ்பொறிமணியரவுகணெளிநெளியக்
காதுறுமடுபுலிகரடிகளிடையிடைகடமைகளொடுமிருகரைபுரள
வாதுவர்விடுபரிநிரையொருதிரையொடுவருமொருகழுமலமுதுநதியே. 19
1096 மீனிரைவிழியொடுநுரையணிதுகிலொடுமிளிரொளிவளையொடுமிளிர்தரளத்
தூநிறநகையொடுகொடிமறுகிடையொடுசுழிபடுசுழியொடுநிகழுமறற்
பூநிறைகுழலொடுகுமிழ்கொடுமுலையொடுபுதுமலர்முகமொடுமுதுதிரைநீர்
மாநிலமகள்பெறுமகளெனவெழில்பெறவருமொருகழுமலமுதுநதியே. 20
1097 ஆறலையெயினர்கள்வரிசிலையெறிகவணடுகணைபடுசிறுகுடிலிடறித்
தூறியசிறுதலைமுசுவொடுவசிகலைதுறுமியமுளிசினைமரம்விசிறி
ஏறொடுமுருமிகல்களிறதுபிளிறிடவெறிதிரைநிரையிருகரைபொருத
மாறடுவளவனதிருநிலைமலர்தரவருமொருகழுமலமுதுநதியே. 21
1098 பண்டுளபரிகரைவிரிதிடரிடுவதுபடுதிடர்களையவலிடுவதுநீள்
விண்டலமதிபுனைமுதலுறைபதிதொறுவிரிவளைமணிமலர்பொழிலதுசூழ்
எண்டிசைதொறுமுழலிரவலர்கொடைதருமிறைவனையெதிர்கொடுபுகழ்வதெனா
வண்டிரைமலர்விரிகுரைதிரைநிரையொடுவருமொருகழுமலமுதுநதியே.22
1099 வீசுறுகவரியுமொளியுமிழ்மணிகளும்விடுமதகரிகளுமடுகொடியும்
மூசியசிலைகளும்வகைபடுகணைகளுமுரிதிரைநிரைமிசைகொடுவரலால்
ஆசறுகுடபுலவரசரையிகல்பொருதளவறுபொருள்கவர்வளவர்பிரான்
மாசறுதெறுபடைவயவரைநிகரெனவருமொருகழுமலமுதுநதியே. 23
1100 ஏமுறுநடைமலியனமிசைபுனைதலினிசைமறைவிரிதிசைமுகமுறலில்
தாமரைவிரவலினவனியைவிதிமுறைதருதலின்மணிவரைவழிவரலின்
நாமலிகொடியொடுதழுவலின்முழுதுணர்நயனுடையளிவளரயனெனநீள்
மாமலிநிலமகள்வனமுலைவடமெனவருமொருகழுமலமுதுநதியே. 24
1101 தானமுமருமறைநெறிகளுமுயர்சிவதருமமும்விழுமியகருமமுமெய்ஞ்
ஞானமுநவையறுகலைகளுமொருகுடைநரபதிமுறைசெயுமனுநெறியும்
ஊனமிலனமுதலினமலிபொருள்களுமொருமுதலடியவர்திருவடிசொல்
மானமுமலர்தலையுலகினினிலைபெறவருமொருகழுமலமுதுநதியே. 25
1102 வேறு.
ஆழியபொருளாயொழுகலாறுடைத்தாயைந்திணைநெறியளாயகன்று
சூழிருந்துறைத்தாய்ரேற்பொருள்பயக்குந்தொன்னெறித்தாகிநல்லுரவோர்
வாழிசால்கவிபோற்கழுமலமெனும்பேர்மணிநதியணிகிளர்மாடக்
காழிமாநகர்க்கணணைந்ததுமுனியுங்காரியைக்கடிவலென்றணைந்தான். 26
1103 அணைந்தவன்விரல்களொருங்குறமுறுக்கியருளுடைப்பிள்ளைமேற்றாக்கப்
பிணங்கினன்வரலுமொருதனிக்கோட்டுப்பிள்ளையாய்த்துள்ளலர்மழைதூஉய்க்
கணங்களேத்தெடுப்பப்புகர்முகச்சிறுகட்கடம்பொழிநனைகவுட்களிற்றின்
இணங்கியநிலைகண்டலமரலுற்றவேதமின்மாதவனிசைப்பான். 27
1104 குலமறைபுகன்றகடவுளரெவர்க்குங்குழகநின்னடித்துணைபோற்றி
அலதொருசெயலுமுற்றுறாவதனாலாண்டகைநின்னையீண்டறியா
துலகுறுகொடியேன்றிருக்கரமுறுக்கியோங்கியகுட்டெனக்காக
கலைவலாயெளியேன்பிழைத்தமைபொறுத்திகளைகணேபோற்றியென்றிடலும். 28
1105 ஏதமில்குணத்தாய்மகபதிக்காகவிருமுதுகுரவர்தம்பணியால்
மோதலைக்குடிஞைகவிழ்த்தனமெம்மான்முன்னருற்றிடினிதுதெரிப்பன்
போதருகெனக்கொண்டமலனையறியும்பொழுதுநேராதயலிருப்ப
மாதவனொருகோட்டிருசெவிமலையைவணங்கினனதிபெறவிரந்தான். 29
1106 இரந்துழியனையான்கரம்படுகரகத்தெறுழ்வலித்தடக்கையாற்றுளிநீர்
வரந்தருமொருகோட்டிறைமகனளிப்பவயங்குபொற்கரகமேன்முன்போல்
பரந்தபின்காழிபுரந்தனிலென்பேர்படைத்துலகிடரெலாந்துடைத்துப்
புரந்திடென்றொழியவாதியைங்கரன்பேர்புணர்ந்ததுகழுமலப்பொன்னி. 30
1107 புணர்ந்தபூம்பொன்னியணங்குமாதவத்துப்பொருப்புறழ்முனிவரநின்னால்
கணங்குழைபாகன்கயிலைமால்வரைபோற்காழிமாநகரிலுங்கலந்தேன்
உணங்குபல்லுயிர்கட்குன்னருள்வலியாலுலைவறுமேலைவீட்டின்பம்
இணங்குமாறளிப்பல்வரம்பிலாவுவகையித்தலத்தெய்தியவதனால். 31
1108 தொடக்குறும்பிறவியடற்பிணிதணிக்குந்துகளறுமருந்தும்வல்வினையின்
கடக்கரும்புணரிகடத்துநாவாயுங்கரைபெறாவவிச்சைவல்லிருளை
அடக்கிநல்லொளிவிட்டெறிக்குமொண்சுடருமழிபசிநிரப்புறுபரப்பை
உடைத்தினிதளிக்குங்கடவுண்மாமணியுமாவெனிந்நகரில்யானுரவோய். 32
1109 வார்ந்ததெண்டிரையதெய்வநதிகள்வகைக்கெலாமொருதனிசிறந்து
சேர்ந்தவிண்ணவரோடெவர்க்குநல்விழுப்பஞ்செய்துவையகத்திலென்மேனி
ஈர்ந்திரையிளங்காறோய்ந்திடிற்காணிலெய்திடிற்கைதொடிற்பருகில்
கூர்ந்தவல்வினைகள்பரிதிமுன்பனிபோற்குமைப்பெனெக்குலத்துமன்பதைக்கும் 33
1110 ஐவ்வகைப்பவத்தோர்வெவ்வழல்வேள்வியலைத்துளோர்குரவரையிகழ்ந்தோர்
செவ்வரித்தடங்கணயன்மனைவிழைந்தோர்செயிரறுதெய்வதம்பழித்தோர்
எவ்வமுற்றுழலும்வறிஞரைநலிந்தோரிருமுதுகுரவரையயர்த்தோர்
கைவ்வினைகரந்தோர்பொய்க்கரிபுகன்றோர்கடுஞ்சமரினில்வெரிநிடுவோர். 34
1111 சுளித்துரைதருவோர்தூநறைமடுப்போர்சுற்றம்வெம்படருறக்களிப்போர்
களங்கறுமுல்லைக்கற்பினல்லாரைக்கனன்றுளோர்கன்னியைக்கலந்தோர்
துளங்கருநன்றிகொன்றுளோர்நட்டோர்தொகுபொருள்கவர்ந்துளோர்மூத்த
விளங்கிழையவர்தோண்மணந்துளோர்நறையூன்விலைஞர்கையிழிபொருள்வேட்டோர். 35
1112 விருந்தினைத்துறந்தோரபயமென்றளித்துவிடுத்துளோர்கருவினைச்சிதைத்தோர், தரும்பொருள்கெடத்தென்புலத்தவர்வேள்விதணந்துளோர்நாண்டுறந்துழல்வோர், அருங்கனலகன்றுமிருங்குழன்முடித்தோரமணராயரும்புனலிழிந்தோர், பெருந்துறைவழிக்கணைடுந்தருக்குரைத்தோர்பேதுறவாறலைத்திடுவோர். 36
1113 அருமறைக்கிழவர்பெறும்பயனுகுத்தோரரசியற்றிறம்பினோரிருள்வாய்
தருமிடமறுத்தோர்கண்ணியின்வலையிற்சார்ந்தபுளவிலங்கினைவளைத்தோர்
பெருகுநீர்க்கூவல்வீழ்பசுவெடாதோர்பெய்கவறாடுவோர்குரவன்
திருமொழிமறுத்தோர்காலையிற்கடவுட்சினகரம்பணிந்திடாதகன்றோர். 37
1114 கடவுளாலயத்துமகளிரைப்புணர்வோர்கணிகைமாட்டரும்பொருளேற்போர்
தடமலர்வாவிதூர்த்துளோர்குறளைச்சாற்றுவோர்மணவினைகெடுத்தோர்
மடமகவினைநீர்வீழ்த்துளோர்விலைநெல்வாணிகர்க்கேற்றினைவிற்போர்
புடைவனமுலையாளொருதனிப்பாகன்புனைவுறுமலரினையணைந்தோர். 38
1115 மெலியபால்விஞ்சைதடுத்துளோரையம்விலக்குவோர்பொய்விலைபகர்வோர்
நலியிளங்கன்றைப்பால்விடாதலைப்போர்நயனிலகூறுவோராதி
கலிகெழுவிலைஞரேவருமுவந்தென்கடவுணீரிடைப்பணிந்தனரேல்
வலிவினைகழுவிக்கழுமலநதியாய்வயங்குவென்றயங்குமிந்நகர்க்கண். 39
1116 கோணிலைதிரிந்தகாலையுமாலைக்கொழுஞ்சுவையமுதுமிழ்புனலாய்
வாணிலாஞ்சுடரோரிரண்டுளகாறுமாறுறாதிந்நகர்வாழ்வேன்
சேணலாங்கங்கையாடின்முத்தினத்துந்தெய்வநீர்யமுனையைந்தினத்தும்
ஆணியாம்பலபேறளிக்குமோர்தினம்புக்காடினாற்பலனளிக்குவென்யான். 40
1117 தென்புலக்கிழவர்க்கருத்துநாளுரகஞ்செழுஞ்சுடர்விழுங்குநாள்கதிரோன்
அன்புறுதகர்மேற்றுலையின்மேலவருநாளயனநாளுவவுநாண்மாகம்
என்பெருநெடுநாளிவற்றினென்மேனியீர்ம்புனல்படிந்துளோரடிநாள்
துன்பிருவினைக்கோர்கனலியுமனையார்தொல்லுயிர்க்கமுதுமாகுவெனால். 41
1118 படிபடுமாந்தர்கரைபடிற்பிணியிற்படிபடார்நெடுகியதிரைநீர்
அடிபடிலகலாவிருவினைத்துவக்கிலடிபடாரடைகரைவார்ந்த
பொடிபடினிரயத்தருந்தழல்வறுத்தபொடிபடாரெள்ளளவுறுநீர்
குடிபடிலினியோரன்னையர்முலைப்பால்குடித்திடார்முடிப்பருங்குணத்தாய்.42
1119 பற்பலவியப்போடிந்நகரிருப்பென்பகவநின்னருளுமோர்புழைக்கை
அற்புதனருளும்பயத்தலாலென்னவகமகிழ்தூங்கியமுனிவன்
பொற்பொடுபொலிகவடபுலத்தமைந்தபுனிதநீர்க்கங்கைபோலுன்பேர்
எற்படர்மவுலிச்செம்பியன்புவிக்குமெய்துகதெய்வநீரணங்கே. 43
1120 கழிதருங்குவளைகயந்தொறுங்கமலங்கரைதொறும்வெள்வளைமடைநீர்
இழிதொறுந்தரளமேர்தொறும்பசும்பொனிருகரைதொறுமறைமுனிவர்
பொழிறொறும்புயல்கள்புடைதொறுங்கடவுட்புனைமணிச்சினகரமியங்கும்
வழிதொறுங்கன்னல்வயறொறுஞ்செந்நென்மல்குகநின்னுழைமாதோ. 44
1121 கறங்குவெண்டிரையகங்கையேயாதிகடவுண்மாநதிகளுநின்பால்
அறங்கிளர்துலைக்கணாடிமாசகற்றியருளுமாறலறியமுந்நீர்
பிறங்குதொல்புவிக்குமருளுகவென்னாப்பேரியன்முனிசெலமகவான்
நிறங்கிளர்நளிநீர்மலர்த்தியமலரானிருமலன்பூசனைமுடித்தான். 45
1122 ஆண்டுதண்கயிலைக்கமரர்கோனேகவுயிலெழிற்றசமுகியென்பாள்
தூண்டுமான்றடந்தேர்த்துணைவனுக்களிப்பான்சுந்தரிவலக்கைதொட்டீர்ப்பப்
பூண்டுழாயலங்கன்முகிற்குமுக்கணற்கும்புதல்வன்வெஞ்சேனையந்தலைவன்
காண்டலுங்கொடியாள்கையரிந்தெறியூர்கைவிழுஞ்சேரியொன்றுளதால்.46
1123 மற்றவளகலப்புகலிமாநகர்க்குவன்னியந்திசையின்மாகாளன்
வெற்றியங்கழற்காலொருதனிச்சாத்தனவியன்பணிபுரிந்தனன்வைக்கக்
கற்றைவெண்டிரைநீர்பொன்னிமாதளிப்பக்கடிமலர்த்துடவையும்பிறவும்
பொற்றலிரகுழைத்தூறுமலர்விரித்துப்பொலிந்தனபொங்கராங்கதன்பின்.47
1124 பூதலங்கடந்தவொருதனிமுளரிப்புங்கவன்றேடருங்காழி
மாதலத்தொருகூன்பிறையணிவேணிவரதனதாரருள்பூண்டும்
காதலஞ்சசியோடமரர்கோன்போதக்கடமுனிசைமெய்தினனென்
றோதியசூதனருவரைவளனாண்டுறுவருக்குணர்த்தியநெறியை. 48
1125 வேறு.
தெய்வங்கமழும்பளிக்குண்டைத்திரள்காய்நெல்லிதருமூலத்
தய்யமகன்றமுனிக்கரகத்தினீருய்யப்பநதிநீராய்ப்
பெய்யுங்குளிர்பூம்பொன்னியினாற்பெருமாநிலத்தின்னுயிர்புரக்கும்
வய்யம்புகழுங்சையமெனும்வரையின்வளனீங்கறைகுவெனால். 49
1126 அடர்செஞ்சடையுமிராவணன்மேலடருங்சிறுகானகக்கண்ணும்
படரம்புலியுமாசுணமும்பலதாழ்வடமானிடமும்
தடகண்கலையுமடங்கலுடைத்தருக்குஞ்செருக்குந்தன்மையினால்
கடலின்விடமுண்டளித்தமலர்க்கையனிகர்க்குஞ்சையவரை. 50
1127 கோடுதாங்வெயின் மறைத்துக்கொண்மூவடிக்கொண்டலைவிலதாய்
நீடுதருமாமணிமணந்துநெறிக்கட்டடந்தாமரைகாட்டித்
தேடும்பலனுமூலமுமாய்ச்செல்வந்தேறவதரமெல்லாம்
ஆடும்பாகட்டாலறிதுயில்கூரையனிகர்க்குஞ்சையவரை. 51
1128 முன்னூலணியாலெவ்வாறுமுழங்குமதாவாரணச்செறிவால்
மின்னூர்வாயால்வனாப்புறவேதண்டமருங்கைவிரித்தலினால்
கொன்னூர்குகரங்காட்டலினாற்குடுமிநாலுமருவியதால்
தொன்னூல்விரிக்குமடல்வனசத்துய்யனிகர்க்குஞ்சையவரை.52
1129 ஏவார்தடங்காட்கொடிச்சியார்வாழில்வாய்விளக்கும்பொற்றுகள்போய்ப்
பூவார்தடமென்சினைதோறும்போதுளியொளிசூழ்கிடந்தமையால்
தாவாவிண்ணோர்வதிதருபூந்தருவைநெடும்பொற்றருவென்றே
ஓவாவொருபேர்கொடுத்ததிந்தவோங்கற்கிடந்ததிணிமுன்றில். 53
1130 சோதிவாய்ந்தபசுங்கமுகந்துணர்ப்பூம்பாளைவாள்விதிர்த்துப்
போதிவாரமென்றலினாற்பலகைதாங்கிப்பொருப்பரசன்
மீதிலாகண்டலனிலையாய்ந்தெழுந்துமிளிர்வன்சிறையரிந்த
சாதிமானப்பழிதுடைக்கத்தருக்கின்றதுபோனெருக்குமால். 54
1131 திவளப்பசும்பொற்கொழுந்துயிர்க்குஞ்சேமப்பாறைநிழலுடன்மேல்
இவரத்திரியும்வரைவருடைபசியபிணையென்றெறிசுடரோன்
பவளக்குரத்துக்கொய்யுளைமானேழும்படர்மாலுழந்துருகி
அவணத்திமையாக்கண்கொடுபார்த்தலைக்குந்தடந்தேர்நிலைக்கவே. 55
1132 பெருகியொளிகால்நறுங்குலிகப்பெருஞ்சேதகந்தோய்ந்தொழுகுதெண்ணீர்
அருவிகுளித்துப்பவளமருப்பாயவேழமியங்கிடுமால்
திருகுசினத்தின்ஞாட்பினுற்றசெறுநர்மார்பிற்செருகிவரும்
குருதிபொழியுங்கூர்ங்கோட்டுக்குறுங்கட்பெருங்கைக்குஞ்சரம்போல். 56
1133 கண்ணார்பீலிமஞ்ஞையுயிர்கதிர்கான்மணியைக்கோபமெனா
எண்ணாதயில்வான்கவர்ந்துபசையின்றியெறிவமாலுழந்து
பெண்ணாருருக்கண்டுணர்விழந்தவிழியான்முயங்கிப்பெறுமின்பம்
நண்ணாமடவார்நசையின்மைகுறித்தாங்கொருவுநல்லவர்போல். 57
1134 கூன்றோய்மருப்பையறைதீட்டிக்கூர்மையறிவான்குழியழற்கண்
ஊன்றோயகட்டுத்துறுமயிர்மெய்யொடுக்கியடுக்கத்தெற்றேனம்
தேன்றோய்மலர்ப்பூந்தருவிலக்காய்ச்செருக்கிப்பாயப்பிலிற்றியதேன்
மான்றோற்பள்ளியெயின்மகவாய்மடுக்குந்துயிற்கணடுக்குமே. 58
1135 நெறியாரிந்தவரைக்குடுமிநிலவுமுரவோரருளுண்மை
சிறியார்புகலுந்தரத்ததோசெற்றநீங்கிமுற்றமெலாம்
பொறியார்மனவப்பெருமணிப்பூண்பொம்மன்முலைப்பால்பருகியவாய்
வெறியாரெயினக்குழவியொடுவேங்கைப்பறழுமகளுமே. 59
1136 கருங்கால்வேங்கைவீயுகுத்தகடுக்கைநறுந்தண்டுணர்சொரிந்த
இருந்தாதரிக்கொண்டரிதாரமீர்த்துப்பசும்பொன்சேர்த்துவரைப்
பெருந்தாளடிக்கண்முடியினின்றும்பெருகுமருவிதூங்குமுல
கொருங்கேயுண்டவானவன்பொன்னுத்தரீகந்துயல்வரல்போல். 60
1137 கொல்லாடரவமிரைரேக்குறித்துக்கான்றமணிக்குவைகள்
வில்லாரொளிவிண்முகட்டளவும்விரியப்புரைதீரறிஞரிடைப்
புல்லாவெழுத்தின்வறுங்கோட்டிப்புலனில்புலவர்முகம்போல
ஒல்லாக்கதிரும்வெண்கதிருமொளிமாண்மழுங்கியியங்குமே. 61
1138 தானமடுத்தமுகிற்குலங்கடவழுங்குவட்டிற்றோகைவிரித்
தானகளியின்மஞ்ஞைபலவமைந்ததோற்றமலிரொளிசூழ்
வானமடவாரகன்சுனைநீராடிமயிர்க்கால்விரலுளர்ந்து
கானமருப்பூங்குழலாரவிரித்தாங்கிருத்தல்காட்டுமே. 62
1139 வளிசால்விசும்பூடுரிஞ்சுபசுங்கழைமேற்குறுகூன்மடமந்தி
களிசால்பவுரியிடநோக்கிக்கங்கைப்பசுங்கட்குழிகவுளின்
அளிசால்கடுவன்முட்பலவின்சுளைநல்குவவேலடர்வேந்தர்
ஒளிசால்பொன்னந்துணிகளைக்கண்ணுளர்பாலீவதொத்துளதே. 63
1140 வெளிறுநீத்தகருமுகிலைப்பிடியேயென்றுவியன்புழைக்கைக்
களிறுநீட்டவிலங்குழுமீக்கண்ணின்றமுதுகான்றுவளைந்
தொளிறும்பிறையைச்சிமையவரைப்பாகற்களிப்பானுருத்தெறிந்து
பிளிறிநிவந்துதோட்டியெனத்தடவும்பெற்றியன்னதே. 64
1141 இமைக்கும்புனல்கோட்டருவரைநின்றிழியுமருவிவிழுந்தரையில்
குமைக்குங்குழிவாய்மாமருப்பாற்குறுங்காற்குரம்பைக்கொடிச்சியர்கள்
சமைக்குங்கிழங்காலகழ்குழிவாய்வல்சியாகத்தனிகொழிக்கும்
அமைத்திண்கதிர்கான்மணிமுத்தந்தூர்க்குமாதோவகன்சாரல். 65
1142 சகடொன்றுடைத்தேரிரவிதெறுந்தழலங்கரங்கள்காணரிய
முகடுமாய்த்தபனிப்பாறைகிடந்தவண்ணமூதண்டத்
தகடுதேய்க்குங்குவட்டிலுறையறவோரியங்கலாற்றைவெள்ளித்
தகடுபொதிந்துபடுத்திழைத்ததன்மைபோன்றுதயங்குமே. 66
1143 வருங்காலாற்றின்மருங்கெல்லாமைகோடுறழுந்தழைமேனித்
திருகுகொட்டுப்பாரமடிச்செங்கண்மேதிபொழிதீம்பால்
முருகுமலர்ப்பூங்கோடுழுதுமுழுவெண்மதியினுடல்கிழியப்
பெருகிவழியாரமுதோடுமயங்குமொருசார்பெருமுன்றில். 67
1144 முழைக்குன்றிடைக்கோளரியுகிரியின்முளையாலுறுகண்டூதியுறா
திழைக்கமோட்டுவெரிந்காட்டினெரிகண்முகிழ்த்துநாலவிட்ட
தழைக்குங்குழைகாற்றெறிசெவியதந்தாவளத்தின்பிணருருவப்
புழைக்கையேறிப்பொன்னூசற்கொளுமவ்வரிமாண்பூங்குருளை 68
1145 உரையிற்கூடாமேதகுசீர்யோகக்கிழவர்முறைபயிற்றும்
கரையிற்றுளமாமறையோதைசெவிவாய்மடுத்துக்கன்றொடும்போந்
திரையிற்கண்ணாதுருகியவானினம்வெஞ்சினவேரெறிந்தவர்தம்
புரையுட்டொறும்பான்மணிச்சிரகவிளிம்புதுளும்பப்பொழியுமே. 69
1146 எறிகொள்வடந்தைசுழன்றாடவீர்ங்கொண்மூநின்றயலாடப்
பொறிகொள்கலபப்பிணிமுகங்கூத்தாடல்புகன்றென்புரைவிடங்கால்
செறிமுள்ளெயிற்றுநெட்டுடல்வாளரவமாடுந்தெறுஞ்சுடிகை
மறியுநிழற்கட்சீறெலிபாய்ந்தாடுந்தடஞ்சார்மாடெல்லாம் 70
1147 மெய்தூங்கழலோன்வழிபடல்போலரும்பலாசின்மிடைந்தலர்ந்த
நெய்தூங்கடர்ப்பூஞ்செம்மலுகுநெடுங்கல்விடர்வாய்முரட்கடுவன்
கய்தூஞ்சுனைநீர்பெய்தேனின்கணமேற்றூவியிறால்பொதிந்த
பெய்தேன்கெடச்சூளில்லான்போல்வினையேயிழைத்துப்பிழைத்திடுமால். 71
1148 ஒழுங்கிற்சிறந்தோருழைப்பல்லாண்டுறநட்டாலும்புலனிலர்தம்
மழுங்கிக்கிடந்ததிண்ணறிவுநுண்டுகொல்லோவண்பளிக்கின்
எழுங்கிற்பாறைநிழனாறவேதிலேறென்றெதிரளித்துக்
கொழுங்கட்சுடர்கான்றடிநிலத்தைக்குரத்தாற்கிளைக்குங்கொல்லேறு. 72
1149 துருவியோடுமழைப்படலஞ்சூழவோடும்புல்லொடுமான்
மருவியோடுநுதற்சூட்டுமாலைபோலக்குவட்டினிழிந்
தருவியோடும்பருவரைபோலானேறோடுமேனன்மிசைக்
குருவியோடும்வயவேழங்குழியவோடும்வழியெல்லாம். 73
1150 விரைப்பைந்துணர்தோய்மரனிடத்தீவிளிசால்விரிபூம்பொழிறோறும்
கரைக்குங்கண்ணீரொடுந்துரியங்கடந்தவெளியிற்கருத்தொடுங்கி
இரைக்குஞ்செயல்போதெழுதும்விளக்கெனலாயசைவற்றிருப்பவர்மேல்
உரைக்குமுழுவைதனைத்தெருட்டுமுயாந்தோர்கரம்போல்வியன்காந்தள். 74
1151 ஓடுமதிமேலுரிஞியகோடுகுத்தவமுதுமுட்பலவின்
கோடுகுனியுங்குடங்கனிவீழ்ந்தழிதீஞ்சாறுங்கோரண்டத்
தாடுமலர்வாயிலங்குமிறாலழிதேனொழுகியாறிழுக்காப்
பீடுதருமாமுனிவருக்குமவ்வாறிழுக்கும்பெரிதாக. 75
1152 விண்வாயெழுந்தமின்னலெனவிருகுன்றேந்திவியன்கீதம்
பண்வாய்மிழற்றச்சுடர்ப்பவளவல்லியார்த்தபசும்பலகைக்
கண்வாயெழிற்சூரர்மகளிரூசலாடக்கவின்றருவ
தண்வாய்நறவமலர்கொழிக்குந்தடமென்சினைச்சந்தனப்பொதும்பர்.76
1153 மூன்றுபுவியுமுன்றிலிடையுய்ப்பார்முதுமாமறைக்கொடிகள்
ஊன்றிவளருந்தருவனையாருறங்காதுறங்கும்யோகுடையார்
சான்றபனுவலாட்டிதனிக்கிழவன்வியக்குந்தவக்கிழவர்
ஆன்றமுதுதாபதப்பள்ளியலகில்லனவாண்டுளதம்மா. 77
1154 விடங்கூர்தொளைமுள்ளெயிற்றுமணிவெஞ்சூட்டரவமீக்கிடந்து
தடங்கூர்கமலத்தவட்புணர்ந்துதழல்வாய்நேமியுருட்டியகல்
இடங்கூர்ந்தளித்தோனவனளித்தோன்முதலோர்பதமுமிகழ்ந்திவர்பால்
கடன்கூர்ந்தேவற்றுறைபிழையாதொழுகுமாணர்களும்பலரால். 78
1155 விரிக்குங்கமலாசனத்திருந்துவிழியைக்கொடிமூக்கிறுதிநிறீஇப்
பரிக்குந்தொடர்மார்பெதிரேறப்பண்டியாழாதுயராது
தரிக்கும்படிதோளுயரநகைத்தரளம்பிரியாமூலவொளி
தெரிக்கின்றவனைத்தெரியோகத்திறத்தினவரும்வரம்பிலரே. 79
1156 தென்பால்வடபான்மேல்கீழ்பால்சிகைநாவளைக்குஞ்சுடர்நாப்பண்
இன்பாலகந்தைக்கிழங்கையகழ்ந்தெறிந்துபனிக்கோட்டிமயவரை
மின்பாலவனையுளத்திருத்திவெய்யோனிடைக்கட்புலனமைத்துத்
தன்பாலூசிநுதிக்கணின்றுதவமாற்றுநரும்பலராங்கே. 80
1157 அகனும்புறனும்புனிதமுறவாறைந்தடக்கியனற்கடமை
தகநன்கியற்றிநறுந்தூமந்தாமந்திருமஞ்சனமீட்டிப்
பகலுந்துணர்வான்மாயன்வலிப்பருகுங்கணிச்சிவானவனைப்
புகலும்பூசைத்தொண்டுபுரிகிரியையோரும்பொலிந்தனரே. 81
1158 எடுத்தபொருளுக்கேற்றகடாவடுத்துவிடைகொண்டதைவிடுத்துத்
தடுத்தவழிநின்றருட்குரவன்குறிப்பானுணர்ந்துசைவநெறிக்
கடுத்தமேற்கோளிறைவனடியகத்திலிருத்தியவனருளே
மடுத்துச்சிவநூன்முறைபயிலவல்லார்பல்லார்குழுமினரால். 82
1159 பாலரனையவைம்பொறியும்படுக்கும்படையர்சுருக்கணிந்த
கோலருயிர்கட்குயிராகிக்குன்றாதொழுகுங்குணக்குன்றர்
சீலரெவற்றுஞ்செறியாதுசெறிந்தோனடிக்கேபிறிந்தறியா
மாலர்முத்திமுற்றத்தர்வைகும்வரையின்வளனீதால். 83
1160 குழைக்குங்கோட்டுநெல்லியொன்றக்குடுமிநடுவட்பொலிந்ததத
னுழைக்குஞ்சரவீருரியான்றொண்டுடையார்துவன்றபழமறைநூல்
தழைக்குமுதலாய்மாமனுக்கட்டடமென்கிளையாயாகமங்கள்
இழைக்குமிலையாயருட்டுணராயிகவாமுத்திக்கனிபழுத்தே. 84
1162 அன்னகடவுட்டருமூலத்தளிநீர்ப்பொன்னிதனையிறக்கித்
தென்னன்பெருநாட்டளிதூங்குந்தென்றற்குழவிநடைபயிலும்
பொன்னங்குவட்டுப்பொதியவரைபுக்கானுழுந்தாழ்புனலாக
முன்னங்கடலேழையுமுண்டமுதுமாதவத்துக்குடமுனிவன்.85
1162 இனையகடவுண்முனியளிப்பவீர்ந்தண்பொன்னியிருவகைத்தாய்க்
கனைநீருலகிற்சிறந்ததெனக்கலைதேர்சூதனெனுமேலோன்
வனைநீர்க்காந்தபுராணத்துவருசங்கரசங்கிதைசொன்ன
வினைதீர்கதையீங்கிதைச்சூதன்வேணிமுனிவர்க்குரைத்தனனால்.
(21 - ஆவது. கழுமலநதிவரவுரைத்தவத்தியாயம்முற்றிற்று.)
ஆக திருவிருத்தம் - 1162.
-----------------------------
22-ஆவது. குமரவேளுபதேசம்பெற்றவத்தியாயம் (1163-1198)
1163 குலைவிரிகுடக்காய்த்தெங்கின்கூரிலையெனவெவ்வேறு
தலைவிரிந்தளிக்குந்தெய்வத்தண்கழுமலையாறுற்ற
நிலையிதுவாகுமிவ்வூர்நிமலனைமுருகன்போற்றி
மலைவிரியுபதேசங்கொள்வண்ணமும்பகரலுற்றாம்.1
1164 போழுலாந்திங்கட்கண்ணிப்புரிசடைமுனிவன்சோதி
வீழுலாங்கயிலைக்குன்றின்விரிந்ததென்றிசையினூடே
சூழுலாமருவிமாலைதுவன்றியதடமென்கோட்டுக்
கேழுலாங்கடவுட்டேவகிரியுளதொன்றுமாதோ.2
1165 அக்கிரிதன்னிலெம்மானருளினாலொருமுந்நான்கு
கைக்குமரனுக்குமுந்நூற்கடிமணமுடித்துவெங்கோல்
திக்கிரிதரச்செய்சூரன்றெறுபடைக்குடைந்தமேனி
மைக்கிரியனையானாதிவானவர்க்கிரங்கிவள்ளல். 3
1166 கவலருமறைகள்பூத்தகனிமலர்ந்தருளிக்கோடி
திவளொளிப்பரிதிமேனிச்சேட்டிளங்குகனைநோக்கித்
தவலருந்திருவேஞானத்தனியிளங்குன்றேவானோர்
அவலவேரரிவான்சூரனாயல்வேரரிவாயென்று. 4
1167 நொறில்வயப்புரவிபூண்டநுகம்படுதரங்கத்திண்டேர்
பொறிவழிச்சிங்கனாதிபொருந்துநூற்றெண்மர்தேர்ச்சி
செறிமதிவீரவாகுமுதலியதுணைவர்செந்தீ
எறிமயிர்க்குறுந்தாட்பூதமிரட்டியாயிரத்தவெள்ளம். 5
1168 அசனியேறலறத்தாக்கியங்கையிற்பிசைந்துநூறும்
வசையறுமாற்றலொன்பானிலக்கவாளுழவரோடும்
திசைமுகங்கமழுந்தெய்வச்செச்சையந்தெரியலானுக்
கிசையுறவளித்துவெவ்வேறெரிமுகப்படையுநல்கி. 6
1169 ஓதைமாற்றியவண்டாடுருளநறுங்கடப்பந்தாரோய்
ஈதெலாங்கொடுநீவெஞ்சூரிகறடிந்தெறிகவென்னாக்
கீதயாழ்மருட்டுந்தீஞ்சொற்கெண்டையந்தடங்கட்பேதை
மாதர்பாலொருவனீயமற்றவனிச்சைபூண்டே. 7
1170 குலிசவேலிறைவனாதிகுண்டலவாணர்தத்தம்
வலனுறுமிருக்கையேறமாமணியிரதமேறித்
தொலைவறுகடலந்தானைசூழ்வரத்தென்பாலென்பர்
பலனுறவினிதுசென்றான்பன்னிருகரத்துப்புத்தேள். 8
1171 பொற்பமர்கடுக்கைமாலைப்புண்ணியனண்ணுந்தானம்
பற்பலவொடுங்கேதாரபனிவரையிறைஞ்சிவேதச்
சொற்பதங்கடந்தோன்வேணித்துறையினின்றிறங்குகங்கை
அற்புதங்கிளருங்காசியமலனையலர்கொண்டேத்தி. 9
1172 வேறு
குளிர்தூங்கருவித்திருச்சயிலங்குறைவில்விருப்பாக்கமும்பரவித்
தெளிநீரேறிபொன்முகலிநதித்திருக்காளத்திவரைபோற்றி
வினியாவொருதன்மனக்கியன்றவிரிவேங்கடமால்வரைநோக்கிக்
கனியாலூர்த்ததாண்டவஞ்செய்கடவுளாலங்காடெய்தி. 10
1173 முன்மாமறைகடேடறியமூலச்சுடராமொருமுதல்வி
நன்மாவடிக்கீழுறைகரஞ்சிநகர்வாழொருவனடிபோற்றிச்
சொன்மாசகற்றுங்கார்த்திகைநாட்சுடரோங்கியமால்வரைதாழ்ந்து
பன்மாதவர்க்குமுத்திநெறிபயக்குமுதுகுன்றினைத்தொழுது. 11
1174 காரானந்தமருஞ்சோதிக்களத்தினிடத்தன்மணிக்குழையன்
பேரானந்தமணிமன்றிற்பெருமானிருதாண்மலர்போற்றி
நீராமண்ணிப்பெருநதிக்குநிறைகாவிரிக்குநடுவணெனக்
காராவமுதனவனுறையுமந்தண்காழிநகரணைந்தான். 12
1175 வீரந்தருபூணெழின்முருகன்வேணுபுரத்தைக்காணலொடும்
பாரந்தருதிண்புயத்துமிடற்பானுகோபற்பயந்தவெய்யோன்
வாரந்தருமென்பகைவரவைவழுத்திலாயென்றிழித்தென்னைக்
கோரந்தருமென்றொளிப்பான்போற்குடபாலொளித்தானடல்வெய்யோன். 13
1176 உரிமைதாதாயவுயிர்ப்புடைநாணுடையாளன்றேகடலீன்றாள்
*மருகற்காணூமடற்கதவமறைத்தாங்கெனத்தாமரைமுகிழ்ப்பத்
திருவுக்கினியவுயிர்ப்பாங்கிசெல்வாவருகவருகவெனா
அருமைக்கனிவாய்திறந்தழைத்தாங்கலார்ந்ததாலோவரக்காம்பல. 14
1177 குமுதம்விரியக்கதிர்விரியுங்குளிர்வெண்மதியென்றுலகுதொழும்
அமிழ்தமெழுமுன்விடமெழுந்தாங்கனையவிருளுமாரமுதத்
திமிதமிறைத்தாங்குடுக்கணமுந்தெள்ளாரமுதமெனநிலவும்
இமிழ்தெண்டிரைநீரொலிவேலியீர்ங்கண்ஞாலத்தெழுந்தனவே. 15
1178 தொலையாவமணப்பேரிருளைத்தொலைத்தபூதிசாதனம்போல்
அலையாருலகத்திருணூறியலர்வெண்ணிலவந்தலைகொழிப்பக்
கலைதேர்காழிக்கவுணியர்கோன்கடவுண்முருகனென்னமலைச்
சிலையானன்பர்மாநேசச்செழியனானகடவுளர்கோன். 16
1179 கடல்வாய்முளைத்தசுதைத்திங்கட்கற்றைநிலவஞ்சுற்றியபின்
மிடல்வேன்முருகற்கிடனாகமெய்ம்மைக்கடவுட்கம்மியர்கோன்
சுடர்மாளிகைவிண்முகடளவித்தொடுதோரணத்தினிழல்பரப்பும்
வடமாமறுகிற்படரொளிகான்மணியாலமொன்றணிசெய்தான். 17
1180 இருள்சீத்தொளிகான்மணித்தசும்பினிமைக்கும்பசும்பொன்னெயில்வளைத்துக்
குருமாமணித்தூணிரைபரித்தகோட்டநடுவண்மோட்டரிமான்
தருமர்தனமேலுருள்கடப்பந்தாரோனிருப்பவார்கழற்காற்
புருகூதனும்விட்புலவோரும்புறஞ்சூழகம்புக்குறைந்தாரால். 18
1181 உறைந்தார்பலரிற்கிம்புரிக்கோட்டொருவெள்ளயிராவதப்பாகன்
அறந்தாழ்சூரன்கொடுங்கோலாலலையார்பழனக்கழுமலத்துள்
புறந்தாழ்கூந்தற்சசிமடந்தைபுனைமாணிழைகண்முனைநாளில்
சிறந்தோருழைவைத்திருந்தவெலாந்தெரிந்தானுருகிப்பரிந்தானே. 19
1182 பரிந்தானுரிமைப்பெருந்தேவிபணைமென்முலைமேற்றணியாமால்
புரிந்தான்விரகக்கனல்கனற்றப்பொரிந்தான்கன்னற்பொழுதுகமாய்ப்
பிரிந்தானொருபெண்சசிக்காகப்பெருவெண்சசியின்கதிருருப்பக்
கரிந்தான்கங்குற்பெரும்புணரிகழித்தான்கதிரோன்விழித்தானே.20
1183 குவளைக்களத்தன்கண்வரலாற்கோதாடசுரப்பகைதெறலால்
அவனிக்காறுதலையுறலாலம்போருகக்கண்ணனைவிடலால்
தவருக்கருண்முன்னாமுன்னாலுகையாற்றாவில்பூதமகிழ்வரலால்
உவனித்தனிவேன்முருகனெனவுதித்தான்கதிரோனுத்தலுமே. 21
1184 மாலைக்கவிகைவாசவனும்வானுளோருமுனிவரரும்
சோலைக்கவிகைநிழல்பரப்பிச்சூழுங்கழனிக்காழிபுரத்
தாலைச்சுவைநேர்கழுமலப்பேரந்தண்பொன்னிகுடைந்தாடிக்
காலைக்கடவகடனிறுத்துக்கடம்பன்றுணைத்தாளிடம்பணிந்தார். 22
1185 நடக்குங்காலமிதிற்காந்தணறுமென்குஞ்சித்திருமுருகன்
சுடர்ச்செஞ்சுடரோனெயிறுகுத்ததொல்லைக்காழிவல்லவன்மேல்
கிடக்குங்கருத்தால்வழிபடற்குக்கேழிலொருதன்கோயின்முன்னே
முடக்குங்கொடித்தெண்டிரைபுரட்டுமுதுநீர்த்தடமொன்றதுகண்டான். 23
1186 கண்டதடத்துக்கங்கைமுதற்கடவுணதிகளெனைப்பலவும்
மண்டவிருத்திமலர்க்கரத்தான்மணிநீரேந்திப்பணிமாலை
அண்டர்பெருமான்பிரமன்முடியணிந்தபெருமான்பழமறைநூல்
விண்டபெருமான்முடிக்காட்டிவெட்சிப்பெருமானர்ச்சித்தான். 24
1187 தொண்டால்வழிபாடிழைத்தலர்தூஉய்ச்சுடரேயிடர்தீரரு மருந்தே
பண்டாரணநூல்விரித்ததனிப்பவளமணியேபணிவிலர்பால்
அண்டாவொளியேயறிவிலெனாலறியாவறிவேயெனைப்புரந்த
தண்டாவமுதேவேணுபுரித்தலைவாவெனமுன்பணிசெய்தான். 25
1188 உண்ணீருருகநெக்குநெக்குள்ளுடைந்துகுழைந்துதரும்புளகம்
கண்ணீராறாயுள்ளமலர்க்கண்ணீராறாய்க்கரைந்தவன்முன்
பண்ணீர்க்குதலைக்கிளியொடுமான்பரிமேலிவர்ந்துசண்பைவளர்
முண்ணீரெயிற்றுப்பணிமாலைமூன்றுவிழியான்ரோன்றினனால்.26
1189 கனிவாய்மகனையாறுமுகக்கருணைக்கடலைக்கழற்றுணைமேல்
பனிநாண்மலர்தூஉய்ப்பணிவானைப்பணைத்தோளழுந்தவணைத்தேந்தி
நனிதரங்கொண்டுன்பூசைநயந்தேநயந்தேநின்னுளத்தில்
இனிவேண்டுவதென்னென்றருளியிமயச்சிலைவாங்கியமுதல்வன். 27
1190 பாலம்புனைவெண்பொடிபுனைந்துபவளச்செவியிலுவகையினான்
மூலம்படுமோரைம்பதமுமுறையாலோதிமுறைதணந்தோர்
காலம்பருகும்பாசுபதக்கணையுங்கதிர்க்கூரிலைவேலும்
ஆலம்பொருவெம்படைபலவுமளித்தான்கடுக்கையளித்தாரான். 28
1191 தெவ்வுப்புலத்தைவேரரிந்துசேண்வாயமரர்மாணிழந்த
கவ்வைச்சிறைமீட்டெய்துகெனக்காளிபுரியாளுடையபிரான்
கொவ்வைக்கனிவாய்மகற்கருளிக்கோயில்புகலுஞாயிறெனச்
செவ்விக்கதிர்வேலிளங்குமரன்சென்றானயல்போய்வென்றானே.29
1192 அண்டமனைத்துந்தனிக்கவிகையளித்தவசுரன்முரணழிய
அண்டவாணர்தத்தநிலையடையக்கடவுண்முருகனுக்கும்
அண்டமளிக்குநிலைமைபெறவருட்செய்ததுவெங்குருப்பதிவாழ்
அண்டர்பெருமானருளென்றாலதன்சீர்புகல்வதெவன்கண்டீர்.30
1193 முரணிக்கவைமாமுதறடிந்தமுருகக்கடவுண்முன்னமைத்த
உரவுத்தடந்தெள்ளாரமுதையுதகமெனுங்காற்பதகமெய்யே
குரவுக்கடப்பந்தாரொருவன்குழித்தலாற்றன்மகனளித்த
வரமிக்குயர்பூந்தடமிதெனமந்தாகினிப்பெண்மருவலினால். 31
1194 பருக்கைக்கவளக்களிறட்டபகவன்மதலைதெளியமொழி
குருக்கட்பெரியோன்றடமென்றாற்கூறுமாறென்குருகினங்கள்
செருக்கிப்படிந்துவிதிர்த்தசிறைத்திவலைபடினும்புள்விலங்கு
விருக்கக்குலங்கண்மானுடங்கள்வினைவெம்பவத்தாலினையாவே. 32
1195 தேளார்மதியின்முழுமதியைத்தீர்ந்தநாள்களோராறும்
வாளார்துலைகட்டெரிசமொழிமற்றைநாள்களவையாறும்
தாளார்மலர்ப்பூந்தடம்படிந்துதக்கவிரதம்புரிபவரே
தோளாமணிப்பொற்கந்தனுறைதொல்லையுலகின்பயன்றுய்ப்பார். 33
1196 மதியந்தொறுமிவ்வறுநாளும்வந்துபடிந்துமுனைமழுவாள்
அதிபன்மனுவைவிதிமுறையாலறைந்தோர்புறந்தாழ்கருங்கூந்தல்
பிதிருந்திதலைமுலைமுளரிப்பெண்ணாரமுதின்கண்ணருள்கூர்
நிதியம்படைத்துமறுமையினுநிலைசேர்முத்தித்தலைவாழ்வார். 34
1197 மீனமிறுவாய்மதிதோறும்விரிகார்த்திகைமீனதிகமின்றி
ஊனமறுகார்த்திகைமாதத்தொருகார்த்திகைமீனவற்றதிகம்
தீனமறுகார்த்திகைமதியுஞ்சிங்கமதியுந்திங்களெனும்
மானமலிநாளிக்கமலவாவிபடிவார்சீவன்முத்தர். 35
1198 என்னமலர்ப்பூந்தடத்தியல்புமிறைவேன்முருகனெந்தைபிரான்
சொன்னமனுவால்வென்றதுவுஞ்சூதனோர்ந்துதுகளெறிந்த
நன்னர்மறைதேர்முனிவரர்க்குநலஞ்சேர்காந்தபுராணத்தில்
பன்னவரியசங்கரசங்கிதையிலெடுத்துப்பகர்ந்ததனால். 36
(22-வது. குமரவேளுபதேசம்பெற்றவத்தியாயம் முற்றிற்று.)
ஆக திருவிருத்தம்-1198.
---------------------------
23 - ஆவது. திருஞானசம்பந்தப்பிள்ளையார் திருவவதாரவத்தியாயம் (1199-1282 )
1199 கான்மலிகடப்பந்தாரினாற்குவந்துகாழிகாவலன்றிருவருள்செய்
மான்மியமுணர்ந்தேஞானசம்பந்தவள்ளலாய்முருகன்வந்துதித்த
பான்மையுண்டென்றாயனையதும்விரித்துப்பகர்கெனமுனிவரர்கேட்ப
மேன்மைசால்சூதன்வினவரும்பொருளீதென்றுபின்விரிவுறவிளம்பும். 1
1200 ஆன்றதொல்கேள்வியறிஞரிற்போதாயனமுனிசூத்திரத்தொழுகி
ஏன்றமாதவத்தாலுயர்சிவபாதவிரதயன்காழிமாநகர்வாழ்
ஊன்றுமாமறையோனருமகவிருப்பாலுலகளித்தவன்றடத்தொருசார்
தோன்றவாயயில்வேன்முருகனைப்பெறுவான்றோய்தவம்புரிந்தனனெடுநாள். 2
1201 இத்தகைநெறிசால்கவுணியர்தலைவனியறவம்புரியுநாளநாதி
முத்தனதுணர்ந்துமூவிருகமலமுகவனைநோக்கிமண்ணிடைநம்
பத்தரைமறையைப்பனுவலையிகழும்படிறரைவல்லமணரைவெம்
புத்தரைத்தடிந்துசைவவைதிகவெண்பூதிசாதனமுறைநாட்டி. 3
1202 தலந்தொழப்பதினாறாயிரம்பதிகத்தண்டமிழ்மாலிகைசாத்தும்
பெலங்கொள்காரணமுண்டாதலினுலகிற்பிறந்திவண்வருகெனமகிழ்கூர்ந்
திலங்குநீர்வேணியண்ணலாங்கருளியெண்ணிரண்டாயிரங்கணத்தை
நலங்கிளரடியராகவென்றேவநாமவேன்முருகனுநயந்தே. 4
1203 இன்னணமிழைத்திங்கெய்துவெனெனலுமிறைதிருவுளமகிழ்பூப்பக்
கன்னலங்கிளவிக்கவுரியண்மகிழ்ந்துகளிவரவுச்சிமோந்திறைவன்
சொன்னவாறுதித்ததலத்தியான்போந்துதுணைமுலையமுதளிக்குவெனென்
றுன்னருங்களியால்விடுப்பவேலரசுமுயர்கணத்தலைவரைநோக்கா. 5
1204 ஆதியங்கடவுளருள்வழிபதினாறாயிரவீருநீர்சூழ்ந்த
மேதினித்தலங்கடொறுமவதரித்துமேவுமென்றேவிவெண்கயிலைப்
பூதலமதனிற்காழிமாநகரிற்புண்டரீகன்றடத்தொருசார்
மாதவம்புரிவோன்முன்னிளங்கதிர்போன்மதலையாய்வந்தனன்கந்தன். 6
1205 நீங்கருந்தவத்தோன்மகவுகண்டுவந்துநிரப்பினன்கடவுண்மாமணிபெற்
றோங்கினனென்னவியப்பமீதூரவுயர்வடமீனனகற்பின்
மாங்குயிற்கிளவிப்பகவதியெனும்பேர்மனைவிபாலெடுத்தினிதளிப்பப்
பூங்குழல்களிகூர்ந்துச்சிமோந்தினியபுதல்வனைக்கொடுமனைபுகுந்தாள். 7
1206 பாணிமூவுலகும்புதையமேன்மிதந்துபல்லுயிர்புரக்குமோர்குடிலைத்
தோணியாளுடையான்மேனியஞ்சுடராய்த்துலங்கவந்துதித்தமாமகற்கு
பேணியதிருநாளையிரண்டினுஞ்செய்பெருங்கடனாற்றிநீறணிந்து
மானியல்பருவந்தொறுமழகதிர்போல்வளர்ந்துமூவாண்டெனவருநாள். 8
1207 குலப்பெருந்தாதைமலர்ப்பெருங்கிழவன்குளிர்தடம்படிகுவான்செலுங்கால்
தலத்துறமழலைக்கிண்கிணிமிழற்றுந்தாள்கொடுநடந்துறுமகவை
மலர்க்கணால்வெகுண்டுமுடன்வரக்கொடுபோய்மணித்தடங்கரையினினிறுவிப்
புலப்பகையெறிந்தோன்புனற்படிந்தாடப்புகுதலுங்குமுதவாய்ப்புதல்வன். 9
1208 இளம்பசிகூர்ந்தாரெனவுளமுருகியிரங்கலும்வரம்பிலாமறைநூல்
அளந்தறியாதானணங்கொடுவிடைமேலாங்கெழுந்தருளிநின்மகற்கு
விளங்கிழாய்முலைப்பாலருளெனக்கனகவில்லுமிழ்வள்ளமேன்ஞான
வளங்கொள்பாலருத்திமலர்க்கணீர்துடைத்தான்மலர்தலையுலகமீன்றாள். 10
1209 துடைத்தலுஞானபோனகமுண்டதோன்றலாரான்றபல்கலைகள்
இடைப்புணர்ஞானந்தோய்ந்துதோய்வின்றியெவ்வுயிர்க்கண்ணுமோர்நிலையே
படைத்தளித்தழிக்குநிறைபரம்பொருளுட்படருமெய்ஞ்ஞானமுமாங்கே
கிடைத்தனரொருதன்றாதையுமாங்கேகிட்டினார்சிறிதுளம்வெகுண்டு. 11
1210 யார்கொலோவிதுபாலளித்தனரெனலுமின்றளிர்மணிவிரற்சுட்டித்
சீர்செய்தோடுடையசெவியனென்றெடுத்துச்செங்கண்வெள்ளேற்றினிலிவர்ந்த
ஓர்பொருட்கடையாளம்பலவழுத்தியொழிந்தபேரருளுரைத்திவனே
ஏர்பெறுமிதுவேபொருளெனக்காட்டியீர்ந்lதமிழ்ப்பதிகமொன்றிசைத்தார். 12
1211 பதிகமுமிமையோர்பொழிமலர்மழையும்பஞ்சதுந்துபியொலியதிர்ப்பும்
மதிபுனைவரதனுமையொடும்போந்தவண்ணமுந்தந்தைகண்டிரங்க
எதிரில்பொற்றோணியிருமுதுகுரவரிணையடிபோய்ப்பணிந்தென்னில்
குதுகுதுப்பொடுந்தன்றிருமனைபுகுந்தார்குலமறைதமிழினில்வடித்தார். 13
1212 துவரெறிகனிவாய்கழைபொருதடந்தோட்சுந்தரியளித்தமெய்ஞ்ஞான
நவையறுதீம்பாலருந்தியவாற்றான்ஞானசம்பந்தரானவர்தாம்
புவிபுகழ்ந்தெடுப்பவணியகோலக்காப்புனிதன்மேன்மடையில்வாளைகளென்
றுவமைதீர்பதிகம்புகன்றுகைம்மலராலொத்தினார்முத்தமிழ்விரகர். 14
1213 ஒத்தியோதுதலுமைந்தெழுத்தமைந்தவொளிசெய்பொற்றாளமெய்யருளால்
கைத்தலம்பெறலுமுமையொலிகொடுப்பக்கனிந்துபண்பாடுபுகாழி
முத்தன்மேற்பூவார்கொன்றையென்றலர்சொன்முருகவிர்மாலைசெய்துயிர்த்தாய்
உத்தமநகராந்திருநீனிவள்ளியுடன்வருந்தாதையோடிறைஞ்சி. 15
1214 காரைகள்கூகையென்றுமெய்யானைக்காட்டியபதிகமங்கிசைத்து
நாரைபாய்பழனத்தலைசயம்பேரூர்நற்றிருவலம்புரம்வளையூர்
தேரைவாய்ப்புனல்சூழ்பல்லவனீசமிவைதொறுஞ்சுவைத்தமிழேத்திப்
பிரரையாண்டளிப்பான்மண்புகாரென்றபாடல்சாய்க்காட்டினிற்போற்றி.16
1215 வேதவெண்காடுபணிந்துகண்காட்டுநுதலெனுந்திருமொழிவிளம்பி
ஓதநீண்முல்லைவாயில்வண்குருகாவூர்மயேந்திரப்பள்ளியோதி
நாதனான்மறைசூழ்காழியம்பதிக்கணண்ணுநாட்டிவவுயாழ்ப்பாணர்
காதல்சேர்பன்னியுடன்வரவவரைக்களித்தனர்கவுணியர்திலகர். 17
1216 புக்கிருவோருங்கீதயாழகத்துப்புகன்றதண்டமிழிசைபோற்ற
மைக்கருமிடற்றுத்தோணிநாயகன்றாண்மன்னருள்பூண்டுபொன்னெயில்சூழ்
திக்குறவளைக்குந்தில்லைமன்றிறைஞ்சத்தெள்ளலைசுருட்டுகொள்ளிடநீர்
அக்கரைநெற்றிக்கொண்டந்நகரடைந்தாரருந்தமிழ்ப்பொழிமுகிலனையார். 18
1217 மன்றுறைமூவாயிரவருங்களிப்பமாதுமைகாணநாதாந்தத்
தொன்றுமரீநந்தநாடகம்பரவியுவந்துகற்றாங்கெரியோம்பி
என்றுறவாழ்த்திவேட்களம்பாடியியல்கழிப்பாலையும்பழிச்சிச்
சென்றுபாணருக்குத்தில்லையந்தணரைத்தெரிந்தனர்முழுதிலுந்தெரிந்தார். 19
1218 பின்னருங்கனகமன்றுடையான்மேற்பெட்புறவாடினாய்நறுநெய்
என்னியற்பாடிநிவாக்கரையோடுமேழிசைச்சுருதியாழ்ப்பாணர்
முன்னுரையெருக்கத்தம்புலியோரைமொழிந்துபற்பலதலம்பணிந்து
கொன்னொடும்புரிசைமுதுகிரியணைந்தார்கொழுந்திலேவயிரமுற்றனையார்.20
1219 தேங்குநீர்வேணிக்குன்றவாணருக்குந்திருவிருக்குக்குறள்சாத்தி
வாங்குதூங்கானைமாடமும்புகழ்ந்துமாறனூர்வந்தபாலகர்தாழ்
பூங்கழல்வருந்தாதாரவெண்சிவிகைபுனைமணிக்கவிகைபொற்சின்னம்
ஆங்கவையளித்தாரறத்துறைக்கெந்தையீசனென்றாய்தமிழணிந்தார். 21
1220 மிளிர்சிவிகையிற்போந்தரத்துறைபழுவூர்விசயமங்கைப்பதிவைகா
3நளிர்புனற்சேய்ஞலூர்திருப்பனந்தாணண்ணுமோமாம்புலியூர்வாள்
கொளிநகர்கடம்பூர்நாரையூர்மிக்கோர்கொள்கருப்பறியலூரேத்தித்
துளிமுகிற்சோலைக்கழுமலமணைந்தார்துரியநீங்கியபொருளணைந்தார். 22
1221 தேவியிற்றோணியிறைவனைப்பரவித்திருமனைபுகுந்துபாணரைப்பாங்
கேவியன்புடைத்தாய்நீற்றணிபேணியிலங்குமுந்நூன்மணங்கண்டு
மேவுபன்மறையுமந்திரப்பரப்பும்விதிமுறைபுகன்றுவேதியருக்
கோவிலந்தியுண்மந்திரமெனும்பனுவலோதினாரோதுமுன்னுணர்ந்தார்.23
1222 அன்னநாளடுத்தநாவினுக்கரசோடளவளாயாங்கவரகல
இன்மொழிமாற்றுமாலைமாற்றெழுகூற்றிருக்கையீரடியின்மேல்வைப்பு
மன்மடக்கேகபாதநாலடிமேல்வைப்பிருக்குக்குறளிராகம்
பன்னுசக்கரமாற்றாதிகளோதிப்பாணர்பண்ணிசைப்பவைகியநாள். 24
1223 ஆரிலைச்சூலத்தாரழலாடியருந்தலம்பலதொழவருளால்
தேரியற்றாதையுடன்வரத்தரளச்சிவிகைபொற்கவிகைமுன்னிழற்றப்
பேரியற்பீலிபிறங்கொலியார்ப்பப்பெருந்திரைப்பொன்னியின்வடபால்
ஏரியவடியார்குழுவொடுமெழுந்தாரிறையுருக்க்காட்டுமாறெழுந்தார். 25
1224 பொடிப்புயன்வேளூர்நின்றியூர்நீடூர்போற்றுபுன்கூரொடுமண்ணிப்
படிக்கரைகொறுக்கைபுன்னியூருயர்பந்தணைநல்லூர்திருமணஞ்சேரி
கடிப்பொழிலெதிர்கொள்பாடிதொல்வேள்விக்குடிதிருக்கோடிகாக்கஞ்சை
எடுத்தமாந்துறைமங்கலக்குடிவியலூரிறைஞ்சிவண்டமிழ்தொடுத்திசைத்தார். 26
1225 மேலதுதேவன்குடியினின்மருந்துவேண்டிலென்றோதியின்னும்பர்
பாலலோசனன்மேலிடைமடக்கிசைத்துப்பஃறலம்பணிந்துவெண்களிற்றுத்
தோலுடையொருவன்வடகுரங்காடுதுறைபராய்வழுத்திவெவ்வேறு
சீலமார்தலமும்பழனமுமேத்தித்திருவையாறணைந்தனர்செல்வர். 27
1226 தலமதிற்புலனைந்தெனுந்தமிழ்கோடல்கோங்கமென்றொருதமிழ்சாற்றி
அலர்பெரும்புலியூரையனெய்த்தானமணிமழபாடிகண்டவ்வூர்
மலைவிலிக்கங்கையாரழலென்னாவாழ்த்துபுவைகியக்கானூர்த்
தொலைவிலிக்கிறைஞ்சியயல்வடகரைமாந்துறையணைந்தார்மறைத்துறையார்.28
1227 பணிவளர்புயத்தானன்பிலாலந்தண்டுறைபராய்ப்பாச்சிலாச்சிராமத்
திணையுறுகொல்லிமழவன்மாமகடனிடரறிந்தெம்பிரான்றிருமுன்
மணிவளர்கண்டர்மங்கையைவாடமயல்செய்வதோவிவர்மாண்பென்
றணிவளைக்கிரங்கிமுயலகற்றீர்த்தாரருளினாற்புவியிடர்தீர்த்தார். 29
1228 அயற்பலதலம்பைஞ்ஞீலியீங்கோயிலங்குறீஇக்கொங்கிலுள்ளனவாம்
உயற்றரும்பொன்னித்தென்கரைச்செங்குன்றூர்நணாப்பதிபணிந்துறைநாள்
வியக்குமவ்வினைக்கிவ்வினையெனப்பனிநோய்வீட்டிநீள்கொடுமுடியேத்தி
வயப்பதிவெஞ்சமாக்கூடல்கருவூர்மாணிக்கமலைபராய்த்துறையே. 30
1229 துரிசறுமாலந்துறையொடுதிருச்செந்துறைகொள்கற்குடிசிராப்பள்ளி
சரியிலானைக்காத்திருமயேந்திரம்பொற்றவத்துறைபாற்றுறையெறும்பீச்
சுரநெடுங்களங்காட்டுப்பள்ளியாலம்பொழிலொடுதுலங்குபூந்துருத்தித்
திருமலிகண்டியூர்சோற்றுத்துறைமெய்த்திருவேதிக்குடிவெண்ணிப்பதியே. 31
1230 பிறபலதலங்கள்சக்கரப்பள்ளிபிள்ளைமங்கைப்பதியாலந்
துறையொடுதிருச்சேலூர்திருப்பாலைத்துறைநல்லூர்பற்பலவேத்தி
இறைகருகாவூரினிலத்தர்வண்ணமென்றிசைத்தவளிவணல்லூர்
உறுதிருப்பருதிநியமமென்பூவனூரொடாவூர்நல்லூரேத்தி. 32
1231 திருவலஞ்சுழிமேற்பளியொடுசத்திமுத்தமுமுத்தமிழ்சேர்த்தி
இருமுதுவேனிற்பருவநாளடுத்தவின்னல்கண்டண்ணல்பட்டீசர்
பொருவெயிறணித்துவிரிநிலாவெறிப்பப்பூதராலுய்த்தமுத்திழைத்த
அருமணிப்பந்தர்பெற்றுமேலவ்வூர்க்கருந்தமிழலங்கல்செய்தணிந்தார். 33
1232 வேறு.
பின்னர்வடதளியொடிரும்பூளையரதைப்பெரும்பாழிசெறைநாலூர்குடவாசற்சீர்,
அன்னநறையூர்புத்தூர்சிவபுரத்தோடாதிகுடமுக்குக்கீழ்க்கோட்டமெய்தி, நன்னரினெம்மிறையேயென்றுறுகாரோணநாகீசம்வாழ்த்தியிடைமருதூர்நண்ணிப்,
பன்னருமோடேகலனென்றிசைத்துத்தானம்பலபணிந்து குரங்காடுதுறையும்போற்றி. 34
1233 ஆவடுதண்டுறையினிடரினு மென்பாடலணிந்தமலனருளிய பொற்கிழியைவேள்வி,
மாவினைத்தந்தையர்க்குதவித் திருக்கோழம்பம்பை கன்மாடக் கோயினல்லசெம்பொற்,
றூவியழுந்தூர்பல கண்டிறைஞ்சிவாழத்தித் துருத்திநகர்பர்விவரைத் தலையென்றோதி,
மூவனகர் @திருமயிலைச் செம்பொற்பள்ளிமுளைத்தவிளநகர்கண்டார் முழுதுங்கண்டார்.
@திருமயிலை - மாயூரநகர் 35
1234
குளிர்பறியலூரொடு மற்றுளவும் வேட்டக்குடியுமடுத்திசை மாலைதொடுத்துச்சோலை,
வளர்தருமபுரம்பணிந்தியாழ் முரிமாதர்மடப்பிடி யென்றெடுத்தோதிநள்ளாறெய்தி,
மிளிர்போகமார்த்தவெனப் புகழ்ந்துதானம் வேறுமுறைவணங்கியுயர் சாத்தமங்கை,
யளிநீலநக்கர்மனைய முதுங்கொண்டாரன்னைதிருநிலையழகிய முதமுண்டார், 36
1235 கிளக்குமதுதலத்தொடு நாகைக்காரோணங்கீழ்வேளு ரொடுபிறவுபணிந்துசெந்நெல்வளத்,
தடஞ்சூழ்மருகலிலோர்வணிகனாவிவரளரவபருகவ வன்மண்ககும்பேதை,
துளக்கெரியின்மெழு கெனவுள்ளுருகியாவி சோர்ந்தலறு மோதைசெவித்துணையினேறத்,
தளர்ச்சிதருமோவுடையா யிவளுக்கென்று சாற்றியளித்தாருயிரைத்தானம் பெற்றார். 37
1236 வடிநெடுங்கட்புகார் வணிகன்மகட்குமாவி வணிகனுக்கு மணமுடித்துத் திருச்செங்காட்டங்,
குடிபரவியங்கமும் வேதமுமென்றோதிக் குளிர்புகலூர் வர்த்தமானீசம் போற்றி,
யடிமுருகனார் மடம்புக்குழித் தென்னாரூரரசுவர வறிந்தவ்வூரணைகுவார்விற்,
குடிபணிந்து சாநாளென்றோதியா ரூரடைவோ மென்றிசத்திருக்குக் குறளுஞ்சாற்றி, 38
1237 பதியதனிலந்தமாயுலகென்றோதிப்பவனமாச் சேரடையாயென்று மேத்தி,
மதிமுடியானற்றலங்கள் பனையூர்சோலைவலி வலங்கோளிலிவாழ்த்திப் புகலூர்நண்ணி,
முதியகுறிகலந்தவிசையெனுநூற் சாற்றிமுருகனார் சிறுத்தொண்டர் நீலநக்கர்,
விதியொடவர் தமக்கருள் செய்தரசோடங்கண்மேவினாரயில் பரவவேதவாயார். 39
1238 புடைவயல் சூழம்பரமாகாளம் புல்குபொன்னிறமென்றறைந்து கடவூரிற் சார்ந்து,
சடையுடையாயென விளம்பி #மயானம்போற்றித் தகுகலையனாரமுதுண்டாக்கூரெயதி,
விடையுடையான் மீயச்சூர்பரம்புரத்திற்சார்ந்து வீழிமிழலையிலர சேரரடிறைஞ்சியர்ங்க,
ணுடையரையொடுசடையார் புனலென்றோதி யெரருதிலதைபேணு பெருந்துறைமெய்தி,
#மயானம் - திருக்கடவூர் மயானம் 40
1239 வாகீசரொடுமிழலையெய்திப் பன்னாள்வைகிய நாட்சிபுரமா சனங்கண்ணப்,
பாகூரின்னமுதூட்டிக் கனவிற்கண்டபடி தோணியழ்கனையத் தளியிற்கண்டு,
மாகாதன்மைம்மருபூங்குழலென்றோதி வறந்த சிறுவிலைநாளவ்வள்ளலீயந்த,
சேகார்பொற்காசு பெற்றுவாசி தீரச்செந்தமிழ் செய்தார்பசி நோய்தீரச்செய்தார். 41
1240 அவ்வழிவாஞ்சிய $மாலங்காடேவேளுரணிசாத்தங்குடியொடுதென்கரவீரஞ்சேர்,
செய்விளமர்பணிந்துதிருவாரூராறாய்த் திருக்காறாயிற்றேவூர்திருநெல்லிக்கா,
எவ்வமிகைச்சினந்திருத்தெங்கூர்கொள்ளிக்காடிசைகோட்டூர்வெண்டுறைதண்டலையுஞ்சோலை, மவ்வல்கமழ்திருக்களருமரசோடெய்திவாழ்த்தினார்திருவருட்பான்மணத்தவாயால். (42)
$ ஆலங்காடு - திருத்தலையாலங்காடு42
1241 மறைவனத்தின்மறையடைத்தமணிக்கபாடம்வாகீசர் திறக்கும்வழிவகுத்துமற்றை,
இறையவன்மேற்சதுரமறைஉஎன்றுபாடி யிணைக்கதவமடைத்தருளிவாய்முரீசர்,
நிறைகனவு தெளிந்தரசுசெல்லச்சென்று நிலவுதளிரிளவெனவோர்பதிகஞ்சாற்றிக், கறைமிடற்றார்மறைக்காட்டிலணைந்தார்யார்க்குங்காணாரைக்கண்டழுத கனிவாய்மைந்தர். 43
1242 ஆயமறைக்காட்டினில் வீற்றிருக்குமந்நாளணிபாண்டிநாடனைத்துமமண் பேய்கொண்டு, நோயடையக்கூன்வழுதிமருளக்கண்டுநுடங்கிடைமங்கையர்க்கரசியாருந்தேர்ச்சித்,
தூயவினைக்குலச்சிறையுமெந்நாடுற்றதுன்பமறுத்தின்பமிகச்சைவமோங்கத்,
தாயனையாயெழுந்தருள்க வென்றுதீட்டித்தமிழ்விரகரிணையடிக்கீழ்ச்சாரவிட்டார். 44
1243 விட்டதுகொண்டெழு மமயத்தரசு பொல்லாவிகட முடைப்பறிதலையரிழைக்குமாயை, மட்டலநன்னாளுமலவெனுங்கானன்மைவலங்கெழுவேயுறு தோளிபங்கனென்றே, இட்டதமிழியம்பிமுத்தின்சிவிகைமேற்கொண்டிலகுமணிக்குடைநிழற்றவடியாரீ*ண்டத், தொட்டமணிச்சின்னவொலிபோர்ப்பமுத்தின்சுடர்மணித்தண்பந்தனிழறுலங்கச்சென்றார். 45
1244 வருகோடிக்குழகர்கடிக்குளமிடும்பாவனமுசாத்தான மொடுகொடுங்குன்றேத்தித்,
திருவாலவாயுறுங்காலமைச்சர்போந்து சென்னிமிசைமுகிழ்த்தமலர்க்கரத்தராதி, இருபாதம்வணங்கலுநும்மரசியாருக்கின்பமோவெனவடிகளருளாலின்பம்,
ஒருவாதென்றகமகிழ்வுற்றெழுவார்க்கன்ப ருதுக்காணுமாலவாயென்னத்தாழ்ந்தார். 46
1245 அதுகணத்தவ்விருவர்பெயராலவாயாவதுமிதுவேயெனும்பதிகத்தமையப்போற்றி, மதுரைமறுகடைந்திருக்குக்குறளுஞ்சாற்றிமடத்திலெழுந்தருளிமதியமைச்சர்செய்த,
விதமலிசீருவந்திருப்பஞாயிறாதி வெங்கோளுநல்லவெனப்பகர்ந்தார்வெல்ல,
எதிரிருள்செய்தமணிருளையழிப்பான்போலவிரவியொளித்தனன்மடவோரினையசெய்வார். 47
1246 பன்னகமென்குருளையிடியொலிகேட்டென்னப்பரசமயகோளரியார்வந்தாரென்று,
சின்னவொலிதிசை போர்ப்பத்தலைகள் கீறிச்செவிதகர்ந்துதென்னவர்கோனோடுமெண்ணி, மன்னருமந்திரத்தழல்விட்டேறாதாகவயங்குசுடுதழற்கொடுபோய்மடத்திலுய்ப்பப், பன்னுமடியவர்க்குறுமோசொக்கேயித்தீபையவேசென்றுபாண்டியர்க்காகென்றார். 48
1247 என்றலுமீனவனுடலிலத்தீமேவவிதுவெதுப்பென்றமணர்கண்மந்திரங்களாலும், துன்றுபிரம்பாலுமயிற்பீலியாலுந்தொழுதுதுடைத்திடநெய்வார்சுடர்போற்பொங்கிக், கன்றுபிரம்பெரிந்துகரமெரிந்துபீலிகரிந்துசுடுநாறியயற்கண்ணுந்தாவிச், சென்றதருட்பிள்ளைசொல்லால்வந்ததீயைத்திர்க்கவந்ததெய்வதமுந்தீந்ததன்றே. 49
1248 உலகிருளையொழிக்குந்தானெழியப்பாயலுடையிருளையொழிப்பார்கண்டுவப்பான்போலச்,
சலதிமுகட்டினில் வெய்யோனுதிப்பத்தேமாந்தளிரழலிட்டெனவழுதி துயருங்காலை, அலைபொழிகண்ணரசியராலமைச்சரெய்தியருந்தமிழ்வித்தர்க்குரைப்பவஞ் சீர்வெப்பால், மலைபிணியுமமண்பிணியுந்தொலையக்காட்டுமாவுரியென்றிறைகோயில்வாழ்த்திப்போந்தார். 50
1249 போந்தளவிலரகரவென்றொலிவிண்போர்ப்பப் புதுநிலவுக்குடைநிழற்றச்சின்னமார்ப்ப, வேந்தனகம்புகுந்தரசன்முடிக்கட்பீடமேலெய்திவல்லமணக்குழுவையஞ்சும்,
பூந்தொடி முன்மானினேர் விழியென்றோதிப் புரவலர்க்கும்புனைபெயரிராறுபூண்டு, வாய்ந்தகழுமலமெம்மூரெனலுமன்னான்மனமமணர்மயக்கினைவிட்டொ*இயதன்றே. 51
1250 மொழிவழுதிப்பிள்ளையார்முகமும்பொல்லாமூகர்முகமும்பார்த்தென்னோய்தீர்ப்பார்க்கே,
வழியடியேனெனலுமிடப்புறங்கொண்டீனர்மாற்றியிடமந்திரமாவதுநீறென்றே,
கழுமலக்கோன் வலப்புறங்கொண்டின்னறீர்ப்பக்காணருமுத்தியுநரகுமமுதுநஞ்சும், தழுவினபோல்வலங்குளிர்செய்திடந்தீமூளச்சமணினத்தைவெகுண்டொழித்தான்றமிழ்சேர்நாடன். 52
1251 இடமருங்குந்தமிழ்விரகரருளானோய் தீர்ந்திறைமகனுமடிமைபுகவமணரெங்கட்,
கடவுள்வலிநுங் கடவுள்வலியுந்தீட்டிக் கனலிலிட்டுத்தேர்துமெனக்காழிவேந்தர், மடலவிழ்புத்தகம்பகுத்துபோகமார்த்தவண்பதிகமேந்தி நள்ளாற்றிறைமேலார்வம்,
உடையதளிரிளவளரென்றொருபா வேத்தியொள்ளெரியினடுவணிட்டாரொளிநீறிட்டார். 53
1252 இட்டவேடொளிபசியதாகப்பொல்லாவேடரிவண்டுகளாகத் தேரார்பின்னும்,
பட்டதிரையாற்றினிலிட்டறிதும் யாதும்பழுதுபடிற்கழுமுனையிற்படர்வோமென்ன,
ஒட்டலுமினவனொடு நீள்வைகைப்பேராற்றுறுகரையினின்றமணரோலைகீழ்பால், விட்டகலப்பிள்ளையார்வாழ்கவென்றுவிடுமொழிப்பாசுரமெதிர்நீர்விரைந்ததன்றே. 54
1253 அன்றுபுனலெதிரேறுமேடு கொள்வானமைச்சர்பரியேறிவண் பாசுரஞ்செல்லாறே, சென்றுழியாயிடைவன்னியெனும்பேரேற்றிச்சிவஞானப்பிள்ளையருளேறப்பாட,
நின்றதனையமைச்சர்கொண்டுகரையிலேறநிருபன்வியப்பேறவமண்கழுவிலேறக், கன்றுதலில்கன்னிநாடெல்லாநீற்றுக்காப்பொடுமைந்தெழுத்தேறிக்கலந்தவன்றே. 55
1254 கலந்தவழி முறாநிறுத்திப்பொற்கைபூண்ட கவுரியர்*மினிக்காளைக்காழிச்செல்வர்,
நலம்புனைந்துமுழுதிலும்பொன்னானானென்றுஞாலம்வியந்திடப் பாண்டியரசியாரோ,
டிலங்குமதியமைச்சனொடுவழுதிபோற்றவிறைவனமேநினைப்பதேநியமமென்றோர், அலங்கல்புனைந்துழிகாழித்தந்தையார்தாமணைவுறக்கண்டகமகிழ்ந்தாரமணைவென்றார். 56
1255 முறிறறிவிற்பருவத்தே யாண்டதோணிமுதல்வனையு முதல்வியையுநினைந்துள்ளூறி,
மற்றவர்மேல்மண்ணிநல்லவனமென்றோதிவழிபடுமூவரும்போதச்சிவிகைமேற்கொண், டுற்றபலபதிபரங்குன்றாப்பனூர்புத்தூரொடுபூவணஞ்சுழியலுயர்குற்றாலம், அற்றமில்நெல்வேலிபுடைமருதூரேத்தியணியிராமீச்சுரம்போற்றிசைத்துக்கீழ்பால். 57
1256 கோணமாமலைகே தீச்சரநின்றேத்தியாடானை புனவாயில் கூறித்தேர்ச்சி,
வாணன்மணிமேற் குடிகண்டொருமூவர்க்கும் வழியருளிக்களர்ப்பாதா ளீசம்போற்றிப், பேணிமுள்ளிப்பெருநதியிற்கொள்ளம்பூதூர்ப்பெருமான்மேற்கோட்டகமேகமழுமென்றோர்,
தோணியாரருள்படைத்தோ ரோடமேறிச்சொல்லலங்கல்புனைந்துதிருநள்ளாறெய்தி. 58
1257 பாடகமெல்லடிபாடிவாதிற்காத்தபரிசோதித்தெளிச்சேரியிரைஞ்சிப்புத்தர்க்,
காடிடிவீழ்ந்தருளி யொழிந்தவரைவாதிலடிப்படுத்திக் கடவூர்புக்கப்பர்வாழ்க்கை, தோடியுயர்பூந்துருத்திபுகுமுனன்னார்சென்றெதிரேதெரிவிலராய்த்தெரிந்துபோற்றிக்,
கூடுமணிச்சிவிகைபுறம்பரித்தாரென்னக் குதித்தவரைப்பணிந்தவ்வூர்க்கொடுபோய்ப்போற்றி. 59
1258 நாவரையர்மடத்தமுதுவிரும்பிக்காஞ்சிநகர்முத லங்கவர்பணிந்தநலம்பாராட்டிப்,
பாவிமண்குறும்பெறிந்தவாகைகூறிப்பதிபலகைதொழவேவிநளிநீர்ப்பொன்னி,
மாவடபானெய்த்தானந்திருவையாறுவளர்பழனம்பணிந்துகழுமலம்புக்காதி, தேவன்மிசையுற்றுமையாம்பதிகம்பாடித்தில்லைநகர்பணிந்துதிருத்தினையூர்போற்றி. 60
1259 மாணிகுழிகன்னிவனம்வடுகூராதிவக்கரையோடிரும்பை மாகாளமேத்தி,
ஆணமலியதிகைகுண்டை குறளாமாத்தூரதிற்குன்றவார்சிலையாமலங் கல்சாத்தி,
நீண்மதிள்சூழ்கோவலறையணிநல்லூர் பின்னிலவண்ணாமலைபணிந்தவ்வரையிலெம்மான்,
தாண்மலர்க்குண்ணாமுலை பூவாரென்றாய்ந்துசாற்றினாரணியதிருவோத்தூர்சார்ந்தார். 61
1260 மற்றதிலாண்பனைகனியக்கனிவாய்பூத்துமாகறலுங்குரங்கணிமுட்டமும் வந்தேத்தி,
எற்றுபுனற்காஞ்சியினின்மறையானென்றும்யமகமொடுமின்னிருக்குக்குறளும்போற்றி, அற்றமில்காமக்கோட்டநெறிக்காரைக்காடனேகதங்கரப தந்திருமேற்றளியுஞ்சூழ்ந்து, சுற்றியபாலாற்றொடுபோய்த்திருமாற்பேறுதுதிவல்லமிலம்பயங்கோட்டூர்கண்டேத்தி. 62
1261 விற்கோலந்தற்கோலமூறலாதிவிரிபழையனூர்பரவியாலங்காடர், சொற்
கோலக்கனவுணர்ந்துபதிகமாலை துஞ்சவருவாரெனுஞ் சொற்றொடுத்துச்சூட்டி,
நற்கோலப்பதிய தினிலிருப்பார்வாய்மைநழுவாமைநயந்தி சைத்துப்பாசூரெய்தி,
எற்கோலஞ்சிந்தையுடையாரென்றேத்தியேதமில்வெண்பாக்கநகரினிது வாழ்த்தி. 63
1262 வரத்துயர்காளத்திவரைபணிந்தவ்வூர்க்குவானவர்களெனுமாலைவகுத்துச்சோதி,
பரப்பியகேதாரங்கோகரணந் தெய்வப்பருப்பதமிந்திரநீலப் பருப்பதாதி,
இருக்குமலையதர்பரவியெந்தையாரென்னிசைமாலைபுனைந்துவேற்காடுமேத்தி,
உருக்கமாடுவலிதாயம்பரவியொற்றியூர்க்கண்விடையவனெனும்பாவுரைத்துவாழ்நாள். 64
1263 தேமருபூம் பொழின்மயிலாப் பூரினாய்கன்சிவநேச னார்மகளேழ்பருவஞ் செல்ல,
மாமுனைவாளெயிற்றரவமுருக்கவாவிமரிந்தவுடலெற்புமணித்தசும்பை யெம்மான்,
பூமணிமுன்றிலர்கொணர்வித்தோர்மட்டிட்டபுன்னையெனவொருபதிகம்புனைந்துமாதை, ஏமுறுமாறெழுவித்துவான்மியூர்பக்கிறைஞ்சினாரெவ்வுலகுமிறைஞ்சவந்தார். 65
1264 வேறு.
கண்ணாரும்விடைச்சுரம்போந்திவர்வண்ணத்தமிழ்பாடிக்கழுக்குன்றெய்தி
எண்ணாருநிறைகாதல்செய்கோயில்கழுக்குன்றேயெனுநூற்சாத்திப்
பண்ணாரச்சிறுபாக்கத்தாட்சிமொழிந்தரசிலியும்பனைங்காட்டூரும்
தண்ணாரன்பொடும்வணங்கித்தில்லைநகர்*மிண்டணைந்தார்தமிழ்ப்பாலுண்டார். 66
1265 அக்கனகமணிமன்றிலருமருந்தையடிதொழுதாண்டமருமந்நாள்
புக்கடருஞ்சினைகடொறும்பைங்கிளிசெந்தமிழ்தெரிப்பப்பூவைகேட்கும்
மிக்கபொழில்புடையுடுத்தகாழிபுரத்தந்தையார்விருப்பினேற்பத்
தக்கமனத்தொருதோணித்தாதையாரடிபணிவார்சண்பைவந்தார். 67
1266 மானகரமணித்தாகவெய்துழிவண்டார்குழலென்மாலைசத்தித்
தேனகுதார்நரையிதழிப்பெரியநாயகன்றுணைத்தாள்சென்னிசேர்த்திப்
பானல்வயற்காழினகர்செர்மினெனவொருபதிகம்பரவிச்செம்பொன்
வானகுமாளிகையணைந்தார்நீலநக்கர்முருகர்புகமருவிவாழ்நாள். 68
1267 பழமறைதேரந்தணருஞ்சிவபாதவிரதையரும்பலரும்வேள்விக்
கிழமைதனக்குரியமணக்கிழமைவினைமுடித்துமெனக்கிளக்குநல்லூர்
அழல்வினைதேர்நம்பாண்டாரருங்குலத்துமகட்பேசியமலன்காழி
மழவிடையான்றிருமணியைச்சிவிகைமிசைக்கொடுபோந்தார்மறைகளார்ப்ப. 69
1268 நிறைக்கோலமதிகண்டநெடுங்கடல்பொலியங்குளிரநிகருஞ்சைவத்
துறைக்கோலந்தலையெடுப்பவழகினுக்கோரழகுசெயத்தொடங்கினாற்போல்
சிறைக்கோலத்தும்பிபடர்நறைக்கோலக்கொன்றையினார்செவிக்கட்டீஞ்சொல்
மறைக்கோலம்புனைபவரைமணக்கோலமதுபுனைந்தார்மறையோரெல்லாம். 70
1269 விதிமுறையான்மறைச்சடங்கின்விண்ணவர்பூமழைபெய்யவிளங்குஞ்சோதி
மதிவதனத்தருள்பொழியச்சின்னவொலிதிசைபோர்ப்பமருங்குபோற்றப்
பொதிமணிபூஞ்சிவிகையிழிந்தங்கமலத்தாள்பெயர்த்துப்புனைமுத்தாரக்
கதிர்மணிப்பந்தரினடந்துகடிமணப்பந்தரினிருந்தார்காழிவேந்தர். 71
1270 மங்கலதூரியமுழங்கமாதவர்பல்லாண்டிசைப்பமறைகள்வாழ்த்தப்
பொங்குமெரிவலஞ்சுழலப்புண்ணியதெய்வங்களிக்கப்பூமாதோங்க
அங்குளநல்லடியவர்பேரானந்தக்கடன்மூழ்கவகிலமெல்லாம்
நங்கள்பெருமான்மகனார்நம்பாண்டார்மருகரெனநலம்பாராட்ட. 72
1271 குறுத்தநகைமுகத்தினராய்ப்பேருவகைதலைக்கேறக்குலவுநல்லூர்
நெறித்தருமப்பெருந்தகையார்நீள்புகலிப்பெருந்தகையார்நீண்டகையில்
கறுத்தகுழல்வெளுத்தநகைசிவத்தவிதழ்பசுத்தகுழைக்கதிர்வேலுணீகண்
பொறித்தநுதற்செறித்தவளைப்பூங்கொடியையாங்களித்தார்புனைநீர்க்கையார். 73
1272 ஒருமாதைமுயலகனீத்தொருமாதைத்திருப்புனைவித்துயருங்கூடல்
வருமாதையடிப்படுத்திவழிமாதையெழுவித்துவாக்கின்ஞானத்
திருமாதைப்புணர்ந்துபெருந்தரைமாதையிருடுடைத்தார்தெண்ணீரோடு
தருமாதைக்கைப்பிடித்தார்வரைமாதைப்புணர்ந்தவர்தாடணவார்மாதோ. 74
1273 பஞ்சியொளிவிஞ்சுமலர்ப்பாட்டளிசெங்கிண்கிணிக்காற்பதுமம்பூத்த
கிஞ்சுகமென்மடவரலோடங்கிவலம்வருவாரைக்கிரியைசான்றோர்
அஞ்சொலிவளடிமலரையம்மியில்வைத்தருளுமெனவணிசேர்திங்கள்
பிஞ்சுமுடியரைநல்லூர்ப்பெருமணமென்றதைமறுத்துப்பெயர்த்துஞ்சொல்வார். 75
1274 ஈதமலன்றிருத்தாளுக்கியற்றுவதுமுறைமையெனவெழுந்துபோந்து
நாதனைநல்லூரரசைநமச்சிவாயப்பதிகநவிற்றலோடும்
பூதலமுமீதலமுநீடொளியவாடெரிகால்பொருப்பாயோங்கி
வேதமுதலளப்பரியான்விளங்கவதிலடியவரைவிடுவித்தல்செய்தார். 76
1275 இன்னிசையாழ்ப்பாணரொடுநீலநக்கர்சிவபாதவிதயர்முந்நூல்
மன்னியதோட்டிருமுருகர்வழியடியாரெனைப்பலருமடியாக்கற்பில்
பன்னியரோடுறுஞானப்பாயொளியிற்புகவேவிப்பனிக்கைதோய்ந்த
கன்னியொடுமதிற்புகுந்தார்கனலோடும்புனலறியுங்கவிதைவல்லார். 77
1276 பொறிவாகைமாறனுடலெழிலாகப்பூதியரும்பொருண்டாக
நெறிவாய்ந்தவைதிகமுஞ்சைவமும்வீறுண்டாகநிகரில்காழி
மறிவார்ந்தகரதலத்தார்மகவானோர்புகுந்தமுத்திவழியென்றியார்க்கும்
அறிவாகச்சிவலிங்கக்குறியாயிற்றாயிடைமுன்னலங்குசெந்தீ. 78
1277 வேறு.
இன்னவாறுநிகழ்ந்ததன்மேலெழிற்சீகாழிப்பதிநாதன்
அன்னவூர்திபுள்ளூர்தியானையூர்தியாதியரைத்
துன்னலோடுமவரெய்தியுலகேழீன்றசிற்றுதரக்
கன்னிபாகத்திருந்தானைக்கசிந்துபணிந்துமுன்னின்றார். 79
1278 செம்மைக்கருணைக் கடலனையான்றிருமுன்னின்றோர்தமைநோக்கி
எம்மைத்தலங்கடொறும்பதிகத்தேத்துஞானக்கவுணியனை
அம்மைப்பொலஞ்செய்விம்பத்திலாவாகனஞ்செய்தெந்நாளும்
மும்மைப்பயன்பெற்றுலகுய்யமுதுபூசனைநித்தியமியற்றி. 80
1279 நிகழ்சித்திரைபங்குனிமாதநிறையாதிரையும்வைகாசிப்
பகர்மூலத்துமாவணியைப்பசியாமாதச்சதயத்தும்
மகரமதியிற்கதிர்மதியமருவுநாளுமிதுனமதி
திகழவருரோகணியுமென்றேழ்தினத்துநைமித்தியமியற்றி. 81
1280 புரையில்கேள்வியிமையோர்காள்புகல்பங்குனியிற்சதயத்தின்
நிரைசெய்மணிப்பூங்கொடியேற்றிநெடுமான்றலைநாடேர்நடத்தித்
திரைசெய்தீர்த்தமாதிரைநாடிளைத்தாடுதிரென்றருள்செய்ய
வரைவிலமரராண்டுதொறுமகிழ்ந்திவ்வாறுபுரிந்தனரால். 82
1281 ஓதுமினையநல்விழவுக்குதவுந்திறலோருயர்ந்தகதி
மீதுபுகுவாரதுபுரியார்வெவ்வாய்நிரயத்திடைபுகுவார்
கோதின்ஞானப்பிள்ளை தனைக்குழைத்துப்பணிந்தோர்மறலிநகர்
போதலறியார்தொழவேண்டிப்போந்துவழிக்கண்மாய்ந்தவரும் 83
1282 வீடுபெறுவாரிச்சரிதைவினவினவரும்படித்தோரும்
நீடும்பரமமுத்தியெலாநெறியேதுய்த்துப்பொறிமணிச்சூட்
டாடுமரவமசைத்தவன்றாளணைவாரென்னவருட்சூதன்
நாடுமறைதேர்முனிவரர்க்குநவின்றவாறுநவின்றனனால். 84
23 - ஆவது. திருஞானசம்பந்தப்பிள்ளையார் திருவவதாரவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 1282
----------------------
24 - ஆவது தீர்த்தமகிமையுரைத்தவத்தியாயம். (1283-1354)
1283 திங்கண்முடியணிவேணிச்சிவபெருமானடித்தொழும்பின்றிறத்தைநாடிப்
பங்கமில்சீரொளிக்கொளியாய்ப்படர்ந்தகவுணியப்பெருமான்பரிசுகேட்டோம்
புங்கவவின்னமுந்தீர்த்தந்தனித்தனிசொற்றனைதொகுத்துப்புலப்பாடெய்த
இங்கருளுகெனச்சூதனங்கவருக்குரைத்தமுறையியம்பலுற்றாம் 1
1284 ஞாலப்பேராழிவரையுலகனைத்துநிலைகுலையநலிந்துமூழ்கி
மூலப்பேராழிமொய்த்தகடைநாளின்மலைவாய்ந்தமுளரிப்புத்தேள்
கோலப்பேராழியம்புட்பொருப்பரனைப்பணிந்துவரங்கொண்டதீர்த்தம்
ஓலப்பேராழிவைப்பிலதுபிரமதீர்த்தமெனவோங்கிற்றன்றே. 2
1285 ஓருமறையோனீராடிச்சேட்டுலகுதனைப்பயந்தானுலவாத்தெய்வத்
திருமறையோனெனநின்றானொருமறையோனகன்கரைக்கட்சேர்ந்தவாறே
இருமறைநூலியல்விரித்துவீட்டுலகுதனைப்பயந்தானெனினித்தீர்த்தம்
பெருமறைந்நூலறிவதல்லாற்பிறிதொருநூலோவறிந்துபேசுநூலே. 3
1286 ஓருணர்வாலிருமைவினைமும்மலங்கணாற்பிறப்புமொழிப்பானைந்து
பேருறுமிந்திரியங்களாறடக்கியேழிசையும்பிறங்கவோதி
நீருறுமெண்குணத்தோன்பானிகழொளியாயாபத்தைநீக்குங்காழிக்
காருறுகண்டனையறிவாரவரேகண்டறிவாரக்கடவுட்டீர்த்தம். 4
1287 மின்மணிநூபுரமலம்புமிளிரிலங்காலரமாதர்விமானஞ்சூழ
என்மணிக்காலினைவருதாதிணைக்கவரிகாலசைப்பவேறிச்செல்வார்
நன்மணிவார்சிறையறுகாலிசைமுரலுமொருகணைக்கானளினப்புத்தேள்
பன்மணிக்கான்மலர்த்தடத்திற்றவழ்பசுங்காலஃதுடலிற்படுங்கான்மாதோ. 5
1288 கூர்த்தவருந்தவம்பன்னாளிழைத்துமுயர்மதிட்காழிக்குன்றின்மேய
தீர்த்தனருள்படைத்தெல்லாவலிபடைத்தானேனுமயன்றிறமென்னேயோ
வார்த்ததடந்திரைக்கடவுட்டீர்த்தமதுபடிந்துலகையளித்தானன்ன
பேர்த்தடமாடுநரெல்லாமேற்படையாவீட்டுநெறிப்பெறப்பெற்றாரே. 6
1289 வண்டறாநறைமலர்தூஉய்வணங்கினர்பான்மோனமுத்திவழங்குமெம்மான்
அண்டகோடிகள்பொதிந்தசிற்றுதரப்பூவையிடத்தருட்கண்காட்டப்
பண்டைநூல்போற்றுதிருநிலையழகிகண்ணருளேபசுக்கள்யாவும்
உண்டகமாசகற்றியொளிதருபுனல்போற்றிருமுனநின்றொளிருமீதால். 7
1290 முத்தலையையேந்தலினான்முடிவிலாரணங்காட்சிமுடித்தவாற்றான்
மெய்தவராடகம்பெறலாற்சுற்றுமலங்களைதலினால்விமலந்தன்னால்
சித்தியருட்கண்பொலியுந்தரத்தாலும்பேரரவந்தரித்தலானும்
இத்தகையவிதிதடந்தான்மத்தமலர்தர்தொடைவேணியீசன்போலும். 8
1291 திரையாடைநிலமடந்தைதிருமுகமோவரிவிழியோதிலகமேயோ
வரையாமங்கலநாணோதிருமகட்குமருமலரோமணிப்பூண்வைப்போ
புரைதிருமாலுலகின்மேலுலகோவென்னும்பிரமபுரியிலிந்நீர்க்
கரைகாணாரெவருளர்மற்றவரன்றோமுத்தியெனும்கரைகாணாரே. 9
1292 மறைநான்குவல்லபிரான்பதினறுநான்கோடிரண்டுவகையாங்கோடி
முறைநான்குந்தருங்கடவுட்டீர்த்தமெலாந்தொகுமிதனின்முழுகியண்டத்
துறைநான்குகதியும்வகுத்துறுநான்குபவத்தினில்வீழ்ந்துழலாதியார்க்கும்
துறைநான்குமளித்திடுமாறொருநான்குகோணமுறத்துலக்கினானால். 10
1293 வேறு.
கோன்மதிநாளில்வெய்யோன்குலவியதினத்திற்கங்கை
மாநதிமுதலாந்தெய்வமணிநதியெனைத்துமீண்டித்
தானதிலுறலாலந்நாட்டடமதுபடிந்தோர்தீர்வார்
ஊனவல்லினையுமாயையுற்பவவினையுமாங்கே. 11
1294 ஆயமாமதியுவாவினருந்ததிக்கிறைவனாதி
தூயநீர்க்கங்கையாதிசுரபதியாதியோகத்
தேயவன்சனகனாதியெய்துவரிதுபுக்காடப்
போயதுபடிவாரெய்தாப்பொருளெவைபுவனமூன்றில். 12
1295 முன்புறுமேடத் தென்ற்ழ்முளைத்த நாளிடையுவாவி
னன்புறுமின்னீராடி வரும்பவக் கடலிலாடார்
பின்பு மோரயனஞ் சேயாற்பேதுறு மடவார்தோயி
னின்புறுமழலைச் செவ்வாயெழின் மகப்பெறூவருண்மை.13
1296 ஓரரிண்டயன் மரண்டினு தையங்கள்வெதிபாதங்கள்
சேர்தருதினம் புக்காடிற செங்கதிச் செல்வனாதி
யோதருகோளு நாளு மின்னறீர்பலதகை நல்கக
வாரகடலாடை மாதைமணந்துலகளிப்பான் மன்னோ. 14
1297 துளையெயிற்றழல்வாய்ப்பாந்தன் சுடர்களைத்தொடு நாட்போன
சொலையெயிற்றரவை முன்னூலறவமாட்டறல் பெயதீர்வார்
களைகணாயுலகமூன்றிற் காவலுந்திருவு மெய்தி
முளைமதிக்கண்ணியெம்மான் மூதுலகடைவரம்மா.15
1298 வீழியங்கனிவாயாரை வேதவாணிபர்ககு நல்கி
னாழியினடுவட்டுஞ் சுமர்வணைப் புனிதனாவர்
கோழிளமபுனிற்று நல்லான் கொடுப்பரேல் மயிர்க்கோரராடை
வாழினாளளவுன் தாவாவளனெடுங்க யிலைவாழ்வார்.16
1299 எரிமணிப்பொலன் கோட்டேரா சாரியல்புளி மனுவொன்றாய்ந்தோர்
விரிகடலுலகத்தான்ற விழுத்தலமெவற்றுங்கோடி
தெரிதருமனுக்களாய்ந்த திண்பலம் பெறுவாரென்றே
கரியுரிவனைந்த வெண்டோட் கண்ணுதல்கழறினானால்.17
1300 அரிமலர்க்கிழவன்றீர்த் தாழ்ந்த புள்ளினங்கண்மீக்கண்
விரிசிறைவிதிர்த்ததெண்ணீர் மேனியிற்படினுமன்னார்
முரிதிரைமுகட்டிற்றோன்று மொய்யொரளிச செல்வன்போன்று
பிரிவரூர்மாயை போய்ப்பெரு வெளிக்கருவராவார். 18
1301 உலப்பிறென்புலத் தார்வேழ்வியூட்டு புதிலதமீந்தோ
ரலக்கண்வல்வினை போயீசனருள் பெறததில்கமாவார்
குலப்பெருங்கிழவர் தாமுங்கோமள்க் கொடியோன்பாகன்
மலர்ப்பதம் பெறுவரல்லால் மறுபதம் பெறுகலாரே. 19
1302 படைப்பினுக் காதியாய பனிமலர்த்தடமாமீது
கிடைப்பவுமயல புகநாடக் கெழுமுதலமிழ்தவாரி
யுடைப்பருந்தசுமை வீசியுறுபலிக்கலனென்றேந்தி
யடைப்படாதுழன்று வாளயங்கையை நக்கல்போலும். 20
1303 பற்பலமனுக்கடம்மிற் பழிப்பி லைந்தெழுத்தும் வேதத்
துற்றனமனுக் கடம்மி லுருத்திரசம் கந்தானு
மற்புதத்தருக் கடமமில் வில்வமும் மரர்தம்மில்
கற்பனைகடந்த முக்கட்கறைமிடற் றிறையுமாங்கே. 21
1304 புனிதரிலற்புத்தேளும்பொங்கொளிகளில்வெய்யோனும்
முனிவரிலென்னையாண்டமுதல்வனுமுதன்மைசான்ற
தனிவிரதத்திற்கொல்லாவிரதமுந்தருமந்தம்மில்
கனிபடும்பொறையும்யோகக்காட்சியிற்சனகன்றானும். 22
1305 மைவரிமணிவண்டூதிமகரந்தமிறைப்பவானாட்
டைவகைத்தருக்களேய்க்குமணிபொழிற்காழிதன்னில்
பெய்வகைகிடந்ததீர்த்தபேதத்திறபிரமன்கண்ட
தெய்வநீர்ப்பெருக்கறாததீர்த்தமுமதிகமாதோ. 23
1306 மனவலிகடந்தமிக்கீர்மற்றதன்கரைக்கட்பட்ட
வினைதருகுப்பைவாரியெறிந்தவர்பெறுவர்மெய்யே
கனைதிரைக்கங்கையாதிகடவுண்மாநதிகட்கெல்லாம்
புனைகலனணிந்துதெய்வப்பொற்படாம்புனைந்தபேறே. 24
1307 வேறு.
காதமணஞ்சினமடங்கல்கவுணியர்கோன்பருகருட்பால்
காதமணந்தருதடத்தைக்கண்டார்நோய்விண்டாரே
மாதரங்கமலையிளங்கால்வரைமார்பிலுறப்பெறுவார்
மாதரங்கமலையரங்கேமன்னுரிமைப்பெறுவாரே. 25
1308 முத்தமிழும்படித்துறைநீர்முகந்துதுளியருந்தினரேல்
முத்தமிழும்படித்துறைநீர்முகிலெனத்தண்டமிழ்பொழிவார்
சித்தமருங்கலையாதுதீரமதிற்கணமுறினும்
சித்தமருங்கலையாதுந்தெரிவரியநிலைசேர்வார். 26
1309 பத்திவலைமுடித்தலைமேற்படராதாரித்தடத்தின்
பத்திவலைமுடித்தலைமேற்படின்மாயையடுவாரே
நித்திலமாடகந்தருமிந்நீரேந்தியோர்பலமுன்
னித்திலமாடகந்தருவார்நினைத்தசெயல்பெறுவாரே. 27
1310 பதகமலம்வலம்வருவார்பண்டுயிரோடுறத்தோய்ந்த
பதகமலம்வலம்வருவார்பாயொளியொன்றாயிடைத்த
மதுகையிடவரையகன்றவல்வினைபோய்த்தொல்லருளம்
மதுகையிடவரைவென்றோன்மன்னுரிமைப்பெறுவாரே. 28
1311 மாகனத்ததினங்காட்டுமணிமறைநான்மறையவர்க்கு
மாகனத்ததினங்காட்டும்வல்லார்மாறில்லாரே
கோகனகத்துச்சிவந்தகோதைமணாளன்பணியும்
கோகனகத்துச்சிவந்தகுழகனடிபெறுவாரே. 29
1312 திருக்குளத்தினிருள்பாறச்சேமநெறிதரும்பிரமன்
திருக்குளத்தினியற்கையிதுதிரைமுரசுபடைத்தானை
உருக்கவருமரன்சூலத்துஞற்றியருளேபொருளாய்
உருக்கவருமொருசூலத்தீர்த்தவியலுணர்த்துவமே. 30
1313 கன்னிமணிவண்டுழலுங்கடிகமழ்தாமரைத்தடஞ்சூழ்
பொன்னிவளந்தருபுகலிப்புண்ணியன்போற்றளிக்கயலே
முன்னியகாற்பெருந்திசையின்முக்கோலெல்லையினுரைத்த
தன்னிகரிலொருசூலத்தீர்த்தவியல்சாற்றரிதால். 31
1314 முத்தலைவேலகழ்ந்ததுதான்முழங்கலையினடுநாகப்
பைத்தலையான்முனிசாபம்பரித்தலையாதவன்படிய
அத்தலையேவினையகற்றியலைத்தலைமானொடுமுன்போல்
வைத்தலையாதிருத்தியதிம்மலர்தலைமாநிலம்போற்ற. 32
1315 துலைமதியின்முழுமதியிற்சூழுததிமறுகநெடு
மலைமதிமாயவன்பெறலான்மறுமதியிலவர்படிந்து
நிலைமதிசேர்தென்புலவோர்நிறைமதிசால்கடனிறுத்தோர்
கலைமதிவேணியனிருபொற்கழன்மதிபெற்றிருப்பாரே. 33
1316 கலிகடியுந்தனிக்கவிகைக்கன்னியாகுச்சபதி
பலிகவருங்கொடியுருவிற்பறந்தவன்முன்னிறம்பொலிய
ஒலிகெழுநீர்ச்சூலதடத்தருமுனிவனவிதிர்த்ததுளி
வலிபலவுமளித்ததென்றால்வழுத்துவதுமற்றெவனோ. 34
1317 மல்குமதிப்பக்கத்துமாசியினேகாதசிக்கண்
புல்குபுகழ்விகடாங்கன்புரையறுமாணெழில்பெறலான்
பல்கிளைஞரொடுங்கயிலைப்பனிவரையினினிதிருப்பார்
ஒல்கலிலந்நாளதுபுக்குடனாடக்கடவாரே. 35
1318 வேறு.
நீர்த்தலைவெடிவாளைநீடமரிடைவாளைப்
பார்த்தெனவெதிர்பாயும்பணைமலிபுகலிக்கண்
பேர்த்தளியதன்மேல்பாற்பிறழ்திரையானந்தத்
தீர்த்தமதுளதந்நீர்த்திறமினியறைகிற்பாம். 36
1319 அம்புயமலர்வாணனந்நகரிடைவைத்த
உம்பருமுனிவோருமுணர்வுடையுரவோரும்
செம்பொருளியல்கண்டுஞ்சேமறைநெறிநின்றும்
தம்புலமறவென்றுந்தவநிலைதவறாராய். 37
1320 அறநெறிவழுவாருமரனருள்பிழையாரும்
மறவினைகடிவாருமகவினைமுடிவாரும்
இறைபணிவழுவாராயிவர்புரிசெயல்கண்டே
பிறைமுடியொருகாழிப்பெருமுதலருள்கொண்டே. 38
1321 மதிநதிமுடியாடவதனமென்மதியாடப்
பொதியவிழ்தொடையாடப்புலிமுனியரவாடடக்
கதிர்விரிவடிவாடக்கரதலநிரையாடப்
பதமலர்தனியாடப்பலமுனிவரராட. 39
1322 ஆடினனெடுநாள்புக்கவ்வழியானந்தம்
நாடியவமயத்தோர்நாயகனயனத்தே
பீடியலருள்வெள்ளம்பெருகியதுளிவீழக்
கூடியததுமேல்பாற்குறுமுனியுறைசாலை. 40
1323 மேலருண்முனிகண்டேவிமலனதானந்தத்
தால்வருமிதுவென்றங்கனைவர்களொடுமாடிச்
சால்புறவரலாலேதரணியிலதுபேராக்
கோலளவினிலாடக்குடதிசைதனிலுண்டே. 41
1324 மற்றதைநினைவோருமருமலர்புனைவோரும்
முற்றிடநினைவோருமுறையினிலணைவோரும்
கற்றறிவருஞானக்கடலெனுமடலேறூர்
கொற்றவனடிநீழற்குலவுவரிஃதுண்மை. 42
1325 வேறு.
கூளியகற்றியகாளிபுரத்தருள்குழைவிக்கும்
ஆளியுகைத்தெழுகாளிதடத்தியலறைகிற்பாம்
மீளிவயப்புலியூரிலிடர்ப்படுவினைமோடி
நாளுமிகக்கருநோயினளப்பருநலிவாலே. 43
1326 கொச்சைநகர்த்தலைவர்கருகுற்றகுடக்கூடே
மெய்ச்சதுரத்தொர்தடத்தையியற்றிவிரித்தாடி
அச்சிவனொப்பநிருத்தமிழைத்தவதிற்பாவ
குச்சிதமுற்றகரும்பிணிவிட்டொளிகொண்டாளால். 44
1327 வர்க்கவினைப்பிணியகலநினைப்பவர்மதிதோறும்
துர்க்கைமனுக்கொடுதெரிசதினத்திதுதோய்வாரேல்
விற்கழைபெற்றவனெழிலுருவத்தொடுமேலான
வற்கலின்முத்தியினளிமையினிற்பெறலாவாரே. 45
1328 இயல்பகலுஞ்சிவநிந்தனையாதியுமிதுதோயின்
பெயருமதற்கிணைவேறுரைசெய்வதுபிழையாமால்
வெயில்விரிமாளிகைவேணுபுரிக்கயல்வடபாலோர்
வயினவதீர்த்தவியப்பமுமொருவழிவருவிப்பாம். 46
1329 அந்நகருக்கொரிரண்டுகுரோசத்தளவாகப்
பொன்னணிமார்பனகழ்ந்துவிரிந்தபொலன்கோட்டின்
தன்னுடைநாதனைவைத்துவிழைந்ததவம்பெற்றான்
பன்னியவாவிபடிந்தவர்தீவினைபடியாரே. 47
1330 கும்பமதிக்குளபூரணைநாளிதுகுடைவாரேல்
உம்பரருந்தவர்சாபமுதற்பவமொழிவாரே
இம்பரிலிம்மொழிசத்தியமேயெனவெனையாளும்
நம்பெருமானதுமும்முறையாகநவின்றானால். 48
1331 அம்மதிமுற்றவுமாடினரும்பவமாடார்பொன்
இம்மியளித்தவர்கோடியரும்பலனிசைவாரால்
கொம்மைமுலைச்சியர்மண்ணணியாடைகள்கோதானம்
இம்மையிலீபவர்பேறுதெருக்குநர்யாரேயால். 49
1332 முத்துறழ்தண்டுலநல்குநர்தண்டுலமுறைவானோர்
அத்துணையாண்டுமரன்கயிலைக்கிரியகலாரால்
முத்தமிழாளிமுயங்கியவெங்குருமூதூரில்
மைத்தவராக்குதடாகமுமேலொருவழிசொல்வாம். 50
1333 வேறு.
தடத்தியல்காழியந்தளிக்குநீள்வட
குடக்கினின்மேலொருகோலின்மேயது
கடற்றிரைமுகட்டெழுகதிரின்செல்வனைப்
படப்பொருபணிமகன்பண்டுதொட்டது. 51
1334 அனல்வினைக்குரவனையயர்த்தசிங்ககே
தனன்மறையலகையைச்சாய்த்தநீரது
முனைவருமமரருமுற்றுமற்றும்வே
றெனைவரும்வினைகெடவென்றுந்தோய்வது. 52
1335 போதருகோட்டிடைப்புயங்கனாமத்து
நாதனையுள்ளத்துநாளுமாடுநர்க்
காதவன்முதல்கோளனைத்துநன்றிசால்
ஏதமில்பலன்றரவிலங்கும்பொற்பது. 53
1336 மற்றதனயலொருவாளியெல்லையின்
முற்றரவணையினான்முனிவன்வெம்பழி
பற்றறவாடுவான்பண்டுதொட்டது
பெற்றபேராழியின்பெயரினோர்தடம். 54
1337 ஆசிலத்தடமுவந்தாடிமாமறைத்
தேசிகர்திறத்தொருசெம்பொனீவரேல்
வீசிவில்லுமிழ்மணிமிளிருமார்புடைப்
பாசிலைப்பள்ளியான்பதத்தில்வாழ்வரே. 55
1338 மங்குறோய்மதிண்மகேந்திரத்துக்காவலன்
பொங்குறுதவஞ்செயப்புகலிவாணன்முன்
சங்குறுகொடுங்குழைத்தாணுவேணுவாய்
அங்குவந்துறத்தடமவணொன்றுற்றதால். 56
1339 சங்கொலிவழங்கலிற்சங்கதீர்த்தமென்
றெங்கணுநிலவியவிதுபுக்காடுநர்
வெங்கொலைமருவலர்த்தொலைத்துவேலைசூழ்
அங்கண்மாநிலமுழுதளிப்பருண்மையே. 57
1340 தீர்த்தமகிமையுரைத்தவத்தியாயம் .
விண்ணவர்க்குடைந்தவெஞ்சூரன்வெவ்வலி
நண்ணியதடமிதினாளுந்தோய்பவர்
எண்ணரும்பகைப்புலங்கடப்பரென்றருட்
கண்ணுதலந்தணன்கழறினானரோ. 58
1341 அளிபுரைதிருநிலையழகியாயபூங்
கிளிபுணர்மருங்கினான்கிளர்பொன்னாலயத்
தொளிபுணர்தெற்கிலோர்கணையிலோங்குநீர்த்
தெளிதரைச்சுக்கிரதீர்த்தமொன்றரோ. 59
1342 வன்கணாலெண்கணான்மறித்துவீழ்த்தநாள்
பொன்கணானூர்திவாழ்புகலிமாநகர்த்
தென்கணான்கொன்றெனக்கோணஞ்செய்தடத்
தின்கணானந்தநீரிழைத்துப்புன்கணான். 60
1343 தோய்ந்தனன்பூந்தராய்த்துணைவனாலுயிர்
தேய்ந்திடாமிருதசஞ்சீவினிப்பெயர்
ஆய்ந்தநூல்விஞ்சையுமமரர்தேசிகன்
ஏய்ந்தநல்விழுப்பமுமெய்தினானரோ. 61
1344 தனிப்புகர்வாரமத்தடம்புக்காடுநர்க்
கினிப்படர்வறுமைநோயில்லைக்கோமயம்
பனித்தபுல்லறுகொடுபரித்துக்கோன்மதி
தனிற்படிந்தோர்க்கிணைதரைக்கணில்லையால். 62
1345 இளிதருவலைஞர்தமேழைதோள்புணர்
மிளிர்சடைமுனிவரன்விமலன்கோயிலுள்
தெளிதரநாட்டியதீர்த்தமொன்றது
குளிர்புனற்பராசரகூபமென்பவே. 63
1346 அச்சுதனனையமேலவர்க்குமேலவன்
கொச்சையையகற்றுமிக்கூபந்தோய்பவர்
நிச்சயமூணலூணேர்தலேதிலாள்
இச்சையின்முயங்கன்மற்றெவையந்தீர்வரே. 64
1347 தேட்பெயர்மதியினிற்செறிந்தபூரணை
நாட்புனல்படிந்துநென்மணியைநான்மறை
ஆட்சியர்திறத்தினிதளிக்குமன்பினோர்
வேட்கைகூர்பிறவிவெவ்வினைப்படார்களே. 65
1348 வாங்கொலியருவிவீழ்மலயமாதவன்
பூங்குயிற்கிளவிபாற்புரைநற்பூந்தராய்க்
காங்கிருகோலளவாகக்கீழ்புலத்
தோங்குநீர்மலிதடமொன்றுநாட்டியே. 66
1349 பைந்தொடிப்பாகனைப்பதித்துப்பாங்கரின்
வந்தனைமலர்கடூஉய்வணங்கிவீறுபெற்
றுய்ந்தனனொலிதிரையுலகுளோரதைச்
செந்தமிழகத்தியதீர்த்தமென்பரால். 67
1350 கோதமன்குறுமுனிகுழித்தவாவிபால்
போதலரொருதடம்புதுக்கிபூந்தராய்
நாதரையிறஞ்சிமெய்ந்நலம்பெற்றானது
தீதறுகவுதமதீர்த்தமென்பரால். 68
1351 இவ்வகையாறிரண்டிண்டைவானவன்
செவ்வனீர்த்தடமுதற்றீர்த்தமாமிவை
ஒவ்வொருதீர்த்தமேயுய்க்கும்வீடெனின்
எவ்வகைவிரிக்குமதின்னுங்கேட்டிரால். 69
1352 முந்தையீரொன்பதாமுதுபுராணங்கள்
செந்தழல்வானவன்றிங்கள்வெய்யவன்
அந்தமிலுலகினோடலகிலண்டங்கள்
தந்தசீர்புனைதடந்தனிப்புறாநதி. 70
1353 இவ்வகைப்பேர்புனைந்திலங்குதீர்த்தங்கள்
கவ்வையிலவர்பணிகாழிசூழ்தரும்
செவ்வியதிசைதொறுந்திகழுமான்மனத்
தெவ்வமின்முனிவிர்காளின்னுங்கேட்டிரால். 71
1354 வேறு.
கின்னரர்கிம்புருடர்சித்தரியக்கர்நாலிருவசுக்கள்கேடில்வானோர்
பன்னகர்பாரிடரசுராமுனிவர்முதலோர்புகலிப்பணிந்துபோற்றி
அன்னவரோரொருதடமுந்தடத்துழையோரிலிங்கமும்வைத்தரிச்சித்தாரால்
இந்நகரக்காழிவரைவடுகேசன்மகிமையினியிசைக்குமன்றே. 72
24 - ஆவது தீர்த்தமகிமையுரைத்தவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 1354.
--------------------------------
25 - ஆவது. வடுகநாதவத்தியாயம். (1355-1385)
1355 கொண்டல்கண்படைகொளக்கிளந்தளிகுலாவியின்னிசைமிழற்றுபூம்
தண்டலைப்பொழிலுடுத்தகாழிவரைதன்னிலேவடுகனென்னவே
அண்டநாயகனிசைந்தகாதைவரலாறுகூறுகெனவீறிலா
எண்டவத்துமுனிவோர்வினாவவருளேறுசூதனதுகூறுவான். (1)
1356 முள்ளெயிற்றரவரைக்கசைத்தமுழுமுதல்வனன்கருணைமுதல்வியோ
டெள்ளிலிச்சகமளிக்குமாறுமுனிணங்குகேளியின்மணங்கொளீஇ
பள்ளிவைகவருமறைவனத்திலொளிபாய்திருச்சுடர்மழுங்கல்கண்
டொள்ளிழைக்கொடியைநோக்கியாக்கமறையோதினானிதனையோதினான். (2)
1357 இன்னவேலையிவ்விளக்கைவில்லுமிழவீண்டியாவரதுதூண்டினார்
பொன்னனாயவர்புரக்குமாறுவிரிபுவனமும்மையுமளித்துமென்
றென்னையாள்பவனுரைப்பவன்னையுமெவர்க்குறுங்கொலெனவெண்ணினாள்
அன்னபோதொரெலிதீபரூமவியறியாதுநாசிகொடுதூண்டியே. (3)
1358 பொருகுறும்புபுரிமிருகமாமியல்பொருந்தலாலதுதருஞ்சுடர்
உருகுகின்றநறையிழுதையன்றுசிறுதுண்டதவ்வெலியையண்டர்கோன்
வருகநீசுடர்துலக்கலாலுரிமைவைத்துமுப்புவிபரிப்பதற்
கொருவனாகியறிவொடுபிறத்தியிழுதுணலின்வாணிருதனாதியால். (4)
1359 நம்பெருந்தரணியாலயங்கடொறுநகுபெருஞ்சுடரிழைத்துமேல்
எம்பதம்பரவுமன்பரந்தணரிடத்துமீகைநனியீகெனா
வம்பறாவிதழியானுரைப்பவதுவலிவிரோசனனெனும்பெயர்
செம்புலநலொழுகுவேலுடைத்தகுவர்செம்மலின்மதலையாயினான். (5)
1360 மாவலிப்பெயர்புனைந்துநால்வகைவயப்படைக்கடலொடுங்குழீஇ
காவன்முப்புவனமுந்தனாதுகவிகைக்குள்வைகமுறைசெய்யுநாள்
ஓவறப்பெருகுகளியினாலமரருலகுபுக்குவிரிதருநிழல்
தேவரைப்பொருதழிப்பவங்கமொடுதேவர்கோன்முரணிமேவினான். (6)
1361 ஆண்டவாசவனுநிருதன்மாவலியுமாழிவேந்தனொடுமுரணுகும்
பாண்டனுந்தனதனோடுசம்பரனும்பவனனுந்திருதிமானுமெய்
நீண்டதீயினொடுதூமகேதுவுநெருங்குகாலனொடுநாகனும்
காண்டகீசதிசையதிபனோடுபயங்கரனும்டிண்டிமனுநிருதியும். (7)
1362 இளையவாணிருதருந்திசாதிபருமேற்றபோரினிடையாற்றல்சால்
வனைகருங்கழன்முரட்டயித்தியர்செய்வாகைகண்டதிகவேகமாய்
நுனைமுகக்குலிசவேலெடுத்ததிரநூக்கிமாகபதிதாக்கினான்
அனையபோதசுரர்கோன்வெகுண்டுவிறலமரரோடவமராடினான். (8)
1363 எறுழ்வரிச்சிலைகுழைத்துநாணொலியெறிந்தழன்றுபதினாயிரம்
தெறுகடுங்கணைவலாரிமீதும்விரிதிசையுளோர்மிசையநேகமும்
கறுவுகொண்டலெனவீசினானிலைகலங்கினாரமரரதுதெரிந்
துறுதடக்கையயிராவதத்தையெதிருந்திவாசவனுமுந்தினான். (9)
1364 மிகநெருக்கியெயிறதுகடித்துருமுவிசையினிற்கரமெடுத்தடித்
தகலமத்தியெறிகுலிசமிட்டுறவடித்தலும்பொருதயித்தியன்
பகன்மணித்தலையினடுவணிற்பதைபதைப்பவங்கையுறுதண்டினால்
உகவடிப்பமகபதிதனக்கவசமுற்றதாலவசமுற்றினான். (10)
1365 அக்கணத்தையறிந்தமாவலியகன்றதேரிலவனைக்கவர்ந்
தொக்கவோருழையிலறிவுறாதவகையோடினாரமரர்வாடினார்
மிக்கவேழ்திசைபரிக்கும்வானவரும்வேறுவேறிரியல்போயினார்
புக்கமாவலிதுறக்கமேயபலபோகமும்பருகலாயினான். (11)
1366 ஆடகத்தலமகன் றுஞாலமிசையரசுபேணிநிறைமணிவளைச்
சூடகக்கொடிமணாளான்மேயதளிதோறுமொள்ளொளியசுடரிழைத்
தேடடுத்தமார்மஞ்சனாதியினிலெந்தைபூசனைசெய்தன்பர்பால்
நாடாகத்துவழிபாடியற்றிநனிநன்னரன்புசெயுமன்னநாள் (12)
1367 வருகுலக்குருவைமகவினைக்கிடம்வழுத்துகென்னவவன்வானுளோர்க்
குருமெனப்பொருசிவத்துரோகமுமொழித்தவூர்பிரமனெண்ணிலார்
அருவினைத்தொடாபிரித்தவூரிறுதியாழிசூழரியகாழியூர்
இருதலத்தினினுயர்ந்தவூரதிலிழைக்கலாகுமெனவவுணர்கோன் (13)
1368 சொன்னவாறுபுரிமகவினைக்குரியசோர்விலாதபொருண்மேவரப்
பன்னருஞ்சடைமுடித்தமாமுனிவர்பலர்களோடுமறையவரொடும்
தன்னெடும்படைதழீஇவரக்கதிர்தடுப்பநீள்கொடிதொடுத்தபூம்
கன்னிமூதெயிலுடுத்தகாழிநகர்காவில்வல்லவுணன்மேவினான் (14)
1369 எகினவூர்திதடமாடியீசனையிறைஞ்சியங்கமரர்கம்மியன்
மிகலதென்றிசையினயோசனைப்பரவைவேள்விபந்தருமிழைத்ததிற்
சகலமுங்கொடுபுகுந்துநாதனிருதாள்குறித்தனனியற்றமேல்
இகலுடைந்தகடவுளரும்வாசவனுமிண்டைவானவனையண்டினார் (15)
1370 புண்டரீகமனைகொண்டபூரணபுராணமாவலியினேவினால்
சண்டமாருதமுடன்றபோதுபடுசருகதாயினமெனக்கரைந்
தெண்டிசாதிபரிரங்கவேதனவரேவரோடுமுயர்காழிபுக்
கண்டராழ்துயருநிருதன்வாகையுமெனத்தன்முன்றொழுதுரைத்தனன். (16)
1371 ஈதியம்பலுமிரங்கலீர்பலருமென்றுகாழிவரைநின்றுளான்
சீதரன்றனைநினைப்பநீர்பருகுசெல்லையன்னவனவ்வெல்லைவாய்ப்
பாதபங்கயமுன்வந்திறைஞ்சியிசைபன்னியங்கைமலர்சென்னிகொண்
டாதரம்பெருகிநிற்கமாயவனொடருள்புரிந்திதனையுரைசெய்தான். (17)
1372 மாயமாவலிசெயன்புமன்பினில்வரம்பெறுந்திறனுமும்மைசால்
ஏயதிண்புவிபரிப்பதுந்தவமிகந்துவிண்ணவரைநலிவதூஉம்
நீயறிந்துணாதியாவரேனுமறைநேயாபாலிலுமெமன்புடைத்
தூயர்பாலிலுமொரிடர்விளைக்கிலவர்தோய்வரானிரயவாதையே. (18)
1373 மைந்தர்தந்தையர்களேனுமெம்முடையவடிவமானபழவடியர்பால்
நிந்தையாளரையொறுத்தபேரெமறுநேயமுள்ளவர்களதுசெயார்
புந்திநல்லறமிழைத்துமென்னகதிபுகுவர்யாமதுபொறேமெனா
அந்தமாவலியடங்குமாறுபுவியாசிலாதமுனிகாசிபன். (19)
1374 பாலனாகியவுணனையொடுக்கிவிரிபாய்திசைத்தலைவர்கீழுளோர்
மேலுளோரைநிலைநிறுவிமீள்கெனவிரைத்துழாய்மணியலங்கலான்
சாலநன்றிதெனவம்புயம்பொருவுதாளிறைஞ்சிவிடைகொண்டுநீள்
மாலகன்றமுனிகாசிபர்க்கதிதிமணிவயிற்றினொருமதலையாய். (20)
1375 தெளிபசுங்குறளதாகிவந்துவிரிசிகையொடும்புரிமுந்நூலொடும்
ஒளிதருங்குசையொடுங்கமண்டலமொடுங்குறுங்கையறுதண்டொடும்
மிளிர்தரும்பிரமசாரியாயடல்விரோசனன்புதல்வன்வேள்விவாய்க்
களிதரும்படிபுகுந்தமாலையெதிர்கண்டுநேயமதுகொண்டனன். (21)
1376 அருக்கியாதிவழிபாடுசெய்துமணியாசனத்ததிசயத்தொடும்
பொருத்தினானமுனிவரும்பராவினாபுகன்றமன்னனைமுகுந்தனும்
இருத்தியோவினிதினென்றுமூவடிமணயாம்விரு*சரனமளிக்கெனக்
கருத்தியைந்தன்னுவப்பவங்கணுறுகவிமகன்கருதியிதுசொனான். (22)
1377 ஆழிமாயனெழிலுருமறைந்துகுறளாகிவஞ்சனை*யிலெய்தினான்.
வாழியாயிதுகொடுப்பினின்னடைமன்னுவாயதவிர்தியென்னலும்
ஊழிமாலெமைபிரக்கினீவதினுமுறுதிவேறுமுளதோவெனா
வீழிவாய்மனைவிதானநீர்கொணரவிரகினாலவுணனுரைசெய்தான். (23)
1378 கொண்டுவந்தநிறைகெண்டிகைப்புனல்கொடைத்தடக்கையன்விடுப்பரே
வண்டுவார்மதனைப்பொ*மையுடைமையல்வெள்ளிதடைசெய்தலும்
தண்டுழாயவனறிந்துகையணிதருப்பைகொண்டதுகற்றதலான
மண்டுசுங்கனொருகண்ணிழந்தயலன்ருவினானதுடனிருதர்கோன். (24)
1379 மூவடித்துணைநிலங்கொளென்றுபுன்னமளரியங்கை*யைவிடுக்கமால்
ஓவவற்புவியளக்குநீள்விசுவவுருவமெய்திவிரிதரையையோர்
சேவடிப்படவளந்துவிண்ணையொருசேவடிக்களவைகண்டுமேல்
மாவலத்தகுவனமுடியிலோரடியைவைத்துமண்ணிடையழுந்தினான். (25)
1380 நேரமன்னதனில்விண்ணும****நிலைகலங்கியல*றுதலும்
சூரணைந்தபுருகூதனோடமர்ந்து*னைப்பதறிஎண்ணினில்
காரணைந்தெழில்கனிந்தசோலைநிறைகாழிமாநகரிலாபதுத்
தாரணன்றிருமுன்வந்துகூறவவர்தம்மையெம்மிறைதடக்கையால். (26)
1381 அஞ்சலென்றருளிவடுகனாகிமுரணவுணனைக்கடியு*மவனைநாம
மஞ்சுலாமவடுகரூபமுற்றிகனமடித்துமென்று****
எஞ்சலலலவனுமவ்வருக்கொடவ**லெழுந்தருளு***
நஞ்சுகொண்டவன்வணங்கல*****டோதுவான் (27)
1382 விழியிருந்துமவிழிமலரினீதுபுரிமிடலதென்னையெனவெகுளியால்
அழிவிலானொருகரத்தினமார்பனிலமப்***வனுமாமிபோய்
இழிவொடுந்தரணிமேல்விழுந்தனனவ்வெல்லைமமுளரிவலக்கண்
டொழிவின்மங்கலமெனக்களித்தருள்கவூழி***காழியாய். (28)
1383 வேறு.
என்றுதுளிநறையுமிழுமிரங்கமலத்தரசிருந்தாள்
கன்றுதுயர்க்கனல்கனற்றக்கடுவேனிகளந்தளிர்போல
நின்றிடர்கூரமயத்துநீதுவளேலெனக்காழி
குன்றுடையான்வேற்றுருவிற்கொழுநனையாங்**களித்தான். (29)
1384 அவ்வழிமாயவன்போற்றியகந்தையெனக்ககற்றியதை
எவ்வழியோருந்தெரிவானிடும்பையானகற்றிடுவான்
இவ்வழியேகிடந்தவுடலென்புமதனுரியையுநீ
வெவ்வழியில்லாய்தரித்தல்வேண்டுவலென்விருப்பிதுவால். (30)
1385 எனமொழியத்திருவருள்கூர்ந்திமையவர்தங்கம்மியனை
மனவணியான்பணித்தருளமறிந்தவுடற்பசுந்தோலைக்
கனைவிரைவாலுரித்தெலும்பின்கணத்தையொருகதையாக்கி
முனைமழுவாளேந்திதிருமுன்வைத்தான்வணங்குதலும். (31)
1386 பாசொளியவீருரியைப்பரித்தருள்கஞ்சுகமெனக்கொண்
டாசிகந்தமணிக்கதையையங்கையினிற்பிடித்தருளி
வாசவனாதியர்போற்றவடுகேசன்வயற்காழி
தேசுபொலிமலைச்சிகரத்தென்றிசையிலினிதிருந்தான். (32)
1387 வியல்வடுகனெனநிருதன்மிடல்கெடுத்தான்றனையடலால்
பெயர்வடுகநாதனெனும்பிஞ்ஞகனும்பரையருளால்
இயலிடமெய்துதிரெனலுமெம்பெருமானின்பூசை
அயர்வகலப்புரிகுதுநின்னருளுண்டேலெனவாங்கண். (33)
1388 அண்ணன்முடிக்கணிபெறுமானைந்துமுதன்முறையாட்டி
பண்ணமரும்புழுகுநறும்பளிதமொடுங்கலந்தணிந்து
தண்ணமருங்கொழுந்துகொழுஞ்சண்பகமாதியவிரைதோய்
ஒண்ணறுந்தார்வகைபுனைந்தவொலியன்முறைமுறைசாத்தி. (34)
1389 பதனுழுந்தினப்பமொடுபாளிதமுஞ்சஃகுலியும்
மதுவொழுகுமுக்கனியுமடற்றெங்கின்கொழுங்கனியும்
விதிமுறையினினிதருத்திவெள்ளியிராநள்ளிருட்கண்
இதயமலர்தரவழிபாடியற்றியிசையெடுத்தேத்தி. (35)
1390 ஈற்றுளைந்துவலம்புரிகளீன்றமணிநிலவுமிழச்
சேற்றுமரைமலர்குவியுந்தென்காழிப்பொருப்பரசே
போற்றுமெமைப்போலுமையிப்புகர்வாரத்தெவர்பூசை
ஆற்றுநர்மற்றவர்பெறுமாறருள்கவரம்பலவுமெனா. (36)
1391 பொற்புவியின்மாலன்புபுரிந்துவேண்டினர்நிற்ப
மற்புயனங்காழிவரைவடுகேசனெவ்வாறே
சொற்புகர்வாரத்திலெமைத்தொழுதாராதனைசெயினும்
அற்பினொடுதுதிப்பினும்யாமளிக்குதுமால்வரமனைத்தும். (37)
1392 என்னமுதுமறையொழுகுமீர்ங்கனிவாய்மலர்ந்தருள
அன்னவரும்விடைகொண்டாங்கமருலகினினிதணைந்தார்
தன்னனையான்மாலெலும்பைத்தண்டமெனப்பிடித்ததனால்
பன்னருமோர்பெயர்தண்டபாணியெனமருவியதால். (38)
1393 பானிலாம்புகர்தினத்துப்பானாட்கங்குலிற்பணிவோ
ஏனைவாரமுந்தொழுபேறெய்தினுமோர்போதெனும்
ஞானநாயகன்சட்டைநாயகனைத்தொழுவோர்வே
றானமாநிலத்திறினுமணைவரரும்பெறல்வீடு. (39)
1394 ஆதலினிவ்வியற்சரிதமனைத்துநுமக்கறிவித்த
தோதவுலவாதெனினுமுரைத்தனன்யானறிந்ததெனா
ஏதமிலாமுதுமறைநூலெனைத்தும்வடித்தெடுத்ததனி
மாதவனைப்பணிசூதமாதவன்மாதவர்க்குரைத்தான். (40)
25 - ஆவது வடுகநாதவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 1394.
----------------------------
26 - ஆவது. வேதவியாசரத்தியாயம். (1395- 1426)
1395 பாதிமதிநின்றொளிர்வேணிப்பரமன்வடுகநாதனியல்
நீதியுணர்ந்தபெருமுனிவர்நினதுகுரவனின்னகர்வாய்
நாதனருளான்மறைவகுத்தநலங்கூறென்னச்சூதனெனும்
கோதில்குணத்தான்விரித்தவழியறிந்தவாறுகூறுதுமால். (1)
1396 தண்டாமறைதேர்கவுதமன்செய்சாபவலியான்மதிபிறழ்ந்து
பண்டாயுலகாயுதனருகன்பவுத்தன்மீமாங்கிசன்வாமன்
உண்டாமினையோர்மதம்பொருளென்றுணர்ந்துறவோர்முதலானோர்
வண்டாமரைவாழ்புத்தேனைமருவார்துளபத்திருமாலை. (2)
1397 இரவிமுதலொன்பதின்மர்தமையெண்மாதிரத்துக்கடவுளரைப்
பரவிநாளுந்தனித்தனியேகருத்தாவென்றும்படிற்றுணர்வால்
விரந்தமையேகருத்தாவென்றக்கததேமாந்துவிபரீதக்
கரவினழுந்திமருண்டார்முன்கற்பகத்தியன்றதுவாபரத்தில். (3)
1398 பறவாப்பூவைநிறத்தானும்பதுமத்தானுமீதுணர்ந்து
திறலார்கயிலைச்சிவபெருமான்றிருமுன்னமரரொடும்பரவி
உறவாங்கருணைக்களைகண்ணேயொன்றாமுதலேகவுதமன்செய்
விறலார்சாபத்தறிவுடைந்தார்வேலைஞாலத்தவரெல்லாம். (4)
1399 காலுங்கதிரோனுதவியுன்னார்காட்சிக்கிருகண்ணமையுமென்பர்
போலும்புறத்தாறொழுகியெமைப்பொருளாய்மதித்துப்புன்னெறியால்
சாலும்பிறமேற்கோளினின்றுந்தலைவாநின்னைமறந்தறமோர்
நாலுந்துறந்தாரெனச்சிலம்பார்நளினமலர்க்கீழுரைத்தனரால். (5)
1400 ஆதிபகவனதுகேளாவருள்பூத்தெழுதாக்கிளவியொடும்
தீதிலுகத்தவர்க்குயர்வான்சேரும்புராணமெனைப்பலவும்
நீதிபுணரும்வியாதனெனநிலமீதுதித்துநெறிதிறம்பா
தோதுமுறைசெய்திடுகவெனவுவணவூர்திக்குரைத்தனனால். (6)
1401 நலனாருலகிற்கருமநெறிநழுவாவண்ணமூவாறு
பலனார்மனுமுன்மிருதிகளைப்பரிபாலனஞ்செய்தளித்தியெனப்
புலனார்கமலக்கிழவனுக்குப்புகறலோடுமிருவோரும்
வலனார்மேருவரைகுழைத்தான்மலர்த்தாடொழுதுவிடைகொண்டார். (7)
1402 கதிர்செய்மேருவரையில்வந்துகண்ணன்விண்ணோர்தமைத்தத்தம்
பதியேபுகுத்திப்பராசரனாம்பகவனெனைத்தன்மகவாதற்
கெதிரிலுறுமன்புறுபுணர்ச்சியெய்தவகுத்தவைகலுமிண்
டுதவலாலங்கணைவதெனாவுலகீன்ற்வனுக்குரைத்தகன்றான். (8)
1403 அனையகாலத்ததுவிழைந்தவறிஞர்பெருமான்பராசரமா
முனைவறீர்த்தமுழுதாடுமுறையாலெறி*ர்த்திரைக்காத்தில்
கனைவண்டிமிர்பூந்தாரேந்துங்கடவுள்யமுனைப்பேராற்றில்
துனைவினொடும்வந்ததுகடப்பான்றோணி*யக்குந்துறைசார்ந்தான். (9)
1404 இயங்குதோணியிவாந்துமச்சகந்தியெதுமோரிளங்கொடியை
வயங்குமுனிகண்டாண்டிரண்டுபருவங்குறித்தமகப்புணர்ச்சிக்
கயந்தீரோரையடுத்ததெமைமயணைதியெனலுமாயிழையும்
நயந்துள்ளுவப்பதெய்வநதிநடுத்*வினிலெய்தினர்கலந்தார். (10)
1405 கடவுண்முனியுமடவரலுங்கலந்தபுணர்ப்பாலாயிடையோர்
அடல்செய்திகிரிப்பெரும்படையானருமாமகவாய்வந்துதித்தான்
படர்செய்வலைமான்முலைதிளைத்தபழிபோயகலப்பிரமபுரத்
திடனெம்மடிகளடிபோற்றியென்றமுனியுமுயன்றதன்மேல். (11)
1406 தன்பேர்பெறவோர்சிவலிங்கந்தாபித்தயலோர்கூபமமைத்
தின்பார்பணியவுயர்ந்தானையெழில்செய்*வினுதித்தமையால்
அன்பார்தீபாயனனெனும்பேரணைந்தசிறுவன்பணிந்தேத்தி
உன்பால்கனியானுய்யுமதியுறுத்துகெனலுமுறுவர்பிரான். (12)
1407 பாரின்முதுநூற்பயிர்வளரும்பாத்தியனையதென்புகலி
ஊரிலெனக்கன்றருள்புரிந்தவுமைகேள்வனைநீபணிகெனலும்
நீரிற்கமலங்கண்முகிழ்ப்பநிறைவெள்வளைமுத்தொளிகாலும்
காரிற்பொலிபூம்பொழிலுடுத்தகாழிநகர்க்கண்ணவனும்வந்தான். (13)
1408 வந்துபிரமன்றடத்தாடிமதிக்கோடுரிஞ்சமுகையவிழும்
கொந்துமலிபூங்கொன்றைமுடிக்குழகன்பிரமேசனைப்போற்றி
இந்துவனையநுதற்பேதையிடத்தெம்பெரியநாயகனை
முந்துவழிபாட்டியலாற்றிமுறையாலிறைஞ்சிமுன்னின்றான். (14)
1409 எம்மான்போற்றியேறூர்ந்தவிறைவாபோற்றியுயிர்க்குயிராம்
அம்மான்போற்றியுலப்பிலாவழகாபோற்றியெனையாளும்
பெம்மான்பொற்றியளப்பரியபெரியோன்போற்றிநின்னடியேன்
மைம்மாசொழியவருள்பொழியும்வரதாபோற்றியெனத்துதித்தான். (15)
1410 துதிக்குமேல்வையெழிலொழுகுஞ்சுடர்காலொற்றைக்குழைகிழவன்
கதிர்ப்பூண்முலைமென்கொடியெனொடுங்காமர்விடைமீதெழுந்தருளி
உதித்தகுணத்தாய்நினதுதுதியுவந்தேம்பெறுகவரமெனலும்
விதிர்ப்பினொடுங்கைத்துணைமுகிழ்த்துவினைதீர்தீபாயனன்மொழிவான். (16)
1411 நின்றாமரைத்தாளென்னுளத்துநிலையல்வேண்டும்பலமறையும்
பொன்றாமேல்வீட்டியல்விரிக்கும்புராணப்பெருக்குமேழையினேன்
குன்றாவண்ணம்பெறவளித்தாட்கொள்ளவேண்டும்வள்ளலென
நன்றாய்ப்பரிசதீக்கைசெய்துநாதனினையவரங்கொடுத்தான். (17)
1412 அதுபின்முனிவன்முதுக்குறைவுற்றாருமாமறைநூல்பற்பலவும்
முதுமைநெறியாலீரிரண்டுமுறைசெய்தவற்றுளிருக்குவினைப்
பொதுமைதருமுவெழுகூறாய்ப்புணர்த்துப்பயிலவருக்குரைத்தான்
இதுபின்மறையைச்சதவிதஞ்செய்தியல்வைசம்பாயனற்கீந்தான். (18)
1413 சாமமறையையாயிரங்கூறியற்றிமுனிவன்சயிமினிக்கும்
ஓமநெறிசாலதர்வணத்தையொன்பானாக்கிச்சுமந்துவுக்கும்
தோமில்புராணவிரிவனைத்துமூவாறாகத்தொகுத்தவற்றைப்
பூமியினில்யாவருமுய்யும்பொருட்டாலினிதுபுகன்றளித்தான் (19)
1414 அளித்தபுராணமூவாறுமருமையுருவாய்ந்தாரமுதம்
துளிக்கும்பிறைக்கீற்றொளிர்சடையான்றுரிசில்பூசைபுரிதுமென்று
களிக்கின்றனமாலென்னமுனிகருணைபூண்டுபிரமதடத்
தொளித்தண்புனல்புக்கினிதாடியுரவன்பிரமேசனைப்பரவி. (20)
1415 அஞ்சிலோதியுமைக்கருள்செயம்பொற்றோணிமுழுமுதலை
நெஞ்சுளுருகிவரன்முறையானின்றுபணிந்துவென்றிபுனை
கஞ்சுகேசன்பதத்துணைகண்களிப்பத்தொழுதுகொழிதமிழால்
விஞ்சுமறைபாடியஞானவிரகன்றனையும்பரவியப்பால். (21)
1416 கொண்டறவழுமேனிலத்தகொடியினுடக்கம்பரிதிவெயில்
மண்டமெலிந்தபசுநிறத்தவயமான்குலங்கட்கயர்வாற்றி
அண்டமளக்குங்காழிபுரத்தவன்கோயிலுக்குவடகீழ்பால்
கண்டகணையோரிரண்டளவிற்கனற்பேரீசன்றென்கீழ்பால். (22)
1417 கேழில்விழுப்பந்தருமிலிங்கமொன்றங்கமைத்துக்கெழுமணியால்
வாழிநறுமஞ்சனவிதிநூல்வகைமையாற்றித்தகைநறும்பால்
ஆழியுயிர்த்தவாடகப்பூந்தருமாமலராலருச்சனைசெய்
தூழினியன்றதெய்வநைவேதனங்களாற்றியுளமகிழ்ந்து. (23)
1418 மடமைப்பிறவித்துயர்விளைக்குமாயைப்பிணிக்க்கோர்மருந்தாய
கடவுட்கூபதீர்த்தமதன்வடபாலிழைத்துக்கண்பனிப்ப
உடலஞ்சிலிர்ப்பவிறைஞ்சிநின்றவொன்பானிரட்டிக்கடவுளர்முன்
படலைப்பணியான்விடையிலெழுந்தருளிமகிழ்ந்துபகர்ந்தருள்வான். (24)
1419 என்னேயுமதுபணிநயந்தேமியைந்தவரநீர்பெறுகெனலும்
பொன்னேயனையான்றிருமுன்புபுராணத்தலைவர்துவண்டுடராஅய்
இன்னேயமைத்தகடவுளுக்குமின்னதீர்த்தந்தனக்குமெம்பேர்
மன்னேவிளங்கவருளென்றார்மதிவேணியனுமஃதளித்தான். (25)
1420 அன்றுமுதலேநம்புகலியமலன்றளிக்கீசானத்தில்
என்றும்பதினெண்புராணேசனெனவாய்ந்திருந்தவெம்மானை
மன்றவொருபோதிறைஞ்சுவரேல்வரம்பில்பலநூற்கடல்கடந்து
பொன்றலருமெய்ப்பொருட்டுணிவார்புகரில்வீடும்பொருந்துவரால். (26)
1421 அன்னபரமனருள்படைத்தவரும்புராணமூவாறும்
பின்னரெனதுதேசிகன்பாற்பேணிவரலுமாங்கவற்றை
என்னதறிவின்றிரிபகலவென்பாலளித்தானிதுநிற்கச்
சொன்னமறையின்பொருளெல்லாந்தொகுத்தோரிரண்டுவகைசெய்தான். (27)
1422 நகைசால்கிரியாகாண்டமெனஞானகாண்டமெனவவற்றை
வகையாலிருசூத்திரப்பெயரின்வைத்தான்வியாதனெனப்பெற்றான்
தகைசாலயனுமனுவாகித்தகட்டுமடல்கீண்டளிநறுந்தேன்
முகைவாயுகுக்குங்கமலவயன்முதுநீர்க்காழிப்பதியடைந்தான். (28)
1423 வேரிமலர்த்தாமரைக்கிழவன்வியன்பேர்த்தடம்புக்கினிதாடி
ஒருநியதிச்சடங்குமுடித்தோரைந்தெழுத்தினுருவோதி
ஆரங்கண்ணிப்பிரமேசனாராதனைசெய்தருந்தவங்கள்
பாரிசாதத்தருவினிடைபயின்றோர்திங்கண்முயன்றளவே. (29)
1424 வண்ணமிடற்றுப்பசுங்கமுகின்மடல்வாயுதிர்த்தசெம்பழுக்காய்ப்
பண்ணைவனசக்கைக்கழங்காம்பரிசுகாட்டும்வயற்காழி
அண்ணல்விடைமேலெழுந்தருளியன்பார்மனுவேதவமகிழ்ந்தேம்
எண்ணமுரைத்தியளித்துமெனவிறைவனுரைப்பமனுவுரைப்பான். (30)
1425 துயர்தீர்சுருதிமிருதியெனச்சொன்னபொருளையென்மடமை
வெயில்பாயிருள்போல்விளிந்தோடவிளம்பியருள்வாயெனத்தொழலும்
உயிர்தோருயிராயிருந்தபிரானுவந்தாங்கருளவப்பொருளை
இயலீரொன்பான்முனிவர்தமக்கிதயங்குளிரமனுவுரைத்தான். (31)
1426 வளங்கொளினையகதையையுரைவகுத்தோர்கேட்டோரெஞ்ஞான்றும்
களங்கமகன்றுமங்கலத்தாற்காதற்புதல்வர்ப்பேறடைவார்
துளங்கும்படர்கூர்தொல்லைவினைத்தொடர்ப்பாடொழிவாரெனத்தவத்தால்
விளங்குமுனிவருளங்கனியவினைதீர்சூதமுனிபுகன்றான். (32)
26 - ஆவது. வேதவியாசரத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 1426.
-----------------------------------------------------------
27. அக்கினீசுரர்மகிமையுரைத்தவத்தியாயம். (1427-1446)
1427 ஆன்றவின்னருட்டேசிகன்காழிவாழமலனதடிபோற்றி
ஏன்றநான்மறைவகுத்தவாறுணர்ந்தனமென்றுமாதவரிப்பால்
சான்றசெந்தழல்வானவன்பணிந்ததுஞ்சாபம்விண்டதுமிவ்வூர்த்
தோன்றலெம்பிரானளித்துஞ்சொன்மெனச்சுதமாமுனிசொல்லும். (1)
1428 உவணைவானவரிரிதரவிருசுடருறுநிலைதடுமாறத்
தவமுயன்றுளோரலமரவெண்டிசைத்தந்திகள்வெருக்கொள்ளைக்
குவலயந்தனினெளியவாயிரமுடிக்கோளராவியல்சாய
அவனியங்குவானசுரரிற்புலோமனென்றசனியன்னவன்மேனாள். (2)
1429 ஓர்வருந்தவப்பிருகுவையிந்திரனொடுபுணர்ப்பினனென்னாத்
தீர்வருங்கொடுமொழியனமமுனிவனாச்சிரமமோர்தினத்தெய்தி
பேர்வருங்குணப்பிருகுவுமொழிந்துளபேருமாயிடைக்காணான்
சார்வருந்தவப்பன்னியைவேள்வியந்தலத்தினிலெதிர்கண்டான். (3)
1430 கண்டுமற்றவன்யாரைநீயென்றலுங்கருவயிற்றினளாய
வண்டுவார்குழலாள்பௌலாமியாமறைமுனியுயிர்த்தேவி
விண்டுநெஞ்சினிலதிர்ப்பினாலுரைதராதிருப்பவெய்யவன்வேள்வி
உண்டுதேக்கெறிவெஞ்சடர்க்கடவளையுற்றிதுபகர்கிற்பான். (4)
1431 புனிதமிக்கநீயறிகலாப்பொருளிலைப்புரியுமெச்செயற்கேனும்
நனிசெய்சான்றுளாயாரிவளுரைக்கெனநானியம்புறின்வேத
முனிவன்வெம்புறுமொளித்திடிற்றயித்தியன்முருக்கும்வேற்றுரையாடின்
துனிவிளைக்குமென்றழுங்கியுமுண்மையைத்துணுக்கினாலவன்சொன்னான். (5)
1432 மற்றவாய்மொழிகேட்டலுந்தடக்கையான்மடவரல்வளரைம்பால்
பற்றியீர்த்தலும்புரண்டனள்சிவவெனப்பன்முறைப்பெண்மான்போல்
உற்றரற்றினாள்கற்பினுமதிர்ச்சியிலுயிர்த்தசேட்டிளம்பாலன்
சொற்றமேனியிற்பிரமகாந்தியினும்வெந்தூளியாயினன்வெய்யோன். (6)
1433 ஆயவேலையிற்சேயினையேந்திநல்லகம்புகுந்தடல்வெய்யோன்
தீயசெய்கையோர்ந்தடிக்கடியினைவுழித்தேவர்கோன்மகமுற்றி
மேயநல்வளத்தொடுவரும்பிருகுவாமிக்கவன்மனையாடன்
பாயவெந்துனியோதியிலுணர்ந்தனன்பையுள்கூர்ந்தனன்மென்மேல். (7)
1434 காலமுன்றையுமொருங்குணர்பெருந்தவக்கருணையங்கடலன்ன
சீலமேன்மைசால்பிருகுமாமுனிவரன்செயிர்த்துவெங்கொலையோவா
ஆலமன்னவாளவுணனுக்குண்மையையறைந்தசெந்தழலோனை
ஞாலமீதுநீசருவபக்கணனென்னடக்கெனச்சபித்தானால். (8)
1435 இட்டசாபமேற்றனலவன்சினமுறீஇயீர்ங்கண்மாஞாலத்துப்
பட்டதன்கலையாவையுங்கொடுசெலப்பன்மகச்சடங்கெல்லாம்
முட்டல்கண்டவியெய்துறாவானவர்முகலுறழ்மணிமேனி
வட்டநேமியாந்குரைத்தலுமாங்கவன்வன்னியோடிதுசொல்வான். (9)
1436 பரந்தநின்கலைபண்டுபோற்பரப்புதிபாரினின்முனிசாப
அரந்தவெந்துயர்நீங்குறமுகிறவழம்பொனீடெயிற்றோணி
புரந்தனிற்புகுந்தெந்தையாராதணைபுரிதியென்றலுநேர்ந்து
நிரந்தனன்கலையனைத்தையும்விரித்தனனெருப்பினுக்கிறைமுன்போல். (10)
1437 விரித்தசெந்தழல்விண்ணவன்பண்ணைநீர்விரியிதழ்க்கமலத்தே
வரித்தநீளிலைமீக்கொளவணங்குபுவாய்ந்தநெற்கதிர்தெண்ணீர்
பரித்தவள்ளநீர்பருகுறுமிவுளியின்பான்மைகாட்டியகாழிப்
புரிக்கண்வந்தனனயன்றடமாடினன்புரிந்தனனியமங்கள். (11)
1438 குய்யகாசியென்றிலகியபுகலிவாழ்குழகனதடிபோற்றித்
துய்யவைந்தெழுத்தோதிமூதெயில்கெழுசுடர்த்தளிவடகீழ்பால்
எய்யுமுக்கணையளவையுட்டன்பெயரிலங்கமொன்றதுதாமித்
துய்யுமாறுதன்பெயர்புனைதீர்த்தமொன்றுஞற்றினானதன்றென்பால். (12)
1439 பின்னரும்பலபூசனைநெடும்பகல்பேணினன்பயில்வான்முன்
வன்னிவேணியான்போந்துநின்பூசனைமகிழ்ந்தனமுனிசாபத்
தின்னல்கூர்படரகல்கநீபெறுவரமின்னமுங்கொள்கென்ன
மின்னிலங்கொளியொள்ளழற்கிறையவன்விளம்புவானுளங்கூர. (13)
1440 அளியனேன்முயன்றிழைத்தவித்தடத்தினிலாடியீண்டமலேசன்
ஒளிமலர்ப்பதம்பரவினோர்சாபம்விண்டுறுபவமகன்றோங்கி
விளிவில்போகமுமேலைவீட்டின்பமுமேவுமாறருள்கென்னக்
களிநல்யானையீருரியரைக்கசைத்தவன்கனிவொடங்ககருள்செய்வான். (14)
1441 அன்னியம்படுநிந்தையிலொளிறுவேலரசர்செயிடையூற்றில்
மன்னிமண்டியவறுமையிற்கிரகங்கண்மாறியவிழுக்காற்றில்
இன்னலெய்துறாதின்பமேவெய்துறவெழிலுலாம்பொழிற்காழி
வன்னிலிங்கமும்வன்னியந்தீர்த்தமும்வயங்குமால்வடகீழ்பால். (15)
1442 வேறு.
இன்னணம்வழிபடுமெறிசுடரிறையவனிறையவனருளாலே
தன்னமர்பதியினின்மருவியபிறகொருதரமெயில்வளர்காழி
மன்னவனடிதொழுதிகல்பெருகினனெனமதிமதிமுனிசூதன்
சொன்னபின்முனிவர்களதுபுகலெனவகைதொகையொடுநனிகூறும். (16)
1443 ஆதியிலொளியுமிழ்தமனியவரைமிசையமரர்கள்பலர்கூடி
மாதலமிசைபுரிமகமுழுதிலுமொருவழியுணும்வகையாதே
ஓதுதிரெனவனலிறைபிருகுவினிடரொருவல்செய்தருள்காழி
நாதினலுமதுருமருவியவ்வுணவினைநானொருவழிகொண்டே. (17)
1444 என்றுநல்குவனென்விமையவரினிதெனவெரிசுடருயர்காழிக்
குன்றுறைமுதல்வனைவரன்முறைபரவுபுகுழைதரவிடைமீதே
அன்றெனையுடையவன்வரவருள்புரிதலுமலர்பொருமிருதாளில்
சென்றெதிர்பரவினனிதுதருகெனவிறைதிருமுனமெழுநாவான். (18)
1445 என்னெனிலிமையவர்மன்னுருவெவைகளுமெனதுருவினிலாக
நின்னருள்புரிகெனநிமலனுமருள்செயநிலமிசையதுநாள்கொண்
டின்னணவுருவொடுகடவுளரவியுணவியன்மகவினைதோறும்
வன்னிநல்குவனிதுமறுமுறைபுகலியின்மருவியவரலாறே. (19)
1446 இங்கிவன்வரவிதுவன்கறையிருள்கெடவெழுதருமொளிவெய்யோன்
மங்கலவளமலிவெங்குருவினிலுறைவரதனதடிபேணி
அங்கவனுயர்நிலைதங்கினனெனமுனியரசர்களதுகாதை
இங்கருளெனலும்விளம்பினன்மகிழ்தரவேதமின்முனிசூதன். (20)
27 - ஆவது. அக்கினீசுரர் மகிமையுரைத்தவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 1446.
-----------------------------
28 - ஆவது. சூரியன் பூசித்தவத்தியாயம். (1447-1464)
1447 வெங்குருவினில்வாழெந்தைமெல்லடிபணிந்துமேன்மை
அங்கியக்கடவுள்பெற்றவடைவிதுமகவானுக்கும்
செங்கதிரவற்குமுற்றசெருக்கினாலிவ்வூரெய்தி
பங்கமிலுயர்ச்சிவெய்யோன்படைத்ததும்பகரலுற்றாம். (1)
1448 தமவலிதுரக்குஞ்சோதித்தபனனுக்குலிசவேற்கை
அமரர்காவலனுநீயேயதிகன்யானதிகனென்னாக்
கமையிலார்முரணிமேனாட்கலங்கினர்தடுப்பொன்றில்லார்
மமதைநோய்கொண்டார்யாரேமருந்துவேறுதவற்பாலார். (2)
1449 முரணியவிருவோர்தங்கண்மொய்ம்பையாண்டளப்பான்றன்பால்
விரவினருரைப்பவன்னான்விண்ணவர்வேந்தனென்பான்
உரமலிகுலிசபாணியொருவனீதையமின்றே
கரமலிகதிரோயென்னக்கதிரவன்கனன்றுபின்னாள். (3)
1450 கடவுளர்பலர்க்குமேலாங்கருத்தனுங்கடல்சூழ்வையத்
திடனுளார்பலரும்போற்றுமிறைவனும்பல்லாறாக
அடர்கருமங்கட்கெல்லாமறிஞனுமாவேனென்னா
உடலும்வெங்கதிரோன்புக்கானொலிதிரைப்பொன்னிவைப்பில். (4)
1451 ஈரிரண்டியற்கைவிண்ணோரிருக்கையாயிருக்கையாய்ந்தோர்
பேரியல்வளர்க்குங்காழிப்பெருநகரெய்திவேதன்
சீரியதடத்துமூழ்கித்திருநிலையழகியென்னும்
காரிகைபாகன்செம்பொற்கழலிணைவழிபாடாற்றி. (5)
1452 அண்ணலேபோற்றிவிண்ணோரதிபனேபோற்றிமூன்று
கண்ணனேபோற்றிசூலக்கையனேபோற்றிசோதி
வண்ணனேபோற்றிகாழிவரதனேபோற்றியோர்பால்
பெண்ணனேபோற்றியாதிப்பிரமநாயகனேபோற்றி. (6)
1453 இனையனபுகழ்ந்துபோற்றியெந்தைவாழ்தளியிலாண்ட
கனைமதக்கன்றேயாதிக்கடவுளரடிபராவி
முனைவனாலயத்துமேல்பான்முக்கணையளவைக்கப்பால்
புனைதிருக்கோலக்காவாம்பூங்கொன்றைவனத்திற்புக்கான். (7)
1454 பூமலர்க்கிழத்திக்கென்றும்புனையுமங்கிலியமீந்த
மாமுழுமுதலைப்போற்றிமற்றதன்கீழ்பாற்றன்பேர்த்
தாமரைவாவிதொட்டுத்தன்பெயரிலிங்கந்தாபித்
தேமுறநனியாராதித்திருந்தனனுலப்பில்காலம். (8)
1455 வேறு.
இவ்வழியிருந்துழியென்னையாளுடை
மவ்வலங்கோதையாண்மகிணனேற்றின்மேல்
அவ்வழியினிதெழுந்தருளவேழ்பரி
வெவ்வெயிற்றேரினான்வீழ்ந்துவாழ்த்துமால். (9)
1456 அய்யனேபோற்றிநல்லழகபோற்றிவான்
மெய்யனேபோற்றிமால்விரிஞ்சன்காணருஞ்
செய்யனேபோற்றியென்றுவந்துசெங்கதிர்க்
கய்யனேத்தெடுத்தலுங்கடவுள்கூறுமால். (10)
1457 வளமலிபூசைநீவகுத்தவண்ணமெம்
முளமகிழ்ந்தனமுனக்குறுவதோதென
இளமதிகண்ணியாயிமைக்கும்வான்முதல்
தளர்வின்முப்புவிக்கும்யான்றலைவனாகவும். (11)
1458 ஏவருமெனைத்தொழுமெதிரில்செல்வமும்
தேவநீயருள்கெனத்திருவுளத்தினால்
ஆவயின்மகிழ்ந்தவையளித்துப்பின்னரும்
கோவுயரியகொடிக்குழகன்கூறுமால். (12)
1459 இத்தலைநீபணிந்தியலிலிங்கமும்
உத்தமத்தடமுமுன்பெயரினோங்குக
பத்தியாலிப்புனல்பானுவாரத்தில்
சித்திசெய்யானியாவணியிற்றேடியே. (13)
1460 தேளுறுந்திங்களிற்செயிரில்பங்குனி
நாளுறுமகத்தினினயந்துமூழ்கியே
தாளுறப்பணிந்துநந்தமைப்பராவினோர்க்
காளுறுதருமமுமனைத்துமீதுமால். (14)
1461 நின்னொடுநெடுமொழிநிகழ்த்தும்வாசவன்
பொன்னியுறோளினான்புவிக்கிராமனாய்
மன்னுநாள்வாலியாய்வருவனீயவன்
பின்னுதித்தவனுயிர்ப்பிரிவுசெய்தியால். (15)
1462 என்றுபல்வளங்களுமிரங்கிவெள்விடைக்
குன்றினானளித்தனன்குவலயத்தின்மேல்
மன்றவத்தடத்திடைமருவியாடினார்
பொன்றரும்பெரும்பிணிபோக்குவாரரோ. (16)
1463 ஆறரும்விழிப்பிணியங்ககவீனம்வெங்
கூறதிகாரமாங்கொடியவன்பிணி
வேறுறவிலகிவெய்யவனில்வீறுபெற்
றேறெழின்மதனெனவிருக்கின்றார்தமை. (17)
1464 நனியறிகுவெனெனநவின்றுசூதனாம்
முனிவரன்பின்னருமுதல்வன்காழிவாழ்
புனிதனதடியிணைபோற்றியுய்ந்தனன்
பனிமதியென்றதன்பரிசுங்கூறுவான். (18)
28 - ஆவது. சூரியன் பூசித்தவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 1464
------------------
29 - ஆவது. சந்திரன்பூசித்தவத்தியாயம். (1465-1478)
1465 தண்ணறாவுமிழுங்கடுக்கையங்கண்ணித்தாழ்சடைத்தனிமுதற்காழி
அண்ணறாள்பரவியாயிரங்கதிரோனமரரிலுயர்நிலைமேய
வண்ணமீதன்னமணிநகர்போற்றிவாலமுதிறைக்கும்வெண்கதிரோன்
விண்ணுளோர்பழிச்சவியனிலையடைந்தவியப்பமும்விளம்புவான்றுணிந்தாம். (1)
1466 மிக்கமாதவந்தோய்தக்கனென்றுறுபேர்மிடவினானளித்தமூவொன்பான்
மைக்கருங்கூந்தலுடுநலார்தம்மைமதிக்கடவுளுக்குளமகிழ்ந்து
புக்கநாள்வதுவையாற்றினனவரைப்பொதுவறப்புணர்ந்தனைவாழ்கென்
றொக்கநல்குதலுமியைந்ததண்கதிரோனுறுமனைக்கொடுமணந்திருந்தான். (2)
1467 தினந்தொறுமொருவர்வனமுலைதிளைத்துச்செல்லுநாள்வல்லிருங்கூந்தற்
கனங்குழையவரிலுரோகணியிடத்துங்கன்னியங்கார்த்திகையிடத்தும்
மனங்குழைந்தனையானனிவிருப்பூர்ந்துமணத்தல்கண்டதுபொறாதேனை
அனந்தருநடையார்கொழுநனதியல்பையண்ணறந்தந்தைபாலுரைத்தார். (3)
1468 கேட்டலுமழன்றதக்கனாங்கமுதகிரணனைப்பக்கமொன்றினிலுன்
னீட்டெழிற்கலைசுள்யாவையுங்குறைகவெனச்சபித்திடலுமவ்வாறே
நாட்டொறும்வைகறோறுமோர்கலைபோய்நலிந்தனனிப்பெருஞ்சாபம்
வீட்டியானுய்வதெத்தலமென்னாமிக்குளங்கவன்றனன்விதுவே. (4)
1469 குரைகடற்புவியோர்குறித்தபல்பொருளுங்கொடுத்துவிண்ணகத்துவாழுநர்க்கும்
புரையுறுமிடர்நோயகற்றிவீடளிக்கும்புரமதுதோணியம்புரமென்
றுரையுளவதன்பாலெய்தியிவ்விடும்பையொழிகுவலெனவுடுபதிதான்
மரைமலர்க்கழனிக்காழிமாநகர்க்கண்வந்தயன்றடத்துநீராடி (5)
1470 இழுக்கறுநியதிச்சடங்குகளாற்றியியற்குருலிங்கசங்கமமாம்
முழுப்பரஞ்சுடரைவரன்முறையிறைஞ்சிமுன்புநின்றன்புமீதூர
ஒழுக்குறுகண்ணீர்வாரமெய்சிலிர்ப்பவுலையுறுமெழுகினுள்ளுருகி
விழுப்பமீக்கிளப்பப்பழிச்சினன்பலகால்வெண்ணிலாவுமிழ்கதிர்வேந்தன். (6)
1471 எந்தையாலயத்தைவலம்புரிந்தயல்போயீர்ந்தநுண்பளிங்கெனத்தெளிந்த
அந்தணீர்கொழிக்கும்விக்கினேசுரப்பேரணிநதித்தெய்வநீராடிச்
சிந்துரவேணிச்சிறுவிழிப்புழைக்கைச்செல்வனுக்கருச்சனையாற்றிச்
சந்தமோதகமங்கருத்தியெம்புகலித்தலைவன்வாழ்தளிக்குநேர்கீழ்பால். (7)
1472 முக்குரோசனைதூரத்ததாய்வசிட்டமுனிபணிதிட்டையின்வடகீழ்ப்
பக்கலாய்வில்லவனமுல்லைவனமேல்பால்தாய்க்குருக்கைக்குநிருதி
திக்கதாய்மாநீர்ப்புறவமாநதிக்குஞ்செம்பாம்பன்குடிக்குமோர்தெற்காய்த்
தக்கசீர்விழுப்பந்தரப்பெருநூலோர்சாற்றியமுகூர்த்தமொன்றாய்ந்து. (8)
1473 அள்ளிலைப்புன்னையகத்தினிற்றன்பேரலங்குமோரிலிங்கமுமப்பேர்த்
தெள்ளுநீர்த்தடமுமமைத்துவந்தனையுஞ்செய்தொரைந்தெழுத்துமந்நிழல்வாய்
உள்ளுறக்கணித்துத்தவம்பலமுயன்றவொளியுலாந்திங்கள்வானவன்முன்
வள்ளைவார்குழைமென்கொடியொடுங்குழகன்மழவிடைமீதுதோன்றினனால். (9)
1474 உவமனில்குணத்தாய்நினதுமாதவமீங்குவந்தனம்வரம்பெறுகெனலும்
தவளமால்விடையாய்தக்கனெற்களித்தசாபமுந்தவிர்த்தியென்பெயரில்
புவனியிற்பொலியித்தடம்படிந்திவண்வாழ்புனிதரைப்போற்றுநர்யாரும்
கவலுறும்வினைதீர்ந்தரும்பெறல்வீட்டிற்களிக்கவிஞ்செய்கெனக்கரைந்தான். (10)
1475 தலைவனுமவனுக்கவ்வரமளிப்பான்றக்கனெம்மடியனன்னவன்செ*
உலைவறுசாபமொழிப்புறாதேனுமுன்பணிக்குதவவேண்டுதலால்
நிலையுமுன்னுவாவிலொவ்வொருகலையாய்நிரம்புவாய்பின்னுவாவினிலோர்
கலையதாய்க்குறைவாய்வைகலுங்குறையுங் கலயையோர்கடவுளர்க்களிப்பாய். (11)
1476 வழங்குமவ்வரத்தாலொவ்வொருகலையாய்வளர்கவிக்கலைவளர்பக்கம்
அழுங்கலில்சுபமாமக்கலை நுகர்வோரனல்கதிர்விச்சுவதேவர்
முழங்குநீரிறைசட்காரனிந்திரனேழ்முனிவரோடசகபாதன்போர்க்
கொழுஞ்சமன்வாயுகவுரிதென்புலத்தார்குபேரனெம்மொடுமயன்முறையே. (12)
1477 நந்தையேதொடங்கிநுகரநீமறையோர்நாயகனெனும்பெயர்பெறுவாய்
சந்ததம்பயிர்களெவைக்குமோரிறையாய்த்தயங்குவாய்பிணியெலாந்தவிர்ப்பாய்
வந்த்மூவொன்பான்மகளிரையியல்பாய்மணந்தனைவாழியப்புணர்ச்சி
அந்தமார்குடிகைநான்கினுங்கருமமாவனசெயக்காவன்றே. (13)
1478 இப்பரிசெவையுமளித்தரன்விடைமேலிவர்ந்துவிண்படர்ந்தனனுளந்தோய
வெப்புறுமிடர்போய்த்திங்களங்கடவுள்வியனுலகெய்தினனெனலும்
ஒப்புறுமுனிவர்செடனேத்தியதுமுயர்கேதுபுரவரலாறும்
துப்புற்ழ்சடையாயருள்கவென்றிரப்பச்சூதமாமுனிவரன்சொல்வான். (14)
29 - ஆவது. சந்திரன் பூசித்தவத்தியாயம் முற்றிற்று.
(ஆக திருவிருத்தம் - 1478)
------------------
30-ஆவது. சேடனுங்கேதுவும் பூசித்தவத்தியாயம்.(1479-1510)
1479 வெள்ளிவெண்மதிமேலைநாட்டக்கன்வெஞ்சாபம்
தள்ளியுய்ந்தவாறின்னதித்தனிநகர்சார்ந்து
புள்ளிநீண்முடிச்சேடனுங்கேதுவும்போற்றித்
தெள்ளியோரெனப்பெற்றதுமொருவழிதெரிப்பாம். (1)
1480 முக்குரும்பையுமுருக்கியகாசிபமுனிக்குத்
தக்கதேவியாம்வினதைகத்துருவெனுந்தரத்தார்
மக்களெய்துவான்மனமலிந்தனையவன்மலர்த்தாள்
மிக்கவாதரத்தொடும்பணிந்துரைத்தலுமேனாள். (2)
1481 ஏலவார்குழல்வினதைகேணின்வயிற்றிரண்டு
சீலவண்டம்வந்துயிர்ப்பவாண்டாயிரஞ்செல்லக்
கோலமைந்தராங்கவற்றுதிப்பாரெனக்கூறிக்
காலமூன்றுணர்முனிவன்மாற்றவட்கிதுகரைந்தான். (3)
1482 உன்னகட்டினிலண்டமாயிரமொருங்குதிக்கும்
அன்னவயிற்றினீயருகமகப்பேறடைகென்னச்
சொன்னவாற்றினாயிரஞ்சினைகத்துருத்தோகை
தன்னிடத்துவந்தெய்தியோராண்டதுதணந்தே. (4)
1483 கணிக்குமண்டங்களவற்றினிற்கணிப்பிலாதனவாய்
மணிப்பணாடவிச்சேடனாதியபணிவரலால்
அணிப்பொலன்றொடிமகிழவம்மகிழ்ச்சிகண்டழுங்கித்
தணிப்பிலாதொருமுட்டையைவினதைகைத்தலத்தால். (5)
1484 வெருவலியின்றியேதகர்த்தலுமுனிவரன்விளம்பும்
பருவமுற்றுறாதுதித்ததோரருணனோர்பாதி
உருவொடெய்திமாற்றவட்குநீதொழும்பியாயுழல்கென்
றருளில்சாபமொன்றன்னைபாலளிப்பநொந்தனையாள். (6)
1485 மைந்தரெய்துறும்விருப்பினால்யானுமற்றவள்போல்
முந்துயிர்த்தலொவ்வாமையான்முட்டையைத்தகர்த்தேன்
இந்தவெங்கொடுஞ்சாபமீந்ததனையென்றிகப்பேன்
தந்துநீயிதிதவிருமாறுறையெனத்தனயன். (7)
1486 ஏனைமுட்டையிலெம்பிதோன்றுவனுனக்கென்னால்
ஊனமெய்தியசாபமாற்றுவனெனவுரையா
ஞானநாயகன்பூசையாலிரவிதேர்நடத்தற்
கானவெந்திறல்வலவனாயினனரோவருணன். (8)
1487 ஈதுநிற்கவவ்விருமடந்தையருமின்னளிசூழ்
தாதுலாமலர்ச்சோலையாட்டயருநாட்டனிவிண்
மீதுதோன்றியதேரொலியதுசெவிவிழலால்
ஓதுகென்றகத்துருவினுக்கோதுவாள்வினதை. (9)
1488 சதமகன்பரியார்ப்பெனவிப்பரிதனக்கு
நுதலுமேனியெந்நிறமெனமுழுமையுநோக்கின்
எதிரிலாதவெண்ணிறமெனவினதையாண்டியம்ப
அதனில்வாலதிகறுப்பெனக்கத்துருவறைந்தாள். (10)
1489 வாலுமவ்வொளியென்றனள்வினதையிவ்வார்த்தை
ஏலுமேலுனக்கடிமையென்றளவட்கிளையாள்
சாலும்வாலொளிகறுப்பெனினடிமைநின்றனக்கியான்
வேலுலாங்கணாயாவெனென்றுரைத்தனள்விதியால். (11)
1490 இளையசூள்புகன்றிவரகன்றிடலுமுன்னவடன்
தனையர்வானினின்றநந்தனாதியபணித்தலைவர்
துனைவினெய்தினாரிந்திரன்பரிநிறஞ்சொல்வீர்
வினையமிக்குளீரென்றலும்வெண்ணிறமெய்யே. (12)
1491 மேனிதன்னிலும்வெண்மைவாலென்றலுமுணர்ந்த
கானிருங்குழல்கறுப்பெனவுரைத்தவென்கடுஞ்சூள்
ஈனமெய்துறாதிருண்டவாளரவெலாமிமையோர்
கோனுலாம்பரிவாலினைமறைத்திரென்குறிப்பால். (13)
1492 என்றவாய்மொழிகேட்டலுமென்னிதுவன்னாய்
ஒன்றுதீமைசெய்துயர்வதிலொழுக்கினாலுடைந்தால்
வென்றியெய்துமாலறம்பிழைத்திடினுமேலோரைக்
கன்றல்செய்யினுநிரயமெய்துவர்பலகாலம். (14)
1493 தருமமுந்தெறுமெந்றொருகாதையைத்தாய்பால்
ஒருமைமைந்தர்களுரைப்பமுன்னளனெனுமுறுபேர்
நிருபனீதிசெய்தளிக்குநாட்கலிவலிநெருக்குண்
டருநிலந்துறந்தெய்த்துமவ்வறங்கெடாமையினால். (15)
1494 நவையுறுங்கலியகன்றொருநளிமதிக்குடைக்கீழ்ப்
புவியளித்தனனின்னமுமவன்பெயர்புகன்றோர்
எவரும்வெங்கலிநீங்கலானன்றியையிகந்தோர்
தவறியம்பினோர்வஞ்சகருய்வரோதரைமேல். (16)
1495 அன்னதாலடாதென்றலுமன்னைமுன்னாகச்
சொன்னதெய்வம்யானெனமொழிமறுத்தநீர்துகடீர்
மன்னவன்சனமேசயன்சத்திரமகத்தீத்
தன்னிலாகுதிக்காகுதிரென்றனள்சபித்தாள். (17)
1496 ஆயபோதரவரசருண்ணடுங்கீயீன்றாளை
ஏயவந்தனைபுரிதலுமென்மொழிகேட்பின்
மேயமாமுனியத்திகனும்மையிவ்வேள்வித்
தீயுறாவகைதெரிப்பனஞ்சலிரெனத்தெரித்தாள். (18)
1497 அவ்வுரைக்குடன்படுகிலாரநந்தனேயாதி
வெவ்வயிற்பொழிமணிப்பணாடவிப்பணிவேந்தர்
எவ்வமிக்கவிச்சாபமெவ்வாறினியிகப்பேம்
கவ்வைதீர்நெறியாதெனமனத்திடைகவன்றார். (19)
1498 அறிந்திழைத்தவல்வினைதொலைத்தரும்பெறல்வீடு
சிறந்தளிப்பதுங்காழியம்பதியெனத்தேறி
மறந்தழைத்தசேட்டநந்தனாதியரெலாம்வல்லே
உறுந்திறத்தில்வந்தெய்தினார்வெய்துறலொழிவார். (20)
1499 வரசரோருகன்றெய்வநீர்படிந்துநன்மலர்தூஉய்த்
பிரமநாயகற்பணிந்தருளுமையிடம்பிறங்கும்
குரவனீரடிதொழுதுகஞ்சுகத்தனிக்கொழுந்தின்
சரணமேத்திநின்றிருநிலையழகிதாடாழ்ந்தார். (21)
1500 உலவையந்திசைக்கடவுணாகேசனின்புறுதாட்
சலசமேத்திவெள்வளைகள்பந்தெனவெறிதரங்கம்
இலகும்விக்கினேசுரப்பெருநதிபடிந்தெவரும்
மலருலாம்பொழில்சூழ்கேதுபுரத்தினில்வதிந்தார். (22)
1501 வேறு.
வரமலிசூதமுனிவனிவ்வாறுவகுத்தலுமருந்தவரெமக்கோர்
புரவலகேதுபுரிவரலாறென்புகலுகவென்றலுமேனாள்
சிரபுரப்பெருமைதெரித்துழியந்தச்சிரமதுநீங்கியவுடற்கூ
றுரகனெம்பனாற்கேதுவென்றொருபேருற்றனன்பெற்றதையன்றே. (23)
1502 ஆங்கவன்கமலத்தந்தணனமைத்தவருட்பெருங்கடவுணீராடி
ஓங்குலகளித்ததிருநிலையழகியொடும்பிரமேசனைநிறைஞ்சிப்
பூங்கொடிக்கருள்செய்பெரியநாயகன்றன்பொன்னடிபடிந்துயர்குவட்டின்
பாங்கமர்ந்தெனையாள்கஞ்சுகமுதல்வன்பதந்தொழுதாயலக்கீழ்பால். (24)
1503 உளந்தருமெல்லையொருகுரோசத்தினொண்ணறாவூற்றெழுந்தொழுகும்
துளங்குபொற்றுணர்தூங்ககன்சினைசாதித்துருமமூலத்தினிலெவர்க்கும்
வளந்தருங்கடவுளிலிங்கமொன்றமைத்துமணிதெளித்தனையமாதீர்த்தக்
குளந்தனிகண்டுவரன்முறைபூசைகுழைவொடும்புரியுநாளாங்கே. (25)
1504 ஒள்ளியதகட்டுநெட்டுடல்வாளையுகளுபுதாக்கலுமுயர்ந்த
வெள்ளிவெண்பாளைப்பசுங்கமுகுகுத்தவிழுத்தகுதாற்றிளம்பழுக்காய்
தெள்ளொளிப்பவளத்திரளெனவிமைக்குஞ்செழும்பணையுடுத்ததென்காழி
அள்ளிலைச்சூலத்தொருமுதல்விடைமேலணங்கொடுமெழுந்தருளினனால். (26)
1505 எழுந்தருளிமையவில்லியைக்காணுஉவிணைவிழிபனிப்பமெய்சிலிர்ப்ப
அழுங்கலிலார்வமீமிசைபெருகவலர்கடூஉயங்கைமேன்முகிழ்த்து
விழுந்துபன்முறையால்வணங்கிநின்றானைவிடைக்கொடியுயரியபெம்மான்
ஒழுங்குறுநினதுபூசனைமகிழ்ந்தேமுறுவதுகேளெனவனையான். (27)
1506 பழமறைமலர்ந்தபவளவாய்முதல்வாபனிப்பகைவானவன்றன்னைக்
கிழமையான்மறைக்குமியலும்வெவ்வேறுகேழ்கிளர்கோள்களோடியானும்
நிழல்பெறுவலியுமளித்தியென்றிரப்பநீனிறவண்ணனேடரிய
கழலினானவனுக்கவ்வரமாங்கேகருணையாலளித்தனமென்றான். (28)
1507 என்றபூங்கடுக்கையீர்ந்தொடையாகத்தெம்பிரானணங்கொடுமேற்றுக்
குன்றினையுகைத்தாண்டினிதெழுந்தருளக்கோட்டமின்மனத்தொடுங்கேது
துன்றுபல்வளங்கூர்தனதுலகணைந்துதுளக்கமில்வலிபடைத்திருந்தான்
அன்றுதொட்டதனான்முனிவிர்காள்கேதுபுரியெனலாகியதவ்வூர். (29)
1508 உரைதருமனையான்செவ்வராவுருக்கொண்டுறைதலான்முறைமையாலிதற்லே
குரைகடலுலகத்திலகுசெம்பாம்பன்குடியெனப்பெயர்பெறுமிதன்கண்
நிரைமணிமௌலிச்சேடனேயாதிநீள்சினமாசுணத்தலைவர்
விரைமலிகேதுதீர்த்தநீராடிவிதிமுறைநியதிமுற்றினரால். (30)
1509 ஒருகணமேனும்பணிபவரிடையூறொழித்திருமையினுமெய்யுறுதி
தருபரன்கேதுநாதன்மென்கமலத்தாண்மிசைநாண்மலர்தூவி
வருசிரமுழந்தாளுரங்கரஞ்செவிகீழ்வாய்புயமுந்தியென்றிவற்றால்
தெருளுமோரைந்துமெட்டுமென்றியற்றுந்தெய்வவந்தனைபுரிந்தனரால். (31)
1510 ஆண்டினிதிருந்தவமலனாரருளாலன்னைவெஞ்சாபமுநீங்கி
ஈண்டியவிழுப்பமெய்தினருயர்ந்தாரிப்புனலாடியிம்முதல்வன்
வேண்டியதளிக்கும்பதந்தொழப்பெறுவார்வினையொடுங்கிரகநோயொருவி
நீண்டமெய்ஞானத்தொன்றியொன்றாநன்னிலையினினிலவுவரன்றே. (32)
(30-ஆவது சேடனுங்கேதுவும் பூசித்தவத்தியாயம் முற்றிற்று.)
ஆக திருவிருத்தம் 1510.
--------------
31. அண்டநாயகர்மகிமையுரைத்தவத்தியாயம். (1511-1550)
1511 புண்டரிகவயற்காழிபுரத்தநந்தன்முதலானோர்போற்றுமாறும்
பண்டடல்சேர்கேதுபுரவரலாறும்பகர்ந்தனையிப்பதியைமேனாள்
அண்டமெலாந்தொழுதமையும்புகன்றனையாலதனைவிரித்தருள்வாயென்ன
எண்டவத்தோர்தொழச்சூதமுனியுரைத்தலியலொருவாறியம்பலுற்றேன். (1)
1512 குணங்குறிகாரணங்கடந்ததனிமுதல்வனுயிர்க்கருள்வான்குறித்தோர்கற்பத்
திணங்கவருமுடிவதனில்விச்சையினின்றண்டமெலாமியற்றுங்காலை
மணந்தபிருதிவிக்குநிறம்பொன்னெனவாய்ரங்கோடிவகைசேரண்டம்
கணந்தனிலேவிரித்தவற்றையினிதளிக்கவயனாதிகடவுளோரை. (2)
1513 மாணுறுதண்கலையிருத்தியதிகாரமுதல்வரெனவகுப்பவன்னோர்
ஏணுமுறையளிபுரிந்துவருநாளிலவர்பலருமீண்டியென்றும்
பூணுமுதுஞானமுநல்லிசையுமிசைவான்விழையும்போதன்னோரில்
காணுறுநான்முகன்கலையாங்கடவுளரங்கவையடையக்கருதிச்சொல்வார். (3)
1514 தீட்டரியபழமறைநூலுரைப்பதுமுப்பொருளாகித்தெளிசேர்நெற்றி
நாட்டமுறுதனிமுதல்வன்வதிவதுதேரூழிபுக்கநாளுமுந்நீர்க்
கோட்டமிசைபொலிவதுதென்பிரமபுரம்பரவினுளங்குறித்தவெல்லாம்
ஈட்டமுறுமெனலோடுமெனையண்டமுதல்வருமங்கியைந்தார்பின்னர். (4)
1515 வென்றிதரும்புலியூர்க்குத்தென்றிசையிற்புள்ளிருக்குவேளூருக்கு
நன்றிசையீசானத்தில்வள்ளலுறைமுல்லைவனநகர்க்குமேற்கில்
பொன்றிகழுங்குரைதிரையபொன்னிநதிவடதிசையிற்புலவர்போற்ற
என்றுமுலப்பருமிறும்பூதெய்தியதென்பிரமபுரத்தெய்தினாரால். (5)
1516 அல்லியந்தாமரைக்கிழவன்றடத்தாடிப்பிரமேசனலர்தாள்போற்றி
வல்லியுமைக்கின்னருள்கூர்தோணிமதிவேணியனைவழிபாடாற்றிச்
செல்லியலுமேனியினானென்பையொருகதையாகச்செங்கைகொண்ட
எல்லியலும்வடுகேசனிணையடித்தாமரைபரவியேத்தல்செய்தார். (6)
1517 பூரணபுங்கவபோற்றிபுண்ணியநன்னிதிபோற்றிபுரைமைதீர்ந்த
ஆரணசுந்தரபோற்றியாடகநாடகமன்றத்தாடிபோற்றி
நீரணவுமணிவேணிநித்தியதத்துவபோற்றிநிமலபோற்றி
காரணகாரியங்கடந்தசிவபோற்றிகாழியருட்கடலேபோற்றி. (7)
1518 என்னவருந்துதிபலவுமேத்தியண்டமூர்த்திகடாமிமயவில்லி
தன்னமர்பொற்கோயிலின்முக்கோலளவைத்தாய்வடமேற்றலையினாகப்
பொன்னணிதாரிலிங்கமொன்றுதாபித்துக்குடக்கினொருபுதுநீர்த்தோயக்
கன்னிமலர்த்தடமியற்றியருச்சனையின்றுறைநின்றார்கணிப்பில்காலம். (8)
1519 அருந்தவங்கள்பலமுயலுமண்டமூர்த்திகண்முன்னரடல்வெள்ளேற்றின்
முருந்துறழுமுகிழ்நகையோடெழுந்தருளியெனையாளுமுதல்வனீண்ட
திருந்தியநும்பணிமகிழ்ந்தேம்விழைந்தபொருள்கேண்மினெனத்திருமால்செங்கண்
இருந்தமலர்ப்பதம்பரவியெழுந்துகுழைந்திதுகேட்பாரெவருமாங்கே. (9)
1520 நின்பதுமச்சேவடிகளெங்களகத்தெனுந்தடத்தினிலவல்வேண்டும்
பின்புலகினழியாதபேரிசையும்பெறல்வேண்டும்பெருமவென்ன
அன்புரிமையறிந்தமலனவெயளித்துவிண்ணிலெழுந்தருளிநாளும்
மன்பதைகள்பணிந்தேத்துமண்டநாயகனெனும்பேர்வனைந்தான்வள்ளல். (10)
1521 அளப்பரியகளிப்பொடண்டமூர்த்திகளுமியைந்ததலத்தடைந்தாரன்னோர்
விளக்கியபூங்குளத்துவந்துமாசிமதியாடியந்தவிமலற்போற்றி
வளப்படுமாணிதிமாதர்மக்களொடுநலனுகர்ந்துமறுமைவீடும்
துளக்கறுமாறெய்துவரத்தலத்தியலித்துணைத்தெனயாஞ்சொல்லற்பாற்றோ. (11)
1522 இந்நகரிலிழிந்துபதமைந்தோதிநீறுபுனைந்தெந்தைவேடம்
தன்னையணிந்தவர்பேற்றையானுரைக்குந்தரத்ததுவோதவத்தீரென்ன
அன்னவற்றின்பெருமையுமீங்கருளுகென்றுமுனிவர்தொழவளிசால்வேத
நன்னிலையிற்பகுத்தவன்றாள்சென்னியில்வைத்தருண்முனிவனவிலலுற்றான். (12)
1523 பரம்பனதுருவாகிப்பிரவணத்தோடொன்றியவைம்பதத்தைச்செவ்வே
கரந்தழுவுசிவவடத்தான்முப்பொழுதுநூற்றெட்டுக்கணிப்போர்வேதம்
உரந்தருமங்கத்துடனேபகர்ந்தபயனடைகுவரீதுயர்ந்தமூன்று
நிரந்தகுலத்தவர்க்காகுமைந்தெழுத்தெக்குலத்தார்க்குநிகழ்த்தலாமால். (13)
1524 மருவலுறுபதவிகட்குமுதன்மையதாயெழுகோடிமனுக்களுக்கும்
கருதுநடுநாயகமாய்ப்பரமனுருவாமைந்தெழுத்தைக்கணித்தோர்யாரும்
நிருமலனதுருவாவார்நிகழும்பாராயணத்தைநீத்தோரேனும்
ஒருபொழுதுநீறணிந்தீதெண்ணுவரேல்வல்வினையையொருவுவாரால். (14)
1525 குரையிருமலொடுதும்மல்கொட்டாவியுறிலாயுக்குறையாவண்ணம்
உரைதருமிவ்வைந்தெழுத்தையுச்சரித்தல்விதிமதியாலுஞற்றும்பாவம்
புரைவிடற்குமிதுதுணையாம்பூதிநிகரொழுக்கமும்புண்ணியமும்போற்றும்
விரதமுமொன்றினதறனாலெக்காலுநீறணிவார்மிக்கார்மாதோ. (15)
1526 புண்ணியநீரணிகல்லார்புரிதருமப்பயனின்றாம்புரிதானத்தார்
அண்ணரியகும்பிபாகத்தழிவார்மனுவொடுமற்றதுவின்றேனும்
கண்ணுதனீறணிவாரைக்கண்ணுறில்வல்வினையகலுங்கடவுணீற்றை
ஒண்ணுதலினணியாரைக்காணினிரவியைக்காணினொழியும்பாவம். (16)
1527 வாளிரவிகாணாரேலிலிங்கத்தைச்செந்தழலைவளஞ்சேராவை
நீளறலைவேதியரைப்பொன்னையுருத்திரமணியைநெறியேகாணின்
மூளுறும்வல்வினையகலுமிந்நிற்றின்வகுப்பையினிமொழியின்யாண்டும்
நாளுறுவேள்வியினீறும்வேள்வியினீறும்மறையோர்நயக்கலாமால். (17)
1528 ஏனைமுதுகுலத்தவருக்கியன்றசிவநிசியினில்வாளிரவிதோற்றத்
தானசுசியொடுகொணர்ந்தகோமயத்தைப்புனிததலத்தலங்குவில்வத்
தூனமின்மெல்லிலையொடுசேர்த்துண்டையமைத்துமியிடையிட்டொளிறுந்தீயால்
ஈனமறவிளைந்ததனைச்சிவகாயத்திரிமனுவாலெடுத்துப்பின்னர். (18)
1529 வரியரவம்புரிசடையான்றிருமுனிட்டுப்பதினொன்றுமனுவாலோதித்
திரிதலிலெண்ணிருகூறுசெய்தவற்றுட்சிவபெருமான்றிறத்தாலொன்றும்
உரியசிவவேதியர்பாலொருமூன்றுகூறுமளித்தொழியீராறு
விரிதருகூற்றையுங்கொடுபோய்மதிக்கொருகூறாயணியவேண்டுமாதோ. (19)
1530 வேறு
சாருமிவ்வியல்வெண்ணீற்றைத்தரித்துளார்க்குலகமூன்றில்
நேருறாப்பொருளொன்றில்லைநிகழிவன்கிளையினுள்ளோர்
ஆருநன்கயிலைசேர்வாரண்ணல்கண்மணிமற்றெம்மான்
சீருறுமுருவமென்பார்தெளிந்தவாலறிஞர்மாதோ. (20)
1531 மருவுருத்திரன்கணின்றுவந்ததோருருத்திராக்கப்
பெருமையையேவரேயோபேசுவாரதனைநன்றாய்ந்
தொருமுகமாதிமுன்னான்கொளிமுகமளவும்பூண்பார்
குருமணிவேணிமுக்கட்குழகனதுருவைச்சேர்வார் (21)
1532 தீயுமிழ்கணிச்சியண்ணற்றிருவிழிமணியின்சும்மை
மேயவான்கழுதையொன்றுமேற்கொளீஇவிந்தவெற்பில்
போயுயிருலந்துமன்னபுண்ணியப்பொருட்டாலன்றே
மாயிருங்கயிலைமீதுவதிந்ததோரூழிகாலம் (22)
1533 இம்மணியொன்றுசூடியியங்கிலோரடிக்கொன்றாக
மெய்ம்மலிவாசிவேள்விவியன்பலனடைவார்மிக்கீர்
எம்மனோர்விரித்துக்கூறுமிட்டதோர்நியுதமேனும்
அம்மவாயிரமதேனுமைஞ்ஞூறேயெனினுமாங்கே. (23)
1534 பரிந்தனர்வனையிலீசன்பதந்தனிலடைவார்கண்டம்
தெரிந்தவான்சென்னிதிண்டோள்சேர்மணிப்பந்தந்தன்னில்
அரந்தையில்லாதநூற்றெட்டதிற்பாதிபாதியீரெட்
டுரந்தருமுபவீதத்துமொண்சிகையினுமொவ்வொன்றே. (24)
1535 செவியினிலொவ்வென்றாதலாறாதல்சிவணவேய்ந்தாங்
கவிர்மதிக்கண்ணிவள்ளலைந்தெழுத்தோதுகிற்பான்
புவியின்மானுடவனேனும்பூதேசனவனன்னோனை
எவரெதிர்தொழினும்வல்லேயிகப்பரால்பிரமகத்தி. (25)
1536 இத்தகையவலிமைசான்றயெந்தைகண்மணியைநீற்றை
பத்தியாலணிந்துகாழிப்பதியினில்வதிவோரன்றே
முத்தராகுவரிவ்வூர்க்குமுக்குரோசஞ்சூழெல்லை
மத்தியிலுதித்தோர்யாரும்வருணவேற்றுமையொன்றில்லார் (26)
1537 இங்குலப்புறுவோர்க்கெல்லாமெதிரணைந்திமயவல்லி
பங்கனஞ்செவியிலைந்துபதந்தனைநுவலுமாற்றால்
அங்கவர்சீவன்முத்தராதலாலந்தணீர்காள்
வெங்குருநகர்க்குச்சீவமுத்தியூரென்பார்மேலோர் (27)
1538 சேற்றெழும்பகட்டுவாளைசெம்பழுக்குலைகள்சாயத்
நாற்றிளங்கமுகிற்பாயுஞ்சண்பையின்வியப்பமெல்லாம்
போற்றுமிக்கதையையாரேபுகலினுங்கயிலைவெற்பில்
ஆற்றலோடமர்வார்முன்னையரும்பவத்தொடர்புமாய்த்தே (28)
1539 ஆயிரஞ்சிவநிசிக்கணருந்துயிலயாமநான்கும்
ஏயுறாதெந்தைபூசையியற்றுறுபலனைச்சார்வார்
நாயகன்றிருமுன்காழிநற்கதையந்நாளாய்ந்து
நேயமோடுரைப்போர்கேட்போர்படித்துளோர்நிகழ்த்தினம்மா. (29)
1540 கதையிதுபுகல்கிற்பார்க்குக்காஞ்சனங்கூறைநல்லான்
முதலியவளித்துப்பூசைமுற்றினோன்றன்னையாதி
மதலிடைப்பாகனாளுமகிழ்தருமனத்தாலீட்டும்
இதமறுவினையுநீங்குமிம்முறைபுகன்றுளோர்க்கே. (30)
1541 இதிலொருகாதைகேட்குமிடையிலெய்யாமையாலே
மதிபிறழ்ந்தெழுவாராயின்மாணிதிமனைவியில்லம்
பதிமுதற்பலன்கடுய்க்கும்பருவத்தினிடையூறெய்திக்
கொதியழற்கும்பிபாகங்குளிப்பரான்மறுமைக்கண்ணும். (31)
1542 சென்னியிற்பஞ்சியாத்துத்தேறுமிக்காதைகேட்போர்
வெந்நுனையெயிற்றுப்பாந்தள்வேசரியாவரக்கால்
பன்னியவடைக்காய்மென்றோர்பசும்புழுநுகர்வோராவர்
அந்நிலைவணங்கார்கேட்பினலறுவாய்க்காரியாவார். (32)
1543 ஒதுநரிருக்கைமீக்கொண்டுறைகுநரெருவையாவார்
ஏதுறவடையவொப்பாயிருப்பவர்கோழியாவார்
போதுமிக்கதையைவேட்டோர்புகன்றுளோர்படித்தோர்தம்மைத்
தீதுரைத்திடுவோர்நாயாயோந்தியாய்செனிப்பாரன்றே. (33)
1544 முறையிதுவிரிக்கின்றோரைமுகமனன்கியம்பார்மாநீர்
அறைமுரற்றவளையாகியையிருபிறவியீனப்
பொறையுடைக்கரமுமாவார்புராணமீதுரைசெய்கின்ற
துறையிடையிடர்செய்வாரேற்றுணையெயிற்றுரகமாவார். (34)
1545 புகலியாளுடையான்காதைபொறித்ததோர்முறைக்குஞ்செவ்வே
பகருநர்தமக்குந்தூயபலகைகம்பளங்களீந்தோர்
துகளினேழ்மனுநாட்காறுஞ்சுவர்க்கபோகங்கடுய்த்து
நிகரிலாமுத்திவீட்டினிலவுவர்மெய்ம்மையீதால். (35)
1546 துகிரிளஞ்சடையினானுந்தொல்லுலகெல்லாமீன்ற
நகிலிளங்கொடியுமாங்கேநன்முனிக்கணங்கள்போற்ற
மகிழ்மலர்மகள்சேர்காழிமான்மியமனைத்துந்தேர்ந்து
பகர்தருமிடத்துநீங்கார்பயில்வரீதுண்மையுண்மை. (36)
1547 மாதியல்பாகன்காழிமான்மியம்படிக்கினீரெட்
டாதியம்புராணஞ்சொன்னவடைவொக்குங்கலியொன்றேனும்
பாதியேயெனினுமேகபாதமாயினுஞ்சொன்னோரும்
நீதியால்வினவினோருநேர்படார்மறலியாடல். (37)
1548 பட்டிமைவிளைப்போர்பொய்ம்மைபகருவோரயலோர்தம்மை
இட்டிடர்சொல்வரேனுமிக்கதையொருகாற்கேட்பின்
ஒட்டியவினைகளெல்லாமொருவிமாசகல்வார்கண்டீர்
சுட்டியோர்வரியஞானத்துறைக்கடல்படிந்ததொல்லீர். (38)
1549 பொற்புறுமெயில்சூழ்காழிப்பொருப்பினைநீலகண்ட
வெற்பெனவுரைப்பாரிந்தவெற்பினைப்பணிகின்றோரும்
அற்புறத்தொழுதுய்ந்தோரையாற்றெதிர்தொழப்பெற்றோரும்
கற்பனைகடந்தோன்செம்பொற்கழலிணையடைவாரன்றே. (39)
1550 இவ்வகையருண்மீக்கூறியியலுமாமறைகளெல்லாம்
செவ்விதின்வடித்தமேலோன்றிருவருள்படைத்தசூதன்
அவ்வியமகன்றநோன்மையருந்தவச்சவுனகாதி
மெய்வ்வழிமுனிவர்க்கெல்லாம்விருப்புறவிளம்பினானே. (40)
(31 - ஆவது அண்டநாயகர் மகிமையுரைத்தவத்தியாயம் முற்றிற்று.)
ஆக திருவிருத்தம் - 1550.
-------------------------
பொங்குபவு டிகபுரா ணத்தீ ரொன்பான்
புகல்பிரமாண் டத்தொன்று காந்தந் தன்னில்
சங்கரசங் கிதையிலொன்பான் சனற்கு மார
சங்கிதையி லொன்றுமும்மைப் பரிச்சே தத்தில்
அங்கொருபன் னொன்றத்தி யாய மாக
வறைதருநாற் பதுந்தமிழான் முப்பத் தொன்றா
இங்கவையா யிரத்தைஞ்ஞூற் றைம்பான் செய்யு
ளெனக்காழி மான்மியந்தா னியன்ற வாறே.
வாழி.
சீர்வாழ்கவானவரானினம்வாழ்கவருசெங்கோற்காவல்வேந்தன்
பார்வாழ்கமறைவாழ்கவெண்ணீறுமைந்தெழுத்தும்பரவிவாழ்க
ஏர்வாழ்கவேணுபுரிவாழ்கசிவனடியார்களென்றும்வாழ்க
சீர்வாழ்கவிந்நூலைவாழ்த்துநருங்கேட்குநருஞ்சிறந்துமிக்கே.
ஸ்ரீசம்பந்தகுரவேநம:
திருச்சிற்றம்பலம்.
----------
சிவமயம்.
Comments
Post a Comment