Aruṇakirinātar pōṟṟi akaval
நாட்டுப் பாடல்கள்
Back வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
அருணகிரிநாதர் போற்றி அகவல்
வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
அருணகிரிநாதர் போற்றி அகவல்
உ
திருத்தணிகேசன் துணை.
அருணகிரிநாதர் போற்றி அகவல்
(போற்றி 108)
அருணைப் பதிவரும் அண்ணலே போற்றி
தவஞ்சார் குலத்தவ தரித்தனை போற்றி
புவிவாழ் வாழ்க்கை புண்தரும் என்று
சோகமுற் றுயிரைத் துறக்க, அருணைக்
கோபுரத் திருந்து குதித்த ஞான்று - 5
பூர்வ புண்ணியப் பூர்த்தியின் பயனால்
எம்மான் பெம்மான் எந்தை முருகனால்
ஆட்கொளப் பெற்ற அரசே போற்றி
திருவடி தீஷை பெற்றனை போற்றி
மௌனோப தேச மாண்பது பெற்றும், - 10
'அருணகிரி நாத'என் றழைக்கப் பெற்றும்,
கீரனை மீட்ட கிளர்வடி வேலால்
நாவிற் சடாக்ஷரம் நாட்டப் பெற்றும்
ஞான உயர்நிலை நயந்தனை போற்றி
'முத்தித் தரு' எனும் முதலடி முதல்வன் - 15
எடுத்துக் கொடுக்க எழிலார் பாக்கள்
பதினா றாயிரம் பாடினை போற்றி
அண்ணா மலையரும் உண்ணா முலையளும்
திருநீ றளித்துச் செவ்வே புரக்கும்;
தண்ணருள் பெற்ற புண்ணிய போற்றி - 20
மலநோய் மாண்டிட வள்ளியின் கரத்தால்
தீண்டப் பெற்ற ஆண்டகை போற்றி
தலந்தொறும் சென்று சண்முகற் றுதித்து
நலஞ்சார் பாடல் நவின்றனை போற்றி
திருவெணெய்ப் பதியில் திருநடங் கண்டு - 25
களித்துப் பாடிய கவிஞனே போற்றி
தில்லையில் நடன திவ்விய தரிசனம்
ஒல்லையிற் கண்டங் குவந்தனை போற்றி
ஏரகப் பதியில் எந்தை பாத
தரிசனம் பெற்ற தவத்தோய் போற்றி - 30
திருவை யாறுடன் ஏழு திருப்பதி
விழாவைக் கண்ட மேலவ போற்றி
தண்ணியல் வயலூர்த் தலத்தினில் அத்தன்
வித்தக மருப்புடை வேழமுகத்தன்
மயில்வேல் கடம்பு மாணடி குக்குடம் - 35
பன்னிரு தோளவை பயிலும் சந்தம்
பாடெனச் செப்பும் பாக்கியம் பெற்ற
உத்தம பத்தியில் உயர்ந்தோய் போற்றி
திருப்புகழ் நித்தம் செப்பும் பேற்றை
அத்தலத் தேபெற் றமர்ந்தனை போற்றி - 40
'விகட பரிமள' எனவரும் வீறார்
அரிய பெரிய திருப்புகழ் அதனைச்
செப்பிய ஞான்று திருவார் முருகன்
கனிவுடன் ஏக முகத்துடன் கனவிடைத்
தோன்றி 'அன்ப! சுதினம் இன்றே - 45
விராலி மலைக்கு வா' என விளக்கி
அவாவுடன் அழைக்க அணைந்தனை போற்றி
கருச்சந் திப்பைக் கழிக்க வல்ல
திருச்செங் கோட்டிற் சேயைக் கண்டு
நாலா யிரங்கண் நான்முகன் படைத்திலன் - 50
அந்தோ என்றங் கழுங்கினை போற்றி
நாகா சலத்து நாத எனக்கு
நால்வகைக் கவிகள் நயந்தளித் தென்றும்
சாகா வரமதைத் தந்தனை என்றே
அநுபூதிக் கவி அருளினை போற்றி - 55
எங்கே நினைப்பினும் அங்கே எனது
செங்கோட்டு வேலன் தேர்ந்தளிப் பானெனச்
செப்பி மகிழ்ந்த சீமான் போற்றி
செடிக்கா பலசூழ் சென்னி மலையிற்
படிக்காசு பெற்ற பண்ப போற்றி - 60
கொடுங்குன் றத்துக் குமரன் ஆடிய
நிர்த்த தரிசனம் நேரிற் காணும்
மாதவப் பேறு வாய்ந்தனை போற்றி
ஆவினன் குடிவாழ் அறுமுகன் அருளாற்
செபமாலை பெற்ற திறத்தோய் போற்றி - 65
உனது பழநி ஊரைச் சேவித்
தறியேன் இதுவரை அந்தோ என்று
மனந்தடு மாற மலைமிசை ஏறி
அனந்தம் பாடல் அருளினை போற்றி
பழநி பழநி பழநி என்னும் - 70
அமுதப் பேரை அநுதினம் சொல்லி
நெஞ்சே நற்கதி நேடிலை நீயென்
றிடித்துக் கூறின எம்மான் போற்றி
பழநிப் பெருமான் படிவம் மறவாக்
கலிசைச் சேவகன் கவினார் பத்தியை - 75
மெச்சி வியந்து நச்சினை போற்றி
மதுரைப் பதியில் மதுரக் கவிகள்
சிலபல பாடித் திருப்பரங் குன்றிற்
செவ்வேள் மகிழத் திருப்புகழ் பாடிப்
பரவிப் பணிந்த பரம போற்றி - 80
செந்தூர்ப் பதியிற் சேய்கழல் பாடி
முந்தூர் பத்தி முதிர்தரப் பெற்று
நெஞ்சங் குளிர்ந்த நிமல போற்றி
அத்தலந் தன்னில் அன்றொரு தினத்தில்
தன்கண் காணத் தனிமுதற் பெருமான் - 85
பாலகுமரன் பயில்திரு நடனம்
கண்டு களித்த காதல போற்றி
வாதுக் கழைத்து வண்டமிழ்ப் புலவர்க்
கேதம் விளைத்த இயற்றமிழ்ப் புலவன்
வில்லி என்னும் வல்லவன் திகைக்க - 90
அந்தாதி பாடி அரும்பொருள் காண
முடியா வகையில் முடித்தொரு செய்யுளைச்
செப்பிய திறஞ்சேர் செம்மலே போற்றி
இலங்கைத் தீவின் எழிலுறு தலங்கள்
தரிசனம் செய்த சதுரனே போற்றி - 95
மகாடவி ஒன்றில் வழியிழந் தங்கே
அலமந்த போதில் அறுமுக வள்ளல்
சகாயஞ் செய்யத் தழைத்தனை போற்றி
இலங்கைத் தீவில் எழி ற்கதிர் காமத்
தலத்தினில் வேடன் தந்த பூஜையை - 100
மகிழ்ந்தவ என்ன மயிலவற் றுதித்தே
'அகரமு மாகி' எனவரும் அந்த
திவ்விய திருப்புகழ் திருவளர் சோலை
மலையினிற் பாடி வணங்கினை போற்றி
துருத்தித் தலத்தில் சுப்பிர மணிவேள் - 105
மயிற்பொறி வேற்பொழி வழங்கப் பெற்ற
மகாதவம் பெற்ற மாண்பினை போற்றி
தணிகை மலையினிற் சாமி நடனங்
கண்டு களித்த கண்ணிய போற்றி
வள்ளி யாடிய வள்ளி மலையைக் - 110
குன்னம் குறிச்சி வெளியாக் கியமலை
இஃதென விளக்கிய எந்தாய் போற்றி
தமது மடத்திற் சண்முகன் உருவைக்
கழிபே ருவகையில் வழிபாடாற்றிய
சோம நாதரின் தூய பத்தியை - 115
எடுத்து விளக்கிய இறைவ போற்றி
செந்தமிழ் மணமுடன் தெய்வ மணங்கமழ்
அலங்கார மாலை அருளினை போற்றி
தேவி உபாசனைச் சம்பந் தாண்டான்
வரவழை முருகனை எனவழக் கிடலும் - 120
எடுத்து விளக்கிய இறைவ போற்றி தேவேந்த்ர சங்க வகுப்பது செப்பித்
தேவியைத் திருப்தி யூட்டிச் சேயை
மயிலுமாடி வாஎன் றழைத்து
மன்னன் பிரபுட தேவன் மகிழச்
சபைதனிற் காட்டிய சதுர போற்றி. - 125
எடுத்து விளக்கிய இறைவ போற்றி கிளிஉரு அதனிற் கிளர்ந்து பறந்து
பண்ணவர் உலகுறு பாரி ஜாதப் பூ
மண்மிசைக் கொணர்ந்த மகிப போற்றி
தனதுடல் மறைந்த தகைமையைக் கண்டதும்
திருவருள் இஃதெனத் தேறிச் சுகவுரு - 130
எடுத்து விளக்கிய இறைவ போற்றி சுகவுரு என்னச் சுகித்த நிலையில்
அநுபூ திக்கவி அருளினை போற்றி
அவ்வத் தலங்களில் அருளிய கவிகளில்
உலகோர் உய்யும் ஒருவழி காண
விளக்கம் பலபல விரித்தனை போற்றி - 135
எடுத்து விளக்கிய இறைவ போற்றி கனைத்தெழும் பகட்டினன் கலக்குறும் செயலற
'உனைத்தினம்' எனும் புகழ் உரைத்தனை போற்றி
எப்போது வருவாய் என்முன் எனவரு
'முந்துதமிழ்ப்' பாவை மொழிந்தனை போற்றி
என்றுநின் தெரிசனை எனக்குறு மோஎனும் - 140
எடுத்து விளக்கிய இறைவ போற்றி 'அந்தகன்' எனும்புகழ் அருளினை போற்றி
'வீணாள் படாதருள்' எனும் புகழ் விழைந்து
சொற்ற திருப்புகழ்ச் சுந்தர போற்றி
'நாத விந்து கலாதீ' என நவின்
றோது பூஜைப் புகழ்உல குய்ய - 145
எடுத்து விளக்கிய இறைவ போற்றி ஓதின எங்கள் உத்தம போற்றி
இக்குறை உண்டிங் கிந்நலம் இல்லை
என்னிடத் தெனமுறை யிட்ட புகழ்ப்பா
உலகுய ஈந்த உண்மைய போற்றி
செனனமிங் குண்டெனில் செவிடு குருடெனும் - 150
எடுத்து விளக்கிய இறைவ போற்றி குறைகளாற் குன்றிக் குறைபடா வகைதந்
தென்மனம் என்றும் நின்பாற் பொருந்துக
எனுமுறை யீட்டை எம்பிரா னிடத்தே
வைத்த அருள் நிறை வித்தக போற்றி
முப்பால் செப்பிய கவிதையின் மிக்கதாம் - 155
எடுத்து விளக்கிய இறைவ போற்றி தேவா ரஞ்சொலும் தெய்வம் இவரென
ஏத்தி ஓர் நுண்பொருள் இயம்பினை போற்றி
ஆறு முகமென ஆறு முறை சொலித்
திருநீ றிடும்வகை தெரித்தனை போற்றி
ஞான யோக நன்னிலையதனை - 160
எடுத்து விளக்கிய இறைவ போற்றி 'ஞானங்கொள் பொறி'தனில் நாட்டினை போற்றி
'இகபர சௌ பாக்யம்' இருநிலத் தோர்பெற
'வசனமிக' என்னும் மாண்பார் பாவை
வகுத்த கருணைசேர் வரதனே போற்றி
'வரதா மணி' எனும்வலமார் புகழில் - 165
எடுத்து விளக்கிய இறைவ போற்றி ரசவா தத்தை உதவா ரசமென
உதறித் தள்ளிய உத்தம போற்றி
மகவது வேண்டினோர் மகவது பெறவே
பிள்ளைப் பெருமநின் பீடுறு வாயால்
முத்தந் தந்தருள் எனவரும் மொய்ம்பார் - 170
எடுத்து விளக்கிய இறைவ போற்றி புகழது செப்பிய புண்ணிய போற்றி
ஓவிய அந்தமே ஒன்றுக எனவிழை
ஓர்புகழ் உரைத்த ஒள்ளிய போற்றி
'நாவே றெ'னவரும் நற்றிருப் புகழில்
நீநான் அற எனும் நின்மல முத்தியை - 175
எடுத்து விளக்கிய இறைவ போற்றி நாடி விரும்பிய நாதனே போற்றி
'இடர்சங் கைகளவை எனைக் கலக் காவகை
எந்தாய் அருளென எந்தையை வேண்டி
நாமுய 'அதிரும் கழலெனும்' நற்பா
தந்த கருணைத் தம்பிரான் போற்றி - 180
எடுத்து விளக்கிய இறைவ போற்றி சமாதி மனோலயம் தந்தருள் என்னும
சமானமில் புகழைச் சாற்றினை போற்றி
திருப்புகழ் செப்பும் திறத்தினர் உழைநான்
சேர்வகை யருளெனும் செம்மலே போற்றி
நோயிலா வாழ்வை நாம்பெறு நோன்மை - 185
எடுத்து விளக்கிய இறைவ போற்றி பெற்றுய வேண்டிப் பேரரு ளோடே
'இருமலு ரோக முயலகன் வாதம்'
எனும்புகழ் எங்கட் கீந்தனை போற்றி
பகைத்திறம் வெல்லும் பாணம தாகும்
'சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்' - 190
எடுத்து விளக்கிய இறைவ போற்றி எனும்புகழ் செப்பிய எம்மான் போற்றி
'மைந்தா குமரா' எனுமந் திரத்தை
'அந்தோ மனமே' என அழைத் தழகாய்
உபதே சித்தஒரு முதல் போற்றி
'ஆடு மயிலின்' தத்துவம் அறிகிலேன் - 195
எடுத்து விளக்கிய இறைவ போற்றி என உரைத் தேங்கிய எந்தாய் போற்றி
நாணமில் நிலையை நயந்தருள் என்னப்
பேணி இரங்கிய பெரும போற்றி
ஈதலே அறமென எடுத்துக் காட்டிய
மாதவ முநிவ மகிப போற்றி - 200
எடுத்து விளக்கிய இறைவ போற்றி மணம்நிறை வேறும் வாய்ப்பினை வேண்டினோர்
நினைப்பது கூடிட 'நீலங்கொள்' என்னும்
அழகிய பாடலை அருளினை போற்றி
கருப்பம் நலனுறக் கருதினர் ஓத
'மதியால் வித்தகன்' எனவரும் மாண்பார் - 205
எடுத்து விளக்கிய இறைவ போற்றி பாவினைத் தந்த பகவ போற்றி
உருகும் அன்புடன் முருகன் பொறையை
வியந்தங் கேத்திய மெய்த்தவ போற்றி
தாப சபலம் தணக்கும் வழியினைத்
தந்தருள் கந்த சண்முக குகனே - 210
எனத்துதி செய்த எம்பிரான் போற்றி
உதய மரணம் ஒன்றிடாப் பொருளை
உதவுக என்ற உத்தம போற்றி
விதிவழி யேஎனை வினைநோய் சூழின்
கலங்கா மதியைக் கருணா கரநீ - 215
ஈந்தருள் என்ற இறைவ போற்றி
மதியோ கதியோ மாண்புறும் ஒன்றைத்
தந்தருள் என்ற சதுர போற்றி
'வேந்தா சேந்தா' என விழை மந்திரம்
வீண்போ காதென விளம்பினை போற்றி - 220
யானென தறலே இன்ப முத்தி
எனுந்தத் துவத்தை இயம்பினை போற்றி
உண்பதன் முன்னர் 'சண்முக வா' என
உரைத்தங் கொருபிடி யீந்தபின் உண்க
எனுமுப தேசம் ஈந்தனை போற்றி - 225
தனிவழி நடக்கும் தருணம் வேல்மயில்
எனச்சொலி நடக்கஎன் றியம்பினை போற்றி
முத்தி வேண்டினோர் முருகனற் பதத்தில்
கருத்தைப் புகட்டின் கடிதிற் பெறலாம்
எனுமறை மொழியை இசைத்தனை போற்றி - 230
கொள்களின் கொடுமை குலைகுலைந் திடவே
'சேயவன் புந்தி' எனுந்திருப் பாவை
உலகுக் களித்த ஒருவ போற்றி
தும்மும் போதெலாம் 'குமர சரணம்'
எனச் சொலும் வழக்கம் ஏற்படின் உய்தி - 235
பெறலாம் என்ற பெருமைய போற்றி
பிறவிக் கடலிற் பிடிபடா திருக்க
விரும்பினால் முருகன் மேதகு நாமம்
புகலுக என்று புகன்றனை போற்றி
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் - 240
போக்க விரும்பினோர் புனித மூர்த்தியாம்
முருகனை மறவா முறைசித் திக்க
பொய்யை நிந்திக்க உண்மை சாதிக்க
என எடுத் துரைத்த ஏந்தலே போற்றி
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் - 245
தானம் இடுங்கோள் தவறா தென்றும்
இருந்த படியே இருங்கோள் என்ற
பேருப தேசம் பேசினை போற்றி
கதிபெற வேண்டின் கரவா திடுக
கருதுக வடிவேல் இறைதிருக் கழலை - 250
எனக்குறிப் பிட்ட எந்தாய் போற்றி
வாழி வாழி எனமற வாது
பரவிடின் சரண பங்கயம் தருவன்
முருகன் என்று மொழிந்தனை போற்றி
சிற்றடிப் பெருமையைச் செப்பினை போற்றி - 255
வேலின் பெருமையை விளக்கினை போற்றி
வேல்வாங்கு திறத்தை விரித்தனை போற்றி
திருக்கை வழக்கம் தெரித்தனை போற்றி
ஞானவேழம் நவின்றனை போற்றி
சித்து வகுப்பைத் திறமுடன் ஓதித் - 260
திருப்புகழ்ப் பெருமையைத் தெரித்தனை போற்றி
கருத்தன் அருளிய பெருத்த வசனப்
பெருமையின் அருமையைப் பேசினை போற்றி
கிள்ளை மொழியாள் வள்ளியின் வேளைக்
காரன் முருகெனக் கழறினை போற்றி - 265
வேடிச்சி காவலன் வேலவ நீஎனப்
பாடிக் கசிந்துளம் பரவினை போற்றி
பூதவே தாள அலகைகள் போரிற்
கொண்ட குதூகலம் விண்டனைப் போற்றி
திருப்புயப் பெருமையைச் செப்பினை போற்றி - 270
கந்தன் முருகன் கடம்பன் கருணையன்
கடைக்கண் இயலைக் கடைந்தெடுத் தோதிப்
பயன் பல உண்டு பாரீர் பாரீர்
வாரீர் வாரீர் எனப் பறை சாற்றிய
பரம கருணைப் பண்பனே போற்றி - 275
மௌன நிலையே மதிப்பிலா திலகும்
சிவலோ கம்மெனச் செப்பினை போற்றி
இங்ஙனம் எம்மான் எழிலதை வகுத்துத்
தணிகை எம் பெருமான் தன் கரத் தமர்ந்த
சுக உரு விளங்கும் சுகமே போற்றி - 280
அருண கிரி எனும் அப்பனே போற்றி
சுத்தனே போற்றி நித்தனே போற்றி
அத்தனே போற்றி பத்தனே போற்றி
கண்ணே போற்றி கண்மணியே போற்றி
போற்றி போற்றி பூதலம் உய்யத்
திருப்புகழ் தந்த தெய்வமே போற்றி. - 286
சுபம்
வேலுமயிலுந் துணை.
Comments
Post a Comment